எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

ஆறாத காயம் நீ🩺💞

Status
Not open for further replies.

Rishaba Bharathi

New member
காயங்கள் பல கடந்து வந்த நாயகன் நாயகியின் வாழ்க்கை பயணம். மாய வலைகள் பல ரசிக்கும் திருப்பங்கள், ஆறாத வடுகளை தீருமா? தொடர்ந்து படியுங்கள் "ஆறாத காயம் நீ🩺💞" - ரிஷபபாரதி💙💛

நாயகன்- லைலேஷ்வரன்
நாயகி- ஐஸ்வர்யா & ரிஹானா என்கிற முஷ்கின் சிங்கானியா
 
Last edited:

Rishaba Bharathi

New member
காயம் 1

காரிருள் சூழ கண்ணன் வந்து பூங்குழல் ஊதி கோபியர்களை கவர்வது போல் அங்கொருவர் ஆடிக்கொண்டு இருந்தார் மூன்று நங்கையோடு. அதை பார்த்து சென்ற நபரொருவர் "ச்சி என்ன காரியம் அதுவும் நடு ரோட்டல?" என நேரடியாக செவிகளில் விழுவது போல் பேசிச்சென்றார். தன் நான்கு சக்கர வாகனத்தில் அமர்ந்து வண்டியை நகர்த்தி சென்ற வேகம், அதோடு அந்த நேரம் அவன் கேட்ட பாடல் அதன் வரிகள் அவனை பின்னோக்கி செல்ல வைத்தது.

(ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ? கண்ணன் தான் தந்தியடிக்க🎶 கண்ணா வா கண்டு பிடிக்க..கண்ணன் தேடி வந்த மகள் தன்னை தொலைந்து மயங்கி விட்டால் நான் இருக்கின்ற இடத்தினில் இருதயம் எங்கே? எங்கே? எங்கே?...🎶)

சில மாதங்களுக்கு முன்..

ஆதவன் வந்துவிட்டான் நாடும் நாட்டிலுள்ள மக்களும் தங்களின் அன்றாட வேலைகளை தொடங்கினர் "கண்ணா! எழுந்திரு டா ஹாஸ்பிட்டல் போகணும்ல." என அவனது தாயார் சித்ரா அன்பாக கூறினார். அவனோ "ம்ப்ச்! நா கொஞ்ச நேரம் கழிச்சு போறேன். என்ன விடுங்கள் சித்து மா." என அவன் மேலும் போர்வைக்குள் ஒளிந்து கொண்டான். "பேஷன்ட்ஸ்லாம் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க. அதோட, இன்னைக்கு ஒரு மேஜர் சர்ஜரி இருக்கு உயிர்கள காப்பாத்துறது உன் கடமை. இது புண்ணியம் கண்ணா போ." என தாயார் சரியான தருணத்தில் ஞாபகம் படுத்த "ஐயோ!!!! மறந்தே போயிட்டேன் வேலையில் ஜாயின் பண்ணி ஒரு வாரம் தான ஆச்சு அதான் நா மறந்துட்டேன் இதோ, கிளம்பிடுறேன் மா." என்றதோடு குளியல் அறையினுள் புகுந்து கொண்டான். "லைலேஷ்வரன் சீக்கிரம் எழுந்தா நிதானமா கிளம்பலாம். இப்படி இராத்திரி பூரா அரட்ட அடிச்சுட்டு காலையில எழுந்தா இப்படி தான் கிளம்பணும்." என அவனுக்கு அறிவுரை கூறிவிட்டு சென்றார்.

அவனோ தேநீர் மட்டும் அருந்தி விட்டு தன் நான்கு சக்கர வாகனத்தில் தான் வேலை செய்து வரும் மருத்துவமனைக்கு சென்று தன்னறைக்குள் புகுந்தவன் நேராக தன்னுடைய பணியை செய்ய துவங்கினான். "நர்ஸ்.ஒன் டுவன்டி வார்டுல இருக்கும் பேஷன்ட்க்கு இன்னைக்கு எதுவும் தர வேண்டாம். ஸ்டொமக் கிலினா இருந்தா தான் நம்ம சர்ஜரி நாளைக்கு பண்ண முடியும்னு சொன்னேனே செஞ்சீங்களா?" என அவன் தன் செவிலி ஸ்டெல்லாவிடம் கூற "நீங்க சொன்னது போல் பச்ச தண்ணீ கூட பல்லுல படாத படி அவங்க பொண்ணு சொல்லிட்டு போனாங்க. அதுக்கு முன்னாள் கூட.." என அவள் முழுவதுமாக கூறி முடிக்க முன்னரே "சட்ஆப்!!!! யூ மேட்! உனக்கு என்ன மரகழண்டு போச்சா? பேஷன்ட் பற்றி கேட்டா அதுக்கு மட்டும் பதில் சொல்லணும் தேவையில்லாத விஷயத்த சொல்லாதனு இந்த நாலு நாள்ல எத்தன தடவ சொல்லிருக்கேன்." என கர்ஜித்த வேகம் அவளை வியர்வை துளி வந்து மயங்கி விழும் நிலையில் சென்றாள் அந்த செவிலியர்.

"சார் ஐசியூ கவனிச்சுட்டு வந்த ஒரு பேஷன்ட் திடீர்னு துடிதுடிக்கிறார். நாங்க எவ்வளவு செஞ்சு பார்த்தாச்சு முடியல டாக்டர்." என மற்றொரு செவிலியர் திடுமென அவனிடம் பதிவு செய்ய அவனோ விறுவிறுவென புலி வேட்டை செல்வது போல் அந்த தனியறையினுள் சென்று அவரை கஷ்டப்பட்டு பழைய நிலைக்கு கொண்டு வந்தவனை பார்த்த அந்த நபரின் பெற்றோர் "டாக்டர் சாப் மேரா பெட்டா டிகேனா?(டாக்டர் சார் என் பையன் நல்லா இருக்கானா?)" என அந்த உயர்ந்த தரமான மருத்துவமனையில் பல்வேறு மொழிகள் தெரிந்த மனிதர்கள் தங்களை உடல்நிலை சரிசெய்து கொள்கிறார்கள் இதனாலே லைலேஷ்வரனின் தாயார் அவன் மீது அளவு கடந்த பெருமை அடைந்து கொள்வார். "குச்நெய் குச்நெய் துமரா பெட்டா கா ஹெல்த் கண்டீசன் இஸ் நார்மல். மே வாதா கரோ துமரா பெட்டா சூனர் வாப்பஸ் ஆகையா. தப்தக் பி பெஷன்ட். (ஒன்னும் இல்ல வருத்த படாதீங்க உங்க மகன் குணமாகிடுவான் இது என் வாக்கு. அதுவரை பொறுமையா இருங்க.)" என அவன் அவ்விடம் விட்டு சென்றதும் அவனிடம் "லைலு சார் சர்ஜரி டைம் சொன்னீங்கனா நல்லா இருக்கும் அதுக்கான வேலைய பார்த்துடலாம்." என அவள் கூறியதை கேட்டு கொண்டு அவளை திரும்பி பார்த்தவன் "நர்ஸ் உன்னை எத்தனை தடவை லைலுனு செல்லப்பெயர் சொல்லி கூப்பிடாதனு சொல்ல. டையம் சொல்லணுமா? சீக்கிரம் ஆப்ரேஷனுக்கு ஏற்பாடு பண்ணுங்க. பண்ணனும்." என்றான் ஆத்திரத்தில் அழுத்தமாக.

இன்று அறுவை சிகிச்சை முடித்தவனுக்கு இரவு நேரம் தான் அடுத்த வேலை அதனால் வீட்டுக்கு சென்றான் சென்ற வழியில் அவனின் வாகனத்தை இடித்த மற்றொரு நான்கு சக்கர வாகனத்தை பார்த்தவன் "ஹலோ! இப்படி தான் கார இடிப்பியா பார் என்னாச்சுனு இதுக்கு காசு கொடுத்துட்டு வீட்டுக்கு போ." என்றான் கோபமாக.

'ஹய்யோ காலையில எவன் முகத்துல முழிச்சேன்னு தெரியல இப்படியா நடக்கணும்? வெளிய போகணுமா?' என்ற எண்ணத்தில் அந்த வெண்ணிற வாகனத்தில் இருந்து வெளியேறி வந்தால் அழகு தேவதை முகத்தில் ஒரு வித கவலை,அதோடு தன்னிரு கைகளை மார்புக்கு நேராக வைத்து பிசைந்து கொண்டு கற்கண்டு நிறத்தில் சட்டை, கருமை நிற முட்டி வரை நீண்ட பேன்ட்,கார்மேக கூந்தல் காற்றில் பறந்து ஆடிக்கொண்டு இருந்தது. அவளை பார்த்தவன் தன்னிரு கண்களை கொண்டு அவளை ஆராய்ந்தான். "ச..சார் என்ன மன்னிச்சுடுங்க என்கிட்ட பணம் கிடையாது. நேத்து தான் கார்ல டேங்க் பில் பண்ணேன். ப்ரண்ட பார்க்க போ..போறேன்." என அவள் திக்கி திணறி அந்த வார்த்தைகளை கூறினாள்.

"நீங்க எல்லாம் போகலாம். நாங்க பார்த்துக்கிறோம். டேய் தம்பி இங்க வா." என அவன் முதலில் கூறிய வார்த்தைகளை கேட்டதும் மகிழ்ச்சியில் பொங்கிய பெண். அவன் அடுத்து கூறிய வார்த்தைகளை கேட்டதும் மீண்டும் அதே நிலைக்கு வந்தாள். "அண்ணா என்ன விஷயம்?" என அவனிடம் கேட்க "என் கார கொண்டு போய் வீட்ல விட்டுடு தெரியும்ல நா சொன்னத செய்யலைனா என்ன நடக்கும்னு." என்றான் அந்த நபரிடம் "லைலேஷ்வரே நீங்க சொன்னதை அப்படியே செஞ்சுடுறேன். நீங்க எப்படி போவீங்க?" என கேள்வி எழுப்பினார். "மேம் கார புல் பண்ணி வைச்சிருக்காங்க அதான் கவனிச்சுட்டு வரேன்." என்றான் சற்று அழுத்தமாக. அந்த பையன் லைலேஷ்வரன் தம்பியின் தோழன்.

இருவரும் ஒன்றாக அமர்ந்து வண்டியில் பயணித்து கொண்டிருக்கும் போது அவள் தனக்கு மிகவும் பிடித்த பாட்டு ஒன்றை ஆசையா கேட்டு சந்தோஷமாக வந்தாள்

(கண்ணன் ஊதும் குரல் காற்றில் பூத்திவிட்டு🎶 காந்தம் போல இழுக்கும்..🎶 மங்கை வந்தவுடன் மறைந்து கொள்ளுவது மாயக்கண்ணன் வழக்கம்..🎶 கண்ணீரில் உயிர் துடிக்க..கண்ணா வா உயிர் கொடுக்க..💞🎶)

இன்று..

வாகனத்தை நிறுத்த வேண்டிய இடத்தில் நிறுத்துவிட்டு அவன் மின்தூக்கியில் ஆறாவது மாடிக்கு சென்றான் "வாங்க டாக்டர் வாங்க." என அவனது செவிலியர் லைலேஷ்வரன் அவளோடு சென்றான் அந்த அறையில் நிசப்தம் மட்டுமே. படுத்திருந்த பெண்ணவளைப் பார்த்து "ஐஸ் நா தான் உன் செல்லம் வந்திருக்கேன். இப்படி நீ ஏன் பண்ணின? ஐஸ்! உன்னை எப்படியாவது மீட்டு எழ வைப்பேன். நீ கண்மூழிச்சு நூறு நாளாச்சு. கண் முழிச்சு பார் குட்டி." என கதறி கொண்டு இருந்தவனிடம் "சார் இவங்க பிழைக்க வெறும் இருபது சதவீதம் தான் வாய்ப்பு இருக்கும் செத்துபோனாலும் போக வாய்.." என அவன் கேட்ட வார்த்தைளுக்கு "ஏய்!!!!!! என் ஐஸ்குட்டி குணமாகி வருவா. நா லைலேஷ்வரன் இவளுடைய பாதி. நா ஒரு டாக்டர் ஐ நோ ஆல் தி டிடைல்ஸ். என் உயிரை பணயம் வைச்சாவது இவளை காப்பாத்துவேன். என் தனிபட்ட விஷயத்தில் தலையிட நீ யார்????" என சிங்கம் போல் கர்ஜித்த குரலில் அனைவருமே திகைத்தனர்.

காயங்கள் ஆறுமா?
 
Status
Not open for further replies.
Top