எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பெண்மையே பேசு

admin

Administrator
Staff member
ன் பெண்மையே பேசு!
ஏனெனில் உன் மை தீட்டிய விழி
என்றும் பேசுது..

பொய்மையே நான் காணும் நொடி கோபமாய்
காணா நொடி
காதலாய்
உன் செவ்விதழோரம்
கள்ளச்சிரிப்பு ஒளிய
என்னை சீண்டும் கோபம்
அழகடி பெண்ணே..

அவ்வழகில் என்னை
தொலைக்கிறேன்
கண்ணே நான் செல்லும் பாதையில் ஓவியமாய்
உன் நிழல் படர்ந்திருக்க
என் நிழல் தொட்டு சென்றதடி..

நிழல் தீண்டலுக்கே செம்மையுற்ற
என் மென்மையே
இது சொல்லுமடி உன் மனதின் உண்மையை..

அதனை மறைத்து என்னை கொல்லுவதேன்.
பெண்மையே பேசு!

காற்றின் மொழி மட்டும்
அல்ல
நாம் காதலையும் தான்..

பேசிடு பெண்மையே
என் புறமன்றி
அகம்தனில் மறைந்திருக்கும்
என் நீங்கா பெண்மையே
மீண்டும் கூறுகிறேன்
பெண்மையே பேசு!

அன்புடன்
ப்ரஷா
 
Last edited:

Eswaran

Member
அக்கா சூப்பர் ????????இவளோ சூப்பர் ah எழுதுறீங்க ?????❤❤❤❤
 
Top