எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

பாசப்பிடி பிழையாகுமோ? - கருத்துத் திரி

santhinagaraj

Well-known member
வேந்தனையும் போட்டு தள்ளிட்டிங்க இதெல்லாம் ரொம்ப டூ மச் 😡😡😡

கௌதமிக்கு ஒரு ஜோடி போட்டு இருக்கலாம்😔😔😔

பாசப்பிடி மாறன் பிடியில் ரொம்ப அருமையா இருந்துச்சு 👌👌

சூப்பர் வாழ்த்துக்கள் 💐💐
 
paasa nila

Moderator
Nice story da. Vendhan ah kapathi koduthurukalam. It's OK moonum pillaigalum Happy ah iruntha santhosham tha
உங்களின் தொடர் ஆதரவுக்கும் கருத்துக்களுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்டர்
 
paasa nila

Moderator
முதல் கதையை வெற்றிகரமா முடிச்சதுக்கு வாழ்த்துக்கள் sis 💐💐💐💐💐💐

Feel good story...... 💕
குடும்பம், காதல் எல்லாம் சேர்ந்து ரொம்ப அழகான நிறைவான கதை....

மாறன் விழிகிட்ட காதலை சொல்லலைனாலும் கல்யாணத்துக்கு பிறகு அவனோட காதலை உணர வச்சுட்டுட்டான்.....❣️

இளவேந்தன் நல்ல அப்பா....😍 பாசத்தோட குடும்பத்தை அரவணைத்து நல்லபடியா பொண்ணுங்களுக்கும் பையனுக்கும் வாழ்க்கை அமைச்சு குடுத்துட்டு போயிட்டார்....

ரேணு மாதிரி மாமியார் எல்லாம் வரம் ❤️ மருமகளை தாயா இருந்து அரவணைச்சுகிட்டாங்க...

கௌதமி எப்போவும் நல்ல தோழி 💛

மதி ஜாலியான கலகலப்பான தம்பி &அம்மாவோட crime பார்ட்னர்... 🤗🤗🤗

பாட்டி அம்மாவோட முடிவு தான் கொஞ்சம் வருத்தம்... its ok...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் sis... 🌷🌷🌷🌷🌷
உங்களின் தொடர் விமர்சனத்திற்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி உங்களின் கருத்துக்களே என்னை தொய்வில்லாமல் மேலும் எழுத வைத்தது ரொம்ப ரொம்ப நன்றி
 
paasa nila

Moderator
வேந்தனையும் போட்டு தள்ளிட்டிங்க இதெல்லாம் ரொம்ப டூ மச் 😡😡😡

கௌதமிக்கு ஒரு ஜோடி போட்டு இருக்கலாம்😔😔😔

பாசப்பிடி மாறன் பிடியில் ரொம்ப அருமையா இருந்துச்சு 👌👌

சூப்பர் வாழ்த்துக்கள் 💐💐
உங்களின் தொடர் கருத்திற்கும் விமர்சனத்திற்கும் மிக்க நன்றி சிஸ்டர் உங்களின் விமர்சனங்களே என்னை உற்சாகமாக எழுத வைத்தது ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி
 
paasa nila

Moderator
கடைசியில அவரையும் போட்டு தள்ளிட்டீங்க🤭!!!... ரொம்ப நிறைவான கதை!!... சூப்பர் சூப்பர்!!!...
உங்களின் தொடர் கருத்திற்கும் விமர்சனத்திற்கும் மிக்க நன்றி உங்களின் கருத்துக்களை என்னை வேகமாக எழுத வைத்தது ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி
 
paasa nila

Moderator
கதை அருமை...போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...மதிக்கும், கெளதமிக்கும் ஜோடி இல்லையா...வருத்தத்துடன் பதிவர்...😁😁😁
ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்டர் ஓட்டு போடும்போது மறக்காமல் மாறனுக்கும் மலருக்கும் ஓட்டு போட்டு விடுங்கள் 😂 அடுத்த கதையில் அவர்கள் இருவருக்கும் ஜோடி சேர்த்து விடுகிறேன் வாய்ப்பு இருந்தால். மிக்க நன்றி உங்களின் தொடர் ஆதரவிற்கு.
 
உங்களின் தொடர் கருத்திற்கும் விமர்சனத்திற்கும் மிக்க நன்றி உங்களின் கருத்துக்களை என்னை வேகமாக எழுத வைத்தது ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி
My pleasure😍
 
paasa nila

Moderator
La giri அவர்கள் முகநூலில் கொடுத்த விமர்சனம் ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்டர்

கதை அருமை மா...போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
 
paasa nila

Moderator
Priya Srikanth அவர்களின் பின்னூட்டம் மிக்க நன்றி சிஸ்டர்

பாச நிலா மதி விஷயத்துல அவ மலரிடம் மாறானை மாமானு சொன்னாலும் அவனை அண்ணானு அழைச்சதால் மதியை ஏற்றுக்கொள்ள முடியல..ஆனா அப்பா அம்மானு கூப்பிட்டு சிறு வயதில் இருந்தே இங்கேயே இருந்ததால் இன்பாவை அவ அண்ணனா பார்க்கிறானு புரிஞ்சது ஏற்றுக்கொள்ள முடிந்தது டா
 
paasa nila

Moderator
Poongodi mallikaarjun
அவர்களின் முகநூல் விமர்சனம் ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்டர்

Thank you mam for sharing this beautiful story of Malar and Maran. WoW it was very good, I enjoyed it a lot. It could be friendship of Malar and Gautami or Inbha and Madhi. Renuka character was so amazing . Vendhan and Thamarai character was awesome. Manthesh gave push in story but he took a good decision to leave his love. Maran’s love was of Vera level , he spent many years just looking at her like a penance. His true love brought her to him . Death of Vendhan, his mother and Thamarai was sad but life must go on na. Gauthami stayed single in the end. In the end Malar realised her Maran will be her soul mate. 🥰🥰💖💖💞💞💝💝❤️❤️💐💐
 
paasa nila

Moderator
சைலன்ட் ரீடர் ஒருவர் இந்த விமர்சனத்தை அனுப்பியுள்ளார் ரொம்ப ரொம்ப நன்றி உங்கள் விமர்சனத்திற்கு.

The story started with memories of school life then college life the characters role explained very well.Renuka super her childish behaviour,malar Gowthami friendship,Ilavendhan father's care,Hero Maaran deep love etc .All the episodes carried the story with different emotions but the 24th episode is very emotional tears came. The final episode concluded in good way.overall this story is touching one.

All the best to write more stories
 
பாசத்தோடு பிடித்திருக்கும் பல பிடிகளை சொல்லும் கதை!!... தந்தையாக, தாயாக, சகோதரர்களாக, சகோதரிகளாக, தோழியாக என ஏனைய பிடிகள்!!..

சாதாரண குடும்பத்தில் தொடங்கும் கதை!!... மகளின் தோழியை மகள் போல் நடத்தும் பெற்றோர்களை பிடித்தது!!..

கல்லூரி காலங்களில் வரும் சலனம், அதற்கான எதிர்வினைகள், சிலரின் அலட்சியங்கள், வழிநடத்தி உறுதுனையாக இருக்கும் நட்பு என அனைத்தும் இயல்பாய் இருந்தது!!..

தந்நையாய் அவரின் தவிப்பும், கோவமும், ஆற்றாமையும் சொல்லியிருந்த விதம் அருமை!!..

அம்மா, இளைய மகன் குறும்புகள் ரசிக்க வைத்தது!!... Renu mommy always awesome😍!!!..
மகன் மனதை புரிந்து அவனுக்காக, அவன் விருப்பத்தை நடத்தி காட்டியது சூப்பர்!!!..

அவன் காதலை அவள் உணரும் இடங்களை இன்னும் சற்று அழுத்தி காட்டியிருக்கலாம்!!!.. அவனின் காத்திருப்பின் ஆழம் அவளுக்கு தெரியாமலே போனது போல் இருந்தது!!!..

அம்மா, பாட்டியின் முடிவு வேதனையாக இருந்தது!!!... காப்பாத்தியிருக்கலாம் என கவலை!!!..

நிலையான கௌதமியின் நட்பு ரொம்ப பிடித்தது!!.. இயல்பான குடும்ப கதை!!... வெற்றி பெற வாழ்த்துகள் எழுத்தாளரே❣️!!..
 
paasa nila

Moderator
உங்களின் விரிவான கருத்துக்கும் விமர்சனத்திற்கும் மிக்க நன்றி தொடர்ந்து கதையோடு பயணித்து ஒவ்வொரு அத்தியாயத்திற்கு பின்பும் கருத்து கூறி ஊக்குவித்ததற்கும் மிக்க நன்றி ஒவ்வொரு கதாபாத்திரத்தை பற்றி அவ்வளவு அழகாக கூறி இருக்கிறீர்கள் கதை உங்களுக்கு பிடித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. ரொம்ப ரொம்ப சந்தோஷம் நன்றி என்பதை தவிர வேறு வார்த்தை இல்லை நன்றி நன்றி
 
paasa nila

Moderator
Thaksha Surya
அவர்கள் முகநூலில் கொடுத்த விமர்சனம் மிக்க நன்றி சிஸ்டர்

super story, happy ending. congrats
 
priya pandees

Moderator
Nnk69

மலரோட அப்பா பாசத்துல ஆரம்பிக்குது கதை. மாறன் அவள one side love பண்றான். ஸ்கூல் முடிச்சு காலேஜ்ல சேருற‌ மலருக்கு சின்ன வயசு பிரண்ட் கௌதமியோட இன்னும் ரெண்டு பேர் கிடைக்குறாங்க. மலருக்கு வயசு பருவம் அங்க ஒரு ஈர்ப்பு கிடைக்க அத usual friend போல தூண்டி விட்டு அவன பார்க்க வைக்கும் பிரண்ட் நித்யா. விஷயம் அவங்க அப்பா கண் பார்வைக்கு வந்து பிரச்சினை ஆகிடுது. அப்றம் மாறன் எப்படி உள்ள வரான் அவங்க கல்யாணம் அவங்க வாழ்க்கை தான் மிச்ச கதை.

Starting ல எல்லா characters aum elaborate பண்ணிருந்தது கொஞ்சம் lag ah இருந்தாலும் அப்றம் speed ah poiduchu story. First story இவ்வளவு best ah கொடுத்ததுக்கு முதல் வாழ்த்துக்கள். அவ்வளவு பாசமா start பண்ணிட்டு lastla அவளுக்கு யாருமே இல்லாம ஏன் முடிச்சாங்கன்னு தெரியல. தொய்வில்லாம நல்லா இருந்தது. நன்றி.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே ....
 
உங்களின் அழகான விமர்சனத்திற்கு மிக்க நன்றி சிஸ்டர் தந்தையின் பிடி மாறனின் கை சேர்ந்தது என்பதுதான் கதை உற்ற துணையாக கணவனிடம் சேருகிறது அவள் வாழ்க்கை என சொல்ல நினைத்தேன் கதை உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி
 
நறுமுகை தளத்தின் போட்டிக் கதை NNK_69 பாச நிலா எனது பார்வையில். இளவேந்தன் தாமரை தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள். மகன் இன்பா மகள்கள் இசையரசி மற்றும் நாயகி மலர்விழி. இசையரசிக்கு திருமணம் ஆகிவிடுகிறது. மலர் பள்ளியில் படிக்கும் பொழுதிருந்து அவளை விரும்பும் தமிழ் மாறன். தமிழ் மாறன் மலர் பட்டம் பெறும் வரை காத்திருந்து திருமணம் செய்ய நினைக்கிறான்.

மலர் தன் தோழி கௌதமியுடன் கல்லூரி சென்று வரும் அவளுக்கு பதின்ம வயதில் வரும் காதல் என்று சொல்ல முடியாவிட்டாலும் கொஞ்சம் பார்வையாக இருக்கும் ஐஸ்கிரீம் கடையில் பங்குதாரராக இருக்கும் மாதேஷ் என்பவரின் மீது ஈர்ப்பு வருகிறது. ஆனால் கௌதமி தன் தோழியையும் அவள் குடும்பத்தையும் சிறு வயதில் இருந்து தெரிந்தவள் என்பதால் அவள் மற்ற தோழி வித்யாவுடன் செய்யும் தவறுகளை கண்டிக்கிறார். மலர் அவன் மீது கொண்டிருப்பது காதலா பதின்ம வயதில் வரும் ஈர்ப்பா என்று குழம்பிய நிலையில் அவன் அவளைக் காதலிப்பதாக கூறுவதை நேரில் பார்க்கும் இளவேந்தன் அவளை வீட்டிற்கு கூட்டி வந்துவிடுகிறார்.

தன் செல்லப் பெண் காதல் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது தவிக்கும் வேந்தன் அவளுக்கு தமிழ்மாறனுடன் திருமணம் செய்து வைக்கிறார். இருவரின் திருமண வாழ்க்கையை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை விறுவிறுப்பாக தந்திருக்கிறார்.

மாறன் அம்மா ரேணுகா, தாமரை மற்றும் மலரின் பாட்டி யதார்த்தமான கதாபாத்திரங்கள். கௌதமி அருமையான தோழியாக யதார்த்தமான கதாபாத்திரம். மாறன் காதல் அருமை.

எழுத்தாளர் புதியதாக எழுதுகிறார் என்பது தெரிகிறது. நல்லக் கதையையும் பதின்ம வயது ஈர்ப்பை கடந்து செல்லவும் சொல்லியிருக்கும் களம் நன்றாக இருக்கிறது. அனுபவம் இருந்திருந்தால் சிறப்பாக கச்சிதமாக தந்திருப்பார். அவர் யதார்த்தமாக கதையை சொல்லி இருப்பததற்கு பாராட்டுகள். வாழ்த்துகள்.
 
உங்களின் பாராட்டுக்கும் வாழ்த்துக்கு மிக்க நன்றி சிஸ்டர் உங்களிடம் இருந்து விமர்சனத்தை எதிர்பார்த்து காத்திருந்த எனக்கு மிக்க மகிழ்ச்சி
 
paasa nila

Moderator
Hi sis, arumaiyana story. Thank you. with regards from rajinrm
உங்களின் வாழ்த்துக்கும் விமர்சனத்துக்கும் மிக்க மிக்க நன்றி சிஸ்டர்
 
admin

Administrator
Staff member
ரைட்டரம்மா பஸ்ட் கதைனு கம்பு சுத்திட்டிங்க ஆனா பாருங்க எங்களோட வாசகர்கள் கருத்துக்களை அள்ளி தெளிச்சு அசத்திட்டாங்க.. என்கிட்ட நீங்க சொல்லியிருந்தீங்க இது ரியல் லைஃப் ஸ்டோரினு சோ அந்த பீல்ல படித்தேன். இங்க அப்பா மகள் இவங்களோட அன்பு மெயின்.. காலேஜ் லவ் அதோட அழகான நினைவுகள் எல்லாத்தையும் உங்களுடைய எழுத்து கொஞ்சம் தட்டி எழுப்பிருச்சு.. பிரமாதமா இருக்கு அழகான ஒரு குறுநாவல்.. உங்களுக்கு வாழ்த்துக்கள்
 
வாவ் அட்மின் ஜி நீங்க என் கதையை படிச்சிங்களா 🥰 நிலா ரொம்ப ஹாப்பி அண்ணாச்சி கதை உங்களுக்கு பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி.. உங்களின் அழகான விமர்சனத்திற்கு மிக்க மிக்க நன்றி ஓட்டு போடும் போது மறந்துடாதீங்க 😀
 
Top