மெஸியூர் கீய் (இந்த பெயரின் அர்த்தம் என்ன
![Thinking face :thinking: 🤔](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f914.png)
) அவர்கள் எழுதிய "அனல் பட்சியின் அணங்கு"
அகல்யா... செம்ம கடுப்பில் இருக்கிறாள்.. கல்லூரி படிப்பின் இரண்டாம் வருடத்தில் இருக்கும் போதே திருமணத்திற்கு சம்பந்தம் பேசும் அதுவும் வீட்டோட மாப்பிள்ளை பார்க்கும் தன் தந்தை அறிவானந்தம் மீது... இப்படி விருப்பம் இல்லா திருமணத்தை நினைத்து வருந்தும்போது கடத்தப்படுகிறாள் ஆரவ் அபிமன்யு என்ற மனிதனால்... கடத்தி வந்தவன் கடும் கோபத்தில் இருப்பான் அவளை உடலாலும் மனதாலும் துன்புறுத்துவான் என நினைத்திருந்தால் அவளின் மேல் கடும் கோபம் இருந்தாலும் அவளுக்கு தனி வீடு கொடுத்து துணைக்கு ஆளும் கொடுத்து படிக்க வைக்கிறான் அவன் விருப்பப்படி.. அவளின் தந்தை மீது அதிக கோபத்தில் இருந்தாலும் வார்த்தைகளால் சில நேரம் அவளை வதைத்தாலும் அவளை முறைப்படி அனைத்து சடங்குகளும் செய்து திருமணம் செய்து கொள்கிறான்.. திருமணத்திற்கு முன்பு தாயையும் சந்திக்க வைக்கிறான் கோவிலில் அவள் மனம் அறிந்து... இவன் நல்லவனா கெட்டவனா
![Thinking face :thinking: 🤔](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f914.png)
![Face with rolling eyes :rolling_eyes: 🙄](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f644.png)
இவன் மனதில் ஏதோ பெரும் வலி இருக்கிறது அதே நேரத்தில் மனிதமும் அவனுள் இருக்கிறது
![Pensive face :pensive: 😔](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f614.png)
உயிர் வலி கொடுத்தவனின் மகளாலேயே அந்த வலியை நிவர்த்தி செய்ய முயல்கிறாள்...
தன் குழந்தைகளுக்கு தாயாகவும் அவர்களுக்கு படிப்பு சொல்லித் தருவதற்காகவும் அவளுக்கு இணையாக இருப்பதற்காக மட்டுமே படிக்க வைப்பதாக கூறும் அவன்.. தன் மீது அவளுக்கு காதலும் வரக்கூடாது என நிபந்தனை வைக்கிறான்.. நிபந்தனையை இவனே மீறுவானா... தன் வலிகளுக்கு மருந்தாக அவளை கடத்தியவன் அவளையே மணமுடித்து அவள் மூலமே தனக்கு ஒரு குடும்பத்தை ஏற்படுத்திக் கொள்ள நினைக்கும் இவனின் மனநிலை தான் என்ன..
![Thinking face :thinking: 🤔](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f914.png)
இவன் அனுபவித்த வலியின் வழித்தடம் என்ன என்பதை கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.. பெண்ணை கடத்தியவனின் மீது கோபம் வர வேண்டும் நமக்கு பொதுவாக.. ஆனால் இவனின் மீது பாசமும் பரிவுமே வருகிறது நமக்கு
![Pensive face :pensive: 😔](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f614.png)
அப்படி என்ன வலி கொண்டான் இவன்.. இவனின் வலி நம்மையும் வலிக்கச் செய்கிறது..
அருமையான கதை
![Smiling face with hearts :smiling_face_with_3_hearts: 🥰](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f970.png)
![Clapping hands :clap: 👏](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f44f.png)
![Clapping hands :clap: 👏](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f44f.png)
Good luck dear
![Smiling face with hearts :smiling_face_with_3_hearts: 🥰](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f970.png)
![Red heart :heart: ❤️](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/2764.png)