எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பெண்மையே பேச

admin

Administrator
Staff member
கைவிலங்கு என ஏதும் இல்லை...
தடுப்போர் எவரேனும்.. !
இல்லை
என நம்ப வைக்க பட்டிருக்கிறாய்....

பொட்ட புள்ள அவ உடுப்பு போடு, ஆம்பள புள்ள கணக்கா திரியுரா....
மானம் காக்க உடுப்பு என
வாதாட இயலாத வயதோ....!?

என்ன ரோட்டில் விளையாட்டு
அண்ணன் போல.. வீட்டில் இரு...
இன்னது பேச வேண்டும் என தெரியாத வயதோ.....!?

படிப்பு இதை படியேன்...
திருமணம் வேறு செய்து
கொடுக்க வேண்டும்....
பேச எத்தினிக்கையில் மெளனம் மொழியாய் மாறியதோ.. ?

இரவு வேலை செய்யும்
அவசியம் என்ன?
தகவல் தொழில்நுட்ப பணி
இவ்வாறு செயல் படுகிறது என
புரிய வைப்பதை காட்டிலும்....
ஏனோ மௌனம் காக்கிறாய்.... !!!

அவளுக்கு பார்க்க வேண்டும்
என்று இல்லை.. !!!
நாங்கள் பார்த்து பிடித்தால்
போதுமானது...
நீ தானே பெண்னே வாழ
போகிறாய்....
குரல் இப்பொழுதேனும்
உயர்தேன்... !!!!

"பெண்மையே பேசு"
திடமாக..
முடிவாக...
தெளிவாக..
பெண்மை பேசுவது திமிர் எனில் "நான் திமிருபிடித்தவள்"என கூறிக்கொள் பெருமையாக.....
"பெண்மையே பேசு"...

லாவண்யா சதீஷ்
 
Top