அத்தியாயம் 15
அழுது கறைந்து அசந்து உறங்கும் தன் அக்காவையே பார்த்துக் கொண்டிருந்த இன்பாவிற்கு, திடீரென உடம்பெல்லாம் திகு திகுயேன எறிய அந்த இடத்திலிருந்து புறப்பட்டான். தன் வீட்டை அடைந்தவன் தன் படத்தில் தஞ்சம் புகுந்தான். அடுத்த நாள் காலையிலே வினோத்துடன் வேலு பாலு வீட்டிற்கு வந்துவிட , இவ்வளவு காலையில் அதுவும் தம்பியை நேரில் வந்து இருக்க, பாலு மீனா பதறித்தான் போகினர்.
“ என்ன தம்பி”, “ என்னடா”, என்று அவர்கள் பதற்றம் நிறைந்த குரலில் இலஞ்சிதாவும் வந்துவிட, “ அய்யோ அண்ணா, அண்ணி ஒன்றும் இல்லை. நான் இருக்கிறேன். நீங்கள் பதற்றம் வேண்டாம்”,என்று அவர்களை அவர் ஆசுவாசப்படுத்த, வினோத்தின் முகமோ பாறையேன இறுகி இருந்தது. தன் உடன் பிறவா விட்டாலும் தனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து தன்னை ஒரு அன்னை போல் தூக்கி வளர்த்தவள் .அவளுக்கு ஒரு குழந்தை இல்லை என்று அவர்களுக்கு மிகவும் கவலை. அதுவும் நேற்று விஷயம் தெரிந்த நொடி முதல், எவ்வளவு அருமையாக நடித்து அனைவரும் முட்டாளாக்கி ,வீட்டில் எவ்வளவு பெரிய உயர்ந்த இடத்தில் வைத்திருந்தோம் அவனை, எவ்வளவு பெரிய துரோகம் அதுவும் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டான். நேற்று இரவே கிளம்பினான் வினோத் அவனை உண்டு இல்லை என்ற ஆக்குவதற்கு .ஆனால் வேலு தான் தடுத்துவிட்டார். “ டேய் பெண்பிள்ளை விஷயம், வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்றெல்லாம் செய்ய முடியாது. முள்ளில் விழுந்த சேலையை போல் பார்த்து பக்குவமாக தான் கையாள வேண்டும் என்று அவனை தடுத்துவிட்டார். இரவில் யாரும் தூங்கவில்லை காலை விடிந்ததும் வந்து விட்டார்கள்.
“ அண்ணா”, என்று ஆரம்பித்த வேலு மடை திறந்த வெள்ளமாக கொட்டி விட்டார். மீனா அதிர்ச்சியில் மயங்கி சரியா, பாலு மூர்ச்சையாகி போனார். மீனாவை தாங்கிய இலஞ்சிதா, வினோத் தண்ணீர் எடுத்து வர அவரை ஆசிவாசப்படுத்தி மயக்கம் தெளியச் செய்தால். “ ஏதோ போதாத நேரம் நடப்பது எல்லாம் தப்பாகவே நடக்கிறது .ஆனால் நாம் திடமாக இருந்தால் தானே பிள்ளைகளை மீட்க முடியும்”, என்று வேலு கூறி, அதில் தெளிந்த மீனா , “மாப்பிள்ளை என்று தலையில் தூக்கி வைத்து ஆடியதற்கு எனக்கு தேவைதான்”, என்று புலம்ப ஆரம்பித்தார் .
பாலு அமைதியாகவே இருக்க, “ அண்ணா”, என்று வேலு அழைக்க, “ தம்பி இன்னும் எத்தனை காண எனக்கு இந்த ஆயிள்”, என்று அவர் பங்குக்கு புலம்ப, “ அண்ணா”, என்று அவர் அதட்டி, “ பேத்திகளை நினைத்துப் பாருங்கள்”, என்று அவருக்கு அவரின் இருப்பின் அவசியத்தை உணர்த்தி, “ நான் வீட்டிற்கு போய் கிளம்பி வருகிறேன் ,ஒரு எட்டு பொய் இலக்கியா என்ன முடிவு எடுத்திருக்கிறாள் என்று பார்த்து வருவோம் ,கிளம்பி இருங்கள்”, என்று கூறி இலஞ்சிதாவை பார்த்து சாப்பிட வைக்குமாறு சொல்லிவிட்டு கிளம்பி இருந்தார் .அவர்கள் சென்றதும் இருவரும் அசையாமல் இருக்க அவர்களின் பரிதவிர்ப்பை ஒரு கையாலாக தனத்துடன் கண்களில் கண்ணீருடன் அந்த புகைப்படத்தில் கட்டப்பட்ட கட்டுக்குள் சிறைபிடிக்கப்பட்டு இருந்தான் இன்பா .அந்தக் கட்டை உடைத்து ஏறிய வழி அறியாதவாறு முழித்துக் கொண்டிருந்தான்.
ஒருவாறு இலஞ்சிதா அவர்களை உண்ண வைத்துவிட்டு, அவர்கள் கிளம்ப, இன்ஷித் வருவதற்கு சரியாக இருந்தது. பாலு விஷயத்தை அவனிடம் கூற, “ அப்பா அக்கா என்ன முடிவு எடுக்கிறார்களோ அதையே செய்யுங்கள். அவர்களுக்கு பக்கபலமாக நாம் இருப்போம்”, என்று கூறி பிள்ளைகளை அழைத்துக் கொண்டு பள்ளியை நோக்கி சென்றான். பாலு வராததால் இலஞ்சிதா கடைக்கு செல்லவில்லை வீண்பேச்சை தவிர்ப்பதற்காக. வேலும் வினோத்தும் ஒன்பது மணி போல் வர அவர்களும் கிளம்பினர் மதுரைக்கு இனிதாவும் உடன் சென்று விட்டாள்.
சமையலறையில் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, இவளும் குளித்துவிட்டு வந்து சாப்பிட்டால். பின் செய்வது ஒன்றும் இல்லாது இருக்க முன்னறையில் அமர்ந்து பழையதை சிந்தித்துக் கொண்டிருந்தாள். சிந்தனையாவும் இன்பாவை சுற்றிய வர, என்ன இன்று ஏதோ குறைகிறதே, எப்போதும் அவருடைய இருப்பை உணர முடியும், ஆனால் இன்று ஏனோ அவர் அருகில் இல்லை என்பது போல் இருக்கிறது என்று நினைக்க, பின் தன் தலையை ஒரு கொட்டு கொட்டிக்கொண்டு அவர் இல்லை குழந்தைகள்தான் இனி என்று தனக்குத்தானே கூறிக்கொண்டு, அப்படியே கண் அசைந்து விட்டால். எவ்வளவு நேரம் தூங்கினாலோ அழைப்பு மணியின் ஓசையில் தான் கண் விழித்தால் .
மணியை பார்க்க அது ஒன்றை என்று காட்ட, மீண்டும் அழைப்பு மணிவிடாமல் அடிக்க யார் என்று கேட்டுக் கொண்டே ,கதவை திறந்தால். அவள் யார் என்று சுதாரித்து, கதவை அடைப்பதற்குள், “ என்ன இலஞ்சிதா தனிமையில் இனிமை காண்கிறாயா”, என்று கூறி வீட்டிற்குள் நுழைந்து இருந்தான் ராஜேஷ். இவளுக்கு மனதிற்குள் பயம் தலை தூக்கினாலும் ,அதை மறைத்துக் கொண்டு, “ எதற்கு வந்தாய்”, என்று அவள் நேரடியாக விஷயத்துக்கு வர , “உனது தனிமைக்கு இனிமை சேர்ப்பதற்கு தான்”, என்றான் கோணல் சிரிப்பாக ராஜேஷ்.
“ நான் உன் அண்ணி, தேவை இல்லாமல் பிரச்சனை செய்யாதே”, என்று அவள் கூற, அதை கேட்கக் கூடிய நிலைமையில் அவன் இருக்கனும் அல்லவா, “ என்ன அண்ணியா ,அது எல்லாம் என் அண்ணன் இருக்கும்போது, இப்போது நீ பொது சொத்து இன்ஷித்திற்கு மட்டும்தான் நீ”, என்று அவன் ஏதோ அருவருப்பாக கூற வர, “ வாயை மூடு”,என்றால் தன் பொறுமையை கடந்த குரலில், “ ஓ வந்த செயலை பார்க்காமல், வாய் மட்டும் பேசுகிறேன் என்று கூறுகிறாயா”, என்று அவன் அருகில் வர ,புயலென பாய்ந்து, மேஜையில் மேல் இருந்த தன் கைபேசியை எடுத்தவள், யாருக்கு அழைக்க என்று அவள் யோசிப்பதற்குள், கைபேசியை தன் கையால் ஓங்கி தட்டி விட்டான் ராஜேஷ்.
“ என்னடி யாருக்கு அழைப்பாய், யாரும் ஊரில் இல்லை என்பது தெரிந்த தானே வந்து இருக்கிறேன், ஒழுங்காக எனக்கு ஒத்துழைப்பு தந்தாய் என்றால் சேதாரம் உனக்கு இருக்காது. நமக்குள் முடிந்து போகும்”, என்று கூறி கதவை அடைத்தவன் ,அருகில் வர, துடிதுடித்தான் போனால், ஆனால் இது கவலைப்படும் நேரம் கிடையாது எப்படியாவது தப்பித்தாக வேண்டும் என்று வீட்டினில் ஓட ஆரம்பித்தால். அவனுக்கு தப்பி தப்பி அவள் மானத்தை காப்பாற்றிக் கொள்ள ஓட, அடைத்திருந்த வீட்டிற்குள் அவளால் எவ்வளவு நேரம் தான் ஓட முடியும். அவளின் பரிதவிப்பும் தம்பி ஈனச்செயலையும் கண்டு, அந்த கட்டுக்குள் இருந்த இன்பா “ அய்யோ ஆண்டவனே என் மனைவியை காப்பாத்து என்னால் முடியவில்லை”, என்று அவன் துடிக்க, இலஞ்சிதாவோ , “ராஜேஷ் உன்னை கெஞ்சி கேட்கிறேன், இது தப்பு”, என்று அவனிடம் மன்றாட ஆரம்பித்து இருந்தால்.
மன்றாடிக்கொண்டே அவன் அசந்து நிற்கும் நேரம் வெளி கதவை நோக்கி ஓட, “ என்ன தப்பு மா ,அண்ணன் மனைவி ,என் மனைவி ,என் சொத்து”,என்று அவளைத் தாண்டி சென்று வெளி கதவின் மீது சாய்ந்து அவன் நிற்க தம்பி ஆனவனின் வார்த்தையில் இன்பா சுக்குநூறாக உடைந்து போனான். “டேய் பாவம்டா”, என்று இன்பா கதறிய அந்த நொடி, ராஜேஷ் பறந்து வந்து அவனின் புகைப்படத்தின் காலடியில் விழுந்தான். உடம்பு அவனுக்கு அப்படி ஒரு வலியை கொடுக்க அப்போதுதான் உணர்ந்தான் தான் தாக்கப்பட்டு இருப்பதை.
இலஞ்சிதா வாசலை பார்க்க, வாசல் கதவு சொர்க்கவாசல் திறப்பது போல் திறந்தது .அவள் புயலென வெளியில் ஒட ,அங்கு மலையென கர்ஜிக்கும் சிங்கமாக நின்றிருந்த இன்ஷித் மீது மோதி விழப்போனவளே, அவன் தாங்கி பிடித்தான் .அவள் உடம்பில் ஒரு நடுக்கம் ஒட அதை உணர்ந்தவன், அவளை விடுவித்தான். அதற்குள் ராஜேஷ் எழுந்து நின்று இவனை தாக்க வர, “ எப்படி டா உனக்கு, இவளிடம் நான் நெருங்கும்போது மூக்கு வேர்க்கிறது”, என்று கூறிக் கொண்டே தன் கையை முறுக்கிக் கொண்டு வந்தான். பாவம் வந்தது மட்டும்தான் அவனுக்கு தெரியும், இன்ஷித் தன் முறுக்கேறிய கைகளால் ஓங்கி அவனின் மார்பில் ஒரு குத்து குத்த அப்படியே சுருண்டு விழுந்தான். அதன் பின் அவனை புரட்டி எடுக்க, “அண்ணா போதும் ,செத்து விடப் போகிறான்”, என்று கபிணேஷ் தான் வந்து அவனை ராஜேஷிடம் இருந்து பிரித்து எடுத்தான். இலஞ்சிதா அசையாமல் சோர்ந்து, அங்கே அங்கே சேலை கலைந்து நின்று இருக்க, கபிணேஷ் , “அண்ணி, போய் துணி மாற்றுங்கள்”, என்றான்.
அவள் அவனின் குரலில் சுயத்துக்கு வந்தவள், “ நான் தானே போகிறேன் என்றேனே ,என்னை இது அது என்று பேசி இருக்க வைத்தாயே பார்த்தாயா என் நிலைமையை”, என்று அவளின் முழு கோபத்தையும், இன்ஷித் மேல் கேள்வி கணைகளாக தோடுக்க ஆரம்பித்தால். “ பார் நன்றாக பார், என்னை என்னவெல்லாம் கூறினான் தெரியுமா, அவன்”, என்று ராஜேஷை காட்டி அவள் கூற ,அவனை கொன்றால் என்ன என்பதை யோசிக்க தோன்றியது இன்ஷித்துக்கு. தான் மட்டும் அன்று இரினா சொன்ன பின்பு இலஞ்சிதா அறியாத வண்ணம் அவளின் கைபேசியில் அவசர அழைப்பு செய்து வைக்காமல் இருந்திருந்தால், இன்று நடக்க இருந்த அசம்பாவிதம் தனக்கு தெரியாமல் அல்லவா போயிருக்கும். நல்ல வேலை இவளின் கைபேசி ராஜேஷ் தட்டிவிட்டவுடன் அது கீழே விழுந்து அடுத்த நொடி இன்ஷித் கபிணேஷ் இருவருக்கும் அழைப்பு சென்றது. இவன் அழைப்பை ஏற்றவுடன் அதில் இருவரின் உரையாடல் கேட்க பதறி துடித்து ஓடி வந்தான் .அதனால் தான் அவளை எந்த சேதாரம் இல்லாமல் காப்பாற்ற முடிந்தது என்று நினைத்தான்.
தன் முன்னே புகைப்படத்தில் இருந்த தன் நண்பனை பார்த்து, “ ஏன்டா ஒன்று மாற்றி ஒன்று”, என்று மனதிற்குள் நண்பனோடு உரையாட, இன்பாவிற்கு இன்ஷித் வந்தது ஒரு ஆறுதல் என்றாலும்,” அவனுக்கும் ஏன் இப்படி என்றே தோன்றியது. இதற்கு தீர்வுதான் என்ன”, என்று இருவரும் யோசிக்க, தன் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் நின்றிருந்தவன் அருகில் வந்த இலஞ்சிதா, “ போதுமா உனக்கு சந்தோஷம் தானே, இதற்கு தானே இங்கு இருக்கச் செய்தாய்”, என்று அவனை சரமாரியாக அடிக்க, அவளின் சேலை கலைய, முற்றிலும் உடைந்தால் இலஞ்சிதா.
சூழ்நிலை சரியில்லை என்று உணர்ந்த கபிணேஷ், அங்கே மூர்ச்சியாய் கிடந்த ராஜேஷை தூக்கி வெளியே காரில் போட வெளியே போனான். இன்ஷித் அடிகளை பாமாலையாக வாங்கிக் கொண்டான். அடிபட்ட மனதின் வலி என்று அதை ஏற்றும் கொண்டான் . “அம்மாடி” என்று ஒரு உடைந்த குரல் வெளியே இருந்து கேட்க, இன்ஷித்தை அடித்துக் கொண்டிருந்த கை தன்னால் நின்றது. தன் தாயின் பரிதவிப்பு நிறைந்த குரல், அந்த உடைந்த இலஞ்சிதாவின் மூலையை சென்றடைய , “அம்மா”, என்று ஓடி அவரை அனைத்து கதறிவிட்டால்.
மகளின் நிலைமையும் கபிணேஷ் ராஜேஷை தூக்கி செல்வதை கண்டவருக்கு நடந்திருந்த காரியம் தென்னந் தெளிவாக தெரிந்து போனது. “ போதும் எங்களை விட்டு விடுங்கள், என் பேத்திகளோடு சென்று விடுகிறோம்”, என்று அவர் இன்ஷித்தை நோக்கி இருகரம் கூப்பி நின்றார் .
தொடரும்