Sowndharyacheliyan
Writer
Final episode:
அன்றைய தினம் தான் சுபாவை டிஸ்சார்ஜ் செய்திருந்தனர்.
பரணி அவளுடன் இருந்தான். ஆட்டோவை அழைத்து, இருவரும் அதில் ஏறினார்கள்.
செல்லும் வழி முழுவதும் சுபா அமைதியாக இருந்தாள்.
வெளியே பார்த்துக் கொண்டிருந்தாலும், அவள் மனம் வேறெங்கோ அலைந்தது.
ஒரே ஒரு கேள்விதான் அவளை விடவில்லை.
இப்போ எங்கே போகணும்?
சுபாவிற்கு அவளது இப்போதைய வீட்டிற்கு தான் செல்ல வேண்டும் என்ற எண்ணம்.
ஆனால் பரணி முடிவு?
அவனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டால் அவளால் மறுக்க முடியாதே?
அவளால் அங்கே இயல்பாய் இருக்க முடியுமா? அவள் மனம் மறுத்தது!
அங்கே, அவர்களுடனான சேர்ந்து
மீண்டும் ஒரு வாழ்வு ,நிச்சயம் அவளால் முடியாது, அவளது மனமே போதும் அவளை குத்திகிழிப்பதற்கு.
சில அடிகள் தள்ளி இருப்பதையே அவள் மனம் விரும்பியது. அந்த தூரம்
சில அடிகள் தான்.
ஆனால் அவளுக்கு அது அவசியமாக இருந்தது.
மனதின் அலைப்புறுதலை பரணியிடம் சொல்வதற்கும் அவளிற்கு தைரியம் இல்லை, எங்கே கணவன் மீண்டும் கோபித்துக் கொண்டு சென்று விடுவானோ என்ற பயம் அவளிற்கு!
ஆட்டோ சாலையில் ஓடும் சத்தம் மட்டுமே அங்கே! நடப்பது நடக்கட்டும் என கண்மூடி அமைதியாகி விட்டாள் அவள்.
சில நிமிடங்கள் கழித்து, ஆட்டோ நிற்கும் சத்தத்தில் அவள் கண்களை திறக்க, சுபா வீட்டு முன்னால் ஆட்டோ நின்றது. சுபா இறங்காமல் பரணியை பார்க்க,
“என்ன?”
“இல்லை அங்க போகலையா?” அவள் அவன் வீட்டை சுட்டிக் காட்ட,
“இல்லை!” அவனது ஒற்றை சொல்லில் நிம்மதி அடைந்தவள், இறங்கி கொண்டாள். இடைப்பட்ட நாளில் வருணா வீட்டை சுத்தப்படுத்தி இருந்தாள்.
வீட்டிற்குள் சென்று சில நிமிடங்களில் மகாலிங்கம் சாத்விகாவை தூக்கி வந்திருந்தார்.
“அம்மா!” சுபாவை கண்ட மாத்திரத்தில் அவளிடம் தாவியது பிள்ளை. உடலில் இன்னும் சோர்வு இருக்க, பிள்ளையை பிடித்தவாறு அமர்ந்து கொண்டாள் அவள்.
“இப்போ பரவாயில்லையாம்மா!” மகாலிங்கம் கேட்டிட,
“ம்ம்ம் பரவாயில்லை மாமா.”
பரணி ஆட்டோவை அனுப்பி விட்டு வந்தவன், அவளது மருந்து அடங்கிய பைகளை அவளருகே வைத்துவிட்டு,
“சாப்பாடு கொண்டு வந்தீங்களாப்பா?”என்க,
“பேச்சி குடுத்து விட்டிருக்கா, பாப்பா அங்கேயே சாப்பிட்டா, சுபா இதுல இருக்கு சாப்பாடு.” என ஒரு கூடையை அவளிடம் நீட்டிய இருந்தார்.
“சாப்பாடு எடுத்து வச்சுப்பியா?” பரணி கேட்டிட,
“ம்ம்ம் எடுத்துப்பேன்.”
“அப்போ சரி, நம்ம கடைக்கு கிளம்பலாம்ப்பா.” இரண்டு நாட்கள் கடை பக்கமே செல்லாமல் இருந்ததில், மகாலிங்கத்தின் வேலைப் பளுவை உணர்ந்து, வந்ததும் அவன் கிளம்ப எத்தனித்தான்.
“ நீங்க சாப்பிடலை.” சுபாவின் குரல் அவனை தடுத்திட,
“கடைல பார்த்துப்பேன்.” என்றுவிட்டு நில்லாது சென்றிருந்தான்.
பின் சுபாவின் நேரங்களை எல்லாம் சாத்வியே எடுத்துக் கொண்டாள். கணவனிடம் இருந்து அழைப்பு ஏதும் வருமா? என காத்திருந்த சுபாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது.காலையில் அவளை கொண்டு வந்து விட்டதுடன் சரி. மனம் கேட்காமல் இவள் அழைத்திட, அழைப்புகள் ஏற்கப்படவில்லை.
‘கூட்டம் அதிகமா இருக்கும், இன்னைக்கு உத்திரம் வேற, அதனால பிசியா இருப்பாரு.’ என தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொண்டாளும் மனதின் ஓரத்தில் சிறு பயம் இருந்தது உண்மை.
இரவு வழக்கமான நேரத்தை தாண்டித்தான் கடையை அடைத்திருந்தான் பரணி.
வீட்டிற்கு கிளம்பும் வழியில்,
அவள் வீட்டு முன் வந்தபோது,
தானாகவே வேகம் குறைந்தது.
ஒரு நொடி,
அவன் நின்றான்.
வாசல் விளக்கு எரிந்துகொண்டிருந்தது.
‘அவனிற்காக காத்திருக்கிறாளோ?’
சிறிது நேரம் அங்கேயே நின்றவன்,
பிறகு,
வண்டியை மீண்டும் கிளப்பினான்.
சாத்வியை தூக்க வைத்திருந்தவளுக்கு கணவனின் வண்டிச் சத்தம் நன்றாகவே கேட்டது.
‘கணவன் இங்கே வருவான்’ என்ற நம்பிக்கையில் வேகமாய் சென்று அவள் கதவை திறத்திட, செல்லும் அவன் முதுகை கண்டவளிற்கு கண்ணீர் பெருகிற்று.
‘ஏதோ உடம்பு சரியில்லைன்னு பாவப்பட்டாரு போல! இன்னும் அவருக்கு கோபம் போகலை, இப்புடியே வாழ்க்கை முழுசும் வெறுத்திடுவாரோ’ நினைத்தப்படி அவனையே கலங்கிய விழிகளுடன் காண, வண்டியை நிறுத்திவிட்டு பரணி திரும்பி பார்க்க, மனைவி நிற்பது நன்றாகவே தெரிந்தது.
ஒரு நொடி அவளை ஏறிட்டவன், மீண்டும் வீட்டினுள் சென்றுவிட, அவள் வைத்திருந்த நம்பிக்கை சுக்குநூறாய் உடைந்துப் போயிருந்தது. இரண்டு நாட்களாக அவன் காட்டிய இணக்கத்தில், கணவனின் கோபம் போய்விட்டது என நினைத்திருந்தவளுக்கு, உண்மை சுட்டது.
ஆக, அவன் உடல்நிலை சரியில்லை என கரிசனை மட்டும் காட்டியிருக்கிறான், என்பதை அவள் மனம் ஏற்க மறுத்தது. அவள் செய்த தவறு தானே, கணவனை இந்தளவிற்கு மாற்றியது.
அழுவதை தவிர வேறு என்ன செய்திட முடியும் அவளால், அவளின் இந்த நிலைக்கு அவள் மட்டும்தானே காரணம்!
விளக்கை கூட அணைக்காது, சாத்வியை அணைத்தவாறு உறங்கியவளின் விழிகளில் கண்ணீர்.
உள்ளே வந்த மகனை ஆச்சர்யமாய் பார்த்த பேச்சி, எதுவும் பேசாது அவனிற்கு உண்ண எடுத்து வைத்திட, மெளனமாய் உண்டான். மகன் அங்கே செல்வான் என நினைத்திருந்தார்.
உண்டவன் வெளியே கட்டிலை போட்டு படுத்திட, அதற்கு மேல் வாய் பொறுக்காது,
“அங்க போகலையா பரணி?”
“எங்கம்மா?” என்றவனின் பார்வை,
‘இன்னும் லைட் ஆஃப் பண்ணாம என்ன பண்ணிட்டு இருக்கா’ என்றபடி மனைவியின் வீட்டை தான் வட்டமடித்தது.
அவனின் பார்வை கண்டு கடுப்புற்ற பேச்சி,
“உன் பொண்டாட்டி வீட்டுக்கு” என, அவரை திரும்பி லேசாய் முறைத்தவன்,
“உங்களுக்கு வேணும்னா நீங்க போங்க”
“நான் என்னத்துக்குடா போகணும், என் வீடு இருக்கும்போது.”
“அப்பறம், நான் மட்டும் ஏன் போகணும்?”
“அங்க, இருக்கிறது உன் பொண்டாட்டி, பிள்ளை தானே!”
“ம்ப்ச் என்னம்மா இப்போ? அது தெரியாத எனக்கு?”
“தெரிஞ்சும் ஏன் இங்க இருக்க?”
“அப்போ, என்னை வீட்டை விட்டு போக சொல்லுறீங்களாம்மா?” சட்டென மூண்டுவிட்ட எரிச்சலில் அவன் பேசிட,
“டேய், லூசு மாதரி பினாத்தினேன்னு வையி, அடி பிச்சிருவேன்.”
“ச்சு போமா” என்றவன் கவுந்து படுத்துக் கொள்ள, அவனின் மனநிலை புரிந்த பேச்சி, அவனருகே அமர்ந்து தலையை கோதியவர்,
“என்னையா பரணி, எது உன்னை போட்டு வாட்டுது?” என்க,
“முடியலம்மா? அவளை அந்த நிலைமைல பாத்தப்பா, என்னால தானோன்னு ஒரு குற்றவுணர்ச்சி. திருந்தி வந்தவளை மன்னிக்காம தப்பு பண்ணிட்டேனோன்னு. ஆனா, முழுசா மன்னிக்கவும் முடியலைம்மா, ஏதோ ஒண்ணு தடுக்குதும்மா. அவ கூட இயல்பா என்னால் பேச முடியுமான்னு ஒரு சந்தேகம் என்மேலயே வருது.” என்றவனின் இரட்டை மனநிலையை கண்டுக் கொண்ட பேச்சி,
“சரிய்யா, மன்னிக்க வேண்டாம். அவ எக்கேடோ போகட்டும்னு உன்னால விட்டுட முடியுமா?”
“சத்தியமா இல்லைம்மா, இப்போ கூட ஏன் இன்னும் லைட் ஆஃப் பண்ணாம இருக்கான்னு, அவளை பத்தி தான் நினைப்பு ஓடுது. அதுமில்லாம, நான் அங்க வருவேன்னு எதிர்பார்த்திருந்திருப்பா, இல்லைனதும் நிச்சயம் அழுதிருப்பா, எங்க, போன காய்ச்சலை இழுத்து விட்டுப்பாளோன்னு, அவளை பத்தி மட்டும் தான் மனசு யோசிக்குது.” உள்ளதை உள்ளபடி அவன் கூறிட,
“பரணி, உன் நிலைமை தான் எனக்கும்.
அவளை முழுசா நம்பின எனக்கு, நம்பிக்கை துரோகம் மாதிரி தான் அவ செஞ்சது. ஆனா, அதையே பிடிச்சு தொங்கிட்டு இருந்தா, என் பிள்ளை வாழ்க்கை தானே வீணா போகும். ஒரு அம்மாவ என் பிள்ளையோட வாழ்க்கை நல்லா இருக்கனும்னு ஒரு சுயநலம் எனக்கு கண்டிப்பா இருக்கு, அதுக்காகவேண்டியாச்சும், அவ செஞ்சதை நான் மறந்தாகனும்ன்ற கட்டாயம் எனக்கிருக்கு.
இன்னொன்னு, அவளும் அவ தப்பை உணர்ந்து தானே வந்திருக்கா, அதை நம்ம அலட்சியப்படுத்தக் கூடாது, தப்பு செஞ்சா தான், அதுக்காக முழுசா அவளை வெட்டி விட்டுற முடியுமா என்ன? அப்போ அனுசரிச்சு போறதுல தப்பில்லை. யோசிச்சுக்கோ.” என்றுவிட்டு சென்றிருந்தார்.
கண்ணை மூடி உறங்க முயற்சித்தவனுக்கு, உறக்கம் வருவோனா என ஆட்டம் காட்டியது. ஒளிர்ந்த அவள் வீட்டு விளக்கையே பார்த்தவனுக்கு, அதற்கு மேல் முடியாது,
எழுந்து அவள் வீட்டிற்கு விறுவிறுவென நடந்தான்.
“டக்!டக்” கதவை தட்டிய ஒலியில், உறக்காமல் இருந்த சுபா, சட்டென எழுந்தமர்ந்தவளிற்கு ஒரு நொடி பயம் பிடித்துக் கொண்டாலும், கணவனாக இருப்பானோ என யோசியாது கதவை திறந்திட, அவளை ஏமாற்றாது பரணி நின்றிருந்தான்.
அமைதியாய் அவள் வழி விட, உள்ளே வந்தவனின் பார்வை முதலில் சாப்பாடு கூடையை தான் பார்த்தது. அவள் உண்டாளா? இல்லையா என்று. அவள் உண்டதிற்கான தடயம் தெரிய, அமைதியாய் சாத்வி அருகே வந்தவன் அவளை அணைத்துக் கொண்டு உறங்கிட,
“வெறும் தரையில படுக்காதீங்க, இருங்க பாய் எடுக்கிறேன்.” என்றவள் பதற,
“வேண்டாம், எனக்கு தூக்கம் வருது லைட் ஆஃப் பண்ணனும்.” என, அதன் பொருளை உணர்த்தும் கொண்டவள், லைட்டை அணைத்துவிட்டு பிள்ளையின் மறுபக்கம் படுத்துவிட்டாள். கணவனின் வருகை அவளை மகிழ்வித்தாலும், அவனின் விலகல் அவளை குத்தியது.
‘பொறு மனமே, எல்லாம் ஒருநாளில் மாற்றிவிடாது.’ தன்னைத்தானே அடக்கி கொண்டவள் கண்ணயர்ந்தாள் கணவனின் அருகாமையில்.
அடுத்த நாள் விடிந்ததும், பரணி எழுந்து அவன் வீட்டிற்கு சென்றுவிட்டான். இதுவே, தொடர்கதையானது. இரவு உறங்க மட்டும் சுபா வீட்டிற்கு சென்று வந்துக் கொண்டிருந்தான். வீட்டினருக்கு தெரிந்தாலும் கண்டுகொள்ளவில்லை, முட்டிமோதி அவர்களே அவர்களது வாழ்க்கையை வாழ்த்துக் கொள்ளட்டும் என விட்டுவிட்டனர்.
அன்றைய நாளும் விடிந்ததும், பரணி கிளம்ப பார்க்க,
“இருங்க டீ வைக்கிறேன், குடிச்சிட்டு போங்க.” என்ற மனைவியின் வார்த்தைகளில் அவளை ஒரு நொடி பார்த்தவன், மறுக்காது அமர்ந்துக் கொண்டான், கொடு என்பது போல்.
அவன் மறுப்பான், அலட்சியம் செய்வான் என நினைத்திருந்தவளுக்கு அவனின் அமைதி மகிழ்ச்சியை தர, வேகமாய் சென்று டீ எடுத்து வர, வாங்கி கொண்டவன், எதுவும் பேசவில்லை. குடித்துவிட்டு கிளம்பிவிட்டான்.
சுபா, அன்றிலிருந்து மீண்டும் வேலைக்கு செல்ல ஆரம்பித்திருந்தாள். எப்போதும் போல் கணவனிற்கு ஒரு டிபன் பாக்ஸ். வேலைக்கு சென்றவளை அங்கே நேரம் இழுத்துக் கொண்டது, வழக்கமான மதிய உணவு வேளையில், வந்தவள் அவனிற்கான டிபன் பாக்ஸை வைத்திட, சில நொடிகள் அவன் எடுப்பான என தயங்கி நின்றாள்.
மெல்ல அவன் கை நீண்டு அதனை எடுத்துக் கொள்ள, மகிழ்ச்சியில் அவள் கண்கள் குளம் கட்டிட, இது போதும் என நினைத்தவள் மீண்டும் தன்னிடத்திற்கு சென்று விட்டாள். இதுவே வாடிக்கையானது.
அவனும் பேசவில்லை, அவளும் பேசவில்லை. ஆனால், இருவரும் அடுத்தவர்களுக்கு செய்வதை நிறுத்தவும் இல்லை.
பிள்ளையோட பேசினான், விளையாடினான்.
சுபாவிடம் இரண்டு மூன்று வார்த்தை.
அதற்கு மேல் இல்லை.
சுபாவும் எதுவும் கேட்கவில்லை.
அவள் புரிந்துகொண்டாள்.
இது அவினிற்கான இடைவெளி என்று.
அவளை மன்னிப்பதற்காக அவன் கால அவகாசம் எடுத்துக் கொள்ள, அவனிற்கு அதற்கான நேரத்தை கொடுத்து ஒதுங்கி நின்று, அவனிற்காய் காத்திருக்க ஆரம்பித்தாள் அவள்.
ஒரே வீடு, ஆனால்
சில தூரம், முற்றிலும் பிரிவு இல்லை.
அந்த தூரம்…!
அதை கடக்க முடியாத தூரமில்லை. அவன் கடந்து வரும் காலத்திற்காக அவள் காத்திருக்க ஆரம்பித்தாள்.
வருணாவிற்கு ஏழாம் மாதம் தொடங்கியிருக்க, நாளை அவளிற்கு வளைகாப்பு. இரவு உணவை முடித்துவிட்டு, முகிலனும் அவளும் நடை பயின்று கொண்டிருந்தனர்.
“நாளைக்கு அண்ணி வருவாங்களா இங்க”
“வருவாங்கன்னு தான் தோணுது.”
எல்லாம் சரியாகிடும்ல?” மெதுவாக கேட்டாள் அவள்.
அவன் நடையை நிதானப்படுத்தி, அவளருகே நின்றான்.
“எல்லாம் ஒரே நாள்ல சரியாகிடாது வருணா…”
“ஆனா… சரியாகாமயும் போகாது.”
அவள் அவனை பார்த்தாள்.
அந்த வார்த்தைகளில் நம்பிக்கை இருந்தது.
“பரணி இந்தளவுக்கு மாறுனதே பெருசுதான் வருடா. அவனுக்கான ஸ்பேஸ் கொடுக்கனும்.”
“ம்ம்ம் சீக்கிரமே அவுங்க வாழ்க்கை பழையபடி மாறனும்னு நினைக்கிறேன்…” என்று மெதுவாக சொன்னாள் வருணா.
முகிலன் லேசாக சிரிச்சான்.
“சித்தி…! சித்தப்பா!” சாத்வியின் குரலில் இருவரும் வேகமாய் அங்கே பார்த்திட, பால்கனியில் பரணி, சாத்வியை வைத்திருக்க, அவளிற்கு உணவு ஊட்டியபடி சுபா நின்றிருந்தாள். இவர்களை பார்த்து அவர்கள் கையசைக்க, பதிலுக்கு கையசைத்தவர்களின் மனதில், எல்லாம் சீக்கிரமே மாறிவிடும் என்று நம்பிக்கை வந்திருந்தது.
‘இனி பரணியின் வாழ்க்கையை நினைத்து பயப்பட அவசியம் இல்லை’ என்பதை உணர்ந்த முகிலனிற்கு, பாரம் குறைந்த உணர்வு, அருகில் நின்ற வருணாவை அவனது விரல்கள் தழுவிக் கொண்டன ஆசையாக,
“என்னவாம் வாத்திக்கு? மூட் மாறுதோ?” வருடா அவனின் நிலை
யறிந்து இயலபாக்க,
“ஏன் மாறக் கூடாதா?”
“பிச்சு, பிச்சு!” ஒற்றை விரலை நீட்டி அவனை மிரட்ட, அவள் விரல்களில் அழுந்த முத்தமிட்டு, அவளை அணைத்துக் கொண்டவனின் உள்ளம் எங்கும் மகிழ்ச்சியே!
முற்றும்!