எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நிலவாய் பிரிந்தாலும் உயிராய்த் தொடரும்

IsaiKavi

Moderator
உயிர் 01




அர்ஜுன் பைரவ் வெட்ஸ் மீரா சுஜி என்ற பெயருடன் தனித்தனியாக முதுகு புறம் காட்டி நிற்கும் இரு திருமண ஜோடிகளின் பேனர் கட்டப்பட்டு இருந்தது..

திருமண மண்டபம் என்று கூற முடியாத அளவிற்கு அங்கு ஒரு பேரமைதி நிலவியது..குழந்தைகள் சத்தமும், உறவினர்கள் மற்றும் பெரிய விஐபிகளின் பேச்சு சத்தமும் எதுவும் அங்கு கேட்கவில்லை..

ஏதோ கல்லையும் மண்ணையும் பார்ப்பது போல், திருமண மேடையை பார்த்து அனைவரும் அமைதியாக இருந்தனர். மேள தாளமும், நாதஸ்வரமும், பூசாரி உச்சரிக்கும் மந்திரம் மட்டுமே மண்டபம் முழுவதும் எங்கும் எதிரொலித்தது..

மணமகனை அமர்ந்திருந்த இடத்தில் அவனது முகத்தில் மகிழ்ச்சி சிறிதேனும் தெரியவில்லை. அவன் அமைதியாக, திடமாக அமர்ந்திருந்தான். அதே போல, அவனுக்கு இணையாக, மணமகள் தேவதை போன்ற அழகில் மிளிர்ந்திருந்தாள்..அவள் சிவந்த நிறத்திற்கு செயற்கை முகபூச்சும் அவளின் அழகை மேலும் மெருகேற்றியது..

அவளின் அழகை பக்கத்தில் உள்ளவன் பார்த்து ரசிக்கவும் இல்லை விழிகளால் அவள் அழகை அள்ளி பருகவும் இல்லை..

எவ்வளவு நேரம் தான் கற்சிலை போல் அமர்ந்திருப்பது என்று நினைத்தாலே அவளுக்கு ஆயோசமாய் இருந்தது..

அவனை பற்றி நினைத்தவளுக்கு இந்த மணமேடையில் அமரும் முன்பு அதற்கு முன்னர் நடந்தவைக்கு சென்றது.. கிட்டத்தட்ட மூன்று வாரத்திற்கு முன்பு..

அவளிடம் திருமணத்திற்கு சம்பவம் கேட்டு, மாப்பிள்ளை வீட்டாரை வீட்டுக்கு அழைத்து மீராசுஜிக்கு திருமணம் நிச்சயமாகி விட்டது..ஆனால் மாப்பிள்ளை நேரில் பார்க்க முடியாத சூழ்நிலை.. தனக்கு நிச்சயம் செய்த மாப்பிள்ளையை பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் அவளுக்கு அதிகமாகவே இருந்தது..

இதே சமயம் திருமணம் அடுத்த நாள் என்றால் அதற்கு முதல்நாள் புது எண்ணில் இருந்து அவன் அனுப்பிய குறுஞ்செய்திகள் மட்டும் உத்தரவுகளை போல, அவள் அலைபேசியில் குவிந்தது..

அலைபேசியை எடுத்து பார்த்தவளுக்கு விழிகள் பெரிதாய் விரிந்தது..

" ஹாய்! யு ஆர் மீரா சுஜி , ரைட்? "

" பைன்! ஐ ஆம் யுவர் பியூச்சர் ஹஸ்பண்ட்.."

"சோ டூமாரோ நம்ம ரெண்டு பேருக்கும் மேரேஜ் நடக்க போகுது..தட் யு க்னோ பட் எனக்குன்னு ரெஸ்பெக்ட் ஸ்டேட்ஸ் இருக்கு ஓகே.."

"மணமேடைல உட்காரும் என் மனைவி எனக்கு சமமா இருக்கணும்..நான் என்ன சொல்ல வரேன்னு உனக்கு புரியும்னு நினைக்கிறேன்.. அண்ட் ஆல் சோ தாலி கட்ட முன்ன என்னை பார்க்கக் கூடாது.. "

"கம்பீரமான இருக்கணும்..இது வரைக்கும் போதும்னு நினைக்கிறேன்.."

"மீதி என் வீட்டுக்கு வலது கால் எடுத்து வச்சி நீ மனைவியா நுழைந்ததும் சொல்றேன்.."

" நான் சொன்ன மாதிரி பர்பெக்ட்டா பண்ணனும் ஓகே.. ஆல் தி பெஸ்ட்"

" நோ நீட் டூ ரிப்ளை , ஜஸ்ட் ரிவெம்பர்.."

கூற வேண்டியதை அவளிடம் கூறி ஆயிற்று என்று அவன் ஆப்லைன் சென்றுவிட்டான்..

ஆழமான பெரு மூச்சு இழுத்து தன்னை தானே சமானபடுத்திக் கொண்டாள்..மெத்தையில் அமர்ந்து கொண்டாள் மீரா சுஜி..

"எனக்கு வர போகும் ஹஸ்பண்ட்டை கண்டு நான் கனவே காணல்ல இப்படி ஒரு மெட்டிரியலான ஹஸ்பண்ட்! யாருக்கு நான் குத்தம் சொல்றது? போட்டோ பார்த்து இம்ரஸ் ஆகாத நான் நேரில் பார்த்ததும், ஒரே வார்த்தையில் ஓகே சொல்லிட்டேன்.. பார்ப்போம், மேரேஜ் லைஃப் எப்படி இருக்கும்னு பார்ப்போம்!" அன்றிரவு, அவள் தன் வருங்கால கணவனை எண்ணி கனவு காணாமல் உறங்கினாள்..

விக்டர் தன் மகளுடன் அர்ஜுன் பைரவ்வின் கார் நிறுவனத்திற்கு வந்திருந்தார்.. புதிதாக வந்த Luxury Cars பார்ப்பதற்காக..ஆனால் மீரா, வேறு யாரையோ தேடி கண்களை ஓடச் செய்தாள்..

விக்டர் " சுஜி நீ இங்கேயே இரு, நான் போய் மாப்ள கிட்ட பேசிட்டு வந்துர்றேன்.." என்றவரின் கரத்தை பிடித்து நிறுத்தினாள்..

" டாடி நீங்க மாப்ளன்னு சொல்றீங்க.. நானும் வந்ததில் இருந்து அவரைத்தான் தேடுறேன்..என் கண்ணுக்கு தெரியலையே நீங்களாவது அவரை அடையாளம் தெரிஞ்சா காட்டுங்க டாடி.." சிணுங்கி கொண்டு கேட்கும் தன் செல்ல மகளை சற்று சிரிப்புடன் அவளை நோக்கி,

" அங்க டார்க் ஆரேஞ்ச் கார் பக்கத்துல, அவரோட பிஏ கூட பேசிட்டு இருக்காரே? அவர்தான்.."

மீராவின் கண்கள் பெரிதாகின,

டார்க் ரெட் ஷர்ட், கருப்பு நிற ஃபேன்ட் அணிந்து இருந்தான் , தோள் வரை இருக்கும் சில்கி கேசம் , ஆறடி உயரம், அகலமான தோள்கள்..பனைமரம் போல உயர்ந்த அவன் தோற்றம்!

ஒரு நொடி, அவளது மூச்சே நின்று விட்டது போல இருந்தது..

அவனின் முகம் இன்னும் தெரியவில்லை..அவன் இன்னும் திரும்பவில்லை..ஆனால் அவன் தோற்றம் மட்டுமே அவளுக்கு ஒரு விதமான அதிர்ச்சியை ஏற்படுத்தியது..

"இவர்தானா? இப்படியா இருக்காரு?"

அவள் நினைத்ததற்கு மாறாக, அவன் கவனத்தை ஈர்க்கும் தன்மையானவன்..அந்த முதுகு, அந்த நிமிர்ந்த நடை , அவனை எளிதில் அனைவரையும் திருப்பி பார்க்க வைக்கும்!

அவள் கண்களில் ஆர்வம் தென்பட்டது..

" ஆமா , டார்க் ரெட் ஷர்ட் வேர் பண்ணி இருக்கார் அவரா? "

விக்டர் மெல்ல சிரித்து, "நீ போட்டோ கூட பார்த்தது இல்ல தானே? இப்ப பார்க்கலாம்..ஆனா, மேரேஜ்ல வச்சி தான் நீ அவரை நேர்ல முழுசா பார்க்க முடியும்," என்று சொல்லிவிட்டு அர்ஜுனை நோக்கிச் சென்றுவிட்டார்..

மீரா மட்டும் இன்னும் அதே இடத்தில் உறைந்து நின்றாள்..

அவனின் புகைப்படம் பார்க்காமல் தான் திருமணத்திற்கு சரி என்று சொன்னாள்.. அவன் முகம் தெரியவில்லை என்றாலும் , புறத்தோற்றம் மற்றும் அவனை அவள் ஈர்த்தது போதுமானதாக இருந்தது..

இவற்றையெல்லாம் நினைத்துக் கொண்டு இருந்தவளுக்கு, திருமணம் நடக்க போகிறது என்று உணர்த்தும் விதமாக அவள் கன்னத்தை பதம் பார்த்தது முறுக்கி விட்ட மீசை..

தலைகுனிந்து நின்றிருந்தவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.. அடர்த்தியான சில்கி கேசம் ஒரு பக்கமாக வாரி இருந்தான்..அவளுக்கு இணையாக வசீகரிக்கும் தோற்றம், அதை விட அவளை பாதிக்கப் போவது அவன் விழிகள் தான் அதனை அறியாமல் போனாள் பேதையவள்..

தாலி கட்டுவதிலே மும்முரமாக இருப்பவனை இமை சிமிட்டாமல் தன்னை ஒருவள் பார்க்கிறாள் என்ற எண்ணமே அவனுக்கு கிடையாது..

அவள் பாதத்தை தொட்டு மெட்டி அணிவித்த அவன் கரங்களில் மென்மையை உணர்ந்தாள் அவள்..அவன் தான் அவளை திரும்பியும் பார்க்கவில்லையே!

அவளுக்கு அது ஏமாற்றமாக இருந்தாலும், வெளியே சிரித்து சமாளித்தாள்..

திருமணமும் சம்பிரதாயங்கள் அனைத்தும் முடிந்ததும் மணமகளை அழைத்துக் கொண்டு அர்ஜுன் வீட்டார்கள் அழைத்துச் சென்றுவிட்டார்கள்..

அவன் தன்னுடன் வரவில்லை என்பது மனதில் வலித்தாலும் அவனின் குறுஞ்செய்திகளை நினைவில் கொண்டு காரில் இருந்து இறங்கினாள்..

இமை தாழ்த்தி இருந்தவள்,

" வா மா மீரா " அர்ஜுனின் தாய் கோதை அவளை அழைத்தார்..

அவரை ஒரு தடவை நோக்கி விட்டு, நேரே பார்த்தவளுக்கு விழிகள் இரண்டும் வியப்பில் விரிந்தது.." அமேசிங்" அவள் இதழ்கள் உச்சரித்தது..

வீட்டின் அமைப்பை பார்த்தே அவள் கூறினால் , ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பங்களா போன்ற அமைப்பு முன் தோட்டம் அத்தனை அழகுடன் சுத்தமாக இருந்தது..

" சுஜி உள்ள போகலாம்.." அவளின் தாய் கீதா..

சரியான முறையில் அவளும் நடந்தாள்..அவள் ஒவ்வொரு அடியாக பாதையில் எடுத்து வைக்கும் போது, அங்கு நிறுவனத்தில் அர்ஜுனின் கையால் ஒருவனுக்கு கன்னத்தில் ஒவ்வொரு அடியும் இறங்கியது..

திருமணம் முடிந்த கையோடு அர்ஜுன் பைரவ் தன் நிறுவனத்திற்கு வந்து சேர்ந்தான்..

நிறுவனத்தில் நடக்கும் திருட்டு, குளறுபடிகள் அனைத்தையும் தெரிவிப்பது அர்ஜுனிடமே..

ஆகையால் இவர்களுக்கு தெரிந்திருந்தாலும், அவன் திருமணம் முடிந்துவிட்டது என்றாலும், அவனுக்கு வேறு வழி இல்லாமல் அவன் அலைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பி விட்டனர்..

அதாவது, அவனின் பி.ஏ நம்பிக்கையான ஒருவன் புதிதாக ஒரு காரை தயாரிப்பதற்கான தொழில்நுட்பம் சம்பந்தமான திட்டங்களை அவன் எதிரியிடம் அதன் விபரங்களை ஒரு சிப் மூலமாக பகிர்ந்தளித்து விட்டான்..

அர்ஜுன்க்கு திருமணம் நடந்ததால், அவன் மாட்டிக் கொள்ள போகாது என்று நினைத்திருந்தாலும், அர்ஜுனின் நம்பிக்கையான ஒருவன் கண்காணித்து இருப்பது அவனுக்கு தெரியாதே..

ரகசிய அறையில் இருந்து எடுக்கப்பட்ட விபரங்களை எடுத்ததற்கு பச்சை நிற விளக்கு, ரங்கன் அறையில் அலாரமாக காட்டியது.. பி.ஏ ரவினின் வேலை என எதிர்பாராத திகைப்பை அவன் முகத்தில் காட்டவில்லை.

உடனே, அர்ஜுன்க்கு அழைத்து கூறிவிட்டான்.. ரவின் எதிரில், அர்ஜுன் இருந்தும், அவன் கத்தி ஆர்பாட்டம் செய்யாமல் இருப்பவனை, மஞ்சள் நிற பூனை கண்களால் கூர்மையாக்கி பார்த்தான்..

அவன் பார்வையை அசையாமல், தன்னை எதிர்கொண்டவனை மனதில் மெச்சிக் கொண்டான்..

"லெட்ஸ் சீ.." என்ற அவனின் வார்த்தை உள்ளுக்குள் பயத்தை கிளப்பினாலும், அவன் அப்படியே இருந்தான்..

"ரங்கன், என் கூடவே இரண்டு வருஷமா பி.ஏ இருந்தவன்..எனக்கே தெரியாம நம்பிக்கை துரோகம் செஞ்சி என் கம்பெனில திருடி இருக்கானானா சோ…" பேச்சை இழுத்து அவன் ரங்கனைப் பார்த்தான்.

"புரியுது, சார்! ஐ வில் பின்னிஷ் இட்."

"ஹம், குட். நெக்ஸ்ட், ரவின் கிட்ட வேலையை ஒப்படைச்சவன் யாருன்னு இன்னைக்குள்ள கண்டு பிடிக்கணும், ரங்கன் காட் இட்.." சீறினான் என்றால் அவனின் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வர வேண்டிய கட்டாயம் இருந்தது..இதே கோபத்துடன் வீட்டிற்கு செல்ல முடியாது அல்லவா?

"ஓகே, சார்!" என்றான்.

Cheetah Veloce sports car ஆரஞ்சு நிறத்தில் இருந்த காரில் ஏறி, புழுதி பறக்க கிளம்பியவன் கார் சாலையில் பாய்ந்து சென்றது..

மீரா வலது காலை உயர்த்தி பாதத்தை வைக்கும் முன், இன்னொரு பாதம் நீண்டது..

அது எவர் என்று கண்டு கொண்டவளின் இதழில் புன்னகை... சீத்தாவின் வேகத்தில் காரை ஓட்டிக் கொண்டு வந்தவன் தன் பங்களாவிற்கு வந்து சேர்ந்தான்..

தன் புதிய உறவுடன் தன் பாதத்தை வைத்து உள்ளே நுழைந்தான் அர்ஜுன் பைரவ்..

இதனைக் கண்ட பெற்றவர்களுக்கு அத்தனை பூரிப்பாக இருந்தது. இனி மகளை நினைத்து கவலைப்பட வேண்டியதில்லை.. மருமகனே நன்றாக பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை பிறந்தது..

திருமணம் முடிந்து வீட்டிற்குள் நுழைந்ததும், மணமக்களை அமர வைத்து பாலும் பழமும் கொடுப்பார்கள்.. ஆனால் இங்கு நடந்தது, மீராவின் கரத்தை பிடித்து அவன் அறைக்கு அழைத்துச் சென்றான்..

வந்த சொந்தங்களும், குடும்பத்தினர்களும் அவன் செயலில் அதிர்ந்து நின்றார்கள்.

இதில் பெற்றவர்களுக்கே சங்கடம் உண்டானது..

அறை கதவை மூடிவிட்டு, தன்னை அதிர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் மனைவி முன் வந்து நின்றான் அர்ஜுன் பைரவ்..

"ஏங்க…"

அவனின் பூனை கண்கள் அவளை மொத்தமாக சுருட்டி போட்டது..அக்கணம் அவள் அவன் பார்வையில் மயங்கி போயிருந்தாள்..

"மீரா…" அவளை அழைத்தான்.

அடுத்து அவன் கூறியதை கேட்டு, அவளது காதில் இரத்தம் வழியாத குறை தான். அவளவன் அவன் மனையாளுக்கே பேரதிர்ச்சியை கொடுத்திருந்தான்..


 
Last edited:

IsaiKavi

Moderator

உயிர் - 02



" ஷப்பா ஆ..ஒருத்தனை போட்டு தள்ளி தடையம் இல்லாம அழிச்சிட்டு வர்றதுக்குள்ள நானே அழுக்காகிடுவேன் போல..ஹூம்! ஊவேக் என்ன கன்றாவியோ இந்த நாத்தம் நாறுது எனக்கே என் பாடி ஸ்மெல் தாங்க முடியாம வாமிட் பண்ணிருவேன் போல.." என்று வாய்விட்டு புலம்பிக் கொண்டு வரும் அளவிற்கு ஒருவன் வைத்து செய்து விட்டான் என்கிற அர்த்தம் தானே..ரவினை முடித்துவிட சொல்லி ரங்கன் அந்த வேலையை அர்ஜுனின் சகோதரன் சிந்தூரனிடம் ஒப்படைத்திருந்தான்..

அழுக்கு உடையுடன் நுழைந்த மகனை மூக்கை பொத்திக் கொண்டு லிங்கம் மற்றும் கோதை இருவரும் பார்த்தனர்..

அவன் கண்ணிற்கு இவர்கள் நிற்பது ஏற்கனவே தெரியும் என்பதால் நேராகவே தன் பெற்றவர்களை கடந்து தன் அறைக்கு சென்றுவிட்டான்..

" நல்ல வேளை தப்பிச்சேன் இல்ல என்னை பெத்தவங்க ரெண்டு பேரும் ஆயிரத்தெட்டு கேள்வி கேட்டு நா வரண்டு போக வச்சி இருப்பாங்க..டேய் ரங்கன் இந்த வேலைய பண்ண வச்சிட்டல" கோபமாக அவன் சொல்ல , " மூடிட்டு போய் குளி டா! " என்றது யாரும் இல்லை ரங்கன் தான் ப்ளூடூத் வழியாக அவனுடன் தொடர்பில் இருந்து இருக்கிறான்..

அவன் அறை கதவை கார்ட்டை காட்டி திறந்து உள்ளே நுழையும் வரைக்கும் தொடர்பில் இருந்தவன் ப்ளூடூத் தொடர்பை அவன் துண்டித்தான்..

கோதை " என்னங்க " கணவரை அழைத்தார்..

" சொல்லு கோதை"

" அண்ணன் கல்யாணம்னு வேஷ்டி சட்டையில சுத்திட்டு இருந்தான்ல, இப்போ பாருங்க கருப்பு ரப்பர் சட்டை போட்டு இருக்கான்..என்ன கோலம் இது ? " கணவரிடம் பாய்ந்தார்..

" கோதை " என்று அதட்டினார்..

" எனக்கு என்ன தெரியும்.. அண்ணனும் தம்பியும் சேர்ந்து ஏதோ கிறுக்கு தளம் பண்ணி இருக்கானுங்க..மேரேஜ் பங்ஷன கவனிக்குறதா இவனை கவனிக்குறதா? பொண்ணுக்கு தாலி கட்டி முடிஞ்சதும் மண்டபத்தை விட்டு போற அப்பவே நீ யோசிச்சு இருக்கணுமா இல்லையா ? " சினத்துடன் மனைவியிடம் சிடுசிடுத்தார்..

" ஆமா , பாருங்க எனக்கு வேற வேலையே இல்ல இவன் பால்குடி மறவாத பிள்ளை மாதிரி கைக்குள்ளயே வச்சி பார்த்துக்கணும்னு தானே சொல்றீங்க ? நீங்க எதுக்கு அப்பாவா இருக்கீங்க ? இவங்களை பார்த்துக்க தானே‌? " கோதையும் குறையாது கணவருடன் சண்டை போட ஆரம்பித்தார்..

இவர்களை மற்றவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க.. விக்டர், கீதா இருவருக்கும் ' என்னடா இது ' என்று ஒருவர் ஒருவர் தங்கள் முகத்தை பார்த்துக் கொண்டு நின்றனர்..

அறைக்குள் சென்ற இரு ஜோடியும் வெளியே வந்த பாடில்லை..உள்ளே சென்று பத்து நிமிடமும் கடந்து விட்டு இருந்தது..

அர்ஜுன் பைரவ் அவளை அதிர வைக்கவே சிலவற்றை கூறினான்..

" மிஸஸ் மீரா சுஜி அர்ஜுன் பைரவ் இஸ் வாட் ஐ செட் கரெக்ட்?" தனது கனமான குரலில் கேட்டதும், அவன் விழிகளில் இருந்த மயக்கம் முற்றிலுமாய் தெளிந்தது..

" யெஸ்.." பட்டென சொல்லிவிட்டாள்..

" சிட் ஹியர்" தோளை பிடித்து அவளை மெத்தையில் அமர வைத்துவிட்டு, மர நாற்காலியில் காலுக்கு மேல் கால் போட்டு அமர்ந்து, இடது கரத்தை நாடியில் குற்றி அவளை மேலிருந்து கீழ் நோக்கி ஒரு பார்வை பார்த்தான்..

" அதிகப்படியான மேக்கப் பண்ணி இருக்க.." என்றான்..அதற்குள் அவள் முக வடிவை விழிகளாலயே ஸ்கேன் செய்து விட்டான்..

" மேரேஜ்க்கு.." அவன் பார்வை வேறு அவளை தடுமாற்றுவதாய்!

" எனக்கு மேக்கப் பண்ற பொண்ணுங்களே பிடிக்காது , பார்க்க கோஸ்ட் மாதிரி கன்றாவியா இருப்பாங்க ஆனா நீ மை வொய்ப் சோ எனக்கு பிடிச்ச மாதிரி தான் இருக்கணும்..தென் நானும் ஆம்பளை தானே உங்கள மாதிரி மேக்கப் போட்டு இருக்கேனா சொல்லு? " என்று கேட்டதும் , ' மேக்கப் போட்டது குத்தம் போல சொல்றாரே? ' மனதில் எண்ணிக் கொண்டு" ஹ்..பொதுவா பசங்க மேக் போட்டுக்குறது இல்லை தான் " அவனுக்கு சாதகமாகவே பதிலை கூறிவிட்டாள்..

" தட்ஸ் ரைட்..நீ இப்ப என்ன பண்ற உன் முகத்துல இருக்குற மேக்கப் ஃபுல் ஆ.. ரிமூவ் பண்ற ஓகே.. வெளியே போய் நமக்காக காத்திட்டு இருக்குறவங்க கிட்ட பேசிட்டு வர்றதுக்குள்ள நீ பண்ணி இருக்கணும் கோ ரைட் நெள.." அவளுக்கு உத்தரவிட்டான்..

அதன் பின் அவ்வளவு நேரம் மெத்தையில் அமர்ந்திருக்க முட்டாளா என்ன ? அவன் சொன்னதை செய்ய குளியலறைக்குள் ஓடி விட்டாள்..

இவன் நாற்காலியில் இருந்து எழுந்து கதவை திறந்து வெளியே சென்றுவிட்டான்..

குளியலறையில் முகம் பார்க்கும் கண்ணாடி முன்பு நின்று, முகத்தில் போட்டு இருக்கும் மேக்கப்பை வழித்து எடுத்து கொண்டு இருந்தாள்..

" பாவிங்க மேக்கப் அப்பி வச்சி இருக்காளுங்க..நார்மல் மேக்கப்னு தானே நினைச்சேன்..என் முகத்துல எத்தனையோ லேயர் பூசி வச்சிடாளுங்களே!..ஸ்..ஸ்..ஐயோ கண் இமை " என்று அலறிக் கொண்டு கண்கள் சுருங்க , நீண்டிருந்த செயற்கை கண் இமையை கழட்டி குப்பை தொட்டியில் போட்டுவிட்டாள்..


இளம் சிவப்பில் இருந்த உதடுகளையும் தேய்த்தாள்.. ஏற்கனவே மெலிதாக சிவந்த தடிப்பான உதடுகள், மேலும் சிவந்து பளிச்சென்று தெரிந்தன.. முகத்தை கழுவி, வெளியே வந்தாள்..

அறையை விட்டு வெளியே சென்ற அர்ஜுன் இன்னும் உள்ளே வரவில்லை..

அவன் வெளியே வந்து பார்த்தபோது , வந்த சொந்தங்கள் இருக்கவில்லை.. அனைவரையும் லிங்கம் தான் அனுப்பி வைத்திருப்பார் என்று எண்ணியவன், தன் பெற்றவர்களின் முன்பு ,

" பாலும் பழமும் கொடுக்குற சம்பிரதாயம் வேண்டாம்..அடுத்து பர்ஸ்ட் நைட் அதுவும் அவசியம் இல்லாதது ஒண்ணு.." என்றான்..பெண்ணின் தாய் தகப்பன் நிற்பதை கூட அவன் கருத்தில் படவில்லை..

" என்னடா பேசுற? "

" டாட் இவ்ளோ தூரம் நான் மேரேஜ்க்கு சம்மதிச்சதே பெருசு இதுல இதெல்லாம் தேவையா ? " அவர் முன் குரலை உயர்த்தாமல் கூறினான்..

" தம்பி.. பெரியவங்க கட்டாயம் பண்ண வேண்டியது பா.." விக்டர் தன்மையை அவனுக்கு எடுத்துச் சொல்ல முனையும் போது , " நாட் இன்டரஸ்டட் அங்கிள் " 'என் முடிவில் இருந்து நான் இறங்கி வரப் போவதில்லை.. நான் சொன்னதே செய்தே ஆக வேண்டும்' என்று சிறு வார்த்தையில் தனக்கு இதில் பிடித்தம் இல்லை என்பதை காட்டி விட்டான்‌‌..

அவன் சொல்ல வேண்டியதை சபையில் கூறி விட்டு , அறைக்குச் சென்று கதவை அடித்து சாற்றிவிட்டு உள்ளே வந்தவனை கண்டவுடன் மெத்தையில் இருந்து எழுந்து நின்றாள்..

" நான் உள்ள வந்ததும் ஏன் எழுந்து நிக்கிற ?" என்று வினவினான்..

"நீ ஒண்ணும் எனக்கு ரெஸ்பெக்ட் குடுக்க வேண்டாம்..நீ நீயாகவே இரு " என்றான்..

' அப்போ நான் சொன்னது தான் கேட்கணும் சொன்னார் இப்போ நீ நீயாகவே இருன்னு சொல்றாரு ? இவர் பேச்சு கேட்டு நான் தான் மெண்டல் ஆகிட்டேனா? ' அவன் அமர சொல்லியும் அதை செய்யாது சிந்தனையில் மூழ்கியவளை,

அவள் மனதில் ஓடிய எண்ணங்களை அவன் அறியாமல், அவளை நெருங்கி, அவன் நெற்றியில் சுண்டிவிட்டான்.

"ஆவ்…!"

வலித்த இடத்தை தடவிக் கொண்டு, அவனைப் பார்த்தவளின் விழிகள் அகல , அவன் விழிகளில் கோபம் திரண்டது..

அவனின் மஞ்சள் நிற விழிகளில், பழுப்பு நிற கருமணி சுருங்கி விரிந்தது.

"அர்ஜுன்… உங்க கண்?" அவனின் நிறம் மாறிய சிவந்த தீ விழிகளைக் கண்டு வாயை மூடிக்கொண்டாள்..

" நீ பேசுற பேச்சுலதான் ரெஸ்பெக்ட் கொடுக்கணும் மீரா.." அழுத்தமாக அவள் பெயரை உச்சரித்து சொன்னான்..

" அதை விடு , இப்போ மேட்டருக்கு வருவோம்.." என்றவன் நாற்காலியில் அமர்ந்து கொண்டான்..

" நீ இருக்குற ரூம் என்னோடது இல்ல..சோ மாடில பிஃத் ஆவது என்னோட ரூம் இருக்கு அங்க ஸ்டே பண்ணிக்க.. நான் வீட்டுல அதிகமா ஸ்டே பண்ண மாட்டேன்.. வெளியே கம்பெனியோட என்னோட ஃபார்ம் ஹவுஸ் இருக்கு சோ அங்க தான் தங்கிப்பேன்..உன் இஷ்டம் போல இங்க இருக்கலாம், உனக்கு விருப்பம்னு ஒண்ணு இருந்தால் என் கம்பெனிக்கு வொர்க் பண்ண வரலாம்.. இன்னொன்னு நீ வெளில எங்கேயும் போவதாக இருந்தால் பர்ஸ்ட் எனக்கு இன்பார்ம் பண்ணிடு.. அப்புறம் நீ காணாம போய் தேடிட்டு இருக்குற வேலை எல்லாம் என்னோட டைம் தான் வேஸ்ட் ஆகும்..என் ரூம் எப்படி இருக்குமோ அதே போல நீட் ஆ.. இருக்கணும் வேற ம்ம்.. நீ ஏதாவது கேட்கணும்னா கேளு ? " என்றானே பார்க்கலாம்..

அவன் கூறியவற்றை கேட்டு விக்கித்து போய் நின்றாள் பேதை.. இதற்கு இவன் இவளை திருமணம் செய்யாமலே இருந்து இருக்கலாம்..

பார்த்தவுடன் பதிந்து போன இவன் முகம் , வசீகர தோற்றமும் ஆழமாய் பதிந்து விட எதிர்காலத்தை பற்றி எண்ணாதவள் அவனை பார்த்ததில் இருந்து அவனுடன் வாழ ஆசைப்பட்ட பெண்ணிற்கு அவனே பரீட்சை வைத்துவிட்டான்..

அவளின் விழிகளில் இருந்து ஒரு துளி கண்ணீரும் வரவில்லை.. ஆனால், அவள் கண்களின் கீழ் இமைகள் சிவந்து தடித்திருந்தன.. கண்களில் நீராய் வெளிவர முடியாமல், சுவாசத்தில் மட்டும் வலியாக கரைந்து அவள் விழிகள் அவனை வெறித்தன.. அழுத்தம் மனதில் அத்தனை அழுத்தம் ஒரு பெண் எதிர்பார்க்கா விட்டாலும், அவளுக்கும் ஆசைகள் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள தவறி விட்டான்..

அவன் சொன்ன வார்த்தைகள் அவளின் உள்ளம் முழுவதும் எரிக்கச் செய்தன..அவன் தாலி கட்டியவளிடம் காதல் கொள்ளவும், வாழ்க்கை வாழவும் ஆசை இல்லை.. அதற்காகத்தான் அவளிடம் இதை சொல்லுகிறான்.. ஆனால், இதை கேட்டவள் என்ன செய்யப் போகிறாள்?

" அமைதியா இருக்கீயே? கேள்வி கேட்க எதுவும் இல்லையா? " இடது கையில் இருக்கும் விலையுயர்ந்த கைக்கடிகாரத்தை திருப்பிக் கொண்டு கேட்டான்.. ஆனால் ஒன்று அவளை அவன் நிமிர்ந்து பார்க்கவில்லை..

அவள் அவனைப் பார்த்தாள். அவன் பார்வையைத் தவிர்த்தான்..

" என் இஷ்டப்படி கிச்சன்ல குக் பண்ண முடியுமா ? " என்று அதை மட்டும் கேட்டாள்..

" தட்ஸ் யுவர் விஷ்" என்றான்..

" என் டிரஸ் பேக் உங்க ரூம்ல தானே"

" ம்ம்.." கதவை திறந்து கொண்டு வெளியேறி விட்டாள்..

போகும் மனைவியின் கோபம் புரிந்தாலும் சிலநாட்களுக்கு அவனையே தயார் படுத்திக் கொள்ள அவகாசம் தேவைப்பட்டது..

" ஊஃப்" இதழ் குவித்து மூச்சை வெளியேற்றினான்..

" ஐ நீட் அ ஃப்யூ டேஸ் டூ அக்செப்ட் யூ.." திருமணம் முடிந்து அவளுடன் வாழ்க்கைக்குள் நுழைய நாட்கள் தேவைப்பட்டது..

இவனின் எண்ணமே மீராவை புரிந்து கொண்டு காதலித்து அடுத்து கட்டத்திற்கு நகர்வது தான்.. எல்லாவற்றுக்கும் சோதனைகள் இடையில் நுழைந்தால் அதில் வென்று தானே வாழ்க்கை நோக்கி செல்ல முடியும்..சில இடறுகள் இவன் வாழ்க்கையையும் புரட்டி போடலாம்..

விறுவிறுவென நடந்து மாடி நோக்கி ஏறிக் கொண்டு இருக்கும் மகளின் பின்னால் விக்டரும் கீதாவும் ஓடினர்..

" சுஜி மா இருடா " கீதா அவள் பின்னே ஓடினார்..

பின்னால் தாயின் குரல் கேட்டதும், தன் நடையின் வேகத்தை குறைத்து , திரும்பிப் பார்த்தாள்..

" சுஜி உன்னோட முகத்துல இருந்த மேக்கப் ஆ.. க்ளீன் பண்ணிடீயா? " அவள் கன்னத்தில் கைவைத்து கேட்டார்..

கண்மூடி ஆழ்ந்த மூச்சை வெளியிட்டு " அவருக்கு மேக்கப் போடுறது பிடிக்காதாம், அதான் க்ளீன் பண்ணிட்டேன்.." என்றாள்..

திருமணமும் முடிந்து விட்டது..இனி தன் கணவன் வீடுதான் அவளுக்கு புகுந்த வீடு..அவர்களை இன்றுடன் பிரிந்து சென்றுவிடுவார்கள்..

தொண்டை விக்கிக் கொண்டு வந்தது..கணவன் பேசும் போது இல்லாத அழுத்தம் தாய் , தந்தையை பார்க்கும் போது தொண்டை நீர் இல்லாமல் அடைத்தது போல இருந்தது..

" சரி மா..மாப்ள சொல்றதை கேளு சுஜி.. எடுத்தெறிந்து பேசாத சரியா..நம்ம வீட்டுக்கு எப்போ வேணும்னாலும் நீ வரலாம் போகலாம்..ஆனா இங்க பார்த்து சூதனமா இருந்துக்கோடா.." மகளை பிரியப்போகிறோம் என்று நினைத்தாலும் அவள் முன் அழவே கூடாது என வைராக்கியமாக இருந்தார் அவர்..

விக்டர் மனைவியின் தோளை தட்டிக் கொடுத்தார்..தன் மனநிலை புரிந்து ஆதரவாக இருக்கும் கணவரை பார்த்து புன்னகைத்தார்..அவர் கண்களில் எப்போதும் அவருக்கான நேசம் சலிக்காமல் இருக்கும்..

விக்டர் மகளை அணைத்துக் கொண்டார்.." எதுவாக இருந்தாலும் டாடி கால் பண்ணு டா.. உனக்கு நானும் அம்மாவும் இருக்கோம்..மாப்ள என்ன சொல்றாரோ எல்லாம் உன் நல்லதுக்கு தான் சுஜி.. வீட்டுக்கு போனதும் பேசுறோம் டா.." மகளின் நெற்றியில் ஆத்மார்த்தமாக முத்தமிட்டு விலக நினைத்தவரின், கரத்தை பிடித்துக் கொண்டாள்..

" டாடி " அவள் குரல் உடைந்து வெளி வந்தது.." இங்க பாரு மா அழக்கூடாது.." சிறு துளியாக வெளிவர துடித்த கண்ணீரை துடைத்து விட்டார்..


" மார்னிங் எர்லியா எந்திருச்சுட்ட இப்ப போய் ரெஸ்ட் எடுடா..நாங்க நைட் போலத்தான் கிளம்புவோம்..போ மா " அவள் தலையை தடவி அறைக்கு அனுப்பி வைத்தார்..
 

IsaiKavi

Moderator
உயிர் - 3


இரவானதும், விக்டரும் கீதாவும் சென்றுவிடுவார்கள் என்று அறிந்த மீராசுஜி, அவன் அறையில் சிறிது நேரம் ஓய்வெடுத்து, பிறகு அவர்களுடன் பொழுதைக் கழித்தாள்.

அதே நேரம், லிங்கமும் கோதையும் அவர்களுடன் சேர்ந்தனர். தன் மகன் கூறியதை நினைத்துக் கொண்டே, லிங்கம் விக்டரிடம் மன்னிப்பு கேட்கப் போனார்..

"லிங்கம், நீங்க சொல்லித்தான் உங்க பையனைப் பத்தி தெரிஞ்சிக்கணும்னு அவசியம் இல்லை லிங்கம்.. நான் அவரைப் பத்தித் தெரிஞ்சித்தான் மீராவை அவருக்கு கட்டி குடுத்திருக்கேன். ரெண்டு பேருக்கும் இடையில் மாற்றம் வருதான்னு வெயிட் பண்ணிப் பார்க்கலாம்," என்று விக்டர் சொல்ல, லிங்கத்தின் மனதில் இருந்த பாரம் குறைந்தது போலிருந்தது..

அதனைத் தொடர்ந்து, இரவு 7.00 மணிக்கு அவர்கள் மீராவிடம் சொல்லிவிட்டு, அவளை அணைத்து ஆறுதல் கூறி வீட்டை விட்டு புறப்பட்டனர்.

அவள் முகம் மட்டும் அமைதியாக இருந்தாலும், உள்ளத்தில் கோபம் கொதித்துக் கொண்டிருந்தது. தன் தாய் , தந்தை செல்லும் நேரத்தில் கூட கணவன் வீட்டில் இல்லாதது நினைத்து மீராசுஜிக்கு இன்னும் எரிச்சலூட்டியது.

"ரெஸ்பெக்ட் கொடுக்கணுமாம்! எனக்கு வர்ற கோபத்துக்கு," பற்களை கடித்து, அந்த கோபத்தை அடக்கிக் கொண்டாள்..

அவன் எப்போதோ ஃபார்ம் ஹவுஸுக்குச் சென்றுவிட்டான். "அவர் இங்க வந்துதானே ஆகணும்… வீட்டுக்கு வருவார்ல, அப்போ பார்த்துக்குறேன்!" என்று தன்னுக்குத் தானே உறுதிமொழி கூறிக் கொண்டாள்‌..

அடுத்த நிமிடம், விக்டருக்கு அழைத்தாள்..

மகள் அழைக்கிறாள் என்று தெரிந்ததும், அவர் உடனே அழைப்பை ஏற்றார்.

"சுஜி! சாப்பிடியா, மா?"

"சாப்டேன் டாடி... நீங்க? அம்மா சாப்ட்டீங்களா?"

"சாப்பிட்டோம் மா.. சரி, என்னமா விஷயம்?" விக்டர் குறைந்த குரலில் கேட்டார்.. ஏதோ கேட்பதற்காகவே அழைத்திருக்கிறாள் என்பதை உணர்ந்திருந்தார்..

"நாளைலிருந்து உங்க ஆபீஸ்க்கு வரலாம்னு இருக்கேன், டாடி," அவள் சொன்ன விதத்தில் அவளின் மனநிலை தெரிந்துவிட்டது..

அர்ஜுன்க்கும் அவளுக்கும் இடையே ஏதோ நடந்து இருப்பதை அவரால் யூகிக்க முடிந்தது..அது என்னவென்று கேட்கும் அளவிற்கு அவர் மனம் ஒப்பவில்லை..

"தம்பி பர்மிஷன் குடுத்தாரா, சுஜி?"

"நான் தான் வரேன்னு சொல்றேன்ல, டாடி..."

அவள் கூறி முடித்த பிறகு, அழைப்பு துண்டிக்கப்பட்டது!

விக்டர் அலைபேசியை பார்த்தவாறு சில நொடிகள் மௌனமாக நின்றார்.. மகளின் கோபம் புரியாத அளவுக்கு இல்லை. ஆனால், அவள் ஒருபோதும் இவ்வளவு உடனடியாக கோபம் வெளிப்படுத்தும் வழக்கமில்லையே? அவள் முடிவெடுக்கும் விதமும், அவளின் செயலும் ஏதோ மாறி போயிருக்கிறது..

"சுஜி ஆஃபிஸ் வர்றது எனக்கு எந்த வித ப்ராப்ளமும் இல்ல பட் அர்ஜுன்க்கும் சுஜிக்கும் இடையே ப்ராப்ளம் வராமல் இருந்தால் நல்லா இருக்கும்..." என்று அவருக்குள் ஒரு உணர்வு தோன்றியது.

கீதாவிடம் மீரா பேசியது பற்றி விக்டர் அவருக்கு சொல்லவில்லை.. அலுவலகத்தில் வர வேண்டாம் என்று அவராலும் தடுக்க இயலாது..விக்டருக்கும் கீதாவுக்கும் பிறந்த ஒற்றை செல்வ மகளாயிற்றே!

அர்ஜுன் அவள் அலுவலகத்தில் வந்து வேலை செய்ய போவதை அறிந்தால் என்ன செய்யப் போகிறான் என்று பார்த்திடலாம் என்று முடிவு செய்தார்..

அன்றைய இரவு
அவளுக்கு அவன் அறையில் உறங்க கூட முடியவில்லை… மூச்சடைப்பது போல் ஓர் உணர்வு.

விஸ்தாரமாக அமைந்த அந்த லக்ஷரி அறையை சுற்றி பார்த்தாள்.. பெரிதாக இருந்த மெத்தை, நீண்ட சோஃபா, சுவற்றோடு ஒருங்கிணைந்த வாட்ரோப், பத்து பேர் குளிக்கும்படி பரந்த குளியலறை, ஐந்து பேர் திரும்பும் அளவுக்கு விரிவாக அமைந்த உடை மாற்றும் அறை அனைத்தும் அவனின் வாழ்க்கைத் தோற்றத்தை பிரதிபலித்தன..

சுவற்றில் மாட்டப்பட்டிருந்த இயற்கை சீனரிகள் அவனது நவீன செயல் தொகுப்பின் ஒரு பகுதி.. கண்காட்சிகளில் அவன் விரும்பிய ஓரிரு படங்களை எவ்வளவு விலைப்பட்டாலும் வாங்கி விடுவான்.. அவனுக்கு பணம் பெரிதல்ல… உழைக்கும் உழைப்பிற்கு கிடைக்கும் வெகுமதியாக மட்டும் அதைப் பார்ப்பவன்..

அவள் அறையை விரிவாக பார்த்தபோது, ஒரு படம் மட்டும் அவளது கவனத்தை ஈர்த்தது..

அவளின் நிலையை ஒரு விதமாக பிரதிபலிப்பது போல் இருந்தது..

அந்த சீனரியில், பெளர்ணமி நிலவு பிரகாசித்து, இரு மலைகள் கடலை பிளந்து நின்றன.. அந்த நடுவே இரு ஜோடிகள் ஒருவரை ஒருவர் அணுக முடியாத தூரத்தில் பிரிந்து இருந்தது..

அவள் இதழ்களில் வருத்தம் மிகுந்த புன்னகை..

"இதையாவது உருப்படியா ரெண்டு பேர் லைஃப் நிதர்சனத்தை சொல்லும் மாதிரி, சுவற்றில் மாட்டி இருக்குறதே பெருசு…" பெரு மூச்சினை வெளிவிட்டவளின், மனம் சோர்ந்து போனது போல் உணர்ந்தாள்...

அறையை நிதானமாக சுற்றிப் பார்த்தவள் மெத்தையில் படுத்தவுடனே, உறக்கம் அவளை தழுவிக் கொண்டது..

******

செங்கதிரோன் இவ் பூமிக்கு வெளிச்சத்தை கொடுத்து தன் பிள்ளைகளை எழுப்பி விடுவதற்காக கதிர்களை பாய்ச்சினான்..மலர்கள் கூட கதிரவனை கண்டு அழகான இதழ்களை விரித்து அந்த இடத்திற்கு மேலும் ஜொலிப்பை கூட்டியது..

இங்கோ உலகின் மிக பெரிய கம்பெனிகள் இணைந்து நடாத்தும் கார் ரேஸிங் போட்டி நடக்கவிருக்கிறது..காரணம் தங்கள் நிறுவனம் மூலமாக உருவாக்கிய கார்கள் நல்ல விற்பனைக்கு சென்றால் அதில் எல்லோரின் மனதையும் கவர்ந்து முதலிடத்தில் இருக்கும் கார்கள் மற்ற கம்பெனிகள் போட்டி போட்டு முழு தொகையும் வழங்கி காரை வாங்குவதற்காக முன் வருகின்றனர்..

அதனால் தான் இந்த போட்டியை வைப்பதற்கான காரணம் ரூல்ஸ் படியாக முதலில் பிரபல ஐந்து கார் நிறுவனங்களையும் சீட்டு மூலம் தெரிவு செய்து அதில் வெற்றி பெறும் கார் அவருக்கே சொந்தமாகும்..இந் நிலையில் 'ஆட்டோமொபைல் சீட்டா கார் ஸ்பேர் பார்ட்ஸ் கம்பனி '

கார் பார்ட்ஸ் தயாரிப்பதில் மிக சிறந்த நிறுவனமாகும்... ஒரு நாளிலே ஒரு கோடிக்கு சம்பாதிக்கின்றது.. இந்த நிறுவனம் அப்படி இருந்தும் மற்ற நிறுவனத்தை விட மாடல் கார்கள் தயாரிப்பதில் முதல் இடத்திலே இருக்கின்றது..அனைத்து வேலைகளையும் சிறப்பாக அதற்கு ஏற்றார் போல கச்சிதமாக முடித்து மார்க்கெட்டில் விற்பனைக்கு அதிகமாக செல்கிறது..

இவை அனைத்தும் ஒரு துளி கூட தவறாக நடக்காமல் வேலையில் கண்ணும் கருத்துமாக இருப்பதே அவன் ஒருவன் தான் அவன் கீழ் தான் இந்த நிறுவனம் நடாத்தப்படுகிறது..சிறு தவறேனும் நடந்தால் அவனின் ஒற்றை பார்வையே போதும் முன்னால் இருப்பவர் உயிரை கையில் பிடித்து தான் இருக்க வேண்டும்..

மைதானம் வெள்ளை வரிகளால் சரிவர வரையப்பட்ட கார் ரேஸிங் மைதானம்..மக்கள் கூட்டம் அதிகம் இல்லை...வெறும் கார் நிறுவன உரிமையாளர்களும், அவர்களின் பாதுகாப்பிற்காக இருக்கும் பாடிகார்ட்ஸ்களும் மட்டுமே மைதானத்தில் இருந்தனர்..

போட்டி ஆரம்பிக்க முன், ஐந்து கார்கள் வரிசையாக வந்து வெள்ளை வரி கோட்டில் நின்றன.. ஒவ்வொரு காரும் தனித்தன்மை வாய்ந்த டிசைனும், பவரும், வேகமும் கொண்டவை..

அந்தக் கணத்தில், மூன்றாவது காராக அடர் ஆரஞ்சு நிற சீட்டா வெலோச்சே ஸ்போர்ட் கார் பளிச்சென்று சூரியனின் ஒளியில் மின்னியது..

ஆம்! அர்ஜுன் பைரவ்வின் கார்..

அவனுடைய பார்வை...

காருக்குள் அமர்ந்திருந்தவன், உதட்டோர கர்வச் சிரிப்புடன், ஸ்டியரிங்கை இறுகப் பிடித்தான்.. பழுப்புநிற கண்கள் பக்கவாட்டில் பார்த்து மற்றைய கார் நிறுவனங்களின் தொழில் அதிபர்களை நோக்கி ஏளன பார்வை வீசின..பின்னர், பார்வையை திருப்பி, நேராக சாலையை நோக்கினான்..

"கூர்கூர்!" கார்கள் பெரும் சத்தத்துடன் கிளம்பின..

"டஃப்!"துப்பாக்கி சத்தம் கேட்டவுடன், அடர் ஆரஞ்சு நிற சீட்டா வெலோச்சே ஸ்போர்ட் கார் புழுதியை கிளப்பிக் கொண்டு சீறி பாய்ந்தது.

அவன் பார்வை ஸ்டியரிங்கிலும், சாலையிலும் மட்டுமே இருந்தது.. பின்னால் வரும் போட்டியாளர்களை பற்றி ஒரு நொடியும் கூட கவலைப்படவில்லை..

உதடு அசைந்து சொன்ன ஒரே வார்த்தை"இன்டர்ஸ்டிங்..."

சிறு முறுவலுடன், ஸ்டியரிங்கை முறுக்கி, வேகத்தை அதிகரித்தான்..

மற்றவர்கள் அதிர்ச்சி!

அவன் காரின் வேகத்தைக் கண்டு, மற்ற கார் ஓட்டுனர்கள் வியப்புடன் பார்த்தனர்..

"நீங்க எல்லோரும் ஸ்பீட் ஆ..கார் ஓடிக்கொண்டு இருக்கீங்களா ரைட்டு? நமளுக்கும் அதைவிட வேகமாக போகத் தெரியாதா?"

உதட்டில் கர்வ புன்னகை சிந்தி, கியர் மாற்றி, காரை மின்னல் வேகத்தில் ஓட்ட தொடங்கினான்..

"இவன் வெல்லப் போகிறான்..."

மற்ற கார் ஓட்டுனர்கள் தங்களை முந்திக்கொண்டு செல்லும் சீட்டா வெலோச்சே காரை பார்த்து தங்களுக்குள் பேசிக்கொண்டனர்..

"இவன் சீத்தாக்கு சமமான வேகத்தைக் கொண்டவன்... இவனிடம் நாங்கள் எப்படி போட்டியிடுவோம்?"

ஆனால், அவர்கள் கணித்தது தவறு.

சீத்தாவின் வேகத்திற்கு மிஞ்ச முடியுமா?

அவன் வெற்றி கோட்டை தாண்டிவிட்டான்!

பார்வையாளர்களாக இருந்தவர்கள் கை தட்டி கத்தி, ஆவலுடன் உற்சாகமடைந்தனர்..

அவன் கார் நிறுத்தியது...

அவன் கார் கதவை திறந்தான்...

வலது கையால் முடியை கோதி, மற்ற கையால் கூலர் கண்ணாடியை மாட்டிக் கொண்டான்.. ஒரு கையை பாக்கெட்டில் வைத்து, மற்ற கையை அசைத்து, இடது ஓரமாக சிரித்தான்.

அந்த ஏகாதிபத்திய (அவமதிப்பு கலந்த )சிரிப்பு...

அவன் அர்ஜுன் பைரவ்!

அவனின் ஒற்றை இடது சிரிப்பில் இளங்கன்னியர்கள் மயங்கி விழுந்தார்கள்.. அவனது அழகான கர்வம் கலந்த சிரிப்புக்கு அவர்கள் மனதைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

"அர்ஜுன் பைரவ்! அர்ஜுன் பைரவ்!"

போட்டியின் ஒவ்வொரு நொடியையும் பார்த்திருந்த அத்தனை பேரும் அவனின் பெயரை முழங்கினர்..

அவன் திரும்பி, கூடியிருந்தவர்களை ஒருமுறை பார்த்தான்..

அவன் மஞ்சள் நிற பூனைக்கண் கண்களில் எந்த உணர்வும் வெளிப்படவில்லை. வெற்றி அவனுக்கு புதிதல்ல.

அர்ஜுன் பைரவ் வெற்றிக்காக பிறந்தவன்..

சாதிக்க பிறந்தவன்!

வாழ்நாளில் தோல்வி என்ற வார்த்தை அவன் அத்தியாத்திலே இல்லை..

அவன் பலம் அவனுடைய கர்வம் , ஆணவ அடக்கம் இவை இரண்டுமே!

அவன் வெற்றி அழிக்க பிறந்தவள் அவன் மனைவி மீரா சுஜி..

தொழிலில் வெற்றி கண்டவனால் காதலில் வெற்றி பெற முடியாமல் தோல்வியை முதல் முறையாக காண்பான்..

அவன் மனைவியால் அன்று வேறு எவராலும் சாத்தியமற்றது..

அவனின் வெற்றியை அலுவலக அறையில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்தாள் அவன் மனைவி மீரா..

சாதாரண பார்வை அல்ல வெறித்த பார்வை , விழிகளும் எவ்வளோ நேரம் தான் தொலைக்காட்சியை வெறித்து பார்க்கும்..

தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்தது அவனின் தொழில் வெற்றி பற்றிய செய்தி, அதுவும் தலைப்பு செய்தியாக செய்தியாளர் கூறிக் கொண்டு இருந்தார்..

" பிஸ்னஸ்ல முன்னேற தெரிந்தவருக்கு வாழ்க்கையோ மனைவி மனதையோ தெரிந்து கொள்ளவும் விருப்பம் இல்லாதவருக்கு நான் டாடி கம்பெனிக்கு வந்ததை பத்தி எதுக்காக அவர் கிட்ட சொல்லணும்.." என்று சொல்லிக் கொண்டே சுழல் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டாள்..

சுருட்டி விட்ட கூந்தல் இடை வரை நீண்டு இருந்தது.. விழிகளில் உயிர்பில்லை..வேலை என்று வந்தால் அமைதி கூட அரிமாவாக மாறிவிடும் அப்படியான குணத்திற்கு உரியவள் மீரா சுஜி..

கழுத்தில் மஞ்சள் தாலி , வெள்ளை நிற ஷர்ட் மறைவில் இருந்தது.. கருப்பு நிற ஃபேன்ட், அட
ர் பச்சை நிற கோர்ட் அணிந்து அத்தனை கம்பீரமாக இருந்தாள்..

கணவனின் பேச்சிற்கு அடங்கி போவது நடிக்கிறாளா இல்லை..அவள் குணமே இது தானா ?

இனி வரும் அத்தியாயங்களில்..
 

IsaiKavi

Moderator
உயிர் - 4




மனைவியின் புது அவதாரத்தை அறியாத அர்ஜுன்..கார் ரேசிங்கில் வெற்றி பெற்றதோடு, மற்ற நான்கு கார்களையும் பணம் கொடுத்து பெற்றுக் கொண்டான்..

இது எப்போதும் நடப்பதாக இருந்தாலும், அவனுடைய கார் நிறுவனங்களில் புதிதாக தயாரிக்கப்பட்ட கார்கள் சந்தையில் விற்பனைக்கு செல்லும் முன்பு, இத்தகைய போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்பது விதிமுறையில் இருந்ததால், ஆறு மாதத்திற்கு ஒரு முறை இந்தப் போட்டி நடை பெறும்..

இதில் போட்டியில் தோல்வியுற்ற கார்களை பெறும் ஒரே நபர், அர்ஜுன் பைரவ் மட்டுமே!

அவன் வெற்றியை தாங்க முடியாமல், ஒரு நபர் தனது தோல்வியில் உருகிக் கொண்டிருந்தான் சாகித்யன்!

அவன் மட்டும் இன்னும் காரை விட்டு இறங்கவில்லை..உள்ளம் நெருப்பாக கொதித்துக் கொண்டிருந்தது..

" அர்ஜுன்! அர்ஜுன்" ஸ்ட்ரேயிங் வீலில் ஆக்ரோஷமாய் தன் கரங்களால் ஓங்கி அடித்துக் கொண்டு இருந்தான்..

அவன் முகம் செந்தணலாய் சிவந்து போனது..

" இந்த முறையும் என்னை தோற்க வைச்சிட்டல்ல அர்ஜுன்? நான் காதலிச்ச பொண்ணையும் உன் மனைவியாகிட்டல்ல! ஆ...ஆ..முடியல அர்ஜுன் முடியல ரொம்ப வலிக்குது..தொழிலையும் தோற்கடிக்கிறவன் நீ ! என் லைஃப்யும் பறிச்சிடல்ல? உன்னை சும்மா விட மாட்டேன் அர்ஜுன்! " வாய்விட்டு வெறியோடு காருக்குள் கத்திக் கொண்டு இருந்தான் சாகித்யன்..

நவம் மற்றும் நளினி இவர்களின் முதன்மை வாரிசு தான் சாகித்யன்..
தந்தையின் கார் நிறுவனத்தை கையில் எடுத்து மூன்று வருடங்களாக நடத்தி வரும் அவன், தங்கை அதிதிக்கு மிகப் பெரிய ஆதரவாக இருந்தாலும், அர்ஜுன் பைரவ் மீது அவனுக்கு இருக்கும் வெறி ஒருபோதும் குறையவில்லை.



அர்ஜுன் சாகித்யனின் காரினை , தோள் வரைக்கும் புரண்டு நிற்கும் கேசத்தை கோதியபடி அவனை ஒரு அழுத்தமான பார்வையை பார்த்ததும் , அவன் பார்வையை சகித்துக் கொள்ள முடியாமல் காரில் இருந்து இறங்கி வந்தான்..கோபம், வெறுப்பு, தோல்வியின் எரிச்சல் அவை எல்லாம் அவன் கண்களில் தெரிந்தன..

அவன் மனதில் அர்ஜுன் மீது வன்மம் அதிகரித்தது..இறுகிய தோற்றத்துடன் அங்கு மேசையில் வைத்திருந்த பத்திரத்தில் கை ஒப்பமிட்டான்..ஒரு சில நிமிடங்களுக்கு பிறகு அவன் வங்கி கணக்கில் அவனுடைய காரின் பெறுமதிக்கு ஏற்ப பணம் வந்து சேர்ந்தது..

அவனுக்கு வாழ்த்து கூறிய அனைவரிடமும் வாழ்த்தை பெற்றுக் கொண்டு , அங்கு இருக்கப் பிடிக்காமல் விரைந்து தன் காரில் ஏறி கிளம்பினான்..

******

சுழல் நாற்காலியில் அமர்ந்து, அலுவலக வேலையை கவனித்துக் கொண்டிருந்தாள் மீரா சுஜி..

திருமணமாகும் முன் விக்டரின் நிறுவனத்தில் வேலை செய்ததால், அப்போது அவளுக்கு அசிஸ்டெண்ட் ஆக வேலை செய்தவள் ரவீனா..

மீராவை அவளுக்கு மிகவும் பிடிக்கும்..
பொறுமை கடைபிடிக்க வேண்டிய இடத்தில் கூட, அவள் கோபத்தை வெளிப்படுத்தியதே இல்லை..

விக்டர் அலுவலகத்தில் உள்ள முக்கியமான கோப்புகளை சரி பார்த்து, கை ஒப்பமிடுவதற்காக,
அவை ரவீனாவின் கையில் ஒப்படைக்கப்பட்டன..மீராவிடம் கொடுக்கும்படி அவர் சொல்லி அனுப்பினார்..

அதனால் கோப்பு ஒவ்வொன்றையும் துல்லியமாக பார்வையிட்டு, கை ஒப்பமிட்டுக் கொண்டிருந்தாள் மீரா..

அப்போது அறை கதவை திறந்து, வேகமாக உள்ளே நுழைந்தான் அவன்..

ரவீனாவை தன் பக்கத்தில் இருக்கும் நாற்காலியில் அமர வைத்து தான் அவள் வேலை தொடர்ந்து கொண்டு இருந்தாள்.. ஆனால் அவள் வேலை செய்ய கூடாது என்பதற்காகவே அவனைத் தேடி வர வளைத்த பெருமை மீராவை சேரும்..

அர்ஜுன் பைரவ் தான் அவள் அறைக்குள் அனுமதி இல்லாமல் நுழைந்திருந்தான்..

தன் கணவன் வந்திருக்கிறான் என்று அவள் நிமிர்ந்து பார்க்கவில்லை..

ஒரு கோப்பில் கை ஒப்பம் இடும்போது " ரவீனா " அவளை அழைக்க..

" சொல்லுங்க மேம்? "

" இந்த ஃபைல் ஆ.. மேனேஜர் கிட்ட குடுத்து செக் பண்ண சொல்லுங்க! அப்புறமா சைன் பண்றேன்.." என்றாள்..

அவளும் தலையசைத்து விட்டு கோப்பை எடுத்துக் கொண்டு, அர்ஜுனை பார்க்காமல் அறையை விட்டு வெளியேற, கட்டிய கணவனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக தன் இருக்கையை எழுந்து நின்று ,மேசையின் விளிம்பில் சாய்ந்தவாறு அர்ஜுனை நோக்கினாள்..

அவன் மனைவி எங்கு செல்கிறாள்..என்ன செய்கிறாள் என்று உடனுக்கு உடன் அறிந்து கொள்வதற்காக அவளுக்கே தெரியாமல் ஒரு ஸ்பையை ஏற்பாடு செய்துவிட்டு தான் அவன் நிறுவனத்திற்கு கிளம்பிச் சென்றது..

அதன் அடிப்படையில் கார் ரேஸிங் மைதானத்தில் போட்டி முடிந்தவுடன், அவனின் ஸ்பை அவன் மனைவி தந்தையின் நிறுவனத்திற்கு சென்றதாக தகவல் வந்தது..

உடனே அவளைத் தேடி வந்துவிட்டான்.. கருப்பு கூலர் கண்ணாடி அணிந்திருப்பதால் அவன் விழிகளில் திரண்ட கோபத்தீ அவள் கண்களுக்கு தென்படவில்லை..

" ரைட்! மிஸ் மிரா சுஜி விக்டர் ஏக்ட்ரியனா இல்ல மிஸஸ் மீரா அர்ஜுன் பைரவ் ஆ..இங்க வந்து இருக்கீங்க? "

அங்கிருந்த நீண்ட சோஃபாவில் வலது கரத்தை சோஃபா மேல் வைத்து , காலுக்கு மேல் கால் போட்டுக் கொண்டு அதிகாரத்துடன் அமர்ந்த படி அவளை பார்க்காமல் வினவினான்..

" நீங்க என்ன பதிலை எதிர்பாக்குறீங்க மிஸ்டர் அர்ஜுன்? " அதிகாரத் தன்மையுடன் கேட்ட மனைவியை , ' திமிர் பிடிச்சவள போய் தெரியாம மேரேஜ் பண்ணிகிட்ட என்னை என்னத்த சொல்றது? ' பற்களை நரநரத்து கொண்டு இருந்தான்..

" நீ எனக்கு சாதகமான பதிலை சொன்ன மட்டும் போதும்.." என்றான்..

" மிஸ் மீரா சுஜி விக்டர் ஏக்ட்ரியனா தான் இந்த கம்பெனிக்கே வந்து இருக்கேன்..போதுமா ? இன்னும் விளக்கம் சொல்லுனுமா? "

நேற்று அவனிடம் அடக்கம் உள்ளவள் போல் பேசிவிட்டு, இன்று முழுவதுமாக தன் குணத்தில் இருந்து மாறி நிற்கும் மனைவியை அவனால் வித்தியாசமாக தான் பார்க்க முடிந்தது..

" ஆல் மோஸ்ட் பைன்! " சோஃபாவை விட்டு எழுந்து நேராக அவளை நோக்கி வந்தான்..

' இப்ப எதுக்கு கிட்ட வர்றார்னு தெரியலையே ' சிந்தித்தவளாக அவனை நோக்கினாள்..

அவள் அருகில் மேனி உரச வந்து நின்றான்.. கண்களில் மாட்டி இருந்த கூலர் கண்ணாடியை கழட்டி ஷர்ட் முன் மாட்டிக் கொண்டான்..

" டுடே யு கென் வொர்க் ஹியர் பட் இதுக்கு அப்புறம் என் கம்பெனில தான் வொர்க் பண்ணற ! மிஸஸ் மீரா சுஜி அர்ஜுன் பைரவ்வாக உனக்கு புரிஞ்சி இருக்கும்னு நினைக்கிறேன்.."

" தென் டோன்ட் ஷோ யுவர் ஆத்தார்டி..எப்பவுமே நீ எனக்கு கீழ கட்டுப்பட்டவளாக ஐ மீன் என் கன்ட்ரோல் ல..இருக்கனும் புரியுதா ? " என்றான் கடின குரலில்..

அவளின் நுனி மூக்கு கோபத்திலும் ஆற்றமையிலும் அவனிடம் வெடித்து விடும் அளவிற்கு உணர்ச்சியின் வெளிப்பாட்டில் மூக்கு சிவந்தது..

தன்னை கட்டுபடுத்திக் கொண்டு " நீங்க என்னையே கன்ட்ரோல் பண்ண நினைக்கிறீங்களா ? உங்களுக்கு அந்த ஆத்தார்டி நான் கொடுக்கல்ல அர்ஜுன்..உங்க கம்பெனிக்கு வர்ற சொல்றீங்களே எதுக்காக ? பிரோஃபஷனல் ரோல் அதுக்காக மட்டும் தானே நான் வேணும் ? " என்று அடக்கப்பட்ட சீற்றத்துடன் அவனை நோக்கி கேள்விகள் அம்புகளாக தொடுத்தது..

" உண்மை சொல்லணும்னா அந்த ஒரு காரணத்துக்காக மட்டும் தான் மீரா " என்று அவளிடம் அழுத்திச் சொன்னான்..

" புரிஞ்சி போச்சி! " என்றவளின் இதழில் வலியுடன் கூடிய விரக்தியுடன் புன்னகை மலர்ந்தது..

" எனக்கு டைம் ஆச்சு, நாம ஆஃபிஸ்ல மீட் பண்ணலாம்.." என்று விட்டு, அறையில் இருந்து வெளியேறி விட்டான்..

அவள் விழிகள் மூடி கதவை வெறித்து பார்த்தன..

அவள் உள்ளம் மரத்துப் போனது..

சாராதரி பெண்கள், தன் கணவனிடம் எதிர்பார்பதை இவனிடம் எதிர்பார்ப்பது தவறு, இவன் வழியில் சென்றே அவனை வீழ்த்த வேண்டும் என்ற முடிவோடு ரவீனா வந்ததும் தன் உணர்த்திகளை மறைத்துக் கொண்டு இயல்பு நிலைக்கு மாறினாள் மீரா..

*****

சிந்தூரன் அலுவலகத்தில் எந்த வேலையும் செய்யாது அவனுக்கே என்று ஒதுக்கப்பட்ட அறையில் சுழற் நாற்காலியில் சம்மணம் கொட்டி அமர்ந்தவாறு காதில் ப்ளூடூத் அணிந்து, மொபைலில் கேம் விளையாடிக் கொண்டிருந்தான்..

அர்ஜுன் பைரவ்க்கு வயது 28 என்றால் இவனுக்கு 25 வயது ஆகுகிறது.. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்திருந்தாலும் அவனுக்கு பிடித்தமான ஒன்று எதுவென்றால் மொபைல் கேம் விளையாடுவது தான்..

தன் அண்ணன் தான் இருக்கும் அறைக்கு தான் வருகிறான் என்று அறியாதவன்..அதிக ஆர்வத்துடன் கேம் விளையாட்டில் மூழ்கியிருந்தான்..

இதே நேரத்தில், அவன் அறைக்கும் நுழைந்துவிட்டான்..

" சிந்தூ! " அவளை அழைத்துக் கொண்டு, சரியாக நாற்காலி பக்கம் வந்து இருந்தான்.. மொபைலில் கேம் விளையாடிக் கொண்டிருக்கும் சிந்தூரனை கண்டதும் இரத்த அழுத்தம் நிமிடத்திலேயே 100 மேல் கடந்துவிட்டது..

எந்தவொரு வேலையையும் செய்யாமல் விளையாடிக் கொண்டு இருக்கிறான் அல்லவா ? அவனுக்கு சினம் துளிர்க்கத்தானே செய்யும்..

காதில் மாட்டி இருந்த ப்ளூடூத்தை கழட்டி எறிந்து விட்டு, ' பளார் ' என்று கன்னம் தீயாக எரிந்து காந்துவதற்கு அறைந்தான்..

' அப்பாடி! ' தலைக்கு மேல் நாலைந்து பூச்சிகள் பறக்கும் அளவிற்கு தலை கிறு கிறுவென சுற்றியது..

" அண்ணா! " என்று மெதுவாக அழைத்தானே ஒழிய , கலங்கவில்லை..

" உனக்கு நான் எதைச் செய்ய சொல்லிட்டு போனேன் ? நீ என்னடான்னா சேர்ல உட்கார்ந்து டீனேஜ் பையன் மாதிரி கேம் விளையாடிட்டு இருக்க இடியட்! "

" கொஞ்சமாவது ரிஸ்பான்ஸிபிளா நடந்துக்க சிந்தூ! " சினந்த குரலில் கடிந்து கொண்டான்..

" ஸ்டேண்ட் ஆஃப்! " கர்ஜிக்கும் குரலில் அவனை அதட்ட, சிந்தூரன் உடனே நாற்காலியை விட்டு எழுந்து நின்றான்..

" லிசின் " என்றவன் அவனிடம் சொன்னதை செவியை கூர்மையாக்கி கேட்டுக் கொண்டான்..

" உன்னால மட்டும் தான் முடியும்.. கேர் ஃபுல் ஆ..இரு ஓகே ! " அவன் தோளை தட்டினான்..

" க்கும்..நீ எதுவும் சொல்லாத அண்ணா..நானே ஸ்விம்மிங்ல செம்பியன் அத பத்தி எனக்கு தெரியாதா ? கோல்ட் மெடல் வாங்கி இருக்கேன்.. மறக்காதே! ஒரு கோச் ஆ.. மாறுறது பெரிய மேட்டரே இல்ல..அங்க போய் எப்படி பெர்ஃபார்ம் பண்றேன்னு மட்டும் பாரு.." கெத்தாக காலரை தூக்கி காட்டி விட்டு, வீர நடையுடன் செல்லும் சகோதரனை அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்த்துக் கொண்டு இருந்தான் அர்ஜுன் பைரவ்..

அவனிடம் திரும்பி வரும் போது சிந்தூரன் நிலை எப்படி இருக்குமோ ?



*****

Sorry dears health issues nala yesterday ud podathathukku...🙏❤️
 

IsaiKavi

Moderator
உயிர் - 5


மறு நாள் காலை விடிந்ததும், இருவரும் நீச்சல் அகாடமி அருகே பைக்கை நிறுத்திவிட்டு பேசிக்கொண்டே உள்ளே நுழைந்தார்கள்.. அங்கு ஆண்கள், பெண்களுக்கு என இரு பிரிவுகளாக பிரித்து, நீச்சல் பயிற்சி நடைபெற்று கொண்டிருந்தது..

அந்த அகாடமியில், பணக்காரர் , ஏழை என்ற எந்தவொரு பாகுபாடும் இல்லாமல், பலரும் ஒரே மாதிரியான உற்சாகத்துடன் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள்..

அந்த நேரத்தில், 19 வயது தக்க ஓர் இளம் பெண், தன் தோழனுடன் பேசிக்கொண்டு நடந்து வந்தாள்.. அவள் முகத்தில் இருந்த சுறுசுறுப்பும், பரபரப்பும் அவளது உற்சாகத்தை வெளிப்படுத்தின..

" ஷாம் தினமும் வர்ற இடமா இருந்தாலும் ப்ரஷா ஃபீல் ஆகுது ல? " தோள் வரை இருக்கும் கர்லி பாப் கூந்தல் அசைந்தாடிட, தலைசரித்து வெண்பற்கள் பளிச்சென்று சூரிய ஒளி போல் மின்னிட அவள் தோழனிடம் கேட்டாள்..

" ரொம்ப அழகா சிரிக்குற அதிதி " விழிகள் சிரிக்க , அவளின் புன்னகையை ரசித்து சொன்னான் ஷாம்..

" ப்ச்.. நான் என்ன கேட்குறேன்? நீ என்ன சொல்ற ? " என்று கேட்டு விட்டு முன்னால் நடந்தாள்..

" ஹே அதிதி! இரு " கத்திக் கொண்டே அவள் பின்னால் ஓடினான் ஷாம்..

விசாலமான பரந்த செவ்வக வடிவில் அமைக்கப்பட்டிருக்கும் நீச்சல் குளத்தில் ஒரு சில பேர் தங்கள் பயிற்சியை செய்துக் கொண்டு இருந்தனர்..

ஒருவன் நீச்சல் தடாகத்தில் தலைக்கும் கண்களுக்கும் கவசம் அணியாமல், சீராக வெட்டப்பட்ட இளம் பழுப்பு நிற முடி நீரால் நனைந்திருந்தது.. அவன் கரங்கள் கழுகின் இறக்கைகளைப் போல வேகமாக ஒன்றின் பின் ஒன்றாக விசிறியடித்து, நீரில் அலைகளை கடல் அலைகளைப் போல் திரளச் செய்தன.. அவன் கால்களும் நீரின் ஓட்டத்துக்கு இசையாக அசைந்தன.. அவனின் முதுகுத் தண்டு தசைகளும் அவனின் அசைவிற்கு ஏற்ப நீரை கிழித்துக் கொண்டு, அவன் ஆழமாக, திடமாக நீச்சல் அடித்துக்கொண்டு இருந்தான் அவன் சிந்தூரன்..

அண்ணனின் உத்தரவின் படி வந்த முதல் நாளிலே தன் வேலைகளை காண்பிக்க தொடங்கிருந்தான்..

பயிற்சிகாக வந்த இளம் பெண்கள் தங்கள் பயிற்சியை தொடங்காமல், அவன் நீச்சலடிக்கும் அழகினை ரசித்தவாறு நின்றிருக்க..ஒருத்தியின் முகமோ இதனைக் கண்டு சூடேறே ஆரம்பித்தது..

" ஸ்விமிங் பிராக்டீஸ் பண்ற வரானுங்களா இல்ல ? இங்க இருக்குற பொண்ணுங்களை தன் பக்கம் திசை திருப்பி சைட் அடிக்க வைக்க வர்றானா? ச்சே! இவனுங்களுக்கு இதே வேலையா போச்சி இதுக்கெல்லாம் நான் அசர மாட்டேன் பா.." தோளை குலுக்கிக் கொண்டு சலிப்பாக தலையசைத்தாள் அதிதி..சாகித்யனின் ஒற்றை தங்கை..

இப்படி உரைப்பவள் தான் அவன் வசீகரித்தில் மொத்தமாக மையல் கொள்ளப் போவதை அறியாத ஷாம் அழைக்கவும் பிதற்றி விட்டுச் சென்றாள்..

" ஷாம் பிராக்டீஸ் முடிஞ்சதும் மீட் பண்ணுவோம்..ஹான் இன்னைக்கு புது கோச் வர போறதா சொன்னாங்க.. உனக்கு அதே கோச் தானே ? " யோசனையாக கேட்டாள்..

" அதோ கோச் தான்..ஏன் உங்க லேடிஸ் செட்ல புது கோச் வர போறதா பேசிகிட்டாங்களா? " ஷாம் வினவினான்..

" ஆமா டா..சரி கோச் கூப்பிடுறாரு நீ போ" என்று அவனை அனுப்பி விட்டு, உடைமாற்றவதற்கு அறைக்குச் சென்றாள்..

அவளும் உடையை மாற்றி விட்டு இளம் நீல நிற கோடு சரிவாக வந்து மற்றவை எல்லாம் அடர் நிறத்தில் இருந்த ராஷ் காட் ஸ்விம்சுட் ஒன்றினை அணிந்து, தலைக்கவசம் அணிந்து அவள் நின்ற போது,

அவன் நீரின் ஆழத்திலிருந்து மேலெழும்பும் போது, அவன் மேனி மீது ஒட்டியிருந்த நீர்த்துளிகள், அவன் திரண்ட தசைகளின் அசைவுக்கு ஏற்ப மெதுவாக வழிந்தோடி, வெயிலின் ஒளியில் ஒளிர்ந்தன..

அவன் கை விரல்களை தன் முடியை பின்னால் தள்ள, நீர் துகள்கள் சிதறியது.. அவன் மார்பளவுக்கு கீழே நீர் வழிந்தேறி, அவன் கால்களின் வழியாக நீரில் கலந்தது..கடல் நீரில் இருந்து எழுந்து வந்த ஆழி அரசன் போல் காட்சியளித்தான் கன்னியர்களுக்கு..

ஒரே ஒரு கணம் தன்னிலை மறந்து அவனை ரசித்துப் பார்த்தாள் அவள்..அவன் கேசத்தில் இருந்து சிதறிய நீர்த்துளி, அவள் முகத்தில் வந்து தெறித்ததும் தன் உணர்வை அடைந்தால் பெண்..

தன்னை இமை மூடாமல் பார்த்திருக்கும் பெண்ணவளை அவன் அடையாளம் கண்டதும் அவன் அதரங்களில் அவளை கண்டு கொண்டதில் புன்னகை தோன்றி மறைந்தது..

' அதிதி ' அதி ' ' என்று அவன் மனதில் சொல்லிக் கொண்டான்..

அவள் பக்கத்தில் இருந்த பெண்ணொருத்தி " இவர் தான் நம்மளுக்கு பிராக்டீஸ் குடுக்க போற நிவ் கோச் அதிதி " என்று அவள் சொன்னதும் , அவளுக்கு திகைப்பாக தான் இருந்தது.. ஏனெனில், அவள் எதிர்பார்த்த கோச் வயதானவராக நரைத்த தலையுடன் இருப்பார் என்று நினைத்திருக்க..கட்மஸ்தான உடலுடன் , ஸ்மார்ட் ஆக வசீகரிக்கும் அழகில் இளம் கோச் ஒருவனாக இருந்தான்.. அவளால் இதுவரை நினைத்ததோடு அவனை ஒப்பிட்டு பார்க்க முடியவில்லை..

அவன் மேலே வந்ததும் ஸ்விம்மிங் சூட் அணிந்து கொண்டு, இருக்கையில் இருந்த துண்டை எடுத்து தலையை துடைத்தவாறு அதிதி மேல் தன் பார்வை செலுத்தினான்..

சிவந்த நிறம் அல்லாது இடைப்பட்ட தோல் நிறத்திலும் ,சீராக வெட்டப்பட்டு வடிவமைக்கப்பட்ட புருவங்கள், மெல்லிய இளம் சிவப்பு இதழ்கள் என சீரோ சைஸ்சில் இருந்தவளை ஒரு நிமிடம் ஊடுருவி பார்த்து, பிறகு பார்வையை வேறெங்கோ மாற்றிக் கொண்டது..

அதனைத் தொடர்ந்து தன்னை அறிமுகப்படுத்த முன் வந்தான்.." ஹே கர்ள்ஸ்! ஐ ஆம் சிந்தூரன் உங்க நிவ் கோச்..சோ இன்னைக்கு இருந்து நம்ம பிராக்டீஸ் ஸ்டார்ட் பண்ணலாம் ஓகே.. உங்களோட ஸ்கில்ஸ் இம்ரூவ் செய்ய ஹெல்ப் பண்றதுக்கு நான் இருக்கேன்..எந்த ஏரியாஸ் உங்களோட ஃபோகஸ் இல்லை என்கிறத நான் பார்க்கணும் இப்பவே ஆரம்பிக்கலாம் கெட் ரெடி கர்ள்ஸ் " என்று உற்சாகமாக சொன்னான்..கை தட்டி ,அவர்களின் நீச்சல் பயிற்சி எந்த விதத்தில் முன்னேறி இருப்பதை பார்ப்பதற்கு நீச்சல் அடித்து காட்டும் படி உத்தரவிட்டான்..இதில் அதிதியும் அவன் சொன்னதை செய்ய நீச்சல் தடாகத்தில் இறங்கினாள்..

‌ ******

அர்ஜுன் பைரவ்வின் நிறுவனத்திற்கு வெள்ளை நிற கார் ஒன்று நுழைந்தது..அந்த கார் தன் நிறுவனத்துக்கு நுழைவதை தன் அறையின் தடுப்பு கண்ணாடி சுவற்றின் ஊடாக ஒற்றை கையால் கேசத்தை கோதிக் கொண்டு தன் மஞ்சள் நிற பூனைக்கண் விழிகளினால் கீழே பார்த்துக் கொண்டு இருந்தான்..

அவன் இதழில் கர்வமான புன்னகை பூத்தது..அவன் நிறுவனத்திற்கு வரக் கூடிய உரிமை அவன் மனைவியாள் அன்றி வேறு எவரால் அவன் அனுமதி இன்றி நுழைய முடியும்..

வெள்ளை நிற கோட் சூட், ஃபேன்ட் அணிந்து, கண்களில் பழுப்பு நிற சன் கிளாஸ், மேலே கருப்பு கூந்தலின் நுனி சிவப்பு என சிகை அலங்காரம் செய்து அவன் மனைவியாய் கம்பீரமாக காரை விட்டு இறங்கி, நிமிர்ந்த நடையுடன் உள்ளே சென்றாள்..

மின் தூக்கியில் ஏறி ஒருவாறு அவன் அறை கதவை தட்டி அனுமதி கேட்காது உள்ளே நுழைந்தாள் பெண்..

சுழல் நாற்காலியில் காலுக்கு மேல் கால் போட்டு அமர்ந்தவாறு, புது பரிமாணத்தில் தன்னை நோக்கி வருகிறவளை ரசனை விழிகளுடன் நோக்கினான்.." வெல்கம் டூ மை கிங்டம்! " என்று தனது கம்பீர குரலில் சத்தமாக கூறினான்..

' கிங்கடமாம்! கிழிஞ்சிது ஒரு கம்பெனிய வச்சிகிட்டு அரசர் ஆளுற இராச்சியம்னு நினைக்கிறவரை என்ன செய்தால் தகும்..' உள்ளுக்குள் எரிந்து கொண்டிருக்கும் தகிப்பை அடக்க முடியாமல் கொதித்து கொண்டிருக்கும் மனைவியின் உள்ளத்தை அறியாது போனான் அவளின் விழி திருடன்..

" தேங்க்ஸ், நீங்க சொன்ன மாதிரி என்னை உங்க இடத்திற்கு வரவழைச்சிடிங்க வெல்! சொல்லுங்க அடுத்து நான் என்ன பண்ணனும்? " என்று கேட்டாள்..

நாற்காலியை விட்டு எழுந்து வந்தான்.." மேரேஜ் அன்னைக்கும், இதோ என் முன்னாடி நிக்கிறவளுக்கும் நிறைய சேன்ச் இருக்கு..அது உனக்கு விளங்குதா? " எனக் கேட்க..

" உங்களுக்கு சமமான நான்? இப்படித்தான் இருப்பேன் எப்பவும்.." அழுத்தமாக பார்த்துக் கொண்டு சொன்னாள்..

" தட்ஸ் குட்" என்றவன், " வா கம்பெனிய சுத்தி பார்த்துட்டு வரலாம்.." என்று அவன் அழைக்க..

அவன் கரங்களை பார்த்து அவளால் ஏக்க பெரு மூச்சு தான் விட முடிந்தது.. ஏனென்றால் பன்னிரெண்டு அடி தூரத்தில் நின்று தான் அவன் அவளை அழைத்தது..

" உங்க கம்பெனியை சுத்தி பார்க்க எனக்கு அவசியம் இல்லை சார்.. ஏதாவது வேலை இருந்தா குடுங்க செய்றேன்.." என்றாள்..

டென்ஷனில் கேசத்தை கோதியபடி" இப்ப வர போறீயா இல்லையா? " எரிச்சலாக கத்தினான்..

" நோ வே " பிடிவாதமாக மறுத்துவிட்டாள்..

" யூ.." அவளை திட்ட வாயெடுத்தவன், பன்னிரண்டு அடி இடைவெளி தூரத்தை குறைத்து , அவளின் கரம் பற்றி அறை கதவை திறந்து இழுத்துச் சென்றான்..

சாதாரண பாதணி அணிந்ததால் தப்பித்து இருந்தால் இல்லையென்றால் அவன் இழுப்பிற்கு சென்றவளின் ஹீல்ஸ் பாதணியாக இருந்தால் கால் பிரண்டு சுளுக்கு பிடித்து இருக்கும்..

அவன் அவள் கரத்தை பற்றி அழைத்துச் செல்வதை கூட அவளால் முழுதாக மகிழ முடியவில்லை..

கட்டாயத்தின் பேரில் அவன் அவளை ஒரு கார் உற்பத்தி செய்யும் இடத்திற்கு அழைத்துச் சென்றான். அங்கு காரின் உதிரிப் பகுதிகள், என்ஜின் அமைப்புகள் எப்படி உருவாக்கப்படுகின்றன என்பதைக் குறித்து அவளுக்கு விளக்கிக்கொண்டு இருந்தான்..

அவன் சொல்வதை அவள் கேட்க வேண்டும் என்பதே தலை எழுத்து என்று எண்ணியிருந்தாள் மீரா சுஜி. அதனால் தான் அவன் விளக்கத்தைக் கவனித்துக் கேட்டுக் கொண்டிருந்தாள்..

அதே நேரத்தில், புதிதாக வடிவமைக்கப்பட்ட காரைப் பற்றிக் கேட்க, ஒரு ஊழியர் அர்ஜுனை அழைத்த போது,
"நீ இங்கேயே இரு, நான் வந்துர்றேன்" என்று அவன் கூறிவிட்டு சென்றுவிட்டான்.

சும்மா இருக்க முடியாத மீரா, கோட்டின் நீளக் கையை முழங்கைவரை மடித்து, காரின் என்ஜினைப் பரிசோதிக்கத் தொடங்கினாள்..

"மேம், நீங்க இதுக்கெல்லாம் கை வைக்கக்கூடாது..." என்றான் அங்கிருந்த ஊழியர் ஒருவர்..

"தொட்டு பார்த்துட்டு விடுறேன் சார்… நீங்க பயப்படாதீங்க!" புன்னகையுடன் கூறினாள் மீரா..அவளின் உற்சாகத்தைக் கண்ட ஊழியர் அவளது விருப்பத்திற்குச் சற்றே இடம் கொடுத்தான்..

"நல்ல என்ஜின் போல!" என்று கூறிக்கொண்டே, கூர்முனையாக இருக்கும் என்ஜின் பகுதியில் கரம் வைத்தது தான் தாமதம்.. அவள் கை மாட்டிக்கொண்டது..

அவன் வருவதற்குள், அவள் உள்ளங்கையில் ஆழமாக வெட்டு பட்டு இரத்தம் வடிந்தது.. வலியின் தாக்கத்தில் அவள் அலற, அருகில் இருந்த ஊழியர்கள் விரைவாக முதலுதவி பெட்டியில் இருந்து மருந்து வைத்து, அவளது கைக்கு கட்டுப் போட்டனர்..

தூரத்திலிருந்தே நடந்ததை கவனித்த அர்ஜுன், விபரீதம் நடக்கப் போகும் என்று புரிந்தவுடன் விரைந்து வந்தான்.. ஆனால் அவன் வருவதற்குள், அவளது கையை காயம் ஆழமாகப் பதித்துவிட்டது..

அவள் வலியில் துடிக்க, அவன் உள்ளமும் அவளுக்காக துடி
த்தது…

*****

இன்னும் ரெண்டு ஜோடி இறக்கணும் டியர்ஸ் நெக்ஸ்ட் எபில முடியாமான்னு பார்க்கலாம்..நன்றி 🙏🙏🙏
 
Last edited:

IsaiKavi

Moderator
உயிர் - 6





விரைந்து அவளிடம் வந்தவன் " அறிவில்லையா உங்களுக்கு‌நான் வந்துர்றேன் தானே சொல்லிட்டு போனேன்.. அதுக்குள்ள உங்களை யாரு மெஷின்குள்ள கைய போட சொன்னது ஃபுல்.." அத்தனை பேரின் முன்பும் தன் மனைவியை திட்டி தீர்த்தான் அர்ஜுன்..

அங்கிருந்த ஊழியர்கள் மீராவை கவலையுடன் பார்த்தனர்..அவன் திட்டுவது கூட அவளால் ஏற்க முடியும், ஆனால் எல்லோரின் முன்பு அவளை அவமானப்படுத்துவது மனம் சகிக்கவில்லை..

கையில் இருந்த காயத்தை விட 'அவளுக்காக அவன் துடிக்கவில்லை' என்பதே அவள் மனதில் வலிக்க வைக்க போதுமானதாக இருந்தது..

இதழில் விரக்கத்தியான ஓர் புன்னகை..

" மெஷின்க்கு எந்த பாதிப்பும் இல்ல தானே ரங்கன் ? " அவளுக்கு இப்படியொன்று ஆனது தெரிந்து ஏற்கனவே, இங்கு நடந்த விபத்தை ரங்கனுக்குத் தெரிய வைத்திருந்தார்கள்.. அதனால், அவன்தான் கூடிய வேகத்துடன் வர வேண்டியிருந்தது.. ஏனென்றால், அந்த பிரிவுக்கான முழுப் பொறுப்பும் அவனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது..



ரங்கன் தோழியின் நிலை பார்த்து மனதிற்குள் வருந்த தான் முடிந்தது.. வெளியே விரைப்பாக அர்ஜுன் சொல்லும் கட்டளைகளை ஏற்பவனாக நின்றவனை கொலைவெறியுடன் ரங்கனை முறைத்துப் பார்த்தாள்..

அவன் மனதில் ' புருஷனை முறைக்காமல் என்னை எதுக்கு முறைக்குறா? ' என்று தான் அவனுக்குத் தோன்றியது..

இருவரும் கல்லூரி தோழர்கள் ஆனால் அதிகமாக பேசி நட்பை உறவாடாதவர்கள் அதனால் தான் அவன் விலகி நிற்கிறான்..

" இல்ல சார், மெசின் ஓகே மேடம் கைல தான் காயமாகி இருக்கு.." என்றான் ரங்கன்..

" ம்.. ஓகே ரங்கன்.." என்றுவிட்டு" மீரா வாங்க " அவளை வரச் சொல்லிவிட்டு, அவன் முன்னால் சென்றான்..

' ச்சே! சரியான சாடிஸ்ட்டா இருப்பார் போல வேணும்னே தானே மெசின்குள்ள கையை போட்டேன்..ஆனா இவர் அதுக்கு கூட அசைய மாடேங்குறார்..' மனதில் புலம்பிக் கொண்டு அவன் பின்னே சென்றாள்..

அவனை ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்ற பெயரில், அவனின் உணர்வுகளை சோதிக்க நினைத்து, அவள் தான் தன்னையே இந்த நிலைக்கு கொண்டு வந்தாள். ஆனால் இதன் முடிவாக, அவன் எப்படியாவது கவலைப்படுவான் என்று நினைத்திருக்க ,அவளுக்கு எதிர்மாறானதே நடந்தது.

அவன் அறைக்குள் வந்ததும் , உடனே திரும்பி அவளை உறுத்து விழித்தவன்..

" நீ வேணும்ன்னு தானே மெசினுக்குள்ள கைய போட்ட மீரா.." என்று கேட்க.. அவள் உடல் தூக்கி வாரிப் போட்டது..

தன்னை கண்டு பிடித்திடுவான் என்று அவள் நினைக்கவே இல்லை.. ஆனால் எப்படி என்ற வினாவும் அவளுள் எழுந்தது..

" நான் நினைச்சது சரிதான் என் ஃபீலிங்ஸ் கூட விளையாட நினைக்கிற ரைட்? பட் அதுக்கு ஏற்றவன் நான் இல்லை ஓகே மைண்ட் இட்..இனிமே இதே மாதிரி சில்லியா பண்ணாத! இட்ஸ் நாட் கோயிங் டூ ஹர்ட் மை ஃபீலிங்ஸ்.." ஆணித்தரமாக அவள் மனதில் பதிய சொன்னான்..

அலட்சியத்துடன் அவன் கூறுவதை கேட்டுக் கொண்டு இருந்தாள்..பின் அவனை நோக்கி" நான் வீட்டுக்கு போகணும் கார் ஏற்பாடு பண்ணுங்க " என்று கூறிவிட்டு சோஃபாவில் அமர்ந்து கொண்டாள்.." என் காரை டிரைவர் கிட்ட சொல்லி அனுப்பி வைங்க.." அவனுக்கு கட்டளையிட்டாள்..

அதற்கு எதுவும் கூறாது அவள் சொன்னதை செய்தான்..எப்போது வீட்டிற்கு வந்து சேர்ந்தாள் என்றே தெரியவில்லை..

மனம் முழுவதும் விரக்தியே பரவி இருந்தது..ஹாலில் இருந்து சோஃபாவில் கை கட்டுடன் இருந்த மருமகளை கண்டவருக்கு உள்ளம் பிசைந்தது..

" மீரா என்ன மா கைல காயம் ? " பதறியபடி கேட்டார்..

அவருக்குப் பிடித்த மருமகளாக இருப்பினும் அவளின் குணங்கள் தான் அவரை வெகுவாக கவர்ந்தது என்றே கூறலாம்..

" சின்ன காயம் தான் அத்தை" சுரத்தே இல்லாமல் பதில் சொல்லபவளை அவரால் நம்ப முடியவில்லை ஏதோ தவறு நடந்து இருக்கிறது என்பதை அவரால் யூகிக்க முடிந்தது..

" இல்ல மா..நீ ஏதோ மறைக்கிற கம்பெனில நடந்ததை சொல்லு மா.." கனிவான குரலில் அவள் தலையை வருடிக் கேட்டதும், மடைத்திறந்த வெள்ளம் போல் அர்ஜுன் பற்றியும் தான் நிறுவனத்தில் அவன் நடந்து கொண்ட விதம் என அவரிடம் சொன்னாள்..

அவரோ பெரு மூச்சுடன் " இங்கு பாரு மீரா..நீ உன் உயிரே குடுத்து பண்ணி இருக்க புரியுதா? இதுவே கை அப்படியே மெசின்குள்ள போய் இருந்தால் ? என்னமா நடந்து இருக்கும்..கை இல்லாம இருந்திருப்ப! அவனுக்காக நீ எதுவுமே பண்ணாத மா! அதெல்லாம் சுத்த வேஸ்ட்..அர்ஜுன்க்கு நீ பண்ணது கோபத்தை குடுத்து இருக்கும் அதான் திட்டி இருக்கான்.."

" அத்தை அவரே ஏன் அப்படி இருக்கார் சராசரி பெண்களோட ஆசை தானே எனக்கும் இருக்கு..இந்த பணம் , சொத்து இது எதுலேயுமே எனக்கு நாட்டம் இல்லை..இயல்பா கணவர் கிட்ட எதிர்பார்க்கவும் முடியல..அவரோட கட்டுக்குள்ளேயும் அதிகாரதுக்காகவும் அவர் யூஸ் பண்றாரு.."

அவள் விழிகளில் கண்ணீர் துளிகள் மின்னின.. தொண்டை அடைத்தது..மீராவை ஆறுதலாக அணைத்து " அழாதமா , கைல காயம் வேற இருக்கு ஹாஸ்பிடல் போயிட்டு வரலாம் சரியா? அத்தை சொல்றேன் கேளு மீரா..அவனுக்காக எதுவுமே செய்யாத சரியா வா கிளம்பலாம்.." என தாயாய் அவளை அரவணைத்து, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்..


******

இரவு பத்து மணி நகர்ப்புறத்தின் பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் ஒன்றான தி க்ரிஸ்டல் கிரவுன் மிளிர்ந்து கொண்டிருந்தது.

உயர்தர வர்க்கத்தினருக்கே ஏற்றவாறு உணவும் தங்கும் வசதிகளுடன் பிரமாண்டமாக ஏக்கர் கணக்கு பரப்பில் அமைந்திருந்த அந்த ஹோட்டல், இரவின் மின்மினி பூச்சி ஒளி போல் ஜொலித்தது..

அங்குதான், மதிய நேர பணியை முடித்துவிட்டு வெளியே வந்தாள் ஒரு இளம் யுவதி.

அவளின் சிறிதளவு இருந்த கூந்தலை போனி டெயில் என உயர்த்திக் கட்டியவளாக, கருப்பு நிற டாப் மற்றும் வெள்ளை நிற லெகின் அணிந்திருந்தாள்.

தான் வேலை செய்யும் ஹோட்டலை கண்குளிர ரசித்தவாறு, தன் இருப்பிடம் நோக்கி நடந்தாள்..

அதே நேரத்தில், தி க்ரிஸ்டல் கிரவுன் ஹோட்டலை தாண்டி, ரோட்டோரத்தில் அமைந்திருந்த ஒரு சிறிய வீட்டு வாசலில், வயதான ஒரு பெண் காத்திருந்தாள்.

வீட்டின் கதவருகில், கொஞ்சம் நரைத்த கூந்தலும் கருகரு முடியுமாக இருந்த தேவகி, வேலை செய்யும் களைப்பா அல்லது வெயிலின் வெப்பமா ? என்று தெரியவில்லை முந்தானையை தூக்கி காற்று வீசியபடி யாருக்காகவோ எதிர்பார்த்துக்கொண்டு இருந்தார்.

அந்த காற்றில் சற்றே இளைத்திருந்தாலும், கேட் திறக்கும் சத்தம் கேட்டவுடனே அவர் முகம் சூரியனை கண்ட தாமரை போல் மலர்ந்தது..

கேட்டை மூடி , பூட்டு போட்டவாறு அவள் உள்ளே வந்தாள்.

" வழமையா பத்தரைக்கு தானே வேலை முடியும் துகிரா ? இன்னைக்கு அதிசயமா பத்து மணிக்கு வீட்டுக்கு வந்து இருக்க ? " துகிராவின் தாய் தேவகி கேட்டுக் கொண்டே வீட்டிற்குள் சென்றார்..

சிறிய ஹால் , சமயலறை , குளியலறை, ஒரு அறை மாத்திரம் அமைக்கப்பட்ட வீடு அவர்கள் இருவருக்கும் அது போதுமானதாக இருந்தது..

" எர்லியா வேலை முடிஞ்சிது ம்மா.." குளிக்க போவதற்கான உடையை எடுத்தவாறு துகிரா பதில் கூறினாள்..

" சரி துகி குளிச்சிட்டு வா சாப்பாடு சூடு பண்ணி வைக்கிறேன்.." என்றார்.. அவளும் சரியென குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்..

குளித்துவிட்டு முகத்தை ஆங்காங்கே தெளித்து இருந்த நீர் துளிகள் ஊர்ந்து வரும் முன் , பூந்துவாளையால் ஒற்றிக் கொண்டு இருந்தவளின் எண்ணங்கள் அவன் ஒருவனே!

அவன் இல்லையென்றால் அவளின் தாய்க்கும் அவளுக்கும் இப்படியான நிம்மதியான வாழ்க்கை தான் கிடைத்திருக்குமா? அவன் அன்று இருவரையும் காப்பாற்றவில்லை என்றால் உயிரற்ற சடலமாக மாறியிருப்பார்களே!

" அவங்களை பார்த்து பேசியே ஆகணும்..ஆனா " கட்டிலில் அமர்ந்து கொண்டாள்..

" உதவி செய்தவர் யாருன்னு தெரியாமல்? அவங்க எங்க இருக்காங்கன்னு யார்கிட்ட சொல்லி தேடச் சொல்றது?" முகமும் சோர்ந்து போனது..

" சரி எப்போதாவது அவங்களை சந்திக்க முடியாமல் தான் போகுமா ? பார்த்துக்கலாம்.." ஆழ்ந்த சிந்தனையில் இருந்தவள், ஹாலுக்கு வந்து உணவருந்த தொடங்கினாள்..

தாயுடன் தினசரி வேலையைப் பற்றி பேசிக் கொண்டிருந்தாலும் , மனதோ அந்த ஒருவனிடமே சுற்றிக் கொண்டிருந்தது..

அவளுக்கு உதவி செய்தவன் யார் என்று தெரியாத பட்சத்தில், அவள் மனதிலும் அவன் உயர்ந்த இடத்தை அல்லவா பிடித்திருக்கிறான்..

அவனை சந்திக்கும் போது அவள் உள்ளம் எந்த நிலையிலிருக்கும் ?

அவளுக்கே தெரியவில்லை!

******

ஃபார்ம் ஹவுஸ் தோட்டத்தில் பச்சை நிற புள் மைதானத்தில் சாய்வு நாற்காலியில் பின்னோக்கி சாய்ந்து , தலைக்கு பின் கை வைத்தபடி , நிலவு இல்லாத இருண்ட வானத்தை பார்த்துக்கொண்டு இருந்தான் அர்ஜுன் பைரவ்..

அவன் பார்வை அமைதியாகவும் சாந்தமாகவும் இருந்தது.. உண்மையில், அவன் மனதிற்குள் என்ன ஓடிக் கொண்டிருக்கின்றது என்று அவனுக்கே தெரியவில்லை..

அந்த அமைதியை கிழித்தது.. அவன் அலைபேசியின் சத்தம்..

இந்நேரத்தில் யார் என்று எடுத்துப் பார்த்தான்..அவனை அழைத்து இருந்தது சிந்தூரன்..

" சொல்லுடா ? "

" என்னத்த சொல்ல சொல்றண்ணா? ஸ்விம்மிங் அகாடமி கோச் ஆக..போக சொன்ன போனேன்..டூ இயர்ஸ் லேட்டர் ஹாப்பியா என்ஜாய் பண்ணேன் தெரியுமா ? ஆனா , நீ தான் என்னை அங்க ஒரு கோச்சா வொர்க் பண்ண விடல்ல..இப்போ ஏன் அனுப்பி இருக்க ? நீ பண்றது எல்லாமே உள்குத்தா தான்டா இருக்கும்ண்ணா.." அவனை பற்றி தெரிந்து வைத்தவன் சரியாக கணித்து அவனிடம் பேசியிருந்தான்..

" ம்..ம்..காரணமா தான் உன்னை அனுப்பி இருக்கேன்.." என்றான் " அப்புறம் தம்பி இரத்தம் இருக்குறல பூமா தேவிக்கு நீ தான் இரத்த பலி குடுக்கணும்..கேர் ஃபுல்லா இரு..உங்க அண்ணி என்ன பண்றா?"

" பாவி பயலே! நீயெல்லாம் அண்ணனாடா என்னை கொலை பண்ணி பினமாக்க ப்ளான் பண்ற பார்த்தியா? என் மேல பாசமே இல்ல பாயாசம் தான் வச்சிருக்க! விஷம் விஷம் உடம்பு பூரா பரவி இருக்கு..அதான் அண்ணியையும் தனியா விட்டு ஃபார்ம் ஹவுஸ்ல தங்கி இருக்க .." பற்களை கடித்துக் கொண்டே சீறினான் உடன் பிறந்தவன்..

அர்ஜுன் அதரங்கள் அரசி பற்கள் தெரியும் வகையில் சிரித்தான்..நிலவின் ஒளி கூட அவன் சிரிப்பில் தோற்று விடும் போலும்,

சிறு வயதில் அர்ஜுனின் விளையாட்டு பொருட்களை சிந்தூரன் கேட்டால் அவன் கொடுக்க மாட்டான்..கேட்ட பொருளை கொடுக்கவில்லை என்றால் சிந்தூரன் உடைத்து விடுவான்..

பின் இருவரும் சண்டை பிடித்துக் கொள்வார்கள்.. இவர்களின் கூத்தை பார்த்து லிங்கமோ 'அடித்துக் கொள்ளட்டும்' என்று விட்டுவிடுவார்..

குழந்தைப் பருவத்தில் சண்டை போட்டவர்கள், இப்போது பெரியவராகி அமைதியாகி விட்டார்கள்.. ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாதையில் சென்று, வாழ்க்
கையை வாழ்ந்தனர்..

ஆனால், பல ஆண்டுகளுக்குப் பிறகு... அர்ஜுனிடம், சிந்தூரன் சீற்றத்துடன் படபடவென்று பேசிக்கொண்டு இருந்தான்..
 

IsaiKavi

Moderator
உயிர் - 7





" அர்ஜுன் லைன்ல இருக்கியா ? " சிந்தூரன் கேட்க..காதில் இருந்து ஃபோனை எடுத்துப் பார்க்கும் போது கையில் கட்டுடன் வலது கரத்தால் உணவை உண்ண முடியாமல் கரத்தில் காயம் இருக்க..உணவை உண்ண முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தாள் மீரா..

இதனை பார்த்துக் கொண்டு இருந்த சிந்தூரனுக்கு அர்ஜுனின் மீது கோபம் மூண்டது.." அர்ஜுன் லைன்ல தான் இருக்கேன்னு தெரியும்..அண்ணியைக் கஷ்டப்படுத்துறதுக்காகவா நீ மேரேஜ் பண்ணிகிட்டியா? அவங்க பாவம் அம்மா எங்க போனாங்கன்னு தெரியல..ரைட் ஹேண்ட்ல காயத்துக்கு கட்டுப் போட்டிரேகாங்க..தூங்கி வழிஞ்சிகிட்டு சாப்பாட்டை நிம்மதியா சாப்பிட முடியாம ஸ்பூனால அழைஞ்சிட்டு இருக்காங்க.." என்றான்..

" நீ உன் அண்ணிக்காக இரக்கப்படுறதை விட்டுவிட்டு உன் வேலை எதுவோ அத பாரு சிந்தூ! அவளே வேணும்னு கைல காயம் ஏற்படுத்திக்கிட்டதுக்கு என்னால எதுவும் பண்ண முடியாது..நீ ஃபோனை வை.." அடுத்து வார்த்தை அவன் கோபமாக பேசுவதற்குள் அழைப்பை துண்டித்தான் அர்ஜுன் பைரவ்..

" ஃபோன கட் பண்ணிட்டான்.. மேரேஜ் பேசுன அப்போவே ' எனக்கு மேரேஜ் பண்ண பிடிக்கல்ல ' ஒரு வார்த்தை அப்பா கிட்ட சொல்லி இருக்கலாமே ? எதுக்காக இவன் மேரேஜ்க்கு சம்மதிக்கணும்? ப்ச்..இத பேசி என்ன யூஸ்? அதான் மேரேஜ் முடிஞ்சி போச்சே ஆனா ஏன் அண்ணி கூட இருக்காம விலகி இருக்கான்.. அர்ஜுன் அடிடியுட் சரியில்ல ஏதோ ஒண்ணு இருக்கு முடிஞ்சா கண்டு பிடிப்போம்.." தனியாக அமர்ந்து பேசிக் கொண்டு இருக்கும் மகனின் தலையில் கொட்டு வைத்தார் லிங்கம்..

" அப்பா! " அவரை முறைக்க.." கம்பெனில பொறுப்பா வேலை பண்ண தெரியல ஊர் மேயத்தான் லாயிக்கு!" என்று அவர் திட்ட , கோபமடைந்த அவன் " அப்பா! நான் எங்க ஊர் மேயுறேன் நீங்க பார்த்தீங்களா? ஒரு ஸ்பையை வச்சி என்னைப் பத்தி தேட இவர் தான் லாயிக்கில்ல.." சத்தமாகவே அவர் காது பட அவன் சொல்ல.." டேய் உன்ன.." வெளியே சென்ற லிங்கம் மீண்டும் உள்ளே வந்தார்..

" ஏங்க..அவன் சின்ன பையன் விளையாட்டுக்கு சொல்லிட்டு போறான் நீங்க வேற " கோதை அவரை அடக்கினார்.." இருபத்தி ஐந்து வயசாகுது பொறுப்பில்லாம சுத்துறான் கோதை.." என்றார்..

" அர்ஜுன் இருகான்ங்க அவன் மாத்திருவான்..வெளியே கிளம்பிட்டீங்க போல வந்து சாப்பிட்டு போங்க வாங்க.." அவரை அழைத்துக் கொண்டு சென்று இருக்கையில் அமர வைத்து , உணவை பரிமாறினார்..

அறை குறையாக உணவை உண்ட மீரா அறைக்குள் சென்று முடங்கிக் கொண்டாள்..

மூன்று நாட்கள் கடந்தது…

மாலை நேரம்..அடிவானில் சூரியன் அஸ்தமிக்க தயாராக இருந்தான்.. மெதுவாக மேகக் கூட்டத்திற்குள் மறைந்து கொண்டிருந்தான். செம்மஞ்சளும் இளஞ்சிவப்பும் கலந்த நீலவானம் ஒரு ஓவியத்துக்கு சற்றும் குறையாமல் அழகாக தெரிந்தது.

மலை உச்சியில், சிலுசிலுவெனக் காற்று வீசியது. தென்றலின் குளிர்ச்சி, புடவையைத் தாண்டி மேனியை வருடியபோது, தன்னிச்சையாகவே ஒரு குளிர்விழி பாய்ந்தது.

கரங்களை சூடு பறக்க தேய்த்து, கன்னத்தில் கை வைத்தபடி சூரியன் மறைவதை பார்த்துக்கொண்டு இருந்தாள் இரா.

அவளின் நீளமான சில்கி கூந்தல், அவளைப்போலவே சோகமாக முதுகோடு படர்ந்து, காற்றில் மெதுவாக அசைந்துகொண்டு இருந்தது. அந்த அழகிய பிம்பம், சோக ஓவியமாகவே காட்சியளித்தது.

இன்றோடு அவளின் தந்தை ஆறுமுகம் இறந்து மூன்று நாட்கள் ஆகிறது.

மூன்று வயதில் இருந்து தன்னுடன் இருந்த தந்தை, திடீரென ஸ்ட்ரோக் காரணமாக உயிரிழந்ததாக மருத்துவமனை அறிக்கை தெரிவித்தது.

தாய் அரவணைப்பை உணராத வயதில், தந்தையின் பாசத்தோடு வளர்ந்தவளுக்கு, அவரின் இழப்பு மனதுக்குள் ஓர் வெற்றிடத்தை ஏற்படுத்தியது..

தந்தையின் நினைவுகளை சுமந்துக் கொண்டு அவரை நினைவுபடுத்தும் எதையோ எண்ணியவள் கண்கள் தாங்க முடியாமல் கண்ணீர் சிந்த தொடங்கியது..

கால் முட்டியில் முகம் புதைத்து, தலை சாய்த்து அமர்ந்தவள், ஒலி இல்லாமல் சத்தமின்றி அழுதாள்..

மெளனமாய் கண்ணீர் வடித்தாள். அவளால் வாய் திறந்து சத்தமாக அழ முடியவில்லை…

சூரியன் தன் வீட்டை நோக்கிச் செல்ல, சில நொடிகள் மட்டுமே இருந்தன.

அப்போது தான் அவள் காதில் ஒரு மழலைக் குரல் விழுந்தது.

ஏழு வயது சிறுமியாக இருக்கும் மேரி, "அக்கா, உங்களை கூட்டிட்டு வரச் சொல்லி அப்பா சொன்னாரு," என்றாள்.

இரா, உடனே கண்ணீரைத் துடைத்துக்கொண்டு எழுந்தாள்.

'ஜான் ஏன் அழைச்சிட்டு வரச் சொல்லி, மேரியைக் அனுப்பி இருக்கார்?'

யோசனையின் நடுவே, கருங்கல் படிக்கட்டில் மழை காலத்தில் பாசி படிவதால் மெதுவாக கால் வைத்து இறங்கி சென்றாள் இரா.

அங்கு, அவள் எதிர்பாராத ஒருவன், அவளை எதிர்நோக்கி காத்திருந்தான் என்பதை அறியாதவளாக…

*****

சிந்தூரன் பயிற்சியாளர்களுக்கு பயிற்சி வழங்கிக் கொண்டிருந்தான். இங்கு ஒருவள் அவன் சொல்வதை கவனிக்காமல், அவனை மட்டும் பார்த்து கொண்டே இருந்து விட்டால் போதும்..'இந்த நீச்சல் பயிற்சி பழகி நான் எதை கண்டேன் 'என்பது போல, நீரிற்குள் கால்களை வைத்து ஆட்டிக் கொண்டு, சிந்தூரனை இமை சிமிட்டாது பார்த்துக் கொண்டு இருப்பவளின் பார்வை...

அவன் அறியாமல் தான் இருப்பானா?

அவளை பார்க்காமலே " அதிதி " அவ்விடமே அவன் குரல் அதிர செய்ய , நெஞ்சில் கை வைத்து, உள்ளம் பதற அவன் பக்கம் நோக்கினாள்..

" உங்க கவனம் வேற எங்கையோ இருக்கு.. பிராக்டீஸ்ல ஃபோகஸ் பண்ணுங்க.." என்றான்..

" வாய்ஸ்ல இவ்ளோ கோபம் ஷப்பா! இவரை கரெக்ட் பண்றது உனக்குத்தான் கஷ்டம் டி அதி.." முனுமுனுப்பாக சொல்ல , அவள் சொன்னதை கேட்ட ஷாம் " கரெக்ட் பண்ணலாம் பர்ஸ்ட் பிராக்டீஸ்ல ஃபோகஸ் பண்ணு அதிதி.. அப்புறம் உங்க அண்ணா கைலா சிக்கன் சிக்ஸிடி பை என்னால வாங்க முடியாது மா! " பயந்தது போலவே சொன்னான்..

ஷாமின் பொறுப்பில் தான் அதிதியை பாதுகாப்பில் விட்டுவிட்டு தன் தொழிலை பார்ப்பதற்காக சாகித்யன் வெளியூர் செல்வது வழக்கம்..

அதிதிக்கு தவறுதலாக கீறலோ இல்லை , அவளுக்கு யாராலும் தீங்குகள் ஏற்பட்டால் அதற்கு பழி ஆடு ஷாம் என்பதால் அவனுக்கு அவ்வளவு பயம் உண்டு..

அவளும் சரியென பயிற்சியில் கவனத்தை செலுத்தத் தொடங்கினாள். ஆனாலும், அவன் பக்கம் சாயும் மனதை இழுத்து பிடிக்க முடியுமா?

உண்மையில், அவன் பக்கம் மனம் சாயாது என்று பேசினாள். ஆனால், இன்று அவனைப் பார்ப்பதும் ரசிப்பதுமாகவே இருந்தாள். பத்தொன்பது வயது அல்லவா? அந்த வயதிற்குரிய உணர்ச்சிகள், ஹார்மோன்கள் தங்கள் வேலையை கண்டிக்க ஆரம்பித்துவிடும்!

அவன் காதலில் விழாமல் இருப்பான். ஆனால், இவளுக்குள் மாற்றம் நிகழலாம்…

இதே நேரத்தில் சுவாசத்தை கட்டுப்படுத்தி நீச்சல் செய்வது எப்படி என்று சிந்தூரன் பயிற்று விட்டு , பயிற்சியாளர்களிடம் " கேர்ள்ஸ் பிரித்திங் டெக்னிக்ல முதலாவது படிமுறை தான் இன்ஹேல் எக்ஸ்ஹேல் இன் வாட்டர் இத தான் உங்களுக்கு செஞ்சி காண்பிச்சேன்..சோ நீங்களும் பண்ணுங்க கர்ள்ஸ் " கை தட்டி அவர்களை செய்ய சொல்லி கூறினான்..

ஆழம் குறைவான பகுதியிலேயே அவர்களுக்கு நீரில் சுவாசம் விடுவதும் எடுத்தலும் பயிற்சி தொடங்கியது.

நீரில் முகத்தை மூழ்க வைத்து, மூக்கின் வழியாக மெதுவாக சுவாசத்தை வெளிவிட வேண்டும். பிறகு தலையை மேலே தூக்கி, வாயின் மூலம் ஆழமாக சுவாசம் செய்ய வேண்டும்.

இந்த பயிற்சியை அதிதி தவறுதலாக செய்தாள்.

நீரில் அதிக நேரம் முகத்தை மூழ்க வைத்து, மூக்கின் வழியாக சுவாசத்தை வெளிவிடாமல், தவறுதலாக நீரை இழுத்துவிட்டாள்.

அவள் மூக்கின் வழியாக சென்ற நீர் தொண்டை நோக்கிச் செல்ல, உடனே நீரில் இருந்து வெளியே வந்து, வேகமாக மூச்சை இழுத்து,

"லொக்… லொக்…"

என்று தொடர்ந்து இருமத் தொடங்கினாள்.

மற்றவர்கள் சரியாக செய்திருந்தாலும், இவள் மட்டும் சொதப்பலாக செய்திருந்தாள்.

அவளின் இருமல் சத்ததில் திரும்பிப் பார்த்து , அவள் இருக்கும் நிலையைக் கண்டு விரைந்து அவள் அருகில் சென்று " கைய குடுங்க அதிதி " என்றதும், சிவந்த விழிகளுடன் அவனை ஏறிட்டுப் பார்த்தாள். பட்டென அவன் கரத்தில் தன் கரத்தினை பற்றி ஏறிக்கொண்டாள்.

அவனின் கரத்தின் ஸ்பரிசம்…

ஓர் மின்சாரம் பாய்ந்த உணர்வு!

அவளை இருக்கையில் அமர வைத்து, மற்ற பயிற்சியாளர்களை நோக்கி, " மத்தவங்க எல்லாரும் பிராக்டீஸ் பண்ணுங்க கேர் புல்லா ஓகே.."

" ஓகே சார் " அவர்கள் கூறியதும், அவள் பக்கம் அவன் பார்வை சென்றது..

" அதிதி நல்லா மூச்சை உள்ளெடுத்து வெளிய விடுங்க" சிந்தூரன் சொல்லவும், கலங்கி சிவந்த விழிகளுடன் அவனைப் பார்த்து கொண்டு செய்தாள்..

" பைவ் மினிட்ஸ் செய்ங்க இட் வில் பீ ஃபைன்" என்றவன் இவளின் மீது ஒரு பார்வையும் மற்றவர்கள் மீது ஒரு பார்வையையும் பதித்தான்..

அவர்களுக்கு இடைவெளி கொடுத்த நேரத்தில் ஷாம் இவளைத் தேடி வர சரியாக இருந்தது..

தலையில் கை வைத்து குனிந்து அமர்ந்திருந்தவளை நோக்கி ஓடி வந்தான் ஷாம்..

" அதிதி என்ன ஆச்சு..ஆர் யூ ஓகே " அவனுக்கு பதற்றம் வேறு " ஆர் யூ ஓகே " மீண்டும் ஒரு தரம் அவன் கேட்குவும் தலை உயர்த்தி " யா ஐ ஆம் ஓகே ஷாம் " என்றாள்..

அவள் குரலில் இழையோடிய வித்தியாசம் உணர்ந்து " நீ நார்மலா இல்லை அதிதி.. கோச் கிட்ட பர்மிஷன் கேட்டு நாம வீட்டுக்கு கிளம்பலாம்.." என்க..

" இல்ல பிராக்டீஸ் முடிச்சிட்டு" எனும் போதே அவ்விடத்திற்கு வந்த சிந்தூரன் " அவங்கள கூட்டீட்டு போகங்க ஷாம்..ஷீ இஸ் நாட் ஓகே ஹாஸ்பிடல் போய் ஒரு தடவை பாக்குறது நல்லது " என்றவன் அவன் தோளில் தட்டி விட்டு அதிதியை பார்த்து " டேக் கேர் அதிதி " என்று விட்டு சென்றான்..

அவன் அக்கறை தன்மையான பேச்சில் அவள் உள்ளமோ குளிர்ந்து போனது..அதன் பின் அவளை அழைத்துக் கொண்டு மருத்துவமனை சென்று வீட்டுக்கு புறப்பட்டனர்..

சோர்வுடன்
வீட்டிற்கு நுழைந்த மகளைக் கண்டதும் , நளினி பதறிப் போனார்..

கலகலப்பாக சுற்றும் மகள் சோர்வாக காண்பது இதுவே முதல் முறை!
 

IsaiKavi

Moderator
உயிர் - 8




இரா வந்த போது அவள் கண்டது சாலையில் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சாம்பல் நிற BMW பிரிமியம் ஸ்போர்ட்ஸ் காரை தான்..

அவளை காரின் நிறம் கவர்ந்தாலும் ' யார் வந்திருப்பார்கள் ? எதற்காக ஜான் அழைக்க வேண்டும்..' என்கிற கேள்விகள் அவள் மனதை ஆட்டிப் படைத்தன..

தன் வீட்டில் காலடி வைத்த உடனே எதிரில் இருந்தவனை யார் என்று கவனித்தாள்..

சாம்பல் நிற கோட் சூட் அணிந்திருந்தான்..அதே நிற ஃபேன்ட் அழகாக சீர் செய்யப்பட்ட கருமையான கேசம் , க்ளீன் சேவ் செய்த தாடி மீசை , காலுக்கு மேல் கால் போட்டுகொண்டு பணக்கார ஒருவனின் தோரணையில் அமர்ந்திருந்தான்..

வாசலில் கதவோடு ஒட்டி புருவத்தை சுருக்கி அவனை பார்த்தபடி நின்றிருந்தவளை குறுங்கண்களோடு நோக்கினான்..

இரா வந்ததை உறுதிபடுத்திக் கொண்ட ஜான்..

" சார் , இவங்க தான் ஆறுமுகம் ஐயாவோட ,பொண்ணு இரா.." என்றான்..

அவன் வலது கையை தூக்கி நிறுத " நீங்க சொல்ல , அவசியமே இல்லை ஜான்..இவங்க வந்து நின்றதும் ஆறுமுகம் சாரோட பொண்ணுன்னு பார்த்தவுடனே எனக்கு தெரிஞ்சிது நீங்க எந்த விளக்கமும் குடுக்கணும்னு அவசியம் இல்லை.." அவனின் பேச்சில் ஜானின் முகம் கருத்துப் போனது..

'அவளை பற்றி கூறுவதற்கு எந்த அவசியமும் இல்லை' என்று மறைமுகமாக தெரிவித்துவிட்டானே!

இவற்றையெல்லாம் இரா பார்த்துக் கொண்டு நின்றாளே தவிர ' நீங்கள் யார் ?' என்ற கேள்வியை கூட அவள் அவனிடம் கேட்கவில்லை..

இருக்கையில் இருந்து எழுந்தவன் " வெளியே போய் பேசலாமா? " இராவிடம் கேட்டான்..

அவன் பார்வையை தவிர்த்து, " வாங்க சார்.." என்று அவனுக்கு வழிவிட்டு வெளியே நின்றாள்..

அவன் வெளியே வந்ததும், அவனை அழைக்காமல் அவள் முன்னால் நடந்தவளை நோக்கி ,

" ஒரு நிமிஷம்" என்றான்..

தலையை திருப்பிப் பார்த்தவள்.."என்ன சார் ? "

" நான் இங்க வர முன்னாடி நீங்க எங்க இருந்தீங்க? " எதற்காக கேட்கிறான் என்றே அவளுக்குத் தோன்றியது..

" இந்த படிக்கட்டு வழியாகப் போனா மலைக்கு போய் நீர் வீழ்ச்சியை பார்க்கலாம்.. நான் அங்க தான் இவ்ளோ நேரமா இருந்தேன்..மேரி பாப்பா ஜான் வர சொல்லி அனுப்பி இருந்தார் அதான் வந்துட்டேன்..நீங்க யாருன்னு எனக்குத் தெரியாது சார் ?" என்றாள்..

" ஓகே , நீங்க சொல்றது புரியுது கொஞ்சம் தள்ளி போய் பேசலாமா? " என்று கேட்டதும்..

இரா சம்மதித்து வீட்டை விட்டு சற்று தள்ளி நகர்ந்தாள்..மேலே இருந்து கீழே பார்த்தால் , பரந்த தேயிலைத் தோட்டங்கள் பசுமையாக கொண்டு இருந்தன..

" சொல்லுங்க சார்? "

கோட்டில் இருந்த பட்டன்களை மெதுவாக கழற்றி , " உங்க அப்பா ஆறுமுகம், தேயிலை ஃபேக்டரில இதுக்கு முன்னாடி வேலை செஞ்சிட்டு இருந்தாரு.. எனக்கு தெரிஞ்சி தேயிலை ஃபேக்டரி அவ்ளோ சம்பளம் எல்லாம் குடுக்க மாட்டாங்க சோ..அந்த சாலரியால அவரால எப்படி திருப்திபடுத்த முடியும் ? அப்புறம் தான் இந்த ஊர்ல கார் பார்ட்ஸ் கம்பெனி ஸ்டார்ட் பண்ணி இருந்தேன்.. அங்க தான் உங்க அப்பா வேலை செஞ்சாரு..நல்ல உழைப்பாளி அது மட்டும் இல்ல , நம்பகத்தன்மையான ஒருத்தர்..பட் அவருக்கு ஸ்டோர்க் வந்தது உண்மை..ஹாஸ்பிடல் ரிப்போர்ட் அதையே சொன்னுச்சு, தென் நீங்க அவரோட ஓரே பொண்ணு..அவர் உங்களை தனியா விட்டுட்டு போய் இருக்கலாம்..பட் என்னால அது செய்ய முடியாது..என் கம்பெனில வொர்க் பண்றவங்கள எப்பவுமே கை விட்டது இல்ல சோ.." அவளை திரும்பிப் பார்த்து" உங்களுக்கு அபோயிமண்ட் போட்டுத் தரேன்.. என் கம்பெனில வொர்க் பண்றீங்களா? இல்ல நீங்களும் இங்கேயே இருந்து தேயிலை கொழுந்து பறிச்சுட்டு இந்த குளிர்ல கஷ்டப்பட போறீங்களா இ..உங்க நேம் என்ன ? "

" இரா.."

" ஹாங் இரா.." என்று தலையசைத்தான்..

அவன் சொல்வது சரிதானே? இந்த குளிரில் தேயிலை கொழுந்து பறித்து வாழ வேண்டுமா? அவனே வேலை வழங்க முன் வந்திருக்கிறான்.. நகரத்தில் வேலை செய்து வாழலாமே..

ஆனால், தந்தையோடு வாழ்ந்த வீட்டை விட்டுப் போக முடியுமா?

பனியில் கொழுந்து பறித்து கைகளில் வெடிப்பு , உதட்டில் வெடிப்பு, எல்லாம் வாங்க வேண்டுமா ?

ஆறுமுகம் வேலைக்கு சென்றால் , இவள் தேயிலை தொழிற்சாலைக்கு புறப்பட்டு விடுவாள்.. அவர்களின் ஊரில் படிப்பதற்கு வசதி குறைவாக இருந்தாலும் பன்னிரெண்டு வகுப்பு வரைக்கும் படித்திருக்கிறாளே தவிர மேலே படிப்பதற்கான பணமோ ? வெளியூர் செல்லும் வசதியோ அவளிடம் இல்லை , அதற்கான வருமானம் ஆறுமுகத்திடம் இருக்கவில்லை..

தன் காலடிக்கு வந்து நிற்கும் வேலையை எதற்காக வேண்டாம் என்று சொல்ல வேண்டும்?

தன்னைக் கவனித்துக்கொள்ள, பாதுகாப்பாக வாழ எவரும் இல்லை.. வெளியே செல்லும் பெண்களுக்கு உள்ள ஆபத்துகள்? தந்தை உயிருடன் இருக்கும் வரை அவள் பத்திரமாக இருந்தாள்..ஆனால் இனி?

எல்லாம் தந்தை இருக்கும் வரைக்கும் தான் என்று எண்ணி தன்னையும் நினைத்து நிதானமாக யோசிக்கவே சிலநேரம் அவளுக்கு கொடுத்திருந்தான்..

அணிந்திருந்த அடர் ஊதா சில்க் சேலையை இன்னும் இழுத்துப் போர்த்தி கொண்டாள்..இரவு நேரம் என்பதால் பனி பொழிந்து கொண்டிருந்தது..

அவளை விட்டு சற்று தள்ளி நின்றிருந்தவனின் முகமோ, இளம் சிவப்பு நிறத்தில் மாறி இருப்பதை மெதுவாகக் காற்றில் கலந்த மெல்லிய மின் விளக்கு வெளிச்சத்தில் அவன் முகம் தெரிந்தது..




தொண்டையை செருகிக் கொண்டு, " கேன் ஐ ஸ்மோக் ? ரொம்ப கூலா இருக்கு அதான்.. " அவளிடம் அனுமதி வேண்டி நின்றவனை கண்டவளுக்கு ஆச்சிரியமாக இருந்தது..

" உங்க விருப்பம் சார்.." என்றாள்.. பாக்கெட்டில் ஏற்கனவே, வைத்திருந்த சிக்ரெட் எடுத்து, லைட்டரை பற்ற வைத்து அதைப் புகைத்தான்..

புகைப்பது அவனுக்கு புதிது என்பதால் , தொண்டையெல்லாம் ஏதோ அரிப்பது போல் புகை ஒவ்வாத தன்மையை கொடுத்தது..

சிக்ரெட் தூக்கி வீசிவிட்டு " தண்ணி கிடைக்குமா ? லொக் ..லொக் " இருமிக் கொண்டு அவன் கேட்கவும்,அவள் விரைந்து வீட்டிற்குள் சென்றாள்..

அவனுக்கு குடிப்பதற்காக சொம்பில் நீரை நிரப்பி அவனிடம் குடுத்தாள்..வாங்கி குடித்த பிறகே, குளிர்ந்த நீரால் தொண்டை அரிப்பு , குறைந்தது போல உணர்ந்தான்..

" தேங்க்ஸ், நீங்க என்ன முடிவு எடுத்து இருக்கீங்க? " சொம்பை அவளிடம் நீட்டியபடி வினவினான்..

" எனக்கு ஓகே தான் ஆனா , அப்பாவோட வீடு இது.. இதை விட்டுட்டு வர்ற அளவுக்கு என்ன மனசு இல்லை சார்.." பெரு மூச்சுடன் வீட்டைப் பார்த்தவாறு சொன்னாள்..

" அது தான் ப்ராப்ளமா ? நீங்க அதை பத்தி யோசிக்க கூட வேண்டாம்..உங்க அப்பாவோட வீடு பார்த்துக்க ஆள் போட்டுரலாம்.. நீங்க எப்போ கிளம்பி கம்பெனிக்கு வர போறீங்க? நான் ஏன் அவசரமா கேட்குறேன்னா இன்னைக்கு நைட் ஊருக்கு கிளம்பிடுவேன் சோ நான் இங்க வந்தது என்னோட இன்னொரு பிரான்ச் இங்க இருக்குறதால தான் சோ, என்கூடவே நீங்க வந்தால் ஈஸியா இருக்க போறது உங்களுக்கு தான்.. " கரடு முரடான, கோபம் இல்லாத குரலில் தன்மையாக அவளுடன் கூறிக் கொண்டு இருந்தான்..

அவன் பேச்சு , மரியாதை அனைத்தும் இராவை கவர்ந்திழுத்தது என்றே கூறலாம்..அதனை உடனே வெளிப்படுத்தும் உணர்வுகள் உள்ள பெண்ணும் இல்லை.. நிதானமாக, பேசும் மெல்லியவள்..

" நீங்க சொல்றது சரிதான் ஜான் கிட்ட பேசி , சொல்லிட்டு வரேன் சார்.." என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்றாள்...

ஆறுமுகத்தின் மரணத்தின் பிறகு அவளுக்கு பாதுகாப்பாக இருந்தது என்னவோ ஜான் தான், அவனிடம் சொல்லாமல் அவளால் எப்படி அவனுடன் செல்ல முடியும்..

ஜானிடம் வந்து " ஜான் அப்பா இருக்கும் போது சரி அவர் என்கூட இல்லாமல் போகும் போதும் சரி நீங்க தான் எனக்கு பாதுகாப்பு இருந்தீங்க முக்கியமா உங்க வொய்ப் மர்லி ரெண்டு பேருக்கும் நன்றிகள் சொன்னாலும் பத்தாது.. எவ்வளவு நாளைக்கு தான் என்னால இங்கேயே இருக்க முடியும்..அப்பா வேலை செஞ்ச கம்பெனி எம்டி இங்க வந்து என்கூட பேசி வேலை தரேன்னு சொன்னது அப்புறம் இந்த சான்ஸ் விட்டால் எனக்கு எதுவும் இல்லை..என் லைஃப் முக்கியம் அதை தான் அப்பாவும் விரும்புவார்.. நான் கிளம்புறேன் ஜான் வீடு பார்த்துக்க சாரே ஆள் போடுறேன்னு சொன்னாரு நன்றிகள் கோடி ஜான்.." மெலிதாக புன்னகைத்து சொன்னாள்..

" உன்னை ஒரு தோழியா பார்த்துகிட்டேன் அது போதும் உன் எதிர்காலத்தை பாரு இரா பத்திரம்.."

" ம்ம்..மேரி நல்லா படிக்க வைங்க ஏதாவது உதவி தேவை பட்டால் எனக்கு கால் பண்ணுங்க ,ஜான்.. மர்லி கிட்ட சொல்லிடுங்க.. நான் வரேன் மேரி பாப்பூ.." என்றவள் அவளை அணைத்து முத்தமிட்டு, விட்டு பிரிய மனமில்லாமல் உடை பையை எடுத்துக் கொண்டு, கண்ணீருடன் அவர்களுக்கு விடை‌பெற்று , அவனோடு சென்றாள்..

காரில் முன் சீட்டில் அவன் அமர்ந்ததும் , பின் சீட்டில் இரா அமர்ந்துக் கொண்டாள்..

அவன் அலைபேசி அலறியது..அவன் தாய் அழைத்து இருந்தார்.. அழைப்பை ஏற்று காதில் வைத்தான்..

" சாகித்யா பாப்பாக்கு ஃபீவர் டா! உன்கிட்ட எத்தனை வாட்டி சொல்லி இருப்பேன் , ஸ்விம்மிங் அகாடமிக்கு அவளை அனுப்பாதன்னு என் பேச்ச மதிச்சு கேட்குறது இல்ல..இப்போ பாரு அவளுக்கு ஃபீவர் உடம்பு அனலா கொதிக்குது.. பிராக்டீஸ் அப்ப தண்ணீய குடிச்சிடாளாம்..ஷாம் தான் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் மாத்திரை எடுத்து கொடுத்து , பாப்பாவ வீட்டுல விட்டுட்டு போறான்..பாப்பா கேட்குறது எல்லாம் பண்ற தானே ? இனி பார்க்கலாம் என்னை மீறி நீ என்ன செய்ய முடியும்னு பாக்குறேன்.." படபடவென சாகித்யனிடம் பொறிந்து தள்ளிவிட்டு, அலைபேசியை துண்டித்தார் நளினி..

அலைபேசியை வெறித்து பார்த்து, விட்டு ஓட்டுனரிடம் வண்டியை எடுக்குமாறு பணித்தான்..

அலைபேசியின் ஊடே நளினி அவன் பெயர் சாகித்யன் என்ற அழைத்தது இரா காதிற்கு எட்டி இருந்தது..

அவள் பிறந்து வளர்ந்த ஊரை, கார் ஜன்னலில் தலை சாய்ந்தவாறு பார்த்துக் கொண்டிருந்தாள்.. அவளது விழிகளில் அந்த வலி தென்பட்டது...
 
Top