#நிலவில்ஒருகதைஎழுது
#NN
#NNK1
#என்இருளின்நிலவானால்
தான் தோன்றித்தனமாக திரியும் ஒருவன் தன் சுயசரிதையை சொல்லும் விதமாக கதை... கதை சொன்ன விதம் மிக அருமை

குடிப்பழக்கத்தில் இருக்கும் ஒருவன் திருமணம் முடிந்த பின் மனைவி மகளுக்காக அந்த குடியை முற்றும் முழுவதுமாக நிறுத்தி வாழ்வில் முன்னேறி விட்டான் என இல்லாமல் எதார்த்தமாக அவன் போக்கில் அவன் வாழ்வதாக கதையை முடித்த விதம் வெகு அருமை 

விஷ்ணு...ஐந்தாம் அத்தியாயத்தில் தான் இவன் பேரே தெரிந்தது
படிப்பு என்பது எட்டிக்காய் இவனுக்கு
தாய் தந்தையின் கண்டிப்புக்காக பள்ளிக்குச் செல்லும் இவன் பெரிதும் விரும்புவது தோட்டத்தில் திருடி சாப்பிடும் மாங்காய்க்கும் புளியம்பழத்திற்கும்.. இதனால் இவனின் மேல் வரும் குற்றச்சாட்டிற்கும் இவன் செய்கையால் இவனின் அண்ணன்மார்களுக்கும் அக்காவிற்கும் ஏற்படும் கெட்ட பேரையும் இன்னல்களையும் நினைத்து தப்பு செய்யும் என்னை விட்டு அவர்களை எப்படி பேசலாம் என கோபம் கொள்ளும் இவன் அவர்களுக்கு இருக்கு ஒரு நாளைக்கு என இவனின் சொல்லும் செயலும் கூறும் இவன் நல்லவன் தான் என்று
யார் பேச்சையும் கேட்காமல் தனக்கு மகிழ்வு தரும் விஷயத்தை மட்டுமே செய்யும் இவன் சில நேரங்களில் மறுகுவது அவன் தாயின் கண்ணீருக்கு மட்டும்.. அப்படிப்பட்ட இவனும் தன்னைத்தானே மாற்றிக்கொள்ள நினைக்கிறான் தன் மகளுக்காகவும் தன்னை முழுவதுமாக புரிந்து கொண்ட தன் மனைவிக்காகவும்
பௌர்ணமியாள்.. அடைக்கலமாக இவர்கள் வீட்டுக்கு வரும் இவள் சந்தர்ப்ப சூழ்நிலையால் மனைவியாகிறாள் அவனுக்கு .. அவனை புரிந்து கொண்டு அவன் நினைத்தால் மட்டுமே எதுவும் நடக்கும் என இவள் அவனின் அக்காவிடம் பேசும் இடங்கள் அனைத்தும் அதிரடி சரவெடி 
(கெட்டு சீரழிஞ்சு இருப்பான் இவனை திருத்தத்திற்கு மனைவி வருவாளாம்
) தன் செயலை நினைத்து வருந்தும் விஷ்ணு அமுதினி அமுதன் என தன் இரு செல்வங்களுக்காக தன்னை மெதுமெதுவாக மாற்றிக் கொள்ள முயல்வதாக இனிதே முடிகிறது கதை
தாத்தா பாட்டி இவனுக்காக பரிந்து பேசுவதும்.. தாத்தாவின் மரணத்தில் இவனுக்கு எந்த பங்கும் இல்லை என பாட்டி இவனை சமாதானப்படுத்தும் இடங்களும் அருமை 

விறுவிறுப்பாகவும் எதார்த்தமாகவும் நகர்ந்தது கதை 
நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் 


#NN
#NNK1
#என்இருளின்நிலவானால்
தான் தோன்றித்தனமாக திரியும் ஒருவன் தன் சுயசரிதையை சொல்லும் விதமாக கதை... கதை சொன்ன விதம் மிக அருமை





விஷ்ணு...ஐந்தாம் அத்தியாயத்தில் தான் இவன் பேரே தெரிந்தது















