எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மெய்யழகனின் தேன்நிலவு

RJ novels

Moderator

மெய்யழகனின் தேன்நிலவு - 1​


கவிதா, “அடியேய் தேனு.. நீ அடங்க மாட்டியா.. இப்போ எதுக்குடி அது மேல ஏறி நிக்கிற.. மேல இருந்து கீழே விழுந்து கை, கால் உடைய போகுது. அப்புறம் உன் அப்பாவுக்கு யார் பதில் சொல்றது..”.​


“என்னை நம்பி தானே உங்க வீட்ல அனுப்பி இருக்காங்க.. உன் அண்ணன், அக்கா வாயில் எல்லாம் என்னால் விழுந்து எழுந்திரிக்க முடியாது.. கீழே வந்திடு டி..” என்றாள் மிரட்டும் தோணியில்.​


தேன்நிலவு, “அதெல்லாம் எனக்கு ஒன்னும் ஆகாது.. இது என்ன முதல் தடவையா? நீ ஏன் இப்படி பயப்படுற.. நாம பார்க்காத மரமா.. இது கொஞ்சம் பெருசா இருக்கு அவ்வளவு தான்..” என்றபடி விறுவிறுவென மரத்தின் உச்சியை அடைய சென்று விட்டாள்.​


கவிதா படபடக்கும் இதயத்துடன், “ஏய்.. பார்த்து டி.. ரொம்ப பெருசா இருக்கு.. இப்போ இதெல்லாம் தேவையா.. தேனீ கடிச்சிடும் தேனு.. நீ தேவையில்லாத வேலை பார்த்துகிட்டு இருக்க..” என்றாள் கோபத்தில் சிடுசிடுப்பாக.​


தேன்நிலவு, “இந்த தேனையே தேனீ கடிக்குமா.. அதெல்லாம் நான் பாத்துக்கிறேன். நீ சும்மா நிக்கிறியா.. நீ இப்படி பேசிப்பேசியே தூங்குற தேனீயை கூட எழுப்பி விட்டிடுவ” என்றபடி மெதுவாக அந்த மரத்தில் இருக்கும் தேனீ கூட்டிலிருந்து தேனை எடுக்க சென்றாள்.​


கவிதா, “அய்யய்யோ! அவங்க வந்துட்டானுங்க டி! சீக்கிரம் இறங்கு.. ஓடிடலாம்..” என்று அவசர குரலில் அவளை அழைக்க.​


சட்டென்று திரும்பி பார்த்த தேன்நிலவு நான்கு, ஐந்து பேர் அந்த புறமாக வந்து கொண்டிருப்பதை கவனித்தவள். சரசரவென ஏறிய வேகத்தை விட வேகமாக கீழே இறங்கி வந்தாள்.​


தன் கையை தூசி தட்டியவள், “சீக்கிரம் வா ஓடிடலாம்.. பார்த்திட போறானுங்க..” என்றபடி தன் ஆருயிர் தோழி கவிதாவின் கையையும் பிடித்து தன்னுடன் இழுத்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு ஓட தொடங்கினாள்.​


அதற்குள் அவர்களை செல்ல விடாமல் முன்னே வந்து நின்று வழிமறித்த அந்த ஊரின் பஞ்சாயத்து தலைவரின் மகன் அழகேசன், “ஏய் ஹனிமூன்.. இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க?”.​


“நான் உன்கிட்ட ஏற்கனவே பல தடவை சொல்லி இருக்கேன் எங்க தோட்டத்து பக்கம் வந்து இப்படி திருட்டுத்தனமா மாங்காய் எடுக்கிற வேலையெல்லாம் வேண்டாம் என்று.. எத்தனை தடவை சொன்னாலும் நீ அடங்கவே மாட்டியா..”.​


தேன்நிலவு சற்றும் அலட்டிக் கொள்ளாமல், “இங்க பாரு, நான் ஒன்னும் மாங்கா பறிக்க எல்லாம் வரல.. இன்னும் மாங்கா மரத்துல பூ வைக்கவே ஆரம்பிக்கல அதுக்குள்ள எப்படி மாங்காய் பறிக்க முடியும். எதையாவது லூசு மாதிரி பேசாதே”.​


அழகேசன், “அப்புறம் எதுக்கு டி எங்க தோட்டத்துக்கு வந்து இருக்க..” என்றான் எகிரிக்கொண்டு.​


தேன்நிலவு முறுக்கிக்கொண்டு, “இங்க பாரு, இந்த வாடி போடின்னு கூப்பிடுற வேலையெல்லாம் வேண்டாம்”.​


அழகேசன், “அப்புறம் திருட்டுத்தனமா வந்து திருட்டு வேலை பார்க்கிறவங்களை வாங்க போங்கன்னு மரியாதையாக கூப்பிடுவாங்களா.. அப்படி தான் டி கூப்பிடுவேன் ஹனிமூன்..” என்றான்.​


அந்த ‘ஹனிமூன்’ என்ற வார்த்தையில் மட்டும் சற்று அழுத்தத்தை கொடுத்தவாறு.​


தேன்நிலவு விடைத்த மூக்குடன் புசுபுசுவென்று தன் மூச்சை விட்டவள் கோபமாக அவன் முன்னே தன் ஆள்காட்டி விரலை தூக்கி ஆட்டியபடி, “இங்க பாரு, இன்னொரு தடவை என்னை ஹனிமூன்னு கூப்பிட்ட.. மூஞ்சியை திருப்பிடுவேன் டா”.​


அழகேசன், “என்ன டி.. என்னையே டா போட்டு கூப்பிடுறியா..”.​


தேன்நிலவு தன் கையை கட்டிக்கொண்டு, “ஆமா டா.. அப்படி தான் டா கூப்பிடுவேன். நீ என்னை டி போட்டு பேசினால் நான் உன்னை டா போட்டு தான் டா கூப்பிடுவேன்” என்றாள் கோபமாக.​


கவிதா அவளின் கையை பற்றி கொண்டு, “விடு டி.. வா போலாம்.. எதுக்கு இப்போ இப்படி சண்டை போட்டுக்கிட்டு நிக்கிற..” என்று அவளை சமாதானம் செய்ய முயற்சித்தவளை தடுத்த அழகேசன்.​


“ஏய் கவிதை.. உனக்கு இங்க என்ன வேலை..” என்னும் பொழுதே தேன்நிலவு, “இங்க பாரு கவி, இவன் என்னை எங்க பார்த்தாலும் ஹனிமூன்னு கிண்டல் பண்றான். இன்னொரு தடவை அப்படி கூப்பிட்டான்னா இவன் வாயை உடைத்துவிடுவேன்” என்றாள் கோபத்தில் பத்ரகாளியாக.​


அழகேசன் அவளைப் பார்த்து கோணலாக சிரித்தபடி, “அப்படி தான் டி கூப்பிடுவேன்.. நீயும் வேணும்னா என்னை பியூட்டின்னு கூப்பிட்டுக்கோ..” என்றான் கெத்தாக.​


தேன்நிலவு, “பியூட்டி பேருல மட்டும் இருந்தால் பத்தாது.. முகத்திலும் கொஞ்சமாவது இருக்கணும்.. பியூட்டியாம் பியூட்டி..” என்றாள் தன் முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டு.​


கவிதாவிற்கோ பயத்தில் கை கால்கள் எல்லாம் வெடவெடடக்க தொடங்கி விட்டது. இப்படி அவர்களின் தோட்டத்திற்குள் வந்து சிக்கி விட்டோமே என்ற பதட்டத்தில் படபடக்க தொடங்கி விட்டாள்.​


“சாரி.. சாரி அண்ணா.. தெரியாமல் வந்துட்டோம்.. நாங்க சும்மா தான் இந்த பக்கம் வந்தோம். பாருங்க.. மரத்தில் மாங்கா கூட இல்லை. நாங்க எப்படி மாங்கா பறிக்க வந்திருக்க முடியும்”.​


“சும்மா இந்த பக்கமா வந்தோம்.. தோட்டத்தை சுத்தி பார்க்கணும்னு ஆசைப்பட்டாள். அதான் உள்ளே வந்தோம்.. எங்களை மன்னிச்சிடுங்க.. நாங்க பண்ணது தப்பு தான்.. எங்களை விட்டுடுங்க அண்ணா..” என்றாள் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு.​


அவளின் வார்த்தையில் கடுப்பான அழகேசன், “நீ கொஞ்சம் வாயை மூடுறியா.. சும்மா நொய்நொய்ன்னு பேசிகிட்டு இருப்ப” என்றான் சிடுசிடுப்பாக.​


அதில் கவிதாவின் வாய் கப்சிப் என்று மூடிக்கொண்டது.​


அழகேசன் தோழர்கள் அவன் அருகில் வந்து நிற்க.​


அவனின் தோழன் சங்கர், “இவங்க ரெண்டு பேரையும் சும்மாவே விட கூடாது டா மச்சான். இவங்க ரெண்டு பேருக்கும் இதே வேலையா போச்சு.. போன தடவை உன் தோட்டத்துல மாங்கா பரிக்க வரும் பொழுதே நம்ம வான் பண்ணோம். ஆனாலும், அடங்க மாட்டேங்குதுங்க..”.​


அழகேசன், “அது ஒன்னும் இல்லடா.. ஹனிமூன்க்கு எங்க தோட்டத்து மாங்காய் மட்டும் தான் பிடிக்கும் போலருக்கு. அதான் மாங்காய் சாப்பிடனும்னு ஆசைப்படுது” என்றான் ஒரு மாதிரியான குரலில்.​


தேன்நிலவு, “தேவையில்லாத பேச்செல்லாம் பேசாத அழகு.. அப்புறம் நல்லா இருக்காது சொல்லிட்டேன்” என்றவள்.​


கவிதாவின் கையை பிடித்துக் கொண்டு, “ஏய்.. வாடி போலாம்..” என்றபடி முன்னே நடக்க.​


தன் கையை நீட்டி அவர்களை தடுத்த அழகேசன், “மாங்கா சாப்பிடணும்னு ஆசையா இருந்தால் சொல்லுங்க நானே ஏற்பாடு பண்றேன்” என்றவன்.​


கவிதாவை பார்த்து, “உனக்கும் சேர்த்து தான் சொல்றேன்” என்றான் கண்டிப்பான குரலில்.​


அவ்வளவு தான்.. கவிதா தேன்நிலவின் கையை பிடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பித்தால் போதும் என்ற வேகத்தில் ஓடத் தொடங்கி விட்டாள்‌.​


சற்று தூரம் அந்த இடத்தை விட்டு தள்ளி வந்தவர்கள் மூச்சு வாங்கியபடி நிற்க. இருவருக்குமே ஓடி வந்ததில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது.​


கவிதா மூச்சை இழுத்து விட்டபடி, “இதெல்லாம் தேவையா.. இதுக்கு தான் நான் அந்த தோட்டதுக்கு போக வேண்டாம்னு சொன்னேன். பார்த்தியா.. எப்படி எல்லாம் பேசுறான்னு..”.​


தேன்நிலவு, “அவன் கிடக்குறான் விடு டி. அவ்வளவு கஷ்டப்பட்டு மரத்து மேல ஏறியும் கடைசியில் அந்த தேனை எடுக்க முடியாமல் போயிடுச்சே.. அதான் ரொம்ப வருத்தமா இருக்கு..” என்றாள் அங்கிருந்த மரத்தில் சாய்ந்த படி.​


கவிதா அவளை அதிர்ந்து பார்த்தவள், “அடிப்பாவி! என்ன டி நீ இப்படி இருக்க.. அவன் அந்த பேச்சு பேசுறான்.. அப்படி சண்டை போடுகிறான்.. நீ என்னடான்னா அதையெல்லாம் விட்டுட்டு தேன் எடுக்க முடியலனு கவலைப்படுற..”.​


தேன்நிலவு, “சரி விடு.. நாளைக்கு பாத்துக்கலாம்..”.​


கவிதா அவளின் வார்த்தையில் அதிர்ந்தே விட்டாள்.​


தன் தலைக்கு மேல் கரம் கூப்பி கும்பிடு போட்டவள், “அம்மா தாயே.. நாளைக்கு தேன் எடுக்க போவதாக இருந்தால் நீ மட்டும் போ..”.​


“தயவு செஞ்சு என்னை கூப்பிடாதே.. என்னால் எல்லாம் அவனுடைய பேச்சை கேட்க முடியாது. ஒரு நிமிஷத்துல எனக்கு படபடன்னு வந்திடுச்சு தெரியுமா..”.​


தேன்நிலவு அவளின் தோளில் கையை போட்டு தன்னுடன் இருக்கியபடி, “அதான் நான் கூட இருக்கேன்ல.. அப்புறம் எதுக்கு பயப்படுற..” என்றாள் கெத்தாக.​


கவிதா அவளின் கையை பட்டென்று தட்டி விட்டவள், “நீ என் கூட இருக்கிறது தான் டி என் பயமே.. கொஞ்சமாவது சும்மா இருக்கியா.. ஏதாவது ஒரு வேலை பார்த்து வச்சிட்டு போயிடுற..”.​


“எல்லார்கிட்டயும் நான் திட்டு வாங்க வேண்டியதா இருக்கு. இங்க பாரு, இனிமே இந்த மாதிரி ஏதாவது தேவையில்லாத வேலை பாக்குறதா இருந்தால் நீ தனியாவே போய் பார்த்துக்கோ.. என்னை கூப்பிடாதே..” என்றாள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு.​


தேன்நிலவு, “அப்படியெல்லாம் சொல்லக்கூடாது.. எனக்கு இருக்க ஒரே பிரண்டு நீ தான்.. உன்னை விட்டால் நான் வேறு யாரு கூட சுத்துறது..”.​


“நான் என்ன செஞ்சாலும் அதில் உனக்கும் சம பங்கு இருக்கு. ஏன்னா, நீயும் நானும் உயிர் தோழிகள் இல்லையா..” என்று அவளை பார்த்து வசனம் பேசிய படியே வீடு நோக்கி புறப்பட்டனர்.​


தேன்நிலவு வீட்டிற்குள் நுழையும் பொழுதே அவளின் அக்கா கஸ்தூரியின் பேச்சு சத்தம் வாசல் வரை எட்டியது.​


தேனிலவு மனதிற்குள், “ஐயோ! இந்த ஸ்பீக்கர் பாக்ஸ் வேற வந்திடுச்சா.. என்னை போட்டு குடைய போறாங்க” என்று முணுமுணுப்பாக கூறியபடியே வீட்டிற்குள் நுழைய.​


அவளின் அக்காவின் கணவர் நாற்காலியில் அமர்ந்திருந்தார்.​


அவரை பார்த்து மெல்லிதாக சிரித்தவள், “வாங்க மாமா.. எப்போ வந்தீங்க?” என்ற அவளின் வார்த்தையில் அவளை நோக்கி திரும்பிய கஸ்தூரி.​


இளங்கோ பதில் கூறுவதற்கு முன்னதாகவே, “வாடி.. எங்க போய் ஊர் சுத்திட்டு வர.. வயசு பொண்ணா லட்சணமா வீட்டில் உன்னால் இருக்க முடியாதா.. எப்போ பார்த்தாலும் ஊர் சுத்திக்கிட்டே இருக்க..” என்றாள் அதட்டலாக.​


தேன்நிலவு, ‘வந்த உடனேயே பர்பாமென்ஸ் பண்ண ஆரம்பிச்சுட்டா.. இனி நாம என்ன சொன்னாலும் இவ வாயை மூட முடியாது’ என்று எண்ணியவாறு அவர்களின் முகத்தை அப்பாவியாக பார்த்துக் கொண்டு நின்று இருந்தாள்.​


கஸ்தூரி, “முதல்ல முகத்தை இப்படி வச்சுகிறதை நிறுத்து.. பண்றது எல்லாம் பண்ணிட்டு ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி மூஞ்ச வச்சிக்க வேண்டியது” என்று அதற்கும் சேர்த்து இரண்டு தீட்டுகளை பரிசாக வாரி வழங்கினார்.​


இளங்கோ, “கஸ்தூரி ஏன் தேனை இப்படி திட்டுற..”.​


கஸ்தூரி இளங்கோவை நோக்கி தன் கோப விழிகளால் பொசுக்கும்படி பார்வையை வீச.​


இளங்கோவின் வாய் ‘கப்சிப்’ என்று மூடிக்கொண்டது.​


தன் மனைவியின் பார்வைக்கு முற்றிலுமாக அடங்கிப் போய் விட்டான் இளங்கோ.​


தேன் நிலவின் தாய் சகுந்தலா, “அவ சும்மா கவிதா கூட சேர்ந்து கோவிலுக்கு போயிட்டு வரேன்னு சொல்லிட்டு தான் டி போனாள். நீ ஏன் வந்ததும் வராதுமா இப்படி அவகிட்ட எரிஞ்சு விழற..”.​

 
Last edited:

RJ novels

Moderator

மெய்யழகனின் தேன்நிலவு - 2​

அவ்வளவு தான் தன் தாயின் வார்த்தைகள் கஸ்தூரியின் கோபத்திற்கு தூபம் போடுவது போல் இருக்க..​

“என்னது நான் கத்துறேனா.. ஊர்ல இருக்க பொறுக்கி பசங்க கூட எல்லாம் இவ பிரண்ட்ஷிப் வச்சிருக்காமா.. நாங்க வந்துகிட்டு இருக்கும் பொழுது நான்கைந்து பேர் கும்பலா உட்கார்ந்துகிட்டு என்னை பார்த்து என்ன சொன்னானுங்கனு உனக்கு தெரியுமா..”.​

“டேய் இங்க பாருடா.. நம்ம ஹனிமூனோட அக்கா போறாங்கனு சொல்றான்.. நீயும், அப்பாவும் இவளுக்கு வச்ச பேரு தேன்நிலவு..”.​

“ஆனா, இந்த ஊர்ல இருக்க பொறுக்கி பசங்க எல்லாம் சேர்ந்து இவளுக்கு வச்ச பேரு என்ன தெரியுமா.. ஹனிமூன்...” என்றாள் கோபமாக.​

தேன்நிலவு, “நாம் பேச வேண்டிய டயலாக்கை எல்லாம் இவ பேசிக்கிட்டு இருக்கா..” என்றாள் முணுமுணுப்பாக.​

கஸ்தூரி, “அங்க என்ன டி முணுமுணுப்பு..” என்றாள் அதட்டலாக.​

தேன்நிலவு, “அக்கா அவங்க எல்லாம் அப்படி பேசினா அதுக்கு நான் என்ன பண்ண முடியும்.. இதையெல்லாம் எனக்கு பேர் வைக்கிறதுக்கு முன்னாடி யோசிச்சு இருக்கணும்”.​

“நீங்க எல்லாருமே சேர்ந்து தான எனக்கு இந்த பேர் வச்சிருக்கீங்க.. ஊர்ல தல காட்ட முடியல.. எல்லாம் என்னை ஹனிமூன்னு கூப்பிட்டு கிண்டல் பண்றானுங்க. எனக்கு ரொம்ப அசிங்கமா இருக்கு தெரியுமா..”.​

கஸ்தூரி, “ஏன், இந்த பேருக்கு என்ன டி குறைச்சல்..”.​

தேன்நிலவு, “என்ன குறைச்சலா.. ஒன்னு தேன்னு வச்சு இருக்கணும்.. இல்லைனா, நிலவு என்று வைத்திருக்கணும்.. இரண்டையும் சேர்த்து இப்படி தேன் நிலவு என்று வைத்திருக்கிறீங்களே..”.​

“ஸ்கூல்ல கூட எல்லாம் என்னை ஹனிமூன், ஹனிமூன்னு கூப்டு கிண்டல் பண்ணாங்க.. அதனால் தான் நான் படிப்பை பாதியிலேயே விட்டுட்டேன்.. இப்போ வெளியில் எங்கேயுமே போக முடியல”.​

“எங்க போனாலும் இங்க பாருடா ஹனிமூன் போகுது.. அங்க பாருடா ஹனிமூன் வருதுனு இப்படியே சொல்றாங்க..” என்றாள் சிணுங்களாக.​

தேன் நிலவின் இளைய அண்ணன் பார்த்திபன், “நீ உன் வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்கணும்.. எல்லார்கிட்டயும் சண்டை போட்டா எல்லாரும் பதிலுக்கு இப்படித்தான் பேசுவாங்க” என்றான் கண்டிப்போடு.​

தேன்நிலவு, “நான் என்ன அண்ணா பண்ணேன்.. நான் எதுவுமே பேசல தெரியுமா..”.​

இளைய அண்ணனின் மனைவி கீதா, “ஆமா, உன் வாயை பத்தி தான் எங்களுக்கு தெரியுமே.. உனக்கு வாய் பேச தெரியாதா..” என்றாள் நக்கலாக.​

தேன் நிலவோ மனதிற்குள், “போச்சு.. எல்லாம் ஒன்னு கூடிட்டாங்க.. இனிமே, நம்ம என்ன சொன்னாலும் இங்கு எடுபடாது..” என்றவள் ஒரு பெருமூச்சுடன் அமைதியாக நின்று இருந்தாள்.​

தேன் நிலவின் பெரிய அண்ணன் சரவணன், “இங்க என்ன சத்தம்..” என்றபடி அந்த இடத்திற்கு வரவும்.​

தேன்நிலவு, “அய்யய்யோ! பெரியண்ணா வந்துட்டானே.. இனிமே என்னால் ஒரு வார்த்தை கூட பேச முடியாது.. அவன் பேச வேண்டியது எல்லாம் பேசிட்டு போயிடுவான்”.​

“கடவுளே! ஏன் தான் என்னை இந்த வீட்டில் பிறக்க வச்சியோ தெரியல..” என்று பல்லாயிரம் முரை கடவுளிடம் கேட்ட அதே கேள்வியை இன்று மீண்டும் கேட்டாள்.​

சரவணன், “என்ன தேனு.. வார்த்தை எல்லாம் தடிக்குது.. பெரியவங்க கிட்ட இப்படி தான் மரியாதை குறைவா பேசுறதா..” என்றான் அதட்டலாக.​

தேன்நிலவு தன் கைகளை பிசைந்து கொண்டு தலையை குனிந்தபடி அமைதியாக நின்றிருந்தாள்.​

தேன் நிலவிற்கு பெரிய அண்ணன் என்றால் சற்று பயம் தான். இளைய அண்ணனிடம் கூட ஒன்று, இரண்டு வார்த்தைகள் எதிர்த்து பேசி விடுவாள்.​

ஆனால், பெரிய அண்ணனை பார்த்தால் ‘கப்சிப்’ என்று வாயை மூடிக்கொள்வாள்.​

ஆரம்பத்தில் இருந்தே அப்படித்தான்.‌. அவனை எதிர்த்து பேசியும், பதிலுக்கு பதில் சண்டை இட்டும் இவளுக்கு பழக்கம் இல்லை. வயதிலும் அவன் பெரியவனாக இருப்பதால் அப்பாவிற்கு அடுத்த இடத்தில் தான் அவனை வைத்து பார்க்கிறாள்.​

ஆனால், அப்பாவிடம் இருக்கும் தன்மை கூட இவனுடன் அவளுக்கு ஏற்பட்டது கிடையாது. ஏதோ, ஒரு இடைவெளி அவனிடம் நெருங்க விடாமல் இவளை அவனிடம் இருந்து விளக்கிய வைத்திருக்கிறது.. சிறு வயது முதல் இன்று வரை..​

சரவணன், “உள்ளே போ..” என்றான் அதட்டலாக.​

தேன்நிலவு அமைதியாக அறைக்குள் ஓடிவிட்டாள்.​

தேன் நிலவிற்கு உடன்பிறந்தோர் மூன்று பேர்.​

மூத்த அண்ணன் ‘சரவணன்’.. அவனின் மனைவி ‘திலகா’..​

இளைய அண்ணன் “பார்த்திபன்”.. அவனின் மனைவி ‘கீதா’..​

மூன்றாவது தான் தேன் நிலவின் அக்கா ‘கஸ்தூரி’.. அவரின் கணவர் ‘இளங்கோ’..​

இவர்கள் அனைவருமே ஒரே கட்சி தான். ஆனால், அந்தக் கூட்டத்தில் தேன் நிலவை மட்டும் அவர்கள் சிறு வயது முதலே சேர்த்துக் கொள்வதில்லை.​

அவளிடம் ஏதோ ஒரு வேற்றுமை அவர்களை அவளுடன் ஒன்றிணைய விட வில்லை. சிறு வயது முதலே இவர்கள் மூவரும் தான் ஒன்றாக விளையாடுவார்கள்..​

இவர்களுக்கு வயது வித்தியாசம் அதிகம் என்பதால் அவளுடன் இவர்களால் ஒன்றி போக முடியவில்லை. அது மட்டும் இன்றி, கஸ்தூரி பிறந்து பத்து வருடங்கள் கழித்து தான் தேன்நிலவை கருவுற்றிருந்தார் சகுந்தலா..​

அதற்குள் சரவணனிற்கு 18 வயதுகள் ஆகிவிட.. அவனிற்கோ இந்த வயதில் தனக்கு ஒரு தங்கையோ, தம்பியோ பிறப்பதில் சுத்தமாக விருப்பமில்லை.​

அதை வெளிப்படையாக தன் தாய் தந்தையிடமும் கூற முடியாமல் தனக்குள்ளையே மறுகிப் போனான். அந்த விருப்பம் இன்மையின் வெளிப்பாடு தான் இன்று வரை தேன்நிலவுடன் அவனால் ஒன்றி போக முடியவில்லை.​

சகுந்தலா தேன்நிலவை உண்டான பிறகு அவரிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொண்டான் சரவணன்.. தன்னுடன் தன் தம்பி தங்கையையும் சேர்த்துக் கொண்டவன் தேன் நிலவை மட்டும் சேர்க்கவே இல்லை இன்று வரை..​

அன்று முதல் ஏதோ ஒரு விருப்பமின்மையோ.. எதுவோ.. தேன் நிலவிற்கும் சரவணனிற்கும் இடையே பெரிய மதில் சுவரை எழுப்பி விட்டது.​

தன் பெரிய அண்ணனைப் போலவே மற்ற இருவருக்குமே தேன் நிலவின் மீது அவ்வளவு பிடித்தம் கிடையாது. சிறு வயது முதலே அவளை ஏதாவது செய்து அழ வைத்துக் கொண்டே இருப்பார்கள்..​

தேன்நிலவு பிறக்கும் சமயம் சரவணனின் வயது 18.. பார்த்திபனின் வயது 14.. கஸ்தூரியின் வயது பத்து..​

அவள் வளரும் காலங்களில் எல்லாம் இவர்கள் பள்ளிக்கு சென்று கொண்டிருந்ததால் அவளும் இவர்களுடன் ஒன்றாமல் தன் வயது ஒத்த பிள்ளைகளுடன் விளையாட தொடங்கி விட்டாள்.​

அதனாலேயே சரவணனையும், பார்த்திபனையும் பார்க்கும் பொழுது அண்ணனுக்கும் ஒரு படி மேல் அப்பாவிற்கும் ஒரு படி கீழ் தான் தேன் நிலவின் மனதிற்குள் பதிந்து போனார்கள்.​

ஆனாலும், பார்த்திபனை விட சரவணனின் மேல் ஒரு படி பயம் கலந்த மரியாதை இருப்பது என்னவோ உண்மை தான்..​

அதற்காக பார்த்திபனிடம் அவள் இலகுவாக பழகுவாள் என்றெல்லாம் கிடையாது.. பார்த்திபனிடமும் ஒரு அடி தள்ளி தான் நிற்பாள்.​

கஸ்தூரிக்கு திருமணம் முடித்துக் கொடுத்து கிட்டத்தட்ட பத்து வருடங்களை கடந்து விட்டது. பக்கத்து ஊரிலேயே நன்கு வசதி படைத்த குடும்பத்தில் தான் கஸ்தூரியை மணமுடித்து கொடுத்தனர்.​

வார இறுதி நாட்களில் நாள் தவறாமல் கஸ்தூரி தன் தாய் வீட்டிற்கு வந்துவிடுவது வழக்கம்.. கஸ்தூரியின் கணவர் அவர்கள் ஊரிலேயே இருக்கும் அரசு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.​

ஆகையால், பெரும்பாலும் வார‌ இறுதிகளில் அவருக்கும் விடுமுறை வந்துவிடும்.. தன் இரண்டு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு குடும்பமாக தன் தாய் வீட்டிற்கு தஞ்சம் புகுந்து விடுவாள்..​

அவள் மீண்டும் தன் மாமியார் வீட்டிற்கு திரும்பும் வரையிலும் தேன் நிலவிற்கு அவர்களின் வீட்டில் பெரும் கெடுபடியாக தான் இருக்கும்.​

என்ன தான் அவளின் அண்ணிகள் அவளிடம் சிடுசிடுப்பாக நடந்து கொண்டாலும் கூட.. தேன் நிலவை இவ்வளவு உரிமையாக மற்றவர்களின் முன்பு திட்டிவிட முடியாது.​

ஆனால், கஸ்தூரிக்கு அப்படி இல்லையே.. உடன்பிறந்த அக்கா என்ற ஒரு தகுதி போதாதா அவளை தான் எண்ணிவது போல் சாடுவதற்கு..​

தேன் நிலவும் ஒன்றும் அமைதியின் திருவுருவம் எல்லாம் கிடையாது.. சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது தன் அக்காவை எதிர்த்து பேசி விடுவாள். ஆனால், அதற்கும் சேர்த்து அவள் வசை பாடத் தொடங்கி விடுவாள்.​

இப்பொழுதெல்லாம், அதைக் கேட்பதற்கு பதிலாக அமைதியாகவே இருந்து விட்டுப் போய்விடலாம் என்று தன்னை வெகுவாக கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாக இருக்கிறாள்.​

ஆனாலும், அவளின் மனக்குரல் அமைதி காக்காது.. அவளின் குமுறல்கள் அனைத்தையும் மைண்ட் வாய்ஸ் கூறிக் கொண்டே தான் இருக்கும். அதில், அவளுக்கு அப்படி ஒரு பேரின்பம் கிடைக்கும்.​

தன்னால் கூற முடியாததை உன் வாயிலாகவாவது கேட்க முடிகிறதே என்று நிம்மதி அடைந்து கொள்வாள்.​

அறைக்குள் நுழைந்த தேன்நிலவிற்கு இருப்பு கொள்ளவில்லை. கோபத்தில் உர்ரென்று அமர்ந்திருந்தாள்..​

கஸ்தூரியின் 9 வயது நிரம்பிய மகள் கல்பனா, “என்ன சித்தி இன்னைக்கும் அம்மாகிட்ட செம மாத்து வாங்கின போலருக்கே..”.​

தேன்நிலவு, “போடி.. நானே கடுப்பில் இருக்கேன். தேவையில்லாமல் என்கிட்ட திட்டு வாங்காதே..”.​

கல்பனா, “விடு சித்தி.. இதெல்லாம் ஒரு விஷயமா..” என்று கூறும் பொழுதே அவளின் தம்பி ஐந்து வயது நிரம்பிய கவின் சரவணனின் நான்கு வயது நிரம்பிய மகன் அய்யனாருடன் அங்கு வந்து சேர்ந்தான்.​

கவின், “ஆமா சித்தி.. அக்கா சொல்றதும் சரி தானே.. இதெல்லாம் உனக்கு என்ன புதுசா.. நீ ஏன் இவ்வளவு வருத்தப்படுற..” என்றான் தந்தியடிக்கும் வார்த்தைகளில்.​

தேன்நிலவு, “உங்களுக்கெல்லாம் என்ன தெரியும்? பேர் வச்சது இவங்க ஆனா அந்த பேரை சொல்லி கிண்டல் பண்றாங்கனு என்னை திட்டுறாங்க.. நானா கேட்டேன்.. எனக்கு இந்த பேர் வைக்க சொல்லி..”.​

கல்பனா, “இதெல்லாம் ஒரு விஷயமா சித்தி.. என்னை கூடத்தான் எல்லாரும் கல்லு கல்லுனு கூப்பிடுறாங்க.. அதுக்காக நான் என்ன கல்லா..”.​

“உனக்கு எவ்வளவு அழகான பேர் வச்சிருக்காங்க.. இவங்க எல்லாம் கிண்டல் பண்றதுக்காக இப்போ உன் பேரை மாத்திக்க போறியா..”.​

தேன்நிலவின் முக்கிய கூட்டாளிகள் இவர்கள் மூவரும் தான்.. கல்பனா, கவின், அய்யனார், தேன்நிலவு..​

இவர்கள் நால்வரும் சேர்ந்து தான் வீட்டில் பெரும்பாலும் எல்லா சேட்டைகளையும் செய்வார்கள்.. அதற்கும் வீட்டில் மற்ற மூவருக்கும் சேர்த்து தேன்நிலவுக்கு தான் திட்டு விழும்..​

ஏழு கழுதை வயசாகிறது அந்த சின்ன பசங்களோட சேர்ந்து சுத்திகிட்டு திரிகிற என்று.. நன்கு வாங்கி கட்டிக் கொள்வாள்..​

கல்பனா தேன்மொழியின் கையை பிடித்து இழுத்தவாறு, “சரி வா சித்தி.. போய் பம்பரம் விடலாம். ஊரிலிருந்து வரும் பொழுது அம்மாவுக்கு தெரியாமல் நான் ஒளிச்சு வச்சு பம்பரம் கொண்டு வந்திருக்கிறேன்”.​

“உனக்கு பம்பரம் விடுவதெல்லாம் ரொம்ப பிடிக்கும் இல்ல. உனக்காக தான் கொண்டு வந்தேன்.. வா போகலாம்..” என்று அவளை இழுத்துக் கொண்டு சென்றாள்.​

குழந்தைகளுடன் குழந்தையாக மாறியவள் மற்றது அனைத்தையும் பின்னுக்கு தள்ளிவிட்டு பம்பரம் விடுவதில் மும்முரமாக இறங்கிவிட்டாள்​

.​

சற்று நேரத்திலேயே கஸ்தூரி, “அம்மா இங்க வாயேன்.. இந்த தேனு என்ன பண்ணி வச்சிருக்கானு வந்து பாரு..” என்று கத்தும் சத்தம் கேட்டது.​

 

RJ novels

Moderator

மெய்யழகனின் தேன்நிலவு - 3​

தோட்டத்தில் பம்பரம் விட்டுக் கொண்டிருந்த தேன்நிலவு கல்பனாவை பார்த்து, “என்னடி உங்க அம்மா திரும்ப ஊளை விடுறாங்க.. இப்போ என்ன பிரச்சனையோ தெரியலையே..” என்றாள் சலிப்பாக.​

கல்பனா, “இதெல்லாம் வழக்கமா நடக்கிறது தானே.. நீ விட்டு தள்ளு பாத்துக்கலாம்..” என்று தேன் நிலவிற்கு தெம்பூட்டினாள்.​

தேன்நிலவு, “அது சரி.. நீ அங்க தினமும் வாங்குற.. இந்த சாட்டர்டே, சண்டே வந்தால் உனக்கு லீவு.. உனக்கும் சேர்த்து நான் வாங்குகிறேன்.. அந்த தைரியத்தில் பேசுறீங்களா மேடம்” என்றாள் தன் ஒற்றை புருவத்தை ஏற்றி கேள்வியாக.​

கல்பனா, “ஹி.. ஹி..” என்று அசடு வழிந்தாள்.​

கஸ்தூரி, “ஏய் தேனு.. எங்க டி இருக்க.. இங்க வா..” என்று குரல் கொடுக்க.​

கல்பனா, “போ சித்தி.. இல்லனா, அம்மா இங்க வந்திடும்.. அப்புறம் எனக்கும் சேர்த்து திட்டு விழும்” என்றபடி அங்கிருந்து நைசாக எஸ்கேப் ஆகிவிட்டாள்.​

தேன்நிலவு, “ஏதாவது பிரச்சனை வந்தால் மட்டும் என்னை அழகாய் மாட்டிவிட்டுட்டு போயிட வேண்டியது.. சரியானவள்” என்று கல்பனாவிற்கு மனதிற்குள் திட்டிக் கொண்டே கஸ்தூரியை நோக்கி நடந்தாள்.​

தன் முன்னே திருதிருவென விழித்தபடி நின்று இருந்த தேன் நிலவை உறுத்து விழித்த கஸ்தூரி, “என்ன டி இதெல்லாம்?” என்றாள் அதட்டலாக.​

தேன்நிலவு, “கதை புக்..” என்றாள் காற்றுக்கு கூட கேட்காத குரலில்.​

கஸ்தூரி, “உன்கிட்ட நான் எத்தனை தடவை சொல்லி இருக்கேன்.. இந்த மாதிரி தேவையில்லாமல் வாங்கி பணத்தை வீணாக்காதனு.. எத்தனை தடவை சொன்னாலும் நீ எல்லாம் திருந்தவே மாட்டியா..”.​

தேன்நிலவு, “அக்கா இதெல்லாம் சும்மா படிப்பதற்காக வாங்குவது கா” என்றாள் தன் கைகளை பிசைந்து கொண்டே.​

கஸ்தூரி அந்த டேபிளின் மீது அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை கோபமாக பிடித்து கீழே தள்ள..​

ஒரு புத்தகத்தினுள் இருந்து வெண்ணிற காகிதம் ஒன்று வெளியே தன் தலையை நீட்டி எட்டிப் பார்த்தது..​

அதை எடுத்து படித்த கஸ்தூரி அதிர்ந்த விழிகளோடு தன் நெஞ்சின் மீது கையை வைத்தபடி, “அம்மா.. இங்க பாரு.. இவ என்ன காரியம் செய்திருக்கானு.. அடிப்பாவி! இப்படி பண்ணிட்டியேடி..” என்றாள் அதிர்ச்சி மாறாத குரலில்.​

தேன்நிலவு, ‘இப்போ எதுக்கு இவ்வளவு ஷாக் ரியாக்ஷ்ன் கொடுக்குறாங்கனு தெரியலையே’ என்று புரியாமல் விழிக்க..​

சகுந்தலாவிற்கோ கஸ்தூரியின் நடவடிக்கையிலும், வார்த்தையிலும் படபடக்க தொடங்கி விட்டது.​

சகுந்தலா, “என்ன ஆச்சு கஸ்தூரி? ஏன் இவ்வளவு அதிர்ச்சியாகுற.. அப்படி என்ன இருக்கு அதுல?” என்றார் படபடக்கும் இதயத்தோடு.​

கஸ்தூரி, “இவ யாரையோ காதலிக்குறா மா” என்றாள் அதிர்ச்சி மாறாத குரலில் தேன்நிலவை கை காட்டியபடி.​

தேன் நிலவிற்கு ஒரு நொடி ஒன்றுமே புரியவில்லை. அவளும் கஸ்தூரியை பார்த்து அதிர்ந்து விழிக்க..​

சகுந்தலா தன் தலையில் அடித்துக் கொண்டவர், “ஐயோ கடவுளே! என்னடி சொல்ற?” என்றவர்.​

தேன்நிலவிடம், “இதுக்கா உன்னை நான் பெத்து வளர்த்தேன்.. இப்படி எங்க மானத்தை வாங்கிட்டியே..” என்று ஒப்பாரி வைக்க தொடங்கி விட்டார்.​

தேன் நிலவிற்கு தான் ஒன்றுமே விளங்கவில்லை. தன்னிடம் என்ன, ஏது என்று எதுவுமே கேட்காமல் இவர்களாகவே முடிவு செய்து கொண்டு பேசுகிறார்களே என்று ‘ஐயோ’வென்று இருந்தது.​

தேன்நிலவு, “என்னக்கா சொல்ற.. நீ சொல்ற மாதிரி எல்லாம் எதுவுமே இல்லை. நான் யாரையும் காதலிக்கல” என்றாள் சட்டென்று.​

கஸ்தூரி, “பொய் சொன்ன அடிச்சு பல்லை எல்லாம் கழட்டிடுவேன்” என்றாள் அவளை முறைத்து பார்த்துக் கொண்டே.​

தேன்நிலவு, “அக்கா நான் தான் எந்த தப்பும் பண்ணலைனு சொல்றேன் இல்ல.. அப்படி என்ன தான் இருக்கு அந்த பேப்பர்ல.. எதுக்கு அதை பாத்துட்டு நீ இப்படி கத்துற..”.​

சகுந்தலா, “பண்றது எல்லாம் பண்ணிட்டு பெரியவங்க முன்னாடியே இப்படி குரலை உயர்த்தி பேசுறியா.. வாய மூடு தேனு.. அக்கா எதுக்காக உன் மேல வீணா பழி சுமத்த போறா..”.​

கஸ்தூரி அந்த காகிதத்தை தன் தாயிடம் நீட்டியவள், “இங்க பாருமா, யாருக்கோ இவ காதல் கடிதம் எழுதி இருக்கா..​

‘அன்புள்ள படவா.. அன்புள்ள திருடா..​

அன்புள்ள ரசிகா.. அன்புள்ள கிறுக்கா..​

அன்புள்ள திமிரே.. அன்புள்ள தவறே..​

அன்புள்ள அன்பே..’​

பாத்தியா மா.. இவ எப்படி எழுதி வச்சிருக்கானு.. இவ அன்புனு யாரையோ காதலிக்கிறா”.​

தேன் நிலவிற்கு தன் தலையை அருகில் இருக்கும் சுவற்றில் எங்காவது சென்று முட்டிக் கொள்ளலாமா என்பது போல் இருந்தது.​

பாடல் வரியை பார்த்துவிட்டு தான் இவள் இப்படி கத்திக் கொண்டிருக்கிறாளா.. இதை உண்மை என்று எண்ணி தன் தாய் வேறு இவளுக்கு சப்போர்ட் செய்கிறார் என்று எண்ணி நொந்து போனவள்.​

“அக்கா அது ஒரு பாட்டோட லிரிக்ஸ்.. லவ் லெட்டர் எல்லாம் கிடையாது”.​

கஸ்தூரி, “பொய் சொல்லாத.. எந்த பாட்டுல இப்படி லிரிக்ஸ் வருது.. யார் அந்த அன்பு என்று சொல்லப் போறியா இல்லையா?”.​

தேன் நிலவு சலிப்பாக, “ஐயோ! அப்படி யாராவது இருந்தா தானே சொல்றதுக்கு.. நான் தான் யாரையும் லவ் பண்ணலைனு சொல்றேன்ல” என்றாள் கத்தியபடி.​

கஸ்தூரி, “இதெல்லாம் சரி வராது.. இவளுக்கு மாப்பிள்ளை பார்க்கிறது தான் சரியா வரும்”.​

தேன்நிலவு அதிர்ந்து விழித்தவள், “என்னக்கா சொல்ற நீ?” என்றாள் கோபமாக.​

சகுந்தலா, “வாயை மூடு தேனு.. நீ முதல்ல உள்ள போ.. அண்ணனுங்களுக்கெல்லாம் இந்த விஷயம் தெரிஞ்சா அவ்வளவு தான் உன்னை வெட்டி போட்டுடுவாங்க. உள்ள போனு சொல்றேன்ல” என்றார் அதட்டலாக.​

தேன்நிலவு, “அம்மா நான் தான் தப்பு பண்ணலைனு சொல்றேன்ல.. அக்கா தான் புரியாம பேசுறானா.. நீயும் இப்படி பேசுறியே..” என்னும்பொழுதே வாசலில் கவிதா அழைக்கும் குரல் கேட்டது.​

“அடியேய் தேனு‌.. இன்னும் என்னடி பண்ணிக்கிட்டு இருக்க.. சீக்கிரம் வெளியில் வாயேன்.. எவ்வளவு நேரமா உனக்காக காத்துக்கிட்டு இருக்கிறது” என்று காட்டு கத்தலாக கத்திக் கொண்டிருந்தாள்.​

கத்தி, கத்தி பார்த்தவள் எந்த ஒரு பதிலும் வராததால் வீட்டிற்குள்ளேயே வந்து விட்டாள்.​

உள்ளே இவர்கள் மூவரும் நின்றிருக்கும் தோரணையை பார்த்தவள், “அய்யய்யோ.. தப்பான டைமிங்ல வந்துட்டோம் போலருக்கே..” என்று முணுமுணுத்தபடி.​

“சும்மா.. தேனை பார்க்கலாம் என்று தான் வந்தேன். சரி, நான் கிளம்புறேன்” என்று அசடு வழிந்து கொண்டே கிளம்ப முற்பட்டவளை கஸ்தூரியின் குரல் தடுத்தது.​

“ஏய் நில்லு.. இவ உன் கூட தான நாள் ஃபுல்லா சுத்திக்கிட்டு இருக்கா.. உனக்கு இந்த விஷயம் தெரியுமா?”.​

கவிதா, “என்ன விஷயம் கா?” என்றாள் புரியாமல்.​

கஸ்தூரி, “தேன்நிலவு அன்புனு ஒரு பையனை காதலிக்கிறா.. அதை பத்தி உனக்கு ஏதாவது தெரியுமா..”.​

கவிதா அதிர்ச்சியாக, “என்னது தேன்நிலவு காதலிக்கிறாளா.. ஏன் டி உன்னோட பெஸ்ட் பிரண்டு நானு.. என்கிட்ட கூட நீ ஒரு வார்த்தை சொல்லலையே..” என்று கூறவும்.​

‘நான் காதலிக்கிறது எனக்கே இப்போ தான்டி சொன்னாங்க.. அப்புறம் நான் எங்க இருந்து உனக்கு சொல்றது..’ என்று மைண்ட் வாய்ஸில் பேசியபடி நொந்து போய் நின்று இருந்தாள் தேன்நிலவு.​

கஸ்தூரி, “அப்போ உனக்கு கூட தெரியாதா?”.​

கவிதா, “அப்படியெல்லாம் எதுவும் இருக்காது கா.. அப்படி ஏதாவது இருந்திருந்தால் கண்டிப்பா தேனு என்கிட்ட சொல்லி இருப்பா” என்றாள் நம்பிக்கையாக.​

கஸ்தூரி, “நீ என்ன படிக்கிற?”.​

கவிதா, “பிஎஸ்சி..”.​

கஸ்தூரி, “பாரு, இவ கூட தானே தினமும் சுத்திக்கிட்டு இருந்த.. இவளே காலேஜ் படிக்கிறா.. இவளை மாதிரி உனக்கு ஒழுங்கா படிப்பு தான் மண்டையில் ஏறல.. வீட்டுலயாவது அடக்க ஒடுக்கமா ஒழுங்கா இருக்கலாம் இல்ல.. எதுக்கு உனக்கு இந்த தேவையில்லாத வேலை எல்லாம்..”.​

தேன்நிலவு ஒன்பதாம் வகுப்பு வரை தான் படித்தாள்.. அதற்கு மேல் அவளுக்கு படிப்பு மண்டையில் ஏறவில்லை. இந்த ஒன்பதாம் வருடத்தை தாண்டுவதற்கே அத்தனை குட்டி கரணங்களை அடித்தாள்.​

இதில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்து விட்டால் தன் அண்ணன்களும், அக்காவும் சேர்ந்து தன்னை மட்டம் தட்டிக் கொண்டே இருப்பார்கள் என்ற எண்ணத்திலேயே ஒன்பதாம் வகுப்புடன் பள்ளி செல்வதை நிறுத்திவிட்டாள்.​

கடைக்குட்டி என்பதால் பெற்றோரிடமும் சலுகை.. அவர்களும் ஒன்றும் சொல்லாமல் விட்டுவிட்டார்கள்.. மற்றவர்களும் இதை வைத்து அவளை மட்டம் தட்ட ஒரு நல்ல வாய்ப்பாக இருப்பதால் எதுவும் தடுக்கவில்லை.​

தேன்நிலவு கோபமாக, “அக்கா நான் தான் எதுவும் பண்ணலைனு சொல்றேன்ல.. அப்புறம் ஏன் நீ என்னை திட்டிக்கிட்டே இருக்க..”.​

கஸ்தூரி, “சரி, நீ தான் எந்த தப்பும் பண்ணல இல்ல.. உனக்கு தான் அன்பு என்று யாரையுமே தெரியாதுல.. அப்போ வீட்ல மாப்பிள்ளை பாக்குறேன்னு சொன்னா எதுக்கு பயப்படுற..”.​

தேன்நிலவு, “அக்கா நான் எங்க பயப்படுறேன்.. எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம் என்று தான் சொன்னேன். இன்னும் கொஞ்சம் நாள் போகட்டுமே..”.​

கஸ்தூரி, “இதெல்லாம் பெரியவங்க எடுக்கிற முடிவு.. நீ என்ன வேண்டாம்னு சொல்றது.. அப்போ நீ யாரையோ காதலிக்கிறது உண்மை தானே” என்றாள் அவளை சந்தேக பார்வை பார்த்தபடி.​

தேன்நிலவு தன் தலையை சலிப்பாக இரு பக்கமும் ஆட்டியபடி, “நான் என்ன சொன்னாலும் நீ என்னை நம்ப போறது இல்ல.. உன்னை நம்ப வைக்க எனக்கும் என்ன பண்றதுனு தெரியல”.​

சாதாரணமாக ஒரு பாட்டு வரியை பேப்பரில் எழுதி வைத்ததற்காகவா இவ்வளவு பெரிய அக்கப்போர் என்று அவளுக்கு பெரும் ஆயாசமாக இருந்தது.​

கஸ்தூரி, “நீ யாரையும் காதலிக்கலை என்பது உண்மைனா.. நாங்க பார்க்கிற மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிக்க சம்மதம்னு சொல்லு” என்றார் அழுத்தமாக.​

தேன்நிலவு, “அக்கா..” என்று எதுவோ கூற வாய் எடுக்க.​

சகுந்தலா, “நீ தான் யாரையும் காதலிக்கவில்லை இல்ல.. அப்புறம் ஏன் டி தயங்குற.. சரினு தான் வாயை திறந்து சொல்லேன்.. என் தலையில் மண் அள்ளி போட்டுடாத டி” என்றார் முந்தானையால் தன் வாயை பொத்தியபடி அழுது கொண்டு.​

கஸ்தூரி, “அவ எப்படிமா சரினு சொல்லுவா.. அவ தான் அன்பை காதலிக்கிறாளே..”.​

தேன்நிலவு, “சரி, இப்போ உங்களுக்கு என்ன வேணும்.. நீங்க பார்க்கிற மாப்பிள்ளையை நான் கல்யாணம் செஞ்சுக்க சம்மதிச்சா நான் யாரையும் காதலிக்கலைனு நம்புவீங்க இல்ல..”.​

“எனக்கு சம்மதம் தான்.. நீங்க எந்த மாப்பிள்ளையை பார்த்தாலும் நான் கல்யாணம் பண்ணிக்கிறேன். என் மனசுல வேற யாருமே இல்ல போதுமா..” என்றவள் கோபமாக அங்கிருந்து கவிதாவுடன் வெளியேறிவிட்டாள்.​

சகுந்தலா சந்தேகமாக, “அவ தான் யாரையும் காதலிக்கலைனு சொல்றாளே.. அப்புறம் எதுக்காக நீ அவகிட்ட இவ்வளவு கோவமா பேசுற.. எனக்கு என்னவோ அவ பேசிட்டு போறது பார்த்தால் பொய் சொல்ற மாதிரி தெரியல..”.​

“அப்படி உண்மையிலேயே வேற யாரையாவது காதலிக்கிறதா இருந்தா.. அவ ஏன் நம்ம பாக்குற மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிக்க சம்மதம்னு சொல்ல போறா”.​

கஸ்தூரி, “அம்மா நீ சொல்றது உண்மை தான். ஒருவேளை, நீ சொல்ற மாதிரி அவள் யாரையும் காதலிக்காமல் கூட இருக்கலாம்”.​

“ஆனால், இனிமேல் அந்த மாதிரி எந்த ஒரு தப்பும் நடந்திட கூடாது இல்ல.. அவ ஒன்னும் சின்ன குழந்தை இல்லை 20 வயசு ஆகுது​

.. இப்போ கல்யாணம் பண்ணி கொடுக்குறதுல உனக்கு என்ன பிரச்சனை..”.​

சகுந்தலா, “20 வயசு ஆனாலும் அவ இன்னும் குழந்தை மாதிரி தான் டி நடந்துக்குறா..”.​

 
Last edited:

RJ novels

Moderator

மெய்யழகனின் தேன்நிலவு - 4​

கஸ்தூரி, “இன்னும் பத்து வருஷம் ஆனாலும் உன் பொண்ணு திருந்த மாட்டா.. இப்படியே தான் ஊதாரி தனமா ஊர் சுத்திக்கிட்டு இருப்பா..”.​

“அதுக்காக என் பொண்ணு சின்ன குழந்தைனு சொல்லி அவளை கட்டி கொடுக்காமலே வீட்டில் வைத்திருக்கலாம் என்று நினைக்கிறாயா..”.​

“இப்படி சுத்தி வரவளை மாத்தணும்னா கல்யாணம் பண்ணினால் மட்டும் தான் முடியும்.. கல்யாணம் பண்ணினால் தான் அவளுக்கு பொறுப்பு வரும்.. நீ இப்படியே அமைதியாக இருந்தினா சரி வராது..”.​

“அப்பா வந்ததும் பேசு.. வரன் பார்க்க ஆரம்பிக்கலாம்னு சொல்லு.. அப்புறம் நாளைக்கு ஏதாவது ஒரு தப்புனா ஐயோ அம்மானு தலையில் அடிச்சுக்கிட்டு அழுதா ஒன்னும் பண்ண முடியாது”.​

சகுந்தலாவிற்கும் கஸ்தூரியின் வார்த்தையில் பயம் கிளம்ப.. நாளை ஏதாவது ஒரு தவறு என்றால் இவர்கள் அனைவரும் சேர்ந்து நம்மை பிடித்துக் கொள்வார்களே என்று எண்ணி பயந்தவர்..​

“சரி டி, அப்பா வரட்டும் மாப்பிள்ளை பாக்குறது பத்தி பேசலாம்..”.​

வெளியே வந்த தேன்நிலவு கோபத்தில் புசுபுசுவென்று மூச்சைவிட்டவாறு குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள்.​

அவள் அருகில் ஒரு கல்லின் மேல் அமர்ந்து கொண்டிருந்த கவிதா, “இப்போ என்ன ஆயிடுச்சுனு நீ இவ்வளவு டென்ஷன் ஆகுற..”.​

தேன் நிலவு, “இன்னும் வேற என்ன டி ஆகணும்.. என்னை சுற்றி எல்லாருமே பைத்தியமா இருக்காங்க.. ஒரு பாட்டோட லிரிக்ஸ் எழுதி வச்சிருக்கேன் டி பேப்பர்ல..”.​

“அதை பாத்துட்டு என் அக்கா நான் யாரையோ காதலிக்கிறேன்னு சொல்லி கத்தி ஊரை கூட்டிட்டாங்க.. நான் இல்லைனு சொன்னாலும் நம்ப மாட்டேங்கிறாங்க..”.​

கவிதா, “உன் அக்காவே உன்னை எப்போ திட்டலாம்னு சான்ஸ்காக காத்துக்கிட்டு இருப்பாங்க.. அவங்க முன்னாடி நீ நல்லா சான்ஸ் கொடுக்கிற மாதிரி ஒரு விஷயத்தை செஞ்சு வெச்சிருக்க” என்றாள் சிரித்துக் கொண்டே.​

தேன்நிலவு, “சரி, நான் தான் யாரையும் காதலிக்கலைனு சொல்றேன்ல.. அதுக்கு அப்புறமாவது சரினு விடலாம்ல.. இவங்க பார்க்கிற மாப்பிள்ளையை நான் கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சா தான் நம்புவேன்னு சொல்றாங்க..”.​

கவிதா, “இருந்தாலும், அதுக்காக நீ அவசரப்பட்டு கல்யாணத்துக்கு சம்மதம்னு சொல்லாமல் இருந்திருக்கலாம்..”.​

தேன்நிலவு, “இல்லைனா நான் என்ன சொன்னாலும் அவங்க நம்ப மாட்டாங்க.. அக்கா பேசுறதெல்லாம் எனக்கு ஒரு விஷயமே இல்லடி.. அவங்க எப்பவுமே இப்படித்தான்..”.​

“என்னை ஏதாவது திட்டிக்கிட்டே இருப்பாங்க.. ஆனா, அம்மா அவங்க சொல்றது எல்லாம் உண்மைனு நினைச்சு நம்பி ரொம்ப பயப்படுவாங்க..”.​

“அவங்களுக்காக தான் சரினு சொல்லிட்டு வந்தேன். இப்போ என்ன.. நான் சரினு சொன்ன உடனே நாளைக்கே மாப்பிள்ளை பார்த்து என்னை கட்டிக் கொடுத்து அனுப்பிட போறாங்களா..”.​

கவிதா, “யாருக்கு தெரியும்.. உன் அக்கா ஆல்ரெடி ஒரு மாப்பிள்ளையை பார்த்து வச்சிட்டு கூட இந்த மாதிரி ஒரு ஏழரையை கூட்டி இருக்கலாம்..”.​

அவளின் வார்த்தையில் அதிர்ந்து விழித்த தேன் நிலவு, “என்னடி சொல்ற..” என்றாள் பதட்டத்தோடு.​

கவிதா, “ஆமா.. உன் அக்காவுக்கு அந்த அளவுக்கு உன்னை பிடிக்காது. அது நம்ம எல்லாருக்குமே தெரிஞ்ச விஷயம் தானே.. சும்மா சொன்னா கல்யாணத்துக்கு உங்க வீட்ல யாரும் ஒத்துக்க மாட்டாங்கனு கூட உன் அக்கா இப்படி செஞ்சிருக்கலாம் இல்லையா..”.​

தேன் நிலவு, “ஐயோ! இப்போ இவங்க என்ன மாதிரி மாப்பிள்ளை பார்க்க போறாங்கனு வேற தெரியலையே..” என்று புலம்பி கொண்டு இருக்க.​

தன் நண்பர்களுடன் அந்த புறமாக கையில் சிகரெட்டுடன் நடந்து வந்து கொண்டிருந்தான் அழகேசன். இவர்களை பார்த்ததும் சிகரெட் துண்டை கீழே போட்டு தன் காலால் மிதித்தவன்.​

“என்ன ஹனிமூன்.. ரொம்ப சோகமா இருக்கியே.. என்ன ஆச்சு?” என்று கேட்க.​

இவர்களைப் பார்த்ததுமே கவிதா நல்ல பிள்ளையாக எழுந்து நின்று கொண்டாள்.​

அவனின் நண்பன் ஷங்கர், “ஆமா டா மச்சான்.. ரெண்டு பேரோட முகமே சரியில்லையே”.​

தேன் நிலவு இருக்கும் கடுப்பில் அவர்களை முறைத்து பார்த்தபடி, “உங்களுக்கு வேற வேலையே இல்லையா.. எப்போ பாத்தாலும் ஊரை சுத்தி வருவது.. பொண்ணுங்களை சைட் அடிக்கிறது.. கடலை போடுறது.. இது தான் உங்க வேலையா..” என்றாள் கடுப்பாக.​

அழகேசன், “அடடே! இது கூட நல்லா இருக்கே.. இது நாள் வரைக்கும் எங்களை எல்லாருமே வேலையில்லாத வெட்டிப்பயலுங்கனு தான் சொல்லுவாங்க..”.​

“பரவாயில்லையே.. நீ இதையே ஒரு வேலையாக்கி நாங்களும் வேலைக்காரர்கள் தான்னு புரிய வச்சிட்ட..” என்றான் தேன் நிலவை நோக்கி மெச்சும் பார்வை பார்த்தபடி.​

தேன்நிலவு அதில் தன் முகத்தை அஷ்ட கோணலாக சுழித்தவள் ‘பைத்தியமா இவன்..’ என்பது போல் ஒரு பார்வையை அவனை நோக்கி வீசினாள்.​

கவிதாவோ, ‘ஷப்பா.. முடியல.. எங்க இருந்து தான் இப்படி எல்லாம் பேச இவன் கத்துகிட்டு வரானோ தெரியல.. காதிலிருந்து ரத்தம் வந்திடும் போலருக்கு” என்று மைண்ட் வாய்ஸில் பேசிக் கொண்டிருந்தாள்.​

ஷங்கர், “அட! ஆமாண்டா.. நான் கூட இதை கவனிக்கல பாரு.. இனிமே, யாராவது நம்மை வெட்டி பசங்கனு சொன்னா..”.​

“நம்மளுடைய வேலையை பத்தி அவங்ககிட்ட விளக்கி கூறிடுவோம்.. நம்ம வேலையை ஏன் நாம இவங்க கிட்ட இருந்தே ஆரம்பிக்கக் கூடாது..” என்று கேட்கவும்.​

தேன்நிலவு அவனை முறைத்து பார்த்தாள்.​

சங்கர், “ஐயோ! ரொம்ப பயமா இருக்கு.. இப்படியெல்லாம் பாக்காத ஹனிமூன்.. விட்டா கண்ணாலேயே எங்களை பொசிக்கிடுவ போலருக்கே..”.​

“நீ தானே எங்களுக்கு நல்ல வேலையாக சொல்லி இருக்க.. அதான் சைட் அடிக்கிற வேலையை உன்கிட்ட இருந்தே ஆரம்பிக்கலாம் என்று பார்த்தோம்” என்றான் நக்கலாக.​

மற்ற நண்பர்கள் அனைவரும் ஹைபை அடித்துக் கொண்டு நகைக்க.​

கவிதா, “சரி, வாடி கிளம்பலாம்.. மணி ஆயிடுச்சு”.​

சங்கர், “என்ன கவிதை மேடம், எங்களைப் பார்த்தாலே தெறிச்சு ஓடுறீங்களே.. அவ்வளவு பயமா எங்க மேல..” என்றான் சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டு.​

அப்பொழுது வேகமாக இவர்களை நோக்கி வந்த புல்லட் தேன் நிலவின் அருகில் வந்து நிற்கவும்.​

பதட்டமாக ‘யார்’ என்று அனைவரும் திரும்பி பார்த்தனர்.​

சரவணன் தான் வண்டியில் அமர்ந்திருந்தான். அவனைப் பார்த்த தேன்நிலவிற்கு சர்வ நாடியும் ஆட்டம் கண்டு விட்டது.​

நடுங்கும் குரலில், “அண்ணா..”.​

சரவணன் அங்கு நின்றிருந்த ஆடவர்களை நெருப்பை கக்கும் விழிகளால் முறைத்து பார்த்தவன்..​

கவிதாவையும் தேன் நிலவையும் பார்த்து, “இங்கு என்ன வேலை உங்களுக்கு..” என்றான் அதட்டலாக.​

அவனின் குரலே அவ்வளவு கோபத்தை உள்ளடக்கி இருந்தது.​

கவிதா, “இல்ல.. இல்ல அண்ணா.. வீட்டுக்கு தான் கிளம்பிக்கிட்டு இருந்தோம். இவங்க தான் சும்மா பேசிகிட்டு இருந்தாங்க..” என்றாள் பயத்தில் தந்தியடிக்கும் வார்த்தைகளால்.​

சரவணன் தேன் நிலவை உருத்து விழித்தபடி, “இரண்டு பேரும் கிளம்புங்க..” என்கவும்.​

அடுத்த நொடியை கவிதாவும், தேன் நிலவும் திரும்பியும் பாராமல் விறு விறுவென நடக்க தொடங்கினர்.​

அழகேசன் அண்ட் கோவும் சத்தம் இன்றி நைசாக அந்த இடத்தை விட்டு நழுவினர்.​

தேன்நிலவும், கவிதாவும் வீட்டை சென்று அடையும் வரையிலுமே அவர்களின் பின்னோடு பைக்கில் மெதுவாக வந்து கொண்டிருந்தான் சரவணன்.​

கவிதா, “அய்யய்யோ! என்ன டி இது.. உன் அண்ணன் நம்ம பின்னாடியே வராரு.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு டி..” என்றாள் பதட்டத்தில் தேன் நிலவின் கையை பிடித்துக் கொண்டு.​

தேன்நிலவு, “உனக்கே இவ்வளவு பயமாயிருக்கே.. அப்போ என்னுடைய நிலைமையை நினைச்சு பாரு.. இப்போ தான் வீட்ல அக்கா ஒரு ஏழரையை கூட்டினா.. இப்போ நல்லா சரவணன் அண்ணா கிட்ட வேற சிக்கிட்டோம்”.​

“வீட்டுக்கு போனால் என்ன நடக்க போகுதுனு எனக்கு இப்போவே என் ஹார்ட் வெளியில் வந்து குதிச்சுடுற மாதிரி படபடனு அடிச்சுக்குது” என்றாள் வியர்வை முத்துக்களை ஒற்றை கையால் துடைத்தபடி.​

கவிதா, “சரி டி.. அப்போ நான் இப்படியே கிளம்புறேன்”.​

தேன் நிலவு அவளின் கையை இறுக்கிப்பிடித்தவள், “என்ன டி விளையாடுறியா.. மரியாதையா வீட்டுக்கு வா.. நான் சொன்னா எங்க வீட்ல யாருமே என்னை நம்ப மாட்டாங்க. நீ சொன்னாலாவது கொஞ்சம் நம்புவாங்க.. ப்ளீஸ் டி..” என்றாள் தன் கண்களை சுருக்கி கெஞ்சலாக.​

கவிதாவிற்கும் இந்த நிலையில் அவளை அப்படியே விட்டு செல்ல மனம் வரவில்லை. உயிர் தோழியாகிற்றே.. அவளின் சுக துக்கங்கள் அனைத்திலுமே இவளுக்கும் பங்கு உள்ளது அல்லவா..​

‘சரி’ என்று தலையசைத்தவாறு அவளுடன் வீடு நோக்கி நடந்தாள்.​

இருவரும் வீட்டிற்குள் நுழைந்து விறுவிறுவென அறை பக்கம் நகர முற்பட..​

சரவணன் வண்டியை நிறுத்திவிட்டு வேகமாக கோப நடையுடன் வீட்டிற்குள் நுழைந்தவன், “ஏய்.. நில்லு!” என்றான் அந்த வீடே அதிரும்படி.​

அதில், அவன் அழையாமலே வீட்டில் உள்ள மொத்த உறுப்பினர்களும் அந்த கூடத்தில் ஆஜராகி விட்டனர்.​

தேன்நிலவு வெடவெடக்கும் கை காலுடன் நின்று இருக்க..​

கவிதாவும் என்ன நடக்குமோ என்ற பதட்டத்தோடு பயந்து போய் பார்த்துக் கொண்டிருந்தாள்.​

சரவணன், “அந்த பொறுக்கி பசங்க கிட்ட உனக்கு என்ன பேச்சு?”.​

தேன்நிலவு, “நாங்க எதுவும் பேசல அண்ணா.. அவங்க தான் எங்ககிட்ட வந்து பேசினாங்க..”.​

சரவணன், “அவங்க பேசுனா இப்படித்தான் பல்லை காட்டி பேசிகிட்டு நிப்பீங்களா.. ஊர் காரங்க யார் கண்ணிலாவது பட்டால் என்ன நினைப்பாங்க.. நம்ம குடும்பத்தை பற்றி தப்பா பேச மாட்டாங்க..”.​

கஸ்தூரி, “என்ன அண்ணா என்ன ஆச்சு? என்ன பண்ணா இவ?”.​

சரவணன், “அந்த அழகேசன் கூட நடுரோட்டில் நின்று சிரிச்சு பேசிகிட்டு நிக்கிறா”.​

கஸ்தூரி, “வர.. வர.. இவ சவகாசமே சரியில்லை அண்ணா.. நான் கூட அம்மாகிட்ட சொல்லிக்கிட்டு இருந்தேன்.. இவளுக்கு 20 வயசு முடிய போகுது இன்னும் எதுக்கு நாளை கடத்தணும்..”.​

“பேசாமல் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விடலாம். இதையெல்லாம் இப்படியே விட்டால் சரி வராது. நாளை பின்ன ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் நம்ம தலையில் தான் வந்து விழும்” என்றார் எரிச்சலாக முகத்தை வைத்துக்கொண்டு.​

தேன் நிலவிற்கு கண்கள் கலங்கிவிட்டது. ஏதோ, குற்றவாளியை விசாரணை செய்வது போல் நிற்க வைத்து விசாரிக்கிறார்களே..​

என்ன நடந்தது, ஏது நடந்தது என்று பொறுமையாக கூட கேட்காமல்.. அவர்களாகவே கேள்வியை கேட்டு.. அவர்களாகவே ஒரு முடிவையும் எடுத்து விடுகிறார்கள்.​

பார்த்திபன், “அக்கா சொல்றதும் சரி தான் அண்ணா.. மாப்ள பார்க்க ஆரம்பிச்சிடலாமே.. மாப்பிள்ளை உடனே அமையுமானு தெரியாது. இப்போது பார்க்க ஆரம்பிச்சா சரியா இருக்கும்” என்றான் தன் பங்கிற்கு.​

சரவணன், “நீங்க என்னமா சொல்றீங்க?” என்றான் சமையல் அறை வாசலில் நின்று இருந்த சகுந்தலாவை பார்த்து.​

சகுந்தலா, “இதில் நான் சொல்ல என்ன தம்பி இருக்கு.. நீ என்ன சொல்றியோ அதான்..” என்றவர் அத்துடன் முடித்துக் கொண்டார்.​

என்று சரவணன் தலையெடுத்து திருமணம் முடிந்து குடும்ப பொறுப்புகளை ஏற்க ஆரம்பித்தானோ.. அப்போதிலிருந்தே​

இப்படி தான்.. மூத்த மகன் என்னும் உரிமையில் வீட்டில் அவன் எடுக்கும் முடிவுக்கு தான் அனைவருமே கட்டுப்படுவார்கள். அவனின் தாய் தந்தை உட்பட..​

 

RJ novels

Moderator

மெய்யழகனின் தேன்நிலவு - 5​

தேன் நிலவிற்கு ஆதங்கத்தில் தொண்டையை அடைத்துக் கொண்டு வந்தது. தன்னிடம் மட்டும் ஏன் இவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொண்டு பாராமுகம் காட்டுகிறார்கள் என்பது அவளின் மூளைக்கு எட்டவே இல்லை..​

சடுதியில் கலங்கிய கண்ணை யாருக்கும் காட்ட விரும்பாதவள் தலைகுனிந்தவாறு அறைக்குள் தஞ்சம் புகுந்தாள்.​

அவளை பின்தொடர்ந்த கவிதா, “விடு டி.. ஏன் தான் உன் வீட்டு ஆளுங்க எல்லாம் இப்படி இருக்காங்களோ தெரியல.. அவன் நம்மகிட்ட வந்து பேசுனா நாம என்னடி பண்ணுவோம். எல்லாத்துக்கும் உன்னையே சொல்றாங்க”.​

தேன்நிலவு தன் தொண்டையை செறுமியவள், “இதெல்லாம் என்ன புதுசா.. எந்த பிரச்சனை நடந்தாலும் இவங்க எல்லாரும் ஒன்னு சேர்ந்து என் மேல தான் எல்லா பழியையும் தூக்கி போடுவாங்க..”.​

“இப்பவும் அதான் நடந்திருக்கு.. ஆனால் என்ன.. எப்பயுமே பிரச்சனை சின்னதாய் இருக்கும். திட்டிட்டு விட்டுடுவாங்க.. இப்போ கல்யாணம் பண்ணி இங்க இருந்து மொத்தமா அனுப்ப போறேன்னு சொல்றாங்க. அது தான் டி ரொம்ப பயமா இருக்கு..”.​

கவிதா, “இதுக்கு ஏன் டி நீ பயப்படுற.. உன் நல்ல மனசுக்கு உனக்கு சூப்பரான மாப்பிள்ளை தான் அமையும். இவங்களை மாதிரி இல்லாமல் உன்னை உள்ளங்கையில் ராணி மாதிரி வைத்து தாங்குற மாதிரி உனக்கு ஒரு மாப்பிள்ளை கிடைக்கப் போறார் பாரு..”.​

தேன்நிலவு, “எனக்கு அவ்வளவு பெரிய ஆசை எல்லாம் இல்ல கவிதா.. இவங்களை மாதிரி என்னை மட்டம் தட்டி பேசாமல் இருந்தாலே போதும்” என்றவளுக்கு விழிகள் மீண்டும் கலங்கிவிட்டது.​

பிறகு, அவளை சமாதானம் செய்துவிட்டு கவிதா அங்கிருந்து வெளியேற..​

அவளுக்காகவே காத்திருந்தது போல் அழகேசன் அவளின் எதிரே நடந்து வந்தான், “என்ன கவிதை நீ மட்டும் தனியா வர.. எங்க உன்னுடைய ஆருயிர் தோழியை காணும்?”.​

கவிதாவிற்கு கோபம் கட்டுக்கடங்காமல் எழுந்தது. இருப்பினும், தேன்நிலவை போல் சரிக்கு சரியாக சண்டையிட்டோ, வாயாடியோ பழக்கம் இல்லாதவள்.. அவனுக்கு பதில் கொடுக்காமல் விறுவிறுவென நடக்கத் தொடங்கினாள்.​

அழகேசன், “என்ன.. நான் பாட்டுக்கு கேட்டுகிட்டே இருக்கேன். நீ பாட்டுக்கு வேகமாக போற..” என்றான் அவளின் வழியை மறித்தபடி.​

கவிதா, “இப்போ உங்களுக்கு என்ன வேணும்.. உங்களால் இப்போ அவளுக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் செய்து கொடுக்கப் போறாங்க.. இப்போ உங்களுக்கு சந்தோஷமா?” என்றாள் வெடுக்கென்று.​

அழகேசன், “ஏன்.. நான் என்ன பண்ணேன்?”.​

கவிதா, “நாங்க எங்க போனாலும் எதுக்காக நீங்க தேன்நிலவு கிட்ட வம்பு பண்ணிக்கிட்டே இருக்கீங்க.. உங்களால் தான் இப்போ அவ வாழ்க்கையே என்ன ஆகப்போகுதோ தெரியல..”.​

அழகேசன், “ஓ! அப்போ ஹனிமூன்க்கு கல்யாணமா..” என்றான் தன் புருவத்தை நெரித்தபடி யோசனையாக.​

கவிதா, “மறுபடியும் எங்களை எங்கேயாவது பார்த்தா இப்படி வலிய வந்து பேசி வேற ஏதாவது பிரச்சனையை உண்டாக்கிடாதீங்க” என்றவள் கோபமாக அவனை முறைத்து பார்த்துவிட்டு முன்னேறி விட்டாள்.​

அன்றைய இரவு உணவை அனைவரும் ஒன்றாக கூடத்தில் அமர்ந்து உண்டு கொண்டிருந்தனர். சிறுவர்களின் சலசலப்போடு அந்த இடமே அமைதி இன்றி இருந்தது.​

சரவணன் அனைவரும் உணவை உண்டு முடித்ததும், “அப்பா நம்ம தேனுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன்” என்றான் தன் குரலை சிறுமி கொண்டு.​

தேன் நிலவின் தந்தை முருகன், “என்னப்பா.. அதுக்குள்ள என்ன அவசரம்?” என்றதும் தான் தேன்நிலவுக்கு இழுத்துப் பிடித்து வைத்திருந்த மூச்சு நிம்மதி பெருமூச்சாக வெளியேறியது.​

ஆனால், அதற்குள் நீ நிம்மதி அடைந்துவிட்டால் எப்படி.. என்பது போல் அடுத்த அடுத்த சம்பவங்கள் அரங்கேறியது.​

சரவணன், “இப்போனா.. உடனே இல்லப்பா.. மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கலாம் என்று தான் சொன்னேன். நல்ல மாப்பிள்ளையாக அமைய வேண்டாமா? பார்த்துக்கிட்டே இருக்கலாம்..”.​

“உடனே அமைந்தால் பரவாயில்லை.. ஒருவேளை, ஒன்று இரண்டு வருஷம் ஆச்சுனா நாம லேட்டா பார்க்க போய் ரொம்ப லேட் ஆகிட கூடாது இல்ல.. அது மட்டும் இல்லாம தேனுக்கும் இப்போ கல்யாணம் பண்ற வயசு தானே..”.​

கஸ்தூரி, “ஆமா பா.. சரவணன் அண்ணன் சொல்றதும் சரிதான். எனக்கும் நீங்க 21 வயசுல தானே கல்யாணம் செஞ்சு கொடுத்தீங்க.. இவளுக்கு கல்யாணம் செஞ்சு கொடுத்துட்டா உங்க கடமையும் முடிஞ்சிடும்”.​

“இப்போ இருக்கிற சூழ்நிலையில் நல்ல மாப்பிள்ளை கிடைக்கிறதே பெரிய அபூர்வமா இருக்கு. நாம இப்போதிலிருந்தே பார்க்க ஆரம்பிச்சா தான் ஒரு ஒன்னு ரெண்டு வருஷத்துலையாவது நல்ல மாப்பிள்ளை அமையும்”.​

முருகன் தன் மனைவியின் முகத்தை பார்த்தவர்.. அவரும் அமைதியாக நிற்கவும், “உன் இஷ்டப்படி பார்த்திடலாம்..”.​

சரவணன், “சரிப்பா நாளைக்கு குலதெய்வ கோவிலுக்கு குடும்பமா போய் பொங்கல் வச்சிட்டு வந்து தேனோட போட்டோவ தெரிஞ்ச புரோக்கர் கிட்ட கொடுத்து மாப்பிள்ளை பார்க்க சொல்றேன்” என்றவன் எழுந்து அறைக்கு சென்று விட்டான்.​

தேன்நிலவிற்கு இப்பொழுது திருமணம் செய்து கொள்வதில் கூட பிரச்சினை இல்லை.. இவர்கள் எப்படிப்பட்ட மாப்பிள்ளையை பார்க்கப் போகிறார்கள் என்பது தான் அவளின் மிகப்பெரிய பிரச்சனையாக இருந்தது.​

இங்கே தான் இவர்களின் கெடுபிடியில் வாழ்க்கை ஓடியது என்றால் அங்கேயும் இவர்கள் பார்க்கும் மாப்பிள்ளை எப்படி இருப்பான் என்று தெரியாதே.. ஒருவேளை, நல்லவனாக அமைந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் எழ.​

எப்படியும் இவங்க நாம இப்போ திருமணம் வேண்டாம்னு சொன்னா நிச்சயமா கேக்க மாட்டாங்க. அட்லீஸ்ட், பாக்குற மாப்பிள்ளையாவது ஒழுங்கா அமையணும் என்ற எண்ணம் தான் அவளின் மனதில் எழுந்தது.​

ஆனால், பிற்காலத்தில் தன்னை ஆட்டிப்படைக்கவே ஒருவன் வரப்போகிறான் என்பதை அறியவில்லை பேதை மனம்..​

இளங்கோ கஸ்தூரியின் காதருகில், “தேனுக்கு எந்த கலர் டிரஸ் போட்டாலும் நல்லா எடுப்பா இருக்குல்ல.. ஆமா.. எப்படி உங்க குடும்பத்திலேயே அவ மட்டும் நல்லா கலரா இருக்கா?” என்றான் தேன் நிலவை புகழ்ந்தபடி.​

இப்படித்தான் தங்களுக்கு திருமணம் ஆன தினம் முதல் அடிக்கடி இளங்கோ தேன்மொழியை பற்றி ஏதாவது புகழ்ந்து கஸ்தூரியிடம் பேசுவார்.​

இவரின் புகழ்ச்சியான வார்த்தைகள் அனைத்தும் கஸ்தூரியின் மனதிற்குள் இருக்கும் பொறாமையை தான் தூண்டி விடும்படி இருக்கும்.​

இவர்களின் தாய் சகுந்தலா வெளிர் நிறம்.. ஆனால், தந்தையோ மாநிறம்.. ஆகையால், சரவணனும், கஸ்தூரியும் மாநிறத்திற்கும் வெளிர் நிறத்திற்கும் நடுத்தரமான நிறத்தில் இருப்பார்கள்.​

இவர்கள் நால்வரில் பார்த்திபன் தான் தன் தந்தையைப் போல் மாநிறத்தில் பிறந்திருந்தான். ஆனால், தேன்நிலவு அப்படியே தன் தாயின் சாயலில் பளிச்சென்று வெளிர் நிறத்தில் பிறந்திருந்தாள்.​

அதே போல் அவளுக்கு கூந்தலும் நன்கு நீளம்.‌ கஸ்தூரிக்கு அவளைப் போல் கிடையாது. இப்படி சிறு, சிறு விஷயத்திற்கெல்லாம் தேன் நிலவின் மேல் தேவையில்லாமல் பொறாமை குணத்தை வளர்த்துக் கொண்டார் கஸ்தூரி.​

“இப்போ இது ரொம்ப முக்கியமா..” என்றாள் தன் கணவரிடம் சிடுசிடுப்பாக.​

இளங்கோ, “இல்ல கஸ்தூரி.. சும்மா சொன்னேன்”.​

கஸ்தூரி, “நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம்.. வாயை மூடுங்க” என்றாள் தன் பற்களை கடித்துக் கொண்டு.​

அன்றைய இரவு வேளையில் மொட்டை மாடியில் தன் அண்ணன்களுடனும், அண்ணிகளுடனும், கணவருடனும் கஸ்தூரி தேன் நிலவின் திருமண ஏற்பாட்டை பற்றி கலந்து ஆலோசித்துக் கொண்டிருந்தார்.​

கஸ்தூரி, “அண்ணா மாப்பிள்ளை உள்ளூரில் பார்க்கலாமா இல்ல வெளியூரில் பார்க்கலாமா?”.​

சரவணன், “எந்த ஊராக இருந்தால் என்ன கஸ்தூரி.. நல்ல மாப்பிள்ளையாக இருந்தால் போதாதா..”.​

கஸ்தூரி, “அண்ணா நான் சொல்றேன்னு நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க.. அவளுக்கு எதுக்கும் கொஞ்சம் நம்மை விட கம்மியா இருக்க மாதிரியே மாப்பிள்ளை பாருங்க”.​

உடனே, பார்த்திபனின் மனைவி கீதா, “ஆமா அண்ணி.. நானே இதை எப்படி உங்ககிட்ட சொல்றதுனு தான் யோசிச்சுக்கிட்டு இருந்தேன்”.​

சரவணன், “எதுக்கு அப்படி சொல்லுற?”.​

கஸ்தூரி, “இல்லை அண்ணா.. சும்மாவே அவளுக்கு வாய்க்கொழுப்பு ரொம்ப ஜாஸ்தி.. இதில், நம்ம வாழுறதை விட அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைந்துவிட்டது என்றால் அவ்வளவு தான்..”.​

அவளை கையிலேயே பிடிக்க முடியாது‌ உங்களுக்கு தான் அவளுடைய வாயை பத்தி தெரியுமே.. ரொம்ப பெருமை பேசிகிட்டு திரிவா.. அவளை அப்பப்போ கொஞ்சம் தட்டி வச்சுக்கிட்டே இருக்கணும். அதுக்கு தகுந்த மாதிரி மாப்பிள்ளை பாருங்க..”.​

இளங்கோ, “எதுக்கு கஸ்தூரி அப்படி சொல்ற.. அவ உன் தங்கச்சி தானே..”.​

கஸ்தூரி அவனை முறைத்துப் பார்த்தவள் “அதுக்காக தான் இப்படி சொல்கிறேன்.. அவ‌ எனக்கு தங்கச்சி.. என்னை விட அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சிடுச்சுனா.. அப்புறம் எனக்கு அவ முன்னாடி அவமானமா இருக்காதா..”.​

இளங்கோவிற்கு மட்டும் இவர்களின் பேச்சு வார்த்தையில் எப்பொழுதுமே அவ்வளவு உடன்பாடு இருக்காது. இருந்தாலும், கஸ்தூரிக்கு பயந்து கொண்டு அமைதியாக அமர்ந்திருப்பார் வேறு வழியில்லாமல்..​

பார்த்திபன், “ஆமா அண்ணா.. அக்கா சொல்றதும் சரி தான்”.​

சரவணன், “சரி, பாக்கலாம்..” என்றதோடு முடித்துக் கொண்டான்.​

மறுநாள் காலையிலேயே சீக்கிரமாக ஆயத்தமானவர்கள் தங்கள் குலதெய்வ கோவிலை நோக்கி புறப்பட்டனர்.​

தேன்நிலவு கவிதாவையும் வரும்படி அழைத்திருக்க.. கவிதாவும் இவர்களுடன் இணைந்து கொண்டாள்.​

தேன் நிலவு அழகிய பிங்க் நிறத்தில் பட்டுப்பாவாடை தாவணி அணிந்திருக்க.‌. அவளின் நிறத்திற்கும் உடல் வாகிற்கும் அது அவளுக்கு கச்சிதமாக பொருந்தி இருந்தது.​

தன் நீண்ட நெடிய கூந்தலை அழகாக பின்னி இருந்தாள். அவளுக்கு தலை நிறைய மல்லிகை பூவை வைத்துவிட்டார் அவளின் தாய் சகுந்தலா..​

கஸ்தூரிக்கு மட்டுமல்லாமல்.. அவளின் அண்ணிகளுக்குமே எப்பொழுதும் தேன் நிலவின் அழகின் மேல் ஒரு வித பொறாமை இருப்பது என்னவோ உண்மை தான்..​

மூவருமே இப்பொழுது தேன் நிலவை தான் பொறாமையுடன் பார்த்துக் கொண்டு நின்று இருந்தனர்.​

நல்ல முறையில் கோவிலில் பொங்கல் வைத்து முடித்து சாமி கும்பிட்டு விட்டு கிளம்புகையில் அவர்களுக்கு எதிரே வந்த அழகேசனின் தந்தையும் அந்த ஊரின் தலைவருமான ரத்தினம் “அடடே! என்ன முருகா பொங்கல் வைக்க வந்தியா?”.​

முருகன், “ஆமா ரத்தினம்.. கடைசி பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கலாம்னு இருக்கோம்.. அதான் குலதெய்வ கோவிலுக்கு வந்து பொங்கல் வச்சுட்டு நல்ல காரியத்தை ஆரம்பிக்கலாமேனு குடும்பமா வந்தோம்”.​

ரத்தினம் யோசனையுடன், “ஓ! அப்படியா.. நான் ஒன்னு கேட்டா நீ தப்பா நினைச்சுக்க மாட்டியே..”.​

முருகன், “அட என்ன ரத்தினம்.. என்ன விஷயம்னு முதலில் சொல்லு..” என்றார் உரிமையோடு.​

ரத்தினமும், முருகனும் சிறு வயது முதலே நண்பர்கள்.. அந்த உரிமை உணர்வு இன்றுமே அவர்கள் இருவரிடமும் இருக்கிறது.​

ரத்தினம், “அது வந்து முருகா.. என் பையன் அழகேசனுக்கு நான் பொண்ணு பார்த்துகிட்டு​

இருக்கேன். உனக்கு விருப்பம் இருந்தால் உன் பொண்ண என் பையன் அழகேசனுக்கு கட்டி கொடுக்கிறியா?” என்று பட்டென்று போட்டு உடைத்தார்.​

 

RJ novels

Moderator

மெய்யழகனின் தேன்நிலவு - 6​

இதை முருகன் சற்றுமே எதிர்பார்க்கவில்லை.. தடுமாற்றத்தோடு நின்று இருந்தார்.​

ரத்தினம், “உடனே உன்னுடைய முடிவை சொல்லணும் என்று அவசரம் இல்லை.. பொறுமையா வீட்டுக்கு போய் உன் குடும்பத்தோட கலந்து ஆலோசித்து கூட நீ உன் முடிவை சொல்லு..”.​

முருகன், “சரி, ரத்தினம்.. நான் வீட்டுக்கு போய் எல்லார்கிட்டயும் பேசிட்டு உனக்கு சீக்கிரமே முடிவு சொல்கிறேன்” என்றவர் அவரிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு சென்றார்.​

வீட்டிற்குள் நுழையும் பொழுதே சரவணன், “ரத்தினம் உங்களிடம் ஏதோ பேசிக்கிட்டு இருந்தாரே.. என்ன சொன்னார்?” என்றான் கேள்வியாக.​

முருகன் யோசனையோடு, “அது ஒன்னும் இல்லப்பா.. அவனோட பையன் அழகேசனுக்கு நம்ம தேன் நிலவை கட்டிக் கொடுக்க முடியுமானு கேட்டான்..” என்று கூறவும்.​

தேன்நிலவு அதிர்ச்சியில் உறைந்தே போய்விட்டாள். இப்பொழுது தான் குலதெய்வ கோவிலில் கடவுளிடம் தன் மனதிற்கு பிடித்தார் போல மாப்பிள்ளை அமைய வேண்டும் என்ற பெட்டிஷனை போட்டுவிட்டு வந்தாள்.​

அதற்குள் அந்த அழகேசனா மாப்பிள்ளையாக வரவேண்டும் என்று அவளின் முகம் அப்படியே தன் அதிருப்தியை காட்டியது.​

சரவணன், “நீங்க என்னப்பா நினைக்கிறீங்க?”.​

முருகன், “ரத்தினம் நல்ல குடும்பம் தான்.. ஆனாலும், அவனுடைய பையன் பொறுப்பில்லாமல் எந்த ஒரு வேலைக்கும் போகாமல் ஊதாரி தனமா சுத்திகிட்டு இருக்கான். அதான் இது சரி வருமானு ஒரே யோசனையா இருக்குப்பா..”.​

சரவணன், “உங்களுக்கு வேண்டாம்னா பரவாயில்லை விட்டுடலாம்..”.​

தேன் நிலவின் மனதிற்குள் இப்பொழுது தான் நிம்மதி படர்ந்தது.​

அறையினுள் நுழைந்ததுமே கவிதா, “நல்ல வேலை டி.. எங்க உன்னுடைய அப்பா சரினு சொல்லிடுவாரோனு ஒரு நிமிஷம் பதறிட்டேன்..”.​

தேன் நிலவு, “ஆமா டி.. நான் கூட ரொம்ப பயந்துட்டேன்” என்று கூறி பெருமூச்சை விட்டாள்.​

சமையல் கட்டில் காய் நறுக்கியவாறு கஸ்தூரி மெதுவாக, “அம்மா, ஏன் அந்த அழகேசனை அப்பா கட்ட வேண்டாம் என்று சொல்றாங்க”.​

சகுந்தலா, “அந்த பையன் வேலைக்கே போகாமல் ஊர் சுத்திட்டு இருக்கான்.. அவனுக்கு எப்படி நம்ம பொண்ண கட்டுவது?”.​

கீதா, “அத்தை, நீங்க ஏன் அப்படி எல்லாம் யோசிக்கிறீங்க.. அவங்களுக்கு குடும்ப சொத்து நிறைய இருக்கு.. கல்யாணம் பண்ணி வச்சா பொறுப்பு தானா வந்திடும்”.​

சகுந்தலா, “அப்படியெல்லாம் நம்பி எப்படிமா நம்ம பொண்ண கொடுக்க முடியும்.. இது என்ன சாதாரண விஷயமா.. தேனோட வாழ்க்கை சம்பந்தப்பட்டது”.​

“நாளை பின்ன அந்த பையன் திருந்தாமல் இப்படியே இருந்தானா.. அப்புறம் நம்ம பொண்ணு வாழ்க்கையே சிக்கல் ஆகிடும்” என்று கூறிக் கொண்டிருக்கும் பொழுதே வெளியே இருந்து சகுந்தலாவை முருகன் அழைத்தார்.​

அவர் சமையலறையை விட்டு வெளியேற..​

திலகா, “என்ன கஸ்தூரி உங்க அம்மா இப்படி சொல்லிட்டு போறாங்க..”.​

கஸ்தூரி, “ஆமா அண்ணி.. நான் கூட அந்த அழகேசனுக்கு தேனை கட்டி வச்சுடலாம்னு பார்த்தேன். எப்படியும் அவன் வேலை வெட்டிக்கு போக மாட்டான்..”.​

“இப்படியே தான் வெட்டிப்பயனா ஊர் சுத்திக்கிட்டு இருப்பான். அவளும் நம்மகிட்ட எதிர்த்து பேசாமல் அடங்கி போய் ஒழுங்கா இருந்து இருப்பா.. என்ன பண்றது.. அப்பாவும், அம்மாவும் பிடி கொடுக்க மாட்டேங்கிறாங்களே..”.​

கீதா, “நீங்க தான் அண்ணி பேசி அவங்க மனசை மாத்தணும்.. பாத்தீங்க இல்ல.. ஏற்கனவே தேனிலவு எல்லா விதத்திலயுமே நம்மளை விட ஒரு படி மேல தான் இருக்கா..”.​

“இப்போ, நம்ம மூணு பேரு மட்டும் இருக்கோம்.. அதனால் நான் வெளிப்படையாகவே சொல்றேன்.. உண்மையை சொல்லணும்னா அவ நம்ம எல்லாரையும் விட ரொம்ப அழகு தான்..”.​

“எந்த விதத்திலயுமே அவளை குறை சொல்ல முடியாது.. கண்ணுக்கு லட்சனமா இருக்கா.. அவ முன்னாடி நாமெல்லாம் அவள் ஓரத்தில் கூட நிக்க முடியாது”.​

“அந்த பெருமை அவளுக்கு எப்பயுமே மனசுக்குள்ள இருக்கு. இதில், நல்ல மாப்பிள்ளையா வேற அமைந்துட்டா அவ்வளவு தான்.. அப்புறம் அவளை கையிலேயே பிடிக்க முடியாது பாத்துக்கோங்க..”.​

கஸ்தூரி, “எனக்கு தெரியாதா அண்ணி.. அவளுக்கு வாய் ரொம்ப அதிகம் தான்.. நானும் அதனால் தான் அவளை அழகேசன் மாதிரி ஒரு மாப்பிள்ளைக்கு கட்டி கொடுக்க வேண்டும் என்று பார்க்கிறேன்”​

தரகர், “இந்தாங்க தம்பி, இந்த மாப்பிள்ளை நம்ம பெரிய பாப்பா கஸ்தூரியை கட்டி கொடுத்து இருக்கீங்களே.. அவங்க ஊருக்கு பக்கத்து ஊரு..”.​

“அங்க இருக்குற கவர்மெண்ட் ஸ்கூல்ல வாத்தியாரா இருக்காரு.. நீங்க சரினு சொன்னா இன்னைக்கே கூட பொண்ணு பாக்க அவங்க ரெடியா இருக்காங்க..”.​

“வசதியிலும் நமக்கு குறைச்சல் கிடையாது. எல்லா விதத்திலயுமே உங்க குடும்பத்துக்கு ஏத்த சம்பந்தம்.. இது மாப்பிள்ளையுடைய போட்டோவும், ஜாதகமும்.. உங்களுக்கு பிடிச்சிருந்தா வர வைக்கலாம்” என்று கூறவும்.​

சரவணன் அந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு தன் அருகில் நின்று இருந்த கஸ்தூரியிடம் அதை நீட்டினான்.​

அதை பார்த்த கஸ்தூரிக்கு நமட்டு சிரிப்பு ஒன்று ஏற்பட்டது. இப்படியே அந்த புகைப்படம் குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரின் கையிலும் மாறி, மாறி செல்ல..​

இறுதியில், கல்பனாவின் கைக்கு சென்றது. அவளோ அதை யாரும் அறியாத வண்ணம் நைசாக தன் உடைக்குள் மறைத்து வைத்தவள்.. வேகமாக தேன் நிலவின் அறை நோக்கி ஓடினாள்.​

தன் முன்னே மூச்சு வாங்கிய படி வந்து நிற்கும் கல்பனாவை பார்த்த தேன்நிலவு, “என்னடி இப்படி ஓடி வர.. உங்க அம்மா அடிக்க துரத்துதா?”.​

கல்பனா, “ச்ச.. ச்ச.. அதெல்லாம் இல்ல சித்தி.. உனக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்து இருக்காங்க. அந்த போட்டோவை தான் யாருக்கும் தெரியாமல் நைசா தூக்கிகிட்டு ஓடி வந்தேன்”.​

தேன்நிலவு ஸ்ருதி இறங்கிய குரலில், “ஓ! அப்படியா..”.​

கல்பனா, “என்ன சித்தி மாப்பிள்ளைனு சொல்றேன்.. கொஞ்சம் கூட இன்ட்ரஸ்டே இல்லாமல் பேசுற..”.​

தேன்நிலவு, “எனக்கு இப்போ கல்யாணம் பண்ணிக்கிறதுலேயே இன்ட்ரஸ்ட் இல்ல.. எப்படியும் அவங்க இஷ்டத்துக்கு தான் மாப்பிள்ளை பார்க்க போறாங்க.. மாப்பிள்ளை எப்படி இருந்தால் எனக்கு என்ன..”.​

கல்பனா, “ஐயோ சித்தி.. நீ இப்படி எல்லாம் பேசிகிட்டு இருந்தனா.. உன் லைஃபை அவங்க எல்லாம் சேர்ந்து காலி பண்ணிடுவாங்க..”.​

“இங்க பாரு இந்த மாப்பிள்ளையை.. இவரை போய் உனக்கு மாப்பிள்ளையாக பார்த்து இருக்காங்க” என்றபடி அந்த புகைப்படத்தை தேன் நிலவின் முகத்தருகே நீட்டினாள்.​

பல் எடுப்பாக.. சொட்டை தலையுடன் இருந்த மாப்பிள்ளையை பார்த்த தேன்நிலவிற்கு எந்த ஒரு உணர்ச்சியுமே முகத்தில் தோன்றவில்லை..​

எப்படியும் வயது கூடத்தான் இருக்கும் என்பது அவரின் தோற்றத்திலேயே தெரிந்தது.​

“என்ன சித்தி அப்படியே இருக்க.. ஒன்னும் சொல்ல மாட்டேங்குற?” என்றாள் கல்பனா.​

தேன்நிலவு, “நான் என்ன டி சொல்றது.. இந்த போட்டோவை நீ எங்க இருந்து எடுத்தாயோ அங்கேயே கொண்டு போய் வச்சிடு”.​

கல்பனா அதிர்ச்சியாக, “அப்போ உனக்கு இந்த மாப்பிள்ளை ஓகேவா..”.​

அவளுக்கு எந்த பதிலும் அளிக்காமல் தேன்நிலவு தோட்டத்தை நோக்கி சென்று விட்டாள்.​

இந்த திருமண பேச்சு வருவதற்கு முன்பெல்லாம் தேன்நிலவு அவ்வளவு மகிழ்ச்சியாக வலம் வந்து கொண்டு இருந்தாள்.​

அவளின் மொத்த சந்தோஷத்தையும் இந்த திருமண பேச்சைக் கொண்டு துடைத்து எடுத்து விட்டார்கள் என்று தான் கூற வேண்டும். இப்பொழுது எல்லாம் வாடிய முகத்துடனேயே சுற்றி தெரிகிறாள்.​

சகுந்தலா, “என்ன தம்பி மாப்பிள்ளைக்கு வயசு அதிகம் போல இருக்கே..” என்றார் தயக்கமான குரலில்.​

சரவணன், “அம்மா மாப்பிள்ளைக்கு குணம் தான் முக்கியம்.. நீங்க உருவத்தை பார்த்து எடைப்போடாதீங்க..” என்று அவரின் வாயை அடைத்து விட்டான்.​

முருகன், “இருந்தாலும் நம்ம புள்ள சின்ன புள்ள.. இவருக்கு வயசு கூடுதலா இருக்க மாதிரி தான் பா தெரியுது..”.​

சரவணன், “அப்பா முதல்ல அவங்க வந்து பார்க்கட்டும்.. அவங்களுக்கு பொண்ணு பிடிக்கணும்.. நமக்கு மாப்பிள்ளையை பிடிக்கணும்.. இரண்டு பேரோட ஜாதகமும் பொருந்தி வரணும்.. எவ்வளவு விஷயம் இருக்கு.. அதுக்குள்ள அவசரப்படாதீங்க” என்று தன் தந்தையிடம் கூறியவன்.​

தரகரை பார்த்து” இன்னைக்கு சாயந்திரமே அவங்களை பொண்ணு பாக்க வர சொல்லுங்க”.​

அவரோ தன் 32 பற்களும் தெரியும் படி சிரித்தவாறு தன்னுடைய கமிஷனையும் பெற்றுக் கொண்டே அங்கிருந்து சென்றார்.​

கீதா கஸ்தூரியிடம், “பரவாயில்லையே.. நீங்க நினைச்சதை சாதிச்சிட்டீங்க போலருக்கே”.​

கஸ்தூரி வெற்றி புன்னகையுடன், “அவளுக்கு இந்த மாப்பிள்ளையே அதிகம் தான் கீதா.. அவ படிச்சிருக்க ஒன்பதாம் கிளாசுக்கு சீமையிலிருந்து ராஜாவா வருவான்..”.​

சீமையில் இருந்து ராஜா வருவானா..?​

திலகா, “நான் கூட அத்தையும், மாமாவும் இதுக்கு ஒத்துக்க மாட்டாங்கனு தான் நினைச்சேன். ஆனா, எப்படியோ அவங்க பேசி அவங்க ரெண்டு பேருடைய வாயையும் அடைச்சிட்டாங்க”.​

கஸ்தூரி “இந்த சம்பந்தம் மட்டும் நல்லபடியாக அமையட்டும்.. அந்த தேன் நிலவை விட நல்ல வாழ்க்கை நமக்கு தான் அமைஞ்சிருக்கு.. இதை வச்சு அவளை காலம் முழுக்க கொட்டிக்கிட்டே இருக்கலாம்” என்றார் வன்மமாக.​

கஸ்தூரியின் பொறாமை கொண்ட உள்ளம் தன் உடன் பிறந்தவள் தேன்நிலவு என்பதையே மதி மங்க செய்து விட்டது.​

தேன்நிலவு எந்த ஒரு எதிர்ப்புமே தெரிவிக்காமல் அமைதியாக அறைக்குள் தயாராகிக் கொண்டிருந்தாள்.​

கவிதா தன் கல்லூரியை விட்டு வந்தவள் கல்பனாவின் மூலம் இன்று தேன் நிலவை பெண் பார்க்கும் செய்தியை கேட்டு மூச்சு வாங்க ஓடி வந்தவள்..​

அறைக்குள் நுழைந்ததும், “ஹே! என்னடி இன்னைக்கு பொண்ணு பாக்க வராங்களாம்..”.​

தேன்நிலவு அவளுக்கு எந்த பதிலும் அளிக்காமல் கண்ணாடியினோடு தன் உருவத்தை பார்த்தவள் அப்படியே அமர்ந்திருந்தாள்.​

கவிதா அவள் அருகில் சென்றவள் அவளின் தோளில் கையை வைத்து, “என்னாச்சு தேனு உனக்கு.. ஏன் ஒரு மாதிரி இருக்க.. உனக்கு பிடிக்கலைனா பிடிக்கலைனு சொல்லலாம்ல..”.​

தேன்நிலவு, “சொன்னா மட்டும் இவங்க எல்லாம் நான் சொல்றதை கேட்டுட்டு தான் மறு வேலை பார்ப்பாங்க பாரு.. அவங்க எல்லாரும் எனக்கு இப்படி ஒரு மாப்பிள்ளையை பார்த்து கட்டி வச்சி என்னை இங்கிருந்து துரத்தனும்னு முடிவு பண்ணிட்டாங்க டி. நான் என்ன சொன்னாலும் இனிமேல் எடுபடாது”.​

கவிதா, “உன்னுடைய அம்மாவுக்கும், அப்பாவுக்கும் கூட கிறுக்கு புடிச்சு போச்சா.. உனக்கு போய் இப்படி ஒரு மாப்பிள்ளையை பார்த்து இருக்காங்க” என்று கோபமாக சாடினாள்.​

அழகேசன் சோகமாக அந்த கல் பெஞ்சில் அமர்ந்திருந்தான்..​

அவனின் நண்பன் சங்கர் அவனின் தோளில் தட்டியவாறு, “என்னடா மச்சான்.. இன்னைக்கு ரொம்ப சோக கீதம் வாசிக்கிற.. என்ன ஆச்சு?”.​

அழகேசன், “ஒன்னும் இல்லடா.. மனசே சரியில்ல..”.​

சங்கர், “ஏன்டா ஏதாவது பிரச்சனையா?”.​

அழகேசன், “அதெல்லாம் ஒன்னும் இல்லடா.. மனசுக்கு என்னவோ போல இருக்கு”.​

அந்த நேரம் பார்த்து சரியாக ஒரு கார் இவர்களின் அருகில் வந்து நிற்க..​

அந்த காரின் கதவின் கண்ணாடியை இறக்கி விட்டபடி 50 வயதுமிக்க ஒருவர், “தம்பி முருகன் அய்யா வீட்டுக்கு எப்படி போகணும்?”.​

சங்கர் அவரை புரியாமல் பார்த்தபடி, “முருகன் ஐயாவா.. எந்த முருகன் ஐயா..”.​

புதியவர், “அதான் பா சரவணன் தம்பி வீடு..”.​

ஷங்கர், “சரவணன் தம்பியா.. நீங்க யாரை கேக்குறீங்கனு புரியலைங்க..”.​

புதியவர், “அதான்பா.. அந்த வீட்ல கூட தேன்நிலவுனு ஒரு பொண்ணு இருக்கே..” என்று கூறி​

முடிக்கும் முன்னரே.​

ஷங்கர் தன் 32 பற்களையும் காட்டிக் கொண்டு, “ஓ! நம்ம ஹனிமூனை பத்தி சொல்றீங்களா..”.​

புதியவரோ திடுக்கிட்டு புரியாமல் ஷங்கரை பார்த்தார்.​

 

RJ novels

Moderator

மெய்யழகனின் தேன்நிலவு - 7​

புதியவர், “ஹனிமுனா.. என்னப்பா சொல்ற?”.​

ஷங்கர், “அது ஒன்னும் இல்லங்க.. எல்லாம் நமக்கு வேண்டிய பொண்ணு தான்..”.​

புதியவர் ஷங்கரை சந்தேகப்பார்வை பார்க்க..​

ஷங்கர், “அட ஆமாங்க.. நிஜமா தான் சொல்றேன்.. என்னை விட இதோ உக்காந்து இருக்கான் பாருங்க..” என்று அழகேசனை கைகாட்டியவன்.​

“இவனுக்கு தான் ஹனிமூனை ரொம்ப ரொம்ப பிடிக்கும்.. எங்களுக்கு வேண்டிய பொண்ணு தான்.. நீங்க எதுக்கு இப்போ ஹனிமூனை கேக்குறீங்க”.​

அவன் பேச்சு வார்த்தை அவர்களுக்கு எதுவோ தவறாகப்பட்டது.. பெண் பார்க்க வந்தவர்கள் எதுவுமே கூறாமல் வண்டியை திருப்பிக் கொண்டு அப்படியே தங்கள் ஊருக்கே சென்று விட்டனர்.​

மாப்பிள்ளையின் தாய், “என்னங்க இது.. பொறுக்கி பசங்க மாதிரி இருக்கானுங்க.. ஹனிமூன் அது, இதுனு பேசுறாங்க.. கேட்கவே ரொம்ப நாராசமா இருக்கு..” என்றார் முகத்தை சுழித்தபடி.​

மாப்பிள்ளையின் தந்தை, “அப்போவே நினைச்சேன்.. நம்ம பையனுக்கு 35 வயசாக போகுது. ஆளும் கருப்பா இருக்கான் சொட்டை தலையா இருக்கான்..”.​

“பல்லு வேற தூக்குனாப்ல இருக்கு.. எப்படி இது எல்லாத்துக்குமே ஒத்துக்கிறாங்க.. பொண்ணு வேற கிளி மாதிரி இருக்கா.. எதுவோ சரி இல்லையென்று யோசித்தேன்..”.​

“அந்த பொண்ணுக்கும் இந்த பையனுக்கும் ஏதோ தொடர்பு இருக்கு போலருக்கு. அதனால் தான் அவங்க வீட்ல ஏதாவது ஒரு மாப்பிள்ளைக்கு கட்டிக் கொடுத்து அனுப்பனும்னு நம்மை வர சொல்லி இருக்காங்க..”.​

“நல்ல வேளை, வழியிலேயே இந்த பசங்களை பார்த்ததால் அந்த குடும்பத்தோட லட்சணம் என்ன என்று நமக்கு தெரிஞ்சது..” என்றபடி திரும்பி விட்டனர்.​

தேன் நிலவின் வீட்டிலோ சரவணனும், பார்த்திபனும் மாப்பிள்ளை வீட்டினருக்காக சிற்றுண்டிகளை வாங்கி வைத்துவிட்டு வாசலை நோக்கி குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு இருந்தனர்.​

கவிதாவோ தேன்நிலவின் அருகில் இருக்கும் நாற்காலியில் அமர்ந்தவள். தன் நகத்தை கடித்து துப்பியவாறு டென்ஷனாக அமர்ந்திருந்தாள்.​

ஆனால், தேன் நிலவின் முகத்தில் எந்த ஒரு பதட்டமோ, பரிதவிப்போ தென்படவில்லை. முற்றிலுமாக உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட முகத்துடன் வெறித்த பார்வையோடு அமர்ந்திருந்தாள்.​

கஸ்தூரியும், திலகாவும், கீதாவும் வெற்றி களிப்பில் வாயெல்லாம் பற்களாக மாப்பிள்ளை வீட்டினரை எதிர்பார்ப்போடு பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தனர்.​

சகுந்தலாவிற்கும், முருகனுக்கும் முழு மனதாக இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாவிட்டாலும், தங்கள் மகனை மீறி எதுவும் கூற முடியாதே என்ற நிலையில் அமர்ந்திருந்தனர்.​

5 மணிக்கு பெண் பார்க்கும் படலம் ஏற்பாடு செய்திருக்க.. மணி ஏழையும் தாண்டி விட்டது. அவர்களிடமிருந்து எந்த ஒரு தகவலும் இல்லாமல் போகவே சரவணன் தரகருக்கு அழைத்தான்.​

சரவணன் கோபமாக, “என்னங்க இப்போ வந்து இப்படி சொல்றீங்க..”.​

எதிர் முனையில் என்ன கூறப்பட்டதோ சரவணன், “இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசுனீங்க.. மரியாதை கெட்டுடும்.. போனை வைங்க..” என்றபடி கோபமாக அணைப்பை துண்டித்தான்.​

முருகன், “என்னப்பா என்ன ஆச்சு?” என்றார் பதட்டமாக.​

அனைவருமே சரவணனை புரியாமல் பார்க்க..​

சரவணனும் கோபமாக முகம் இறுகிப்போய், “மாப்பிள்ளை வீட்டுக்காரங்க தேன் நிலவை பிடிக்கலைனு சொல்லிட்டாங்களாம்..”.​

சகுந்தலா, “வந்து பொண்ண கூட பாக்கலையே.. அதுக்குள்ள ஏன் பா பிடிக்கலைனு சொன்னாங்க?” என்றார் கைகளை பிசைந்து கொண்டு.​

சரவணன், “வர வழியில் நம்ம வீட்டுக்கு யார் கிட்டயோ அட்ரஸ் கேட்டு இருக்காங்க.. அவங்க நம்ம தேன் நிலவை பத்தி என்ன சொன்னாங்கனு தெரியல.. ஊருக்குள்ள வந்தவங்க வீட்டுக்கு வராமல் அப்படியே திரும்பி போய் இருக்காங்க”.​

கஸ்தூரி, “என்ன அண்ணா சொல்ற?”.​

சரவணன், “ஆமா கஸ்தூரி.. யார், என்ன சொன்னாங்கனு தெரியல.. தரகருக்கு போன் பண்ணி இந்த சம்பந்தம் எங்களுக்கு சரி வராது வேண்டாம் என்று சொல்லி இருக்காங்க. அவர் நம்மகிட்ட சொல்ல பயந்துகிட்டு போன் அடிக்காமல் இருந்திருக்கார். இப்போ நானா அடிச்சதால் சொல்றாரு..”.​

திலகா கீதாவின் காதல் கிசுகிசுப்பாக, “அந்த ஆளுக்கே வயசு ஜாஸ்தியா இருக்கு.. நாம போனால் போகுதுனு அவரை செலக்ட் பண்ணா.. அவருக்கு இருக்க திமிரை பாத்தியா..”.​

கீதா, “இதுவும் நல்லதுக்கு தான் கா.. ரெண்டு, மூணு மாப்பிள்ளைங்க இப்படி நடந்தா தான் இந்த தேன்நிலவு தான் ரொம்ப அழகுனு நினைச்சுக்கிட்டு இருக்காளே.. அவளுடைய தலைக்கனமும் கொஞ்சம் குறையும்” என்று கூறி நக்கலாக நகைத்தாள்.​

வேண்டுமென்றே ஒரு காபி கப்பை எடுத்துக் கொண்டு கீதா தேன் நிலவின் அறைக்குள் நுழைந்தவள்.​

கீதா, “இந்தா.. இந்த காப்பியை குடிச்சிட்டு வேற துணியை மாத்திக்கோ..” என்றாள் பெருமூச்சை விட்டவாறு.​

கவிதா, “ஏன் அண்ணி மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வரலையா?”.​

கீதா, “என்னத்த சொல்றது.. அவங்களுக்கு நம்ம தேன் நிலவை பிடிக்கலையாம்..”.​

கவிதா, “என்னது.. அவங்களுக்கு தேன் நிலவை பிடிக்கலையா!” என்றாள் அதிர்ச்சியாக.​

கீதா, “அட.. ஆமா கவிதா..”.​

கவிதாவோ முணுமுணுப்பாக, “அந்த சொட்டை தலைக்கு இவ்வளவு திமிரா.. அவன் மூஞ்சிக்கு தேன் நிலவே ரொம்ப ஜாஸ்தி.. அவன் நம்ம தேனை பிடிக்கலைனு சொல்றானா..”.​

கீதா வேண்டுமென்றே ஒரு பெருமூச்சை வெளியேற்றியவள், “ஹ்ம்ம்.. என்ன பண்றது.. நம்ம தலையில் என்ன எழுதி இருக்கோ அதானே நடக்கும்.. முதல்ல வந்த வரனே இப்படி தட்டி கழிச்சிட்டு போனா அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகுறதே ரொம்ப கஷ்டம்னு எங்க ஊர்ல சொல்லுவாங்க..”.​

கவிதா, “என் தேனுக்கு இருக்க அழகுக்கு அவளுக்கு மாப்பிள்ளைங்க வரிசை கட்டி நிப்பாங்க..” என்றாள் பெருமையாக.​

கஸ்தூரி, “ம்ம்.. நிப்பாங்க டி.. நிப்பாங்க.. இந்த மாப்பிள்ளையே உன் பிரண்டை கட்டிக்க மாட்டேன் பிடிக்கலைனு சொல்லிட்டான். இதுல வரிசை கட்டி வந்து நிப்பாங்களாமே..” என்றாள் அங்கலாய்ப்பாக.​

அதில், கவிதாவின் வாய் ‘கப்சிப்’ என்று மூடிக்கொண்டது.​

கஸ்தூரி, “என்ன பண்றது.. மூஞ்சி கொஞ்சம் அழகா இருந்துட்டா மட்டும் போதுமா.. தலையெழுத்தும் நல்லா இருக்கணும்” என்றவர் தன் முகத்தை நொடிந்து கொண்டு வெளியேறிவிட்டார்.​

அவரின் வார்த்தையில் தேன்நிலவிற்கு கண்கள் கலங்கிவிட்டது. துருதுருவென்று பட்டாம்பூச்சியாய் சுற்றிக் கொண்டிருக்கும் தேன்நிலவு இந்த இரண்டு நாட்களில் மிகவுமே அமைதியாகிவிட்டாள்.​

சகுந்தலாவிற்கே தேன் நிலவை இப்படி பார்க்க மிகவும் வருத்தமாக இருந்தது.​

கவிதா, “சரி வாடி.. கோவிலுக்கு போயிட்டு வரலாம்.. இப்படியே உம்முன்னு உட்கார்ந்திருக்கிறதை பார்த்தால் கடுப்பாகுது.. அந்த சொட்டை தலை உன்னை வேண்டாம் என்று சொன்னதற்கா இவ்வளவு பீல் பண்ணுற”.​

தேன்நிலவு, “ச்ச.. ச்ச.. யார் சொன்னா.. அதுக்காக எல்லாம் நான் ஒன்னும் பீல் பண்ணல.. குலதெய்வ கோவிலுக்கு போகும் பொழுதே அங்க நான் சாமிகிட்ட பெட்டிஷன் கொடுத்துட்டு தான் வந்து இருக்கேன்”.​

“என் மனசுக்கு பிடிச்ச மாதிரி தான் எனக்கு மாப்பிள்ளையை நீ அமைச்சு தரனும்னு மிரட்டி கேட்டுட்டு வந்து இருக்கேன். கண்டிப்பாக எனக்கு பிடிச்ச மாதிரி தான் மாப்பிள்ளை அமையும்”.​

கவிதா, “அப்புறம் எதுக்கு டி மூஞ்ச இப்படி தொங்க போட்டுகிட்டு சுத்திகிட்டு இருக்க..”.​

தேன்நிலவு, “இது கவலையினால் இல்ல கவிதா.. ரொம்ப குழப்பமா இருக்கு.. ஏன் என்னுடைய அண்ணன்களும், அக்காவும் எனக்கு இந்த மாதிரி மாப்பிள்ளையை பார்க்கிறார்கள் என்று ரொம்ப குழப்பமா இருக்கு”.​

கவிதா, “இதெல்லாம் தெரிஞ்ச விஷயம் தானே.. விட்டு தள்ளு.. சரி நீ வா அப்படியே நாம ஒரு ரவுண்டு போயிட்டு வரலாம்” என்று அவளை இழுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினாள்.​

இருவரும் சாமி கும்பிட்டுவிட்டு கோவில் குளத்தில் காலை நனைத்தவர்கள் அப்படியே அமர்ந்து கதை பேச தொடங்கி விட்டனர்..​

தேன் நிலவு, “ஏன் டி உனக்கு ஞாபகம் இருக்கா.. நாம அஞ்சாங் கிளாஸ் படிக்கும் பொழுது ஒரு மீனைக் கொண்டு வந்து இந்த குளத்தில் விட்டோமே இந்நேரம் அது வளர்ந்து இருக்குமா?” என்றாள் சந்தேக குரலில்.​

கவிதா “இது என்னடி கேள்வி.. இந்நேரம் அது குட்டி போட்டு நிறைய மீன் வளர்ந்திருக்கும்”.​

தேன்நிலவு, “எனக்கு ஒரு சந்தேகம் டி.. இந்த மீன் எல்லாம் எப்படி குட்டி போடுது?” என்று கேள்வி எழுப்ப.​

“நான் வேணும்னா சொல்லி தரட்டுமா?” என்று பின் இருந்து ஆடவனின் குரல் கேட்க..​

இருவரும் திடுக்கிட்டு திரும்பி பார்த்தனர்.​

அழகேசன் தான் புன்னகை முகத்துடன் நின்று இருந்தான்.​

அவனை பார்த்த தேன் நிலவும், கவிதாவும் கோபமாக எழுந்து நிற்க..​

அழகேசன் கோணல் சிரிப்புடன், “என்ன ஹனிமூன் மீன் எப்படி குட்டி போடும்னு நான் சொல்லித் தரவா?”.​

தேன்நிலவு, “இங்க பாரு, அடிச்சு மூஞ்சியெல்லாம் பேத்திடுவேன் என்கிட்ட தேவையில்லாமல் பேசுற வேலை எல்லாம் வச்சுக்காத.. உன்னால் தான் எனக்கு பெரிய பிரச்சனையே..”.​

அழகேசன், “ஓ! தெரியுமே.. உன் பிரண்டு சொன்னாங்களே.. உனக்கு உங்க வீட்ல மாப்பிள்ளை பார்க்குறாங்கலாமே.. என்ன கல்யாணத்துக்கு தேதி குறிச்சிட்டாங்களா இல்லையா..”.​

தேனிலவு, “அதை பத்தி உனக்கு என்ன?”.​

அழகேசன், “சும்மா தெரிஞ்சுக்கலாம்னு தான் கேட்டேன். இதுக்கு ஏன் இவ்வளவு சூடாகுற..”.​

தன் மகளுக்கு பேசி வந்த முதல் வரனே தட்டி கழிந்ததில் முருகனுக்கும், சகுந்தலாவிற்கும் மனமே சரியில்லை. தேன்நிலவின் பெயரில் அர்ச்சனை செய்யலாம் என்று கோவிலுக்கு வந்தவர்கள்..​

அழகேசனிடம் தேன் நிலவு பேசிக்கொண்டு இருக்கும் காட்சியை பார்த்து இருவரும் காதலிக்கிறார்களோ என்று தவறாக புரிந்து கொண்டனர்.​

கஸ்தூரி, தேன்நிலவு யாரையோ காதலிக்கிறாள் என்று கூறியதும்.. சரவணன் தேன் நிலவை அழகேசன் உடன் பேசுவதை பார்த்ததாக கூறியதையும் கேட்டவர்கள்..​

மீண்டும் தேன் நிலவும், அழகேசனும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அப்படி நினைத்து விட்டனர்.​

அழகேசன், “என்ன கவிதை.. உன் பிரண்டு என்ன செஞ்சாலும் நீயும் அதையே தானே செய்வ.. உன் பிரண்டுக்கு கல்யாணம் பண்ண போறாங்க.. அப்போ, உனக்கு எப்போ கல்யாணம்?”.​

தேன்நிலவு, “தேவை இல்லாம பேசாத அழகு.. மறுபடியும் எங்ககிட்ட வந்து பேசுன பல்லை பேத்து கையில் கொடுத்திடுவேன்” என்றாள் எகிரி கொண்டு.​

கவிதா, “சரி விடுடி.. நீ வா நம்ம கிளம்பலாம்.. எதுக்கு தேவையில்லாத பிரச்சனை..” என்றபடி அவளை அங்கிருந்து இழுத்துக் கொண்டு சென்றாள்.​

தூரத்திலிருந்து பார்த்தவர்களுக்கு அவர்கள் பேசுவது ஒன்றுமே கேட்கவில்லை. ஆகையால், தவறாக புரிந்து கொண்டு அங்கிருந்து நகர்ந்தனர்.​

சகுந்தலா, “ஏங்க பேசாமல் நம்ம தேனை அழகேசனுக்கே கட்டி வச்சிடுவோமா..” என்றார் தயக்கமாக.​

முருகன் யோசனையோடு, “ஏன் இப்படி சொல்ற?”.​

சகுந்தலா, “இல்ல.. நம்ம தேனுக்கு அந்தப் பையனை பிடிச்சிருக்கு போலருக்கே.. அன்னைக்கு நம்ம கஸ்தூரி கூட தேனு யாரையோ காதலிக்கிறானு சொன்னாள்..”.​

“அப்புறம் சரவணனும் ஒரு நாள் நம்ம தேனும் அழகேசனும் பேசிக்கிட்டு இருக்கிறதை பார்த்ததா சொன்னான்.. இப்போ நாமளே நேரில் பார்த்துவிட்டோம்”.​

“இரண்டு பேரும் பேசிகிட்டு நிக்கிறாங்க.. ஒருவேளை, அவங்க எல்லாம் சொன்ன மாதிரி இவங்க ரெண்டு பேரும் காதலிக்கிறாங்களோ?”.​

சகுந்தலா இப்படி கூறியதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. தேன்நிலவிற்கு அவளின் உடன் பிறந்தோர் பார்க்கும் மாப்பிள்ளையை பார்த்த பிறகு சகுந்தலாவிற்கு மனமே விட்டுப் போனது..​

ஒரு தாயாக, தன் மகளுக்கு எங்கே நல்ல வரன் அ​

மையாமல் போய்விடுமோ என்ற பயத்திலும் தான் அவர் இப்படி கூறினார். அவர்கள் பார்க்கும் மாப்பிள்ளைக்கு அழகேசன் எவ்வளவோ மேல் என்றே சகுந்தலாவிற்கு தோன்றியது.​

 

RJ novels

Moderator

மெய்யழகனின் தேன்நிலவு - 8​

“நம்ம பார்த்த வரனும் தட்டிப் போயிடுச்சு.. எனக்கு மனசுக்கு எதுவோ சரி இல்லைனு பட்டுக்கிட்டே இருக்குங்க.. எனக்கு நம்ம பார்த்த மாப்பிள்ளையை சுத்தமா பிடிக்கல..”.​

“வயசு கூட அதிகமா இருக்கிற மாதிரி இருந்துச்சு.. தலையிலயும் முடிய காணும்.. நம்ம தேனுக்கு ஏத்த மாப்பிள்ளையே இல்ல.. அழகேசனும் மாநிறம் தான் நான் ஒத்துக்குறேன்”.​

“மாநிறமா இருந்தாலும் பார்க்க கொஞ்சம் நல்லா இருக்கான். படிச்சிட்டு வேலைக்கு போகாம ஊர் சுத்திட்டு இருக்கான். கல்யாணம் பண்ணி வச்சா பொறுப்பு வந்தாலும் வரும்..” என்றார் கஸ்தூரி அன்று அவரிடம் சமையல் கட்டில் கூறியதை மனதில் வைத்துக் கொண்டு.​

முருகன் சகுந்தலாவிற்கு எந்த பதிலும் அளிக்காமல் தன் புருவத்தை நெறித்தபடி யோசித்துக் கொண்டிருந்தார்.​

சகுந்தலா, “நீங்க தானே அன்னைக்கு சொன்னீங்க.. ரத்தினம் உங்ககிட்ட நம்ம தேன் நிலவை அழகேசனுக்கு பொண்ணு கேட்டார்னு பேசாம அவர்கிட்ட சரினு சொல்லிடுவோமா..”.​

தங்கள் மகளின் மனதில் அழகேசனின் மேல் விருப்பம் இருக்கிறது என்ற தவறான புரிதலோடு இவர்கள் ஒரு மனதாக அழகேசனுக்கு தேன்‌நிலவை திருமணம் முடித்து வைக்கலாம் என்று முடிவு செய்து விட்டனர்.​

அன்றைய நாள் முழுவதையும் தேன் நிலவும், கவிதாவும் பம்பரம் விடுவது, ஆற்றில் விளையாடுவது என கழித்துவிட்டு அவரவர் வீடு வந்து சேர்ந்தனர்.​

தேன் நிலவு வாசலில் அடி எடுத்து வைக்கும் பொழுதே கஸ்தூரியின் குரல் அவளின் காதில் எட்டியது.​

பொதுவாக வார விடுமுறை நாட்களில் மட்டுமே இங்கே வரும் கஸ்தூரி தேன் நிலவின் திருமண பேச்சை தொடங்கியது முதல் அவளுக்கு திருமணம் முடியும் வரை இங்கிருந்து நகர மாட்டேன் என்பது போல் தங்கள் வீட்டிலேயே தங்கிவிட்டார்.​

அது வேறு தேன் நிலவின் மனதை அரித்து கொண்டே இருந்தது.​

கஸ்தூரி, “ரொம்ப சந்தோஷம் பா.. அன்னைக்கே நாங்க இதை தான் சொன்னோம். நீங்க தான் கேட்கல”.​

முருகன், “அப்புறம் தான் நாங்க யோசிச்சு பார்த்தோம் மா.. சரி, அழகேசனுக்கே தேன் நிலவை கட்டி வைக்கலாம்னு தோணுச்சு” என்றவரின் வார்த்தையில் அப்படியே வாசலில் இடிந்து போய் நின்று விட்டாள் தேன் நிலவு.​

திலகா, “நீங்க சொல்றதும் சரி தான் மாமா.. உள்ளூர் மாப்பிள்ளை.. நம்ம கண்ணு முன்னாடியே வளர்ந்த தெரிஞ்ச பையன்.. என்ன கொஞ்சம் பொறுப்பில்லாமல் இருக்கான். எல்லாம் கல்யாணம் ஆனா சரியாகிடும்.. நம்ம தேன் நிலவு அவனை மாத்திடுவாள்”.​

தேன்நிலவிற்கு கோபம் தலைக்கேறியது. என்னை பார்த்தால் இவர்களுக்கு எல்லாம் என்ன அவ்வளவு இளக்காரமாக இருக்கிறதா.. முதலில் எனக்கு சற்றும் பொருத்தம் இல்லாத மாப்பிள்ளையை பார்த்தனர்.​

இப்பொழுது, அந்த அழகேசனை போய் மாப்பிள்ளையாக பார்த்து இருக்கிறார்கள் என்று எண்ணியவளுக்கு ஆத்திரம் தாங்கவில்லை.​

கோபமாக தன் செருப்பை கழட்டி விட்டு வீட்டிற்குள் நுழைந்தவள், “என்னம்மா விளையாடுறீங்களா.. என்னால் எல்லாம் அழகேசனை கட்டிக்க முடியாது” என்று அனைவரின் முன்னிலையிலும் போட்டு உடைத்தாள்.​

கஸ்தூரி, “ஏய்! என்ன டி இது.. பெரியவங்க பேசும் பொழுது இப்படித்தான் மரியாதை இல்லாமல் பேசுவியா..” என்றாள் திட்டலாக.​

தேன்நிலவு, “அக்கா நீங்க என்ன சொன்னாலும் சரி.. என்னால் அழகேசனை கட்டிக்க முடியாது. எனக்கு அழகேசனை சுத்தமா பிடிக்காது” என்றாள் தன் முகத்தை வெறுப்பாக வைத்துக் கொண்டு.​

சகுந்தலாவும், முருகனும் திடுக்கிட்டு விழித்தனர். தாங்கள் தான் தவறாக புரிந்து கொண்டோமோ என்று..​

பார்த்திபன், “உனக்கு எது நல்லது, எது கெட்டதுனு எங்களுக்கு தெரியும்.. வயசு பொண்ணு உனக்கு என்ன தெரியும்.. வாயை மூடிக்கிட்டு உள்ள போ” என்றான் அதட்டும் குரலில்.​

தேன் நிலவுக்கு கண்கள் கரித்துக் கொண்டு வந்தது.​

கீதா, “இது என்ன புது பழக்கம் தேனு.. கல்யாணம் பண்றது பெரியவங்க முடிவு பண்ற விஷயம்.. நாங்க எல்லாம் எங்க வீட்ல உங்க அண்ணன்மார்களை மாப்பிள்ளையா பார்க்கும் பொழுது ஒரு வார்த்தை கூட உன்னை மாதிரி எதிர்த்து பேசமாட்டோம்”.​

“வாயை மூடிக்கிட்டு கட்டிக்கிட்டு வந்தோம். நாங்க எல்லாம் இங்க வந்து சந்தோஷமா வாழலையா.. நீ என்னடானா இப்படி எல்லார் முன்னாடியும் வந்து நின்னுகிட்டு கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம எனக்கு இந்த மாப்பிள்ளையை பிடிக்கலை அந்த மாப்பிள்ளை பிடிக்கலைனு பேசுற..”.​

கஸ்தூரி, “சின்ன பொண்ணு உனக்கு என்ன தெரியும் எது நல்லது, எது கெட்டதுனு.. உனக்கு அப்படியா நல்லா இல்லாத வாழ்க்கையை நாங்க அமைச்சு கொடுத்துடுவோம். நீ உள்ள போ..” என்று ஆளாளுக்கு அவளை அறைக்குள் அனுப்புவதிலேயே குறியாக இருந்தனர்.​

அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் வழியும் கண்ணீரை துடைத்த படி தேன்நிலவு அறைக்குள் தஞ்சம் புகுந்தாள்.​

முருகன் திரும்பி சகுந்தலாவை பார்க்க..​

சகுந்தலாவும் கலக்கமான விழியோடு முருகனை தான் பார்த்துக் கொண்டிருந்தார்.​

கஸ்தூரி, “அவ கெடக்குறா பா.. சின்ன பொண்ணு அவளுக்கு என்ன தெரியும்? முதல் முதல்ல நம்ம தேன் நிலவுக்கு பேசி வந்த வரன் அழகேசன் தான். அவங்க அப்பாவே வந்து உங்ககிட்ட பெண் கேட்டார்”.​

“நான் கூட அப்போவே சரினு சொல்லலாம்னு தான் பார்த்தேன். நாம தேன்நிலவுக்கு நல்ல மாப்பிள்ளை அமையனும்னு கோவிலில் பொங்கல் வச்சோம்..”.​

“அதான், அந்த சாமி அவருடைய இடத்திலேயே நமக்கு நல்ல மாப்பிள்ளையை காண்பிச்சிருக்கார். நாம தான் அப்போ அது புரியாம வேண்டாம்னு தட்டி கழிச்சிட்டோம்”.​

“அதுக்கு பிறகு நாம பார்த்த மாப்பிள்ளையை அந்த கடவுள் தட்டி கழிச்சிட்டார். திரும்பவும் உங்க வாயாலேயே அழகேசனுக்கு தேன் நிலவை கட்டிக் கொடுக்கலாம்னு சொல்றீங்கனா..”.​

“இது எல்லாமே அந்த கடவுளுடைய ஏற்பாடா தான் எனக்கு தெரியுது. நீங்க தேன்நிலவு பேசுறதை பத்தி எல்லாம் யோசிக்காதீங்க.. எல்லாம் கல்யாணம் ஆனா சரியா போயிடும்..”.​

“அவ சின்ன பொண்ணு அழகேசன் வேலைக்கு போகாமல் இருக்கிறதை பார்த்துட்டு இப்படி எல்லாம் சொல்றா.. அழகேசன் வேலைக்கே போகவில்லை என்றாலும் உட்கார்ந்து சாப்பிடுற அளவுக்கு அவங்க குடும்பத்துல நல்ல வசதி இருக்கு”.​

“எல்லாம் கல்யாணம் ஆனா சரியாயிடும் பா.. ரொம்ப யோசிக்காதீங்க.. முதல்ல ரத்தினம் மாமாவுக்கு போன் பண்ணி இந்த கல்யாணத்துல நமக்கு முழு சம்மதம்னு சொல்லுங்க..” என்றவர்கள்.​

விட்டால் தன் தாயும், தந்தையும் தேன் நிலவின் பேச்சைக் கேட்டு மனது மாறி விடுவார்கள் என்ற எண்ணத்தோடு அப்பொழுதே ரத்தினத்திற்கும் தொலைபேசி மூலம் இந்த தகவலை தெரிவிக்க வைத்தனர்.​

அவர்களுக்கும் மிக்க மகிழ்ச்சி.. மறுநாளே ரத்தினம் தன் குடும்பத்தோடு தேன்நிலவை பெண் பார்க்க வருவதாக கூறிவிட்டார். கையுடன் வீட்டிலேயே வைத்து நிச்சய தாம்பூலமும் மாற்றிக் கொள்ளலாம் என்று பேசி முடிவு செய்தனர்.​

அன்றைய இரவு தேன் நிலவு சகுந்தலாவிடம், “அம்மா எனக்கு இந்த கல்யாணம் கொஞ்சம் கூட பிடிக்கலமா..” என்றாள் அழுது விடும் குரலில்.​

சகுந்தலா அவளை தன் அருகில் அமர செய்தவர், “இங்க பாருடா கண்ணு.. நீ ஏன் இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்ற.. அழகேசனை கட்டிக்கிட்டா நீ உள்ளூரிலேயே இருக்கலாம்..”.​

“நினைச்ச நேரம் அம்மா அப்பாவை பாக்கலாம். நீ நினைக்கிற மாதிரி அழகேசன் ஒன்னும் கெட்டவனும் கிடையாது. எல்லாம் கல்யாணம் ஆனா மாறிடுவாங்க..”.​

“வயசுல எல்லா ஆம்பளைங்களும் இப்படி தான் உதறித்தனமா ஊர் சுத்திட்டு இருப்பாங்க.. உங்க அப்பா மட்டும் என்னவாம்.. என்னை கல்யாணம் கட்டுவதற்கு முன்னாடி வரைக்கும் அவரும் அழகேசனுடைய அப்பா ரத்தினமும் சேர்ந்துக்கிட்டு ஊர் சுத்திட்டு தான் இருந்தாங்க”.​

“என்னை கட்டியதும் உன் அப்பா பொறுப்பாகவில்லையா? அப்படித்தான் காலம் போகப் போக எல்லாம் மாறும்..” என்று தேன் நிலவின் தலையை கொதியபடி அவளை சமாதானம் செய்தார்.​

அனைத்தும் தன் கையை மீறி போய்விட்டதை உணர்ந்து தேன்நிலவு எதுவும் கூறாமல் அமைதியாகிவிட்டாள். நடப்பது அனைத்தையும் எதிர்க்கும் மனநிலையில் அவள் இல்லை.. எதுவோ நடக்கட்டும் என்ற மனநிலைக்கு சென்று விட்டாள்.​

மறுநாள் மதிய உணவிற்கு பிறகு தேன்நிலவு அழகிய மஞ்சள் நிற புடவையில் உதாநிற பார்டர் வைத்த பட்டுடுத்தி.. மிதமான அலங்காரத்துடன் அளவான நகையுடனும் அழகாக தயார் செய்யப்பட்டாள்.​

கவிதா அவள் அருகில் வந்து நின்றவள்..​

“இப்படியெல்லாம் நடக்கும்னு நான் கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கல தேனு” என்றாள் வருத்தமான குரலில்.​

தேன்நிலவு, “இனி நம்ம கையில் எதுவுமே இல்ல கவி.. நடக்கிறது நடக்கட்டும்.. என் தலையில இப்படித்தான் நடக்கணும்னு எழுதி இருக்கு போலருக்கு”.​

“என்ன அந்த அழகேசன்கிட்ட வேற பாக்குற இடத்துல எல்லாம் ரொம்ப வாய் பேசி வச்சுட்டேன். இப்போ அவனுக்கு அடங்கி போய் அவன் கூட வாழனும் என்று நினைக்கும் பொழுது தான் ஒரே கடுப்பா இருக்குடி”.​

கவிதா, “நீ ஒன்னும் கவலைப்படாத.. அந்த அழகேசன் பார்க்க தான் கொஞ்சம் திமிரு பிடிச்சவன் மாதிரி இருப்பான். ஆனா, உன்கிட்ட கண்டிப்பா அடங்கி போய்டுவான்” என்று கூறி நகைத்தாள்.​

இந்த திருமணத்தை நிறுத்த முடியாது என்று எண்ணிய தேன் நிலவும், கவிதாவும் வேறு வழியின்றி ஏற்றுக்கொள்ள தொடங்கினர்.​

சற்று நேரத்தில், அழகேசன் குடும்பத்தினர் தாம்பூல தட்டுடன் தேன் நிலவில் வீட்டிற்குள் நுழைய..​

பெரியவர்கள் அனைவரும் அவர்களை வரவேற்று நடு கூடத்தில் அமர வைத்தனர். தேன் நிலவின் தாய் சகுந்தலா தேன் நிலவின் கையில் காபி டம்ளர்கள் அடங்கிய தட்டை கொடுத்தவர் அனைவருக்கும் கொடுக்குமாறு அனுப்பி வைத்தார்.​

அனைவருக்கும் காபியை கொடுத்துவிட்டு இறுதியாக அழகேசன் முன்பு தேன்நிலவு அந்த தட்டை நீட்ட..​

அழகேசன் அதை எடுக்காமல் இறுக்கமான முகத்துடன் அமர்ந்திருந்தான். அவனின் முகமே அவனுக்கு இந்த திருமணத்தில் சற்றும் விருப்பம் இல்லை என்பதை பறைசாற்றியது.​

அதை பார்த்த பிறகு தேன்நிலவிற்கு உள்ளுக்குள் அப்படி ஒரு இன்பம்.. பார்க்கும் இடத்தில் எல்லாம் தன்னை வெறுப்பேற்றியவன். இப்பொழுது தன்னிடமே சிக்கப் போகிறோம் என்ற வருத்தத்தில் அமர்ந்திருக்கிறானே..​

அனைவருக்கும் காபியை கொடுத்தவள். நல்ல பிள்ளையாக சென்று கவிதாவின் அருகில் நின்று கொண்டாள்.​

கவிதா தேன்நிலவின் காதில் கிசுகிசுப்பாக, “என்னடி நம்ம பியூட்டி இப்படி தலையை தொங்க போட்டுக்கிட்டு உட்கார்ந்து இருக்கு?”.​

தேன் நிலவு, “பாவம் டி.. குழந்தை பயந்துட்டான் போலருக்கு..” என்று கூறி கண்ணை சிமிட்ட..​

கவிதா, “இருக்காதா பின்ன.. உன் வாயை பத்தி இந்த ஊர்ல இருக்குறவங்க எல்லாரையும் விட இவனுக்கு தானே நல்லா தெரியும். கடைசியில், கடவுள் இவனுக்கே இப்படி ஒரு ஆப்பை வச்சி​

ருப்பார்னு நினைச்சு கூட பார்த்திருக்க மாட்டான்” என்று கூறி கலுக்கி சிரிக்க..​

அவளை முறைத்து பார்த்தாள் தேன்நிலவு.​

 

RJ novels

Moderator

மெய்யழகனின் தேன்நிலவு - 9​

அந்த நிகழ்வு முழுவதுமே அழகேசன் இறுகிய முகத்துடன் தான் அமர்ந்திருந்தான்.​

தேன்நிலவு கவிதாவின் காதில் கிசுகிசுப்பாக, “என்ன டி இவன் ஏதோ கப்பல் கவுந்த மாதிரி உட்கார்ந்து இருக்கான்”.​

கவிதா, “என்ன இருந்தாலும் மனசுக்குள்ள பயம் இருக்க தானே செய்யும். இவ்வளவு நாளா இந்த பொண்ண நம்ம ரொம்ப ஓட்டிட்டோம். இப்போ அவளையே காலம் முழுக்க கூட வச்சு சமாளிக்கணுமே என்ற பயம் இருக்காதா பின்ன..” என்று கூறி நகைக்க.​

இருவருமே நகைத்துக் கொண்டனர்..​

தேன் நிலவிற்கு இப்படிப்பட்ட மாப்பிள்ளை தான் தனக்கு வர வேண்டும் என்று எந்த ஒரு எதிர்பார்ப்புமே இல்லை.​

ஆரம்பத்தில், அழகேசனை மணமகன் என்றதுமே அவன் தன்னிடம் வம்பு செய்வது தான் அவளின் மணக்கண் முன்பு வந்து மறைந்தது.​

அதனாலேயே திருமணம் செய்து கொள்ள முடியாது என்று மறுத்துவிட்டாள். ஆனால், இனி தான் என்ன கூறினாலும் தங்கள் வீட்டினர் விடமாட்டார்கள் என்று தெரிந்ததும் நிதர்சனத்தை ஏற்றுக் கொள்ள பழகிக் கொண்டாள்.​

ஆனால், அழகேசன் மனதில் இருப்பது என்ன..?​

சரவணன், “சரி, ரெண்டு குடும்பத்திற்குமே பிடிச்சிருக்கு.. நிச்சய தாம்புலத்தை மாத்திடலாம்” எனவும்.​

மணப்பெண் வீட்டு சார்பாக சகுந்தலாவும், முருகனும் தாம்புல தட்டை அழகேசனின் பெற்றோரை நோக்கி நீட்ட.. அதை வாங்கிக் கொண்டவர்கள்.​

மணமகன் வீட்டு சார்பாக அழகேசனின் தாய், தந்தை ரத்தினமும், கௌரியும் தம்புல தட்டை நீட்ட.. தேன் நிலவின் பெற்றோர் அதனை பெற்றுக் கொண்டனர்.​

இனிதே, நிச்சய தாம்பூலம் மாற்றும் நிகழ்வு வீட்டிலேயே நிறைவடைந்தது.​

கஸ்தூரி, “பொண்ணும் மாப்பிள்ளையும் மாத்திக்கிறதுக்காக நாங்க மோதிரம் வாங்கி வச்சிருக்கோம். அதையும் இப்போவே மாத்திடலாமா..”.​

அழகேசனின் தாய் கௌரி, “இப்போவே எதுக்கு மோதிரம் மாத்துறது எல்லாம்?” என்றார் தயக்கத்தோடு.​

கஸ்தூரி, “இது வழக்கமா நடக்கிறது தானங்க.. தாம்பூலம் மாத்துனதும் பொண்ணும், மாப்பிள்ளையும் மோதிரம் தானே மாத்திப்பாங்க” என்றாள் புரியாமல்.​

கௌரி, “அதுக்கு இல்ல மா.. என் பையன் கல்யாணத்துக்கு முன்னாடி அந்த பொண்ணு கையை தொட்டு மோதிரம் போடுவதெல்லாம் வேண்டாம் என்று நினைக்கிறான்” என்று கூறவும்.​

கவிதா தேன் நிலவின் காதில் கிசுகிசுப்பாக, “அவ்வளவு நல்லவனா டி நம்ம பியூட்டி?” என்று கூறி நகைக்க.​

தேன்நிலவு, “எனக்கும் அதே ஷாக் தான்..”.​

கீதா, “அட.. என்ன தம்பி இது.. எந்த காலத்தில் இருக்கீங்க நீங்க.. இப்போ எல்லாம் நிச்சயம் முடிஞ்சதுமே பொண்ணும், மாப்பிள்ளையும் போன்ல பேசிக்கிறது, வெளியில் போறதுனு செய்ய ஆரம்பிச்சிட்டாங்க.. நீங்க என்னடானா கல்யாணத்துக்கு முன்னாடி பொண்ணு கையை பிடிச்சு மோதிரம் போடுறதுகே இப்படி யோசிக்கிறீங்களே..”.​

அதற்கு அழகேசன் எந்த பதிலும் அளிக்காமல் தன் தாயை ஒரு பார்வை பார்க்க..​

கௌரி, “அது.. அது வந்து மா.. என் பையனுக்கு கொஞ்சம் கூச்ச சுபாவம்.. கல்யாணம் பண்ணா தானே அவங்க ரெண்டு பேரும் கணவன், மனைவி ஆவாங்க.. கல்யாணம் ஆகுற வரைக்கும் அந்த பொண்ணு கையை கூட தொடக்கூடாது என்ற கட்டுப்பாடோடு இருக்கான்.. அதான்..” என்று தயக்கமாக இழுத்தார்.​

சரவணன், “பரவாயில்லையே.. ரொம்ப நல்ல பழக்கம் தான். இந்த காலத்து பசங்க எல்லாம் என்னென்னமோ பண்றாங்க. ஆனா, உங்க பையன் இவ்வளவு கட்டுக்கோப்பா இருக்கிறதை பார்க்க எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு”.​

கஸ்தூரியும், கீதாவும், திலகாவும் மட்டும் தங்களுக்குள் ஒரு ஏளன சிரிப்பை பகிர்ந்து கொண்டனர்.​

பிறகு, கௌரி தேன் நிலவின் தலை நிறைய மல்லிகை பூவை வைத்துவிடவும் இரு வீட்டாரும் சேர்ந்து அடுத்த முகூர்த்தத்திலேயே திருமணம் செய்யலாம் என்று தேதியை குறித்து விட்டு அழகேசன் குடும்பம் அனைவரிடமும் விடைபெற்று அங்கிருந்து புறப்பட்டனர்.​

பார்த்திபன், “அண்ணா திருமணத்துக்கு இன்னும் ஒரு மாசம் தான் இருக்கு. அதனால் சீக்கிரமே பத்திரிக்கை அடிக்க கொடுக்கணும்”.​

கஸ்தூரி, “ஆமாண்ணா.. புடவை எல்லாம் வேற வாங்கணும்.. நகை, நட்டு எல்லாம் வாங்கணும்..”.​

அறைக்குள்ளோ தேன்நிலவு ஏதோ உறுத்தலான மனதோடு அமர்ந்திருந்தாள்.​

கவிதா, “என்னடி ரொம்ப யோசிக்கிற?” என்றாள் மேஜையின் மேலிருந்த வாழைப்பழத்தை ஒரு வாய் கடித்த படி.​

தேன்நிலவு, “இல்ல டி இந்த பியூட்டி ஏன் இவ்வளவு சோகமா இருக்கான். என்னை கல்யாணம் பண்ணிக்க அவ்வளவு பயமா இருக்கா.. அவ்வளவு கொடூரமானவா நான்?”.​

கவிதா கேலி குரலில், “இதில் உனக்கு சந்தேகம் வேறயா.. பாவம் பியூட்டியுடைய நிலைமையை நினைச்சா தான் ரொம்ப பரிதாபமா இருக்கு”.​

அதன் பிறகு திருமண வேலைகள் கலைக்கட்ட தொடங்கியது. ஒருபுறம் பத்திரிகை அடிக்க கொடுத்தவர்கள்.. அடுத்த வாரத்தில் புடவைகளும், நகைகளும் வாங்க டவுனிற்கு புறப்பட்டனர்.​

திருமண புடவையும், தாலி சரடும் வாங்க வேண்டியது இருப்பதால் மணமகன் வீட்டினரும் வந்திருந்தனர். அழகேசன் தேன்நிலவு மற்றும் கவிதாவின் பக்கமே தன் பார்வையை திருப்பாமல் நின்று இருந்தான்.​

தேன் நிலவு, “இவன் ரொம்ப தான் டி பண்றான்”.​

கவிதா, “எனக்கும் கூட கொஞ்சம் ஓவரா தான் இருக்கு”.​

மணமகளுக்கு கூட சட்டென்று புடவையை தேர்வு செய்து விட்டனர். தேன்நிலவிற்கும் இதில் எல்லாம் ஆர்வம் அதிகம் இல்லை என்பதால் அவர்கள் எது எடுத்தாலும் சரி என்று விட்டுவிட்டாள்.​

மணமகளுக்கு எடுத்த நேரத்தை விட அதிக நேரம் செலவானதே மற்ற மூவருக்கும் புடவை எடுப்பதில் தான்.​

கௌரி, “அழகு இந்த புடவை தேனுக்கு எப்படி இருக்குனு பாரு..” என்று தேன் நிலவின் மேல் ஒரு பச்சை நிற புடவையை வைத்து காட்டினார்.​

அழகேசன், “அம்மா புடவையை பத்தி எல்லாம் எனக்கு என்ன தெரியும்.. உங்களுக்கு எது பிடிச்சிருக்கோ அதையே எடுங்க”.​

கௌரி, “இருந்தாலும் நீ பார்த்து சொன்னா தேனுக்கும் கொஞ்சம் சந்தோஷமா இருக்கும்ல” என்று கூறவும்.​

அழகேசன், “அவளுக்கு எது பிடிச்சு இருக்கோ அதையே எடுத்துக்க சொல்லுங்க.. கட்டிக்க போறது அவ தானே”.​

கௌரி, “கட்டிக்க போறது அவ தான் டா.. ஆனா, அதை பாக்க போறது நீ தானே‌.. உனக்கு எது பிடிச்சிருக்குனு சொல்றியோ அதையே எடுத்துடலாம்”.​

அழகேசன், “அதெல்லாம் ஒன்னும் தேவை இல்லமா.. அவளுக்கு பிடித்ததையே வாங்க சொல்லுங்க”.​

கௌரி, “என் பையன் அப்படி தான் மா.. நமக்கு எது பிடிச்சிருக்கோ எல்லாத்தையும் நம்ம விருப்பப்படியே விட்டுடுவான்” என்று கூறி நகைக்க.​

அழகேசன் தேன் நிலவையும், கவிதாவையும் முறைத்து பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டான்.​

கவிதா தேன் நிலவின் காதில் கிசுகிசுப்பாக, “இவன் ஏன் டி நம்மை இப்படி முறைக்கிறான்?”.​

தேன்நிலவு, “தெரியலை டி.. நாம தான் இவனை காமெடி பீஸ்னு நினைச்சுட்டோமோ.. உண்மையிலேயே இவன் ரொம்ப டெரர் பீஸ் போலருக்கே..”.​

கவிதா கலக்கமான குரலில், “என்னடி பயமா இருக்கா?”.​

தேன்நிலவு, “ச்ச.. ச்ச.. எனக்கெல்லாம் இவன் ஒரு ஆளே இல்ல.. நான்லாம் ஃபூனு ஊதி தள்ளிடுவேன்” என்றாள் சைகையோடு.​

கவிதா, “அதான பார்த்தேன்.. தேனுனா என்ன சும்மாவா..”.​

ஒரு பக்கம் இவர்கள் இங்கே பேசிக்கொண்டிருக்க.​

கஸ்தூரி தன் மேலே ஒரு புடவையை வைத்துக் கொண்டு, “அண்ணி இந்த புடவை எனக்கு எப்படி இருக்குனு பாருங்க” என்றாள் திலகாவிடம்.​

திலகா, “ரொம்ப நல்லா இருக்கு கஸ்தூரி.. எனக்கு இந்த புடவை எப்படி இருக்குனு பாரு..” என்று வேறொரு புடவையை வைத்துக் காட்ட.​

கீதாவோ ஒரு புடவையை கையில் எடுத்துக் கொண்டு வந்தவள், “அண்ணி நான் இந்த புடவை தான் எடுத்து இருக்கேன்” என்று காண்பித்தாள்.​

மூவரும் ஏதோ தங்களுக்கு தான் திருமணம் நடக்கப்போகிறது என்பது போல் விழுந்து விழுந்து புடவையை தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தனர்.​

அதை முடித்துக்கொண்டு நகை கடைக்கு செல்லவும்.. அங்கேயும் இதே போல் அலப்பறையை கூட்டிக் கொண்டிருந்தனர். கஸ்தூரி, கீதா மற்றும் திலகா வாங்க வேண்டிய அனைத்தையும் வாங்கி விட்டு வீடு வந்து சேர்ந்து விட்டனர்.​

இப்படியே நாட்கள் றெக்கை கட்டிக்கொண்டு பறக்க தொடங்கியது. நாட்கள் செல்ல, செல்ல தேன் நிலவுமே திருமண கொண்டாட்டத்திற்குள் இணைந்து கொண்டாள்.​

இதை விட்டால் அவளுக்கு வேறு வழியும் இல்லையே.. திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் கவிதா தன்னுடைய கல்லூரி தோழியை தேன் நிலவிற்கு மருதாணி வைக்க வேண்டி அவளின் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தாள்.​

கவிதா, “என்னடி இந்த டிசைனை போய் போட சொல்லுற.. இப்போ எல்லாம் பொண்ணு மாப்பிள்ளை பெயரை கையில் எழுதுவது தான் புது ட்ரெண்ட்.. உன் பெயரையும், அழகேசன் பெயரையும் எழுதலாம்”.​

தேன்நிலவு, “அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.. இந்த டிசைனை மட்டும் நீங்க போடுங்க” என்று வேறு ஒரு டிசைனை எடுத்து நீட்டினாள்.​

கவிதா, “என்னவோ போ.. சரியான ஓல்ட் டேஸ்ட்டு டி உனக்கு.. என் கல்யாணத்துக்கெல்லாம் நான் என் பேரையும் என் வீட்டுக்காரர் பேரையும் தான் என் கையில் போடுவேன்” என்றாள் மின்னும் கண்களுடன்.​

தேனிலவு, “என்ன கவிதா மேடம் உங்களுக்கும் கல்யாண ஆசை வந்துடுச்சு போலருக்கே” என்று அவளை கிண்டல் செய்ய.​

கவிதா பெருமூச்சு விட்டவாறு, “பின்ன என்ன பண்றது. நீ கல்யாணம் பண்ணி போயிட்டனா நான் மட்டும் தனியா சுத்தி சுத்தி வர முடியுமா.. நானும் கல்யாணம் பண்ணி தானே ஆகணும்” என்றாள் வருத்தமாக கூறுவது போல்.​

பிறகு, இருவரும் மாற்றி, மாற்றி கிண்டல் செய்து நகைத்துக்கொள்ள.​

கல்பனா, “ஐ.. சித்தி.. மருதாணி சூப்பரா இருக்கு”.​

தேன்நிலவு, “நான் கல்யாணம் பண்ணி போயிட்டா நீ பீல் பண்ணுவியா கல்லு..”.​

கல்பனா, “ஆமா சித்தி.. நான் இங்க வருவதே உன்னை பார்க்க தான். நீ கல்யாணம் பண்ணி போயிட்டா எனக்கு இங்கு வந்தாலே ரொம்ப போர் அடிக்கும்” என்றாள் சோகமான குரலில்.​

கவிதா, “ரொம்ப பண்ணாத டி.. உன் சித்தி என்ன கல்யாணம் பண்ணிட்டு ஃபாரினுக்கா போக போறா.. பக்கத்து தெருவிற்கு தானே போக போறா..”​

“உனக்கு எப்போ தோன்றினாலும் நீ அங்க போய் பார்த்துக்கலாம். அப்படி இல்லைனா நீ ஊருக்கு வரனா உன் சித்தியையும் இங்க வர வச்சுக்கலாம்”.​

கல்பனா, “ஆமா சித்தி.. அது வரைக்கும் பரவாயில்ல.. வெளியூர், வெளிநாடுனு மாப்பிள்ளை பார்க்காமல் பக்கத்து தெருவுலயே பார்த்தார்களே.. அப்பப்போ நாம மீட் பண்ணிக்கலாம்” என்று கூறி நகைத்தாள்.​

விடிந்தால் திருமணம் இத்தனை நாட்கள் இல்லாத படபடப்பு தேன்நிலவிற்குள் குடி கொண்டது. ஏனென்றே தெரியாமல் அவளின் இதய துடிப்பு வேகமாக துடித்துக் கொண்டிருந்தது.​

கவிதா,​

“என்னடி ரொம்ப டென்ஷனா இருக்க மாதிரி இருக்க.. வா.. இப்படி வந்து உட்காரு.. கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணு”.​

நாளைக்கு ஹீரோ சீன் வந்துடும் டியர்ஸ்..​

 

RJ novels

Moderator

மெய்யழகனின் தேன்நிலவு - 10​

தேன்நிலவு, “என்னனே தெரியல கவி.. ஒரு மாதிரி உறுத்தலா இருக்கு.. ரொம்ப பதட்டமா இருக்கு.. ஏதோ தப்பா நடக்க போற மாதிரியே இருக்குடி” என்றாள் கலக்கமான முகத்தோடு.​

கவிதா, “என்னடி இப்படி சொல்ற.. விடிஞ்சா கல்யாணம் இப்போ போய் பதட்டமா இருக்கு பயமா இருக்குனு சொல்ற.. இதெல்லாம் கல்யாண டென்ஷனா இருக்கும்”.​

“நாளைக்கு கல்யாணம் ஆகப்போகுது இல்ல.. அதான் உனக்கு அப்படி தோணுது. என் பிரண்டுக்கு கல்யாணம் ஆகும் பொழுது அவளும் இப்படித்தான் சொன்னா.. எல்லாம் சரியாயிடும் விடு”.​

தேன் நிலவு, “காலையிலிருந்து வலது கண்ணு வேற துடிச்சுக்கிட்டே இருக்குடி.. ஏதோ தப்பா நடக்குமோனு பயமா இருக்கு”.​

கவிதா, “அப்படியெல்லாம் எதுவும் நடக்காது. நீ ரொம்ப யோசிக்காத ஃப்ரீயா விடு.. எல்லாம் நல்லதா தான் நடக்கும்”.​

திருமண மண்டபத்தின் மொட்டை மாடியில் பேச்சுலர் பார்ட்டி நடந்து கொண்டிருந்தது.​

அழகேசனின் நண்பன் சங்கர், “என்னடா மச்சான்.. அந்த புள்ளையை அப்படி கிண்டல் பண்ணிட்டு கடைசியில் இப்போ நீயே கட்டிக்க போறியே..”.​

அழகேசன், “வேற என்னடா பண்றது.. வீட்டில் பார்த்து முடிவு பண்ணிட்டாங்க.. கட்டிக்க வேண்டியது தானே” என்றான் தன் ஒற்றை கண்ணை சிமிட்டியபடி.​

சங்கர், “நீ தான் அந்த பொண்ண கட்டிக்க போறனு தெரிஞ்சிருந்தா நாங்களும் கொஞ்சம் அடக்கி வாசிச்சிருப்போம். பாவம், அந்த பொண்ண ரொம்ப ஓட்டிட்டோம். நாளை பின்ன உங்க வீட்டுக்கு வந்தா டீ, காபியில் எதையாவது கலந்து கொடுத்துட போறா..” என்றான் சிரித்துக் கொண்டே.​

அழகேசன், “ம்ம்.. அவ செய்யுற ஆளு தான்டா.. செஞ்சாலும் செய்வா.. நம்ப முடியாது”.​

அன்றைய இரவு முழுவதும் நண்பர்களுடன் சேர்ந்து நன்கு குடித்துவிட்டு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக பேச்சிலர் பார்ட்டியை கொண்டாடிக் கொண்டிருந்தான் அழகேசன்.​

காலை கதிரவன் அழகாக தன் ஒளியை பூமி எங்கும் பரப்பி இருக்க..​

அதிகாலையிலேயே செய்ய வேண்டிய சடங்கு சம்பிரதாயங்களை எல்லாம் மணமகன் வீட்டாரும், மணமகள் வீட்டாரும் சேர்ந்து செய்து கொண்டிருந்தனர்.​

முகூர்த்தத்திற்கு தேன் நிலவிடம் புடவையை கொடுத்து மாற்றி வருமாறு கூறி அனுப்பியவர்கள். அழகேசனிடமும் பட்டு வேட்டி சட்டையை கொடுத்து மாற்றி வருமாறு கூறி அனுப்பினர்.​

மயில் கழுத்து நிற பட்டுடுத்தி தேவதையாக மின்னிக் கொண்டிருந்தாள் தேன்நிலவு.​

நேர்த்தியாக பட்டுடுத்தி, அளவாக அலங்காரம் செய்து, ஆபரணங்கள் அனைத்தையும் அணிவித்து பேரழகியாக அவளை தயார் செய்து வெளியே அழைத்து வந்தாள் கவிதா..​

திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் அனைவரின் கண்ணும் தேன் நிலவின் மேலேயே தான் நிலைத்திருந்தது.​

சகுந்தலாவும், முருகனும் மனநிறைவாக தங்கள் மகளின் திருமண கோலத்தை பார்த்துக்கொண்டு நின்று இருந்தனர்.​

கவிதா, “உனக்கு இந்த சாரி ரொம்ப அழகா இருக்கு டி” என்றாள் மின்னும் கண்களோடு.​

தேன்நிலவு அதற்கு அழகாக வெட்கப் புன்னகையை சிந்த..​

கவிதா, “அம்மாடியோ! தேனு.. உனக்கு வெட்கப்பட எல்லாம் தெரியுமா.. இன்னைக்கு தான் ஃபர்ஸ்ட் டைம் பாக்குறேன்”.​

தேன்நிலவு, “போடி..” என்றபடி தன் தலையை தாழ்த்திக் கொள்ள.​

அவளை மணவறைக்கு அழைத்து சென்றாள். மணமகனுக்கு முன்னதாக மணமகள் வந்துவிட.. அவளை அமர வைத்து மந்திரங்களை உச்சரித்து கொண்டு இருந்தார் ஐயர். நேரம் கடந்து கொண்டே செல்ல அழகேசன் வந்த பாடில்லை.​

ஐயர், “என்னங்க இது.. இன்னும் மாப்பிள்ளை வரல.. முகூர்த்தத்திற்கு நேரம் ஆகுது.. யாராவது மாப்பிள்ளையை வர சொல்லுங்க” என்று குரல் கொடுத்தார்.​

சங்கர் மணமகனின் அறையிலிருந்து அவசரமாக வெளியே ஓடி வந்தவன் ரத்தினத்தின் முன்பு நின்றவன், “அப்பா அழகு எங்கேயுமே காணும்..” என்றான் பதைபதைக்கும் மனதோடு.​

ரத்தினம் அதிர்ச்சியாக, “என்னப்பா சொல்ற.. துணி மாத்திட்டு வரேன்னு ரூமுக்கு போனானே..”.​

சங்கர், “ஆமா பா.. துணி மாற்ற போறேன் எல்லாரும் வெளியில் இருங்கனு சொன்னான். நாங்க எல்லாரும் வெளியில் வெயிட் பண்ணிட்டு இருந்தோம். இப்போ பார்த்தால் அழகை காணும்”.​

அதற்குள் பதட்டமான பெண் வீட்டார்கள் ரத்தினத்தை நெருங்கினர்.​

தேன்நிலவிற்கோ பேர் அதிர்ச்சி.. தலையில் இடி விழுந்தது போல் அமர்ந்திருந்தாள். அவள் அருகில் நின்று இருந்த கவிதா அவளின் தொளில் கையை வைத்து சமாதானம் செய்ய.. ஏன் என்றே தெரியாமல் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டத் தொடங்கியது.​

சரவணன், “என்னங்க இது.. இப்படி சொல்றாங்க.. உங்க பையனுக்கு முதல்ல போன் பண்ணுங்க.. எங்க இருக்கான்னு கேளுங்க.. முகூர்த்தத்துக்கு நேரமாகுது. இந்த நேரம் எங்க போயிருக்காரு?”.​

ரத்தினம், “ஒரு நிமிஷம் இருங்க தம்பி.. நான் போன் பண்றேன். அவன் எங்கேயும் போயிருக்க மாட்டான். இங்க தான் எங்கயாவது இருப்பான்” என்றபடி அழகேசனின் செல்போனிற்கு அழைப்பு விடுக்க.​

அதுவோ அணைத்து வைக்கப்பட்டு இருந்தது.​

கீதா வேண்டுமென்றே தேன் நிலவின் காதில் விழும் படி, “என்னக்கா இப்படி ஆயிடுச்சு.. ஒரு வேளை, பொண்ணு பிடிக்கலைனு ஓடிட்டு இருப்பானோ?”.​

திலகா, “மணவறை வரைக்கும் கொண்டு வந்து விட்டுட்டு போயிருக்கான்னா.. அதான் காரணமா இருக்கும். இதுல சந்தேகப்பட என்ன இருக்கு” என்று கூறி நகைக்க.​

தேன்நிலவிற்கு அங்கு அமரவே பெரும் அவமானமாக இருந்தது. தனக்கு மட்டும் ஏன் இந்த இழி நிலை..​

எங்கே சென்றாலும் மற்றவர்களின் முன்பு தான் அவமானப்பட்டு நிற்கும் படி தான் ஆகிறது என்று எண்ணியவள்.​

தலை நிமிராமல் அப்படியே அமர்ந்திருந்தாள். கண்களில் இருந்து மட்டும் கண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது.​

பார்த்திபன், “என்னங்க இது.. உங்க பையன் போன் ஸ்விட்ச் ஆப்னு வருது?”.​

ரத்தினம் தன் கைகளை பிசைந்து கொண்டு, “என்ன ஆச்சுனு தெரியலையே தம்பி..”.​

சரவணன், “உங்க பையனுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லையா?”.​

ரத்தினம், “அப்படியெல்லாம் எதுவும் இல்ல தம்பி” என்று கூறவும்.​

அவர் அருகில் தலை குனிந்து நின்றிருந்த கௌரியிடம் கஸ்தூரி, “நீங்க சொல்லுங்க மா.. உங்க பையனுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல தான.. அதனால் தானே அன்னைக்கு நிச்சய தாம்பூலம் மாத்தும் பொழுது என் தங்கச்சிக்கு மோதிரம் கூட போட மாட்டேன் என்று சொன்னார்” என்றாள் படபடவென்று.​

அதற்கு பதில் உரைக்க முடியாமல் கௌரி தலை குனிந்து நின்று இருக்க..​

கஸ்தூரி, “சொல்லுங்கம்மா.. இப்படி வாயை மூடிக்கொண்டு இருந்தால் என்ன அர்த்தம்? என் தங்கச்சியை ரெடி பண்ணி கொண்டு வந்து மணவறையில் உட்கார வைத்து இருக்கோம். அவளுக்கு நீங்க என்ன பதில் சொல்ல போறிங்க?”.​

முருகனிற்கு தலையே சுற்றுவது போல் இருந்தது. தன் ஆசை மகளுக்கு இப்படி எல்லாமா நடக்க வேண்டும். திருமணமே வேண்டாம் என்றவளுக்கு வம்படியாக மாப்பிள்ளை பார்த்து..​

மணவறை வரை கொண்டு வந்துவிட்டு விட்டு இப்பொழுது மாப்பிள்ளையை காணவில்லை என்றால் அவள் மனம் என்ன பாடுபடும் என்று தன் மகளுக்காக எண்ணியவருக்கு தலை சுற்றுவது போல் இருந்தது.​

முருகன் தள்ளாடியபடி அருகில் இருந்த இருக்கையில் அமர..​

பார்த்திபன், “அப்பா.. என்னாச்சுப்பா? பார்த்து..” என்றபடி அவரை அமர செய்தவன்.. அருந்துவதற்காக நீரையும் கொடுத்தான்.​

அதில், அனைவரும் அவரை சூழ்ந்து கொள்ள..​

திருமணத்திற்கு வந்திருந்தவர்களில் ஒருவர், “என்ன ரத்தினம் ஐயா ஊருக்கே நீங்கள் தான் தலைவர்.. உங்க பையன் இப்படி ஒரு காரியத்தை பண்ணிட்டானே..”.​

“பாவம், இப்போ அந்த மணவறையில் உட்கார்ந்து இருக்க பொண்ணுக்கு நீங்க என்ன பதில் சொல்லப் போறீங்க? உங்க குடும்பத்தை நம்பி தானே அந்த பொண்ணு தயாராகி வந்து உட்கார்ந்து இருக்கா.. அந்த புள்ளையோட மனசு என்ன பாடு படும்.. உங்க பையன் இப்படி பண்ணிட்டானே..”.​

ரத்தினத்திற்கு என்ன கூறுவது என்று தெரியவில்லை. அனைவரின் முன்பும் தலை குனிந்தபடி நின்று இருந்தார்.​

கஸ்தூரி, “என்னங்க இது.. இப்போ எங்களுக்கு நீங்க என்ன பதில் சொல்ல போறிங்க? என் தங்கச்சியை ரெடி பண்ணி கொண்டு வந்து உட்கார வைத்திருக்கோம்”.​

“இப்போ போய் மாப்பிள்ளை ஓடிப் போயிட்டார்னா.. நாளை பின்ன யாரு அவளை கட்டிப்பா.. அவளுடைய வாழ்க்கை என்ன ஆகிறது?” என்றாள் ஆதங்கமாக.​

என்ன தான் தங்கையை பிடிக்காத அக்காவாக இருந்தாலும்.. அவளுக்கு தன்னைவிட வசதி குறைந்த வீட்டில் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று நினைத்தாளே தவிர..​

இப்படி அனைவரின் முன்பும் திருமணம் வரை கொண்டு வந்து விட்டுவிட்டு அவளை கஷ்டப்படுத்த எண்ணவில்லை. திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் தங்களுக்குள்ளாகவே ஏதேதோ சலசலக்க தொடங்கினர்.​

ஒவ்வொருவரின் பேச்சும் தேன் நிலவின் காதில் விழ.. முற்றிலுமாக உடைந்து போய்விட்டாள். அனைவரின் முன்பும் மிகவும் அவமானப்பட்டு கூனி குறுகி போய் தலை குனிந்து அமர்ந்திருந்தாள்.​

செய்யாத தவறுக்கு தண்டனையை கொடுத்தது போல் ஆகிவிட்டது. அவளின் நிலையை எண்ணி அழுது, அழுது கண்கள் எல்லாம் சிவந்துவிட்டது.​

கவிதாவிற்குமே தேன் நிலவின் நிலையை பார்க்கும் பொழுது மிகவும் பாவமாக இருந்தது. அவளுக்கு சமாதானம் செய்யக்கூட சமாதான மொழிகள் அற்றவளாக நின்றிருந்தாள்.​

ரத்தினம் அனைவரின் பேச்சையும் கேட்டவருக்கும் மனம் கனத்துப் போனது தன் மகனின் செயலில்.. ஊரில் எந்த பிரச்சினையாக இருந்தாலும் முன்னிருந்து அதற்கு தீர்வு வழங்குபவரின் குடும்பத்து ஆளாலேயே ஒரு பெண்ணின் வாழ்க்கை இப்படி நிர்க்கதியாக நிற்பதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.​

ரத்தினம் நேராக முருகனின் முன் சென்று நின்றவர், “முருகா என்னை மன்னிச்சிடு..” என்றார் தன் கரம் கூப்பி.​

முருகன், “மன்னிப்பு கேட்கிறதால் எதுவும் சரியாக போறதில்லை ரத்தினம்.. என் பொண்ண பாரு, இனி அவளுடைய வாழ்க்கை என்ன ஆகப்போகுதோனு நினைச்சாலே எனக்கு ரொம்ப பயமா இருக்கு” என்றார் துக்கம் தொண்டையை அடைக்கும் குரலில்.​

ரத்தினம், “உனக்கு விருப்பம்னா என் இரண்டாவது பையனுக்கு உன் பொண்ண நான் கட்டி வைக்கிறேன்” என்றவரின் வார்த்தையில் அதிர்ந்து போய் எழுந்து நின்றான்.​

அந்த முதல் வரிசையில் அமர்ந்திருந்த அவன்..​

அவன்.. ‘மெய்யழகன்’..​

ஆம், நம் நாயகன் மெய்யழகனின் அண்ணன் தான் அழகேசன்.. மெய்யழகன் சிறு வயது முதலே தன் பாட்டி வீட்டில் வளர்க்கப்பட்டவன். ஆகையால், பெரும்பாலும் அவன் இந்த ஊருக்கு வரவே மாட்டான்.​

இவர்கள் தான் அவனை காண வேண்டும் என்றால் அங்கே சென்று பார்ப்பார்கள். மெய்யழகன் தன் 5 வயதிலேயே தன் பாட்டி தாத்தாவுடன் சென்று விட்டான்.​

அதன் பிறகு​

அவன் இந்த ஊருக்கு வந்ததை விரல் விட்டு எண்ணிவிடலாம்.. அதனாலேயே அழகேசனுக்கு ஒரு தம்பி இருப்பதையே காலப்போக்கில் அனைவருமே மறந்து போயினர்.​

 

RJ novels

Moderator

மெய்யழகனின் தேன்நிலவு - 11​

ரத்தினத்திற்கு உடன்பிறந்த சகோதரி ஒருவர் இருக்கிறார். அவரை பெங்களூரில் திருமணம் முடித்து கொடுத்திருந்தனர். அவரின் கணவருக்கு சொந்த பந்தம் என்று கூறிக்கொள்ளவோ, பெற்றோர்களோ யாருமே இல்லை.​

அவர்களது காதல் திருமணம்.. எனவே, தங்கள் மகளின் பிரசவ காலத்தில் அவளை பார்த்துக்கொள்ள பெரியவர்கள் யாரும் இல்லை என்பதால் ரத்தினத்தின் தாயும், தந்தையும் பெங்களூருக்கு இடம் பெயர்ந்தனர்.​

அப்பொழுது தாத்தா பாட்டியை பிரிந்து இருக்க முடியாமல் அழுத மெய்யழகனையும் அவர்கள் தங்களுடன் அழைத்து சென்று விட்டனர். அதன் பிறகு, ரத்தினத்தின் தாயும், தந்தையும் தங்கள் மகளின் குழந்தைகளை பார்ப்பது என்று அப்படியே அங்கேயே இருந்து விட்டனர்.​

மெய்யழகனுக்கும் இந்த கிராமத்தை விட பெங்களூர் மிகவும் பிடித்திருந்தது. அங்கே அவனுக்கு என்று நண்பர்கள் பட்டாளமும் கிடைத்துவிட.. அவனும் தன் தாத்தா, பாட்டியுடனேயே அங்கேயே இருப்பதாக கூறிவிட்டான்.​

இங்கே வர பிடிக்கவில்லை என்று வரவே மறுத்து விட்டான். ரத்தினமும், கௌரியும் எவ்வளவோ அழைத்துப் பார்த்தும் அவன் வர முடியாது என்று கூறி விடவே..​

மேலும், ரத்தினத்தின் தாயும், தந்தையும் தாங்கள் அவனை நல்ல முறையில் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறவும்.. சரி என்று விட்டுவிட்டார்கள். அவ்வபொழுது இவர்கள் அங்கே சென்று பார்த்துக்கொள்வார்களே தவிர..​

பெரும்பாலும் மெய்யழகன் இங்கே வரவே மாட்டான். அவனுக்கு இந்த ஊரே சுத்தமாக பிடிக்காமல் போய்விட்டது. இங்கே வந்தாலும் இரண்டு, மூன்று நாட்கள் தங்குவதே அவனுக்கு பெரிதாக தெரியும்.​

எனவே, தன் பெற்றோரை பார்க்க வேண்டும் போல் இருந்தாலும் அல்லது அவர்களுக்கு தங்களை பார்க்க வேண்டும் போல் இருந்தாலும் அவர்களை இங்கே வரும்படி கூறி விடுவான்.​

ரத்தினம், கௌரி தம்பதியருக்கு ஒரே ஒரு மகன் தான் என்று அனைவரும் எண்ணும் நிலைமை ஆகிவிட்டது.​

மெய்யழகன் தனக்கென்று ஒரு வரையறையை வகுத்து வாழ்ந்து கொண்டிருப்பவன். அவனின் வாழ்க்கையில் அனைத்துமே அவன் விரும்புவதும், நேசிப்பதும் மட்டுமே நிறைந்திருக்க வேண்டும் என்று எண்ணப்பவன்.​

அவன் அறையில் இருக்கும் சிறு, சிறு பொருள்களுக்கு கூட அவ்வளவு மெனக்கெடுத்து அவனுக்கு பிடித்தபடி அமைத்துக் கொள்வான். அப்படி இருப்பவன் தனக்கு வரப்போகும் வாழ்க்கை துணை எப்படி இருக்க வேண்டும் என்பதையும் தன் மனதிற்குள் வரையறுத்து வைத்திருந்தான்.​

கண்டிப்பாக கிராமத்து வாசியாக இருக்கவே கூடாது என்பது தான் அவன் முதல் எண்ணமே.. தனக்கு வரப்போகும் வருங்கால மனைவி பெங்களூரை போன்ற சிட்டியை சேர்ந்தவளாக இருக்க வேண்டும்..​

நன்கு படித்து நல்ல வேலையில் இருக்க வேண்டும்.. தன்னை எதிர்பார்க்காமல் அவளே சுயமாக அனைத்தையும் செய்பவளாக இருக்க வேண்டும்.. தன்னம்பிக்கை மிக்கவளாக இருக்க வேண்டும்..​

எதற்குமே அடுத்தவர்களை சார்ந்து இருக்கக் கூடாது. கணவனாகவே இருந்தாலும் ஒவ்வொரு விஷயத்திற்கும் என்னை சார்ந்திருக்கக் கூடாது.​

இப்படி பல, பல விஷயங்களை யோசித்து வைத்திருந்தவனுக்கு இப்படி திடீரென்று திருமணம் என்றால் எப்படி இருக்கும்.. அதுவும் அவன் விரும்பாத கிராமத்து வாசியுடன்.​

மாடர்ன் மங்கையாக தனக்கு வாழ்க்கை துணை அமைய வேண்டும் என்று எண்ணுபவனுக்கு தேன் நிலவு 10ஆம் வகுப்பு கூட படிக்காதவள் என்பது தெரிய வந்தால் என்ன செய்வான்..​

அவனின் முகம் அப்பட்டமாக அதிருப்தியை பிரதிபலித்தது.​

அவரின் வார்த்தையில் சரவணன், “என்ன சொல்றீங்க உங்களுக்கு இருக்கிறது ஒரே மகன் தானே” என்றான் புரியாமல்.​

ரத்தினம், “இல்ல தம்பி.. எனக்கு மொத்தம் ரெண்டு பசங்க.. அழகேசன் மூத்தவன்.. அவன் எங்களோட இருக்கான். ரெண்டாவது பையன் பெங்களூர்ல என்னுடைய அப்பா, அம்மா கூட இருக்கான்”.​

“அதிகமா இங்க வரமாட்டான்.. நாங்க தான் அங்க போய் அவனை பார்த்துட்டு வருவோம். அதனால் இங்க இருக்குறவங்களுக்கு அதிகமா அவனை பத்தி தெரிஞ்சு இருக்க வாய்ப்பு இல்லை”.​

“இதோ, இவன் தான் என்னுடைய இரண்டாவது மகன் பெயர் மெய்யழகன்..” என்று அங்கே அதிர்ந்து போய் நின்றிருக்கும் மெய்யழகனை அவர்களுக்கு காண்பித்தார்.​

தேன் நிலவின் அண்ணிகளும், அக்காவும் அதிர்ச்சியில் வாயை பிளந்து கொண்டு மெய்யழகனை பார்த்தனர். அவர்கள் எப்படிப்பட்ட மாப்பிள்ளையை தேன் நிலவிற்கு பார்க்க வேண்டும் என்று எண்ணினார்களோ.. அதற்கு அப்படியே நேர்மாறாக இருந்தான்.​

நெடுநெடுவென்று வளர்ந்திருந்தவன் திடமான உடல் அமைப்போடு வெளிர் நிறத்தில் பளிச்சென்று இருந்தான். அடர்ந்த கேசமும், புருவமும், மீசையும் அவனின் அழகை மேலும் மெருகேற்றியது.​

பார்க்கவே மிகவும் ஆளுமையாக முதல் பார்வையிலேயே மனதை கவர்பவன் போல் இருந்தான். கூர் நாசியும், கூர் விழிகளும், அழுத்தமான உதடுகளும் நேர்த்தியாக இருந்தது.​

உண்மையை சொல்ல போனால் அவன் தோற்றமே அவர்கள் மூவருக்கும் வயிற்று எரிச்சலை கொடுத்தது என்று தான் கூற வேண்டும். அனைவருமே வாயடைத்து போய் இப்பொழுது என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் நின்று இருந்தனர்.​

முருகன் ரத்தினத்தின் கையைப் பிடித்துக் கொண்டு, “என் பொண்ணோட வாழ்க்கையை நீ தான் டா காப்பாத்தணும்.. உன்னை நம்பி தானே உன் பெரிய பையனுக்கு நான் என் பெண்ணை கட்டிக் கொடுக்க சம்மதித்தேன்”.​

“உன் பையன் இப்படி பண்ணிட்டானே.. இனி என் பொண்ணோட வாழ்க்கை என்ன ஆகுமோ..” என்றவருக்கு கண்களில் இருந்து பொல பொலவென கண்ணீர் கொட்டியது.​

ரத்தினம் அவரின் கையில் சற்று அழுத்தத்தை கொடுத்தவாறு, “நீ ஒன்னும் கவலைப்படாத டா.. என்னால் நடந்த தப்பு நானே சரி பண்றேன். நான் தான் உன்கிட்ட உன் பெண்ணை என் பையனுக்கு கட்டிக் கொடுக்கிறாயானு கேட்டேன்..”.​

“இந்த கல்யாணத்துக்கு நான் தான் எல்லாத்தையும் எடுத்து செஞ்சேன். உன் பொண்ணோட வாழ்க்கை வீணாப்போறதை நான் எப்படி பார்த்துகிட்டு சும்மா இருப்பேன்”.​

“கண்டிப்பா, அப்படி நான் நடக்க விட மாட்டேன். என் இரண்டாவது பையனுக்கும் உன் பொண்ணுக்கும் இதே மேடையில் இப்போவே கல்யாணத்தை முடித்து வைக்கிறேன்.. என்ன ஆனாலும் சரி உன் பொண்ணு தான் என் வீட்டு மருமகள்” என்றார் திடமாக.​

அதில் சகுந்தலாவும், முருகனும் சற்று பலம் பெற..​

மெய்யழகன் வேக நடையுடன் தன் தந்தையை அடைந்தவன், “அப்பா என்ன பேசுறீங்க நீங்க?” என்றான் சற்று குரலை உயர்த்தியபடி.​

ரத்தினம், “எதுவாயிருந்தாலும் உள்ள போய் பேசிக்கலாம்” என்றபடி அவன் கையைப் பிடித்து மணமகன் அறைக்குள் அழைத்துச் சென்றார்.​

செல்லும் பொழுது அவனின் விழிகள் அங்கே மணமேடையில் கண்ணீரை சுரந்தபடி அமர்ந்திருக்கும் தேன் நிலவின் மீது தான் படிந்து மீண்டது.​

தேன் நிலவும் அதிர்ச்சியாக செல்லும் மெய்யழகனை தான் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். இருவரின் பார்வையும் ஒன்றோடு ஒன்று கலந்து கொண்டது.​

முழு அலங்காரத்தில் நேர்த்தியாக தயாராகி இருந்தவள்.. கலக்கமாக கலங்கிய விழிகளுடன்.. அதிர்ச்சி மாறா முகத்தோடு தன்னை நோக்குபவளை முறைத்து பார்த்துக் கொண்டே அறையினுள் சென்று மறைந்தான்.​

அறையனுள் நுழைந்ததுமே கோபமாக தன் தந்தையின் கையை உதறியவன், “விடுங்கப்பா.. என்ன பண்றீங்க நீங்க.. புரிஞ்சு தான் பண்றீங்களா.. எனக்கு போய் அந்த பொண்ண கட்டி வைக்க போறேன்னு சொல்றீங்க.. அழகு எங்க?” என்றான் கோபமாக.​

ரத்தினம், “அழகு எங்கனு தெரிஞ்சா நான் ஏன் பா உனக்கு அந்த பொண்ண கட்டி வைக்க போறேன்னு சொல்ல போறேன். அந்த பையன் எங்க போய் தொலைந்தான்னு தெரியலையே..”.​

மெய்யழகன், “அதுக்காக என்னால் எல்லாம் இந்த பொண்ண கட்டிக்க முடியாது. எனக்கு இதில் கொஞ்சம் கூட விருப்பமில்லை” என்றான் வெட்டும் பார்வையோடு.​

ரத்தினம் கரகரத்த குரலில், “இப்படி எல்லாம் சொல்லாத பா. பாவம் அந்த பொண்ணு.. நம்மை நம்பி தான் மணவறை ஏறி இருக்கா..”.​

“அவ கழுத்துல தாலி ஏறாமல் அவளை கீழே இறக்குனா நம்ம குடும்பத்துக்கு இது தீராத அவமானம் ஆகிடும். ஊர்காரங்க எல்லாம் அந்த பொண்ண பத்தி என்ன பேசுவாங்க..”.​

“நான் தான் அந்த பொண்ண அழகேசனுக்கு கட்டிக் கொடுக்க சொல்லி கேட்டேன். இப்போ அழகேசன் எங்க போய் தொலைஞ்சான்னு தெரியல.. அந்த பொண்ண எப்படி அப்படியே விட முடியும்?”.​

மெய்யழகன், “அதுக்கு.. அது உங்க பிரச்சனை.. என்னை என்ன பண்ண சொல்றீங்க.. நானா அவங்க கிட்ட அழகேசனுக்கு அந்த பொண்ண கட்டி கொடுக்க சொல்லி பேசினேன்”.​

ரத்தினம், “தயவு செஞ்சு நான் சொல்றதை கொஞ்சம் புரிஞ்சுக்கோ மெய்யழகா.. இந்த ஊருக்கே நான் தான் தலைவர்.. ஏதாவது ஒரு பிரச்சனைனா தீர்ப்பு சொல்ற நிலைமையில் நான் இருக்கேன்”.​

“நம்ம குடும்பத்தால் ஒரு பெண்ணுடைய வாழ்க்கைக்கு பிரச்சனை என்னும் பொழுது என்னால் இந்த அவமானத்தை தாங்கிக்கிட்டு உயிர் வாழ முடியாது” என்றார் கலக்கமான குரலில்.​

மெய்யழகன், “அப்பா..!” என்றான் பதட்டமாக.​

ரத்தினம், “ஆமா பா.. நீ மட்டும் அந்த பொண்ணு கழுத்துல தாலி கட்ட சம்மதிக்கலைனா நான் இந்த நிமிஷமே என் உயிரை விட்டுடுவேன். மானத்தை இழந்து இந்த உயிரை மட்டும் வச்சுக்கிட்டு நான் என்ன செய்யப் போறேன்” என்ற அவரின் வார்த்தையில் ஆடித்தான் போனான் அந்த ஆறடி ஆண்மகன்.​

மெய்யழகன், “அப்பா ப்ளீஸ்.. தயவு செஞ்சு நான் சொல்றதை புரிஞ்சுக்கோங்க.. இப்படி சில்லியானா ரீசன்ஸ்காக என்னுடைய லைஃபை ஸ்பாயில் பண்ண சொல்றீங்களா..” என்றவனுக்கு என்ன சொல்லி இவரை சமாதானம் செய்வது என்று புரியவில்லை.​

கௌரி மெய்யழகனின் காலை பிடிக்கச் செல்ல..​

மெய்யழகன் இரண்டடி பின்னோக்கி நகர்ந்தவாறு, “அம்மா..!” என்றான் அந்த அறையே அதிரும்படி.​

கௌரி கண்களில் நீருடன் அவனை நோக்கி கையெடுத்து கும்பிட்டவர், “தயவு செஞ்சு அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லு மெய்யழகா..”.​

“எனக்கு தெரியும் உன்னுடைய குணத்தை பத்தி.. ஆனாலும், எங்களுக்காக இந்த பொண்ண கட்டிக்க சம்மதம் சொல்லுப்பா.. இந்த பொண்ணு ரொம்ப நல்லவள்..”.​

“கண்டிப்பா நம்ம குடும்பத்துக்கு ஏத்த மருமகளா இருப்பா. உன் அண்ணன் பண்ண மாதிரி நீயும் எங்களை இத்தனை பேர் முன்னாடி அசிங்கப்படுத்திடாதே..”.​

“இப்படி ஒரு அவமானத்தோட எங்களால் இந்த ஊருக்குள்ள தலை நிமிர்ந்து வாழ முடியாது. அப்பா சொல்ற மாதிரி நாங்க இப்படி ஒரு அசிங்கத்தோட வாழுறதுக்கு பதில் செத்தே போயிடுவோம்” என்றார் கண்ணீர் மல்க.​

வேறு வழியின்றி பட்டு வேட்டி சட்டையுடன் அறையிலிருந்து இறுக்கமான முகத்துடன், உணர்ச்சிகள் அற்ற கண்களுடன் வெளியே வந்து நின்றான் மெய்யழகன்.​

அவனை இந்த கோலத்தில் பார்த்த பிறகு தான் முருகனுக்கும், சகுந்தலாவிற்கும் மனம் குளிர்ந்தது. எங்கே இவனும் தங்கள் மகளை​

திருமணம் செய்து கொள்ள முடியாது என்று மறுத்து விடுவானோ என்று வெகுவாக பயந்து போயினர் அந்த வயதான தம்பதி..​

 

RJ novels

Moderator

மெய்யழகனின் தேன்நிலவு - 12​

பட்டு வேட்டி சட்டையில் பேரழகனாக இருந்தான் மெய்யழகன். அனுதினமும் ஜிம்முக்கு சென்று உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பவனிற்கு இந்த பட்டு வேட்டி சட்டை பாங்காக அவனுடைய உடல் அமைப்பிற்கு தகுந்தார் போல் பொருந்திப் போனது.​

பாவம், கஸ்தூரியும் அவளின் அண்ணிகளும் தான் வயிற்று எரிச்சலில் வெந்து கொண்டு இருந்தனர். அவர்கள் எப்படிப்பட்ட மாப்பிள்ளையை தேன் நிலவிற்கு பார்க்க வேண்டும் என்று எண்ணினார்களோ..​

அதற்கு நேர் மாறாக மிகவும் அழகாக திடமான உடல் அமைப்புடன், வசீகரிக்கும் முகத்துடனும், ஆளுமையான தோற்றத்தில் நெடுநெடுவென வளர்ந்து நின்றிருந்த ஆறடி ஆண்மகனை பார்க்கும் பொழுது மூவருக்குமே காதில் புகை வராத குறை தான்.​

கஸ்தூரி மெதுவான குரலில், “அப்பா எதுக்கும் நாம அவசரப்பட வேண்டாம் என்று தோணுது”.​

முருகன் அவளை புரியாமல் பார்த்தவர், “என்னம்மா பேசுற நீ? அங்க பாரு.. உன் தங்கச்சி மணக்கோலத்தில் உட்கார்ந்து இருக்கிறா.. இந்த நிலைமையில் இவளை கட்டிக் கொடுக்காமல் அப்படியே வீட்டுக்கு கூப்பிட்டு போக சொல்றியா..”.​

“அவங்களே அவங்களுடைய இரண்டாவது பையனுக்கு கட்டிக்கிறேன்னு சொல்லும் பொழுது நீ ஏன் வேண்டாம் என்று சொல்லுற”.​

கஸ்தூரி, “அதுக்கு இல்லப்பா.. இந்த பையனை பத்தி நமக்கு எதுவுமே தெரியாது.. என்ன வேலை பாக்குறாரு, எப்படிப்பட்டவர் என்று ஒன்றும் தெரியாமல் கண்மூடித்தனமாக எப்படி நம்ம வீட்டு பொண்ண அந்த பையனுக்கு நம்பி கட்டி கொடுக்கிறது” என்றவரின் வார்த்தையில் அவர்களின் முன்னே வந்து நின்ற ரத்தினம்.​

“முருகா நீ எந்த கவலையும் பட தேவை இல்லை. ஏனென்றால், இவன் மூத்தவனை மாதிரி கிடையாது. பெங்களூர்ல படிப்பு முடிச்சிட்டு ஐடி கம்பெனியில் கை நிறைய சம்பாதிச்சுக்கிட்டு இருக்கான்”.​

“அடுத்த மாசம் அமெரிக்கா போக போறான். எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்ல.. ரொம்ப மரியாதை தெரிஞ்சவன். நீ தைரியமா நம்பி உன் பொண்ண கொடுக்கலாம்”.​

அவ்வளவு தான்.. முகம் இருண்டு விட்டது கஸ்தூரிக்கு.. எவ்வளவு நல்ல வாழ்க்கை.. இது எல்லாம் தேன் நிலவிற்கா.. என்று எண்ண எண்ண பொறாமையில் பொறுமிக் கொண்டு இருந்தார்.​

இந்த நிலையில் என்ன கூற முடியும் என்று சரவணனும், பார்த்திபனும் கூட அமைதியாகி விட..​

கஸ்தூரியால் தான் இதை சற்றும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதிலும், அனைத்து விதத்திலும் சிறந்தவனாக இருக்கும் மெய்யழகனை தேன் நிலவிற்கு கட்டி வைக்க துளியும் விருப்பமில்லை கஸ்தூரிக்கு..​

எப்படியாவது இந்த திருமணத்தை நிறுத்த ஏதேனும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்து விடாதா என்று பார்த்துக் கொண்டிருந்தார்.​

ஐயர், “நேரம் ஆகுது மாப்பிள்ளையை உட்கார வச்சீங்கன்னா முகூர்த்த நேரம் முடியுறதுக்குள்ள கல்யாணத்தை நல்ல படியா முடிச்சிடலாம்” என்றார் உரக்க.​

ரத்தினமும், கௌரியும் தங்கள் மகனை அழைத்துச் சென்று அங்கே மெழுகு சிலை போல் அமர்ந்திருக்கும் தேன் நிலவின் அருகில் அமர செய்தனர்.​

மெய்யழகன் தேன் நிலவை திரும்பியும் பாராமல் ஒருவித இறுக்கத்துடனும், கடுமையான முகத்துடனும் அமர்ந்திருந்தான்.​

ஐயர் மந்திரங்களை கூற.. அவ்வளவு கோபமாக உஷ்ண மூச்சோடு உச்சரித்துக் கொண்டிருந்தான்.​

தேன் நிலவிற்கோ தன் மனநிலையை விவரிக்க வார்த்தைகளே இல்லை. என்ன மாதிரியான தலை எழுத்து தன்னுடையது என்று தன்னை தானே எண்ணி நொந்து போய் அமர்ந்திருந்தாள்.​

தனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என்று எண்ணியவளுக்கு அழுவதை தவிர வேறு வழியில்லை. இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று எழுந்து செல்லவும் முடியாத நிலை..​

தன் தாயும், தந்தையும் கலங்கி போய் நிற்பதை பார்த்தவள்.. யார் என்றே தெரியாத ஒருவனை திருமணம் செய்ய தயாராகி விட்டாள்.​

தன் அருகில் அமர்ந்திருப்பவனின் ஆறடி உயரமோ, வசீகரமான முகமோ, ஆளுமையான நடையோ, அவனின் படிக்கட்டு தேகமோ.. அவளின் மனதிற்குள் எந்த ஒரு ஆசையையும், உணர்ச்சியையும் தூண்டவே இல்லை.​

அவனின் இறுகிய முகமும், கடுமையான குரலுமே எடுத்துரைத்தது.. அவனுக்கு இந்த திருமணத்தில் துளியும் விருப்பம் இல்லை என்று..​

இப்படி உன் மேல் துளியும் விருப்பம் இல்லாதவனை மணந்தால் உன் வாழ்க்கை நன்றாக அமையுமா என்று அவள் மனம் எழுப்பிய கேள்விக்கு இந்த நொடி அவளிடம் சத்தியமாக விடையில்லை.​

ஆனாலும், இந்த திருமணத்தை செய்தாக வேண்டிய கட்டாயம்.. தனக்காக இல்லாவிட்டாலும் தன் தாய் தந்தைக்காக செய்தாக வேண்டும்.​

இப்பொழுது இருக்கும் சூழலில் தனக்கு இந்த திருமணம் வேண்டாம் என்று கூறினாள் தன் தாயும் தந்தையும் நிலை குலைந்து போய் விடுவார்கள்.​

இத்தனை வருட கால வாழ்க்கையையும் தன்னை பிடிக்காதவர்களுடன் தானே இருந்து வாழ்ந்திருக்கிறேன். இனி இருக்கும் மிச்ச மீதி வாழ்க்கையையும் அப்படியே வாழ்ந்து விட்டு போகிறேன் என்று தன் மனசாட்சி எழுப்பிய கேள்விக்கு ஒரு கசப்பான பதிலை கூறியவள் தலை குனிந்து அமர்ந்திருந்தாள்.​

இரு மனங்கள் விரும்பி நடக்க வேண்டிய திருமணமோ இருவருக்குமே துளியும் விருப்பம் இல்லாமல் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.​

ஐயர், “கெட்டி மேளம்.. கெட்டி மேளம்..” என்று உரக்கக் கூற..​

மேல தாளங்கள் இசைக்க.. குடும்பத்தாரும், பெற்றோரும், உறவினர்களும் அர்ச்சதை தூவி ஆசீர்வதிக்க..​

அவளின் சங்கு கழுத்தில் அந்த மாங்கல்யத்தை அணிவித்து அவளை தன்னவள் ஆக்கிக் கொண்டான் ‘மெய்யழகன்’..​

யார் என்றே தெரியாத ஒருவனின் கையால் அவன் அணிவித்த மாங்கல்யத்தை தன் தலை தாழ்த்தி ஏற்றுக் கொண்டாள் ‘மெய்யழகனின் தேன்நிலவு!’..​

இருவரின் மன நிலையுமே வெறுமையாக தான் இருந்தது. இருவருக்குமே ஒருவர் மேல் மற்றொருவருக்கு காதல் இல்லை.. அன்பு இல்லை.. நட்பில்லை.. எதுவுமே இல்லை..​

பிறகு, அனைத்து சம்பிரதாயங்களையும் செய்து முடித்தவர்கள்.. பெரியோரிடமும் ஆசி வாங்க..​

கீதா, திலகாவின் காதில் கிசுகிசுப்பாக, “வயிற்றெரிச்சலா இருக்கு அக்கா.. இவளுக்கு இப்படி ஒரு மாப்பிள்ளை.. இவளுக்கு எந்த மாதிரி ஒரு வாழ்க்கை நாம அமையக்கூடாது என்று நினைச்சோமோ.. அதே மாதிரி ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சிருக்கு..”.​

திலகா, “ஆமா கீதா.. மாப்பிள்ளையை பார்த்தியா.. அவளுக்கு பொருத்தமா இருக்காரு.. ரெண்டு பேருமே அம்சமா இருக்காங்க.. பாக்கவே பொறாமையா இருக்கு டி” என்று வெளிப்படையாகவே தங்கள் மனதில் இருக்கும் விஷத்தை இருவரும் மாற்றி, மாற்றி கக்கி கொண்டனர்.​

இளங்கோ வேண்டுமென்றே கஸ்தூரியின் காதில் கிசுகிசுப்பாக, “என்ன இருந்தாலும் இந்த மாப்பிள்ளையும் என்னை விட சுமாரா தான் இருக்காரு இல்ல கஸ்தூரி”.​

கஸ்தூரி அவனை எரித்து விடுவது போல் ஒரு பார்வை பார்த்தவள் பிபி எகிர நின்று கொண்டு இருந்தாள்.​

பிறகு, மணமக்கள் இருவரையும் சாப்பிட அழைத்துச் செல்ல எத்தனிக்க, “இங்கே என்ன நடக்குது?” என்ற உரத்த குரல் வாசலை நோக்கி கேட்டது.​

அனைவரும் ‘யார்’ என்று திரும்பிப் பார்க்க.. அழகேசன் தான் அதிர்ச்சியாக பார்ப்பது போல் நின்றிருந்தான்.​

அவனைப் பார்த்த ரத்தினம் கோபமாக அவன் அருகில் சென்றவர், “அறிவு கெட்டவனே.. எங்கடா போய் தொலைஞ்ச.. இன்னைக்கு உனக்கு கல்யாணம் என்பது கூட நினைவில்லையா..”.​

“ராத்திரி முழுக்க கண்ணு மண்ணு தெரியாமல் குடிச்சு தொலைச்சிட்டியா.. எங்க மானத்தை வாங்குறதுக்குனே எனக்கு பையனா வந்து பொறந்திருக்க” என்று வாய்க்கு வந்தபடி எல்லாம் சாடினார்.​

அழகேசன், “அப்பா ஒரு நிமிஷம்.. நான் சொல்றதை கொஞ்சம் கேக்குறீங்களா.. என்ன நடந்ததுனு தெரியாமல் நீங்க பாட்டுக்கு என்னென்னமோ பேசுறீங்க..” என்றான் பதிலுக்கு.​

ரத்தினம், “என்னடா.. என்ன கேட்க சொல்லுற.. உன்னை கேட்டு தானே இந்த கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணோம்.. கடைசி நேரத்தில் இப்படி எங்க கழுத்த அறுத்துட்டு போயிட்டியே..”.​

அழகேசன், “அப்பா என்னை கொஞ்சம் பேச விடுறீங்களா”.​

கௌரி, “ஏன் டா இப்படி எங்க மானத்தை வாங்குற.. அங்க பாரு, உன்னால் உன் தம்பி அந்த பொண்ண கல்யாணம் பண்ணி நிக்கிறான். பெண் பாவம் நம்ம குடும்பத்தை ஏழேழு தலைமுறைக்கும் நல்லா வாழவே விடாது. ஏன்டா இப்படி எல்லாம் பண்ணுற..” என்றார் அழுகையினோடு.​

அழகேசன், “அம்மா போதும்.. ஒரு நிமிஷம் நான் சொல்வதை கொஞ்சம் கேட்குறீர்களா‌. நான் துணி மாற்றுவதற்காக ரூமுக்குள்ள போகும்பொழுது மூணு பேர்‌ வந்து என்னை கடத்திக்கிட்டு போயிட்டானுங்க” என்றவனின் வார்த்தையில் ரத்தினம் உட்பட அனைவருமே அதிர்ந்து போய் பார்த்தனர்.​

ரத்தினம் அதிர்ச்சியான குரலில், “என்னடா சொல்ற?”.​

அழகேசன், “ஆமா பா.. யாரு என்னனே தெரியல.. மூணு பேரு என்னை கடத்திக்கிட்டு போயிட்டானுங்க.. அவனுங்களை அடிச்சு போட்டுட்டு வருவதற்கு எனக்கு லேட் ஆயிடுச்சு.. அதுக்குள்ள இவனுக்கு ஏன் கல்யாணம் பண்ணி வச்சீங்க” என்றான் அங்கே மணமகன் கோலத்தில் நிற்கும் மெய்யழகனை கை காண்பித்தபடி.​

மெய்யழகனோ அவனை நெருப்பை கக்கும் விழிகளால் பொசுக்கியபடி பார்த்துக் கொண்டு நின்று இருந்தான்.​

தேன் நிலவோ முற்றிலுமாக குழம்பி போய் நின்று இருந்தாள். இங்கே என்ன நடக்கிறது என்று அவளுக்கு ஒன்றுமே விளங்கவில்லை.​

கஸ்தூரியோ மனதிற்குள், “அடப்பாவி! நாசமா போனவன்.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வந்து தொலைச்சு இருக்க கூடாது. இந்த கல்யாணத்தையாவது நிறுத்தி இருக்கலாம். கல்யாணமே முடிஞ்சு போச்சு இப்போ வந்து நிக்கிறான் பாரு குத்து கல்லு மாதிரி” என்று மனதிற்குள்ளேயே அவனை சபித்துக் கொண்டு நின்றாள்.​

கௌரிக்கும் இப்பொழுது என்ன செய்வது என்று தெரியவில்லை. மூத்தவனை வைத்துக்கொண்டு இளையவனுக்கு திருமணம் செய்து விட்டோம்.​

அவன் மீது இப்பொழுது எந்த தவறும் இல்லை என்பதை அறிந்த பின்னர் என்ன செய்வது என்று தெரியாமல் திணறிக்கொண்டு நின்றனர்.​

அழகேசன், “அப்பா நான் வர வரைக்கும் உங்களால் கொஞ்ச நேரம் காத்துக்கிட்டு இருக்க முடியாதா.. எதுக்காக இப்படி பண்ணீங்க.. ஊரெல்லாம் எனக்கு கல்யாணம்னு சொல்லிட்டு..”.​

“இப்போ இவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்கீங்க.. நாளை பின்ன நான் எப்படி வெளியில் போறது.. எனக்கு ரொம்ப அவமானமா இருக்கு”.​

ரத்தினம், “இங்க பாரு, எல்லாமே எதிர்பாராமல் நடந்திடுச்சு. உன்னை காணும் என்றதும் நீ தான் இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லாமல் எங்கேயோ போயிட்டியோ என்று நினைத்து நாங்க எல்லாரும் இப்படி ஒரு தப்பான முடிவை எடுத்துட்டோம். என்னை மன்னிச்சிடு”.​

அழகேசன், “யாருக்கு வேணும் உங்க மன்னிப்பு.. எனக்கும் இப்போவே கல்யாணம் நடந்தாகணும்..” என்றான் உறுதியான குரலில்.​

கௌரி, “உடனே கல்யாணம் நடக்கணும்னா எப்படிப்பா?” என்றார் புரியாமல்.​

அழகேசன் வெறுமையான முகத்தோடு நின்று இருந்த தேன் நிலவை பார்த்தவன். அவள் அருகே இங்கு நடப்பவற்றை குழப்பமாக பார்த்துக் கொண்டிருந்த கவிதாவை நோக்கி கையை உயர்த்தி காட்டினான்.​

“எனக்கு அவளை கல்யாணம் பண்ணி வைங்க..” என்றான் கவிதாவை உறுத்து விழித்தபடி.​

 

RJ novels

Moderator

மெய்யழகனின் தேன்நிலவு - 13​

அவனின் வார்த்தையில் அனைவருமே அதிர்ந்து போய்விட்டனர்.​

ரத்தினம், “அழகு!” என்றார் சீற்றமாக.​

அழகேசன், “என்னப்பா இப்போ எதுக்கு கத்துறீங்க.. நான் எனக்கு கல்யாணம் செஞ்சு வைங்கனு தானே கேட்டேன். வேற ஏதாவதா கேட்டேன்”.​

ரத்தினம், “இங்க பார் அழகு.. இருக்க சூழ்நிலையை கொஞ்சம் புரிஞ்சுக்க முயற்சி பண்ணு.. நடந்தது நடந்து போச்சு.. உனக்கு நாங்களே பொண்ணு பார்த்து கட்டி வைக்கிறோம்”.​

அழகேசன், “முடியாது பா.. எனக்கு இப்போவே இங்கேயே கல்யாணம் நடந்தாகணும். எனக்கு பார்த்த பொண்ண இவனுக்கு கட்டி வச்சிட்டீங்க..”.​

“நாளை பின்ன நான் ரோட்ல போனா எல்லாரும் என்னை பார்த்து சிரிப்பாங்க.. என்னால் இந்த அவமானத்தோட வாழ முடியாது. எனக்கும் இப்போவே இதே மண்டபத்தில் கல்யாணம் நடந்தாகணும்”.​

கவிதா தேன்நிலவின் பின்னோடு தன்னை மறைத்துக் கொண்டவளிற்கு இதயம் தாறுமாறாக துடிக்க தொடங்கியது. விட்டால் அவளின் இதயம் வெளியே குதித்து ஓடிவிடும் போல் படபடவென்று அடித்துக் கொண்டது.​

தலையெல்லாம் கிறுகிறுவென்று சுற்றுவது போல் இருந்தது.. கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது..​

அழகேசன் சட்டென்று தன்னை கை காட்டுவான் என்று கவிதா சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவன் தன்னை நோக்கி கையை காட்டவும் செய்வதறியாது திகைத்து விட்டாள்.​

“நான் தான் சொல்றேன் இல்ல.. நான் அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்றான் திடமாக.​

கௌரி, “அதுக்கு அந்த பொண்ண பெத்தவங்க சம்மதிக்க வேண்டாமா? நீ கட்டிக்கிறேன்னு சொன்னா மட்டும் ஆச்சா..” என்றார் கோபமாக.​

அழகேசன், “எல்லாம் சொல்லுவாங்க..” என்றவன்.​

அங்கே கூட்டத்தில் நின்றிருந்த கவிதாவின் தந்தையை பார்க்க.. அவரோ அவன் பார்வைக்கான அர்த்தத்தை உணர்ந்தவர்.​

ரத்தினத்தின் முன்னே சென்று நின்றவர், “என் பொண்ணு கவிதாவை உங்க பையன் அழகேசனுக்கு கட்டிக் கொடுக்க எனக்கு முழு சம்மதங்க” என்றார்.​

அவ்வளவு தான்.. கவிதாவிற்கு தன் தலையில் ஏதோ பெரிய இடி விழுந்தது போல் ஆகிவிட்டது.​

தேன்நிலவு அதிர்ச்சியாக தன் பின்னே மறைவாக நின்றிருக்கும் கவிதாவை பக்கவாட்டாக திரும்பி பார்க்க..​

அவளோ வெடவெடக்கும் கை கால்களுடன் வியர்த்து வழிந்த படி நின்று இருந்தாள். அவளின் நடவடிக்கையிலேயே அவளுக்கு இதில் சற்றும் விருப்பமில்லை என்பதை உணர்ந்த தேன்நிலவு.​

அவளின் கையில் சற்று அழுத்தத்தை கொடுத்தவாறு, “என்னாச்சு கவிதா?”.​

கவிதா, “எனக்கு இதில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை தேனு.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு.. வேண்டாம்னு சொல்லேன்” என்றாள் நடுங்கும் குரலில்.​

ஆரம்பம் முதலே அழகேசனை பார்த்தாலே கவிதா அந்த இடத்தை விட்டு பயந்து ஓடி விடுவாள். அது ஏன் என்று அவளுக்கே தெரியவில்லை. அவனை பார்த்தாலே ஒரு வித பயம் அவளுக்குள் சுழல தொடங்கிவிடும்.​

தேன் நிலவு தான் அவனுக்கு சரிக்கு சரியாக வாயாடுவாளே தவிர, கவிதா பயந்த பார்வை தான் பார்ப்பாள். அதுவே அழகேசனை வெகுவாக அவள் பால் இழுத்து விட்டது என்று தான் கூற வேண்டும்.​

ஆம், பார்க்கும் இடங்களில் எல்லாம் அழகேசன் தேன் நிலவிடம் வம்பு செய்வதே கவிதாவிற்காக தான்.. அவளிடம் பேச்சு கொடுத்தவாறு கவிதாவின் நடவடிக்கைகளை தான் நோட்டமிட்டபடி நின்று இருப்பான்.​

ஆனால், கவிதாவிற்கு அப்படி அல்ல.. அழகேசன் எப்பொழுதுமே தன் உடன் நான்கு ஐந்து தடிகர்களை வைத்துக் கொண்டே சுற்றுவதும், திமிராக பேசுவதும், அவனின் பார்வையும் அவளுக்கு என்றுமே அச்சத்தை மட்டும் தான் கொடுத்திருக்கிறது.​

அதிலும், தன் ஆருயிர் தோழியான தேன்நிலவை வருங்கால கணவராக பாரத்த அழகேசனை சட்டென்று தன் கணவனாக ஏற்றுக் கொள்ள அவள் மனம் அறவே மறுத்தது.​

தன் தந்தையின் வார்த்தையில் கவிதாவினால் நிலை கொள்ளவே முடியவில்லை.​

அழகேசன், “அதான் அந்த பொண்ணோட அப்பாவே சொல்லிட்டார் இல்ல.. அப்புறம் என்ன.. எனக்கும் அந்த பொண்ணுக்கும் இப்போவே கல்யாணம் செஞ்சு வையுங்க..”.​

முன்னதாகவே பேசி வைத்து திருமணம் செய்து கொள்ள கவிதா நிச்சயமாக சம்மதிக்க மாட்டாள் என்பதை உணர்ந்த அழகேசன் கிடைத்த சந்தர்ப்பத்தை உபயோகித்து கொண்டான் என்று தான் கூற வேண்டும்.​

கவிதாவிற்கு தாய் கிடையாது தந்தை மட்டும் தான். ஒரே பெண் எனவே அவளின் தந்தை மட்டும் சமாளித்தால் போதும் என்று எண்ணிய அழகேசன் முன்னதாகவே அவளின் தந்தையை சம்மதிக்க வைத்து விட்டான்.​

தேன் நிலவுடன் அவன் வம்பு செய்வதே கவிதாவிற்காக தான் என்பதை அவர்கள் இருவருமே அறியவில்லை. இதற்கு இடையில் ரத்தினம் வேறு அழகேசனுக்கு தேன் நிலவை பெண் கேட்க..​

இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணத்திற்கு முடிவு செய்து விட்டனர். ஆனால், அழகேசனால் தேன் நிலவை மணந்து கொள்வதை பற்றி சிந்திக்க கூட முடியவில்லை.​

எனவே, வெகுவாக சிந்தித்தவன் இப்படி ஒரு திட்டத்தை தீட்டினான். மணவறை வரை கொண்டு வந்து விட்டு விட்டு அங்கிருந்து வெளியேறிவிட்டால் வேறு வழி இன்றி தேன் நிலவிற்கு வேறு யாரையாவது திருமணம் செய்து வைத்து விடுவார்கள்.​

பிறகு, தனக்கும் இதற்கும் எந்த ஒரு சம்பந்தமுமே இல்லாதது போல் பேசி தனக்கும் இப்பொழுதே திருமணம் நடக்க வேண்டும் என்று கூறி கவிதாவை மணந்து கொள்ளலாம் என்று எண்ணியவனுக்கு பெரிய தடையாக இருந்ததே கவிதாவின் தந்தை தான்.​

என்ன கூறி அவரை உடனே சம்மதிக்க வைப்பது என்று வெகுவாக சிந்தித்தவனிற்கு அப்பொழுது தான் நினைவு வந்தது.​

கவிதாவின் குடும்பம் நடுத்தர வர்க்கம் தான். கவிதாவின் படிப்பு செலவுக்குமே அவளின் தந்தை அழகேசனின் தந்தையிடம் கடன் வாங்கி தான் செய்திருக்கிறார்.​

அழகேசன், ‘உங்கள் மகளை எனக்கு நீங்கள் மணம் முடித்துக் கொடுத்தால் நீங்கள் தரவேண்டிய பணம் எதுவுமே தரத் தேவையில்லை. அது மட்டும் இல்லாமல், உங்கள் மகளுக்கும் ஒரு நல்ல வசதியான வாழ்க்கை கிடைக்கும்’.​

‘நான் அவளை கடைசி வரை பத்திரமாக பார்த்துக் கொள்வேன். ஏனென்றால், நான் அவளை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன்’ என்று தன் மனதில் இருக்கும் மொத்தத்தையும் அவரிடம் கூறி அவரை இதற்கு சம்மதிக்க வைத்து விட்டான்.​

தினசரி வாழ்க்கையை தடத்துவதற்கே கடினப்படும் நிலையில் இருப்பவருக்கு தன் மகளுக்கு இப்படி ஒரு நல்ல வாழ்க்கை வசதியான இடத்தில் அமையப்போகிறது என்றால் யார் தான் வேண்டாம் என்று மறுப்பார்கள்.​

இங்கிருந்து வெளியேறிய உடனேயே அழகேசன் தேன் நிலவிற்கும் மெய்யழகனிற்கும் திருமணம் முடிந்த விஷயத்தை தன் தோழன் சங்கரின் மூலம் அறிந்து கொண்டவன்.​

அடுத்ததாக அழைத்தது கவிதாவின் தந்தைக்கு தான். அவரின் மனதை மாற்றிய பிறகு தான் மண்டபத்திற்கே வந்தான்.​

ரத்தினம் கவிதாவின் தந்தை செல்வத்தை பார்த்து உங்களுக்கு இதுல நிஜமாகவே சம்மதம் தானே?” என்றார் மீண்டும் ஒருமுறை.​

செல்வம், “எனக்கு முழு சம்மதம் தாங்க” என்று கூறவும்.​

கவிதாவால் இனி எப்படி மறுக்க முடியும். இத்தனை பேரின் முன்பு தன் தந்தையின் வார்த்தையை மீறி வேண்டாம் என்று கூறும் அளவிற்கு எல்லாம் அவளுக்கு தைரியம் இல்லை.​

தன் வாழ்க்கையையே காக்க முடியாமல் யார் என்றே தெரியாத ஒருவரை மணந்து கொண்ட தேன் நிலவால் தன் தோழியின் வாழ்க்கையை மட்டும் எப்படி காக்க முடியும்.​

அனைத்தும் கையை மீறி சென்றதில் கவிதாவிற்கு கண்களில் இருந்து கரகரவென கண்ணீர் வெளியேறியது.​

கௌரி அங்கே அழுத நிலையில் நின்றிருக்கும் கவிதாவை அழைத்துக் கொண்டு தேன் நிலவுடன் மணமகள் அறைக்குள் சென்றவர்.​

தேன் நிலவிற்கு மாற்று புடவையாக எடுத்த பட்டுப் புடவையை கவிதாவிடம் அணிந்து கொள்ளுமாறு கொடுத்தார். கொடுத்துவிட்டு அறையை விட்டு வெளியேறி விட்டார்.​

அவர் கொடுத்த புடவையை கூட அணியாமல் சுவற்றில் சாய்ந்த நிலையில் அழுது கொண்டிருக்கும் தன் நண்பியின் நிலையை பார்க்கவே தேன் நிலவிற்கு பரிதாபமாக இருந்தது.​

சற்று நேரத்திற்கு முன்பு தான் தேன் நிலவின் நிலையை எண்ணி கவிதா பரிதாபப்பட்டாள். இப்பொழுது அனைத்துமே தலைகீழாக மாறிவிட்டது.​

தேன் நிலவு அவளின் தோளில் கையை வைத்தவாறு, “கவி அழாதடி” என்று கம்மிய குரலில் கூறவும்.​

அவளை அணைத்துக்கொண்டு ‘ஓ’வென்று கதறிவிட்டாள்.​

கவிதா, “எனக்கு அழகேசனை கட்டிக்க கொஞ்சம் கூட விருப்பமே இல்ல தேனு.. ஏன் இப்படி எல்லாம் நடக்குதுனு எனக்கு ஒண்ணுமே புரியல. அப்பா எப்படி இதுக்கு சம்மதிச்சாருனு தெரியல..”.​

“எனக்கு அழகேசனை பார்த்தாலே பயமா இருக்கும். நான் போய் எப்படி தேனு அவன் கூட வாழ முடியும். அதுவும் அழகேசன் உனக்கு பார்த்த மாப்பிள்ளை..”.​

“உனக்கு பார்த்த மாப்பிள்ளை கூட நான் எப்படி கல்யாணம் செஞ்சுக்க முடியும்” என்றவளின் குரல் அடைத்து கொண்டு வெளியே வந்தது.​

தேன்நிலவு அவளை தன்னிடம் இருந்து பிரித்தவள், “இங்க பாரு கவி.. எனக்கு அழகேசன் மேல எந்த ஒரு ஈடுபாடும் இல்லை. வீட்டில் பார்த்து பேசி முடிவு பண்ணதால் தான் நான் இந்த கல்யாணத்துக்கே சம்மதிச்சேன்”.​

“மத்தபடி, அழகேசனை கட்டிக்கணும்னு எனக்கு எந்த ஒரு ஆசையும் இல்லை. உன் மனசுல என்னை நினைச்சு ஏதாவது குற்ற உணர்ச்சியாக இருந்தால் அதையெல்லாம் தயவு செஞ்சு தூக்கி போட்டு விடு”.​

“அழகேசனை கல்யாணம் செஞ்சுக்கணும்னு நினைக்கும் பொழுதும் என் மனசுல எந்த ஒரு ஆசையும் வரல..”.​

“இப்போ யாருனே தெரியாத ஒருத்தரை கல்யாணம் பண்ணி இருக்கேன் இப்பயும் என் மனசுல எந்த ஒரு ஆசையும் இல்லை” என்றவளின் இதழில் விரக்தியான புன்னகை படர்ந்தது.​

அதற்குள் வெளியே இருந்து அறை கதவை தட்டும் ஓசை கேட்க.​

தேன்நிலவு, “ஆங்.. இதோ புடவை மாத்திக்கிட்டு இருக்கா..” என்று குரல் கொடுத்தாள்.​

பிறகு, வேறு வழியின்றி அந்த புடவையை தேன் நிலவு கவிதாவிற்கு அணிவித்து விட. கௌரி சில நகைகளை கொண்டு வந்து கவிதாவிற்கு போடும்படி கொடுத்தார்.​

அவர் கூறியபடி அலங்கரித்து கவிதாவை வெளியே அழைத்து வந்தாள் தேன்நிலவு. அவள் முகத்தில் கல்யாணத்திற்கான எந்த ஒரு மகிழ்ச்சியுமே தென்படவில்லை.​

அவளின் வீங்கிய முகமும், சிவந்த விழிகளும் யாரும் கேட்காமலே பறைசாற்றியது அவளின் மன வருத்தத்தை.. இருப்பினும்,​

அவளின் தந்தையே சரி என்று கூறிய பிறகு தன்னால் என்ன செய்ய முடியும் என்று எண்ணிய தேன் நிலவு அமைதியாக நின்று கொண்டாள்.​

 

RJ novels

Moderator

மெய்யழகனின் தேன்நிலவு - 14​

ஐயர் மாங்கல்யத்தை அழகேசனின் கையில் கொடுக்க.. மங்கள வாத்தியங்கள் இசைக்க.. அனைவரின் சாட்சியோடும் அக்னி சாட்சியாக அவளின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு அவளை தன்னில் சரி பாதியாக முழு மனதோடும், முகம் கொள்ளா புன்னகையோடும் ஏற்றுக்கொண்டான் அழகேசன்.​

கடமைக்கே என்று தலை குனிந்து அமர்ந்திருந்தாள் கவிதா.. பிறகு, இரு ஜோடிகளையும் உணவு உண்ண அழைத்து சென்றனர். பிறகு, மணமகன் வீட்டிற்கு இரு ஜோடிகளும் அழைத்து வரப்பட்டனர்.​

அங்கே விளக்கேற்றி பூஜை செய்வது, பால் பழம் கொடுப்பது என அடுத்தடுத்து அனைத்து சம்பிரதாயங்களும் அரங்கேற.. அனைத்தையும் கடமைக்கே என செய்தனர் தேன் நிலவும், கவிதாவும்.​

அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்ததும் சட்டென்று நாற்காலியில் இருந்து எழுந்த மெய்யழகன் விறுவிறுவென தன் அறைக்குள் நுழைந்து கொண்டான். தேன் நிலவிற்கு அவனின் செயல் ஒரு மாதிரியாகிவிட்டது.​

மெய்யழகனின் நடவடிக்கையை பார்த்த அவனின் தாய் கௌரி ஒரு பெரு மூச்சை வெளியேற்றியவாறு தேன் நிலவையும், கவிதாவையும் பார்த்தவர்.​

“ரெண்டு பேரும் அந்த அறையில் கொஞ்சம் நேரம் ஓய்வெடுங்கமா” என்று அருகில் இருந்த தங்கள் அறையை கை காட்டினார்.​

இருவரும் எதுவும் பேசாமல் அந்த அறைக்குள் சென்று மறையவும். அழகேசன் இருக்கையில் இருந்து எழுந்தவன் சாவகாசமாக விசில் அடித்தபடி மெய்யழகனின் அறையை கடந்து தன் அறைக்குள் நுழைய சென்ற நேரம்..​

சட்டென்று தன் அறை கதவை திறந்து தன் கையை மட்டும் வெளியே விட்ட மெய்யழகன் அழகேசனின் ஷர்ட் காலரை பிடித்து தன் அறையினுள் இழுத்தான்.​

அதில் நிலை தடுமாறிய அழகேசன் ஒருவாறு தன்னை சமாளித்து மெய்யழகனின் அறைக்குள் நுழைய.​

சடாரென்று அறைக்கதவை அரைந்து சாற்றிய மெய்யழகன், “இதெல்லாம் உன்னுடைய வேலை தானே?” என்றான் அழகேசனை உருத்து விழித்தபடி.​

அழகேசன் பளிச்சென்று புன்னகைத்தவாறு, “அட.. பரவாயில்லையே.. கரெக்டா கண்டுபிடிச்சிட்ட..” என்றான் தன் தம்பியை மெச்சுதலான பார்வை பார்த்தபடி.​

அதில் அவனின் ஷர்ட் காலரை கோபமாக பற்றியவன், “எதுக்குடா இப்படி பண்ண? உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? எதுக்காக இப்படி பண்ண?” என்றான் உறுமலாக.​

அழகேசன், “இருடா.. இருடா.. எதுக்கு இப்போ இவ்வளவு சூடாகுற.. முதல்ல கையை எடு.. புது சட்டை கசங்கிட போகுது” என்றவாறு அவனின் கையை எடுத்து விட்டவன்.​

“ஆமா நீ சொல்றது 100% கரெக்ட்.. இது எல்லாமே சாட்சாத் இந்த அழகேசனுடைய பிளான் தான்” என்றவனை தீ என முறைத்த மெய்யழகன்.​

“உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா.. எதுக்காக டா இப்படி பண்ண.. நீ பண்ண காரியத்தால் என்னை பாரு ஜோக்கர் மாதிரி நிக்கிறேன்” என்றவனை பார்த்து தன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்த அழகேசன்.​

“உனக்கு இந்த காஸ்டியூம் ரொம்ப அழகா இருக்கு” என்றான் சிரிப்பினோடு.​

மெய்யழகன், “என்ன திமிரா.. சாவடிச்சிடுவேன் டா உன்னை..” என்றான் கடுமையான குரலில்.​

அழகேசன் கூலாக தன் இரு கைகளையும் பின்னே ஊனியவாறு மெய்யழகனின் கட்டிலில் அமர்ந்தவன்.​

“இங்க பாருடா.. எனக்கு அந்த கவிதா புள்ளைய ரொம்ப புடிச்சிருக்கு. அந்த பொண்ண கரெக்ட் பண்றதுக்காக தான் நான் நம்ம ஹனிமூன் கிட்ட பார்க்கிற இடத்துல எல்லாம் பேச்சு கொடுப்பேன்”.​

மெய்யழகன், “ஹனிமூனா?” என்றான் ஒன்றும் புரியாமல்.​

அழகேசன், “ஓ! உனக்கு தெரியாது இல்ல.. உன் பொண்டாட்டி தேன் நிலவை தான் சொல்றேன். தேன் நிலவுக்கு இங்கிலீஷ்ல ஹனிமூன் தானே..” என்று நகைக்கவும்.​

அவனை கடுப்பாக பார்த்த மெய்யழகன், “லூசு மாதிரி உளறாத அழகு..” என்றான் தன் பற்களை கடித்துக்கொண்டு.​

அழகேசன், “பாருடா.. பொண்டாட்டியை ஒரு வார்த்தை சொன்னதும் சாருக்கு கோபம் பொத்துக்கிட்டு வருது” என்றவனை தன் பார்வையாலேயே பொசுக்கி கொண்டிருந்தான் மெய்யழகன்.​

அழகேசன், “சரி.. சரி.. ரொம்ப கோபப்படாதே.. எனக்கு தேன் நிலவோட பிரிண்ட் கவிதாவை தான் ரொம்ப பிடிக்கும். அந்த பொண்ணுக்காக தான் நான் தேன் நிலவு கிட்டயே பேச்சு கொடுப்பேன்”.​

“கடைசில சுத்தி இருக்கிறவங்க எல்லாம் என்ன பண்ணாங்க தெரியுமா.. நான் அவகிட்ட பேசுறதை பார்த்து எனக்கு தேன் நிலவை பிடிச்சு கட்டி வைக்க பேசிட்டாங்க..”.​

“இந்த கல்யாணத்திலிருந்து எப்படி தப்பிக்கிறதுனு எனக்கு தெரியல. இந்த கல்யாணத்தையும் நிறுத்தணும்.. அதே சமயம் கவிதாவையும் கட்டணும்”.​

“ஏன்னா, தனியா நான் போய் பொண்ணு கேட்டா கண்டிப்பா அவங்க அப்பாவே ஒத்துக்கிட்டாலும் இவ ஒத்துக்க மாட்டாள். ஏன்னா, அவளுக்கு என்னை சுத்தமா பிடிக்காது” என்றவனை புரியாமல் பார்த்தான் மெய்யழகன்.​

“நீ என்ன பண்ணி வச்சிருக்க அழகு? உன்னை பிடிக்காத பொண்ண கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்றது எல்லாம் தப்பு இல்லையா..”.​

அழகேசன், “அவளுக்கு ஏன் என்னை பிடிக்காதுனு எனக்கு தெரியும். நான் ஊதாரி தனமா ஊர் சுத்திட்டு இருக்கேன். அதனால் அவளுக்கு என்னை பிடிக்க மாட்டேங்குது”.​

“இதுக்கு அப்புறம் பாரு, புருஷனா லட்சணமா ஒழுங்கா வேலைக்கு போய் என் பொண்டாட்டியை எப்படி நல்லபடியா பார்த்துக்க போறேன்னு” என்றான் தன் சட்டையின் காலரை மேலே ஏற்றிவிட்டவாறு.​

மெய்யழகன், “என்ன கருமமோ பண்ணி தொலை.. உனக்கு இந்த தேன் நிலவை கல்யாணம் பண்ணிக்க விருப்பமில்லைனா முன்னாடியே சொல்ல வேண்டியது தானடா.. அட்லீஸ்ட், மண்டபத்தை விட்டு ஓடிப் போக முடிவு பண்ணும்போது என்கிட்ட சொல்லிட்டு போயிருந்தால் நானும் எங்கையாவது எஸ்கேப் ஆகி தொலைந்து இருப்பேன்ல.. இப்படி நீ மட்டும் போயிட்ட.. எல்லாரும் என்னை பிடிச்சு கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க” என்றான் ஆதங்கமான குரலில்.​

அழகேசன், “ரொம்ப பண்ணாதடா.. தேன் நிலவு ரொம்ப நல்ல பொண்ணு தான். எனக்கு கவிதாவை பிடிச்சதால் தேன் நிலவை கட்டிக்க விருப்பமில்லை. உனக்கென்ன.. நீ தான் எந்த பொண்ண பார்த்தாலும் உர்ரென்று மூஞ்சியை வச்சிக்கிட்டு சுத்துவியே.. தேன் நிலவை கட்டிக்க உனக்கு என்ன கசக்குதா..”.​

மெய்யழகன், “அடிச்சு மூஞ்சியை பேத்திடுவேன்.. எனக்கு இந்த மாதிரி கிராமத்து பொண்ண கட்டுறதுல எல்லாம் கொஞ்சம் கூட விருப்பமே இல்ல..”.​

“நான் நல்லா மாடர்னா சிட்டி பொண்ணா பார்த்து கட்டணும்னு தான் ஆசைப்பட்டேன். இப்படி இந்த பொண்ண பிடிச்சு என் தலையில் கட்டிட்டீங்களே” என்றவனின் குரலில் அவ்வளவு கோபம் கொப்பளித்தது.​

அழகேசன், “கல்யாணத்துல விருப்பம் இல்லைனா கட்டிக்க முடியாதுனு வீட்டுல சொல்ல வேண்டியது தானே.. உன்னை யாரு அந்த பொண்ணுக்கு தாலி கட்ட சொன்னா..”.​

மெய்யழகன், “சொன்னா எங்க கேக்குறாங்க.. குடும்ப கவுரவம் அது இதுனு என்னென்னமோ பேசி என்னை பிளாக்மெயில் பண்ணி தாலி கட்ட வச்சிட்டாங்க”.​

அழகேசன், “அது உன்னோட பிரச்சனை.. அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது. முடியாதுனா நீ தான் முடியாதுனு ஸ்ட்ராங்கா சொல்லி இருக்கணும். அந்த பொண்ணு கழுத்துல தாலியை கட்டிட்டு இப்போ என்கிட்ட வந்து கோபப்பட்டா நான் என்ன பண்ண முடியும்” என்றான் சாதாரண குரலில்.​

அவனின் வார்த்தையில் அவனை உருத்து விழித்தான் மெய்யழகன்.​

அழகேசன், ‘ஐஐயோ.. விட்டா இவன் அடிச்சிடுவான் போலருக்கே..’ என்று மனதிற்குள் எண்ணியவாறு, “சரி.. சரி.. நேரம் ஆகுது நான் போய் என் கவிதாவை பார்த்துட்டு வரேன்” என்றபடி விசில் அடித்துக் கொண்டே அறையை விட்டு வெளியேறினான்.​

அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த மெய்யழகனிற்கு கோபம் சற்றும் குறைந்த பாடில்லை. நேரம் ஆக ஆக அவனின் கோபம் அதிகரித்துக் கொண்டே தான் போனது.​

இரவு வேளை ஆனதும் அனைவரும் உண்டு முடித்ததும் கவிதாவையும், தேன் நிலவையும் மிதமான அலங்காரத்துடன் தயார் செய்த கௌரியின் உறவுக்கார பெண்மணிகள் அவர்களை அவரவர் கணவர்களின் அறைக்குள் அனுப்பி விட்டு தங்கள் வீட்டிற்கு புறப்பட்டனர்.​

அழகேசன் தன் எதிரே நின்றிருப்பவளை மேலிருந்து கீழ் உருத்து விழித்தபடி கட்டிலில் அமர்ந்து நோட்டம் விட்டு கொண்டு இருந்தான்.​

கவிதாவும் தன் தலையை சற்றும் உயர்த்தாமல் தரையில் எதையோ தொலைத்தவள் போல் தரையையே வெறித்த பார்வை பார்த்தபடி நின்று இருந்தாள்.​

அழகேசன் ஒரு பெரு மூச்சை வெளியேற்றியவன், “இன்னும் எவ்வளவு நேரம் தான் இப்படியே நிக்க போற?” என்றான் கவிதாவிடம்.​

அவளிடம் எந்த ஒரு பதிலும் இல்லை.​

அழகேசன், “சரி, இப்படி வந்து உட்காரு..”.​

கவிதா அசைய கூட இல்லை.​

அழகேசன், “என்னடி நினைச்சுக்கிட்டு இருக்க.. நான் என்ன சொன்னாலும் கேட்க கூடாது என்ற மைண்ட் செட்டோட வந்திருக்கியா?” என்றவன் வேகமாக எழுந்து நிற்க.​

அவ்வளவு தான்.. கவிதா சத்தமாக ‘ஓ’வென்று அழ தொடங்கி விட்டாள்.​

அழகேசன் ஒரு நொடி இங்கே என்ன நடக்கிறது என்று புரியாமல் திகைத்தவன். பின்பு சுதாரித்து இவள் அழும் குரல் வெளியே யார் காதிலாவது விழுந்தால் தன்னை பற்றி என்ன நினைப்பார்கள் என்று எண்ணியவன்.​

மெதுவான குரலில், “ஷ்ஷ்... இப்போ எதுக்கு டி இப்படி சத்தமா அழற..” என்றான் சிடுசிடுப்பாக.​

அவனின் வார்த்தை கவிதாவின் அழுகையை மட்டுப்படுத்துவதற்கு பதிலாக அதிகம் ஆக்கிவிட்டது.​

அழகேசன், “இப்போ அழுகையை நிறுத்த போறியா இல்லையா? இப்போ நான் என்ன டி பண்ணேன் உன்னை.. எதுக்காக இப்படி அழுது ஊரை கூட்டுற.. வெளியில் இருக்கிறவங்களுக்கு எல்லாம் நீ அழற சத்தம் கேட்டால் என்னை தான் டி தப்பா நினைப்பாங்க”.​

எதற்குமே கவிதா நிறுத்தாமல் அழுது கொண்டே இருந்தாள்.​

இவளின் அழுகையை நிறுத்துவதற்கான வழி தெரியாத அழகேசன், “இப்போ நீ மட்டும் அழுகையை நிறுத்தல.. அப்புறம் கிஸ் அடிச்சு உன் அழுகையை நிறுத்திடுவேன்” என்றது தான் தாமதம் வெடுக்கென்று அவனை நிமிர்ந்து பார்த்த கவிதா அவனை அடிபட்ட பார்வை பார்த்தாள்.​

எப்படியோ அவன் கூறியது வேலை செய்திருந்தது. கவிதாவின் அழுகை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விம்மலுடன் முடிந்தது.​

அழகேசன், “இப்போ எதுக்கு இப்படி அழுதுகிட்டு இருக்க.. நான் உன்னை ஒன்னுமே பண்ணல அதுக்கே இப்படி அழற..”.​

கவிதா, “எனக்கு இதெல்லாம் கொஞ்சம் கூட பிடிக்கவே இல்ல..” என்க.​

அழகேசன் திடமாக, “எனக்கு தெரியும்..”.​

அவனின் வார்த்தையில் அவனையே உருத்து விழித்தாள் கவிதா.​

அழகேசன், “என்ன அப்படி பாக்குற.. உனக்கு என்னை சுத்தமா பிடிக்காதுனு எனக்கு தெரியும். ஆனா, எனக்கு உன்னை ரொம்ப ரொம்ப பிடிக்கும்”.​

“எதுக்காக ஹனிமூன் கிட்ட உங்க ரெண்டு பேரையும் பார்க்கிற இடத்துல எல்லாம் நான் பேசிக்கொண்டு இருந்தேன்னு நினைக்கிற..”​

“எல்லாம் உனக்காக தான்.. அவ கிட்ட பேசுற சாக்கில் உன்னை கொஞ்சம் சைட் அடிக்கலாமேனு தான் அவ கிட்ட பேச்சு கொடுத்தேன்”.​

 

RJ novels

Moderator

மெய்யழகனின் தேன்நிலவு - 15​

அழகேசனின் வார்த்தையில் வாயடைத்து போய் நின்று இருந்தாள் கவிதா..​

அழகேசன், “கடைசில எல்லாருமா சேர்ந்து தேன் நிலவுக்கும், எனக்கும் கல்யாணத்தை பேசி முடிச்சிட்டாங்க.. அதை எப்படி நிறுத்துறதுனு தெரியல..”.​

“அதனால் தான் அன்னைக்கு நிச்சய தாம்புலம் மாத்தும்பொழுது கூட ஹனிமூன் கையில் மூத்திரத்தை போட மாட்டேன்னு சொல்லிட்டேன்”.​

“உன்னை தவிர வேற எந்த ஒரு பெண்ணையும் தொட்டு பேசக்கூட எனக்கு விருப்பமில்லை. எனக்கு நிச்சயம் நடந்தாலும் சரி.. கல்யாணம் நடந்தாலும் சரி.. அது உன் கூட மட்டும் தான்” என்றான் அழுத்தமாக.​

கவிதா சுற்றம் மறந்து அவனையே வெறித்து பார்த்துக் கொண்டு நின்று இருந்தாள்.​

அழகேசன், “என்ன அப்படி பாக்குற?”.​

கவிதா ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, “இதெல்லாம் தப்பில்லையா.. பாவம் தேனு, எதுக்காக உங்களுக்கு விருப்பம் இல்லைனா அவ கூட கல்யாணம் வரைக்கும் கொண்டு வந்தீங்க..”.​

“உங்க தம்பி மட்டும் இல்லைனா அவளை வேற யாரு கல்யாணம் செய்து இருப்பா.. அவளுடைய நிலைமை என்ன ஆகியிருக்கும்?” என்றாள் தன் ஆருயிர் தோழிக்கு பரிந்து பேசியபடி.​

அழகேசன், “எதுவும் ஆகியிருக்காது.. என் தம்பி அவளை கட்டுவான் என்று எனக்கு தெரியும். அந்த நம்பிக்கையில் தான் நான் மண்டபத்தை விட்டு வெளியில் போனேன்”.​

கவிதா, “எப்படி தெரியும்.. ஒருவேளை, அவர் கட்ட மாட்டேன்னு சொல்லியிருந்தார்னா?”.​

அழகேசன், “அவன் கட்ட மாட்டேன்னு சொன்னா வேற யாருக்கு கட்டி வைக்க போறாங்க.. எங்க குடும்பத்தால் நடந்த அசிங்கத்தை சரி பண்ண.. எங்க அப்பா கண்டிப்பா என் தம்பிக்கு கட்டி வைக்க தான் முயற்சி பண்ணுவார் என்று எனக்கு தெரியும்”.​

“எல்லார் முன்னாடியும் அவர் தலை குனிஞ்சு நிக்க கூடாது என்பதற்காக என்னை விட்டால் அவர் அடுத்து என் தம்பி கிட்ட தான் போவார் என்று நினைத்தேன்”.​

அதே மாதிரி தான் நடந்திருக்கு.. என் தம்பி ஒன்னும் கெட்டவன் எல்லாம் கிடையாது. என்னை விட ரொம்ப நல்லவன்..”.​

“நல்லா படிச்சிட்டு நல்ல வேலையில் இருக்கான். அவன் கண்டிப்பா உன் பிரண்டை பத்திரமா பார்த்துப்பான்‌. நீ ஒன்னும் கவலைப்படாதே..”.​

கவிதாவிற்கு இவனின் வார்த்தைகளில் எப்படி இவன் இப்படி இருக்கிறான் என்று பெரும் ஆயாசமாக இருந்தது. எதைப் பற்றியும் கவலை இன்றி தான் நினைத்ததை நிறைவேற்றுவதற்காக எந்த எல்லைக்கும் செல்வான் போலவே என்று அதிர்ந்து போய் பார்த்தபடி நின்று இருந்தாள்.​

அழகேசன், “என்ன என்னையே இப்படி வச்ச கண்ணு வாங்காம பாக்குற.. நானே சும்மா இருந்தாலும் நீ என்னை சும்மா இருக்க விட‌ மாட்ட போலருக்கே..”.​

“நீ இப்படியே ஏதாவது பார்த்துகிட்டு இருந்தினா அப்புறம் எசக்கு பிசக்கா ஏதாவது ஆயிடும். அப்புறம் நடக்கும் எதுக்கும் நான் பொறுப்பில்ல சொல்லிட்டேன்” என்றான் மிரட்டும் தோணியில்.​

அவ்வளவு தான்.. கவிதாவிற்கு கை கால்கள் எல்லாம் வெடவெடக்க தொடங்கி விட்டது. மீண்டும் விட்ட அழுகை ஆரம்பமாக..​

அழகேசன் தன் வாயின் மேல் ஒற்றை விரலை வைத்து, “ஷ்ஷ்.. வாயை மூடு.. இனி உன் வாயில் இருந்து அழற சத்தமே வெளியில் வரக்கூடாது. அப்புறம் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. போ.. போய் தூங்கு..” என்றான் அதட்டலாக.​

கவிதா விட்டால் போதும் என்பது போல் ஓட..​

அழகேசன், “ஏய்! ஒரு நிமிஷம் நில்லு.. எங்க போற.. பாயை விரிச்சு தரையில் படுக்கிற சீன் எல்லாம் இங்க வேண்டாம். மரியாதையா கட்டிலில் படு. இல்ல, தூக்கிகிட்டு வந்து கட்டிலில் படுக்க வைப்பேன்” என்றவனின் அதிரடியில் அவனுக்கு எந்த ஒரு பதிலும் அளிக்காமல் அமைதியாக சென்று கட்டிலின் ஒரு புறம் படுத்துக்கொண்டாள்.​

இங்கே இவர்களின் அறையில் ஆரம்பமே அதிரடியாக இருக்க.. மெய்யழகனின் அறையிலோ அமைதியில் கழிந்தது.​

இருவருமே ஒரு மணி நேரமாகியும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஒரே அறையில் இருந்தாலும் இரு வேறு திசைகளை வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.​

தேன்நிலவு, “என்ன இது இப்படியே உட்கார்ந்து இருக்காரு.. பேசாமல் படுத்துடுவோமா..” என்று எண்ணியவள் நிமிர்ந்து சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும் கடிகாரத்தை பார்க்க.​

அதுவோ 12 ஐ தாண்டி தன் முல்லை நகர்த்தி கொண்டு இருந்தது. அடுத்த பத்து நிமிடங்களுமே அமைதியிலேயே கழிய.. அதற்கு மேல் பொறுக்க முடியாது என்று எழுந்தே நின்று விட்டாள் தேன்நிலவு.​

அதுவரையிலும் தனக்குள்ளேயே பல்வேறுபட்ட எண்ணங்களால் முட்டி மோதிக் கொண்டு குழம்பி போய் ஒரு நிலையில் இல்லாமல் ஏதேதோ சிந்தித்தபடி அமர்ந்திருந்த மெய்யழகனின் சிந்தையை கலைத்தது தேன் நிலவின் செயல்.​

சட்டென்று எழுந்தவளை திரும்பி ஒரு பார்வை பார்த்தவன். எதுவும் பேசாமல் இருக்க.. அவளோ தன் விழிகளால் கடிகாரத்தை நோக்கினாள். அதில் அவனின் பார்வையும் கடிகாரத்தில் படிந்து மீள..​

தன் எதிரே அழகு பதுமை போல் நின்றிருக்கும் தன் மனைவியையே குறுகுறுவென பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.​

தேன்நிலவிற்கு தான் ‘ஐயோ’வென்று ஆகிவிட்டது.​

மனதிற்குள், ‘இதுக்கு பேசாமல் உட்கார்ந்தே இருந்திருக்கலாம். அவர் பாட்டுக்கு எங்கேயாவது வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்திருப்பார்’.​

‘இப்படி வாண்டடா எழுந்திருச்சு நின்னு அவனுடைய மைண்டை டைவர்ட் பண்ணிட்ட.. இப்போ பாரு எதுக்கு இப்படி குறுகுறுனு பார்க்கிறார்னே தெரியல..’ என்று புலம்பிக்கொண்டு தன் கைகளை பிசைந்தபடி நின்று இருந்தாள்.​

மெய்யழகன் தேன் நிலவையே தலை முதல் கால் வரை தன் அழுத்தமான பார்வையால் ஸ்கேன் செய்த படி அமர்ந்திருந்தான்.​

தேன் நிலவிற்கு தான் கால்கள் நடனமாட தொடங்கிவிட்டது. எவ்வளவு நேரம் தான் ஒரே நிலையில் நிற்க முடியும். அவனின் பார்வை சற்றும் அவளை விட்டு நகர்வதாக இல்லை.​

தேன்நிலவு, ‘இப்படியே விட்டால் சரி வராது விடிய விடிய இப்படியே நம்மளை இப்படி குறுகுறுனு பார்த்துகிட்டே உட்கார்ந்து இருப்பார் போலருக்கே..’.​

‘எவ்வளவு நேரம் தான் இப்படியே நிக்கிறது.. எதையாவது வாயை திறந்து சொன்னால் கூட பரவாயில்ல.. வாயையும் திறக்க மாட்டேங்கிறார். இவர் என்ன நினைக்கிறார் என்று ஒன்னும் புரியலையே..’ என்று நொந்து போனவள்.​

‘சரி நாமே தூக்கம் வருதுனு சொல்லிட்டு போய் படுத்துப்போம்’ என்று ஒரு வழியாக ஒரு முடிவுக்கு வந்தவள்.​

தன் தொண்டையை செறுமி கொண்டு, “எனக்கு தூக்கம் வருது..” என்று எங்கோ பார்த்து கூறிவிட்டு விறுவிறுவென அங்கிருந்து இரண்டு எட்டுகள் எடுத்து வைத்தவள் வேகமாக நடக்கத் தொடங்கினாள்.​

மெய்யழகன், “ஒரு நிமிஷம்..”.​

அவனின் வார்த்தையில் தேன் நிலவின் கால்கள் அப்படியே பசை போட்டு ஒட்டியது போல் அதே இடத்தில் நிலைத்து நின்று விட்டது.​

அங்கிருந்த வாக்கிலே தன் தலையை மட்டும் இவன் புறம் திரும்பியவள் என்ன என்பது போல் அவனை நோக்கி தன் பார்வையை வீச..​

மெய்யழகன், “இங்க வந்து நில்லு..” என்றான் தன் எதிரே இருக்கும் இடத்தை தன் கண்களால் காண்பித்தபடி.​

தேன்நிலவு, ‘ஐயோ! மறுபடியும் முதலில் இருந்தா..’ என்று பதறியவள்.​

“எ.. எதுக்கு?” என்றாள் தடுமாற்றத்தோடு.​

மெய்யழகன், “சும்மா தான்..”.​

அவனின் வார்த்தைகளை வைத்து அவன் மனதை தேன் நிலவால் சத்தியமாக படிக்கவே முடியவில்லை. அப்படி என்ன தான் அவனின் மூளைக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை கிரகிக்க முடியாமல் அமைதியாக அவன் காட்டிய இடத்தில் சென்று நின்று கொண்டாள்.​

உண்மையை சொல்லப் போனால் தேன்நிலவு நொந்து போய்விட்டாள் என்று தான் கூற வேண்டும். பிறகு, எவ்வளவு நேரம் தான் ஒருத்தி ஒரே நிலையில் இருக்க முடியும்.​

அவளுக்குள் ஒரு தெளிவு இல்லாமல் போனது. மீண்டும் அவளின் கண்கள் கடிகாரத்தில் படிய.. மேலும், அரை மணி நேரம் அசால்டாக கடந்து விட்டதை அந்த கடிகாரம் சுட்டிக்காட்டியது.​

அதில் தேன் நிலவிற்கு தான் ‘கடவுளே! விடிய விடிய நான் இப்படியே தான் இன்னைக்கு நிக்கணுமா.. இவர் வாயைத் திறந்து எதுவும் பேசவும் மாட்டேங்கிறார்.. இப்படியே பார்த்துகிட்டு இருந்தா என்ன அர்த்தம்..’.​

‘எவ்வளவு நேரம் தான் நான் இப்படியே நிக்கிறது. ஒருவேளை, என்னை பழி வாங்க தான் இப்படி எல்லாம் பண்ணுறாரோ.. இப்படி ஏதாவது செஞ்சு என்னை இனிமேல் தினமும் கொடுமைப்படுத்த போறாரோ..’ என்று அவளின் ஏழாம் அறிவு ஏதேதோ சிந்திக்கத் தொடங்கி விட்டது.​

பிறகு, அவளும் வேறு என்ன தான் செய்வாள்.. அவன் கூறிய இடத்திற்கு வந்து நின்று அரை மணி நேரம் கடந்து விட்டது. இன்னமும் அவன் பார்வை மாறிய பாடில்லை. வாயிலிருந்து வார்த்தை முத்துக்கள் சிந்திய பாடும் இல்லை.​

ஒரு கட்டத்திற்கு மேல் தன் பொறுமையை இழந்த தேன்நிலவு, ‘வாயை திறந்து பேசினால் தான் என்னவாம்.. வாயில் இருக்க முத்து என்ன கொட்டிடவா போகுது. சரியான கல்லூணி மங்கனாய் இருப்பார் போலருக்கே’.​

‘அந்த பியூட்டி வாயை திறந்தால் மூடாது. அவரோட தம்பி வாயவே திறக்க மாட்டேங்குறார். எப்படி தான் எனக்குனு இப்படி எல்லாம் ஆளுங்க தேடி பிடித்து வராங்களோ தெரியல’.​

சரியாக அரை மணி நேரம் கழித்து மெய்யழகன், “அந்த பக்கம் திரும்பு” என்கவும்.​

தேன் நிலவு அவனைப் பார்த்து ‘ஆங்..’ என்று திருதிருவென விழித்தாள்.​

மெய்யழகன், “உன் கிட்ட தான் சொல்லிக்கிட்டு இருக்கேன். நான் சொல்றது உனக்கு புரியலையா.. அந்த சைடு திரும்புனு சொன்னேன்” என்று வலது பக்கமாக கை காட்ட.​

அவளோ தன் தலையை மேலே தூக்கியவாறு, ‘கடவுளே!’ என்று நொந்தபடி அவன் சொன்ன திசைக்கு திரும்பினாள்.​

மீண்டும் சில நிமிடங்கள் கழித்து, “இன்னும் கொஞ்சம் டர்ன் பண்ணு..”.​

தேன்நிலவு சட்டென்று அவனை திரும்பி பார்த்து, “எதுக்கு?” என்றவளின் வார்த்தைகள் சடுதியில் வந்து விழுந்தன.​

மெய்யழகன், “சொல்றதை கொஞ்சம் கேக்குறியா.. உன்னை திரும்ப சொன்னேன்”.​

கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக அவளை பாடாய்படுத்தி விட்டான் என்று தான் கூற வேண்டும். அனைத்து புறங்களிலும் வளைத்து, வளைத்து அவளை ஸ்கேன் செய்து கொண்டே இருந்தான்.​

அவனின் நடவடிக்கையில் தேன்நிலவிற்கு தான் பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக காற்றில் பறந்து கொண்டு இருந்தது.​

தன் முன்னே புசுபுசுவென்று கோப மூச்சுக்களை எடுத்து விட்டவாறு முறைத்துக் கொண்டு நின்றிருக்கும் மனைவியை பார்த்தவன்.​

பெருமூச்சு ஒன்றை வெளியேற்றியவாறு, “உன் ஹேரை எடுத்து முன்னாடி போடு”.​

தேன்நிலவு, “எதுக்கு?” என்றாள் தன் பற்களை கடித்துக் கொண்டு.​

மெய்யழகன், “எப்படி இருக்குனு பார்க்க தான்” என்றவனின் குரலும் கடுமையாக வெளிவந்தது.​

சலிப்போடு அவன் கூறியதை செய்தாள் தேன் நிலவு.​

மெய்யழகன் அவளின் இடைக்கடந்து நீண்ட கருப்பு நிற நைல் நதி போல் காட்சியளிக்கும் கூந்தலை ஆயாசமாக​

பார்த்தவன்.​

“எதுக்கு இவ்வளவு லாங் ஹேர் வளர்த்து வச்சிருக்க?” என்றவனின் வார்த்தையில் புரியாமல் அவனை எதிர் நோக்கினாள் தேன் நிலவு.​

 

RJ novels

Moderator

மெய்யழகனின் தேன்நிலவு - 16​

மெய்யழகன், “இவ்வளவு பெரிய ஹேரை மெயின்டைன் பண்ணவே ரொம்ப டைம் வேஸ்ட் ஆகும் போலருக்கே” என்றான் சலிப்பாக.​

பொதுவாகவே பெண்களுக்கு அவர்களின் நீண்ட நெடிய கூந்தல் தான் அழகு என்று அனைவரும் எண்ணுவார்கள். ஆனால், இவனோ மாற்றாக கூறவும் அவனை விசித்திரமாக நோக்கினாள் தேன்நிலவு.​

தேன் நிலவிற்கு சிறு வயது முதலே அவளின் தலைமுடி நன்கு அடர்த்தியாகவும், நீளமாகவும் இருக்கும். அதற்கு நிச்சயமாக சகுந்தலாவிற்கு தான் அவள் நன்றி தெரிவிக்க வேண்டும்.​

ஏனென்றால், அனைத்துமே சகுந்தலாவின் பராமரிப்பு தான். கஸ்தூரிக்கு கூட இவ்வளவு நீளமாக தலை முடி வளரவில்லை.​

ஆனால், தேன் நிலவிற்கு சகுந்தலா எதிர்பார்த்ததையும் விட அதிகமாக நன்கு அடர்த்தியோடு அவளின் மெல்லிடையையும் தாண்டி தொங்கிக் கொண்டிருந்தது அவளின் கூந்தல்..​

தேன் நிலவை பார்ப்போர் அனைவருமே, ‘எப்படி இவ்வளவு ஹேர் வளர்த்தனு டிப்ஸ் சொல்லேன்’ என்று நச்சரித்துக் கொண்டே இருப்பார்கள்.​

அவளுக்குமே அவளின் நீண்ட நெடிய கூந்தலை அவ்வளவு பிடிக்கும். தன் தாயின் சொல் படி அழகாக பராமரித்து இத்தனை ஆண்டுகள் பாதுகாத்து வளர்த்த கூந்தலை இவன் முகம் சுழித்துக்கொண்டு இப்படிப் பேசுவது தேன்நிலவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை.​

மேலும், மேலும் தன் வார்த்தைகளாலும், செயல்களாலும் தேன் நிலவின் கோபத்தை அதிகப்படுத்திக் கொண்டே இருந்தான் மெய்யழகன் என்று தான் கூற வேண்டும்.​

மெய்யழகன், “எனக்கு இவ்வளவு லாங் ஹேர் எல்லாம் பிடிக்காது. ஊருக்கு போனதும் ஃபர்ஸ்ட் ஹேர் கட் பண்ணிடலாம்” என்றது தான் தாமதம்..​

தேன் நிலவிற்கு நெஞ்சு வலியே வந்து விடுவது போல் ஆகி விட்டது. இதை பராமரிக்க அவளின் தாயுடன் சேர்ந்து அவளும் எவ்வளவு மெனக்கெட்டு இருக்கிறாள்.​

இப்படி ஒரு நொடியில் வெட்டி விடலாம் என்று கூறி விட்டானே.. அவன் கூறியதை கேட்டதுமே எதுவோ நெஞ்சை அடைப்பது போல் இருக்க.​

“என்ன சொல்றீங்க?” என்றாள் அதிர்ச்சியை தன் குரலில் தாங்கியவாறு.​

மெய்யழகன், “இவ்வளவு லாங் ஹேரை நீ எப்படி மெயின்டெய்ன் பண்ணுவ.. ரொம்ப கஷ்டம்.. இவ்வளவு பெருசா வச்சுக்கிட்டு நீ என்ன செய்யப் போற..” என்றவன்.​

தன் நெஞ்சுவரை கை வைத்து காண்பித்தவாறு, “இவ்வளவு தூரம் இருந்தாலே போதும்.. மிச்சத்தை கட் பண்ணிடலாம்”.​

அவனுக்கோ தேன்நிலவை வேலைக்கு அனுப்பி சுயமாக தனித்து செயல்பட வைக்க வேண்டும் என்ற எண்ணம். தினமும் இவ்வளவு பெரிய கூந்தலை சீவி சிங்காரித்து அவள் கிளம்பி அலுவலகம் செல்ல எவ்வளவு நேரம் எடுக்கும் என்பதை மனதில் வைத்துக் கொண்டே அவன் அப்படி கூறினான்.​

ஆனால் பாவம்.. அவனுக்கு தான் தெரியாதே.. நம் தேன் நிலவு பத்தாம் வகுப்பை கூட தாண்டாதவள் என்று..​

தேன்நிலவு, “அதெல்லாம் முடியாது.. நான் என் தலை முடியில் கையை வச்சா அவ்வளவு தான்.. என் அம்மா என்னை கொன்னே போட்டுடுவாங்க” என்றாள் படபடவென்று.​

மெய்யழகன், “இதுக்கு ஏன் இவ்வளவு ரியாக்ட் ஆகுற.. இது ஜஸ்ட் ஹேர் தானே‌.. இதை கட் பண்றதால் அப்படி பெருசா என்ன பிரச்சனை வந்திட போகுது. இதனால் நமக்கு நிறைய டைம் சேவ் ஆகும். இப்படி அன்வான்டட் திங்க்ஸ்க்கு எல்லாம் நாம டைம் ஸ்பென்ட் பண்ண கூடாது”.​

தேன் நிலவு, “அட்வான்டட் திங்ஸா..” என்றாள் முணுமுணுப்பாக.​

மெய்யழகன், “உன் பெயர் என்ன?”.​

“தேன்நிலவு” என்றாள் மெதுவான குரலில்.​

மெய்யழகன், “ஹனிமூன்..” என்று எதுவோ கூற வாய் எடுக்க.​

தேன்நிலவு அவனை கோபமாக முறைத்து பார்த்தவள், “என்ன.. இப்போ நீங்களும் ஹனிமூன்னு சொல்லி என்னை கிண்டல் பண்ண போறீங்களா..” என்று கோபமாக பொரிந்தவள்.​

“ச்ச.. அப்படியே அவங்க அண்ணன் மாதிரியே இருக்கார்” என்றாள் முணுமுணுப்பாக அவன் காதில் விழும் படி.​

அதில், மெய்யழகன் சிரித்தானா என்று கேட்கும் அளவிற்கு மெலிதாக அவன் இதழில் புன்னகை படர்ந்தது.​

மெய்யழகன், “முதல்ல சொல்றதை பொறுமையா கேக்க மாட்டியா.. நீயா எதையாவது டிசைட் பண்ணிக்கிட்டு என்கிட்ட பேசாத.. எனக்கு அதெல்லாம் சுத்தமா பிடிக்காது.. பஸ்ட் நான் என்ன சொல்றேன்னு கேளு.. அப்புறம் பதில் பேசு” என்றான் கடுமையாக கூறுவது போல்.​

தேன்நிலவு, ‘பெரிய கோவக்காரர் தான்’ என்று மனதிற்குள் எண்ணியவாறு அமைதியாக நின்று இருந்தாள்.​

மெய்யழகன், “ஹனிமூன் எங்கேயும் நான் கூப்பிட்டு போக மாட்டேன் என்று சொல்ல வந்தேன். அதுக்குள்ள அவசரப்படாதே..”.​

தேன்நிலவிற்கு அவனின் வார்த்தையில் வாயடைத்து போய்விட்டது. இதற்கு தான் என்ன பதில் கூறுவது.. இருவருக்கும் இடையில் எந்த ஒரு பரீட்சயமும் கிடையாது.​

எடுத்த எடுப்பிலேயே ஹனிமூன் செல்வதை பற்றி பேசினால் அவளும் என்ன தான் செய்வாள். அவனைப் பார்த்து திருதிருவென விழிக்க..​

மெய்யழகன், “என்ன.. நீ எங்கேயாவது ஹனிமூன் போகணும்னு பிளான் பண்ணி வச்சிருக்கியா?” என்றவனின் வார்த்தையில் அவளுக்கோ ‘ஐயோ’ என்று ஆகிவிட்டது.​

தேன்நிலவு, ‘என்ன இவர் இப்படி எல்லாம் பேசுறார்.. ஹனிமூன் அது இதுனு என்னென்னமோ பேசுறார். இதெல்லாமா கேப்பாங்க’ என்று எண்ணியவளுக்கு மெய்யழகனின் வார்த்தை அவளுக்கு சற்று அதிகப்படியாக தான் தோன்றியது.​

மெய்யழகன் அவளின் பதிலையே எதிர்ப்பாராதவன் போல், “எனக்கு இந்த மேரேஜே அன்எஸ்பெக்டட் தான். சோ, ஹனிமூன் போற பிளான் எல்லாம் எனக்கு சுத்தமா இல்ல..”.​

“உனக்கு ஏதாவது பிளான் இருந்தா இப்போதைக்கு என்னால் அதை எல்லாம் செய்ய முடியாது. எதுவாக இருந்தாலும் ஃபியூச்சர்ல பாத்துக்கலாம்” என்று அவன் பாட்டிற்கு பேசிக் கொண்டே செல்ல..​

தேன்நிலவு அதற்கு மேல் கட்டுப்படுத்த முடியாமல் தன் தலைக்கு மேல் தன் கரம் கூப்பி கும்பிடு போட்டவள், “எனக்கு அப்படி எந்த ஒரு பிளானும் இல்ல சாமி.. ஆளை விடுறீங்களா..” என்றாள் இந்த பேச்சிலிருந்து தப்பிக்கும் பொருட்டு.​

அவளின் துறுதுறு பேச்சும், செய்கையும் மெய்யழகனுக்கு சிரிப்பை ஏற்படுத்த.. தன் பற்களை கடித்து கடினப்பட்டு அதை தனக்குள் மறைத்தான்.​

மெய்யழகன் தன் முழு உயரத்திற்கும் எழுந்து நின்றவன், “எதுவாயிருந்தாலும் இப்போவே பேசிடுறது பெட்டர் தானே.. அப்புறம் என் மேல நீ எந்த குத்தமும் சொல்லக்கூடாது இல்லை”.​

தேன்நிலவு, “அதெல்லாம் நான் எதுவும் சொல்ல மாட்டேன். எனக்கும் அப்படி எல்லாம் எந்த ஒரு பிளானும் இல்லை” என்றாள் தன் முகத்தை திருப்பிக் கொண்டு.​

மெய்யழகன், “குட்! பட் இருந்தாலும், என் சைடை நான் கிளாரிபை பண்ணிடறேன். எனக்கு இந்த மேரேஜ் எக்ஸ்பெக்டேஷன் எல்லாம் கொஞ்சம் அதிகம். நான் என்னென்னமோ பிளான் பண்ணி வச்சிருந்தேன்”.​

“பட், என்னவெல்லாமோ நடந்திடுச்சு. பட் பைன், பாஸ்ட் இஸ் பாஸ்ட்.. எனக்கு உன்னை பத்தி எதுவும் தெரியாது. உனக்கும் என்னை பத்தி எதுவும் தெரியாது”.​

“சோ, நாம ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் நல்லா அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்கணும்னு நான் நினைக்கிறேன்‌. அதுக்கு அப்புறமா மற்ற விஷயத்தை எல்லாம் பாத்துக்கலாம்” என்றதும் தான் தேன்நிலவிற்கு மூச்சே வெளிவந்தது.​

அவள் எதுவும் பதில் கூறாமல் அமைதியாக நிற்பதை பார்த்த மெய்யழகன், “என்ன சைலன்ட் ஆயிட்ட.. இன்னைக்கே ஃபர்ஸ்ட் நைட் கொண்டாடணும் என்ற மைண்ட் செட்டோட வந்தியோ?” என்றவனின் கேள்வியில் திகைத்து விழித்த தேன்நிலவு.​

அவனின் அதிரடியான வார்த்தைகளில் ஆடிப் போய்விட்டாள் என்று தான் கூற வேண்டும். இவ்வளவு வெளிப்படையாக அனைத்தை பற்றியும் மெய்யழகன் பேசுவான் என்று தேன்நிலவு சற்றும் எதிர்பார்க்கவில்லை.​

ஆரம்பமே அமைதியில் கழிய இருவரும் பேசவே சற்று காலங்கள் ஆகும் என்று எண்ணியவளுக்கு அவன் இப்படி எல்லாம் பேசவும் எப்படி பதில் உரைப்பது என்று புரியாமல் விழித்தாள்.​

மெய்யழகன், “சாரி.. அப்படி ஏதாவது எக்ஸ்பெக்ட் பண்ணி இருந்தேனா அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது. என்னை பொறுத்த வரைக்கும் நமக்குள்ள நல்ல அண்டர்ஸ்டாண்டிங் வரணும்”.​

“அப்போ தான் நம்ம நல்ல கப்பில்சா வாழ முடியும். அதுக்கெல்லாம் இன்னும் டைம் ஆகும். அதுவரைக்கும் வெயிட் பண்ணுவ தானே..” என்றவனின் கேள்வியில் தன் முகத்தை எங்கே கொண்டு போய் மறைப்பது என்று தேன்நிலவிற்கு தெரியவில்லை.​

இப்படி எல்லாம் பேசுகிறானே என்று தன் கைகளை இறுக்கமாக மூடியவள். அங்கே நிற்க முடியாமல் நின்று இருந்தாள். மேலும், தான் அமைதியாக இருந்தால் அவன் என்ன பேசுவானோ என்ற அச்சம் எழ..​

தன் தலையை மட்டும் ‘ஆமாம்’ என்பது போல் மேலும் கீழுமாக ஆட்டி வைத்தாள்.​

மெய்யழகன், “குட்” என்றவனுக்கும் தேன் நிலவின் நிலை நன்றாகவே புரிந்தது.​

‘ஹனிமூன்’ என்ற ஒற்றை வார்த்தைக்கே அவ்வளவு தடுமாறினாள். தான் இவ்வளவு பேசினால் அவளுக்கு அது எவ்வளவு அவஸ்தையை கொடுக்கும் என்பதை எண்ணியவன் தெரிந்தே தான் அவளிடம் இப்படி எல்லாம் பேசினான்.​

ஏனோ அவளை சீண்டுவது இவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதற்காக முழு மனதாக தேன் நிலவை தன் மனைவியாக ஏற்றுக் கொள்ள மெய்யழகன் தயாராகி விட்டானா என்று கேட்டால் அதெல்லாம் தெரியாது.​

அவளின் துடுக்கு தனமான பேச்சும், செயல்களும் அவனை சற்று ஈர்த்துவிட்டது என்று தான் கூற வேண்டும். இப்பொழுது மெய்யழகனின் பார்வை அந்த கடிகாரத்தில் படிய..​

“சரி, டைம் ரொம்ப ஆகிடுச்சு தூங்கலாமா..” என்றபடி சென்று கட்டிலின் ஒரு முனையில் படுத்துக்கொள்ள.​

செல்பவனின் முதுகை வெறித்துப் பார்த்த தேன்நிலவுக்கு என்ன மாதிரி அவள் உணர்கிறாள் என்பதை அவளாலேயே கணிக்க முடியவில்லை. மனம் முழுவதும் வெறுமையாக இருந்தது.​

கொஞ்ச நேரத்திலேயே இவ்வளவு கேள்வி கேட்கிறான். காலம் முழுக்க இவனுடன் எப்படி வாழ போகிறோம் என்ற எண்ணம் தான் அவளுக்கு எழுந்தது.​

தான் படுத்த பிறகும் அதே நிலையில் நின்றிருக்கும் தேன்நிலவை பார்த்த மெய்யழகன், “என்ன அப்படியே நிற்கிற லைட் ஆஃப் பண்ணிட்டு வந்து படு டைம் ஆகிடுச்சு” என்றவனின் குரலில் குடுகுடுவென்று ஓடிச் சென்று விளக்கை அணைத்துவிட்டு அவளும் மறுபுறம் படித்துக் கொண்டாள்.​

அன்றைய நாளின் அசதி படுத்த உடனேயே இருவரும் உறங்கிப் போயினர்.​

 

RJ novels

Moderator

மெய்யழகனின் தேன்நிலவு - 17​

மறுநாள் சூரிய பகவான் தன் பொற்கதிர்களை பூமி தாயின் மீது படர விட தயாராகிக் கொண்டிருந்த நேரம்.. அதிகாலையிலேயே கௌரி அழகேசன் அறை கதவையும், மெய்யழகனின் அறை கதவையும் தட்டிக் கொண்டிருந்தார்.​

கதவை தட்டும் ஓசையில் கண்விழித்த கவிதா அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டாள் என்று தான் கூற வேண்டும்.​

தூக்கத்திலிருந்து கண்விழித்தவள் முதலில் கண்டது தன் முகத்திற்கு வெகு அருகாமையில் துயில் கொண்டு இருக்கும் தன் கணவன் அழகேசனின் முகத்தை தான்.​

பார்த்த நொடி தூக்கிவாரி போட்டு விட்டது. அதிலும், இருவரின் மூச்சுக்காற்றும் ஒன்றோடு ஒன்று கலந்து வெளியேறும் அளவிற்கு அப்படி ஒரு நெருக்கம்..​

அவனின் முகத்தை இவ்வளவு அருகாமையில் பார்த்த பிறகு அவளால் மூச்சு விட முடியுமா என்ன.. அவ்வளவு தான் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு படுத்து இருந்தாள்.​

மீண்டும் கதவை தட்டும் ஓசை கேட்க. சட்டென்று அங்கிருந்து நகர முற்பட்டவளை அசைய கூட முடியாமல் வலுவாக அழகேசனின் கரம் அவளின் இடையை சுற்றி பற்றி இருந்தது.​

அதை பார்த்த கவிதாவிற்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாகி போனது. அதிலும், அவனின் வலுகொண்ட ஒற்றை கால் கவிதாவின் மேல் வீற்றிருக்க. அவளால் அசைய கூட முடியாத நிலை..​

செய்வதறியாது ஒரு நொடி திகைத்து விட்டாள் கவிதா. எப்படியாவது அவனிடமிருந்து விடுபட எண்ணியவள் மெதுவாக அவன் கையையும் காலையும் நகர்த்த முயல. ஆனால், அதற்கான பலன் தான் பூஜ்ஜியம்..​

அதற்குள் மீண்டும் கதவை தட்டும் ஓசை கேட்க. அந்த சத்தத்தில் அழகேசனே சற்று அசைந்து படுத்தான். அந்த சந்தர்ப்பத்தை உபயோகித்து கொண்ட கவிதா சட்டென்று படுக்கையில் இருந்து தாவி குதித்து எழுந்தாள்.​

மீண்டும் கதவை தட்டும் ஓசை கேட்பதற்குள்ளாக ஒடி சென்று தன்னை சற்று ஆசுவாசப்படுத்தியபடி கதவை திறந்தவளை இன் முகமாக எதிர்நோக்கினார் கௌரி.​

கௌரி மென்புன்னகையோடு, “இன்னைக்கு முதல் நாள் இல்லையா மா அதான் விளக்கேத்த எழுப்பலாம்னு வந்தேன். சீக்கிரமா குளிச்சிட்டு வா” என்றபடி நகர்ந்துவிட்டார்.​

கடிகாரத்தை பார்க்க நாலரை என்று காட்டியது. அப்படியே திரும்பி உறங்கிக் கொண்டிருந்த அழகேசனை தான் பார்த்தாள்.​

அவனோ அருகில் இருந்த தலையணையின் மேல் இவ்வளவு நேரம் கவிதாவின் மேல் எப்படி தன் கை கால்களை போட்டுக்கொண்டு உறங்கினானோ அதே போல் அந்த தலையணையை அணைத்தபடி உறங்கிக் கொண்டிருந்தான்.​

அதில் கவிதாவின் தலை தானாக இரு பக்கமும் ஆடியது. பிறகு, கௌரி கூறியது போல் குளியல் அறைக்குள் புகுந்து கொண்டாள்.​

தேன்நிலவின் அறை கதவும் தட்டப்பட. தேன் நிலவு ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள். கதவு தட்டும் ஓசையில் கண்விழித்த மெய்யழகன் கட்டிலின் விளிம்பில் தூங்கிக் கொண்டிருக்கும் தேன்நிலவை தான் பார்த்தான்.​

மெய்யழகன், ‘இவ்வளவு நேரம் கதவைத் தட்டுறாங்க.. கொஞ்சம் கூட அசராமல் இப்படி தூங்குகிறாளே’ என்று எண்ணியவாறு, “ஏய் எழுந்திரு” என்று அவளை நோக்கி குரல் கொடுத்தான்.​

இவ்வளவு அதிகாலையில் எல்லாம் எழுந்து தேன்நிலவிற்கு பழக்கமே கிடையாது. ஏதேனும் விசேஷ நாட்கள், பண்டிகைகள் என்றால் தான் அவளின் தாய் அவளை இவ்வளவு அதிகாலையில் எழுப்பி விடுவார்.​

மற்ற நேரங்களில் எல்லாம் ஆறு அல்லது ஏழு மணிக்குள் எழுந்து விடுவது தான் அவளது வழக்கம். அதிலும், இரவு வெகு நேரமாக மெய்யழகன் அவளை நிற்க வைத்தே ஒரு வழி செய்து விட்டான்.​

அதில், மிகவும் அசதியாக தூங்கிக் கொண்டிருந்தாள். மெய்யழகனின் குரலுக்கெல்லாம் சற்றும் அசைந்து கொடுக்காத தேன்நிலவு ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள்.​

மெய்யழகன், “ஹலோ உன்கிட்ட தானே பேசிகிட்டு இருக்கேன் எழுந்திரு” என்று மீண்டும் குரல் கொடுக்க.​

அவளிடம் எந்த ஒரு அசைவும் இல்லை.​

‘என்ன இவ இப்படி தூங்குறா.. இப்படி ஒருத்தன் கத்திக்கிட்டு இருக்கேன் அது கூட இவ காதில் விழலையா..’ என்று சலிப்பாக தலையை திருப்பியவன்.​

அருகில் இருந்த தலையணையை எடுத்து தேன் நிலவின் மேல் தட்டினான். அது லேசாக வேலையும் செய்தது.​

தேன்நிலவு சலிப்பாக, “ம்ம்ச்ச்... என்னமா.. எனக்கு தூக்கம் தூக்கமா வருது. நான் அப்புறமா எழுந்திரிச்சிக்கிறேன்” என்றவள்.​

அவன் நீட்டி இருந்த தலையணையை வாங்கி தன் நெஞ்சோடு அணைத்தபடி மீண்டும் உறக்கத்தை தழுவினாள்.​

மெய்யழகனிற்கு தான் ‘ஐயோ’ என்று ஆகிவிட்டது.​

இப்பொழுது என்ன செய்வது என்று வேறு வழியின்றி அவனே எழுந்து சென்று கதவை திறக்க.. மெய்யழகனை சற்றும் எதிர் பார்க்காத கௌரி ஒரு நொடி திகைத்தவர்.​

பின்பு சுதாரித்து, “நிலா இல்லையாப்பா?”.​

மெய்யழகன், “அவ தூங்கிக்கிட்டு இருக்கா”.​

கௌரி, “இல்ல.. விளக்கேத்தனும்..” என்று இழுத்தார்.​

மெய்யழகன், “நீங்க போங்க நான் அவளை எழுப்பி அனுப்புறேன்” என்றவன்.​

கதவை அடைத்து விட்டு மீண்டும் அவளுக்கு முன்னே வந்து நின்றபடி தன் இரு கைகளையும் கட்டிக்கொண்டு அவளையே உருத்து விழித்தான்.​

அவளோ சுகமான நித்திரையில் இருக்க.. மெய்யழகன் அவள் அணைத்திருந்த தலையணையை வெடுக்கென்று பிடுங்கினான். அதில், லேசாக தேன்நிலவின் தூக்கம் கலைய..​

“ஐயோ... இப்போ என்ன பிரச்சனை.. எனக்கு தூக்கம் வருதுனு சொல்றேன்ல.. நைட் ஃபுல்லா அவரு ஏதோ போலீஸ் திருடனை விசாரணை பண்ற மாதிரி என்னை நிக்க வச்சு கேள்வி கேட்டுக்கிட்டே இருந்தார். சரியா தூங்கவே முடியல.. எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு. நீ வேற ஏன் மா இப்படி பண்ணுற” என்றவள் மெதுவாக கண்ணை திறக்க.​

மெய்யழகனை பார்த்தவளின் வாய் ‘கப்சிப்’ என்று மூடிக்கொண்டது.​

இப்பொழுது தான் நிதர்சனம் அவளின் முகத்தில் அறைந்தது. மெய்யழகனை பார்த்தவள் வாரி சுருட்டி எழுந்து நல்ல பிள்ளையாக அமர்ந்து கொண்டாள்.​

‘ஐயையோ! இவரை பத்தி இவர்கிட்டயே சொல்லிட்டோமே’ என்று எண்ணியபடி அவனின் முகத்தை நோட்டமிட.​

அவனின் முகத்திலோ எந்த உணர்ச்சியுமே தென்படவில்லை.​

மெய்யழகன், “உன்னை அம்மா ரெடி ஆகிட்டு வர சொன்னாங்க.. விளக்கு ஏத்தனுமாம்” என்றவன் அவ்வளவு தான் என்பது போல் மீண்டும் சென்று படுத்துக் கொண்டான்.​

தேன் நிலவிற்கு தான் ஒன்றும் புரியவில்லை. பிறகு, அவசரமாக தயாராகி வெளியே செல்ல.. கவிதா அங்கே சோபாவில் அமர்ந்தவள் எங்கோ வெறித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.​

தன் நண்பியை பார்த்ததும் குஷி ஆகிய தேன்நிலவு, “ஹே கவி..” என்றபடி அவள் அருகில் சென்றாள்.​

கவிதா பெயருக்கு தேன் ‌நிலவை பார்த்து புன்னகைத்தவள் அமைதியாக அமர்ந்திருந்தாள். பிறகு, கௌரி கூறியது போல் இருவரும் விளக்கேற்றி பூஜை செய்தனர்.​

கௌரி, “ரெண்டு பேரும் இருங்கம்மா.. நான் போய் காபி போட்டு உங்களுக்கு கொண்டு வரேன்”.​

கவிதா, “அத்தை நான் ஏதாவது உதவி பண்ணட்டுமா?”.​

கௌரி, “அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை. நானே பார்த்துக்கிறேன்” என்றபடி அடுப்படியை நோக்கி நகர்ந்தார்.​

தேன்நிலவு கொட்டாவி விட்டவாறு கவிதாவின் காதில் கிசுகிசுப்பாக, “என்னடி என்ன ஆச்சு.. ஏன் ஒரு மாதிரி இருக்க.. நம்ம பியூட்டி என்ன சொல்லுச்சு?” என்றாள் விளையாட்டாக.​

கவிதா, “உன்னால் எப்படி தேனு இப்படி எல்லாம் இருக்க முடியுது. என்னால் நடந்ததை எல்லாம் கொஞ்சம் கூட ஜீரணிக்கவே முடியல. ரொம்ப கஷ்டமா இருக்கு.. இதெல்லாம் கனவா இருந்தா நல்லா இருக்கும்னு தோணுது” என்றாள் கம்மிய குரலில்.​

தேன்நிலவு, “இங்க பாரு கவி.. கல்யாணமே முடிஞ்சு போச்சு. இப்போ போய் தேவையில்லாமல் இப்படி எல்லாம் யோசிக்காதே.. இனிமே, இது தான் உன்னுடைய வாழ்க்கை..”.​

“இதை எப்படி உனக்கு பிடிச்ச மாதிரி மாத்திக்கிறது என்று மட்டும் யோசி. அதை விட்டுட்டு நடந்ததையே நினைச்சு புலம்பிக்கிட்டு இருந்தா எதுவும் மாறப் போறது இல்ல”.​

கவிதா, “என்னால் எப்படி எனக்கு பிடிச்ச மாதிரி இந்த வாழ்க்கையை மாற்ற முடியும். அதுவும் அழகேசனை மாத்த முடியும் என்று உனக்கு தோணுதா..”.​

தேன்நிலவு, “ஏன் நீ நினைச்சா முடியாதா..”.​

கவிதா, “எப்படி முடியும்.. நான் சொல்றதை கேட்டுட்டு தான் அவர் மறு வேலை பார்ப்பார் பாரு..” என்றாள் சலித்துக் கொண்டு.​

தேன்நிலவு குறும்பாக, “சரி, சரி நேத்து நைட்டு என்ன நடந்துச்சுனு சொல்லு” என்றாள் தன் ஒற்றை கண்ணை சிமிட்டியபடி.​

கவிதா, “ஒன்னும் நடக்கல” என்றாள் சோகமான குரலில்.​

தேன்நிலவு, “ஓ! அதான் மேடம் இவ்வளவு சோகமா இருக்கீங்களா..”.​

அதில், அவளை முறைத்து பார்த்த கவிதா, “உனக்கு எல்லாமே விளையாட்டு தானா” என்றாள் கண்களில் நீரோடு.​

தேன்நிலவு, “இப்போ நான் என்ன கேட்டுட்டேன்னு நீ இப்படி கண்கலங்குற..”.​

கவிதா, “நேத்து அவர் என்கிட்ட எப்படியெல்லாம் பேசினார் தெரியுமா.. எனக்கு அழுகையே வந்திடுச்சு”.​

தேன்நிலவு, “ஏன் ஏதாவது திட்டினாரா? அப்படி ஏதாவது இருந்தா சொல்லு நான் என்னனு கேட்கிறேன்” என்றாள் வீரமாக.​

கவிதா, “அதெல்லாம் ஒன்னும் இல்ல.. அவர் என்னென்னமோ சொல்றார் தேனு.. என்னால் அதெல்லாம் நம்பவே முடியல தெரியுமா” என்றவள்.​

முன்தினம் அழகேசன் அவளிடம் கூறிய மொத்தத்தையும் தன் ஆருயிர் தோழியிடம் அப்படியே ஒப்பித்தாள்.​

தேன் நிலவு அவள் கூறியதை கேட்டவள் தன் வாயின் மீது கையை வைத்தவாறு அதிர்ச்சியான குரலில், “அடிப்பாவி! இருந்தாலும் பியூட்டி பயங்கரமான ஆளு தான் டி. உன்னை கரெக்ட் பண்றதுக்காக பார்க்கிற இடத்துல எல்லாம் என்கிட்ட வம்பு பண்ணி இருக்காரு பாத்தியா..”.​

கவிதா, “எனக்கே இதெல்லாம் நேத்து தான் தெரிஞ்சது. அவர் வேணும்னு தான் டி இப்படி எல்லாம் செஞ்சிருக்கார். சாரி டி” என்றாள் வருத்தமான குரலில்.​

தேன்நிலவு, “லூசா டி நீ.. இதுக்கு ஏன் நீ சாரி கேக்குற”.​

கவிதா, “என்ன இருந்தாலும் அவர் அப்படி பண்ணது ரொம்ப பெரிய தப்பு தானே.. கொஞ்ச நேரத்துல உன் வாழ்க்கையே வீணா போயிருக்கும். அதுவும் என்னால்..” என்றவளுக்கு அதற்கு மேல் பேச முடியாமல் துக்கம் அவளின் தொண்டையை அடைத்தது.​

தேன்நிலவு, “சரி விடு கவி.. நான் தான் உன்கிட்ட முன்னாடியே சொல்லி இருக்கேன் இல்ல.. எனக்கும் அழகேசன் மேல எந்த ஒரு விருப்பமும் இல்லை‌ வீட்டில் பார்த்ததால் தான் நானும் சரினு ஒத்துக்கிட்டேன்‌. அதனால் இதையெல்லாம் நினைத்து நீ எதுவும் வருத்தப்பட தேவையில்லை”.​

கவிதா, “இருந்தாலும், என்னால் அவர் செஞ்ச காரியத்தை ஏத்துக்கவே முடியல தேனு.. அட்லீஸ்ட், இதையெல்லாம் என்கிட்ட முன்னாடியே சொல்லி இருக்கலாம் இல்ல..”.​

தேன்நிலவு, “அப்படி முன்னாடியே சொல்லி இருந்தா உடனே மேடம் சரினு சொல்லி அவரை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சிருப்பீங்களா?”.​

அவளின் கேள்விக்கு கவிதாவிடம் எந்த ஒரு பதிலும் இல்லை.​

தேன்நிலவு, “நீ சம்மதிக்க மாட்டனு நம்​

ம பியூட்டிக்கு தெரிந்திருக்கு. அதனால் தான் இப்படி ஒரு பிளான் போட்டு உன்னை தட்டி தூக்கி இருக்கார்” என்று கூறி குறும்பாக நகைத்தாள்.​

 

RJ novels

Moderator

மெய்யழகனின் தேன்நிலவு - 18​

கவிதா அவளின் வார்த்தையில் அவளை முறைத்து பார்க்க.​

தேன்நிலவு, “சரி, சரி.. நடந்தது எல்லாத்தையும் மறந்துடு.. இது தான் உன்னுடைய வாழ்க்கைனு ஆயிடுச்சு.. இனிமே இதில் எப்படி சந்தோஷமா வாழ்வதுனு மட்டும் யோசி..”.​

“அழகேசன் உன்னை கல்யாணம் பண்ணிக்கொள்வதற்காக இவ்வளவு பண்ணியிருக்கார். நீ சொல்றதை அவர் கேட்க மாட்டார் என்று நினைக்கிறாயா..”.​

“நீ என்ன சொன்னாலும் அவர் உனக்காக செய்வார். இனிமே உன் லைப்பே உனக்கு பிடிச்ச மாதிரி மாறிடும் பாரு” என்று கூறவும் தான் கவிதாவிற்கு லேசாக புன்னகை அனுப்பியது.​

ஏதோ இரவு முழுவதும் அவளின் மனதை போட்டு அழுத்திக் கொண்டிருந்த பாரம் சற்று குறைந்தது போல் தோன்றியது.​

தேன் நிலவின் வாழ்க்கைக்கு தன்னால் தான் பிரச்சனையோ என்ற உருத்தல் அவளுக்குள் இருந்து கொண்டே இருந்தது. தேன் நிலவிடம் பேசிய பிறகு தான் அவளின் மனம் சற்று லேசானதை போல் உணர்ந்தாள்.​

தேன் நிலவு அவளின் கன்னத்தை பிடித்து கிள்ளியவள், “வெரி குட்.. இப்படி தான் எப்பயுமே சிரிச்சுக்கிட்டே இருக்கணும். சிரிச்சா தான் என் கவி அழகாய் இருப்பா” என்றவள் அவளின் தோளில் தலை சாய்த்து கொண்டாள்.​

கவிதா, “என்னடி ரொம்ப டயர்டா இருக்க மாதிரி இருக்க.. நைட்டு சரியா தூங்கலையா?”.​

தேன்நிலவு, “ம்ம்”.​

கவிதா, “அப்போ உங்க ரெண்டு பேருக்கும் செட் ஆகிடுச்சா?” என்றாள் ஆச்சரியமான குரலில்.​

தேன்நிலவு வெடுக்கென்று அவளை நிமிர்ந்து பார்த்தவள், “அட போடி நீ வேற.. நைட்டு ஃபுல்லா என்னை நிக்க வச்சு கேள்வி மேல கேள்வியா கேட்டு ஒரு வழி பண்ணிட்டார்”.​

கவிதா, “அப்படி என்ன கேட்டார்?”.​

இரவு இவர்களுக்குள் நடந்த மொத்த கதையையும் கவிதாவிடம் ஒப்பித்தாள் தேன் நிலவு..​

கவிதா தன் சிரிப்பை கடினப்பட்டு கட்டுப்படுத்தியவாறு, “இப்படி எல்லாமா கேட்டாரு..”.​

தேன் நிலவு, “ஆமா.. ரொம்ப கடுப்பா ஆகிடுச்சு தெரியுமா.. அது மட்டும் இல்ல என்னை ஹேர் கட் வேற பண்ண சொல்றாரு டி”.​

கவிதா, “என்னடி சொல்ற இவ்வளவு அழகான முடியை போய் ஹேர் கட் பண்ண சொல்றாரா..”.​

தேன்நிலவு, “ம்ம்” என்றவள் சட்டென்று உற்சாகமாகி, “ஹே கவி.. எனக்கு இப்போ தான் ஒரு விஷயம் ஞாபகம் வருது” என்றவளின் உற்சாகம் கவிதாவையும் தொற்றிக்கொள்ள.​

“என்ன?” என்றாள் புன்னகை முகமாக.​

தேன்நிலவு, “பாத்தியா.. நீயும், நானும் ஒரே வீட்டுக்கு மருமகள் ஆகிட்டோம். அப்போ இனிமே நீயும் நானும் ஒன்னா ஜாலியா இருக்கலாம்”.​

கவிதா, “ஆமா.. இவ்வளவு நாள் நீயும் நானும் தனித்தனியா இருந்தோம் பாரு..”.​

தேன்நிலவு, “இவ்வளவு நாளும் ஒன்னா தான் டி இருப்போம். ஆனால், எப்போவாவது தானே ஒன்னா இருக்க முடியும். ஆனால், இனிமேல் அப்படி இல்ல.. காலையிலிருந்து நைட் வரைக்கும் நம்ம ஜாலியா என்ஜாய் பண்ணலாம்”.​

கவிதா, “என்ன மறந்துட்டியா.. நம்ம கல்யாணம் ஆகி மாமியார் வீட்டுக்கு வந்திருக்கோம். இங்க எல்லாம் ஜாலியா என்ஜாய் பண்ண முடியாது. வேலை செஞ்சே நாள் முடிஞ்சிடும்” என்றாள் ரகசிய குரலில்.​

தேன் நிலவு, “வேலை செய்யணுமா?” என்றாள் அதிர்ச்சியாக.​

கவிதா, “பின்ன.. மாமியார் வீடுனா என்ன சும்மாவா.. உன்னை உட்கார வச்சு சமைச்சு தருவாங்களா.. நீ தான் எல்லாருக்கும் சமைச்சு தரணும்”.​

தேன்நிலவு அவளின் தோளில் கையை போட்டவாறு, “பரவாயில்லை.. நம்ம ரெண்டு பேரும் ஒன்னா சேர்ந்து செய்யலாம். நல்ல வேலை நம்ம பியூட்டி உன்னை காதலிச்சார். வேற யாரையாவது காதலிச்சிருந்தா எனக்கு போர் அடிச்சு இருக்கும்” என்றவளின் தோளில் இரண்டு அடி போட்டாள் கவிதா.​

மீண்டும் கவிதாவின் தோளில் இதமாக சாய்ந்து கொண்டு தன் கண்களை முடிய தேன்நிலவு, “உனக்காவது பரவாயில்லை கவி.. பியூட்டி உன்னை லவ் பண்ணி இருக்கார். எப்படியோ உனக்கு அப்படியே செட்டில் ஆகிடும். ஆனா, என் நிலைமையை பார்த்தியா..” என்கவும்.​

கவிதா, “ம்ம்..”.​

தேன் நிலவு, “ராத்திரி முழுக்க எவ்வளவு கேள்வி தெரியுமா? எக்ஸாம்ல கூட நான் இவ்வளவு கொஸ்டின்ஸ்க்கு ஆன்சர் பண்ணது கிடையாது”.​

கவிதா, “ம்ம்ம்..”.​

தேன் நிலவு, “எப்படி டி ஒரு மனுஷன் இப்படி எல்லாம் கூடவா இருப்பாங்க.. அரை மணி நேரமா உத்து உத்து பார்த்துகிட்டே இருக்கார். எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா.. அப்படியே வந்த கோபத்துக்கு அவர் தலையிலேயே நங்கு நங்குனு நாலு கொட்டு வைக்கணும் போல இருந்துச்சு”.​

கவிதா, “ம்ம்ம்ம்..”.​

தேன் நிலவு, “நைட்டு தூங்கவே ரொம்ப நேரம் ஆகிடுச்சு கவி.. காலையிலேயே சீக்கிரமா எழுப்பி விட்டுட்டார். கண்ணெல்லாம் ஒரே எரிச்சலா இருக்கு" என்றாள் சிணுங்களாக.​

கவிதா, “ம்ம்..”.​

தேன்நிலவு, “ஒரு நாளைக்கே கண்ணை கட்டுற மாதிரி இருக்கு. எப்படி தான் நான் இவர் கூட வாழ்க்கை பூரா இருக்க போறேனோ தெரியல..” என்று கூறவும்.​

மெய்யழகன் தன் குரலை செறுமி காட்டவும் சரியாக இருந்தது.​

சட்டென்று தன் விழிகளை திறந்தவள்.. தன் எதிரே ஜம்பமாக கைகளை கட்டிக் கொண்டு தன்னையே உருத்து விழித்தபடி நின்றிருக்கும் மெய்யழகனை தான் பார்த்தாள்.​

‘அய்யய்யோ! இவ்வளவு நேரம் பேசினது எல்லாம் கேட்டுட்டார் போலருக்கே..’ என்று எண்ணி அசடு வழித்தபடி எழுந்து நின்றவள்.​

“இது.. என்னோட பிரண்டு.. கவிதா..” என்று தன் அருகில் நின்ற கவிதாவை கை காட்டினாள்.​

மெய்யழகனின் கூர்விழிகள் தேன் நிலவை விட்டு நொடியும் விலகவில்லை.​

தேன்நிலவு, ‘போச்சு.. போச்சு.. எல்லாத்தையும் கேட்டுட்டார். இப்போ இதுக்கு வேற என்னென்ன கிளாஸ் எடுக்க போறாரோ தெரியல’.​

மெய்யழகன், “ரூமுக்கு வா..” என்று தன் பற்களை கடித்துக் கொண்டு கூறிவிட்டு விறுவிறுவென அறைக்கு சென்று விட்டான்.​

தேன்நிலவு பாவமாக திரும்பி தன் அருகில் நின்றிருக்கும் கவிதாவை பார்க்க.​

கவிதா, “கோவமா போறாரு போலருக்கே” என்றாள் அப்பாவியாக.​

தேன்நிலவு, “ஏன் ‌டி நான் தான் கண்ணை மூடிகிட்டு இருந்தேன் அவர் வந்தது தெரியல.. நீ கண்ணை திறந்துகிட்டு தானே இருந்த.. அவர் வராருனு சொல்லி இருக்கலாம் இல்ல”.​

கவிதா, “நான் தான் சிக்னல் கொடுத்தேனே.. நீ தான் நான் சிக்னல் கொடுத்ததை கவனிக்கல”.​

தேன்நிலவு, “சிக்னல் குடுத்தியா.. எங்கடி சிக்னல் கொடுத்த?”.​

கவிதா, “நான் தான் ம்ம்.. ம்ம்..னு செஞ்சேனே”.​

தேன்நிலவு, “அடியேய்! நான் பேசுறதுக்கு தான் நீ ம்ம்னு சொல்றியோனு நினைச்சேன். இப்படி என்னை நல்லா மாட்டிவிட்டுட்டியே டி..” என்று புலம்பியபடி சோபாவில் பொத்தென்று அமர.​

அவள் அருகில் அமர்ந்த கவிதா, “என்னடி இப்படி புலம்புற.. உன்னையே இப்படி புலம்ப வச்சிருக்காருனா.. உன் வீட்டுக்காரர் கொஞ்சம் டெரர் தான் போலருக்கே..”.​

தேன்நிலவு, “டெரரா.. திட்டினால் கூட வாங்கிக்கலாம். பேசாமலே என்னை நல்லா வச்சு செய்ய போறார்” என்று புலம்பி கொண்டு இருக்க.​

கௌரி அவர்கள் இருவருக்கும் காபி கப்புடன் வெளியே வந்தவர். அவர்களின் கணவன்மார்களுக்கும் சேர்த்து இவர்களிடமே காபி கோப்பையை கொடுத்து அறைக்கு அனுப்பினார்.​

இருவரும் அவரவர் அறைக்குள் நுழைய.. மெய்யழகன் கோபமாக கட்டிலில் அமர்ந்திருந்தான். அவனைப் பார்த்த தேன் நிலவிற்கு பதட்டம் தொற்றிக் கொண்டது.​

தேன்நிலவு அமைதியாக அறைக்குள் நுழைந்தவள். காபி கப்புகளை டேபிளின் மீது வைக்கும் வரையிலும் அவளையே உருத்து விழித்தபடி அமர்ந்திருந்தான் மெய்யழகன்.​

நேற்று போல் இன்றும் அவன் எதிரே வந்து தன் இடத்தில் நின்றாள் தேன் நிலவு..​

மெய்யழகன், “என்ன நினைச்சுக்கிட்டு இருக்க நீ உன் மனசுல?”.​

தேன்நிலவு, “நான் ஒன்னும் நினைக்கலையே”.​

மெய்யழகன், “அப்புறம் எதுக்காக அவங்க கிட்ட அப்படி எல்லாம் சொல்லிட்டு இருக்க?”.​

தேன் நிலவு, “அவதான் கேட்டா..” என்றாள் அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு.​

மெய்யழகன், “அவங்க கேட்டா நமக்குள்ள நடக்கிற எல்லாத்தையும் அவங்க கிட்ட சொல்லுவியா?” என்றான் கோபமாக.​

தேன்நிலவு, “இல்ல.. அவ என்னுடைய பிரண்டு தான். அதான் சொன்னேன்..”.​

மெய்யழகன், “பிரண்டா இருந்தாலும் நமக்குள்ள நடக்கிறது எல்லாத்தையும் சொல்லுவியா?” என்றான் மீண்டும்.​

தேன் நிலவிற்கு அவனின் கோபத்தை கண்டு சற்று அச்சமாக தான் இருந்தது.​

“சாரி..” என்றாள் மெல்லிய குரலில்.​

மெய்யழகன், “இதுதான் உனக்கு ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் வார்னிங்.. நம்ம ரெண்டு பேருக்குள்ள நடக்கிறதை எல்லாம் அடுத்தவங்க கிட்ட ஷேர் பண்ணுறதை இன்னையோட நிறுத்திக்கோ..”.​

“நமக்குள்ள நடக்கிறது எல்லாம் நம்மளுடைய பர்சனல். இதை நீ மத்தவங்க கிட்ட சொல்லுறது எனக்கு சுத்தமா பிடிக்காது” என்றான் எச்சரிக்கும் குரலில்.​

இருவரும் வெவ்வேறு சூழலி வளர்க்கப்பட்டவர்கள்.. மெய்யழகனிற்கோ தன்னை சார்ந்த எந்த ஒரு தனிப்பட்ட விஷயத்தையும் அடுத்தவர்களிடம் பகிர்ந்து கொள்வது சுத்தமாக பிடிக்காது.​

ஆனால், தேன்நிலவோ கவிதாவிடம் திறந்த புத்தகமாகவே இருப்பவள். தன் வாழ்க்கையில் நடக்கும் அனைத்தையுமே கவிதாவிடம் பகிர்ந்து கொள்வாள். அதே போல் தான் கவிதாவும்..​

அவளிடம் அனைத்தையும் பகிர்ந்து கொள்வாள். இருவருக்கும் இடையே எந்த ஒரு ஒளிவு மறைவும் இதுவரை இருந்தது கிடையாது. அப்படி நினைத்து தான் நேற்றைய இரவு நடந்ததையும் அவளிடம் அப்படியே கூறிவிட்டாள்.​

ஆனால், அதை எல்லாம் மெய்யழகன் கேட்பான் என்று அவள் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. ஒரு வேளை, முன்னதாகவே தெரிந்திருந்தால் கூறாமல் இருந்திருப்பாளோ என்னவோ..​

தேன் நிலவின் தலை தானாக ‘சரி’ என்று ஆடியது.​

வீட்டில் இருப்பவர்கள் பார்த்து பேசி நிச்சயம் செய்து திருமணம் செய்து வைத்தாலே ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள சற்று கால அவகாசம் தேவைப்படும்.​

ஆனால், இவர்களோ முன் பின் தெரியாதவர்கள்.. இவர்களுக்குள் அனைத்தும் ஒத்து போக எவ்வளவு காலங்கள் தேவைப்படுமோ..​

பிறகு, தேன் நிலவு கொண்டு வந்த காபியை பருகியவன். குளித்து ஆயத்தமாக சென்று விட்டான்.​

அன்று தேன் நிலவையும், மெய்யழகனையும் தேன் நிலவின் வீட்டிற்கு விருந்துக்கு மறு வீடு அழைத்துச் செல்ல வந்திருந்தனர்.​

அதே போல், கவிதாவின் தந்தையும் கவிதாவையும் அழகேசனையும் மறு வீடு அழைத்துச் செல்ல தன் சொந்த பந்தங்களுடன் வந்திருந்தார்.​

மதிய விருந்து முடிந்ததும் இரு ஜோடிகளையும் அழைத்துக் கொண்டு அவரவர் வீட்டிற்கு சென்றனர்.​

தங்கள் வீட்டை அடைந்ததுமே சகுந்தலா தேன் நிலவின் கையைப் பிடித்து தனியாக அழைத்து வந்தவர்.​

“தேனு மாப்பிள்ளை உன்கிட்ட எதுவும் கோவப்பட்டாரா.. உன்னை எப்படி பார்த்துக்கிறார்?” என்றார் பதைப்பதைக்கும் இதயத்தோடு.​

என்ன இருந்தாலும், அவசர கதியில் நடந்த திருமணம்.. மாப்பிள்ளை எப்படி தன் மகளிடம் நடந்து கொள்கிறாரோ என்ற பதட்டம் அவருக்குள் இருக்கத்தான் செய்தது பெற்றவர் ஆயிற்றே..​

 

RJ novels

Moderator

மெய்யழகனின் தேன்நிலவு - 19​

தேன் நிலவையும் மெய்யழகனையும் தேன் நிலவின் வீட்டிற்கு அழைத்து வந்த பிறகு அவர்களுக்கு பால் பழம் கொடுத்து விளக்கேற்ற வைத்து சில சம்பிரதாயங்களை செய்தனர்.​

பிறகு, ஓய்வெடுக்க அனுப்பிய பிறகு சகுந்தலா தேன் நிலவை தன்னோடு அழைத்துக் கொண்டு தனியாக வந்தவர், “மாப்பிள்ளை உன்கிட்ட நல்லா தானே நடந்துக்கிறார்.. ஏதாவது கோபப்பட்டாரா”.​

தேன் நிலவு, “அதெல்லாம் ஒன்னும் இல்ல மா.. நல்லா தான் பேசுறார்”.​

சகுந்தலா, “எங்களுக்காக எதுவும் நீ பொய் சொல்லல இல்ல.. நீ நல்லா தானே இருக்க”.​

தேன்நிலவு, “நான் ஏன் மா பொய் சொல்ல போறேன்.. நான் நல்லா தான் இருக்கேன். எந்த பிரச்சனையும் இல்ல.. என்னை பத்தி நீங்க எதுவும் கவலைப்பட தேவையில்லை”.​

சகுந்தலா, “இப்போ தான் எனக்கு மனசு நிறைஞ்ச மாதிரி இருக்கு” என்றவர் தேன் நிலவின் நெற்றியில் இதழ் பதித்தார்.​

தேன்நிலவிற்கும் நெகிழ்ச்சியில் கண்கள் கலங்கிவிட்டது.‌​

சகுந்தலா, “நானும் அப்பாவும் பயந்துகிட்டே இருந்தோம்.. அவசரத்துல கல்யாணம் பண்ணி கொடுத்துட்டோம்.. மாப்பிள்ளை எப்படிப்பட்டவரோ என்னவோ ஒன்னும் தெரியல..”.​

“உன்னை எப்படி பார்த்து கொள்கிறாரோனு மனசு கிடந்து அடிச்சுகிட்டே இருந்துச்சு. இப்போ உன் வாயால் கேட்ட பிறகு தான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு” என்றார் புன்னகையோடு.​

தேன்நிலவு அவரின் கைகளை பிடித்துக் கொண்டவள், “அம்மா நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க.. அவர் என்கிட்ட நல்லா தான் பேசுறார் பழகுகிறார். எனக்கு எந்த பிரச்சனையுமே இல்லை.. அப்பாகிட்டயும் சொல்லுங்க”.​

கஸ்தூரி கோபத்தில் வேகமாக காய்களை நறுக்கி கொண்டு இருந்தாள்.​

கீதா சமையல் கட்டின் வாசலை எட்டிப் பார்த்தவாறு, “என்ன அண்ணி இப்படி ஆயிடுச்சு..”.​

திலகா, “ஆமா கீதா.. நான் கூட இப்படி எல்லாம் நடக்கும் என்று கொஞ்சம் கூட நினைச்சு பாக்கல.. அந்த அழகேசன் வசதியான இடம் தான்”.​

“இருந்தாலும், மாப்பிள்ளை சரியில்லாமல் வெறும் வசதி வாய்ப்பை மட்டும் வச்சுக்கிட்டு என்ன செய்ய முடியும்னு அசால்டா இருந்துட்டேன். கடைசியில், எல்லாம் இப்படி தலைகீழா மாறிடுச்சு”.​

கஸ்தூரி, “நான் மட்டும் என்ன அண்ணி கனவா கண்டேன் இப்படி எல்லாம் நடக்கும்னு.. அந்த அழகேசனுக்கு கட்டி கொடுக்கலாம்னு பார்த்தால் கடைசியில் எங்கிருந்தோ ஒருத்தவன் வந்து இவளை கல்யாணம் பண்ணிக்கிட்டான்”.​

கீதா மீண்டும் தன் மாமியார் வருகிறாரா என்று வாசலை நோக்கி நோட்டமிட்டவாறு, “ஆனா, சும்மா சொல்ல கூடாது அண்ணி.. மாப்பிள்ளை சும்மா ஜம்முன்னு இருக்கார். நம்ம தேனுக்கும் அந்த மாப்பிள்ளைக்கும் பொருத்தம் அம்சமா இருக்கு”.​

“ரெண்டு பேரும் பார்க்கவே அவ்வளவு அழகா இருக்காங்க.. அவங்க ஜோடி பொருத்தம் அப்படி இருக்கு.. எனக்கே ரொம்ப பொறாமையா இருக்குனா பாத்துக்கோங்களேன்” என்று பெருமூச்சு விட்டாள்.​

“இப்படி எல்லாம் நடக்கும் என்று யார் எதிர்பார்த்தா..” என்றபடி சமையல் வேலையை பார்த்தாள் திலகா, “கடைசியில் நம்மையே இப்படி அவங்களுக்கு விருந்து சமைக்க விட்டுட்டாங்க”.​

கஸ்தூரி, “திலகா அண்ணி நீங்க கவனிச்சீங்களா.. மாப்பிள்ளைக்கும் தேன் நிலவை கல்யாணம் பண்ணிக்கிறதுல விருப்பம் இல்லைனு நினைக்கிறேன்”.​

“தாலி கட்டும்போது கூட முகத்தை கோவமாக தான் வச்சிருந்தார். இப்போ கூட பாத்தீங்களா.. நல்லா சிரிச்சு கலகலனு யாருகிட்டயும் பேசவே இல்ல.. ஒரு மாதிரி முகத்தை உம்முன்னு வைத்திருக்கிறார்”.​

கீதா கரண்டியுடன் திரும்பியவள்‌, “ஆமா அண்ணி.. நான் கூட இதை கவனிச்சேன். ஒருவேளை, ரொம்ப கோவக்காரரா இருப்பாரோ?”.​

திலகா, “ஆமா.. நானும் பார்த்தேன்.. ஒரு வேளை, அவருக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லாததால் இப்படி கோபமாக இருக்கிறாரோ” என்று ஒவ்வொருவருமே தங்கள் மனதில் இருப்பதை வெளிப்படையாக கூறினர்.​

கஸ்தூரி, “எப்படி இருந்தா என்ன.. இனிமே நடந்ததை நம்மால் மாத்த முடியாது” என்றாள் வெறுப்பான குரலில்.​

கீதா, “அண்ணி இப்படி செஞ்சா என்ன?” என்றாள் பிரகாசமான முகத்தோடு.​

திலகா, “என்னடி ஏதாவது பிளான் யோசிச்சு இருக்கியா?”.​

கீதா, “ஆமாக்கா.. நாம ஏன் அந்த மாப்பிள்ளை கிட்ட பேசி பார்க்க கூடாது”.​

கஸ்தூரி, “என்ன சொல்ற கீதா.. மாப்பிள்ளை கிட்ட நாம என்ன பேசி பார்க்கிறது?”.​

கீதா, “அண்ணி நான் சொல்றதை கவனமா கேளுங்க.. அந்த மாப்பிள்ளை பெரிய படிப்பு எல்லாம் படிச்சுட்டு பெரிய உத்தியோகத்தில் இருக்கிறவர். ஆனா, நம்ம தேன்நிலவு பத்தாம் கிளாஸ் கூட படிக்காதவள்”.​

“அவர் தனக்கு எப்படிப்பட்ட மனைவி வரணும்னு ஆசைப்பட்டு இருப்பாரு.. ஆனா, நம்ம தேன் நிலவை பத்தி அவருக்கு எதுவுமே தெரியாது இல்ல..”.​

“நாம நம்ம தேன் நிலவை பத்தி ஒன்னுக்கு ரெண்டா அவர்கிட்ட எல்லாத்தையும் சொல்லுவோம். அப்புறம் அவரும் நம்மளோட சேர்ந்திடுவாரு.. நாம எல்லாருமா சேர்ந்துகிட்டு ஒரே கேங்கா ஆகிடலாம் இல்ல”.​

திலகா, “இதெல்லாம் நடக்குமா?” என்றார் புளியை கரைத்தபடி.​

கஸ்தூரி யோசனையோடு, “ஆமா அண்ணி எனக்கும் கீதா சொல்ற மாதிரி முயற்சி பண்ணி பார்க்கலாம் என்று தான் தோணுது. ஒருவேளை, அவருக்கும் அவளை பிடிக்காமல் நம்ம கூட சேர்ந்துக்கிட்டா நமக்கும் வசதி தானே”.​

கீதா, “ஆனால் நீங்க என்ன வேணும்னாலும் நினைச்சுக்கோங்க அண்ணி.. அந்த தேன் நிலவு ஏதோ பெரிய புண்ணியம் பண்ணி இருக்கானு தான் நினைக்கிறேன்”.​

“அவளுக்கு மட்டும் எல்லாம் நல்லதாகவே அமையுது” என்று அந்த சமையல் கட்டுக்குள் அடுப்போடு சேர்ந்து இவர்களின் வயிறும் எரிந்து கொண்டிருந்தது.​

கவிதாவின் தந்தை செல்வம் தயக்கமாக, “கொஞ்சம் சின்ன வீடு தான் மாப்ள.. உங்களுக்கு அந்த அளவுக்கு வசதி பத்துமானு தெரியல”.​

அழகேசன், “அட என்ன மாமா நீங்க.. இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. வீடு சின்னதா இருந்தால் என்ன.. அதுல இருக்கிறவங்க மனசை பொறுத்து தான் இருக்கு”.​

செல்வம், “நீங்க ரொம்ப நல்லா பேசுறீங்க மாப்பிள்ளை”.​

அழகேசன், “எனக்காக நீங்க உங்க பொண்ணயே கட்டி கொடுத்து இருக்கீங்க.. என் பொண்டாட்டி இந்த வீட்டில் தானே பிறந்து வளர்ந்து இருக்கா.. என்னால் இங்க வந்து தங்க முடியாதா என்ன” என்றான் அங்கே நின்றிருக்கும் கவிதாவை பார்த்து தன் ஒற்றைக் கண்ணை சிமிட்டியபடி.​

அதில் அவளின் உறவுக்கார பெண்மணி, “கவிதா உனக்கு நல்ல மாப்பிள்ளை தான் டி அமைந்திருக்கிறார். ஏதோ அவசரத்துல கல்யாணம் நடந்திடுச்சே மாப்பிள்ளை எப்படிப்பட்டவரோ என்று நினைத்தேன்.. பரவாயில்லை நல்லா குணமானவராக தான் தெரிகிறார்”.​

கவிதாவிற்கு அனைவரின் முன்பும் என்ன கூறுவது என்று தெரியவில்லை. சமாளிப்பாக சிரித்தபடி தன் அறைக்கு சென்று விட்டாள்.​

அழகேசன், “சரி மாமா.. நான் கொஞ்ச நேரம் ரூம்ல ரெஸ்ட் எடுக்கிறேன்”.​

செல்வம், “சரிங்க மாப்பிள்ளை நீங்க போங்க.. சமையல் வேலை முடிந்ததும் நான் கூப்பிடுறேன்” என்றபடி அவர்களை அறைக்கு அனுப்பி வைத்தார்.​

அறைக்குள் நுழைந்தவன் அறையை நோட்டமிட்டபடி நின்று இருக்க. கவிதா அலமாரியில் எதையோ சரி செய்து கொண்டிருந்தாள்.​

அழகேசன், “என்ன இது.. இதெல்லாம் நீ வாங்கியதா?” என்றான் அங்கே அடுக்கி வைக்கப்பட்டிருந்த பரிசு கோப்பைகளை பார்த்து தன் புருவத்தை உயர்த்தியபடி.​

கவிதா, “ம்ம்”.​

அழகேசன், “ஓ! பரவாயில்லையே..” என்றபடி கட்டிலில் அமர்ந்தவனின் பார்வை கவிதாவிடம் தான் நிலைத்தது.​

கவிதாவோ ஒரு பையில் தன் புத்தகங்களை எல்லாம் எடுத்து அடுக்கிக் கொண்டு இருந்தாள்.​

அழகேசன் அவளையே பார்த்தபடி, “என்ன பண்ணிக்கிட்டு இருக்க?”.​

கவிதா, “இதெல்லாம் என்னோட புக்ஸ்.. அதான் உங்க வீட்டுக்கு எடுத்துக்கிட்டு வரலாமேனு..”.​

அழகேசன், “இவ்வளவு புத்தகத்தையும் நீ படிப்பிய”.​

கவிதா, “ம்ம்”.​

அழகேசன், “நான் என்ன படிச்சிருக்கேன்னு தெரியுமா?”​

கவிதா, “ம்ஹூம்” என்றாள் மறுப்பாக தலையசைத்தபடி.​

அழகேசன், “எம் காம்”.​

கவிதா ஆச்சரியமாக தன் விழிகளை விரித்தவள், “நிஜமாவா சொல்றீங்க?”.​

அழகேசன், “ஏன் என்னை பார்த்தால் படிக்காத முட்டாள் மாதிரி தெரியுதா?”.​

கவிதா, “ச்ச.. ச்ச.. அப்படி சொல்லல..”.​

அழகேசன், “வேற எப்படி சொன்ன?”.​

கவிதா, “இல்ல.. படிச்சிட்டு வேலைக்கு போகாமல் ஊர் சுத்திட்டு இருக்கீங்களே” என்றாள் மெதுவான குரலில்.​

அழகேசன் அவள் கூறுவதை கேட்டு சத்தமாக நகைத்தவன், “நான் எதுக்கு வேலைக்கு போகணும்.. அதான் என்னுடைய அப்பா அவ்வளவு சொத்து சேர்த்து வச்சிருக்காரே.. அதெல்லாம் எனக்கும் என் தம்பிக்கும் தானே.. அது போதாதா நம்ம குடும்பம் நடத்த?”.​

கவிதா, “அதெல்லாம் உங்க அப்பா அவருடைய குடும்ப சொத்து.. நீங்க சம்பாதிக்க வேண்டாமா?” என்றாள் தயக்கமாக.​

அழகேசன், “ஏன் நான் வேலைக்கு போகணும்னு சொல்றியா?”.​

கவிதா, “இல்ல.. இல்ல.. நான் ஒன்னும் சொல்லல”.​

அழகேசன், “எனக்கு இப்படி இருக்கிறது தான் பிடிச்சிருக்கு” என்று கூறவும்.​

கவிதாவின் முகம் நொடியில் வாடிவிட்டது, “ஓ!” என்றாள் ஸ்ருதி இறங்கிய குரலில்.​

அதற்கு மேல் அவளிடம் அவன் எதுவும் கேட்கவில்லை. அவளும் எதுவும் கூறவில்லை.​

இரவு உணவிற்கு என வகை வகையாக சகுந்தலாவின் சொல்படி சமைத்தனர் கஸ்தூரி, திலகா மற்றும் கீதா. அனைத்து பண்டங்களையும் கொண்டு வந்து மேஜையின் மீது அடுக்கி வைத்துவிட்டு நின்று இருக்க.​

அனைவரும் உணவருந்த சாப்பாட்டு மேஜையில் கூடினர். பெண்கள் அனைவரும் பரிமாற.. தேன் நிலவின் தந்தையும், அண்ணன்களும், மெய்யழகனும் உணவருந்த அமர்ந்தனர்.​

மெய்யழகன் சற்று தள்ளி நின்று இருந்த தேன் நிலவை பார்த்தவன், “நீ சாப்பிட வரலையா?” என்றான் அனைவரின் முன்னிலையிலும்.​

தேன்நிலவு, “நான் அப்புறமா அம்மா கூட சேர்ந்து சாப்பிடுகிறேன்”​

மெய்யழகன், “வேண்டாம்.. நீயும் வா”.​

தேன்நிலவு, “இல்ல..” என்று எதுவோ கூற வாய் எடுக்க.​

முருகன், “அதான் மாப்பிள்ளை சொல்லுறாரு இல்லமா.. வா.. நீயும் வந்து மாப்பிள்ளை பக்கத்துல உட்காரு”.​

இதுவரையிலும் இப்படி தன் அண்ணன்களுடன் சரிக்கு சமமாக அமர்ந்து உணவருந்தி அவளுக்கு பழக்கமே இல்லை.​

கடைசியாக எப்பொழுது அவர்களுடன் இணைந்து உணவருந்தினாள் என்பது அவளுக்கு நினைவிலேயே இல்லை. அதனாலேயே அவளுக்கு இந்த தயக்கம்..​

பிறகு, மெய்யழகனின் அருகில் இருந்த சாரில் அமர்ந்தாள் தேன்நிலவு. அவர்கள் இருவரையும் அருகருகே பார்க்க மற்ற மூவரும் பொறாமையில் வெந்து கொண்டிருந்தனர்.​

முருகனும், சகுந்தலாவும் மன நிறைவோடு அவர்களை பார்த்தவர்கள் சிறியவர்கள் ஏதாவது பேசிக் கொள்வார்கள் என்று நாசுக்காக உணவருந்தி விட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டனர்.​

கஸ்தூரி வேண்டுமென்றே, “மாப்பிள்ளை சார் என்ன படிச்சு இருக்கீங்க நீங்க?”.​

மெய்யழகன், “பி இ”.​

கீதா, “ஓ! பி இ படிச்சு இருக்கீங்களா.. என்ன வேலை பாக்குறீங்க?”.​

மெய்யழகன், “சாஃப்ட்வேர் இன்ஜினியரா இருக்கேன்”.​

திலகா, “என்ன இருந்தாலும் படிப்பு விஷயத்துல உங்களால் எங்க தேன் நிலவு பக்கத்துல கூட வர முடியாது” என்றார் தேன் நிலவே பார்த்து நக்கலாக சிரித்தபடி.​

தேன்நிலவிற்கு அங்கு அமரவே மிகவும் சங்கடமாக இருந்தது. இவர்கள் அடுத்து எதைப்பற்றி கூறப் போகிறார்கள் என்பது தான் அவளுக்கு முன்னதாகவே தெரியுமே..​

மெய்யழகன் புரியாமல் அவர்களை பார்க்க..​

கஸ்தூரி, “ஓ! நாங்க என்ன சொல்ல வரோம்னு உங்களுக்கு புரியலையா.. எங்க தங்கச்சி ஒன்பதாவது தான் பிடிச்சிருக்கா.. இருந்தாலும், பெரிய​

மனசு பண்ணி நீங்க அவளை கல்யாணம் செஞ்சுக்கிட்டீங்களே.. உங்களுக்கு உண்மையிலேயே ரொம்ப பெரிய மனசு தான்” என்று கூறவும் மெய்யழகன் தேன் நிலவை தான் அதிர்ந்த பார்வை பார்த்தான்.​

 

RJ novels

Moderator

மெய்யழகனின் தேன்நிலவு - 20​

அவனின் பார்வையை வைத்தே தாங்கள் கூறுவது அவனுக்கு புதிய செய்தி தான் என்பதை யூகித்தவர்கள் மேலும் மேலும் பேசத் தொடங்கினார்கள்.​

கீதா, “என்ன தம்பி நீங்க பாக்குறதை பார்த்தா உங்க கிட்ட இன்னும் தேனு எதையும் சொல்லல போலருக்கே?”.​

கஸ்தூரி “ஆமா கீதா.. அப்படி தான் போல இருக்கு. என் தங்கச்சி மேல எந்த தப்பும் இல்ல மாப்ள.. அவசரத்தில் நடந்த கல்யாணம் என்றதால் உங்க கிட்ட எதையும் தெளிவா சொல்ல முடியல அவ்வளவு தான்”.​

மெய்யழகனின் பார்வை இன்னமும் அதிர்ச்சியை அப்பட்டமாக வெளி காட்டியபடி தான் இருந்தது. அவனின் எண்ணம் மொத்தமும் பொய்த்து போய் விட்டது அல்லவா.. அதன் வெளிப்பாடு தான் இது..​

தேன் நிலவு தன் தலையை குனிந்த படி சங்கடமாக அமர்ந்திருந்தாள்.​

கஸ்தூரி, “என் தங்கச்சிக்கு படிப்பு சுத்தமா வராது. அதனால் ஒன்பதாவதுக்கு மேல படிக்க மாட்டேன்னு அவளே சொல்லிட்டா.. நாங்களும் கட்டாயப்படுத்தல..”.​

“இந்த வீட்டுக்கு அவ தான் ரொம்ப செல்லம். நீங்க தான் அவளை நல்லா பார்த்துக்கணும். அவளுக்கு எந்த விவரமும் தெரியாது. இங்கிலீஷ்ல நாலு வார்த்தை பேச கூட தெரியாது”.​

மெய்யழகனின் முன்பு எவ்வளவு மட்டம் தட்ட முடியுமோ அவ்வளவையும் செய்து கொண்டிருந்தனர். அவர்களின் வார்த்தையில் தேன்நிலவிற்கு கண்கள் கலங்கிவிட்டது.​

தன் உடன் பிறந்தவளை பற்றி அவளின் கணவரிடம் இப்படி எல்லாம் கூற தன் அக்காவிற்கு எப்படி மனம் வந்தது என்று எண்ணியவளுக்கு வெகுவாக மனம் வலித்தது.​

கீதா, “நீங்க சொல்றதை எல்லாம் பார்த்தா நீங்க ரொம்ப புத்திசாலியா இருப்பீங்கனு நினைக்கிறேன். ஆனா, பாவம் உங்களுக்கு இப்படி ஒரு மக்கு பொண்டாட்டி கிடைச்சிருக்கா” என்று கூறி நகைக்க.​

மெய்யழகன் அவரைப் பார்த்த பார்வையில் அவரின் வாய் ‘கப்சிப்’ என்று மூடிக்கொண்டது. அவனின் கோபத்தை நன்கு தூண்டி விடும்படி பேசிக் கொண்டிருந்தனர் மூவரும்.​

மெய்யழகன் தங்களுக்கு சார்பாக தங்களுடன் சேர்ந்து கொண்டு தேன் நிலவைப் பற்றி பேசுவான் என்று எதிர்பார்த்து இவர்கள் பேச.. ஆனால் நடந்ததோ வேறாகி போனது.​

கஸ்தூரி, “எனக்கு உங்களுடைய நிலைமை நல்லாவே புரியுது. என் தங்கச்சிக்கு படிப்பறிவும் இல்லை.. கிறுக்கச்சி மாதிரி விளையாட்டு தனமா எதையாவது உளறிக்கிட்டு இருப்பா.. எதையுமே சரியா செய்ய தெரியாது. நீங்க தான் அவளை நல்ல படியா பார்த்துக்கணும்” என்றார் வேண்டுமென்று.​

என்ன தான் மற்றவர்கள் ஆயிரம் பேசினாலும் மெய்யழகனின் மனதை அரித்து கொண்டே இருந்தது.. கீதாவின் ‘மக்கு பொண்டாட்டி’ என்ற வார்த்தை.​

மெய்யழகன், “எதை வச்சு சொல்றீங்க அவ மக்குனு?” என்றான் கீதாவை உறுத்து விழித்தபடி.​

கீதா, “அவளுக்கு படிப்பு மண்டையில் ஏறல.. அதை வச்சு தான் சொன்னேன்”.​

மெய்யழகனின்‌ விழிகள் தேன் நிலவில் படிய.. அவளோ விட்டால் விழுந்து விடுவேன் என்னும் நிலையில் விலும்பில் தொங்கிக் கொண்டிருக்கும் கண்ணீரை உள்ளடக்க பெரிதாக முயற்சித்துக் கொண்டு தலை தாழ்த்தியபடி அமர்ந்திருந்தாள்.​

மெய்யழகன், “மக்கா இருந்தாலும் பரவாயில்லை.. எனக்கு என்னுடைய மக்கு பொண்டாட்டியை தான் ரொம்ப பிடிச்சிருக்கு” என்று அவர்களுக்கு சூடாக பதில் அளித்துவிட்டு எழுந்து அறைக்கு சென்று விட்டான்.​

அவனின் வார்த்தையில் அனைவருமே வாயடைத்து போய் பார்த்தனர் தேன்நிலவு உட்பட..​

அவன் சென்றதும் கையை கழுவி விட்டு வேகமாக பின்பக்கம் சென்று விட்டாள் தேன்நிலவு..​

கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் கொட்டிக் கொண்டு இருந்தது. இது ஒன்றும் புதிதல்ல.. அவள் பத்தாம் வகுப்பு படிக்கவில்லை என்பது அவளுக்குமே தெரிந்த விஷயம் தான்.​

ஏன் இதை மெய்யழகனே கேட்டிருந்தாலும் அவள் வெளிப்படையாக உண்மையை கூறி தான் இருப்பாளே தவிர, பொய் உரைத்திருக்க போவதில்லை.​

ஆனாலும், இப்படி அனைவரின் முன்னிலையிலும் அவளை மட்டம் தட்ட வேண்டும் என்பதற்காகவே தன் வீட்டினர் மெய்யழகனிடம் இப்படி கூறியதை அவளால் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.​

அவன் தன்னை பற்றி என்ன நினைத்திருப்பான் என்று எண்ணியவளுக்கு தன் வீட்டினரை போல் இனி அவனும் தன்னை மட்டம் தட்டுவானோ என்ற எண்ணம் தான் பூதாகரமாய் அவளை மிரட்டியது.​

அறைக்குள் வந்த மெய்யழகனும் கோபமாக தன் கைகளை இறுக்கமாக கூடியவாறு குறுக்கும் நெடுக்குமாக அறைகுள்ளேயே நடை பயிற்சி செய்து கொண்டு இருந்தான்.​

அவனின் கோபம் சற்றும் குறைந்த பாடில்லை. ஜன்னலின் அருகில் சென்று நின்றவனுக்கு குளிர்ந்த காற்று அவனை தழுவி செல்ல.. தன் தலையை கோதி தன்னை சமன் செய்ய முயற்சித்தவனுக்கு லேசாக மனம் இலகுவானது போல் தோன்றியது.​

ஆனாலும், கீதாவின் ‘மக்கு பொண்டாட்டி’ என்ற வார்த்தை அவனின் காதுகளில் இன்னுமே கேட்டு கொண்டு தான் இருந்தது.​

‘எவ்வளவு தைரியம் இருந்தால் என் பொண்டாட்டியை மக்கு பொண்டாட்டினு அவங்க சொல்லுவாங்க.. ஏன் படிக்கலைனா அவங்க மக்கா.. படிச்சா தான் அறிவாளியா..’.​

‘அப்படியே இருந்தாலும் என் முன்னாடியே எப்படி அவங்க என் பொண்டாட்டியை மக்குனு சொல்லலாம்’ என்று பொறுமியவாறு நின்றிருந்தான்.​

எவ்வளவு கட்டுப்படுத்தியும் அவனின் கோபம் மட்டுப்படுவதாக இல்லை. அவனின் மனம் போகும் போக்கை எண்ணியவனுக்கு அவனுக்கே அவனை எண்ணி பெரும் ஆச்சரியமாக தான் இருந்தது.​

மெய்யழகனிற்கு பொதுவாகவே ஒரு பழக்கம் இருக்கிறது. தன்னை சார்ந்த விஷயங்களை பற்றி மற்றவர்கள் யாரேனும் குறை கூறும்படி பேசினால் அது அவனுக்கு சுத்தமாக பிடிக்காது.​

அதில் குறையே இருந்தாலும் கூட, அதை நிறைவாக காட்டிக் கொள்வான். அப்படி தான் அனைவரின் முன்னிலையிலும் பேசி விட்டு வந்திருக்கிறான் தேன் நிலவிற்காக..​

தேன்நிலவை இவனுக்கு பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ அது இரண்டாம் பட்சம் தான்.. எப்படி இருந்தாலும் தேன்நிலவு இப்பொழுது மெய்யழகனின் மனைவி..​

அவனின் மனைவியை எப்படி அடுத்தவர் குறை கூறலாம், மட்டம் தட்டி பேசலாம் என்ற கோபம் தான் மெய்யழகனுக்கு பெரிதாக ஏற்பட்டது. மீண்டும் தன் கோபத்தை மட்டுப்படுத்த வேண்டி அந்த அறைக்குள் நடக்க தொடங்கி விட்டான்.​

அப்பொழுது அங்கே நீண்ட வரிசையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் தான் அவனின் கண்ணில் பட்டது. அதன் அருகே சென்றவன் தன் மனதை மாற்றும் பொருட்டு அதில் ஒன்றை எடுத்து புரட்ட தொடங்கினான்.​

புத்தகத்தின் முதல் பக்கத்தில் தேன்நிலவு என்று அழகாக செதுக்கி வைத்தது போல் தமிழில் எழுதி இருந்தாள் தேன்நிலவு. அதை பார்த்தவனின் கைகள் தானாக மேலெழுந்து அவளின் பெயரை வருடியது.​

தான் செய்து கொண்டிருக்கும் காரியத்தை உணர்ந்தவன் ஒரு நொடி திகைத்து சட்டென்று தன் கையை பின்னெடுத்துக் கொண்டான். தன் குரலை செறுமியவாறு புத்தகத்தை புரட்ட தொடங்கினான்.​

அப்படியே ஒவ்வொரு புத்தகங்களாக எடுத்து புரட்டிக் கொண்டிருந்தவனுக்கு மனம் சற்று லேசானது போல் இருந்தது. மீண்டும் அந்த ஜன்னலின் அருகே சென்று நின்றவனுக்கு முன்பிருந்ததை விட கோபம் சற்று குறைந்து தான் இருந்தது.​

அவனின் இதழ்கள் மட்டும் ‘மக்கு பொண்டாட்டி’ என்று முணுமுணுத்தது.​

பின் பக்கமாக நின்று அழுது தீர்த்த தேன்நிலவு தன் முகத்தை அங்கிருந்த குளிர் நேரில் நன்கு அடித்து கழுவி விட்டு உள்ளே நுழையும் வேளையில்..​

அவளை நோக்கி ஓடிவந்த கல்பனா, “சித்தி சித்தப்பா சூப்பரா இருக்காரு.. உனக்கு முதல்ல பார்த்த மாப்பிள்ளைகளை விட இந்த சித்தப்பா பொருத்தமா இருக்காரு.. உங்க ரெண்டு பேரையும் பாக்குறதுக்கே மேட் ஃபார் ஈச் அதர் மாதிரி இருக்கீங்க” என்றவளுக்கு கசந்த புன்னகையை மட்டுமே பதிலாக அளித்தவள் அறைக்கு சொல்ல எத்தனித்தாள்.​

மனம் முழுக்க எக்கச்சக்க கேள்விகள்.. ‘தன்னை பற்றி என்ன நினைப்பான்.. அவனும் தன் வீட்டினரை போல் தன்னை மட்டம் தட்டி பேசுவானோ.. அல்லது ஏன் இதையெல்லாம் என்னிடம் முன்னதாகவே கூறவில்லை என்று கோபப்படுவானோ.. அவனுக்கு நான் சற்றும் தகுதியற்றவள் என்று சாடுவானோ..’ என்று என்னவெல்லாமோ எண்ணம் எழ.​

குழம்பிய குட்டையான மனதோடு அறை வாயில் வரை சென்றவளுக்கு அதற்கு மேல் அடியெடுத்து வைக்க முடியவில்லை.​

சகுந்தலா, “தேனு ஒரு நிமிஷம் நில்லு” என்றவர் ஓட்டமும் நடையுமாக தன் மகளை நோக்கி வந்தார்.​

தேன்நிலவு ‘என்ன’ என்பது போல் அவரை பார்க்க.​

அவளின் கையில் ஒரு டம்ளர் பாலை திணித்தவர், “இந்தா.. இதை போய் மாப்பிள்ளைக்கு கொடு”.​

தேன்நிலவு அப்படியே நிற்கவும்..​

சகுந்தலா, “என்னடி அப்படியே நிக்குற போ.. உள்ளே போய் மாப்பிள்ளைக்கு கொடு”.​

தன் தாயின் முன்பு வேறு வழி இன்றி அறைக்குள் நுழைந்தாள் தேன்நிலவு.. மனம் முழுவதும் எதுவோ அழுத்துவது போன்ற பாரம்.. குற்ற உணர்ச்சி.. அவளை வெகுவாக வாட்டியது.​

எதற்காகவென்றால் அது அவளுக்கே தெரியவில்லை. ஜன்னலினோடு வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மெய்யழகன் தேன்நிலவின் முகத்தை வைத்தே அவள் இவ்வளவு நேரம் அழுது இருக்கிறாள் என்பதை சரியாக கணித்து விட்டான்.​

தேன்நிலவு அவனின் முகத்தையே மறந்தும் பார்ப்பதற்கு மிகவும் சங்கடமாக உணர்ந்தவள்.. தலையை தாழ்த்தியபடியே அவனின் எதிரே வந்து நின்றபடி தன் கையில் இருக்கும் பால் டம்ளரை அவனின் முகத்தருகை நீட்டினாள்.​

மெய்யழகன், “என்ன இது?”.​

தேன்நிலவு மெதுவான குரலில், “அம்மா உங்களுக்கு கொடுக்க சொன்னாங்க”.​

“அங்க வை நான் அப்புறமா குடிக்கிறேன்” என்றவன் அருகில் இருந்த டேபிளை காட்ட.​

தேன்நிலவு அமைதியாக சென்று டேபிளின் மீது அந்த பால் டம்ளரை வைத்துவிட்டு கட்டிலில் படுக்க சென்றாள்.​

மெய்யழகன், “எங்க போற?”.​

தேன்நிலவு, “தூங்க போறேன்”.​

மெய்யழகன், “எனக்கு தூக்கம் வரல.. ரொம்ப போர் அடிக்குது எதாவது பேசு”.​

பேசும் மனநிலையில் அவள் இல்லை என்பதை அவன் உணர்ந்தாலும் அவளை இலகுவாக்கும் பொருட்டு அவளிடம் பேச நினைத்தான். அவளோ எதுவும் கூறாமல் அமைதியாக இருக்க.​

மெய்யழகன் அந்த டேபிளின் மீது அடுக்கி வைத்து இருந்த புத்தகத்தில் ஒரு புத்தகத்தை எடுத்தபடி, “இதெல்லாம் யாருடைய புக்ஸ்?” என்றான் தெரியாதவன் போல்.​

முன் பக்கத்திலேயே தேன்நிலவு என்ற பெயரை சற்று நேரத்திற்கு முன்பு வருடி கொடுத்தவன் இவன் தானா என்று பார்ப்போர் சந்தேகிக்கும் அளவிற்கு இருந்தது அவனின் கேள்வி.​

தேன்நிலவு, “என்னுடையது தான்..” என்றவள் அவசரமாக புத்தகங்கள் அனைத்தையும் அங்கிருந்து அப்புறப்படுத்த தொடங்கினாள்.​

மெய்யழகன் அவளின் நடவடிக்கையை புரியாமல் பார்த்தவன், “என்ன பண்ற?”.​

மெய்யழகன் தேன்நிலவை ஆதரிப்பானா.. அல்லது அவமதிப்பானா..​

 

RJ novels

Moderator

மெய்யழகனின் தேன்நிலவு - 21​

தேன்நிலவு, “இதெல்லாம் ஸ்டோரி புக்” என்றாள் தயக்கமான குரலில்.​

மெய்யழகன், “சோ வாட்.. யாரோடதுனு தானே கேட்டேன். அதுக்கு ஏன் புக்ஸை எல்லாம் எடுத்து வைக்கிற”.​

தேன்நிலவு, “இல்ல.. இதெல்லாம் கதை புக்கு..” என்று இழுத்தாள்.​

ஏனென்றால், கஸ்தூரி பார்க்கும் பொழுதெல்லாம் இவள் கதை புத்தகத்தை படிப்பதை பார்த்து இவளை திட்டிக் கொண்டே இருப்பார்.​

எங்கே அதே போல் மெய்யழகனும் ஏதாவது தன்னை வலிக்கும்படி பேசி விடுவானோ என்ற பயத்தினால் அனைத்து புத்தகத்தையும் அப்புறப்படுத்த தொடங்கினாள்.​

மெய்யழகன், “உனக்கு புக்ஸ் படிக்கிறது பிடிக்குமா?” என்றவனின் கேள்வியில் தேன் நிலவின் முகம் சற்று தெளிவடைந்தது.​

“ம்ம்.. ரொம்ப பிடிக்கும்”.​

மெய்யழகன், “ஓ! இது எல்லாமே நீ படிச்ச புக்ஸ் தானே” என்றான் பார்வையால் அங்கே வைக்கப்பட்டு இருக்கும் புத்தகங்களை காட்டியபடி.​

தேன்நிலவு ஏதேனும் கூறப் போகிறானோ என்ற தயக்கத்தோடு, “ம்ம்” என்றாள் ஆமோதிப்பாக.​

“நாளைக்கு வீட்டுக்கு போகும் போது இந்த புக்ஸ் எல்லாத்தையும் ஒரு பேக்ல வச்சு கொண்டு வா”.​

தேன் நிலவு, “எதுக்கு?”.​

மெய்யழகன், “எனக்கும் புக்ஸ் படிக்கிறது ரொம்ப பிடிக்கும். இரண்டு பேரும் சேர்ந்து படிக்கலாம்” என்றது தான் தாமதம்..​

தேன் நிலவின் முகம் நொடியில் பிரகாசமாக ஜொலித்தது. தன் முத்து பற்கள் தெரிய சிரித்தவள், “நிஜமாவா சொல்றீங்க.. உங்களுக்கும் புக்ஸ் படிக்க பிடிக்குமா.. நீங்க என்ன மாதிரி புக் எல்லாம் படிப்பீங்க?”.​

மெய்யழகன், “நான் எல்லா புக்ஸீமே படிப்பேன். உன் அளவுக்கு இன்ட்ரஸ்டா படிப்பேனானு எனக்கு தெரியல.. எனக்கு அவ்வளவு ப்ரீ டைம் இருந்ததில்லை. எப்போவாவது ப்ரீ டைம் கிடைக்கும் பொழுது கொஞ்சம் படிப்பேன்”​

தேன்நிலவு, “ஓ!”.​

மெய்யழகன் அங்கே வீற்றிருந்த ஒரு புத்தகத்தை தன் கையில் எடுத்தவன், “இந்த புக் உடைய ஸ்டோரி என்னனு சொல்லேன்” என்றது தான் தாமதம்..​

தேன்நிலவு அந்த புத்தகத்தை தன் கையில் வாங்கி ஒரு நொடி புரட்டியவள் அந்த புத்தகத்தின் கதையை முழு மூச்சாக கூற தொடங்கி விட்டாள்.​

தன் எதிரே அடர் நீல நிற பட்டுடுத்தி மிதமான நகைகளுடன் எந்த ஒரு அலங்காரமும் இல்லாமலேயே பேரழகியாய் நின்றிருக்கும் தன் மனைவியையே கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் மெய்யழகன்.​

அவனையும் மீறி அவனின் மனதிற்குள் தேன் நிலவு கொஞ்சம் கொஞ்சமாக தன் ஆக்கிரமிப்பை தொடங்கி விட்டாள் என்று தான் கூற வேண்டும்.​

அவளின் நீண்ட நெடிய கூந்தலை அழகாக பின்னலிட்டு இருக்க.. தலை நிறைய மல்லிகை பூவும்.. நெற்றியில் சிறிய அளவில் பொட்டும்.. நெற்றியிலும், வகுட்டிலும் குங்குமம் இட்டு இருந்தாள்.​

கோலிகுண்டு கண்களும், ஆப்பிள் போன்ற குண்டு கன்னங்களும், குட்டியான வட்ட வடிவ முகமும், சிறிய அதரங்களும், கூர் நாசியும் அவள் பால் அவனை இழுத்து விட்டது என்று தான் கூற வேண்டும்.​

திருமணம் ஆகி இரண்டு நாட்கள் முடியப்போகிறது.. இப்பொழுது தான் தன் மனைவியின் முகத்தையே ரசனையாக பார்க்கிறான் என்று தான் கூற வேண்டும்.​

தன் கணவன் தன்னையே கண்ணெடுக்காமல் பார்க்கிறான் என்பதை கூட உணராத தேன்நிலவு கதைக்குள் மூழ்கி விட்டாள். தன் கைகளை ஆட்டி ஆட்டி அவள் பாட்டிற்கு கதை கூற தொடங்கிவிட்டாள்.​

ஆனால், அவள் கூறும் கதைகளை எல்லாம் மெய்யழகனின் செவிகள் கேட்டால் தானே.. அவன் தான் தன் மனைவியையே அளவெடுத்துக் கொண்டிருக்கிறானே..​

காற்றில் அலை அலையாய் ஆடி அவளின் முகத்தை தீண்டிக் கொண்டிருக்கும் முடி கற்றையை பிடித்து அவளின் காதுக்கு பின்னே அடக்கி வைக்க வேண்டும் என்று மெய்யழகனின் கைகள் பரபரத்தது.​

அவனுக்கே அவனின் உணர்வுகளை எண்ணி பெரும் ஆச்சரியமாக தான் இருந்தது. தனக்கு எப்படி ஒரு மனைவி வேண்டும் என்று நினைத்தானோ.. அதற்கு அப்படியே எதிர் மறையாக கிடைத்திருக்கிறாள் தேனிலவு.​

ஆனால், அவள் பால் இழுக்கப்படும் தன் மனதை எண்ணி தான் ஆச்சரியமாக பார்த்தான். அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனின் கைகள் தன்னையும் மீறி அவளின் முடியை சரி செய்ய மேலெழுந்து விட்டது.​

சட்டென்று அவனின் கைகள் மேலெழுவதை பார்த்த தேன்நிலவு அவனை புரியாமல் பார்த்தபடி, “என்ன?” என்க.​

அதில் சுதாரித்த மெய்யழகன் தன் மற்றொரு கையையும் மேல் கொண்டு வந்தவன். அவளின் முன்னே கை தட்டினான். தேன்நிலவு அவனை புரியாமல் பார்க்க..​

மெய்யழகன் தடுமாற்றத்தோடு, “சூப்பர்.. கதை ரொம்ப நல்லா இருந்துச்சு” என்கவும்.​

அவன் கதைக்காக தான் கை தட்டுகிறான் என்று அவளும் நினைத்துக் கொண்டாள்.​

தேன்நிலவு, “ஆமா.. இந்த கதை எனக்கும் ரொம்ப பிடிக்கும். இவங்க என்னுடைய பேவரட் ரைட்டர்.. ரொம்ப நல்லா எழுதுவாங்க” என்று அவள் போக்கிற்கு பேசிக் கொண்டே போனாள்.​

அவளின் பேச்சிலேயே அவளுக்கு இதில் இருக்கும் ஆர்வத்தை நன்கு புரிந்து கொண்டான் மெய்யழகன். இதுவரை அவள் குடும்பத்தில் இருப்பவர்கள் கூட யாருமே அவளிடம் இப்படி எல்லாம் பேசியது கிடையாது.​

அதுவே மெய்யழகனிடம் அவள் இவ்வளவு உற்சாகமாக பேச முக்கிய காரணமாகி போனது. இவள் கதை புத்தகத்தை எடுத்தாலே கஸ்தூரி பொரிய தொடங்கிவிடுவார்.​

தேன் நிலவின் அறையில் கதை புத்தகத்தை கண்டாலே வெகுண்டு எழுந்து விடுவார் கஸ்தூரி. அவர் ஊருக்கு வருகிறார் என்றாலே அனைத்து புத்தகத்தையும் எடுத்து ஒளித்து வைத்துவிட்டு தான் மறு வேலை பார்ப்பாள் தேன்நிலவு.​

அப்படிப்பட்டவளுக்கு மெய்யழகன் தானாக முன் வந்து அவளின் கதைகளை பற்றி கேட்கவும் ஆர்வமிகுதியில் அதற்குள் மும்முரமாக இறங்கி விட்டாள் என்று தான் கூற வேண்டும்.​

எவ்வளவு நேரம் கதை கூறுகிறேன் என்ற பெயரில் அவள் பேசிக் கொண்டே இருந்தாளோ.. அதை இருவருமே அறியவில்லை.​

நேற்று எல்லாம் மெய்யழகன் தேன் நிலவை கேள்வி கேட்டே ஒரு வழி செய்து விட்டான் என்றால்.. இன்று தேன் நிலவு பேசியே நேரத்தை கடத்தி விட்டாள் என்று தான் கூற வேண்டும்.​

தேன் நிலவு அவள் போக்கிற்கு பேசிக் கொண்டே போக.. மெய்யழகன் தனி உலகத்தில் தன் மனைவியை ரசித்து கொண்டு இருந்தான்.​

அவனின் இதழ்கள் மீண்டும் ‘மக்கு பொண்டாட்டி’ என்று மெலிதாக மெல்லிய சிரிப்போடு முணுமுணுத்தது.​

கவிதாவோ கட்டிலின் விளிம்பில் விட்டால் கீழே விழுந்து விடுவேன் என்பது போல் படுத்திருந்தாள்.​

அழகேசன் சற்று நேரம் விட்டத்தை பார்த்தபடி எதையோ சிந்தித்து கொண்டு இருந்தவன். பக்கவாட்டாக திரும்பி தன் மனைவியை பார்த்தான்.​

அவளோ வேறு புறம் திரும்பியவாறு அவனுக்கு முதுகு காட்டிக்கொண்டு கட்டிலின் விளிம்பில் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்தவன்.​

அவள் சுதாரிப்பதற்குள்ளாக அவளின் இடையோடு தன் கரம் கொடுத்து இழுத்து அவளை தன் அருகில் படுக்க வைத்தான்.​

நிமிடத்தில் நடந்தேறிய செயலால் அதிர்ந்து போன கவிதா, “என்ன பண்றீங்க நீங்க?” என்று பதறியவாறு தன் இடையை சுற்றி இருக்கும் அழகேசனின் வலுகொண்ட கரத்தை விளக்க முற்பட்டாள்.​

ஆனால், அதுவோ அவ்வளவு அழுத்தமாக அவளின் இடையில் பதிந்தது. அவளால் அதை அசைக்கக்கூட முடியவில்லை. அவன் கரம் பதித்திருந்த இடம் வேறு அவளுக்குள் ஒரு வித குறுகுறுப்பை கொடுக்க.​

அவனின் கரங்களுக்குள் நெளிந்து கொண்டே, “ப்ளீஸ்.. கையை எடுங்க.. எதுக்கு இப்படி எல்லாம் பண்றீங்க” என்றாள் பரிதவிப்பான குரலில்.​

அழகேசன், “அப்புறம் எதுக்கு நீ அந்த கடைசியில் போய் படுத்திருக்க.. இவ்வளவு பெரிய கட்டிலில் நான் மட்டும் ஃப்ரீயா தூங்கணும். நீ மட்டும் ஓரமா போய் தூங்கணுமா”.​

கவிதா, “நான் சும்மா தான் படுத்திருந்தேன்”.​

அழகேசன், “எனக்கு எதையாவது கட்டிப்பிடித்துக் கொண்டு தூங்கினால் தான் தூக்கமே வரும்” என்றவன் அவளை தன்னோடு மேலும் இருக்கியவாறு தன் கண்களை மூடி கொண்டான்.​

அதில், கவிதாவின் நிலை தான் மிகவும் பரிதாபமாகி போனது. அவனின் அணைப்பிலும், இத்தனை அருகாமையிலும் அவளின் தூக்கம் எங்கோ பறந்து போய்விட்டது என்று தான் கூற வேண்டும்.​

நெளிந்து கொண்டே தன் கை அணைவுக்குள் கோழி குஞ்சியை போல் குறுக்கி இருக்கும் தன் மனைவியை குனிந்து அவளின் மதி முகத்தை நோக்கியவன்.​

“ம்ம்ச்ச்.. என்ன டி ஏன் இப்படி நெளிஞ்சுகிட்டே இருக்க”.​

கவிதா, “எனக்கு இப்படி எல்லாம் படுத்தா தூக்கம் வராது” என்றாள் மெல்லிய குரலில்.​

அழகேசன், “இனிமே பழகிக்கோ.. எனக்கு இப்படி படுத்தா தான் தூக்கம் வரும்”.​

நேற்றாவது இவள் தூங்கிய பிறகு தான் இவளின் மீது கை கால்களை போட்டான். ஆனால், இப்பொழுதோ இவள் இப்படி விழித்திருக்கும் பொழுதே அப்படி செய்யவும்.. அவளின் தூக்கம் எங்கோ பறந்து போய்விட்டது என்று தான் கூற வேண்டும்.​

கவிதா அழுகைக்கு தயாராகும் குரலில், “ப்ளீஸ்.. எனக்கு இதெல்லாம் பழக்கம் இல்லை. எனக்கு இப்படி எல்லாம் படுத்தா தூக்கமே வராது” என்க.​

அழகேசன், “இங்க பாரு கவிதை.. நமக்கு கல்யாணம் முடிஞ்சு போச்சு. இனி இதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா பழகிக்க ட்ரை பண்ணு.. சும்மா எனக்கு இப்படி செட் ஆகாது அப்படி செட் ஆகாதுனு ஏதாவது சொல்லிக்கிட்டே இருக்காத..”.​

“டூ டேஸ் இப்படி தூங்கினா அப்புறம் உனக்கும் இதுவே பழகிடும். அப்புறம் நான் இல்லாமல் உனக்கு தூக்கமே வராது” என்றான் ஒரு மாதிரியான குரலில்.​

அவனின் குரல் மாறுதலை உணர்ந்த கவிதா அவனுக்குள் கோழி குஞ்சியை போல் ஒடுங்கியபடி தன் விழிகளை மூடிக்கொண்டாள்.​

அவளின் செயலில் அழகேசனின் இதழில் ரகசிய புன்னகை அரும்பியது. அவளின் அணைப்பில் படுத்த உடனேயே அழகேசன் உறங்கிவிட..​

கவிதாவிற்கு தான் வெகு நேரம் ஆகியும் உறக்கம் வராமல் விழித்து கொண்டிருந்தவள். பிறகு, அவளும் தன் கணவனின் அணை​

ப்பில் கண் அயர்ந்து விட்டாள்.​

மறுநாள் மீண்டும் இரண்டு ஜோடிகளும் அவர்களின் மாமியார் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.​

 

RJ novels

Moderator

மெய்யழகனின் தேன்நிலவு - 22​

அன்றைய நாள் அவர்களின் உறவினர்கள் எல்லாம் திருமணமான புது ஜோடிகளை பார்க்க வேண்டி அவர்களின் வீட்டிற்கு படையெடுத்த வண்ணம் இருந்தனர்.​

உறவினர்கள் வந்து சென்ற வண்ணமாகவே இருப்பதால் கௌரி தேன் நிலவையும், கவிதாவையும் பட்டுப் புடவை அணிந்து நகைகளையும் அணிவித்துக் கொள்ளுமாறு கூறி இருக்கவே..​

இருவரும் அவர் கூறியபடி செய்தனர். தேன்நிலவும், கவிதாவும் அமர்ந்திருக்க.. அவர்களை சுற்றிலும் கௌரியின் உறவுக்காரர்கள் ஏதேதோ பேசி கலகலத்துக் கொண்டிருந்தனர்.​

தேன்நிலவு கவிதாவின் காதில் கிசுகிசுப்பாக, “கவி இதெல்லாம் எப்போ முடியும்.. இனிமேல் டெய்லி இப்படி தான் ஜவுளிக்கடை பொம்மை மாதிரி உட்காரணுமா” என்றாள் அலுப்பான குரலில்.​

கவிதா அவளைப் போன்றே, “எனக்கு என்னடி தெரியும். ஸ்டார்டிங்ல தான் இப்படி சொந்தக்காரங்க எல்லாம் வருவாங்கனு நினைக்கிறேன். அப்புறம் போக போக யாரும் வர மாட்டாங்க”.​

தேன்நிலவு, “என்னால் முடியல டி.. விட்டா இங்கேயே படுத்து தூங்கிடுவேன் போலருக்கு.. செம டயர்டா இருக்கு”.​

அப்பொழுது அழகேசன் அந்த புறமாக சென்றவனின் பார்வையோ கவிதாவை தன் பார்வையாலேயே உரச..​

உறவுக்கார பெண்மணி, “என்ன அழகு பொண்ண இப்படி பாக்குற” என்றாள் கிண்டலாக.​

அழகேசன் தன் தலையை கோதியவாறு நிற்க.​

அப்பெண்மணி, “உன் பொண்டாட்டியை நாங்க எங்கேயும் தூக்கிக்கிட்டு போயிட மாட்டோம். அவள் பத்திரமா இங்கேயே தான் இருப்பாள். நீ ஒன்னும் பயப்படாத”.​

மற்றொருத்தி, “அழகுக்கு கொஞ்ச நேரம் கூட பொண்டாட்டியை பார்க்காமல் இருக்க முடியாது போலருக்கே.. குட்டி போட்ட பூனை மாதிரி இங்கேயே சுத்தி சுத்தி வர” என்று கிண்டல் செய்ய.​

அழகேசனை திருமணம் செய்யும் முறை உள்ள பெண்ணோ, “ஏன் மாமா.. கல்யாணம் நின்னு போனதும் என்னை கை காட்டி இருக்கலாம் இல்ல.. நான் கூட நீ என்னைய தான் கை காட்டுவனு ரெடியா உட்கார்ந்திருந்தேன். கடைசில இப்படி என்னை ஏமாத்திட்டியே” என்று கூறி நகைக்க.​

அழகேசன், “அதுக்கு என்ன பண்றது.. எனக்கு உன்னை கட்டிக்கணும்னு தோணலையே” என்றான் தன் தோள்களை குலுக்கி சாதாரணமாக.​

அதற்கு அந்த பெண்ணோ, “ஓ! அப்போ ஐயாவுக்கு இந்த பிள்ளையை தான் கட்டிக்கணும்னு தோணுச்சா..” என்றவளின் வார்த்தையில் கவிதாவின் தலை தானாக தரையை பார்த்தது.​

இவர்களின் கிண்டல் பேச்சில் அவளால் தன் தலையை நிமிர்த்தவே முடியவில்லை.​

தான் இங்கு இருந்து செல்லும் வரையிலுமே அவள் தன் தலையை நிமிர்த்த மாட்டாள் என்பதை உணர்ந்த அழகேசன் அவளை மொத்தமாக விழுங்கும் பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டான்.​

அவன் அங்கிருந்து நகர்ந்த பிறகு தான் கவிதாவிற்கு சீரான மூச்சுக்காற்றே வந்தது.​

உறவுக்கார பெண்மணியோ, “என்ன கவிதா என்ன செஞ்சு எங்க அழகேசனை இப்படி மொத்தமா மாத்திட்ட” என்று கிண்டலாக கேட்க.​

அவளிடம் எந்த பதிலும் இல்லை.. மெலிதாக ஒரு புன்னகையை சிந்தியவளிற்கு அங்கு அமர்வதே பெரும் அவஸ்தை ஆகிப்போனது.​

திருமணத்திற்கு பிறகு மெய்யழகன் தங்கள் வீட்டினர் யாரிடமும் பேசுவதே இல்லை. அனைவரிடமும் தான் பேசுவதையே நிறத்தி கொண்டான் என்று தான் கூற வேண்டும்.​

தன் தாய், தந்தை, அண்ணன் உட்பட அனைவருக்கும் பாரா முகம் காட்டிக் கொண்டு இருந்தான். அதை கவனித்தாலும் வெளிப்படையாக கேட்க சந்தர்ப்பம் அமையாததால் கௌரியும், ரத்தினமும் சற்று அமைதி காத்தனர்.​

வந்திருந்த உறவுக்கார பெண்மணிகள் அனைவரும் கிளம்பவும் தான் தேன் நிலவிற்கும், கவிதாவிற்கும் ‘அப்பாடா’ என்று இருந்தது.​

வேகமாக தங்கள் அறைக்கு விரைந்தவர்கள் இலகுவான புடவையை மாற்றிக்கொண்டு நகைகளை எல்லாம் கழட்டி பத்திரப்படுத்தினர்.​

மாலை நேரமாகவும் மெய்யழகன் ஹாலில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தான்.​

தேன்நிலவு அழகேசனின் அறை கதவை தட்டிக் கொண்டிருந்தாள்.​

அழகேசனோ கவிதாவை அறையை விட்டு வெளியே விடமாட்டேன் என்பது போல் அறை கதவின் மேல் சாய்ந்து கொண்டு நின்றிருந்தான்.​

கவிதாவிற்கு அவனை தாண்டி வெளியே செல்ல முடியாத நிலை..​

தேன்நிலவு வெளியே இருந்தவாறு, “அடியேய் கவி.. இன்னும் என்ன செஞ்சுகிட்டு இருக்க சீக்கிரம் வெளியில் வா” என்று குரல் கொடுக்க.​

கவிதா கதவையும் அழகேசனையும் மாற்றி மாற்றி பார்த்தவள், “தேனு தான் கூப்பிடுறா” என்றாள் மெதுவான குரலில்.​

அழகேசன், “எனக்கும் கேட்குது”.​

கவிதா, “அப்போ கொஞ்சம் நகருங்களேன்.. இப்படி நின்னா நான் எப்படி போறது”.​

அழகேசன், “நீ போகக் கூடாதுனு தான் நான் இப்படி நிக்குறேன்”.​

கவிதா அவனை புரியாமல் பார்க்க..​

அவளை நோக்கி ஒவ்வொரு எட்டுகளாக எடுத்து வைத்தவன் அவளை நெருங்கி வரவும்.. கவிதாவிற்கு மூச்சு விடுவதே சிரமமாகி போனது.​

அவன் அவளின் அருகே வர அவளுக்கு பதட்டத்தில் வியர்வை முத்துக்கள் பூக்க தொடங்கியது. வயிற்றுக்குள் ஒரு கலவரமே நடக்க.. படபடக்கும் இதயத்தோடு நின்றிருந்தாள்.​

அழகேசனும் அவளையே ஊடுருவும் பார்வை பார்த்தபடி முன்னேற..​

அவளுக்கு இதயம் வெளியே குதித்துவிடும் அளவிற்கு தொண்டைக் குழியில் துடித்துக் கொண்டிருந்தது. கண்களிலோ மெல்லிய நீர்ப்படலம் ஊற்றெடுக்க..​

அவனின் முகத்தையே பார்க்க முடியாதவளாக தன் தலையை தாழ்த்திக் கொண்டவளுக்கு அவனின் கால்கள் தன்னை நோக்கி முன்னேறுவது தெரியவும் மெதுவாக இவள் ஒவ்வொரு எட்டுகளாக பின் வைத்து நகர்ந்தாள்.​

இறுதியில் அவளுக்கு அதற்கு மேல் நகர முடியாத நிலை.. தனக்கு பின்னே இருக்கும் டிரெஸ்ஸிங் டேபிளை ஒரு பார்வை பார்த்தவள் முன்னே திரும்ப..​

அழகேசனின் முகமோ இவளுக்கு வெகு வெகு அருகாமையில் காட்சி அளித்தது. அவ்வளவு தான்.. மூர்ச்சையாகிவிட்டாள் என்று தான் கூற வேண்டும்.​

மூச்சை வெளியே விடவே மறந்தவளாக கண்கள் இரண்டும் தெரித்து விடும் அளவிற்கு பெரிதாக விரித்தபடி தன் முகத்தில் மனதில் இருக்கும் அதிர்ச்சியை அப்பட்டமாக பிரதிபலித்தவாறு நின்றாள்.​

அவளின் நிலையை உணர்ந்த அழகேசனின் இதழ்களுக்குள் விஷம புன்னகை படர்ந்தது. அவளின் உயரத்திற்கு ஏற்ப குனிந்தவன்..​

அவளின் முகத்தை உரசும்படி தான் நின்ற இடத்தில் இருந்தே தன் உடலை மட்டும் முன்னோக்கி நகர்த்த அவ்வளவு தான்.. முற்றிலுமாக அந்த ட்ரெஸ்ஸிங் டேபிளோடு ஒன்றி போனவள்.​

தன் கைகள் இரண்டையும் அந்த ட்ரெஸ்ஸிங் டேபிளில் வைத்து முட்டுக் கொடுத்தவாறு அதனோடு பல்லியை போல் ஒட்டிக்கொண்டு நின்றாள்.​

கிட்டத்தட்ட அவளின் கழுத்து வளைவில் அழகேசனின் முகம் உரசிவிட்டது. முகம் மட்டுமா அவனின் இதழ்கூட அவளின் கழுத்து வளைவில் பட்டும் படாமலும் உரசியது.​

அவளுக்கோ தன் நிலையை விவரிக்க வார்த்தைகளே இல்லை படபடத்து போய்விட்டாள். கால்கள் இரண்டும் வலுவிழந்ததைப் போல் உணர்ந்தவள். அப்படியே கீழே சரிந்து விழும் நிலைக்கே தள்ளப்பட்டாள்.​

நொடியில் அனைத்தும் அரங்கேறி விட்டது. சட்டென்று அவளின் பின்னிருந்த ட்ரெஸ்ஸிங் டேபிளில் இருந்து ஒரு சீப்பை தன் கையில் எடுத்தவன்..​

தன் தலைமுடியை சீவி கலைத்து விட.. அவனையே அதிர்ச்சி மாறாத முகத்தோடு வெளிறி போய் பார்த்துக் கொண்டே நின்று இருந்தாள் கவிதா.​

அவளை நோக்கி தன் ஒற்றை கண்ணை சிமிட்டியவன், “என்ன உன் பிரண்டு கத்துறது உன் காதில் கேட்கலையா.. அப்படியே நிக்கிற..” என்று கூறவும் தான் தன் சுயம் பெற்றவள்.​

தேன்நிலவு அழைப்பது மீண்டும் அவளின் செவி மடலில் கேட்க.. விட்டால் போதும் என்று வேகமாக அங்கிருந்து வெளியே ஓடி விட்டாள்.​

பதறி அடித்து வியர்க்க விறுவிறுக்க ஓடிவரும் தன் தோழியை பார்த்த தேன் நிலவிற்கு ஒன்றும் புரியவில்லை.​

“என்னடி என்ன ஆச்சு? ஏன் இவ்வளவு டென்ஷனா இருக்க”.​

கவிதா, “என்னால முடியல தேனு.. எனக்கு என்னென்னமோ பண்ற மாதிரி இருக்கு” என்கவும்.​

தேன்நிலவு அவளின் கையை பிடித்து விறு விறுவென மொட்டை மாடிக்கு அழைத்து சென்று விட்டாள்.​

மாலை நேரம் என்பதால் குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது. அது கவிதாவின் உடலில் பட.. அவளின் உடல் கொஞ்சம் கொஞ்சமாக தன் இறுக்கத்தை தளர்த்தியது.​

தேன்நிலவு, “என்னாச்சு கவி?” என்கவும்.​

அதற்கு மேல் பொறுக்க மாட்டாது அவளை அணைத்துக் கொண்டு அழ தொடங்கி விட்டாள் கவிதா.​

அவளின் அழுகையை பார்த்த தேன் நிலவு பதறிப் போய், “என்னடி என்னாச்சு? ஏன் இப்படி அழுகிறாய்?”.​

கவிதா, “எனக்கு ரொம்ப பயமா இருக்கு தேனு”.​

தேன் நிலவு அவளை தன்னிடமிருந்து பிரித்து எடுத்தவள், “என்ன பயம்.. எதுக்கு பயம்.. பியூட்டி ஏதாவது சொல்லுச்சா?”.​

கவிதா, “எனக்கு அவரை பார்த்தாலே பயமா இருக்கு. அவர் என்கிட்ட வந்தாலே படபடன்னு வருது”.​

தேன்நிலவு, “இதுல என்னடி இருக்கு.. அவர் உன்னுடைய புருஷன் தானே”.​

கவிதா, “அதான்டி பயமே.. எனக்கு அப்போதிலிருந்தே அவரைப் பார்த்தால் பயமா இருக்கும். இப்போ தினம் தினம் அவர் கூடவே இருக்கணும்.. நைட்ல தூங்கவே முடியல தேனு”.​

தேன் நிலவு சுற்றி முற்றி பார்த்தவள் அவளின் அருகே சென்று கிசுகிசுப்பாக, “ஏன் டி பியூட்டி ஏதாவது பண்ணிடுச்சா?”.​

கவிதா அவளை முறைத்து பார்த்தவள் அவளின் தோளில் அடித்தவாறு, “அதெல்லாம் ஒன்னும் இல்ல.. அவருக்கு எதையாவது கட்டிபிடிச்சுகிட்டு தூங்கினால் தான் தூக்கம் வருமாம்” என்றாள் தேன்நிலவின் முகத்தை பார்க்க முடியாமல் தரையை பார்த்தபடி மெதுவான குரலில்.​

தேன் நிலவு, “அதுக்கென்ன ஏதாவது ஒரு தலையணையை கொடுத்து கட்டிப்பிடிச்சுட்டு தூங்க சொல்ல வேண்டியது தானே”.​

கவிதா, “அவர் தினமும் கை கால் எல்லாம் என் மேல போட்டு என்னை தூங்கவே விட மாட்டேங்கிறார் தேனு” என்றவளின் வார்த்தையில் தேன் நிலவு கலகலவென நகைக்க தொடங்கி விட்டாள்.​

கவிதா அவளை புரியாமல் பார்த்தவள், “என்னடி இப்படி சிரிக்கிற?”.​

தேன்நிலவு, “சரி வா நாம அத்தை கிட்ட போய் சண்டை போடலாம்.. என்ன உங்க பையனை இப்படி வளர்த்து வச்சிருக்கீங்க.. என் மேல கையை காலை போட்டு என்னை தூங்க விடமாட்டுறார் என்று சொல்லலாம்” என்கவும்.​

கவிதாவிற்கு தூக்கி வாரி போட்டது. அவசரமாக அவளிடம் இருந்து தன் கையை உருவி கொண்டவள், “லூசு மாதிரி பேசாத தேனு”.​

தேன்நிலவு, “அப்போ நீயே பியூட்டி கிட்ட இப்படி எல்லாம் பண்ணாதீங்கனு சொல்ல வேண்டியது தானே”.​

கவிதா, “நான் எவ்வளவோ சொல்லி பாத்துட்டேன்‌ ஆனா, அவர் கேட்கவே மாட்டேன் என்கிறார்.. இப்படி படுத்தா தான் எனக்கு தூக்கம் வரும்னு சொல்றார்”.​

தேன் நிலவு, “ஆரம்பத்துல இப்படி தான் டி இருக்கும் விடு”.​

கவிதா, “அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா அவர்​

மாறிடுவார் என்று சொல்றியா?” என்கவும்.​

தேன் நிலவு, “இல்ல.. கொஞ்சம் கொஞ்சமா உனக்கே இது எல்லாம் பழகிடும்” என்றவளை முறைத்து பார்த்தாள் கவிதா.​

 

RJ novels

Moderator

மெய்யழகனின் தேன்நிலவு - 23​

கவிதா அவளை முறைத்து பார்க்கவும்.. அவளின் தோளின் மீது கையை போட்ட தேன்நிலவு, “இங்க பாருடி.. சும்மா இதையே சொல்லிக்கிட்டு இருக்காத.. பியூட்டி உன்னை எப்படியோ கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணிட்டார். இனிமே நீ அவர் கூட தான் வாழ்ந்தாகணும்.. அப்புறம் எதுக்கு தேவையில்லாமல் பயந்துகிட்டு இருக்க”.​

கவிதா, “இல்லடி அவர் வேலைக்கு கூட போக மாட்டேங்கிறார். உனக்கு தெரியுமா அவர் டிகிரி வாங்கி இருக்கார் டி” என்றாள் ஆச்சரியமாக.​

தேன் நிலவு, “அப்படியா.. ஆளைப் பார்த்தால் அப்படி ஒன்னும் தெரியலையே”.​

கவிதா, “ஆமா டி.. நான் கூட காலேஜ் எல்லாம் போய் இருக்க மாட்டார் என்று நினைத்தேன். அவர் தான் சொன்னார்”.​

தேன் நிலவு, “சரி, அப்புறம் எதுக்காக வேலைக்கு போக மாட்டாராம்”.​

கவிதா, “அவருக்கு வேலைக்கு போக எல்லாம் விருப்பம் இல்லையாம்”.​

தேன் நிலவு, “ஓ..”.​

கவிதா, “ஆனா, அவர் வேலைக்கு போனா தானே டி நல்லா இருக்கும். இவ்வளவு நாள் அவர் எப்படி வேணும்னாலும் இருந்திருக்கலாம்.. அவரை பெத்தவங்க அவங்களுடைய பையனுக்காக எல்லாமே செஞ்சு கொடுத்து இருப்பாங்க..”.​

“ஆனா, இப்போ எங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சு.. நானும் அவங்க வீட்ல இருக்கேன். எனக்கும் சேர்த்து அவங்களுடைய அப்பா அம்மாவே எல்லா செலவும் செய்யணும்னா எனக்கு ஒரு மாதிரி இருக்கு டி. இவர் வேலைக்கு போனால் தானே நல்லா இருக்கும்”.​

தேன்நிலவு, “ஆமா, நீ சொல்றது கரெக்டு தான்.. இதை அப்படியே போய் பியூட்டி கிட்ட சொல்லிடு”.​

கவிதா, “அவர் நான் சொன்னா கேக்க மாட்டார்”.​

தேன் நிலவு, “சரி, அப்போ நான் சொல்லவா” என்கவும்.​

நொடியில் கவிதாவின் முகம் பிரகாசித்தது.​

அவளின் கையை இறுகப்பற்றி கொண்டவள், “தேனு நீ சொன்னா அவர் நிச்சயமா கேட்பார்”.​

தேன்நிலவு, “ஏன் டி பொண்டாட்டி நீ தான.. நீ சொல்லவே பயப்படுற என்னை சொல்ல சொல்ற.. நான் சொன்னா எப்படி கேட்பார்”.​

கவிதா, “எனக்காக நீ சொல்லு.. நான் அவர்கிட்ட சொன்னாலும் அவர் வேற ஏதாவது பேசுறாரா எனக்கு பதட்டத்துல அடுத்து என்ன சொல்றதுன்னு வர மாட்டேங்குது. நீ பேசுனா கரெக்டா பேசுவ.. நான் உன் கூட வந்து நிற்கிறேன் நீ பேசிடு”.​

தேன் நிலவு சலிப்பாக தன் தலையை இரு பக்கமும் ஆட்டியவாறு, “சரி, பட் இது தான் ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட்.. திரும்பவும் இந்த மாதிரி என்கிட்ட ஹெல்ப் கேட்டு வரக்கூடாது ஓகேவா..”.​

“உங்க ரெண்டு பேருக்குள்ள எதுனாலும் அதை நீங்க ரெண்டு பேரும் தான் பேசி தீர்த்தக்கனும். என்னை இதுக்குள்ள கொண்டு வரக்கூடாது” என்கவும்.​

கவிதாவின் தலை வேகமாக ‘சரி’ என்று ஆடியது.​

கவிதா, “சரி வா இப்போவே போய் பேசிடலாம்”.​

தேன் நிலவு, “இப்போவேவா?”.​

கவிதா, “ஆமா டி.. எதுக்காக லேட் பண்ணனும் இப்போவே போய் பேசிடலாம் வா” என்றவாறு அவளின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு கீழே இறங்கினாள்.​

மெய்யழகன் யாரின் முகத்தையும் பார்க்காமல் அனைவருக்கும் பாராமுகம் காட்டியவாறு தன் கையில் இருந்த நியூஸ் பேப்பரை புரட்டிக் கொண்டு அமர்ந்திருந்தான்.​

ரத்தினம் அவனுக்கு எதிர் இருக்கையில் வந்து அமர்ந்தவர்.. வெகு நேரமாக அவனிடம் எதுவோ பேச முயற்சித்துக் கொண்டிருப்பதைப் பற்றி அறிந்தாலும் ஒன்றும் அறியாதவன் போல் அதை சற்றும் கண்டு கொள்ளாமல் அந்த நியூஸ் பேப்பரிலேயே தன் முழு கவனத்தையும் செலுத்தியவாறு அமர்ந்து கொண்டு இருந்தான்.​

கௌரி அப்பொழுது தான் கையில் காபி கப்புடன் அவர்கள் இருவரையும் நெருங்கியவர். இருவருக்கும் காபியை கொடுத்தவாறு ரத்தினத்தின் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தவர்.. தன் கணவனிடம் எதுவோ சைகை செய்தார்.​

ரத்தினமும் அவருக்கு தலையசைத்தவாறு, “மெய் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் பா”.​

மெய்யழகன் அவரை கூர்மையாக பார்த்தவன், “என்கிட்ட பேச இனி என்ன இருக்கு?” என்றான் கத்திரித்தது போல்.​

ரத்தினம், “என்னப்பா இப்படி பேசுற”.​

மெய்யழகன் தன் கையில் இருந்த நியூஸ் பேப்பரை வேகமாக மடித்து வைத்தவன், “வேற எப்படி பேச சொல்றீங்க.. அன்னைக்கு நான் பேசினேனே நீங்க ரெண்டு பேரும் கொஞ்சமாவது அதை கேட்டீங்களா..”.​

“கொஞ்சம் நேரம் நீங்க ரெண்டு பேரும் அவசரப்படாம காத்திருந்தாலே அழகு வந்திருப்பான். அவன் வருவதற்குள் என்னை பிடித்து கட்டி வைத்துவிட்டீர்கள்” என்றான் கோபமாக தன் முகத்தை வைத்துக்கொண்டு.​

கௌரி, “இப்படியெல்லாம் நடக்கும்னு நாங்க கொஞ்சம் கூட நினைச்சு பாக்கல பா.. அந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் நாங்களும் வேற என்ன தான் செய்ய முடியும். எங்க நம்ம குடும்பத்தால் அந்த பொண்ணுடைய வாழ்க்கை வீணா போயிடுமோனு தான் உன்னை கல்யாணம் செஞ்சுக்க சொல்லி கேட்டோம்”.​

கீழே இறங்கி வந்த கவிதாவும், தேன் நிலவும் மெய்யழகனின் கோப குரலில் அப்படியே நின்று அங்கே நடக்கும் வாக்குவாதத்தை கவனிக்க தொடங்கினர்.​

மெய்யழகன், “நீங்க என்கிட்ட கேக்கல மா சொல்லப்போனால் நீங்க என்னை மிரட்டி இந்த கல்யாணத்தை செஞ்சு வச்சிருக்கீங்க” என்றவனின் வார்த்தையில் அனல் பறந்தது.​

ரத்தினம், “என்னப்பா இப்படி எல்லாம் சொல்ற..”.​

மெய்யழகன், “ஆமா பா.. முடியாதுன்னு சொன்ன என்னை நீங்க ஏதாவது செஞ்சுப்போம்னு சொல்லி மிரட்டி என்னை இந்த கல்யாணத்தை செய்ய வச்சிருக்கீங்க.. உங்களுக்கு தேவை இந்த ஊர்காரங்க முன்னாடி தலை நிமிர்ந்து வாழனும்”.​

“அதுக்காக என் வாழ்க்கை எப்படி போனால் என்னன்னு எனக்கு இந்த கல்யாணத்தை செஞ்சு வச்சுட்டீங்க அப்படித்தானே..” என்றான் அவரை உறுத்து விழித்தவாறு.​

கவிதாவும், தேன் நிலவும் அவனின் வார்த்தைகளில் அதிர்ந்து போய் பார்த்துக் கொண்டிருந்தனர்.​

அழகேசன் அப்பொழுது தான் அங்கே வந்தவன், “என்னடா.. இப்போ எதுக்காக இப்படி கத்திக்கிட்டு இருக்க”.​

மெய்யழகன், “நீ பேசாத அழகு.. உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைனா நீ முன்னாடியே வீட்ல சொல்லி இருக்கணும். எதுக்காக கல்யாணம் வரைக்கும் கொண்டு வந்துட்டு கடைசி நேரத்தில் இப்படி பண்ண..”.​

“அப்படி உன்னால் அந்த பொண்ணுடைய மனசை மாத்தி கல்யாணம் பண்ணிக்க முடியாதுனா உனக்கெல்லாம் எதுக்கு இப்படி ஒரு காதல்”.​

அழகேசன், “இப்போ உனக்கு என்ன பிரச்சனை நான் என்னமோ பண்ணிட்டு போறேன்.. நானா உன்னை அந்த பொண்ணு கழுத்துல தாலி கட்ட சொன்னேன்”.​

“நான் ஆசைப்பட்ட மாதிரி எனக்கு புடிச்ச மாதிரி என் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்காக தான் நான் இப்படி எல்லாம் செஞ்சேன். அதுக்காக உன்னை ஒன்னும் அந்த பொண்ணு கழுத்துல தாலி கட்ட சொல்லி நான் கட்டாயப்படுத்தலையே..”.​

“நீயா தானே தாலி கட்டி வச்சிருக்க.. நீ தாலி கட்டுவனு நானுமே எதிர்பார்க்கல தான்‌. எனக்கே நீ தாலி கட்டி இருந்தது ஆச்சரியமா தான் இருந்துச்சு” என்றவனின் வார்த்தையில் கோபமாக தன் தலையை வேறு புறம் திருப்பியவன்.​

“இவனுக்கு இந்த கல்யாணத்துல முழு சம்மதமானு நீங்க முதலிலேயே கேட்டு இருக்கணும்.. விருப்பம் இல்லாதவனை புடிச்சு மணவரையில் உட்கார வச்சா அவன் பாட்டுக்கு எப்படியோ போங்கன்னு ஓடிப் போயிட்டான். இப்போ எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்கீங்க..”.​

கௌரி தயங்கியவாறு, “தம்பி அந்த பொண்ணு ரொம்ப நல்ல பிள்ளைப்பா”.​

மெய்யழகன், “அந்த பொண்ணு நல்லவளா கெட்டவளானு நான் உங்க கிட்ட கேட்கல மா.. ஆனா, நான் எப்படிப்பட்ட ஒய்ஃப் எனக்கு வரணும்னு நினைச்சேனோ..”.​

“அதுக்கு அவ டோட்டல் ஆப்போசிட்டா இருக்கா.. நான் சிட்டி சைடுல தான் பொண்ணு கட்டணம்னு நினைச்சேன். முக்கியமா நல்லா படிச்சிட்டு ஜாப்ல இருக்க பொண்ண கல்யாணம் பண்ணனும்னு ஆசைப்பட்டேன்”.​

“என்னுடைய ஆசையே வேற.. ஆனா, நீங்க அதுக்கு டோடல் ஆப்போசிட்டா ஒரு பொண்ண பார்த்து எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்கீங்க. இவ ஸ்கூலிங் கூட முடிக்கல..”.​

அழகேசன், “இதெல்லாம் ஒரு பிரச்சனையா உனக்கு.. ஏன் அந்த புள்ள வேலைக்கு போய் சம்பாதித்து தான் நீ சோறு சாப்பிட போறியா? நீ சம்பாதிக்கிறது பத்தாதா..”.​

மெய்யழகன், “நீ சும்மா இருடா.. எல்லா பிரச்சனையுமே உன்னால் தான். அவ சம்பாதிச்சு சாப்பிடணும் என்பதற்காக ஒன்னும் நான் இப்படி நினைக்கல.. எனக்குன்னு என்னுடைய கல்யாணத்தை பத்தின சில ட்ரீம்ஸ் இருந்துச்சு”.​

“அதைப்பற்றி தான் நான் சொல்லிக்கிட்டு இருக்கேன்.. என் மனசுல என்ன இருக்குன்னு எதை பத்தியுமே யோசிக்காமல் நீங்க பாட்டுக்கு கல்யாணம் செஞ்சு வச்சுட்டீங்க.. என் ஆசையை கூட நான் சொல்லக்கூடாதா”.​

ரத்தினம், “நீ சொல்றது சரி தான் மெய்.. சந்தர்ப்ப சூழ்நிலை அப்படி ஆகிவிட்டது”.​

மெய்யழகன், “சந்தர்பத்து மேல பழியை போட்டுட்டு நீங்க தப்பிச்சிடுவீங்கப்பா.. ஆனா, நான் ஆசைப்பட்ட வாழ்க்கையை என்னை வாழ விடாமல் நீங்க செஞ்சுட்டீங்க.. சரி, படிப்பை விடுங்க..”.​

“நான் கிராமத்து பொண்ண கட்டவே கூடாதுன்னு நினைச்சேன். கிராமத்து பொண்ணுங்க எல்லாம் ரொம்ப செண்டிமெண்டலா இருப்பாங்க”.​

“எனக்கு இப்படி எந்த ஒரு செண்டிமெண்டலும் இல்லாமல் தனியா லைஃபை பேஸ் பண்ற அளவுக்கு தைரியமா இருக்க மாதிரி மாடர்னான பொண்ண கல்யாணம் பண்ணிக்கனும்னு ஆசைப்பட்டேன்”.​

“ஆனா, இவ மாடர்ன்னா என்னன்னு கேப்பா போலருக்கு. தலை முடியவே அவ்வளவு நீட்டா வச்சிருக்கா” என்றான் பெரிய குறை போல்.​

அழகேசன் இதெல்லாம் ஒரு விஷயமா என்பது போல் அவனை நோக்கி தன் பார்வையை வீச..​

கௌரி, “என்ன தம்பி இப்படி சொல்லிட்ட.. அந்த புள்ள எவ்வளவு அழகா இருக்கு.. என்ன மாடர்ன் புள்ளைங்க.. முடியை வெட்டிக்கிட்டு ஆம்பள பசங்க மாதிரி சட்டை பேண்ட் போடுற பசங்களை தான் உனக்கு பிடிச்சிருக்கா..”.​

“நல்ல வேளை, நீ பேசுறதெல்லாம் பார்க்கும்பொழுது உனக்கு இந்த புள்ளைய கல்யாணம் பண்ணி வச்சதை நினைச்சு இப்போ எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு”.​

“நாளை பின்ன நீ அப்படி யாராவது ஒரு பிள்ளையை கூட்டிட்டு வந்து நின்னினா.. என்னால் அந்த மாதிரி பொண்ண எல்லாம் என் வீட்டு மருமகளா ஏத்துக்கவே முடியாது”.​

“கடவுள் எது செஞ்சாலும் அது நல்லதுக்கு தான் இருக்கும்” என்றவர் அந்த நிமிடம் கடவுளுக்கு தன் நன்றியை செலுத்தினார்.​

மெய்யழகனிற்கு தன் தாயின் வார்த்தையில் மேலும் கோபம் உண்டானது தான். தன் ஆசையை கூறிக் கொண்டிருக்கிறோம்..​

அதற்கு தனக்கு ஒரு ஆறுதல் வார்த்தை கூட அளிக்காமல்.. நல்லவேளை, அப்படி நடக்கவில்லை என்று நிம்மதி அடைகிறார்களே என்று அவனுக்கு கோபம் அதிகரித்தது.​

அவனின் வார்த்தைகளை கேட்ட கவிதா திகைத்துப் போய் தன் அருகில் நின்று இருக்கும் தேன் நிலவை திரும்பி பார்க்க.​

தேன்நிலவு தன் அதிர்ச்சியை அப்படி​

யே அப்பட்டமாக தன் முகத்தில் தேக்கியவாறு கலங்கிய கண்களோடு அங்கே நடப்பவற்றை வெறித்த பார்வை பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.​

 

RJ novels

Moderator

மெய்யழகனின் தேன்நிலவு - 24​

மெய்யழகன் கூறுவதையே அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் தேன்நிலவு.. அவளையும் மீறி அவளின் கண்களில் இருந்து கண்ணீர் வெளியேற தொடங்கியது. அதை துடைக்க கூட தோன்றாமல் அப்படியே சிலை என நின்று இருந்தாள்.​

தன் தாயின் வார்த்தைகள் மேலும் மெய்யழகனின் கோபத்திற்கு தூபம் போடுவது போல் ஆகிவிட்டது. அதில் தன்னிலை இழந்தவன் என்ன பேசுகிறோம் என்று சிந்திக்காமல் வார்த்தையை விட தொடங்கினான்.​

“என்னமா பேசுறீங்க நீங்க.. நான் இங்கே என் வாழ்க்கையே போயிடுச்சுன்னு பேசிகிட்டு இருக்கேன். நீங்க கடவுளுக்கு நன்றி சொல்றீங்களா”.​

ரத்தினம், “கௌரி கொஞ்சம் அமைதியா இரு”.​

கௌரி, “என்னங்க அமைதியா இருக்க சொல்றீங்க.. சின்ன வயசுல இருந்து இவனை அவங்க தாத்தா பாட்டி கூட இருக்க ஆசைப்படுறான்னு சொல்லி நம்ம அங்க அனுப்புனது தான் தப்பா போச்சு..”.​

“இப்போ பாத்தீங்களா என்ன பேச்சு பேசுறான்னு.. நான் கூட திடீர்னு எதிர்பார்க்காமல் இவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டோமே அதனால் தான் இவன் நம்ம மேல கோவமா இருக்கானோனு நினைத்தேன்”.​

“ஆனா, இவன் பேசுறது எல்லாம் நீங்களும் கேட்டுகிட்டு தானே இருந்தீங்க.. இவருக்கு கிராமத்து பொண்ணுங்க எல்லாம் பிடிக்காதாம்.. பேண்ட் சட்டை போட்டுட்டு சுத்துற பொண்ணுங்களை தான் பிடிக்குமாம்”.​

மெய்யழகன், “அது என்னுடைய தனிப்பட்ட விருப்பம்.. அதுல கூட நீங்க தலையிடுவீங்களா.. எனக்கு யாரை பிடிக்கணும், எப்படி பட்டவர்களை பிடிக்கணும் என்பதை கூட நீங்க தான் சொல்லுவீங்களா.. ஏன் இவனுக்கு ஆசை இல்லையா” என்று அங்கே நின்று இருந்த அழகேசனை காண்பித்தவன்.​

“இப்போ இவன் கல்யாணம் பண்ணி இருக்கானே அவங்களை கல்யாணம் பண்ணிக்கணும்னு உனக்கு ஆசை இருந்திருக்கு. அதை உங்க முன்னாடி எல்லாம் சொல்லாமல் மறைச்சிருக்கான்”.​

“அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்கணும் என்பதற்காக தான் அன்னைக்கு கல்யாணத்திலிருந்து இவனே எஸ்கேப் ஆகி வெளியில் போய் இருக்கான்”.​

“நம்ம கிட்ட எல்லாம் யாரோ கடத்திட்டாங்கன்னு சொல்லி டிராமா பண்ணி இருக்கான்” என்றவனின் வார்த்தையில் திகைத்து அவனைப் பார்த்த ரத்தினம்.​

“என்ன அழகு இதெல்லாம்.. மெய் சொல்றதெல்லாம் உண்மையா”.​

அழகேசன், “ஆமாம்பா.. எனக்கு கவிதாவை தான் பிடிச்சு இருந்துச்சு.. அதனால் தான் இப்படி எல்லாம் செஞ்சேன்”.​

ரத்தினம், “அதை ‌நீ எங்க கிட்ட முன்னாடியே சொல்லி இருக்கலாமே.. எதுக்காக தேனு கூட உனக்கு கல்யாணம் பேசி முடிக்கிற வரைக்கும் அமைதியா இருந்த”.​

அழகேசன், “அது எனக்கும் அந்த கவிதா பிள்ளைக்கும் ஒரு சின்ன பஞ்சாயத்து.. அவ என்னை கல்யாணம் செஞ்சுக்க ஒத்துப்பாலான்னு எனக்கு தெரியாது. அதனால் தான் இப்படி எல்லாம் செஞ்சுட்டேன்” என்று சாதாரணமாக கூறினான்.​

கௌரி, “ஏன் டா இதெல்லாம் உனக்கு என்ன விளையாட்டு விஷயமா போயிடுச்சா.. பாவம் அந்த புள்ள.. அன்னைக்கு மெய்யழகன் மட்டும் ஊர்ல இருந்து வராமல் இருந்திருந்தால் அந்த பிள்ளையோட நிலைமை என்ன ஆகிறது” என்றார் பரிதவிப்பான குரலில்.​

மெய்யழகன், “அது தான் நான் செஞ்ச பெரிய முட்டாள்தனம். போயும் போயும் இவனுடைய கல்யாணத்துக்காக ஊரிலிருந்து வந்தேன் பாத்தீங்களா.. உங்க எல்லாரையும் பார்த்து ரொம்ப நாள் ஆகிடுச்சு..”.​

“உங்க எல்லாரையும் பார்த்துட்டு உங்க கூட கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ணலாம்னு நினைச்சு கிளம்பி வந்தது தான் என் தலையெழுதே மாறிப் போயிடுச்சு”.​

தேன் நிலவால் இங்கு நடக்கும் விஷயங்களில் சற்றும் நிதானிக்கவே முடியவில்லை.​

அண்ணன் என்னவென்றால் தன் தோழியை திருமணம் செய்வதற்காக என்னை வைத்து நாடகம் ஆடியதாக கூறுகிறான்.​

தம்பி என்னவென்றால் தனக்கு பிடிக்காத ஒருத்தியை திருமணம் செய்து வைத்து விட்டார்கள் என்று அவனின் பெற்றோரை சாடுகிறான்.​

இதற்கு இடையில் தன் வாழ்க்கை.. என்று எண்ணியவளுக்கு என்ன கூறுவது என்றே தெரியவில்லை. இப்பொழுதே இந்த வாழ்க்கை வேண்டாம் என்று இங்கிருந்து வெளியேறிவிடலாம்..​

ஆனால், எங்கே செல்வது.. இங்கிருந்து தன் வீட்டிற்கு சென்றாலும் அவர்களின் இகழ்ச்சியான பேச்சுக்களை கேட்டாக வேண்டுமே.. மேலும், தன் தந்தை முற்றிலுமாக உடைந்து விடுவார்.​

இப்பொழுது என்ன செய்வது என்று புரியாமல் நின்று இருந்தாள் தேன்நிலவு. கவிதாவிற்குமே அழகேசனின் வார்த்தையில் கோபம் தான் எழுந்தது.​

ரத்தினம், “நடந்தது நடந்து போச்சு.. இப்போ அதை எல்லாம் மாத்த முடியாது. இந்த வாழ்க்கையை கொஞ்சம் கொஞ்சமாக ஏத்துக்க பழகுபா”.​

மெய்யழகன், “என்ன இருந்தாலும் உங்க ரெண்டு பேருக்கும் என் மேல கொஞ்சம் கூட பாசமே இல்லப்பா.. இருந்திருந்தால் இப்படி ஒரு கல்யாணத்தை எனக்கு நீங்க செஞ்சு வச்சிருந்திருக்க மாட்டீங்க”.​

“அட்லீஸ்ட், கல்யாணத்துக்கு முன்னாடி எனக்கு அந்த பொண்ண பிடிச்சிருக்கானாவது என்கிட்ட ஒரு வார்த்தை கேட்டிருப்பீங்க.‌ உங்களை பொறுத்த வரைக்கும் அன்னைக்கு நான் அந்த பொண்ணு கழுத்துல தாலி கட்டிட்டேன்”.​

“அதனால் எங்களுக்கு கல்யாணம் முடிஞ்சிடுச்சு அவ்வளவு தான்.. ஆனால், என்னை நினைச்சு பாருங்க.. என்னுடைய கல்யாணத்தைப் பற்றி எனக்கு எவ்வளவு ட்ரீம்ஸ் இருந்திருக்கும்”.​

“நான் என்ன எல்லாம் நினைச்சு வச்சிருந்தேன். நெக்ஸ்ட் மந்த் நான் யூஎஸ் கிளம்ப வேண்டியதா இருக்கு. எனக்கு தகுந்த மாதிரி படிச்ச பொண்ணா இருந்தா எங்க போனாலும் அடாப் பண்ணிப்பா..”.​

“இவ சுத்த பட்டிக்காடு மாதிரி இருக்கா.. இவ அங்க வந்தா எத்தனை நாள் தாக்குப் பிடிப்பானே தெரியாது. அங்க யாராவது இவகிட்ட நாலு வார்த்தை இங்கிலீஷ்ல பேசினால் கூட இவளுக்கு பதில் பேச தெரியாது”.​

“என்கூட வேலை பாக்குறவங்க எல்லாம் உன் வைஃப் என்ன படிச்சிருக்காங்கன்னு கேட்டா நான் என்னத்த சொல்றது.. ஒன்பதாம் கிளாஸ் படிச்சிருக்கா என்று எல்லார்கிட்டயும் சொல்லவா..”.​

“இப்படி பண்ணிட்டீங்களேப்பா.. எனக்குன்னு நான் ஒரு கமிட்மெண்ட்ஸ் வச்சிருந்தேன்.. மொத்தத்தையும் போட்டு உடைத்துட்டிங்க.. ஃப்ரீடமான ஒரு வாழ்க்கையை வாழனும்னு ஆசைப்பட்டேன்”.​

“என்னையே என் வைஃப் டிப்பன்ட் பண்ணி இருக்க கூடாது.. நானும் அவளை டிபன்ட் பண்ணி இருக்க கூடாது.. ரெண்டு பேருமே அவங்க அவங்க வாழ்க்கையை சந்தோஷமா வாழனும். ஆனா, காலம் முழுக்க இவ என்னை டிப்பன்ட் பண்ணி தான் இருப்பா போலருக்கு”.​

மெய்யழகன் தன் ஒவ்வொரு வார்த்தையின் மூலமாகவும் அவனே அறியாமல் தேன் நிலவின் மனதை ரணமாக்கி கொண்டிருந்தான்.​

கவிதாவிற்கு தேன் நிலவின் நிலை நன்றாகவே புரிந்தது. இருவருமே ஒருவருக்கொருவர் அறிமுகம் இல்லாதவர்கள் தான்.. மெய்யழகனின் மீதும் தவறு கூற முடியாது.​

அவன் மனதில் இருக்கும் விருப்பத்தை பற்றி அவன் அவனின் பெற்றோரிடம் எடுத்துரைத்துக் கொண்டிருக்கிறான். ஆனாலும், அவனின் வார்த்தைகள் தன் தோழியின் மனதை தைப்பது போல் இருக்கின்றதே என்று எண்ணியவள்..​

அங்கே அசைவற்ற சிலை போல் நின்று இருக்கும் தன் தோழியின் கையை அழுத்தமாக பிடித்தவாறு, “தேனு வா நாம செடிக்கு தண்ணி ஊத்திட்டு வரலாம்” என்றாள் மெதுவான குரலில் கிசுகிசுப்பாக.​

அது அவளின் செவி மடலை சென்றடையவே இல்லை. மெய்யழகனின் வார்த்தையை கேட்டவளிற்கே மூளை வேலை நிறுத்தம் செய்து விட்டது என்று தான் கூற வேண்டும்.​

அப்படியே அசைவற்று நின்றவளை மெதுவாக அங்கிருந்து அழைத்து சென்றாள் கவிதா..​

ஏதோ தன் வாழ்க்கையே அவ்வளவு தான் முடிந்துவிட்டது என்பது போன்ற நிலை தான் தேன்நிலவிற்கு..​

கௌரி, “எங்களை மன்னிச்சிடு பா.. நீ சொல்றதும் வாஸ்தவம் தான்.. உன் மனசுக்குள்ள கல்யாணத்தை பத்தி இப்படி ஒரு எண்ணம் இருந்திருக்கலாம்..”.​

“அன்னைக்கு நடந்தது எதுவுமே எதிர்பார்த்து நடக்கல.. எல்லாமே சந்தர்ப்ப சூழ்நிலையில் நடந்தது தான். உன்னுடைய ஆசை புரியுது”.​

“ஆனாலும், ஒரு அம்மாவா என் பிள்ளைகளுக்கு எப்படிப்பட்ட வாழ்க்கை அமையனும்னு எனக்கும் ஒரு ஆசை இருக்கும் இல்ல.. அதை தான் நான் இப்போ சொல்லிக்கிட்டு இருந்தேன்”.​

“நீ ஆசைப்பட்ட மாதிரி படிச்சிட்டு வேலைக்கு போற பொண்ணுங்களை என் பிள்ளைகளுக்கு கட்டி வைக்கணும்னு எனக்கு என்னைக்குமே ஆசை இருந்ததில்லை”.​

“எனக்கு என் பிள்ளைங்களை நல்லபடியா பார்த்துக்கிற மாதிரி தான் அவங்களுக்கு மனைவிங்க அமையனும்னு தான் நான் எப்பவுமே வேண்டிப்பேன்” .​

“அதனால் தான் கடவுள் உனக்கு என்னுடைய வேண்டுதலை நிறைவேத்துற மாதிரி இப்படி ஒரு மனைவியை அமைத்துக் கொடுத்திருக்கிறார் என்று நினைக்கிறேன்”.​

“படிச்சிட்டு வேலைக்கு போய் சம்பாதிச்சு சுயமா இருக்கிற மாதிரி பொண்ண நீ கட்டனும்னு ஆசைப்படுறது ஒன்னும் தப்பில்லை. ஆனா, கிராமத்துல வளர்ந்த பிள்ளைகளுக்கு தைரியம் இல்லை என்று நினைத்து விடாதே”.​

அழகேசன், “ஆமா டா.. அம்மா சொல்றதும் சரி தான். நீ அந்த ஊரிலேயே இருந்து பார்த்ததால் தான் உனக்கு கிராமம் என்றாலே எல்லாரும் பயந்தாங்கோலிங்களா இருப்பாங்கன்னு நினைக்கிற”.​

“ஆனா, தேனு அப்படியெல்லாம் கிடையாது.. ரொம்ப தைரியமான பொண்ணு.. உண்மையை சொல்லனும்னா இது நாள் வரைக்கும் ஒரு நாள் கூட நானும் தேனும் பிரண்ட்லியா கூட ஒரு வார்த்தை பேசியது கிடையாது தெரியுமா..”.​

“எப்போ நான் தேனை பார்த்தாலும் எனக்கும் அந்த புள்ளைக்கும் ஏதாவது பிரச்சனை தான் நடக்கும். நான் கவிதாவுக்காக தான் தேன் நிலவு கிட்ட வாய் கொடுப்பேன்”.​

“நான் வம்பு பண்றேன்னு நினைச்சு தேன் நிலவு எனக்கு சரிக்கு சரியா பதில் பேசுவா.. தேன் நிலவு ஒன்னும் பயப்படுற பொண்ணு கிடையாது. தைரியமானவள் தான்.. நீ எங்க கூப்பிட்டு போனாலும் அவள் அந்த சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி அவளால் மாத்திக்க முடியும்”.​

மெய்யழகன், “இப்போ தேன்நிலவு எனக்கு தகுந்த மாதிரி மாறுவாளா மாற மாட்டாளா என்பது என் பிரச்சனை கிடையாது. அதை நான் பார்த்துக்கிறேன்..”.​

“என்னுடைய ஆசையை பற்றி நான் சொல்லி கூட நீங்க யாருமே எனக்கு ஒரு வார்த்தை கூட ஆறுதலா பேசாமல் நல்லவேளை அப்படி நடக்கவில்லை என்ற மாதிரி பேசுனீங்களே.. அதான் என்னால் அதை ஏத்துக்க முடியல” என்றவன் அதற்கு மேல் அங்கே நிற்காமல் விறு விறுவென தன் அறைக்குள் நுழைந்து கொண்டான்.​

கௌரி அவர்களின் வீட்டை சுற்றியுமே நிறைய மரம் செடிகளை வைத்து வளர்ப்பவர். அதிலும், அவர்களின் வீட்டிற்கு பின்னே பெரிய அளவில் தோட்டம் இருக்கிறது.​

அதில், அனைத்து மரங்களுமே இருக்கும். அந்த மரங்களுக்கு இடையே கல் பெஞ்சு அமைக்கப்பட்டிருக்கும். சாயந்திர வேலைகளில் அங்கு அமைதியாக சற்று நேரம் அமர்ந்து ஓய்வெடுக்கலாம் மனதிற்கு அவ்வளவு இதமாக இருக்கும்.​

அந்த ரம்யமான சூழ்நிலையில் அந்த கல்பெஞ்சில் அமர்ந்து எங்கோ வெறித்த பார்வை பார்த்துக் கொண்டிருந்த தேன் நிலவின் கண்கள் மட்டும் நொடிக்கு ஒரு முறை கலங்கி கொண்டே இருந்தது.​

கவிதாவிற்கு அவளின் நிலை புரிந்தாலும் என்ன கூறி சமாதானம் செய்வது என்று புரியவில்லை. கவிதாவிற்குள்ளும் ஏதோ ஒரு​

குற்ற உணர்ச்சி.. அவளிடம் பேசவே தயக்கமாக இருந்தது. தன்னால் தானே அழகேசன் இப்படி எல்லாம் செய்திருக்கிறான் என்று..​

 
Top