விமலா மருதராஜ்
Moderator
பிடிக்காத உன்னை
எப்போது பிடிக்க ஆரம்பித்தது??
தெரியவில்லை...
அந்த மாற்றத்தை அறியவும் இல்லை...
இது என்ன புது வித உணர்வு!!
குழப்பத்தில் பல நாட்கள் சென்றது..
இது தவறோ...
இல்லை
இது சரியோ...
என சில காலம் சென்றது ...
ஆயிரம் எண்ண அலைகளில் சிக்கி ஆட்பட்டு இருந்தாலும்!!!
உன்னின் ஒரு குறுஞ்செய்திக்கு பதில் அனுப்பாமல் இருக்க முடிந்தது இல்லை...
முதலில் என்னை திட்டிக்கொண்டேன்.
ஏன்??
என்னை நானே திட்டிக்கொண்டே இருந்தேன்....
இதுவே தொடர் கதையானது...
சண்டை வந்தாலும்!!
உன்னை வெறுக்கவில்லை..
என்னை நீ இம்சித்தாலும்!!
உன்னை ஒதுக்கவில்லை...
பிரிந்து இருந்தோம்...
மாறாக
மனதால் இணைந்தே இருந்தோம்
நாட்கள் ஆக ஆக !!
என்னை எனக்கு புரிந்தது..
உன்னையும் நன்றாகவே புரிந்தது..
என் வளையம் விட்டு நான் வர நினைக்கவில்லை...
நீயும் என்னுடைய வளையத்தில் இருந்து என்னை பிரிக்க நினைக்கவில்லை...
காலம் கடந்து கொண்டே இருந்தது....
மனதில் அடைகாத்த பல வருட காதலை!!
எதிர்பார்ப்பு எதுவுமே இன்றி ஈன்று விட்டேன்..
மீண்டும் மௌனத்தின் பிணை கைதிகளாகி விட்டோம்...
உன் போக்கில் நீ...
என் வாழ்வில் நான்...
எப்பொழுதும் போலவே உன் குறுங்செய்தி வரும்!!
அன்று போலவே இன்றும் பதில் செய்தி அனுப்பும் நான்...
எதிர்பார்ப்புகள் இல்லை என்று என்னை நம்ப வைத்தாலும்!!
என்னை மீறிய எதிர்பார்ப்புகள் என்னை மீறுயும் வரும்...
அப்பொழுது எல்லாம் தாயை தேடும் கன்றை போல!!
என் மனம் உன்னை தேடும்...
ஆனால் நீ சர்வ ஜாக்கிரதையாக தள்ளி நிற்பாய்...
என்னுள் இருக்கும் திமிர் என்னை உசுப்ப....
மீண்டும் என்னை என்னால் மீட்டு எடுக்க முடியும்...
வாழ்க்கை பயணத்தை ரசித்தே நடந்துக்கொண்டே இருந்தேன்...
நீ மோசமானவன் !!
என்பதை என்னிடம் காட்ட நினைத்தாய்...
தள்ளி நின்றாய்!!!
வேதனை செய்தாய்...
என்னின் மனதுக்கு உன்னை புரியாத??
இல்லை தெரியாதா??
உன் நாடகம் முதலில் புரியவில்லை..
புரிந்த பின் தானே காதல் நிலைக்கொண்டது...
நான் நம் காதலை மட்டுமே நம்பினேன்...
நீயோ!!
நம் காதல் கைகூடாது என நம்பினாய்...
காதலே...ஒரு முரண் தானே...
இதில் எது வெல்வது என போராட்டமே நம் இடையில்!!!
நீ என்னுடன் போராட
நான் உன்னுடன் போராட
இனி போராட சக்தி இல்லை!!
என்ற நிலை
என் திமிர்!! வீரம்!! நம்பிக்கை
எல்லாமே என்னை விட்டு போன போது!!!
உன் மடி சாய தோன்றியது...
நீதான் வென்றாய்...
நான் தோற்று விட்டேன்....
போதும்
இந்த போராட்டம்...
இனியாவது நிம்மதியாக இரு!! என சொல்ல நினைத்த போது...
என்னிடம் நீ நெருங்கி வந்துவிட்டாய்..
இது கனவா?? நினைவா?? என தெளிவதற்கு முன்
வந்த நீயோ!!
நான் தான் வென்றேன் என்றாய்...
உன்னிடம் நான் தான் தோற்றேன் என்றாய்!!!
உன்னை மாற்ற நினைத்தேன்...
நீ நன்றாக இருக்க ஆசைப்பட்டேன்...
உன் மையல் மறைந்து விடும் என நினைத்தேன்...
நம்பவும் செய்தேன்...
என் மூளையை என் மனம் வெல்கையில்!!
என் மனதை நீ கண்டு கொள்வாய்...
என் மனதை என் மூளை ஆள்கையில்!!
என் நடிப்பையும் நீ கண்டுக்கொண்டாய்...
அங்கேயே!!
நான் தோற்று விட்டேன்...
உன் அன்பிற்கு முன்னால் நான் தோற்று விட்டேன் டி!!!
நீ எதை கண்டு என்னை நம்பினாய் என தெரியாது!!!
நானே என்னை நம்பாத போது!!
நீ நம்பினாய்...
என் பயம்!!
நீ என்னை விட்டு போக வேண்டும் என நினைத்தது...
என் மனம்!!
நீ எனக்கு வேண்டும் என மீண்டும் மீண்டும் உன்னை தேடியது...
நானும் போராடினேன்
நீயும் சளைக்காமல் போராடினாய்...
இப்பொழுது கூட!!
நீ என்னை வென்றவனாய் காட்ட நீ தோற்றுவிட்டாய்....
உண்மையில் தோற்றது நான் தான் டி!!!
என்னுடைய நான் என்ற இறுமாப்பு!!
என்னுடைய கண் மூடி தனமான நம்பிக்கை!!
உனக்கு ஏற்றவன் நான் இல்லை என்ற நம்பிக்கை..
முடியவில்லை டி!
பிடித்தவளை பிடிக்கும் என சொல்ல முடியவில்லை!!
என் வாழ்வு அப்படி!!!
எட்டும் உயரத்தில் நீ இருந்தும்..
நீ எனக்கு எட்டாதவள் என நினைத்தேன்...
அப்படி நினைக்க தள்ளப்பட்டேன்...
உன்னிடம் சரண் அடைய தோன்றும்..
ஒவ்வொரு முறையும்..
எனக்குள் இருக்கும் அதீத நல்லவன் உன்னை ஓட வைக்க!!
கருந்தேளின் விஷம் போல வார்த்தைகளை கக்குவேன்...
சில நாள் ...
அமைதி காப்பேன்..
பின்!!
என் மனம் உன்னை தேடும் ...
ஒரு குறுஞ்செய்தி !!
அன்பு கொஞ்சமும் குறையாமல்!!
நீ பதில் அனுப்புவாய்....
என்னால் புரிந்து கொள்ள முடியாத பெண் நீயம்மா...
உன்னை விலக்க இனியும் என்னால் முடியாது!!!
தோற்று விட்டேன் கண்ணம்மா...
எல்லையற்ற காதலின் !!
பிம்பமாய் நீ...
அதின் பிரதி பிம்பமாய்...
என்னை ஏற்றுக்கொள்வாயா???
கண்மணி..
விமலா மருதராஜ்...