எப்போ யாரு பேசுறாங்கன்னு பல காட்சிகள் தெரியலை!!.. எங்க அந்த காட்சி நடக்குதுன்னும் சில நேரம் குழப்புது!!... புது வார்த்தைகள் பயண்படுத்தும் போது அதுக்கான அர்த்தத்தையும் சொல்லுங்க!... பயனுள்ளதா இருக்கும்!!...
அதுமாதிரி இன்பரசன் கல்யாண காட்சில பெரியவங்க கடைசி வரைக்கும் அமைதியா இருந்தது ஏத்துக்க முடியலை!!...
நீங்க சொன்ன அத்தனையும் நான் சரி பண்ணிக்கிறேன் சிஸ்..
Qutotation marks நான் correct பண்றேன்..
இடம் சொல்லிருப்பேன் எங்கே பேசுறாங்க எங்க நின்னு பேசுறாங்கன்னு சொல்லிருப்பேன்.. எதுக்கும் அதையும் நான் திரும்ப check பண்ணிடுறேன்..
புதிய வார்த்தைகள் என்னுடைய புது முயற்சி.. கடைசி பதிவுக்கு கீழே நான் உபயோகப்படுத்துன்ன வார்த்தைகளுக்கு references தந்துடுறேன்..
இன்பரசன் கல்யாண காட்சில அவங்க வாக்க்வாதம் ஆரம்பிக்கும் முன்னே பெரியவங்க இரண்டு பேர் கண்டிப்பாங்க, எழிலரசிவுடைய அம்மாவும் பேச வருவாங்க.. புகேழந்தியும் பேச வருவாரு.. ஆனா பசங்க அவங்களை தடுப்பாங்க.. இன்னொன்னு அது ஒரு சில நேரம் நமக்கு ஒரு அதிர்வு வரும் தெரியுமா.. அந்த அதிர்வுல இருந்து வெளிவந்து என்ன செய்யலாம் நினைக்குறதுக்குள்ள எல்லாம் கைமீறி போயிடும்.. அது தான் அங்க நடந்தது. கை மீறி போன பிறகு ஒண்ணும் பண்ண முடியாதே.. ஒரு எமோஷன்ல் ஸ்டேஜ்ல ஜெட் வேகத்துல நடந்த மாதிரி நமக்கு சில நேரம் தோனுமே அது மாதிரி தான் அங்க நடந்தது நிதானம் அங்க இல்லாம எல்லாம் வேகமா முடிஞ்சிடுச்சு.. சில சமயம் பெரியவங்க சாதாரனமா வாக்குவாதம் தானே பண்றாங்க என்ன பண்ணிட போறாங்கன்னு நினைச்சு விட்டதும் அந்த அதிர்வும் நீங்குறதுக்குள்ள அவங்களே எதிர்ப்பார்க்காம நடந்தது தான் அவங்க கல்யாணம். கூடவே அவளோட முட்டாள் தனமான பிளாக் மெயில் அண்ட் பேச்சு யாரையும் நிதானமா யோசிக்க விடலை.. பிறகு நிதானம் வந்து என்ன பயண் அதுக்கு அப்புறம் அவங்க அதை ஏத்துக்கிட்டு நிதானமா யோசிச்சிட்டு பேசி முடிவு எடுக்கலாம் சொல்லி கிளம்புவாங்க..
இதை நான் விரிவா சொல்லாததுக்கு இன்னொரு காரணம் போட்டி விதிமுறை படி எனக்கு கொடுத்த வார்த்தைகள் அளவு தாண்டிடும்.. அதான் இந்த பகுதியை அதிக விளக்கமா சொல்ல முடியல.. சுருக்கி சொல்ல வேண்டியாத போச்சு..
சிரமத்துக்கு மன்னிக்கவும்.
உங்களுடைய உதவிக்கு என் மனமார்ந்த நன்றிகள் சிஸ்..

