எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

எல்லையற்ற காதலே

admin

Administrator
Staff member
ன் காதல் கண்ணா !

இருள் சூழும் இரவிலும்,
ஒளிவீசும் காலையிலும்,
என்னை சுற்றி ஒரு கூட்டமே
இருந்தாலும் தனியாகவே
உணர்கிறேன்.
ஆழ்ந்த நித்திரையிலும்,
கனிந்த தனிமையிலும்,
உன்னை எண்ணியே காலம்
கழிகிறது,
பொழுதும் நகர்கிறது.

என்னையும் மறந்து
என் நிலையையும் வென்று
என் நிஜத்தினை
ஆட்கொண்டவன் நீ !
ஆனால் யார் நீ?

என் காலை கனவும்
என் மாலை நினைவும்
நீயாய் மாறி போனாய் !
ஒரு உருவம் இல்லா
உயிராய் !
சுவாசம் இல்லா காற்றாய் !

என்னவென்று உன்னை
எழுதுவேன் ?
எதுவென்று உன்னை
புரியவைப்பேன் ?
என்னுள் கலந்த நீ !
நானாய் திரிந்த நீ !

நொடி நொடியாய்
அணு அணுவாய்
உன்னை நேசிக்கிறேன்.
யார் என்றும் அறியாது,
பெயர் கூட தெரியாது !

என் வாழ்க்கைக்குள்
நுழையும் முன்
என்னை முழுதாய்
நனைத்தவன்..
காதல் என்னும் படகில்
படகாய் நான், துடுப்பாய் நீ !

இன்னும் எத்தனை காலம்
காத்திருப்பேன் ?
உன் பார்வைக்காக,
உன் வேர்வைக்காக,
உன் சுவாசத்திற்காக ?
உனக்காக?

காத்திருப்பதும் சுகம் தான். காத்திருப்பதால் காதல்
கூடுமெனில்
காத்திருப்பேன் !
காத்திருப்பதால்
தூரம் குறையும் எனில்
காத்திருப்பேன் !
இறுதிவரை!

௭வ்வளவு கொடுப்பனை
உனக்கு ?
என்னிடம் வருமுன்
என் எழுத்துக்களில் எழுந்து
நின்று
சாகாவரம் பெற்றாய் !

கண்களும் பார்க்கவில்லை,
கைகளும் கோர்க்கவில்லை !
எந்த உறவும் இல்லை
ஆனால் என் உள்
உணர்வாய் நீ !

உன்னை நான் பார்க்கும்
வேலையில்
எதை முதலில் கொடுப்பேன் ?
அழகான காதலையா?
அளவில்லா முத்தங்களையா?
அழிவில்லா
கவிதைகளையா?

என்னிடம் இருக்கும்
என்னை கொடுக்க,
எத்தனை பிறவி தான் நான்
எடுக்க வேண்டும்?
எவ்வளவுதான் அள்ளி
கொடுத்தாலும்
திகட்டவா செய்யும் ?
தித்திப்பு தானே கூடும்!

காதல் கண்ணா,
விரைவில் வந்து விடு
என்னிடம்.
சொல்ல முடிந்தது
இவ்வளவுதான்,
சொல்லாமல் மறைப்பதும்
உண்மைதான்!!!

- கௌசல்யா ராஜா,
உதவிப் பேராசிரியர்,
ஆங்கிலத் துறை,
தாசிம் பீவி அப்துல் காதர்

மகளிர் கல்லூரி.
 

admin

Administrator
Staff member
நான் கண் இமைக்கும்
போதெல்லாம் உன் முத்தம்
வேண்டும் ...
நான் கண்ணசைத்தால் உன்
மொத்தமும் வேண்டும்...
நான் தலை சாய நினைத்தால்
உன் மார்பு வேண்டும்...
நான் பசியார நினைத்தால் நீ
உணவாக வேண்டும்...
என் ஐவிரல் இடுக்கில் உன்
விரல்கள் வேண்டும்..
என் கூந்தலின் வாசம் உன்
மீசையில் வேண்டும்
என் நெற்றியின் வெற்றிடம் நீ
நிரப்ப வேண்டும்
என் கண்ணங்களை பந்தாட
கண்ணா நீ வேண்டும்.
என் உதட்டின் வரிகளை உன்
நாவால் எண்ண வேண்டும்..
என் நெஞ்சுக்குழியில்
உன் பிறை நகக் கீரல்கள்
வேண்டும்...
என் இடுப்பின் வளைவுகளில்
உன் கைகள் தொலைய
வேண்டும்...
என்றும் எப்போதும்
என்னவனாக நீ வேண்டும்...
இன்றே இப்போதே உன்னவளாக
நான் ஆகிட வேண்டும்..
என் கண்ணணாக நீ
வேண்டும்...
உன் கோதையாக
நான் வேண்டும்...
உடலாலும் மனதாலும் நாம்
ஒன்றாக வேண்டும்..
காதலால் காமத்தில் நாம்
தொலைய வேண்டும்...!
 
Top