எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நீயே என் கீர்த்தனம்_ கதை திரி

ஹாய்... தோழமைகளே👋.

நான் சுபா ஸ்ரீசி. நான் இந்த சைட்டுக்கு புதுசு ஆனா எழுத்துலகுக்கு கொஞ்சம் பழசு தான். எஸ் இது என்னோட ஒன்பதாவது கதை. அதை நறுமுகைல எழுதுறதுல சந்தோஷம். இந்த கதை வாரம் இரண்டு நாள் திங்கள் மற்றும் வியாழன் வரும் நண்பர்களே. விருப்பம் உள்ளவர்கள் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்❤️
 
அத்தியாயம் : 1

ஓம் சரவண பவ,
ஓம் சரவண பவ,
ஓம் சரவண பவ என்று இடைவிடாமல் உச்சரித்தபடி அந்த ஆற்றங்கரை முருகனுக்கு தண்ணீர் சுமந்து ஊற்றி கொண்டிருந்த பெண்ணவளின் முகம் வியர்வையில் நனைந்திருக்க அங்கமோ நீரால் நனைந்து இருந்தது.

அன்றைய கணக்கான நூற்றி எட்டு குடம் நீரையும் கலைத்து சோர்ந்து எடுத்து ஊற்றி முடித்திருந்தாள் தெய்வ கீர்த்தனா.

பொதுவாக ஆற்றங்கரை என்றாலே பிள்ளையார் தான் அமர்ந்து இருப்பார் என்று எல்லோரும் அறிந்திருக்க, இங்கு சற்றே மாறுபட்டு முருகர் தனிமையில் ஆற்றங்கரை மரத்தடியில் அமர்ந்து இருப்பார்.

முருகர் அவர் அண்ணன் கணேசனை பார்க்க வந்து, கணேசன் அங்கு இல்லாமல் போனதால் அவருக்காக காத்திருக்க இங்கேயே அவர் அமர்ந்து விட்டதாக பெரியவர்கள் கூறுகிறார்கள்.

மிகவும் சக்தி வாய்ந்தவர். வேண்டுதல் வைத்து ஆற்றில் நீர் எடுத்து அபிஷேகம் செய்தால் எண்ணியது நடக்கும். பலருக்கும் பல நல்லது நடந்திருக்க கீர்த்தனாவின் வேண்டுதலுக்கு மட்டும் அந்த முருகர் இன்னும் செவி சாய்க்கவில்லை.

அவளும் ஐந்து வருடமாக அவருக்கு நீர் எடுத்து ஊற்றுகிறாள். ஆனாலும் முருகன் மனம் இன்னும் குளிரவில்லை.

என்றேனும் தன் வேண்டுதலுக்கு அவர் செவி சாய்த்து விட மாட்டாரா என்ற நம்பிக்கையுடன் இன்றும் முருகனின் திருநாமத்தை உச்சரித்தபடி தெய்வ கீர்த்தனா சாமிக்கு நீர் எடுத்து ஊற்ற, "என்ன தெய்வா வள்ளி மணவாளனுக்கு அபிஷேகமா? நீயும் ஐஞ்சி வருசமா வாரம் நாலு முறை அபிஷேகம் பண்ணி தான் பார்க்குற...இந்த முருகன் கண்ணை திறக்க மாட்டேங்குறானே! வயசும் இருபத்தி ஒன்பது முடிய போகுது. வரன் எதுவும் வருதா?" என்று அவர்கள் தெருவில் வசிக்கும் ரூபா அக்கா கேட்க,

அவர் பேச்சில் 'ஹையோ....' என உள்ளுக்குள் அலறிய கீர்த்தனா, வெளியே "தெரியலையே கா அப்பாவை தான் கேட்கனும்" என்ற படி ஆற்றில் இறங்கி தண்ணீர் எடுத்தாள்.

"சீக்கிரம் நல்லது நடக்கும் கீர்த்தனா. நீ கவலை படாத. உனக்குனு போட்ட விதை வளர்ந்து இருக்கும். சரியான நேரத்துல உன் கையில கொண்டு முருகன் ஒப்படைப்பான். அதுவரைக்கு உன் அபிஷேகத்தை விடாத" என்ற ரூபா

தொடர்ந்து "முன்னைக்கு இப்போ ரொம்ப கருத்த மாதிரி இருக்க, இப்படி வெயில் நேரமா வந்து வேண்டுதல் பண்றதுக்கு... கொஞ்சம் வெயில் தாந்தால வந்து செய்யலாம் இல்ல!" என்றார் அக்கறையாக.

"மணி தான் ஆறு ஆகிட்டேக்கா ஆனாலும் வெயில் குறைய மாட்டேங்குது. அதான் எப்பவும் செய்யுறது தானேனு வந்துட்டேன்" என்ற கீர்த்தனா முருகர் மீது தண்ணீரை ஊற்ற, ரூபாவும் நின்று வணங்கியவர்

"நான் இப்படி கேட்டேனு நீ எதும் சங்கடப்பட்டுக்காத தெய்வா. உன்னை விட சின்ன பிள்ளைங்க எல்லாம் கல்யாணம் ஆகி கையில ஒன்னும் வயித்துல ஒன்னுமா இருக்கும் போது... அவங்க எல்லாரையும் விட பெரிய பொண்ணு நீ கல்யாணம் ஆகாம இருக்கும் போது பார்க்க சங்கடமா இருக்குது. உன் ப்ரெண்டெல்லாம் கூட பாரு... அடுத்த வருஷம் பிள்ளையை ஸ்கூல் சேர்க்கனும்னு பேசுறாளுங்க" என்றார் வருத்தம் நிறைந்த குரலில்.

"புரியுது கா. நான் ஒன்னும் தப்பா எடுத்துக்கலை" என்று சிறு புன்னகையுடன் கூறிய கீர்த்தனா உள்ளுக்குள் 'நான் ஃபீல் பண்றேன்னு உங்ககிட்ட வந்து சொன்னேனா?' என கடுப்புடன் எண்ணிக்கொண்டாள்.

"சரி தெய்வா. நீ வேண்டுதலை பாரு... நான் கிளம்புறேன்" என்று ரூபா சென்று விட,

அவர்கள் சம்பாசனையை கேட்டு புன்னகையுடன் அமர்ந்திருந்த முருகனை முறைத்த கீர்த்தனா "எதுக்கு? இல்ல எதுக்குனு கேக்குறேன். நான் கேட்டேனா எனக்காக யாரும் பரிதாப படலை, நீ ஆள் அனுப்பி வைனு" என்று கோபமாய் கேட்டவள்,

" எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு சோதனை? உன்னை கும்பிடுறேனே அதுக்காகவா? எனக்கு கல்யாணம் ஆகலைங்குறதை விட இப்படி பேச்சை கேட்க தான் கஷ்டமா இருக்கு முருகா. ஒரு குறிப்பிட்ட வயசுக்கு மேல கல்யாணம் ஆகாம இருந்தா அம்மா கூட எதிரி ஆகிடுறாங்க. அவங்க வேதனை புரியுது. அதுக்குகாக... என்னோட சண்டை போட்டு என்ன பிரயோஜனம் சொல்லு? அதில் என்னோட நிம்மதியும் சேர்ந்து போறது தான் மிச்சம். அதனால உன் கருணையை கொஞ்சம் சீக்கிரம் காட்டு" என்றாள் தெய்வ கீர்த்தனா வருத்தமும் கெஞ்சலுமாய்.

ஆனால் அந்த அரசமரத்தான் தான் அதை கேட்டது போல் இல்லை. எப்போதும் முகத்தில் இருக்கும் நீங்காத புன்னகையுடனேயே தான் அமர்ந்து இருந்தார். அவரை சில நொடிகள் முறைத்து பார்த்த கீர்த்தானா முகத்திலும் அந்த புன்னகை வந்தமர

"இந்த டைம்மும் என்னை டீல்ல விட போற அதானே!" என்ற கேள்வியுடனும்
அதே புன்னகையுடனும் வேண்டுதலை முடித்துக்கொண்டு அவள் வீட்டிற்கு சென்றாள்.

அவள் நினைத்து வந்தது சரி தான் என்பது போல் "தெய்வா இங்க வா... இந்த போட்டோவை பாரு" என்று சந்தோஷத்துடன் ஒரு கவரை அவளிடம் கொடுத்தார் அபிராமி.

இது எப்போதும் நடக்கும் நிகழ்வு தான் என்பதால் "யாரு மா கொண்டு வந்தா?" என்று கேட்டு கொண்டே அந்த புகைப்படத்தை வாங்கி பார்த்த தெய்வ கீர்த்தனா, அபிராமியை பார்க்க,

"பையன் பெரு மகேஷ். இஞ்சினியரிங் முடிச்சிட்டு சென்னைல வேலை பார்க்குறானாம். மாசம் எழுபது சம்பளமாம். ஜாதகம் பார்க்க வேண்டாம் பொண்ணு பிடிச்சிருந்தா பேசலாம்னு சொல்லி இருக்காங்களாம். நம்ம ஜெயா இப்போ தான் வந்து போட்டோவும் ஜாதகமும் குடுத்துட்டு போறா" என்று அவள் பார்வைக்கான பதிலை கூறிய அபிராமி ஆவலாய் கீர்த்தனா முகம் பார்க்க,

"எப்போ வராங்கலாம்?" என்றாள் கீர்த்தானா பெரிதாய் எந்த ஆர்வமும் இல்லாமல்.

"நாளைக்கே நாள் நல்லா இருக்கு பார்க்க வரட்டுமானு ஜெயா கேட்டா... நான் தான் அப்பாட்ட கேட்டுட்டு தகவல் சொல்றதா சொல்லி இருக்கேன்" என்று அபிராமி சொல்ல,

"சரிமா..." என்ற கீர்த்தனா, போட்டோவை அவரிடமே கொடுக்க,

"தெய்வாமா..." என்று தவிப்புடன் அழைத்து அவள் கையை பிடித்து கொண்ட அபிராமி "உனக்கு பையனை பிடிச்சிருக்கு தானே டா?" என்று கேட்டார்.

"பிடிக்கலைனாலும் அப்பாகிட்ட பிடிச்சிருக்குனு சொல்றேன் மா. எனக்கா இல்லைனாலும் உனக்கா சீக்கிரமே இந்த வீட்டை விட்டு போய்டுறேன் சரியா?" என்ற கீர்த்தனா இன்னதென பிரித்தறிய முடியா குரலில் சொல்ல,

அவள் வார்த்தை அபிராமியை சுருக்கென குத்த "ஏன் தெய்வா!" என்று வலி மிகுந்த குரலில் கேட்ட அபிராமிக்கு கண்ணீர் கன்னத்தில் வழிந்து விட்டது.

"வேற என்னமா செய்யட்டும். நான் எனக்கு பிடிக்கலைனு சொன்னா அடுத்த பத்து நாள் என்னோட பேச மாட்டிங்க. என்னவோ... வந்த எல்லா சம்மந்தத்தையும் நானே எட்டி உதைச்ச மாதிரி பேசுவிங்க. கேட்டு கேட்டு எனக்கு வெறுத்து போச்சி மா. இந்த வீட்டை விட்டு, உங்களை விட்டு தூரமா போனா போதும்னு ஆகிட்டு" என்று கீர்த்தனா விரக்தியாய் சொல்ல,

"போதும் டி நீ பேசுனது. நீ பேசுனதை கேட்டு பெத்தவளா எனக்கு மனசு குளிர்ந்து போச்சி. ஆமா... நீ எதுவும் சொல்ல வேண்டாம். நான் சொன்னதை மட்டும் கேளு... போதும்" என்று கோபமும் அழுகையுமாய் சொன்னவர் அதற்கு மேல் மகளின் பேச்சை கேட்டு உள்ளம் போக பிடிகாகாமல் அங்கிருந்து நகர்ந்து விட்டார்.

மகள் சொன்ன இந்த வார்த்தையே ஜென்மத்துக்கும் போதுமானதாய் இருந்தது அவருக்கு.

"நீங்க இதை தான் செய்விங்கனு எனக்கு தெரியும்மா" என்று விரக்தியுடன் சொன்னபடி அறைக்குள் சென்ற கீர்த்தனா அடுத்த பத்து நிமிடத்தில் வேலைக்கு கிளம்பி சென்று விட்டாள்.

கீர்த்தனா கோவையில் உள்ள பெண்களின் பிரத்தியேக ஆடையகம் ஒன்றில் மேனேஜராக வேலை செய்கிறாள். இப்போதைய அவளின் ஒரே ஆறுதல் அவள் வேலை ஒன்று மட்டுமே.

தெய்வ கீர்த்தானா கல்யாண சந்தையில் கடந்த நான்கு ஆண்டுகளாய் விலை போகாமல் இருக்கும் பெண். அது அவள் தவறா? ஆனால் அவள் தவறு தான் என்றனர் ஊரும் உறவுகளும்.

கீர்த்தனாவை பொறுத்தவரை கல்யாணம் என்ற ஒன்று மட்டுமே வாழ்க்கை இல்லை. அதை தாண்டியும் வாழ்க்கை இருக்கிறது என்று நினைக்கும் பெண். ஆனால் அபிராமியோ கல்யாணம் மட்டுமே வாழ்க்கை என்று நினைக்கும் ரகம்.

அதனால் தானோ என்னவோ! கீர்த்தனா கல்லூரி இரண்டாம் வருடம் படிக்கும் போதே அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க தொடங்கி விட்டார்.

அந்த வருடத்திலேயே திருமணத்தை முடித்து விட வேண்டும் என்று தீவிரமாய் இருந்தவரை "படிப்பு முடிந்த பிறகு தான் திருமணம் செய்வேன். இப்போது திருமணம் வேண்டாம்" என்று சண்டை போட்டு ஒரு வாரம் சாப்பிடாமல் இருந்து தான் கீர்த்தனா அந்த பேச்சை தள்ளி போட்டாள்.

ஆம்... அவளால் தள்ளி போட மட்டுமே முடிந்தது. நிறுத்த முடியவில்லை. அபிராமி அந்த விஷயத்தை அப்படியே விடாமல் உறவினர்கள் வீட்டு கல்யாணம், சடங்கு என்று சென்று வரும் போதெல்லாம் ஒரு ஜாதகத்துடனோ இல்லை மாப்பிள்ளை வீடு பற்றிய தகவலுடனோ தான் வருவார்.

வாரம் முழுவதும் அதை பற்றியே பேசி கீர்த்தனா மனதை கலைக்க முயற்சிப்பார். ஆனாலும் கீர்த்தனா அவள் முடிவில் உறுதியாக இருக்க அவரே அவளுக்கு தெரியாமல் ஜாதகமும் பார்க்க செல்வார்.

இதெல்லாம் தெரிந்து தெரியாதது போல் கீர்த்தனா இருந்து கொல்வாள்.

விஷயம் வெளியே வரும் போது பேசி கொள்ளலாம் என்று நினைத்து அமைதியா இருந்து விட்டாள். ஆனால் அவள் நல்ல நேரமோ இல்லை கெட்ட நேரமோ அந்த இரண்டு வருடத்தில் அவளுக்கு எந்த வரனும் அமையவில்லை.

ஆனால் அதன் பிறகும் அமையாதது தான் இங்கே கொடுமையாகி போனது. ஆனாலும் அதை பெரிதாக நினைக்காத கீர்த்தானா, வரன் அமைந்த உடன் படிப்பை விடுவதா அபிராமியிடம் கூறி படிப்பை தொடர்ந்தாள். ஆனால் எம்ஃபில் முடிந்து இதோ வருடம் ஒன்று கடந்து விட்டது இன்னும் வரம் அமையவில்லை.

அதை பெரிய விஷயமாக இன்று வரை கீர்த்தனா உணர்ந்தது இல்லை. ஆனால் அபிராமி அப்படி எண்ண வேண்டுமே!.

அவருக்கு பெண் பிள்ளைக்கு சீக்கிரம் திருமணம் செய்து விட வேண்டும் அதனால் வாரம் ஒரு வரனை கொண்டு வந்து நிறுத்த, கீர்த்தனா தான் நொந்து போனாள். அதில் அவர்களுக்கு பிடித்தால் அபிராமிக்கு பிடிக்காமல் போகும், இவர்களுக்கு பிடித்தால் அங்கே பிடிக்காமல் போகும். இருவருக்கும் பிடித்தால் ஜாதக பொருத்தம் இருக்காது. இப்படியே வருடங்கள் கடந்து இருக்க அபிராமியின் மற்றோரு முகத்தையும் கீர்த்தனா உணர்ந்து விட்டிருந்தாள்.

முன்பெல்லாம் உள்ளங்கையில் வைத்து பாசம் காட்டி வளர்ந்தர் இப்பொதெல்லாம் திருமணம் பற்றி பேசவும் திட்டவும் மட்டுமே என்று இருக்க சொந்த வீட்டையே வெறுத்து விட்டாள்.

ஒரு வயதிற்கு மேல் பெண் பிள்ளை திருமணம் ஆகாமல் வீட்டில் இருந்தால் அது பெற்றவருக்கு பாரம் என்று புரிய தொடங்கியது கீர்த்தனாவிற்கு. "நீ வீட்டை விட்டு போனா தான் எனக்கு நிம்மதியா சோறு இறங்கும்" என்று அபிராமி சொல்லு நேரம் எல்லாம் தனக்குள்ளே கலங்கி துடித்து போவாள்.

இன்று வரை அந்த பேச்சி ஓயவில்லை. மாறாக இன்னும் சில வார்த்தைகள் கூடி இருந்தது. 'உன்னை விட சின்னவளுங்க எல்லாம் கையில் ஒன்னும் வயித்துல ஒன்னுமா இருக்காளுங்க, உனக்கு எப்போ தான் நல்லா காலம் பிறக்குமோ? ராசி இல்லாதவடி நீ' என்ற வார்த்தை எல்லாம் வதைத்து கொள்ளும்.

அது எல்லாம் பெற்றவர்களான அவர்களின் வேதனையின் வெளிப்பாடு என்று புரிய தான் செய்தது ஆனால் அவர்கள் வேதனையை அவளின் மேல் திணிப்பது தான் கீர்த்தனாவிற்கு வலியை கொடுத்தது.

அதிலும் கடந்த இரண்டு வருடமாய் ஜாதகம் அமையவில்லை என்றாலும் சரி, மாப்பிள்ளை நன்றாக இல்லா விட்டாலும் சரி, கல்யாணம் நடந்தால் போதும் என்ற அபிராமியின் மனநிலை கீர்த்தனாவிற்கு ஒரு வித பாதுகாப்பின்மையையும் மன கசப்பையும் கொடுத்தது.

எங்கே 'திருமணம் நடந்தால் போதும்' என்ற எண்ணத்தில் விசாரிக்காமல் ஒரு கெட்டவனிடம் கையில் தன்னை பிடித்து கொடுத்து விடுவார்களோ! என்ற பயம் கீர்த்தனாவின் மனதை அறிக்க தொடங்க கடவுளை சரணடைந்து விட்டாள்.

முன்பு அபிராமியின் திட்டிற்கு பயந்து கடவுளை சுற்றியவள் இப்போது மனமாற செய்கிறாள். ஆனால் பலன் தான் இன்னும் கிடைக்கவில்லை.

அதனாலேயே நாளை வரும் வரனை ஏற்க தயாராகி விட்டாள். அதை தவிற அவளுக்கு வேறு வழியும் இருக்கவில்லை. அவள் மறுத்து ஏதும் கூறினாள் மீண்டும் திட்டு, பேசாமல் முகத்தை திருப்புவது, உண்ணா விரதம் இருப்பது என்று அவளிடம் இருக்கும் கொஞ்ச நிம்மதியையும் அபிராமி எடுத்து கொள்வார். எனவே நடக்கது நடக்கட்டும் என்று விட்டு விட்டாள்.

வேலைக்கு சென்ற கீர்த்தனா தன் கவலைகளை மறந்துவிட்டு அவள் பதிக்கு உரிய மிடுக்குடனே அவள் வேலைகளை செய்யளானாள்.

மாலை சோர்வுடன் வீடு திரும்பியவளை "வா தெய்வாமா. இன்னைக்கு வேலை அதிகமாடா?" என்ற குமாரின் கனிவான குரலே வர வேற்க,

"ஆமா பா... தீபாவளி டைம் இல்லயா அதான் பா" என்றவள் குமார் சாப்பிட அமர்ந்து இருப்பதை பார்த்து "நான் ப்ரெஸ் ஆகிட்டு வரேன் பா. சேர்ந்து சாப்பிடுவோம்" என்றுவிட்டு சென்றவள் அடுத்த ஐந்து நிமிடத்தில் சாப்பிட வந்து அமர்ந்து விட்டாள்.

அவள் தந்தையின் முகத்தில் இருந்த புன்னகையே அவளின் முடிவை அபிராமி சொல்லி விட்டார் என்று புரிய, அவள் முடிவு சரிதான் என்ற எண்ணத்தை கொடுத்தது கீர்த்தனாவிற்கு.

அபிராமி திட்டி தீர்த்து, புலம்பி என்று அவர் கவலைகளை கொட்டி விடுவார். ஆனால் குமார் மனதிலேயே போட்டு அழுத்தி கொள்வார். அதனாலேயே கடந்த இரண்டு வருடங்களாய் அவரின் பேச்சி மிகவும் குறைந்து இருந்தது.

கல்யாணம், காதுகுத்து என்று எந்த சுப நிகழ்வுகளுக்கும் செல்வதும் இல்லை. அபிராமியை அனுப்பி விட்டு வேலைக்கு சென்று விடுவார்.

எல்லாவற்றையும் கீர்த்தனா கவனித்தாலும் அமைதியாகவே இருப்பாள். இதில் அவள் என்ன செய்து விட முடியும் என்று அவளுக்கு தெரியவில்லை. எனவே அமைதியாக இருந்து கொள்வாள்.

இப்போதும் அவர் முகத்தில் இருந்த மகிழ்ச்சியை மன நிறைவுடன் பார்த்தபடி சாப்பிட அமர்ந்தவள் அமைதியாக சாப்பிட,

அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை அமைதியாக இருந்த குமார் "உனக்கு இந்த பையனை புடிச்சிருக்காமா? அம்மா சொன்னானு ஒன்னும் சம்மதம் சொல்லலையே!" என்று தவிப்பை அடக்கிய குரலில் கேட்க,

"பிடிச்சிருக்கு பா. நீங்க பேசுங்க" என்றாள் கீர்த்தனாவும் இப்போது உறுதியுடன்.
அதில் அகம் மகிழ்ந்து போன குமார் "சரி மா... சரி மா... உன் தம்பியை வர சொல்றேன். பையனுக்கும் உன்ன பிடிச்சிட்டுனா நாளைக்கு உடனே பூ வைக்கனும்னு பையனுக்கு அப்பா சொல்லிட்டு இருந்தாங்க . பையன் ரொம்ப நல்ல பையன் மா. அப்பா விசாரிச்சிட்டேன். நீ ஏதும் சங்கடப்பட்டுக்காத" என்று சொல்ல,

"எனக்கு உங்களை தெரியும் பா. உங்களை தவிர எனக்கு வேற யார் நல்லது நினைச்சிட போறாங்க! நீங்க ஏற்ப்பாடு பண்ணுங்கப்பா" என்றவள் அவள் அறைக்குள் சென்று படுத்து விட, அடுத்த பத்து நிமிடத்தில் அவள் தம்பி அழைத்து விட்டான்.

அவன் பங்கிற்கு அவனும் 'பையனை பிடித்திருக்கிறதா?' என்று கேட்டு திருப்தி ஆகி கொண்டவன் கிளம்பி விட்டதாக கூறி அழைப்பை துண்டித்தான்.

பொழுதும் விடிந்தது. அபிராமி வீட்டு வேலைகளில் பம்பரமாய் சுழன்று கொண்டிருக்க, அவருக்கு உதவ என்று கீர்த்தனாவும் அவருடன் சென்று நின்று சின்ன சின்ன வேலைகளை செய்து கொடுத்தாள்.

அபிராமி அடிக்கடி அவள் முகத்தை பார்ப்பதும், வேலை செய்வதுமாக இருக்க "என் முகத்துல என்ன படமாமா ஓடுது?" என்றாள் கீர்த்தனா எரிச்சலுடன்.

"சும்மா பார்த்தேன் டி. நேத்து மூக்கை சீந்திட்டு போனியே... அதான்" என்ற அபிராமி "உனக்கு பையனை பிடிச்சிருக்கு தானே தெய்வா?" என்றார் ஒரு அன்னையின் தவிப்புடன்.

"பிடிச்சிருக்கு மா. ஏன் அதையே யோசிச்சிட்டு இருக்க! சீக்கிரம் வேலையை முடிப்போம். நான் குளிச்சிட்டு கிளம்பனும். அப்பா எங்க போய்ட்டாங்க? ஹால்ல இல்லை" என்று கீர்த்தனா கேட்க,

"அவர் 'எல்லாம் நல்ல படியா முடியனும்னு' அந்த ஆலமரத்தானை பார்த்து அவருக்கு மாலை போட போய் இருக்கார். நீயும் குளிச்சிட்டு போய் கும்பிட்டுட்டு வந்துடு" என்றார் அபிராமியும் சந்தோஷத்துடன்.

தெய்வ கீர்த்தனாவிற்கும் முருகனை சென்று பார்க்க தோன்ற கிளம்பி சென்று அவரை வணங்கி விட்டு வந்தாள். முருகனும் சிரித்த முகமாய் வழியனுப்பி வைத்தார்.

அடுத்த சிலமணி நேரத்தில் அவளை பெண் பார்க்க வந்தனர். அனைவரும் டீ குடித்து பஜ்ஜி சாப்பிட்டு முடிக்க பெண் அழைக்கப்பாட்டாள்.

அபிராமி வந்து கீர்த்தனாவை வெளியே அழைத்து வர, பையன் வீட்டு சார்பில் வந்திருந்த அனைவரின் பார்வையும் அவளை அங்கு வேறு ஆணி வேறாய் ஆராய்ந்தனர்.

அதை தொடர்ந்து எல்லாரும் அவர்களுக்குள் ஏதோ பேசி கொள்ள, பையனின் அம்மா பையனிடம் கண் ஜாடையில் 'பெண்ணை பிடித்திருக்கிறதா?' என்று கேட்க,

அவனின் பதில் தலையசைப்பில் வந்தது.

பையனின் பெரியம்மா தெய்வகீர்த்தனாவிடம் "எங்க பையனை பிடிச்சிருக்கானு சொல்லுமா?" என்று சொல்ல,

கீர்த்தனாவும் நிமிர்ந்து மாப்பிள்ளையை பார்த்தாள். நேற்று போட்டோவில் பார்த்தவனுக்கும் நிஜத்துக்கும் பத்து வேறுபாடு இருந்தது. நேற்று போட்டோவில் சுமார் ரகமாய் இருந்தவன் நேரில் இன்னும் சுமாராய் தான் இருந்தான்.

குண நலன்கள் பற்றி எதுவும் தெரியவில்லை. இருந்தும் குமார் அபிராமி முகத்தில் இருந்த சந்தோசத்தை நிலைக்க வைக்க வேண்டும் என்ற முடிவில் இருந்தவள் "பிடிச்சிருக்கு" என்றாள் தெளிவாய்.

அடுத்து மீண்டும் பத்து நிமிடம் அவர்களுக்குள் ஏதோ முணுமுணுப்பாய் பேசி கொண்டவர்கள் "நீங்க வேற இடம் பாருங்க" என்று நாசுக்காய் கூறி எழுந்து சென்றனர்.

அவ்வளவு தான் கீர்த்தனா வீட்டில் இருந்த அனைவர் முகத்திலும் கவலை குடியேற சோர்ந்து போனார்கள்.

ஆனாலும் அபிராமி கோபத்தையும், தவிப்பையும் அடக்க முடியாமல் "ஏங்க என்ன ஆச்சி? எதுவும் காரணம் சொல்லாம பிடிக்கலைனு சொன்னா நாங்க என்ன நினைக்குறது!" என்று கீர்த்தனா தடுத்ததையும் மீறி கேட்டு விட

"பொண்ணு மா நிறமா தான் இருக்கா. எங்க பையனுக்கு வெள்ளையா தான் பொண்ணு பார்க்க நினைச்சோம். ஜெயா பொண்ணு நல்ல வெள்ளைனு சொல்லவும் தான் வந்தோம்" என்று பையனின் அன்னை சொல்ல,

"போய்ட்டு வாங்க சாமி" என்று கை எடுத்து கும்பிட்டு விட்டார் அபிராமி.

ஆனால் அபிராமி அறியவில்லை அவரின் மருமகன் அதிரடியாக அவர் மகளை மணக்க போகிறான் என்று. அதை எல்லாம் அறிந்த முருகரோ மாற புன்னகையுடன் ஆலமரத்தின் நிழலில் அந்த விளையாட்டை பார்க்க காத்திருந்தார்.

தொடரும்....
 
ஹாய்.... தோழமைகளே 👋

"நீயே என் கீர்த்தனம்" கதையின் முதல் அத்தியாயம் பதிவிட்டு விட்டேன். படித்து விட்டு உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே ❤️


நன்றி ❤️
 
அத்தியாயம் : 2

"ப்ளீஸ் தெய்வா இருந்த ஒரு டைம் அம்மா சொல்றதை கேளேன்" என்று கெஞ்சிய படி அபிராமி அவள் பின்னோடு வர,

"நான் வர மாட்டேன் மா. நீங்க என்னவோ பண்ணுங்க. வாரம் ஒரு முறை உங்களுக்கு இதுவே வேலையா போச்சி. போன வாரமே ஸ்ரிக்டா சொன்னேன் தானே!" என்று கோபத்தில் கூறியபடி கீர்த்தனா ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு வேலைக்கு கிளம்பி விட்டாள்.

அவளும் எத்தனை நாள் தான் பொறுத்து கொள்வாள்! வாரத்தில் நான்கு நாட்கள் "பெண் பார்க்க வருகிறார்கள் கிளம்பி இரு' என்று அவர்கள் சொல்லும் நாள் எல்லாம் தயாராகி இருக்க அவள் ஒன்றும் பொம்மை இல்லையே! உயிரும் உணர்வு கொண்ட பெண் அல்லவா!

அன்று பெண் பார்க்க வந்தவர்கள் 'வேண்டாம்' என்று சொல்லி சென்ற கோபத்தில் அபிராமி உடனே வேறு வரன் பார்க்க தொடங்க போவதாக கூறிய அன்றே,

"ப்ளீஸ் மா என்னை கொஞ்ச நாள் நிம்மதியா இருக்க விடுங்க. ஒரு வாரத்துக்கு எத்தனை மாப்பிள்ளை வீட்டை தான்மா கொண்டு வருவிங்க? வரவங்க வேண்டாம்னு சொன்னா உடனே அடுத்து பார்க்கனுமா? நான் அதை ஏற்றுக்க தயாரானு என்ன பத்தி கொஞ்சமாவது யோசிக்குறிங்களா மா? எதுக்கு இவ்வளவு அவசரம்? மெனக்கெடல்? விட்டுடுங்க ப்ளீஸ்... உங்களால என் நிம்மதியே போச்சி. கொஞ்ச நாள் என்னை ப்ரீயா இருக்க விடுங்க. இன்னும் ஒரு வருஷத்துக்கு எனக்கு கல்யாணமே வேண்டாம்" என்று பொறுமை இழந்து கத்தியிருந்தாள்.

அன்று சரி என்று தலையாட்டி கொண்டவர், அடுத்த இரண்டாவது நாளே "மாப்பிள்ளை விட்டிலிருந்து வருகிறார்கள். வேலைக்கு செல்ல வேண்டாம். கிளம்பி இரு" என்று சொல்ல, கீர்த்தனாவின் பொறுமை பறந்து விட்டது.

அபிராமியும் அன்று அமைதியாக இருக்கவும், இனிமேல் அவசரம் காட்ட மாட்டார் என்று நம்பி கீர்த்தனாவும் சற்று நிம்மதியுடன் இருந்தாள்.

எப்போதும் போல் இன்றும் முருகனை சென்று வணங்கி வந்தவள் வேலைக்கு கிளம்பி கொண்டிருக்க, அவளிடம் வந்த அபிராமி "என்ன தெய்வா கடைக்கு கிளம்பிட்டியா?" என்று நாசுக்காய் ஆரம்பித்தவர் "இன்னைக்கு லீவ் சொல்லேன்" என்று அபிராமி சொல்லவும் அவரை சந்தேகத்துடன் பார்த்தவளுடன் காரணம் புறிய

ஏன் மா இன்னைக்கு லீவ் சொல்ற அளவு என்ன அவசரம் என்றாள் ஒன்றும் அறியாதவள் போல் ஆனால்
அபிராமியின் இந்த அவசரம் கீர்த்தனாவிற்கு பெரும் பயத்தை கொடுத்தது.

அன்று அவள் பேசும் போது அமைதியாக கேட்டு கொண்டவர் இன்று அடுத்த வரனுடன் வந்து நிற்கவுமே அவளின் பேச்சிறகும் மனதிற்கும் இங்கே மதிப்பு இல்லை என்று புரிந்து விட கோபத்தை அடக்கியபடி அபிராமியை பார்த்து நின்றாள்.

இந்த முறை நீ நினைக்குற மாதிரி எதுவும் நடக்காது தெய்வா அம்மா நல்லா விசாரிச்சிட்டேன் மாப்பிள்ளை வீட்டுல உன் போட்டோ பார்த்து பிடிச்சி தான் வர்றாங்க பையன் ரொம்ப தங்கமான குணம் என அபிராமி கூறியதை உணர்ச்சி அற்றவளாய் பார்த்து நின்றவள்.

என்னால லீவ் போட முடியாது அவங்களை வர வேண்டாம்னு சொல்லிடுங்க என்று முடிவாய் கூறியவள் அபிராமியின் கோபம் கெஞ்சல் எதையும் சட்டை செய்யாமல் கடைக்கு கிளம்பி விட்டாள்.

மனம் வெறுத்து அலுவலகம் வந்து அவள் சீட்டில் வந்து அமர்ந்த கீர்த்தனாவின் கண்ணோரம் கண்ணீர் துளிர்க்க டேபிலில் சாய்ந்து படுத்து விட்டாள். இந்த வாழ்க்கை இத்தனை கசக்கும் என்று அவள் கனவிலும் நினைத்து இல்லை. செத்து விடுவோமா என்று எண்ணும் அளவு மனம் வலியில் மூழ்கி கிடந்தது.

சில நிமிடங்கள் தன்னை அறியாமலேயே படுத்திருந்தவள் கதவு தட்டப்படும் சத்தத்தில் நிமிர்ந்து பார்க்க மேம் ஸ்டோர் ரூம் கீ என்றபடி விற்பனை பெண் ஒருவர் உள்ளே வர

கண்களை துடைத்து விட்டு சாவியை எடுத்து கொடுத்தவள் அதன் பின் வேலையில் மூழ்கி விட்டாள். அன்றைய நாள் நேரம் சற்று விரைவாகவே நகர்ந்து விட மாலையும் வந்தது.

வீட்டிற்கு செல்ல துளி விருப்பம் இல்லாத போதும் வேறு வழி இல்லாமல் கீர்த்தனா வீட்டிற்கு வர

அவளை எதிர் பார்த்து வீட்டு வாசலில் காத்திருந்த அபிர்மி இன்னைக்கு ஏன்டி இவ்வளவு நேரம் என்றார் எரிச்சலை உள் அடக்கிய குரலில்

ஏன் இது எப்பவும் வர டைம் தானே என்றபடி கீர்த்தனா செறுப்பை கழட்டி விட்டு உள்ளே செல்ல

நாளைக்கு வேலைக்கு லீவ் சொல்லிடு கீர்த்தனா என்றார்.

அதில் நின்று அவரை திரும்பி பார்த்தவள் "ஏன்...? மறுபடியும் மாப்பிள்ளைனு எவனும் டீ காஃபி குடிக்க வரானா?" என்றாள் கீர்த்தனா நக்கலாய்.

"அதான் வந்தவனை எல்லாம் பிடிக்கலைனு சொல்லியே அனுப்பிட்டியே... அப்பறம் என்ன?, காலா காலத்துல கல்யாணம் பண்ணி போகனும்னு எண்ணம் இல்லை. நீ எல்லாம் எங்க உருப்பட! அனுவை பாரு உன்னை விட சின்ன பொண்ணு. அவளுக்கு நாளைக்கு பூ வைக்க வராங்களாம். உன் அத்தை இப்போ தான் போனை போட்டா. நைட்டே கிளம்பனும்னு உன் அப்பா குதிக்கிறார். போய் ட்ரெஸ்ஸ எடுத்து வை போ" என்றார் அபிராமி அவளை முறைத்தபடக அதீத கோபத்துடன்

அவர் சொன்னதை கேட்ட கீர்த்தனாவிற்கு ஒரு நிமிடம் 'திக்'என்று இருந்தது. அனுவிற்கு திருமணம் நடப்பது மகிழ்ச்சி தான் என்றாலும் அங்கே சென்றால் ஆட்டுறலில் அரைபடும் அரிசியாக அரை படுவது அவள் அல்லவா!

நாளை உறவினர்கள் அனைவரும் கேட்கும் கேள்வியை நினைத்து இப்போதே பதட்டம் அதிகரித்தது.

'நான் இப்போ இருக்குற நிலமையில இதுவேறையா? எனக்குனே எல்லாம் வரும் போல! நாளைக்கு எல்லாருமா சேர்ந்து "உனக்கு எப்போ கல்யாணம், உன் அப்பா மாப்பிள்ளை பார்க்குறானா? இல்லையான்னு?" கேட்டே கொன்ணுடுவாங்களே... நான் கொஞ்சம் நிம்மதியா இருந்தா இந்த கடவுளுக்கு பிடிக்காதே' என்று முணுமுணுத்தவள்

"பூ வைக்குற பங்ஷனுக்குகெல்லாம் நான் எதுக்குமா? நீங்களும் அப்பாவும் மட்டும் போனா ஆகாதா?" என்று கேட்டாள் கீர்த்தனா கடுப்புடன்.

"அதை எங்கிட்ட சொல்லாத. உன் அப்பாக்கிட்ட வந்து சொல்லு. ஏன்னா நீயும் வந்தே ஆகனும்னு சொன்னது உன் அப்பா தான்" என்ற அபிராமி அவர் வேலையை பார்க்க சென்று விட

"ப்ச்" என்ற சலிப்புடன் குமாரிடம் வந்தவள் "ப்பா பூ வைக்குற பங்ஷனுக்கு எல்லாம் நான் எதுக்கு? நீங்களும் அம்மாவும் போய்ட்டு வாங்க. அத்தை கிட்ட நான் போன்ல சொல்லிக்கிறேன்" என்றாள் பிடித்தமின்மையை குரலில் காட்டி.

"பங்ஷனுக்குனு இல்லை. லதா வீட்டுக்கு போய் ரொம்ப நாள் ஆகிட்டு. அனுவும் உன்ன கூட்டிட்டு வர சொல்றா. நீ வந்தா உன் அத்தையும் சந்தோஷப்படுவா. கிளம்பு..." என்றார் குமரன் கண்டிப்பு குரலில்.

அதில் குமார் மீதும் கீர்த்தனாவிற்கு சற்றே கோபம் எட்டி பார்த்தது.

எப்போதும் ஏதாவது ஒன்றை அன்பாகவோ அல்லது கோபமாகவோ கூறி அவர்கள் சொல்லுக்கு அடிபணிய வைப்பது குமாரின் குணம். அதில் ஒரு வித எரிச்சலுடனே அறைக்கு வந்தவள் ஊருக்கு செல்ல கிளம்ப தொடங்கினாள்.

இரவு எட்டு மணிக்கெல்லாம் இரவு உணவை முடித்து கொண்டு குமார் குடும்பம் மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு புறப்பட்டனர்.

குமார் உடன் பிறந்தது ஒரு தங்கை லதா மட்டுமே. திருமணம் முடிந்து நாகர்கோவிலை அடுத்த தக்கலையில் வசித்து வருகிறார். லதாவின் கணவர் கந்தையன். லதாவிற்கு ஒரு பெண் மட்டுமே அவள் அனு ராகவி. அனு வெள்ளை நிறத்தில் அகண்ட விழிகள் என அழகாக இருப்பாள்.

உறவுகளுக்கிடையில் நிறைய முறை அதை கூறி கீர்த்தனாவை மட்டம் தட்டுவதுண்டு ஆனால் கீர்த்தனா அதை எல்லாம் பெரிதாக எடுத்து இல்லை. அனுவும் பந்தா எதுவும் இல்லாமல் இயல்பாக பேசுவாள். அதனாலேயே இருவருக்குள்ளும் ஓர் அழகான நட்பு இருந்தது.

அதில் அவர்கள் இருவரும் நட்புடன் ஒன்றாக சுற்றுவதை பார்த்து நாளடைவில் அந்த பேச்சும் நின்று விட்டிருந்தது.

ஆனால் நாளை நடக்கும் சுப நிகழ்வில் யார் யாரெல்லாம் தன்னை தீயில் நிற்க வைக்க போகிறார்களோ! என்ற யோசனையுடன் ரயிலில் அமர்ந்த கீர்த்தனா சற்று நேரத்தில் ஆழ்ந்த நித்திரையில் ஆழ்ந்து இருந்தாள்.

தக்கலை கேரள எல்லை பகுதியில் இருப்பதால் நல்ல தண்ணீர் வளம் மிக்க ஊர். அதனால் அந்த த்ரீ மிகவும் குளிர்ச்சியுடன் இருந்தது.

அதிலும் இரவு நேர குளிர் சற்று அதிகமாகவே இருந்தது. அதில் மாலை நேரம் கை விட்டு சென்ற தூக்கம் இப்போது தானாக கீர்த்தனாவை தழுவ ஜன்னல் கம்பியில் சாய்ந்து கண் அயர்ந்தாள்.

****

திருநெல்வேலி மாவட்டத்தின் தென் கோடியில் உள்ள வள்ளியூர் ரயில் நிலையம். இரவு நேர அமைதியை தத்தெடுத்தபடி பாதி இரளில் மூழ்கி கிடந்தது. ஆனால் ஆள் அரவமற்ற இடம் என்று சொல்ல முடியாத அளவு அங்கே போடப்பட்டிருந்த இருக்கையில் இரண்டு இளைஞர்கள் இருந்தனர்.

ஆனால் இருவரிடமும் எந்த பேச்சு வார்த்தையும் இல்லாமல் இருக்க எங்கோ தூரமாய் வரும் ரயிலின் ஓசை துல்லியமாய் காதில் கேட்டு கொண்டிருந்தது. அதில் சுயம் பெற்ற குகண் தன் அருகில் அமர்ந்து இருந்த தன் நண்பனை பார்க்க, அவனோ சுரனை அற்றவன் போல் அமர்ந்து இருந்தான்.

அவனின் பால் வண்ண நிறத்திற்கு அவன் அணிந்திருந்த கருப்பு நிற சட்டையும் வெள்ளை நிற வேஷ்டியும் அவனை அழகனாய் காட்டியது. ஆனால் ரத்த நிறத்தில் சிவந்திருந்த அவன் கண்களும், யோசனையில் சுறுங்கி இருந்த நெற்றியும் கோபத்தில் விடைத்திருந்த நாசியும் நெற்றியை தாண்டி வழிந்த முடியும் சற்றே அதிகம் வளர்ந்த அவன் தாடியும், இரு விரலின் இடையே நெருப்பை தாங்கி புகைந்து கொண்டிருந்த சிகரெட்டும், அவனின் ஆறு அடிக்கு மிஞ்சிய உயரமும், அவனை ஒரு அரக்கன் போல் காட்சிப்படுத்தியது.

அவன் கையில் இருந்த சிகரெட் தீரும் தருவாயில் இருக்க, அதை உணரும் நிலையில் அவன் இல்லை. ஆனால் பார்வை அந்த நெருப்பின் மேல் தான் இருந்தது.

ஏனோ தன்னை போலவே அதுவும் ஊமையாக புகைவது போல் தோன்ற சிகரெட்டின் மேல் இரக்கம் கொண்டு இறுக பிடித்திருந்தான்.

அவன் சக்தி தரன். அருணாசலம் கோமதி தம்பதியரின் மூத்த மகன். அவன் குணம் இது தான் என்று எளிதில் கணித்து விட முடியாது. நாம் ஒன்னு நிறைக்க அதற்கு எதிர் மாறாக செய்து வைப்பவன்.

அதற்கு காரணமும் அருணாச்சலமே. "நான் சொன்னதை செய்" என சின்ன வயதில் இருந்தே அதட்டியே வளர்க்க, அவரிடம் காட்ட முடியாத கோபத்தை, மற்றவர் ஒரு விஷயத்தை செய்ய சொல்லும் போது அவரிடம் காட்டினான்.

அது ஒரு வீம்பு அவனுக்கு 'நீ சொன்னால் நான் செய்ய வேண்டுமா!' என்ற எண்ணம். அந்த எண்ணமே அவன் வளர்ந்து கல்லூரி செல்லும் வயதில் அருணாச்சலத்திடமும் திரும்பியது.

அதன் பிறகு அடிக்கடி அப்பா மகனுக்குள் முட்டி கொள்ள தொடங்கியது. அதனாலோ என்னவோ அருணாச்சலம் அவனை இன்னும் அடக்க முயற்சித்து நிறைய செய்ய தொடங்கினார்.

அப்படி அருணாசலம் செய்த ஒரு செயலால் அப்பா மகன் இருவருக்கும் கடந்த பத்து வருடங்களாய் பேச்சு வார்த்தை இல்லை. சுயதொழில் சொந்த வீடு என்று குடும்பத்தை விட்டே தனித்து சென்று விட்டான் சக்திதரன்.

எப்போதாவது கோமதி வருந்தி அழைத்தால் மட்டுமே அங்கு செல்வான். அதுவும் அருணாசலம் தொழில் விஷயமாய் வெளியே செல்கிறார் என்று தெரிந்த பின்பே செல்பவம் அவர் வரும் முன்பு கிளம்பி விடுவான். அதற்காக அருணாச்சலம் மீது பயமா என்றால் இல்லை அது ஒரு வகை வெறுப்பு.

அருணாச்சலத்தின் சொல், செயல் எதற்கும் சக்திதரன் கட்டுப்பட மாட்டான். முற்றிலுமே அவரை தன் வாழ்க்கையில் இருந்து ஒதுக்கி விட்டிருந்தான்.

சக்திதரன் பற்றிய யோசனையில் அவனையே பார்த்திருந்த குகன் ரயில் அருகே வந்த பிறகே சிந்தனை கலைந்தான். குகன், சக்திதரனின் உயிர் தோழன்.

குகன் சுயம் பெற்ற நேரம் ரயில் வள்ளியூர் நிறுத்தத்தில் வந்து நின்று பயணிகள் இறங்க தொடங்க "லேய்..சக்தி ரயில் வந்துட்டு வா" என்ற படி குகன் எழுந்து செல்ல, சக்திதரனிடம் பதில் இல்லை

குகன் அழைத்ததை கவனிக்காத சக்திதரனோ.. புகைந்து கொண்டிருக்கும் சிகரெட்டை பார்ப்பதிலேயே தீவிரமாய் இருந்தான்.

சக்தி வராததை கவனிக்காமல் ட்ரைனில் ஏறிய குகன், அதன் பிறகே கவனித்து சக்திதரனிடம் வந்தவன்

"லேய் மக்கா என்ன ரோ(யோ)சன நாள வேலைய பார்க்க வேண்டாமா! வாலே..." என்று அவன் தோளில் தட்ட, "ஹூம் என்னலே சொன்ன?" என்றபடி நிமிர்ந்தான் சக்திதரன்

"செரியா போச்சி போ. லேய் உன் ரோசன எங்கன இருக்கு? ரயில் வந்துட்டு வா.." என்று குகன் சொல்ல,

அப்போது தான் தன் முன் நின்ற ரயிலை கவனித்தபடி எழுந்து நின்றவன் "நீ ஏறுல நான் பின்னுக்க வரேன்" என்று கையில் இருந்த சிகரெட்டை தூக்கி வீடு விட்டு அடுத்த சிகரெட்டை பற்ற வைத்தவனாய் ரயிலில் ஏறினான்.

அவர்கள் ஏறிய ஒரு சில நொடிகளில் ட்ரைன் கிளம்ப நண்பர்கள் இருவரும் அங்கு காலியாக இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தனர். அமர்ந்த சில நொடிகளில் சக்திதரன் மீண்டும் யோசனையில் ஆழ்ந்து விட, அவனை கவனித்த குகன் "என்னாலே மக்கா என்ன யோசனை?" என்று சக்திதரனிடம் கேட்டான்.

"இல்ல... என் அப்பனுக்கு இவ்வளவு தைரியம் எங்க இருந்து வருதுனுட்டு யோசிக்கே மக்கா. இவ்வளவு காலமும் அப்பனாச்சேன்னு விட்டா அந்தாள் ஓவரோ சீண்டுறான். நாளைக்கு நான் செய்யற வேலையில அந்தாள் என் வழிக்கே வர கூடாது " என்று சக்திதரன் அடக்கப்பட்ட கோபத்துடன் சொல்ல,

"அப்படி என்னல பண்ண போற?" என்று கேட்டான் குகன்.

அவர்களின் பேச்சு சத்தத்தில் அவர்களின் எதிர் இருக்கையில் அமர்ந்து ஆழ்த தூக்கத்தில் இருந்த கீர்த்தனாவின் தூக்கம் மெல்ல கலைய தொடங்கியது.

அதிலும் எதிரில் ஆள் இருப்பதை பொருட்படுத்தாமல் சக்திதரன் சிகரெட்டை புகைத்து கொண்டிருக்க, அவன் விட்ட புகை கீர்த்தனாவை முகம் சுளிக்க வைத்தது.

அவள் வீட்டில் யாருக்கும் புகை மது பழக்கம் இல்லை என்பதால் அந்த வாடை எல்லாம் கீர்த்தனாவிற்கு சுத்தமாய் ஆகாது. குமட்டல் வந்து விடும்.

அபிராமியின் அருகில் அமர்ந்தால் 'கல்யாணம் மாப்பிள்ளை' என்று எப்போதும் பாடும் பல்லவியை பாட தொடங்கி விடுவார் என்பதால், அவரின் கல்யாண பேச்சில் இருந்து தப்பிக்க என்று தனியே வந்து அமர்ந்தவளை சோதிக்க என்றே வந்தவன் போல் அவள் எதிரில் வந்து அமர்ந்து இருந்தான் சக்திதரன்.

அவன் விட்ட சிகரெட்டின் புகை கீர்த்தனாவிற்கு ஒவ்வாமையை கொடுக்க, தூக்கம் தெளிந்து எழுந்தவள் முகம் சுழித்தபடி துப்பட்டா கொண்டு மூக்கை மூடிய படி சக்திதரனை பார்த்தாள்.

ஆனால் அவள் ஒருத்தி அங்கு இருப்பதையே பார்க்காதவன் சிகரெட் புகைப்பதில் கவனமாக இருக்க, இப்போது கீர்த்தனா அவனை முறைத்து வைத்தாள்.


அப்போதும் சக்திதரன் அவளை கவனிப்பதாய் இல்லை. ரயிலை தொடர்ந்து வரும் இருளும், கையில் இருந்த புகையும் என்று அவன் வேறு உலகத்தில் இருத்தான்.

ஆனால் கீர்த்தனா மூக்கை மூடவுமே அவளை கவனித்து விட்ட குகன் கீர்த்தனா முறைக்கவும் "லேய்... மக்கா அந்த பெண் குட்டிக்கு இந்த வாடை ஆவாதாட்டும் நினைக்கேன். அதை தூரம் போடுலே, அந்த பெண் குட்டி உன்ன மொரச்சியாவுது" என்று சக்திதரன் காதில் மெல்ல கிசுகிசுக்க,

"எந்த குட்டிலே?" என்று கேட்டபடி குகன் பக்கம் திரும்பிய சக்திதரன், அவன் பார்வை வேறு பக்கம் இருப்பதை கவனித்தவன் 'இவன் என்னத்த பாக்குறியான்' என்று நினைத்தபடி குகன் பார்வை சென்ற திசையை தொடர்ந்து தன் பார்வையை திருப்பிய சக்திதரன் பார்வைக்குள்பட்டாள் கீர்த்தனா.

புகை வாடை பிடிக்காமல் முகத்தை மூடி கொண்டு தன்னை முறைத்தபடி இருந்தவளை பார்த்தவன், திரும்பி குகனை பார்க்க,

"அதை தூர போடுலே மக்கா" என்றான் குகன் முணுமுணுப்பாக,

அதை அலட்சியம் செய்து விட்டு மீண்டும் கீர்த்தனா பக்கம் திரும்பியவன் கண்களில் சட்டென ஒரு மின்னல்.

அவன் அறிந்து அவனை முறைப்பவர் அவன் அப்பா மட்டுமே. அதற்கே அவரை வேண்டும் என்ற அளவு கடுப்பேற்றி மகிழ்வான். இப்போது கீர்த்தனாவும் அதையே செய்ய அவளை விட்டு வைக்கும் எண்ணம் இல்லை அவனுக்கு.

எனவே அதுவரை அவனிடம் இருந்த வெறுமையை சற்றே ஓரம் வைத்து விட்டு இலகுவாய் சீட்டில் சாய்ந்து அமர்ந்து இன்னும் நன்றாக புகையை உள்ளிழுத்து ஊதியவன் "லேய் மக்கா இது கவர்மெண்ட் சொத்தாக்கும். இந்த குட்டிக்கு உள்ள ரைட்ஸ் நமக்கும் உண்டு. பின்ன என்னத்துக்கு அந்த குட்டி நம்மளை முறைக்குதாம்?" என்ற சக்திதரன் குகனிடம் கேட்க,

"லேய்...." என்ற குகன் சக்திதரனை சற்றே அதிர்ந்து பார்த்தான். இது அவனின் வம்புக்கு இழுக்கும் தோணி. அதை புரிந்தவன் "லேய் மக்கா கொஞ்ச நேரம் சும்மா இருலே. ரயிலுல சம்பவம் பண்ணிராத. இந்த பெண்ணை பார்க்க நம்ம ஊர் பெண்ணாட்டும் தெரியல ஏதும் கலவரம் ஆகிட போது" என்று குகன் கெஞ்சலுடன் கூற,

சக்திதரன் அவனையும் கண்டுகொள்வதாய் இல்லை.

குகன் பேசியது கீர்த்தனாவிற்கு புரியவில்லை என்றாலும் சக்திதரன் சத்தமாய் பேசியதில் அவன் பேசியது தெளிவாகவே கேட்க, அவனின் குட்டி என்ற வார்த்தை கீர்த்தனாவை எரிச்சலுட்டியது.

"மிஸ்டர்.. கீப் மைண்ட் யூவர் வேர்ட்ஸ. குட்டி கிட்டினு சொன்ன மரியாதை இல்லை பார்த்துக்கோ. அரசாங்க சொத்துனாலும் ட்ரைன்ல புகை பிடிக்குறது தப்பு. மேல எழுதி போட்டுருக்கே பார்க்கலை?" என்றவள் அங்கே சன்னலின் மேற்புறம் 'பயணிகள் புகை பிடிக்க கூடாது' என்று எழுதி போட்டிருப்பதை அவர்களிடம் சுட்டி காட்ட,

அதை நிதானத்துடன் படித்த சக்திதரன் "ம்... பார்த்துட்டேன். அதுக்கென்னா இப்போ! நீ மினிஷ்டரோ! நீ சொன்னது நான் கேட்க. நான் மினிஸ்டர் சொன்னாலும் கேட்டுக்க மாட்டேன்" என்றான் அலச்சியமாய்.

அதில் கீர்த்தனாவிற்கு சட்டென கோபம் எட்டி பார்க்க சக்திதரனை திட்டப்போனவள் சுதாரித்து ''யாரோ ஒரு குடிகாரன் ஏதோ செய்தால் தனக்கு என்ன! இங்கு வேறு சீட்டா இல்லை?' என நினைத்து வேறு இடம் மாறி கொண்டாள்.

அவள் நகரவும் சக்திதரனும் அவன் தனிமையும் சிகரெட்டும் என்று ஒன்றி விட்டான்.

ஆனால் கீர்த்தனாவிற்கு தான் சக்திதரன் மீதான கோபம் சற்று நேரத்திற்கு அவளை விட்டு போகவில்லை. அவன் செய்கை மூளைக்குள் ஓடி கொண்டே இருந்தது.

மீண்டும் மீண்டும் அதுவே நினைவு வர யூடியூபில் இளயராஜாவின் பாடலை ஒலிக்க விட்டு இயர் போனை மாட்டிக்கொண்டு கண் மூடி கொண்டாள். அதன் பிறகே மனம் சற்று நிதானம் அடைய, 'யாரோ ஒரு குடிகாரன் மேல் தான் ஏன் கோபம் கொள்ள வேண்டும்' என நினைத்து அவனை மறந்து விட்டு இரவும் இளையராஜாவும் என அமிழ்ந்து விட்டாள்.

தொடரும்.....
 
Top