எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

இடம்பகனின் இதி : கதை திரி

Status
Not open for further replies.

Simma

Moderator
Teaser : 1
கதை மாதர்களின் அறிமுகம்
நாயகன்: இன்ஷித்(35), இன்பன்(37)
நாயகி: இலஞ்சிதா(34)
குழந்தைகள் : இரினா(14)
இதிகா(11)
இன்பன்
வாழும் போது வரா காதல்,
நீ என்னை பிரிந்து கதறும் நொடியில் வந்ததோ;
உன்னை தூக்கிய போது வரா நேசம்,
நீ என் மீது தீ மூட்டிய போது சிந்திய ஒற்றை துளியில் துளிர்த்ததோ;
உன்னை கொஞ்சி தீர்த்த போது வரா மாற்றம்,
நீ நான் இன்றி தவிக்கும் போது வந்ததோ;
என்னை படைத்த இறைவனே, இந்த காதல்,நேசம்,மாற்றம் அனைத்தும் நான் செய்த பாவத்தின் சாபமா அல்லது பிரயிச்சித்தமா
 

Simma

Moderator
Teaser 2

இரினா

தந்தையின் பிம்பம்.
குணத்தில் மட்டுமல்ல உருவத்திலும்.
அந்த ஒற்றை காரணம் போதுமானதாக இருந்தது அவளை பெற்றவனுக்கு அவளை வெறுபதற்கு.

இதிகா

தாயின் பிம்பம்
அவளை பெற்றவனின் முழுஅன்பிற்கு பாத்திரம்மானவள்.
ஆனாலும் அவளின் அன்பு கூட அவனை மாற்றவில்லை.

இலஞ்சிதா

திருமணம் என்ற பந்தத்தால் வஞ்சிக்கப்பட்டவள்.
அழகு என்பதை வெறுப்பவள்
தன் குழந்தைகளுக்கு வாழ்பவள்
 

Simma

Moderator
Teaser 3
இன்ஷித்

சிங்கள தமிழன்.
தந்தையின் செயலால் திருமணத்தில் பற்று இல்லாதவன்.

இன்பனின் நிழலானவன்.

இலஞ்சிதாவின் நம்பிக்கையை சம்பாரித்த ஒரே ஆடவன்.

இரினாவின் மனம் என இரும்பு கோட்டையை தகர்க்க வந்த சரவெடி அவன்.

இதிகா என்னும் பூ குவியலால் இரும்பு மனம் கொண்ட அவனின் இதயத்தில் கூட காதல் நேசம் பாசம் என்னும் பயிர்கள் விதைக்கப் பட்டதோ...
 
Last edited:

Advi

Well-known member
ஒரே "இ" வரா பேரா இருக்கு....

இன்ஷித் - இர்ஷித் ரெண்டும் வேற வேற நபர்களா ரைட்டர்🤔🤔🤔🤔🤔
 

Simma

Moderator
ஒரே "இ" வரா பேரா இருக்கு....

இன்ஷித் - இர்ஷித் ரெண்டும் வேற வேற நபர்களா ரைட்டர்🤔🤔🤔🤔🤔
EDITED
 

Simma

Moderator
அத்தியாயம் ஒன்று

அந்த வீடே அமைதி கோலம் பூண்டு இருந்தது.” இன்பா வா போகலாம்”, என்றார் சர்வ அலங்காரத்துடன் இருந்த ஆள். “ யார் நீங்கள்”, என்றான் இன்பா (37) அந்த வீட்டின் தலைமகன். “ உன்னை உன் இருப்பிடத்தில் சேர்க்க அழைத்துச் செல்ல வந்துள்ளேன்”, என்றார் அவர் .

“நான் இன்னும் எதுவும் செய்யவில்லையே”, என்றான் இன்பா கவலையான முகத்தோடு. “ உனது வாழ்வு இவ்வுலகில் முடித்து விட்டது, அதனால் நான் உன்னை எமலோகம் செல்ல, ஏற்கனவே மூன்று நாட்கள் தாமதமாக தான் வந்துள்ளேன்”, என்றார் அவர் .

“ஆமாம் ஏன் அப்படி”, என்றான் அவன். “ அது உன் ஆயுட்காலம் நாங்கள் குறித்து வைத்திருந்ததை விட மிகவும் வேகமாக முடிந்து விட்டது ,அதனால் தான்”, என்றார் தூதர் . “ஏன் அப்படி முடிந்தது”, என்று இன்பா கேள்வி கேட்டான். “ அது பிறக்கும்போதே உன் இறப்பிற்க்கான தேதியையும் உன் முற்பிறவியின் பாவ புண்ணியத்தை வைத்து தீர்மானித்து விடுவோம். ஆனால் நீயோ இந்த பிறவியில் உனக்கென ஒதுக்கி இருந்த ஒரு கடமையையும் செய்யவும் இல்லை. அது போக பிறரையும் செய்ய விடாமல் ஒரு தடுப்புச் சுவரை போல இருக்கிறாய். இதற்கு மேலும் உன்னை விட்டு வைத்தால் நீ அவர்களையும் வாழ விடமாட்டாய் “,என்றார் தூதன்.

“ ஆனால் என் மனைவி குழந்தைகளுக்கு நான் எதுவும் செய்யவில்லையே”, என்றான் திரும்பவும் அதே கவலையான முகத்தோடு , “இருந்த போது நீ இப்படி எல்லாம் கவலைப்பட்டதாக தெரியவில்லையே”, என்றார் தூதன், “ ஆமாம் நான் என் தாய் தகப்பனை நம்பினேன், சித்தப்பா சித்தி அவருடைய பிள்ளைகள் யாவரையும் நம்பினேன்”, என்றான் பதிலாக, “ இப்போதும் அதே நம்பிக்கையோடு வர வேண்டியதுதானே”, என்றார் தூதர் எள்ளலாக , “இல்லை நீங்கள் வர தாமதித்திருந்த மூன்று நாளில் அவர்கள் அனைவரின் சுயரூபமும் எனக்கு தெரிந்து விட்டது ,ஆனால் நான் பேசினால் என் குழந்தைகளுக்கும் என் மனைவிக்கும் கேட்கவில்லை”, என்றான் முதன்முறையாக உண்மையான பரிதவிப்போடு.

“அது நீ ஒரு ஆத்மா நீ பேசுவது யாருக்கும் கேட்காது”, என்றார் தூதன் பதிலாக, “ ஆமாம் மூன்று நாளாக நானும் எவ்வளவோ போராடிப் பார்க்கிறேன், ஆனால் ஒன்றும் உதவவில்லை”, என்றான் கவலையாக, “நீ செய்த செயலின் பலன் அதை அவர்கள் அனுபவிக்க வேண்டும்”, என்றார் அவர். “ அவர்கள் எந்த தவறும் செய்யவில்லையே”, என்றான் உண்மையான நேசத்தோடு.

“ பெற்றவரின் பாவம் பிள்ளைகள் தலையில் .கணவனின் செயல்களில் மனைவிக்கு பங்கு உண்டு. நீ விதைத்த விதையை அவர்கள் தான் அறுவடை செய்ய வேண்டும்”, என்றார் விளக்கமாக. “ நான் அறுவடை செய்து கொள்கிறேன். அதை நான் சரி செய்வதற்கு எனக்கு கொஞ்சம் அவகாசம் கிடைக்குமா”, என்றான் கெஞ்சலாக .

“உன்னால் அவர்களை நெருங்க முடியாது. எப்படியும் நீ செய்த பாவங்களுக்கு தண்டனையை அனுபவிக்க தான் போகிறாய்”, என்றார் . “ அனுபவித்துக் கொள்கிறேன் .எனக்கு ஒரு மூன்று மாத காலம் அவகாசம் கொடுங்கள். என்னால் முடிந்ததை செய்து விட்டு வருகிறேன்”, என்றான் கோரிக்கையாக , “இதுவரை யாருமே என்னிடம் இப்படி கேட்டதில்லை. அதனால் மூன்று மாதம் அல்ல ஒரு இரண்டு மாதம் தருகிறேன் ஆனால் கவனமாக இரு”, என்றவர் அங்கே இருந்து விடை பெற்றார்.

இன்பா இடிந்து போய் அங்கே தன் வீட்டு தோட்டத்தில் போடப்பட்டிருந்த ஊஞ்சலில் அமர்ந்திருந்தான். இந்த வீடு வாங்கி சரியாக ஒரு வருடம் தான் ஆகியிருந்தது. தங்கள் பங்கு பணத்தில் வாங்கியது .ஆமாம் இன்பனின் அப்பாவுக்கு ஆறு சகோதரர் மற்றும் இரண்டு சகோதரிகள். அனைவரும் ஒரே வீட்டில் தான் இருந்தனர்.

இலஞ்சிதா (34) இன்பனுடன் திருமணம் ஆகி 15 வருடங்கள் ஆகிவிட்டது ..ஆனால் சிறுவயதிலேயே திருமணமாகிவிட்டதால் ஏனோ இருவருக்கும் சரிவர புரிதல் அமையவில்லை. கூட்டுக் குடும்பம் வேறு அதற்கு மிகவும் தடையாக இருந்தது. இன்பா தான் மூத்தவன் ஆண்களில் .ஆதலால் ரொம்ப அம்மாக்களின் பிள்ளை. அதற்குப்பின் ஐந்து பெண் பிள்ளைகள் தான். அந்தக் குடும்பத்தில் இவனுக்கும் அவனின் அடுத்த தம்பிக்கும் கிட்டத்தட்ட ஐந்து வருட வித்தியாசம். அதுதான் இலஞ்சிதா ஒற்றை மருமகள் ஆகிப்போனால் .அடுத்த கொழுந்தனுக்கு திருமணம் செய்ய எட்டு வருடங்கள் ஆகினர்.

ஒற்றை மருமகளான இலஞ்சிதாவுக்கு ஏழு மாமனார் மாமியார். இதில் ஆறு நாத்தினாரு வேறு. ஆறாவது நாத்தினார் தன்சி (5) பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள் இவள் திருமணமாகி வரும் போது . சரியாக தன்சி இரண்டாம் வகுப்பு முடிக்கும் போது இரினா (14) இன்பனுக்கு பிறந்து விட்டாள். இலஞ்சிதா தவிர வேறு யாரு அவளை தூக்கினாலும் தன்சிக்கு பிடிக்காது. அவள் மட்டுமே இளவரசியாக இருந்த வீட்டில் இரினவை அடுத்த தலைமுறை யின் முதல் இளவரசியாக கொண்டாடுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை .இரினாவுக் கூறிய தந்தை பாசத்தை தன்சி மேல் இன்பா வைத்திருந்த தங்கை பாசம் மூடியது .

ஆனால் அன்று அவன் யாரை தங்கை என்று தலைக்கு மேல் வைத்து ஆடினானோ யாருக்காக தன்மகளை தள்ளி வைத்தானோ அவள் தனக்கு முக்கியமான தேர்வு இருக்கிறது, என்று கூறி அவன் உடம்புக்கு முடியாமல் போன ,அந்த கடைசி ஆறு மாதத்தில் ஒரு தினம் கூட வந்து அவனை பார்க்கவில்லை. அது கூட அவனுக்கு அந்த நேரம் தவறாக தெரியவில்லை ,இவன் இறந்த தினம் அன்று அதை அவனின் கடைசி சித்தப்பா சண்முகம் தொலைபேசி வாயில் தன்மகள் தன்சியிடம் சொல்லியபோது சிறு கவலை கூட இல்லாமல் எனக்கு இங்கே கல்லூரியில் கிறிஸ்மஸ் கொண்டாட்டம் இருக்கிறது என்று கூறி மறுப்பு சொல்ல அதற்கு அவரும் சரி என்று வைத்த போதுதான் அவன் இதுவரை கட்டி வைத்திருந்த அழகிய கண்ணாடி மாளிகையில் முதல் கல்பட்டு சிறு விரிசல் ஏற்பட்டது.

அதன் பின் இன்பா ஒரு ஆத்மாவாக அவனின் உடலை சுற்றி அரங்கேறிய ஒவ்வொரு காட்சியிலும் அவனின் கட்டிய அழகிய கண்ணாடி மாளிகை இடிந்து விழுந்தது. உண்மையான நேசத்தின் மீதியைக் கண்டான். யாரை தன் தம்பி தங்கைகள் சித்தி சித்தப்பா அம்மா அப்பா என்று நம்பி தன் மீது உயிரே வைத்து தன் பழக்க வழக்கங்களை மாற்ற சொல்லி நிம்மதியாக வாழலாம் என்று தன்னிடம் மன்றாடிய மனைவியான இலஞ்சிதாவின்(34) உண்மையான நேசம் கண்ணில் பட்டது. தங்கைக்காக தன்னிடம் பாசம் தேடி வந்த தன் குழந்தையான இரினா(14) தன் உடலுக்கு தீமூட்டிய போது விட்ட ஒரு துளி கண்ணீர் அவளின் பாசத்தில் அளவை அவனுக்கு பறைசாற்றியது. அதில் அவனின் ஆத்ம மேலும் பதறியது .

இது அணைத்தும் போக அவனுக்கு உயிருக்கு உயிரான இரண்டாவது மகள் இதிகா (11) பிறந்தபோது தன்சி வளர்ந்து விட்டதால் இதிகாவிற்கு தந்தை பாசம் கிட்டியது .ஆனால் இன்பாவின் பழக்க வழக்கங்களை மட்டும் மாறவில்லை.குடி குடியை கெடுக்கும் என்ற பழமொழி இன்பாவிற்கு உண்மையானது. அவனின் கல்லீரல் முற்றிலும் செயல் இழந்தது. ஆதலால் இதயம் தன் வேலையை நிப்பாட்ட அவன் உயிர் பிரிந்தது. இன்று இளைப்பாறல் கிடைக்காமல் அவனின் ஆத்மா அந்த வீட்டை சுற்றி வந்தது.

இது யாதும் அறியாமல் இதிகாவோ அவன் போன அந்த நிமிடத்தில் இருந்து பித்து பிடித்தது போல் அமர்ந்திருக்கிறாள். அவர்கள் மூன்று பேரை தவிர வேறு யாரும் அவனுக்கு பெருசாக வருந்தவில்லை. அவன் செய்த செயல் அவனை நாசம் செய்து விட்டது என்று தான் கூறினார்கள். ஆனால் அவனால் உண்மையான நாசம் செய்யப்பட்டவர்கள் மட்டும் அவனை நினைத்து வருந்தி போய் அமர்ந்திருக்கிறார்கள் .

திடீரென்று வீட்டுக்குள் சலசலப்பாக இருக்க இன்பா அங்கே சென்றாள். இலஞ்சிதாவின் தாய் மாமா மூன்று பேரும் அவளின் அன்னையோடு நடுக்கூடத்தில் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களை சுற்றி இவனின் அப்பா, அம்மா, சித்தப்பா, சித்தி ,அக்கா, தங்கைகள், தம்பிகள் அவர்களின் கணவன்மார்கள் மற்றும் மனைவிமார்கள் இருந்தார்கள் .ஒரு ஓரத்தில் இலஞ்சிதா மழையில் நனைந்த கோழிக்குஞ்சு போல் நடுங்கி தன் இருக்கையால் இரினா மற்றும் இதிகாவை அணைத்து கண்கள் கலங்க நின்று கொண்டிருந்தாள். முதன்முறையாக அவர்களின் கலங்கிய தோற்றம் அவனை கணக்கச் செய்தது.


தொடரும்
 
Last edited:

Simma

Moderator
அத்தியாயம் 2



அவளை ஆதரவாக அணைத்து நான் இருக்கிறேன் என்று சொல்ல மனம் தவித்தது. ஆனால் அவனால் முடியவில்லை, இந்த இரண்டு மாதம் தன் வாழ்வில் செய்த தவறுக்கு வரும் வலியை தண்டனையாக ஏற்றான். என்ன செய்வது என்று அவன் அவனுக்குள் புலம்பித் தவிக்கையில் இலஞ்சிதாவின் முதல் மாமா ஜெகன் பேச ஆரம்பித்தார்.

நாங்கள் எதையும் பேசி சன்டையிட விரும்பவில்லை என் மருமகளையும் பேத்திகளையும் நான் அழைத்துச் செல்கிறேன் என்றார் கராராக . “

அது எப்படி நியாயமாகும்”, என்றார் இன்பாவின் கடைசி அத்தை ஜெயம். கொஞ்சம் இந்த வீட்டில் வேறுபட்டவள். அவரின் கணவர் மனோகரும் , “அது குழந்தைகள் வளர்ந்து விட்டார்கள். இந்த வீட்டின் வாரிசு”, என்றார் கராராக , “அதை நீங்கள் மட்டும் தான் சொல்றீங்க”, என்றார் ஜெகன் கவலையாக. “ இந்த மூன்று நாளும் நாங்களும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இங்கு நடப்பன யாவும் அவளை நன்றாக வைத்துக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையை எங்களுக்கு கொடுக்கவில்லை”, என்றார் சோர்வாக.

“ அவள் சம்பாதிக்கிறாள் அவள் தந்தை அவளுக்காக எழுதி வைத்த வீடு இருக்கிறது. யார் அவளை பார்த்துக் கொள்ளாவிட்டாலும் அது போதும் அவளுக்கு”, என்றார் அவரே தொடர்ந்து நிதர்சனத்தை. இவர் கூறிய எதற்குமே தன்னை பெற்றவர்கள் ஒன்றும் கூறாமல் இருந்தது இன்பாவை பாதிக்கவில்லை அவனுக்குத்தான் நேற்று இரவே தெரியும் அல்லவா, அதை கேட்ட பின்பு தானே அவனுக்கு முழு கண் திறப்பு.

நேற்று இரவு ஒரு மணி இருக்கும். இன்பாவுக்கு உடன் பிறந்த இரண்டு அக்காகள். அதில் மூத்தவள் இனிதாவுக்கு 42 திருமணமானவள் தான் .ஆனால் பாவம் வாய் பேச வராது காது கேட்காது மனநிலையும் சற்று சரியில்லை. அதை காரணமாக வைத்து சம்பாதிக்க நினைத்த கணவன், இவர்கள் பணத்தை தர மறுத்ததால் விட்டு சென்று விட்டான். இரண்டாம் அக்கா இலக்கியா திருமணமாகி 22 வருடம் ஆகிறது. அவள் கணவன் கண்ணன் 50 மதுரை செல்லூர் ரோட்டில் மாவு மில் வைத்துள்ளார் . இன்பாவுக்கு அவரை ரொம்ப பிடிக்கும் .

அணைவரும் அசந்து உறங்கிய பின்பு வீட்டு மொட்டை மாடியில் சத்தம் வர இன்பா என்னவென்று பார்க்க அங்கே சென்றான். “ என்ன அத்தை முடிவு எடுத்திருக்கிறீர்கள்”, என்றார் கண்ணன் கேள்வியாக, அவனின் தாயார் மீனாவை நோக்கி, கேள்வி மாமியாரிடம் இருந்தாலும் பார்வை என்னவோ மாமனார் பாலு 73 இடம் இருந்தது. தன் மகனை பறிகொடுத்தவர் மேலும் இவரின் கேள்வியில் தள்ளாட, “ குழந்தைகள் என் வாரிசு”, என்றார் பரிதவிப்புடன், அதில் உண்மையான நேசம் தெரிந்தது.

“ அப்போ எங்களுக்கு வாரிசு இல்லை என்று சொல்கிறீர்களா, நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எனக்கு குறை இல்லை இப்போ நினைத்தாலும் என்னால் ஒரு குழந்தைக்கு தகப்பனாக ஆக முடியும். உங்கள் மகளுக்குத்தான்”,என்று சுடுதண்ணீரை இறைப்பது போல் வார்த்தையில் அமிலத்தை கொட்டி கூற, அதில் இன்பாவின் தமக்கையும் பெற்றவர்களும் வேதனை அடைய, “ என்னங்க, மாப்பிள்ளை சொல்லவரதை கேட்டு முடிவு பண்ணுங்கள்”, என்றார் மீனா ,எங்கே தன் மகனை பறிகொடுத்த நிலையில் தன் மகளின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகிவிடமோ என்று பயந்து ,ஆனால் அங்கே அணைத்தையும் இழந்து வேதனையில் இருக்கும் தன் மருமகளையும் பேத்தியும் மறந்து போனார் .

“ இன்பா இருக்கும்போதே அவனுக்கும் அவன் குடும்பத்தினர் மீதும் எந்த ஒரு ஈடுபாடு இருந்தது கிடையாது ,அதற்கு உண்மையான காரணம் ஒரு வேலை இலஞ்சிதாவின் நடவடிக்கை”, என்று கண்ணன் முடிக்கவில்லை, “ போதும் மாப்பிள்ளை இலஞ்சிதாவையும், குழந்தைகளையும் அவள் தாய் வீட்டுக்கு அனுப்பி விடுகிறேன், ஆனால் ஒன்று என் சொத்தில் என் மகனின் பங்கு அவன் பெற்ற செல்வங்களுக்கு .அதை அவர்கள் தலையெடுக்கும் போது சேர்த்து விடுவேன்”, என்று பாலு கூறிவிட்டு திரும்பிப் பார்க்காமல் சென்று விட்டார்.

இன்பாவின் மனம் கண்ணன் வார்த்தையில் அதிர்ந்தது. தன் மனதில் என்னவெல்லாம் சொல்லி வாழ விடாமல் செய்தது ,அவன் மன கண்ணில் வந்து போனது. இலஞ்சிதாவிற்கு கண்ணனை பிடிக்காதுதான். ஆனால் ஒரு முறை கூட அவனை மரியாதை குறைவின்றி நடத்தியது கிடையாது. இன்றைய மனம் இலஞ்சிதாவின் செயல்களுக்கு 1000 நற்சான்று தந்தது.

“ மாப்பிள்ளை நீங்கள் தான் எங்களுக்கு ஒரே ஆதரவு”, என்று அவனின் தாயார் கண் கலங்க, “ என்ன செய்வது அத்தை நான் சொல்வது செய்வது உங்களுக்கு கடினமாக இருக்கலாம். ஆனால் அணைத்தும் இன்பாவின் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு தான். இப்போது இலஞ்சிதா பார்த்துக் கொள்ளட்டும் பின்பு நம் வாரிசு தானே. நல்லது கெட்டதை நாம் பார்த்துக் கொள்ளலாம். இப்போதே அணைத்தையும் கொடுத்து விட்டால் ,பின்னாடி நமக்கு முக்கியத்துவம் இருக்காது”, என்றான் கண்ணன் தேன் தடவி, அதைக் கேட்டவர் மகள்களை அழைத்து கீழே சென்று விட்டார். அவர் சென்றவுடன் அவனின் முகமே மாறியது. “ இலஞ்சிதா ஒரு குழந்தை பெற்று எனக்கு கொடுக்க சொன்னதை செய்தாயா, இல்லையே அப்படி நீ செய்திருந்தால், இன்று உன் பிள்ளைகள் நலமோடு வாழ வைத்திருப்பேன்”, என்றான் பற்களை கடித்துக்கொண்டு.

ஆம் அவர்களுக்கு குழந்தை இல்லாததால் இரண்டாவதாக பிறந்த பெண் குழந்தையான இதிகாவை இலக்கியா தத்தெடுத்து வளர்ப்பதற்கு கேட்க இலஞ்சிதாவின் விருப்பத்தை கூட கேட்காமல் மறுத்தது இன்பா தான். தன் தாய் அவனிடம் இன்னும் ஒரு குழந்தை பெற்றாவது தன் அக்காவிடம் கொடுக்க சொன்னதற்கு இவன்தான் மறுத்தான் .அது சரிவராது என்றும் மேலும், “ அம்மா அவளை நிறைய ஆதரவற்ற குழந்தைகள் இருக்கிறது, அதில் ஒரு நல்ல குழந்தையை நாமே பார்த்து அவளுக்கு தத்து எடுத்துக் கொடுப்போம் .இல்லை என்றால் கண்ணன் மச்சானுக்கு தான் மூன்று தம்பிகள் இருக்கிறார்களே பின் என்ன அவர்களின் குழந்தைகள் அணைத்துமே இவர்களின் வாரிசு தானே. நானே எப்படிமா என் குழந்தைக்கு தாய் மாமன் ஆவது”, என்று கூறி மறுத்துவிட்டான்.

இலஞ்சிதா கூட மூன்றாவது என்று ஆரம்பிக்க இவன்தான் திட்டவட்டமாக மறுத்துவிட்டான். ஆனால் இன்று அதுவே ஒரு காரணமாக வரும் என்று அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அது போக மனதில் இவ்வளவு நஞ்சை வைத்து அல்லவா இவர் இப்படி சாதரனமாக இருந்துள்ளார் என்று நினைக்கும் போது அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

“ பார்த்தீர்களா உங்களை தவிர வேறு யாரும் வாயை திறக்கவில்லை”, என்றார் ஜெகன் ஆதங்கத்தோடு .அவர் பேசும்போது யாரோ கதவை திறந்து கொண்டு உள்ளே வரும் அரவம் கேட்க அணைவரின் பார்வையும் அங்கே திரும்பியது.

ஆறு ஆறரை அடி நெடுநெடு என வளர்ந்த, அங்கே இருக்கும் அனைவரையும் சிறிதாக்கும் அளவிற்கு இருந்த திராவிடம் நிறம் கொண்ட கருகரு என சுருள் முடிகொண்டு அழகாக சீர்படுத்தப்பட்டிருந்த தாடி மீசை உடன் வந்தான் இன்பனின் உயிர் தோழன் இன்ஷித்(35) சிங்களத்து தமிழன். ஆதி முதல் அங்கம் வரை இன்பன் உடன் இருந்தவன். அவன் தன் பிழைப்பிற்காக ஒரு பத்து வருடம் ஈரான் சென்று வந்தான். அந்த தருணத்தில் தான் இன்பாவின் நடவடிக்கை மாறியது. கூட சகவாசம் கெடுதலான பழக்கவழக்கங்களில் சிக்கினான். இந்த கடைசி ஐந்து வருடம் இன்ஷித்தின் பங்கு ரொம்ப பெரியது .முடிந்த அளவு சீர் கெட்டு இருந்த இன்பாவின் வாழ்க்கையை ஓரளவு சீர்படுத்தினான். ஆனால் என்ன முயன்றும் அவர்கள் வீட்டின் சூழ்நிலைகளையிம் , குடும்ப நபர்களின் மேல் இன்பாவிற்கு இருந்த கண்மூடித்தனமான நம்பிக்கையை மாற்ற முடியவில்லை.

தனியே தொழிலை தொடங்க நினைத்தவனை இன்பா தான் தன் தொழில் பங்குதாரர்களாக இணைத்துக் கொண்டான். சிறிய அளவில் இருந்த பழமை வாய்ந்த தன் பாத்திரக்கடையை இன்ஷித்தின் முயற்ச்சியினால் ஒரு பெரிய ஸ்டோர் ஆக மாறியது. நஷ்டத்தில் சென்ற தொழிளை இப்போதுதான் லாபம் தரும் ஸ்தாபன
மாக மாற்றி இருந்தார்கள். பாலுவின் வயதின் மூப்பின் காரணமாக இன்ஷித்தின் வரவுக்கு பின்னால் தொழிளில் இருந்து முற்றிலும் விளங்கினார்.

அங்கே செய்வது அறியாது நின்று கொண்டிருந்த இன்பா முகத்தில் ஒரு தெளிவு. அவனுக்கு தெரியும் இன்ஷித் பொறுமையானவன் மட்டும் இல்லை பொறுப்பானவனும் கூட. இன்று இந்த பிரச்சனைக்கு எந்த முடிவு நல்லதோ அதை நிச்சயம் செயல்படுத்தி மற்றவர்களை அதற்கு தலையை அசைக்க வைத்து விடுவான். ஆனால் ஒன்று மட்டும் இவனுக்கு நெருடியது .அது யாதெனில் அவனுக்கு திருமணம் பந்தத்தில் பற்று கிடையாது. அவன் தந்தை அவர்கள் அம்மாவை விட்டு எந்த ஒரு காரணமும் இல்லாமல் இன்ஷித்தின் 15 வது வயதில் விலகிச் சென்றார். இவனுக்கு கபிணேஷ் என்ற ஒரு தம்பியும் உண்டு அதன் பின் இவன் தன் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ஒரு மெக்கானிக் கடையில் வேலைக்கு சேர்ந்தான். இவன் தாய் யசோதை தையல் வேலை பார்த்தார். இவர்கள் வசிப்பது அகதிகல் முகாம் .ஆகவே மற்றதற்கு பிரச்சினை இல்லாமல் போக வாழ முடிந்தது. இப்போது நல்ல நிலையில் இருந்தாலும் இன்னும் அதை விட்டு வெளியே வரவில்லை. அவர்களை வளர்ப்பதற்கு அவர்கள் அம்மா பட்ட கஷ்டத்தை பார்த்து அவனுக்கு திருமண வாழ்வில் வெறுப்பு தட்டியது. அதனால் என்னவோ அவன் இன்பாவின் வெளி நடவடிக்கையில் சீர்திருத்தினானே தவிர இல்லற வாழ்க்கை பற்றி எதுவும் சொல்லவில்லை.

“ வாப்பா இன்ஷித்”, என்றார் பாலு அங்கே கூடியிருந்தவர்கள் அணைவரும் ஒரு பார்வை பார்த்துவிட்டு , “அப்பா கடை சாவி”, என்றான் வேறு எதுவும் கேட்காமல். அவன் எதையாவது கேட்டு வாக்குவாதத்தை ஆரம்பித்து நல்லபடியாக அவன் முடித்து வைத்து விடுவான் என்று நினைத்துக் கொண்டிருந்த இன்பா நினைவில் ஒரு லாரி மண்ணை அள்ளிப் போட்டான் . இனிமேல் என்ன செய்வது என்று அவன் தவித்துக் கொண்டு இருக்கும் போது, “ இரு இன்ஷித் கொஞ்சம் முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டியது இருக்கிறது”, என்றார் பாலு, அவனைப் போக விடாமல் செய்து . “நான் எதற்கு அப்பா அது குடும்பம் விஷயம் இதில் என்று”, அவன் தயங்க, சிங்களத்து தமிழன் என்றாலும் நாம் பேசும் விதமாக நன்றாகவே பேசுவான். “ அதான் அவனே தயங்குகிறான்”, என்று கண்ணன் பேச முயல, பாலுவின் மூன்றாவது தம்பி வேலு அவர் தான் சற்று அதிகாரத்தோடு குடும்பத்தை ஒருங்கிணைத்து நடத்துபவர், “ அண்ணன் சொல்வது போல் அவன் இருக்கட்டும் மாப்பிள்ளை, இன்பாவின் அனைத்திலும் உடன் இருந்தவன். இன்று இங்கு நடக்கப் போவதும் இன்பா வாழ்வில் முக்கியமான ஒன்று. அதனால் அவன் இருப்பது அவசியம்”, என்று முடித்தார்.

“ ஜெகன் அண்ணாச்சி என் தங்கை சொல்வது போல் குழந்தைகள் பெரிய பிள்ளைகள், அதுபோக இன்பா எங்கள் அண்ணனுக்கு ஒற்றை மகன்”, என்று அவரே தொடர, “ இப்போ கூட குழந்தைகள் உங்களின் வாரிசு என்று தானே கூறுகிறார்கள் தவிர, இலஞ்சிதாவை பற்றி”, என்றவர் கேட்க, “ அண்ணாச்சி நான் பேசி முடிக்கவில்லை, ஏன் இந்த அவசரம் .இந்த மூன்று நாளில் எது வேண்டும் என்றாலும் நடந்திருக்கலாம். யார் மீது தப்பு சரி என்று நான் விவாதிக்க வரவில்லை. பறிகொடுத்தவர் நாங்கள் பாதிக்கப்பட்டவர்கள் நீங்கள். இரண்டு பக்கமே இழப்புதான். அதனால் மேற்படியை பற்றி பேசுவோம். சற்று அமருங்கள்”, என்றார் மேலும் முடிவாக. இன்பாகவுக்கு இப்போதுதான் சற்று ஆறுதலாக இருந்தது.

தொடரும்
 
Last edited:

Simma

Moderator
அத்தியாயம் 3

“அம்மாடி இலஞ்சிதா இங்கே வா நீ தான் அனைவருக்கும் மூத்த மருமகள். உனக்கு இந்த வீட்டின் பழக்க வழக்கங்கள் அனைத்தும் தெரியும். நீ இங்கே இருப்பது தான் முறை. ஆனால் இன்பாவின் நடவடிக்கையால் நாங்கள் உன்னை கட்டாயப்படுத்தும் தகுதியை இழந்து விட்டோம்”, என்று வேலு உண்மையான வருத்தத்தோடு பேசினார்.

“ சித்தப்பா இன்பா இருக்கும்போதே இலஞ்சிதாக்கும் அம்மாவுக்கும் சண்டை சச்சரவு வரும்”, என்று இலக்கியா அவளை வெளியேற்றும் விதமாக பேச ஆரம்பிக்க, “ ஏன் உனக்கும் மாப்பிள்ளையின் அம்மாவுக்கும் சண்டை வந்த போது நான் தானே பேசி முடித்து உன்னை அங்கு இருக்க சொன்னேன்” என்று வேலு வெட்டு ஒன்று துண்டு இரண்டாக பேசி இலக்கியவை வாயை அடைத்துவிட்டார்.

“ இலஞ்சிதா உன் முடிவே இறுதியானது” ,என்று வேலு அவளை பேச தூண்டினார். “ என் மருமகள் முடிவைத்தான் நான் சொன்னேன் .எங்களை மீறி அவள் எதுவும் செய்ய மாட்டாள்”, என்று ஜெகன் முடிக்க, இன்பாவுக்கு அய்யோ என்று ஆனது .தன் மனைவியும் குழந்தையும் அவர்கள் உரிமையான இடத்தில் இருந்தால் அவர்களுக்கு மரியாதை என்று காலம் கடந்து அவர்கள் மரியாதையை பற்றி சிந்தித்து கவலைப்பட்டான்.



இவ்வளவு நடந்தும் எதுவும் பேசாமல் இருக்கும் தன் தாய் தந்தையரை வெறுத்தே போனான். இதற்குள் இலஞ்சிதாவின் அருகில் வந்த ஜெயம் , “சித்திக்கு உன் நினைப்பு நன்றாக தெரியும். நீ என் மேல் உண்மையான பாசமும் மரியாதையும் வைத்திருக்கிறாய் என்று தெரியும். அந்த உரிமையில் கேட்கிறேன், இன்று உனக்கு அவர்களோடு போவது சரி என்று இருக்கும். ஆனால் நாளை உன் பிள்ளைகளை கரையேற்றும் போது உன்னால் அங்கே இருந்து எதையும் உரிமையோடு செய்ய முடியாது. அவர்களுக்கும் உரிமையோடு வந்து போய் இருக்க முடியாது”, என்று அவர் அவளுக்கு நாளை நிதர்சனத்தை விளக்க, கண்ணன் முகத்தைப் பார்த்துக் கொண்டே இருந்த மீனா, அதிலிருந்து வெறுப்பை புரிந்து கொண்டவர். “ வேலு தம்பி நீங்கள் இவ்வளவு சொல்லியும் அவள் மௌனமாகவே இருக்கிறாள் என்றால் அவள் மாமா சொன்னது சரிதானோ அவள் போகட்டும் குழந்தைகளோடு. நாம் காலம் வரும்போது செய்ய வேண்டியதை தர வேண்டியதையும் தந்து விடுவோம்”, என்றார்.

அதில் இலஞ்சிதா முகமும் பிள்ளைகள் முகமும் மேலும் கன்றிச் சிவந்தது. இந்த மூன்று நாளில் அவர்களுக்கு ஒன்று நன்றாக புரிந்து போனது, தாங்கள் அனைவருக்கும் ஒரு பாரமாகி விட்டோம் என்பதை மற்றும் பந்தை ஏத்தி உதைப்பது போல் தங்களை அனைவரும் பந்தாடுகிறார்கள் என்றும். அவர்களின் முகம் மாறுதலை கண்டு மேலும் இன்பா மனம் பதறி துடித்துப் போனான். கண்ணுக்கு எட்டிய பிறகு சூரிய நமஸ்காரம் செய்து பயன் என்ன.

இந்த உரையாடலை கேட்டுக் கொண்டிருந்த இன்ஷித், முதன் முறையாக இலஞ்சிதா மற்றும் குழந்தைகளை நிமிர்ந்து பார்த்தான் . ஆம் முதல் முறையாகத்தான். அவனுக்குத்தான் திருமண வாழ்வில் பற்றி இல்லையே. அதனால் இவர்களோடும் அவனுக்கு பழகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பார்த்த முதல் பார்வையிலேயே அங்கே இலஞ்சிதாவுக்கு பதில் அவள் அன்னையும் குழந்தைகளுக்கு பதில் இவனும் அவன் தம்பியும் தான் தெரிந்தனர். தந்தை பிரிந்து சென்றபோது நின்ற காட்சி தான் தெரிந்தது. அதில் அவனின் மனம் மெல்ல ஆட்டம் கண்டது .

இரண்டு ஆண் குழந்தைகளை வைத்துக்கொண்டு அவனின் அம்மா பட்ட கஷ்டம் அவனுக்கு தெரியும். ஆனால் இங்கு இரண்டுமே பெண் குழந்தைகள் அதுவும் வயதுக்கு வந்த ஒன்று வயதுக்கு வராத ஒன்று. இலஞ்தாவுக்கு வேறு சிறிய வயது. கண்ணனை பற்றியும் இன்பாவின் தம்பிகளின் குணமும் பழக்கவழக்கங்களும் சரி கிடையாது என்று அதிர்ந்தவன், ஒரு முடிவுக்கு வந்தான்.

“ என்ன பாலு அப்பா , இவர்கள் அங்கே போனால், நம் கடைக்கு வாங்கிய லோன் அனைத்தும் இலஞ்சிதா பெயரில் தானே, அது போக சில கணக்கு வழக்குகள் அவர்கள் பேரில்தானே இருக்கிறது. அது எல்லாவற்றையும் விட பெண் என்பவளுக்கு கணவன் வீடு தானே நிரந்தரம். நாளை இவர்கள் அங்கே சென்று விட்டால் நாம் பெண் கொடுத்த வீட்டில் ஒரு பிரச்சனையை என்றால் நாம் எப்படி நெஞ்சை நிமிர்த்தி பஞ்சையும் பேசுவது”, என்றான் அங்கே இருக்கும் ஒவ்வொருவருக்கும் அவளின் இருப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தான்.

“ இவை அனைத்தையும் விட குழந்தைகள் அவர்கள் மட்டும்தான் நம் சொத்து, கண்ணன் மச்சானின் உயிர் அல்லவா அவர்கள், இன்பா சொல்லி இருக்கிறான். நான் இல்லை என்றாலும் என் மச்சான் குழந்தைகளுக்கு தேவையானதை செய்து அவர்களைப் போற்றி பாதுகாத்துக் கொள்வார் என்று. நீங்கள் இப்படி பேசுவது அவரின் நல்மதிப்பை கீழே வீழ்த்துவது போல் ஆகும்”, என்ற கண்ணனை முன்னிலைப்படுத்தி பேசினான்.

அவனுக்குத் தெரியும் கண்ணனை இழுத்தால் தான் இதுக்கு ஒரு நல்ல தீர்வு வரும் என்று . “எந்த சட்டப் பிரச்சனை நாங்கள் விரும்பவில்லை”, என்றார் ஜெகன். “ எதையும் வாய் வார்த்தை போதாது சார்”,என்றான் இன்ஷித் முடிவாக .

அனைவரும் ஒருவர் மாற்றி ஒருவராக பேச ,மெல்ல தன்நிலைக்கு வந்து இலஞ்சிதா, “ மாமா நான் இங்கேயே இருக்கிறேன். பிள்ளைகளை படித்து முடிக்கட்டும் என் கடமைகளை முடித்து விட்டு வருகிறேன்”, என்றால் யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் .பதில் உரைத்து விட்டு மெல்ல தன் அறைக்கு தன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்று விட்டாள் . “அதான் அவங்களே சொல்லி விட்டார்கள் அல்லவா, அப்பா கடை சாவித் தாங்க நேரம் ஆகிறது”, என்று தன் வேலை முடிந்தது போல் , அந்த இடத்தை விட்டு சென்று விட்டான் இன்ஷித்.

“ அத்தை கூட்டு குடும்பம் என்றால் ஆயிரம் இருக்கும் நீங்கள் தான் அனுசரித்து அரவணைத்து செல்ல வேண்டும்”, என்றவனின் குரலில் அவனைக் கொன்றால் என்ன என்றுதான் இன்பாவிற்கு தோன்றியது .ஆமாம் நேற்று கண்ணன் பேசியது என்னை இப்போ எல்லாரும் முன்னிலையிலும் பேசுவது என்ன ,அப்போ இப்படித்தானே ஒவ்வொரு விஷயத்திலும் நடித்திருப்பான், என்று இன்பாவிற்கு பற்றி கொண்டு வந்தது. அவனை பார்த்த மீனா பாலு, “ நீங்கள் சொன்னால் சரி மாப்பிள்ளை”, என்றனர் .

“அவள் குழந்தை”, என்று ஜெகன் மறுபடியும் ஆரம்பிக்க, “ அண்ணாச்சி நாங்கள் எங்கள் பெண் போல் பார்த்துக் கொள்கிறோம்”, என்றார் வேலு .ஜெயம், மனோகர் பேசிப் பேசியே இலஞ்சிதாவின் குடும்பத்தை கரைத்து அவர்களும் ஆயிரம் பத்திரம் சொல்லி அவளிடம் சொல்லி விடைபெற்றனர். இன்பாவிற்கு அப்போதுதான் அப்படி என்று இருந்தது.

இரவு உணவை உண்ண அனைவரும் அமர்ந்த போது இன்பாவின் வீட்டு ஆட்கள் தான் இருந்தனர். பாலு அமர்ந்தவர், “ மருமகளும் குழந்தைகளும் சாப்பிட்டார்களா”, என்று கேட்டபதற்கும், இலஞ்சிதா கதவை திறந்து கொண்டு வெளியே வருவதற்கும் சரியாக இருந்தது. “ அம்மா என்ன வேலைக்காரியா அவர்கள் வயிற்றுக்கு அவர்கள் தான் சாப்பிட வேண்டும்”, என்று இலக்கியா வெறுப்பை உமிழ, கண்ணன் அவளை இகழ்ச்சியாக பார்க்க, மனதிற்குள் ஆயிரம் பூகம்பம் நிகழ்ந்தாலும், இதையெல்லாம் அவளுக்கு பழக்கப்பட்ட ஒன்றுதானே, தன் கண்களை இருக்க மூடி தன்னை சமநிலைப்படுத்தி பாலுவின் அருகில் வந்தவளை இன்பா அசையாமல் பார்த்துக் கொண்டு இருந்தான். அவன் எப்போதும் அவரும் இடத்தில் அமர்ந்து .

“மாமா நாளை முதல் என் அறையின் பக்கத்திலே தனியாக எனக்கும் பிள்ளைகளுக்கும் சமைத்துக் கொள்கிறேன். அதுபோக இந்த மாதம் மட்டும் வீட்டு செலவுக்கு எனக்கு காசு கொடுங்கள். அடுத்த மாதம் முதல்”, என்று அவள் ஆரம்பிக்க, “ என்ன, மாமா நீங்கள் தானே இந்த குடும்பத் தலைவர் என்று நினைத்திருந்தேன்”, என்றான் கண்ணன் அவளை இடைமறைத்து எல்லலாக. “ பெண்கள் வேலைக்கு போய் தான் நம் வீட்டில் பழக்கம் இல்லையே”, என்று மீனா ஆரம்பிக்க, “ நீ பேசாதே மீனா நான் தானே மாப்பிள்ளை சொல்கிற மாதிரி தலைவர்”, என்றவர் அவளிடம் திரும்பி, “ நாளை முதல் சமைத்துக் கொள். நீ உன் நினைவில் இருந்து வெளியே வருவது தான் எனக்கு முக்கியம்”, என்றார் .

பின் இலக்கியாவிடம் திரும்பி, “ உன்னால் முடிந்தால் உன் அம்மாவுக்கு உதவு, இல்லை இனிகாவே பார்த்துக் கொள்வால்”, என்று முடித்து விட்டார். தான் நினைத்தது எதுவும் நடவாது போனதால் கண்ணன் கோபத்தின் உச்சியில் இருந்தான். ஆனால் இப்போது ஏதாவது பேசினால் தான் இத்தனை வருடம் கட்டிய கோட்டை ஒன்றும் இல்லாமல் போய்விடும் அல்லவா அதனால் அமைதி காத்தான். “ நான் என் உயிர் மூச்சு உள்ளவரை, என்னை மீறி தான் உன்னை யாரும் தொட வேண்டும் .உனக்கும் பிள்ளைகளுக்கும் ஒரு காவல்காரன் போல் நான் இருப்பேன்”, என்றார் பாலு இலஞ்சிதாவிடம் உறுதியாக .

தொடரும்
 
Last edited:

Simma

Moderator
அத்தியாயம் 4

இலஞ்சிதா எதுவும் பதில் கூறாமல் பிள்ளைகளை சாப்பிட வைத்து அவர்கள் கட்டாயப்படுத்தியதால் தானும் உண்டு தனக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு மாடி ஏறினால். அனைவரும் தன் கூட்டிக்குள் அடங்கினர். இன்பாவோ செய்வது அறியாமல் தான் எப்போதும் அமர்ந்திருக்கும் அந்த தோட்டத்து ஊஞ்சலில் சென்று அமர்ந்தான். அவனது மனமும் இன்று பிரச்சனை தற்காலிகமாக தான் முடிந்தது, ஆனால் அவனுக்கு ஒரு சிறு குழப்பம். இன்ஷித் சொன்னது போல் அப்படி எதுவும் லோன் கணக்கு வழக்குகள் கிடையாது இலஞ்சிதா பெயரில். அவன் அதை ஆழ சிந்திக்க அப்போதுதான் இலஞ்சிதா மற்றும் குழந்தைகளின் தங்க வைப்பதற்காக இன்ஷித் இப்படி சொல்லி இருக்க வேண்டும் என முடிவுக்கு வந்தான். அதேபோல் கண்ணன் மற்றும் இலக்கியாவை முதலில் இங்கிருந்து கிளப்ப வேண்டும் என்று நினைத்தவன் இலக்கிய அறையை நோக்கிச் சென்றான். அவனுக்கு தெரியும் கண்ணன் எப்படியும் இலக்கியாவை இங்கே விட்டு தான் செல்வான். இன்னும் அவனுக்கு படையல் போட்டு முடித்தது தான் அழைத்துச் செல்வான் என்று. அப்படி நடந்தால் இலக்கியா தன் அன்னையை முழுவதுமாக இலஞ்சிதாக்கு எதிராக திருப்பி விடுவாள். இது நடக்கக்கூடாது .

அங்கு கண்ணன் படுத்து இருக்க இலக்கியா அவனது கால்மாட்டில் அமர்ந்து அவனது கால்லை அமுக்கிக் கொண்டு இருந்தாள். அவளது கண்கள் லேசாக கலங்கி இருந்தது. “ என்னங்க”, என்றால் மெதுவாக. இன்பாவுக்கு தர்ம சங்கடமாக இருந்தது இப்படி இவர்கள் அறியா வண்ணம் அங்கே இருப்பதற்கு .ஆனால் அவனுக்கு கால அவகாசம் இல்லை. தன்னவளுக்கு நியாயம் செய்தாக வேண்டும். கண்ணனின் மறுபக்கம் அவனை பலமாக தாக்கி இருந்தது. “ம்ம்”, என்றான் கண்ணன். “ எனக்கு குறை தான் , நான் இல்லை என்று சொல்லவில்லை, பாவம் என் அப்பா அம்மா”, என்றால் மெதுவாக, “ நான் என்னால் முடியும் என்பதை தான் கூறினேன். அது போக நீ மலடி தானே “, என்று அவன் பட்டென்று சொல்ல அவள் கண்களில் கண்ணீர் திரண்டு ஓடியது.

“ ஆமாம் நான் மலடிதான், தத்து எடுப்போம் என்பதற்கு நீங்கள் தானே”, என்று அவள் அவனை சாடி பேச வர, “ யாரோ எந்த வழியிலோ பிறந்த குழந்தை நான் ஏன் அப்பாவாக இருக்க வேண்டும். உன் தம்பி கொடுத்தானா”, என்று அவன் மறுபடியும் அவளையே சாட, “ அத்தை தான் உங்கள் தம்பி பிள்ளையை எடுக்கலாம் என்றாரே”, என்று அவள் ஞாபகப்படுத்த, “ அவன் மனைவிக்கு குணம் பத்தாது”, என்றான் கத்தரிப்பாக. அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழிக்க, “ நான் நாளை காலை கிளம்ப வேண்டும், நீ இருந்து பார்”, என்றவன், “ உன்னை சும்மா இருப்பதற்காக விட்டு செல்லவில்லை. நான் இன்பாவிற்கு படையில் போடத்தான் திரும்பி வருவேன். அதற்குள் நீ இலஞ்சிதாவை அவள் தாய் வீட்டுக்கு அனுப்பி இருக்க வேண்டும், இல்லை என்றால் நீ இங்கேயே நிரந்தரமாக இருக்கலாம்”, என்று அவனே தொடர்ந்து கூறி அவளுக்கு முதுகை காட்டியில் படுத்துக்கொண்டான்.

இலக்கியாவிற்கோ இலஞ்சிதா மீது வெறுப்பு எதுவும் இல்லை ஆதங்கம் மட்டுமே .தனக்கு ஒரு பிள்ளையை கொடுத்து இருந்தால் என்ன என்பதே அவள் அழுது ஓய்ந்து தூங்கி போனால். கண்ணன் மெல்லமாக எழுந்தவன் கதவை திறந்து மாடியை நோக்கி நடந்தான். அவன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த இன்பாக்கு தலைக்கு மேல் கோபம் ஏறியது. தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு அவன் பின்னே சென்றான்.

குழந்தைகள் தூங்கிக் கொண்டு இருக்க இலஞ்சிதா வெளிக் கதவை திறந்து அங்கே திறந்தவெளி இடத்தில் நின்று இருந்தால். பயம் இல்லாத இடம் தான், ஆனாலும் மணி ஒன்றைக் கடந்து இருந்தது. கண்களில் கண்ணீர் வளிந்தோடியது . அதை துடைக்கும் எண்ணம் கூட இல்லாமல் இருளை வெறுத்து பார்த்துக் கொண்டிருந்தால். மனதிற்கும் அடுத்து என்ன என்பதை அவளுக்கு மலைப்பாக இருந்தது. தான் கொண்டு வந்திருந்த நகைகள் யாவும் அடகில் கிடக்கிறது. இந்த வீட்டிற்க்காக அவனது பங்களிப்பு அதிகம். கடையிலும் முன் இல்லாத வருமானம் இப்போது உண்டு .ஆதலால் குழந்தைகளை வளர்ப்பதில் பிரச்சனை இருக்காது.

ஆனால் வாழ்வு என்று அவள் சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே மிக அருகில் நிழலாட பதறிக்கொண்டு விலகி திரும்பினால். கண்ணனை கண்ட தும் ஒரு மூச்சை விட்டு என்ன என்பது போல் தன் கண்களை இடுங்க அவனைப் பார்த்தால் இலஞ்சிதா.

“ இதுக்கே பயந்தால் எப்படி”, என்றான் நக்கலாக .அவள் அமைதியாக நிற்கவும், “ இந்த திமிர் தான் டி உன்னை ஓட ஓட விரட்ட வேண்டும் என்று என்னை எண்ண வைக்கிறது”, என்றான் தன் கோபத்தை கொட்டி, அவள் என்ன சொல்வது என்று முழிக்க, “ என்னடி ஒன்றும் தெரியாதது போல் முழிக்கிறாய். இன்பா நான் இழுத்த கோட்டை தாண்டாதவன். அவனை கைக்குள் போட்டுக்கொண்டு ஒரு குழந்தையை எனக்கு தரமாட்டேன் என்றாய் அல்லவா. இன்று வேண்டுமானால் அனைவரும் ஒன்று கூடி உங்களை இங்கு இருக்க வைத்திருக்கலாம். ஆனால் இன்பாவிற்கு படையில் போடும் முன்பு உன்னை விரட்டவில்லை”, என்று அவன் கத்த ,அதில் இலஞ்சிதா உடம்பு நடுங்கியது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த இன்பா தவித்து தான் போனான்.

சட்டென்று யோசனை செல்ல குழந்தைகளின் அறைக்குள் சென்றவன் இரினா பக்கம் சென்று மெல்ல அவளின் மேல் போர்த்தியிருந்த போர்வையை விளக்கினான். இரினாவுக்கு அப்படி யாரும் செய்வது பிடிக்காது. கடும் வெயிலிலும் போர்வை போர்த்தி தான் தூங்குவாள். யாராவது விளக்கினால் எவ்வளவு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாலும் எழுந்து விடுவாள். அவனது நம்பிக்கையை பொய்க்காமல் இரினா எழுந்தவள், " அப்பா", என்றால் முணுமுணுப்பாக. ஏன்னென்றால் அவளை வம்பு இழுப்பதற்காகவே எப்போதும் இன்பா செய்யும் வேலை இது.

அதன் நினைவாக அவள் முணுமுணுக்க, நன்றாக தூக்கம் கலைந்து பார்க்க ,அவள் எதிர்பார்த்தது இல்லாமல் போக, அவள் கண்கள் கலங்கிதான் போனது. உங்களை எனக்கு பிடிக்காது தான் ஆனால் இன்று நீங்கள் இங்கே இருந்திருக்கலாம் என்றால் தன் தலையணையை சுவற்றில் எரிந்து. அவளது செயலில் முற்றும் முழுதாக உடைந்து போனான் இன்பா.

தன்னை சுதாரித்துக் கொண்டவள் தன் தாய் அங்கு இல்லை என்று கண்டவள் வெளியே அரவம் கேட்கும் அங்கே விரைந்தால் .யாரோ வரும் அரவம் கேட்கவும் தன் பேச்சை நிப்பாட்டி கண்ணன் திரும்பிப் பார்க்க, இரினா வந்தவல், “ என்ன மாமா”, என்றால் அவனை ஒரு பார்வை பார்த்து. ஏனோ அவளுக்கு எந்த ஆண்னையும் மனம் ஒப்பவில்லை. அதில் பாலு மட்டுமே விதிவிலக்கு. தாத்தா என்றால் அவளுக்கு உயிர்.

“ ஒன்றும் இல்லை மா, அம்மாவை எதற்கும் கவலைப்பட வேண்டாம் என்று கூறிக் கொண்டிருந்தேன்”, என்றான் கண்ணன் நாக்கில் தேன் தடவி, அவள் அருகில் செல்ல போக, இரினா எதுவும் பேசாமல் தன் தாயின் அருகில் சென்றவள், அவளை அனைத்துக்கொண்டு, “ சரி மாமா காலை தாத்தா இருக்கும்போது பேசுவோம்”, என்று பதிலளித்தால் அவனின் முகத்தில் அடித்தார் போல். தாயைப் போலவே தலைக்கனத்தை பார், ஒன்றும் இல்லாமல் உங்களை விரட்டவில்லை என்ற மனதில் கருவிக் கொண்டே திரும்பிப் பார்க்காமல் சென்று விட்டான்.

இலஞ்சிதாவின் நடுக்கம் மகளின் ஸ்பரிசத்தில் குறைந்தது. “ அம்மா”, என்றால் மெதுவாக, “ சொல்லுடா தங்கமயில்”, என்றால் பதிலாக இலஞ்சிதா. “ நான் இருக்கிறேன் அம்மா உனக்கும் பாப்பாவுக்கும் பயப்படாதே, தாத்தா நம் பக்கம் தான்”, என்றால் அந்த இளஞ்சிட்டு ,ஒருவேளை இதே பதிலை ஒரு ஆண்மகன் சொல்லி இருந்தால் திடம் வந்து இருக்குமோ என்னவோ ஆனாலும் இப்போதும் இவள் இதை கூறும் போது கண்ணீர் தான் வந்தது. தாயின் கண்ணீரை துடைத்தவள் விடாப்படியாக, “ நான் இருக்கிறேன்”, என்றால் . அவளை இருக்கி அணைத்து .அவளுக்கு ஓரளவு புரிந்தது கண்ணனின் நடவடிக்கை. நாளை தாத்தாவிடம் கூற வேண்டும் என மனதில் குறித்துக் கொண்டால். இதை பார்த்துக் கொண்டிருந்த இன்பாவிற்கு முதன்முதலாக இரினாயிடம் தெரிந்த முதிர்ச்சியை கண்டு புன்னகை அரும்பியது. அவள் நிச்சயம் இலஞ்சிதாவை தேற்றி விடுவாள் என்று தோன்றியது .

“அம்மா ரொம்ப நேரமாச்சு”, என்று இலஞ்சதாவை இழுத்துக் கொண்டு உள்ளே வந்தவள், வெளி கதவையும் அறையின் கதவையும் தாளிட்டு வந்து படுத்துக் கொண்டால். தன் பள்ளியில் நடக்கும் செயல்களை சொல்லி தன் தாயின் நினைவை திசை திருப்பி ஒருவாறு இருவரும் கண் அசந்தனர். இவர்களே பார்த்துக் கொண்டிருந்த இன்பா ஒரு முடிவும் வந்தவனாக கீழே இலக்கியாவின் அறைக்கு திரும்பி சென்றான்.



அங்கே தூங்காமல் கடும் கோபத்தில் நடந்து கொண்டிருந்தான் கண்ணன். கண்ணனின் கைபேசி சினுங்க அவன் முகத்தில் கோபம் இறங்கி மேன்மை பூத்தது. அவனது முகமாற்றத்தை பார்த்த இன்பா எதுவும் புரியாமல் அவனின் வெகு அருகில் வந்து நின்றான் யார் என்னவென்று தெரிந்து கொள்வதற்காக. அது ஒரு வீடியோ கால் .அதை கண்ணன் புதுப்பிக்க அங்கு ஒரு பத்து வயதுமிக்க சிறுவன் நின்று இருந்தான். இன்பாவிற்கு அது யார் என்று உடனே புரிந்து போனது. ஏன்னென்றால் அவன் கண்ணனின் நகல் .இருந்தும் கண்ணால் கண்டதை புத்தி நம்ப மறுக்க ,அதை மண்டையில் நன்றாக புரிய வைத்தது அந்த சிறுவனின் பேச்சு.

“ அப்பா”, என்று அழைத்தவன், “ ஏன் இங்கு என்னை பார்க்க வரவில்லை”, என்றான் அந்த சிறுவன் கோபமாக . “சபரி குட்டி இங்கே ஒரு துக்கம் தான் உன்கிட்ட சொல்லிவிட்டு தானே வந்தேன்”, என்றான் கொஞ்சலாக .கண்ணனின் பச்சை துரோகத்தை இன்பாவால் சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எத்தனை வருடம் ஒருவரால் எப்படி ஏமாற்ற முடியும். நாம் இவனுக்கு கொடுத்த இடம் தானே ,சற்று முன் கூட அவன் தன் தமக்கையை மலடி என சொல்லியது நினைவு வர இன்பாவின் மீது வெறுப்பின் உச்சத்துக்கு சென்றான் .




தொடரும்
 
Last edited:

Simma

Moderator
அத்தியாயம் 5 :

“ அப்பா ,அம்மா தான் இல்லை, பெரியம்மாவையாவது கூட்டி வாருங்கள் .எனக்கு தனியே இருக்க பிடிக்கவில்லை. இந்த பள்ளி எனக்கு பிடிக்கவில்லை. இந்த ஊர் பிடிக்கவில்லை”, என்றான் கண்களில் கண்ணீரோடு, அதை கண்ட கண்ணனின் கண்களில் கண்ணீர், “ கண்டிப்பாக செல்லம், பெரியம்மா தூங்குகிறாள் .அடுத்த ஆண்டு நிச்சயம் நீ நம்ம வீட்டில் இருந்து போகலாம். உனக்கு தாத்தா, பாட்டி, சித்தப்பா என்று நிறைய பேர் இருக்கிறார்கள்”, என்று அவன் கூறி சமாதானப்படுத்த முயல , “நீங்கள் இப்படித்தான் அப்பா, அம்மா இருக்கும்போதும் கூறினீர்கள், ஆனால் அம்மாவை கடைசி வரை இந்தியாவில் போகவில்லை. இப்போதும் அம்மா இறந்துபோது கூட நீங்கள் இங்கே சிவா அங்கிள் வீட்டில் தானே என்னை விட்டுப் போயிருக்கிறீர்கள்”, என்றான் ஆதங்கமாக.

அப்போதுதான் இன்பாவிற்கு ஞாபகம் வந்தது அவன் போன வருடம் திடீரென்று சிங்கப்பூர் சென்றதும், போய் ஒரு மாதம் கடந்து தான் வந்தான். அவன் அங்கே அடிக்கடி சொல்வது வழக்கம்தான். அவனுக்கு அங்கே அவனின் நண்பனின் மூலம் அங்கேயும் சிறு தொழில்கள் இருக்கிறது என்று மேலொட்டமாக தெரியும். ஆனால் இப்படி ஒரு குடும்பம் இருக்கும் என்று கனவிலும் கூட நினைத்திருக்கவில்லை .வெளியே எவ்வளவு யோக்கியன் போல் பேசுகிறான், உள்மனதில் எவ்வளவு சாக்கடை .இப்போதுதான் அந்த பையனின் மேல் ஒரு பரிவு. தாயைப் பறி கொடுத்து யாரும்மில்லா ஆனாதை போல் அங்கு இருக்கிறானே. குழந்தை இல்லை என்று ஏங்கும் தமக்கைக்கு இவன் ஒரு ஆதரவாக இருப்பானே, அவனுக்கும் ஒரு தாய் கிடைக்கும் அல்லவா என்று இன்பா சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே எவ்வளவோ கொஞ்சி பேசி அவனை சமாதானப்படுத்தி கைபேசியை அணைத்து இருந்தான் கண்ணன் .தன் மகன் கவலைப்படுவதையும் இங்கே தான் நினைத்ததை செய்வதற்கும் சிந்திக்க வேண்டியது இருந்ததால் பின்பக்க தோட்டத்திற்கு சென்றான்.

தோட்டத்திற்க்கு போன கண்ணன் இன்பாவுக்கு பிடித்த இடமான ஊஞ்சலில் சென்று அமர சற்றும் யோசிக்காமல் இன்பா அதை இழுத்து அசுர வேகத்தில் அசைத்தான். அவன் இழுத்த வேகத்தை கண்ணனால் ஈடு கொடுக்க முடியாமல் ஊஞ்சல் அசுர வேக்கத்தில் ஆடியது. ஒரு கட்டத்தில் கண்ணன் கீழே விழுந்தான். கை மற்றும் கால்களில் நன்றாக சிரைத்து ரத்தம் சிந்தியது. அதை பார்த்தும் இன்பாவின் கோபம் கட்டுக்கு வரவில்லை. கண்ணனுக்கு சுற்றி என்ன நடக்குது என்பது புரியவில்லை .

அவன் கீழே இருந்து எழுவதற்குள், இங்கே தோட்டத்திற்கு என்று நீர் பாய்ச்ச போட்டு இருந்தா குழாய் மாட்டியிருந்த டியூப் மூலம் தண்ணீரை திறந்து அடிக்க ஆரம்பித்திருந்தான். தண்ணீர் படவும் சிராந்திருந்த அத்தனையிடமும் தகதகவென எரிந்தது. தண்ணீர் மழையில் அவன் மூச்சு விட சிரமப்படவும் அதை நிறுத்தினான் இன்பா. கண்ணனுக்கு ஏதும் புரியா நிலை. அவன் சுதாரிப்பதற்குள் இன்பா அங்கே நின்று இருந்த ஐ10 காரின் அருகில் இருந்த அவனது இரு சக்கர வாகனமான கருப்பு நிற சைனை உயிர்ப்பித்து அதி உயர்ந்து வேகத்தில் தோட்டத்தை நோக்கி செலுத்த அதன் சத்தத்தில் வேகத்திலும் இன்பாவின் வரி வடிவம் காற்றாக தெரிய, அதை கண்டு கொண்ட கண்ணனுக்கு பயத்தில் உடல் வெளிரி தன் கண்கள் அகன்று விழிகள் கீழே விழ முழித்து நின்றான்.

இதையெல்லாம் சில நிமிடங்களில் புயல் போல் நடந்து யாவும் புயல் என மறைந்து போனது. அந்த இடம் திரும்பவும் பழையது போல் மாறியது. ஆனால் கண்ணன் உடம்பில் இருந்த வழியும் சிராய்ப்பும் அது தந்த வேதனையும் நடந்தது உண்மை என்று அவனுக்கு பறைசாற்றியது. அவனால் அதன் பின்னணியை கண்டுகொள்ள முடிந்தது. அப்போ இங்கே இன்பாவின் ஆத்மா உளாவுகிறது .அது இங்கே என்னை கண்காணித்திருக்கிறது என்பதையும் கண்டு கொண்டான். விடியும் விடியாமல் இருந்த 5:30 மணிக்கு தனக்கு அதி முக்கியமான வேலை இருக்கிறது என்று கூறி இலக்கியாவையும் அழைத்துக் கொண்டு ஊருக்கு சென்று விட்டான். இன்பா தான் மனதில் பாரம் மிக தன் தமக்கையையும் தாரத்தையும் நினைத்து கலங்கி போய் இடிந்து அமர்ந்தான்.

அறைகதவு தட்டப்படும் ஒலி கேட்க மெல்ல கண்விழித்தால் இலஞ்சிதா. நேரம் சென்று தூங்கியதன் விளைவு கண்ணில் எரிச்சல் தர சிரமப்பட்டு விழித்தவள் யார் என்று பார்க்க கதவை திறந்தாள். “ என்னமா இரவு தூங்கினாயா இல்லையா”, என்றார் பாலு, அவளின் தெளிவு இல்லாத முகத்தை பார்த்து கேட்க, அவளின் முகம் மேலும் கண்ணனின் பேச்சு நினைவு வர சுருங்கியது. அவளை முகத்தின் சுருக்கத்தை கண்டவர், “அம்மாடி நான் இருக்கிறேன் எதையும் யோசிக்காதே. அவன் இடத்தில் யாவும் நீதான். இனிமேல் யார் எதுவும் சொன்னாலும் கண்டுக்காமல் வாழ பழகு”, என்றவர் யாரோ படியேறி வரும் அரவம் கேட்க திரும்பி பார்த்தார்.

அங்கே தயங்கி தயங்கி இன்ஷித் வந்து கொண்டிருந்தான். கீழே வருவதோடு சரி அவன் மேலே வந்தது இல்லை. பாலு தான் மீனாவிடம் சொல்லிவிட்டு வந்தார். இவன் வந்தவுடன் மேலே வரச் சொல்லுமாறு, “ வாப்பா இன்ஷித்”, என்றார் பாலு, இலஞ்சிதா நிமிர்ந்து பார்த்து , “வாங்க”, என்றாள். அவளுக்கு அவனை எப்படி அழைப்பது என்று தெரியவில்லை. “ம்”, என்றான் இன்ஷித் , “அப்பா எது என்றாலும் கீழேயே பேசலாமே இங்கே எதற்கு”, என்று தயங்கி பேசினான் இன்ஷித். மூன்று பெண்கள் வாழும் இடத்திற்கு வருவது அவனுக்கு அது சரியாக தெரியவில்லை. பாலுவுக்கு அவனது தயக்கம் அவனின் மேல் ஒரு நன்மதிப்பை ஈட்டி கொடுத்தது. நேற்று இரவு ஆள் நடமாட்டம் இருப்பது போல் மனதில் ஒரு உந்த ,தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தவர் அறையை விட்டு வெளியே வந்தார். அப்போதுதான் கண்ணன் மேல் மாடியிலிருந்து கீழே வந்து அவன் அறைக்கு செல்வதை கண்டார். அவர் அதை தப்பாக எடுக்க வில்லை. ஆனால் இதயத்தில் ஒரு அபாயம். . இலஞ்சிதாவையும் குழந்தையும் பாதுகாக்க வேண்டியது தன் பொறுப்பு. இனிமேல் இன்னும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.

ஏன்னென்றால் ஒரு பக்கம் மருமகள் குழந்தைகள் என்றால் மறுபக்கம் மகளின் வாழ்வு. கண்ணாடி பாத்திரத்தை கையாள்வது போல் இதை கையாள வேண்டும் என்று நேற்று நடந்ததை நினைவு கூர்ந்தார். இவன் என்னடா என்றால் நான் இருக்கும்போது இவ்வளவு தயங்குகிறான் வருவதற்கு. அவருக்கு அவனை ரொம்பவும் பிடிக்கும். அவனது பொறுப்பு ஆளுமை அதுபோக இவரே அவனை பலமுறை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியும் உள்ளார் ,அதற்கு, “ அப்பா கடைசி வரை அதில் நான் நிலைத்திருக்க முடியும் என்று முதலில் எனக்கு நம்பிக்கை வரட்டும்”, என்று முடித்து விடுவான்.

அவனை பார்த்துக் கொண்டிருந்தவரை, “ அப்பா”, என்று அழைத்து மீண்டும் நடப்புக்கு கொண்டு வந்தவன் , “அது மேலே தனியா இலஞ்சிதா சமைக்க ஏதுவாக”, என்று அவர் ஆரம்பிக்க, “ எதற்கு அப்பா ஒரு வீட்டில் இரு சமையல்”, என்றான் இன்ஷித் பட்டென்று, “ இல்லைடா அவளுக்கும் அம்மாவுக்கும்”, என்று அவர் பதில் கூற வர, “ எந்த வீட்டில் மாமியார் மருமகளுக்கு ஒத்துப் போகிறது அப்பா. ஒன்றாக கீழே மேலே என்று இவர்கள் மூவரும் நடமாடினாள் தான் , அம்மாவுக்கு இவர்களை பார்ப்பது நம் கடமை பொறுப்பு என்று எண்ணம் வளரும். இப்படி தனியே என்றால் அது முற்றிலும் ஒதுங்கிப் போவதற்கு சமம். அதுமட்டுமில்லாமல் எனக்கு எந்த சடங்கிலும் நம்பிக்கை இல்லை. இவர்கள் கடைக்கு வந்து இன்பாவின் இடத்தில் அமர சொல்லுங்கள். உங்களுக்கு ஒன்றும் வயது திரும்பவில்லை. நீங்கள் அவர்களுக்கு துணைவந்து கற்றுக் கொடுங்கள். இனிகா அக்காவிற்கு வீட்டை கவனிப்பதில் ஒரு மாற்றம் வரும். இவர்களோடும் அம்மாவுக்கு ஒரு இணக்கத்தை உண்டு பண்ணும்”, என்று முடித்தான்.

பாலுவுக்கு ஆச்சரியம் எவ்வளவு புரிதலோடு பிரச்சனைக்கு தீர்வு காண்கிறான். இவை அனைத்துமே ஒரு ஓரமாக அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த இன்பாவுக்கு இன்ஷித்தை ஆறத் தழுவிக்கொள்ளும் போல் இருந்தது. இலஞ்சிதாவுக்கு அய்யோ என்று இருந்தது .

“சரிடா ஆனால் நாளை”, என்று பாலு இழுக்க, “ அப்பா நீங்களுமா, இந்த சடங்குகளை நம்புகிறீர்கள்”, இன்று அவன் கேட்க , “இல்லைடா, அவள் நன்றாக இருக்க வேண்டும் .ஆனால் இந்த இழப்பை குழந்தைகள் தாங்கிக் கொண்டு, அவள் அவர்களுக்கு ஆதரவாக”, என்று அவர் கூற, “ அப்பா குழந்தைகளுக்கு நாளை பள்ளி ஆரம்பிக்கிறது. விடுமுறை எடுப்பது தப்பு .இரண்டு பேரும் சென்றால் தான் அவர்களுக்கு ஒரு மாறுதல் வரும் .அது போக இலஞ்சிதா கடைக்கு வந்த நமது அறையில் இருக்கட்டும் .இந்த ஒரு மாதம் அவர்களுக்கு கணக்கு வழக்குகள், பொருட்களை எப்படி தரம் பிரிப்பது, விலைப்பட்டியல் தயாரிப்பது என்பதை கற்றுக் கொடுங்கள். மாலை பிள்ளைகள் வரும்போது இவர்களும் வந்து விடட்டும் .இரவு உணவை இவர்கள் பார்த்துக் கொள்ளட்டும் .இதுதான் ஒரு குடும்பம் நாம் என்ற இனகத்தை வளர்க்கும்”, என்றான் தெளிவாக . “சரிதான் நான் அம்மாவிடம் பேசி பார்க்கிறேன், மாப்பிள்ளை” என்றவருக்கு, “ அப்பா அவர் நம் வீட்டு மாப்பிள்ளை தான். அவரை மதிக்க வேண்டும் தான் .அதற்காக இன்பாவை விட அவர் நமக்கு நெருக்கம் இல்லை”, என்றான் திட்டவட்டமாக.

இலஞ்சிதாவிற்கு இவன் இப்படி பேசுகிறானே, என்னை ஒரு பேச்சு கூட இது சரி வருமா என்று கேட்கவில்லை என்று நினைத்தவள் , “நான் கடைக்கு எதற்கு வேறு ஏதாவது”, என்று அவள் ஆரம்பிக்க, அவளை தன் முழு உயரத்திற்கு நிமிர்ந்து பார்த்தவன், “ நமக்கு என்று கைவசம் தொழில் இருக்க நாம் ஏன் வேறு இடத்திற்கு செல்ல வேண்டும். எனக்கு வெளி வேலைகள் நிறைய அப்பாவிற்கு வயது ஆகிவிட்டது. முன் போல அவரால் ஓடி ஆடி கண்காணிக்க முடியாது. அவர் சீட்டில் அமர்ந்து கணக்கு பார்க்கட்டும். நம் தொழிளில் பெண்களின் வரவு தான் அதிகம். அதனால் நீங்களே வந்தால் அது பெரும் உதவி எங்களுக்கு உதவுவதில் தப்பில்லையே”, என்றான் அவளுக்கு புரியும் விதமாக. அவன் பார்வையில் என்ன இருந்ததோ தன்னிச்சையாக அவள் தலை ஆடியது சம்மதத்தில்.

“ சரிமா கீழே வா”, என்று கூறிவிட்டு அவனோடு சென்றுவிட்டார். ஏற்கனவே இன்பா இல்லை, இப்போ இலக்கியாவும் அதிரடியாக கிளம்பி இருக்க செய்வது அறியாமல் அமர்ந்திருந்த மீனா, இன்ஷித் பாலுவுடன் வர, மீனாவின் முகத்தில் எதைக் கண்டானோ, “ அம்மா”, என்றான் மெதுவாக ,அவனின் குரலில் தன் மகனை கண்டாரோ என்னவோ அவனிடம் ஓடி வந்து இறுக அனைத்து கதறி அழுதார். சந்தோஷமாக இறங்கி வந்த இன்பாவின் மனம் துடித்து தான் போனது.


தொடரும்
 
Last edited:

Simma

Moderator
அத்தியாயம் ஆறு

இவ்வளவு நேரமாக இன்பாவின் மனதில் இருந்த பாரம் குறைந்தது. இன்ஷீத் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையும் பலம் பெற்றது. நேற்றில் இருந்த கடுமை மறைந்து, இறங்கிய இலஞ்சிதாவை இன்முகமாகவே வரவேற்றால் மீனா . “குடும்பம் என்றால் ஆயிரம் இருக்கத்தான் செய்யும். மகளும் மாப்பிள்ளையும் வரும்போது சொல்வதை பொருட்படுத்தாமல் இரு .இதுக்கே இவ்வளவு கவலைப்பட்டால் இனிமேல் தான் சவாலே இருக்கிறது. படித்த பிள்ளை தானே நீ , பெண்கள் தனியாக இருக்கும்போது சீன்டுவதற்கும், வம்பு இழுப்பதற்கும் ஆண்கள் மற்றும் சில பெண்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள். சில பேர் ஏன் அதற்குள் வந்தாய் என்பார்கள். இதற்கு மேலும் பேசுவார்கள். எதையும் திடத்தோடு எதிர்கொள்ள வேண்டும்”, என்றார் மீனா .நல்லவள் தான். ஆனால் எல்லா வீட்டிலும் உள்ளது போல் மகளும் மருமகனுக்கு மட்டுமே முன்னுரிமை .

இலஞ்சிதா அதற்கு சுரத்தே இல்லாமல் தலையசைக்க , “பொட்டு பூ நீ பிறக்கும்போதே உனக்கு உன் அம்மா வைத்து விட்டது. இன்பாவிற்காக நீ இதை இழக்க வேண்டும் என்று நான் கூறமாட்டேன். நம் சமூகம் வாழ்ந்தாலும் பேசும் ,இருந்தாலும் பேசும் .எதையும் நாம் பார்க்கும் கண்ணோட்டம் தான். எங்களுக்கு இதில் எதுவும் உடன்பாடு இல்லை. இன்பா இல்லை என்று நாங்கள் நினைக்கவும் இல்லை .அவன் என்றும் உன் உருவிலும் பிள்ளைகள் உருவிலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறான்”, என்று முடித்தார் .

“என்னடா அத்தை இப்படி பேசுகிறால் என்று நினைக்காதே. நிதர்சனத்தை சொல்கிறேன். என்னதான் நாம் நம் சமூகம் மாறிவிட்டது முன்னேறி விட்டது என்று கூறினாலும், பொல்லாப்பு பேசுவதற்கும், அடுத்த வீட்டின் நியாயத்தை பேசுவதற்கும், தெருவுக்கு தெரு 10 பேர் இருக்கிறார்கள் .அது போல் எந்த பெண் வேலி இல்லாமல் இருக்கிறாள் எப்படி ஊர் மேயலாம் என்று நாக்கை தொங்க போட்டு அலையும் சில நாய்களும், குடும்பத்தை கெடுக்கும் குள்ளநரிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். எந்நேரமும் நாங்கள் உன்னை பாதுகாக்க முடியாது. நீயே எதிர்த்து பழகு. என்னால் வெளிப்படையாக எதுவும் செய்ய முடியாமல் போனாலும் .செய்வேன் நிச்சயமாக”, என்று முடித்தவர், திரும்பி பார்க்காமல் சமையல் கூடத்திற்குள் நுழைந்துவிட்டார்.

இவளும் தன் கவலைகளை அன்றாட வேலைகளில் தொலைக்க முற்பட்டால். ஆனால் இன்பாவின் விஷயத்தில் இலஞ்சிதாக்கு ஒரு பழமொழி ஞாபகப்படுத்தியது, “ ஆறாது ஆறாது அழுதாலும் தீராது”, என்பதுதான். இரினா எழுந்து வரும்போது நேற்று இலஞ்சித்தாவிடம் கூறியது போல் தன் தங்கையையும் எழுப்பி இதிகாவையும் சமாதானப்படுத்தி குளிக்க வைத்து தன்னோடு அழைத்து வந்து விட்டால். இன்ஷித்தின் பேச்சு தன் அன்னையை இவ்வளவு தூரம் மாற்றி இருப்பதை பார்த்து கொஞ்சம் நிம்மதி அடைந்தான் இன்பா. முதலில் கண்ணனுக்கு ஒரு வழி செய்ய வேண்டும், அவனை சீர் செய்து விட்டால் அனைத்தும் நலம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் இன்பாவிற்கு யார் சொல்வது கணவன் இல்லாமல் வெளியே செல்லும் இலஞ்சிதா சந்திக்கப் போகும் சவால்களைப் பற்றி.

அடுத்த நாள் காலை சற்று பரபரப்பாகவே விடிந்தது. இன்பாவின் பின் அவர்கள் வெளியே செல்கிறார்கள், அதுவும் வெறும் 5 நாட்கள் மட்டுமே கடந்திருக்க. பிள்ளைகள் கூட கிளம்பி விட்டார்கள், ஆனால் இலஞ்சிதா திணறித் தான் போனால். அவளால் ஒரு இயல்பில் இருக்க முடியவில்லை. கீழே இருந்த மீனா , “இலஞ்சிதா, இன்ஷித் வந்தாச்சு”, என்று குரல் தர சேலையை அள்ளி சோருகினால் படபடப்பாக. நன்றாக நேர்த்தியாக கட்டுபவள் தான், இன்று ஏனோ முதன்முதலா கட்டும் சிறு பிள்ளை போல் தொட்டதற்கெல்லாம் தினறுகிறாள்.

இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த இன்பாவுக்கு புரிந்தது, தான் இல்லாததால் வந்த தடுமாற்றம் என்பது. இரினா, இதிகா இருவரும் கிளம்பி கீழே தங்கள் பைகள் உடன் சென்று விட்டார்கள். சேலையை முற்றிலும் கட்ட முடியாமல் போக தோய்ந்த அமர்ந்து விட்டால். கதறி துடித்தால், இன்பா செய்வது அறியாது நிற்க அவன் கண்களிலும் கண்ணீர் கொட்டியது. அவனுக்கு தெரியும் அவள் அவனின் மேல் உயிரையே வைத்திருக்கிறாள் என்று. ஆனால் இன்று அனைத்தும் அவளின் கண்களில் இருந்து கண்ணீராக வெளியேறியது .அவன் நினைத்துக் கூட பார்க்கவில்லை அவள் இவ்வளவு கதறி துடிப்பால் என்று .இந்த 15 வருட வாழ்க்கையில் அந்த நேரங்களை தவிர்த்து அவளிடம் நல்முறையில் நடந்து கொண்டது போல் கூட அவனுக்கு ஞாபகம் இல்லை. ஆனால் அவளது வற்றாத கண்ணீர் அவனை அசைத்தது.

அவளின் வெகு அருகில் சென்றவன் மெல்லமாக ஊத திடீரென வந்த மோதிய காற்றில் இன்பாவின் வெப்பத்தை உணர்ந்தவளுக்கு கண்ணீர் அணை அமைந்தது போல் நின்றது. அவள் சுற்றும் புறமும் திரும்பி பார்க்க அவள் கண்களுக்கு எதுவும் தெரியவில்லை. ஆனால் மனமோ அவனது அருகாமையும் மெல்ல உணர, சமநிலைக்கு வந்தவள் நடுங்கிய கரங்கள் திடம் பெற சேலையை இயல்பாக உடுத்தினால். இன்பா அசையாது நின்று அவள் செய்வதை பார்த்துக் கொண்டிருந்தான் .

“நீங்கள் என்னோடுதான் இருக்கிறீர்கள். எனக்கு தெரியும். எனக்கு திடத்தை தாருங்கள். நீங்கள் செய்ய வேண்டியதை உங்கள் இடத்தில் இருந்து செய்ய பக்கபலமாக இருங்கள்”, என்று அவனோடு உரையாடுவது போல் பேசினால். அதைக் கேட்டவன் மெல்ல அவள் தலையை நோக்கி ஊத ,அவள் தலைமுடியை அவன் வருடுவதைப்போல் உணர்ந்தவல் ,மனதில் அவனிடம் ஆசீர்வாதம் பெற்றது போல் மனம் நிறைந்து, கீழே சென்றால். அங்கே இன்ஷீத் காத்துக் கொண்டிருக்க, மீனா விடம் சொல்லிக்க சமையல் கூடும் செல்ல, அவளுக்கான காலை உணவு உடன் அவர் தயாராக நின்றார்.

அவள் வேண்டாம் என்று மறுக்க போக, “ எதையும் செய்வதற்கு பலம் வேண்டுமல்லவா? ஐந்து நிமிட தாமதம் ஒன்றும் ஆகிவிடாது”, என்று கூறி அவள் கையில் திணித்தார். குழந்தைகள் என்று அவள் அவர்களை பார்க்க, அவர்கள் தங்களின் பள்ளி மற்றும் சாப்பாட்டு பையுடன் தயாராக இருந்தனர். மறுப்பது முட்டாள் தனம் என்று தோன்ற சாப்பிட்டு விட்டு கிளம்பினாள் . “அப்பா கார் சாவி”, என்று இன்ஷித் கேட்க, ஒரு நிமிடம் இறுகிய இலஞ்சிதா , இதுவே நமக்கு முதல் தேர்வு, இவை அனைத்தும் கடந்துதான் வரவேண்டும். அவளின் முகமாற்றத்தை கவனித்துக் கொண்டே இருந்த இன்ஷித் மற்றும் இன்பாவிற்கு ஒன்றாக ஞாபகம் பின்னோக்கி சென்றது.

இன்பாவிற்கு இந்த ஒரு மாத காலமே உடல் நலத்திற்கு மிகுந்த பின்னேற்றம்தான். அதுவும் இந்த இரு தினமாக எதை சாப்பிட்டாலும் வாந்தி , நேற்று போய் டிரிப்ஸ் ஏற்றி விட்டுத் தான் வந்தார்கள் . காலை உணவோடு வந்த இலஞ்சிதாவிடம், “ சீதா, உடம்பு ஒரே கசகசப்பாக இருக்கிறது .அதனால் குளித்துவிட்டு சாப்பிடலாம்”, என்று இன்பா கூற ,அவனுக்கு குளிக்க உதவினால். அவனுக்கு உடை மாற்றி அமர வைத்தால். அவனது இயலாமை புத்திக்க தெரிந்தாலும், மனம் அதை ஏற்காமல் விடாமல் மன்றாடியது தன் இஷ்ட தெய்வமான மீனாட்சியிடம். ஒன்றை இட்லி சாப்பிட்டவன் அதற்கு மேல் வேண்டாம் என்று கட்டிலில் சாய்ந்தவாறு அமர்ந்துவிட்டான். இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் வீட்டில் தூபம் காட்டி மீனா பூஜைகளை செய்ய, இலஞ்சிதான் அரியக்குடியில் இருக்கும் நரசிம்ம பெருமாள் கோவிலுக்கு கிளம்பினால் .இன்பா முடியாமல் போனதிலிருந்து இன்ஷித்துடன் காரில் சென்று வந்து விடுவாள். தனியே எங்கே சென்றதும் இல்லை. இன்ஷித் சரியான நேரத்திற்கு வந்துவிட, இன்பாவிடம் சொல்ல போனவல் , “அய்யோ அத்தை”, என்று சத்தம் இட இன்ஷித் மீனா அங்கே விரைந்தனர் .

குழந்தைகள் பள்ளியில் விட அப்போதுதான் பாலு சென்று இருந்தார். சென்றவர்கள் கண்டது மூச்சு விட முடியாமல் தவித்துக் கொண்டிருந்த இன்பாவைத்தான். இன்ஷித் விரைந்து செயல்பட்டு, அவனுக்கு முதல் உதவி செய்ய சற்றும் நிதானத்துக்கு வந்தவனை இன்ஷித் தூக்க போக, மருத்துவமனைக்கு செல்ல மறுத்துவிட்டான். ஒரு வழியாக அவனை சமாதானப்படுத்தி, இன்ஷித் தூக்க, " இங்கே நம்மூரில் வேண்டாம் நாம் பார்க்கும் காரைக்குடிக்கு அழைத்து செல்", என்று கூறினான். ஆனால் இன்ஷித் மனதிலோ பதட்டம். ஆனால் இன்ஷித்தின் பேச்சை இன்பா கேட்கவில்லை. " சென்றால் அங்கே, இல்லை என்றால், என் உயிர் போய்விடும்", என்று கூற, இலஞ்சிதா தான் அங்கேயே சென்று விடலாம் என்று கூறினால்.

தேவகோட்டையில் இருந்து காரைக்குடிக்கு 18 கிலோமீட்டர் தான் .வீட்டில் வேறு யாரும் இல்லை என்றதனாலும், எப்பவும் இவர்கள் மூவர் தான் மருத்துவமனைக்கு செல்வதானாலும் சென்றார்கள். மீனா வேலுவிடம் மட்டுமே அழைத்துக் கூறி இருந்தார். இன்ஷித் திருச்சி பைபாஸ் ரோட்டில் ஏறி இரண்டு கிலோமீட்டர் கூட சென்று இருக்க மாட்டான், இன்பா பின் இருக்கையில் படுத்திருக்க இலஞ்சிதா இன்ஷித் அருகில் அமர்ந்திருந்தால். பின்பக்கம் திரும்பி அமர்ந்து இன்பாவின் கையை பற்றி இருந்தால் இலஞ்சிதா. ஒரு கட்டத்தில் இன்பா மறுபுறம் திரும்பிப் படுக்க இன்ஷித் என்ன நினைத்தானோ காரை ஓரம் நிப்பாட்டி, பின் கதவை திறந்து இன்பாவை அழைக்க அங்கே பதில் எதுவும் இல்லாமல் போனது. ஒரு பதட்டத்தில் இன்பாவின் கையைப் பிடித்து நாடியை பார்க்க அங்கே வெறும் கூடு மட்டுமே மீதம் இருந்தது.

திடீர் என இன்ஷித் கீழே இறங்க, இலஞ்சிதா என்னவோ என்று இறங்கிப் பார்க்க இன்ஷித்தின் செயலில், அவளுக்கு அவள் நின்ற பூமி தட்டு மாலை சுற்றியது. அதில் அவளது புத்தி பேதலித்து தான் போனது. இன்ஷித்தை பலம் கொண்டு ஓரம் தள்ளியவள் , "இன்பா", என்று அவன் மீது விழுந்து துடித்து கதறினால். ஆனால் பாவம் யார் சொல்வது அங்கு இருப்பது வெறும் கூடுதான் என்பது. இன்ஷித்துக்கு முதலில் அவளின் செய்கை, அவன் இருந்த பதட்டத்திற்கு ஒன்றும் புரியவில்லை. பின் சுற்றுப்புறமும் சூழ்நிலையும் புரிய இலஞ்சிதாவை அழைத்துப் பார்த்தான். அவள் அவனுக்கு செவி சாய்க்கும் மன நிலைமையில் இல்லாமல் போக, அவள் கைகளை பற்றி வெளியே இழுத்தான். வந்தவளுக்கு உலகம் இருளாக தெரிய அவன் சட்டையை பற்றி இழுத்து, “ எனக்கு இன்பா வேண்டும் திருப்பி தா , நீ கூப்பிட்டால் வருவார், உன் பேச்சை அவர் மீறமாட்டார்”, என்று புலம்பி, அவனை மாறிமாறி தன் இருக்கைகளால் அடிக்க ஆரம்பித்தாள். ஆனால் இவளை விட கதறி ஒன்று அவளை இறுகப்பற்ற முயன்று தோற்று, நடப்பது என்ன என்று புரியாமல் வேடிக்கை பார்த்து ஸ்தம்பித்து நின்றது.அது இன்பாவின் ஆத்மா.

இன்ஷித் ஒரு கட்டத்தில் அவளது மூர்க்கமான நடவடிக்கையில் கோபம் எழத்தான் செய்தது. ஆனால் அவனால் அவள் நிலைமையை புரிந்து கொள்ள முடிந்தது. அவளது ஆட்டத்தில் அவள் உடுத்தி இருந்த சேலை தாறுமாறாக செல்ல, அவன் எவ்வளவு முயன்றும் அவனின் ஒரு சொல் கூட இலஞ்சிதாவின் காதில் எட்டவில்லை .அவள் வேதனையின் உச்சத்தில் படுமோசமாக நடக்க ஆரம்பித்தால். சுற்றுப்புறமும் நல்ல போக்குவரத்தான சாலை. இங்கே இவ்வாறு நிற்பது ஆபத்து .அது மேலும் நிலமையும் மோசமாகும் என்பதை உணர்ந்தவன் .வேகம் கொண்டு அவளை முன் கதவை திறந்து காருக்குள் தள்ள, அவனிடம் துள்ளி வெளியேற முனைந்தவலை ஓங்கி ஓரு அரை வைக்க அப்படியே மயங்கி சரிந்தாள். பின் தான் கண்டான் அவளின் நிலைமையை.

சேலை முற்றும் விலகி இருக்க, அவளுக்கு ஒரு தாயாக மாறி அதை சீர்செய்தான். அதை பார்த்துக் கொண்டிருந்த இன்பாவின் ஆத்மா தன் நண்பனை கண்டு பெருமை அடைந்தது. அந்த இடத்தில் வேறு எந்த ஆணாக இருந்தாலும் இலஞ்சிதாவிற்கு நடந்திருப்பது வேறு .ஏன்னென்றால் அவளுக்கு சுயநினைவு முற்றிலும் இல்லை. பித்து பிடித்து போல் இருந்தால் .

தொடரும்
 
Last edited:

Simma

Moderator
அத்தியாயம் ஏழு



பின் நினைவு வந்தவனாக அடுத்து நடக்க வேண்டியதை துணிந்து செயல்படுத்தினான். மின்னல் என காரியம் நடைபெற்றனர். “கிளம்பலாமா”, என்ற பாலுவின் குரலில் இன்ஷித் இன்பா இருவரும் நடப்புக்கு வந்தார்கள். பாலு முன்னே ஏறிக்கொள்ள இலஞ்சிதா குழந்தைகளுடன் பின்னே அமர்ந்தாள்.

இன்ஷித் முதலில் பள்ளிக்கு சென்றவன் குழந்தைகளை இறக்கி விட்டு கிளம்பும்போது என்ன நினைத்தானோ தன்னுடைய கைபேசியின் நம்பரை எழுதி இரினாவை அழைத்து வைத்துக் கொள்ளுமாறு கொடுத்தான். அது அந்த சிறியவளின் மனதில் ஒரு சிறு நம்பிக்கையை என்னும் கீற்றை விதைத்தது.

இதிகாவோ ஒரு படி மேலே போய், அவனின் கையைப் பிடித்து குலுக்கி விட்டு, “ குட் மார்னிங் இன்ஷித் அப்பா”, என்றால் .அதில் இன்ஷித் அதிர்ந்து தான் போனான். இதுவரை அவன் அவர்களுடன் பழகியது கிடையாது. ஆனால் அவனுக்குத் தெரியாத ஒன்று, இன்பா அவர்களை இன்ஷித்தை இப்படி அழைக்குமாறு தான் பழக்கியிருந்தான். அவனின் அதிர்வை பார்த்த பாலு, “ இன்பா, அவன் இருக்கும் போதே, அவர்கள் பேசும்போது இப்படித்தான் உன்னை அழைக்குமாறு சொல்லி இருந்தான். நீ தான் உன் வேலை உண்டு நீ உண்டு என்று கடிவாளம் கட்டி வைத்து மாதிரி நடந்த கொள்வாய் .அதனால் தான் உனக்கு இது தெரியவில்லை”, என்று விளக்கம் கொடுத்தார். முதலிலே அதுவும் இன்பா அப்படி பழகி இருந்ததால், அவனால் அதை மறுக்கவும் முடியவில்லை, ஆனால் மனதால் அதை ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை. அந்த அப்பா என்ற வார்த்தையே வேப்பங்காயாக அவனுக்கு கசந்தது.

அந்த உறவின் உன்னதத்தை இழந்தவன் அல்லவா ஒரு வீட்டின் மூத்த பிள்ளையாக அவன் பட்ட பாடு சொல்லிமாளாது. அனைத்திற்கும் காரணம் பொறுப்பற்ற தகப்பன், என்னும் உறவால். அப்படி எதிலும் பிடிப்பு இல்லாதவர் எதற்காக திருமணம், குழந்தைகள் என்பதை ஏற்று வாழ்ந்து, தவிக்க விட வேண்டும், என்று இன்றும், இத்தனை காலம் கடந்தும், ஆறாமல் இருந்த அவனது தந்தையால் உருவாக்கிய காயத்தில் இருந்து ரத்தம் வடிந்தது.

அவனையே பார்த்துக் கொண்டிருந்த இதிகா மெல்ல, அவன் அமர்ந்திருந்த கார் பக்க கதவின் அருகில் வந்தவள், தன் நெற்றியால் அவன் நெற்றியை முட்டி ,அவனை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்திருந்தாள் .இதை பார்த்துக் கொண்டிருந்த இன்பாவின் ஆத்மா தன்னை அவள் எவ்வளவு தேடுகிறாள் என்பதை கண்டு கொண்டான். அது போக அவள் அவனை இன்ஷித்திடம் தேடுவதையும் கண்டு கொண்டான்.

ஆம் இந்த ஐந்து நாட்களாக நடப்பது அனைத்தும் புரிந்தும் புரியாமலும், இனிமேல் தன்னை சீராட்டிய தந்தை இல்லை என்று உணர்ந்த இதிகா, இதுவரை அந்த வீட்டில் எப்போதும் கேட்கும் அவளின் சரள பேச்சு மறந்து மௌனமாகவே இறுகிப்போய் இருந்தால். நேற்றிலிருந்து இன்ஷித்தின் நடவடிக்கையிம், தன் தகப்பன் அவனை எப்போதும் உயர்வாக கூறுவதும், இவை அனைத்துமே அவனிடம், அவளை, அவள் தந்தையை காணச் செய்தது. இன்று அவனின் நடவடிக்கை அவளை அவனிடம் நெருங்கச் செய்தது. நிகழ்காலத்துக்கு வந்தவன் தன்னை அறியாமல் ஒரு சிரிப்பை அவளுக்கு பரிசளித்துவிட்டு, கடையை நோக்கி வண்டியை செலுத்தினான்.

இவை அனைத்தையுமே ஒரு பார்வையாளராக மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தாள், இலஞ்சிதா எண்ணம் . அவளது சிந்தை முழுவதும் நிறைந்திருந்தது இன்பா தான் .காலை அவனின் இருப்பை உணர்த்திய அந்த காட்சிதான்.

இன்பா இல்லாமல் முதன்முறையாக அந்த கடைக்கு வருகிறாள். அடிக்கடி இன்பா இருக்கும்போது வந்த இடம் தான். ஆனால் இன்று அவளால் இயல்பாக ஒரு அடியை கூட எடுத்து வைக்க முடியவில்லை. பாலு இறங்கியவர் கடையை திறப்பதற்கு சென்று விட ,இன்ஷித் மட்டும் தான் கார் கதவை திறந்து வைத்து அவள் முகத்தையே பார்த்திருந்தான். அதில் வந்து போன உணர்வுகள் கால்லை நகட்டவும், பின் இழுக்கவுமாக இருந்தவளை, “ இலஞ்சிதா இன்பா இல்லை என்று நினைத்தால் தான் இந்த தயக்கம் எல்லாம் வரவேண்டும் ,அவனின் சிறு வயது முதல் அவனோடு கூட இருந்தவன் என்ற முறையில் சொல்கிறேன், அவனுடைய உயிர் உடலை விட்டு பிரிந்து இருந்தாலும், உங்களை விட்டு அகலாது. நீங்களே இவ்வளவு தயங்கினால் நிச்சயம் அது மற்றவர்களுக்கு வம்பு பேச ஏதுவாக இருக்கும். அதனால் எதையும் செய்ய முடியும், எனக்கு என் இலக்கு ஒன்றே குறி, என்று வாழ்ந்தால் மட்டுமே, இந்த நாட்களை கடந்து வர முடியும்”, என்று அவளை பார்க்க ,அவனின் நேருக்கு நேரான கண்ணியமான பேச்சு, ஒரு திடத்தையும் நம்பிக்கையும் தர, அவனுடன் நடந்தால்.

அவள் அவளை நேராக நேற்று சொன்னது போல், அவளை அவர்களின் அறைக்கே அழைத்துச் சென்றான். பாலு மற்ற ஊழியர்களின் நடவடிக்கைகளையும் வேலைகளையும் பார்வையிட சென்று விட்டார். அந்த கடையில் பத்து பெண்கள் பத்து ஆண்கள் வேலையில் இருந்தனர் .அதில் அனைவருமே திருமணம் ஆனவர்கள். இதில் இரண்டு பெண்கள் மற்றும் ஆண்கள் முதலில் இருந்தே இருக்கிறார்கள். மீதி எட்டு பெண்கள் கடையை விரிவுபடுத்தும் போது வேலையில் அமர்த்தபட்டனர் .அதில் வயது மூத்த பெண்மணி ஆன கடையில் கடந்த 10 வருட காலமாக பணியில் இருக்கும் நிலாம்மாவை அழைத்தான் இன்ஷித், அவர்களை அவளுக்கு துணை அமர்த்தினான்.

நீங்கள் இனிமேல் இவர்கள் கடையில் இருக்கும்போது இவர்களோடு இருங்கள். வேண்டுமானாற்றை உடன் இருந்து பார்த்துக் கொள்ளுங்கள். கொஞ்ச நேரத்திலேயே தொலைபேசி விடாமல் சிணுங்கியது பாலுவின் இருக்கையில். இன்ஷித் பார்வை இட சென்று இருக்க, இலஞ்சிதா எடுப்போமா வேண்டாமா என்று யோசனையில் இருக்க, அதற்குள் பாலு ஒலி கேட்டு வந்துவிட, அதை எடுத்தவர், “ என்ன மாமா”, என்ற கண்ணணின் குரலில், “ சொல்லுங்கள் மாப்பிள்ளை”, என்றார் அவர் . அதற்குள் இன்ஷித் வந்துவிட, அந்த பக்கம் என்ன கூறப்பட்டதோ, பாலுவின் முகம் வெளிரி நின்றது. அங்கேயே நடப்பனவற்றை பார்த்திருந்த இன்பாவின் முகமும் இன்ஷித்தின் முகமும் அவரை ஆராய்ச்சியாக நோக்கியது . “மாப்பிள்ளை இதில் நீங்கள் கோபப்பட என்ன இருக்கிறது, நீங்கள் அன்று இரவு சாப்பிடும் போது, நான் தானே குடும்பத்தலைவர் என்று கூறினீர்கள் ,அதான் என் வீட்டு முடிவுகள், எது என் குடும்பத்திற்கு நல்லதோ அதை செய்தேன்”, என்றார் பயத்தை உள் விழுங்கி.

அவரின் வெளிரிய முகமும் பேச்சின் தடுமாற்றமும் அங்கே என்ன கூறப்பட்டு இருக்கும் என்று அங்கே இருந்த மற்ற மூவருக்கும் ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தது. இலஞ்சிதா தான் சற்று உடைந்து போனால். இன்ஷித்துக்கு அய்யோ என்று இருந்தது .இப்போதுதானே அனைத்தையும் பேசி ஓரளவுக்கு இவர்களை இந்த வாழ்விற்கு தயாராகினேன் என்று இலஞ்சிதாவை நினைத்து கவலை கொண்டான். அனைத்தையும் அறிந்த இன்பாவோ கண்ணணின் மேல் கட்டுக்கடங்காத கோபம் ஏறியது.

தொலைபேசியை வைத்தவர் தன்னை சமாளித்துக் கொண்டு. இலஞ்சிதாவை நோக்கினார். “ உன் அத்தை சொன்னால் தானே, மாப்பிள்ளை பேசுவதை பொறுட்படுத்தாதே என்று, பின் ஏன் உனக்கு இந்த கலக்கம்”, என்றார் வாஞ்சையாக, அதில் சற்று தெளிந்தவள், “ இலஞ்சிதா இதுதான் ஆரம்பம். இன்னும் நிறைய இருக்கிறது. நான் முன்னே சொன்னது தான் .உங்கள் கவனம் முழுவதும் தொழில் ,குழந்தைகள் ,குடும்பம் என்று தான் இருக்கணும். யார் பேசுவதையும் பொறுட்படுத்த ஆரம்பித்தால், நாம் வாழவே முடியாது”, என்றான் தெளிவாக இன்ஷித் .அவனின் பேச்சு மேலும் திடத்தை சேர்த்தால் ,அவளின் தலை சம்மதமாக அசைந்தது .

“அப்பா இன்றே பயிற்சியை தொடங்கி விடுங்கள். அடிப்படை கணக்கு வழக்குகளில் இருந்து, தரம் பார்க்கும் வரை ,அனைத்தும் இந்த 30 நாளில் சொல்லிக் கொடுத்து விட்டால், அவர்கள் வெளியே வரும் போது அவர்களுக்கு அது பெரும் உதவியாக இருக்கும்”, என்றான். அவளின் நடவடிக்கை திட்டமிட்டபடி, இவை யாவையும் மறைமுகமாக நின்று இருந்து இரு கண்கள் நோட்டமிட்டு, கண்ணணுக்கு செய்தி அனுப்பியது.

மதிய உணவு நேரத்தின் போது முதலில் பாலு சென்றுவர இலஞ்சிதா தனித்துவிடப்பட்டால். இன்ஷித் அவளுக்காக துணை நிறுத்த பட்டவரும் வெளியே எங்கோ சென்று இருக்க, இவள் உள்ளே இருப்பது மூச்சு முட்ட, கடையை மெல்ல பார்வையிட சென்றாள். இன்ஷித் மேலே பர்னிச்சர் பிரிவில் இருப்பதை, புகைப்பட கருவியில் கண்டவள் மறுபக்கம் சென்றால். இவள் ஓய்வு அறையின் பக்கம் மெல்ல நடக்க, அங்கே பேசிக் கொண்டிருந்த பேச்சு காதில் விழ ,அசையவும் மறந்து அப்படியே நின்று விட்டாள் .அவளையே தொடர்ந்து வந்து கொண்டிருந்த இன்ப காதிலும் அது விழ, முதன் முறையாக இப்படியும் பேசுவார்களா மனிதர்கள், என்று தெரிந்து கொண்டவனுக்கு, இது இதோடு நிற்க போவதில்லை ,என்றும் புரிந்து போனது.

“ என்னடி பார்த்தாயா புருஷன் செத்து ஐந்து நாள் கூட ஆகல அதுக்குள்ள சிவி சிங்காரிச்சுக்கிட்டு வெளியே வந்துட்டா”, என்றால் புஷ்பா என்பவள். “ அதுவும் பார்த்தாயா புருஷன் நண்பனோடு ஜோடி போட்டுக்கிட்டு வராங்க”, என்றால் கனகம், “ ஏய் வந்தோமா வேலைய பார்த்தோமா போனோமானு இருக்கனும், இந்த பேச்சு எல்லாம் நமக்கு வேண்டாம், பெரிய இடத்து விஷயம்”, என்றால் மல்லிகா. இதற்க்குள் அங்கே வந்த அந்த மூத்த பெண்மணியான ராதா அம்மா , “என்ன பேச்சு எல்லாம் ஒரு தினசப் போகுது, அந்த அம்மாவை பற்றி என்ன தெரியும் உங்களுக்கு, பொறுமையில் பூமாதேவி அவர் ,இன்பா ஐயா இத்தனை நாள் உயிரோடு இருந்தது அவரால் தான் . எதுவும் தெரியாமல் சும்மா பேசிகிட்டு, போங்க போய் வேலையை பாருங்க”, என்று சத்தமிட அனைவரும் அகன்றனர் .

அவர்கள் சென்றும் இலஞ்சிதாவால் அந்த இடத்தில் இருந்து நகர முடியவில்லை. உள்ளமும் மனமும் அதிக அழுத்தத்தை கொடுக்க அப்படியே நின்று விட்டாள். பாலு சாப்பிட்டு விட்டு வர இன்ஷித் அவளை அழைத்துக் கொண்டு வீடு செல்ல நினைத்து வர ,அங்கே அலுவல் அறையில் அவளை காணவில்லை. புகைப்படக் கருவியில் பார்வையிட அவள் ஓய்வறையின் பக்கம் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. அவளின் உடல் மொழியை வைத்து அவள் நன்றாக இல்லை என்பதை உணர்ந்து அங்கே சென்றான். இலஞ்சிதாவால் ஒரு கட்டத்தில் மூச்சை விட முடியவில்லை. அவள் மூச்சை விட சிரமப்பட இன்பாவால் அதை சகிக்க முடியவில்லை. அவனால் அவளை நெருங்க முடியவில்லை .

அதற்குள் அங்கு வந்த இன்ஷித் ,அவளின் நிலை கண்டு திகைத்தவன், “ இலஞ்சிதா”, என்று கூறி அருகில் வர ,அவனது அருகாமை, சற்று முன் அவர்கள் சொன்னதை நினைவுப்படுத்த தீ சுட்டது போல் விலகி நின்றால். அவளது செய்கையில் சற்று கண்கள் இடுங்க நின்றவன், “ என்னை என்னவென்று நினைத்தாய்”, என்ற வார்த்தைகளை கடித்து துப்பினான் .

தொடரும்
 
Last edited:

Simma

Moderator
அத்தியாயம் எட்டு

இதை பார்த்துக் கொண்டிருந்த இன்பா , “அய்யோ அவர்கள் பேசியதை பெரிதாக எடுத்து இவனிடம் கோபத்தை காட்டுகிறாளே, இவனே கோபத்தின் உச்சம், இவள் கடுகளவு காட்டினாள், இவன் மலை அளவு காட்டுவானே”, என்று இன்பா பதற அவனின் சிந்தனையை பொய்க்காமல் இன்ஷித் நடத்தினான் .

அவளை தர தரவென இழுத்து அலுவல் அறைக்குள் வந்தவன், அங்கு பாலு இல்லாமல் போக, அங்கே அவர் குடிக்க வைத்திருந்த வெந்நீரை குவளையில் ஊற்றி அவளுக்கு பருக கொடுத்தான். ஆனால் அவளோ குவலையை வாங்காமல், அவன் அவளைப் பற்றி இருந்த கையையே வெறுத்துப் பார்க்க ,அதற்கு கொஞ்சமும் சலிக்காமல் அவன் குவலையே பார்த்தான்.

இதை பார்த்துக் கொண்டிருந்த இன்பாவிற்கு, “ டேய் , அவளை விடுவித்து குடிக்க தண்ணீர் கொடுடா ,மூச்சு விட சிரமப்படுகிறாள்” என்று பதற, அவன் இன்ஷித்தோ அதை பெரிதுப்படுத்தாமல், அவன் பிடியிலேயே இருக்க, இலஞ்சிதாவின் நிலைமை படு மோசமாக சென்றது. ஆனால் அவளும் அவனுடைய பிடியிலிருந்து மாறவில்லை. ஒரு கட்டத்தில் இலஞ்சிதா முற்றிலும் சுவாசத்திற்கு போராட, அதை கண்ட இன்ஷித் அவளின் கைகளை விடுத்து ,அவளின் தாடையை இறுகப்பற்றி, திறந்த வாயில் தண்ணீரை ஊற்றினான்.

அந்த வெதுவெதுப்பான தண்ணீர் தொண்டையில் இறங்க மெல்ல மெல்ல சுயத்துக்கு வந்தால். அதன் பின் சற்று தன் பிடியை அவன் விளக்க ,அங்கே இருந்த இருக்கையில் டொம்மேன விழுந்தாள். “ டேய் உன் கோபத்திற்கு எல்லாம் அவ தாங்க மாட்டாடா, பார்க்கத்தான் வீம்பு பிடித்தார் போல் ஏதாவது செய்வா , ஆனால் ரொம்ப லேசா ஆனா இதயம் டா”, என்று புலம்ப மட்டுமே இன்பாவால் முடிந்தது.

அவள் தீ என இன்ஷித்தை முறைக்க, “ என்ன பார்வை எல்லாம் ரொம்ப புதுசா இருக்கு”, என்றான் அவளை நக்கலாக நோக்கி .அவள் இன்னும் தன் பார்வையை மாற்றாமல் இருக்க , “உன்னை காப்பதற்கு தானே அருகில் வந்தேன், என்னமோ தீண்ட வந்தது போல் விலகுகிறாய் . நான் என்ன பெண் பித்தனா .இந்த 35 வருட வாழ்வில் உன்னைத் தவிர வேறு எந்த பெண் அருகிலும் சென்றதில்லை”, என்று கர்ஜிக்கும் குரலில் கூறிவிட்டு , “கிளம்பு, இன்று போதும் வீட்டிற்கு கிளம்பு”, என்றவன் மறுபடியும் அவளிடம் திரும்பி, “ இந்த வீராப்பு எல்லாம், யார் பேசினார்களோ அங்கே காட்ட வேண்டும் ,என்னிடம் அல்ல”, என்று கூறி விடு விடுவென வெளியே சென்று விட்டான்.

ஓரளவு சுயத்திற்கு வந்தவளுக்கு அவனின் பேச்சின் நியாயம் புரிய எழுந்து பாலுவிடம் கூறிவிட்டு வீட்டுக்கு புறப்பட்டாள். அவளின் கலக்கமான முகத்தை கண்ட மீனா, “ இது இப்படித்தான், நாம் எதையும் மாற்ற முடியாது, என் வேலை ,என் கடமை, என் கவனம் அனைத்தும் என் குடும்பத்தின் சந்தோஷமே, முன்னேற்றமே என்று மனதில் உரு போட்டுக்கொள் .யார் பேசுறதும் மனதில் பதியாது”, என்று கூறியவர் அவளை சாப்பிட வைத்துவிட்டு ஓய்வு எடுக்குமாறு மேலே அனுப்பி வைத்தார் .

மேலே வந்தவள் அறையின் கதவை தாளிட்டு கதறி துடைத்தால் அந்த பெண்மணியின் பேச்சை மனது அசைபோட கண்களில் இருந்து கண்ணீர் நில்லாமல் வந்தது. இன்பா காலையில் செய்தவாறு செய்ய ,அதுவும் கூட அந்த பாரம் மிகுந்த மனதிற்கு புரியும் சக்தி இல்லை. ஒருவாறு அவள் அழுது ஓய அறைகதவு தட்டப்பட்டது .இவள் அழுது வீங்கிய முகத்துடன் கதவை திறக்க மீனா இன்ஷித் நின்று இருந்தனர். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்வை பரிமாற்றம் செய்து கொள்ள, “ இலஞ்சிதா, நான் நேற்றே உனக்கு சொல்ல தானே செய்தேன். பேசியவர்கள் யாவரும் வாழ்வதற்கு வழி சொல்ல போவதில்லை . ஏன் என் மாப்பிள்ளை கூட நம் பெண்களை நாம் பார்க்க மாட்டோமா ஏன் அனுப்பினீர்கள் என்றார். ஆனால் இன்ஷித் சொன்னது போல் நாங்கள் யாவரும் உனக்கு கடைசி வரை துணை நிற்க முடியாது. அதனால் புரிந்து கொள் .இந்த கண்ணீரெல்லாம் அவசியமற்றது”, என்று கூறிவிட்டு கீழே சென்று விட்டார்.

இவள் மௌனமாக நிற்க, “ வெறுமையான இதயம் சாத்தானின் கூடம். அதனால் வீட்டில் இருக்கிற நேரம், பிள்ளைகள் இல்லாதபோது, இதில் நம் கடையின் கணக்கு வழக்குகள், அன்றாட நடவடிக்கைகள் இருக்கிறது. இதை பார்வை இடுங்கள் .சந்தேகம் என்றால் அப்பாவிடம் என்னிடமோ கேளுங்கள்”, என்றான் இன்ஷித் அவளைப் பார்த்துக் கொண்டே.

அவள் மௌனமாகவே இருக்க, “ உங்களுக்கு பிடிக்குதோ பிடிக்கவில்லையோ இன்பா விட்டுட்டு போன பணியை நான் முடிக்க வேண்டும் .அதனால் கேலி பேச்சுக்கள் காதில் வாங்காமல் உங்கள் மனசாட்சிக்கு உண்மையாக இருந்தால் போதுமானது”, என்றவன் கொண்டு வந்திருந்த கணக்கு புத்தகத்தை அங்கே இருந்த மேஜை மீது வைத்து விட்டு அவள் பதிலை கூட எதிர்பார்க்காமல் சென்று விட்டான்.

அவள் வெளியே கிடந்த சோபாவில் வந்த அமர்ந்தவள் என்ன செய்வது இதை எப்படி கையாள்வது என்று கலங்கித் தான் போனால். இன்பா இவளையே பார்த்துக் கொண்டிருந்தவன், அவளது முகத்தில் வந்து போன தடுமாற்றத்திலும் உணர்வுகளிலும் அவளது எண்ணப் போக்கை உணர்ந்தவன் மெல்ல அவள் அருகில் சென்று அமர்ந்தான். அவள் முதுகில் மெல்ல காற்றை ஊத இவர்கள் பேச்சில் சற்று மனதில் இருந்த பாரம் குறைந்து இருந்ததால் அவளால் அவனின் மூச்சு காற்றின் வெப்பத்தை உணர முடிந்தது. இதில் அவள் மனதில் இருந்த சஞ்சலங்கள் ஒரு கட்டுக்குள் வர, “ நான் அவர்கள் சொன்னது போல் கிடையாது, எனக்கு நீங்கள்”, என்று அவள் இன்பா அருகில் இருப்பது போல் அவனிடம் தன்னிலை விளக்கம் தர முயல, அவளால் மேலும் எதுவும் பேச முடியாமல் கண்ணீர் மட்டுமே கண்களில் இருந்து வளிந்தது. அதை கண்ட இன்பாவிற்கு அவளின் பேச்சின் அர்த்தம் புரிந்தது. அது அவனுக்கு உவர்பாகத்தான் இல்லை. அவன் குடிக்க அடிமையானவன் தான் ,குடும்பத்தை பார்க்க தவறியவன் தான், ஆனால் ஒரு நாள் கூட அவளின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்தது கிடையாது. அவளுக்கு ஆறுதல் தரும் வண்ணமாக அவளின் முதுகை தன் மூச்சுக்காற்றை கொண்டு தேற்றினான். அது கொடுத்த ஆறுதலில் அவள் சோபாவில் மெல்ல கண் அசந்தால். அவள் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றவுடன் அவளை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களை ஒரு வழி செய்துவிடும் நோக்கத்தோடு கடையை அடைந்தான் இன்பா.

ஆனால் அதற்கு முன்னமே இன்ஷித் புகைப்பட கருவி உதவியுடன் அந்த இடத்தில் வேறு யார் வெளியே வந்தது என்பதை அறிந்து கொண்டு, நிலாம்மாவை விசாரித்து அங்கே உள்ளே நடந்தவற்றை அறிந்து, பாலுவிடம் தெரிவித்துவிட்டான். தான் இதில் நேரடியாக தலையிட்டு அவர்களைக் கண்டித்தால் மேலும் அவர்கள் இலஞ்சிதாவே தவறாக பேச துணை ஆகிவிட கூடாது என்று பாலுவின் மூலம், வேலையில் அவர்கள் கவனம் இல்லை என்று அவரை வைத்து, அளவுக்கு அதிகமாக வேலை செய்ய வைத்து விட்டான். வந்த இன்பா இதைக் கண்டு இதுவெல்லாம் இவர்களுக்கு போதாது என்று அவர்கள் மூன்று பெண்மணியும் ஒரு சேர மேலே வருவதற்காக காத்துக் கொண்டிருந்தான்.

ஒருவாறு பாலு மேலே இருக்கும் குடோனை சுத்தப்படுத்த மூன்று பேரை மேலே அனுப்ப, இன்பா அவர்களை தொடர்ந்து சென்றான். மூன்று பேரும் தங்களுக்குள் வேலையை பிரித்துக் கொண்டு ஆளுக்கு ஒரு மூலைக்கு சென்றனர். புஷ்பா பீரோ வகைகளை துணியை கொண்டு உள்ளே வெளியே துடைத்துக் கொண்டு இருந்தால் .அவள் பின்னே சென்ற இன்பா ,அவள் துணியை வைத்து பீரோவின் ஒரு கதவை திறந்து அவள் உள்ளே நன்றாக நுழைந்த துடைத்துக் கொண்டிருந்தபோது பலமான காற்றை உருவாக்கி கதவை சாற்றி வெளியே தாளிட்டான். அவள் எவ்வளவு கத்தியும் தட்டியும் அவளால் வெளியேற முடியவில்லை.

கனகம் என்பவள் அடுக்கில் இருந்த பழைய நாளிதழை எடுத்து புது நாளிதலை மாற்றிக் கொண்டு இருந்தால், இன்பா அவள் அருகில் சென்றான். அவள் பழைய தூசி படிந்த நாளிதழை கீழே தள்ள அந்த தூசி அங்கே சிதற ,அங்கு நின்று இருந்த இன்பாவின் வடிவம் துல்லியமாக அவளுக்கு தெரிய, பயத்தில் அவள் உறைந்து போனால்.

மல்லிகா அங்கே இருந்த வெளியிடத்தை கூட்டிவிட்டு மாப் போட ஆரம்பிக்க இன்பாவின் கால் தடம் பட்ட இடம் மட்டும் காயாமல் இருக்க இவள் மறுபடியும் மாப் போட அந்த இடம் மறுபடியும் காயாமல் இருக்க, பயத்தில் அந்த இடத்தை விட்டு ஓடினாள். ஓடினவள் அங்கே பீரோவில் ஆக்கப்பட்டு கத்திக் கொண்டிருந்த புஷ்பத்தையும் விடுவித்து, உறைந்து போய் நின்ற கனகாவையும் அழைத்துக் கொண்டு கீழே ஓய்வரைக்குள் சென்றால்.

கனகா இன்ப ஐயா என்று உளறிக் கொண்டே இருக்க, அவளுக்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தி நடந்ததை அறிந்து கொண்டனர். அவர்கள் பேசுவதை வெளியே நின்று கேட்டுக் கொண்டிருந்த கண்ணனின் ஒற்றன் ,அவனது கைபேசியை எடுத்து அங்கே பகிர்ந்தான் .இதைக் கேட்டுக் கொண்டிருந்த இன்பாவிற்கு இவன் தான் அந்த ஒற்றனா, “ இருடா உனக்கு முதலில் ஆப்பு வைத்து விட்டு உன் எஜமானுக்கு வைக்கிறேன்”, என்று மனதில் நினைத்துக் கொண்டான்

தொடரும்
 
Last edited:

Simma

Moderator
அத்தியாயம் 09

அந்த ஒற்றன் தன் வேலைகளை முடித்துக் கொண்டு, தன் வீட்டிற்கு புறப்பட்டு போனான். இவன் புளியால் என்னும் ஊரை சேர்ந்தவன் .வேலையை முடித்து தன் இரண்டு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு ராமேஸ்வரம் தேசிய சாலையை அடைந்தான் . அது மிகவும் அதிகமான சென்னை சொகுசு பேருந்துகள் போகும் நேரம். இவன் வேகமாக சென்று கொண்டிருக்க, திடீரென அவனின் எதிரில் ஒரு சொகுசு பேருந்து வர, அதன் வெளிச்சம் அதிகமாக இருக்க ,அது அவனுக்கு கண்ணில் கூச்சத்தை ஏற்படுத்தியது .

அவன் தன் கண்ணை சிமிட்ட, அந்த அறை நொடியில் ,அவனுக்கு முன்பாக இன்பா தோன்ற, அதை பார்த்தவன் ,ஒரு நொடியில் தன் வண்டியின் கட்டுப்பாட்டை இழந்தான். பயத்தில் வண்டியில் இருந்து கீழே சரிந்தான் .அவன் வந்த வேகத்திற்கு அவன் கொஞ்சம் தள்ளி போய் விழ, அவனது கண்களில் அவனது மனைவியும் பிள்ளைகளின் முகம் தான் தோன்றினர். அதில் பயம் அப்பிக்கொள்ள, “ இன்பா ஐயா என்னை மன்னித்து விடுங்கள் இனிமேல் இப்படி செய்ய மாட்டேன்”, என்று மனதோடு கூறிக் கொள்ள ,அவன் கீழே கிடந்த கல்லின் மேல் மோதுவதற்கு முன் இன்பாவின் கை அவனின் தலையைத் தாங்கியது .

அவனால் இன்பாவின் தொடுகையை உணர முடிந்தது .சிறு சிறு சீராய்ப்புகள் தவிர வேறு எதுவும் இல்லாமல் தப்பித்தான். ஆனால் அவனுக்கு தன்னை நினைத்து வெட்கி போனான். உண்ட வீட்டுக்கு துரோகம் செய்வது தவறு தானே, என்று நினைத்தவன் ,நாளை முதல் வேலையாக இங்கு இருந்து வேறு வேலைக்கு மாற வேண்டும் .ஏன்னென்றால் அவனுக்கு தெரியும் கண்ணன் அவ்வளவு எளிதில் தன்னை விடமாட்டான் என்று. அவனின் எண்ணோட்டத்தை உணர்ந்த இன்ப, கண்ணனை நோக்கி தன் பார்வையை திருப்பினான்.

அங்கே வீட்டிற்கு அப்போதுதான் கண்ணன் வந்திருந்தான். அண்ணன் ஒன்று, தம்பி இரண்டு பேருடன் பிறந்தவன் கண்ணன். எல்லோரும் ஒன்றாக வாழ்ந்த வீடுதான். வியாபாரத்தில் கடன் கூட தன் மனைவியின் 100 பவுன் நகையை அனைத்தையும் விற்று, அந்த கடனையும் அடைத்து ,இந்த பூர்வீக வீட்டை தன் தாயின் பெயரில் இருந்து தன் மனைவியின் பெயருக்கு மாற்றிக் கொண்டான். குழந்தை இல்லாமல் போனதால், தன் கணவன் என்ன சொன்னாலும் அதற்கு இசைந்து போனால் இலக்கியா .இப்போது இந்த வீட்டில் தாய் தந்தை மனைவியுடன் இவன் மட்டும் இருக்கிறான். மற்றவர்கள் தங்களுக்கு என வீடு வாடகைக்கு மாறிக்கொண்டு போனார்கள்.

இரவு உணவை மனைவி பரிமாற ,சாப்பிட அமர்ந்தவன் , “என்ன இலக்கியா உன் அப்பாவிற்கு உன் மேல் பிரியம் இல்லை போல”, என்றான் அவளை முறைத்துக் கொண்டு.

கண்ணன் மேல் அவளுக்கு அதிகமான பாசம் தான், ஆனால் இப்போது எல்லாம் அவனது நடவடிக்கையில் நிறைய மாற்றம். முன்பு எல்லாம் அவனின் அன்னை சொல்லை தட்டாதவன், ஆனால் இப்போது கடந்த ஐந்து வருடமாக, இந்த வீடு கைமாறிய பின் என்று அவள் நினைத்தால் ,ஆனால் தாய்க்கும் மகனுக்கும் ஏதோ கண்ணுக்குப் புலப்படாத விரிசல் இருப்பதை உணர்ந்து கொண்டால் .ஆனால் அவனை எதிர்த்து கேள்வி கேட்ட திரானியற்று தான் இருக்கிறாள். துணை நிற்க தமையனும் இல்லை, தந்தையோ வயதிற்கு மீறின சுமையை சுமப்பவர். தன்னிலமையை உணர்ந்தவள், அவனின் பேச்சை மௌனமாகவே ஏற்றாள்.

அவர்கள் அருகில் இருந்து இவை அனைத்தும் பார்த்துக் கொண்டிருந்த இன்பாக்கு கோபம் உச்சத்தில் இருந்தது. “ ஏன் மாமா”, என்றால் இலக்கியா, “ நான் அவளை வீட்டை விட்டு அனுப்ப சொன்னால் அவளை கடைக்கு அழைத்துச் சென்று உன் தந்தை அவளின் உரிமையை நிலை நாட்டுகிறாரோ. நான் யாரென்று காட்டுகிறேன்”, என்று அவளிடம் வசை பாடியவன், “ நாளை புதுக்கோட்டை வரை செல்கிறேன் உன் தம்பி இறந்தது ஏதோ பாதம் அது இது என்று கூறுகிறார்கள். என்ன செய்ய, என்னை மதிக்கவில்லை என்றாலும், நான் தானே அனைத்தையும் பார்க்க வேண்டும் “, என்று கூறி காலை 4:00 மணிக்கு எழுப்புமாறு சொல்லி சென்று விட்டான் .

“ஓ என்னை வரவிடாமல் தடுக்க பார்க்கிறாயா. அப்போ உனக்கு புதுக்கோட்டையில் வைக்கிறேன் ஆப்பு”, என்று எண்ணிக்கொண்டு ,காலை கண்ணன் புறப்பிட்டபோது அவனுடன் முன் சீட்டில் அமர்ந்து, அவனது அம்பாசிடர் காரில் இன்பாவும் பயணப்பட்டான். திருப்பத்தூர் தாண்டும் வரை இன்பா எதுவும் செய்யவில்லை. கார் அமைதியாக சென்று கொண்டிருந்தது. சாலமன் பாப்பையா நகைச்சுவை பட்டிமன்றம் ஓடிக்கொண்டிருந்தது. அதை கேட்டுக்கொண்டு கார்ரை செலுத்திக் கொண்டிருந்தான் கண்ணன்.

சிவாவிடம் இருந்து அழைப்பு வர, “ என்ன கண்ணன், எப்போது இங்கு வந்து உன் மகனை அழைத்து செல்கிறாய்”, என்றான் சிவா கண்ணன் அழைப்பை ஏற்றவுடன் ,அதில் கண்ணன் சுனங்க, “ ஏன் சிவா என் நிலைமை தெரிந்தும் இப்படி பேசுகிறாய், இப்போது இன்பா இறந்தது வேறு, நான் அவனை அழைத்து வரும்போது சட்டப்படி என் மகனாக அழைத்து வரவேண்டும்”, என்றான் உறுதியாக . “அது எப்படி கண்ணா , உண்மையை கூறப்போகிறாயா”, என்றான் சிவா கேள்வியாக. “ இல்லை என் தத்து புத்திரனாக”, என்றான் பதிலாக. “ பாவம் அவன், இலக்கியா தங்கையிடம் பேசு அவள் ஏற்றுக்கொள்வாள். உனக்கு பிறந்தவனை இப்படி யாரோ”, என்று சிவா கோவமாக கேட்க, அதுவரை இருந்த தடுமாற்றம் கண்ணனுக்கு மறைய, “ என்ன சிவா ரொம்ப வருத்தப்படுகிறாய் போல”, என்று இவன் பல்லை கடித்துக் கொண்டே கேட்டவன், அவனே தொடர்ந்து, “ கடந்து மூன்று மாதமாக தொழிலில் என் பங்கு லாபம் வரவில்லை, அதை நான் கேட்டேனா”, என்றான் விதன்டவாதமாக. சிவாவுக்கு புரிந்து போனது நாம் இவனை எதிர் கேள்வி கேட்டால் இவன் நமக்கு கொடுத்த பணத்தை கேட்பான். “ கண்ணா என் போதாத காலத்தில் நீ எனக்கு உதவினாய், நான் இல்லை என்று சொல்லவில்லை, எதை செய்தாலும் யோசித்து செய்”, என்று கூறி வைத்து விட்டான்.

அதைக் கேட்டுக் கொண்டிருந்த இன்பா ,இவன் இவனை சார்ந்த யாருக்குமே உண்மையாக இருக்கவில்லை. இவனை எல்லாம் உயிரோடு விட்டு வைப்பதே தப்பு .ஆனால் இலக்கியா முகமும், கண்ணன் மகனின் முகமும் வந்து போனது. தன் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்தவன், ஆக்சிலேட்டர் இருந்து கண்ணனின் கால்லின் மேல் தன் கால்லை வைத்து அழுத்த, வண்டி வேகம் எடுக்க ஆரம்பித்தது. கண்ணன் என்ன முயன்றும் அவனது கால்லை ஆக்சிலேட்டரிலிருந்து எடுக்க முடியவில்லை. கார் தேசிய நெடுஞ்சாலையில் அந்த காலைப்பொழுதில் தரிக்கட்டு ஓட ஆரம்பித்தது. ஏற்கனவே வெகு தூரம் லாரியை செலுத்திய களைப்புடன் வேகமாக வந்து கொண்டிருந்த அந்த லாரி கார்ரை நோக்கி வர , " அய்யோ”, என்று பயத்தில் கண்ணன் அலற, கண் இமைக்கும் நேரத்தில் கார் ஸ்டேரிங்கை திருப்பி , வண்டியை திசை திருப்பினான் இன்பா. கண்ணணால் இன்பாவின் அருகாமையை உணர முடிந்தது. ஆனால் இன்னும் இன்பா அக்சிலேட்டரிலிருந்து தன் கால்லை எடுக்கவில்லை .கண்ணனுக்கு நன்றாக புரிந்தது கார் அவன் கட்டுப்பாட்டில் இல்லை என்று. இன்பா கால்லை எடுக்க, கண்ணன் ஆக்சிலேட்டரில் இருந்து தன் கால்லை விடுவிக்க வண்டி ஒரு குலுங்கு குலுங்க மீண்டும் கண்ணன் அலற, இப்போது இன்பாவின் கால் பிரேக்கில் கண்ணனின் கால்லை அழுத்த வண்டி சமநிலைக்கு வந்து நின்றது .

ரோட்டின் தூசி அனைத்தும் காரின் முன்பக்க கண்ணாடியில் பதிந்து இருந்தது . “புதுக்கோட்டைக்கு போய் உன்னை”, என்ற கண்ணன் மனதில் புலம்பியவாறு, தண்ணியை கொண்டு கண்ணாடியை கழுவ ஒரு நிமிடம் திகைத்து நின்று விட்டான். கார் கண்ணாடியில் இருந்த மண் தண்ணீரில் கலந்து ஓட ஆரம்பித்தது. அங்கங்கே திட்டு திட்டாக நின்ற மண்ணை ,இவன் பார்க்க, அதில் , “ புதுக்கோட்டை போய் தான் பாரேன்”, என்று இருக்க அப்படியே ஓய்ந்த அமர்ந்து விட்டான் ஓட்டுநர் இருக்கையில். அது மறுபடியும் கலைந்து , “என் மனைவி, என் குழந்தைகள், ஜாக்கிரதை”, என்று வந்த அடுத்த நொடியில் கலைந்தது. கண்ணன் செய்வது அறியாது நின்றான் .இதற்கு மேல் போனால் தன் உயிர் தன்னிடம் தங்காது என்பதை உணர்த்தவன் மறுபடியும் மதுரையை நோக்கி பயணப்பட்டான்.

கலைந்து வந்த கணவனை ஒரு பார்வை பார்த்தாலே தவிர இலக்கியா வேற எதுவும் கேட்கவில்லை. ஏன்னென்றால் இரவு இவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த அவளின் மாமியார் காலையில் இவளிடம் , “இன்பா ஒன்றும் பாதத்தில் எல்லாம் இறக்கவில்லை .ஆனால் அவனது ஆத்மா சாந்தியடையவில்லை .அது சாந்தி அடையச் செய்வது அக்காவான உன் பொறுப்பும் கூட. யார் கண்டார்கள் உனக்கு கூட அவன் ஒரு பிள்ளையை கொடுத்துவிட்டால் அவனது ஆத்மா சாந்தியடையுமோ என்னவோ”, என்று அவளை நன்றாக குழப்பி விட்டு சென்று விட்டார். அதில் இவள் தெளிந்திருக்க கண்ணன் எதுவும் செய்யாமல் வந்தது அவளுக்கு திருப்தியாக இருந்தது


தொடரும்
 
Last edited:

Simma

Moderator
அத்தியாயம் 10

அடுத்த நாள் வந்த இலஞ்சிதாவிடம் யாரும் எந்த ஒரு செயலும் செய்யவில்லை. என்னதான் வேலை ஆட்கள் பயந்து நடந்தாலும், பள்ளிக்கு செல்லும்போது பிற பெற்றோர்களின் பேச்சு, கடைக்கு வருகிறவர்களின் பார்வை பிரச்சனையை கொடுக்க தான் செய்தது. அதுபோக இன்பாவின் தம்பி மூத்த சித்தப்பாவின் மகனுமான ராஜேஷ் அடிக்கடி கடைக்கு வந்து பாலுவை சந்தித்து விட்டு போகாமல் இலஞ்சிதாவை சீண்ட ஆரம்பித்து இருந்தான். அதுபோக இலஞ்சிதாவிற்கு whatsappபில் தவறான வீடியோ, அசிங்கமான பேச்சு என்று இருக்க, அவள் அவனின் எண்ணை பிளாக்கில் போட அன்று கடைக்கே வந்து விட்டான்.

பாலு வேலுவின் மகனான வினோத்தோடு மருத்துவமனைக்கு மாதாந்திர பரிசோதனைக்கு சென்று இருக்க ,இன்ஷீத் மூன்றாவது மாடியில் நின்று இருக்க ,அலுவல் அறைக்குள் வந்தவன் நிலாம்மாவிடம் ஒரு பொருளை சொல்லி எடுத்து வருமாறு பணிந்து விட்டு அவர் வெளியே சென்றவுடன் கதவை தாளிட்டு அடைத்தான். தனிமையில் அவனிடம் சிக்கிக் கொண்டால் இலஞ்சிதா என்ன என்று அவனை நிமிர்ந்து பார்க்க, அவனது செய்கை அனைத்தையும் கண்கள் சிவக்க பார்த்துக் கொண்டிருந்தான் இன்பா இலஞ்சிதாவின் பக்கம் நின்று. “ அட என்ன இலஞ்சிதா”, என்று ராஜேஷ் அவனது 32 பல்லும் தெரிய இளிக்க , “அண்ணி, நான் உனக்கு .மரியாதை கொடுத்து மரியாதை வாங்கிக் கொள்”, என்று இலஞ்சிதா கோபத்தில் வார்த்தைகளை துப்ப , “அண்ணியா அது எல்லாம் அண்ணன் இருக்கும்போது. உனக்கு ஒரு பழமொழி தெரியுமா அண்ணன் பொண்டாட்டி பாதி பொண்டாட்டி”, என்று அவள் கைகளை பற்ற வந்தான். இவள் அகன்று கதவின் பக்கம் செல்ல போக , “ அதே ஊரில் தான் அண்ணியை அன்னையின் மறு உருவம் போல் பார்ப்பார்கள்”, என்று கூறி கதவை திறந்து கொண்டு வந்தான் இன்ஷித் .

கதவை தாள் போட்டு தானே வந்தோம் என்று ராஜேஷ் யோசிக்க, இன்பா முகத்தில் சிரிப்பு, அவன் தான் இன்ஷித் அலுவல் அறையை நோக்கி வருவது புகைப்படக் கருவியில் தெரிய கதவின் தாள்களை நீக்கி இருந்தான். இலஞ்சிதா இன்ஷித் அருகில் நிற்க, அதை கண்கலிள் வெறிகொண்டு பார்த்துக் கொண்டிருந்தான் ராஜேஷ். பாலு அதற்குள் வந்துவிட இன்ஷித்தின் முகத்தில் இருந்த கோபமும் இலஞ்சிதாவின் வேர்வை படிந்த முகமும் ராஜேஷின் செயலை பாலுவிற்கு படம் பிடித்து காட்டியது. ஆனால் வெளிப்படையாக யாரையும் எதுவும் கூற முடியாததால். “ என்ன ராஜேஷ் வேலு அப்பா ஏதும் சொல்லி அனுப்பினானா”, என்ற சூழ்நிலை எளிதாக்க கேட்க, “ இல்லை பெரியப்பா உங்களை பார்க்க தான்”, என்று ஏதோ அவரிடம் பிரியம் இருப்பது போல் பேச ஆரம்பிக்க , “சரிப்பா நன்றாக தான் இருக்கிறேன், போ பள்ளி விடும் நேரம் ஆகிற்று, போ உன் மனைவி குழந்தை காத்திருப்பார்கள்”, என்று அந்த உன் என்பதில் சிறு அழுத்தம் கொடுத்துக் கூற , “வருகிறேன்”, என்று முகம் கருத்து கூறிவிட்டு விடை பெற்றான்.

பாலு வாஞ்சையாக அவளின் தலையை தடவிட்டு சென்றுவிட்டார். “வெறி நாய்கள் நாக்கில் தொங்க போட்டு தான் அலையும், நாம் தான் அடித்துக் கொள்ள தயங்க கூடாது, அன்று என்னிடம் காட்டிய வீராப்பை காட்ட வேண்டியது தானே”, என்று கூறிவிட்டு சென்றவன், நிலாம்மாவிடம் குளிர்பானம் ஒன்றை கொடுத்து, அவளை ஆசுவாசப்படுத்தினான். அன்றைய இரவு குழந்தைகளுடன் தூங்க முயன்ற இலஞ்சிதா, கண்ணீரில் கரைந்துதான் போனால். தாயின் கண்ணீரை உணர்ந்த இரினாவும் கண்ணீரில் கரைந்தால். ஒரு அளவு இரினாவால் புரிந்து கொள்ள முடிந்தது. இப்போதுதான் ஓரளவு இதிகா இன்பா இல்லை என்பதை ஏற்க ஆரம்பித்திருந்தால். அந்த இடத்தில் இன்ஷித்தை தினமும் பார்ப்பது நாளையோ என்னவோ அவனின் அழுகை மட்டு பட்டு இருந்தது. ஒரு வழியாக இலஞ்சிதா தூங்க இரினா தன் தாயின் கைபேசியை எடுத்துக்கொண்டு வெளியே சோபாவில் வந்த அமர்ந்தால். அவளையே பார்த்துக் கொண்டிருந்த இன்பமும் வெளியே வந்த அமர்ந்தான்.

இன்பாவிற்குமே என்ன செய்வது என்பது தெரியவில்லை. நிறைய வெறி நாய்கள் அவளிடம் வாலாட்ட முயல்வதை கண்கூடாக கண்டுவிட்டான். யாரையும் இன்னும் எத்தனை நாள் விரட்ட முடியும். தான் சென்று விட்டால் அவள் என்ன செய்வாள் என்பதே மிகப் பெரிய கேள்விக்குறியாக அவனுக்கு முன் நின்றது.

இரினா யோசனையாக மணியை பார்க்க அது 11 30 காட்ட பையைத் திறந்து இன்ஷித் அன்று அவன் கொடுத்ததை எடுத்து தன் அன்னையின் கைபேசியில் இருந்து அவனுக்கு அழைத்தால். இன்ஷித் தன் வேலைகளை முடித்துக் கொண்டு ,அவன் அப்போதுதான் படுக்க அவனின் அறைக்கு வந்தான். இலஞ்சிதா எண்ணில் இருந்து ,அவள் பெயர் உடன் அழைப்பு ஒலிக்க மணியை பார்த்தவன் என்னவோ ஏதுவோ என்று அதை உயிர்ப்பித்தான். “ என்ன இலஞ்சிதா”, என்றான் படபடப்பாக. அவனது படபடப்பு நிறைந்த குரல் இரினாவை தாக்கியது. பாலுவிடம் தோன்றும் அதே படபடப்பு ,அவனிடம் காண முடிந்தது. முதன்முறையாக, ஆம் அவள் இன்பாவை கூட அவ்வளவாக அப்பா என்று அழைக்க மாட்டாள். ஏன்னென்றால் இருவருக்குமே ஏழாம் பொருத்தம் தான். “நான் இரினா”, என்றால் மெதுவாக. முதலில் அவனுக்கு இதிகா பேசிவிட்டாலே என்றுதான் தோன்றியது. இப்போது எல்லாம் பாலு வந்த பிறகு அவனை அவரின் கைப்பேசியிலிருந்து ஐந்து நிமிடம் அன்றாட நிகழ்வுகளை கூறிவிட்டு தான் இதிகா படுப்பால். இது இலஞ்சிதாவுக்கு கூட தெரியாது. முதலில் இந்த பிஞ்சு சொல்வதை மட்டுமே கேட்டுக் கொண்டவன் , வறண்ட பாலைவனமாக இருந்தா அவன் மனதில் சிறு உணர்வு பூக்களை அது பூக்க ஆரம்பித்திருந்தது .

இப்போது எல்லாம் அந்த நிமிடங்களை அவன் எதிர்பார்க்கத் தொடங்கியிருந்தான். அவளிடம் தன் நண்பனை கண்டான். சிறுவயது முதல் தனக்கு தோள் கொடுத்தவன். தன் தகப்பன் தன்னை விட்டு விட்டு போனபோது ,பிறர் பார்வைக்கு அவன் காட்சி பொருளாக மாறிய போதும் ,தன்னை விட்டு அகலாதவன். இதிகாவின் வெகுளித்தனத்தில் இன்பாவை முழுவதுமாக உணர்ந்தான். அதை மௌனமாகவே ஏற்க ஆரம்பித்தான். அவன் மௌனமாக இருக்க, “ இன்ஸித் பா”, என்றால் இரினா மறுபடியும் .அதில் சுயத்துக்கு வந்தவன், “ என்னடா இந்த நேரம் , வீட்டில்”, என்று மறுபடியும் படபடக்க, அவனின் படபடப்பின் காரணத்தை உணர்ந்தவள், “ ஒன்றுமில்லை நான் தான்”, என்றால் மெதுவாக. “ என்னம்மா பள்ளியில் யாரும் எதுவும்”, என்றான் இன்றைய கால சூழ்நிலைகளை மனதில் நிறுத்தி, “ இல்லை இன்ஷித் பா ,அம்மா அழுது கொண்டே இருக்கிறார்கள். எட்டு மணி போல் ராஜேஷ் சித்தப்பா ஆயா கைபேசியில் அம்மாவிடம் பேசினார். அதன் பின் தான்”, என்றால் தெளிவாக .அதில் அவனால் புரிந்து கொள்ள முடிந்தது அந்த தருதலை என்ன பேசி இருக்கும் என்று. அவன் மௌனமாகவே இருக்க “ இன்ஷித் பா”, என்றால் மறுபடியும். “ அம்மா முதலில் தான் அழுதார்கள் என்றால், இப்போதும் ரொம்ப”, என்றால் அவள் கவலை தோய்ந்த குரலோட.

அவனுக்கு இது எல்லாம் புதுசல்ல தானே , தன் தந்தை சென்ற பின் தன் தாய் அனுபவித்தது தான், இவன் வளர்ந்த பின் தான் அது குறைந்தது, பின் முற்றிலும் நின்றது .ஆனால் இங்கு பிள்ளைகளும் பெண் பிள்ளைகள். போராடித்தான் வாழ வேண்டும். இவன் என்ன சொல்லி தேற்றுவான். அவன் மௌனம் அவளுக்கு மேலும் பயத்தை தர அவள் கண்களில் இருந்து கண்ணீர் ஊற்றெடுத்தது.

இதை கண்டு துடித்துதான் போனான் இன்பா. அவன் உயிரோடு இருக்கும்போது அவளை சீண்டி அழுக வைப்பதை வாடிக்கையாகக் கொண்டு இருந்தான். ஆனால் இன்று அவளின் இந்த கண்ணீரை அவனால் சகித்துக் கொள்ள முடியவில்லை .இதற்கெல்லாம் காரணமான தன் தம்பியை கொன்றால் என்ன என்று தான் தோன்றியது இன்பாவிற்கு .ஆனால் இது ஒன்று ஒன்று மாற்றி ஒன்றல்லவா வந்து கொண்டே இருக்கிறது என்று தவித்துப் போனவன் தன் கை காலாகாத தனத்தால், தன் ஆஸ்தான இடமான தோட்டத்தில் ஊஞ்சலில் பகுதிக்குச் சென்றான்.

“ நான் பார்த்துக் கொள்கிறேன். நான் உயிரோடு இருக்கும் வரை என்னை தாண்டி தான் யாரும் உங்கள் அருகில் நெருங்க வேண்டும்”, என்ற இன்ஷித், “ போய் தூங்குமா. என் மேல் நம்பிக்கை”, என்று அவன் ஆரம்பிக்க , “உங்கள் மேல் அது நிறைய இருக்கிறது .உங்களுடன் பேச ஆரம்பித்த பின் தான் இதிகாவின் கண்ணீர் நின்றது. அம்மாவின் கண்ணீரையும் நிச்சயம் நிறுத்திவிடுவீர்கள், எனக்கு தெரியும், குட் நைட்”, என்று கூறி வைத்து விட்டால். அவளின் பேச்சைக் கேட்டவன் மெல்ல அதிர்ந்தான். இந்த குழந்தையின் நம்பிக்கையை தன்னால் காப்பாற்ற முடியுமா என்று யோசித்தவன், அது எனக்கு தெரியாததால் தானே ஒரு குடும்ப அமைப்புக்குள்ளேயே நான் செல்லவில்லை என்று தனக்குள்ளேயே புலம்பிக் கொண்டான் இன்ஷித்.

இன்று கூட அவனின் தாய் யசோதை, “ நீ உனக்கு ஒரு வாழ்வை அமைத்துக் கொள்ளாமல் கபி ணேஷ் அமைத்துக் கொள்ள போவதில்லை என்பதை உறுதியாக கூறிவிட்டான்”, என்று அவனை கடுமையாக கடித்துக் கொண்டார்கள். தம்பியை நினைத்து மிகவும் பெறுமையாக இருந்தது. சிவகங்கை ஆண் அழகன் போட்டியில் போன வருடம் ஆணழகன் பட்டம் வென்றவன். பெண்களை இவனை போல் ஒதுக்க மாட்டான். மரியாதையாக இலகுவாக பழகுவான். இப்போது தேவகோட்டையில் மற்றும் காரைக்குடியில் சொந்தமான ஒரு ஜிம் வைத்து நடத்துகிறான் .முதலில் இவனிடம் சொல்லி குழந்தைகள் இருவருக்கும் தற்காப்பு கலைகளை கற்றுக் கொடுக்க சொல்ல வேண்டும் என்று எண்ணி கொண்டவன் குழந்தைகள் இருவரின் நினைவோடு தூங்கிப் போனான்.


தொடரும்
 
Last edited:

Simma

Moderator
அத்தியாயம் 11

இன்பாவின் மனம் அவனை ஆயிரம் கேள்வி கேட்க, அவனால் ஒரு நிலையில் இருக்க முடியவில்லை ,என்ன செய்வது ஏது செய்வது என திகைத்துப் போய் அமர்ந்திருந்தான். “என்ன இன்பா உன் கடமைகள் எல்லாம் எவ்வளவு இருக்கிறது”, என்று வந்து நின்றார் எமதூதர்.

“ ஐயா என்ன சொல்வது தெரியவில்லை”, என்று ஆரம்பித்தவன், தன் மனக்குமறல்களை அனைத்தையும் அவரிடம் கொட்ட ஆரம்பித்தான். அனைத்தையும் கேட்டவர் , “பெண் ஆணை விட பலசாலி, ஆனால் அவள் அதை உணர விடுவதில்லை. அவளின் பிறப்பின் வித்தியாசத்தை வைத்து நாம் தான் அவர்களை கோழையாக்கி விடுகிறோம்”, என்றவர், “ இப்பொழுது என்ன முடிவு செய்திருக்கிறாய்? இன்னும் உனக்கு ஒன்றை மாத காலமே ,அதுவும் யாராவது உனக்கு கட்டு கட்டி விட்டால் உன்னால் செயல்பட முடியாது”, என்றார் அவனுக்கான கால அவகாசத்தை நினைவுபடுத்தி, “ அதுதான் என்ன செய்ய, என் மனைவி, குழந்தைகளை பாதுகாக்க வேண்டும். என் அக்காவின் வாழ்க்கையை நேர்படுத்த வேண்டும். கடையை இன்ஷித் பார்த்துக் கொள்வான் அதனால் வாழ்வாதாரத்திற்கு எந்த பிரச்சினையும் இல்லை”, என்றவன் இதை எப்படி சரி செய்ய என்று திணறினான்.

“ நீ உயிரோடு இருந்து உன் மனைவி இறந்திருந்தால் என்ன செய்திருப்பார்கள்”, என்றார் , இன்பாவின் கண்ணை நேருக்கு நேராக பார்த்து, “ வீட்டையும் குழந்தைகளையும் பராமரிக்க என்ற காரணம் காட்டி ஒரு பெண்ணை மணமுடித்து வைத்திருப்பார்கள்”, என்றான் இன்பா உடனடியாக, ஆனால் அவன் அதை உணர்ந்து சொல்லவில்லை.

எமதூதர் அமைதியாக அவனையே பார்த்துக் கொண்டே நிற்க, அவரின் பார்வையில் தான் கூறிய பதிலை அவன் பரிசீலிக்க, “ நீங்கள் என் மனைவிக்கு”, என்று தடுமாற, “ ஏன் இன்பா, நீ தான் கூறினாயே, இலஞ்சிதா இறந்திருந்தால் உனக்கு திருமணம் செய்து வைத்திருப்பார்கள் என்று, ஆனால் அதுவே அவளுக்கு என்றால் யோசிக்கிறாய்”, என்றவர், “ நன்றாக சிந்தித்துப் பார். பெண்கள் தனியாக வாழ முடியும். ஆனால் அதற்காக அவர்கள் இன்று உன் தம்பியை போல் நிறைய தெரு நாய்களை கடந்து வர வேண்டும். உன் மனைவி மட்டுமல்ல உனக்கு பெண் பிள்ளைகளும் கூட. அதற்கு மனமும் திடமும் தேவை. வீட்டில் உரிமையாக ஒருவன் இருந்தால் வாளாட்ட யோசிப்பார்கள்”, என்று அவனை யோசிக்க வைத்து விட்டு மறைந்தார். எவ்வளவு யோசித்தும் இன்பா என்ற சாதாரண மனிதனால், கணவன் தகப்பனார், தன் உடமையான மனைவியையும் குழந்தைகளையும் இன்னொர் ஒருவரோடு பகிர்வதில் உள்ளம் ஒத்துழைக்கவில்லை. ஆனால் இந்த பிரச்சனைக்கான தீர்வும் அவனுக்கு கிடைக்கவில்லை.

அடுத்த நாள் பாலு ஒரு இடம் விஷயமாக மீண்டும் வினோத்தோடு வெளியே சென்று இருக்க மீண்டும் வந்தான் ராஜேஷ் ஆனால் அவனின் துரதஷ்டம் கடையின் கூட்டம் இல்லாமல் போக இன்ஷித் முன்னாடியே நிற்க அவனை தடுத்துவிட்டான்.

அவனை எதிர்பாராதவன் திகைக்க, அவனின் தோளில் கைகளை போட்டு , கடையின் பின்பக்கம் அழைத்துச் சென்றான். அவர்கள் பின்னாடியே இன்பா சென்றான் சந்தோஷமாக. ராஜேஷ் எரிச்சலில் இன்ஷித் கையை எடுத்து விட்டு, “ இன்ஷித்”, என்று கையை நீட்டி ,அவனை எச்சரிக்கை செய்ய, நீட்டி இருந்த விரலை பற்றி, “ மரியாதை என்றால் என்னவென்று தெரியாதா உனக்கு, எதற்கு தேவையில்லாமல் அடுத்தவன் பொண்டாட்டியைப் போய்”, என்று, பிடித்திருந்த விரலைத் திருகினான்.

“ டேய் உனக்கு ஏன்டா கொதிக்கிறது. ஏன் உனக்கும்”, என்று ஏதோ அசிங்கமாக கூற வர ,அவனது முகத்திலேயே தன்னுடைய கையை மடக்கி ஓங்கி ஒரு குத்து குத்தி இருந்தான் இன்ஷித். “ ராஜேஷ் என்னை பற்றி உனக்கு தெரியாது. இன்பா எனது உயிர். அவனின் உடமைகளை பாதுகாப்பது எனது கடமை. இன்னும் ஒரு முறை இலஞ்சிதாவிடம் நெருங்கினாய் ,உனது லீலைகளை அனைத்தையும் உன் காதல் மனைவிக்கும், வேலு சித்தப்பாவிற்கும் அனுப்பிவிடுவேன். அதன் பின் உன் நிலைமை”, என்று கர்ஜிக்கும் சிங்கமாக வார்த்தையை கடித்து துப்பினான்.

ராஜேஷின் மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியது .மேலும் வேலுவின் பெயரைக் கேட்டவுடன் அதிர்ந்து தான் போனான். அவனுக்கு தெரியும் வேலுவிடம் இந்த பிரச்சனையைப் போனால் அவன் காலி என்று .

இன்று தன் தொழிலில் ஏற்படும் சிறு பிரச்சினை முதல் பெரிய பிரச்சனை வரை அவர் உதவியோடு தான் அவன் கடந்து வருகிறான். இது மட்டும் அவருக்கு தெரிந்தால் அவ்வளவுதான் என்று மூளை எடுத்துரைக்க வந்த வழியே திரும்பிச் சென்றான். எதிரில் வந்த பாலுவிடம் கூட பேசாமல் சென்று விட்டான்.

அவனையும் அவன் முகத்தில் ஏற்பட்டிருந்த ரத்தத்தை கண்டுகொண்ட பாலு, அவனின் பின் தன் கையை உதறி வந்த இன்ஷித்தை கண்டபோது ஒரு சிறுமுறுவல் பூத்தது. அதை பார்த்துக்கொண்டே வந்த இன்பாவின் முகத்திலும் சிறுமுறுவல். இன்ஷித் அருகில் வந்தவுடன், “ ரொம்ப நன்றி டா”, என்று கூறிய பாலு, அவனின் தோளில் கையை போட, “ அப்பா”, என்றான் இன்ஷித் அதிர்ந்து. “ எனக்கு தெரியும் ,ஆனால் என்னால் எதையும்”, என்று, அவர் தடுமாற, “ அப்பா நான் இருக்கிறேன்”, என்றான் அவருக்கு ஆதரவாக.



மாலை பிள்ளைகளை அழைக்க இன்ஷித் சென்றவன், அவர்களை அழைத்துக் கொண்டு வரும்போது, இவர்கள் காரை ஒருவன் கை நீட்டி வழிமறைத்தான். யார் இன்ஷித் பா கார்ரை வழிமறைக்கிறார்”, என்று முன்யிருக்கையில் அவனோடு அமர்ந்து இருந்த இதிகா கேட்க, தம்பி கபிணேஷை கண்டு கொண்டவன், “இரு டா மா” என்று கூறி, கார்ரை ஓரம் நிறுத்தினான். இரினா இதிகாவின் பின்னால் அமர்ந்திருக்க, கபிணேஷ் இரினாவின் பக்க கதவை திறக்க, இரினா சற்றென பயந்து உள்ளே நகன்றால்.

அவளின் நடுக்கம் அந்த இரு ஆண்களையும் திகைக்க செய்தது. ஆனால் அதை எதுவும் வெளிப்படையாக காட்டாது பார்வையால் தங்களின் உணர்வுகளை பரிமாறிக் கொண்டு இயல்பாகவே இருந்தனர்.

“ இதுதான் என் தம்பி கபிணேஷ்”,என்றான் அறிமுகப்படுத்தும் விதமாக இன்ஷித். இதிகா நன்றாக பின்னால் திரும்பி, “Hi, உங்களை என்ன சொல்லிக் கூப்பிடுவது”, என்று இன்ஷித்தையிம் இரினாவையிம் பார்க்க ,ஆனால் இன்ஷித் மௌனமாக இருந்தான். இரினா, அவள் இந்த புதியவனின் வருகையை ஏற்கவில்லை.

கபிணேஷ் சூழ்நிலையை புரிந்து கொண்டு, “ இன்பா அப்பாவின் தம்பியை எப்படி கூப்பிடுவாய் மா”, என்று இதிகாவிடம் கேட்க, “ சித்தப்பா, அப்போ இன்ஷித்பாவின் தம்பி கபிணேஷ் சித்தப்பா”, என்றால் அவளே ஒரு வழியை கண்டுபிடித்த சந்தோஷத்தோடு. “ ஆமாம் டா கபிசித் என்று கூப்பிடு, எதற்கு நீட்டிக் கொண்டு என்றான் கபிணேஷ்.

இரினா அமைதியாக இருக்கவும், “ என்ன இதி மா உன் அக்கா சிரிக்க மாட்டாளா”, என்று கபிணேஷ் இரினாவை பார்த்து கேட்க, “ கபிசித் அவள் அம்மாவை போல் மூடி நான் என் அப்பா மாதிரி இன்பமாக”, என்றது கள்ள கபடம் இல்லாமல் .

தன் மகள் முகத்தில் எந்த கவலையின் தடம் தெரியாமல் இன்பம் தெரிய இரினா கபிணேஷ் இடையில் அமர்ந்திருந்த இன்பா முகத்திலும் சந்தோஷம்.

அவனுக்கு புரிந்தது இன்ஷித் அருகில் அவர்களின் சந்தோஷம் இருக்கிறது என்றும் ,அவன் பிரிந்தால் சந்தோஷம் குறைகிறது என்றும். இரினா செய்வது அறியாது தலை நிமிராமல் இருக்க, இவ்வளவு நாட்கள் வெளி ஆண்களுடன் இல்லாத பழக்கம், ஆண்கள் பற்றிய தவறான கண்ணோட்டம் அவளை அவ்வாறு செய்ய தூண்டியது.

அவளின் நிலைமையை அங்கே இருந்து இரு ஆண்களுக்கும் புரிந்தது. இன்பாவிற்கு தனது செயல் இரினாவை எவ்வளவு பாதித்து இருக்கிறது என்றும் இப்போ கண்ணன் மற்றும் தன் தம்பியின் நடவடிக்கை வேறு அவளை இன்னும் இறுக்க செய்து இருப்பதையும் உணர்ந்தான். இன்னும் அதை உணர்ந்தவன் சில்லுசில்லாக உடைந்து தான் போனான்.

அய்யோ இது இவளின் எதிர்காலத்துக்கு நல்லது கிடையாது என்று மனம் பதறியது. “இரினா”, என்றான் இன்ஷித், அவளின் தடையை தகர்க்கும் வண்ணம், அவள் என்ன என்பது போல் நிமிர்ந்து பார்க்க, “ என் தம்பி எனதின் பிம்பம் அவன்”, என்றான் இன்ஷித் கபிணேஷை சுட்டிக்காட்டி அவளிடம், நேருக்கு நேரான பேச்சாக, அந்தப் பேச்சு இரினாவை அசைத்தது.

ஏனோ இந்த சில நாட்கள் இன்ஷித்தை தன்வட்டத்திற்கு அனுமதித்திருந்தவள், அவனது பேச்சு போதுமானதாக இருக்க மெல்ல கபிணேஷை பார்த்து திரும்பி மெள்ளதாக புன்னகைத்தால் . அது மட்டுமே கபிணேஷுக்கு போதுமானதாக இருக்க, இதிகா உடன் சேர்ந்து அவள் வயதிற்கு இறங்கி பேசி சிரித்தான்.

இரினாவிற்கு இதிகாவின் சிரிப்பு கபிணேஷை தன்வட்டத்திற்குள் வர அனுமதி அளித்தது. இதிகாவை போல் பேசவில்லை என்றாலும் அதன் பின் இரினா முகத்தை திருப்பவில்லை. இவை அனைத்துமே பார்த்துக் கொண்டிருந்த இன்பாவிற்கு குழந்தைகளின் கவலை அகன்றது. ஆனால் இலஞ்சிதா பற்றிய பயம் ஒரு பாரமாக அவனுக்கு இருந்தது.

தொடரும்
 
Last edited:

Simma

Moderator
அத்தியாயம் 12

இன்ஷித் குழந்தைகளை இறக்கி விட்டு, வண்டியை அதன் இடத்தில் நிப்பாட்டி தன்னுடைய கருப்பு பல்சரை எடுக்க சென்றான். கபிணேஷ் தோட்டத்தில் நின்ருந்தான். அதற்குள் இதிகா இரினா இருவரும் வீட்டினுள் சென்றவர்கள் கவலை தோய்ந்த முகத்தோடு மறுபடியும் வெளியே வந்தார்கள். அதைக் கண்ட கபிணேஷ் என்னவென்று பார்க்க அதற்குள் வீட்டில் இருந்து கண்ணனின் பேச்சு சத்தம் வெளியே வந்தது.

“ என்ன அத்தை நான் சொன்னதை விடுத்து, உங்கள் இஷ்டம் போல் செய்கிறீர்கள், நானும் என்னால் ஆனதை செய்ய வா”, என்று கூறிக் கொண்டே வந்தவன் இன்ஷித் மற்றும் புதியவனுடன் குழந்தைகள் நிற்பதை கண்டவன் நின்று விட்டான். அவன் பின்னே வந்த மீனா, “ மாப்பிள்ளை”, என்று கெஞ்சி கொண்டே வந்தவர், எதுவும் பேசாமல் நின்று விட்டார். இதை பார்த்துக்கொண்டு இருந்த இன்பாவிற்கு செய்வதெல்லாம் துரோகம் இதில் வீராப்பு வேறு என்று நினைத்தவன் முதலில் இவனுக்கு ஒரு முடிவை கட்டுகிறேன் என்று நினைத்து நடப்பதை வேடிக்கை பார்த்தான்.

“ என்ன மாமா ஏன் இந்த கோபம்”, என்றான் இன்ஷித் ஏதும் அறியாதவனாக. “ ஒன்றுமில்லை டா நாம் அனைவரும் இருக்கும் போது, எதுக்கு நம் வீட்டுப் பெண்ணை கடைக்கெல்லாம்”, என்று சற்று இனிப்பை தடவி கண்ணன் வழக்கம் போல் தன் நடிப்பை தொடர, “ அட போங்கள் மாமா இந்த காலத்தில் ஆண் பெண் என்று, நான்தான் அவர்கள் தொழிலை கற்றுக் கொண்டால் யாரையும் எதிர்பாராமல் தங்கள் உரிமையான பொருட்களை பாதுகாக்க ஏதுவாக இருக்கும் என்றேன்”, என்றான் இன்ஷித், “ அதானே பார்த்தேன், இவர்கள் தனிச்சியாக இவ்வளவு பெரிய முடிவெல்லாம் எடுப்பார்களா”, என்று அவன் மீனாவை பார்த்துக் கொண்டே கூற, “ ஆமாம் நீங்கள் தானே இப்போது ஆணிவேர். நீங்களே சொல்லுங்கள் மாமா, நம் பெண்கள் தொழிலில் முன்னுக்கு வருவது நமக்கு பெருமை தானே, ஏன் உங்கள் வீட்டில் கூட, உங்கள் அம்மா அதாவது அத்தை தானே முன்னே எல்லாம் தொழிலை முன்னே நின்று நடத்தியது. இப்போது வயது மூப்பின் காரணத்தில் தானே அவர்கள் பின்தங்கி விட்டார்கள். இன்பா சொல்லி இருக்கிறான்”, என்று இன்ஷித் வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போல் பேச ,கபிணேஷ் பார்வையாளராக மட்டுமே பின் தங்கி விட்டான்.



அதற்குள் இலஞ்சிதா வந்தவர்கள் அனைவருக்கும் காப்பியை கொண்டு வர, அங்கே தோட்டத்தில் இருந்த இருக்கையில் அனைவரும் அமரச் சொன்னான் கண்ணன் தன் பொறுப்பை விட்டுக் கொடுக்காமல். என்னதான் அவன் தேன் ஒழுக பேசினாலும் அவனின் பார்வையில் எரிச்சல் மேலோங்கி இருப்பதை அண்ணன் தம்பி இருவரும் கண்டு கொண்டனர். “ நீ சொல்வது சரிதான் இன்ஷித் ஆனால் ஊர் உலகம் என்ன பேசுகிறது தெரியுமா, நாம் என்னமோ இவர்களை கொடுமைப்படுத்துவது போல்”, என்று கண்ணன் இலஞ்சிதா மீது பார்வையை செலுத்தி கூற, “ மாமா ஊர் வாழ்ந்தாலும் பேசுவார்கள், வீழ்ந்தாலும் பேசுவார்கள். என்னை பொருத்தவரை நம் மனசாட்சி படி நடக்க வேண்டும். யாருக்கும் நம்பிக்கை துரோகம் செய்யக்கூடாது. எனது இன்பாவின் குடும்பம் என் குடும்பம். பொல்லாங்கு செய்யும் யாவரும் அதன் அருகில் கூட விடமாட்டேன். பெண்கள் தனியே வாழ்வது கஷ்டம் தான் .ஆனால் அவர்களைப் போல் திடம் தைரியம் உள்ளவர்கள் யாரும் கிடையாது. நாம் அரணாக இருக்கும்போது யார் மாமா நெருங்கி விட முடியும்”, என்று அவனையும் சேர்த்து கூற, இதற்கு மேல் இவனிடம் பேசி ஒன்றும் செய்ய முடியாது என்று உணர்ந்த கண்ணன், முதலில் உன்னை இங்கு இருந்து அகற்றுகிறேன் என்று நினைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றான். பாவம் இவன் செய்யப் போகும் செயலே இன்ஷித்தை இந்த வீட்டில் சகல உரிமையோடு வலம் வரச் செய்யப் போவது தெரியாமல். அதற்கு அடித்தளம் அமைக்க சென்றான்.

கண்ணன் விடைபெற்ற பின் தான் மீனா அப்பாடா என்று மூச்சைவிட்டார். இலஞ்சிதா முகத்தில் பரவி கிடந்த கவலையும் குழந்தை முகத்தில் இருந்த கலக்கத்தையும் கண்டவர் பேச்சை மாற்றும் வண்ணமாக, “ கபிணேஷ் எப்படிடா இருக்கிறாய் வருவதே இல்லை. அம்மாவை மறந்து விட்டாய் தானே”, என்று கபிணேஷை பரிவுடன் அவர் விசாரிக்க, “ அப்படியெல்லாம் இல்லை அம்மா, வேலை அது போக சூழ்நிலைகள்”, என்று உண்மையை கூறினவன், “ அதான் இப்போது வந்து விட்டேனே. இனிமேல் தினமும் மாலை 7 மணி போல் என் வேலையை முடித்துக் கொண்டு வந்து விடுவேன். என் பிள்ளைகளை பார்க்க”, என்றான் உண்மையான உரிமையான பேச்சாக, “ போடா இப்படித்தான் சொல்வாய், அப்புறம் ஆளையே பார்க்க முடியாது”, என்று அவர் நொடிக்க, “ இல்லை மா இனிமேல் தினமும் மாலை வந்து இவர்களுக்கு கொஞ்சம் தற்காப்பு கலைகள் கற்றுக் கொடுத்துவிட்டு செல்வேன்”, என்ற கபிணேஷ் கூற, “ அது எதற்கு உங்களுக்கு வீண் சிரமம்”, என்ற இலஞ்சிதா கூற, இன்ஷித் ஏதோ கூற வர, அதற்குள் கபிணேஷ், “ என் அண்ணனின் குழந்தைகளுக்கு செய்வது எனக்கு என்ன சிரமம் இருக்கு போகிறது, எனக்கு அது கடமையையும் கூட”, என்றவன், “ ஏன் நீங்கள் கூட கற்றுக் கொள்ளலாம்”, என்று அவளை அழைக்க, “ அவள்”, இல்லை என்று பதறியே விட்டால் . “ஆம் கபி, அவர்கள் வீராப்பு பேச்சு எல்லாம் நம்மோடு தான்”, என்று இன்ஷித் அவளுக்கு ஒரு கொட்டை வைக்க, “ கற்றுக்கொள் இலஞ்சிதா, தெருநாய்களை அடிக்கி உதவும்”, என்று கூறினார் மீனா. பாலு ராஜேஷின் நடவடிக்கைகளில் மதியம் சாப்பிட வந்தவர் கூறி இருந்தார். குழந்தைகள் இருவரிடமும் பேசி மகிழ்ந்து அவர்கள் மனநிலையை சற்று மாற்றிவிட்டு இருவரும் விடைபெற்றனர். கண்ணனின் எண்ணோட்டத்தை உணர்ந்து இன்பா இவனுக்கு என்ன செய்ய என்று யோசித்து அவன் பின்னே சென்றான்.

அடுத்த நாள் வழக்கம் போல் விடிய, தத்தும் வேலைகளுக்கு அனைவரும் சென்றனர் .ஒரு பதினோரு மணி போல் இன்ஷித்துக்கு அவன் தாய் யசோதாவிடம் இருந்து அழைப்பு வந்தது வீட்டிற்கு வருமாறு .அவன் கிளம்பி செல்ல அங்கே அகதிகள் முகாமின் தலைவர் மற்றும் அதற்கு சம்பந்தமான அரசு அதிகாரிகளும் அமர்ந்திருந்தார்கள். அதற்குள் கபிணேஷும் வந்துவிட, “ என்ன ஐயா”, என்றான் இன்ஷித் கேள்வியாக. “ அது பா நீ உன்னோட ஆதார் கார்டு வந்து செயல் இழந்திருச்சுலா”, என்றார் தயக்கமாக, “ ஆமாம் அதற்குத்தானே நான் இங்கே தங்குவதற்கு மாதமானால் சரியாக பணம் செலுத்துகிறேன்”, என்றான் பதிலாக.

“ மிஸ்டர் இன்ஷீத் நீங்கள் இடையில் வெளிநாடு போய் இங்கே திரும்பி வந்ததால், உங்களின் அகதிகள் கொட்ட செயலிழந்தது. மாதம் பணம் செலுத்தினாலும் இனிமேல் இங்கே இருப்பது கடினம். நீங்கள் இலங்கை சென்று அதற்கான வழிமுறைகளை முடித்து இங்கு தங்குவதற்கு தகுந்த சான்றோடு வரவேண்டும்”, என்று அந்த அதிகாரி கூற, “ சார் அவனின் மூன்று வயதிலிருந்து இங்குதான் இருக்கிறான். அப்போ எங்களுக்கான எந்த உரிமையும் கிடையாதா”,என்று யசோதா பொங்க, “ அம்மா நாங்கள் சட்டத்தை தான் சொல்கிறோம். இலங்கை சென்று அனைத்தையும் முடித்து வரச் சொல்லுங்கள்”, என்று கூறிவிட்டு அந்த அதிகாரி சென்றுவிட்டார்.

“ஐயா நீங்களாவது ஏதாவது பேசலாம் தானே”, என்று யசோதா கேட்க , “அம்மாடி நான் தான் ஏற்கனவே ஒரு ஆலோசனை கூறினேன் தானே. இந்திய குடியுரிமை பெற்ற பெண்ணை இன்ஷித்துக்கு திருமணம் முடித்து விட்டால் அவனுக்கு இந்திய குடியுரிமை கிடைத்துவிடும்”, என்று அவர் ஆலோசனை கூற , “வேறு ஏதாவது”, என்று அவன் தன் பிடித்தமின்மையை காட்டினான். “அண்ணா உன்னை எதிர்த்து பேசுவதாக நினைக்காதே , இப்போது இலங்கையிலும் அவ்வளவு எளிதாக நமக்கு சாதகமாக எதையும் செய்ய முடியாது. அதுவும் நமக்கு கால அவகாசமும் இல்லை. அது மட்டும் இல்லாமல் இன்றைய இன்ப அண்ணா வீட்டில் நடக்கும் பிரச்சனைக்கு அவர்களை தனியே விட்டு நீ எங்கும் செல்ல முடியாது. இப்போது நீ இலங்கை கிளம்பினாய் என்றால் இந்த பிரச்சினை சரி செய்ய உனக்கு மாத கணக்கு ஆகலாம். அதனால் யோசி அண்ணா”, என்றான் தன்மையாக.

இன்ஷித் மௌனமாக இருக்க, “ தம்பி வயதில் மூத்தவன் எனது அனுபவத்தில் கூறுகிறேன். ஆணோ பெண்ணோ திடமாக இருக்கும் போது துணை தேவை இல்லை. ஆனால் முதிர்ந்த வயதில் நிச்சயம் துணை அவசியம். உன் அப்பா சென்றபோது கூட உன் அன்னையை நான் எவ்வளவோ வலியுறுத்தினேன் ஆனால் அவள் கேட்கவில்லை நீயும் அதையே செய்யாதே”, என்றார் அறிவுரையாக.



அவன் மௌனத்தை கடைபிடிக்க , “எதையும் சீக்கிரம் முடிவு செய்”, என்று கூறிவிட்டு அவர் சென்று விட்டார். “ தம்பி நான் உன்னை கட்டாயப்படுத்தவில்லை. என் வாழ்வின் சந்தோஷமே நீங்கள் இருவர் மட்டுமேதான். நீங்கள் அங்கேயும் நாங்கள் இங்கேயும் என்னால் முடியாது. அது போக இப்போ இன்பா தம்பி வீட்டில் யோசித்துப்பார். நீ இல்லை என்றால் என்ன ஆவார்கள் என்று”, அவர் கூறினார். இன்ஷித் எதுவும் கூறாமல் யோசனை உடன் அப்படியே சோபாவில் சாய்ந்து அமர்ந்து விட்டான். அவனை யோசிக்கட்டும் என்று தாயும் மகனும் விலகிச் சென்றனர் .கண்ணன் பின்னே இன்பா சென்றதால் இன்பாவிற்கு இந்த விஷயம் தெரியாமல் போனது இதுதான் விதியின் சதியோ .

தொடரும்
 
Last edited:

Simma

Moderator
அத்தியாயம் 13

வெகு நேரம் யோசித்த இன்ஷித், வெளியே கூட எங்கும் செல்லவில்லை. கபிணேஷை அழைத்து குழந்தைகளையும் இலஞ்சிதாவையும் வீட்டில் விட்டுவிடுமாறு கூறிவிட்டு, குழந்தைகளுக்கு தற்காப்பு கலைகளை கற்றுக் கொடுக்க ஆரம்பிக்குமாறும் கூறி வைத்து விட்டான். பாலுவிற்கு அழைத்து கடையை பார்த்துக் கொள்ளுமாறு கூறியவன், அவனுக்கு இன்னும் நிறைய தொழில்கள் இருப்பது அவருக்கு தெரியும், அதனால் அவரும் சரி என்று வைத்து விட்டார். இரவு இதிகா வளமை போல் அழைத்தவள் வார்த்தைக்கு வார்த்தை தன் கபி சித் சொல்லிக் கொடுத்தவைகளையும், கபிணேஷிடம் இரினாவின் நடவடிக்கைகளையும் கூறி சிரித்து விட்டு வைத்து விட்டால் .தன் நண்பன் மற்றும் அவனின் குடும்பத்தின் ஆண்களின் நடவடிக்கையால் அவளின் நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்று நினைத்தவன், இதனால் தானே நானும் திருமணம் செய்து கொள்ள அஞ்சுகிறேன்.

என்னால் வருபவளை முழு மனதோடு காதலித்து, அனுசரித்து குடும்பம் நடத்தி குழந்தைகளை பெற்று, அவர்களை வளர்த்து ,என்று நினைக்கும் போதே, தன் தந்தை விட்டுப் போன போது சுற்றத்தினர் கூறிய வசை மொழி அவன் காதுகளில் இன்னும் கேட்கிறது. “ நூலைப்போல சேலை, தாயைப்போல மகள், தந்தையைப் போல மகன், இவள் இன்று தனியே நிற்கதியாக நிற்பது போல் ,நாளை மகனும் செய்வான், என்று எதிரொலிக்க , “நோ, வேண்டாம் இந்த விஷப்பரிட்சை. இதற்கு ஏதாவது மாற்று ஏற்பாடு செய்வோம்”, என்று தன் இலங்கை நண்பன் அனேகனுக்கு அழைத்தான்.

அவனும் அந்த முகாமில் தான் இருந்தான். இப்போது ஐந்து ஆண்டுகளாக இலங்கையில் இருக்கிறான். அங்கேயே அவனுக்கு திருமணம் ஆகி விட, விவசாயத்தைப் பற்றுக் கொள்ளாக பற்றி கொண்டு, இன்று நல்ல நிலைமையிலும் இருக்கிறான்.

“ சொல்லுடா என்ன அதிசயமாக கூப்பிட்டு இருக்கிறாய்”, என்று அனேகன் எந்த ஒரு முகவரையும் இன்றி கேட்க, இன்ஷித் முகத்தில் மெல்லிய முறுவல். அவனுக்கு இதுதான் பிடிக்கும். அனைத்தையும் கூறி முடித்து தன் நிலைப்பாட்டையும் கூறி என்ன செய்ய என்று அவன் கேட்க, “ ஏன்டா வயது எறுகிறது தானே ,அம்மா சொல்வதைப்போல்”, என்று அவன் ஆரம்பிக்க, “ இல்லைடா திருமணம் இருமனம் ஒத்து நடைபெற வேண்டும். ஒரு குடியுரிமைக்காக என்றால் மனது ஏற்கவில்லை .அது போக என்னால் பழசை மறக்கவும் முடியவில்லை”, என்றான் தெளிவாக . இவ்வளவு தெளிவாக இருப்பவனை என்ன சொல்லி மாற்றுவது என்று நினைத்தவன், “ சரிதான் நீ உன்னுடைய சான்றிதழ்களையும் மற்றும் உனது கோரிக்கைகளையும் அனைத்தையும் அனுப்பு. இங்கே அனைத்தையும் சரி செய்துவிட்டு, நீ ஒரு பத்து நாள் வந்து மட்டும் போகுமாறு சரி செய்து உனக்கு கூப்பிடுகிறேன்”, என்று வைத்து விட்டான்.

காலையில் எழுந்த இன்ஷித் மிகவும் பக்குவமாக தன் தாய்க்கும் தம்பியிடமும் தன் உண்மையான நிலைப்பாட்டை கூறி ,இன்று இன்பாவை இழந்து, அந்த குடும்பம் படம் பாட்டை கூறி, தனக்கு இன்னொரு வாழ்வு அமைந்தால் அவர்களை பார்க்க முடியாது, என்று கூறி கபிணேஷை அவன் வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு செல்லுமாறு கூறி சென்றுவிட்டான். யசோதை மகனின் விடாப்படியான பேச்சில், கவலையின் உச்சத்திற்கு செல்ல, “ அம்மா கவலைப்பட வேண்டாம் அவன் முடிவு தெரிந்தது தானே, பாரத்தை ஆண்டவர் மீது போடுங்கள். அவருக்கானவர்கள் பிறந்து இருப்பார்கள் தானே, அவர்களை பார்க்கும்போது அவர் முடிவில் ஒரு மாற்றம் ஏற்படும்”,என்று கபிணேஷ் கூறி, அவரை தேற்றி தன் அலுவலை நோக்கி சென்றான்.

கண்ணன் இன்ஷித்துக்கு என்ன பிரச்சனை கொடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்க, இன்பாவிற்கோ இவன் இன்ஷித்திற்கு ஏதாவது செய்யும் முன் இவனை நாம் ஒரு வழி செய்ய வேண்டும் என்று நினைத்தவன், கண்ணன் அரவை மில்லில் ஓடும் அரவை இயந்திரத்தில் ஒரு கோளாறு உருவாக்கி அரவையை நிப்பாட்டி வைத்தான். ஒரு இயந்திரம் மட்டுமல்ல அனைத்தும் ஒன்று சொன்னது போல் ஓடாமல் நிற்க, இன்பா நினைத்தது போல் கண்ணன் அந்த பிரச்சினையை சரி செய்ய அதில் மும்மரமாகினான். கண்ணனின் கைப்பேசி விடாமல் அழைக்க, அது அலுவல் அறையிலே கிடக்க அவன் இருந்த பிரச்சனையில் சார்ஜ் போட்ட கைபேசியை மறந்து போயினான்.

சிவா அழைத்துக் கொண்டே இருக்க, அதை பார்த்த இன்பாவிற்கு ஒரு யோசனை தோன்ற, கண்ணனின் குரலில் அவனிடம் பேச ஆரம்பித்தான்.

“ சிவா இங்கே நான் அனைத்தையும், உன் தங்கையிடம் சொல்லிவிட்டேன். அவள் மகனை அழைத்து வரச் சொன்னால், நீ சொன்னது போல அவள் எதுவும் ஆர்ப்பாட்டம் செய்யவில்லை என்று கூறி, நீ வந்து சேரு அவனோடு”, என்று கூறி சிவாவிற்கு எந்த ஒரு சந்தேகம் வராதவாறு பேசி அவனை பிளாக் செய்து விட்டு, அழைப்பு வந்ததற்கு எந்த ஒரு தடையும் இல்லாமல் அழித்து வைத்து விட்டான்.

“ மாமா இருடா இனிமேல்தான் உனக்கு இருக்கு, பலமான மாப்பிள்ளை உபசரிப்பு”, என்று தான் நினைத்ததை செய்து விட்டு வெற்றி சிரிப்புடன் இன்பா நினைத்துக் கொண்டிருக்க, பிறகு சிவாவிற்கு இவன் அழைத்தால் குட்டு வெளிப்பட்டு விடுமே என்று நினைத்தவன், மின்சாரத்தின் அளவை கூட்டி கைபேசி மீது அது பாய , பாவம் எந்த ஒரு தவறும் செய்யாமல் சத்தமின்றி கைபேசி தன் இறுதி மூச்சை விட்டது.

ஒரு வழியாக அனைத்தையும் முடித்து அரவை இயந்திரம் ஓட ஆரம்பித்தவுடன் அலுவல் அறைக்கு வந்த, கண்ணனுக்கு மூச்சின்றி கிடந்த கைபேசி தான் வரவேற்றது. அதை கண்டவனுக்கு உலகம் சுற்றியது. ஏன்னென்றால் அதில் தானே அவனுக்கு அனைத்து தொழில் தொடர்புகளும் இருக்கிறது. அதை எடுத்துக் கொண்டு samsung சர்வீஸ் ஸ்டேஷனை நோக்கி ஓடினான். அவர்கள் அதை பரிசோதித்து விட்டு ஒரு இரண்டு நாள் அவகாசம் தாருங்கள் அதில் இருக்கும் அனைத்தையும் உங்களுக்கு பென்டிரைவில் காபி செய்து தருகிறோம் என்று கூறினார்கள்.

இவன் சோர்ந்த நடையோடு தன் கார்ரை நோக்கி வர அங்கே எதிரில் ஒரு குடு குடுப்புக்காரன் வந்து நின்றான். இன்பாவின் கெட்ட நேரமோ என்னமோ, “ என்ன சாமி, மறைந்தவனின் ஆத்மா உன் உயிரை வாங்குகிறானா”, என்று அவன் கண்ணனின் மனதை படம் போட்டு காட்ட, கண்ணன் அசையாது நின்று விட்டான்.”நீ முந்தவில்லை, அவன் உன்னை முடித்து விடுவான்”, என்று அவன் கூற, அது ஒன்றே கண்ணனை கிளப்புவதற்கு போதுமானதாக இருந்தது. அவளையும் அழைத்துக் கொண்டு, ஊரில் எல்லையில் அவனுடைய இடத்திற்கு வந்து நிப்பாட்டினான். கண்ணனுக்கு ஆப்பு அடித்த குஷியில் குழந்தைகளை பார்க்க சென்ற இன்பாவிற்கு அவனுக்கு ஏற்பட போகும் தீங்கு தெரியாமல் போனது. அவனது விதியோ ?....

அவனிடம் வெகு நேரம் பேசிவிட்டு அவன் கொடுத்த பொருளையும் வாங்கிக் கொண்டு நேராக எங்கும் செல்லாமல் இன்பாவின் வீட்டிற்கு வந்தான் கண்ணன் .அது மாலை 7 மணி போல் இருக்க பிள்ளைகள் படிக்க ,இலஞ்சிதாவும் கடைக்கணக்கு வழக்குகளை பார்க்க மேலேயே இருந்துவிட்டால். கண்ணன் எப்போதும் போல் மீனாவை மிரட்டி விட்டு ,அவர் அவனுக்கு உண்ண ஏதாவது கொண்டு வர உள்ளே செல்ல, இனிகாவும் தாயைத் தொடர்ந்தாள். கண்ணன் தான் கொண்டு வந்த பொருளை யார் கண்ணுக்கும் தெரியாமல் இன்பாவின் படம் இருக்கும் இடத்தில் மறைத்து வைத்தான். “இன்பா இனிமேல் நீ நினைக்கும் எதுவும் நடக்காது ,இன்று இரவோடு உன்னாட்டம் முடிந்தது”, என்று தனக்குளே பேசி சிரித்துக்கொண்டு, மீனா வரவும் அவர் கொடுத்ததை நல்ல பிள்ளை போல் சாப்பிட்டு விடைபெற்று சென்று விட்டான்.

இலஞ்சிதாவை அழைத்து இவனை எரிச்சல் அடையச் செய்ய வேண்டாம் என்று மீனா நினைத்ததால், அவன் வந்து செய்து விட்டுப் போன செயல் மேலே அவர்களோடு இருந்த இன்பாவிற்கு தெரியாமல் போனது. இரவு உணவுக்கு வந்து இலஞ்சிதா பாலுவிடம் கூட மீனா கண்ணனை பற்றி பேசவில்லை .ஏன்னென்றால் இலக்கியா ஏற்கனவே தன் மாமியார் கூறியவற்றை தன் தாயிடம் பகிர்ந்து இருந்தால்.மேலும் பிள்ளைகள் இலஞ்சிதா பத்திரம் என்று கூறியிருந்தவள் .அவரை நான் பார்த்துக் கொள்கிறேன். நீ என்னை நினைத்து கவலைப்பட வேண்டாம் என்று திடப்படுத்தி இருந்தால். ஆதலால் தேவையில்லாமல் அவர்களை கலங்க விட வேண்டாம் என்று மீனா எதையும் அவர்களுக்கு தெரியப்படுத்தவில்லை. நாளை நடக்கப்போகும் விபரீதம் தெரியாமல்.

தொடரும்
 
Last edited:

Simma

Moderator
அத்தியாயம் 14

இரவு கண்ணன் வீட்டுக்குள் நுழைந்தவன் சந்தோஷமான முகத்தோடு திரிய இலக்கியாவின் மனதில் லேசான பயத்தின் ரேகை ஓடியது. இன்பா தான் செய்த செயலின் முடிவை பார்க்க இலக்கியா வீட்டிற்கு வந்துவிட்டான் .கண்ணன் எதையும் காட்டாமல் சந்தோஷமாகவே உணவை உண்டு விட்டு தொலைக்காட்சி பார்க்க அமர்ந்து விட்டான். அவனின் பெற்றோர் இருவரும் படுக்க சென்றுவிட, இலக்கிய சமையலறையை ஒழுங்கபடுத்த ஆரம்பித்து விட்டால். வீட்டின் அழைப்பு மணி விடாமல் அடிக்க, “ ஏய் இலக்கியா யார் என்று பார், மில் தொழிலாளியன்றால் சாவியை வாங்கி வைத்துக் கொள்”, என்று அவன் தொலைக்காட்சியில் மூழ்கி விட, இன்பாவும் இலக்கியா பின்னே சென்றான்.

இவள் வெளி கதவை திறக்க , அங்கே விமான நிலையத்திலிருந்து வந்திருந்த கார் ஒன்று நின்றிருப்பதை கண்டவள் , யார் என்று பார்ப்பதற்குள், “ பெரியம்மா”, என்று அழைத்துக் கொண்டு ,தன் கணவனின் மறு பின்பமாக ஒரு பாலகன் அவளை கட்டி அணைத்துக் கொண்டான். அவளோ பேச்சு தடை பெற்று முற்றும் முழுதாக மூர்ச்சையாகிப் போனால். அவளுக்கு சந்தேகம் எல்லாம் எழ வில்லை. அந்த பாலகன் பின்னே வந்த சிவாவை தான் அவளுக்கு நன்றாக தெரியுமே. இரண்டும் இரண்டும் சேர்ந்தால் நான்கு என்று சொல்வதற்கு எந்த சாட்சியும் தேவையில்லை தானே .அந்த பாலகனின் குரலில் உள்ளே தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த கண்ணனும் மூர்ச்சை ஆகித்தான் போனான்.

இன்பாவிற்கோ கண்ணன் அகப்பட்டதில் மகிழ்ச்சி தான், ஆனால் தன் அக்காவின் நிலைமையை கண்டபோது அவனால் சமாளிக்க முடியவில்லை. இங்கே எந்த அரவமும் இல்லாமல் போக, கண்ணன் தன் செயலாக எழுந்து வாசலுக்கு வர, கண்ணீர் வழிய நின்று இருந்த தன் மனையாளைக் கண்டவன் சிவாவை தீயேன முறைத்து நின்றான். அதற்குள் கண்ணனின் பெற்றோர் வந்து விடவே, அவர்களுக்கு சொல்லாமலே தெரிந்து போனது மகன் செய்த லீலைகள் . ஆனால் அவன் தாய் மட்டும் எந்த உணர்வு எந்த ஒரு உணர்ச்சியும் காட்டவில்லை. தாய் என்பவள் பிள்ளைகள் எதையும் கூறித்தான் அவர்களின் செயல்பாட்டை அறிய வேண்டும் என்றுமில்லை தானே. நான் இதை எதிர்பார்த்தேன் என்பது போலே நின்று இருந்தார். “என்னடா என்ன செய்து வைத்திருக்கிறாய்”, என்று கண்ணனின் அப்பா அவனிடம் எகிரினார்.

இலக்கியாவை அனைத்து இருந்த பாலகனோ, “ பெரியம்மா திடீர் என்று கிளம்பியதால் உங்களை பார்க்க வந்த சந்தோஷத்தில் எதுவும் சாப்பிடவில்லை .இப்போது எனக்கு பசிக்கிறது”, என்று உணர்வு மறந்து நின்றவளிடம் கூற, அவளுக்கு கண்ணீர் மட்டுமே பெருகி பெருகி வழிந்தது. உயிர் கொள்ளும் வேதனை என்பார்கள் அதுபோல், இன்பா தன் தமக்கையின் நிலை கண்டு அவசரப்பட்டு விட்டோமோ என்று பதறித் தான் போனான். “ சிவா”, என்று கண்ணன் பல்லை கடிக்க, அவனின் கோபம் மிகுந்த முகத்தை கண்ட அவனின் செல்ல மகன் சபரியோ பயந்துதான் போனார்.

“டேய் கண்ணா”, என்ற அவன் தாயின் சத்தத்தில் கண்ணன் அமைதியாகிவிட, “ இலக்கிய முதலில் வந்த பிள்ளையை கவனி. எவ்வளவு பாசத்தோடு உன்னை அரவணைத்திருக்கிறான் பார்த்தாயா, மிச்சதை பிறகு பார்க்கலாம் என்று அவர் அதட்டிக் கூற , சிற்பமாக நின்று இருந்தவளை அது நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது. ஆனால் கண்ணீர் மற்றும் நிற்கவில்லை. அவள் குனிந்து . தன்னை அனைத்து இருந்தவனை பார்க்க அவனோ, “ ஏன் பெரியம்மா அழுகிறீர்கள், உங்களுக்கு என்னை பிடிக்கவில்லையா? அம்மா இறக்கும்போது சொன்னார்களே, நீங்கள் ரொம்ப நல்லவர்கள் என்னை நன்றாக பார்த்துக் கொள்வீர்கள்”, என்று அவன் கண்ணீர் வடிக்க , “ஏனோ அவனுக்கு அன்னை என்பவர் உயிரோடு இல்லை என்று அறிந்தவுடன் இலக்கியா உடம்பில் ஒரு நடுக்கம் ஓட, அது அவளை தள்ளாடச் செய்தது.

அவளையே கண்டு கொண்டிருந்த அனைவரும் பதற, கண்ணன் அவளைப் பிடித்து விட்டான். ஆனால் அதற்குள் சபரி , “அம்மா”, என்று கத்தி அவள் விழுகாதவாறு இறுக்கி அணைத்துக் கொண்டான். கண்ணன் பிடித்திருப்பதை உணர்ந்தவள் நிமிர்ந்து அவனை தீயேன முறைக்க தன்னால் அவன் கை அவளிடம் இருந்து அகன்றது. “ அம்மா பசிக்கிறது” என்று சபரி மீண்டும் கூற, “ இலக்கியா போ அவனை அழைத்து, உள்ளே ஏதாவது செய்து கொடு”, என்று மீண்டும் அவள் மாமியார் அதட்ட கண்ணீரை தனக்குள் விழுங்கிக் கொண்டு அவனை அழைத்து உள்ளே சென்றாள்.

சபரிக்கு எதுவும் தடையாக. இல்லை அவளிடம் பேச, எது எதுவோ கதை சொன்னான். ஆனால் இலக்கியாவிற்கோ அவன் அம்மா என்று சொன்னதில் மட்டுமே தான் அவளுடைய சிந்தை ஓடிக் கொண்டிருந்தது. அதற்குள் சிவாவை உள்ளே அழைத்து, அவனுக்கு படுக்க ஏற்பாடு செய்துவிட்டு, “ சாப்பாடு”, என்று கேட்க அவன் சூழ்நிலையை கருதி வேண்டாம் என்று மறுத்து விட்டு, அறையின் கதவை அடைத்து விட்டு படுத்து விட்டான்.

இப்போது ஓரளவு நடப்புக்கு வந்திருந்த இலக்கியா சபரிக்கு தோசை ஊற்றி சட்னி வைத்து அவனுக்கு கொடுக்க, அவனும் 1000 அம்மா கூறி அவளிடம் இழந்த தாயை தேட ஆரம்பித்து விட்டான். ஊட்டச்சொல்லி அடம்பிடிக்க மறுப்பில்லாமல் அவனுக்கு இலக்கியா ஊட்ட இன்பா கண்ணில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அவனால் இலக்கியாவின் முகத்தில் இருந்தே அவளின் மன வலியை உணர முடிந்தது. தான் சரியாக இருந்திருந்தால் கண்ணனின் தவறை உயிரோடு இருக்கும்போதே கண்டு கொண்டிருக்கலாம் என்று தோண்ற அதுவும் அவன் வலியை கூட்டியது.

அவனின் தந்தை அவனை கடுமையாக சாடி கொண்டிருக்க அனைத்து பேச்சையும் வாங்கிக்கொண்டு இனிமேல் என்ன செய்வது என்று கண்ணன் மௌனமாகவே சிந்தித்துக் கொண்டிருந்தான். அவனின் அருகில் வந்து அவனின் தாய், “ நீ ஏதோ தவறு செய்கிறாய் என்று தெரியும் ,ஆனால் இவ்வளவு கீழ்த்தனமான செயலை செய்வாயென்று நினைக்கவில்லை, இன்று அவன் அன்னை இல்லாததால் இலக்கியாவை சமாளிக்க முடியும். ஆனால் யோசித்துப் பார் இதையே அவள் செய்திருந்தால் மன்னிப்போமா நாம்”, என்று அவனை சாடியவர், “ இலக்கியா வீட்டிற்கு அழைத்து உண்மையை சொல்லுங்கள் மறைக்கக் கூடிய விஷயம் இல்லை .அவளின் சித்தப்பாவிடம் சொல்லுங்கள் ,ஏற்கனவே மணி பதினொன்றை தாண்டியது, பாலு அண்ணாவை தொந்தரவு செய்ய வேண்டாம் , அவரை பாலு அண்ணாவிடம் சொல்லி வரச் சொல்லுங்கள்”, என்று தன் கணவனிடம் பொறுப்பான அந்த வீட்டு தலைவியாக அவர் கூறினார்.

எதையும் மறுத்து பேசும் நிலையில் கண்ணன் இல்லை. தலைக்கு மேல் வெள்ளம் போகின்றது. இனிமேல் தலை போனால் என்ன முலம் போனால் என்ன .முதலில் விஷயம் அறிந்து வேலு கத்த பின் அவரை பேசிய சமாளித்த கண்ணனின் தந்தை நாளை நேரில் இலக்கியாவின் பெற்றோரை அழைத்து வருமாறு பணிந்து விட்டு கைபேசியை அணைத்துவிட்டார். “காலன் வந்து பிடிக்கப் போகும் இந்த காலகட்டத்தில் எனக்கு இந்த அவமானம் தேவைதான்”, என்ற தலையில் அடித்துக் கொண்டு அவருடைய அறைக்கு சென்று விட்டார் அவனின் தந்தை. அதற்குள் சபரி சாப்பிட்டு முடித்திருக்க இலக்கியாவை அழைத்துக் கொண்டு முன்னறைக்கு வந்தவன், அவள் சோபாவில் தோய்ந்தமர அதிலேயே அவளின் மடியில் தலையை வைத்து படுத்து விட்டான். அவள் கை தன்னால அவன் சிகையை வருட சபரி கண் அசந்தான் .

இதை கண்ணன் இன்பா மற்றும் அவனின் அன்னை மௌனமாகவே பார்த்துக் கொண்டிருந்தனர். “ தூங்கி விட்டான். அவனை தூக்கிக் கொண்டு போய் அப்பாவின் அருகில் படுக்க போடு”, என்று அவனின் தாய் கட்டளையிட, கண்ணன் சபரியை தூக்க, அது முடியாமல் போக கண்ணன் என்னவென்று பார்க்க ,இலக்கியாவின் முந்தானையை இருக்க பற்றி இருந்தான் சபரி. அவனின் இந்த செயலில் மேலும் இலக்கியாவின் கண்ணீர் வடிய, அவளின் அருகே வந்த அவளின் மாமியார் அந்த சேலையை விடுவிக்க ,கண்ணன் சபரியை தூக்கிக் கொண்டு அவர் சொன்னதை செய்தான்.

“நீ என்ன முடிவு எடுத்தாலும் எனக்கு முழு சம்பந்தம் தான் இலக்கியா .ஆனால் ஒன்றே ஒன்று இப்போதுதான் இன்பாவை இழந்து இருக்கிறார்கள். எது செய்வதானாலும் ஒன்று இரண்டு முறை யோசித்து செய். சண்டையிடுவதற்கும் அந்த பெண்ணும் உயிரோடு இல்லை போல, என்னை கேட்டால் இங்கேயே இருந்து அவனுக்கு தண்டனை கொடுப்பது புத்திசாலித்தனம்”, என்றவர், “ இது உங்கள் பிரச்சனை பேசி தீர்த்தாலும் சரி, பேசாமல் தீர்த்தாலும் சரி, நாளை வருபவர்களை காயப்படுத்தாதே, இனியும் இன்பா குடும்பத்திற்கு ஏதாவது ஒரு பங்கம் விளைவிக்கும் செயல் நீ செய்தாய் அதை நான் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன் கண்ணா”, என்று கூறிவிட்டு ,கணவன் மனைவிக்கு தனிமை கொடுத்துவிட்டு அவர் சென்று விட்டார்.

இவன், “ இலக்கியா”, என்று அவளிடம் நெருங்க, இரு கரங்களைக் கொண்டு அவனை கையெடுத்துக் கும்பிட்டு அவர்களின் அறைக்குள் சென்று தாளிட்டு கொண்டவள், பின்பு கத்தி அழுது தீர்த்தாள். அவளின் அருகிலேயே அமர்ந்து இன்பா மென்மையாக ஊதி அவளை தேற்ற முயன்றான், ஆனால் அவனால் ஒன்று முடியவில்லை. அவள் அழுது கரைந்து ஒரு வழியாக தூங்கிப் போனால். கண்ணன் செய்வது அறியாத வீட்டின் கதவை அடைத்து, முன்னறையிலே படுத்து விட்டான், நாளை விடியல் யாருக்கு என்ன வைத்திருக்கிறதோ என்று யோசித்தவாரே தூங்கி விட்டான் .
தொடரும்

 

Simma

Moderator
அத்தியாயம் 15

அழுது கறைந்து அசந்து உறங்கும் தன் அக்காவையே பார்த்துக் கொண்டிருந்த இன்பாவிற்கு, திடீரென உடம்பெல்லாம் திகு திகுயேன எறிய அந்த இடத்திலிருந்து புறப்பட்டான். தன் வீட்டை அடைந்தவன் தன் படத்தில் தஞ்சம் புகுந்தான். அடுத்த நாள் காலையிலே வினோத்துடன் வேலு பாலு வீட்டிற்கு வந்துவிட , இவ்வளவு காலையில் அதுவும் தம்பியை நேரில் வந்து இருக்க, பாலு மீனா பதறித்தான் போகினர்.



“ என்ன தம்பி”, “ என்னடா”, என்று அவர்கள் பதற்றம் நிறைந்த குரலில் இலஞ்சிதாவும் வந்துவிட, “ அய்யோ அண்ணா, அண்ணி ஒன்றும் இல்லை. நான் இருக்கிறேன். நீங்கள் பதற்றம் வேண்டாம்”,என்று அவர்களை அவர் ஆசுவாசப்படுத்த, வினோத்தின் முகமோ பாறையேன இறுகி இருந்தது. தன் உடன் பிறவா விட்டாலும் தனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து தன்னை ஒரு அன்னை போல் தூக்கி வளர்த்தவள் .அவளுக்கு ஒரு குழந்தை இல்லை என்று அவர்களுக்கு மிகவும் கவலை. அதுவும் நேற்று விஷயம் தெரிந்த நொடி முதல், எவ்வளவு அருமையாக நடித்து அனைவரும் முட்டாளாக்கி ,வீட்டில் எவ்வளவு பெரிய உயர்ந்த இடத்தில் வைத்திருந்தோம் அவனை, எவ்வளவு பெரிய துரோகம் அதுவும் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டான். நேற்று இரவே கிளம்பினான் வினோத் அவனை உண்டு இல்லை என்ற ஆக்குவதற்கு .ஆனால் வேலு தான் தடுத்துவிட்டார். “ டேய் பெண்பிள்ளை விஷயம், வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்றெல்லாம் செய்ய முடியாது. முள்ளில் விழுந்த சேலையை போல் பார்த்து பக்குவமாக தான் கையாள வேண்டும் என்று அவனை தடுத்துவிட்டார். இரவில் யாரும் தூங்கவில்லை காலை விடிந்ததும் வந்து விட்டார்கள்.

“ அண்ணா”, என்று ஆரம்பித்த வேலு மடை திறந்த வெள்ளமாக கொட்டி விட்டார். மீனா அதிர்ச்சியில் மயங்கி சரியா, பாலு மூர்ச்சையாகி போனார். மீனாவை தாங்கிய இலஞ்சிதா, வினோத் தண்ணீர் எடுத்து வர அவரை ஆசிவாசப்படுத்தி மயக்கம் தெளியச் செய்தால். “ ஏதோ போதாத நேரம் நடப்பது எல்லாம் தப்பாகவே நடக்கிறது .ஆனால் நாம் திடமாக இருந்தால் தானே பிள்ளைகளை மீட்க முடியும்”, என்று வேலு கூறி, அதில் தெளிந்த மீனா , “மாப்பிள்ளை என்று தலையில் தூக்கி வைத்து ஆடியதற்கு எனக்கு தேவைதான்”, என்று புலம்ப ஆரம்பித்தார் .

பாலு அமைதியாகவே இருக்க, “ அண்ணா”, என்று வேலு அழைக்க, “ தம்பி இன்னும் எத்தனை காண எனக்கு இந்த ஆயிள்”, என்று அவர் பங்குக்கு புலம்ப, “ அண்ணா”, என்று அவர் அதட்டி, “ பேத்திகளை நினைத்துப் பாருங்கள்”, என்று அவருக்கு அவரின் இருப்பின் அவசியத்தை உணர்த்தி, “ நான் வீட்டிற்கு போய் கிளம்பி வருகிறேன் ,ஒரு எட்டு பொய் இலக்கியா என்ன முடிவு எடுத்திருக்கிறாள் என்று பார்த்து வருவோம் ,கிளம்பி இருங்கள்”, என்று கூறி இலஞ்சிதாவை பார்த்து சாப்பிட வைக்குமாறு சொல்லிவிட்டு கிளம்பி இருந்தார் .அவர்கள் சென்றதும் இருவரும் அசையாமல் இருக்க அவர்களின் பரிதவிர்ப்பை ஒரு கையாலாக தனத்துடன் கண்களில் கண்ணீருடன் அந்த புகைப்படத்தில் கட்டப்பட்ட கட்டுக்குள் சிறைபிடிக்கப்பட்டு இருந்தான் இன்பா .அந்தக் கட்டை உடைத்து ஏறிய வழி அறியாதவாறு முழித்துக் கொண்டிருந்தான்.

ஒருவாறு இலஞ்சிதா அவர்களை உண்ண வைத்துவிட்டு, அவர்கள் கிளம்ப, இன்ஷித் வருவதற்கு சரியாக இருந்தது. பாலு விஷயத்தை அவனிடம் கூற, “ அப்பா அக்கா என்ன முடிவு எடுக்கிறார்களோ அதையே செய்யுங்கள். அவர்களுக்கு பக்கபலமாக நாம் இருப்போம்”, என்று கூறி பிள்ளைகளை அழைத்துக் கொண்டு பள்ளியை நோக்கி சென்றான். பாலு வராததால் இலஞ்சிதா கடைக்கு செல்லவில்லை வீண்பேச்சை தவிர்ப்பதற்காக. வேலும் வினோத்தும் ஒன்பது மணி போல் வர அவர்களும் கிளம்பினர் மதுரைக்கு இனிதாவும் உடன் சென்று விட்டாள்.

சமையலறையில் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, இவளும் குளித்துவிட்டு வந்து சாப்பிட்டால். பின் செய்வது ஒன்றும் இல்லாது இருக்க முன்னறையில் அமர்ந்து பழையதை சிந்தித்துக் கொண்டிருந்தாள். சிந்தனையாவும் இன்பாவை சுற்றிய வர, என்ன இன்று ஏதோ குறைகிறதே, எப்போதும் அவருடைய இருப்பை உணர முடியும், ஆனால் இன்று ஏனோ அவர் அருகில் இல்லை என்பது போல் இருக்கிறது என்று நினைக்க, பின் தன் தலையை ஒரு கொட்டு கொட்டிக்கொண்டு அவர் இல்லை குழந்தைகள்தான் இனி என்று தனக்குத்தானே கூறிக்கொண்டு, அப்படியே கண் அசைந்து விட்டால். எவ்வளவு நேரம் தூங்கினாலோ அழைப்பு மணியின் ஓசையில் தான் கண் விழித்தால் .

மணியை பார்க்க அது ஒன்றை என்று காட்ட, மீண்டும் அழைப்பு மணிவிடாமல் அடிக்க யார் என்று கேட்டுக் கொண்டே ,கதவை திறந்தால். அவள் யார் என்று சுதாரித்து, கதவை அடைப்பதற்குள், “ என்ன இலஞ்சிதா தனிமையில் இனிமை காண்கிறாயா”, என்று கூறி வீட்டிற்குள் நுழைந்து இருந்தான் ராஜேஷ். இவளுக்கு மனதிற்குள் பயம் தலை தூக்கினாலும் ,அதை மறைத்துக் கொண்டு, “ எதற்கு வந்தாய்”, என்று அவள் நேரடியாக விஷயத்துக்கு வர , “உனது தனிமைக்கு இனிமை சேர்ப்பதற்கு தான்”, என்றான் கோணல் சிரிப்பாக ராஜேஷ்.

“ நான் உன் அண்ணி, தேவை இல்லாமல் பிரச்சனை செய்யாதே”, என்று அவள் கூற, அதை கேட்கக் கூடிய நிலைமையில் அவன் இருக்கனும் அல்லவா, “ என்ன அண்ணியா ,அது எல்லாம் என் அண்ணன் இருக்கும்போது, இப்போது நீ பொது சொத்து இன்ஷித்திற்கு மட்டும்தான் நீ”, என்று அவன் ஏதோ அருவருப்பாக கூற வர, “ வாயை மூடு”,என்றால் தன் பொறுமையை கடந்த குரலில், “ ஓ வந்த செயலை பார்க்காமல், வாய் மட்டும் பேசுகிறேன் என்று கூறுகிறாயா”, என்று அவன் அருகில் வர ,புயலென பாய்ந்து, மேஜையில் மேல் இருந்த தன் கைபேசியை எடுத்தவள், யாருக்கு அழைக்க என்று அவள் யோசிப்பதற்குள், கைபேசியை தன் கையால் ஓங்கி தட்டி விட்டான் ராஜேஷ்.

“ என்னடி யாருக்கு அழைப்பாய், யாரும் ஊரில் இல்லை என்பது தெரிந்த தானே வந்து இருக்கிறேன், ஒழுங்காக எனக்கு ஒத்துழைப்பு தந்தாய் என்றால் சேதாரம் உனக்கு இருக்காது. நமக்குள் முடிந்து போகும்”, என்று கூறி கதவை அடைத்தவன் ,அருகில் வர, துடிதுடித்தான் போனால், ஆனால் இது கவலைப்படும் நேரம் கிடையாது எப்படியாவது தப்பித்தாக வேண்டும் என்று வீட்டினில் ஓட ஆரம்பித்தால். அவனுக்கு தப்பி தப்பி அவள் மானத்தை காப்பாற்றிக் கொள்ள ஓட, அடைத்திருந்த வீட்டிற்குள் அவளால் எவ்வளவு நேரம் தான் ஓட முடியும். அவளின் பரிதவிப்பும் தம்பி ஈனச்செயலையும் கண்டு, அந்த கட்டுக்குள் இருந்த இன்பா “ அய்யோ ஆண்டவனே என் மனைவியை காப்பாத்து என்னால் முடியவில்லை”, என்று அவன் துடிக்க, இலஞ்சிதாவோ , “ராஜேஷ் உன்னை கெஞ்சி கேட்கிறேன், இது தப்பு”, என்று அவனிடம் மன்றாட ஆரம்பித்து இருந்தால்.

மன்றாடிக்கொண்டே அவன் அசந்து நிற்கும் நேரம் வெளி கதவை நோக்கி ஓட, “ என்ன தப்பு மா ,அண்ணன் மனைவி ,என் மனைவி ,என் சொத்து”,என்று அவளைத் தாண்டி சென்று வெளி கதவின் மீது சாய்ந்து அவன் நிற்க தம்பி ஆனவனின் வார்த்தையில் இன்பா சுக்குநூறாக உடைந்து போனான். “டேய் பாவம்டா”, என்று இன்பா கதறிய அந்த நொடி, ராஜேஷ் பறந்து வந்து அவனின் புகைப்படத்தின் காலடியில் விழுந்தான். உடம்பு அவனுக்கு அப்படி ஒரு வலியை கொடுக்க அப்போதுதான் உணர்ந்தான் தான் தாக்கப்பட்டு இருப்பதை.

இலஞ்சிதா வாசலை பார்க்க, வாசல் கதவு சொர்க்கவாசல் திறப்பது போல் திறந்தது .அவள் புயலென வெளியில் ஒட ,அங்கு மலையென கர்ஜிக்கும் சிங்கமாக நின்றிருந்த இன்ஷித் மீது மோதி விழப்போனவளே, அவன் தாங்கி பிடித்தான் .அவள் உடம்பில் ஒரு நடுக்கம் ஒட அதை உணர்ந்தவன், அவளை விடுவித்தான். அதற்குள் ராஜேஷ் எழுந்து நின்று இவனை தாக்க வர, “ எப்படி டா உனக்கு, இவளிடம் நான் நெருங்கும்போது மூக்கு வேர்க்கிறது”, என்று கூறிக் கொண்டே தன் கையை முறுக்கிக் கொண்டு வந்தான். பாவம் வந்தது மட்டும்தான் அவனுக்கு தெரியும், இன்ஷித் தன் முறுக்கேறிய கைகளால் ஓங்கி அவனின் மார்பில் ஒரு குத்து குத்த அப்படியே சுருண்டு விழுந்தான். அதன் பின் அவனை புரட்டி எடுக்க, “அண்ணா போதும் ,செத்து விடப் போகிறான்”, என்று கபிணேஷ் தான் வந்து அவனை ராஜேஷிடம் இருந்து பிரித்து எடுத்தான். இலஞ்சிதா அசையாமல் சோர்ந்து, அங்கே அங்கே சேலை கலைந்து நின்று இருக்க, கபிணேஷ் , “அண்ணி, போய் துணி மாற்றுங்கள்”, என்றான்.

அவள் அவனின் குரலில் சுயத்துக்கு வந்தவள், “ நான் தானே போகிறேன் என்றேனே ,என்னை இது அது என்று பேசி இருக்க வைத்தாயே பார்த்தாயா என் நிலைமையை”, என்று அவளின் முழு கோபத்தையும், இன்ஷித் மேல் கேள்வி கணைகளாக தோடுக்க ஆரம்பித்தால். “ பார் நன்றாக பார், என்னை என்னவெல்லாம் கூறினான் தெரியுமா, அவன்”, என்று ராஜேஷை காட்டி அவள் கூற ,அவனை கொன்றால் என்ன என்பதை யோசிக்க தோன்றியது இன்ஷித்துக்கு. தான் மட்டும் அன்று இரினா சொன்ன பின்பு இலஞ்சிதா அறியாத வண்ணம் அவளின் கைபேசியில் அவசர அழைப்பு செய்து வைக்காமல் இருந்திருந்தால், இன்று நடக்க இருந்த அசம்பாவிதம் தனக்கு தெரியாமல் அல்லவா போயிருக்கும். நல்ல வேலை இவளின் கைபேசி ராஜேஷ் தட்டிவிட்டவுடன் அது கீழே விழுந்து அடுத்த நொடி இன்ஷித் கபிணேஷ் இருவருக்கும் அழைப்பு சென்றது. இவன் அழைப்பை ஏற்றவுடன் அதில் இருவரின் உரையாடல் கேட்க பதறி துடித்து ஓடி வந்தான் .அதனால் தான் அவளை எந்த சேதாரம் இல்லாமல் காப்பாற்ற முடிந்தது என்று நினைத்தான்.

தன் முன்னே புகைப்படத்தில் இருந்த தன் நண்பனை பார்த்து, “ ஏன்டா ஒன்று மாற்றி ஒன்று”, என்று மனதிற்குள் நண்பனோடு உரையாட, இன்பாவிற்கு இன்ஷித் வந்தது ஒரு ஆறுதல் என்றாலும்,” அவனுக்கும் ஏன் இப்படி என்றே தோன்றியது. இதற்கு தீர்வுதான் என்ன”, என்று இருவரும் யோசிக்க, தன் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் நின்றிருந்தவன் அருகில் வந்த இலஞ்சிதா, “ போதுமா உனக்கு சந்தோஷம் தானே, இதற்கு தானே இங்கு இருக்கச் செய்தாய்”, என்று அவனை சரமாரியாக அடிக்க, அவளின் சேலை கலைய, முற்றிலும் உடைந்தால் இலஞ்சிதா.

சூழ்நிலை சரியில்லை என்று உணர்ந்த கபிணேஷ், அங்கே மூர்ச்சியாய் கிடந்த ராஜேஷை தூக்கி வெளியே காரில் போட வெளியே போனான். இன்ஷித் அடிகளை பாமாலையாக வாங்கிக் கொண்டான். அடிபட்ட மனதின் வலி என்று அதை ஏற்றும் கொண்டான் . “அம்மாடி” என்று ஒரு உடைந்த குரல் வெளியே இருந்து கேட்க, இன்ஷித்தை அடித்துக் கொண்டிருந்த கை தன்னால் நின்றது. தன் தாயின் பரிதவிப்பு நிறைந்த குரல், அந்த உடைந்த இலஞ்சிதாவின் மூலையை சென்றடைய , “அம்மா”, என்று ஓடி அவரை அனைத்து கதறிவிட்டால்.

மகளின் நிலைமையும் கபிணேஷ் ராஜேஷை தூக்கி செல்வதை கண்டவருக்கு நடந்திருந்த காரியம் தென்னந் தெளிவாக தெரிந்து போனது. “ போதும் எங்களை விட்டு விடுங்கள், என் பேத்திகளோடு சென்று விடுகிறோம்”, என்று அவர் இன்ஷித்தை நோக்கி இருகரம் கூப்பி நின்றார் .



தொடரும்
 
Last edited:

Simma

Moderator
அத்தியாயம் 16

“ அம்மா நான் தான் வருகிறேன் என்று சொல்கிறேனே ,இதற்கு மேல் என்னால் முடியவில்லை”, என்று இலஞ்சிதா மேற்கொண்டு கதற, அந்த கதறலில் இன்பா பெரிதாக அடிபட்டுப் போனான். இவளின் கதறலில் இரும்பென இறுகி நின்றான் இன்ஷித் கபிணேஷ், “ அண்ணா”, என்று அழைக்க, அதில் மணியைப் பார்த்து இன்ஷித், அது மூன்றையை நெருங்க போக, “ நீ போய் குழந்தைகளை அழைத்துக் கொண்டு நம் வீட்டிற்கு போ, அவர்களுக்கு மாற்றுடையும் எடுத்துக்கொண்டு போ. அம்மாவிடம் சொல்லு அவர்கள் இன்று இரவு அங்குதான்”, என்று அவன் வரிசையாக கட்டளை பிறப்பிக்க, “ ஏன் மறுபடியும் நீ சொன்னதை கேட்பேன் என்று நினைத்தாயா ,நிச்சயம் மாட்டேன். என் குழந்தைகளுக்கு கொடுத்து விடு உங்கள் குடும்பத்திற்கு ஒரு கும்பிடு”, என்று இலஞ்சிதா ஏக வசனத்தில் பேச ஆரம்பிக்க, “ அத்தை வீட்டில் உரிமை பெற்ற ஆட்கள் வரட்டும். இது பெரிய பிசகுதான் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அப்படி எதுவும் நடக்கும் முன் தடுத்து விட்டேனே”, என்று மிகவும் பொருமையாக கூற, “ நீ தடுக்கவில்லை என்றால் இந்நேரம்”, என்று இலஞ்சிதா வெளிப்படையாகவே உடல் நடுங்க ஆரம்பிக்க, இன்பா கண்ணில் ரத்தம் தான் வளிந்தது.

“அண்ணி பொறுமை அதுதான் நாங்கள் வந்துவிட்டோமே”, என்ற கபிணேஷ் கூற, “ எத்தனை நாள் தம்பி ,எதற்கு இப்படி ஒரு சூழ்நிலை ,வேண்டாம், அதுவும் இவளுடன் சேர்த்து பிள்ளைகளும் பெண் பிள்ளைகள், உங்கள் நண்பனை நம்பிய பாவத்திற்கு”, என்று அவர் ஏதோ கூற வர , “அத்தை தயவு செய்து உயிரிழந்தவர்கள் பற்றி பேச வேண்டாம்”, என்றான் ஒரு முடிவாக இன்ஷித்.

“ ஆமாம் அவர்தான் இல்லையே இந்த பேச்சு எதற்கு, கபிணேஷ் குழந்தைகளை அழைத்து வாருங்கள், நான் கிளம்புகிறேன்”, என்று இலஞ்சிதா, அந்த பிடியிலேயே இருக்க, கபிணேஷ் இன்ஷித்தை பார்த்து நின்றான். “ நீங்கள் முதலில் போய் முகத்தை துடைத்து வேறு ஒரு சேலைக்கு மாறி வாருங்கள்”, என்றான் இன்ஷித் இல்லாத பொறுமையை பிடித்துக் கொண்டு, “ எதற்கு இங்கு எதுவும் நடக்காத மாதிரி அவர்களுக்கு காட்டவா, இல்லை அவர்களுக்கு தெரியட்டும், ஆண்கள் எப்படி எல்லாம்”, என்று அவள் இருக்கும் மனநிலைக்கு மொத்தம் ஆண் மக்களையும் வார்த்தையால் கடுமையாக சாட, இன்ஷித்துக்கு கோபம் தலைக்கு தான் ஏறியது.

தன் காலுக்கு அடியில் இருந்த மேஜையில் இருந்த பூஜாடியை கையில் எடுத்தவன், சுவற்றில் விட்டேறிய அது சுக்கு நூறாக தெறிக்க, அதிலிருந்து பூங்கொத்து இன்பா படத்தின் அருகில் இருந்த இலஞ்சிதாவின் தாலி வைத்திருந்த டப்பாவை தட்டி விட ,அது சரியாக இன்ஷித் தோள்களில் வந்து விழுந்தது. அவன் கோபத்தின் மேலும் பயம் எழ இலஞ்சிதா நடுக்கம் அதிகரித்தது. அவளைப் பற்றி இருந்த அவளின் அன்னைக்கு அதை உணர, மெல்ல அவளை தட்டிக் கொடுத்து முதுகை நீவி விட, அவன் தோள்களிலே விழுந்த தாலியை தன் பாக்கெட்டில் போட்டான் இன்ஷித். இதை யாருமே கவனிக்கவில்லை.

“ போதும் இலஞ்சிதா ஏற்கனவே இரினா ஆண்களை சேர்த்துக் கொள்ள மறுக்கிறாள். இதில் இது எல்லாம் அவளுக்கு தெரியக்கூடாது. அதனால் போய் நான் சொன்னதை செய். செய்தால் குழந்தைகளை இங்கே அழைத்து வருவேன் இல்லை என்றால் நீ தனியாகத்தான் எங்கேயும் செல்ல வேண்டும்”, என்று அவன் கோபத்தின் உச்சத்தில் மிரட்டா, அது சற்று வேலை செய்தது.

“ நீ குழந்தைகளை கூட்டிகிட்டு வா நான் எதுவும் சொல்லல நான் போய் விடுகிறேன்”, என்று அவள் பிதற்ற, “ முதலில் போய் சொன்னதை செய் ,கபி அழைத்து வருவான்”, என்று கூறிய இன்ஷித் , அவள் மேலே செல்ல, “ தம்பி”, என்ற அவள் அன்னையின் குரலில், “ அத்தை பாலு அப்பா வரட்டும், ஏற்கனவே சில பிரச்சினைகள்”, என்று கூறியவன் கண்ணனின் நடவடிக்கை கூற, அதற்கு அவரோ, “ சரி ஆனால் அதற்காக என் மகள் எனக்கு முக்கியமே”, என்று சொல்லி மேலே சென்று விட்டார்.

இன்ஷித்துக்கு தெரிந்து போனது, இவர் அழைத்து செல்வதில் உறுதியாக இருக்கிறார் என்றும், முதலில் இவளே செல்வதில்தானே இருக்கிறாள் என்று நினைத்தவன், கபிணேஷிடம் , “குழந்தைகளை அம்மாவிடம் ஒப்படைத்துவிட்டு வா ,அந்த நாய்”, என்று ராஜேஷை பற்றி கேட்க, “ அண்ணா இது போதாது அவனுக்கு, மயக்கம் தெளியட்டும் நான் நன்றாக கவனித்து விட்டு பின் அனுப்பலாம்”, என்று கூறி விடைபெற்று சென்று விட்டான். இன்ஷித் பாறை என இறுகி அமர்ந்தவன். வேலுக்கு அழைத்தான்.

இன்பாவோ இவள் இங்கு இருந்து போவதற்குதான் நான் இந்த பாடுபட்டேனா ,அவள் இங்கு இருக்கிறது தானே மரியாதை, குழந்தைகள் இங்க இருப்பது தானே, நம் வீடு என்ற உரிமையை வரும் .மேலும் இந்த இப்படி ஒரு சூழ்நிலையில் இங்கு இருந்து போனால் இரினா வாழ்நாளில் ஒரு ஆண்மகனை ஏற்எடுத்துக் கூட பார்க்க மாட்டாள். பின்னால் வாழ்க்கை மலருவது எப்படி. இன்பா குடித்துவிட்டு எப்போதும் ஆடும் போதும், மறுநாளும் இலஞ்சிதா அவனிடம் விடாமல் சொல்வது இதைத்தான் தகப்பன் என்பவன் பெண் குழந்தைகளின் முதல் ஆண் நண்பன். அவன் சரியாக இல்லை என்றால் அவள் இன்னொரு ஆண்மகனை ஏற்றுக்கொள்வது மிகவும் கடினம். அவளின் தவிப்பு இப்போது இன்பாவுக்கு புரிந்தது. இப்போ மட்டும் அவள் இந்நிலையில் தாயின் வீட்டிற்கு குழந்தைகளை அழைத்துச் சென்றால் இரினா மட்டுமல்ல இதிகா கூட எந்த ஒரு ஆண் மகனையும் தன்கிட்டே கூட நெருங்க விட மாட்டார்கள், என்று நினைத்தவன் இதை தடுத்து நிறுத்தவாது இந்த கட்டில் இருந்து வெளிவர வேண்டுமே என்ற தவிக்க ஆரம்பித்தான்.

காலையில் எழுந்த இலக்கியாவிற்கு தலை பாரமாக இருக்க ,அப்போதுதான் நிதர்சனம் புரிந்தது ஒருவகையான வெறுமையும் மனச்சோர்வும் உண்டாக ,எழுந்து என்ன செய்ய ,கணவனின் நம்பிக்கை துரோகம் கண்ணில் ஆட தலையை பிடித்துக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டால். சற்று நேரத்தில் கதவு தட்டப்பட ,அந்த ஓசையில் எழுந்து வந்தவள் , கதவை திறந்தால். “ ஏன் அம்மா என்கூட படுக்கல”, என்று தாவி வந்து அனைத்து கொண்டான் சபரி. அவளுக்கு மெல்லிய சிளிர்ப்பு. தம்பி தங்கைகள் குழந்தைகளை தொட்டு தூக்கும்போது கூட இப்படி உணர்ந்ததில்லை. அவன் அம்மா எனும் போது, இவ்வளவு நாள் குழந்தை இல்லை ,மலடி என்ற வெவ்வேறு பேச்சுக்கள், கணவன் தேளாக கொட்டியது ,அதனால் உண்டான மனதின் வெப்பங்கள், குமுறல்கள் அனைத்தும் தனித்து ஒரு குளுமை அடைவதை உணர்ந்தால்.

அப்பொழுது தான் தன் மாமியார் சொன்னது நினைவு வந்தது, “ இன்பாவின் ஆத்மா இன்னும் சாந்தி அடையவில்லை, ஒருவேளை உனக்கு அது ஒரு பிள்ளையை கொடுக்கத்தான் என்னவோ”, என்றது அவள் காதில் ஒலிக்க, முழு மனதாக தன் தம்பி தனக்கு கொடுத்த குழந்தையாகவே அவனை ஏற்றுக் கொண்டாள்?. என்னதான் இது கணவனின் துரோகத்தின் சாயல் என்றாலும் இந்த குழந்தையின் மனதை கஷ்டப்படுத்த எண்ணவில்லை. அவனுக்கு அன்னை இல்லை என்ற ஒன்றே போதுமானதாக இருந்தது .

“அம்மா” ,என்று மறுபடியும் அவளை நிகழ்காலத்திற்கு அழைத்து வந்தவனிடம், “ இனிமேல் ஒன்றாக படுக்கலாம், ஐயா ஆயாவிற்கு ஆசை இருக்கும் தானே அதனால் தான், வேறு ஒன்றும் இல்லை”, என்று கூறி அவனுடைய காலை கடன்களை அனைத்தையும் முடிக்க அவனுக்கு உதவி செய்துவிட்டு, அவனுக்கு என்ன பிடிக்கும் என்று கேட்டு பூரியும் கறி பிரட்டலும் செய்து கொடுத்தால். மறந்தும் கூட யாரிடமும் எதுவும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. கண்ணனை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.

திருமணமான இத்தனை வருடத்தில் அவள் ஒருமுறை கூட இப்படி முகத்தை திருப்பியது கிடையாது .அவன் எவ்வளவு தேலாக கொட்டினாலும், பாம்பாக சீறினாலும், அவள் அவளாகவே வந்து பேசுவாள். வேண்டியதை பார்த்து பார்த்து செய்வால். குழந்தையிடம் முகம் திருப்பாதது மிகவும் திருப்தியாகவே இருந்தது. ஆனாலும் அவள் கோபத்தின் அளவு புரிய ,செய்த துரோகத்திற்கான அறுவடையை செய்துதானே ஆகவேண்டும் என்று நினைத்து, தன் அன்றாட வேலைகளை கவனிக்க சென்றான் .எப்படியும் இங்கு இன்றைக்கு ஒரு பஞ்சாயத்து இருக்கு என்று அவனுக்கு தெரியும், இந்த கலவரத்தில் அவனுக்கு இன்பாவைக் கட்டியது மறந்தே போனது.

11 மணி போல் இலக்கியா வீட்டு ஆட்கள் வர, அவர்கள் கண்டது இலக்கியா மடியில் தலை வைத்து உறங்கிக் கொண்டிருந்த சபரியைத்தான். அவளும் அவன் தலையை வருடிக் கொண்டிருப்பதை பார்த்த மீனாவுக்கு கண்கள் சிவந்து கண்ணீர் பெருகியது. மகள் முகத்தில் நிறைந்திருந்த தாய்மை, அவள் அந்த குழந்தையை முழுமனதாக ஏற்றுக் கொண்டாள் என்பதை அங்கு இருந்த அனைவருக்கும் புரிந்தது போனது. வேலுவுக்கும் பாலுக்கும் அப்பாடி என்று இருந்தது. வினோதால் சற்றென்று மாற முடியவில்லை .அவர்கள் பின்னே கண்ணன் வரும் அரவம் கேட்க ,சற்றென அவன் மீது பாய்ந்த வினோத், அவன் சட்டையை கொத்தாக பிடித்து, “ என்ன கேட்க யாரும் இல்லை என்று நினைத்தீர்களா, எவ்வளவு உயரத்தில் மதிப்பும் மிக்க இடத்தில் உங்களை வைத்து இருந்தோம், இப்படி செய்து விட்டீர்களே ,அவளோடு பிறந்தவன் இல்லாமல் போகலாம். அவள் எனக்கு இன்னொரு தாய்”, என்று கண்ணனை உலுக்க, தன்னைவிட எப்படியும் ஒரு 20 வயது இளையவன், தன்னை கேள்வி கேட்கும் படி நடந்து கொண்டோமே ,என்ற முதல்முறையாக எதுவும் பேசாதவாறு வெட்கி தலை குனிந்தான்.


தொடரும்
 
Last edited:

Simma

Moderator
அத்தியாயம் 17

அதற்குள் வேலு வினோத்தின் கையை பற்றி அவனை அவரிடம் இருந்து பிரிக்க, அவரை நிமிர்ந்து பார்த்தான் கண்ணன், “ இன்பா போன போது கூட ,என் அண்ணனுக்கு ஒரு மகனைப் போல் பக்கபலமாக நின்று துணை இருப்பீர்கள் என்ற நம்பினேன், ஆனால் இப்படி எங்களுக்கு துரோகம் நினைப்பீர்கள் என்று எண்ணவில்லை”, என்று வேலு கடுமையாக சாடினார். அதற்குள் கண்ணனின் அம்மா வந்து, “ உள்ளே வாருங்கள், தயவுசெய்து வீட்டு விசயம், வெளியே வேண்டாம் இலக்கியாவிற்காக”, என்று நயமாக பேசி உள்ளே அழைத்தார். வந்தவர்களை அமரச் செய்து, “ கண்ணனா பிள்ளையை தூக்கி படுக்க போடு என் அறையில், அப்பாவை அழைத்துக் கொண்டு வா”, என்றவர் வந்தவர்களுக்கு குடிக்க கொடுத்தார்.

மீனா இலக்கிய அருகில் வந்து அமர ,அவரின் மடியில் படுத்த கனமே கண்ணீர் வளிந்தது. வேலு பாலு அமைதியாகவே இருந்தனர். சற்று அவள் பாரம் இறங்கட்டும் என்று அமைதி காத்தனர். வினோத்துக்கு கோபம் தனியவில்லை .கண்ணன் மற்றும் அவனின் அப்பா வந்து அமர, “ டேய் இலக்கியா”, என்று வேலு அழைக்க தன்னை சமாளித்து எழுந்த அமர்ந்து கொண்டாள்.

“ இங்கு பார்க்கும்போது நீ குழந்தையை ஏற்றுக் கொண்டது தெரிகிறது .ஆனால் இது ஒரு சவாலான காரியம் .அது குழந்தை சரி, நாளை வளர்ந்தாலும் அவனுக்கு தெரியும், நீ பெற்றவள் இல்லை என்பது, இன்று அவனுக்கு புரியாதது ,அனைத்தும் நாளைக்கு அவனுக்கு புரியும். அது போக மனித மனம் ஒரு குரங்கு மாதிரி”, என்ற நாளைய தினத்தின் உண்மையை அவளுக்கு எடுத்துக்காட்ட, “ புரிகிறது சித்தப்பா, அனைத்தையும் யோசித்து விட்டேன் .இது என் தம்பி எனக்கு கொடுத்த பரிசாகவே பார்க்கிறேன். அதற்காக அவர் துரோகத்தை மன்னிக்கவில்லை. ஆனால் இங்கு இருந்து வரப்போவதில்லை .எனது மகனாக வளர்ப்பேன். எனது அன்பு நாளைய பிரச்சினைக்கு ஒரு முடிவு கொடுக்கும்”, என்றால் தெளிவாக.

“ பார்த்தீர்களா பைத்தியக்காரியை, நீங்கள் என்ன செய்தாலும் சொன்னாலும் அதை இதுவரை சரியா தப்பா என்று யோசிக்க தெரியாதவள். உங்கள் மீது அவ்வளவு அன்பு . எனக்கு தெரியும் ,உங்கள் மீது ஏதோ தவறு இருக்கிறது என்று, ஆனால் பணிந்து போனோம், ஏன் என் பெண்ணின் சந்தோஷத்திற்காக”, என்று பாலு கண்ணனை கடுமையாக சாடினார்.

“ உனக்கு எதற்கு இந்த தலைவிதி யாரோ”, என்று வினோத் கத்த ஆரம்பிக்க , “வினோ, அவன் என் வயிற்று பிறக்கவில்லை, ஆனால் என்னை அம்மா என்று அழைத்து என் மனதால் பிறந்தவன்”, என்று தம்பியை அடக்கினாள். ஒருவாறு வேலு பாலு கண்ணனை கண்டித்து பேசிய தீர்த்தனர்.

மதியம் சாப்பிடா சபரி எழுந்தவன், இலக்கியா பின்னே அலைய ,அவர்கள் மனதும் குளிர்ந்து தான் போனது. இலக்கியா அனைவரையும் அழைக்கும் முறை சொல்லிக் கொடுக்க ,அவன் அதை அழகாக பின்பற்றினான். நன்றாக தான் இருந்தது இன்ஷித் அழைக்கும் வரை. கண்ணன் சிவாவோடு வெளியே சென்று இருந்ததால் அது தெரியாமல் போனது.

வேலு தனியா வெளியே வந்தவர், “ என்ன இன்ஷித் எதுவும் பிரச்சனையா”, என்றார் ஏனென்றால் இன்ஷித் சும்மா அழைப்பவன் இல்லை. “ சித்தப்பா”, என்று அழைத்தவன் ,எந்த ஒரு பூச்சும் இல்லாமல், முதலில் இருந்து ராஜேஷ் நடவடிக்கையும், இப்போது நடந்தவற்றையும் கூறி, இப்போது இலஞ்சிதா மற்றும் அவள் தாயின் நடவடிக்கை அனைத்தையும் கூறி முடித்தான். “ குழந்தைகள்”, என்று அவர் கேட்க, “ என் அம்மாவிடம்”, என்று கூறினான். “ நாங்கள் வரும் வரை அங்கேயே இரு, அந்த நாய்”, என்று அவர் தன் அண்ணன் மகனின் செயலில் வெட்கி கேட்க, “ கபிணேஷ் பார்வையில் இருக்கிறான்”, என்று முடித்தான்.

“ அவன் அப்பா என் அண்ணன் சௌந்தர் இல்லை, இருந்திருந்தால் நானே உண்டு இல்லை என்றாக்கி இருப்பேன். ஈஸ்வரி அண்ணி தான் ஒரு மகன் என்று தலையில் வைத்து ஆடி அவன் தப்புக்கு துணை போய் ,அது எங்கே கொண்டு வந்து விட்டது .அவன் கபியிடமே இருக்கட்டும்”, என்று ராஜேஷை சாடியவர் கைபேசியை அனைத்துவிட்டு உள்ளே சென்றார்.

“ இலக்கியா”, என்று அழைத்தவர், “ அம்மாடி உன் மனதில் இருப்பதை மறையாமல் ,அப்பா அம்மா கவலைப்படுவார்கள் என்று எல்லாம் எண்ணாமல் சொல், என்ன முடிவு செய்திருக்கிறாய்”, என்று கேட்டார் ஒரு பொறுப்பான சித்தப்பாவாக. சித்தப்பா, சிற்றப்பன், சின்ன தகப்பன், தகப்பனுக்கு கூறிய அத்தனை பொறுப்புகளும் இவனுக்கும் உண்டு. “ சித்தப்பா உங்களிடம் மறைப்பேனா அப்பாவை விட நீங்கள் தானே எங்கள் எல்லோரையும் தூக்கி வளர்த்தீர்கள். குழந்தையை நான் தான் வளர்ப்பேன். தம்பி படையல் முடியட்டும் சட்டப்படி தத்தெடுத்து கொள்கிறேன்”, என்று அவள் கூற .அவர், “ மா”, என்று ஆரம்பித்தவர் ,அப்படி கூப்பிட வாய் கூச , “விடுங்கள் சித்தப்பா , பெரிய நம்பிக்கை துரோகம் தான் நமக்கு. ஆனால் 20 வருடம் ஆகிவிட்டது, இனிமேல் நீதிமன்றம் படியேறி நான் என்ன காணப் போகிறேன். அதுவும் இல்லாமல் என் மகனுக்காக அவர் இருந்துவிட்டுப் போகட்டும். காலம் என் மனக்கயத்தை ஆற்றும்”, என்று முடித்துவிட்டால் அவள் தெளிவாக இருக்கவும் இலக்கியா , “மற்றொரு விஷயம்”, என்றவர் இன்ஷித் சொன்னதை சொல்லி முடிக்க, அவள் அதிர்ந்த வீட்டால்.

“ பாவம் சித்தப்பா அவள், தம்பி இருந்த போதும் போராட்டம் தான் என்னையாவது அவர் நடித்து, அப்போ அப்போ நல்லா வைத்திருப்பார். ஆனால் அவளோ எந்நேரமும் போராட்டம் தான். ஏன் சித்தப்பா நன்றாக தானே இவர்களை வளர்த்தோம். ஒருத்தன் குடியால் இப்போது தானே இழந்தோம். அதற்குள் இன்னொருவன் இவ்வளவு இழிவாக இறங்கிவிட்டானே”, என்று வேதனை பட , “நடந்தது நடந்து விட்டது. எப்படியோ இன்ஷீத் கபிணேஷ் காப்பாற்றி விட்டார்கள். இலஞ்சிதா அன்னை வேறு சரியாக அந்நேரம் வந்து விட்டார் போல, இப்பவே குழந்தைகளை தாருங்கள் நாங்கள் செல்கிறோம் என்கிறார். இலஞ்சிதா முற்றும் பயந்து போய் செல்ல தயாராக இருக்கிறாள் போல். நாம் வரும்வரை இவன் பிடித்து வைத்திருப்பான். ரொம்பவும் நல்ல பிள்ளை நம் இன்பவால் நமக்கு கிடைத்த முத்து. அவன் என் அண்ணனையும் இன்பாவின் பிள்ளைகளையும் அவ்வளவு தாங்குகிறான். அருமையான வளர்ப்பு .அண்ணன் தம்பி இருவருமே இருதூண் போல் இன்பா குடும்பத்தையும் தாங்குகிறார்கள். என்ன கோபம் தான் ரொம்ப வரும்”, என்றார் பெறுமையாக .

“ஆமாம் சித்தப்பா ,நான் கூட இன்பா இவனை சிறு வயதில் கூட்டிக்கொண்டு சுத்தும்போது திட்டுவேன். எனக்கு பிடிக்காது ஏதோ ஒரு முகச்சுளிப்பு .ஆனால் இன்று அவனால் தான் தொழிளில் இவ்வளவு வளர்ச்சி ,இப்போ அப்பா அம்மா கூட சற்று இன்பா இழந்ததில் இருந்து மீண்?டுவருவற்கும் அவன் தான் காரணம். சும்மாவா சொன்னார்கள் வெளியே கேள்விப்படுவதை வைத்து தோற்றத்தை வைத்தோ, எதையும் முடிவு பண்ணக்கூடாது”, என்றவள் , “சித்தப்பா நீங்கள் கிளம்புங்கள். போய் அவளை எப்படியாவது இங்கே இருக்க வைக்க பாருங்கள். நமக்கு அவளும் பிள்ளைகளும் முக்கியம். இங்கு நான் பார்த்துக் கொள்கிறேன்”, என்று அவருக்கு தெளிவுபடுத்தி, அவர்களுக்கு தைரியம் கொடுத்து அனுப்பி வைத்தால்.

கிளம்பியவர்கள் காளையார் கோயில் அடைந்த பின் வினோத்து தேநீற்காக வேண்டி நிப்பாட்ட, வேலு அவனை வாங்கி வர சொல்லிவிட்டு, பாலு மீனாவிடம் இங்கே நடந்த பிரச்சனையை சொல்லினார் பக்குவமாக. “ அய்யோ ஆண்டவரே, நாங்கள் என்ன பாவம் செய்தோம்”, என்று இருவரும் ஒரு சேர கதறினார். இனிதாவுக்கு எதுவும் புரியவில்லை என்றாலும் அடுத்தடுத்து பிரச்சனை என்று புரிந்தது. வினோத் தேனீர் வாங்கி வந்தவன், தந்தை சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போனான்.

ராஜேஷ் அவனுக்கு அண்ணன் தான் ஆனாலும் வெளியே சரியில்லை என்று தெரியும். ஆனால் சொந்த அண்ணன் மனைவியை அன்னைக்கு சமமானவளை, அவளிடமே இவன் இப்படி எனத் தெரிந்து கூனி குறுகிப் போனான். ஏற்கனவே இன்பா அண்ணனிடம் அவள் பட்ட பாடு அவனுக்கு தெரியும். இனியாவது அவர் குழந்தைகளுடன் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று நினைத்திருந்தான்.ஆனால் இப்படி செய்து விட்டானே என்று கவலை பெருகியது. பாலு மீனா உடைந்து விட , “அண்ணன் ஏதாவது செய்யணும். அவளைப் போக விடக்கூடாது .பிள்ளைகளும் அவளும் முக்கியம். நம் சொத்து அவர்கள்”, என்று ஏதோ ஏதோ கூறி அவரை அடுத்த பஞ்சாயத்துக்கு தயார் செய்தார்.


தொடரும்
 
Last edited:

Simma

Moderator
அத்தியாயம் 18

ஓருவாறு இவர்கள் வீட்டை அடைய இலஞ்சிதா அவள் அன்னையும் பெட்டியோடு கீழே வர சரியாக இருந்தது. இன்ஷித் அமர்ந்திருக்க அவளோ வீங்கி போன முகத்தோடு நின்று இருந்தால். பார்த்த அவர்களுக்கு மனதிற்குள் தைக்கதான் செய்தது . ஆனால் இப்பொழுது அவளை தங்க வைப்பது முக்கியம், என்பதால் வேலு பேச்சை ஆரம்பிக்கப் போக, இலஞ்சிதா அம்மா முந்தி கொண்டார்.

“போதும் அண்ணாச்சி, நீங்க என்ன சொன்னீங்க உங்கள் வீட்டுப் பெண் போல் பார்த்துக் கொள்வேன் என்று சொன்னீர்கள் தானே, பார்த்தீர்களா உங்கள் வீட்டு ஆண்மகன் செய்த வேலையை”, என்று அவர் கேள்வி கணையை தொடுக்க பேச்சிற்று போயினர் இரு ஆண்களும். இன்ஷித் மௌனம் காத்தான். இவர்கள் முதலில் பேசட்டும் கைமீறினால் நாம் பேசுவோம் என்று அமைதியாகவே இருந்தான்.

“ இது மிகப்பெரிய பிசகுதான், நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனிமேல் அவளை தனியே எங்கேயும் விடவில்லை”, என்று மீனா கூற, " எதற்கு வேண்டாம் , உங்கள் பெண்னுக்கு பிரச்சனை என்றதும் பெண்னை மறந்து விட்டீர்கள் தானே”, என்று அவர் கேட்க, “ தங்கச்சி நீங்கள் கேட்பது உண்மை, உங்கள் கோபத்தில் நியாயம் இருக்கிறது”, என்றார் பாலு, “ அக்கா இது பெரிய பிசகுதான். நாங்கள் மன்னிப்பு கேட்பதால் எதுவும் இல்லை என்று ஆகிவிடாது. எங்கள் குலதேவதை அவள். இத்தனை நாள் எதாவது குறைப்பட விட்டோமா” என்று இலஞ்சிதாவை பார்த்து அவர் கேட்டார்.

“ மாமா நான் போகிறேன் வேண்டாம்”, என்று அவள் மறுபடியும் பிதற்ற ஆரம்பித்தால். அவளது குரலே அவளது நிலமையை சொல்ல, இன்பாவுக்கு ராஜேஷ்யை கொன்றால் என்ன என்பதே தோன்றியது. இந்த கட்டு மட்டும் இல்லை என்றால் அவன் சாவு உறுதி என்று நினைத்தவன், இவளை தடுப்பது எப்படி என்று தெரியவில்லையே, இன்ஷித் வேறு மௌனமாக இருக்க அது வேறு அவனை பயமூட்டியது.

கோபத்தில் இன்ஷீத் பேசிவிட்டான் என்றால் பயம் இல்லை ,ஆனால் அவனது மௌனம் மிகவும் பயங்கரமானது. அவன் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறான். “அம்மாடி இப்போது நீ கோபத்தில் இருக்கிறாய், கோபம் குறைந்து நிதானத்தில் யோசித்துப் பார், இது உன் வீடு”,என்றார் வேலு மென்மையாக கூற, “ சீதாமா இந்த வீடு எவ்வளவு ஆசைப்பட்டு வாங்கினான் இன்பா, நாங்கள் வாழ்வதற்காகவா ,உனக்கும் பிள்ளைகளுக்கும் தானே”, என்று பாலு கூற, “ இலஞ்சிதா, தெரு நாய் குறைத்தது அடித்து விரட்டியாச்சு, அதற்கு பயந்து நாம் வெளியே செல்ல முடியுமா”, என்று மீனா அடுத்ததாக கூறி ஒருவாறு அவளது கோபத்தை குறைக்க முயன்றனர்.

“ அய்யோ போதும், என்னால் முடியல, போதும் போதும் என்று அவரோடு வாழ்ந்து விட்டேன், இனியும் போராட முடியவில்லை. என்னை விட்டு விடுங்கள். என் குழந்தைகளோடு என் அன்னையிடமே போய்விடுகிறேன்”, என்று அவள் உச்சத்தில் கத்தினால்.



“ அண்ணி”, என்று வினோத் அருகில் வர , “அய்யோ அப்படி கூப்பிடாதே. அவனும் அப்படி தானே கூப்பிட்டான் அவர் இருந்த வரை ஆனால் அதன் பின் ,உடம்பு எல்லாம் பற்றி எரிகிறது. அம்மா நீ என்னை இங்கிருந்து அழைத்துச் செல்லவில்லை, என்னையும் குழந்தைகளும் நானே எரித்து கொள்வேன் என்று அவள் உடல் நடுங்கி கத்த, ராஜேஷின் செயல் அவளை எவ்வளவு பாதித்து இருக்கிறது என்பதை கண்ட அந்த வீட்டு ஆண் மகன்களுக்கு அசிங்கத்தில் உடல் கூசி தான் போனது. அதில் அனைவரும் மூர்சையாகிப் போயினர்.

“அய்யோ சீதா ஏன் டி இப்படி பேசுற ,நான்தான் தவறு செய்தேன் இறந்தேன் ,நீயாவது பிள்ளைகளோடு நூறு வருட நன்றாக வாழ வேண்டும்”, என்றான் இன்பா பரிதவிப்பாக. ஆனால் அவள் குழந்தைகளுடன் எரித்து விடுவேன் என்று சொன்னதை கேட்ட இன்ஷித் கொதித்து எழுந்து போனான், “ என்ன சொன்னாய் எரிந்து விடுவாயா, எரித்து விடுவாயா ,அதையும் தான் நான் பார்க்கிறேன். நானும் சரி அடி வாங்கிய வலி கத்துகிறாய் என்று அமைதியாக இருந்தேன் .பிசகுதான் மாபெரும் தப்புதான். இல்லை என்று சொல்லவில்லை நாங்கள். அதான் மன்னிப்பு கேட்கிறோமே இனிமேல் இப்படி நடக்காது என்று உத்தரவாதம் கொடுக்கிறோம் தானே ,ஏன் நீ அங்கே போய்விட்டால் ராஜேஷாள் வர முடியாதா அல்லது வேறு தெரு நாய் தான் அங்கு இல்லையா?”,என்று முழு உயரத்திற்கு நிமிர்ந்து கேட்டான்.

அவனது கோபம் மிகுந்த பேச்சு அவளை நடுங்கி மூர்ச்சை ஆக்கியது . “அய்யோ இவர்கள் வேறு ,இவனை கோபம் ஆக்குகிறார்கள் .இவன் கோபத்தில் எதையாவது செய்வானே கண்மூடித்தனமாக”, என்று இன்ப அலற , “அதற்குள் தம்பி அவள் வாங்கின அடி தான் அவளை அப்படி பேச வைக்கிறது. நீங்கள் ஏன் இப்படி தடுக்கிறீர்கள் எங்களைப் போக விடுங்கள். உரிமை பட்டவர்களே அவர்கள் மிது தப்பு இருக்க போய் தானே பேசாமல் இருக்கிறார்கள். உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது”, என்று இலஞ்சிதா அன்னை ஆரம்பிக்க , “அதானே உனக்கு என்ன உரிமை இருக்கிறது என்னை தடுப்பதற்கு, போக கூடாது என்று சொல்வதற்கும் .என்னை விடவில்லை என்றால் நான் சொன்னதை செய்து விடுவேன். உங்கள் மத்தியில் எல்லாம் வாழ்வதற்கு எரிந்து சாம்பல் ஆகிவிடலாம்”, என்று கூறிக் கொண்டே இருந்தவள்

வெளியில், “ அம்மா”, என்று அவளின் இரு குழந்தைகளின் அழைப்பு கேட்க , இவள் இன்ஷித்தை கடந்து தன் குழந்தைகளிடம் செல்ல போக, “ என்ன சொன்னாய் எனக்கா உரிமை இல்லை என்று சொன்னாய். இதுவரை எந்த உரிமையும் இல்லை தான், ஆனால் இனிமேல் என்னை மீறி உன்னால் உன் சுண்டுவிரலை கூட ஆட்ட முடியாது”, என்று கோபத்தில் கர்ஜித்தவன், அவளின் வலது கையை பற்றி இழுக்க, சென்ற வேகத்தில் அவன் இழுத்தவுடன் அவன் மார்பிலேயே வந்து அவன் மீதே மோதி நின்றால் .

அனைவரும் என்ன நடக்கிறது என்று சுதாரிக்கும் முன் தன் பாக்கெட்டில் இருந்த தாலியை எடுத்து அவளுக்கு அணிவித்து இருந்தான் இன்ஷித். “ இன்ஷித் பா”, என்று ஓடிவந்த இதிகா அப்படியே நின்றுவிட்டால் .அவளை தொடர்ந்து வந்த இரினாவும் நின்றுவிட்டால் .நடந்ததை பார்த்து, “ தம்பி”, “இன்ஷித்”, “ டேய்”, “ அண்ணா”, என்று வெவ்வேறு குரல்கள் ஒலிக்க, அதை எல்லாம் விட இதை நேரில் பார்த்துக் கொண்டிருந்த இன்பாவோ, “ முடிந்தது எல்லாம்”, என்றான் ஒரு வெறுமையான சிரிப்போடு. தன் மனைவிக்கு தன் முன்னாலே வேறு ஒருவனோடு திருமணம். “ ஆண்டவனே இந்த பிறவியில் நான் செய்த பாவத்திற்கு எனக்கு இந்த தண்டனை போதும்”, என்றான். “ இனிமேல் செய்வதற்கும் திட்டமிடுவதற்கும் என்ன இருக்கிறது. இப்பவே நான் உன்னிடம் வந்துவிடுகிறேன்”, என்று இன்பா நினைக்க, ஆண்டவனோ, “ அதை நான்தானே முடிவு பன்ன வேண்டும். உன்னை கட்டியதற்கு காரணம் முடிந்து விட்டது. இனிமேல் என் ஆட்டத்தைப் பார்” என்று இன்பாவை பார்த்து சிரித்தார்.

இன்ஷித் காதில் எதையும் வாங்காமல் ,அங்கே ஸ்தம்பித்து போய் நின்ற இலஞ்சிதா கையைப் பற்றி இழுத்தான். இழுத்த வேகத்தில் இன்பாவின் படத்தின் அருகே அழைத்துச் சென்றான். அங்கே இருந்த குங்குமத்தை எடுத்து அவள் நெற்றியிலும் தாலியிலும் வகுட்டிலும் வைக்க அந்த சிலைக்கு உயிர் வந்தது. அந்த குங்குமம் தாலியில் பட்ட நொடி, அந்த படத்தில் கட்டியிருந்த இன்பாவின் கட்டு உடைந்தது அதிலிருந்து அவன் ஆத்மா விடுதலையாகி, வெளியில் வந்த வேகத்தில் அந்த குங்குமச்சிமிழ் தூக்கி அடிக்கப்பட்டது. அது இன்ஷித் மேலும் இலஞ்சிதா மேலும் அந்த குங்குமம் முழுவதும் சிதறி அடிக்கப்பட்டது. கண்டவர்கள் அனைவருக்கும் அது இன்பாவின் ஆசிர்வாதம் ஆகவே தோன்றியது. ஒரு நிமிடம் அதிர்ந்த இலஞ்சிதா, “ ஏன்டா இப்படி செய்தாய்”, என்று அவன் சட்டையை பற்றி இழுத்து அவனை சரமாரியாக தாக்க ஆரம்பித்தாள்.

அவளின் செயலில் அதிர்ந்திருந்த அவர்கள் அனைவருக்கும் உயிர் வந்தது. “ இலஞ்சிதா”, என்று கூப்பிட்டு, அவள் அன்னையும் மீனாவும் அவளை அவனிடத்திலிருந்து பிரித்தனர். விடுதலையாக்கப்பட்ட இன்பா அதிர்ந்து நின்ற குழந்தைகள் அருகில் வந்து நின்றான். ஏனோ இலஞ்சிதா பக்கம் செல்ல முடியவில்லை. இந்த நொடி அவள் வேறு யாரோ என்று தோன்றியது. அதற்குள் சுயத்துக்கு வந்த இதிகா, “ ஏன் இன்ஷித் பா ,அம்மா பாவம்”, என்றது அவனிடம் ,அதற்கு ஒன்றும் புரியவில்லை. அமைதியாக அவன் அருகில் சென்ற இரினா , தன் கையை மடக்கி அவனது வயிற்றில் ஓங்கி ஒரு குத்து குத்தினாள்.

இதை அனைத்தையுமே அமைதியாக ஏற்றான் இன்ஷித். அவனுக்கு வேறு வழியில் அவளை தடுக்க முடியாததால் தான், அவன் இப்படி செய்து விட்டான். அவள் எரிந்து எரித்து விடுவேன் என்று சொன்னதை தாங்க முடியவில்லை. தன் நண்பனின் குடும்பத்தை காப்பதற்காக மட்டுமே இதை செய்தான்.

தொடரும்
 
Last edited:

Simma

Moderator
அத்தியாயம் 19

வேலு தான் அங்கே நிளவிய கனத்த மௌனத்தை உடைத்தார். மீனாவும் அவள் அன்னையும் கதறிய அவளைக் கீழே இருந்த அறைக்குள் இழுத்துச் சென்றனர் .கதறி கதறி அழுது, காலையில் இருந்து இந்த நிமிடம் வரை நடந்த நிகழ்வுகள் யாவும் அவளை உணர்ச்சியின் உச்சத்தில் தள்ளி இருந்தது. ஆண்கள் இல்லாத இடத்திற்கு சென்று விட மாட்டோமா என்று கதறி ஒரு வழியாக அவள் கண் அசந்தால். இதிகாவை பார்த்த வேலு, “ கபிணேஷ்”, என்று அழைத்தவர், “ தம்பி சற்று நேரம் இவர்களை தோட்டத்தில் வைத்திருக்கிறாயா”, என்று கேட்க அவன் தன் அண்ணனை நிமிர்ந்து பார்த்தான். அவன் போ என்று விதமாக கண்ணை மூடி திறக்க ,அவன் பிள்ளைகளை அழைக்க , “தாத்தா அம்மா”, என்ற பிள்ளைகள் தயங்க , வேலு என்ன செய்வது என்று அறியாது நிற்க, பாலு தான், “ தங்கங்களா, தாத்தா, அம்மாவுக்கு இதுவரை கொடுத்த கஷ்டத்தை சரி செய்யும் முயற்சிக்கிறேன்”, என்றவர், “ எனக்காக”, என்று இறங்கி பேச , இரினா இதிகாவை அழைத்துச் சென்றாள்.

“ இன்ஷித் ஏன் டா இப்படி”, என்று பாலு ஆற்றுமையாக கேட்க, “ என்னை என்ன செய்ய சொல்கிறீர்கள் .அவர்கள் பேச்சுக்கு உங்களால் பதில் பேச முடிந்ததா .எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. நீங்கள் வந்த அடித்து பேசுவீர்கள் என்று தான் நான் மௌனம் காத்தேன். ஆனால் நீங்கள், அவர்கள் சரியாக அழைத்துப் போவதில்லையே குறியாக இருக்கிறார்கள். அழைத்து போனால் உங்களால் அவர்களை பிரிந்து வாழ முடியுமா? அல்லது அவர்களுக்குத்தான் எதையும் நாம் தான் உரிமையாக செய்ய முடியுமா? எனது இன்பாவின் பெயர் அவ்வளவுதான் போயிருமே”, என்றான் இவனும் அதே ஆற்றுமையுடன் . “ஆனால் எதையும் வேண்டும் என்று செய்யவில்லை .நல்ல விதமாக பேசி முடிக்கலாம் என்று தான் நினைத்தேன், ஆனால் எனக்கு உரிமை இல்லை என்று எதை எதையோ பேசி ,அவன் எப்போதும் சொல்வான் என்னிடம், நான் திருமணத்திற்கு மறுக்கும் போது, பார் உன்னை உன் உணர்வுகளில் இருந்து ,உன்னை மறக்க வைத்து, எப்படியும் திருமணம் செய்து வைப்பேன் என்று ,ஆனால் இது இப்படி நடக்கும் என்று நான் சத்தியமாக நினைக்கவில்லை”, என்றான் தெளிவாக தன் மனதை எடுத்துரைத்தான்.

“ எங்களுக்கும் தெரியும், நீ இதை வேண்டுமென்று செய்யவில்லை என்று, ஆனால் இனி நடக்கப் போவது என்ன”, என்று வேலு அடுத்து என்னவென்று கேட்க , “அவர்கள் மூவருமே நல்ல மனநிலையில் இல்லை.இன்பா படையல் முடியட்டும், அதன் பின் பார்ப்போம்” என்றான் இன்ஷித். “ அது சரி வராது இன்ஷித்”, என்று வந்து நின்றார் மீனா , “ஏன் என் மகளை இப்படி பாடாய்படுத்துகிறீர்கள்” என்று மீண்டும் இலஞ்சிதா அன்னை ஆரம்பிக்க, “ அத்தை நான் இளையவன் தான் .ஆனால் எனக்கு இது சரியாகத்தான் தெரிகிறது. என்ன நடந்தது தப்பு போல் இருக்கலாம், ஆனால் நடந்த முறைதான் தப்பே தவிர ,நடந்த விஷயம் சரி. எத்தனை நாள் தான் நாம் அவர்களுக்கு காவலாக இருக்க முடியும். குடும்பம் என்ற ஒரு கட்டமைப்பு அவரால் தான் கொடுக்க முடியும் .அதனால் தயவு செய்து அவர்களுக்கு இதை நல்ல விதமாக புரிய வையுங்கள் .எங்கள் மீது இருக்கும் அனைத்து தப்புக்கும் இதை ஒரு பிராயச்சுத்தமாகவே இருக்கும் .குழந்தைகளின் மனநிலை அவர்களின் மன நிலைமையும் ஒரு நல்ல மாற்றம் வரும்”, என்றான் வினோத்.


தம்பியின் பேச்சை கவனித்துக் கொண்டிருந்த இன்பாவிற்கு இது சரிதான் என்று தோன்ற ஆரம்பித்தது .என்ன இருந்தாலும் ஒரு சராசரி மனிதனாக இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றாலும் இன்ஷித் மேல் அவனுக்கு கோவம் எல்லாம் எழவில்லை. அவன் தன்னைவிட அவர்களை சரியாக கவனித்துக் கொள்வான் என்று தெரியும் .ஆனால் இலஞ்சிதா என்ன ஆவாள் என்பதை நினைத்தாலே அவனுக்கு பதறியது. அவளை பக்குவமாக கையான்டால் மட்டுமே, ஆனால் இவனும் சீரும் சிங்கம் அல்லவா என்று நண்பனை நினைத்து கவலையுற்றான்.

வினோத்தின் பேச்சு அங்கே இருக்கிறவர்களுக்கு ஒரு கண் திறப்பு தான். “ ஆனால் ஆளுக்கு ஒரு இடத்தில் இருந்தால் எப்படி”, என்று மீனா கேட்க, “ ஆமாம் அது மேலும் விரிசல் தான் வரும்”, என்று பாலு கூற , “அண்ணா உடனே எல்லாம் எதையும் செய்ய வேண்டாம். முதலில் அவன் சொன்னது போல் இன்பாவின் படையல் முடியட்டும் .நம் வீட்டின் ஆட்கள் அனைவரும் அன்று ஒன்று கூடுவார்கள். காலையே படையலை போட்டுவிட்டு அதன் பின்னர் நல்ல நேரம் பார்த்து அனுப்பி விடுவோம்”, என்று அடுத்த நடக்க வேண்டியதை தெளிவுபடுத்தினார். “ சித்தப்பா நான் அவர்களை இங்கிருந்து பிரிக்க வேண்டாம் என்று இதை செய்தேன். முதலில் அவர்கள் மூவரும் என்னை ஏற்றுக் கொள்ளட்டும். இப்போது அழைத்துப் போனால் இலஞ்சிதா பாதிக்கப்படுவாள். இன்னும் கொஞ்ச காலம் இங்கு இருக்கட்டும்”, என்று இன்ஷித் கூற , “சரிடா ஆனால் நீ இங்கு வா ,உன் இருப்பை உணர்த்து. இது ஒன்றும் வேலிக்காக மட்டும் செய்த செயலாக இருக்கக் கூடாது”, என்று மீனா கூற , வினோத் பேச்சால் அமைதியான இலஞ்சிதாவின் அன்னை , “அவள் மாறுவாள் என்ற நினைக்கிறீர்களா ?இங்கே படையில் போடும் வரை இருங்கள். அதன் பின் வேலு தம்பி சொல்வது போல் மூன்று பேரையும் அழைத்துச் செல்லுங்கள் .அதுதான் புரிதலை கொடுக்கும்”, என்று அவர் கூறினார்.

“ எனக்கு தெரியும் உன் நினைப்பு என்னவென்று .முதலில் நீ தெளிவாகு. உன்னால் ஒரு நல்ல கணவனாக, தகப்பனாக இருக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய இருக்கிறது. உன் அன்னைக்கும் எங்களுக்கும் ஒரு மகனாக உன் தம்பிக்கு ஒரு நல்ல தமையன்னாக இருக்கிறாய் அல்லவா. அதே மாதிரி அதுவும் நடக்கும். இன்னும் ஒன்று நீங்கள் எங்கே இருந்தாலும் எங்களுக்கு தெரியும் நீங்கள் எங்களை விட்டு போக மாட்டீர்கள் என்று .அதனால் குழப்பாமல் அழைத்து செல். மீனா கூறுவது போல் ஒரு குடும்ப அமைப்பு தான் உன்னை அவர்களோடு பிணைக்கும்”, என்று பாலு முடிவாக கூறினார்.

“ சரிப்பா”,என்றான் இன்ஷித் , “உங்கள் அம்மா இதற்கு”, என்று வேலு கேட்க, “ அம்மாவிடம் நான் கூறிவிட்டேன் சித்தப்பா”, என்று வந்து நின்றான் கபிணேஷ், “ என்ன சொன்னார்கள்”, என்று வேலு கேள்வி எழுப்ப, “ அவனுக்கு திருமணமானால் போதும் என்று விட்டார்கள்” என்று கபிணேஷ் முடிக்க, “அவர்களுக்கு இரினா இதிகாவை ரொம்ப பிடிக்கும்”, என்று சேர்த்து சொன்னான். “ டேய் குழந்தைகளை தனியாக விட்டு வந்தாய்”, என்று மீனா கேட்க, “ இனிதா அக்கா எனக்கு எதுவும் வேண்டுமா என்று கேட்க வந்தார்கள். நான் தான் அவர்களை அங்கு இருக்க பணிந்து விட்டு வந்தேன்”, என்றான்.

“ நான் குழந்தைகளிடம் பேசிவிட்டு வருகிறேன் நீ கிளம்பு”,என்றான் இன்ஷித் கபிணேஷிடம், “ அது அம்மா உன்னை இங்கே”, என்று கபிணேஷ் கூற தயங்க , “அதைத்தான் நான் சொன்னேன், நீ என் தயங்குகிறாய்”,என்று மீனா கேட்க, வேலு , “ஆமா அண்ணி இருவரும் சொல்வது போல் இரவு அனைவரும் ஒரு இடத்தில் இருங்கள்”, என்று கூற, “ சரி சித்தப்பா வீட்டிற்கு போய் அம்மாவை பார்த்துவிட்டு வருகிறேன்”, என்று தன் முடிவை சொன்னான்.

இலஞ்சிதாவின் அம்மா, அவள் தூங்குகிறாள் நான் கிளம்புகிறேன்”, என்று கூற, “ இல்லை மணி ஆகிவிட்டது”, என்று சற்றென்று மறுத்து விட்டான் இன்ஷித். “ அது நான் இங்கே இருந்தாள், அவள் இன்னும் சத்தம் போடுவாள்”, என்ற மகளை அறிந்தவராக கூற, “ அக்கா நீங்கள் அங்கே வாருங்கள் .இன்னும் இரண்டு நாள்தானே இருக்கிறது படையலுக்கு”, என்று வேலு சொல்ல , “சரி”, என்று சம்மதித்தார். இன்பா மனசு சற்று இவர்கள் பேச்சில் லேசானது. அவனும் இன்ஷித்தை தொடர்ந்து குழந்தைகளை பார்க்க தோட்டத்திற்கு சென்றான். வினோத்தும் வேலுவோடடும் இலஞ்சிதா அன்னையும் கிளம்பினார். மனதில் சிறு நிம்மதியுடன் ,இவர்கள் பேச்சால் இன்ஷித் மேல் ஏற்கனவே இருந்த மதிப்பு உயர்ந்தது .

இந்த கலவரத்தில் அனைவரும் ராஜேஷை மறந்து போயினர். அவனும் வலி தாங்க முடியாமல் கேட்பார் அற்று கபிணேஷ் ஜீம்மில், சுற்றி ஐந்து பலவான்கள் மத்தியில் சுருண்டு விழுந்து கிடந்தான். கபிணேஷ் மாணவர்கள் அவனை நையப் புடைந்து விட்டனர். மதியம் சாப்பிட்டது அதன் பின் அப்போ அப்போ முகத்தில் தண்ணீர் தெளித்து தெளிந்ததும் மறுபடியும் மயக்கம் வரும்வரை அடி அடி மட்டுமே. கேட்பாரற்றவள்? என்று தானே நினைத்தேன். இப்படி இரு சிங்கம் போல் கர்ஜித்து, கடித்து கொதர ஆள் இருப்பார்கள் என்று நினைக்கவில்லையே என்று நொந்தானே தவிர, தான் செய்த மிகப்பெரிய பாதகம் என்று இன்னும் எண்ணம் வரவில்லை. இதில் அவனது கைபேசியில் இருந்து அவனுடைய மனைவிக்கு அழைக்க செய்து தொழில் விஷயமாக வெளியூர் செல்கிறேன் என்று வேறு சொல்ல வைத்திருந்தான் கபிணேஷ். அதனால் யாரும் அவனை தேட போவதில்லை .அவன் செய்த செயலை, அவன் மனைவிக்கும் அவர்கள் சொல்லவில்லை என்றாலும், பெரிய தலைகள் அவ்வளவு பேருக்கும் நிச்சயம் இன்ஷித் சொல்லி இருப்பான். அய்யோ வேலு சித்தப்பா என்ன செய்வாரோ”, என்று சற்று நடுங்கித்தான் போனான். அவன் அறியவில்லை அவன் செய்த செயலால் இன்று திருமணத்தை முடித்து உடைமை பட்டவனாக வீட்டினில் நுழைந்து விட்டான் இன்ஷித் என்பதை




தொடரும்
 
Last edited:

Simma

Moderator
அத்தியாயம் 20

தோட்டத்திற்குச் சென்ற இன்ஷித் இதிகா , இரினா ,இன்பாவின் ஆஸ்தானமான இடமான ஊஞ்சலில் அமர்ந்திருக்க கண்டவன், அங்கே சென்றான் .அவனைத் தொடர்ந்து சென்ற இன்பா குழந்தைகளின் நடுவில் இடம் இருக்க அங்கே சென்று அமர்ந்தான். இருவரும் முகத்தை ஆளுக்கு ஒரு பக்கம் திருப்ப, அவர்கள் முகம் முழுவதும் கவலை கலக்கம் நிறைந்த முகத்தோடு அமர்ந்திருந்தார்கள். இனிதா கீழே புல்வெளியில் அமர்ந்திருந்தால். இன்ஷித் அருகில் வந்ததும் ஒரு சிரிப்பை உதிர்த்து அவள் எழுந்து நிற்க ,இரினா இதிகாவை சுட்டி காட்டி சாப்பாடு என்று சைகையில் அவளிடம் கேட்க, இல்லை என்று தலையை அசைத்தால். எடுத்து வாருங்கள் என்று சைகையில் காட்டி அவளை அனுப்பி விட்டான்.

“ எங்களுக்கு ஒன்றும் சாப்பாடு வேண்டாம்”, என்று வேகமாக இதிகா மறுத்து பேசினால். ஆறாவது படிக்கிறாள் ஆனால் வெகுளி தன் நண்பனைப் போல். இன்பாவிற்கு குடி ஒன்று தான். அது அவனது வாழ்வை மொத்தமாக நாசமாக்கியது. அவளது பேச்சு செய்கை தன் நண்பனை ஞாபகப்படுத்த அவன் கண்களில் கண்ணீர் நிறைந்தது. தன்னை மறந்து, “ இப்படித்தான் என்னிடம் கோபம் கொண்டு உன் அப்பா உணவை மறுப்பான்”, என்று அவன் கூற, அவன் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வளிந்தது. அதை பார்த்த இன்பாவிற்கு அவன் மேல் இருந்த வருத்தம் கூட இப்போது குறைந்து தான் போனது. தன்னையும் தன் குடும்பத்தையும் இவனைத் தவிர வேறு யாரும் இந்த 27 நாட்களில் நினைத்துக் கூட பார்க்கவில்லை. இவனால் தான் இலஞ்சிதாவை வெளியே வர வைக்க முடிந்தது. அழுது ஓய்ந்து இருந்த இதிகாவை தெளிந்து நடமாட வைத்தது .இரினா பாலுவை தவிர்த்து நெருங்கிய முதல் ஆண்மகன் இவன் தான். அவன் செய்த செயல்களை ஒன்று ஒன்றாக நினைவில் வந்தது. தன்னை கண்டிக்காத நாள் கிடையாது. பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் நல்ல மனிதனாக இருக்க முடியாது என்றால் ஏன் திருமணம் செய்து இன்னொரு பெண்ணின் வாழ்வை கெடுத்தாய் என்று. இந்த ஒரு விஷயத்தில் மட்டும் இன்பாவால் இன்ஷித்தின் பேச்சைக் கேட்க முடியவில்லை. இன்பா அவன் நினைவுகளுக்குள் சுழல, தன்னை மறந்த அவனின் பேச்சில் இதிகாவிற்கு இன்பாவின் எண்ணம் தாக்கியது.

“அப்பா ஏன் என்னை விட்டுப் போனீர்கள்”, என்று இன்ஷித்தை தாவி வந்து அனைத்து கொண்டு கதறினால். “ இன்ஷித் பா அப்பாவ வர சொல்லுங்கள், பாவம் நாங்கள்”, என்று அவள் கதற, தன் மடத்தனம் அப்போதுதான் இன்ஷித்துக்கு புரிந்தது. அவள் தலையை தன்னால் அவன் கை ஆதரவாக தடவியது. அவனது வளர்ச்சிக்கு அவள் அவன் இடுப்பு உயரம் மட்டுமே இருந்தால். இதிகா கதறுவதைப் பார்த்து இரினாவின் கண்களிலும் கண்ணீர் அருவி போல் கொட்டியது. இன்பாவோ மொத்தமாக உடைந்து போனான். “ ஏன் நான், ஏன் இப்படி செய்தேன்? வாழ்ந்தேன் மடிந்தேன்”, என்று அவனும் அவர்களை தேற்ற முடியாமல் அவனுக்குள் மறுகினான் .

இதிகாவின் கண்ணீர் இன்ஷித்தின் சட்டையை தாண்டி ,அவனின் தேகம் உணர, உடம்பில் உள்ள ஒவ்வொரு அணுவும் உயிர்த்தெழுந்தது. ஒரு வித புல்லரிப்பு ,உணர்ச்சி பிலம்பாக மாறினான் .அப்பா என்ற வார்த்தைக்கு வார்த்தையாக கதறி அவனை இன்ஷித் என்று பெயர் சொல்லி அப்பா என்று சேர்த்தழைத்தது ஒரு கட்டத்தில் அப்பா என்று மறுவி ,அவனின் உயிர் மூச்சில் அந்த வார்த்தை நுழைந்து ,அவனின் இரத்த அணுக்களில் கலந்து, இருதயத்தை சென்று அடைந்தது. இருதயம் முழுக்க அவளின் அப்பா என்ற வார்த்தையை நிறைக்க, அது ஏற்படுத்திய தாக்கம் மூலையை சென்று அடைய, அது அந்த உறவுக்கு உண்டான நேசத்தையும், பண்பையும், மகத்துவத்தையும், எதையெல்லாம் அவன் இழந்தானோ, அவன் தந்தையிடம் எதையெல்லாம் எதிர்பார்த்து ஏமாந்தானோ, அது அவனை முழு தகுதியோடு இதிகாவின் அப்பாவாக உருவை மாற்றியது.

கைகளால் அவளை வருட, இதயம் உணர்த்தியதை மூலை கட்டளை இட, “ ஆமான்டா என் தங்கமயில் அப்பா தான், உன் இன்பா அப்பா தான் உன் இன்ஷித்தப்பா. இன்பாவிற்கும் இன்ஷித்துக்கும் வித்தியாசம் கிடையாது. அவன் உங்கள் பிறப்பதற்கு காரணமானவன். நான் நீ வாழ்வில் எந்த உச்சத்தை தொட்டாலும் அதற்கு காரணமாக இருப்பேன். இன்று நீ அழுவதே கடைசி இனி உன் வாழ்வில் கண்ணீர் என்பது என் உடலில் இருந்து”, என்று அவன் உணர்ச்சியின் பிடியில் ஒரு வேகத்தில் என்ன சொல்கிறோம் என்று மறந்து வார்த்தையை விட வர, “அய்யோ இன்ஷித்தப்பா வேண்டாம். நீங்களும் எங்களை இன்பா அப்பா போல் தவிக்க விட்டுப் போய் விடாதீர்கள்”, என்று துப்பாக்கியில் இருந்து விடுபட்ட தோட்டா போல் அவனை நோக்கி பாய்ந்து வந்து அணைத்துக்கொண்டாள் இரினா. இன்பாவும் இன்ஷித்தும் உணர்ச்சியின் பிடியில் மூர்ச்சையாகி போயினர். இரினா அவள் நல்ல உயரம் அவன் மார்புக்கு இருக்க, அவளது கண்ணீர் அவனை மெய்சிலிர்க்க வைத்தது.

“ இல்லம்மா அப்பா எங்கேயும் போகமாட்டேன். இதை சொன்னால் உங்களுக்கு புரியுமா என்று எனக்கு தெரியாது. ஆனால் எதையும் நான் திட்டமிட்டு செய்யவில்லை .நீங்கள் உங்கள் உரிமையை யாருக்கும் விட்டுவிடக்கூடாது என்றுதான் நினைத்தேன்”, என்று கூறி இருவரையும் தன்னோடு இரு கைகளிலும் இறுக்கிக் கொண்டான். இதை பார்த்துக் கொண்டிருந்த இன்பா மற்றும் அவனின் குடும்பத்தார் அனைவருக்கும் மனதில் இருந்த பாரம் மிகவும் குறைந்தது போல் உணர்ந்தனர். இதை இலஞ்சிதா பார்த்து இருந்தால் ஒருவேளை அவள் கோபம் தனிந்திருக்குமோ என்னமோ ,அதனால் அவனை ஏற்றியிருப்பாலோ என்னவோ விதி இன்னும் தன் விளையாட்டை தொடர்ந்தது. அவள் அந்த நாளின் கணம் தாங்காமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தால்.

இனிதா சாப்பாட்டை எடுத்து வர தன் நிலைக்கு வந்த இன்ஷித் அவர்களுக்கு உணவை ஊட்டினான். நினைவு தெரிந்து அதன் முன்பும் ஒரு நாள் கூட இன்பா இச்செயலை செய்ததில்லை .மனித மனம் குரங்கு தானே அதுவும் குழந்தைகள் மனம் ஒப்பிட்டுப் பார்த்தது. அவர்கள் சாப்பிட்டு முடித்தவுடன் அவர்களை மீனாவிடம் ஒப்படைத்து விட்டு தன் வீட்டை நோக்கி சென்றான் இன்ஷித். இன்பாவோ விட்ட மிச்சத்தை தம்பிக்கு பாடம் புகட்ட சென்றான்.

கபிணேஷ் மாணவர்கள் வெளியே சென்றிருக்க ராஜேஷ் வெறும் தரையில் ஒரு மூலையில் சுருன்டு கிடந்தான். தண்ணியை தெளித்து விட்டு அவர்கள் சென்றிருந்ததால் தெளிந்திருந்தான் .ஆனால் உயிர் போகும் வழி உண்டானது. இன்ஷித் அடித்ததே மரண அடியாக இருந்தது என்றால், இங்கே கபிணேஷ் மாணவர்கள் பந்தாடி விட்டுத்தான் சென்றனர்.

திடீரென அந்த இடத்திலிருந்து வெள்ளை நிற ஒற்றை பல்பு மங்கள் அடைய, அந்த இடமே இருள் சூழ்ந்தது போல் இருந்தது. இவன் தன் கண்களை கூர்மையாக்கி கவனிக்க , யாரோ உள்ளே வருவதை அவனால் உணர முடிந்தது .ஆனால் அவனால் பார்க்க முடியவில்லை. அங்கே இருந்த பழு தானாக தூக்கப்படுவதை அவனால் பார்க்க முடிந்தது. ஒரு நிழலாக எதிரில் இருந்த சுவற்றில் தெரிய, அந்த மங்கிய ஒளியில் ஆனால் அப்படி எதுவும் உருவம் கண்களில் தென்படவில்லை. இவன் பயத்தில், “ யார்”, என்று கத்த, பதில் என்னவோ பூஜ்ஜியம் தான். ஆனால் பழு தூக்கினால் வரும் மூச்சின் ஒலி கேட்க ஆரம்பித்தது. ராஜேஷ் பயத்தில் கதற ஆரம்பித்தான். அப்போது , “தொம்”, என சத்தம் எழுந்த நொடி அவன் படுத்திருந்த இடம் அதிர்ந்தது. அவனால் யாரோ ஒருவர் தூக்கி இருந்த பழுவை கீழே போட்டதை உணர முடிந்தது.

“ யார்”, தயவுசெய்து சொல்லுங்கள் என்று கதற, இன்பாவின் அகோர சிரிப்பின் ஒலி அந்த இடத்தையே நிறைத்தது .தன்னால் அவனின் வாய், “ அண்ணா” என்று உச்சரிக்க, “ ஆமாம் உன் அண்ணன் தான் .ஓ உன் பாஷையில் இறந்தவன் முடிந்தவன்”, என்று பதில் கிடைக்க , பயத்தில் உறைந்து போனான் ராஜேஷ். “ அண்ணா தெரியாமல் செய்துவிட்டேன் என்னை மன்னித்துவிடு”, என்று பயத்தில் பிதற்ற ஆரம்பித்தான். “ தெரியாமலா எவ்வளவு கெஞ்சினால்”, என்று அவன் பல்லை கடிப்பதை ராஜேஷால் உணர முடிந்தது.

“அண்ணா உன் தம்பி தானே”, என்று அவன் மன்றாட , “இதையே தானே அவளும் உன்னிடம் கூறினால் என்று அந்த கண்ணுக்கு புலப்படாதவன் கேட்க, “ அண்ணா என்னை எதுவும் செய்து விடாதே”, என்று அவன் கதற , “அங்கே மீண்டும் அந்த அகோர சிரிப்பு, “ உன்னை ஒன்றும் செய்யப்போவதில்லை”, என்று கூற , இவனுக்கு ஒரு நிம்மதியின் சாயல் தோன்ற, மறுபடியும், “ ஆனால் உன் உடம்பில் சிறு காலம் வாழ போகிறேன்”, என்றான் இன்பா .

“ஏன் எதற்கு”, என்று பயத்தில் ராஜேஷ் தந்தியடிக்க, “ அது நீ தான் சொன்னாயே ,அண்ணன் மனைவி பாதி மனைவி, என்று அப்போ தம்பி மனைவி முழு மனைவி தானே. அதான் உன் உடம்பில் வாழ்ந்து உன் மனைவியை எனக்கு விருந்தாக”, அதே கோணல் சிரிப்பை இன்பா சிரிக்க, “ அண்ணா”, என்று அலறியை விட்டான் ராஜேஷ்.

“ என்னை அப்படி அழைக்காதே, உன் மனைவி அப்படி சொன்னதுக்கே உனக்கு இவ்வளவு கோபம் ஆனால் நீ அவளுக்கு செய்த காரியத்திற்கு” என்று கோபத்தில் கேட்க , “அண்ணா தயவு செய்து தெரியாமல்” என்று அவன் மீண்டும் தொடங்க, “ சீ மூடு வாயை. நன்றாக தெரிந்து தான் . அதனால் நானும் தெரிந்தே, என்ன உன் மனைவிக்கு உருவம் மட்டும் தான் வேறுபாடாக தெரியாது, ஆனால் அவளை அது நீ அல்ல வேறு ஒருவன் என்று என்னால் உணர வைக்க முடியும் . இன்று ஒரு நாள் உணர்வைப்போமா”, என்று இன்பா கேட்க, “ அண்ணா தயவு செய்து வேண்டாம். என்னால் முடியவில்லை. அவள் பாவம் ,அண்ணியும் பாவம் தான். அதை அப்போது உணர வில்லை. இனிமேல் அவளை தவிர வேறு யாரையும் பார்க்க மாட்டேன். நம்பு”,என்று கண்ணுக்கு புலப்படாத இன்பாவிடம் மன்றாடினான்.



அதற்குள் சாப்பிட போனவர்கள் வந்து அரவம் கேட்க , “ஒன்றே ஒன்றை நன்றாக கேட்டுக்கொள்.

பெண் சாபம் பொல்லாதது. நம் வம்சத்தையே அழித்துவிடும். உன் குழந்தை உன் மனைவிக்காக உன்னை விட்டு செல்கிறேன், ஒழுங்காக இரு, இல்லை”, என்றவன் அதே அகோர சிரிப்போடு அகன்றான்


தொடரும்
 
Last edited:

Simma

Moderator
அத்தியாயம் 21
வீடு நிசப்தமாக இருந்தது ,வெளி விளக்கை தவிர அனைத்து விளக்கும் அனைத்து வைக்கப்பட்டு இருந்தது. இவன் தன் திறவுகோலை கொண்டு வீட்டை திறந்து உள்ளே சென்றவன். முன்னறையில் விளக்கை போட்டான் இன்ஷித். கபிணேஷ் இன்னும் வந்திருக்கவில்லை, ராஜேஷை மருத்துவமனையில் சேர்த்து விட்டு வருகிறேன் என்று ஏற்கனவே அழைத்துக் கூறி இருந்தான். அவன் நினைத்தது சரி என்பது போல, அவன் அன்னை அங்கே கிடந்த மர சோபாவில் சாய்ந்து கண்களை மூடி அமர்ந்திருந்தார். கண்களின் கருவிழிகள் அங்கே இங்கே உலா வருவதை வைத்து அவர் இன்னும் உறங்கவில்லை என்பதை அறிந்து கொண்டவன். முகத்தில் அத்தனை சோர்வை மீறிய முறுவல் படர்ந்தது.
அரசாங்கம் ஒதுக்கிய சிறு இடத்தில் அடக்கமான ஒரு அறையுடன் கூடிய சிறு வீடு அவனுடையது ,பக்கத்தில் இருந்தவர்கள் வேறு இடத்திற்கு வீடு வாங்கி செல்லவும், அதையும் சேர்த்து இப்போது மூன்று அறை சிறு முன்னறை மற்றும் சமையல் அறையுடன், அதிலேயே சகல வசதியுடன் செய்து வைத்திருந்தான் .என்னதான் அவனுக்கு வேறு சில இடங்கள், அவன் வாங்கி இருந்தாலும் இந்த முகாமை விட்டு செல்ல மனமில்லை. அதற்கு முக்கிய காரணம் அவர்கள் அனாதரமாக இருந்த காலத்தில் இவர்கள் தான் தோள் கொடுத்து அரவணைத்து பாதுகாத்துக் கொண்டார்கள் .இவன் வெளிநாடு சென்றதும் கூட அவர்கள் தான் அவன் அன்னையையும் தம்பியையும் நன்றாக பார்த்துக் கொண்டார்கள். இவன் வளர்ந்து இன்று ஒரு நல்ல நிலைமைக்கு வந்த பின் ,அவன் ஒத்த வயது வந்தவர்களுடன் சேர்ந்து, அந்த முகாமின் சீர் அமைப்பு பணி ,வேண்டுமெனவற்றை அரசிடம் கோரிக்கையாக எழுதிக் கொடுப்பது மற்றும் இன்றி அரசு அனுமதி கொடுத்தவுடன் அதை செயல்படுத்த முடியும் வரை அதை பின்பற்றி நேர்த்தியா நடந்து முடிக்கும் வரை அதை பின்தொடர்ந்து செய்ய வைப்பான்.

அதனால் அந்த முகாமில் அவனுக்கு என்று நல்ல பெயர் இருக்கிறது .அதே ஒழுக்கம் தவறும் நபர்களை யாராக இருந்தாலும் கண்டிப்பதையும் தவறுவதில்லை .அதனால் அவனுக்கு குடியுரிமை பிரச்சனை வந்த போது கூட முகாம் மக்களை அவனுக்காக பேசி ஒரு தற்காலிக தீர்வையும் கண்டார்கள். தன் நினைவில் சுழன்றவன் நிகழ்காலத்திற்கு வந்தான் தெருவில் போகும் வாகனத்தின் ஒலியை கேட்டு. அவனது அன்னையை கண்டவன் அங்கே எந்த ஒரு சலனமும் இல்லாமல் போக அவர்கள் அருகில் சென்றான். என்ன நினைத்தானோ, அந்த நாளின் கனத்தை அவனால் தாங்க முடியவில்லை. ஆதலால் சோபாவில் அமர்ந்து சிறுபிள்ளை போல் தன் அன்னையின் மடியில் தலையை வைத்து படுத்து விட்டான். அவனின் செயலில் யசோதா அதிர்ந்து விட்டார். அவருக்கு தெரிந்த அவர் கணவன் தன்னை விட்டுச் சென்றபோது இப்படி படுத்தவன், இன்று இவ்வளவு காலம் தன்னை ஒரு தந்தையாக தனக்கு துணை நின்று தாங்கியவன். இளம் வயதில் தான் சந்தித்த அனைத்து சவால்களுக்கும் தனக்கு தோள் கொடுத்தவன். ஆனால் இன்று அவனின் சோர்ந்த முகமும் நடையும் அவனின் மன வேதனையை படம் போட்டு காட்டியது.
ஏற்கனவே மதியம் இலஞ்சிதாவின் அழைப்பு வரும்போது கபிணேஷ் அப்போதுதான் சாப்பிட அமர்ந்திருந்தான். அதை அவன் ஏற்ற போது ராஜேஷின் அசிங்கமான பேச்சை அவர் கேட்டிருந்தார். ஒரு பெண்ணாக கணவனின் துணையை இழந்த போது இது அனைத்தையும் அவர் கடந்து வந்தவர் தானே .அவருக்காவது இரண்டு ஆண் பிள்ளைகள் இருந்தார்கள். ஆனால் இவளுக்கு என்று அவர் அவளை நினைத்து கவலை உற்றார் .முதல் கொஞ்ச காலம் நல்லதிடமாக இருந்தால் இவை கடந்து விடலாம். ஆனால் காலம் அதற்கான நேரத்தையும் அவகாசத்தையும் இலஞ்சிதாவுக்கு கொடுக்கவில்லை.
கபிணேஷ் பின் அழைத்து விஷயத்தை கூறிய போது ,அவரால் இன்ஷித் மனநிலைமையையும் இலஞ்சிதாவின் தற்போதைய நிலைமையும் நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது. அதனால் தான் , அவர் எதுவும் கூற முடியவில்லை .அவர் அவனின் தலையை வாஞ்சையாக வருட, அவனின் கண்ணீர் அவரின் மடியை நனைத்தது.
உள்ளம் பதற, " அப்பேன்", என்றார், " நான் வேணும் என்று எதுவும் செய்யவில்லை அம்மா. இன்னும் சற்று நேரம் நான் போக நேரம் எடுத்திருந்தால் கூட, நாம் அவளை உயிரோடு பார்த்திருக்க முடியாது. நான் கதவை உடைத்த போது அவள் ஓடி வந்த வேகத்தில், அவள் இருந்த கோலத்தையும் கண்டு நெஞ்சமும் மனமும் நொந்து தான் போனது. இன்பா எப்போதும் சொல்வான், நான் அவனை பொறுப்பில்லை என்று திட்டும்போது, அதான் நீ இருக்கிறாயே என்று .என்னால் அவர்களை வேராக பார்க்க முடியவில்லை . நீங்கள் திருமணத்திற்கு கேட்டபோது நான் மறுத்ததற்கு இதுவும் ஒரு காரணம்தான் .எனக்குன்னு ஒருத்தி வந்து விட்டால் , எங்கே அவர்களை சரியாக பார்க்க முடியாது என்ற உணர்வும், அது போக என்னால் ஒரு பொறுப்பை சுமந்து நடத்த முடியுமா என்ற தடுமாற்றம் மட்டுமே", என்று தன் மனதில் உள்ள பாரங்களை கொட்டினான்.
" டேய் என்ற மனுஷன் என்னை விட்டுப் போனது அவரின் பொறுப்பில்லாத தனம். அதற்காக அவர் பிள்ளை நீ என்பதற்காக, நீயும் அப்படி இருப்பாயா என்பதில் என்ன நிச்சயம். விசனப் படாமல் போ. போய் ஆக வேண்டியது பார். அவள் கொஞ்சம் எற்கட்டும். பின்பு இங்கு அழைத்து வா. நீ உடன் இருந்தால்தான் அவளுக்கு அந்த உணர்வு வரும். குழந்தைகளுக்கும் ஒரு குடும்பம் என்ற உணர்வு வரும். நீ இப்போது ஒதுங்கினால் அவர்களுடன் நீ சேரவே முடியாது. அதனால் உன் உரிமையை ஒரு தந்தையாய் ஒரு கணவனாய் எதிலும் விட்டுக் கொடுக்காதே. இரண்டு பெண் குழந்தைகளுக்கு தகப்பனாக இருப்பது ரொம்பவும் கடினமான காரியம் .ஏன்னென்றால் பெண் பிள்ளைகள் அம்மாவிடம் பாராட்டும் நெருக்கத்தை விட அப்பாவிடமே அதிக நெருக்கமாக இருப்பார்கள். நீயே சொன்னாய் இன்பா அதை சரியாக செய்யவில்லை என்று. ஏற்கனவே இரினா ஆண்களை ஏற்றுக் கொள்வதில்லை என்று கபிணேஷ் கூறுகிறான். அதனால் ரொம்பவும் கவனமாக அழகாக பக்குவமாக கையாள வேண்டும் .எனக்கு என் மகன் மீது முழு நம்பிக்கை இருக்கிறது. அவன் இதை அழகாக கையாண்டு வெற்றி பெறுவான் என்று. வா சாப்பிட",என்று அவனை இழுத்துக் கொண்டு போனார் .
"அப்பேன், உனக்கு வெளி உணவு ஆகாது. இன்று இங்கு சாப்பிட சரி. நாளை முதல் உனக்கு பிடிக்குதோ பிடிக்கவில்லையோ அவளுடன் சேர்ந்து அமர்ந்து சாப்பிடு. நீ இருப்பதை அவளுக்கு உணர்த்திக் கொண்டே இரு", என்று பல அறிவுரைகள் கூறி அவனை தெளிந்த மனநிலையோடு அனுப்பி வைத்தார் .வெளியில அவன் காட்டும் நிதானமும் பொறுமையும் வீட்டில் அவன் காட்டுவதில்லை. ஆனால் இலஞ்சிதாவும் பொரியும் பட்டா சகவே இருக்க ,இரண்டு பேரும் ஒரு பொறிக்குள் இருந்து, எப்படி காலம் தள்ளி, இதில் இவர்களுடன் இரு சிறு அழகிய பூஞ்சிட்டு வேறு. யசோதா கவலையுடன் அன்று கண் அசந்தார்.
இங்கே வீடு திரும்பி இன்ஷித் அழைப்பு மணியை அடிக்க ,பாலு தான் கதவை திறந்தார். மீனாவும் தூங்காமல் விழித்திருக்க, " ஏன் இன்னும் தூங்கவில்லை", என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தான் இன்ஷித். " அவள் சாப்பிடவில்லை. கேட்பதற்கும் பதில் இல்லை", என்றார் கவலையாக, " விட்டத்தை பார்த்து வெறுத்து அமர்ந்திருக்கிறாள்", என்றார் பாலு அதற்கு குறையில்லாத கவலையோடு. " குழந்தைகள்", என்று இன்ஷித் கேக்க, " நாளை பள்ளி தானே அதான் அவர்கள் இனிதா உடன் தூங்கி விட்டார்கள்", என்றார் மீனா.
ஒரு மூச்சை உள் இழுத்து வெளியே விட்டவன், " நான் பார்த்துக்கொள்கிறேன்", என்றவன், " சாப்பிட வைப்பது கடினம் .நாளை பார்ப்போம் அதை. இன்று மனதில் பாரத்தை குறைக்க முயற்சிக்கிறேன்", என்று கூறி மேலே சென்றவன், திரும்பி மீனாவிடம், " ஒரு டம்ளர் பால் சூடாக ,எதற்கும் தூக்க மாத்திரை ஒரு அறை மாத்திரையை கலந்து எடுத்து வாருங்கள்", என்றவன், " சத்தம் வந்தால் காப்பாற்ற வந்து விடுங்கள் , மீ பாவம்", என்று கூற பாலு மீனா சிரித்து விட்டார்கள் . "நல்ல பெண் டா உங்களை மாதிரி கிடையாது", என்றார் பாலு அவனின் தோள்லை தட்டி, " அட அடிவாங்குற எனக்குத்தானே தெரியும். என்ன அடி", என்று அவன் சிரித்து அவர்களின் பாரத்தை குறைத்தான். "நீ அவர்களோடு நூறாண்டு காலம் சந்தோஷமாக மனநிறைவோடும் சந்தோஷத்தோடும் வாழ வேண்டும்", என்றார் மீனா முழு மனதாக. அதை ஒரு சிரிப்போடு ஏற்றவன் மேலே சென்றான்.
அறை கதவு திறந்திருக்க ஒரு நொடி தயங்கியவன், எதற்கு இவ்வளவு தயங்குகிறாய் இன்னும் எவ்வளவு இருக்கிறது என்று எண்ணியவன் , "all is well", இன்ஷித் என்று தனக்குத்தானே தட்டிக் கொண்டு உள்ளே நுழைந்தான். இன்ஷித்தை பின் தொடர்ந்து வந்த இன்பா பின்தங்கி கீழே மனபாரத்தோடு தன் ஆஸ்தான இடமான ஊஞ்சலுக்கு சென்று விட்டான் .

யாரோ உள்ளே நுழையும் அரவும் கேட்கவும் ,மறுபடியும் மாமனார் மாமியாரோ என்று நிமிர்ந்து பார்க்க அங்கே இன்ஷித் நிற்பதை கண்டவள் ,உள்ளுக்குள் இவன் எதற்கு வந்தான் இந்நேரம் என்று புரியாமல் பார்க்க, அவள் அமர்ந்திருந்த கட்டிலின் எதிர்த்தாப்பில் இருந்த கண்ணாடியில் அவள் பிம்பம், அவளின் குழப்பத்திற்கு பொட்டில் அடித்தார் போல் பதில் அளித்தது. அவன் அணிவித்த தாலியும் அவன் வைத்துப் பொட்டும் வகுட்டில் இருக்க, அது அவன் உள்ளே வந்ததற்கான உரிமையை நினைவு படுத்தியது.
இதயத்தில் ஓரத்தில் ஒரு வலியெழ, அங்கே கையில் அகப்பட்ட அந்த அறையின் தொலைக்காட்சி ரிமோட்டை ,அந்த கண்ணாடியை நோக்கி எரிந்தால். அவளையே அவளின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு ,முதலில் ஒன்றும் புரியாத பார்வை, பின்பு தனது பின்பத்தை கண்ணாடி உணர்த்திய உறவு புரிய புரிந்த பார்வை ,என்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அவள் செய்யப் போகும் செயல் புரிய ,சற்றென்ற அவள் தூக்கி எரிந்த ரிமோட்டை கையில் பிடித்தான். அதில் அவளுக்கு கோபம் மூர்க்கமாக மாறியது .அது என்ன செய்கிறோம் பேசுகிறோம் என்று தெரியாமல், " இதை கழுத்தில் போட்டு விட்டால் ,அவன் அத்துமீறி தொட வந்ததை, நீ உரிமையோடு தொட வந்து விட்டாயா" என்று தாலியை காட்டி கேட்டால்

தொடரும்
 
Last edited:

Simma

Moderator
அத்தியாயம் 22

சத்தியமாக இன்ஷித்துக்கு முதலில் அவள் சொன்னதின் பொருள் விளங்கவில்லை .மெல்ல அது புரிய அவன் கண்கள் கோபத்தில் சிவந்தது .கருமையான திராவிட நிறம் என்றாலும் கலையானவன். அவனின் முகம் தகிக்கும் தனலாக மாற , “என்ன சொன்னாய்”, என்று வார்த்தைகளை பற்களில் இடையே கடித்துத் துப்ப, அதில் பயம் எழுந்தாலும் கோபத்தின் அளவு கண்ணை மறைக்க, “ என்ன தப்பாக கூறிவிட்டேன். அதற்குத்தானே வந்து நிற்கிறாய் .அப்போ அவர் இருக்கும் போது மட்டும் எப்படி நல்லவன் போல் ஒதுங்கி, ஒதுங்கி, சீ “, என்று அவள் அருவருப்பு நிறைந்த முகத்தோடு அவன் மீது சகதியை அள்ளி வீசினால்.

யாரோ மீது இருந்த கோபம் யாரோ மீது பாய்ந்தது. தன்னை அந்த அசிங்கத்தில் இருந்து காப்பாற்றியவன் என்பது கூட அவளுக்கு மறந்து போனது. “போதும் இலஞ்சிதா, படித்தவள் தானே சந்தர்ப்ப சூழ்நிலை, உன்னை பாதுகாக்க”, என்று அவன் ஆரம்பிக்க, “ என்னை பாதுகாக்க நீ யார்? நான் உன்னிடம் கேட்டேனா”, என்று அவள் ஏக வசனத்தில் கேட்க, “ நீ கேட்கவில்லை தாயே நானே தான்”, என்று அவனும் குறையாத கோபத்தோடு பேச, “ அதான் உன் இச்சையை தீர்க்க வந்து விட்டாயா”, என்று அவள் அவனை கடுமையாக சாடினால் . “ஆமாம் டி”, என்றவன் சற்றென தாளிட்ட அவள் மிக அருகில் வர, அதுவரை தலைக்கு மேல் ஏரியிருந்த கோபம் அவனின் செயலில் மறைந்து, அவளின் பயன் தலை தூக்க அவளின் உடம்பு வெளிப்படையாகவே நடுங்க ஆரம்பித்தது .

அவனின் மூச்சுக்காற்ற அவள் மீது படும் தூரத்தில் அவன் நெருங்க வெளவெளத்து தான் போனால். அவளின் கண்கள் விரிய, அழகான குண்டு மல்லி போன்ற கண்கள் அகல விரிந்தது. அதில் கண்ணீர் திரண்டு இருக்க, உடல் வேறு பயத்தில் தூக்கி போட அதை பார்த்த இன்ஷித்துக்கு கோபம் குறைந்தது. அவளது கழுத்தை இறுக பற்றியவன், “ நான் உன்னை இப்போது என்ன செய்தாலும் யாரும் என்னை எதுவும் கேட்க முடியாது. எனக்கு இச்சை தான் உன் மீது என்றால், எப்போது என் முன்னிலையில் சுயநினைவுயின்றி அறைகுறை ஆடையுடன் கிடந்தாயோ அப்போதே அதை தீர்த்து இருப்பேன் .அதற்கு இந்த புனிதமான பந்தத்தை ஏற்படுத்தி இருக்க மாட்டேன்”, என்றவன், அவள் கழுத்தைப் பற்றி இருந்த கையை விடுவிக்க கட்டிலில் விழுந்தால் .அவனின் பேச்சின் அர்த்தம் புரிய தன் நிலை குறித்து வெட்கி தான் போனால்.

அவளின் நிலையை கண்டவன் தேவையில்லாமல் அன்றைய நாளின் ஞாபகப்படுத்தி விட்டோமோ என்று தன்னைத்தானே கொட்டிக்கொண்டான். “இலஞ்சிதா”, என்று அவன் மெல்ல அழைக்க ,அது கூட அவளுக்கு அவன் தன் உரிமையை நிலை நாட்டுவது போல் தோன்ற, “ இது என் கழுத்தில் இருந்தால்தானே”,என்று அவள் அந்த தாலியை பற்ற போனால். அதை அவள் பிடிப்பதற்கு முன் இவன் அவள் கையை பற்றி, “ லூசுத்தனமாக எதையாவது செய்யாதே .இரு குழந்தைகளை நினை. இரண்டும் பெண் பிள்ளைகள். இன்று உனக்கு நடந்தது நாளை அவர்களுக்கு எதுவும் நடக்கக்கூடாது என்று ஒன்றே ஒன்றுக்கு தான் நான் இதை உனக்கு அணிவித்தேன். அவர்களுக்கு ஒரு காவலனாக இருந்து விட்டுப் போகிறேன். அதற்கு எனக்கு உரிமை தருவதற்காக மட்டுமே இது உனக்கு. இப்போது நீ இதை கலட்டினாய் ,அப்புறம் பின் விளைவுகள் மிக மோசமாக இருக்கும். என்ன உரிமை எனக்கு இருக்கு என்று கேட்டதினால் தான் உனக்கு இந்த நிலைமை. மேலும் ஏதாவது பேசி என்னை மிருகமாக மாற்றாதே. நான் தொட்ட முதல் பெண்னும் நீ தான், தொடப்போகும் கடைசி பெண்னும் நீ தான். அதனால் மேலும் எதையும் செய்து என்னை வேறு மாதிரி நடக்க வைத்து விடாதே .பொதுவாக எனக்கு சன்டை சச்சரவுகள் பிடிக்காது. ஏன்னென்றால் என் பேச்சே இறுதியாக இருக்கும். அது என் குணம். புரிந்து நட”, என்றவன் கதவு தட்டப்பட அதை திறந்தான். மீனா பாலுடன் நிற்க, “ குடுங்க மா அவளுக்கு ,காலியான வயிறு சாத்தானின் கூடம் .சரியாக புரிந்து நடக்கச் சொல்லுங்கள். எனக்கு குழந்தைகள் ரொம்ப முக்கியம் .அவர்களுக்கு எதிரில் எந்த ஒரு ரசவாதமும் இருக்கக் கூடாது”,என்று கூறிவிட்டு வெளியேறி விட்டான்.

அவர் மேஜை மீது பாலை வைத்த உடன், அவரைக் கட்டி அணைத்து, “ அத்தை”, என்று கதறி விட்டால் .கீழே இருந்த இன்பாவால் அவள் அழுகை உணர முடிந்தது .ஒரு கட்டியை நீக்குவதற்கு எப்படி அறுவை சிகிச்சை தேவையோ அதே போல் அவள் வாழ்வில் உள்ள சங்கடங்கள் போய் மறுமலர்ச்சி வர இன்ஷித் தேவைப்படுகிறான் .ஒரு வேலை இப்படி நடக்க வேண்டி இருந்ததால்தான் என்னவோ இதுவரை அவனுக்கு திருமணம் தடைபெற்று இருக்கிறது என்று நினைத்த இன்பா அனைத்தையும் அவன் பார்த்துக் கொள்வான். நாம் அவனுக்கு பக்கபலமாக இருந்தால் மட்டும் போதும் என்று நினைத்து மன சாந்தி அடைந்தான்.

“ஏன் இப்படி அழுது கொண்டே இருக்கிறாய். நடப்பது அனைத்தும் நம் கையை மீறி நடக்கும் போது அது தெய்வத்தின் சிந்தைப்படி நடக்கிறது என்று அமைதி காத்து விட வேண்டும். வலி தான் இல்லை என்று சொல்லவில்லை, அதனால் அழுது என்ன பயன்? அவனும் விடாப்படியாக இருக்கிறான். அதுபோல அமைதியாக. இரு பேசி சன்டையிட்டு இன்னும் காயப்படுத்தி விடாதே குழந்தைகளை. ஏற்கனவே இன்பா ராஜேஷ் மாப்பிள்ளை செய்தது போதும். எங்களுக்கும் வயதாகிறது .போதும் வரை போராடி ஆயிற்று. இனி தெய்வத்திடம் ஒப்படைத்து விடு” ,என்று கூறி அவளை தேற்றி பாலை குடிக்க வைத்தார். மாத்திரை வேலை செய்ய அவள் கண் அசந்த உடன் வெளியே வந்தார்.

இன்ஷித் அமர்ந்திருக்க , “தூங்கி விட்டாள் ,நீயும் போய் படு”, என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். இவன் சென்று அவளை பார்க்க அமர்ந்த வாக்கிலே படுத்திருந்தனால் குறுகிப் போய் படுத்திருந்தாள். கால்களை பிடித்து நேராக்கி போர்வையை போர்த்தி விட்டான். அவளின் சீரான சுவாசத்தால் அவள் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று விட்டால் என்பதை உணர்ந்தான். தன்னை சுத்தப்படுத்தி இரவு உடைக்குமாறி வந்தவன் ,எங்கே படுப்பது என்று சிந்திக்க, ஏனோ அவள் அருகில் படுக்க, அதுவும் அவள் நினைவில்லாமல் படுப்பது தவறு என்று நினைக்க ,ஒரு போர்வையை எடுத்து கீழே விரித்து படுத்து விட்டான். தூங்கி சற்று நேரம் இருக்கும், “ வேண்டாம் ராஜேஷ் பக்கத்தில் வராது”, என்று அவள் மறுபடியும் பயத்தில் அலறி கூனிக்குறுகி துடிக்க எழுந்தாள். இன்ஷித் எழுந்தவன், விளக்கை போடக் கண்டது கண்களில் இறுக்க மூடி உயிர் துடிக்க கூனி குருகி அலரும் இலஞ்சிதாவை தான். இவன், “ இலஞ்சிதா கண்ணை திற”, என்று அவன் கத்த, அது அவளுக்கு கேட்காமல் போக தான் சொன்னதையே சொல்லி பிதற்றிக் கொண்டிருந்தால். அவளை நெருங்கி கண்ணை திறந்து பார் , “யாரும் இல்லை”, என்று எவ்வளவோ கூற ஒரு வழியாக இன்ஷித் குரல் செவிகளை எட்ட, “ இன்ஷித் அவன், அவனைப் போகச் சொல்லு”, என்று பயத்தில் அவன் மீது ஒன்றி, இவ்வாறு பிதற்ற ஆரம்பித்தால்.

“ இங்கே யாரும் இல்லை ,நான் தான் இருக்கிறேன்” என்று அவளை அனைத்து தேற்ற, “ என்னை தனியே விடமாட்டாயே”,என்று மீண்டும் பிதற்ற, “ இல்லை ஒருபோதும் இல்லை, என் குழந்தைகளும் நீயும் எனது உடமை, எனது உலகம்”, என்று அவன் முதுகை வருட ஒருவாறு மீண்டும் உறங்கிப் போனால். அவளது மனது அவனது துணையை நாடுகிறது .ஆனால் வெளியே காட்ட மறுக்கிறாள் என்பதை தெளிவாக புரிந்து கொண்டான் இன்ஷித்.

ஒருவேளை இப்படி தெரியாமல் போயிருந்தால் என்னவோ ஒதுங்கிப் போயிருப்பானோ என்னவோ ஆனால் இனிமேல் அவளே நினைத்தாலும் இவன் ஒதுங்க மாட்டான். விதி என்ன செய்ய காத்திருக்கிறதோ…..

தொடரும்
 
Last edited:

Simma

Moderator
அத்தியாயம் 23

தோட்டத்தின் ஊஞ்சலில் அமர்ந்திருந்தான் இன்பா. எப்போதும் பிள்ளைகளுடனும், இலஞ்சிதா உடனும் இருக்கும் நேரம் இது. அவன் உயிரோடு இருந்த போது, அவன் யாரையும் அருகில் கூட விடமாட்டான். பிள்ளைகள் எப்போதும் தாத்தா, ஆயா உடன் தான். இலஞ்சிதா கூட அவனுக்கு தேவைப்படும் நேரம் தான் அருகில் வரவிடுவான். இறந்த பின் தான் இழந்த சொர்க்கம் அவனுக்கு தெரிந்தது. ஆனால் இன்று இன்ஷித்தின் செயலில் அது மறுபடியும் பறிபோய் விட்டது . பெரும் கவளை தான் ஆனால் அவன் அவர்களுக்கு கானல் நீர் கூட கிடையாது. இன்ஷித்தான் பிரச்சனையின் முடிவு. புத்திக்கு தெரிகிறது ஆனால் மனமோ பெருத்த பாரத்தை கொடுத்தது.

“ என்ன இன்பா”, என்று வந்தார் எமத்தூதர், “ ஐயா அது”, என்று அவன் இழுக்க, “ என்ன உன் மனைவிக்கு திருமணம் நடைபெற்றது போல இன்று”, என்று அவர் கேட்க, “ ஆமாம் ஆனால் அவள் விருப்பம் இல்லாமல்”, என்றான் பட்டென்று, “ அதுவும் மாறும் இன்பா, காரணம் இல்லாமல் காரியம் கிடையாது, ஏன் உன்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லையா”, என்றார் கேள்வியாக, “ அது என்று”, அவன் தயங்க, “ இன்பா ஒன்றை புரிந்து கொள் உன்னால் அவர்களுடன் இருக்க முடியாது. இன்றைய காலகட்டத்திற்கு இதுதான் நல்லது”, என்றார்.

“ புரிகிறது ஆனால் மனதுதான்”, என்றான், “ ஏன் இன்ஷித்தை”, என்று கேட்க, “ சத்தியமாக இல்லை, அவன் சொக்க தங்கம். நான்தான் தவறு. அவன் எவ்வளவோ கூறினான், இன்று கூட கடைசி வரை போராடி பார்த்தான். ஆனால் ராஜேஷால் நிலைமை கை மீறிப் போனது. என் கைகளும் கட்டப்பட்டு இருக்க, அவன் அப்படி செய்ய தள்ளப்பட்டான். அவனை என்றுமே தவறாக நினைக்க மாட்டேன்”, என்றான் தெளிவாக , “இதே தெளிவோடு இரு இன்பா, அதுதான் உனக்கும் அவர்களுக்கும் நல்லது”, என்றார்.

“ அய்யா இன்னும் நான் எதற்கு. எனக்கு தெரியும் அவன் அவர்களையும் என் குடும்பத்தினரையும் நன்றாக பார்த்துக் கொள்வான். அதனால் இனி தயவு செய்து என்னை அழைத்துப் போய் விடுங்கள்”, என்று அவன் கிளம்ப தயாராக, “ இன்பா, நீ வருகிறேன் என்றால் வருவதற்கும், போ என்றால் போவதற்கும் அது ஒன்றும் உன் வீடு அல்ல ,அது நம்மை படைத்தவரின் வீடு. அவர் அனுமதித்தால் மட்டுமே அன்று விட்டு சென்றேன். அதேபோல் உன்னை அழைப்பதற்கும் நேரம் அவர் சொல்வார். அப்போதுதான் உன்னை நான் அழைத்துச் செல்ல முடியும், ஏன் இந்த அவசரம்”, என்று அவர் நேரடியாக அவனிடம் கேட்க, “ அது என்னால் அவள் இன்னொரு ஒருவனுடன்”, என்றான் உள்ளே போன குரலில், “ ஏன் இன்பா உன் திருமண வாழ்க்கையில் எதையாவது அவள் பிடிக்கவில்லை என்று சொன்னால் அதை செய்யாமல் இருந்திருக்கிறாயா”, என்று தூதர் கேட்க, “ இல்லை நான் என் இஷ்டப்படி தான் வாழ்ந்தேன்”, என்றான் எதையும் மறக்காமல், “ இது அவளாக ஏற்ற வாழ்க்கை இல்லை அவள் மீது தினிக்கப்பட்டது. அதுவே உன்னால் ஏற்க முடியவில்லை. ஆனால் நீ அவளுக்கு பிடிக்காததை மட்டும் தானே செய்து வந்தாய். அவள் எவ்வளவு தூரம் அதை சகித்து இருப்பாள். இதற்கு உண்டான பிரதிபலனை நீ அனுபவிப்பாய், அவள் நல்லது விதைத்தால் நல்லதை அறுப்பாள், நீ கெட்டதை விதைத்தாய் நீ அதை மட்டுமே அறுப்பாய்”, என்று விட்டு மறைந்தார். தப்பு செய்தவர்களுக்கு நான் தண்டனை கொடுத்தது போல் எனக்கு கிடைக்கும் இந்த தண்டனையையும் நான் அனுபவித்துக் கொள்கிறேன் என்று எண்ணி பொழுதை களித்தான்.

இலஞ்சிதா மறுபடியும் அசந்து உறங்கியதும் அவளை நன்றாக படுக்க வைத்து விட்டு அவன் மீண்டும் தன்னிடத்திற்கே வந்து படுத்து விட்டான். அடுத்த நாள் விடிய ,எப்போதும் போல் இன்ஷித்துக்கு 5 மணிக்கு முழிப்பு தட்ட எழுந்து அமர்ந்தவன், கண்டது குழந்தைத்தனமான முகத்தோடு தூங்கும் இலஞ்சிதாவை தான். தன் காலை கடன்களை முடித்துக் கொண்டு தன் காலை ஓட்டத்திற்கு சென்றான். அவன் அதை முடித்துக் கொண்டு திரும்பிய போது குழந்தைகள் எழுந்திருந்தார்கள்.

பாலும் முன்னறையில் அமர்ந்து நாளிதழ் படித்துக் கொண்டிருந்தார். மீனா இனிதா சமையல் அறையில் சமையல் செய்து கொண்டிருந்தார்கள். இவன் வந்து அமர்ந்ததும் மீனா பாலுவுக்கு காபி எடுத்துட்டு வர, “ டேய் நீ என்ன குடிப்பாய்”, என்று கேட்க, “ அம்மா எனக்கு பாலில் அவ்வளவு பிடித்தம் கிடையாது”, என்றான் அவன் தயக்கத்துடன். “ எனக்கு நீயும் இன்பாவும் ஒன்றுதான் .இனிமேல் நீயும் இங்கும் அங்கமாய் தான் இருக்கப் போகிறாய். பின் எதற்கு இந்த தயக்கம் எல்லாம் வேண்டாம் இது வேண்டும் என்று உரிமையாக கேள்”,என்று மீனா கண்டிப்புடன் கூறினார். “ சரிமா”, என்றவன், இனிதா இரண்டு பால் கோப்பையுடன் இரினா இதிகா பின்னே ஓடிக்கொண்டிருக்க ,அதை கண்கள் சுருக்கி பார்த்தான் .அதை கவனித்த மீனா, “ அது எப்பவும் அப்படித்தான், காலையில் பாலில் இருந்து இரவு உணவு வரை போராட்டம் தான்”, என்றார் ,பின் அவரே, “ அவன் இருந்தப்ப சத்தம் வந்தா பிடிக்காது . ஏதாவது சொல்லுவான் அதனால் அதற்கு பயந்து பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ கொறித்து விட்டு சென்று விடுவார்கள், ஆனால் இப்போது இனிதாவை ஒரு வழி ஆக்கி விடுகிறார்கள்”, என்றவர் , “நீ உனக்கு என்னடா”, என்றார் மறுபடியும், “ எனக்கு பிளாக் டீ”, என்றவன், “ இரினா”, என்று கூப்பிட தங்கள் ஓட்டத்தை நிப்பாட்டிவிட்டு அவனைப் பார்த்தனர். இதிகா தான், “ குட் மார்னிங், இன்ஷித் பா”, என்று சொல்லி அவன் அருகில் வந்த அமர்ந்தால். அவன் அதற்கு பதில் கூறிவிட்டு நிமிர்ந்து பார்த்தான் இரினாவை. அவள் அதற்கு என்ன என்பது போல் பார்த்தாலே தவிர அவன் அருகில் எல்லாம் வரவில்லை. அவன் அழுத்தமான ஒரு பார்வை பார்க்க மெல்ல வந்தால். அவள் அவனை கடந்து பாலுமிடம் போகப் போக, அவளின் கையைப் பிடித்து தடுத்தவன், அவனின் மற்றொரு பக்கம் அவளை அமர்த்தினான்.

இனிதாவை பார்த்து இங்கே வாருங்கள் என்று செய்கை செய்ய அவர்கள் வந்தவுடன் கையில் இருந்த இரண்டு கோப்பையை வாங்கி இருவரிடமும் நீட்டினான். அவனின் அழுத்தமான பார்வை இருவரையும் குடிக்க வைத்தது. அவர்கள் கோப்பையை மேஜை மீது வைத்த உடன், “ சமத்துக் குட்டிகள்”, என்று அவர்கள் சிகையை கலைத்து விட, இரினா தன் சிகையை தொட்டவுடன் தலையை சிலுப்பினால். அதை உணர்ந்தாலும் அதை அவன் பெரிது படுத்தவில்லை .ஒரு புன்னகை செய்துவிட்டு, “ போய் கிளம்புங்கள்”, என்று பள்ளிக்கு கிளம்பச் சொன்னான். இதிகாவோ, “ இன்ஷித்ப்பா பைக்கில் போவோமா” ,என்று ஆசையாக கேட்க, “ நீங்கள் அடம் பிடிக்காமல் இனிமேல் சமத்தாக சாப்பிட்டால்”, என்றான் ஒரு கண்டிப்புடன் , “சரி”, என்று இதிகா முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டு போக, இரினாவோ எதற்கும் அலட்டாமல் சென்றால்.அவளது முதிர்ச்சியும் வளர்ச்சியும் அவனுக்கு அவள் எப்போதும் வேண்டுமானாலும் பெரியவள் ஆகிவிடலாம் என்று பறைசாற்றியது. அதற்குள் அவளிடம் நிறைய மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்று நினைத்துக் கொண்டான் .

மீனா தேதண்ணீர் கொண்டு வரவும் அதை வாங்கி பருகி விட்டு மேலே சென்றான். குளித்துவிட்டு கிளம்பி வந்தவன் இலஞ்சிதாவின் அறைக்கு சென்றான். கதவு திறந்தே இருக்க லேசாக தட்டி விட்டு உள்ளே சென்றான்.

அவள் நேற்று இருந்த அதே உடையோடு எழுந்து அமர்ந்து இருந்தால் .தலையை கைகளால் தாங்கி பிடித்திருந்தால் .நேற்றைய நாளில் கணம், தூக்க மாத்திரையின் தாக்கம் என்று உணர்ந்தவன், “ இலஞ்சிதா”, என்றான். அவள் நிமிராமல் அமர்ந்திருக்கவும், “ இலஞ்சிதா”, என்றான் சிறு அழுத்தத்துடன் .அதில் அவள் தலை தன்னால் நிமிர்ந்தது . "இப்படியே இருந்தால், குழந்தைகள் பயப்படுவார்கள்”, என்றான், “ அதற்காக உன்னோடு நான் வந்து உரசி”, என்று அவள் வார்த்தையை அக்கினியாய் வீச, அதில் அவன் அவளை ஒரு அழுத்தமான பார்வை பார்க்க, அவள் வாய் தன்னால் மூடிக்கொண்டது.

“ அப்படி நீ என்னுடன் இருந்தாலும் தப்பில்லை. பிள்ளைகளுக்கு ஒரு அம்மா அப்பா என்றால் இப்படித்தான் , என்று தெரியட்டும்”, என்றவன், “ நான் எல்லாவற்றுக்கும் தயாராக தான் இருக்கிறேன்”, என்றான். அதில் அவள் தீயென அவனை முறைக்க, “ இந்த முறைப்பு பேச்சு எல்லாம் என்னிடம் தனியே இருக்கும்போது. வெளியே எந்த ரசவாதமும் இருக்கக் கூடாது. என் வீட்டின் நிலவரத்தை வேறு ஒருவர் அது என் அன்னையே ஆனாலும் பேசுவது எனக்கு பிடிக்காது. என் குழந்தைகள் வளர்ச்சிக்கு தேவைப்படும் நல்ல சூழ்நிலைகளை கொடுப்பது ஒரு தகப்பனான என் கடமை. அதற்கு எந்த ஒரு தடையும் இருக்கக் கூடாது”, என்றான் அதே அழுத்தமான பார்வையுடன். அந்த பார்வை அவளுக்கு முதுகு சில்லிட செய்தது. பின் அவனே, “ எதற்கு எடுத்தாலும் இப்படி நின்ற அறிவுரை வழங்குவதும் எனக்கு பிடிக்காது. நாம் இருவரும் இனைந்து ஒரு நேர்கோளாக பயணித்தால் மட்டுமே நாம் குழந்தைகளுக்கு ஒரு நல்ல முன்னுதாரணமாக இருக்க முடியும் .அதற்கு புரிதல் வேண்டும் முதல்”, என்றான் .அவள் அசையாமல் இருக்கவும், “ இலஞ்சிதா எனக்கும் பொறுமைக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது. நான் ஒரு பத்து நிமிடம் வெளியே அமர்ந்திருப்பேன் .அதற்குள் நீயாக வந்துவிட்டால் என்றால் உனக்கு நல்லது. இல்லை என்றால் நான் வந்து உனக்கு அனைத்தையும் செய்வேன்”, என்றவன் ,அதே அழுத்தமான பார்வையோடு, “ பெட்டர் நீயே செய்து விடு ஏன்னென்றால் நான் ஒரு முறை செய்து வேலையை திருப்பி செய்ய தயங்க மாட்டேன்”, என்று கூறி சென்று விட்டான் .அவள் அவனின் அந்த பார்வை பேச்சு சொன்னது சொன்னதை செய்வேன் என்று. மெல்ல எழுந்து சென்றவல் கிளம்பி அவன் சொன்ன நேரத்துக்குள் வந்து விட்டால் .கதவை திறந்து வந்தவளை கண்டது அவளின் தோற்றத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என்பது தான். ஒரு தாலி சரடை மட்டுமே கூடுதலாக அனிந்திருந்தால். அதேபோல் சிறிய கருப்பு பொட்டு தான். எந்த ஒரு மாறுபாடும் இல்லை என்று மனதில் பட, “ இன்ஷித் மெதுவாக செய்யிடா பாவம் உன்வேகத்திற்கு இது அவள் மனம் சம்பந்தப்பட்டது. பொருள் அல்ல “, என்ற தனக்குத்தானே கூறிக்கொண்டு, “ வா”, என்று கூறிவிட்டு கீழே சென்று விட்டான்.






தொடரும்
 
Last edited:

Simma

Moderator
அத்தியாயம் 24

இன்ஷித் சென்று சாப்பிட அமர யாரையும் நிமிர்ந்து பாராமல் இலஞ்சிதா சமையலறைக்குள் புகுந்து கொண்டால். ஏற்கனவே அங்கு குழந்தைகள் இருக்க , “அம்மா”, என்று தாவி வந்து அனைத்துக் கொண்டனர் .அவளுக்கு கண்கள் கசிந்து கொண்டு வந்தாலும், மீனா சொன்னது போல் இது அனைத்தையும் தெய்வசித்தம் என அமைதி காக்க தொடங்கினாள் .அவர்களை லேசான முறுவல் ஒன்றோடு ஏற்றுக்கொண்டால்.

இரினா என்று இன்ஷித்தின் குரல் கேட்க, இதிகா சிட்டாக பறந்து விட்டால் அவனிடம். இரினா மெதுவாக செல்ல, இதிகா அவன் அருகே அமர்ந்திருந்தால். இரினா பாலுவின் பக்கம் செல்ல போக ,தன் இன்னொரு பக்கம் இருந்த நாற்காலியின் அகற்றி அதை அழுத்தத்துடன் பார்த்தான் இன்ஷித். அதில் இரினா தன்னால் வந்து அதில் அமர்ந்தால். பாலு இவை அனைத்தையுமே மௌனமாகத்தான் பார்த்தார். அவருக்கு புரிந்தது குழந்தைகள் வளர்ந்து விட்டார்கள் .இவனின் இந்த நடவடிக்கை தான் சரி என்று எண்ணியவர் அதை அமைதியாகவே ஆமோதித்தார். மீனா வந்து பரிமாற ஆரம்பிக்க போக , “அம்மா நீங்கள் அமருங்கள். காலையில் இருந்து நீங்கள் தானே அனைத்தையும் பார்த்தீர்கள். கூப்பிடுங்கள் அவளை”, என்றான். அவர் ஏதோ சொல்ல வர ,அதை அவன் பார்த்த பார்வையில், “ இலஞ்சிதா சாப்பாடு எடுத்து வைக்க வா மா. நான் மதிய உணவை பிள்ளைகளுக்கு எடுத்து வைக்க வேண்டும்”, என்று கூறிவிட்டு மறுபடியும் அவர் உள்ளே நுழைய, நீங்களுமா என்று அவள் கண்கள் கலங்கியே விட்டது. ஆனால் அவர் நிமிரவே இல்லை. அவருக்கு புரிந்தது இன்ஷித்தின் செயல். நாளை படையல், அனைவரையும் அவள் எதிர்கொள்ள வேண்டும். அதற்கு முதலில் அவள் திடமாக வேண்டும் என்று எண்ணினார்.

இன்ஷித்திற்கு பொறுமை பறக்க, அவன் வாயை திறக்கும் முன், “ அம்மாடி வா டா இலஞ்சிதா, மாமாக்கு பசிக்குது”, என்று கூப்பிட்டார். மீனா அசையாமல் இருக்க இலஞ்சிதா வெளியே வந்தால் நிமிராமலையை வந்து உணவை பரிமாற ஆரம்பித்தாள். சாம்பார் சூடாக இருக்க, அவன் தலையில் இதை கொட்டினால் என்ன என்று கூட அவளுக்கு தோன்றியது.” பொறு, தனியே அகப்படுவான்”, என்று உள்ளே கறுவிக்கொண்டே பரிமாறினாள். குழந்தைகள் இரண்டு இட்லியை வைத்து இருவரும் மல்லு கட்டினர் .முதலில் இருவரின் உணவு முதல் அனைத்து பழக்க வழக்கங்களை மாற்ற வேண்டும் என்று குறித்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்தான் இன்ஷித். மனதில் கறுவினாலும் அவன் தட்டில் எது குறைந்ததோ அதை பரிமாற அவள் தவறவில்லை. அவனின் வயிற்றை நிறைத்தால் அவனின் மனையால் .பாவம் ஒன்றை மறந்து போனால் கணவனின் இதயத்திற்கு வாசப்படி அவனது வயிறும் நாக்கும் தான் என்று ஆமாம் அவள் அவனின் வயிற்றை நிறைக்க அவனுக்கு அது மனதை நிறைத்தது. அவன் சாப்பிட்டு முடித்தவுடன் கைகளை கழுவி விட்டு வந்தவன் ,இன்னும் ஒரு தட்டை எடுத்து அதில் நான்கு இட்லியை வைத்து அவளை அழுத்தமாக பார்த்தான். எந்த ஒரு பேச்சும் இல்லாமல் சாப்பிட அமர்ந்தால். அவளுக்கு தெரியும் பேசினால் பயன் இல்லை என்று, இதை பார்த்த பாலு மீனாவுக்கு ஒரு நிம்மதியின் சாயல்.

அனைவரும் சாப்பிட்டு முடிக்க இன்ஷித் பைக்கை எடுத்து வர இதிகா சமத்தாக முன்னே ஏறிக்கொண்டு குனிந்து அமர்ந்து கொண்டால். இரினா பாலுவின் கையைப் பிடிக்க, இன்ஷித் பைக்கின் வேகத்தைக் கூட்ட, அதில் பாலு , “போ டா உன் இன்ஷித் அப்பா தானே”, என்று கூறி அவளை பின்னே ஏற்றினார். அவளுக்கு இன்பாவோடு செல்ல அவ்வளவு ஆசையாக இருக்கும். ஆனால் அவன் அவளை ஏற்றியதே கிடையாது. இந்த முதல் பயணம் அவளுக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. அவள் அவனைப் பிடிக்க தயங்கி, பைக்கை பற்றியிருந்தால் .அவன் அவள் கைகளை பற்றியவன் அவனின் வயிற்றில் வைத்து ஒரு சில அழுத்தம் கொடுத்துவிட்டு எடுத்தான்.

பாலுவிடம் , “நீங்கள் கிளம்பி இருங்கள். அவள் இன்று வர வேண்டாம் தேவையில்லாத பேச்சுக்களை தவிர்க்க. படையல் முடியட்டும் பின்பு பார்ப்போம்”, என்று கூறி பள்ளியை நோக்கி சென்றான். காலையிலிருந்து நடந்த அனைத்தையுமே ஒரு பார்வையாளராக மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான் இன்பா.

அங்கு கண்ணன் பார்வையாளர் ஆகி போயிருந்தான். சிவா ஊருக்கு சென்று விட ராஜேஷின் செயல்கள் மற்றும் இன்ஷித்தின் செயல் அனைத்தையும் வீட்டின் மூத்த மாப்பிள்ளை என்பதற்காக மட்டுமே வேலு அவனிடம் வேலு நேற்று இரவு தெரிவித்திருந்தார். அவரின் பேச்சே அவனை தள்ளி நிறுத்தியது. எப்போதும் இப்படி செய்வோமா அல்லது இப்படி நடந்து விட்டது என்று பவ்யமாக பேசி தன்னிடம் ஆலோசனை அனுமதி கேட்டு பேசும் அவர் இன்று ஏதோ உனக்கு தகவல் சொல்கிறேன் என்று சொன்ன விதமே அவனின் தன்மானம் மிகவும் அடிவாங்கியது. ஆனால் ஏற்கனவே இலக்கியாவின் மௌனம் ஒதுக்கம் அவனை ஒரு வழி ஆக்கியது. அவனுக்கே ஆச்சரியம் அவளின் மௌனம் அவனை இவ்வளவு தாக்குமா என்று. ஏதோ ஒரு உடம்பின் ஒரு பாதியை இழத்தது போல் உணர்ந்தான். அதனால் வேலுவின் நடவடிக்கை அவனை பெரிதாக பாதிக்கவில்லை , “அவர் நாளை படையல். அவன் குழந்தையும் அழைத்து வாருங்கள். எல்லாவற்றையும் ஒன்றாக பேசி முடித்து விடுவோம். நான் அக்கா மாமாவிடம் கூறிவிட்டேன். அவர்களும் நாளை வருவதாக கூறி இருக்கிறார்கள் அழைத்து வாருங்கள்”, என்று கூறிவிட்டு பட்டென்று என்று வைத்து விட்டார். வீட்டுக்கு வந்தால் ஒரு ஒப்புக்கு கூட இலக்கியா எதுவும் சொல்லவில்லை. இதே பழைய மாதிரி என்றால் இந்நேரம் கண்ணன் ஆடி தீர்த்து இருப்பான். அவன் அன்னை மட்டும், “ படையளுக்கு காலையிலேயே கிளம்ப வேண்டும், அதனால் முக்கிய அலுவல்களை முடித்துவிடு”, என்று கூறியிருந்தார் .

பள்ளியிலே குழந்தைகளை விட சென்று இன்ஷித் வாசலில் விடாமல் இருவரையும் அவர்களின் வகுப்பறையில் போய் அமர்த்தி விட்டு வந்தான். அதன் பின் அவன் நேராக சென்றது வேலுவின் வீட்டிற்கு. கபிணேஷையும் வர சொல்லி இருந்தான் .இருவரும் ஒன்றாக நுழைய வேலுவின் மனைவி வாசுகி அவர்களை வரவேற்று உள்ளே அமர வைத்தார். இன்பாவின் நண்பன் என்ற முறையிலும் தொழிலில் இவன் ஒரு பங்குதாரன் என்றும் இன்பாவின் வீட்டில் அனைவருக்கும் தெரியும். வேலுவுக்கு ஒரு மகன் மற்றும் மகள். மகள் வித்யா திருமணமாகி கோயம்புத்தூரில் இருக்கிறாள். அங்கே அவள் கணவர் மகாவிஷ்ணு பயோ கருவிகளை தயாரித்து விற்பனை செய்கிறார். அவளும் படையலுக்காக முதல் நாளே வந்துவிட்டால். வேலு ஏற்கனவே இதை பெரிதாக முறைப்படி செய்ய திட்டமிட்டிருந்தார். ஜெயம் மனோகர் காலையில் தான் வந்தனர்.

வேலு வந்து விடவே , “இரு இன்ஷித் மச்சானும் மாப்பிள்ளை இருவரும் வந்துவிடட்டும். ஒன்றாக பேசி விடுவோம்”, என்று கூறி அவனை அமர வைத்தார். வித்யா வந்தவள், “ வா அண்ணா”, என்று இன்ஷித்தை சொன்னவள் , “என்ன டா மிஸ்டர் ஆணழகன்”, என்று கபிணேஷையும் வம்பு இழுத்தாள். சிறுவயது முதல் ஒன்றாக வளர்ந்ததினால் என்னவோ அந்த வீட்டினருடன் நல்ல சிநேகம் உரிமை உண்டு. இவர்கள் பேசிக்கொள்ள வினோத் மனோகரன் மற்றும் மகாவிஷ்ணு வந்துவிட, யார் பேச்சை முதலில் ஆரம்பிப்பது என்று சிறு தயக்கம் நிலவியது. அதற்குள் இலஞ்சிதாவின் அம்மாவும் ஜெயமும் வரவும் , “வாங்க”, என்று இன்ஷித்தை என்ன சொல்லி அழைப்பது என்ற அவர் தடுமாற, “ உங்களுக்கு பிடிக்குதோ பிடிக்கலையோ உங்கள் மகளின் கணவன் தானே அந்த முறையிலேயே என்னை கூப்பிடுங்கள்”, என்றான் இன்ஷித் அவரின் தயக்கத்தை புரிந்து .

அதற்குள் பாலுவை அழைத்துக் கொண்டு இன்பாவின் கடைசி சித்தப்பா சண்முகமும் வந்துவிட்டார். “அதான் தம்பி சொல்லியிருச்சு இல்ல, அண்ணி நடப்பது எல்லாம் நன்மைக்கே”, என்று ஜெயம் கூற , “வாங்க மாப்பிள்ளை, வாங்க தம்பி”, என்று அண்ணன் தம்பி இருவரையும் வரவேற்றார். வேலு ஏற்கனவே ராஜேஷின் செயல்களை மேலோட்டமாக கூறி இப்படி நடந்து விட்டு என்று முடித்திருந்தார் .அதனால் யாருக்கும் இன்ஷித் மேலோ இலஞ்சிதா மேலோ எந்த ஒரு சிறு வருத்தம் கூட இல்லை .இதை ராஜேஸ் அன்னையிடம் சொல்லிவிடலாம் என்று வேலு சொன்னதற்கு வாசுகி மீனாவும் தடுத்துவிட்டார்கள். அப்புறமா அவள் மனைவிக்கு தெரிந்து எதுவும் பிரச்சினை வந்து விடப் போகிறது என்றனர். இப்படி குடும்பம் ஒன்றும் கூடும்போது பொதுவாக வீட்டின் பெண் பிள்ளைகளுக்கு அதிக உரிமை உண்டு. அது போல் இங்கேயும் ஜெயம் கையும் ஓங்கி தான் இருக்கும் .

“அண்ணா நாளை காலை படையல் முடிந்தவுடன், எல்லோர் முன்னிலையும் திருமணத்தை பதிந்து விட வேண்டும்”, என்றார். வேலு பாலுவை பார்க்க, “ ஆமாடா அதுதான் சரி முறையும் கூட”, என்று அவர் முடித்தார். “அது மட்டும் போதாது”, என்று மனோகர் ஆரம்பிக்க , “ஆமாம் மாமா குழந்தைகளின் சட்டப்படி நான் தத்தெடுத்துக் கொள்ள வேண்டும்”, என்றான் இன்ஷித். அங்கே ஒரு கனத்த மௌனம் நிலவ , “ஏன் மாமா யோசிக்கிறீங்க அதுதான் நாளைக்கு எந்த ஒரு பிரச்சனையும் வராது”, என்றார் மகாவிஷ்ணு, “ ஏன் அப்பா தயங்குகிறீர்கள்”, என்றான் வினோத் . “அப்பா நான் இந்த திருமணத்தை செய்ததே, இன்பாவின் இடத்தில் இருந்து அனைத்தையும் பார்ப்பதற்கு தான். அது போக என் மீது நம்பிக்கை இல்லையா”, என்று இன்ஷித் நேராகவே கேட்டுவிட்டான்.


தொடரும்
 
Last edited:

Simma

Moderator
அத்தியாயம் 25

“ டேய் அது இல்லை டா, நாளையே என்றால் இலஞ்சிதா”, என்று அவர் யோசிக்க, “ அண்ணா நாம் அவளுக்கு பேசி புரிய வைத்துக் கொள்ளலாம்”, என்றார் ஜெயம். “ அப்பா அண்ணியை பற்றி யோசிக்க எல்லாம் வேண்டாம் .அவரும் மனோ மாமா அத்தை பேசிக்குவாங்க”, என்றால் வித்யா. “ அப்பா கடையில் என் பங்கு என்ன அனைதையும் தெரியப்படுத்தி விடுங்கள்”, என்றான் இன்ஷித். “ அது எல்லாம் எதுக்கு இன்பாவின் அனைத்தும் இனி நீ தான் அது போக அவனின் கடமையும் உனக்குத்தான்”, என்றார் வேலு. “ உன்னை சிறு வயது முதல் பார்க்கிறோம், அப்புறம் எதுக்கு இது எல்லாம் “, என்று சண்முகம் வினாவ, “ இல்லை சித்தப்பா நாம் கூட்டு குடும்பமாக வாழ்கிறோம். எந்த ஒளிவும் மறைவும் இருப்பது நல்லது இல்லை அல்லவா”, என்றான் இன்ஷித், " ஒளிவும் மறைவு இருக்கக் கூடாதுதான், அதற்காக இந்த பேச்சு எல்லாம் வேண்டாம். எல்லோரும் இந்த ஒற்றுமையோடு இருந்தால் போதும்”, என்றார் வேலு.

“ இந்த தலைமுறையில் இன்பா தான் மூத்தவன். அந்த இடத்தில் இப்போது நீ இருக்கிறாய் பொறுமையாக விட்டுக்கொடுத்து அனுசரித்து அரவணைத்து செல்ல வேண்டும்”, என்றார் ஜெயம். “ஆமா அண்ணா”, என்றான் வினோத் , பின் அவனே அதை ஆமோதிப்பது போல், "எங்களுக்கு மூத்தவர் இன்பா அண்ணாதான் அந்த இடம் இப்போது உங்களுக்கு தான்”, என்றான் வினோத் அவனை முதன்மைப்படுத்தி.

“ அக்கா சொல்வது புரிகிறதா? இன்ஷித். குடும்பம் என்பது கண்ணாடி பாத்திரம் போன்றது .அழகாக பொறுமையாக கையாள வேண்டும்.எங்களுக்கும் வயதாகி விட்டது. நீங்கள் பொறுப்பை எடுத்து கொண்டு நேர்த்தியாக கொண்டு போனால் எங்களுக்கு நிம்மதி சந்தோசம்”, என்றார் வேலு .

“அப்பா போதும் அண்ணா இதுக்கு பயந்து தான் திருமணம் வேண்டாம் என்றான்" , என்று வித்தியா கூற, “ அப்படி சொல்லு”, என்றான் கபிணேஷ். “ சும்மா அவனை வம்பு இழுத்து கிட்டு”, என்று பாலு சடைய, “ என்னப்பா உங்கள் மகனுக்கு வக்காலத்தா”, என்றால் வித்யா, “ இது என்ன விளையாட்டு பேச்சு”, என்று வேலு சொல்ல, “ விடுடா ஏன் என்கிட்ட விளையாடாமல்”, என்று பாலு வேலுவை அடக்கினார். ஒருவாறு அனைத்தையும் பேசி முடித்துவிட்டு நாளை அனைவரும் வாருங்கள் என்று கூறிவிட்டு பாலு சண்முகத்தோடு விடைபெற்றார். கபிணேஷ் இன்ஷித் விடை பெற வெளியே அவர்களோடு வந்த ஜெயம் மனோகர், “ உன் மேல் நிறைய நம்பிக்கை இருக்கிறது இலஞ்சிதா குழந்தைகளோடு சந்தோஷமாக வாழ வேண்டும் நீ”, என்று கூறி விடை கொடுத்தனர்.

மதிய உணவை தன் அன்னை தம்பியோடு முடித்தவன் மீனாவை அழைத்து அவர்கள் சாப்பிட்டார்களா என்று கேட்கவும் தவறவில்லை. அவர்களுக்கு நாளைக்கு பதிவு என்றால் அதற்கு முன் கட்ட நடவடிக்கை முடிக்க நேரம் சரியாக இருந்தது. மாலை சரியாக பள்ளி விடும் நேரம் குழந்தைகளை அழைக்க பைக்கிலே சென்றான். இரினா தயக்கத்தோடு இன்ஷித்தின் பார்வைக்கு கட்டுப்பட்டு அனைத்தையும் செய்தால். இன்ஷித்துக்கு இது ஒரு நல்ல முன்னேற்றமாகத்தான் தெரிந்தது, போகப்போக சரி செய்து விடலாம் என்று எண்ணினான்.

இரினா அவனுக்கு அப்படியே தன் மனையாளை ஞாபகப்படுத்தினால். அவள் அவளின் சாயல், இதிகா அப்படியே இன்பாவின் நகல். வந்து வீட்டில் இறக்கி விட்டவன் அடம்பிடிக்காமல் கொடுக்கும் சிற்றுண்டியையும் பாலையும் குடிக்குமாறு வலியுறுத்திவிட்டு கடையை நோக்கி சென்றான். இவர்கள் அனைத்தையும் முடித்துவிட்டு பாடம் முடிக்க கபிணேஷ் வருவதற்கும் சரியாக இருந்தது. இலஞ்சிதா மௌனமாகவே நடந்து கொண்டால். பிள்ளைகளின் முன்னிலையில் நன்றாக இருப்பது போல் காட்டிக்கொண்டாள். ஆனால் மனதிற்குள் எரிமலை போல் கொதித்து சீறி கொண்டு இருந்தது. கபிணேஷிடம் ஒரு தலை அசைப்பை தந்ததோடு சரி. அவன் குழந்தைகளுக்கு ஓட்டம், சிறு உடல் பயிற்சி என சிறுக சிறுக அவர்கள் மனதை பக்குவப்படுத்தும் பயிற்சிகளை அளித்து வந்தான் தன் அண்ணனின் அறிவுரைப்படி.

இன்ஷித்திடம் காட்டிய கோபத்தையும் விலகலையும் இரினாவால் கபிணேஷிடம் காட்ட முடியவில்லை. கபிணேஷ் அவர்கள் வயதுக்கு இறங்கி அவர்கள் உடன் பழகினான். கூட்டு குடும்பம் மாதிரி இருந்தாலும் நல்லது கெட்டது தான் ஒன்று கூடுவார்கள். தொழில் வரவு செலவு அனைத்தும் வேறு. அதனால் பிள்ளைகளுக்கு அவ்வளவு ஒன்றுதல் கிடையாது இன்பாவின் தம்பிகளோடு .ஆனால் கபிணேஷ் அவர்கள் அளவுக்கு இறங்கி விளையாட கற்றுக் கொடுத்து, படிப்பதில் சந்தேகம் தீர்த்து அவர்களோடு நட்பு பாராட்டவும் அது அவர்களுக்கு ஒரு புதிய அனுபவமாகவே இருந்தது. அவன் அவர்களை சீற்றாட்டினான் தேவதைகளாக கொண்டாடினான். குழந்தைகள் கொண்டாடும் இடத்தில் என்பது போல் இவர்களும் அவனோடு ஒன்றினர்.

கபிணேஷ் விடை பெற்று செல்ல பாலு இன்ஷித்தும் வருவதற்கு சரியாக இருந்தது .இன்ஷித் மேலே சென்று முகம் கை கால் கழுவி வந்தவன் இலஞ்சிதாவின் அறையை எட்டி பார்க்க அவளோ எங்கோ வெறுத்து பார்த்த அமர்ந்திருந்தால். அவனுக்கு அவளிடம் பேச வேண்டியது இருந்தது. ஆனால் குழந்தைகள் இன்னும் சாப்பிடவில்லை அதனால் இவளும் சாப்பிட்டிருக்க மாட்டால். முதலில் சாப்பிட வைத்துவிட்டு பிறகு பேசிக் கொள்ளலாம் என்று நினைத்தவன், அறை கதவை தட்டினான் .அவள் நிமிர்ந்து பார்க்க, இவனை கண்டதும் எழுந்து அமர்ந்தால். அவன் உள்ளே நுழையாமல் , “கீழே வா”, என்றான், அவனுக்கு உண்டான அதே அழுத்தமான குரலோடும் பார்வையோடும் . அவள்தான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டாலே. நம்முடைய எதிர்ப்புக்கு இங்கு எந்த ஒரு பலனும் இல்லை என்று தெரிந்ததினால், மௌனமாகவே நடப்பதை அதன் போக்கில் விட முடிவு செய்துவிட்டால். அதனால் அமைதியாகவே கீழே வந்து மீனா வார்த்த தோசைகளை பரிமாறினால் .

இதிகா சட்னியை தொடாமல் வெறும் சீனியை தூவி தோசையை சாப்பிட ,அதை கண்டித்தான். “ இன்ஷித் பா ப்ளிஷ்”, என்று அவள் அவனிடம் சலுகை கொண்டாட, அவனும், “ ஒன்று என் விருப்பம் போல் ஒன்று உன் விருப்பம் போல்”, என்று அவள் வழியே சென்று அவளை அவனின் வழிக்கு வர வைத்தான். ஒருவாறு அனைவரும் சாப்பிட்டு முடிய ஜெயம் மனோகர் வித்யா மஹாவிஷ்ணு வருவதற்கு சரியாக இருந்தது. இருவருக்குமே இரண்டு பெண் குழந்தைகள். ஜெயம் பெண்பிள்ளைகள் கல்லூரியில் படிப்பதால் இருவரும் வரவில்லை. வித்யா பிள்ளைகள் சிறு பிள்ளைகளாக இருக்க, அவைகள் ஆச்சியுடன் அங்கே வேலு வீட்டில் தங்கி விட்டனர். இலஞ்சிதாவுக்கு வித்யாவோடு நெருக்கம் அதிகம். அதேபோல் ஜெயத்தொடும் நல்ல ஓட்டுதல். இருவரும் இலஞ்சிதாவை அனைத்துக் கொண்டனர். இலஞ்சிதாவுக்கு ஏனோ இருவரையும் பார்த்து கண்கள் கரித்துக் கொண்டு வந்தது. அது ஒரு சிறு கேவலாகவே வெளிப்பட்டது.

“சீதா அழுக கூடாது ,மலைபோல் வந்தது பனியென விலகிற்று .அவன் உனக்கு ஒரு நல்ல துணையாக இருப்பான்”, என்றார் ஜெயம் அவளுக்கு ஆறுதலாக. “ ஆமாம் சீதாக்கா அவர் இன்ஷித்”, என்று மகாவிஷ்ணு என்ன சொல்லிக் கூப்பிடுவது என்று தெரியாமல் தயங்க, “ மாப்பிள்ளை அவன் எனக்கு மகன்தான். அதனால் இன்பாவ என்ன சொல்லுவீர்கள் அதே மாதிரி சொல்லுங்கள்”, என்றார் பாலு , “சரி மாமா”, என்றவர், “ இன்ஷித் மச்சான் உங்களுக்கும் குழந்தைகளுக்கும் ஒரு நல்ல குடும்பம் அமைப்பை தருவார்.நாங்கள் எத்தனை பேர் இருந்தாலும் உரிமையாக ஒரு ஆள் இருந்தால் தானே அது நல்லது”, என்றார். “ சீதா சித்தப்பா சொல்கிறேன் கேள், எனக்கு ஒரு சிறு வயது முதல் இவனை தெரியும். நல்ல அருமையான குணம்”, என்று மனோகர் கூறினார்.

“ நல்ல குணமா , அய்யோ அந்த கண்ணையும் உயரத்தையும் வைத்து எத்தனை உருட்டி மிரட்டி அல்லவா காரியம் சாதிக்கிறான்”, என்று இலஞ்சிதா அவனை உள்ளே கழுவி ஊற்றினால்.அவள் பெற்ற மக்களும் சின்ன இதிகாவோ, “ ஆமாம் தாத்தா சூப்பர்”, என்று அவனுக்கு குடை பிடித்தது .பெரியதோ யாருக்கு வந்த விருந்தோ என்று யாரிடமும் ஒட்டாமல் பாலு கைகளுக்குள் அமர்ந்திருந்தால்.

இவர்கள் பேசுவதை அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த இன்பாவோ, “ நல்லவன் தான். உலக மகா நல்லவன் .என்ன தான் நினைப்பதற்கு மாறாக யாராவது செய்தால் ,மட்டுமே இப்படி ஏதாவது செய்து அவர்கள் சுண்டுவிரலை கூட அசைக்க இடம் கொடுக்காமல் கட்டி வைத்து திருப்பி அடிக்கும் மகா நல்லவன்”, என்ற தன் நண்பனின் பராக்கிரமத்தை நினைத்து சிரித்துக் கொண்டிருந்தான். இன்பா எமத் தூதன் சொன்னது போல் நடப்பதை ஏற்க ஆரம்பித்திருந்தான். இன்ஷித்தோ இவர்கள் பேசும் போது இலஞ்சிதா இரினா முகத்தில் வந்து போன உணர்வுகளை படித்துக் கொண்டிருந்தான்.

“என்ன எல்லாரும் எங்க அண்ணிய பேசி பேசி ஒரு வழியாக்குகிறீர்கள் போல விடுங்க அத்தை பாவம்”, என்று கூறி இலஞ்சிதாவை அழைத்துக் கொண்டு மேலே சென்றாள் வித்யா .அவர்கள் அனைவருக்கும் தெரியும் இலஞ்சிதா வித்யா விடம் மட்டுமே மனம் விட்டு பேசுவாள் என்று. அதனால் அதை சிரிப்போடு பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவர்கள் சென்றவுடன் ஜெயம் மீனாவை அழைத்துக் கொண்டு நாளை ஏற்பாட்டை பற்றி பேச சமையலறைக்கு சென்று விட்டார். மணி பத்தை கடக்க அதை பார்த்து இன்ஷித், “இரினா”, என்றான் அவள் என்ன என்பது போல் பார்க்க, “ போ இனிதா அத்தையோடு படுங்கள் நேரம் ஆகிறது” என்றான். “ இன்ஷித்தப்பா ப்ளீஸ்”, என் இதிகா அடம் பிடிக்க , அவனுடைய அழுத்தமான பார்வை அவளை எழுந்து போக வைத்தது. இரினாவும் இனிதாவை அழைத்துச் சென்றால்.இதை பார்த்த மனோகர், “ இரினா நிறைய மாற வேண்டும்”, என்று கூற, “ குழந்தை தானே சித்தப்பா போகப்போக சரியாகிவிடும்”,என்றார் விஷ்ணு .அதற்குள் மேலே இருந்து வித்யா, “ அண்ணா இவரை அழைத்துக் கொண்டு மேலே வா”, என்று வித்யா குரல் கொடுக்க , இருவரும் மேலே சென்றனர்.

அவர்கள் சொல்வதே பார்த்த பாலுவை மனோகரின் குரல் தடுத்தது. “என்ன மாமா அப்படி பார்க்கிறீர்கள்”, என்று கேட்க , “ இல்லை மாப்பிள்ளை அவனுக்கு திருமணம் என்பதே பிடிக்காது. நானும் எவ்வளவோ முறை அவனிடம் பேசிப் பார்த்திருக்கிறேன். ஆனால் அன்று அவனிடம் அப்படி ஒரு வேகம் அப்படி ஒரு கோபம். ஆனால் ஒரு நல்ல திருமண வாழ்விற்கு”, என்று அவர் தயங்கினார்.


தொடரும்
 
Last edited:

Simma

Moderator
அத்தியாயம் 26

“மாமா இது தெய்வ சித்தம் தான் அன்றைக்கு மட்டும அவன் சரியான சமயத்தில் வரவில்லை என்றால், நம் குடும்பம் மானமே போயிருக்கும் இலஞ்சிதாவையும் இழந்திருப்போம். பிள்ளைகளை யோசித்துப் பாருங்கள், அதனால் எதையும் நினைத்து தவிக்காதீர்கள். இதை நடத்தின தெய்வமே அதையும் செய்யும். இப்போதைக்கு அவன் இவர்களுக்கு சிறந்த காவலன்”, என்றவர் மற்ற விஷயங்களை பேசி முடித்துவிட்டு படுக்க சென்றார். மேலே சென்றவர்களை வித்யா, “ என்ன அண்ணா அண்ணியா ரொம்ப படுத்துற போல”, என்று கேட்க, இன்ஷித் இலஞ்சிதாவை பார்க்க அவளோ தலையை குனிந்து கொண்டால் .இருவர் அமருவது போல் இருந்த இரு சோப்பாகள் இருக்க, பெண்கள் இருவரும் ஆளுக்கு ஒன்றில் அமர்ந்திருந்தனர். விஷ்ணுவோ வந்து தன் மனைவி உடன் அமர இன்ஷித் வந்து இலஞ்சிதாவோடு அமர்ந்தான். அவள் உடல் இறுகுவதை அவனால் உணர முடிந்தது .

“என்ன வித்தி நாத்தனார் எத்திக்சையே நீ உடைக்கிற, அண்ணிக்காக அண்ணனை கேள்வி கேட்கக்கூடாது”, என்று விஷ்ணு சொல்ல, அதுக்கு சிரித்த இன்ஷித், “ விடுங்க மாப்பிள்ளை அதான் எனக்கு நீங்க இருக்கீங்களே”, என்று கூறினான். “அய்யோ மச்சான், நான் எல்லாம் நல்ல அண்ணன் என் தமக்கை தான் எனக்கு முக்கியம்”, என்றார், “ அப்போ எனக்கு பேச யாருமே இல்லையா” என்றவன் பேச்சில் ,அங்கே சிறுநகை பூத்தது,அனைவருக்கும் இலஞ்சிதாவை தவிர, அவளோ இவன் வந்தவுடன் இவனை மனதிற்குள் கழுவி உற்ற ஆரம்பித்தால். அவனின் அருகில் அமர்ந்திருந்தவனுக்கு அவளின் எண்ணோட்டத்தை நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது.

“ என்ன அண்ணா நான் கேட்டதற்கு பதில் இல்லை”, என்று வித்யா வீணாவா, அப்போதுதான் உணர்ந்தான் அவள் விளையாட்டு கேட்கவில்லை என்று ,அப்போது திடீரென இன்பா சொன்னது அவனுக்கு ஞாபகம் வந்தது. “ வித்தியா அண்ணி ஆர்மி டா ,நான் ஏதாவது அவளை கூறிவிட்டாலும் அடித்துவிட்டாலோ போதும் என்னை எதிர்த்து சண்டைக்கு கூட வர தயங்க மாட்டாள்”, என்றதை நினைத்தவனுக்கு வித்யாவின் இப்போதைய முகம் சிரிப்பை உண்டு பன்னியது .அவனையே பார்த்துக் கொண்டிருந்த வித்யா , “அண்ணா”, என்று பற்களை கடிக்க , “ஏய் வித்தி அது என்ன பழக்கம் கணவன் மனைவிக்குள்”, என்று விஷ்ணு கடிந்து வர, “ மாப்பிள்ளை அவள் எனக்கு தங்கை தானே ,அதுவும் அவள் அண்ணியின் மேல் உயிரே வைத்திருக்கிறாள், அதனால் கேட்கிறாள்”, என்றான். “ நான் என்ன பாடாயப்படுத்தினேன், என்று உன் அண்ணி சொன்னால்”, என்று கேட்டான். “அது”,என்று அவள் இலஞ்சிதாவை பார்க்க, அவளோ தலையை நிமிரவே இல்லை.

“ வித்யா அன்று நடந்தது மிகப்பெரிய பிசகு தான். ஆனால் நான் அதற்காக மட்டும் இந்த காரியத்தை செய்யவில்லை. என் இன்பாவின் பிள்ளைகள் என் பிள்ளைகள் .அவர்களுக்கு சகலமும் நானாகவே இருக்கவே செய்தேன். நடந்தது நடந்து முடிந்த ஆயிற்று ,நான் இதை ஏற்றுக்கொண்டு வாழ சொல்லவில்லை .ஆனால் எதிர்த்து சன்டையிட்டு மேற்கொண்டு அதை விமர்சிக்க வேண்டாம், மற்ற வர்களுக்கு ஒரு காட்சி பொருளாக இருக்க வேண்டாம் என்று தான் சொல்கிறேன்”, என்றான் அமைதியாக.

“ அண்ணா தவறு ஆண் மீது இருந்தாலும் கூட இன்றளவும் பெண்தானே விமர்சிக்கப்படுவாள். யோசி அண்ணா வெளியே என்ன பேசுவார்கள் ,அண்ணி என்னமோ உன்னை”, என்று வித்தியா இலஞ்சிதாவின் மனநிலைமையில் நின்று வாதாட, “ பேசுகிறவர்களால் பயன் என்ன, ஒன்றும் இல்லை எனும் போது ,அதை நினைத்து ஏன் கவலைப்பட வேண்டும் .நமக்கு நம்மளுடைய மனசாட்சிக்கு சரி என்றால் போதும்”, என்றான் இன்ஷித் தெளிவாக.

“ வித்யா மச்சான் சொல்வது தான் சரி. பேசுபவர்கள் வந்து எதுவும் செய்யப் போவதில்லை. சீதாக்கா நீங்கள் தெளிவாக இருங்கள். குழந்தைகளுக்கு இதுதான் நல்லது. நீங்கள் இருவரும் சரிவர நடந்து கொண்டால் இரினா தன்னால் மாறுவாள் .அதுதான் அவளுக்கும் நல்லது. சரி நேரமாகிறது”, என்று கூறி விஷ்ணு அழகான முறுகலோடு விடை பெற்று, இன்ஷித் உபயோகிக்கும் அறைக்குள் சென்று படுத்து விட்டான். “அண்ணா நீ சொல்வதை அனைத்தையும் நான் ஆமோதிக்குறேன் .ஆனால் பொறுமை அவர்கள் பாவம்”, என்று கூறி அவளும் விடைபெற்றால்.

“ பாவம் என் தங்கச்சிக்கு, அதுக்கு தெரியல அவங்க அண்ணன் தான் அடி வாங்குகிறான் என்று”, என்றான் இன்ஷித் . அதில் இலஞ்சிதா சற்றென்று எழுந்து விட அவனும் எழுந்து நின்றான் .அவள் விலகி தன் அறைக்கு செல்ல அவள் பின்னே சென்று அறை கதவை மூடி தாளிட்டான். அவள் பின்னாடி திரும்ப பார்க்க, “ நான் என்ன செய்ய அவர்கள் அந்த அறையில், அது போக நேற்று இங்கே தானே படுத்தேன்”, என்றான் அவளுக்கு விளக்கமாக.

இவள் உடனே ஒரு போர்வையையும் தலையனையும் எடுத்து கீழே போட்டு விட்டு தன் இடத்தில் படுத்துக்கொண்டால். “ நீ சும்மா இருந்திருந்தால், நானே இதை செய்திருப்பேன். நான் ஒன்றும் உன்னை செய்யவில்லை, அதற்கு என் தங்கையிடம் போய் சொன்னாய் அல்லவா இதையும் போய் சொல்லு”, என்று மறுபக்கம் வந்து படுத்தான். இவள் சட்டென்று எழுந்த அமர்ந்து, தீயென முறைத்தால்.

“ இப்போ நான் உன்னை என்ன செய்து விடுவேன் என்ற பயம் உனக்கு”, என்றவன் அவளின் கைகளை பற்றி இழுக்க ,மல்லாக்க படுத்திருந்தவன் மார்பில் வந்து மோதினால். அதில், “ சீ”, எனக்கூறி அவள் முகத்தை திருப்பி எழப்போக , அவள் உணரும் முன் அவளை கீழே தள்ளி மேலே வந்து அவள் மீது படர்ந்தான். அசையாமல் அவள் இருக்கைகளையும் வேறு பற்றி இருந்தான்.

“ரொம்ப ஓவரா செய்யாத இலஞ்சிதா. என்னால் எதுவும் செய்ய முடியும், உனது சம்பந்தம் இல்லாமல். ஆனால் அதில் எனக்கு எந்த ஒரு நாட்டமும் இல்லை .அதனால் வீணாக எதையாவது பேசி சிந்தித்து சொல்லி என்னை சீண்டி விடாதே. நாம் இருவருக்கும் வயதும் முதிர்ச்சியும் இருக்கிறது புரிந்து நட”, என்ற உருமி விட்டு அவள் மீது இருந்து எழுந்தான். அவனின் அருகாமையில் மெல்ல நடுங்கிய உடம்பு அவன் எழுந்ததும் அது குறைய, அவள் எழுந்து அமர்ந்தால் .

“கொஞ்சம் காது கொடுத்து கேள். இப்படி ஒவ்வொரு தடவையும் பேசிக்கொண்டே இருக்க மாட்டேன் . இரினாவுக்கும் இதிகாவிற்கும் ஏற்கனவே வயது 10 ஐ தாண்டி விட்டது. அதுவும் இக்கால குழந்தைகள் அவர்களால் நம் உறவையும் உணர்வுகளையும் எளிதாக புரிந்து கொள்ள முடியும். நான் ஒரு நல்ல தகப்பனாக மட்டுமே இருக்க நினைக்கிறேன். மாற்றானாக இல்லை. அதற்கு உன் உதவி எனக்கு தேவை. இப்படி எதிரும் புதிருமாக இருந்தால் அது அவர்கள் மனநிலமையை மிக மோசமாக மாற்றும் .அவர்களுக்கு குடும்ப கட்டமைப்பின் மீது பற்று வராது. உன்னை நீயே மாற்றிக் கொள். நாளை நீ வெளியே வரும்போது இன்னும் நிறைய சந்திக்க வேண்டியதிருக்கும். கஷ்டம் தான் உனக்கு. ஆனால் நீ நேர் கொண்டு நடந்தால் அனைத்தும் சாத்தியம்”, என்றான் மிகவும் தெளிவாக. மனம் வலிக்கத்தான் செய்தது அவளுக்கு .

“ நான் செய்தது உனக்கு ,இன்று தவறாக தெரியும், ஆனால் என்னால் ஒரு நாள் கூட நீ வருத்தப்பட மாட்டாய்”, என்றவன் விளக்கை அணைத்துவிட்டு படுத்து விட்டான். அவனை வெறுத்து பார்த்தபடி அமர்ந்திருந்தால். “ படுத்து தூங்கு இலஞ்சிதா. நாளை காலையில் படையல் அதன் பின்பு இன்னும் நிறைய காரியங்கள் இருக்கிறது. தயவு செய்து யார் எதை வேண்டுமென்றாலும் பேசிக்கொள்ளட்டும். உன் பொறுமையை மட்டும் விடாதே. நான் அன்று சொன்னது தான் எனக்கு என் குடும்ப விஷயம் அது நீயோ பிள்ளைகளோ யாரை எது பேசினாலும் எனக்கு பிடிக்காது. அதனால் புரிந்து நடப்பாய் என்று நம்புகிறேன்”, என்று தூங்கி விட்டான்.

அவளும் ஒருவாறு எந்த ஒரு அலை கழிப்பும் இல்லாமல் தூங்கிவிட்டால். பாவம் அவளுக்கு தெரியவில்லையா புரியவில்லையா என்று அவனின் அருகாமையில் மன அமைதி கொள்கிறது .அதை புரிந்தால் மட்டும் போதுமே அவளது தவிப்பு கூட அகன்றுவிடும்.

காலையில் எழுந்தவன் தன்மிகு அருகில் சீரான மூச்சு விட்டு தூங்கும் இலஞ்சிதாவை தான் கண்டான். அவனுக்கு இந்த வாழ்வு முறை புதுவித அனுபவத்தை கொடுத்தது. தன் 35 வயது வரை அண்ணன் தம்பி என்று சிறு கூட்டில் இருந்தவனுக்கு , இந்த ஒரு மாத காலமாக ஆள் பேருடன் எப்போதும் இருப்பது ,இரு பெண் குழந்தைகளின் பொறுப்பு, உடன்பிறவா சகோதரிகள், இதற்கெல்லாம் மேல் மனைவி என்று தன்னில் சரி பாதியாக வாழ, அவளின் சம்மதமே இல்லாமல் வம்படியாக இழுத்து வந்திருக்கிறேன் என்று தன் சிந்தை எங்கெங்கோ சென்றது . “ஆல் இஸ் வெல்”, என்று தனக்குள்ளே சொன்னவன் , “டேய் நண்பா நீ இங்கு தான் இருக்கிறாய். எனக்கு தெரியும். உனக்கு தெரியும் இது எப்படி நடந்தது என்று. மனதிற்குள் ரொம்ப உடைந்து ஓய்ந்து போய் இருக்கிறாள். நீ தான் சரி கட்ட வேண்டும். பிள்ளைகளுக்கு நான் ஒரு நல்ல தகப்பனாக இருந்த அனைத்தையும் செய்ய வேண்டும் .நீ எனக்கு துணையாக இருப்பாய் என்று நம்புகிறேன்”, என்று மனதோடு பேசிக் கொண்டவன்.

தன் காலை ஓட்டத்திற்காக கிளம்பினான், செல்லும் அவனே பார்த்த இன்பா, “ நீ செய்ததை ஒரு கணவனாக என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் எனக்கு தெரியும், நீ செய்தது அவர்களின் நலனுக்காக மட்டும் தான் என்று . ஏன்னென்றால் அனைவரையும் விட, எனக்கு தெரியும், நீ எவ்வளவு ஒரு குடும்ப கட்டமைப்பை வெறுத்தாய் என்று. இப்படி இது நிகழாவிட்டாலும், நீ நிச்சயம் திருமணம் செய்திருக்க மாட்டாய். இது அனைத்தையும் விட உன்னை தவிர வேறு யாராலும் என் குழந்தைகளை, உன்னை போல் சீராட்டி வளர்க்க முடியாது. அதனால் நிச்சயம் இந்த இன்பாவின் துணை உனக்கு இருக்கும்”, என்று அவனைப் போல இவனும் மனதிற்குள் பேசினான். இன்ஷித் திரும்பி வீட்டுக்கு வரும்போது அனைவரும் எழுந்து இருந்தனர்.


தொடரும்
 
Last edited:

Simma

Moderator
அத்தியாயம் 27

வேலு சண்முகம் குடும்பத்தோடு வந்துவிட்டனர். இன்னும் ராஜேஷின் குடும்பம் மட்டும் வரவில்லை. அவன் மருத்துவமனையில் இருப்பதால் அவர்கள் சரியாக அந்நேரம் வருவதாக ஏற்பாடு. இன்ஷித் வந்து ஹாளில் அமர ,வித்தியா தேதண்ணியோடு வந்தால் .பெண்கள் படையலுக்காக சமையலில் ஈடுபட்டிருந்தன. “ குட் மார்னிங் அண்ணா”, என்றால், அவர் கொண்டு வந்ததை கையில் வாங்கிக் கொண்டவன் , “அனைவரும் டீ காபி சாப்டாச்சா”, என்று வீட்டு மனிதனாக அவன் வீணாவ, அதில் ஒரு நிமிடம் தயங்கி, “ ஆச்சி அண்ணா”, என்றால். அவளின் தயக்கத்திற்கு உண்டான காரணத்தை நொடி பொழுதில் யூகித்தவன், “ நான் பிள்ளைகளுக்கு மட்டும் இன்பா இடத்தில் இல்லை, அவனின் பெற்றோர் உடன் பிறந்தோர் அனைவருக்கும் அவனிடத்தில் இருந்து நடக்க நினைக்கிறேன். நேற்று உன் அப்பா சித்தப்பா சொன்னது போல் வீட்டின் மூத்தவன் என்பது ரொம்ப பெரிய கடமை .அதை சரியாக நிர்வகிக்க வழிநடத்த வில்லை என்றால் கூட்டு குடும்பம் சிதறிவிடும். என்னால் முடிந்த அளவு செய்வேன்”, என்றால் சிறு முழுகளோடு.

“ இது போதும் இந்த நினைப்பு போதும் தம்பி அது நிச்சயம் இந்த குடும்பத்தை உடைய விடாது. வீட்டில் பிறந்த பெண் பிள்ளைகளுக்கு இதுதான் சந்தோஷம் .தன் தாய் தகப்பனின் காலம் பின்பு தன் உடன் பிறந்தோர் அனைவரும் ஒன்றாக இருந்து அவர்களுக்காக நிற்க வேண்டும் என்று தான். வேலு தம்பி ,பாலு அண்ணாவின் பொறுமை தான் என் தாய் தகப்பனின் காலம் பின்பும் இந்த குடும்பம் ஒற்றுமையாக இருக்கிறது. அது போல் எந்த சண்டை சச்சரவு என்றாலும் அதை பொறுமையாக அணுகி பேசிய தீர்த்து உடையாமல் காத்தனர். அதேபோல் தான் நீயும் இருக்க வேண்டும், வினோத் உனக்கு நிச்சயம் தோல் கொடுப்பான். மற்ற அண்ணன் வீட்டில் அவர்கள் இல்லை என்றாலும் பெண் பிள்ளைகள் தான் .அவர்கள் வெளிநாட்டில் இருந்தாலும் அவர்களையும் நல்லது கெட்டதுக்கு அரவணைத்து கொள்ள வேண்டும். ராஜேஷ் செய்தது தவறுதான். அதையும் பேசி சரி செய். அவனை திருத்தி நல்வழிப்படுத்து .அனைவரும் அவர்கள் நிறைகுறையோடு ஏற்றுக் கொள்வது தான் ஒரு குடும்பம் என்பது”, என்றார் ஜெயம் அவன் அருகில் அமர்ந்து குடும்பத்தின் அருமையை உணர்த்தினார்.

“ சரி அத்தை கண்டிப்பாக நீங்கள் எல்லாம் இருக்கும்போது எனக்கு என்ன கவலை”, என்று கூறியவன் நிமிர்ந்து தன் நண்பனை பார்த்தான். இன்பா முகத்தில் ஒரு அழகிய முறுவல், இன்ஷித்துக்கு அவன் நேரில் சிரிப்பது போல் உணர்ந்தான் .ஏனோ காலை முதல் தன் நண்பனின் அருகாமையை உணர்கிறான். அதற்குள் இரினா இதிகா எழுந்து வர அவர்களின் பின்னே, இனிதா பால் கோப்பையை கொண்டுவர , “ இரினா”, என்று அழைத்தான். அவள் , “என்ன”, என்றால் மொட்டையாக, இதிகாவோ, “ குட் மார்னிங் இன்ஷித் பா”, என்றால் . “குட் மார்னிங், இருவரும் பல் தேய்த்து முகத்தை கழுவி வந்து அருந்துங்கள்”, என்றான்.

இரினாவோ, “ சிட்”, என்று வாய்க்குள்ளே முணுமுணுக்க ,இதிகாவோ , “ப்ளீஸ்”, என்றால். “ நோ இரினா, போய் சொன்னதை செய்யுங்கள்”, என்றான் சிறு அழுத்தத்துடன். அந்த அழுத்தம் அந்த பார்வையை அவர்களை கீழ்ப்படிய வைத்தது. சொன்னதை செய்து விட்டு வந்த அமர்ந்தனர். “ இரினா தான் கொஞ்சம் பிடிவாதம், நீ அதை தவறாக”, என்று இன்ஷித்திடம் ஜெயம் கூற வர, “அத்தை, அவள் என் குழந்தை. நான் பார்த்துக்கொள்கிறேன் .அவள் மிதித்தா எனக்கு வலிக்கப் போகிறது”, என்றவனை ஜெயம் பிரியத்தோடு பார்த்தார். “ சரி அத்தை”, நான் கிளம்பி வருகிறேன் என்று மேலே சென்றான்.

இவன் அறையின் கதவை தட்டி விட்டு திறக்க, இலஞ்சிதா கண்ணாடி முன் தன் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த தாலிக்கொடியை வெறுத்து பார்த்துக் கொண்டிருந்தாள். இவன் வந்ததை அவள் மூளை உணர்த்தினாலும் அவள் மனமோ ஊஞ்சலின் கயிறு போல் இன்பா இன்ஷித் இருவருக்கும் இடையே ஆடிக்கொண்டிருந்தது. இவனால் அவளது வெறுத்த பார்வையை தாங்கிக் கொள்ள முடியாமல், “ மன்னிச்சிடு .அன்று நீ போவதிலே குறியாக இருந்தாய். அதுபோக இந்த 25 நாளில் என்னால் பிள்ளைகளின் மனநிலை கணிக்க முடிந்தது. உனக்கன்று நேரிட்ட சம்பவம் தெரிந்தால் அவர்களுக்கு ஆண் வர்க்கத்தின் மேல் இருக்கிற நம்பிக்கையே போய்விடும் .மருந்துக்கும் கூட அதை திருப்பி வர வைக்க முடியாது என்று தெரிந்தது. அதனால் ஒரு உரிமைக்காக மட்டுமே இதை செய்தேன். நான் இவர்கள் வயதில் இருக்கும்போதுதான் அந்த ஆள் என்னை நடுத்தெருவில் விட்டுச் சென்றார் .அதன் பின் என் தாய்க்கு நாங்கள் வளரும் வரை நீ அனுபவித்த அதே தொல்லைகள் இருந்தது. ஆனால் நாங்கள் இருவரும் ஆடவர்கள் .அதனால் அது குறைந்தது. ஆனாலும் எனக்கு திருமணம் குழந்தைகள் பொறுப்பு இது ஒரு வகையான பிடித்தன்மையை எனக்கு கொடுத்தது. அதுபோக இன்பா எனக்கு அவன் ஒரு நல்ல தோழன். ஆனால் ஏனோ அவன் குழந்தைகளுக்கும் உன் விஷயத்திலும் அவன் நிறைய தவறுகள் செய்து விட்டான். அதை கூட இப்போதுதான் உணர்கிறேன். அவன் எனக்கு நான் பட்ட கஷ்டங்களில் எனக்கு தோள் கொடுத்தவன். அதேபோல் அப்பா அம்மா இன்பா நான் வேலைக்காக வெளிநாடு சென்று இருந்தபோது என் தாயையும் என் தம்பியையும் சரிவர கவனித்துக் கொண்டார்கள். அவர்களுக்கு அவனின் இழப்பின் போது தோள் கொடுக்க வேண்டியது எனது கடமை. அதனால் தான் எதையும் யோசிக்காமல், அதுவும் அது என் மேல் வந்து விழுந்தது என்னவோ அவனே தன் கையால் கொடுத்தது போல் உணர்ந்தேன். அதுவும் இதை அணிவித்து உனக்கு குங்குமம் இட்டு நிமிர்ந்த போது அது நம்மில் சிதறியது அவனே ஆசிர்வதித்தது போல் உணர்ந்தேன். இது என் பக்க விளக்கம் தான் நான் எதையும் உன்மேல் திணிக்க விரும்பவில்லை. ஆனால் பிள்ளைகளின் உரிமையை மட்டும் எனக்கு முழு மனதோடு கொடு”, என்று கூறிவிட்டு அவள் பதிலை கூட எதிர்பார்க்காமல் தனக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டு சென்று விட்டான்.

இவள் அவன் பேச்சை அசை போட்டுக் கொண்டிருக்கும் போதே, “ அண்ணி” என்று வந்தால் வித்யா. “ வாருங்கள் கீழே, அம்மா உங்களை கூப்பிட்டார்கள்”, என்று கைபிடித்து அழைத்துச் சென்று விட்டாள். குளித்த ஆடை மாற்றி வெளியே வந்தவன் அவள் இல்லாமல் போக கிளம்பி கீழே வந்தான். அவன் வருவதற்கும் ராஜேஷ் உடன் அவன் அன்னை ஈஸ்வரி மற்றும் மனைவி தனம் வருவதற்கும் சரியாக இருந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை ஜஸ்வந்த்(8). ராஜேஷ் யாரையும் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. தனம் ஈஸ்வரி அவனை தாங்கி வர சண்முகம் எழுந்து வந்து அவனுக்கு தோள் கொடுத்து கீழே இருக்கும் ஒரு அறையில் படுக்க வைத்து விட்டு வந்தார்.

ஈஸ்வரியோ, இன்பா படத்தை பார்த்து , “டேய் மூத்தவனே பார்த்தாயடா உன் தம்பி என் நிலைமையை ,யாரோ அடிப்பதற்கு வந்தவர்கள் இவனை தவறுதலாக அடித்திருக்கிறார்கள். நீ இருந்திருந்தால் ஒரு தூசி கூட உன் தம்பி மீது பட்டு இருக்காது”, என்று புலம்ப, மற்றவர்களுக்கு உண்மை தெரியும் அதனால் வெறும் பார்வையாளர்கள் இருந்தார்கள் . இன்பாவோ , “ஆமா அவன் செய்த செயலுக்கு தூசி எல்லாம் பட விட்டிருக்க மாட்டேன், பெரிய பாரங்களை தான் தலையில தூக்கி போட்டு இருப்பேன்”, என்று நினைத்துக் கொண்டான் .அதற்கு அவர் மருமகள் தனம் இலஞ்சிதாவோடு அமர்ந்திருந்தவள் , “அக்கா, அவர் என்ன சொன்னாலும் அப்படியே நம்புகிறார்கள். எனக்கென்னவோ, இவர் யாரிடமோ வம்பு இழுத்து அதற்காகத்தான் அவர்கள் அடி பின்னி விட்டார்கள் என்று நினைக்கிறேன்”, என்று கூற ,தண்ணீரைக் குடித்துக் கொண்டிருந்த இலஞ்சிதாவோ இவள் கூறியதை கேட்டு ஒரு நிமிடம் தண்ணீர் மூக்கில் ஏறி ,அவளுக்கு புறை தட்டியது. இவர்களுக்கு மட்டும் இன்பாவின் கடைசி ஆசை இது என்பது போல் இந்த திருமணம் அறிவிக்கப்பட்டிருந்தது. “ மீனா அக்கா என்ன இப்படி நம் மருமகளை அதற்குள் இன்னொருவனுக்கு தாரை பார்த்து கொடுத்து விட்டீர்கள்”, என்று இன்ஷித் கீழே இறங்கி வருவதைப் பார்த்து கொண்டே, அங்கே படையலுக்கு எடுத்து வைத்துக் கொண்ட இருந்த பெண்கள் கூட்டத்தில் நின்றிருந்த மீனாவை பார்த்து கேட்டார்.

மீனா கை அந்தரத்தில் தொங்க, ஹாளில் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த ஆண்களின் பேச்சும் நின்றது. அதற்குள் ஜெயம் சுதாரித்து, “ ஈஸ்வரி அண்ணி , வேலு அண்ணா உங்களிடம் சொல்லவில்லையா”, என்று பல்லை கடித்துக் கொண்டு கேட்க, “ ஆமாம் ஈஸ்வரி ,அவசரம் தான் எனக்கு, என் மகன் ஒருவன் போய்விட்டான். காவல் இருக்க வேண்டியவனோ”, என்று பாலு ராஜேஷ் இருந்த அறையை நோக்கிப் பார்த்தார் .

அவர் ஏதோ கூற வர அங்கே இருந்த ஒவ்வொருவருக்கும் அவர் எதை கூறுவாரோ என்று இதயம் தான் நின்று துடித்தது. ஆனால் அதற்கு அவசியமே இல்லை என்பது போல், “ காக்க வேண்டியவன் எவனோ அவன் அதை உடனே ஏற்பதில் தவறில்லையே தானே அக்கா”, என்று கூறிக் கொண்டு இன்ஷித்தின் அன்னை, முகம் நிறைந்த புன்னகையோடு கபிணேஷுடன் உள்ளே நுழைந்தார் .அவரின் மலர்ந்த முகம் வம்பு பேசும் ஈஸ்வரியின் வாயை மூட வைத்தது. அதற்குள் வீட்டில் ஆளாக பாலு வேலு அவர்களை வரவேற்று ஹாளில் அமர வைத்தனர். இன்ஷித் அமைதியாகவே வந்து அன்னை பக்கத்தில் அமர்ந்து கொண்டான்.

பிள்ளைகள் இருவரும் மற்ற பிள்ளைகளோடு சேர்ந்து வெளியே வர, யசோதாவின் கண்கள் குழந்தைகள் மீது படிந்தது. அதை கண்டவர்களுக்கு ஒரு திருப்தி. அதற்குள் அதை கண்டு கொண்ட இன்ஷித், “ இரினா”, என்று அழைத்தான் . அதற்கு அவள் திரும்பி பார்க்க இதிகா ஓடி வந்து நின்றால் அவன் அருகில் . இரினா அசையாமல் நிற்கவும் பாலு, “ அம்மாடி கூப்பிடுகிறார்கள் பார் வா”, என்றவுடன், வந்தால் . கபிணேஷ் சில பைகள் வைத்திருக்க, அதை கையில் வாங்கி யசோதா , அதை, “இரி , இதி”, என்று வாஞ்சையோடு அழைத்து ஆளுக்கு ஒன்றை கொடுத்தார். இதிகா என்னவென்று கேட்க, இரினா அதை பிரித்து கூட பார்க்கவில்லை .

தொடரும்
 
Last edited:

Simma

Moderator
அத்தியாயம் 28

இரினாவின் செயலில் இன்ஷித் கண்கள் இடுங்க, பாலு தான் இங்கே வா, “ ஆயா உனக்கு என்ன கொடுத்திருக்கிறார்கள்”, என்று பார்ப்போம், என்று அவளையே பிரிக்க செய்தார். யசோதாவோ தன்னை எந்த ஒரு சிந்தனை செய்யாமல் சேர்த்துக்கொண்ட இதிகாவை அனைத்துக் கொண்டு, “ உனக்கு நேற்று கபி சித் வாங்கி வந்தான்”, என்றார். “ நான் இதை இப்ப போட்டு வரவா”, என்று அதை பிரித்துப் பார்த்த தன் கண்கள் மின்ன அவள் கேட்க, “ சரி மா”, என்றார். இரினா பாலுவின் அருகில் வந்தவள் ,அதை பிரித்தாள். அந்த அழகிய பிங்க் நிற முழு மேக்ஸி கவுன், கண்னையும் மனதையும் கவர்ந்தது.

அந்த கவுனில் அங்கே அங்கே சின்ன கற்கள் வேலைப்பாடு செய்திருந்தது .தன்னை மறந்து, “ எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது தாத்தா”, என்றால் . “ ஆயா தானே வாங்கி வந்தாங்க ,அவர்களிடம் சொல்”, என்று இரினாவை அழகாக அவரிடம் தள்ளிவிட்டார். அவள் மெல்லிய தயக்கத்தோடு, “ உடை ரொம்ப அழகாக உள்ளது எனக்கு இந்த மாதிரி ரொம்ப பிடிக்கும்”, என்றால் மெல்ல. அதை கவனித்த யசோதா, “ உன் இன்ஷித் பா தான் சொன்னான். இதை இப்படி தைத்து தர சொன்னான். நான் தான் நீ அன்று மாற்றிய பள்ளி சீருடையில் அளவைக் கொண்டு தைத்தேன்”, என்றவரை, “ நன்றி ஆயா என்றவள் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது”, என்று கூறிவிட்டு அவளும் உடைமாற்ற சென்றாள். இருவரும் உடைமாற்றி விட்டு இலஞ்சிதா முன் நின்றார்கள். இதிகா மஞ்சள் நிற சர்ட் டாப்பில் மை நீலகலரில் ஜுன்ஸும் அணிந்து நின்றாள் . அவள் , “ யார் எடுத்துக் கொடுத்தாங்க”, என்று கேட்க, “ நான் தான்”, என்று அந்த அறையின் கதவை திறந்து கொண்டு வந்தார் யசோதா .

ஏற்கனவே அறிமுகம் உண்டு .ஆனால் இன்று இருக்கும் உறவுமுறை புதிதல்லவா .அது ஒரு தயக்கத்தை கொடுத்தது. “வாங்க அம்மா”, என்று வித்யாவும், “ வாங்க அத்தை”, என்று தனமும் எழுந்து நின்றனர். இலஞ்சிதாவும் தயக்கத்தோடு எழுந்து, “வாங்க அத்தை”, என்றால். இரினாவிடம் கண்ட அதே தயக்கம். அதை உணர்ந்தவர் , “இந்த தயக்கத்திற்கும் கலக்கத்திற்கும் எந்த ஒரு அவசியமும் இல்லை”, என்று வாஞ்சையோடு இலஞ்சிதாவின் தலையை தடவினார் .

“அவன் இதை ஒரு அவசரகதியில் செய்திருந்தாலும், சிறு வயது முதல் பொறுப்பான பிள்ளை. அவனது முடிவு என்றுமே தவறாக போகாது. அதற்கு உனக்கு வருத்தம் வரும்படி நேரவும் செய்யாது”, என்றார். அவரது பேச்சில் இலங்கைத் தமிழின் வாடை அடித்தது. அவரின் பேச்சில் அவரை நிமிர்ந்து பார்த்த இலஞ்சிதா, “ புரிகிறது ஆனால் என்னால்”, என்று அவள் ஆரம்பிக்கும்போதே ,கண்களில் கண்ணீர் நிறைந்தது.

இப்போது தானே சொன்னேன்,” கலங்காதே என்று, நீ திடமாக இருந்தாலே போதும்”, என்றவர் பின்னாடி ஓசை கேட்க திரும்பி பார்க்க, கதவை திறந்து கொண்டு ஈஸ்வரி வந்தார். அதை பார்த்து யசோதா, “ நீ கலங்கினால் தான், வம்பு பேசுபவர்களுக்கு அது ஒரு சந்தோஷத்தை கொடுக்கும். நீ எதிர்த்து நின்றால் ஒருவரும் வாயை திறக்க முடியாது", என்றவர், " என்ன ஈஸ்வரியக்கா நான் சொல்வது சரி தானே”, என்று கூறி அவரை தன் கூட்டணியில் சேர்த்துக்கொள்ள ,வம்பு பேச வந்தவர் ஒன்றும் சொல்லாமல் வந்த வழியே சென்று விட்டார்.

“சூப்பர் அத்தை என் மாமியாரை ஒரே பாலில் அனுப்பி விட்டீர்களே”, என்று சொல்லி தனம் சிரிக்க ,அந்த சிரிப்பை கண்டவர் அவளின் இந்த வெகுளி தன்மை தான் ராஜேஷ் தப்பு செய்ய பயன்படுத்திக் கொண்டான் என்று நினைத்தவர், “ ஆமாம் தான். நமக்கு எதிராக அவர்கள் எதை வீசுகிறார்கள் நாம் அதை அவர்களுக்கு எதிராக திருப்பி விட வேண்டும்”, என்றார் .அவரின் அந்த பேச்சில் தனம் எதை உணர்ந்தாலோ, “ சரி அத்தை”, என்றால். “ அப்புறம் வித்யா வீட்டில், எல்லோரும் நலமா”, என்று அவர் கேட்க, “ நல்லா இருக்காங்கமா ,உங்களுக்கு உடம்பு எப்படி இருக்கிறது”, என்றால் . “அதற்கு என்ன இப்போது தானே உன் அண்ணனுக்கு புத்தி வந்திருக்கிறது. மருமகளையும் பேத்தியும் கண்ணில் காட்ட ,அதனால் அது இனிமேல் தன்னால் சரியாக விடும்”, என்றார் . அதற்குள் ஜெயம் வந்தவர் , “எல்லோரும் வாங்க நேரமாச்சு”, என்று சொல்ல அனைவரும் ஹாளுக்கு சென்றனர்.

சரியாக அந்த நேரம் கண்ணன் அவன் குடும்பத்தோடு உள்ளே நுழைய சபரி இலக்கியா கைகளை இறுக்கப்பற்றி இருந்தான். இலக்கியா முகத்தில் கவலை தாண்டிய பூரிப்பு இருந்தது .அது தாய்மையின் பூரிப்பு என்பதை அங்கு இருந்தவர்களால் உணர முடிந்தது. கண்ணனுக்கு முன்பு இருந்த அந்த ஆர்ப்பாட்டமான வரவேற்பு இல்லாமல் போக ,ஏதோ வந்து விட்டாய் ,வீட்டு மாப்பிள்ளை ,என் பெண்னிற்காக என்பது போல் நடந்து கொண்டனர் அனைவரும்.

இலக்கியாகவை சூழ்ந்து கொள்ள ,அவர்களை பார்த்து சபரி அரண்டான். இதிகாவை விட இவனுக்கு ஒரு வயது கம்மியாக இருக்கும் அனைவருக்கும் புரிந்தது இதிகாவை இன்பா கொடுக்க மறுத்ததற்கு பின் தான் இந்த சம்பவம் நடந்திருக்கும் என்று, அது ஒரு விதமான அசோகரியத்தை கொடுத்தது இன்பாவிற்கு.

இன்ஷித் தாமாகவே இலக்கியவிடம் வந்தவன், “ என்ன அக்கா உன் மகனுக்கு தாய் மாமன் சீர் என்ன வேண்டும் என்று பட்டியல் தயாரா”, என்று அவன் அந்த கணத்த சூழ்நிலையை மாற்ற கேட்க, அவனின் நேருக்கு நேரான பேச்சில் இலக்கியா ஒரு நொடி தடுமாறித்தான் போனாள். ஏன்னென்றால் கண்ணனுக்கு இன்ஷித்தை பிடிக்காது. முதலில் அவனை தப்பாக தன் கணவனின் பேச்சால் நினைத்திருந்தாள் .ஆனால் என்று கணவனின் சாயம் வெளுத்ததோ அன்றே மற்றவர்கள் மீது இருந்த கண்ணோட்டம் அவளுக்கு முற்றிலும் மாறியது .இவனை எவ்வளவு வெளிப்படையாக நாம் எவ்வாறு அவமதித்திருக்கிறோம். ஆனால் இன்று உனக்கு நான் இருக்கிறேன் என்று எவ்வளவு பொறுப்பாக வந்து நிற்கிறான் என்று நினைத்து தடுமாறித்தான் போனால் .

அவளின் தடுமாற்றத்தை கண்டு கொண்டவன், “ டே குட்டி நான்தான் உனக்கு மாமா ,என் பெயர் இன்ஷித்”, என்று அவனே தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவன், இலக்கியாவை அவன் பயத்தில் பற்றி இருந்த கையை விடுவித்து, தன்னுடன் இழுத்துக் கொண்டான். அவனது சிரித்த முகம் சபரியை ஒன்றை வைத்தது. “இதிகா மா”, என்று தன் மகளை அழைத்தவன், “என்ன இன்ஷித் பா”, என்று அவள் வந்தவுடன், “ இந்தா உனக்கு ஒரு குட்டி தம்பி”, என்று அவனை அவளுக்கு அறிமுகப்படுத்தி வைத்தான். அவனின் செயல் நடவடிக்கை அனைத்தும் அனைவரையும் கவர்ந்தது. இதிகா அவனை கையோடு அழைத்துக் கொண்டு தன் பட்டாளத்தை சேர்த்துக் கொண்டாள் .

“நான் கேட்டதற்கு பதில் இல்லை .அப்போ நீ இன்னும் என்னை”, என்று இன்ஷித் ஆரம்பிக்க, “ டேய் அது அவளே”, என்று பாலு ஆரம்பிக்க , “இல்லை அப்பா அவள் சொல்லட்டும் அப்போது தானே எனக்கு உரிமை இருக்கா இல்லையா”, என்று அவன் விடாப்படியாக நின்றான். “என் தம்பி எங்கேயும் இல்லை நீதான் என் தம்பி நீதான் போதுமா ,அவனும் இப்படித்தான்”, என்று அவனின் மார்பில் வந்து சாய்ந்து கொண்டால் இலக்கியா. ஏனோ அவன் உரிமையைப் பற்றி பேசியதும் அவளுக்கு இன்பாவின் நினைப்பு, ஏன்னென்றால் அவனும் இப்படித்தான் எதற்கெடுத்தாலும் கோபம் தான் வரும் ,வந்தால் இப்படித்தான் உரிமை, அது இது என்று பேசுவான் .அவன் அவளை சகோதர உணர்வோடு கட்டிக் கொள்ள ,அவள் மனதில் இருந்த பாரம் தீரும் மட்டும் அழுதால். அதை பார்த்த இன்பாவின் பாரமும் குறைந்து தான் போனது. அதை பார்த்திருந்த அனைவரும் இன்ஷித்தின் மேல் மரியாதை கூடியது. “ அக்கா பார் மாமா என்னை முறைக்கிறார், அவர் இடத்தை நான் பற்றி விட்டேன்”, என்று பேசி அனைவரையும் நிகழ் காலத்திற்கு கொண்டு வந்தான் இன்ஷித்.

“ அக்கா நீ என்னை ஏற்றுக் கொண்டது உண்மை என்றால் மாமாவை மன்னித்துவிடு. அழுது சன்டை போடு ஆனா பேசாமல் மட்டும் இருக்காதே. அவர் செய்தது தவறு தான். அதை பேசி சண்டையிட்டு தீர்த்துக் கொள்”, என்றான். கண்ணனின் மனது முதலாவதாக ஆட்டம் கண்டது. அவனால் இலக்கியாவின் மௌனத்தை தாங்க முடியவில்லை. இந்த விஷயம் தெரிந்தால் அழுவாள் சன்டை இடுவாள் என்று நினைத்திருந்தவனுக்கு அவளின் இந்த மௌனம் ,அவளின் கண்கள் இவனுக்கான அந்த நேசம் காணாமல் போனதில் உருக்குலைந்து தான் போனான்.

இந்த மூன்று நாள் அவனுக்கு மூன்று யூகம் போல் தான் கடந்தது .அவனால் இன்ஷித் தனக்காக பேசியதை எந்த வகையில் சேர்ப்பது என்று கூட தெரியவில்லை. ஏன்னென்றால் அவனுக்கு தெரியும் இன்ஷித்துக்கு முன்பே தன் மீது நல்ல மதிப்பு கிடையாது என்பது. இவனால் தான் இன்பா தன் முழு கட்டுப்பாட்டில் வரவில்லை என்பதும். இன்ஷித்தின் பேச்சில் இலக்கியா அதிர்ந்து அவனை திரும்பி பார்க்க , “மாமா என்ன என் அக்காவோடு சன்டை போட தயாரா”, என்று கேட்க, “ மாப்பிள்ளை அவள் என்னிடம் பேசினால் போதும் என்ற தவம் இருக்கிறேன்”, என்றான் தன் கண்களில் அவள் மீது வளியும் உண்மையான நேசத்தோடு. அதில் இலக்கியா இன்ஷித்தின் கைகளுக்குள் நின்றுவாறு அவனை நிமிர்ந்து பார்க்க, “ இலக்கியா எதுனாலும் பேசி சன்டையிட்டு தீர்த்துக்கொள். இப்படி மௌனம் காத்து மனதில் வளர விடாதே. அது உனக்கு நல்லதில்லை”, என்று வேலு கூற, “ சரி சித்தப்பா மன்னித்து விடுகிறேன், முதன் முதலில் என் தம்பி என்னிடம் கேட்டதற்காக”, என்று அவள் சொல்ல, “ டேய் மாப்பிள்ளை நீ எனக்கு தெய்வம் டா”, என்று கண்ணன் இது தான் சாக்கு என்று இன்ஷித்தை அணைப்பது போல் தன் மனைவியும் சேர்த்த அனைத்து கொண்டான்



அங்கு இருந்த அனைவருக்கும் இந்த பெரும் பிரச்சனையை ஒரு நொடியில் சரி செய்து விட்டானே, நிச்சயம் குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை வந்தது. இன்பாவுக்கும் மனதில் சந்தோஷம் பிடிபடவில்லை, தன் அக்காவை எப்படி சரி செய்வது என்று நித்தம் யோசித்துக் கொண்டிருந்தவன் பரிதவித்த அவனது ஆத்மாவிற்கு இது நிம்மதியை கொடுத்தது .உள்ளே படுத்திருந்த ராஜேஷுக்கோ தான் பொறுப்பாக இருந்து செய்யவேண்டிய செயலை, இன்ஷித் செய்தது, அவனுக்கு மன பாரத்தை கொடுத்தது. ஏற்கனவே இன்பாவின் வார்த்தைகள் அவன் காதுகளுக்குள் ஒலித்துக் கொண்டிருக்க, யாரோ தன்னை செருப்பால் அடித்தது போல உணர்ந்தான்.


தொடரும்
 
Last edited:

Simma

Moderator
அத்தியாயம் 29

இன்ஷித்தோ , “பரவாயில்லை மாமா நான் கோடு போட்டால் நீங்க ரோடு போட்டு விடுவீர்கள் போல, இதை எல்லாம் எங்கள் அக்கா தனியே இருக்கும்போது வைத்துக் கொள்ளுங்கள், பார்த்து செய்யுங்கள் எங்கள் அக்காவிற்கு இப்போ மூன்று அல்லது ஐந்து பேர் இருக்கிறோம்”, என்று அவனுக்கு ஒரு கொட்டையும் வைக்க அவன் தவறவில்லை. அவனின் நடவடிக்கை கண்ட இலஞ்சிதாவிற்கு பேசி பேசியே எல்லாரையும் தன் பக்கம் சேர்த்து விடுகிறான் , சரியான வாய்ஜாலக்காரன் என்று கழுவிக் கொண்டிருந்தாள்.

தூரத்தில் இருந்தாலும் தன் மனைவியின் முகத்தில் வந்து போன உணர்வுகளை அவனால் கண்டுகொள்ள முடிந்தது. ஏதோ யோசனை ஆக இரினாவை கண்டவன் சற்றென சிரித்து விட்டான். அவனது சிரிப்பில் அவனை அனைவரும் விசித்திரமாக பார்க்க அப்போதுதான் அவன் செய்த செயல் அவனுக்கு உரைத்தது. இலஞ்சிதா அவனையே பார்த்துக் கொண்டிருந்ததால் .அவன் தன்னையும் இரினாவையும் பார்த்து பின்பு தான் சிரித்தான் என்று அறிந்தவள் ஒருவேளை நாம் மனதில் நினைப்பதை அறிந்திருப்பானோ என்று அவள் யோசிக்க, அவளையே பார்த்து கொண்டு இருந்தவன் அந்த உணர்வையும் படித்தவன் இன்னும் நகைத்தான்.

“டேய் என்ன சிரிப்பு”, என்று இலக்கியா அவன் கையில் போட , “அது அக்கா நான் எல்லாம் பார்த்தாயா வந்த உடனே தம்பியின் வேலையை சரியாக பார்த்துவிட்டேன். ஆனால் நீதான்”, என்று அவன் இழுக்க , “டேய் நான் இப்போ என்ன செய்யல”, என்று இலக்கியா புரியாமல் கேட்க, அவள் மட்டும் இல்லை அங்க இருந்து அனைவருக்கும் ஒன்றுமே புரியவில்லை . “அதுதான் அக்கா அவர்”, என்று தடுமாறி ஒரு குரல் கேட்க ,எல்லாரும் குறல் வந்த திசையை நோக்கி பார்த்தனர் .அனைவரும் முகத்திலும் ஒரு திகைப்பு. குறளின் சொந்தக்காரன் வேறு யாருமில்லை ராஜேஷ்.

“ டேய் உனக்கு முடியல”, என்று ஈஸ்வரி அவனை தாங்கி பிடிக்க செல்ல , “அவன் அம்மா போதும்”, என்று தன் கையை உயர்த்தியவன், “ அங்கேயே நில்லுங்க”, என்றான். அவர் ஏன் என்பது போல் பார்க்க , “அம்மா போதும் நீங்கள் என்னை தாங்கிப் பிடித்தது”, என்று அவன் பேச ஆரம்பிக்க, அவனது குரல் ஒன்று மட்டுமே போதுமானதாக இருந்தது இலஞ்சிதாவின் உடம்பு அதிர. யாரைப் பார்த்துக் கொண்டு இருந்தாலும் தன் மனைவி மீது ஒரு கண்ணை வைத்திருந்த இன்ஷித், அவள் உடம்பு அதிர்வதைக் கண்டு கொண்டான்.

இன்பாவிற்கோ அவளின் அதிர்வு பல வித எண்ணங்களை ஏற்படுத்தியது . அவன் குடித்துவிட்டு அவளிடம் அசுரத்தனமாக நெருங்கும் போது அவள் இப்படித்தான் நடுங்குவாள். இன்று அதே நடுக்கம் ராஜேஷின் பேச்சில் வெளிப்பட்டால், அப்போ என் நடத்தையும், அவன் நடத்தையைப் போல் அவளை பாதித்து இருக்கிறது. என்பதை காலம் கடந்து உணர்ந்தான். தங்களின் 15 வருட திருமண வாழ்வில் அவளை நிதானமாக கையாண்டது போல் அவனுக்கு நினைவில் இல்லை. இன்று அவளின் நடுக்கம் இன்பாவை பலமாக தாக்கியது. எமதூதன் சொன்னது நினைவு வந்தது .அவள் நல்லதை விதைத்தால் நல்லதை அறுப்பாள் நீ கெட்டதை விதைத்தாய் கெட்டதே அறுவடை செய்வாய். ஒரு நிமிடம் அதிர்ந்தவன் துடித்து துடிதுடித்துதான் போனான்.

“ டேய் என்னடா ஏன் அம்மாவை”, என்று இலக்கிய ராஜேஷை அதட்ட, “ அக்கா அவர்களும் ஒரு காரணம்”, என்று அவன் ஈஸ்வரியை குற்றம் சுமத்துவது போல் பேசினான். “நான் என்ன”, என்று அவர் தடுமாற அதற்குள் இலக்கியாவை கண்ணனிடம் ஒப்படைத்துவிட்டு ஈஸ்வரியை தாங்கிப் பிடித்தான். “ராஜேஷ் போதும் எதையும் பேசாதே”, என்றான் தீர்க்கமான பார்வையுடன். அவனின் குரலில் ஒலி இலஞ்சிதாவின் நடுக்கத்தை குறைத்தது. ஈஸ்வரியால் தன் மகனின் குற்றம் சுமத்தும் பார்வையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

“ இன்ஷித் அவன் பேசட்டும்”, என்றால் ஈஸ்வரி அம்மா, “ அவன் ஏதோ”, என்று இன்ஷித் சமாதானமாக பேச முயல, மற்றவர்கள் ஒருநாள் தெரியத்தானே போகிறது அது இன்றைக்கு இருக்கட்டும் என்று மௌனம் காத்தனர். “ அண்ணா என்னை மன்னித்து விடுங்கள்” , என் தன் இரு கரம் கூப்பி ராஜேஷ் இன்ஷித் பார்த்து கும்பிட்டவுடன், “ நீ ஏன்”, என்று ஈஸ்வரி பதற, தனம் அசையாமல் நின்றால் .ஏனோ அவளுக்கு வேலுவின் அமைதி பாலுவின் பேச்சு சந்தேகத்தை உண்டு பண்ணி இருந்தது. “ ராஜேஷ் அது எதுவும் வேண்டாம்”, என்றான் இன்ஷித் .ஆனால் இலஞ்சிதாவின் நடுக்கம் நிறைந்த பார்வை, அவனை ஆயிரம் கேள்விகள் கேட்டது .

“ இது உனது பெருந்தன்மை அண்ணா. ஆனால் தப்பு செய்த நான் தண்டனை அனுபவித்தாக வேண்டும் அல்லவா”, என்றான். “கேட்பதால் யாருக்கு என்ன லாபம்”, என்று வித்யா பட்டென்று கேட்க, “ வித்யா இது என்ன பழக்கம்”, என்று அவள் கணவன் கடிய , “மாப்பிள்ளை அவள் கேட்பது சரிதான். எனக்கு தெரியும் அனைவருக்கும் என் அம்மாவையும் மனைவியும் தவிர்த்து எல்லாம் தெரியும் என்பது”, என்று ராஜேஷ் சொல்ல, அவனது பேச்சு ஈஸ்வரியை பதற வைத்தது. அவரின் பதறளில், “ ராஜேஷ்”, என்று இன்ஷித் தன் பல்லை கடிக்க , “ வந்ததும் என் அம்மா தவறாக பேசினார்கள் தானே, பின் ஏன் என்னை தடுக்கிறீர்கள்?”, என்றவன் , “அம்மா என்னால் தான் இந்த திருமணம் உடனடியாக நடந்தது”,என்று பட்டென்று போட்டு உடைத்தான்.

ஈஸ்வரி அதிர்ந்து அவனை பார்க்க, தனம்மோ எந்த ஒரு அசைவையும் காட்டவில்லை. அங்கே இருந்த யாவரும் தனத்தையும் ஈஸ்வரியையும் அதிர்ந்து பார்க்க, இவர்கள் பேச ஆரம்பித்த உடன் யசோதை பிள்ளைகளை அனுப்பி விட்டார் மேலே. ஈஸ்வரி லேசாக தள்ளாட , “அம்மா”, என்று இன்ஷித் அவரை இறுக பற்ற, அவன் கைதந்த ஆதரவில் ராஜேஷை நோக்கி அடி எடுத்து வைத்தார். இலஞ்சிதா ராஜேஷின் பேச்சில் தடுமாறினாள், தூரமாகவே இருந்தாலும் அவனின் பார்வை அவளுக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்தது.

அருகில் வந்தவர் சுளிர் என்று ஓர் அறை ராஜேஷை , “அண்ணி”, “ அம்மா”, “ ஈஸ்வரி”, “அக்கா”, என்று பல்வேறு குறள்கள் , தன் கையை உயர்த்தியவர் , “எப்படிடா உனக்கு மனது வந்தது? அண்ணி என்பவள் தாயின் மறுபிறப்புடா. ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலைகளில் தான் கொழுந்தனை மணமுடிப்பார்கள். ஆனால் நீ யோசி உனக்கு ஐந்து வயது இருக்கும் போது உன் அப்பா இறந்தார். என் வீட்டில் என்னை மட்டும் தான் வரச் சொன்னார்கள். மறு திருமணத்திற்கு, நான் தான் உன்னை மட்டுமே பற்றி கொண்டு போதும் என்று வாழ்ந்தேன். அன்று அனைவரும் ஒன்றாகத்தான் இருந்தோம். உன் அப்பாவுடன் பிறந்த மற்ற ஆறு ஆண்களும் உடன்தான் ஒரே வீட்டில் இருந்தேன் .இதில் கடைசி மூன்று பேருக்கு அப்போது திருமணம் கூட ஆகவில்லை. என்னை மணமுடித்துக் கொள்ள ரெடியாகத்தான் இருந்தார்கள். உறவினர்கள் சொல்லிற்கு கட்டுப்பட்டு. ஆனால் எனக்கு விருப்பமில்லை என்று தெரிந்த பின் யாரும் என்னை தொந்தரவு செய்யவில்லை .என்னை எவ்வளவு கண்ணியமாக பொன்னை போன்று பாதுகாத்தார்கள் அவர்களால் வளர்கப்பட்ட நீயா, இதை செய்தாய்”, என்று பொங்கி எழுந்தவர், அவனை அடிக்க ஆரம்பித்து விட்டார் .

இன்ஷித் தடுக்க அவரோ ஆக்ரோசமாக தாக்கினார். ஜெயம் மற்ற பெண்கள் அவரை தடுக்க வர எதுவும் கட்டுப்படுத்தவில்லை .தனம் அசையவே இல்லை. இலஞ்சிதா கண்களில் இருந்து கண்ணீர் வளிந்தது. “ ஈஸ்வரி”, என்று பாலுவின் ஒற்றை குரலில் அவர் கை தன்னால் நின்றது. பாலுவுக்கு அவ்வளவாக கோவம் வராது. ஆனால் வந்தால் யாரும் அவர்கிட்ட கூட வர முடியாது .

“மாமா”, என்றவர், “ நீங்கள் எவ்வளவோ கூறினீர்களே ,அவனை கண்டிக்க, நான் தானே ஒற்றை மகன்”, என்று சொல்லி தன்னை தானே தாக்கி கொண்டார். “ அம்மா”, என்று ஈஸ்வரியின் இருகரத்தை பற்றி நிறுத்திய இன்ஷித் , “என்னை விடு இவனை பெற்றதற்கு நான் அவரோடே போய் சேர்ந்திருக்கலாம்”, என்று அவர் கூறிய நொடி , ராஜேஷ், “ அம்மா என்னை மன்னித்துவிடு”, என்று அவர் கால்களில் வந்து விழுந்துவிட்டான். “என்னை தொடாதே ,போ போய் அவள் காலில் விழு. நீ கேட்டு கேடுக்கு தனத்தை வேறு திருமணம் முடித்த அவள் வாழ்க்கையும் கெடுத்துவிட்டேன்”, என்று அவர் வசைபாட, “ அண்ணி அவன் தான் மன்னிப்பு கேட்கிறானே”, என்று வேலு சொல்ல, “ பார் உன் சித்தப்பாவை, உன் அப்பாவிற்கு அடுத்த பிறந்தவர் எத்தனை நாள் நான் தனியாக வீட்டில் இருந்திருக்கிறேன், ஆனால் ஒரு நாள் கூட நீ இலஞ்சிதாவிடம் நடந்து கொண்டது போல் அவரோ இல்லை பாலு மாமாவோ”, என்று அவர் கூறி புலம்ப, “ அம்மா போதும் அவன் ஏற்கனவே உடைந்துவிட்டான். மேலும் இப்படி பேசாதீர்கள்”, என்ற இன்ஷித் கூற, “போதும் தங்கச்சி அவன் தவறை அவன் உணர்ந்துவிட்டான். மன்னித்துவிடு”, என்று மனோகர் கூறினார்.

“ இலஞ்சிதா”, என்று இன்ஷித் கூப்பிட, அவள் என்னவென்று நிமிர்ந்து பார்த்தால். “ நீ அவனை மன்னித்தால் மட்டுமே”, என்ற அவள் கண்ணை நேருக்கு நேராக பார்த்து கூறு அவன் கேட்க, அதில் இருந்த பொருளை உணர்ந்தவள், தன் அருகில் அசைவு இல்லாமல் இருக்கும் தனத்தை பார்த்தால், வெகுளி பெண். இன்று அந்த கண்ணில் இருக்கும் உயிரோட்டம் இல்லை. ஈஸ்வரின் ஏக்கப் பார்வை அவளை அசைத்தது.

“ மன்னிக்கும் அளவுக்கு அது சிறியது இல்லை, ஆனால் இன்பா மாமாவிற்காக”, என்று ஆரம்பித்தவள் சற்று தயங்கி, “ அவரை ரொம்ப பிடிக்கும் .அதனால் விட்டு விடுங்கள் அத்தை, மனதில் நெருடலுடன் படையல் வைத்தால் அது நிறைவை தராது. இன்பா மாமா நிறைவோடு இருக்க வேண்டும்”, என்று முடித்தாள்.

இலஞ்சிதாவின் பேச்சில் இன்பா பூரித்த தான் போனான் .அவளுக்காக அவன் எதையுமே மாற்றி செய்தது கிடையாது .ஆனால் இன்றும் தான் இல்லை என்றாலும் தனக்கு என்ன பிடிக்குமோ அதை செய்ய தவறவில்லை .கையில் கிடைத்த மாணிக்கத்தை பொக்கிஷமாக போற்றி பாதுகாக்காமல் விட்டுவிட்டேனே என்று காலம் கடந்து கவலைப்பட்டான்.

“ பார் இப்போ கூட அவள் எப்படி கூறுகிறாள் என்று பார் அவளைப் போய்”, என்று ஈஸ்வரி ஆரம்பிக்க, “ போதும் அண்ணி”,என்று வேலு அந்த பேச்சை முடித்தார் . “அம்மாடி தனம் ஏதோ புத்தி தடுமாறி செய்து விட்டான்”, என்று வேலு ஆரம்பிக்க அந்த சிலைக்கு உயிர் வந்தது . “விடுங்க மாமா எப்பவும் எதையாவது செய்து வந்த அத்தை துணையோடு தப்பிப்பார் .ஆனால் இன்று அதற்கு வழி இல்லை. அதைவிட அவரே செய்தது தப்பு என்று ஒத்துக் கொண்டிருக்கிறார். பார்ப்போம்”, என்று விட்டு அவளின் அக்மார்க் சிரிப்பை சிரித்தால்.


தொடரும்
 
Last edited:

Simma

Moderator
அத்தியாயம் 30 1

“டேய் பசங்களா வாங்க”, என்று வேலு குரல் கொடுக்க , “அண்ணி இப்படி நீங்க இருப்பதால்தான் அது இப்படி செய்யுது”, என்று வித்தியா தனத்திடம் கூற, “வித்து குட்டி, எப்போ பாரு உங்க அண்ணிகளுக்கு தான் சப்போர்ட், பாவம் அண்ணாக்கள் நாங்கள். கொஞ்சம் எங்களுக்கும் பார்த்து பன்னு”, என்று இன்ஷித் கேலி பேசினான். அவனின் வித்து குட்டியில் அவள் தடுமாறி விட்டால். வினோத் அவளோடு பிறந்தவனாக இருந்தாலும் அவளை தலையில் வைத்து கொண்டாடியது இன்பா தான். அவன் அவளை அப்படித்தான் கூப்பிடுவான். “ அண்ணா”, என்று இன்ஷித்தை அனைத்துக்கொண்டு கதறிவிட்டால். “ வித்து குட்டி , அப்போ ,அண்ணா என்று சும்மாதான் இவ்வளவு நாள் அழைத்தாயா”, என்று அவன் அவளை திசை திருப்பினான்.

குழந்தைகள் வரவும், “ இன்ஷித் தான் இன்பா, இன்பா தான் இன்ஷித்”, என்று கூறி அவன் சிரிக்க அந்த ஒரு நிமிடம் அவனைப் பார்த்து அனைவருக்கும் இன்பா தான் கண்ணில் தெரிந்தான். இலஞ்சிதா அதிர்ந்து பார்க்க, இதிகா ஓடி வந்த அப்பா என்று அணைத்துக் கொண்டால். வித்யா விலகி நிற்க, அவளை குனிந்து தூக்கியவன், அவளை ஒரு கையிலும் மற்றொரு கையில் இலஞ்சிதா அருகில் நின்று இருந்த இரினாவையும் தன் பக்கம் இழுத்து அவளையும் மற்றொரு கையில் தூக்கிக் கொண்டான்.அதில் அவள் உடல் இறுகி தளர்ந்தது. அவள் கண்களில் இருந்து கண்ணீர் அருவியாக கொட்டியது .இரு குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு இலஞ்சிதா அருகில் வந்து நின்றான். அதை பார்த்த அனைவருக்கும் இருந்த சிறு சிறு கலக்கங்கள் கூட அகன்றது.

“ டேய் நீ ஏதோ கேட்டாய் தானே, என்னிடம்”, என்று இலக்கிய ஆரம்பிக்க, “ அது”, என்று இன்ஷித் இழுக்க, “ நீங்க எல்லோரும் தான் பேசி அதை மறந்துட்டீங்க .அதான் என் அண்ணனே அண்ணி பக்கத்தில் வந்து நின்று விட்டார்”, என்றான் ராஜேஷ். “ வேலு சித்தப்பா அப்போ நான் வீட்டுக்கு போயிட்டு அப்புறமா வரேன்”, என்று கபிணேஷ் சொல்ல, ஏன் என்று எல்லோரும் அவனைப் பார்க்க , “டேய் உனக்கு இப்போ என்ன பிரச்சனை”, என்று யசோதா கேட்க, “ ஆமா நீங்க என்ன சொல்லி கூட்டிட்டு வந்தீங்க”, என்று கபிணேஷ் சீரியஷாக கேட்க, “ என்ன சொன்னேன்”, என்று அவர் திருப்பி வினாவ, “ அது காலையில் தே தண்ணீர் கேட்டப்போ”, என்று அவன் ஞாபகப்படுத்த , “என்ன சொன்னேன்”, என்று அவர் மறுபடியும் இழுக்க , “அட போங்க அம்மா பசிக்குது எப்போ கண்ணுல காட்டுவீங்க என்னோட ஜிம் பாடி அதுக்கு தீனி கேக்குது”, என்று அவன் கூறிய தினுசில், எல்லோரும் சிரிச்சிட்டாங்க.

“ அப்புறம் ஆல் ஹேப்பி நானும் ஹாப்பி”, என்று கபிணேஷ் கூற, பாலு, “ சரியான அறுந்த வாளுடா நீ”, என்றார் . “வேறு என்ன செய்ய ஆள் ஆளுக்கு படம் ஓட்டிகிட்டே இருக்கீங்க, சத்தியமா முடியல”, என்றான் படு சீரியஸாக, “ கபிசித் இன்பா அப்பாவிற்கு ஃபர்ஸ்ட் அதுக்கப்புறம் தான் நமக்கு”, என்று இதிகா கூற, “ குழந்தைக்கு தெரியுது உனக்கு தெரியல”, என்று யசோதை காதைப்பிடித்து திருக, அங்கே அனைவரும் முகத்திலும் சந்தோஷம். இரினாவை தூக்கி இருந்த இன்ஷித்திற்கு அவளின் உணர்வை படிக்க முடிந்தது. அவள் முகத்தில் வந்து போன உணர்வுகளை முழுமையாக உணர்ந்த இன்ஷித், “ என்ன லட்டு என்ன யோசனை”, என்றான். அந்த லட்டுவில் அவள் இதயம் நின்று தப்பியது. அவன் அருகில் இருந்த இலஞ்சிதாவோ, “ இந்த ஆரம்பிச்சுட்டான். என் பக்கம் இவள் ஒருத்தி தான் இருந்தா .எப்படித்தான் எல்லாருடைய வீக் பாயிண்ட் தெரியுதோ”, என்று மனதிற்குள் முணுமுணுக்க மட்டுமே முடிந்தது .

“என்ன யோசனை லட்டுமா”, என்று அவன் மறுபடியும் கேட்க, “ ஒன்றும் இல்லை”, என்றால் இரினா சற்று தடுமாறு. அவர்களே பார்த்துக் கொண்டிருந்த அனைவருக்கும் அக்குழந்தையின் தவிப்பு புரிந்து தான் இருந்தது. அவளுக்கு நினைவு தெரிந்த அதற்கு முன் கூட இன்பா ஒரு நாளும் அவளை தூக்கியது கிடையாது. எப்போதாவது தன்சி சண்முகத்தின் மகள் ஊரில் இல்லாத போது, அவனின் வாயிலிருந்து மனதில் இருந்து லட்டு என்று வெளிவரும். தன்சி வளர்ந்த பின் கூட இன்பாவால் இரினாகூட ஒன்று முடியவில்லை. பாலு மற்றும் மீனாவிடமிருந்து இருந்து கொண்டால். இலஞ்சிதாவின் பரிதவிப்பை குறைப்பதற்காக, இரினா தன்னையே சுருக்கிக் கொண்டால். ஆனால் இன்ஷித்தோ அவனின் சிறு சிறு செயல்களால் அவளை தன் ஓட்டை விட்டு வெளியே வரச் செய்கிறான் .அவனின் கரிசனம் மிக்க பேச்சை அதற்கு மேல் கேட்டால் எங்கே தன்னை மீறி அவனிடம் ஒன்றி விடுவோமோ என்று நினைத்த அந்தச் சிட்டு இறங்க முற்பட, இன்ஷித்தோ தன் பிடியை இன்னும் இறுக்கினான்.

அதற்கு மேல் முடியாதது போல், “அப்பா ப்ளீஸ்”, என்றாலே பார்க்கலாம், ஒரு நிமிடம் அங்கே நிறுப்த அமைதி , “யா ஹூ”, என்று ஒரே குறளில் இருவரையும் ஒன்றாக தூக்கிப்போட்டு இன்ஷித் பிடிக்க ,குழந்தைகள் இருவரும் அவனைத் தோளோடு அணைத்துக் கொண்டனர். மற்றவர்கள் எங்கே போட்டு விடுவானோ என்று பதற ,கபிணேஷ் யசோதா பாலு மீனா பதறாமல் நின்றனர். இன்பாவிற்கு இதையெல்லாம் பார்க்க பார்க்க அவன் இழந்த பொக்கிஷத்தின் அளவு தெரிந்தது.

“அவன் பார்த்துக்கொள்வான்”, என்று பாலு மீனா ஒரு சேரக்கூற, தன் மகனை சரியாகத்தான் வளர்த்திருக்கிறோம் என்ற தலைநிமிர்ந்து நின்றார் யசோதை. இலஞ்சிதாவிற்கும் மனதில் அவன் தன் மகள்களோடு பாராட்டும் உறவில், இருந்த சிறு கலக்கங்கள் கூட அகன்றது .மனசு லேசானது. அவனிடம் தனக்கும் தன் குழந்தைகளும் ஒரு பாதுகாப்பை உணர ஆரம்பித்து இருந்தால். அவள் எண்ணோட்டத்தை வழக்கம் போல் படித்த இன்ஷித் “ பயந்துட்டீங்களா லட்டு”, என்று மனையாளை பார்த்துக்கொண்டு பிள்ளைகளிடம் கேட்க, “ அப்பா இருக்கும்போது நாங்கள் ஏன் பயப்படனும்”, என்று இருவரும் இணைத்து கொண்டனர். இரினாவின் குரல் இதிகாவை விட மெலிந்து ஒலித்தாலும் இன்ஷித்துக்கும் மற்றவர்களுக்கும் இது ஒரு நல்ல தொடக்கமாகவே தெரிந்தது.

இலஞ்சிதா முகத்திலும் சிறு புன்னகை அரும்பியது. கபிணேஷ் மறுபடியும் பாலுவை சுரண்ட, “ சரி சரி ஆரம்பிங்க படையலை என்னை சுரண்டியே இவன் ஒருவழி ஆக்கி விடுவான்”, என்று பாலு கூற, “ கபி சித் தாத்தாவை சுரண்டினா சாப்பாடு எல்லாம் கிடைக்காது. ரத்தம் வேண்டும் என்றால் வரும்”, என்ற இரினாவை எல்லோரும் அங்கே அதிசயமாக பார்த்தனர். அதில் அவள் பல்லை கடித்து தலை குனிய, “ சரி சரி பேசுனது போதும்”, என்று வேலு அனைவரையும் திசை திருப்பினார் .

குடும்பம் சகிதமாக இன்ஷித் இலஞ்சிதா உடன் வந்து நின்றான். இன்பாவின் படத்தின் முன் தலைவாழையிலை விரிக்கப்பட்டிருந்தது. அதில் இன்பாவிற்க்கு பிடித்தமான அனைத்துமே நிறைவாக நிரப்பப்பட்டு இருந்தது. விளக்கை இரினா ஏற்ற இதிகா சூடத்தை ஏற்றினால். இலக்கிய சாம்பிராணி தூபமிட பாலு தேங்காய்யை தீபத்தை மூன்று முறை காட்டி உடைத்தார். உடைத்த தேங்காய் வில் பூ பூத்திருக்க , “அண்ணா பார்த்தீங்கள இன்பா மனசு பூரித்துதான் போயிருக்கிறது, அதனால் எந்த குழப்பமும் வேண்டாம்” என்றார் ஜெயம்.

தங்கையின் பேச்சில் சந்தோசமாகவே தண்ணீரை விளாவி விட்டு சூடத்தை காட்டினார். அதன் பின் ஒவ்வெவறுக்கும் திருநீறு குங்குமம் இட்டு கொண்டே வந்தவர் ராஜேஷிடம் வரும்போது ,அவன் தலையில் சிளுப்ப, “ என்னடா”, என்று பாலு கேட்க, ஒரு நிமிடம் கண்களை மூடித் திறந்தவன், தன்னை அணைவாக பிடித்திருந்த வினோத்தை தட்டி விட்டு நேராக நின்று, ஒரு அசட்டு சிரிப்பை சிரித்தன் . “ என்ன பழக்கம் நீயெல்லாம்”, என்று ஈஸ்வரி பதற ஆரம்பிக்க, “ சித்தி”, என்றான் ராஜேஷ் அதில் அனைவரும் அவனை அதிர்ந்து பார்த்தனர்.

தொடரும்
 
Last edited:

Simma

Moderator
அத்தியாயம் 30 2

“ லூசா அண்ணா நீ”, என்று வித்யா வர, “ ஆமாம் டா வித்து குட்டி லூசாத்தான் இருந்தேன் உயிரோடு இருந்த வரைக்கும்”, என்ற உடன், “ இன்பா”, என்று மீனா தாவி வந்து அணைத்துக் கொண்டார். அனைவரும் ஸ்தம்பித்து போய் நின்றனர் . “அப்பா”, என்று இதிகா துடிக்க , இரினா உணர்ச்சிகளின் உச்சத்தில் இருந்தால். இன்ஷித் ஒரு தாய் பறவை போல் அரவணைத்து கொண்டான். ஏதோ தோன்ற இலஞ்சிதாவை அவன் நிமிர்ந்து பார்க்க கண்களின் கருவிழிகளும் வெளியே தெரித்துவிடுவது போல் அசையாமல் சுவாசிக்க மறந்து நிற்க அவளையும் தன் கைவளைவுக்குள் அரவணைத்துக் கொண்டான்.

பாலு தள்ளாடி அவன் அருகில் வர அப்பா என்று அவரை தாங்கி பிடித்துக் கொண்டான் ராஜேஷ் உடம்பில் இருந்த இன்பா. மற்றவர்கள் தங்களின் தத்தும் துணைகளை தாங்கிப் பிடித்தனர் . “அப்பா நீங்கள் எவ்வளவோ கூறுனீர்கள், என்னை மன்னித்து விடுங்கள்” என்றான் உணர்ச்சி மிகுந்த குரலில், அவரையும் தன் தாயையும் அரவணைத்தவாறு, “ அம்மா எப்படி ஒரு ஆண் பிள்ளை வளரக்கூடாது அப்படித்தான் வளர்ந்தேன். நீயும் சித்தியும் நாங்கள் ஒற்றை மகன் என்று தானே இத்தனை செல்லம் கொடுத்தீர்கள். எங்களால் இரு பெண்களின் வாழ்வும் கேள்வி குறி ஆனது. ஆனால் தனம்” , என்று அவன் தனத்தை பார்க்க, “ மச்சான்”, என்று முன்னே வந்தால். “ தனம் இனிமே அவன் எந்த தவறும் செய்ய மாட்டான். சித்தியும் முன் போல் கண்மூடித்தனமாக அவனை நம்ப மாட்டாள். அதனால் இனிமேல் அவனோடு எந்த ஒரு மனச்சுனுக்கமும் இல்லாமல் சந்தோஷமாக வாழு”, என்ற ஆசீர்வதித்து முடித்தான்.

அதற்குள், “ மாப்பிள்ளை என்னை மன்னித்துவிடு”, என்று கண்ணன் இலக்கிய சபரியோடு முன்னே வர, “ மன்னிப்பா நீங்கள் செய்தது எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகம், நான் உங்களை எவ்வளவு நம்பினேன் என் அக்கா இருக்கும்போது இன்னொரு பெண்ணோடு”, என்று இன்பா ஆரம்பிக்க, “ டேய், அவர் செய்த தப்பை தட்டி கேட்கவோ தண்டிக்கவோ எனக்கு மட்டும்தான்”, என்று இலக்கியா அவனை தண்டிக்க வர, “ பார்த்தீர்களா என் அக்காவை, அவள் தூய்மையான நேசத்தை, தப்புதான் செய்தீர்கள் ,அது அந்த பெண் இறந்த பின்பாவது சபரியை தனியே விடாமல், அவனை அவளிடம் மன்னிப்புக்கோரி சேர்த்து இருக்கலாம் அல்லவா”, என்ற இன்பா, “ என் அக்கா உங்களை மனதார மன்னித்து விட்டால் என்பதை இப்போது உங்களுக்காக பரிந்து கொண்டு வரும் போது உணர்கிறேன், அதனால் மனப்பூர்வமாக மன்னிக்கிறேன். என்றும் சந்தோசமாக வாழுங்கள்”, என்று கூறி முடித்தான்.

இன்பாவின் பார்வை குழந்தைகளை தொட்டு மீள்வதை கண்ட இன்ஷித் என்ன கேட்க என்ன சொல்வது என்று செய்வது அறியாமல் நிற்க, இன்பாவின் பார்வை தற்போது இன்ஷித் இலஞ்சிதாவை அனைத்து இருந்த கைகளை தொட்டு மீண்டது.

“இன்பன்”, என்ற ஜெயத்தின் அழுத்தமான குரல் இன்பாவின் அலைப்பாய்தலை நிறுத்தியது. “சொல்லுத்தை”, என்று அவன் கேட்க, “ நீ தான் சொல்லணும் ராசா, உன் வார்த்தைக்காக இருவர் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதில் அவர்கள் தவறு எதுவுமே இல்லை ராசா”, என்ற ஜெயம் அவர்கள் இருவருக்குமான தன்னிலை விளக்கம் தர, “ வேண்டாம் அத்தை. தப்பு எல்லாம் நான் தான். அதை சரி செய்வதற்காகத்தான் இங்கே இருந்தேன். உயிரோடு இருக்கும்போது தோன்றாத அறிவு, உயிர் பிரிந்த பின்பு தோன்றியது. உண்மையான பாசத்தை உணர்ந்தேன். செய்தது தவறு என்று புரிந்தது. சரி செய்ய தான் எண்ணினேன். ஆனால் நான் ஒரு கானல் நீர் என்று புத்திக்கு உறைத்தது. இன்ஷித் தான் நிரந்தரம் . இயற்கையாக அவன் ஒருவனுக்கு மட்டும்தான் அவர்களிடம் பாசம் காட்டவும் உரிமை பாராட்டவும் வந்தது. அவன் அதை சந்தோஷமாகவே செய்தான். ஆனால் இடையில் நடந்தது அவனே எதிர்பாராதது. அதுவும் அந்த தாலி சரடு என்னிடம் இருந்து அவனிடம் சென்றது படைத்தவன் நியதி என்று புரிந்து கொண்டேன். நான் இருந்து அவள் மடிந்திருந்தால் நிச்சயம் எனக்கு நீங்களே மறுமணம் செய்து வைத்திருப்பீர்கள் அல்லவா, பின் அவளுக்கு மட்டும் ஏன் இந்த பாகுபாடு. முதலில் நானும் பரிதவித்தேன். ஏன் இப்போ கூட ஒரு சிறு தவிப்பு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இதை முழுமையாக ஏற்கிறேன். இது தான் சரி அவனைத் தவிர வேறு யாராலும் அவர்களுக்கு நிரந்தர நிம்மதியான வாழ்வை தர முடியாது”, என்று கூறி தன் தாயை தன் தந்தையிடம் ஒப்படைத்துவிட்டு இன்ஷித் அருகில் வந்தான்.

இலஞ்சிதா மற்றும் சுற்றி இருந்த அனைவரும் கண்களில் இருந்து கண்ணீர் அருவியாக கொட்டியது. “ என்னை மன்னிப்பாயா இன்ஷி”, என்று இன்பாவாக இருந்த ராஜேஷ் இரு கரம் கூப்பி கேட்க, “ ஏன்டா இப்படி” என்று தன் முழு கூட்டோடுடோட அவனையும் தன் கைகளில் அரவணைத்துக் கொண்டான். ஆனால் அவன் குழந்தைகளையும்,இன்ஷித்தையிம் தீண்டி விட்டு அதிலிருந்து வெளிவர, இலஞ்சிதா அப்போது கூட நிமிரவில்லை.

“ நீ ஏன் தலை குனிந்து நிற்கிறாய்”, என்று இன்பா நேருக்கு நேராக இலஞ்சிதாவிடம் கேட்க, அவள் கண்களில் இருந்து கண்ணீர் மட்டுமே அவனுக்கு பதிலாக கிடைத்தது. “ தப்பு செய்த நானே தலை நிமிர்ந்து நிற்கிறேன். நீ சூழ்நிலை கைதி. எதுவும் உனது சம்மதத்தோடும் அவனது விருப்பத்தோடும் நடக்கவில்லை. அதற்கு நானே சாட்சி. நான் உனது நிழலாக தான் இருந்தேன். ஆனால் விதி என் கையை கட்டி போட்டது. ஆனால் இது நல்லது தான். நம் இருவருக்கும் ஒரு மன ஒத்த வாழ்வு அமையவில்லை தானே. என்றும் உன்னை நான் மனைவியாக இல்லை ஒரு பெண்ணாக கூட நடத்தவில்லை. அது கூட இன்று நீ ராஜேஷின் குரலுக்கு நடுங்கும் போது தான் உணர்ந்தேன். என்னிடம் நீ இதே நடத்தத்தை தானே காட்டினாய், நீ மட்டும் இல்லை இரினா கூட”, என்றவன், “ இந்த அப்பாவை மன்னிப்பாயா லட்டு”, என்றான் தன் கண்களில் உயிரைத் தேக்கி இரினாவை பார்த்து.

தொடரும்
 
Last edited:

Simma

Moderator
இறுதி அத்தியாயம்

“டேய் அது குழந்தைடா”, என்று பாலு பதற, இரினா அவனின் பேச்சில் இன்னும் நடுங்கி இன்ஷித்திற்குள் நுழைந்து கொண்டால். இன்ஷித் அவளின் முதுகை தலையை தடவி அவளை ஆசுவாசப்படுத்த, இதிகாவோ இன்பாவிடம் செல்ல நினைத்தாலும் ராஜேஷின் சாயல் அவளை அச்சுறுத்தியது. அதில் அவள் மேலும் இன்ஷித்தோடு ஒன்ற, இன்ஷித்துக்கு அவர்களின் உணர்வுகள் புரிய, “ அத்தை”, என்று ஜெயத்தை அழைத்து, இலஞ்சிதவை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு, இரு குழந்தைகளின் தன் கையில் தூக்கிக் கொண்டு ராஜேஷ் அருகில் சென்றான். ராஜேஷ் விரித்திருந்த இரு கைகளுக்குள் புகுந்து கொண்டான். “ லட்டு பட்டு”, என்று இருவரையும் கொஞ்சி தீர்த்தவன்,.

“ கபி, யசோ அம்மா ”, என்று கூப்பிட, “ அண்ணா”, என்று அருகில் வந்த கபிணேஷிடம் , “இனிமேல் இவர்கள் உன் பராமரிப்பில் , யசோ அம்மா வளர்ப்பில் , இன்ஷித் பாதுகாப்பில் தான். மனப்பூர்வமாக தாரை வார்த்து தருகிறேன்”, என்றவன் இன்ஷித்துடன் இருந்த இருவரையும் கபிணேஷ் அருகில் இருந்த யசோ அம்மா கையில் ஒப்படைத்தான். அனைவரின் மனமும் நிறைந்து தான் போனது. “ இன்பா ஏண்டா இப்படி நல்லா இருந்திருக்கலாம் தானே”, என்று யசோதா அம்மா பரிதவித்தார்.

“ இன்ஷித் உன் மனைவியோடு நில்”, என்று இன்பா கூற, “ டேய் நான் எதுவும்”, என்று இன்ஷித் பரிதவிக்க, “ எனக்கு உன்னை தெரியாதா? யாரை புரிந்து வாழ்ந்தேனோ இல்லையோ, ஆனால் நீ எனது நிழல். உன்னை அங்குல அங்குலமாக எனக்குத் தெரியும் .எதற்கு இந்த பரிதவிப்பு இது ஆண்டவனின் திட்டம். முழுமனதாக தான் கூறுகிறேன்”, என்று கூறி இன்ஷித்தை இலஞ்சிதாவின் அருகில் நிறுத்தினான். “கபி குழந்தைகளை அவனிடம் கொடு”, என்றவன், “ அப்பா சித்தப்பா மாமா அனைவரும் அவர்களை ஆசிர்வதியுங்கள் .அவர்களை அவனோடு அனுப்பி விடுங்கள் .அவர்களின் வாழ்வு அவனின் நிழலில் தொடங்கட்டும். தெய்வத்திடம் வேண்டிக் கொள்ளுங்கள் எனது அடுத்த பிறப்பாவது நல்ல பிறப்பாக இருக்கட்டும்”,என்றான் .

அனைவரும் அவர்களை ஆசிர்வதிக்க இலஞ்சிதா மௌனமாகவே இருந்தால். பெண்கள் பந்தி பரிமாற குழந்தைகளுடன் இன்ஷித் இலஞ்சிதா அமர்ந்து சாப்பிட இன்பா பார்த்து மனம் நிறைந்தது .அவனின் கண்களில் மட்டும் எமத்தூதன் தென்பட அவனுக்கு புரிந்தது .அவன் விடைபெறும் நேரம் வந்துவிட்டது என்று.

“ நான் கிளம்பனும்”, என்று இன்பா கூற பாலுவும் மீனாவும் அவனை இறுக அனைத்து கொண்டு கதற ஆரம்பித்துவிட்டனர். வேலு நிதர்சனத்தை உணர, “ அண்ணா அவனின் ஆத்மாவுக்கு அமைதி வேண்டும் அல்லவா”, என்று கூற பாலு மெல்லத் தெரி மீனாவை தன் கைபிடிக்குள் கொண்டு வந்தார். இன்பாவிற்கு ஏனோ இலஞ்சுதாவின் மௌனம் நெரிட , அவனின் பரிதவிப்பு மிகுந்த முகம் இன்ஷித் அவனைக் கூர்ந்து கவனிக்க செய்தது. அவனின் கண்கள் இலஞ்சிதாவை வட்டமிடுவதை புரிந்து கொண்டவன், “ இலஞ்சிதா நாங்கள் எவ்வளவு கூறினாலும் அவனின் ஆத்மா சாந்தி அடையாது. உன் மனதிறப்பு அவசியம்”, என்றான் இன்ஷித் இன்பாவை பார்த்துக் கொண்டே. அதில் இருக்கும் உண்மை புரிந்தாலும் இலஞ்சிதா மௌனம் காக்க, “ என்னை மன்னித்துவிடு, என்று கூறி நான் உனக்கு செய்த அனைத்தையும் அந்த ஒற்றை வார்த்தையில் குறைக்க விரும்பவில்லை .எனக்கு நான் உனக்கு செய்த அனைத்திற்கும் தண்டனை வேண்டும். ஆனால் உன் ஒற்றை வார்த்தை எனக்கு மனதில் ஒரு ஆறுதலை தரும். அதை எனக்கு தருவாயா”, என்று அவன் மன்டியிட்டு அவள் முன்னிலையில் யாசகம் கேட்டு கையேந்தி நின்றான்.

அதில் சட்டென நிமிர்ந்தவள் , “மாமா நான்”, என்று அவள் இன்ஷித் இன்பா இடையே தள்ளாட , அவளின் நிலையை உணர்ந்த இன்பா , “இன்சித் அவளை பிடித்துக்கொள்”, என்றவன் ,இன்ஷித் அவளை தன் கைவளைவுக்குள் கொண்டு வந்தவுடன், “ நீ அவனின் மனைவி .அதை நான் முழுமனதாக கூறுகிறேன். உனது இந்த கலக்கம் அவசியமற்றது. அழாதே, இதுதான் நீ உன் வாழ்வில் அழும் கடைசி அழுகையாக இருக்க வேண்டும். நமது பிள்ளைகளோடு நமது குடும்பத்தோடு சந்தோஷமாக வாழ். உனக்கு கணவனாக நான் எந்த நியாயமும் செய்யவில்லை. நிச்சயம் உனக்கு மகனாக நியாயம் செய்வேன்”, என்றான்.

பின் இன்ஷித்தை பார்த்து, “நீ சொன்னதைப் போல் நமது குடும்பத்தின் அடுத்த தலைமுறை நீ. அக்கா தங்கைகள் அத்தைகள் தம்பிகள் அனைவரையும் அரவணைத்து ,நான் வாழாத பெருவாழ்வை நீ வாழ வேண்டும். என்றும் நான் உன்னோடு இருப்பேன், வருகிறேன்”, என்று அனைவரையும் பார்த்துக் கொண்டே கூறினான்.

“அப்பா”, என்று இதிகா இரினா கபிணேஷிடம் இருந்து இறங்கி இன்பாவை அனைத்தும் கொண்டனர். இருவரையும் ஆசை தீர கொஞ்சி நெற்றியில் முத்தம் வைத்தவன் , “நான்தான் இன்ஷித் , .இன்ஷித் தான் இன்பா”, என்றவன், “ போகிறேன்”, என்றான். ராஜேஷ் தள்ளாட குழந்தைகளோடு, அவனை இன்ஷித் பற்ற பிள்ளைகள் விழாமல் ராஜேஷ் அவர்களை தாங்கிக் கொண்டான். முதலில் ஒன்றும் புரியாமல் இருந்த ராஜேஷ், பின் அனைவரின் முகத்தில் இருந்த உணர்வுகளும் அவனுக்கு நடந்ததை பறைசாற்றியது. “ அண்ணா என்னை மன்னித்துவிடு”, என்று குழந்தைகளை அணைத்துக் கொண்டான் .

ஒருவாறு எல்லாரும் ஒரு நிலைக்கு வர, வேலு வினோத்தை அழைத்து பதிவர் மற்றும் வக்கீலை அழைத்து வரச் சொன்னார். அவர்கள் வந்தவுடன் எல்லா காரியங்களும் விரைவாக நடந்தது. இலஞ்சித்தாய் இன்ஷித் திருமணம் பதிவேற்றப்பட்டது. பிள்ளைகள் முறையாக இன்ஷித் தத்தெடுத்துக் கொண்டான். பாலு மீனா மனப்பூர்வமாக இலஞ்சிதா குழந்தைகளை இன்ஷித்தோடு அவனின் வீட்டிற்கு யசோதா கபிணேஷுடன் அனுப்பி வைத்தனர்.

“ என்ன இன்பா அமைதியாக வருகிறாய்”, என்றார் எமதுதன். “ மன நிறைந்ததினால் பேச்சு வரவில்லை ஐயா”, என்றான் இன்பா. “ நிஜமாக”, என்று அவர் அவனை சந்தேகமாக பார்க்க, “ ஆமாம் முதலில் கஷ்டமாகத்தான் இருந்தது .ஆனால் இன்ஷித் மேல் இருக்கும் நம்பிக்கை அதை ஏற்றுக்கொள்ள வைத்துவிட்டது .இனி அவன் பார்த்துக் கொள்வான் நீங்கள் கூறியது போல் இந்த ஒரு மாதம் எனக்கு மரண வேதனை தான் ஆனாலும் ஒரு நிறைவு இது போதும்” என்றவன், “ வாருங்கள்”, என்று அவரோடு நடந்தான்.

“உலகில் உன்னை போல் கணவன்மார்கள் இருந்து விட்டால் அது அந்த பொண்ணுக்கு வரமே. இறந்த பின்பாவது உன் மனமாற்றத்தினால் அவள் வாழ்வை மலரச் செய்தாய் அல்லவா இதுவே பெரிய சாதனை.இது உனது வைராக்கியத்தால் மட்டுமே நடந்தது. நீ என்னிடம் அவளின் வாழ்விற்காக கால அவகாசம் கேட்காமல் இருந்திருந்தால் நிச்சயம் இது நிகழ்ந்து இருக்காது. ஒரு ஆத்மாவாக இருந்தால் கூட, உன் இறப்பிற்கு அப்புறம் நமக்கென்ன என்று போகாமல் உனது மனைவிக்கும் உனது பிள்ளைகளுக்கும் தகுந்த பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுக்க விளைந்தாயே அதுவே உனது கர்மாவை குறைத்து விட்டது. நிச்சயம் நீ ஆசைப்பட்டது போல் அவளுக்கு மகனாக பிறந்து நியாயம் செய்வாய்.



முற்றும்



இன்பாவின் கதை முடிந்தது.





இடம்பகனின் இதி



அர்த்தம்: *பேயின் ஒளி அல்லது பேயின் உறுதி*



அவனின் உறுதி அவள் வாழ்வை மலரச் செய்தது




இன்ஷித் இலஞ்சிதாவின் வாழ்க்கை வேறு ஒரு கதையில் …….
 
Last edited:
Status
Not open for further replies.
Top