அத்தியாயம் 1
சென்னை மாநகராட்சி காவல் நிலையத்தில் ஆலோசனை கூட்டம் ஒன்று மிகவும் காரசாரமாக நடந்தக்கொண்டிருந்தது. கூட்டத்தின் முடிவில் ஐஜி, “ ஒகே கைஸ் இந்த கேஸ் இவ்ளோ காம்பிளிகேட் ஆக தேவை இல்லை. இந்த போதை மருந்து கடத்தல் கேஸ் நம்மள 1 வருஷமா எந்த முன்னேற்றம் இல்லாம சுத்தல்ல விட்டிருக்கு. இன்னும் லேட் பன்ன கூடாது அதுனால இந்த கேஸ ஹன்டல் பன்ன டிசிபி கௌதம் கிருஷ்ணாவ சென்னக்கு வரவெச்சிருக்கோம். எல்லாரும் அவருக்கு கோஆப்பரேட் பன்னனும்னு கேட்டுக்குறேன், யு ஆல் மே கோ நவ் “.
அனைவரும் கலைந்து சென்றதும் ஏசி நாராயணன் மற்றொரு முக்கிய காவல் அதிகாரியாடம், “ இவ்ளோ வருஷ அனுபவமுள்ள நம்மளாலயே கண்டுபிடிக்காதத அவன் கண்டுபிடிப்பான? யாருயா அவன் என்றார் கடுப்பாக , மற்றவர், “ விசாரிச்சேன் ஸார், கேடர்ல டாப் ரேங்க், 8 வருஷத்துக்கு 4 மாற்றல் இது ஐந்தாவது, இன்னும் பத்து நாள்ல இங்க ஜாயின் பண்றான். பாத்துக்கலாம் விடுங்க என்ன கிளிக்கிறான்னு .
அதேநேரம் சென்னை திருவான்மியூர் அப்பர் மிடில் க்ளாஸ் மக்கள் வாழும் பகுதியில் அமைந்துள்ள காஸா க்ராண்ட் 5bhk வில்லா காலை வேளை பரபரப்பில் இயங்கிக் கொண்டு இருந்தது. சுகந்தி டைனிங் டேபிளில் காய் நறுக்கிக் கொண்டிருந்தார். “ கண்மணி, காய்கறி நறுக்கிட்டேன், நீ இத வெச்சிடுமா நான் போய் குளிச்சிட்டு வரேன். “
கிச்சனிலிருந்து வந்த கண்மணி “ சரி அத்த நான் பண்றேன். நீங்க போங்க”, என்று சொல்லி மறைய , நேரம் ஆச்சு இவளுகள கிளப்பனும் என்று புலம்பியபடியே ஒரு அறைக்குள் நுழைந்தார்.
சுகந்தி-கிருஷ்ணன் தம்பதியின் மூத்த மகன் கௌதம் கிருஷ்ணா ஐபிஎஸ்., 30 வயது துடிப்பான இளைஞன். சிறு வயதிலேயே தந்தையை இழந்ததாலோ என்னவோ மிகவும் பொறுப்பான, தனக்கு அடுத்து 8 வருடம் கடந்து பிறந்த இரட்டை தங்கைகள் அதிரா மற்றும் அபர்ணா வுக்கு தாயுமானவனாக இருந்து வருகிறான். அவன் காதல் மனைவி கண்மணி மற்றும் மகள் 3 வயது வினுஷா கௌதம்.
அங்கு அறையில் மெத்தையில் உறங்குபவர்களை எழுப்பியபடி, “ மணி எட்டு ஆச்சு, வெயில் மண்டைய பொளக்குது இங்க ஏசிய நல்லா வெச்சிட்டு தூங்கறத பாரு. எழும்புங்கடீ நீங்க கெட்டது பத்தாது குழந்தை யையும் சேர்ந்து கெடுக்குறீங்க. அங்க உங்க அண்ணி தனியா கிட்சன்ல சமைக்கிறா , போய் ஹெல்ப் பன்னுங்க போங்க. உங்க அண்ணன் வந்தாதா நீங்க சரி பட்டு வருவீங்க “ புலம்பியபடியே குளியலறை சென்றதும் எழுந்த அதிரா மற்றும் அபர்ணா “ வரவர அம்மா ரொம்ப அண்ணாவ சொல்லி பயங்காட்றாங்க அப்பு “ “ விடு அதி அம்மா வர்ற நேரம் நம்ம இப்படி இருந்தா இன்னும் கோவப்படுவாங்க வா போலாம் “
She is a fantasy
Shana nan naanaa oh ho
Sweet as a harmony
Shana nan naanaa oh ho ho
No one knows she’s a mystery
Shana nan naanaa oh ho ho
Fills your heart with ecstasy
Woahu woahu yeahi yeah hey
பாடல் பாடிய படியே கண்மணியை பின் இருந்து அணைத்த அபர்ணா, “ என்ன அண்ணி இன்னிக்கு டல்? அண்ணா இன்னும் கால் பன்னளையா? நைட் ஒன்னா தான் படம் பாத்துட்டு தூங்குனோம் அப்பமும் கால் வரல”, காபிய குடித்த படியே கேட்க அதிரா முகத்திலும் கவலை. தன் கவலையை மறைத்த கண்மணி, இதுக்கு எதுக்கு கண்ண கசக்குறீங்க? எதாவது முக்கிய கேஸ்ல இருப்பார். விடுங்க பாத்துக்கலாம். இரண்டு நாள் தான விடுங்க பாத்துக்கலாம். இன்னிக்கு கண்டிப்பா பேசுவார். போய்ட்டு வாங்க. அவர்களை தேற்றி அனுப்பி வைத்தாள்.
கௌதம்-கண்மணி திருமணம் முடிந்ததிலிருந்து கண்மணி இவர்களுடன் தான் வசிப்பது. கௌதமுடைய பணிமாற்றம் ஒரு காரணம் என்றால், அம்மா ,தங்கைகள் இனி என் பொறுப்பு என்று கூறிய கண்மணி ஒரு காரணம். கண்மணியின் தாயும் அப்போது தான் தவறியிருக்க, தாயிடம் மிகவும் ஒட்டுதலுடன் இருந்த கண்மணி சுகந்தியுடன் நெருங்கவே கௌதம் கவலையின்றி சென்றான்.
எந்த வேலை என்றாலும் தினமும் அனைவருக்கும் பேசிவிடும் கௌதம், கடந்த 2 நாள் பேசாதது மட்டுமின்றி செல் அணைத்து வைத்திருப்பது சற்றே நெருடல் அனைவருக்கும். ஒரு சிறிய விபத்து நடந்து மருத்துவமனையில் இருக்க நேரிட்டால் தனக்கு தகவல் கூறி தன்னை உடன் அழைத்து கொள்ளும் கணவன் இரண்டு நாளாக அழைக்காதது சற்று பயத்தையும் தந்தது.
தன் சிந்தனையில் இருந்த கண்மணி வாயில் மணி ஓசையில் களைந்து கதவை திறக்க உள்ளே வந்தார் திருவேங்கடம்.
முகம் விகசிக்க வாங்க ப்பா. என்னம்மா யாரையும் காணல என்று வந்து சோபாவில் அமர்ந்தார். வாங்க அண்ணா என்று வந்த சுகந்தி, சாப்பிடலாம் வாங்க அண்ணா.
சாப்பிட்டேன் மா, இடியாப்பம் சமைச்சன் பிள்ளைகளுக்கு குடிப்போம்னு கொண்டு வந்தேன். சுகந்தி “ நீங்க ஏன் அண்ணா இதையெல்லாம் செய்றீங்க இங்க வந்து சாப்பிட என்ன, அடுத்த வீட்ல இருந்துட்டு இப்படி பண்ணலாமா “
எனக்கும் பொழுது போதும் மா என்றவர், இந்தா பாப்பா எல்லாருக்கும் குடு. அதை வாங்கிய கண்மணி, சரண் எங்கப்பா?.
கிளம்பிட்டு இருக்கான் பாப்பா என்றவர் முன் வந்த அதி வாங்க மாமா என்றழைக்க பின் வந்த அப்பு, பாப்பாவ பாக்க வந்தீங்களா மாமா என்று அவரை வம்பிழுத்தாள். இது எப்பவும் நடக்கும் என்பதால் அனைவரும் சிரித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த வினுஷா, “ தாத்தா நான் இன்னிக்கு மாமா கூட ஸ்கூல் போறேன்” . சரி ராஜத்தி வா. கண்மணி “ மாமாக்கு வேலை இருக்கும், நீ அத்த கூட போ “ என்று சொல்ல, வினு முகம் சுணக்கம் கண்டு எழுந்த திருவேங்கடம், நீ வா டா தங்கம் நம்ம போவோம் என்று கிளம்பினார்.
இதற்குள் அனைவரும் உணவு முடித்து கிளம்பினர்.
அப்பு ஆடிட்டராகவும், அதி வங்கியில் பணி பிரிகிறாள். திருவேங்கடம் மனைவி இறந்த பிறகு அரசு வங்கியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று, கண்மணி மற்றும் கௌதமின் விருப்பத்தகற்கினங்க அவர்கள் வீட்டிற்கு அடுத்த வீட்டில் மகனுடன் வசிக்கிறார். கண்மணயின் தம்பி சரத் ,கௌதம் போல காவல் அதிகாரி. கண்மணி, பிரபல மென்பொருள் நிறுவனம் ஒன்றில் மேனேஜர் ஆக இருக்கிறாள்.
தாத்தா கைப்பற்றி கதை பேசி வீட்டுக்குள் நுழைந்த வினுஷா, சோபாவில் அமர்ந்து ஷு போட்டுக்கொண்டு இருந்த சரத்திடம் தாவிய படி மாமா, இன்னிக்கு நீங்க தான் என்ன கூட்டிட்டு போகனும்.
பூ குவியல் போல் தூக்கி சுழற்றிய சரத், நர்சரி படிக்க இவ்ளோ புக்ஸா? சரி பா நான் குட்டிய விட்டு கிளம்புறேன். நீங்க மதியம் யாராவது கூப்பிட்டுக்கோங்க. பை பா. பை தாத்தா..
சென்னை கமிஷனர் அலுவலகத்தில், சரத் சார் உங்கள கமிஷனர் சார் வர சொன்னார். . சரி குகன், என்று சரத் அனுமதி பெற்று உள்ளே செல்ல அங்கு கமிஷனர் ஜார்ஜ், வாங்க சரத், இவரு நம்ம புது டிசிபி ட்ரக்க்ஸ கேஸ் ஹன்டல் பன்னபோறார் நீங்க அவருக்கு அசிஸ்ட் பன்னுங்க “ எஸ் சார் என்ற சரத் அவருக்கு முன்னாள் இருந்த நபரை பார்த்து ஒரு நொடி அதிர்ந்தாலும் மறுநொடி அத்தான் என்னும் முனுமுனுப்புடன் கட்டி கொண்டான்.
சிரித்தபடி அணைத்து கொண்ட கௌதம் கிருஷ்ணா கமிஷனரிடம் அனுமதி கேட்டு வெளிவந்து “ எல்லாரும் எப்படி இருக்கீங்க சரத், எப்படி என் சர்ப்ரைஸ்?”.
சரத் “ இது சர்ப்ரைஸ் இல்ல அத்தான் ஷாக். பட் ரொம்ப சந்தோஷம் அத்தான் உங்ககிட்ட வர்க் பன்ன. வீட்டுக்கு பர்ஸ்ட் போங்க அத்தான், நீங்க பேசலன்னு பதட்டத்தில் இருக்காங்க எல்லாரும்.” கௌதம் “ அடுத்து வீட்டுக்கு தான் சரத். நீ பாரு. பை “ விடைபெற்றான்.
சங்கரி மற்றும் வினு மதிய உறக்கத்தில் இருந்தனர். வீட்டில் இருந்தே ஆலோசனை கூட்டம் ஒன்று முடித்த கண்மணி மீண்டும் கணவனுக்கு அழைத்து அது எடுக்கப்படாமல் இருக்கவும், சோர்வுற்றால். அப்போது கேட்ட அழைப்பு மணி சத்தத்தில் இந்நேரம் யார் என்ற யோசனையில் கதவை திறந்து பார்க்க
அங்கு நின்ற கௌதம் தன் கண்மணியை தனக்கள் சுருட்டிக் கொண்டான். கணவனை கண்ட கண்மணிக்கு கௌதம் தன்னை அணைத்ததையோ கதவை அடைத்துவிட்டு தங்களது அறைக்கு தூக்கி வந்ததோ கருத்தில் பதியவே இல்லை.
உன்னை அள்ளி எடுத்து உள்ளங்கையில் மடித்து…
கைக்குட்டையில் ஒளித்துக் கொள்வேன்…
வேளைவரும் போது விடுதலை செய்து…
வேண்டும் வரம் வாங்கிக் கொள்வேன்…
சிநேகிதனே சிநேகிதனே ரகசிய சிநேகிதனே…
சின்ன சின்னதாய் கோரிக்கைகள்…
செவி கொடு சிநேகிதனே…