எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அசுரனோ! அதிகனோ! - கதைத்திரி

Status
Not open for further replies.

NNO7

Moderator
ஹாய் டியர்ஸ். வேறு வேலையில் மாட்டிக்கொண்டு, அடுத்தக் கதை எழுத ரொம்ப காலதாமதம் ஆகிவிட்டது. இதோ மீண்டும் ஒரு ஆண்ட்டி ஹீரோ கதையுடன் வந்துவிட்டேன்.

இந்தக்கதையில் வரும் கதாப்பாத்திரங்கள், கதைக்கரு, வசனம் அனைத்தும் என் சொந்த கற்பனையே! யாருடையை மனதையும் நோகடிக்க எழுதப்படவில்லை
 

NNO7

Moderator
அசுரனோ! அதிகனோ!

அத்தியாயம் – 1

“ச்சீ... நீயும் ஒரு பெண்ணா? அபி உன்னோட சொந்த தங்கச்சி. கொஞ்சமும் மனிதாபிமானம் இல்லாமல் நடந்துக்குற” என்று சொல்லிக்கொண்டே தன் கையின் மணிக்கட்டைப் பற்றி இருந்த வனரோஜாவின் கைகளை வெடுக்கென்று எடுத்துவிட்ட அஜய், மணமேடையில் இருந்து எழுந்து, தன் கழுத்தில் கிடந்த மாலையை விசிறி எறிந்துவிட்டு, தன் முன்னே நின்று இருந்த அபியை அணைத்துக்கொண்டவன், “நீ கவலைப் படாத அபி உனக்கு ஒன்னும் ஆகாது” என்று கூற, அவனை அணைத்திருந்த அபியின் இதழோ, வனரோஜாவைப் பார்த்து ஏளனமாக விரிந்து கொண்டது.

மணமேடையில் சர்வ அலங்காரத்துடன், கண்களில் இருந்து வழியும் கண்ணீரைக் கூடத் துடைக்காமல், தன் ஆருயுர்க் காதலனை வெறித்தபடி நின்றிருந்தாள் வனரோஜா. அவளால் தன் கண்முன்னால், நடப்பவற்றை நம்ப முடியவில்லை.

அஜயின் நெஞ்சில் சாய்ந்திருந்த அபியோ, “என்னைக் கைவிட மாட்டேன்னு சொல்லிட்டு, இப்ப என் அக்கா கழுத்துல தாலி கட்ட தயாராகிட்டீங்க. எப்படி அஜய் உங்களால் இப்படி ஒரு காரியத்த செய்ய முடிஞ்சது” என்று கேட்டுக் கதறினாள்.

கூடி இருந்த உறவினர்கள் அனைவரும், “இங்க என்ன நடக்குது” என்று தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொள்ள, இப்போது வனரோஜாவின் பார்வை நேராக தன் தந்தையை நோக்கிச் சென்றது.

அவரது முகத்திலும் அதிர்ச்சி தான். இருந்தும் நடப்பதை தடுத்து நிறுத்தாமல் தன் கையைப் பிசைந்து கொண்டு நின்று இருந்தார்.

அப்போது உறவினர்கள் மத்தியில் இருந்து ஓடி வந்த வனரோசாவின் தாயோ, அஜயிடம் சென்று, “உங்கக் காலில் வேண்டுமானாலும் விழறேன் தம்பி, தயவு செஞ்சி என்னோட பொண்ணு அபியைக் கல்யாணம் பண்ணிக்கோங்க” என்று கூறி அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி அளித்தார்.

இதை எல்லாம் பார்த்து அதிர்ச்சியில் இருந்து விடுபட்ட வனரோஜாவோ, மணமேடையில் இருந்து எழுந்து, “அம்மா, நீங்க என்ன பேசுறீங்க?” என்று அதிர்ச்சியான குரலில் கேட்க, “நீ சும்மா இருடி” என்று ஒரு அதட்டல் மட்டும் போட்டவர், திரும்பவும் அஜயை நோக்கித் தன் பார்வையைத் திருப்பினார்.

“தம்பி என் பொண்ணுக்கு மூளையில் கட்டி இருக்குன்னு டாக்டர் சொல்லிட்டாங்க தம்பி. உங்களைக் கல்யாணம் பண்றது தான் அவளோட விருப்பம். அவள் உயிர் எப்பவேணாலும் போகலாம்..” என்று அவர் சொல்லும் போதே, “ஆண்ட்டி, அப்படி எல்லாம் பேசாதீங்க, நம்ம அபிக்கு ஒன்னும் ஆகாது” என்று இடையில் பேசிய அஜய், அவன் கையில் இருந்த தாலியை அபியின் கழுத்தில் கட்டினான்.

வனரோஜா ஒரு நிலையிலையே இல்லை. தன் தந்தையிடம் சென்றவள், “இங்க என்ன தான் நடக்குது அப்பா. அஜய் எதுக்காக இப்படி பண்றாரு?” என்று கேட்டுக் கதற, அவரோ மிகவும் சாவகாசமான குரலில், “உன் தங்கச்சிக்கு உடம்பு சரியில்லம்மா. நீ எதுவும் குழப்பம் உண்டாக்கமா இரு” என்று சர்வசாதரணமாக கூறினார்.

“என்னப்பா பேசுறீங்க? நான் குழப்பம் உண்டாக்குறேனா! இன்னைக்கு நடக்க இருந்தது என்னோட கல்யாணம் அப்பா. அஜய் என்னைத் தான் காதலிக்குறாரு” என்று வனரோஜா சொல்லி முடிக்க, அஜய்யோ, அபியின் கழுத்தில் மூன்று முடிச்சியிட்டு நிமிரவும் சரியாக இருந்தது.

அதற்கு மேல் அங்கு நிற்க வனரோஜாவிற்கு மிகவும் அவமானமாக இருந்தது. மண்டபத்தை விட்டு வேகமாக வெளியேறி, தன் ஸ்கூட்டி பெப்பைக் கிளப்பிக்கொண்டு மின்னல் வேகத்தில் வெளியேறினாள், அந்த அழகு பதுமை.

சிறுவயதில் இருந்தே பெற்றோர்களால் புறக்கணிக்கப்பட்டு, தனக்கென புது அடையாளத்தை தேர்ந்தெடுத்து, புதிய பாதையை தானே அமைத்து அதில் பயணித்துக் கொண்டிருப்பவள் தான், நம் கதையின் நாயகி வனரோஜா. ஐந்தரை அடி உயரத்தில் கோதுமை நிறத்தில், மீன் போன்ற கண்கள் உடையவளின் கண்களில் இருந்து கண்ணீர் வலிந்து கொண்டே இருந்தது.

அஜயின் சட்டையைப் பிடித்து, நறுக்கென்று நான்கு வார்த்தைகள் கேட்டு விடத் துடித்த மனதினை கடிவாளமிட்டு கூட்டி வந்தாலும், அவள் மனதில் இருந்த ரணம் ஆறவே இல்லை.

‘இரண்டு வருடக்காதலை எப்படி மறந்தான்’ என்று வனரோஜாவின் மனதில் மாறிமாறி ஒரே கேள்வி தான் எழுந்து கொண்டே இருந்தது.

சிறுவயதில் இருந்தே வனரோஜா எதை வைத்திருந்தாலும், அதைத் தன்னுடையது ஆக்கியே தீருவாள் அபி. அபி எந்த ஒரு தவறை செய்தாலும், அது வனரோஜாவின் தலையில் வந்து தான் விழும்.

வனரோஜாவின் தந்தை ராம் மிகப்பெரிய செல்வந்தர். கட்டுமானத்தொழிலில் கொடி கட்டிப்பறப்பவர். அவருக்கும் அவரது மனைவி மதுவுக்கும் மிகவும் செல்லமான மகள் தான் அபி. அபி கேட்டு எதையும் மறுப்பதில்லை அவளது பெற்றோர். அது வனரோஜாவின் பொருட்களாக இருந்தாலும் சரி.

சிறுவயதில் இருந்து அனைத்தையும் தன் தங்கை அபிக்காக விட்டுக்கொடுத்தவள், இப்போது காதலனையும் தன்னை மீறி விட்டு தான் கொடுத்துவிட்டாள் வனரோஜா.

பன்னிரெண்டாம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்த வனரோஜவுக்கு, மெரிட்டில் மருத்துவம் படிக்க சீட் கிடைக்க, அனைத்தையும் மறந்து, விடுதியில் சென்று படித்தாள். அந்த ஐந்து வருடமும், அவள் வாழ்நாளில் பொற்காலம் என்றே கூறலாம். ஐந்து வருடம் எம்பிபிஎஸ் படிப்பில் கோல்ட் மெடல் வாங்கி, அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவாராகி, தனது மேல் படிப்பையும் தொடர்ந்து கொண்டிருந்தாள் இருபத்தி ஆறு வயதான வனரோஜா.

அப்போது அவளுக்கு அறிமுகம் ஆனவன் தான் அஜய். அவளைப் போலவே அவனும் பயிற்சி மருத்துவன். அஜய் தான் தன் காதலை முதன் முதலாக வனரோஜாவிடம் சொன்னவன். பெரியதாக அவனை மறுப்பதற்குக் காரணம் இல்லாததால், அவனது காதலுக்கு சம்மதமும் தெரிவித்தவள், தனக்காக அன்பு செய்ய ஒரு ஜீவன் வந்துவிட்டதாகவே கருதினாள். பாவம் அப்போது அவளுக்குத் தெரியவில்லை, இவன் தனக்கு அன்பைத் தரவரவில்லை மாறாக ஏற்கனவே அதிக துக்கத்தில் இருக்கும், தனக்கு மேலும் துக்கத்தைத் தரவே வந்துள்ளான் என்று.

*****

“அம்மா அபி எங்க இருக்கா?” என்று வீட்டிற்கு வந்த தன் அன்னை மதுவிடம் கேட்டாள் வனரோஜா. மனதில் ஆயிரத்திற்கும் மேலாக பாரம் இருந்தாலும், இன்று, தன் கேள்விகளுக்கு எல்லாம் விடை கிடைத்தே ஆகவேண்டும் என்ற முடிவில் இருந்தாள்.

“அவளுக்கு என்ன? அவள் எங்க போனாலும் ராணி மாதிரி இருப்பா” என்று சொன்னவர் அருகில் வந்த தன் கணவரையும் துணைக்கு அழைத்து, அப்படித்தானேங்க” என்றார்.

மிட்சர் சாப்பிடுவதற்கே, பிறந்தவர் போல் இருப்பவர் தான் ராம். அவரும் தன் மனைவியின் பேச்சிற்கு தன் தலையை ஆட்டிக்கொண்டார்.

“அபி மட்டும் தான் ராணி மாதிரி இருப்பாளா? நான் இருக்கமாட்டேனா?” என்று முதன்முதலாக தைரியம் வந்தவளாக தன் பேச்சை ஆரம்பித்தாள் வனரோஜா.

அதில் திணறிப்போன ராம், “நீயும் ராணி மாதிரி இருப்பம்மா. இதை நினைச்சு நீ கவலைப் படாத உனக்கானவன் கூடிய சீக்கிரம் வருவான். அபிக்கு வேற உடம்பு சரியில்ல” என்றார்.

அதற்கு அசட்டாக சிரிப்பை சிந்தியவள், தன் கையில் இருந்த கோப்பை தூக்கிக் காட்டி, “இது அபியோட ரிப்போர்ட் தான் அப்பா. அவளுக்கு பிரைன் டியூமர்லாம் ஒன்னும் இல்ல. அவளுக்கு வந்தது வெறும் சைனஸ் தலைவலி தான்” என்றுக் கூறியதும், “உனக்கு என்னத் தெரியும்?” என்று கத்தினார், அவளின் தாய் மது. ராமோ தன் இருகைகளையும் பிசைந்து கொண்டிருந்தார்.

“நானும் டாக்டர் தான் அம்மா. அதுவும் இல்லாம இந்த ரிப்போர்ட்டைப் பத்தி அஜய்க்கும் நல்லாவே தெரியும். அபி என்னோட தங்கச்சிங்குறதுனால, அதிகம் உரிமை எடுத்துப் பழகுறாருன்னு நினைச்சேன். ஆனா ரெண்டு பெரும் சேர்ந்து எனக்கு துரோகம் செய்வாங்கன்னு நானும் எதிர்பார்க்கல” என்று சொல்ல மதுவிற்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

ராமோ திணறியபடி, “நான் வேணா அஜய் மாப்பிள்ளைக் கிட்ட இதைப்பத்தி பேசுறேன்ம்மா” என்றார்.

“ஒன்னும் தேவை இல்லப்பா. நீங்களும், அம்மாவும் பேசுறதைப் பார்த்தா, இது அஜய்க்கு மட்டுமில்லாம உங்க ரெண்டு பேருக்குமே தெரியும்னு தான் நான் நினைக்குறேன். சொல்லுங்க அப்பா, நீங்க எல்லாரும் சேர்ந்து நாடகம் நடத்தி அதுல என்னை மட்டும் ஜோக்கர் ஆக்கிட்டீங்க தானே! என்னை நிஜமாவே நீங்க தான் பெத்தீங்களா?” என்று கேட்டவள் கண்கள் இரண்டும் கலங்கிப்போய், அதில் இருந்து நீர் எப்போது வேண்டுமானலும் கீழே விழலாம் என்ற நிலையில் இருந்தது.

இப்போது அவள் முன்னே வந்து நின்ற மதுவோ, “என்னடி புள்ளபூச்சுக்கு கொடுக்கு முளச்சிடுச்சோ. அதிகமா பேசுற? ஆமா நாங்க உன்னைப் பெத்தவங்க கிடையாது...” என்று சொல்லும் போதே, “மது...” என்று இடையிட்டார் ராம், ஆனால் மதுவோ, “நீங்க சும்மா இருங்க... இன்னும் எத்தனை நாளைக்குத் தான், இந்த தண்டத்துக்கு சோறு போடுறது?. விட்டா நம்ம சொத்தில் பங்கு கேட்க வந்திடுவா” என்றார் காரசாரமான குரலில்.

வனரோஜாவிற்கு, தன் செவியால் கேட்டவற்றை நம்பமுடியாமல் தலைசுற்ற ஆரம்பித்தது. மூளை சொன்ன விஷயத்தை அவளது இதயம் நம்ப மறுத்தது. அவள் ஒரு நிலையிலையே இல்லை.

“இங்கப்பாருடி, உன்னோட அப்பனும் ஆத்தாளும், காசுக்காக உன்ன எங்கக்கிட்ட வித்துட்டு போயிட்டாங்க. நீ ஒரு பிச்சைக்காரியோட பொண்ணு...” என்று சொல்லும் போதே, ராமின் முகம் எல்லாம் வியர்க்க ஆரம்பித்தது.

“மது நீ சும்மா இரு” என்று எப்போதும் மனைவிக்கு அடங்கி நடக்கும் கணவர், முதன்முதலாக மதுவைப் பார்த்து சத்தம் போட்டார்.

பின் வனரோஜாவைப் பார்த்தவர், “இங்கப்பாரும்மா, நாங்க உன்னோட அப்பா அம்மா கிடையாது தான். உன்னை உன்னப் பெத்தவங்கக்கிட்ட இருந்து பிரிச்சது தப்பு தான்...” என்று சொல்லும் போதே, இடையிட்ட மது, “இவள்கிட்ட என்ன பேச்சு, நம்ம அபி பிறந்தப்பவே, இந்தக் கழுதைய பத்திவிட்டுருக்கனும். பாவப்பட்டு சோறு போட்டதுக்கு, நம்ம பொண்ணுக்கே போட்டியா வந்து நிக்குது” என்று நாக்கில் நரம்பில்லாமல், மொத்த பழியையும் வனரோஜாவின் மீது போட்டார்.

இப்போது தான் அதிர்ச்சியில் இருந்து சிறிது மீண்ட வனரோஜாவோ, “நான் எங்க அம்மா...” என்று சொன்னவள், சிறிது நிறுத்தி தன்னை திருத்திக்கொண்டு, “நான் எங்க மேடம் உங்க பொண்ணுக்கு போட்டியா வந்தேன்? அஜய் காதலிச்சது என்னைத் தான். அவருக்கு அம்மா அப்பா இல்லைன்னு தெரிஞ்சதும், அவருக்கு நான் எல்லாமுமா இருக்கணும்னு நினைச்சேன். இடையில் வந்தது உங்கப்பொண்ணு தான். நான் அஜய் சட்டையைப் பிடிச்சிக் கேட்டு இருக்கலாம். ஆனா அதில் கொஞ்சமும் எனக்கு விருப்பம் இல்ல. எனக்குக் காதல் பிச்சை வேண்டாம்” என்று சொன்னவள் அந்த இடத்திலையே வெடித்து அழுதாள்.

******

“தமிழ்நாட்டில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் தான் வனரோஜா மேடம் வேலை பார்க்குறாங்க சார்” என்று தனக்கு தகவல் சொன்னவனை திரும்பிப் பார்த்தவன், உதட்டை ஒரு பக்கமாக வளைத்து சிரித்தபடி, “அப்ப, அந்த வனரோஜா உயிரோடத் தான் இருக்காளா! இனி அவள் இருக்கமாட்டா... ஏன்னா எனக்குப் பொண்டாட்டி ஆகப்போறாளே!” என்று இகழ்ச்சியாக சிரித்தான் அந்த ஆறடி மனிதன்.

அவன் சிரிப்பை கேட்டதற்கே, அருகில் நின்றவனுக்கு கதிகலங்கிவிட்டது. என்னென்றால், ஐந்தாறு ஆண்டுகள் அவன் கூடவே நிழல் போல் இருப்பவனுக்கு, இந்த சிரிப்பு அழிவைக் குறிப்பதாகவே இருந்தது.

தனது இருக்கையில் இருந்து எழுந்த அந்த ஆடவன், “நம்ம ஜெட்டை தயார் பண்ணு” என்று சொன்னவன், தன் கையில் இருந்த வனரோஜாவின் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு, தன் குளீர் கண்ணாடியை மிகவும் ஸ்டைலாக அணிந்துவிட்டு, வனரோஜாவை நோக்கிய தன் பயணத்தை ஆரம்பித்தான் நிலவன்.

ஆம் அவன் பெயர் நிலவன். லண்டனில் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தைக் கட்டி ஆளும் முப்பத்தி இரண்டு வயதான ஆணழகன். வனரோஜாவை நோக்கிய அவனது பயணம் நிச்சயம் நல்லதற்கு அல்ல. ஏற்கனவே சதியால் சின்னாபின்னமாகிப் போன வனரோஜாவின் வாழ்வில், இனி நிலவன் என்னவெல்லாம் செய்யப்போகின்றானோ! பெரும் சூறாவளியில் இருந்து வெளிவந்த வனரோஜா, மிகப்பெரிய அசுரனான நிலவன் என்ற சுனாமியில் மாட்டிக்கொள்ளப்போவது என்னவோ உறுதி.

(கதைப் பிடித்திருந்தால் மறக்காமல் லைக்ஸ் மற்றும் கமென்ட்ஸ் செய்யுங்கள் பிரெண்ட்ஸ்)


 

NNO7

Moderator
அத்தியாயம் – 2

அந்த சென்னை மாநகரத்தில் கதிரவன் பல்லைக் காட்டிக்கொண்டு, தன் ஒளிகளை அதிகமாக வழங்கிக் கொண்டு இருந்தான்.

நேற்று இரவு முழுவதும் அழுது கொண்டே இருந்த வனரோஜா. மறுநாள் தன் கடமையை உணர்ந்து வேகமாகக் கிளம்பி, கண்களில் தோன்றிய கருவளையத்தோடு, தனது ஸ்கூட்டியில் முக்கியமான பொருட்களை எல்லாம் பூட்டி வைத்துவிட்டு மருத்துவமனைக்குச் சென்றாள்.

மருத்துவனை வாசலில் அவள் காலடி எடுத்து வைக்கும் போதே, அவளைப் பிடித்துக் கொண்ட, அவளின் நண்பி சந்தியா, “நேத்து நடந்தது எல்லாம் காட்டுத்தீப் போல ஹாஸ்பிடல் முழுவதுக்கும் பரவியிருச்சி ரோஜா” என்று பதற்றத்துடன் சொன்னாள்.

“அதுக்கு நீ ஏன் ஏதோ மாதிரி இருக்க சந்து?. சரி நேத்து ஓபன் ஹார்ட் சர்ஜரிக்கு அசிஸ்ட் பண்ணப் போனீயே என்னாச்சு? எல்லாம் ஓகே தானே?. நம்ம டீன் என்ன சொன்னாரு” என்று நேத்து நடந்த நிகழ்வின் தாக்கம் சிறிதும் இல்லாமல், அனைத்தையும் சாதாரணமாக மனதிற்குள் பூட்டிவைத்துவிட்டு, தனது நோயாளிகள் மட்டுமே இப்போதைக்கு முக்கியம் என்பது போல் பேசினாள் வனரோஜா.

அது தான் வனரோஜா. வீட்டில் கவலை எவ்வளவு தான் குவிந்துக் கிடந்தாலும், மருத்துவமனைக்கு வந்தவுடன், எதையும் எதிர்பாராமல் சேவை மனப்பான்மையில் நோயாளிகளை கவனிப்பாள்.

அவள் பதிலில் அதிர்ச்சியான சந்தியா, “என்னடி ரோஜா பேசுற? எதுவுமே நடக்காத மாதிரி சாதாரணமா இருக்க. இங்க என்ன பேசிக்கிறாங்கன்னு தெரியுமா? அந்த அஜய் சந்தர்ப்பவாதின்னு நான் சொல்லும் போது எல்லாம் நீ நம்பவே இல்ல. இங்க என்ன சொல்லி வச்சிருக்கான்னு தெரியுமா? அவனும் உன் தொங்கச்சி அபியும் ரொம்ப நாளா காதலிச்சாங்கலாம், அவங்க ரெண்டு பேருக்கு நடுவுல தான் நீ வந்தியாம். ஆனா உண்மைக்காதல் என்னைக்கும் தோற்க்காதாம். அதான் அவங்க ரெண்டு பேரும் சேர்ந்துட்டாங்களாம். இதை எல்லாம் கேட்டு எனக்கு அவ்வளவு ஆத்திரம் வருது” என்று தன் கோபத்தைக் கொட்டினாள் சந்தியா.

அதற்கு வெற்று சிரிப்பை சிந்திய வனரோஜா, “சூப்பரா ப்ளான் பண்ணி, நேத்துக் கல்யாணத்துல ரெண்டு பேரும் நல்லா நடிச்சாங்க. ஆனா இங்க வந்து வேற மாதிரி சொல்லி இருக்கார் அஜய்” என்றாள்.

“சீ... அஜய்யாம் அஜய். இன்னும் அவனுக்கு எதுக்காக நீ மரியாதை கொடுக்குற? சரியான பிராட் அவன். அவன் வந்தா, அவன் சட்டையைப் பிடிச்சி நறுக்குன்னு நாலு வார்த்தை கேட்காம நான் விடப்போறது இல்ல...” என்று வீர ஆவேசமாக பேசினாள் சந்தியா.

“விடு சந்து. ஊரில் நடக்காததா எனக்கு மட்டும் நடந்துச்சு?” என்றாள் வனரோஜா.

“ஆமாம் உன்னோட அம்மா அப்பா அந்த அபியை எப்படி சும்மா விட்டாங்க? இந்த அஜயைக் கூட விடு. உன்னோட சொந்த தங்கச்சிக்கு இப்படி பண்றதுக்கு எப்படி மனசு வந்துச்சு?” என்று அவள் அடுக்கிக்கொண்டே செல்ல, வனரோஜாவின் வாயில் இருந்து வந்த வார்த்தைகளைக் கேட்டு, அவள் அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றாள்.

“அபிக்கூட சேர்ந்து ப்ளான் போட்டதே அவங்க தான. அவங்களுக்குப் பிறந்த பொண்ணு நான் இல்லையாம். பேச வேண்டியதை எல்லாம் நேத்தே பேசி முடிச்சிட்டாங்க. இனி நான் வெளியத்தான் தங்கணும். இன்னைக்கு டீன் கிட்டக் கேட்டு நைட் டியூட்டி வாங்கலாம்னு இருக்கேன். அப்ப தான் நாளைக்குக் காலையில் ஏதாவது ஹாஸ்டல் தேடுறதுக்கு வசதியா இருக்கும்” என்று தன் கழுத்தை தடவிக்கொண்டே, சந்தியாவைத் தாண்டி உள்ளே சென்றாள்.

அங்கே வனரோஜாவைப் பார்த்த, செவிலியர்கள் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொள்ள எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல், தன் வேலையினைப் பார்க்க ஆரம்பித்தாள்.

*****

“சிவா, என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க? எத்தனை தடவை உங்களுக்கு போன் பண்றது? எதுக்காக கட் பண்றீங்க?” என்று அதிகக் குரல் எடுத்து அலைபேசியில் கத்த ஆரம்பித்தாள் நிலா.

அந்தபக்கம் பேசிய சிவாவோ, எரிச்சலுடன், “இப்ப உனக்கு என்னடி வேணும்? எதுக்காக மனுசன சாவடிக்குற? நான் முக்கியமான மீட்டிங்ல இருக்கேன். நீ முதல்ல போனை வை” என்று எரிந்து விழுந்தான் மெதுவான குரலில்.

அவனுக்கு அருகே இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த அவனது தாய் பரணியோ, அவனைப் பார்த்து முறைக்க, பதற்றத்துடன் அலைப்பேசி அணைப்பை அணைத்து வைத்தவன், பரணியைப் பார்த்து, “பிரண்ட்டுமா” என்றான்.

அதற்கு எந்த ஒரு பாவனையையும் தன் முகத்தில் காட்டாத பரணியோ, நேர்பார்வையுடன், “அது எனக்கு தேவை இல்லாதது. இந்த நிறுவனத்துல அதிகம் பங்கு வச்சிருக்குற முறையில், ஒரு பங்குதாரரா கேட்குறேன், நம்ம நிறுவனத்தோடா ஷேர்ஸ் ஒரு வாரமா லாஸ்ல போகுது அதுக்கு நிறுவனத்தின் சிஇஓவா, நீங்க எந்த முயற்சி எடுத்து இருக்கீங்க மிஸ்டர் சிவா” என்றார் ஆளுமையான குரலில்.

அந்தக் குளீருட்டப்பட்ட, பளபளக்கும் கண்ணாடி அறையில் இருந்த மற்ற பங்குதாரர்களும் சிவாவின் முகத்தைத் தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.

சிவாவிற்குத் தான் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது. ஐம்பத்து ஐந்து வயதைக் கடந்திருந்த பெண்மணி தான் பரணி. இன்னும் இளமை மாறாமல் சிக்கென்ற தோற்றத்தில், குரலில் ஆளுமை தெறிக்க அமர்ந்திருந்தார்.

சிவா எதுவும் பேசாமல் போகவே, தன் இருக்கையில் இருந்து எழுந்தவர், “கங்கா நிறுவனம் என்னோட பொறுப்பு. ஷேர்ஸ் சரிவில் இருந்து மீள நான் நடவடிக்கை எடுக்குறேன்” என்று அங்கே அமர்ந்திருந்த வெள்ளைக்காரர்களிடம் ஆங்கிலத்தில் கூறிவிட்டு, வேகமாக அந்த அறையை விட்டு வெளியேறினார்.

அதுவரை சிவாவின் மீது நம்பிக்கை இல்லாது இருந்த அந்த உறுப்பினர்களும், பரணி சொன்னதைக் கேட்டு, தெளிந்த மனநிலையில் அந்த இடத்தை விட்டுச் சென்றனர்.

பரணி சொன்னால், அது சரியாக இருக்கும் என்பது, அவர்களின் நம்பிக்கை. கங்கா நிறுவனம், லண்டனில் உள்ள மிகப்பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனம். அது போக கங்கா மருத்துவமனைக்கு லண்டனில் பல கிளைகள் உள்ளது.

அந்த மொத்த சாம்ராஜ்யத்தைக் கட்டி ஆண்டவர் தான் பரணி. ஐந்து வருடங்களுக்கு முன்னர் அவரது தந்தை இறந்துவிடவே, அதில் ஒடிந்து போனவர், தன் பொறுப்பு அனைத்தையும் தன் மகன் சிவாவிற்குத் தந்தார். இப்போது தனது மகனின் போக்கு சரியில்லாததைக் கண்டு, தானே முன் வந்து பொறுப்பை ஏற்கிறார்.

மீட்டிங் நடக்கும் இடத்தில் இருந்து பரணி வெளியே சென்றதும், மற்றவர்களும் சென்றுவிட, மேஜையில் தன் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான் சிவா.

இப்போது மறுபடியும், அவளது காதலியான நிலாவிடம் இருந்து அவனுக்கு அழைப்பு வந்தது. ‘ஏற்கனவே கோபத்தில் கத்தியவள், இப்போது மட்டும் தான் அழைப்பை எடுக்காவிட்டால் அவ்வளவு தான்’ என்ற நினைப்போடு, இணைப்பை எடுத்து தன் காதில் வைத்தவன், “நிலாக்குட்டி, கோபமா இருக்கீங்களா? பக்கத்துல உன் மாமியார் ஹிட்லர் வேற முறைச்சி முறைச்சிப் பார்க்குறாங்க...” என்று அவளைப் பேச விடாமல், இவனே பேசிக்கொண்டே சென்றான்.

“அதுக்காக, ஒரு மெசேஜ் கூடவா பண்ணக்கூடாது?” என்று இப்போது இறங்கி வந்தாள் நிலா.

“நிறுவனத்துல மிகப்பெரிய பிரச்சனை நிலா. அதுல வேற நான் கொஞ்சம் அப்செட்” என்றான் உள்ளே சென்ற குரலில்.

“ஹா... ஹா... உங்க அப்செட்க்குக் காரணம் என்னோட அண்ணா தானே!” என்று சரியாகக் காரணத்தைக் கண்டுபிடித்தாள் நிலா.

அவள் பேச்சைக் கேட்டு எரிச்சல் அடைந்தவன், “நமக்குள்ள பேசும் போது, பேச்சில் உன்னோட அண்ணன் வரகூடாதுன்னு, நான் எத்தனை தடவை சொல்லி இருக்கேன்” என்றான்.

“என்னமோ போங்க சிவா. ஆனா ஒன்னு தொழிலில் லாபம் நஷ்டம் எல்லாம் சாதாரணம் தான். இதுக்காக எதுக்கு உங்க அம்மா இப்படி பண்றாங்கன்னு தெரியல. ஒரு வேல அவங்க நிறுவனம் என் அண்ணன் நிறுவனத்துக்கிட்ட தோத்துப் போயிடும்னு பயமாக்கூட இருக்கலாம்” என்று சொல்லிவிட்டு சிரித்தாள் நிலா.

இங்கே சிவாவிற்குக் கோபம் ஏற, “என்னை எரிச்சல் படுத்துறதுக்குத் தான், மாறிமாறி போன் பண்ணிக்கிட்டு இருந்தியா?” என்று கத்தினான்.

“ம்ச்... போங்க சிவா. ஒரு நல்ல விஷயத்தை சொல்லத் தான் உங்களுக்குப் போன் பண்ணேன். நீங்க என்னன்னா என்னை திட்டுறீங்க?” என்று முகத்தை சுருக்கினாள் நிலா.

அதில் அதிர்ச்சி அடைந்த சிவா, “எது.. நல்ல விஷயமா? பேபி நீ பிரேக்னன்ட்டுன்னு மட்டும் சொல்லிடாத, உன்னோட மாமியார் என்னைக் கொன்னேபுடும்” என்றான் பயக்குரலில்.

“ச்சீ... உங்க நினைப்பு இருக்கே... நான் அதை சொல்லல..” என்று சொன்னதும் பெருமூச்சு விட்டவன், “பின்ன வேற என்ன?” என்றான்

“கேம்டன், நியூஹாம் இன்னும் பல இடத்துல இருக்குற ஏக்கர் கணக்குல இருக்குற எல்லா சொத்தும் நம்ம கைக்கு வரப்போகுது. இனி கங்கா நிறுவனத்துல இருக்குற, அந்த ஆள் இல்லாத ஷேர்ஸ்சும் உங்களுக்கே உங்களுக்குன்னு கிடைக்கப்போகுது” என்று ஆரவாரம் பொங்க கூறிக்கொண்டே சென்றாள் நிலா.

அதில் அவனது புருவம் சுருங்க, “என்ன பேசுற நிலா” என்று இப்போது காட்டமான குரலில் கேட்டான் சிவா.

“நிஜத்தைத் தான் பேசுறேன் சிவா. அண்ணா எல்லா ஏற்பாட்டையும் செஞ்சிட்டார். அவர் இப்ப இந்தியாவுக்குப் போயிட்டார்” என்று ஆனந்தமாகக் கூறிக்கொண்டே சென்றாள் அவனது குரலில் இருந்த வேறுபாட்டை உணராமல்.

சிவாவின் மனதில் எதுவோ சொல்லமுடியாத உணர்ச்சி, “அப்ப... அப்ப... என்னோட தங்கச்சி?” என்று அவன் திணறியபடி கேட்க.

“ஆமாம் சிவா. அந்தப்பொண்ணு கிடைச்சிட்டா” என்று சொன்னவளின் நினைப்பு எல்லாம் சொத்து, இனி தங்களது கைக்கு வரப்போகின்றது என்பதில் தான் இருந்தது.

ஆனால் அதற்கு நேரெதிரான மனநிலையில் இருந்தான் சிவா. அவன் மனது, தன் தங்கை எப்படி இருப்பாள், இப்போது என்ன செய்கின்றாள் என்பதிலையே சுற்றி வர, நிலாவின் பேராசை மிகுந்த பேச்சை அவன் கண்டுகொள்ளவில்லை. இப்போது கண்டுகொண்டிருந்தால் பின்னால் வரப்போகும் பேராபத்தில் இருந்து அவனது தங்கையைக் காத்திருப்பானோ என்னவோ.

“என்.. என் தங்கச்சி ரோஜா, இந்தியாவில் எந்த இடத்துல இருக்கா? அவள் நல்லாத் தானே இருக்கா?” என்று அவசர அவசரமாக தன் கேள்விகளை அடுக்கினான்.

தங்கையாகவே இருந்தாலும், தன்னை விடுத்து வேறு ஒரு பெண்ணின் நலத்தை தெரிந்து கொள்ள சிவா முனைந்தது நிலாவிற்கு எரிச்சலைத் தர, “ம்... அதெல்லாம் நல்லாத்தான் இருப்பா... அதுவும் இல்லாம அவள் பெயர் ஒன்னும் ரோஜா இல்ல. அவளோட முழுப்பெயர் வனரோஜாவாம். இனி நீங்களும் முழுப்பெயர் சொல்லியே கூப்பிடுங்க” என்றாள் கண்டிப்பான குரலில்.

ஆனால் அது எங்கே அவன் காதில் விழுந்தது. அவன் மனது வேறு ஒன்றை யோசிக்க ஆரம்பித்தது.

அதன் முடிவாக, அவன் நிலாவிடம், “உன்னோட அண்ணன் எதுக்காக என் தங்கச்சியைத் தேடி போயிருக்கான்?” என்றான் குரலில் ஒருவித அழுத்தத்தைக் கூட்டி.

அவளோ சிரித்துக்கொண்டே, “வேற எதுக்கு, அவளைக் கல்யாணம் பண்ணி சொத்தை எல்லாம் வாங்குறதுக்குத் தான்” என்று அவள் சொல்லி முடிக்க, இங்கு சிவாவின் முகம் பாறை போல் இறுகி, மனதில் தோன்றிய அதிகப்படியான கோபத்தால், அவன் கை, அலைபேசியை அழுத்தமாக பற்றியது.

(கதைப் பிடித்திருந்தால் லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் செய்யுங்கள் பிரண்ட்ஸ்)
 

NNO7

Moderator
அத்தியாயம் – 3

நீண்டு விரிந்திருந்த அந்தக்கடற்கரையில், தன் காலில் அலைகள் வந்து மோதுவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள் வனரோஜா.

தனக்கு எதுவும் வேண்டாமென்று விட்டு வந்தாலும், அவள் மனதில் பாரம் இருக்கவே செய்தது. இதுவரை தனது தாய் தந்தை என்று நினைத்து வாழ்ந்து வந்த உறவுகள் நேற்று இரவு சொன்னதை எல்லாம், அவள் மனது அசைபோட்டுக் கொண்டிருந்தது.

கண்கள் இரண்டும் ரத்த சிவப்பாக மாறி, “என்னோட அப்பா அம்மா யாருன்னு சொல்லுங்க” என்று மதுவின் முன்னால் மண்டியிட்டுக் கேட்டாள் வனரோஜா.

அதற்கு திமிர் பார்வை பார்த்த மது, “அதான் சொன்னேனே உன்னோட அம்மா ஒரு பிச்சைக்காரின்னு. காசுக்காக பெத்த பொண்ணை, வித்துட்டுப் போனவள் மேல, உனக்கு புதுசா பாசம் பொங்குதோ!” என்றார் ஏளனமாக.

தன் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டவள், “அவங்க யாரா இருந்தாலும் என்னோட அம்மா. நீங்க சொல்றதை என்னால நம்பவும் முடியாது” என்றாள்.

இப்போது முன் வந்த ராமோ, “எங்களுக்கு ரொம்ப நாளா குழந்தை இல்லம்மா. அதான் உனக்கு ரெண்டு வயசா இருக்கும் போது உன்னை நாங்க தத்து எடுத்தோம். எங்களுக்கு உடனே அபியும் பிறந்துட்டா” என்றார்.

அவரை நம்பமாட்டாத பார்வை பார்த்தவள், “ஓ... அதனால தான் என்னை வேலைக்காரியா வச்சி இருந்தீங்களா?” என்று அவர்கள் சொன்ன கசந்த வார்த்தைகளை ஜீரணிக்க முடியாமல் கேட்டாள்.

இப்போது அவள் கேட்ட வார்த்தைகளில் ராமிற்கு கோபம் வர, “நாங்க உன்னை வேலைக்காரி போலவா நடத்துனோம். உன்னை படிக்க வச்சி டாக்டர் ஆக்கி இருக்கேன். நீ என்ன இப்படி ஒரு வார்த்தையைப் பேசிட்ட” என்று கடிந்து கொண்டார்.

அதற்கு வெற்று சிரிப்பை சிந்தியவள், “நான் உங்கப் பொண்ணு மாதிரி, காசு கட்டிப் படிக்கலையே. அரசு பள்ளியில் ஆங்கில வழிக்கல்வியில தான் படிச்சேன். எனக்கு மெரிட்ல சீட் கிடைச்சது. ஹாஸ்டல் பீசுக்குக் கூட, அம்மாக்குத் தெரியாமத் தான் எனக்குப் பணம் கொடுப்பீங்க. அப்ப எல்லாம் எனக்குத் தெரியல. நீங்க எனக்குப் பாவப்பட்டு போட்டது சாப்பாடு ஒன்னு தான். அந்த நன்றி விசுவாசத்துக்காகத் தான் நான் சும்மாப்போறேன்” என்று சொல்ல மதுவுக்கு ஆத்திரம் அதிகமானது.

“நாயக் குளிப்பாட்டி நடுவீட்ல வச்சாலும், அது தன்னோட புத்தியைத் தான் காட்டுமாம். அது மாதிரி தான் நீயும் இருக்க. என்னத்த பெருசா படிச்சிக் கிழிச்சி டாக்டர் ஆகிட்ட? நான் மனசு வைக்கலைன்னா உனக்கு எதுவும் கிடைச்சி இருக்காது. நான் மெரிட்ல படிச்சேன்னு பெருசா பீத்திக்கிற, நான் மட்டும் உன்னைப் படிக்க விடலைன்னா என்ன பண்ணி இருப்ப?” என்று ஆவேசமாகக் கத்தினார்.

அதற்கு எதுவும் பேசாமல், “நீங்க சொல்றதும் சரி தான். என்னைப் படிக்க விட்டதுக்கு ரொம்ப நன்றி” என்று இகழ்ச்சியாகக் கையெடுத்துக் கும்பிட்டவள், “என்னோட அம்மா அப்பா யாருன்னு சொல்லுங்க” என்றாள் இறுதியாக.

ராம் எதுவோ சொல்லத் தன் வாயைத் திறப்பதற்குள் முந்திக்கொண்ட மது, “அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. ஒரு ரயில்வே ஸ்டேஷன்ல வச்சித்தான் உன்னை நாங்க வாங்குனோம்” என்று சொன்னதோடு நிறுத்திக் கொண்டார்.

அந்த நிமிடமே, ‘தன்னைக் காத்துக்கொள்ள தான் மட்டுமே இருக்கின்றோம். எனக்கு யாரிடமிருந்தும் காதல் வேண்டாம். என்னைக் காதலிக்க நான் இருக்கின்றேன்’ என்று தனக்குள் நினைத்துக் கொண்டாள் வனரோஜா.

அந்த இரவே அவள் அந்த வீட்டை விட்டு வெளியேறவும் செய்தவள். பக்கத்தில் இருந்த பார்க்கில் சென்று அமர்ந்து கொண்டாள். அது பணக்கார்கள் மட்டுமே வசிக்கும் ஏரியா என்பதனால் பாதுகாப்பு பலமாகத் தான் இருந்தது.

அவள் சென்றதும் மதுவைப் பார்த்த ராம், “அவளோட அப்பா அம்மா யாருன்னாவது சொல்லி இருக்கலாமே மது. அதுவும் இல்லாம அவ்வளவு பெரிய கோடீஸ்வரியைப் போய் பிச்சைக்காரின்னு சொல்லிட்ட” என்றார்.

“ம்க்கும்... இப்ப என்னை என்ன செய்யணும்னு சொல்றீங்க? நான் சொன்னதுல என்ன தப்பு இருக்கு?. நீங்க சத்தியம் அது இதுன்னு பேசுனதுனால தான், இவ்வளவு நாள் இவளைக் கூடவே வச்சிறுக்குற மாதிரி ஆகிடுச்சி. இப்போதாவது ஆண்டவன் உங்கக்கண்ணைத் திறந்தானே” என்று சொன்னவர்,

சிறிது நிறுத்திவிட்டு, “நம்ம பொண்ணுக்கு மருத்துவ சீட் கிடைக்கல. கோடி கோடியா கொடுத்து சீட் வாங்கி இருக்கோம். அப்படி இருந்தும் நம்மப் பொண்ணு அரியர்ஸ் பேப்பரை முடிக்கல. இதுல இந்த வனரோஜா மட்டும் பிஜி நீட்லையும் பாஸாகி, அதையும் முடிச்சிட்டு, இதுக்கும் மேல இருக்குற மேல் படிப்பை படிக்குறாளாம்... இதுல இதுக்கும் மேல இவள் சுபயோக வாழ்வு வாழனும்மா? என் வயிதெரிச்சலைக் கொட்டிக்காதீங்க. நம்ம மாப்பிள்ளைக்கு ஹாஸ்பிடல் கட்டிக்கொடுக்கும் வேலையைப் பாருங்க” என்று ராமை ஒரு அரட்டுப் போட்டுவிட்டு உள்ளே சென்றார்.

நடந்ததை எல்லாம் நினைத்துப் பார்த்த வனரோஜாவின் கண்களில் இருந்து கண்ணீர் கசிந்தது. அதைத் துடைத்துக் கொண்டவள், அப்போது தான் தன் அருகில் வந்த சந்தியாவை நிமிர்ந்து பார்த்தாள்.

அவள் அருகில் வந்த சந்தியாவோ, “நேத்து நான், உன் கல்யாணத்துக்கு கண்டிப்பா வந்திருக்கணும் ரோஜா. நான் இருந்திருந்தா அந்த அஜயையும், அபியையும் சும்மா விட்டிருக்க மாட்டேன்” என்றாள் ஆதங்கமாக.

“விடுடி. நானும் அந்த அஜய்யும் கட்டிப்பிடிச்சு ஒன்னும் பழகல. அவன் என்கிட்ட லவ்வ சொன்னான். நானும் அவன் நல்லவன்னு நினைச்சு ஓகே சொல்லிட்டேன். நாங்க வெளியக்கூட எங்கும் போனது இல்ல. நானும் அவனும் ஒன்னா சேர்ந்து எடுத்தது ஒரே ஒரு செல்பி தான். அதையும் நான் எப்போதோ டெலீட் பண்ணிட்டேன்” என்றாள் சாதாரணக் குரலில்.

“அவனுக்காக நீ கொடுத்த கிப்ட் எல்லாம் திரும்பி உன் கைக்கு வந்துச்சா?” என்று சந்தியா கேட்க, “இல்லை” என்று தன் தலையை ஆட்டினாள்.

தன் கையை அடித்துக்கொண்டு, “நினைச்சேன். அவன் இதுவரை அவன் காசுல உனக்காக எதுவும் வாங்கித் தந்தது இல்ல. அவன் உன்னைப் பணத்துக்காகத் தான் லவ் பண்ணி இருக்கான். அவன் அபியைக் கல்யாணம் பண்ணினதுக் கூட அதுக்காகத் தான். இந்த அபியும் உன் மேல் உள்ளப் பொறாமையில் இப்படி ஒரு கேவலமான வேலையைப் பார்த்து இருக்கா. நான் நிச்சயம் சொல்றேன் ரோஜா, இதுங்க ரெண்டும் கண்டிப்பா நல்லாவே இருக்காதுங்க” என்று சாபமாய் வந்தது சந்தியாவின் வார்த்தைகள்.

“சும்மா இரு சந்து அப்படி எல்லாம் பேசாத. அவங்க பண்ண வேலைக்கு காலம் அவங்களுக்குப் பதில் சொல்லும்னு நினைச்சிட்டு நான் ஒதுங்கிட்டேன்” என்றவள் பேச்சில் பிசிறு தட்டவில்லை.

“சரி நேத்து நைட்டு இவ்வளவு பேசுன உன்னோட போலியான அம்மா அப்பா, எதுக்காக இவ்வளவு நாள் உன்னைக் கூடவே வச்சி இருந்தாங்களாம். அவங்க பொண்ணு அபி பிறந்தப்பவே, உன்னை ஏதாவது ஆசிரமத்துல சேர்த்து இருக்கலாமே, நீயும் உன் வாழ்க்கையை நல்லா வாழ்ந்து இருப்ப” என்றாள் சந்தியா.

அதற்கு வெற்றுச் சிரிப்பை சிந்திய வனரோஜா, “வீட்டப் பெருக்குற வேல, சமைக்குற வேலைன்னு சின்ன வயசுல இருந்து எல்லா வேலையையும் நான்தான் பார்த்தேன். கையில நெருப்பு சூடு போட்டாக்கூட, அவங்க என்னை கண்டுக்கமாட்டாங்க. அந்த வலியோட நான் தான் சமைக்கணும். இப்ப நான் வேலைக்கு வேற வர்றதுனால என்னோட தேவை அவங்களுக்கு இல்லை போல” என்று பொய்யாக சிரித்தாள்.

சந்தியாவிடம் பதில் இல்லை. அவள் மனது பிசைந்தது. தொடர்ந்து பேசிய வனரோஜா, “நான் ஒரு தத்தி தான் சந்து, அவங்க அப்படி செஞ்சதுக்கான காரணமே எனக்கு நேத்து தான் தெரிஞ்சது. நாம என்ன பண்ணா அம்மாவுக்குப் பிடிக்கும்னு, பார்த்துப் பார்த்து பண்ணி ஏமாந்து தான் போவேன். எனக்கு அப்ப தெரியல, நான் எதில் முதல் இடம் வந்தாலும், என்னோட அம்மாக்குப் பிடிக்காது, மாறாக அவங்களுக்கு என் மேல கோபம் தான் அதிகமாகும்னு..” என்று அவள் சொல்லும் போதே, சந்தியாவின் கண்கள் இரண்டும் கலங்கித்தான் போனது.

அப்போது சந்தியாவின் அலைப்பேசி அடிக்க, அதை எடுத்துப் பேசிவிட்டு வைத்தவள், வனரோஜாவிடம், “அந்த அஜய்யால ரொம்பத் தான் பிரச்சனை” என்றாள்.

வனரோஜாவோ, என்னவென்று கேட்க, “நாளைக்கு நடக்குற மெடிக்கல் கேம்புக்கு, இந்த அஜய் வராததுனால, என்னைப்போக சொல்றாரு டீன். இப்பவே கிளம்பணுமாம்” என்றாள் வாட்டமான முகத்துடன்.

“ஹேய், சந்து இது நல்ல சான்ஸ்டி. கண்டிப்பா போயிட்டு வா. ஜாலியா இருக்கும். முன்ன ஒருக்க போகும் போது நீ வரல, அதனாலத் தான் டீன் உன்னைப் போக சொல்றாருன்னு நினைக்குறேன்” என்று வருத்தங்கள் மொத்தத்தையும், கடலில் விட்டவளாக மகிழ்ச்சிப் பொங்கக் கூறினாள்.

“ம்ச்.. அதில்லடி. உன்னை இந்த நிலையில் விட்டுட்டு நான் மட்டும் எப்படி போறது? அதான்” என்றாள் சந்தியா.

“சந்து... நான் என்ன சின்னக் குழந்தையா? நீ ஜாலியா என்ஜாய் பண்ணு சரியா” என்றாள் அவள் கன்னத்தைப் பிடித்து ஆட்டியபடி.

“ஐயோ விடு பக்கி வலிக்குது. சரிவா, போற வழியுல உன்னை உன் ஹாஸ்டலில் விட்டுட்டுப் போறேன்” என்றவள், “இன்னைக்கு உனக்கு நைட் டியூட்டி தானே பார்த்து பத்திரமா இருக்கணும் ரோஜா” என்று அவள் சொல்ல, “ஐயோ, மறுபடியும் நீ ஆரம்பிக்காத தாயே!” என்று அவளை இழுத்துக் கொண்டு சென்றாள் வனரோஜா.

*****

கழுத்தை ஆட்டி நெட்டி முறித்த வனரோஜா, ‘காலையில் இருந்து, சந்துவும் நானும் ஹாஸ்டல் தேடியே அலுத்துப் போயிட்டோம். எமர்ஜென்சி கேஸ் எதுவும் வந்துரக்கூடாதுடா ஆண்டவா’ என்று அவள் மருத்துவமனையில், உள்ள தன் மேஜையில் அமர்ந்து யோசிக்கும் போதே, ஆர்ப்பாட்டமாக அந்த மருத்துவமனைக்குள் நுழைந்தான் நம் கதையின் நாயகன் நிலவன்.

வனரோஜா ஜெனரல் வார்ட்டில் நடந்து வர அவளுக்கு முன்னால் வந்து நின்ற நிலவன், தன் கையை அவளுக்கு முன்னால் நீட்டி, “ஹாய், நான் நிலவன். நிலா கெமிக்கல் கார்பரேஷனோட ஓனர்” என்றதும், வனரோஜாவின், கண்ணில், ‘இருந்துட்டுப்போ’ என்பதொரு பார்வைத் தெரிய, நிலவனின் விழிகள் அனலைக் கக்கியது.

ஆறடி உயரத்தில் முறுக்கேறிய உடலோடு, முன்முப்பதுகளில் இருக்கும் ஆணழகனைக் கண்டு மயங்காத பெண்களே இல்லை எனலாம்.

அதில் நிலவனுக்கு தன் அழகின் மேல் ஒரு கர்வம் இருந்தது. இப்போது அது அடிபட்டுப் போக, அவளை நோக்கியத் தன் கைகளை இறக்கினான்.

பணத்தின் செழுமையால் பார்க்க பளபளவென்று இருக்கும், தன் முன்னே நின்ற ஆடவனைப் பார்த்தவள், அவனை வெறும் கல்லையும் மண்ணையும் பார்ப்பதைப் போல பார்த்து வைத்துவிட்டு, “பக்கத்துக் கட்டிடத்துல தான் டீன் இருப்பாரு சார். மருந்து மாத்திரையைப் பத்தி எல்லாம் அவர்கிட்டப் போய் பேசிக்கோங்க...” என்று சொல்லிவிட்டு அவனைத் தாண்டி செல்லப்போனவளின் இடது கையைப்பிடித்து, நிலவன் கோபத்தோடு இழுக்க, கால் இடறி, அவனது மார்பில் மோதி நின்றாள் பெண்ணவள்.












 

NNO7

Moderator
அத்தியாயம் – 4

வனரோஜா தன் மீது விழுந்ததும், நிலவனின் முகம் அஷ்டகோணலாய் மாறியது.

காலையில் இருந்து வெயிலில் அலைந்து திரிந்து, சோர்ந்து போய், எந்த ஒரு முகப்பூச்சும் இல்லாமல், வியர்வையில் நனைந்து போய் இருந்த வனரோஜாவோ, அவனில் இருந்து எழுந்து நேராக நின்றவள், அவனது அஷ்டகோணலான முகத்தைப் பார்த்துவிட்டு, “நீங்க தான் என் கையைப் பிடிச்சி இழுத்தீங்க... இது ஹாஸ்பிடல்... பிரச்சனை வேண்டாம்னு பார்க்குறேன்” என்று சொல்லிவிட்டு செல்லப்போவளின் முன்பு கையை நீட்டியவன், குனிந்து அவளது ஐடிக்கார்டைப் பார்த்துவிட்டு, அவளைப் பார்த்தவன், திமிரான குரலில், “எந்த வனத்துக்கு நீ ரோஜான்னு சொல்லு? என்றான்.

அவனது பார்வைக்கு எதிர்பார்வை பார்த்தவள், தன் அருகில் இருந்த செவிலிப்பெண்ணைப் பார்த்து, “நர்ஸ், இந்த சார் மனநல டாக்டர் பேசண்ட்ன்னு நினைக்குறேன். பாவம் வழி தவறி வந்துட்டாங்கப் போல, நீங்க இவரை அவங்கக்கிட்டப் போய் விட்டுடுறீங்களா?” என்று தனிந்தக் குரலில் கேட்டாள்.

அந்த செவிலிப்பெண்ணும், கொஞ்சம் தள்ளி நின்று நிலவனின் பேச்சை எல்லாம் கேட்டுக்கொண்டு தான் இருந்தாள். பணத்தின் செழுமையால் பார்க்க ஆணழகனாகவும், யாரும் நேருக்கு நேராக பார்த்துப் பேச அச்சம் கொள்ளும் தோற்றத்தில் இருந்தவனைப் பார்த்து அந்தப் பெண் சிறிது பயத்துடன், “உங்களுக்கு யாரை சார் பார்க்கணும்?” என்று கேட்டாள்.

ஆனால் நிலவனோ கிஞ்சித்துக்கும் அவளைக் கண்டுகொள்ளாமல், வனரோஜாவைத் தான் வெறித்துக் கொண்டிருந்தான்.

‘இதற்கு மேல் தனக்கு இங்கு எந்த வேலையும் இல்லை’ என்ற நினைப்பில், வனரோஜா அங்கிருந்து நகன்றாள்.

செல்லும் வனரோஜாவின் முதுகை வெறித்தவன், ‘உன்ன நாளைக்குப் பார்த்துக்குறேன். நான் யாருன்னு நீ கூடிய சீக்கிரம் தெரிஞ்சிப்ப’ என்ற நினைப்போடு அங்கிருந்து வெளியேறினான்.

இந்தியாவில் காலடி எடுத்து வைத்ததுமே, வனரோஜாவைக் காண இங்கே வந்துவிட்டான் நிலவன். நிலவனை எதிர்த்து யாரும் எதுவும் பேசிவிட முடியாது. அப்படிப்பட்ட நிலவனுக்கு, வனரோஜாவின் பேச்சு உள்ளுக்குள் நெருப்பு ஜீவாலையை உருவாக்கி இருந்தாலும், அவன் முதன் முதலாக பொறுமை காத்தான். ஆம் மீனைத் தூண்டிலில் சிக்க வைக்கத்தான் இந்தப் பொறுமை.

இதனைப் பற்றி எதுவும் அறியாத வனரோஜா, ‘எனக்கு நேரமே சரியில்லை போல, ஒரு பணக்கார பைத்தியத்துக்கிட்ட மாட்டிக்கிட்டேன்’ என்ற நினைப்போடு தன் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தாள்.

இங்கே, அலைபேசியில் நிலாவின் பேச்சைக் கேட்ட சிவாவுக்கு நிலவனின் மேல் ஆத்திரமாக வந்தது.

“என்ன பேசுறன்னு தெரிஞ்சித் தான் பேசுறியா நிலா. ரோஜா யாரோ இல்ல, என்னோட சொந்தத் தங்கச்சி” என்று கோபமாகக் கத்தினான்.

அதில் கொஞ்சம் பயந்த நிலா, சிறிது இடைவேளைவிட்டு, “எதுக்காக இவ்வளவு கோபம் உங்களுக்கு வருது சிவா. உங்க தங்கச்சிக்கு எதுவும் ஆகாது. சொத்தை மட்டும் தான் எழுதி வாங்கப்போறோம் வேற ஒன்னுமே இல்ல” என்று தணிந்த குரலில், அவனுக்குப் புரிய வைக்க முயற்சி செய்தாள்.

ஆனால் அவளின் பேச்சைக் கேட்டு, அவனுக்குக் கோபம் தான் பல்கிப் பெருகியது.

“அவளுக்கு சொந்தமான சொத்தை எழுதி வாங்கப்போறியா? யார் சொத்தை யார் வாங்கப்போறது?” என்று அவன் மேலும் கத்த, இந்தப்பக்கம் நிலாவின் பொறுமை பறந்தது, “என்ன சொன்னீங்க அவளுக்கு சொந்தமான சொத்தா? சொத்து அவள் பெயரில் இருந்தா, அது அவளுக்கு சொந்தமாகிடுமா? யார் வீட்டு சொத்தை யார் சொந்தம் கொண்டாடுறதுன்னு ஒரு விவஸ்த்தை வேண்டாம். கேவலம் ஒரு அண்டங்கஞ்சியோட பொண்ணு...” என்று அவள் சொல்லிக் கொண்டே போக,

“போதும் நிறுத்து” என்று கண்கள் முழுவதும் ரத்த சிவப்பாகி அவன் கர்ஜிக்க, அதில் அமைதியான நிலாவிற்கு, அப்போது தான் தன் வார்த்தையின் வீரியம் புரிய ஆரம்பித்தது.

“நீ யாரை அண்டங்கஞ்சின்னு சொல்றன்னு தெரியுதா? நானும் அவரோட பையன் தான்” என்று உதடு துடிக்கப்பேசினான்.

அவன் கோபத்தில் இறங்கி வந்தவள், “மன்னிச்சிடுங்க சிவா. உங்களுக்கும் அவரைப் பிடிக்காதுன்னு நினைச்சு அப்படி சொல்லிட்டேன். நான் ரோஜாவை அப்படி சொல்லி இருக்கக்கூடாது” என்று அவசரமாக மன்னிப்பை வேண்டினாள்.

அதில் மனதிறங்கி, “வார்த்தைகளைப் பார்த்துப் பேசு நிலா” என்றவன் வனரோஜாவைப் பற்றிய நலனில் தன் திசையைத் திருப்பியவனாக, “உன் அண்ணன் இந்தியா போறது வேஸ்ட் தான். என்னோட தங்கச்சிக்கு இந்த நேரத்துல கல்யாணம் முடிஞ்சி இருக்கும்” என்று என்ன பேசுகின்றோம் என்று தெரியாமல் பேசிவிட்டு, தெரிந்ததும் உள்ளுக்குள் தன்னைத் தானே கடிந்து கொண்டான்.

அவனது பேச்சில், தன் புருவத்தை சுறுக்கியவள், “என்ன சொல்றீங்க? அதெப்படி கல்யாணம் ஆச்சுன்னு நீங்க சொல்லலாம்? எதையாவது பேசாதீங்க. உங்கத்தங்கச்சி யாரு எங்க எப்படி இருப்பான்னு கூட உங்களுக்குத் தெரியாது” என்றாள் சிடுசிடுவென்றக் குரலில்.

அதில் அமைதி அடைந்தவன், “ஆமாம் எனக்குத் தெரியாது தான். ஆனா இந்தியாவில் வேகமாக கல்யாணம் பண்ணிடுவாங்களே அதான். நா.. நான் சும்மாத் தான் சொன்னேன். நான் பிறகு பேசுறேன்” என்று திக்கித்திணறி சொல்லிவிட்டு, தன் இணைப்பைத் துண்டித்தவன், அடுத்து அழைத்தது என்னவோ, இந்தியாவில் இருக்கும் தன் ஆட்களுக்குத் தான்.

அவர்கள் அழைப்பை எடுத்தும், “எல்லாம் ஒழுங்காத் தானே போகுது?” என்று கேட்டான் சிவா.

அந்தப்பக்கம் பேசியவன், “எல்லாம் ஓகே தான் சார். மேடம் இப்பக்கூட ஆஸ்பத்திரில தான் இருக்காங்க” என்றான் அவன் எச்சிலை விழுங்கியபடி.

‘நேத்து தான் கல்யாணம் ஆச்சு. அதுக்குள்ள டியூட்டிக்கு வந்துட்டாளா! எப்பத்தான் இந்தப் பொண்ணு ரெஸ்ட் எடுக்குமோ’ என்று தன் தங்கையை இனிமையாக தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டவன், எதிர்பக்கம் பேசியவனிடம், “அவளை யாரும் நெருங்காம பார்த்துக்கோ. இனி தான் நீ அலெர்ட்டா இருக்கணும். என் தங்கச்சி மாப்பிள்ளை அஜய்க்கும் நீங்க தான் பாதுகாப்பு கொடுக்கணும்” என்று அவன் சொல்ல,

இவனுக்கோ வியர்த்து வழிந்தது. “அது சார் நேத்து ராத்திரி தான் எங்களுக்கு விஷயமே தெரிஞ்சது. உங்களுக்கு போன் பண்ணியும் நீங்க போனை எடுக்கல” என்று சொல்லித் தன் தலையைச் சொறிந்தான்.

அவன் இழுப்பதைப் பார்த்து சிவாவும் எரிச்சலாக, “என்னன்னு சொல்லித் தான் தொலை” என்று கத்தினான்.

“மேடம் கல்யாணம் நின்னு போச்சாம் சார்” என்று சொல்லி நிறுத்தினான்.

“புரியல! என்ன சொன்ன?” என்று தன் காதுகளில் கேட்டதை நம்ப முடியாமல் திரும்பவும் கேட்டான் சிவா.

அவனோ அதே வாக்கியத்தைத் திரும்பவும் கூற, சிவாவின் ரத்த அழுத்தம் ஏகத்திற்கும் எகிறியது.

“அந்த அஜய் ரொம்ப நல்லவன், எந்த வித தப்பும் அவன் மேல இல்லைன்னு நீ தானே சொன்ன?” என்று அவன் வார்த்தைகள் சூடாக வந்துவிழுந்தது.

“நான் சொன்னது உண்மை தான் சார். அந்த அஜய் நல்லவன் தான். ஆனா எங்களால வீட்டுக்குள்ள எல்லாம் போய் பார்க்க முடியாதே! அதான் அந்தப் பையன் மேடமோட தங்கச்சி கழுத்துல தாலி கட்டிட்டான் போல” என்று சொன்னதைக் கேட்டு, பாடாரென்று இருக்கையில் இருந்து எழுந்தவன், மேலும் விவரங்களை அவனிடமிருந்து கேட்டுவிட்டு, நிலவனை எப்படி தடுத்து நிறுத்துவது என்று யோசிக்க ஆரம்பித்தான்.

இந்தப்பக்கம் பேசியவனோ, “நான் இப்ப என்ன பண்ணட்டும் சார்” என்று கேட்க, “நான் இந்தியா வரும் வரைக்கும், மேடமை சுத்தி எப்போதும் உங்க ஆட்கள் இருக்கணும்” என்றான் கண்டிப்பான குரலில்.

“கண்டிப்பா சார். இப்போதும் அப்படித் தான் இருக்கோம்” என்றான் அவன்.

அதில் பல்லைக் கடித்தவன், “நீங்க பாதுகாப்புக்கு இருக்குற லட்சணம் நீ சொல்லும் போதே தெரியுது. நீங்க என்ன செய்வீங்கன்னு தெரியாது ஹாஸ்பிட்டலுக்கு உள்ள போய் மேடம்க்கு பாதுகாப்புக் கொடுக்கணும்” என்று சொல்லிவிட்டு வைத்தவன், வேகமாக தன் அன்னையைக் காண சென்றான்.

பரணியோ தன் அறையில் அமர்ந்து கோப்புகளைப் பார்த்துக் கொண்டிருந்தார், அவரிடம் அவசரமாக சென்ற சிவா, “அம்மா, ரொம்பப்பெரிய பிரச்சனை நடந்து போச்சு. நாம ரோஜாவை நம்ம வீட்டுக்குக்கே கூட்டிட்டு வந்திடுவோம் அம்மா” என்றான் பதற்றம் மிகுந்தக் குரலில்.

தன் ஒரே மகளின் பெயர் சிவாவின் வாயில் இருந்து வந்ததும், அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, திரும்பவும், தன் கண்ணைக் கோப்பில் பதித்தவர், “ரோஜாவா அது யாருப்பா?” என்று கேட்டார் பரணி.

“ஐயோ அம்மா, விஷயம் என்னன்னு தெரியாம விளையாடாதீங்க. உங்கப் பொண்ணு ரோஜா ரொம்பப் பெரிய ஆபத்துல இருக்கா” என்றான் அவசரமாக.

ஆனால் அதில் துளி பொட்டும் கலங்காத பரணி, “என்னோட பொண்ணா? அப்படி யாரும் எனக்கு இல்லையே சிவா. தேவை இல்லாம இங்க நின்னு பேசிக்கிட்டு இருக்காம, நம்ம நிறுவனத்தை முன்னேத்துறதுக்கு உண்டான வழியைப் பாரு” என்று கடிந்து கொண்டார்.

“அம்மா உங்களுக்கும் அப்பாக்கும் நடந்த பிரச்சனையை பெருசு படுத்துற நேரம் இல்ல இது. ரோஜா சின்னப் பொண்ணா இருக்கும் போதே அப்பா இறந்துட்டார்” என்று அவன் சொன்னதைக் கேட்டு, கோப்புகளை வாசித்துக் கொண்டிருந்த பரணியின் கண்கள் ஒரே இடத்திலையே நிலைபெற்று நின்றது.

எல்லாம் சில கணங்கள் மட்டும் தான். ஆளுமை மிகுந்த பரணி, எந்த வித உணர்ச்சியையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், தன்னை சமநிலைப் படுத்தியவர், “அதுக்கு நான் என்ன பண்ண? தேவை இல்லாததை பேசாத. ரோஜாக்கும் நமக்கும் எந்த வித சம்பந்தமும் இல்ல. இதெல்லாம் எந்த காலத்திலையோ முடிஞ்சிப் போன உறவு. என்கிட்ட வந்து ஷேர்ஸ் கேட்டா அதைக் கொடுக்க வேண்டியது மட்டும் தான் என்னோட கடமை. வேற ஒன்னுமே இல்ல” என்று விட்டு அமைதியானார்.

பரணியை நம்பமாட்டாதப் பார்வை பார்த்தவன், “உங்களுக்கு யார் மேல தான் அக்கறை இருந்துருக்கு? நிறுவனம் தான் முக்கியம்னு நினைக்குற நீங்க எதுக்காக காதலிச்சு கல்யாணம் பண்ணி பிள்ளையும் பெத்துக்கிட்டீங்க? கூடவே இருக்குற என்கிட்டக் கூட பாசமா ரெண்டு வார்த்தை நீங்க பேசுனது கிடையாது. இதுல எங்கையோ இருக்குற பொண்ணு மேல உங்களுக்கு பாசம் இருக்கும்னு நான் எதிர்பார்க்குறது என்னோட தப்பு தான்” என்று வார்த்தைகளை சிதறவிட்டான் சிவா.

அது எதுவும் தன் காதில் விழாததுப் போல, இரும்பில் அடித்த இதயம் போல் அமர்ந்திருந்தார் பரணி.

அதில் பொறுமையை இழந்தவன், “நான் இந்தியா போறேன்” என்றான் அறிவிப்பாக.

“அப்ப ஷேர்ஸ் சம்பந்தமா நீயே அந்தப்பொண்ணுக் கிட்டப் பேசிடு” என்று அசராமல் பேசினார் பரணி.

“அம்மா! அந்தப்பொண்ணு உங்க பொண்ணும்மா. அதெப்படிம்மா உங்களுக்கு துளி கூடவா பாசம் இருக்காது?. அப்பா இறந்ததும் அவள் எவ்வளவு கஷ்டப்பட்டாள்ன்னு தெரியுமா? எனக்கே ரோஜாவைப் பத்தி ரெண்டு மாசத்துக்கு முன்னாடி தான் தெரியும்” என்று சிவா சொல்ல,

“நான் அப்பவே உன்னை வெளிய போக சொல்லிட்டேன் சிவா. நீ இந்தியா போ, எங்க வேணாலும் போ, ஆனா இன்னும் ரெண்டு நாள்ல நம்ம பங்கு விலை உயரணும். இல்லைன்னா உன்னோட பதவி பறிக்கப்படும். ஒரு சிஇஓவா உன்னோட வேலையை சரியா செய்வன்னு நம்புறேன்” என்று வேலையைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டு இருந்தவரைப் பார்த்து, முதன் முதலாக தன் குரலை உயர்த்திப் பேச ஆரம்பித்தான் சிவா.

“நீங்க கொடுக்குற இந்த சிஇஓ பதவியே எனக்கு வேண்டாம்” என்று கோபத்தோடு சொல்லிவிட்டு, தன் சொந்த ஜெட்டில் இந்தியா கிளம்பினான் சிவா.


 

NNO7

Moderator
அத்தியாயம் – 5

“இப்ப உங்க பல்ஸ் ரேட் எல்லாம் நார்மலா இருக்கு. இன்னைக்கே உங்களை டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்” என்று அந்த வயது முதிர்ந்த பெண்ணிடம் சிரித்த முகத்துடன் கூறிக்கொண்டிருந்தாள் வனரோஜா.

அப்போது அங்கே வந்த செவிலிப்பெண் ஒருத்தி, “டாக்டர், உங்கள டீன் கூப்பிடுறார்” என்றாள்.

தன் காதில் மாட்டி இருந்த செதேஸ்கோப்பை எடுத்துத் தன் கழுத்தில் மாட்டியவள், “என்னை எதுக்கு கூப்பிட்டார்?” என்று கேட்டுக்கொண்டே தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தவள், “எனக்கு டியூட்டி முடிஞ்சதே” என்று சொல்ல.

“எனக்குத் தெரியல டாக்டர். நேத்து நைட் ஒரு மருந்து கம்பெனிகாரர் வந்தாரே, அவர் தான் உங்களைப் பத்தி டீன் கிட்ட ஏதாவது போட்டுக் கொடுத்துட்டாரோ” என்று அவள் ஆச்சரியக் குரலில் கேட்க.

அதற்கு தன் உதட்டைச் சுழித்தவள், “என்னோட வேலையை நான் சரியா பாக்குறேன் சிஸ்டர். மருந்து தயாரிக்குறவங்கக் கூட பேசுறது எல்லாம் என்னோட வேலை இல்ல” என்று சொல்லிவிட்டு டீனைப் பார்க்க சென்றாள் வனரோஜா.

அந்த மருத்துவமனை டீனின் அறைக்கதவை தட்டி விட்டு சென்றவள், “சார் கூப்பிட்டு இருந்தீங்காளா?” என்று கேட்க.

“ஆமாம் டாக்டர் வனரோஜா” என்றவர், எடுத்ததுமே, “உங்களுக்கு இனி இந்த ஹாஸ்பிடலில் வேலை இல்ல. நீங்களே ரிலீவ் ஆகுற ப்ராசஸ்ச பார்த்துக்கோங்க” என்று குண்டைத் தூக்கி அவள் தலையில் போட்டார்.

அவர் சொன்ன அதிர்ச்சியில் இருந்து மீண்டவள் முன்பு, ஒரு நிமிடம் நிலவன் வந்து சென்றான், ‘ஒருவேள இதுக்கு அவன் தான் காரணமோ’ என்று நினைத்தவள், “என்ன சார் சொல்றீங்க. எதுவும் சொல்லாம, திடுதிப்புன்னு” என்று அவள் தடுமாறினாள்.

“நீங்க இங்க வெறும் ப்ராக்டீஸ் டாக்டர் தான் மிஸ் வனரோஜா” என்றார் அவர்.

“ஆனா டாக்டர்... இது அரசு மருத்துவமனை. என்னை எப்படி நீங்க வெளியேத்த முடியும்” என்று அவள் பதற்றத்துடன் கேட்க, “அதான் நான் சொன்னேனேம்மா நீங்க இங்க பயிற்சி மருத்துவர். பயிற்சி மருத்துவர்களை எல்லாம் குறைக்க சொல்லி எங்களுக்கு சர்குலர் வந்துருக்கு” என்றார் அவர்.

அடுத்து என்னவென்று வனரோஜா யோசிப்பதற்குள், அங்கே வந்த, இதுநாள் வரைக்கும் தன் உடன் பிறந்த சகோதரி என்று நினைத்து வந்த அபியோ, அங்கே நின்று இருந்த டீனிடம், “எல்லாம் ஓகே தானே அங்கிள்” என்றாள்.

அவள் கழுத்தில் தொங்கிக்கொண்டு இருந்த தாலியைப் பார்த்த வனரோஜாவுக்கு, நேற்று முன் தினம் நடந்த கோர சம்பவம் நிழல் ஆடியது.

அதுவரை தன் முகத்தை கடுகடுவென்று வைத்திருந்த டீனோ, அபியைப் பார்த்ததும் முகம் மலர்ந்தவராக, “வாம்மா அபி, அப்பா நல்லா இருக்காரா?” என்று கேட்டார்.

வனரோஜாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு, டீனிடம், “நல்லா இருக்காரு அங்கில். புதுசா கட்டப்போற ஹாஸ்பிடல் சம்பந்தமா அப்பா தான் உங்களைப் பார்த்துட்டு வர சொல்லி இருக்காரு” என்றாள் அவள்.

“இதுக்கெல்லாம் நீ வரணுமாம்மா சொன்னா நானே வந்திருப்பேனே. உங்க அப்பா கூட பார்ட்னர் ஆகுறதுல எனக்கு ரொம்ப சந்தோசம்மா” என்று அவரோ வளைந்து குலைந்து பேசினார்.

அவர்கள் பேச்சிலையே இதற்குக்காரணம் அபியின் தந்தை தான் என்பதனை உணர்ந்தவள், ஒரு கசந்த புன்னகையுடன் அங்கிருந்து வெளியேறினாள்.

திருமணத்தன்று எப்படி வெளியேறினாளோ, அதே போலவே வெளியேறினாள். தன் உரிமைக்காகப் போராட அவள் மனதில் சக்தி இல்லையா! இல்லை ஒரு துறவி போல அனைத்தையும் கடந்துவிட்டாளா என்பது தெரியவில்லை.

மருத்துவமனையில் இருந்து வெளியேறியவள், அங்கிருந்த கல் இருக்கையில் அமர்ந்து, தன் தோழி சந்தியாவிற்கு அலைப்பேசி மூலம் அழைத்தாள். ஆனால் அழைப்பு தான் செல்லவில்லை.

அதில் மிகவும் பயந்து தான் போய்விட்டாள் வனரோஜா. கையில் இருந்த தொகையை வைத்து ஹாஸ்டலில் சேர்ந்துவிட்ட வனரோஜாவின் வங்கிக்கணக்கில் மிக சொற்பப்பணம் மட்டுமே இருந்தது. பயிற்சி மருத்துவருக்கு சம்பளமும் மிகக்குறைவு தான்.

ஒரு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக இருக்கும் போதே, அங்கிருந்து வெளியேறி வேறு மருத்துவமனையில் சேருவது கொஞ்சம் சிரமம் தான். அதை நினைத்துப் பார்த்தவளுக்குத் தன் கண்களில் இருந்து நீர் பெருகியது.

குனிந்தபடியே அதனை துடைத்துக் கொண்டவள், தன் முன்னே நிழல் ஆடுவதைக் கண்டு நிமிர்ந்து பார்த்தாள்.

ஆறடி உயரத்தில், உதட்டை ஒரு பக்கமாக வளைத்து சிரித்தபடி நின்றிருந்தான் நிலவன்.

அவனைப் பார்த்ததும், ‘இவன் நிஜமாவே நிலா மெடிகல்ஸ்சோடா ஓனரா! இவன் எதுக்காக என்னையே சுத்தி வரான்’ என்ற நினைப்போடு, எழுந்து நின்றவள், என்னவென்பது போல் அவனைப் பார்த்தாள்.

அதற்கு அவனோ, “நேத்தே நான் யாருன்னு உனக்கு சொன்னதா நியாபகம்” என்று இப்போதும் தன் திமிரை விடாமல் பேசினான்.

‘இருக்குற பிரச்சனையில் இவன் வேற’ என்று உள்ளுக்குள் எரிச்சலாக நினைத்தாலும், வெளியே தன்மையாகவே பேசினாள், “உங்களுக்கு என்ன தான் வேணும் சார்?” என்றாள்.

“என்னை நீ கல்யாணம் பண்ணிக்கணும்” என்றான் ஒரே வாக்கியமாக.

அதில் சட்டென்று அதிர்ந்தவள், “என்ன? இப்ப என்ன சொன்னீங்க?” என்று தன் காதில் தான் எதுவோ தவறாக விழுந்துவிட்டதாக எண்ணி அவள் திரும்பவும் கேட்டாள்.

அதில் பல்லைக்கடித்தவன், “என்னைக் கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்றேன்” என்று அனுமதியாகக் கூட அவன் கேட்கவில்லை.

அதனைக் கேட்டவுடன் வனரோஜாவின் ஆத்திரம் எல்லையைக் கடக்க, உடற்பயிற்சியின் உபயத்தால், முறுக்கேறி கல் போல் இருந்த அவனது நெஞ்சில் கைவைத்துத் தள்ளியவள், “யாருங்க நீங்க பொறுக்கி மாதிரி பேசுறீங்க. ஒரு பொண்ணு தனியா இருந்தாலே இது தான் பிரச்சனை” என்று அவள் பாட்டுக்கு அவனை திட்டிவிட்டு, அங்கிருந்து வேகமாக சென்றாள்.

அவன் அவ்வாறு சொன்ன பிறகு, ஒரு நிமிடம் கூட அங்கே நிற்க அவளுக்குப் பிடிக்கவில்லை.

நிலவனுக்கு இது முதல் தோல்வி என்று தான் சொல்லமுடியும். அவனது முகம் எல்லாம் பாறைப்போல் இறுகிப் போய் இருக்க. அவன் அருகே வேகவேகமாக வந்த அவனது உதவியாளர், “அடுத்து நாம என்ன சார் பண்ணபோறோம். வனரோஜாக்கூட நீங்க பேசுறதுக்கு நான் ஏற்பாடு பண்ணவா” என்றான் கண்களில் தோன்றிய பயத்தோடு.

அவனைப் பார்த்து முறைத்தவன், “யாரும் இல்லாம நடுத்தெருவுல அனாதையா நிக்குறான்னு நீ தான சொன்ன” என்று தன் கோபத்தைக் கட்டுப்படுத்தி, மெதுவாகக் கேட்டான்.

அதற்கு தன் எச்சிலை ஒரு இடறு விழுங்கியவன், “ஆமாம் சார். அது உண்மை தான். நீங்க சொன்ன மாதிரியே தான் செஞ்சி, அவங்களுக்கு இப்ப வேலை கூட இல்லாம ஆக்கிட்டோம்” என்றான்.

“பிறகு எதுக்காக அவள் இன்னும் திமிரோட இருக்கா?” என்று வார்த்தைகளைப் பற்களுக்குள் கடித்தபடி கேட்டான்.

“சார் திடுதிப்புன்னு, ஒரு பொண்ணு முன்னாடி நின்னு கல்யாணம் பண்ண சொன்னா. இப்படி தான் சார் பேசுவாங்க” என்று அவனும் பயந்தக்குரலில் கூறினான்.

அதற்கு சிரித்தவன், “இவளை எப்படி சரிகட்டணும்னு எனக்குத் தெரியும். நீ நான் சொன்னதை மட்டும் செய்” என்று சொல்லி அவனுக்கு சில வேலைகளைக் கொடுத்து அனுப்பினான்.

****

ஒய்யாரமாக தன் காலின் மீது காலைப் போட்டபடி அமர்ந்திருந்த நிலவனைப் பார்த்தவள், “நீங்க சொல்றது எல்லாம் நிஜம் தானா?” என்று நம்பமாட்டாமல் திரும்பவும் கேட்டாள் வனரோஜா.

அதற்கு அவன் அவளை ஒரு பார்வை பார்க்க, உடனே அவள், “இல்ல என்னால நீங்க சொல்றதை நம்ப முடியல. நீங்க என்னோட நிலைமையை யூஸ் பண்ணப்பார்க்குறீங்க. இத்தனை வருஷமா என்னைத் தேடாதவங்க, எதுக்காக இப்போ என்னைத் தேடி வந்தீங்க” என்றாள் கண்களில் கண்ணீருடன்.

அதற்கு தன் நெற்றியை நீவிவிட்டவன், “நான் தான் சொல்றேனே, உன்னை கண்டுபிடிக்க இத்தனை வருஷம் ஆகிடுச்சு” என்றவன், இப்போது கோபத்தோடு, “யாருமே என்னை இந்த அளவுக்கு எரிச்சல் படுத்தினது இல்ல. உன் பின்னாடியே சுத்தணும்னு எனக்கு எந்த தலையெழுத்தும் கிடையாது புரியுதா” என்றான் முகத்தைக் கடுகடுவென்று வைத்துக்கொண்டு.

சிறிது நேரத்திற்கு முன்பு, மருத்துவமனை வாசலில் அவனைத் திட்டிவிட்டு ஹாஸ்டல் வந்தவள், நிலா கெமிக்கல் கார்பரேஷன் என்று கூகிளைத் தட்ட வரிசையாக வந்து நின்றது என்னவோ, நிலவனின் புகைப்படம் தான். தொடர்ந்து அந்த நிறுவனம் வாங்கிய விருதை எல்லாம் பார்த்தவள், ‘இதெல்லாம் நிஜம் தானா!’ என்று தனக்குள் கேட்டுக் கொண்டாள்.

மெடிக்கல் துறை சார்ந்து இருக்கும் வனரோஜாவுக்கு, அந்த நிறுவனத்தைப் பற்றி தெரிந்து தான் இருந்தது. அதன் நிருவனரைப் பார்க்கத் தான் கூகிளைத் தட்டினாள்.

‘இந்த நிலவன் எதுக்காக என்னைப் பார்த்து அப்படி ஒரு கேள்வியைக் கேட்கணும்’ என்று அவள் நினைக்கும் போதே, தெரியாத நம்பரில் இருந்து அவளது அலைபேசிக்கு அழைப்பு வந்தது. நிலவனின் உதவியாளர் தான் பேசினான். அவளிடம் ஒரு மிகப்பெரிய ரெஸ்ட்டாரண்ட் பெயரைச் சொல்லி, அங்கு அவளை வரக்கூறினான்.

அவனிடம் பேசிவிட்டு வைத்தவள், அவ்வளவு பெரிய தொழில் ஜாம்பவான் எதற்காக தன்னையே சுத்தி வரவேண்டும் என்ற காரணத்தைத் தெரிந்து கொள்ள, அவன் சொன்ன இடத்திற்கு சென்றவள், அங்கே நிலவனால் சொல்லப்பட்ட செய்தியைக் கேட்டு அதிர்ந்தாள்.

பின் அவள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரைப் பார்த்தவன், “இங்கப்பாரு வனரோஜா, உன்னோட அம்மா யாருன்னு எனக்குத் தெரியும். நான் சொல்றதை நீ கேட்டா உன்னை அவங்களிடம் கூட்டிட்டுப்போவேன்” என்று சொல்லி நிறுத்த.

தன் கண்ணீரை துடைத்துக் கொண்டவள், “என்னை முதல்ல அவங்கக்கிட்ட கூட்டிட்டுப் போங்க” என்று குரலில் நடுக்கத்துடன் அவள் கூற, தன் உதட்டைக் கடித்துவிட்டு, “சரி ஆனா, நான் சொன்னதை நீ கேட்கணும்” என்று அவன் கூறியதும், தன் தலையை ஆட்டிக்கொண்டாள் வனரோஜா.

தன் வாழ்வில் அனைத்தையும் இழந்து நின்ற வனரோஜா, சிறிதும் பயம் இல்லாமல் ஒரு ஆடவனோடு செல்லத் தயாரானாள்.

நிலவன், என்னதான் நிலா கெமிக்கல் கார்பரேஷன் ஓனராக இருந்தாலும், அவன் தன்னை கடத்தி வித்துவிடுவானோ அல்லது வேறு எதுவும் செய்துவிடுவானோ என்ற பயம் எல்லாம் ஒரு மூலையில் கிடந்தாலும், தன் அம்மாவிற்கு தெரிந்தவன் என்ற காரணத்தால் மட்டுமே, அவனுடன் செல்லத்தயாரானாள் வனரோஜா.

முன்பு, தன் பெற்றோரைப் பற்றி அபியின் தாய் மது சொன்னதை அவள் நம்பவில்லை. தன்னைப் பெற்று எடுத்த, அந்த முகம் தெரியாத தாயை உடனே பார்க்க, அவளது மனது அடித்துக் கொண்டது.

நிலவனின் மகிழுந்தில் ஏறி அமர்ந்தவள், “என்னோட அம்மா எப்படி இருக்காங்க? அவங்கப் பெயர் என்ன?” என்று அவனிடம் கேள்விகளை அடுக்கிக்கொண்டே சென்றாள்.

சிறியதாக ஒரு பார்வை பார்த்தவன், “அவங்களைப் பார்க்கத் தானே போறோம் கொஞ்சம் அமைதியா வா” என்றதும் தன் வாயை அவள் மூடிக்கொண்டாலும், தன் கைகள் இரண்டையும் கோர்த்துக் கொண்டு, சிறுமகிழ்ச்சியுடன் வந்தாள் வனரோஜா.

ஆனால் அதெல்லாம் நிலவன் அவளது தாயைக் காட்டும் வரை தான். ஒரு கல்லறை அருகே மகிழுந்தை நிறுத்திவிட்டு, “இவங்க தான் உன்னோட அம்மா, பக்கத்துக் கல்லறையில இருக்குறது தான் உன்னோட அப்பா. ரெண்டு பேரும் பத்து வருஷத்துக்கு முன்னாடியே செத்துப்போயிட்டாங்க” என்று சொல்லி அவளுக்கு அதிக மன அழுத்தத்தைத் தந்து விட்டு தள்ளி நின்றான் நிலவன்.
 

NNO7

Moderator
அத்தியாயம் – 6

தன் பெற்றோரின் கல்லறை முன்பு மண்டியிட்டு அழும் வனரோஜாவைப் பார்த்து, சிரிப்பு தான் வந்தது நிலவனுக்கு. கொஞ்சமும் மனிதநேயம் இல்லாமல் தான் அவன் நின்று கொண்டிருந்தான்.

இந்தியாவில் காலடி எடுத்து வைக்கும் முன்னே, அவன் வனரோஜாவைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் அறிந்து தான் இருந்தான். அப்படி இருந்தும், நிலவனுக்கு அவள் மேல் பாவம் எல்லாம் ஒன்றும் வரவில்லை. அந்த அளவுக்கு கல் நெஞ்சம் மிகுந்தவன், குறிக்கோள் எல்லாம், தான் வந்த விஷயத்தை அடைவதில் தான் இருந்தது.

ஒரு மரத்தின் அடியே சென்று நின்று கொண்டவன், தன் உதவியாளனை அழைத்து, “நான் சொன்ன ஏற்பாட்டை எல்லாம் பார்த்துட்டியா” என்றான் தன் டேப்லட்டில் பார்வையைப் பதித்தபடி.

அவனோ பவ்யமாக, “பண்ணிட்டேன் சார். ஆனா...” என்று சொல்லி இழுத்தான், தூரத்தில் மண்டியிட்டு அழுது கொண்டிருப்பவளைப் பார்த்து

பின், நிலவனின் பார்வைக் கண்டுப் பதறியவன், “அதில்ல சார், வனரோஜா மேடம்கிட்ட நாம உண்மையை சொல்லிடலாமே. அவங்களைப் பார்த்தா நல்லவங்க மாதிரி தான் தெரியுது. நமக்கு வேலையும் சுலபமா முடிஞ்சிடும்” என்று தூரத்தில் அழுதுகொண்டவளைப் பார்த்தபடி கூறினான்.

அதற்குப் பல்லைக் கடித்த நிலவன், ஆங்கிலக் கெட்டவார்த்தையை சொல்லியபடி, “ஒன்னும் இல்லாம ரோட்ல இருக்குறவக்கிட்ட, பல பில்லியன் டாலர் சொத்துகள் அவள் பெயரில் இருக்குதுன்னு சொன்னா எப்படி சும்மா இருப்பா... வேலையைப் பாரு போ..” எனக்கடிந்து விழுந்துவிட்டு,

இப்போது, வனரோஜாவின் அருகே வந்தான் நிலவன்.

“உங்க அம்மாவப் பார்க்கணும்னு சொன்னியே, பார்த்துட்ட தானே!. இப்ப நான் சொல்றதைக் கேட்குறியா?” என்று அவன் பேச.

தன் வாயைத் திறக்காமல், தலையை மட்டும் ஆட்டிக்கொண்டாள்.

உடனே அவள் கையைப் பிடித்து, அவளை எழுப்பிவிட்டவன், தன் மகிழுந்தில் அவளுடன் ஏறினான்.

வனரோஜா இன்னும் தன் அழுகையை நிறுத்தவில்லை. அதில் முகத்தை சுழித்தவன், “எப்பவோ செத்தவங்களுக்காக எதுக்காக இப்ப நீ கண்ணைக்கசக்குற?” என்றான்.

தன் கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்தவள், “இந்த உலகத்துலையே எனக்கு உரிமைப்பட்டவங்க, இவங்க மட்டும் தான். கடவுள் ஏன் தான் எங்க அம்மா, அப்பாவ என் கண்ணுல காட்டாம இப்படி பண்ணானோ தெரியல” என்றாள் விசும்பியபடி.

தன் கையில் இருந்த கோப்பை அவள் மடியில் தூக்கிப்போட்டவன், “இதைப் படிச்சுப்பாரு” என்றான்.

அந்தக் கோப்பில் நிலா ஹாஸ்பிடல் என்று எழுதி இருந்தது. அதனைப் படித்தவள், அவனைப் பார்த்து, “புரியல.. இதை எதுக்காக நீங்க என்கிட்ட கொடுக்குறீங்க?” என்று கேட்டாள்.

“நிலா ஹாஸ்பிடல் என்னோடது தான். ஆனா மல்டி ஸ்பெசாலிட்டி கிடையாது. எந்த வித பெரிய கருவிகளும் இல்லாத சாதாரண மருத்துவமனை தான் அது. லண்டன்ல ரிச்மண்ட் பக்கத்துல இருக்குற கிராமத்து மக்களுக்கு இதை விட்டா வேற மருத்துவமனையும் கிடையாது.

உயிர்காக்கும் கருவி இல்லாததுனால, பல மக்களோட உயிர் இதுனால போகுது “ என்று சொல்லி நிறுத்தினான்.

அவன் விஷயத்தைக் கூறி முடிப்பதற்குள் முந்திக்கொண்டு, “ஆனா நான் எமர்ஜென்சி டாக்டர் கிடையாதே! நான் கார்டியாலஜிஸ்ட். அதுல டிஎம் பண்ணிட்டு, பயிற்சி மருத்துவரா இருந்துக்கிட்டே கார்டியோடோராசிக் அறுவை சிகிச்சைக்குப் படிச்சிக்கிட்டு இருக்கேன்” என்று அவன் மருத்துவருக்கு ஆள் எடுப்பதாக நினைத்துக் கொண்டு பேசினாள் வனரோஜா.

“கொஞ்சம் பேசுறத நிறுத்துறியா!” என்று பெருமூச்சி விட்டவன், “கேளு, உன்னோட தாத்தாவும் என்னோட தாத்தாவும் நண்பர்கள். சின்ன வயசுலையே நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் பேசிட்டாங்க. அப்ப தான் இந்தியா டூர் வந்தப்ப நீ காணாம போயிட்ட, இப்ப உன்னைக் கல்யணம் பண்ணாத் தான், என் தாத்தாவோட சொத்து எனக்கு வரும். மருத்துவமனையையும் நல்ல நிலைமைக்குக் கொண்டு வர முடியும். இதனால பலபேரோட உயிரும் காப்பற்றப்படும்” என்று நீளமாக, அவளுக்குப் புரிய வைக்கும் நோக்கில் பேசினான்.

அவன் சொன்னதை எல்லாம் உள்வாங்கியவள், “நிலா கெமிக்கல் கார்பரேஷன் ஓனருக்கு மருத்துவமனைக் கட்ட வசதி இல்லைன்னு சொன்னா நம்புற மாதிரி இல்ல” என்றாள் வனரோஜா.

அவள் பேச்சில், உள்ளுக்குள் தன் பல்லை நரநரவென்று கடித்தவன், தன் கோபத்தைக் கட்டுப்படுத்தியபடி, “மருத்துவமனை கட்ட எனக்கு வசதி இல்லைன்னு நான் உன்கிட்ட சொல்லவே இல்லையே. நான் சொல்றது மிகப்பெரிய நவீன கருவிகள் கொண்ட மருத்துவமனை. அதுமட்டும் இல்லாம, மருத்துவ வசதி இல்லாத இந்திய கிராமத்திலும் நான் மருத்துவமனை கொண்டுவரப்போறேன். கல்யாணம் ஆனா தான், என் தாத்தா சொத்து எனக்குக் கிடைக்கும். அதுவும் உன்னை” என்றான். கொஞ்சம் மெய்யும், மீதி எல்லாம் பொய்யும் கலந்தபடி பேசினான் நிலவன்

அவன் சொல்லவரும் விஷயம் இப்போது தான் வனரோஜாவுக்கு புரிபட ஆரம்பித்தது.

“அதுக்கு இப்ப என்ன சொல்லவரீங்க? உங்களுக்கு வரப்போற சொத்துக்கு நான் எதுக்கு உங்களைக் கல்யாணம் பண்ணனும்? முதல்ல நீங்க யாரு? முன்னப்பின்ன தெரியாத உங்களை நான் எப்படி கல்யாணம் பண்ணிக்கமுடியும்?” என்று உதடு துடிக்கக் கேட்டாள்.

தன் காதில் சுண்டுவிரலைவிட்டு ஆட்டியவன், “எதுக்காக இப்படி கத்துற? என்னை பாக்குறியே” என்று தன் இரண்டு கைகளையும் நீட்டியவன், “நான் எப்படி இருக்கேன், நீ எப்படி இருக்க... எனக்கு மட்டும் உன்னைக் கல்யாணம் பண்றதுல விருப்பம் இருக்குன்னு நீ நினைக்குறியா?” என்றான் எகத்தாளமான குரலில்.

அதற்கு அவளிடம பேச்சு இல்லை. ஒரு கணம் அமைதிக்குப் பின், “இங்கப்பாரு வனரோஜா, உன்னோட நிலைமையும் எனக்கு நல்லாவே தெரியுது. உனக்கும் ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் பிரேக்அப் ஆகியிருக்கு. குடும்பமும் இல்ல, வேலையும் இல்ல. எனக்கும் கேர்ள்பிரண்ட் இருக்கா. சோ நாம ஏன் இரண்டு வருடத்திற்கு மட்டும் இந்த கான்ட்ராக்ட் திருமணத்தப் பண்ணிக்கக்கூடாது? உனக்கு நான் பெரிய தொகையா செட்டில் பண்ணிடுறேன்” என்று நான் விளையாடும் விளையாட்டிற்கு விளையாட வா என்பது போல் அழைத்தான் அவளை.

அதில் அவள் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது, “என்ன பேசுறீங்க? இது என்ன நாடகம்? கேட்குறதுக்கே அசிங்கமா இருக்கு” என்றாள் முகத்தை வேறு பக்கம் திருப்பியபடி.

“இந்த மாதிரி கல்யாணம் பண்றது தான் இப்ப சீனால ட்ரேண்டிங். சிங்கிளா இருக்குறவங்களை எல்லாம் கல்யாணம் பண்ண சொல்லி அவங்க அரசாங்கம் போர்ஸ் பண்ணுது. உடனே எல்லாரும் கான்ட்ராக்ட் கல்யாணம் தான் பண்ணிக்கிறாங்க. இந்த மெய்நிகர் உலகத்துல எதுக்காக இன்னும் திருமணத்தை புனிதமா பார்க்குற?” என்று எதிலும் நம்பிக்கை இல்லாமல் கை தேர்ந்த வியாபாரி போலவே பேசினான்.

வனரோஜாவும் யோசித்தாள், அவன் சொன்னது போலவே தனக்கென்று ஒன்றும் இல்லை. இனி வேலை தேடுவதும் சிரமம் என்று நினைத்தாள். ஐந்து வருடங்கள் மருத்துவப்படிப்பைப் படித்துவிட்டால் அனைத்தும் கிடைத்துவிடும் என்பது உண்மையல்ல. அதனைத் தொடர்ந்து மூன்று வருடங்கள் மேல் படிப்பை முடித்துபின்னும், பயிற்சியில் இருந்தே இன்னும் படித்துக்கொண்டே தான் இருக்கின்றாள் வனரோஜா.

மருத்துவத்திற்கே தன் வாழ்வை அர்பணித்துவிட்டவளுக்கு அது ஒரு சுமையாகவும் தெரியவில்லை.

அவள் யோசிப்பதைப் பார்த்தவன், “இரண்டு வருடம் நீ லண்டனில் தான் இருக்கணும். உனக்குன்னு தனியா ரூம் ப்ரைவசி எல்லாமே கிடைக்கும். ஒரு வருடம் முடிந்ததும், உனக்கு நான் பத்து கோடி ரூபாய் செட்டில் பண்ணிடுவேன். அடுத்த வருடம் முடியும் போது...” என்று அவன் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, வனரோஜாவிற்கு கோபம் வர ஆரம்பித்துவிட்டது, “எனக்கு உங்கப்பணம் எல்லாம் தேவை இல்ல” என்று எரிச்சலுடன் சொல்லிவிட்டாள்.

பின் சிறு அமைதிக்குப் பின், “உங்களுக்கு சொத்து வேணும், ஆனா எனக்கு வேலை வேணும். உங்க மருத்துவமனையில் நான் பயிற்சி மருத்துவரா தொடர்வதுக்கு நீங்க சரின்னு சொன்னீங்கன்னா, எனக்கு சம்மதம் தான்” என்று ஒரு நாள் கூட யோசிப்பதற்குக் கால அவகாசம் கேட்காமல், அவள் தன் முடிவை அறிவித்தாள்.

இதற்கு முன் இருந்த வனரோஜாவாக அவள் இருந்திருந்தால், அவனுடன் பேசவே அவள் ஒத்துக்கொண்டிருக்க மாட்டாள் தான். ஆனால் இப்போது அவளின் குறிக்கோள் எல்லாம் தன் கல்வி முடியவேண்டும் என்பதில் தான் இருந்தது.

‘மீன் தூண்டிலில் தானாக சிக்கிவிட்டது’ என்று நினைத்த நிலவன், தன் உதட்டை ஒரு பக்கமாக வளைத்து சிரித்து வைத்தான்.

*****

தன் ஜெட்டில் பொறுமை இல்லாமல் தலையைப் பிடித்தபடி அமர்ந்திருந்த சிவா, தன் உதவியாளரைப் பார்த்து, “எதுக்காக போன் போக மாட்டேங்குது” என்று கத்தினான்.

‘இவன் தெரிந்து தான் கேட்கின்றானா’ என்பது போல் அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “நாம ஜெட்ல இருக்கோம் சார். டவர் கிடைக்காது” என்றான் அவனது உதவியாளன் ராஜ்.

“அந்த நிலவன் இந்நேரம் ரோஜாவ பார்த்து இருப்பானா?” என்று படபடப்பான குரலில் சிவா கேட்க.

‘பார்த்து இருப்பானாவா! அவன் இந்நேரம், அந்தப்பொண்ணைக் கல்யாணமே பண்ணிருப்பான்’ என்று நினைத்த ராஜ், அதனை அப்படியே அவனிடம் கூறாமல், “பார்த்து இருந்தாலும், கல்யாணம் பண்றதுக்கு அந்தப்பொண்ணு சம்மதிக்கணுமே சார்” என்றான்.

“என் ரோஜா சம்மதிக்க மாட்டாள் தான். இவன் கட்டாயப்படுத்தி அவளைக் கடத்திட்டு போயிட்டா என்ன பண்றது” என்று பதறினான் சிவா.

“சார் என்ன தான் உங்களுக்கு நிலவன் சாரைப் பிடிக்கலைனாலும் அவர் பக்கா ஜென்டில்மேன் சார். அவர் கட்டாயப்படுத்தி எதுவும் செய்யமாட்டார். நல்லா திட்டம் போட்டு சாதுரியமா தன் காரியத்தை சாதிப்பாரு” என்று அவனைப் பற்றி விலாவரியாக அறிந்திருந்த ராஜ் கூறினான்.

அதற்கு ஒரு கணம் அமைதியான சிவா, “அது தான் என் பயமே. ரோஜா, அம்மா மாதிரி இல்ல. அவள் என்னை மாதிரியே பலவீனமான இதயம் கொண்டவளா இருக்காள். அவள் மனநிலையும் துரோகிகளை நினைச்சு ரொம்ப வருத்தத்தில் இருக்கும். அதை இந்த நிலவன் நாடகம் ஆடி தனக்கு சாதகமா மாத்திக்காம இருக்கணும்” என்று அவனிடம் சொல்வது போல் தனக்கும் சேர்த்தே சொல்லிக் கொண்டான் சிவா.

சிவா சரியாக இந்தியாவில் வந்து தரையிறங்கியதும், அவனுக்கு அலைபேசி மூலம் அழைப்புவிடுத்தாள் நிலா.

நிலாவின் அழைப்பை எடுத்தவன், “நான் அவசர வேலையில் இருக்கேன் நிலா. நான் உன்னை பிறகு கூப்பிடுறேன்” என்று அவன் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, சிரிக்க ஆரம்பித்த நிலா, “இறுதியா இந்தியாவுக்கே போயிட்டீங்கப் போல...” என்றாள்.

அவள் சிரிப்பில் எரிச்சல் அடைந்தவன், “உனக்கு என்னடி பிரச்சனை? இப்ப எதுக்காக போன் பண்ண?” என்றான் முகத்தைக் கடுகடுவென்று வைத்துக் கொண்டு.

“கல்யாணத்தை நிப்பாட்டுறதுக்குத் தான், அங்க நீங்க போயிருக்குறதா தகவல் வந்துச்சு...” என்றாள் நக்கலாக.

“ஆமாம் அதுக்காகத் தான் வந்துருக்கேன்? இப்ப என்ன அதுக்கு? உன் அண்ணன் நினைக்குறது எதுவுமே நடக்காது” என்று சொல்லிக்கொண்டே தன் அருகே வந்து நின்ற மகிழுந்தில் ஏறி அமர்ந்தான் சிவா.

அதற்கும் சிரித்தவள், “வழக்கம் போல, என் அண்ணன் கிட்ட நீங்க தோத்துப்போயிட்டீங்க சிவா. அந்த வனரோஜாவுக்கும் என் அண்ணன் நிலவனுக்கும் கல்யாணம் ஆகிடுச்சி. இப்ப தான் அவர்கிட்ட நான் பேசுனேன்” என்றாள் நிலா.

சிவாவின் மனதில் ஆயிரம் எரிமலைகள் ஒன்றாக சேர்ந்து வெடித்தாலும், இப்போது கோபம் கொள்ளும் நேரம் இல்லை என்பதனை உணர்ந்து, “கல்யாணம் பண்ணிட்டா மட்டும் சொத்து கிடைச்சிடுமா? அதுல என்னவெல்லாம் எழுதி இருக்குன்னு எனக்கும் நல்லாவே தெரியும் நிலா. வனரோஜாவுக்கு கல்யாணமாகி குழந்தை பிறந்தாத் தான் சொத்து. அந்தக் குழந்தை நிச்சயம் உன் அண்ணனுக்குப் பிறக்குறதா இருக்காது. அப்படி நடக்கவும் நான் விட மாட்டேன்” என்று ரோஷத்துடன் சொல்லி நிலாவின் மனத்தினை அதிரவைத்தான் சிவா.
 

NNO7

Moderator
அத்தியாயம் – 7

சிவாவின் பேச்சில் கோபம் அடைந்த நிலா, “சும்மா வாய்க்கு வந்ததை பேசாதீங்க” என்று கத்தினாள்.

“நீ என்னவேணாலும் நினைத்துக்கொள் நிலா. ஆனா உன்னோட அண்ணன் நினைச்சது எதுவுமே நடக்காது. அதுக்கு உன் அண்ணனோட காதலியும் ஒத்துக்கமாட்டாள்” என்றான் இந்தப்பக்கம் பேசிய சிவா.

சிவாவின் மகிழுந்து புயல் வேகத்தில் சென்று கொண்டிருந்தது. வனரோஜாவின் நலனை தெரிந்துகொள்வதில் தீவிரமாக இருந்த சிவாவிற்கோ, நிலாவின் பேச்சு எரிச்சலைத் தர, “கல்யாணம் ஆனால் மட்டும், எதுவும் பண்ணிடலாம்னு நீயும் உன் அண்ணனும் தப்பு கணக்குப் போடாதீங்க” என்று அவன் சொல்லி தனது அலைப்பேசி இணைப்பை ரத்து செய்துவிட்டு, தன் தங்கையைப் பார்த்துக்கொள்ள ஏற்பாடு செய்திருந்த ஆட்களை தொடர்புகொண்டான். ஆனால் அவர்களுக்கு அலைப்பேசி அழைப்பு மட்டும் செல்லவே இல்லை.

அவன் திரும்பத் திரும்ப முயற்சி செய்து தோற்றுப்போக, சிவாவிற்கு பதற்றமும், கோபமும் அதிகமாகியது.

இங்கே சிவா பேசிவிட்டு வைத்ததும், தன் அலைபேசியைப் பார்த்துக் கொண்டே இருந்த நிலா, “என்னையவே அவாய்ட் பண்ணி, திட்ட வேற செய்யுறீங்களா சிவா... இதுக்கு நீங்க நல்லா என்கிட்ட அனுபவிக்கத் தான் போறீங்க... சின்ன வயசுல இருந்து என்னைப் பார்த்துட்டு இருக்கீங்க... என்னை விட இப்ப முளைச்ச தங்கச்சி பெருசா போயிட்டாளா... பார்த்துக்குறேன், எப்படி இருந்தாலும், அவள் இங்க தானே வந்து ஆகணும்” என்று முகம் தெரியாத வனரோஜாவின் மீது வெறுப்பை வளர்த்துக்கொண்டாள் நிலா.

அவளுக்குத் தன் அண்ணன் நிலவன் மேல் பெரிதும் நம்பிக்கை இருந்தது, அவன் சொன்னதைச் செய்துவிடுவான் என்று.

*****

“நீ சொன்னது எல்லாம் எனக்கு ஓகே தான். நிலா ஹாஸ்பிடல்ல உன் பயிற்சியை நீ தொடரலாம். ஆனா அதுக்கு முன்னாடி, உன் மனசுல நல்ல ஏத்திக்கோ, வெறும் இரண்டு வருஷம் கான்ட்ராட் மட்டும் தான் நமக்குள்ள இருக்கும்.

என் மேலையோ, என் சொத்து மேலையோ ஆசை உனக்கு வரக்கூடாது..” என்று அவன் சொல்லும் போதே முகத்தை சுழித்த வனரோஜா, “எனக்கு அதுல எல்லாம் கொஞ்சமும் ஆர்வம் இல்ல மிஸ்டர். ஏன் நீங்க அம்பானிக்கே மகனா இருந்தாலும், உங்க காசு சொத்து இதெல்லாம் பத்தி ஐ டோன்ட் கேர்” என்றாள் அழுத்தம் திருத்தமான குரலில்.

அதற்கு தன் உதட்டை ஒருபக்கமாக வளைத்து சிரித்த நிலவன், “நானும் இது மாதிரி பேசுற, நிறையா பொண்ணுங்களைப் பார்த்துருக்கேன்... எனிவே, மனசு ஒரு குரங்குன்னு பெரியவங்க சும்மா சொல்லலையே!” என்று சொல்லிக்கொண்டே, தன் கையில் இருந்தக் கோப்பை அவள் முன்னே இருந்த டீப்பாயில் எடுத்துப்போட்டவன், “நல்லா படிச்சுப் பார்த்து கையெழுத்துப்போடு” என்றான்.

வனரோஜா அதனைத் தன் கையில் எடுத்துப் படித்துப் பார்த்தாள். அதில் அவன் சொன்னது போலவே இரண்டு வருடங்கள் பிரிந்துவிடுவேன், சொத்து எதுவும் கேட்கமாட்டேன் என்பது போல எழுதி இருந்தது. அதில் கையெழுத்துப் போடுவதற்கு முன், நிமிர்ந்து தன் முன்னால் அமர்ந்திருந்த நிலவனைப் பார்த்தவள், “எனக்கு சிலபல கண்டிஷன்ஸ் இருக்கு. அதெல்லாம் என்னன்னு கேட்காம, நீங்களாவே ஏன் பத்திரத்த ரெடி பண்ணீங்க?” என்றாள் துடுக்கான குரலில்.

அதற்கு நிலவனோ, மிகவும் கூலாக, “உனக்குத் தேவை படிப்பு மற்றும் வேலை அதைத் தவிர, நீ வேண்டாம்னு சொன்னாலும், உனக்கு தேவையான தொகையை நான் கொடுக்கத்தான் போறேன். இதுக்கு மேல உனக்கு என்ன வேணும்?” என்றான் திமிரான குரலில்.

அதற்கு அவனை நேர்கொண்டப் பார்வை பார்த்தவள், “பாதுகாப்பு வேணும். இப்ப எப்படி நான் உங்கக்கூட வரப்போறேனோ.. அதே மாதிரி தான், இரண்டு வருஷம் கழிச்சும் நான் இங்க வரணும்” என்றாள்.

அதற்கு அவளைப் புரியாதப் பார்வை பார்த்தவனுக்கு, அவளின் தமிழ் சரியாகப் புரியவில்லை.

“இல்ல புரியல” என்றான் அவன் இரண்டு வார்த்தைகளில்.

“நீங்க சொன்னதைத் தான் நானும் திரும்ப சொல்றேன். உங்களுக்கு என் மேல் எந்த ஆர்வமும் வரக்கூடாது. என் பக்கத்துல நீங்க நெருங்கக்கூடாது..” என்று அவள் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, முகத்தை சுழித்தவன், “போதும் நிறுத்து, நான் தான் சொன்னேனே! எனக்குக் காதலி இருக்கா. அப்படி இருக்கும் போது போயும் போயும் உன்னை...” என்று தன் ஆள்காட்டி விரலை அவள் முன் நீட்டியபடி பேசியவன், பின் தன் கையை மடக்கிக்கொண்டு, “என்னை டென்ஷன் ஆக்காத கையெழுத்துப் போடு” என்றான் அரட்டல் குரலில்.

“இல்லை” என்று மறுப்பாக தன் தலையை ஆட்டியவள், “என்னால இதுல கையெழுத்துப்போட முடியாது. என்னதான் நீங்க வாய் வார்த்தையா சொன்னாலும், நான் தீண்டத்தகாதவன்னு சொல்லி முகத்தை அசுகையா வச்சாலும், எனக்கு நம்பிக்கை வர்றதுக்கு, நீங்க பத்திரத்தில் நான் சொன்னதை நீங்க சேர்க்கணும்” என்றாள் கறாரான குரலில்.

முதன்முதலாக அவள் முன்னால் விழித்து நின்றவன், ‘நேரம் சென்று கொண்டே இருக்கின்றது. இப்போது ஆகவேண்டியக் காரியங்களைப் பார்க்கலாம், பின்னால் வருவதைப் பின்னால் பார்த்துக்கொள்ளலாம்’ என்ற நினைப்போடு, தன் உதவியாளனை அழைத்து வனரோஜா சொல்லியபடியே பத்திரத்தை தயாரிக்கக் கூறினான்.

பின், “நீ சொன்ன மாதிரியே பண்ணிடலாம்” என்றான் வனரோஜாவிடம்.

வனரோஜாவோ, “எனக்கு இன்னொரு சந்தேகமும் இருக்கு சார்” என்றதும், “சொல்” என்பது போல அவன் தன் தலையை ஆட்ட, “வழக்கமா ஒன் இயர்க்கு மட்டும் தானே திருமணத்துக்கு கான்ராக்ட் போடுவாங்க... நீங்க எதுக்காக ரெண்டு வருஷம் போட்டு இருக்கீங்க?” என்று கேட்டாள்.

அது குழந்தை பிறப்பதற்கு உண்டான கால அவகாசம் என்று அப்படியே அவனால் அவளிடம் சொல்லவா முடியும்! அதனால், “டாகுமென்ட்ஸ் எல்லாத்தையும் சேர்த்து சொத்து என் கைக்கு வர அவ்வளவு நாள் ஆகிடும். அதுக்கு ஒரு வருஷம் போதாது” என்று தன் வாய்க்கு வந்ததைச் சொல்லி சமாளித்தான்.

வனரோஜா எந்தக் கேள்விக் கேட்டாலும், அதற்கு நிலவனிடம் பதில் தயாராகத் தான் இருந்தது. தொழிலில் சாதுரியமாகப் பேசி, அதில் வெற்றி பெறுபவனுக்கு, வனரோஜாவை நம்ப வைப்பது எல்லாம் சுலபமாகத் தான் இருந்தது.

முதன்முதலாக அவளைப் பார்க்கும் போது, தன் அழகில் மயங்கிவிடுவாள் என்று தப்புக்கணக்குப் போட்டவன், பின் அவளை எவ்வாறு தன் வசப்படுத்துவது என்று நன்றாக உள்ளுணர்ந்து செயல்பட்டான்.

இதில் வனரோஜாவுக்குத் தெரியாத மிகப்பெரிய ரகசியம் ஒன்றும் இருந்தது. வனரோஜாவுடன் சேர்ந்து குழந்தை பெற்றால் மட்டுமே நிலவனுக்கு சொத்து கையில் கிடைக்கும். அதற்காக அவன் என்ன செய்யப்போகின்றான்? அவன் நினைப்பு தான் என்ன? தன் காதலிக்கு இதுநாள் வரையிலும் உண்மையாக இருந்த நிலவன், ஐவிஎப் மூலம் வனரோஜாவை செயற்கை முறையில் கருத்தரிக்க செய்யப்போகின்றானா என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

****

இங்கே தன் டிடெக்டிவைத் தேடி வந்த சிவாவோ, அவனது சட்டையைப் பிடித்து சண்டை போட்டுக்கொண்டிருக்க, அங்கே எப்போதோ சட்டப்பூர்வமாக நிலவனுக்கு மனைவி ஆகியிருந்தாள் வனரோஜா.

“சார் என் ஆட்களை என்னாலையே ட்ராக் பண்ணமுடியல” என்று பதறினான் அவன்

அங்கே ஓடி வந்த சிவாவின் பிஏ ராஜ், “சார் விடுங்க சார்” என்று கூறிக்கொண்டே, சிவாவை தடுத்து நிறுத்தியவன், “நிலவன் சார் ஆட்கள், நம்ம ஆட்களை எல்லாம் அவங்க கட்டுப்பாட்டில் வச்சிருக்காங்க சார். நாம தாமதிக்குற ஒவ்வொரு நிமிஷமும் மேடமுக்கு தான் ஆபத்து சார்” என்று அவன் சொல்லும் போதே, சிவாவிற்கு பைத்தியம் பிடித்துவிட்டது போலானது.

தன் தலைமுடியை அழுத்தமாக கோதியவனின் கண்கள் இரண்டும் கோபத்தில் சிவந்து தான் போனது.

“நிலவன் ஆட்களை ட்ராக் பண்ணு” என்றான் சிவா ராஜிடம்.

“எங்களால முடியல சார். நிலவன் சார், அவர் சொந்த ஜெட்டில் தான் இந்தியா வந்துருக்காரு. அவர் ஜெட் பக்கத்துல போய் நின்னா மட்டும் தான் அவங்களை நாம பிடிக்க முடியும். இதுல வேற வழி ஏதாவது இருக்கான்னு எனக்குத் தெரியலை சார்” என்று சொல்லிவிட்டு தலைக் குனிந்தான் ராஜ்.

“அந்த பொறுக்கி வர்ற வரைக்கும் நான் அவன் ஜெட் பக்கத்துல காவல் காக்கணுமா?. ஏதாவது பண்ணு... நம்ம பவரை யூஸ் பண்ணி மந்திரியைப் பிடி” என்று காட்டுகத்தலாக கத்தினான் சிவா.

அவன் சொன்னதற்கு மண்டையை ஆட்டிய ராஜ், ‘ரோஜா மேடம் கிடைச்சதுமே, இவர் அவங்களைப் பார்க்க வந்திருந்தா இந்தப் பிரச்சனையே வந்து இருக்காது’ என்று நினைத்துக் கொண்டே அவன் சொன்னதை செயல்படுத்த ஆரம்பித்தான்.

அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று பதற்றத்துடன் இருந்த சிவாவைப் பார்த்த டிடெக்டிவ், “ரெண்டு மாசத்துக்கு முன்னவே நீங்க வந்து இருக்கலாம் சார்” என்று ராஜ் நினைத்ததையே அவரும் சொன்னார் மெதுவான குரலில்.

அவ்வளவு பெரிய பதவியில் இருக்கும் சிவாவின் கண்கள் இரண்டும் கலங்கி, சட்டை எல்லாம் கசங்கிப் போய் பார்க்கவே பரிதாபமான நிலையில் இருந்தான்.

ஆனால் அவன் அவரிடம் எதுவும் சொல்லிக்கொள்ளாமல், உணர்வற்ற நிலையில் மெதுவாக நடந்து வெளியே சென்றான், அவன் அருகே ஓடி வந்த ராஜ், “நீங்க சொன்னதை எல்லாம் செஞ்சிட்டேன் சார். மனம் தளராதீங்க... தங்கச்சி கிடைச்சிடுவாங்க” என்றான் சிவாவின் தோள்களை தாங்கிக்கொண்டபடி.

ராஜைப் பார்த்தவன், “தங்கச்சி தான் முக்கியம்னு நான் நினைச்சி இருந்தா, என்னோட தங்கச்சி இன்னைக்கு என்னோட இருந்திருப்பா தானே ராஜ்” என்றான்.

ராஜ் எதுவும் பேசவில்லை. தொடர்ந்து பேசிய சிவா, “என் அம்மா மாதிரியே நானும் என் நிறுவனம் தான் முக்கியம்னு இருந்துட்டேன்” என்றான் வருத்தமான குரலில்.

“அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை சார். உங்களால் அங்கிருந்து வேலைகளை விட்டு வரவும் முடிஞ்சிருக்காது. இப்ப ஒன்னும் கெட்டுப் போகல. நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க. எல்லாம் நல்லா படியா நடக்கும்” என்று ஆறுதல் வார்த்தைகளைக் கூறினான் ராஜ்.

அதற்கு வெற்று சிரிப்பு ஒன்றை சிந்திய சிவா, “நிலவன் யாருன்னு உனக்கு நல்லா தெரிஞ்சும், என்னை நீ அமைதியா இருக்க சொல்ற பார்த்தியா!” என்றான்.

ராஜுக்கு நிலவனைப் பற்றி நன்றாகவே தெரியத்தான் செய்யும். இருந்தும் அவன் சிவாவின் நிலைமையை அறிந்து, அவனுக்கு ஆறுதலாக இருந்தான்.

“ஆனா சார், அப்படியே கல்யாணம் ஆகியிருந்தாலும், நாம ரோஜா மேடம்கிட்ட சொல்லி புரிய வைக்கலாம். நிலவனைப் பத்தி தெரிஞ்சா அவங்களே அவர் கூட போகமாட்டாங்க” என்றான் ராஜ்.

இங்க சிவாவும், அவனது ஆட்களும் வனரோஜாவை தீவிரமாக தேடிக்கொண்டு இருக்க, திருமணத்தைப் பதிவு செய்தக் கையோடு, வனரோஜாவைக் கூட்டிக்கொண்டு, தன் ஹெலிகாப்டர் மூலம் கேரளாவில் உள்ள தனித்தீவிற்கு சென்றிருந்தான் நிலவன்.
 

NNO7

Moderator
அத்தியாயம் – 8

ஹெலிகாப்டரில் இருந்து, ஜன்னல் வழியே கீழே பார்த்த வனரோஜா, தன் அருகே இருந்த நிலவனைப் பார்ப்பதும் வெளியே பார்பதுமாய் வந்தவள், தன் மனதில் இருந்த சந்தேகத்தை ஒரு வழியாக கேட்டாள்.

“நாம இதுலையே லண்டன் போறோமா? ஹாஸ்பிடலில் தான் என்னோட சான்றிதழ் இருக்கு. நான் இன்னும் அங்க இருந்து ரிலிவ் ஆகல” என்று ஏறியப்பிறகு அவனிடம் கூறிக்கொண்டிருந்தாள் சத்தமான குரலில்.

ஹெலிகாப்டர் சத்தத்தில் அவள் கத்தியது நிலவனுக்குப் புரியாமல் போக, அவளைப் பார்த்து, “எதுக்குக் கத்துற” என்று இவன் கத்த ஆரம்பித்தான்.

உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் போது, வனரோஜாவால், நிலவனிடம் பேச முடியவில்லை.

முதன் முதலாக ஹெலிகாப்டரில் பயணிக்கின்றாள் வனரோஜா. ஆனால் கீழே தெரிந்த அழகை அவளால் ரசிக்கமுடியவில்லை. தனது தாய் மற்றும் தந்தை இப்போது உயிரோடு இல்லை என்பதே அவளுக்குப் பேரிடியாக இருக்க, இதில் நிலவனிடம் கேட்க அவளுக்கு ஆயிரம் சந்தேகங்கள் இருந்தது.

ஹெலிகாப்டர் கடல் சார்ந்த இடத்தில் சென்று நிற்க, அதனைப் பார்த்ததுமே தெரிந்தது, அது தீவு என்று.

அதிலிருந்து இறங்கியதும், அவர்களை அழைத்துச் செல்ல மகிழுந்து தயார் நிலையில் இருந்தது.

மகிழுந்தில் ஏறியதுமே, “இங்க எதுக்காக என்னைக் கூட்டிட்டு வந்திருக்கீங்க? இது என்ன இடம்? நாம லண்டனுக்குத் தானே போறோம்னு சொன்னீங்க!” என்று அடுக்கடுக்காக கேள்வி அம்புகளை அவனை நோக்கி செலுத்தினாள் வனரோஜா.

அலைபேசியில் தன் பார்வையை பதித்து இருந்தவன், அவள் கேள்விகளில், ஒரு கணம் அவளைப் பார்த்துவிட்டு, திரும்பவும் தன் அலைபேசியைப் பார்த்தவன், “லண்டன் போறதுக்கு உனக்கு விசா இருக்குதா?” என்றான்.

அப்போது தான் அதனை உணர்ந்தவள், பின் நிமிர்ந்து அமர்ந்துவிட்டு, “அதுக்காக எதுக்கு இங்க கூட்டிட்டு வந்துருக்கீங்க?” என்றாள்.

“எனக்கு இங்க வேலை இருக்குது. இந்தத் தீவுல தான் ஒரு மாசம் இருக்கப்போறோம். இங்க இருக்கும் வரைக்கும் நீ என் கட்டுப்பாட்டில் தான் இருக்கணும். அதுக்குப் பிறகு விசா கிடைச்சதும், நீ லண்டன் போய் படி, வேலையைப் பாரு என்னவேணாலும் பண்ணு” என்று சொல்லி அவள் கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.

வனரோஜாவின் மனதில் ஏதோ சொல்லமுடியாத உறுத்தல் இருந்து கொண்டே தான் இருந்தது. இருந்தும், வாழ்க்கை இழுக்கும் இழுப்புக்கு சென்று கொண்டிருந்தாள், தன் வாழ்க்கையை இழுக்கும் கயிறு நிலவன் தான் என்பதனை அறியாமல்.

******

“என்னாச்சி இன்னுமா ஒன்னும் பண்ண முடியல” என்று கோபத்துடன் தன் ஆட்களைக் கத்திக் கொண்டு இருந்தான் சிவா.

“யாருக்கும் தெரியாம அரசாங்க உதவியுடன் தான் சார் தேடுனோம். ஆனா அவங்க எங்க போனாங்கன்னு எந்த ஒரு துப்பும் கிடைக்கல. அதனால் அவங்க நிச்சயம் ஏதாவது கடல் பகுதியில், கப்பல்ல தான் போயிக்கிட்டு இருக்கணும்” என்றான் ராஜ்.

பொதுவாக திருட்டுத்தனமாக கப்பலில் தப்பி செல்லும் கைதிகளைக் கூட பிடிக்க முடியாது. ஆனால் நிலவன் வனரோஜாவை அழைத்துச் சென்று இருப்பது என்னவோ ஒரு தீவிற்கு. அதனால் தான் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

சிவாவிற்கு அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதே தெரியவில்லை. மூளை மழுங்கியது போல் ஆனது அவனுக்கு. இருந்தும் அந்த நேரத்தில் உதவி வேண்டி தன் தாயைத் தான் அழைத்தது அவனது உள்ளம்.

ஆனால் பரணிக்கு ராஜ் பலமுறை அழைத்தும் அவர் அழைப்பை ஏற்கவில்லை.

“பரணி மேடம், மீட்டிங்ல இருப்பாங்க சார். அதனால தான் போனை எடுக்கல. இப்ப நாம என்ன செய்யுறது சார்” என்று சிவாவிடம் கேட்டான் ராஜ்.

தன் தலையைப் பிடித்துக் கொண்ட சிவா, திடீரென்று யோசனைக் கொண்டவனாக வேகமாக, நிலாவின் எண்ணிற்கு அழைத்தான்.

நீண்ட நேரம் கழித்து அழைப்பு முடியும் தருவாயில், அவன் அழைப்பை எடுத்துத் தன் காதில் வைத்தவள், “என்கிட்ட அந்த பேச்சு பேசுனீங்க திரும்பவும் எதுக்காக என்னைக் கூப்பிடுறீங்க” என்று முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டபடி கேட்டாள் நிலா.

தன் கோபத்தைக் கட்டுப்படுத்தி, தன் கண்களை அழுத்தமாக மூடித்திறந்தவன், “இப்ப உன் அண்ணன் எங்க இருக்கான். என் தங்கச்சியை எங்கையோ கடத்திட்டு போயிட்டான்” என்று கத்தினான்.

“இதுக்குத் தான் போன் பண்ணீங்களாக்கும்” என்று உதட்டை சுழித்தவள், “ஷேர் மார்கெட்ல தான் உங்களால என் அண்ணனை தோற்கடிக்க முடியல. இப்ப சாதாரண விஷயத்தில் கூட என் அண்ணன் கூட உங்களால மொத முடியல பார்த்தீங்களா. என்கிட்ட வந்து கத்துறீங்க” என்று சொல்லி சிரித்தவள், சிவாவை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ, அந்த அளவுக்கு மட்டம் தட்டிப் பேசினாள்.

அவள் பேசப்பேச, சிவாவின் கோபம் எல்லையைக் கடந்து கொண்டே தான் சென்றது. இருந்தும் அவளிடம் விஷயத்தை வாங்க பொறுமையை இழுத்துப் பிடித்து, “இங்கப்பாரு நிலா, உனக்கு உன் அண்ணன் எப்படியோ அப்படித் தான் என்னோட தங்கச்சி எனக்கு முக்கியம். என்ன தான் நாங்க சேர்ந்து வளரலைனாலும், சின்ன வயசுல கைக்குழந்தையா, என் கையில வாங்குன என் தங்கச்சி மேல நான் உயிரே வச்சிருக்கேன். நான் அவளை உடனே பார்க்கணும். தயவு செஞ்சி அவள் எங்க இருக்கான்னு எனக்கு சொல்லு” என்றான் கண்ணீர் மல்க.

இவ்வளவு நாள், தான் காதலித்த உயிர்க்காதலனின் குரல் அவள் நெஞ்சை பிசைய வைக்க, “என்னை மன்னிச்சிடுங்க சிவா. என் அண்ணன் எங்க இருக்கார்ன்னு எனக்குத் தெரியல. அவருக்குக் கால் போகமாட்டேங்குது. ரோஜாவைக் கல்யாணம் பண்ணி லண்டன் தான் கூட்டிட்டு வருவார்னு நினைச்சேன். ஆனா அவரைத் தொடர்புகொள்ளமுடியல” என்றாள்.

அதில் சிவாவிற்கு ஜிவ்வென்று ஏற, “ஏய், இங்கப்பாரு இப்ப மட்டும் நீ உன் அண்ணன் இருக்குற இடத்தை சொல்லல. உனக்கும் எனக்கும் நடுவுல எதுவுமே இல்ல” என்று யோசிக்காமல் வார்த்தைகளை விட்டான் சிவா.

அதில் அதிர்ந்த நிலா, “என்ன பேசுறோம்னு தெரியாம எதையாவது பேசாதீங்க சிவா. நான் முதல்லையே சொல்லிட்டேன், அண்ணன் எங்க இருக்காருன்னு எனக்கு சத்தியமா தெரியாது” என்று அவள் கண்டிப்பான குரலில் கூற,

தன் தலையைக் கோபத்தோடு மேலும் கீழும் ஆட்டியவன், “சரி. பிரேக் அப் பண்ணிக்கலாம்” என்று சாதரணமாக சொல்லிவிட்டு, தன் பத்து வருடக்காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தான், சர்வ சாதரணமாக.

அதில் நிலாவிற்கு கோபம் வர அலைபேசியைத் தூக்கி எறிந்தவள், “சிவா...” என்று கத்திவிட்டு, அப்படியே மயங்கிச் சரிந்தாள்.

சிவாவின் அருகே இருந்த ராஜோ, “என்ன சார் இப்படி பேசிட்டீங்க. இப்ப கோபப்பட வேண்டிய நேரம் இல்லை சார்” என்றான் அவனது தோள்களை ஆதரவாகப் பற்றியபடி.

மூச்சை இழுத்து வெளியே விட்டவன், “அந்த சொத்து பத்திரத்துல என்ன இருக்குன்னு விவரமா பார்த்தியா நீ” என்று ராஜிடம் கேட்டான் சிவா.

“ஆமாம் சார். அன்னைக்கே உங்கக்கிட்ட சொன்னேனே. இதுக்காக நான் ரொம்ப கஷ்டப்பட்டேன் சார்” என்று சொல்லிக் கொண்டே தன் அலைபேசியை எடுத்த ராஜ், “இது தான் சார் அது” என்று அந்த உயில் பத்திரத்தை தான் புகைப்படம் எடுத்ததைக் காட்டினான்.

“வேண்டாம் ராஜ் அதைப் படிக்க வேண்டாம். அதுல இருக்குற ரோஜா சம்பந்தப்பட்டதை மட்டும் சொல்லு” என்றான் சிவா.

அலைபேசியை தன் முகத்திற்கு நேராக தூக்கிப்பிடித்த ராஜ், “சொத்து, பரணியின் ஒரே பொண்ணு வனரோஜாவுக்கு நிலவனுடன் கல்யாணம் ஆகி குழந்தைப் பிறந்தவுடன், அது வனரோஜா மற்றும் நிலவனின் கைக்குக் கிடைக்கும்னு இருக்கு சார். அதுவும் நிலவன் சார் வனரோஜாவைத் தான் கல்யாணம் பண்ணனும் அப்படி இல்லாத பட்சத்தில் மொத்த சொத்தும், வனரோஜாவுக்கு வேறு ஒருவருடன் குழந்தை பிறக்கும் பட்சத்தில், அந்த சொத்து மொத்தமும் வனரோஜா கைக்குக் கிடைக்கும்” என்று அதில் உள்ளதைப் படித்தவன், “வனரோஜா மேடம் பெயரில் இருக்குறதை அப்படியே நிலவன் சார் பெயரில் மாத்துற மாதிரி, அவர் எப்போதோ வனரோஜா மேடம் கிட்ட கையெழுத்து வாங்கி இருப்பார் சார். ஆனா குழந்தை பிறந்தாத் தான் சொத்துன்னு ரோஜா மேடம்க்கு தெரியாதா இருக்கும். அதுவும் இல்லாம நிலவன் சாருக்கு பத்திரத்துல எப்படி கோல்மால் பண்ணனும்னு நல்லாவே தெரியும். ரோஜா மேடமால் வக்கீல் இல்லாம தனியா படிச்சுப் பார்த்து புரிஞ்சிக்க முடியாது” என்று கூறி முடித்தான் ராஜ்.

“குழந்தை பிறக்குறதுக்கு செயற்கை கருத்தரிப்பு ஐவிஎப் இப்படி ஏதாவது யோசிப்பானா அவன்... ஆனா இதுக்கு எல்லாம் ரோஜா சம்மதிக்கமாட்டாளே! பிறகு எந்த நம்பிக்கையில் அவன் இப்படி எல்லாம் செய்யுறான். ஒருவேள என் தங்கச்சியை செயற்கை கருத்தரிப்புக்குக் கட்டாயப்படுத்துனா என்ன பண்றது” என்று புலம்ப ஆரம்பித்தான் சிவா.

இப்படி எல்லாம் யோசித்த சிவா மறந்தும், தவறாக எதுவும் யோசிக்கவில்லை. ஏனென்றால் நிலவனைப் பற்றி அவனுக்கு நன்றாகவே தெரியும். என்ன தான் பல பெண்கள் தன் மீது வந்து விழுந்து பழகிய போதும், அவர்களை எல்லாம் எட்டித் தள்ளி நிறுத்தியவன், வனரோஜாவை எதுவும் பலவந்தப்படுத்தப் போவது இல்லை. இதில் பரணியையும் அவர் குடும்பத்தையும் கண்டாலே நிலவனுக்கு ஆகாது. இவர்களைப் பார்க்கும் இடத்தில் எல்லாம், ஏதோ அசிங்கத்தைக் கண்டதைப் போல முகத்தை சுழிப்பான் நிலவன். இருந்தும் சிவாவின் மனதில் சிறிய பயம் இருக்கத் தான் செய்தது வனரோஜாவின் நலத்தினை நினைத்து.

“அதுக்குள்ள நாம கண்டுபிடிச்சிடலாம் சார். ஆனா நிலவன் சாரைப் பத்தி என்கிட்ட இன்னொரு ரகசியமும் இருக்கு” என்று சொல்லித் தன் தலையைச் சொறிந்தான் ராஜ்.

சிவா அவனைப் பார்க்க, அவனோ, “அது சார். இது வேற மேட்டர் சார். நிலவன் சாரோட பெர்சனல்..” என்று அதனை எப்படி சொல்வதென்று இழுத்தான் ராஜ்.

“டேய், தலைக்கு மேல வெள்ளம் போயிடுச்சி... என்னன்னு சொல்லித்தொலை” என்று கத்தினான் சிவா.

அதில் சுதாரித்தவன், “எல்லாரும் நினைக்குற மாதிரி நிலவன் சார்க்கு காதலின்னு யாரும் இல்ல சார். அது மட்டும் இல்லாம அவர்...” என்று தயங்கித் தயங்கி, “அவருக்குக் குழந்தையே பிறக்காது சார்” என்று விஷயத்தைப் போட்டு உடைத்தான்.

அதில் தன் கண்களை விரித்த சிவா, “என்ன சொல்ற? காதலி இருக்குன்னு பொய் சொல்றானா? அப்ப அவனுக்கு பசங்கலையா பிடிக்கும்? டேய் அப்ப அவன் கேயா?” என்று அதிர்ச்சியாகி கேட்டான்.

“அது என்னவோ தெரியல சார். ஆனா அவர் மோசமானவர் கிடையாது. அவர் கம்பெனி பத்தி ரகசியமா தேடும் போது தான், அவருக்குக் குழந்தையே பிறக்காதுன்னு ஒரு கோப்பைப் பார்த்து எனக்குத் தெரிஞ்சது” என்றான் ராஜ்.

அதில் சிவாவின் மனபாரம் சற்று நீங்க, இப்போது தான் அவனால் மூச்சு விடவே முடிந்தது, அவனால் தன் தங்கையைப் பலவந்தப்படுத்த முடியாது என்பதனை நினைத்து.

ராஜின் தோள்களில் தன் கையைப் போட்டவன், “நீ என்ன பண்ற, ரோஜா யாரைக் கல்யாணம் பண்ணாலும், அவளுக்குக் குழந்தை பிறந்ததும், நானே அவளிடம் அவனுக்கு உரிமையான சொத்தை வாங்கித் தரேன்னு, நான் சொன்னதா சொல்லி, அவனுக்கு மெயில் பண்ணு. அப்படியே நான் அவன் கூட பேசவும் ஏற்பாடு பண்ணு” என்றான்.

“ஆனா இதை எப்படி நிலவன் சார் நம்புவாரு? நீங்களும் உங்க தங்கச்சியும் இதுக்கு சரின்னு சொல்றீங்க அது மாதிரி ரோஜா மேடமைக் கல்யாணம் செய்யுறவரும் சரின்னு சொல்லணுமே! இதை நிலவன் சாரும் யோசிப்பார் இல்லையா!” என்று தன் சந்தேகத்தைக் கூறினான்.

அதில் எரிச்சல் அடைந்தவன், “இந்த நிலவன் ஒரு பைத்தியம்ன்னா அவன் தாத்தன் அதுக்கும் மேல பைத்தியமா இருக்கான். என்னோட தாத்தாக்கும் அறிவு இல்ல. ரோஜாவுக்குப் பிறக்கும் குழந்தை அவங்க வீட்டு வாரிசா தான் இருக்கணும்னு நினைச்சு தான் இப்படி லூசுத்தனமா உயில் எழுதி வச்சிருக்கார்” என்று தனக்குள் திட்டிக்கொண்டவன்,

“நான் அவன் கூட பேசுறேன். நீ ஆகவேண்டியதைப் பாரு” என்றான்.

“சரி” என்ற ராஜ், “ஆனா நிலவனோட தாத்தா எதுக்காக இப்படி பண்ணாரு சார்” என்று தன் சந்தேகத்தைக் கேட்டான்.

“அவர் சம்பாதிச்ச சொத்துல என் அம்மாவுக்கும், என் தாத்தாவுக்கும் பங்கு இருக்கு. அதைத் தான் அவர் இப்படி ஒரு வலை செஞ்சி மாட்டிவச்சிருக்காரு. அது ஒரு பெரிய கதை. சரி நீ ஆகா வேண்டிய வேலையைப்பாரு” என்று சொல்லி ராஜை அனுப்பி வைத்தான்.

‘நிலவனுடன் நான் பேசினால் அனைத்தும் சுபமாக முடிந்துவிடும். என் தங்கையும் என்னிடம் வந்துவிடுவாள்’ என்று தன்னுள் நினைத்துக்கொண்டிருந்த சிவாவிற்கு நிலவன் வனரோஜாவுடன் தீவில் என்ன செய்துகொண்டிருக்கின்றான் என்பது எங்கே தெரியப்போகிறது.

ஆம் இங்கே, தீவில் தன் படுக்கை அறையில், ஆழமாக, வனரோஜாவின் இதழில் தன் இதழைப் பொருத்தி சுவைத்துக் கொண்டிருந்தான் நிலவன். அவனுக்குச் சற்றும் குறைவில்லாமல் அவனது கழுத்தைப் பிடித்துத் தன்னுள் இழுத்து அவனுள் புதைந்து போய்க்கொண்டிருந்தாள் வனரோஜா. (இது கனவாகக் கூட இருக்கலாம்.... ஏமாந்தால் கம்பெனி பொறுப்பாகாது)
 

NNO7

Moderator
அத்தியாயம் – 9

யாரும் இல்லாத அந்த தனித்தீவில், ஒரு சின்ன பங்களா கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. அதனைச் சுற்றி பேரீச்சை மரங்களும் அதன் ஊடே தென்னை மரங்களும், அழகாக கையசைத்து பார்ப்பவரை வரவேற்பது போல் இருந்தது.

நிலவனின் மகிழுந்து அந்த பங்களாவினுள் சென்று நின்றது. அந்த வீட்டைப் பார்த்துக் கொண்டே மகிழுந்தில் இருந்து இறங்கிய வனரோஜா, “ஒரு மாசமும் வெட்டியா இங்க இருந்து நான் என்ன பண்றது? நான் என் ஹாஸ்டலுக்கே திரும்பப் போறேன். விசா வந்ததும் லண்டன் வரேன். இப்போவே என்னைக் கொண்டு போய் விடுங்க” என்று அடம்பிடிக்க ஆரம்பித்தாள்.

அதில் தன் கண்களை உருட்டி அவளை முறைத்த நிலவன், “கான்ட்ராக்ட்ல என்ன இருந்ததுன்னு நீ மறந்து போயிட்டியா? நீ என்னோட மனைவி என்னோட தான் நீ இருக்கணும். மத்தபடி உன்னோட தனிமையில் நான் தலையிடமாட்டேன். ஆனா நீ இங்க இருந்து போகணும்னு நினைச்சா இப்பவே பத்து கோடி ரூபாயை எடுத்து வச்சிடு” என்றான் ஆங்காரமான குரலில்.

அவன் குரலின் பேதத்தில் பயந்து போன வனரோஜா, “ஐயோ நான் அப்படி சொல்லலைங்க. இங்க எப்படி வேலை செய்யாம, இப்படி ஒரே இடத்துல ஒரு மாசம் இருக்குறது! அதுக்குத் தான் சொன்னேன்” என்றாள் வெளிறிப்போன முகத்துடன்.

தன் முன்னால் இருந்த அந்த சிறிய பங்களாவை, அவளிடம் காட்டி, “இங்க வேலைக்காரங்க யாரும் கிடையாது” என்று சொல்லிவிட்டு உள்ளே நுழைந்தான்.

அவன் சொன்னதன் அர்த்தம் அப்போது தான் அவளுக்குப் புரிய, “என்ன? இப்ப என்ன சொல்ல வரீங்க? நான் என் படிப்புக்கு தகுந்த வேலையைத் தான் பார்ப்பேன்” என்று மூச்சு வாங்கக் கத்திக் கொண்டே அவனின் பின்னால் ஓடினாள் வனரோஜா.

நடுக்கூடத்திற்கு சென்று நின்றவன், பின்னால் திரும்பி பார்ப்பதற்குள், அவனது முதுகில் மோதிய வனரோஜா கீழே விழப்போக, அவளின் இடையை வளைத்துப் பிடித்துக் கொண்டான் நிலவன்.

அந்த கணத்தில் இருவரின் கண்களும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. எல்லாம் நொடிப் பொழுது மட்டும் தான். அதில் இருந்து வேகமாக மீண்ட நிலவன், கோபப்பார்வையுடன், “ஒழுங்கா நடக்கக்கூட உனக்குத் தெரியாதா?” என்று கத்தினான்.

அவனில் இருந்து தள்ளி நின்றவள், “மன்னிச்சிடுங்க. என்னோட தப்பு தான். ஆனா அதுக்காக உங்க அடிமை மாதிரி என்னை நடத்தாதீங்க” என்றாள் கண்டிப்பான குரலில்.

அதற்கு எதுவும் பேசாதவன், தன் காற்சட்டைப் பையில் இருந்து, கிட்டத்தட்ட பத்து சவரன் எடை கொண்ட பொன் தாலியை எடுத்து, வனரோஜா என்னவென்று சுதாரிப்பதற்குள் அதனை அவள் கழுத்தில் அணிந்தான்.

தன் கழுத்தில் நிலவன், எதை அணிவிக்கின்றான், என்று வேகமாக தன் கழுத்தை அவள் தடவ, அது சங்கிலி என்று அறிந்ததும், தன் நெஞ்சில் தொங்கிய மாங்கல்யத்தை கையில் எடுத்தவள், அதிர்ந்த குரலில், “என்னது இது” என்று நிலவனைப் பார்த்துக் கேட்டாள்.

“நம்ம அக்ரீமென்ட் முடியுற வரைக்கும் இது உன் கழுத்தில் தான் இருக்கணும். என்ன தான் டாக்குமென்ட்ஸ்ல திருமண பந்தத்தில் நாம ரெண்டு பேரும் இணைந்து இருந்தாலும், என் தாத்தா சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இது தெரியணும். அதுக்காகத் தான் இது” என்றான் அவள் கழுத்தில் தொங்கிக்கொண்டு இருந்த தாலியைக் காட்டி.

“ஆனா இதெல்லாம் போட்டு எனக்குப் பழக்கம் இல்லை. இவ்வளவு பெரிய செயின் போட்டுக்கிட்டு, என்னால என் வேலையைப் பார்க்க முடியாது” என்றாள் வனரோஜா.

“ரெண்டு வருஷம் எனக்கு மனைவியா இருக்கேன்னு ஒத்துக்கிட்டு கையெழுத்துப் போட்டு இருக்க... இதைப் போட்டா தான் கல்யாணம் ஆன பொண்ணு மாதிரி தெரிவ” என்றான் தன் மணிக்கட்டில் கட்டியிருந்த கைக்கடிகாரத்தைக் கழட்டியபடி.

அவன் நின்ற தோரணையும், அவன் அதனைக் கழட்டிய விதத்தையும் பார்த்து, ‘இவன் அழகன் தான்’ என்று வனரோஜாவின் மனது உள்ளுக்குள் சொல்லிக் கொண்டது.

இப்போது அவளைத் திரும்பிப் பார்த்த நிலவன், “என்ன பேச்சக் காணோம்?” என்றான்.

அதில் பதறியவள், “ஆங்... இல்ல கொஞ்சம் சின்ன செயினா இருந்தா நல்லா இருக்கும்” என்றாள் தன் கைகளைப் பிசைந்தபடி.

தன் ஒரு புருவத்தை மட்டும் உயர்த்தி அவளைப் பார்த்தவன், “சிறுசா வேணுமா? அப்ப பத்து கோடியை இப்பவே எடுத்து வை...” என்று சொல்லும் போதே, “இல்ல இல்ல... அப்படி இருந்தா நல்லா இருக்கும்னு சொன்னேன் வேற ஒன்னும் இல்ல” என்றவள், அருகில் இருந்த அறையைக் காட்டி, “நான் இந்த ரூம்ல தங்கிக்கவா?” என்று அவனிடம் அனுமதி வேண்டினாள்.

அவனது தலை மெதுவாக ஆட, வேகமாக அதில் புகுந்து, கதவை அடைத்தாள்.

பின் அந்த அறையின் கதவில் சாய்ந்து நிம்மதி பெருமூச்சு விட்டவள், ‘இந்த இடத்தைப் பார்க்கவே பயமா இருக்கு. இவன் ஒரு வேளை பேசுற மாதிரி பேசி என்னைக் கடத்தி தான் கூட்டிட்டு வந்துட்டானோ’ என்று நெஞ்சைப் பிடித்தபடி யோசித்தாள்.

ஒரு வேகத்தில் தான், அவன் சொன்னதற்கு எல்லாம் சம்மதித்து இங்கே வந்தாள். ஆனால் அவளின் அலைப்பாயும் மனதோ, இப்போது வேறு மாதிரி யோசிக்க ஆரம்பித்தது.

‘அச்சோ! நான் தப்பு பண்ணிட்டேனோ! சந்தியாக்கிட்ட இதைப் பத்தி பேசலாம்’ என்று நினைத்தபடி, தன் தோழிக்கு அலைப்பேசி மூலம் அழைப்பு விடுத்தாள்.

ஆனால் அந்த அழைப்பு தான் செல்லவே இல்லை. அவள் இருக்கும் இடத்தில் சரியாக டவரும் கிடைக்கவில்லை.

வெறும் 2ஜி மட்டும் தான் காட்டியது அவளின் அலைபேசி. அதில் வாட்ஸ்அப்பை எடுத்து, சந்தியாவிற்கு செய்தி அனுப்பிவைத்தாள் வனரோஜா.

ஐந்து நிமிடங்களுக்குப் பிறகே செய்தி சென்றுவிட்டதாக, ஒரு டிக் காட்டியது. சந்தியா இருப்பதும் டவர் வசதி இல்லாத ஒரு குக்கிராமத்தில். அதனால் இவள் அனுப்பிய செய்தியை அவள் பார்க்கவில்லை.

பின் என்ன செய்வது என்று, தன் உடைமைகளை அலமாரியில் எடுத்து வைத்தபடி யோசனை செய்தவள், நிலவனின் பேச்சில் ஏதாவது தென்படுகிறதா என்று பார்ப்போம் என்ற எண்ணத்தோடு, வெளியே சென்றாள்.

வனரோஜா வரும் போதே தன் உடைமைகளுடன் தான் வந்தாள். ஆனால் மருத்துவமனையில் இருந்து அவள் முறையாக வெளியேறி தன் சான்றிதழ்கள் எதையும் பெறவில்லை. அதற்கான ஏற்பாட்டை எல்லாம், தான் பார்த்துக்கொள்வதாக அவளுக்கு உறுதியளித்து இருந்தான் நிலவன்.

அந்த வீட்டின் நடுக்கூடத்திற்கு அருகிலையே ஒரு கண்ணாடி தடுப்பு போல் அமைத்திருந்தது. அதற்குப் பின்னால் சிறிய அளவில் நீச்சல் குளம் இருந்தது.

அதன் அருகிலையே இருக்கைகள் இருக்க, அங்கே தான், சாய்ந்த வாக்கில் தன் கண்களை மூடி அமர்ந்திருந்தான் நிலவன்.

வனரோஜாவின் காலடி சத்தத்தைக் கேட்டு, தன் கண்களைத் திறக்காமலையே, “எதுக்காக என்னைத் தேடி வந்துருக்க?” என்றான்.

“இங்க டவர் சரியா கிடைக்க மாட்டேங்குது. என் தோழிக்கிட்ட நான் பேசணும்” என்றாள் அவன் அருகே இருந்த இருக்கையில் அமர்ந்தபடி.

“எனக்கும் தான் லண்டனுக்கு கால் பண்ணவேண்டியது இருக்கு. முக்கியமான மீட்டிங் எல்லாத்தையும் விட்டுட்டு இங்க உட்காந்துட்டு இருக்கேன். உனக்கும் என்னை மாதிரியே அவசர மீட்டிங் இருக்கா?” என்று அவள் கேள்விக்கு பதில் அளிக்காமல், அவள் பேச்சை திசை திருப்ப வேண்டி எதையோ பேசினான்.

அதற்கு மறுப்பாக தன் தலையை ஆட்டியவள், “இந்த இடத்துல உங்களுக்கு அப்படி என்ன வேலை இருக்கு” என்ற வனரோஜாவின் கேள்வியில் தன் கண்களைத் திறந்தவன், “இந்தத் தீவை சுத்தி நிறையா கிராமங்கள் இருக்கு. இந்த இடத்துல, நான் கட்டப்போற ஹாஸ்பிடல் எல்லாத்தும் மையப்புள்ளியா இருக்கும். இந்த வீடு என் அப்பா கட்டினது தான். அடிக்கடி இங்க தான் வருவேன். யாருமே இல்லாத இந்த இடத்தின் தனிமை எனக்கு ரொம்பவே பிடிக்கும்” என்று எதற்காக இதனை இவளிடம் சொல்கின்றோம் என்று தெரியாமலையே சொல்லிக்கொண்டு இருந்தான்.

அவன் பேச்சில் உண்மை தெரிந்தாலும், அந்த வீட்டில் அவனுடன் உண்டான தனிமை அவளைப் பயம் கொள்ள வைக்க, “ஆனா எனக்கு இங்க இருக்க சுத்தமா பிடிக்கலை சார்” என்றாள் வனரோஜா.

அதற்கு முகத்தை சுழித்தவன், “மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்காத வனரோஜா. உன்கிட்ட சொல்லவேண்டியதை எல்லாம் நான் சொல்லிட்டேன்” என்றான் கண்டிப்பான குரலில்.

“ஆனா சார்...” என்று அவள் இழுக்க, “போடுற வேஷத்துக்கு தகுந்த மாதிரி முதல்ல நடிக்கக் கத்துக்கோ” என்றவன் ஒரு கணம் நிறுத்தி, “என்னை சார்ன்னு கூப்பிடாத, நிலவன்னு சொல்லியே கூப்பிடு” என்றான் கறாரான குரலில்.

‘ஆமாம் ஆமாம் சார்ன்னு கூப்பிட்டா பார்க்குறவங்களுக்கு நான் உங்களுக்கு இரண்டு வருஷத்துக்கு மட்டும் மனைவியா வேலை பார்க்க வந்துருக்கேன்னு தெரிஞ்சிடுமே’ என்று தன் மனதினுள் மட்டும் நினைத்துக் கொண்டாள்.

“சரி இது எந்த இடம்? இது தமிழ்நாடு தானா?” என்று அவனிடம் பேச்சை வளர்த்தாள்.

இப்போது தன் இருக்கையில் இருந்து நன்றாக நிமிர்ந்து அமர்ந்தவன், “நீ எதுக்காக இப்படி சுத்தி வளைச்சி கேட்க்குறன்னு எனக்கு நல்லாவே தெரியுது. கவலைப்படாத உன்னைக் கடத்தி, என்னால ஊறுகாய் கூட போட முடியாது. நான் கதைகளில் வரும் மாபியாவும் கிடையாது. உனக்காக மட்டும் தான் நான் இங்க வந்து உட்காந்துக்கிட்டு இருக்கேன்” என்று சொல்லி நிறுத்தினான்.

அதில் அவள் புருவம் முடிச்சிட, “எனக்காகவா? உங்களுக்குத் தானே சொத்து வேணும். இப்ப எனக்காகன்னு சொல்றீங்க?” என்றாள் கண்கள் இடுங்கியபடி.

“உன் உயிருக்கு தான் ஆபத்து இருக்கு எனக்கு இல்ல” என்று சொல்லி அவளைக் குழப்பினான்.

அதில் வனரோஜாவின் நினைப்பு சென்றது என்னவோ அவளின் வளர்ப்பு பெற்றோர்கள் மீது தான்.

தன் நினைப்பு செல்லும் திசையை உணர்ந்தவள், ‘இல்ல இல்ல.. அவங்க அந்த அளவுக்கு மோசமா போகமாட்டாங்க’ என்று தன் மனதிற்குள் நினைத்தவள், அவனிடம், “என் உயிருக்கு அப்படி என்ன ஆபத்து வரப்போகுது” என்றாள் புரியாத குரலில்.

“உன் அம்மா அப்பா உயிரோட இல்லை தான். ஆனா உனக்கு அண்ணன்னு ஒருத்தன் உயிரோட தான் இருக்கான்” என்று அவன் சொல்லும் போதே, முகம் தெரியாத அண்ணனை நினைத்து அவள் கண்களில் நீர் சுரக்க ஆரம்பித்தது.

அது தந்த அதிர்வில் வேகமாக இருக்கையில் இருந்து எழுந்தவள், நிலவனுக்கு முன்னால் தரையில் அமர்ந்து, “என்ன சொல்றீங்க? இதை எதுக்கு என்கிட்ட அப்பவே சொல்லலா? நான் இப்பவே அவரைப் பார்க்கணும். என்னை அவர்கிட்ட கூட்டிட்டுப் போங்க” என்று சொல்லி சிறுகுழந்தை போல் கண்ணைக் கசக்க ஆரம்பித்தாள்.

அதில் தன் நெற்றியை நீவிவிட்டவன் “இதுக்குத் தான் உன்கிட்ட நான் சொல்லலை” என்ற பதிலில் கலவரம் அடைந்தவள், தன் அண்ணனுக்கு ஏதோ ஆகிவிட்டது போல என்ற பதற்றத்தில், “ப்ளீஸ் அவருக்கு என்ன சீக்கிரம் சொல்லுங்க” என்று அவனை அவசரப்படுத்தினாள்.

“அவனுக்கு என்ன? அவன் நல்லாத் தான் இருக்கான். உன்னைத் தான் தேடிக்கிட்டு இருக்கான். உன்னைக் கொலை பண்றதுக்கு” என்று மீண்டும் தன் வார்த்தைகள் என்னும் தூண்டிலை வீசினான்.












 

NNO7

Moderator
அத்தியாயம் – 10

நிலவன் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு பேச்சற்று தான் போனாள் வனரோஜா.

தொடந்து பேசிய நிலவன், “நான் செய்றதை எல்லாம் பார்க்கும் போது, நான் உன் கண்களுக்கு வில்லன் போலத் தான் தெரிவேன். உண்மையை சொல்லப்போனா, நான் உன்னைப் பாதுகாக்கத் தான் இங்க கூட்டிட்டு வந்துருக்கேன். எனக்கும் இங்க சில வேலை இருக்கு. அவன் உன்னைத் தேடி இந்தியாவுக்கே வந்துட்டான். நீ என்கூட இருக்குறது மட்டும் தான் உனக்குப் பாதுகாப்பு” என்று மிகவும் கைதேர்ந்த நடிகன் போலவே பேசி அவளை நம்பவும் வைத்தான்.

ஏற்கனவே, அவளைச் சுற்றி பலர், அவளை நம்ப வைத்து ஏமாற்றி இருக்க, தன்னைப் பெற்று எடுத்தவர்களைப் பற்றி நிலவனுக்குத் தெரிந்து இருந்ததால், அவனையும் நம்பத்தான் செய்தாள். ஆனால் இதெல்லாம் பொய் என்று அறியும் போது அவள் மனம் தான் என்ன பாடுபடப் போகின்றதோ!

“ஆனா ஏன்? அவர் யாருன்னே எனக்குத் தெரியாது. அப்படி இருக்க, அவர் ஏன் என்னைக் கொலை செய்ய நினைக்கணும்?” என்று கண்களைத் துடைத்தபடிக் கேட்டாள் வனரோஜா.

“உன்னோட அம்மா அப்பாவுக்கு கொஞ்சம் சொத்து இருக்கு. அது எல்லாமே தன்னோட கைக்கு வரணும்னு அவன் நினைக்குறான். நீ உயிரோட இருக்குறது அவனுக்கு இடைஞ்சலா இருக்குது போல. ஆனா நல்ல வேளை அவனுக்கு முன்னாடி நான் உன்னைக் கண்டுபிடிச்சிட்டேன்” என்றான் அவள் மேல் அக்கறையாக இருப்பது போல்.

நிலவன் இது போல் எல்லாம் யாரிடமும் அவர்கள் நலன் வேண்டி பேசியது இல்லை. இப்போது அவன் பேசுவது கூட நடிப்பு தான். அவன் இந்த உலகத்தில் அக்கறை கொள்ளும் ஒரே நபர், அவனது தங்கை நிலா மட்டும் தான். இப்போது, காரியம் ஆகவேண்டி வனரோஜாவின் முன் நன்றாக நடித்தான்.

தன் உடன்பிறந்த அண்ணனைப் பற்றி நிலவன் சொன்னதை நம்பாதவள், “இல்ல... நீங்க சொல்றதை என்னால நம்ப முடியாது. என்னோட அண்ணனை நான் பார்க்கணும்” என்று மறுபடியும் முன்பு சொன்னவற்றையே கூறிக்கொண்டிருந்தாள்.

இவள் இது போல் எல்லாம் பேசுவாள் என்று நினைத்து இருந்த நிலவனோ, “பைத்தியம் மாதிரி பேசாத. அவன் சாதாரண ஆள் கிடையாது. லண்டன்ல கடத்தல் தொழில் பண்ணிக்கிட்டு இருக்கான். நான் உன்னை உன் ஹாஸ்பிடலில் பார்த்த அன்னைக்குத் தான், அவனோட ஆட்கள் உன்னைப் பாலோ பண்ணிக்கிட்டு இருந்தாங்க. இதுக்கும் மேல உன்னைத் தனியாவிட்டா ஆபத்துன்னு நினைச்சு தான், உன்னை நான் அங்கிருந்து இங்க அழைத்து வந்தேன்” என்றான் அவன்.

ஆனால் இது எதையும் காதில் வாங்காமல் தன் பிடியில் நின்ற வனரோஜா, “எனக்கு அந்த சொத்து எல்லாம் தேவை இல்லைன்னு நான் அவருக்குப் புரிய வைக்குறேன். நீங்க சொல்றதுக்கு முன்னாடி வரைக்குமே எனக்கு இப்படி ஒரு அண்ணன் இருக்காருன்னு தெரியாது. ஆனா நீங்க சொன்ன இந்த நிமிஷமே, அவரைப் பார்க்கணும்னு என் மனசு சொல்லுது. ஏதோ ஒரு சொல்ல முடியாத மகிழ்ச்சியா வேற இருக்கு. நான் பேசுனா அண்ணன் நிச்சயம் கேட்பாருன்னு நம்புறேன். என்னை எப்படியாவது அவர் கூட பேசவையுங்க” என்றாள் கண் கலங்கியபடி.

தன் தலையை அழுந்த கோதிவிட்டு அவளைப் பார்த்தவன், “நான் சொல்றது உன் மரமண்டைக்கு ஏறுச்சா இல்லையா! அவன் சாதாரண மனுஷன் கிடையாது, கொஞ்சமும் யோசிக்காம மனிதர்களை சுட்டுத்தள்ளிட்டு போய்க்கிட்டே இருப்பான். அவன்கிட்ட உன் செண்டிமெண்ட் எல்லாம் வேலை செய்யாது” என்றவன் தன் இரண்டு விரலைக் காட்டி, “ரெண்டு வருஷம் உன்னை பாதுகாப்பா பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு. அதனால அண்ணனப் பார்க்கணும் நோண்ணனப் பார்க்கணும்னு என் உயிரை வாங்காத. நீ நம்ம ஹாஸ்பிடல்ல தான் வோர்க் பண்ணப்போற, அதனால உன் பாதுகாப்புக்கு எந்த வித பிரச்சனையும் இல்ல. என்னை மீறி அவனால் உன்னை நெருங்க முடியாது” என்றான்.

அதற்கு அமைதியாக இருந்தவள், மெதுவாக தன் வாயைத் திறந்து, “ரெண்டு வருஷத்துக்குப் பிறகு என்னோட உயிர்போனா பரவாயில்லையா?” என்றாள் உள்ளே போனக்குரலில்.

“இல்லை தான்” என்று தன் தோள்களைக் குலுக்கி அசால்ட்டாகக் கூறினான்.

அதில் அவள் முகம் வாடுவதைப் பார்த்து, வேகமாக, “எதுக்காக இப்ப முகத்தை இப்படி வச்சிருக்க? எனக்குக் கூட தான் பாதுகாப்பு இல்ல. எனக்கு தொழிலில் எதிரிகள் ஜாஸ்தி தான். அதுக்காக என்னை யாராவது பாதுகாக்கணும்னு நான் என்னைக்குமே நினைச்சது இல்ல. கிட்டத்தட்ட உன்னை மாதிரி தான் நானும் எனக்கும் அம்மா அப்பா கிடையாது” என்றான் அவளுக்குப் புரியவைக்கும் நோக்கில்.

தன் தலையை ஆட்டியவள், “எனக்குப் புரியுது. இவ்வளவு பட்டும் எனக்கு புத்தி வரல. எனக்காக யாராவது வரமாட்டங்கலான்னு மனம் யோசிக்குது. ஆனா இன்னொரு தடவை காதலில் நிச்சயம் விழமாட்டேன்” என்றாள் வனரோஜா.

“இப்படி நினைக்குறது ஒன்னும் தப்பு இல்லை வனரோஜா. ஆனா அப்படிப்பட்ட நல்லவங்க உலகத்துல ரொம்ப கம்மி. சரி நீ இப்படி எல்லாம் யோசிக்குறதுனால நான் உனக்கு ஒரு ஐடியா சொல்றேன், நீ ஏன் ஐவிஎப் மூலம் ஒரு குழந்தை பெத்துக்கக்கூடாது?” என்று சாமார்த்தியமாக பேசி, தன் அடுத்தக் காயை நகற்றினான்.

அவனது தாக்குதலில் இருந்து, வனரோஜா சாமர்த்தியமாக தப்பிப்பாளா? அல்லது அதில் சிக்கி சின்னாபின்னமாகப் போகின்றாளா?

“ச்சீ... என்ன பேசுறீங்க? என் வாழ்க்கையில் நான் சாதிக்க வேண்டியது இன்னும் நிறையா இருக்கு” என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து எழுந்து செல்லப்பார்த்தவளின் கையைப்பிடித்து, “நான் பேசிக்கிட்டு இருக்கும் போதே, எங்கப்போற? இது மாதிரி மரியாதை குறைவா நடந்துக்கிட்டா எனக்குப் பிடிக்காது” என்று அவளைக் கட்டாயப்படுத்தி, தன் அருகில் அமர்ந்திக்கொண்டான்.

ஒரு நபர் அமரும் அந்த இருக்கையில் நிலவனுக்கு அருகே, கிட்டத்தட்ட அவன் மீது மொத்தமாக சாய்ந்தபடி அமர்ந்திருந்த வனரோஜாவுக்கு ஏதோ போல் இருக்க, பதற்றத்துடன், “நான் அங்க உட்கார்ந்துக்கிட்டா?” என்று, பக்கத்தில் இருக்கும் இருக்கையைக் காட்டி சின்னக் குரலில் கேட்டாள்.

அவள் இதுநாள் வரையிலும், எந்த ஒரு ஆண்மகனிடமும் இவ்வளவு நெருக்கமாக அமர்ந்தது இல்லை.

“அதெல்லாம் வேண்டாம் இங்கயே உட்கார்ந்து எனக்கு பதில் சொல்லு” என்று சொன்னவன் அவள் கையை விடவே இல்லை.

“அதான்... சொல்லிட்டேனே!” என்றாள் திக்கித்திணறியக் குரலில்.

“சரி. ஆனா உனக்குன்னு ஒரு குழந்தை இருக்குறது நல்லது தான். லண்டன்ல நம்ம ஹாஸ்பிடலுக்கு நிறையா ஸ்பெர்ம் டோனர்ஸ் கூட வருவாங்க. உனக்கு ஓகேன்னா என்கிட்ட சொல்லு. நம்ம ஹாஸ்பிடல்ல அதுக்கான வசதி எல்லாம் இருக்கு” என்று அவன் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, தன்னையும் அறியாமல், அவன் உதட்டின் மீது கைவைத்தவள், “இல்ல வேண்டாம்” என்று சொல்லிவிட்டு தான், தன் செயலை உணர்ந்து, அவனது உதட்டில் இருந்த தன் கையைத் தன்னுள் இழுத்துக் கொண்டு தலையைக் குனிந்து கொண்டவள், “மன்னிச்சிடுங்க... என்கிட்ட இது மாதிரி பேசாதீங்க” என்று சொல்லி அந்த வாக்கியங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பார்த்தாள்.

ஆனால் நிலவன் அதனை விட வேண்டுமே. இதனை நிறைவேற்றத்தானே, அவன் இங்கு வரவே செய்து இருக்கான்.

“நீ டாக்டர் தானே! உன்னோட துறையில் இதெல்லாம் சாதாரணம் தானே! பின்ன எதுக்காக பிற்போக்குவாதிகள் மாதிரி பேசுற?” என்றான் நிலவன்.

“எனக்குத் தெரியும் நிலவன். ஆனா நீங்க நினைக்குற மாதிரி அது சின்ன ப்ராசஸ் கிடையாது” என்று அவனுக்குப் புரியவைக்க நினைத்தாள்.

“லண்டன்ல அது போல் எல்லாம் எதுவும் கிடையாது. நீ இப்பவே ட்ரீட்மெண்ட் எடுக்க ஆரம்பிச்சா, இந்த கான்ட்ராக்ட் முடியுறதுக்குள்ள உனக்கு பேபி வந்திடும், பிறகு நீ அதைக் கூட்டிட்டு இந்தியா போயிடலாம். நானும் உனக்கு செட்டில் பண்ணிடுவேன். நல்லா யோசி உனக்குன்னு ஒரு உறவு வேண்டாமா?” என்று அவளைக் குழப்ப ஆரம்பித்தான்.

ஆனால் வனரோஜா தன் முடிவில் உறுதியாக இருந்தாள். “குழந்தையைப் பத்தி நான் எதுவும் யோசிக்கல. நான் ஒரு மருத்துவர். ஒரு குழந்தைக்கு தாய் மட்டும் இல்ல தந்தையும் நிச்சயம் வேணும். என் ஒருத்தி சுயநலத்திற்காக, இது போல் பண்ணா அது குழந்தைக்கும் நல்லது இல்ல. உங்க அக்கறைக்கு ரொம்ப நன்றி நிலவன்” என்று முகத்தில் அடித்தது போல் கூறிவிட்டு, வேகமாக அங்கிருந்து சென்றாள் வனரோஜா.

செல்லும் வனரோஜாவின் முதுகைப் பார்த்துக் கொண்டிருந்த நிலவன், ‘என்னைத் தாண்டி நீ எங்க போயிடப்போற? நீயே உன் வாயால் ஐவிஎப் ட்ரீட்மென்ட் எடுக்கணும்னு என்கிட்ட வந்து கேட்ப... அந்த நிலைமையை உனக்கு நான் உருவாக்கித் தருவேன்’ என்று தன் மனதினுள் வன்மமாய் நினைத்துக் கொண்டான் நிலவன்.

இதுநாள் வரைக்குமே, தான் நினைத்ததை எல்லாம் நடத்திக்கொண்டு தான் வருகின்றான் நிலவன். வனரோஜாவின் விஷயத்திலும் அது தான் நடந்து கொண்டிருந்தது. இனிமேலும் அது நடக்குமா? தான் நினைத்ததை எல்லாம் நடத்திக்காட்ட, நிலவன் ஒன்னும் கடவுளோ! அல்லது கதைகளில் வரும், எவராலும் தோற்கடிக்க முடியாத கதாநாயகனோ அல்லவே!

*****

“எனக்கு ஒன்னும் தேவை இல்லைன்னு சொல்லிட்டு, சார் தான் இங்க இருந்து போயிட்டீங்களே! இப்ப நீங்க சிஇஓ கிடையாது மிஸ்டர் சிவா” என்று மரியாதையான அழைப்பில் நக்கல் தொணித்தக் குரலில் தன் மகனிடம் அலைபேசி வாயிலாக உரையாடிக்கொண்டு இருந்தார் பரணி.

உடனே சுற்றி வளைக்காமல் நேரடியாக விஷயத்திற்கு வந்த சிவா, “அம்மா, நம்ம ரோஜாவ, அந்த நிலவன் எங்கையோ கடத்திட்டு போயிட்டான்ம்மா” என்றான் பொழிவிழந்த குரலில்.

அதில் பரணியின் கண்கள் அதிர்ச்சியில் விரிய, “என்ன பேசுற நீ? நிலவன் எதுக்காக அந்த மாதிரி செய்யணும்? நான் ரோஜாவை இங்க கூட்டிட்டு வரணும்னு நீ ஏதாவது நாடகம் போடுறியா சிவா? என்றார் கோபம் கலந்த குரலில்.

அதில் தன் பல்லைக் கடித்தவன், “ஆமாம் எனக்கு இது தான் வேலை பாருங்க... அந்தக் கிழவன் அதான் அந்த நிலவனோட தாத்தன் சொத்துல ஏதோ எழுதி வச்சிருக்கான்..” என்று சொல்லும் போதே, “பெரியவங்களை எப்படி பேசணும்னு நான் உனக்கு சொல்லித்தரலையா சிவா” என்றார் கண்டிப்புடன்.

“அம்மா, அதெல்லாம் இப்ப தேவையில்லாதது... ஏதாவது பண்ணுங்க. ரோஜா நிலவன் கஸ்டடியில் இருக்கா” என்று அவன் இந்தப்பக்கம் கத்த, பரணியின் மனது பிசையத் துவங்கியது.

இந்தியா செல்வதற்கு முன்னால் சிவா, இவரிடம் சொல்லிச்சென்ற வார்த்தைகள் அவரின் முன்னால் வந்து நிற்க, தன் நெஞ்சைப் பிடித்தவர், ‘அவரும் உயிரோட இல்ல... வயசு பொண்ணு காணாமப் போனா, அவர் குடும்பத்துல இருக்குறவங்க இனி அவளை வாழவே விட மாட்டாங்களே!’ என்று பதைபதைத்தது அவர் உள்ளம்.

தன் கணவர் இறந்து இருந்தாலும், அவரின் குடும்பத்தினர், தன் மகளை நன்றாகவே பார்த்துக்கொள்வர் என்று நினைத்துக் கொண்டு தான் இரண்டு நாட்களாக தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார் பரணி. அனால் இப்போது சிவாவின் பேச்சில், “நான் உடனே இந்தியா வரேன் சிவா” என்று சொல்லி அழைப்பை துண்டித்தவர், பல வருடங்கள் கழித்து, எங்கே இனி தன் காலடித் தடம் படவே கூடாது என்று நினைத்தாரோ, அங்கேயே தன் மகளைக் காக்கச் சென்றார்.






 

NNO7

Moderator
அத்தியாயம் – 11

நான்கு நாட்களுக்குப் பின்...

“இல்ல எனக்குப் புரியல. எதுக்காக நாம இப்படி ஓடி ஒழியணும்? என் அண்ணன் கிட்ட நான் பேசுறேன்னு சொன்னாலும் நீங்க கேட்க மாட்டேங்குறீங்க” என்று நிலவனிடம் அலுத்துக் கொண்டாள் வனரோஜா.

அந்த மாலை நேர தென்றல் காற்றில், வனரோஜாவின் சிகை அவளது கண்ணுக்குள் செல்ல, அதனை அவள் காதுக்குப் பின்னால் ஒதுக்கிவிட்டவன், “நான் சொல்றதைக் கேளு, இந்த எண்ணத்தைக் கைவிட்டுடு” என்று நிலவன் சொல்ல, அவன் கண்களில் தோன்றிய காந்தத்தால் கவரப்பட்டு, தன்னையும் மீறி தன் தலையை ஆட்டிக் கொண்டாள் வனரோஜா.

அந்த ரிசார்ட்டின் பின்னால் இருந்த பள்ளத்தாக்கைத் தான், ஒரு மரபெஞ்சில் அமர்ந்து இருவரும் ரசித்துக் கொண்டிருந்தனர். பரணியும் தன்னைத் தேடி இந்தியா வந்ததாக நிலவனுக்குத் தகவல் கிடைக்க, உடனே அந்தத் தீவில் இருந்து, வனரோஜாவை அழைத்துக் கொண்டு, வயநாட்டிற்கு சென்றான்.

நிலவனோ இயற்க்கை அழகை ரசித்துக்கொண்டிருக்க, தன் இடப்பக்கம் திரும்பி அவனது முகத்தைப் பார்த்த வனரோஜா, “என் விஷயத்தில் எதிலும் தலையீட மாட்டேன்னு சொல்லி தான் அக்ரீமென்ட் போட்டீங்க... ஆனா இப்ப...” என்று சொல்லி இழுத்தாள்.

அவள் பக்கம் திரும்பியவன், “இப்ப என்ன? இப்போதும் அப்படி தான் உனக்கும் எனக்கும் எந்த வித உறவும் உருவாகக்கூடாது. அதை உன் மண்டையில் நல்லா ஏத்திக்கோ” என்று சொல்லி முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டான்.

“ம்ச்... நானும் அந்த அர்த்தத்துல கேட்கல. என்னோட அண்ணனை நான் பார்க்குறதும் பார்க்காததும் என்னோட தனிப்பட்ட விருப்பம். அதில் நீங்க தலையுடுறது எனக்குப் பிடிக்கல” என்றாள் வேகமாக.

“இதைப் பத்தி ஏற்கனவே நாம பேசிட்டதா எனக்கு நியாபகம்” என்றான் அவளை உறுத்து விழித்தபடி.

“எதுக்காக இப்படி பண்றீங்க மிஸ்டர் நிலவன்? சப்போஸ் நான் செத்துப்போயிட்டா, சொத்து உங்க கைக்குக் கிடைக்காதுன்னு பயப்படுறீங்களா!” என்றாள் எரிச்சல் மிகுந்த குரலில்.

“அப்படி தான்னு வச்சிக்கோ... இப்ப என்ன அதுக்கு?” என்றான் திமிரான குரலில்.

“அக்ரீமென்ட்ல என் அண்ணனைப் பார்க்கக்கூடாதுன்னு எதுவும் எழுதல. அதனால நான் அவரைப் பார்க்கத் தான் போறேன்” என்று அவனுக்கு சிறிதும் சளைத்தவள் இல்லை என்பது போல் பேசினாள்.

“நான் சொல்லாம, அவன் யாருன்னு உனக்குத் தெரியப்போறது இல்ல. நான் உன்கிட்ட சொல்லப்போறதும் இல்ல” என்றான் எங்கோ வெறித்துப பார்த்தபடி.

“ஆனா ஒன்னு மட்டும் உண்மை நிலவன், நீங்க சொல்றதை எல்லாம் என்னைக் கேட்க வைக்குறீங்க. நானும் அதுக்கு தலையை ஆட்டுறேன்” என்றாள் அவனிடம்.

“அதெல்லாம் விடு. நான் சொன்ன செயற்கை கருத்தரிப்புமுறை பற்றி யோசிச்சியா? இன்னும் எத்தனை நாளைக்குத் தான் தனியா இருக்கப்போற?” என்று நான்கு நாட்களுக்கு முன் தீவியில் வைத்துப் பேசிய பேச்சுக்களை திரும்பவும் இழுத்தான்.

தன் கைகளைக் கட்டிக்கொண்டு, அவன் முகத்திற்கு நேராக பார்த்தவள், “கல்யாணம் ஆனா தானே சொத்துன்னு சொன்னீங்க? இல்ல குழந்தை பிறந்தா தான் சொத்து உங்களுக்குக் கிடக்கணும்னு இருக்கா?” என்று விளையாட்டாக தான் கேட்டாள்.

அது தானே உண்மையும் கூட, ஆனால் இந்தக் கேள்வியில் அதிர்ந்த நிலவன், கோபத்தில் பேச ஆரம்பித்தான்.

“உன் நலனுக்காக மட்டும் தான் சொன்னேன். உன் எதிர்காலத்தைப் பத்தி நான் யோசிச்சது என்னோட முட்டாள் தனம் தான். நீ எக்கேடோ கெட்டுப்போனா எனக்கு என்ன?” என்று கத்தியபடி, இருக்கையில் இருந்து எழுந்தவன், தன் கைகள் இரண்டையும் தேய்த்துக் கொண்டு, “ரொம்ப குளிருது உள்ள வா. பிறகு உனக்கு இதனால காய்ச்சல் வந்தாலும் நான் தான் பார்க்கணும்” என்று அவளிடம் எரிந்து விழுந்துவிட்டு உள்ளே சென்றான்.

‘சும்மா கேட்டதுக்கு எதுக்கு இவ்வளவு கோபம்’ என்று தனக்குள் கேட்டுக்கொண்டே உள்ளே சென்றவள், தன் அறைக்குள் சென்று திரும்பவும், தன் தோழி சந்தியாவிற்கு தொடர்பு கொண்டாள்.

அவள் கெட்ட நேரமோ அல்லது நிலவனின் நல்ல நேரமோ, அவளுக்கு அழைப்பு செல்லவே இல்லை. ஆனால் கடவுள் வேறு ஒரு ரூபத்தில் அவளுக்கு உதவினார்.

வழக்கம் போல் வாட்ஸ்அப்பில் சந்தியாவிற்கு செய்தி அனுப்பலாம் என்ற நினைப்போடு, அவள் வாட்ஸ்அப் செல்ல, அங்கே சந்தியாவிடம் இருந்து அவளுக்குப் பதில் செய்தி வந்திருந்தது.

அது தந்த மகிழ்ச்சியோடு, அதனைத் திறந்து பார்த்தவள், அவள் சொன்ன செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தாள்.

அதில், “ரோஜா இப்ப நான் சொல்றதைக் கேட்டு டென்ஷன் ஆகாத. அந்த நிலவன் நல்லவன் இல்லைடி. எப்படியாவது அங்க இருந்து தப்பிச்சிரு. நீ யாரும் இல்லாத அனாதை எல்லாம் கிடையாது. உனக்குன்னு குடும்பம் இருக்கு. அவங்க உன்னைத் தான் தேடிக்கிட்டு இருக்காங்க” என்று எழுதி இருந்தது.

அதில் எழுதப்பட்டிருந்த செய்தியை நான்கு ஐந்து தடவைகளுக்கு மேல் தன் கைகள் நடுங்க மாறிமாறிப் படித்தாள் வனரோஜா.

அவள் மனதிலோ பெரும் புயல் அடித்துக் கொண்டே இருந்தது. அவ்வளவு பெரிய படிப்பு எல்லாம் படித்து என்ன பயன்? இப்படி வந்து ஏமாந்துவிட்டோமே என்று கதறியது அவளது மனது.

அவள் தன் நெஞ்சில் கைவைத்து, மூச்சு திணறிய நிலையில் நிற்க, தன் குடும்பம் தன்னைத் தேடுகிறது என்ற செய்தி எல்லாம் பின்னால் தான் போனது.

அவளுக்குப் பின்னால் தான், தன் கைகளைக் கட்டிக் கொண்டு நின்றிருந்தான் நிலவன்.

அவள் அலைபேசியில் இருந்த செய்தியையும் பார்த்துவிட்டான்.

ஆனால் அவன் மனது எல்லாம் எந்த வித கலவரமும் கொள்ளவில்லை மிகவும் சாதாரணமாக, “என்னாச்சி வனரோஜா பேயைப் பார்த்த மாதிரி நிற்குற?” என்றான் தன் கைகளை இருபுறமும் உள்ள காற்சட்டைப் பையில் விட்டபடி.

அதில் அவளது பயம் தொண்டைக்குழியில் வந்து நின்றது. அரண்டுபோன முகத்துடன் நிலவனைப் பார்த்தவள், வேகமாக தன் அலைபேசியை முதுகுக்குப் பின்னால் ஒழிக்க முயன்றாள்.

பின், அவளின் கையைப் பிடித்து இழுத்து, அவளின் அலைபேசியை பறித்தவன், “உன் அண்ணன் எந்த எல்லைக்கும் போவான்னு நான் தான் சொன்னேனே! இப்ப உன் ப்ரண்ட்டையும் மிரட்டுறான் போல. ஆனா நீ என்னை நம்புற தானே” என்று கேட்டுக்கொண்டே, தன் வலது கையால் அவளது கன்னத்தைத் தடவினான்.

அவள் கண்ணில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது. அதையும் துடைக்க அவன் கையை எடுக்க, உடனே அதனைச் செய்ய விடாமல், அவனது கையைப் பிடித்தவள், “நமக்குள்ள எதுவும் கிடையாதுன்னு அடிக்கடி சொல்லிக்கிட்டே தான் இருக்கீங்க. இதெல்லாம் பண்ணி, உங்க மேல என்னைக் காதலில் விழ திட்டம் செய்யாதீங்க” என்றாள் மெதுவான குரலில்.

அதற்கு உதட்டை ஒரு பக்கமாக வளைத்து சிரித்தவன், “எனக்கு அதெல்லாம் தேவை இல்ல. உனக்கும் தேவை இல்லைன்னு சொல்லி தான் அக்ரீமென்ட்ல கையெழுத்துப் போட்டு இருக்க” என்றான்.

தன் கண்ணீரை துடைத்தவள், “என்கிட்ட உண்மையை மட்டும் சொல்லுங்க. பொய் மேல பொய் சொல்லி, உங்களால மனிதர்களைப் பார்த்தாலே நான் வெறுக்கும் நிலைக்கு என்னைக் கொண்டு வந்து நிறுத்தாதீங்க” என்றாள் கண்ணீர் மல்க.

இதுக்கும் மேல் நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்த நிலவன், “உன்னைக் கல்யாணம் பண்ணா தான் எனக்கு சொத்து வரும் அது தான் உண்மை. மத்தபடி வேற ஒன்னும் இல்ல. அதோட இன்னொன்னு நீ ஐவிஎப் மூலம் குழந்தையும் கட்டாயம் பெத்துக்கணும். அப்படி சொல்லித்தான் அக்ரீமென்ட்ல நீ கையெழுத்து போட்டு இருக்க. ஆனா உனக்கு இஷ்டம்னா குழந்தைய நீயே வச்சிக்கோ, எனக்கு வேண்டாம். அப்படி உனக்கு தேவை இல்லாத பட்சத்தில் அதை ஹோம்ல விட்டுடலாம்” என்று சொல்லி அவளை அதிர்ச்ச்சியில் ஆழ்த்தினான்.

கொஞ்சம் கூட மனிதத்தன்மை இல்லாமல் தான் இருந்தது அவனது பேச்சு. அவனது குறிக்கோள் எல்லாம் சொத்து ஒன்றை மட்டுமே சுத்தி வந்தது.

தான் நன்றாக ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதனை முழுவதுமாக அப்போது தான் உணர்ந்த வனரோஜா, “ஆனா... ஆனா அதில் அப்படி எல்லாம் எதுவும் எழுதலையே!” என்று பதறினாள்.

அதற்கு சிரித்தவன், “இந்திய அரசாங்கத்திற்கு மருந்து சப்ளை பண்றதே நான் தான். இங்க பத்திர ஆபிஸ்ல உன் கையெழுத்தை வச்சி எனக்குத் தகுந்த மாதிரி மாத்திக்கிட்டேன்” என்றான் வன்மமாக.

தன் அழுகையைக் கட்டுப்படுத்தியபடி, “பத்து கோடி ரூபாயைக் கொடுத்தா மட்டும் தான், நான் இங்க இருந்து போக முடியுமா?” என்றாள்.

அவளுக்குக் கோபம் வரத்தான் செய்தது. ஆனால் அதனை நிலவனிடம் காட்டவேண்டிய தருணம் இதுவல்ல என்பது அவள் எண்ணம். ஏனென்றால், தெரியாத இடத்தில் அவனுடன் தனியே வசிக்கின்றாள். இவனைக் கோப்பப்படுத்தி அவன் தன்னை கொலை செய்துவிட்டால் என்ன செய்வது? அதற்காகவே பொறுமை காத்தாள்.

தன் கையை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு அவளைப் பார்த்தவன், “பத்து கோடி உன்கிட்ட இருக்குதா?” என்றான் ஏளனக்குரலில்.

“இல்லை “ என்று தன் தலையை ஆட்டியவள், “ஆனா நான் கோர்ட்டுக்குப் போவேன்” என்றாள் கொஞ்சம் தைரியத்தை இழுத்துப் பிடித்தபடி.

“இந்த கேஸ் கண்டிப்பா பத்து வருஷம் இழுக்கும். அதுக்குள்ள நம்ம அக்ரீமென்ட் எப்பவோ முடிஞ்சும் போயிருக்கும். எனிவே, நீ பத்து கோடியை எடுத்து வச்சாலும், என்னோட ஹாஸ்பிடல்ல தான் நீ ரெண்டு வருஷத்துக்கு வேலை பார்த்து ஆகணும். ஏன்னா அதுக்கான ஏற்பாட்டை நான் பண்ணிட்டேன். நீ என்ன பண்ணாலும், இந்த வேலையை விட்டு நீ போக முடியாது. அது லண்டன் சட்டப்படி அமைஞ்சு இருக்கு” என்று சொல்லிவிட்டு அவளைப் பார்த்தான்.

இப்போது குரலில் கடினத்தைக் கூட்டி, “என் அண்ணன் தான் என்னைத் தேடுறாருன்னு நினைக்குறேன். நான் அவரைப் பார்க்கணும்” என்றாள் வனரோஜா.

“எதுக்கு? நீ பட்டக்கடனை அவன் அடைப்பான்னு நினைக்குறியா? அவனே ஒரு செல்லாக் காசு தான், உன்னை மாதிரியே! ரெண்டு செல்லாக்காசும் சேர்ந்து அப்படி என்னத்த பண்ணப் போறீங்க? பத்து கோடியை எடுத்து வச்சிட்டு நீ எங்கனாலும் போகலாம்” என்று மிகவும் தரக்குறைவாக பேசினான்.

வனரோஜா சூழ்நிலை கருதி அமைதியாக இருந்தாலும், அவளால் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

இருவருக்குள்ளும் வார்த்தைகள் காரசாரமாக நடந்து கொண்டிருக்க, தன்னையும் அறியாமல் வனரோஜா பேசிய பேச்சால், எரிமலைக் குழம்பாய் வெடித்து சிதறிய நிலவன், “என்னை பேசுற நீ ரொம்ப யோக்கியமானவளா?” என்று சொல்லி ஒரு கணம் நிறுத்தியவன், தன் உதட்டை சுழித்து, “முதல் தடவை பார்க்கும் போது, கைப்படாத ரோஜா மாதிரி அந்த நடிப்பு நடிச்சிட்டு, அடுத்த ரெண்டு நாள்லையே எப்படிடி என்கூட ஒன் நைட் ஸ்டாண்ட் இருந்த!” என்று கேட்டு, அவளை சிலையாக்கினான்.


 

NNO7

Moderator
அத்தியாயம் – 12

‘என்னை என் குடும்பம் தேடுறதா சந்தியா சொன்னாளே!’ என்று நினைத்தவள், “என்னோட அம்மா அப்பா... என்னோட அம்மா அப்பான்னு சொல்லி ஒரு கல்லறையைக் காமிச்சதும் பொய்யா?” என்று ஆக்ரோஷத்துடன் நிலவனின் கையைப் பிடித்து ஆட்டினாள் வனரோஜா.

அதில் சிறிதும் வருத்தம் இல்லாமல், தன் மேல் இருந்த அவளது கையை வெடுக்கென்று எடுத்துவிட்டவன், “அது என்னோட அம்மா அப்பா. அது அவங்களோட கல்லறை. ஆனா உன்னோட அம்மா இருந்தும் இல்லாதது மாதிரி தான்” என்று சொல்லி அவளைக் குழப்பினான்.

தொடர்ந்து பேசியவன், “என்னாச்சி நான் சொல்றது புரியலையா? அவங்களை நீ பார்க்கும் போது உனக்கே தெரியவரும்” என்று சொல்லி தன் தோள்களைக் குலுக்கிக் கொண்டான்.

அவன் வாயால் சொன்ன செய்தியை செவியால் கேட்டவள், வேறு எதையும் காதில் வாங்காமல், அவன் சொன்ன, ‘உன்னோட அம்மா’ என்பதனைப் பிடித்துக் கொண்டு, “நல்லா இருக்குறவங்களை செத்து போயிட்டாங்கன்னு சொல்ல உங்களுக்கு எப்படி மனசு வந்தது? உங்க அம்மா அப்பா உயிரோட இருந்திருந்து, நான் இப்படி பேசி இருந்தா உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்” என்று அவள் கேட்கும் போது, அவன் எதுவும் பேசவில்லை.

அவள் எந்த அளவுக்குப் போகின்றாள் என்று பார்ப்போம் என்பது போல் தான் நிலவன் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் அமைதியைப் பார்த்தவள், “உங்களுக்கு எங்க அதெல்லாம் தெரியப்போகுது. பெத்தவங்க சொத்து வேணும். வேறு எதைப் பத்தியும் கவலைக் கிடையாது அப்படி தானே!” என்று அவள் சொல்ல, அப்போதும் அவன் அமைதியைத் தான் கடைபிடித்தான். ஆனால் தன் பெற்றோரைப் பற்றிப் பேசியதால், தன் உணர்வுகளை அரும்பாடுபட்டு அடக்கி வைத்திருந்தான்.

அதில் இன்னும் தைரியம் வரப்பெற்றவளாக, “உங்க அம்மா நல்ல வேளை உயிரோட இல்ல. அப்படி மட்டும் இருந்திருந்தா, இந்த மாதிரி மிருகமா தன் பையன் வளர்ந்து நிற்குறதைப் பார்த்து, அவங்களே தன்னோட உயிரை விட்டு இருப்பாங்க” என்று எதுவும் யோசிக்காமல் பேசிவிட்டாள்.

நிலவனின் கோபமும் கரையைக் கடந்தது. அவன் கத்தவில்லை, அவளை அடிக்கவில்லை, கோபம் கொள்ளவில்லை, ஆனால வனரோஜாவை மிகவும் தரம் தாழ்த்திப் பேச வேண்டும் என்ற நினைப்போடு பேச ஆரம்பித்தான்.

“என்னை பேசுற நீ ரொம்ப யோக்கியமானவளா?” என்று சொல்லி ஒரு கணம் நிறுத்தியவன், தன் உதட்டை சுழித்து, “முதல் தடவை பார்க்கும் போது, கைப்படாத ரோஜா மாதிரி அந்த நடிப்பு நடிச்சிட்டு, அடுத்த ரெண்டு நாள்லையே எப்படிடி என்கூட ஒன் நைட் ஸ்டாண்ட் இருந்த?” என்று நெருப்பை அள்ளி அவள் மீது கொட்டினான் நிலவன்.

நிலவனின் இந்த பேச்சில் அப்படியே நின்றுவிட்டாள் வனரோஜா, அவன் சொல்ல சொல்ல மூன்று நாட்களுக்கு முன்னால் இரவு நடந்ததை தான் சுற்றி வந்து பிசைந்தது அவளின் மனது.

ஆனால் படாரென்று, அந்த நினைப்பை ஒதுக்கி வைத்தவள், அவன் முன்னால் நிற்க முடியாமல் தலைக்குனிந்தாள்.

அவள் நாடியைப் பிடித்துத் தன்னை நோக்கி, அவளது முகத்தை நிமிர்த்தியவன், “என்னாச்சி அசிங்கமா இருக்கா? இதெல்லாம் பேசக்கூடாதுன்னு தான் நானும் நினைச்சேன். ஆனா என்னை நீ பேச வைக்குற” என்றான் பல்லைக்கடித்தபடி.

அனைத்தையும் பேசிவிட்டு, தன் மூச்சை இழுத்து வெளிவிட்டவன், “சரி. எல்லாம் ரெடி பண்ணிட்டேன் லண்டன் போகுறதுக்கு ரெடியாகு. ட்ரீட்மென்ட்க்கும் சேர்த்து தான்” என்று சொல்லிவிட்டு, அவள் அலைபேசியையும் பக்கத்தில் இருந்த மேஜையில் வைத்துவிட்டு, வெளியே சென்றான் நிலவன்.

அவன் சென்றதும், தரையில் அமர்ந்து வெடித்து அழுதாள் வனரோஜா. எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்திருந்தாளோ தெரியவில்லை.

ஆனால் காலையில் அவள் கண் விழித்துப் பார்க்கும் போது, அவள் முன்னே தான் நின்று கொண்டிருந்தான், அவளின் ஒரே சொந்த அண்ணன் சிவா.

அவள் கண்ணைக் கசக்கிவிட்டுப் பார்க்க, அவளது கையைப் பிடித்தவன், “உனக்கு ஒன்னும் இல்லையே ரோஜா” என்று கேட்டுவிட்டு பதறிய நெஞ்சத்தோடு, அவளைத் தலைமுதல் கால் வரை ஆராய்ந்தவன், அவளின் தலையைத் தடவி, “அவன் உன்னை எதுவும் கொடுமை படுத்தல தானே!” என்றவன் குரலில் பரிதவிப்பு இருந்தது.

அவன் பேச்சில், இவன் தான் தன் அண்ணன் என்பதனை புரிந்து கொண்டவள், “அண்ணா?” என்று கேட்க, தன் தலையை, “ஆம்” என்று ஆட்டியவன், வனரோஜாவின் தலையை அன்பொழுக தன் நெஞ்சில் சாய்த்துக்கொண்டான்.

சில நிமிடங்கள் நடந்த இருவரின் பாசபோராட்டம் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.

“இங்க இருந்து நாம போகலாம் ரோஜா” என்று அவள் கையைப் பிடித்து மெதுவாக எழுப்பினான்.

“ஆனா நிலவன்...” என்று அவள் கேட்க, “கோபம் மூச்சிகளை விட்டவன், “அவனை நான் பார்த்துக்குறேன்” என்று அவன் சொல்லும் போதே, வனரோஜாவின் கண்களில் இருந்து சூடாக கண்ணீர் வெளியேறியது.

சிவாவின் தோளில் சாய்ந்து கொண்டவள், “இதெல்லாம் நிஜம் தானே! நிலவனை மாதிரி நீயும் என்னை ஏமாத்தலையே!” என்று கமறிப்போனக் குரலில் கேட்டாள்.

அதில் மிகவும் சிவாவின் மனம் வலித்தது. இருந்தும் தன் தங்கையின் நிலை அவ்வாறு கேட்க வைத்தது என்பதனை உணர்ந்தவன், “இந்த உலகத்துல, எனக்கு நீ மட்டும் தான் முக்கியம் ரோஜா. உன்னை நான் எத்தனை நாளா தேடிக்கிட்டு இருந்தேன் தெரியுமா?” என்றவன் கண்களில் இருந்தும் கண்ணீர் வழிந்தது.

“மன்னிச்சிடு அண்ணா. என்னோட நிலைமையும் அந்த மாதிரி தான் இருக்கு” என்று சொல்லும் போதே, அங்கே வந்த ராஜ், “நிலவன் சார், அவர் சொந்த ஜெட்டில் எப்பவோ லாஸ் ஏஞ்சல்ஸ் போயிட்டாரு சார்” என்றான்.

அதில் சிவாவின் முகத்தைப் பார்த்த வனரோஜா, “ஆனா நிலவன் எப்படி என்னை சும்மா விட்டாரு?” என்றாள் அதிர்வுடன்.

“ம்ச்... அவனுக்கு எதுக்கு நீ மரியாதை கொடுக்குற?” என்றவன், “லாஸ் ஏஞ்சல்ஸ்ல அவன் நிறுவனம் பெரிய பிரச்சனைல இருக்கு” என்றவன் குரலில் ஒரு வித மகிழ்ச்சி. ஆனால் இதை செய்தது என்னவோ பரணி தான்.

“ஆனா, அவர் என்னை சும்மா விடமாட்டாரு அண்ணா. நான் ரொம்பப் பெரிய பிரச்சனையில் இருக்கேன்” என்று அவள் சொல்ல, “புரியது ரோஜா உன்னோட நண்பி எல்லாத்தையும் என்கிட்ட சொல்லி, நீ அனுப்புன செய்தியையும் காட்டுனாங்க. அதில் உன் போனை ட்ராக் பண்ணி தான் உன்னைக் கண்டுபிடிச்சோம். கடல் பகுதியில் இருந்திருந்தா என்னால உன்னைக் கண்டுபிடிச்சிருக்க முடியாது” என்றான் சிவா.

“ஆனா பத்து கோடிக்கு எங்க போக?” என்றாள் அவள் பயத்துடன்.

அதற்கு சிரித்தவன், “அதெல்லாம் ஒரு தொகையே இல்ல. பார்த்துக்கிடலாம் இங்க இருந்து முதல்ல போவோம் வா” என்று அவளைக் கூட்டிக்கொண்டு வெளியே சென்றான்.

அங்கே அவனது மகிழுந்து தயாராக இருந்தது. அதில் ஏறி அமர்ந்ததும், “அம்மா அப்பா எல்லாம் எங்க இருக்காங்க” என்று அவள் கேட்கும் போது, அவனுள் சிறு அமைதி.

அவள் திரும்பவும் அதனைப் பற்றிக் கேட்க, “அம்மாவைப் பார்க்கத் தான் போறோம். அப்பா எங்க இருக்காருன்னு எனக்குத் தெரியாது ரோஜா” என்பதுடன் முடித்துக்கொண்டான்.

“என்ன சொல்ற நீ?”

“அம்மாவுக்கும் அப்பாவுக்கும், நீ பிறந்ததுமே விவாகரத்து ஆகிடுச்சு. ப்ளீஸ் இதுக்கு மேல என்கிட்ட எதுவும் கேட்காத. நேரம் வரும் போது நானே உன்கிட்ட சொல்றேன்” என்று சிவா சொன்னதும், தன் தலையை ஆட்டிக்கொண்டாள் வனரோஜா.

துரோகத்திற்கு மேல் துரோகத்தால் ஏமாந்த வனரோஜாவுக்கு சிவாவின் மேல் சந்தேகம் தான் வந்திருக்க வேண்டும். ஆனால் தன் சாயலில் தன்னைப் போலவே இருந்த சிவாவைப் பார்த்து, வனரோஜாவின் மனம் கசிந்து தான் போனது.

இருந்தும் அவனிடம் இதனைப் பற்றி கேட்கத் தான் செய்தாள். அவன் கண்ணில் இருந்து வழிந்த கண்ணீரே அதற்குப் பதில் சொல்லியது

அவளின் மடியில் இருந்த கையைப் பற்றிய சிவா, “அம்மா தான், உன்னைக் கண்டு பிடிச்சாங்க. அவங்களைப் பார்க்கும் போது, அவங்க எதாவது பேசுனா நீ அதைப் பெருசா எடுத்துக்காத” என்றான் மெதுவாக.

“என் அண்ணா? அம்மாவுக்கு என்னைப் பிடிக்காதா?” என்றாள் கலங்கிய குரலில்.

“ஹேய் அப்படி இல்ல ரோஜா. விவாகரத்து வாங்கினதும், நான் அம்மாக்கிட்டயும், நீ அப்பாக்கிட்டையும் இருந்தோம், உன்னைக் கண்டுபிடிக்க நான் தேடும் போது தான், நீ அப்பாக்கூட இல்லைங்கற விஷயமே எனக்குத் தெரிய வந்தது. அப்பா எங்கன்னு எனக்குத் தெரியாது. அம்மாவும் அப்பாவைப் பார்க்க விரும்பல” என்றவன் அவர் இறந்த விஷயத்தை, ரோஜாவின் நலம் கருதி மறைத்தான்.

அவன் சொன்னதைக் கேட்டு, விஷயத்தை ஓரளவு புரிந்து கொண்டவள், “ஆனா என்ன ஆனாலும் என்கூட நீ இருப்ப தானே!” என்றாள்.

அவள் கையில் அழுத்தத்தைக் கூட்டி, “யாருக்காகவும் என் தங்கச்சியை நான் விட்டுக்கொடுக்க மாட்டேன் ரோஜா... எனக்கு நீ மட்டும் தன் முக்கியம். உன்னை எதிர்க்கும் எதுவுமே எனக்கு வேண்டாம்” என்றான் உருக்கமான குரலில், அப்போது அவனது மனக்கண்ணில் முன்னால் வந்து நின்றாள் நிலா.

உடனே தன் கண்களை அழுத்தமாக மூடிக்கொண்டுத் திறந்தவன், தன் தங்கையின் தலையைத் தடவினான்.

வயநாட்டில் உள்ள ஒரு ரெசிடென்ட்டில் தான் இருந்தார் பரணி.

கால் மேல் கால் போட்டு, ராணித் தோரணையில் அமர்ந்திருந்தவரின் முன்னால் தான் ரோஜாவும், சிவாவும் அமர்ந்திருந்தனர்.

ரோஜாவைப் பார்த்ததும், அவர், “மகளே! உயிரே!” என்றெல்லாம் கூறி கட்டிக்கொள்ளவில்லை. மாறாக, தான் சிறுவயதில் இருந்ததைப் போலவே இருக்கும் ரோஜாவை கீழிருந்து மேலாக பார்த்தவர் கண்களில், ஒரு வித பிரகாசம் மின்னி மறைந்தது என்னவோ ஒரு கணம் மட்டுமே!

தன் மகனிடம் பார்வையைத் திருப்பியவர், “இன்னும் என்ன பண்ணனும் சார் உங்களுக்கு? நீங்க சொன்னதை எல்லாம் செஞ்சிட்டேனே!” என்றவரின் பேச்சில், சிவா எதனால் அப்போது அப்படித் தன்னிடம் கூறினான் என்பதனை உணர்ந்தவளுக்கு இதயம் கனத்தது.

இருந்தும், அவர் கண்ணில் தோன்றிய பிரகாசம் அவளுள் சிறு மகிழ்ச்சியை தத்து எடுக்கத் தான் செய்தது. ஆனால் அவரின் அடுத்த வாக்கியங்களை எல்லாம் அவள் கேட்கும் வரை மட்டுமே!

ரோஜாவிடம் எதுவும் பேசாமல் சிவாவிடம் மட்டுமே பேசிவர், “நான் சொன்னதை எல்லாம் சொல்லிட்டு, இந்தப் பெண்ணை அவள் வளர்ப்பு அம்மா அப்பாக்கிட்டக் கொண்டு போய் விட்டுடு” என்று பல ஆண்டுகள் கழித்துப் பார்க்கும் தான் பெற்ற மகவின் மீது சிறு பாசம் கூட இல்லாமல் பேசினார் பரணி.

அதுவரை பரணியை பிரம்மிப்பாகவும், இதற்கு முன் எங்கோ பார்த்தது போல் இருந்த பரணியை, எங்கே பார்த்தோம் என்றும் யோசித்துக் கொண்டிருந்த ரோஜாவுக்கு, அவர் பாசம் இல்லாத பேச்சு வருத்தத்தைத் தந்தது.

******

இங்கே தன் ஜெட்டில் அமர்ந்திருந்த நிலவன், “உன் தங்கச்சியை என்கிட்ட இருந்து, காப்பாத்திட்டதா நினைக்குறியா சிவா? ஆனா எப்படி இருந்தாலும் அவள் என்னிடம் தானே வந்தாகணும்” என்று தனக்குள் சொல்லியபடி, நிலா ஹாஸ்பிடல்ஸ் டாக்டர் பயோ டேட்டாவில் இருந்த நிலாவின் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தைப் பார்த்து வன்மமாய் புன்னகை புரிந்தான்.
 

NNO7

Moderator
அத்தியாயம் – 13

பரணியின் பேச்சுக்களை எல்லாம் கேட்டு, வனரோஜா தான், உணர்ச்சியின் பிடியில் தன் தலையைத் தாழ்த்திக் கொண்டு அமைதியாக இருந்தாள்.

ஆனால் சிவாவிற்கோ, தன் தாயின் பேச்சில் எரிச்சல் தான் வந்தது.

“ரோஜா எங்கயும் போகமாட்டாள். அவள் நம்ம கூட தான் வருவாள்” என்றான் சத்தத்தைக் கூட்டியபடி.

“அவளோட வீட்டில் அவளைத் தேட மாட்டாங்களா?” என்று கேட்க, இப்போது தான் தன் தலையை நிமிர்ந்து பார்த்து, பதில் பேச ஆரம்பித்தாள் வனரோஜோ, “இல்ல நான் பார்த்துப்பேன். நான் இங்க இருந்து போறேன்” என்று சொல்லி இருக்கையில் இருந்து எழுந்தவளின் கையைப் பிடித்துத் திரும்பவும் அதில் அமரவைத்த சிவா, “எங்க போற?” என்று அவளிடம் கேட்டுவிட்டு, தன் அன்னையைப் பார்த்தவன், “நீங்க இப்ப என்னம்மா நினைச்சிகிட்டு இருக்கீங்க? இங்க என்ன நடக்குதுன்னே தெரியாம, எதையாவது பேசாதீங்க” என்றவன் ஒரு கணம் நிறுத்தி, “ரோஜாக்கு யாரும் இல்ல” என்றான் சின்ன குரலில்.

அநேகமாக இதனைக் கேட்கும் போது, பரணி பதறி தான் இருக்கவேண்டும். ஆனால் அதற்கு மாறாக, “அதுக்கு என்ன? யாரும் இல்லைன்னா, நான் கூட்டிட்டு போகணுமா?” என்று கொஞ்சமும் பாசம் இல்லாத குரலில் ஆவேசமாக கேட்டார்.

அப்போது தான், ‘உனக்கு அம்மா இருந்தும் இல்லாதது மாதிரி தான்’ என்று நிலவன் எந்த அர்த்தத்தில் அவ்வாறு சொன்னான் என்பதே வனரோஜாவிற்குப் புரிந்தது.

அவர் பேச்சில் மிகவும் காயம் பட்டுத்தான் போனாள். ஆனால் சிவா அமைதியாக இல்லை. எனக்கு இருக்கும் உரிமை ரோஜாவுக்கும் இருக்கு தானே! பின்ன ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க அம்மா” என்றான் தாளமாட்டாத குரலில்.

பரணி பேசுவதற்குள் முந்திக்கொண்ட, வனரோஜா, “அண்ணா, எனக்கு எங்கயும் வர விருப்பம் இல்ல. என்னைக் கூட்டிட்டுப் போக சொல்லி நான் பிச்சையும் கேட்கல” என்றாள் அழுத்தம் நிறைந்த குரலில்.

அவளின் பேச்சுக்கு எதுவும் பேசாத பரணி, ரோஜாவைத் தான் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் பார்வையில் இருந்து எதையும் கண்டுபிடிக்கமுடியவில்லை. அவர் என்ன நினைக்கின்றார் என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம்.

ஆனால் சிவாவோ, வனரோஜாவின் பேச்சில், “நீயும் ஏன் ரோஜா இப்படி பேசுற. உன்னைக் கண்டுபிடிக்க நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா! நீ இந்த மாதிரி பேசுறது எனக்கு ரொம்பவே வலிக்குது” என்று சொல்லிவிட்டு, தன் அன்னையைப் பார்த்தவன், “உங்களுக்கு பொண்ணு வேண்டாம் பையன் மட்டும் வேணுமா?” என்றான் ஒரு மாதிரியான குரலில்.

அதற்குக் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாத பரணி, “எனக்கு பையன் வேணும்னும் நான் சொல்லவே இல்லையே!” என்றார்.

“அப்ப எதுக்குகாக எங்களை பெத்துக்கிட்டீங்க” என்று கோபத்துடன் கத்தினான் சிவா. அதற்கும் சிறுசலனம் கூட இல்லாமல் தான் அமர்ந்து இருந்தார் பரணி.

“அண்ணா” என்று அவன் கையைப் பிடித்துப் பேசாதே என்று தன் தலையை ஆட்டி சைகை செய்தவள், “நான் அப்படி என்ன செஞ்சிட்டேன்னு உங்களுக்கு என் மேல் இவ்வளவு வெறுப்பு?” என்றாள் உள்ளே போனக்குரலில்.

அதற்கும் அவர் தன் வாயைத் திறக்கவில்லை.

தன் முகத்தை சுழித்த சிவா, “அவங்க எதுவும் பேசமாட்டாங்க ரோஜா. எப்போதும் இவங்க இப்படித்தான். சின்ன வயசுல இருந்து இப்ப வரைக்கும் கூட, இவங்க என்கிட்ட பாசமா ஒரு வார்த்தைக் கூட பேசுனதே இல்ல...” என்று அவன் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, பரணியின் பிஏ, அவர் காதில் வந்து எதுவோ சொல்ல,

தன் இருக்கையில் இருந்து எழுந்தவர், “கங்கா நிறுவனத்துல உனக்கு வெறும் ஷேர்ஸ் மட்டும் தான் இருக்கு. நீ எப்போ இந்தியா வந்தியோ அப்பவே உன் வேலையும் போயிடுச்சு” என்று சிவாவிடம் சொன்னவர், வனரோஜாவைப் பார்த்து, “நிலா ஹாஸ்பிடல்ல ரெண்டு வருஷத்துக்கு வேலை பார்க்குறதா கையெழுத்துப் போட்டு இருக்க நீ. இதுல என்னால ஒன்னுமே செய்ய முடியாது. சட்டப்படி இப்ப நீ நிலவனின் மனைவி தான்” என்று சொல்லிவிட்டு திரும்பவும் சிவாவை பார்த்தவர், “நிலவன் கூட பிரச்சனை எதுவும் பண்ணவேண்டாம்” என்று சொல்லிவிட்டு மடமடவென்று அந்த இடத்தைக் காலி செய்தார்.

சிவாவோ அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்க, பரணி சொன்னதில் பதறிய ரோஜா, “என்ன அண்ணா, அம்மா இப்படி பேசிட்டுப் போறாங்க... அந்த நிலவன் கூட தான் நான் கண்டிப்பா இருந்தே ஆகணுமா?” என்றாள் பதைபதைக்கும் நெஞ்சோடு.

“ம்ச்.. இப்ப நீ எதுக்காக பயப்படுற? அப்படி எல்லாம் நடக்க நான் விடமாட்டேன். ஆனா டிவர்ஸ் ரெண்டு வருஷம் கழிச்சு தான் கிடைக்கும். ஆனா ரோஜா...” என்றவன் ஒரு கணம் நிறுத்தி, “நீ கண்டிப்பா பயிற்சி மருத்துவரா அவன் மருத்துவமனையில் வேலை பார்த்து தான் ஆகணும்” என்றான் சிவா.

“ஆனா எனக்கு லண்டன் போறதுக்கு விருப்பம் இல்லையே அண்ணா” என்றாள் குரலில் கவலையை தேக்கி வைத்தபடி.

“நான் இருக்கும் போது நீ எதற்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்ல ரோஜா. நீ ரெண்டு வருஷம் அவன் ஹாஸ்பிடலில் வேலை செய்யலைன்னா, உன் மேல கேஸ் பைல் ஆகும்” என்று விவரமாக சொல்லி அவளுக்குப் புரியவைத்தான்.

“சரி அப்ப எனக்கு அங்க ஒரு ஹாஸ்டல் பாரு” என்க.

“எதுக்கு ஹாஸ்டல்? நம்ம வீடு இருக்கும் போது” என்றான் தன் ஒரு புருவத்தை மட்டும் உயர்த்தியபடி.

“நீ புரிஞ்சி தான் பேசுறியா? இப்ப தானே உன்னோட அம்மா சொல்லிட்டுப் போறாங்க” என்றாள் வேறு பக்கம் தன் தலையைத் திருப்பியபடி.

“ம்ச்... நம்ம அம்மான்னு சொல்லு” என்றவன், அவள் பதில் பேசாமல் நிற்பதைப் பார்த்து, “இங்கப்பாரு ரோஜா, அவங்க என்னையும் தான் வேண்டாம்னு சொல்லிட்டுப் போறாங்க. அதுக்காக அவங்க நம்ம அம்மா இல்லைன்னு ஆகிடுமா?” என்றான் சிவா.

என்ன தான் தன் தாயின் முன் அவர் மனம் நோகும்படி பேசிவிட்டாலும், சிறு வயதில் இருந்து இப்போது வரைக்கும் அவன் கண் முன்னால் பரணி பட்ட அழுகைகள், கஷ்டங்கள் எல்லாத்தையும் பார்த்தவன். பரணிக்குப் பின்னால் இன்னும் ஏதோ சொல்லப்படாத காரணம் உள்ளது என்னும் எண்ணமே அவன் பேச்சின் மூலம் தெரிந்தது.

அதற்கு ரோஜாவோ, “இவங்க தான் என்னைப் பெத்த அம்மான்னு நீ சொல்லித் தான் தெரியும். அதுக்காக என்னைப் பார்த்ததும் பாசத்தைப் பொழியணும்னு நான் கேட்கல. எனக்கு அதில் விருப்பமும் இல்ல. ஆனா என் மனசு கஷ்டப்படும் படி பேசாமையாவது இருந்திருக்கலாம்” என்றாள் கலங்கிய குரலில்.

“ஹேய், இப்ப எதுக்கு நீ கண்ணைக் கசக்குற? நான் தான் சொன்னேனே அவங்க எப்போதும் இப்படித் தான். பிறக்கும் போதே இளவரசியா இருந்தவங்க, அவங்க வாழ்க்கையில் அதிகமான கஷ்டங்களை அனுபவிச்சிட்டாங்க. உனக்கு ஒரு ஆபத்துன்னு தெரிஞ்சதும், அங்க கிடக்குறது எல்லாம் போட்டுட்டு உடனே இங்க வந்துட்டாங்கத் தெரியுமா!” என்றான் சிவா.

அப்போது தான் அதனை நினைத்துப் பார்த்த ரோஜா, ‘சரி அவங்களுக்கு என்ன பிரச்சனையோ!’ என்று ஒதுக்கி வைக்க முடியவில்லை என்றாலும், கடினப்பட்டு, பரணியின் நினைப்பை ஒதுக்கி வைத்தவள், “சரி. ஆனா எனக்கு வீட்டுக்கு வர்றதுக்கு விருப்பம் இல்ல அண்ணா. என்னைப் பார்த்தா அவங்களுக்கும் சங்கடம், எனக்கும் சங்கடம்” என்று அவனுக்குப் புரியவைக்க முயன்றாள்.

“சரி. அப்ப கங்கா பேலஸ் போகவேண்டாம். நான் புதுசா வாங்கின வீட்டுக்கு என்னோட வருவியா?” என்று கேட்டதும், ரோஜாவிற்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.

இதுவரை அவளின் நலனுக்காகப் பார்க்கும் ஒரே ஜீவன் அவள் தோழி சந்தியா மட்டும் தான். ஆனால் இப்போது சிவாவும் அதில் சேர்ந்து கொள்ள, பெண்ணவளுக்கு அவ்வளவு ஆனந்தமாக இருந்தது. வேகமாக தன் தலையை ஆட்டியவள், “உன்கூட கண்டிப்பா வரேன் அண்ணா. ஆனா எனக்கு விசா கிடைக்கலையே!” என்றாள் கொஞ்சம் சோகமாக.

இப்போது வரை கூட லண்டன் செல்லக்கூடாது என்று நினைத்தவள், சிவாவின் அன்பினால் அதற்கு சம்மதித்தவள், விசா கிடைக்கவில்லை என்று வருத்தமும் கொண்டாள்.

“அதெல்லாம் பிரச்சனை இல்ல. நம்ம அம்மா இதுக்கும் ஏற்பாடு பண்ணிட்டு தான் போயிருப்பாங்க. அவங்களுக்கு இங்க இருக்கும் செல்வாக்கு அப்படி. உனக்கு லண்டன்ல எந்த ஒரு குறையும் வராது. அந்த நிலவன் தான் கொஞ்சம் குடைச்சல் கொடுப்பான். இருந்தாலும் நன் பார்த்துப்பேன்” என்று கூறினான்.

உடனே வேகமாக “அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல அண்ணா” என்று அவள் சாதாரணமாக கூற, ‘உனக்கு பிரச்சனை இல்லைனாலும், நிலவன் பிரச்னையை ஏற்படுத்தி தருவானே!’ என்று மனதினுள் நினைத்தவன், நிலவனின் தாத்தா எழுதிய உயிலை முழுவதுமாக ரோஜாவிடம் கூறினான்.

அதனைக் கேட்டவள், ‘அப்ப இதனால தான் செயற்கை கருத்தரிப்பைப் பத்தி என்கிட்ட பேசுனாரா. குழந்தை பிறந்தாத் தான் சொத்து கிடைக்குமா!’ என்று தன்னுள் நினைத்தவள், சிவாவைப் பார்த்து, “எனக்கு எந்தவித சொத்தும் வேண்டாம். என் பெயருக்கு வரும் சொத்தையும் நான் அவருக்கே கொடுத்துடுறேன். என்னை தொந்தரவு பண்ணாம அவர் இருந்தா மட்டும் போதும்” என்றாள் ரோஜா.

“அது பெரிய ப்ராசஸ் ரோஜா. அவன் ஐவிஎப் ட்ரீட்மெண்ட் பத்தி உன்கிட்ட ஏதாவது சொன்னானா?” என்று சிவா கேட்டதும், “ஆம்” என்று இவள் தலையை ஆட்டா, “நினைச்சேன்... அவன் இப்படி தான் செய்வான்னு எனக்கு நல்லாவே தெரியும். அவன் உன்னை தொந்தரவு செய்யாம நான் பார்த்துக்குறேன். நாம லண்டன் போகலாம்” என்றான் தன் தங்கையின் தோள்களைப் பற்றியபடி.

ஒரு மாதத்திற்குப் பின்,

வனரோஜா காலையில் தன் படுக்கையில் இருந்து எழுந்திருக்கும் போதே, அவளுக்கு ஒரே தலை சுத்தலாக இருந்தது.

அவள் லண்டன் வந்து கிட்டத்தட்ட ஒரு மாதங்கள் ஆகிவிட்டது. இங்கே வந்ததில் இருந்து நிலவனைக் காணாமல் மருத்துவமனையில் அவள் வேலை நன்றாகத் தான் செல்கிறது. மாலை நேரம் வீட்டிற்கு வந்ததும் சிவாவுடன் கழிக்கும் பொழுதால் அவள் மனம் மகிழ்ச்சியைத் தான் கொண்டிருந்தது.

இத்தனை வருடங்கள் வாங்காத பொருளை எல்லாம், ஒரே மாதத்தில் தன் தங்கைக்கு வாங்கிக் குவித்த வண்ணம் இருந்தான் சிவா. எல்லாம் நன்றாகத் தான் சென்று கொண்டிருக்கின்றது என்று வனரோஜா நினைக்கும் நேரத்தில் தான் இப்படி ஒரு இக்கட்டான நிலையில் வந்து மாட்டிக்கொண்டாள்.

மருத்துவமனைக்குக் கிளம்புவதற்குள் இத்தோடு மூன்று முறைக்கும் மேல் வாந்தி எடுத்துவிட்டாள்.

ஆளுயரக் கண்ணாடியில் தன்னைத் தானேப் பார்த்தவள், அப்போது தான் தன் மாதவிட்டாய் நாட்கள் தள்ளிப்போய் இருப்பதை உணர்ந்து, அதிர்ச்சியில் தன் கண்களை விரித்தாள்.

அவள் கை நடுக்கத்துடன் அவளது வயிற்றைப் பற்றியது. தலை சுத்தல் வேறு அதிகமாக, இடப்பக்கம் இருந்த மேஜையை இறுக்கமாக பற்றிக்கொண்டாள்.

“நான் ஒரு இம்போடேன்ட்” என்று, அன்று நிலவன் சொன்ன வார்த்தைகள் தான் அவள் காதில் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டே இருந்தது.
 

NNO7

Moderator
அத்தியாயம் – 14

தானும் ஒரு மருத்துவர் என்பதனால், எதையும் உறுதி செய்யமலையே, தன் வயிற்றில் வளர்வது குழந்தை தான் என்று நம்பிய வனரோஜா, ‘எப்படி எப்படியோ பேசி என்னை நல்லா எமாத்திட்டீங்களே நிலவன்’ என்று கண்ணீர் வடித்தாள்.

அவளின் இன்னொரு மனமோ, ‘பின் ஐவிஎப் செயற்கைமுறை கருத்தரிப்பை நிலவன் பேசக் காரணம் என்ன?’ என்று எடுத்துரைத்தது.

அதில், “நான் ஒரு இம்போடேன்ட்” என்று அவன் கூறிய வார்த்தைகள் வேறு அவள் காதில் மாறிமாறி கேட்டுக்கொண்டு இருக்க, தன் கண்ணில் வழிந்தக் கண்ணீரைத் துடைத்தவள், “அப்ப உங்களுக்குத் தெரிஞ்சி நீங்க இம்போடேன்ட் தானே நிலவன்?. அதாவது உங்களால ஒரு குழந்தைக்கு தந்தையாக முடியாது அப்படித்தானே!” என்று கண்ணாடியைப் பார்த்துப் பேசியவள், இப்போது சிரிக்க ஆரம்பித்தாள்.

அப்படி சிரிக்கும் வனரோஜா தன் குணத்தில் இருந்து மாறுபட்டுத் தான் தெரிந்தாள். அவளும் மனுஷி தானே அவளுக்குள் இருக்கும் சொல்லப்படாத காயங்களும், வெளிவரும் நேரம் வரத்தானே செய்யும்.

அப்போது சரியாக சிவா, அவளின் அறையின் கதைவைத் தட்டி, “என்னாச்சி ரோஜா, உனக்கு உடம்பு சரியில்லையா? இன்னைக்குக் காலையில், நீ ஜாக்கிங் கூட வரல” என்று வெளியில் இருந்து கேட்க, வேகமாக தன் முகத்தைத் துடைத்துக் கொண்டவள், “இல்ல அண்ணா, நீ கீழப்போ, நான் இதோ வந்துடுறேன்” என்று சொல்லி வேகமாக கிளம்ப ஆரம்பித்தாள்.

சிவா தன் மகிழுந்தை இயக்க, அவன் அருகில் அமர்ந்து ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்த்தபடி வந்தாள் வனரோஜா.

எப்போதும் எதையாவது பேசிக்கொண்டே வரும் தன் தங்கை இன்று அமைதியாக, வருவதைப் பார்த்து, “என்னாச்சி ரோஜா, அந்த நிலவன் திரும்பி வந்துட்டானா?” என்றான் பல்லைக் கடித்துக் கொண்டு.

“ஐயோ, அதெல்லாம் இல்லை அண்ணா. அப்படியும் அவர் வந்தால் எனக்கு என்ன? என்னை சுத்தி தான் எப்போதும் உன்னோட பாடிகார்ட்ஸ் வேற இருக்காங்களே!” என்றாள் சிரித்தபடி.

“இந்தியாவில் இருக்கும் போது, என்னால உனக்கு சரியா பாதுகாப்புக் கொடுக்க முடியல. ஆனா இங்க அப்படி இல்ல. அந்த நிலவனின் நிழல் கூட உன் மேல படாது” என்று நம்பிக்கை அளித்தான்.

அதற்கு சிரித்தவள், “நான் போறதே அவரோட மருத்துவமனைக்கு தான் அண்ணா” என்றாள்.

“இருந்தாலும் அவனால் உனக்குத் தொந்தரவு தரமுடியாது நான் இருக்குற வரைக்கும்” என்றவனின் குரல் சற்று உள்ளே சென்றது.

“நிலவனுக்கும் உனக்கும் அப்படி என்ன தான் பிரச்சனை?” என்று வனரோஜா கேட்க, “நம்ம குடும்பத்துக்கும் அவன் குடும்பத்துக்கும் எப்போதும் பிரச்சனை தான். நம்ம தாத்தாவையும், அவனோட தாத்தாவையும் தவிர. அவனுக்கு நம்ம குடும்பத்தில் யாரைப் பார்த்தாலும் ஆகாது. ஏதோ தீண்டத்தகாதவங்கள பார்த்த மாதிரி முகத்தை சுழிப்பான் ” என்று மகிழுந்தை லாவகமாக செலுத்தியபடி கூறிக்கொண்டிருந்தான் சிவா.

சில கண அமைதிக்குப் பின்னர் மெதுவாக தன் வாயைத் திறந்த வனரோஜா, “நிலவன் எதுக்காக ஐவிஎப் பத்தி என்கிட்ட பேசணும்?” என்று எதுவும் அறியாதவள் போல் சிவாவிடம் கேட்டு வைத்தாள்.

சாலையைப் பார்த்தபடி வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த சிவாவோ, ரோஜாவின் புறம் திரும்பி பார்த்துவிட்டு, திரும்பவும் சாலையைப் பார்த்தவன், “நான் தான் சொன்னேனே ரோஜா, உனக்குக் குழந்தை பிறந்தாத் தான் சொத்து கிடைக்கும். உன்னை ஏமாத்திக் கல்யாணம் பண்ண மாதிரி, இதையும் பண்ண முடியாது பாரு. அதுக்குத் தான் இப்படி ஒரு திட்டத்தைத் தீட்டி இருக்கிறான் அந்த ராஸ்கல்..” என்று தன் பல்லைக் கடித்தபடி நிலவனைத் திட்டித் தீர்த்தான்.

“ஏன் அண்ணா, அந்த நிலவனுக்கு காதலி இருக்காமே!” என்றாள் ரோஜா.

அதற்கு தன் முகத்தை சுழித்தவன், “அப்படின்னு அவன் உன்கிட்ட சொன்னானா” என்று வினாவினான்.

“ஆம்” என்று தன் தலையை ஆட்டியவள், “கல்யாணம் ஆனாலும் உனக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. ஏன்னா எனக்கு காதலி இருக்கான்னு நிலவனே சொன்னாரு” என்று அவள் சொல்லும் போதே சிரிக்க ஆரம்பித்தான் சிவா.

ரோஜா புரியாமல் சிவாவைப் பார்க்க, தன் சிரிப்பை நிறுத்தியவன், “அவனுக்குக் காதலி இருக்கான்னு சொல்றதே மிகப்பெரிய பொய் தான். அவனோட கதை வெளிய தெரிஞ்சிடக்கூடாதுன்னு தான், இந்தக் கதையை எல்லாம் சொல்றான்” என்க.

“எதுக்காக தேவை இல்லாமல் காதலி இருக்கான்னு பொய் சொல்லணும்?” என்று தனக்கு நிலவனைப் பற்றி தெரியவேண்டும், என்ற நோக்கில் சிவாவிடம் பேசினாள்.

“ஏன்னா அவன் ஒரு கே. அவனுக்குப் பொண்ணுங்களைப் பிடிக்காது” என்று அவன் சொல்லும் போதே அதிர்ந்தவளின் மனது, அன்று படுக்கையில், அவளின் இதழில் நிலவன் வன்மையாக தன் இதழைப் பொருத்தியது தான் அவள் முன்னால் வந்து படம் போட்டுக்காட்டி மறைந்தது.

சிவாவின் வார்த்தைகளில் தன் நெஞ்சில் கைவைத்தவள், “ச்சீ... நீ என்ன பேசுற அண்ணா?” என்று கத்தியே விட்டாள்.

இந்தியாவில் வளர்ந்ததால், ரோஜா இவ்வாறு பேசுகின்றாள் போல என்று நினைத்த சிவா, “இதுல என்ன அசிங்கம் இருக்கு ரோஜா. அது அவனோட காதல். இதில் நாம கருத்து சொல்லக்கூடாது...” என்று சொல்லிக்கொண்டே, தன் சிரிப்பை அடக்கமாட்டாமல் சிரித்தவன், “இருந்தாலும் அந்த நிலவனை நாம பேசுறது தப்பு இல்லை தான். அவன் ஒரு கேன்னு தெரிஞ்சதும் எனக்கு அவ்வளவு சிரிப்பு வந்தது. எப்போதுமே கெத்தாவே அலைவான். நம்மளைப் பார்த்தா ஏதோ புழுவைப் பார்க்குற மாதிரி ஒரு லுக்கு விடுவான் பாரு... எனக்கெல்லாம் அவ்வளவு ஆத்திரம் வரும்” என்று பேசிக்கொண்டே சென்றான் சிவா.

சிவா சொன்னதைக் கேட்டு ஜீரணிக்க முடியாத ரோஜா, “அப்படி எல்லாம் எதுவும் இருக்காது அண்ணா..” என்று அவள் சொல்லும் போதே, “அதெல்லாம் உண்மை தான் ரோஜா” என்றவன் தன் சிரிப்பைக் கைவிட்டவனாக இப்போது மெதுவான குரலில், “நிலவனால அப்பா ஆக முடியாது இது எனக்கு நல்லாவே தெரியும். அவன் ட்ரீட்மெண்ட் பத்தின பைலைக் கூட நான் பார்த்தேன்” என்று உறுதியாகக் கூறினான் சிவா.

உடனே தன் வயிற்றைத் தடவிய ரோஜா, ‘என்னை வச்சி நல்லாவே கேம் விளையாடிட்டீங்க நிலவன், இனி நான் விளையாடும் கேமைத் தான் நீங்க பார்க்கப் போறீங்க’ என்று முதன் முதலாக தன் குணத்திற்கு அப்பாலாக நினைத்துக் கொண்டாள்.

அமைதியான மற்றும் பொறுமையான குணம் கொண்டவள் தான் நம் நாயகி வனரோஜா, ஆனால் இந்த சமுகத்தில் அவள் சந்தித்த துரோகங்கள் மற்றும் அவமானங்களால், அவளின் மனது மிகவும் காயம்பட்டுத்தான் போனது, அதில் இருந்து வெளிவர முடியாமல் தவித்தாலும், தன்னைத் தானே இரும்பு இதயம் கொண்டவளாக செதுக்கிக் கொண்டாள்.

“ஏன் அண்ணா, நம்ம ஷேர்ஸ் கீழ இறங்குனதுக்குக் காரணமே அந்த நிலவன் தான்னு சொல்ற! பின்ன ஏன் அவரை எதுவுமே நீ பண்ணல?” என்றாள் ரோஜா.

“அவன் என்ன பண்ணாலும், தொழிலில் அவனை எதிர்த்து எதுவும் பண்ணகூடாதுன்னு நம்ம தாத்தா சொல்லிட்டாரு. அதை அம்மாவும் கேட்டுக்கிட்டு, என்னையும் எதுவும் செய்யவிடுறது இல்ல...” என்று விரிவாக தொழிலில் நடக்கும் போட்டிகளை சொன்னவன், தன் தாய் பரணியை எதிர்த்து எதுவுமே செய்யமுடியாது என்பதனையும் கூறினான்.

அதனைக் கேட்டுக்கொண்டவள், “தொழிலில் தானே எதுவும் பண்ணக்கூடாதுன்னு சொல்லி இருக்காங்க. நாம நிலவனோட பெர்சனல் லைப் பத்தி வெளிய கொண்டு வரலாம்” என்றாள் யோசனையாக.

அதிர்ச்சியுடன் தன் தங்கையைப் பார்த்தவன், “ரைட்டு நீ ஏதோ ப்ளான் பண்ணிட்ட. ஆனா அவன் கேன்னு எல்லாருக்கும் தெரியவர்றதுனால, ஷேர்ஸ்ல பெருசா எந்த பாதிப்பும் வரப்போறது இல்ல” என்றவனிடம், “ஆனா அந்த நிலவனின் தூக்கம் இதனால, கெட்டுத் தானே போகும்” என்றாள் தன் உதட்டை ஒரு பக்கமாக வளைத்தபடி.

ரோஜாவின் பேச்சில், நிலா எப்போதும் தன் அண்ணன் நிலவனைக் கூறி தன்னை கேலி செய்தது எல்லாம் சிவாவின் நியாபகத்திற்கு வர, நிலவனை ஏதாவது செய்யவேண்டும் என்று ரோஜாவைப் போலவே யோசித்தான்.

இருவரது மனநிலையில் ஒரே நிலையில் இருக்க, அதை உடன்பிறப்புகள் இருவரும் உடனே செயல்படுத்தினர்.

அடுத்த நாளே, நிலவன் லண்டன் வந்து தரையிறங்கும் போது, அவனைப் பற்றிய செய்தி தான் பிரபல பத்திரிகையில் தொழிலில் சம்பந்த முதல் பக்கத்தில் வெளியாகி இருந்தது.

காலையிலையே அண்ணன் தங்கை இருவரும் தங்களுக்குள் பேசி சிரித்தபடி இருந்தனர். சிவாவிற்கு அந்த நேரத்தில் நிலாவின் நினைப்பு தான் வந்தது. அவளுடன் கடைசியாக பேசி ஒரு மாதமும் அதனுடன் ஒரு வாரமும் சென்றுவிட்டது.

‘என்னவோ உன் அண்ணன் தான் பெரிய ஆணழகன்னு பேசுவியே நிலா... இப்ப எப்படி பேசுவ’ என்று நினைத்துக் கொண்டவன், தன் தங்கையிடம், “இன்னைக்கு நீ ஹாஸ்பிடல் போக வேண்டாம். நம்ம நிறுவனத்துல ஷேர் ஹோல்டர்ஸ் மீட்டிங் இருக்கு. நாம அங்க போகணும்” என்றான்.

“ம்ச்.. நான் அங்கெல்லாம் வரல. என்னோட ஷேர்ஸ்சை உனக்குக் கொடுக்குறேன்னு சொன்னா நீயும் கேட்க மாட்டேங்குற” என்று குறைபட்டுக் கொண்டாள் ரோஜா.

“அதெல்லாம் வேண்டாம்னு சொல்லக்கூடாது ரோஜா. இது வெறும் காசு பணம் சம்பந்தப்பட்ட சமாச்சாரம் கிடையாது, இது நம்ம உரிமை சம்பந்தப்பட்டது” என்று ஏதேதோ பேசி ரோஜாவை சம்மதிக்க வைத்தவன் அவளுடன் கங்கா நிறுவனம் சென்றான்.

சீட்டுக்கட்டுப் போல் ஒன்றன் மேல் ஒன்றாக சதுர வடிவ கண்ணாடிப்பெட்டியை அடுக்கி வைத்தது போல் இருந்தது அந்த நிறுவனம். மிகப்பெரிய கோட்டைச் சுவரின் மேல், கங்கா நிறுவனம் என்ற பெயரைத் தாங்கிய லோகோ இடம் பெற்று இருந்தது. அனைத்தையும் பார்த்துக் கொண்டே வந்தவள், “இவ்வளவு பெரிய நிறுவனமா?” என்றாள் சிவாவிடம்.

“இது மெயின் பிரான்ச் ரோஜா. இன்னும் நம்மக்கிட்ட, மருந்து செய்யும் லேப் ஐம்பதுக்கும் மேற்பட்ட இடத்துல இருக்கு. இதுல நம்ம கங்கா ஹாஸ்பிடலும் சேரும். ரெண்டு வருஷம் கழிச்சு நம்ம ஹாஸ்பிடல் பொறுப்பையும் நீ தான் பார்க்கணும்” என்று பேசிக்கொண்டே செல்ல, “உன்னைத் திருத்த முடியாது” என்று தன் தலையை ஆட்டிக்கொண்டாள் வனரோஜா.

சரியாக இருவரும் கங்கா நிறுவனத்திற்குள் காலடி எடுத்து வைக்கும் போதே, சிவாவிடம் ஓடி வந்த ராஜ், “சார், பரணி மேடம் உங்களை அவசரமா அவங்க ரூம்க்கு வர சொன்னாங்க” என்றான்.

தன் மணிக்கட்டில் உள்ள கடிகாரத்தைப் பார்த்தவன், “இப்ப எதுக்கு? மீட்டிங் ஆரம்பிக்கப்போதே!” என்றான் சிவா.

“அவங்க தான் உங்களைக் கையோட கூட்டிட்டு வர சொன்னங்க சார்” என்று அவன் அவசரப்படுத்த, அதற்கு மறுத்துப் பேசப்போன சிவாவின் கையைப் பிடித்த ரோஜா, “ஏதாவது முக்கியமான விஷயமா இருக்கும் நீ போயிட்டு வா அண்ணா” என்றதும், “சரி” என்றவன் அங்கே இருந்த சோபாவைக் கைக்காட்டி, நீ இங்க இரு. நான் வந்ததும் சேர்ந்து போகலாம்” என்று சொல்லிவிட்டு அவன் சென்றான்.

ரோஜாவும் சோபாவை நோக்கி நகரும் போது, அவள் முழங்கையைப் பிடித்து இழுத்தான் நிலவன்.

அதில் நிலை தடுமாறிய ரோஜா, நிலவனின் நெஞ்சில் மோதி நின்றாள். பல நாட்கள் கழித்து நிலவனைக் காணும் பெண்ணவளின் முகம் பயத்தைத் தத்தெடுக்க, அவள் உதவிக்கு யாரேனும் தென்படுகின்றனரா, என்று கண்களை சுழற்றிப் பார்த்தாள். அந்த ப்ளோரில் மீட்டிங் ஆரம்பிக்க சில நிமிடங்கள் மட்டுமே இருந்ததால், அந்த இடத்தில், இவர்களைத் தவிர வேறு யாரும் இல்லை.

அவள் சுதாரிப்பதற்குள், அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு, ஒரு அறைக்குள் சென்று கதவை அடைத்தான்.

பயத்தில் சுவற்றை ஒற்றி நின்றவளின் இருபுறமும் தன் கைகளை வைத்த நிலவன், குனிந்து அவள் முகத்திற்கு நேராக தன் முகத்தை வைத்தவன், “நான் கே இல்லைன்னு உன் அண்ணனுக்குத் தான் தெரியாது... உனக்குமா தெரியாது?” என்று சத்தம் இல்லாமல் அழுத்தமாக கேட்டு வைத்தான்.
















 

NNO7

Moderator
அத்தியாயம் – 15

வனரோஜா கொஞ்சம் அசைந்தால் கூட, நிலவன் இதழோடு, இவளது இதழ் ஒட்டிவிடும். அந்த அளவுக்கு நெருக்கத்தில் நின்று இருந்தனர் இருவரும்.

நிலவன் கேட்ட கேள்வியில், விழிவிரித்து நிலவனைப் பார்த்தவள், “நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்கு சரியா புரியலை நிலவன்” என்றாள் கொஞ்சம் தடுமாறியக் குரலில்.

இப்போது இடப்பக்கம் சுவரில் வைத்திருந்த தன் கையை, ரோஜாவின் மெல்லிய இடைக்கு மாற்றினான்.

அதில் அவள் கண்கள் மேலும் விரிந்து கொண்டது. தன் இடையில் இருந்து அவனின் கையை விளக்கப்போராடினாள் ரோஜா.

ஆனால் அவனது பிடியோ உடும்பு போல் இருந்தது. இதுவரை தைரியமாக எதை வேண்டுமானாலும் சமாளித்து விடலாம் என்று நினைத்தவளின் எண்ணம் அப்போது உடைந்தது போல், அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது.

அதனைப் பார்த்து லேசாக புன்னகை புரிந்தவன், “பண்றதை எல்லாம் பண்ணிட்டு, எப்படி ஒன்னுமே தெரியாத பாப்பா மாதிரி அழுகுற?” என்றான்.

அவளின் இடையில் இவனது பிடியின் அழுத்தம் கூடிக்கொண்டே போக, அது வனரோஜாவிற்கு வலியைத் தந்தது.

அதில் அவள் கோபமும் அதிகரிக்க, “என்னை அபியூஸ் பண்றீங்கன்னு கத்திக் கூச்சல் போட்டா, உங்க நிலை என்ன ஆகும்னு தெரியுமா மிஸ்டர் நிலவன்?” என்றாள் தன் குரலில் தைரியத்தை வரவைத்தபடி.

“அபியூஸ் பண்றேன்னா? அப்ப நீ பண்ணதுக்குப் பேரு என்னது” என்றான் அவளது இடையில் இருந்து தன் கையை எடுத்தபடி.

தன் இடையைத் தடவியபடி, நிலவனைப் பார்த்து முறைத்தாள். அப்போது நிலவனின் கண்கள் அவளது கழுத்தைத் தான் சுற்றி வந்தது.

அதில் தான் தேடியதுக் கிடைக்காமல் ஏமாந்தவன், “நான் கட்டின தாலியை எங்க?” என்றான் அவளை உருத்து விழித்தபடி.

தன் உதட்டை சுழித்தவள், “கழட்டி வச்சிட்டேன்” என்றாள் சாதாரணமாக.

அதில் அவனது கோபம் பல மடங்காக உயர, “அதை உன் கழுத்தில் இருந்து கழட்டக் கூடாதுன்னு நான் சொன்னேனா இல்லையா?” என்றான் கடினக்குரலில்.

அதனைக் கண்டு அஞ்சாமல் மிகவும் சாவகாசமான குரலில், “எது பேசுறதா இருந்தாலும் என்னோட லாயர் கிட்ட நீங்க பேசிக்கோங்க. உங்களுக்கு இப்ப நான் மனைவி கிடையாது” என்றாள் வேறு பக்கம் பார்த்தபடி.

உடனே புன்னகை புரிந்தவனாக, “சரி இருக்கட்டும். நீ இப்படி எல்லாம் பேசுவன்னு நான் எதிர்பார்த்தேன் தான். ஆனா என்னைப் பத்தி இன்னைக்குப் பத்திரிகையில் வந்த செய்திக்கு நீ என்ன பதில் சொல்லப்போற?” என்றான். சிரித்துக் கொண்டே பேசியவனின் மனதில் ஒரே நேரத்தில் ஆயிரம் எரிமலைகள் வெடித்துக் கொண்டு தான் இருந்தது.

“என்ன பத்திரிகை என்ன செய்தி?” என்று கேட்டாள் எதுவும் தெரியாதவளாக.

“அப்ப உனக்கு எதுவுமே தெரியாது இல்லையா?” என்றான் தன் ஒரு புருவத்தை மட்டும் உயர்த்தியபடி.

“எனக்கு எதுவும் தெரியாது. எனக்கு நேரமாச்சி நான் போகணும்?” என்றாள் அவசரமாக.

அவளது நெற்றியைத் தட்டியவன், “நல்லா நியாபகத்தில் வச்சிக்கோ, என்னை சீண்டுனது நீ தான். நீ ஆரம்பிச்சதை நான் முடிச்சி வைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு, புயல் வேகத்தில் அங்கிருந்து வெளியேறினான்.

அவன் சென்றதும், “சரியான பொருக்கி... நான் ஆரம்பிச்சேனாம்... சும்மா இருந்தவளைக் கூட்டிட்டு வந்து ஏதேதோ பேசி கல்யாணம் பண்ணிட்டு, இப்ப குழந்தையும் கொடுத்துட்டு, நான் ஆரம்பிச்சேனாம்” என்று கத்தியவளுக்கு அவ்வளவு ஆத்திரம் வந்தது.

தன் அண்ணன் தன்னைத் தேடுவான் என்ற நினைப்பில், தன் இடையைத் தடவியபடி வெளியே சென்றாள் ரோஜா.

அவளைப் பார்த்ததும், அவள் முன்னே வந்து நின்ற சிவா, “என்னாச்சி ரோஜா, அந்த நிலவன் இப்பத்தான் கோபமா போறான். உன்னைப் பார்த்தானா?” என்றான் கவலை நிறைந்தக் குரலில்.

“ஆம்” என்று தன் தலையை ஆட்டியவள், “நாம தான் பத்திரிக்கையில் செய்தி போட்டோம்னு நிலவனுக்கு எப்படி தெரிஞ்சது?” என்றாள்.

“என்ன? அவனுக்குத் தெரிஞ்சிடுச்சா? உன்கிட்ட என்ன பேசுனான் அவன்? ரொம்ப திட்டினானா?” என்றான் அவள் தோள்களைப் பற்றியபடி.

“ம்ச்... அதெல்லாம் விடு. அந்த செய்தியைப் போட்டது யாருன்னு அவரால கண்டுபிடிக்க முடியாதுன்னு சொன்ன?” என்றாள் கேள்வியாக.

“வேற ஒருத்தர் மூலம் தான் நான் இதைச் செய்தேன். பின்ன எப்படி இப்படின்னு எனக்கும் தெரியல” என்றவன் ஒரு கணம் யோசித்துவிட்டு, “இனி தான் நாம ரொம்ப கவனமா இருக்கணும் ரோஜா. நீ நினைக்குற மாதிரி இந்த நிலவன் சாதாரண ஆள் கிடையாது” என்றான் யோசனையாக.

நிலவனின் அடுத்த திட்டம் என்னவாக இருக்கும். இதனால் தன் தங்கைக்கு ஏதேனும் ஆபத்து வந்துவிடுமோ, என்று பலவாறாக யோசித்தது அவனின் உள்ளம்.

ஆனால் அந்தக் கவலை எல்லாம் ரோஜாவிற்கு சிறிதும் இல்லை. என்ன தான் வருகின்றது எனப் பார்த்து விடலாம் என்ற முடிவில் தான் இருந்தாள்.

“நிலவனுக்கு இங்க என்ன வேலை?” சிவாவைப் பார்த்து அவள் கேட்க, அவனோ, “அவனுக்கும் இங்க ஷேர்ஸ் இருக்கு. எப்போதும் வரமாட்டான். இன்னைக்கு எதுக்காக இங்க வந்துருக்கான்னு தெரியல” என்றான் சிவா.

“என்ன அண்ணா சொல்ற? நிலவனால தான் நம்ம ஷேர்ஸ் எல்லாம் சரிஞ்சதுன்னு சொன்ன, அதெப்படி நம்ம கம்பெனில அவரால ஷேர்ஸ் வாங்க முடியும்” என்றாள் குழப்பம் கொண்டவளாக.

“அவனோட ஷேர்ஸ், அவன் தாத்தாகிட்ட இருந்து வந்தது தான். சரி நேரமாகிறது நாம மீட்டிங் போகலாம்” என்று சொல்லி அவளை மீட்டிங் நடக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றான்.

இவர்கள் செல்லும் போதே, மீட்டிங் நடந்து கொண்டு தான் இருந்தது. தாமதமாக வந்த இருவரையும் ஒரு பார்வை பார்த்த பரணி, திரும்பவும் தன் பேச்சுக்களைத் தொடர்ந்தார்.

நிலவனும் அங்கு தான் அமர்ந்திருந்தான். அண்ணன் தங்கை இருவரையும் வானத்தில் வட்டமடிக்கும் கழுகு தன் இரையைப் பார்ப்பதைப் போல் பார்த்துவைத்தான்.

அவனின் பார்வையைக் கண்ட சிவாவிற்குத் தான் பகிரென்றது. ரோஜாவும் சிவாவும் ஒரு இடத்தில் சென்று அமர்ந்து கொண்டனர்.

அங்கு பேசப்பட்ட ஷேர்ஸ் பத்தின விஷயங்கள் எதுவும் ரோஜாவிற்கு விளங்கவில்லை. கடனே என்று அமந்திருந்தவளுக்கு தூக்கம் வர ஆரம்பித்தது.

தன் பக்கவாட்டில் அமர்ந்திருந்த சிவாவைப் பார்த்தவள், “எனக்கு தூக்கமா வருது. இதுக்குத் தான் நான் வரலைன்னு உன்கிட்ட சொன்னேன்” என்றாள் கொட்டாவி விட்டபடி.

“கொஞ்சம் பொறுமையா இரு. இப்ப முடிஞ்சிரும்” என்று சொன்ன சிவாவிற்கு, இப்படி அமர்ந்திருப்பது பிடிக்கவே செய்தது.

அவன் முகத்தைப் பார்த்த ரோஜா, “ரொம்ப ஜாலியா இருக்க? உனக்கெல்லாம் தூக்கமே வரலையா?” என்றாள் மறுபடியும் கொட்டாவி விட்டபடி.

“இல்லையே. எப்போதும் மீட்டிங் அப்ப என்கிட்ட பத்து பேர் நொண்டி நொண்டி கேள்வி கேட்ப்பானுங்க. இப்ப அதெல்லாம் இல்லாம ஜாலியா இருக்கு” என்றபடி தன் இருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்தான். இவர்களுக்கு சற்றுத் தள்ளி, எதிர் பக்கமாக அமர்ந்திருந்த நிலவனின் பார்வை இவர்களை நோக்கித் தான் இருந்தது.

அதனைக் கண்ட ரோஜா, எரிச்சல் குரலில், “இந்த நிலவனைப் பழிவாங்க என்கிட்ட இன்னொரு திட்டம் இருக்கு” என்று சிவாவின் காதில் கூற, அதில் பதறியவன், “சும்மா இரு ரோஜா. ஏற்கனவே நம்ம ரெண்டு பேரையும், அந்தப்பார்வை பார்க்குறான். எதுனாலும், ரெண்டு வருஷம் கழிச்சி பார்த்துக்கலாம்” என்றான் தன் தங்கையின் நலன் கருதி.

‘மீட்டிங் முடிஞ்சதும், இந்த நிலவன் கிட்ட, பத்திரிகையில் வந்த செய்திக்கும் ரோஜாவுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்ல. இதைப் பண்ணது நான் தான்னு சொல்லிடணும். அப்ப தான் ஹாஸ்பிடலில் ரோஜாவை தொந்தரவு செய்யாம இருப்பான்’ என்று நினைத்த சிவாவின் கையில், நறுக்கென்று கில்லி வைத்தாள் ரோஜா.

தான் இருக்கும் இடம் கருதி, வலியில் கத்தாமல், தன் உதட்டைக் கடித்தவன், “ராட்சஸி எதுக்காக கிள்ளுன?” என்றான் அவளது காதில்

”பின்ன என்ன? அந்த நிலவன் நீ ஒரு மாபியான்னு சொன்னாரு. ஆனா நீ இப்படி இருக்க?” என்றாள்.

“ம்ச்.. அவன் சொன்னது எல்லாம் பொய்யுன்னு தெரிஞ்சும், இதை எதுக்காக என்கிட்ட கேட்குற?”

“பின்ன என்ன, அடிக்க அடிக்க ஒதுங்கிப் போறதுனால தான் அவர் நம்மை மேலும் மேலும் அடிக்குறாரு. இது உனக்குத் தான் புரியலைன்னு பார்த்தா அம்மாவுக்குமா புரியல..” என்று அவள் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, அனைவரது பார்வையும் ஒட்டு மொத்தமாக வனரோஜாவை நோக்கித் தான் திரும்பியது.

இங்கே நடப்பதற்கும் தனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லாமல் அமர்ந்திருந்தவள், இப்போது அனைவரது பார்வையும் தன் மேல் இருக்க, சிவாவைத் தான் கேள்வியோடு பார்த்தாள்.

அவனோ, தன் தாயைப் பார்த்துவிட்டு, “எழுந்திரு ரோஜா. அம்மா உன்னைத் தான் கூப்பிடுறாங்க” என்றான் மெதுவான குரலில்.

தன் தலையை ஆட்டிவிட்டு, மெதுவாக எழுந்து சென்று பரணியின் பக்கத்தில் நின்றாள்.

“இவர் என்னுடைய மகள் வனரோஜா. நம்ம ஷேர் ஹோல்டரில் ஒருத்தரா இவர் நம்மோடு பயணிப்பார்” என்று முறையாக ஆங்கிலத்தில் அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்த பரணியைத் தான் ரோஜா ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘வீட்டிற்குள் கூட வர அனுமதி தராதவர், இப்போது அனைவரது முன்பும் தன் மகள் என்று அறிமுகம் செய்து வைப்பது ஏனோ’ என்ற நினைப்பு அவளுக்கு.

அனைவரும் தங்களது கையைத் தட்ட, பரணியின் கண்கள் நிலவனைத் தான் கர்வமாக பார்த்துக் கொண்டது. இருவருக்குள்ளும் சொல்லப்படாத கணக்குகள் பல இருக்கின்றன.

பரணியின் பார்வைக்கு எதிர்பார்வை பார்த்தவன், தன் ஒரு புருவத்தை மட்டும் ஏற்றியபடி, ‘பொண்ணுன்னு அறிமுகம் செஞ்சா மட்டும், நான் விட்டுடுவேனா? இதோ வரேன்’ என்றபடி இருக்கையில் இருந்து எழுந்தவன், “அனைவருக்கும் மிக்க நன்றி” என்று சொல்லியபடி, ரோஜாவின் அருகில் வந்து நின்றான்.

“பரணி மேடம் இவங்களை அறிமுகம் செஞ்சிட்டாங்க. இப்ப நானும் செய்யணுமே!” என்றவன், ரோஜா எதிர்பார்பதற்குள், அவளின் தோளில் தன் கையைப் போட்டவன், “இவங்க என்னோட மனைவி மிஸ்சஸ் வனரோஜா நிலவன்” என்று கூறி அனைவரையும் அதிரச்செய்தான்.

நிலவனின் இந்த செய்கையை சற்றும் பரணி எதிர்பார்க்கவில்லை. ரோஜாவோ, “என்ன பேசிக்கிட்டு இருக்கீங்க? முதல்ல என் மேல் இருந்து உங்கக் கையை எடுங்க” என்று அடிக்குரலில் சீறினாள்.

ஆனால் அது எங்கே நிலவனின் காதில் விழப்போகிறது. அங்கு இருந்த பலரும் தங்களது வாழ்த்துக்களைக் கூற, சிரித்தபடி தன் தலையை ஆட்டிக் கொண்டிருந்தான்.

நிலவன் மீட்டிங் அரங்கிற்குள் நுழையும் போதே, காலையில் வந்த செய்தியால், அவனைத் தான் பலர் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் தொழில் துறையில் அசுர வளர்ச்சி அடைந்து, தன் ஒற்றைப் பார்வையாலையே அனைவரையும் மிரட்டி வைக்கும் நிலவனிடம், இதனைப் பற்றிப் பேசும் தைரியம் யாருக்கும் இருக்கவில்லை.

இதில் அவனது அறிவிப்பைக் கேட்டதும், அந்த செய்தியைக் கூட அனைவரும் மறந்து தான் போயினர்.

சிவாவோ வேகமாக கோபத்தில் நிலவனை நெருங்கி வர, அவனைத் தன் ஒரு பார்வையிலையே அமைதி கொள்ள வைத்தார் பரணி.

நடக்கும் அனைத்தையும் இயலாமையுடன் தான் பார்த்துக் கொண்டிருந்தார் பரணி.

ரோஜாவின் கண்களோ, “ஏதாவது செய்” என்று சிவாவைத் தான் பார்த்துக் கொண்டிருந்தது. தன்னிடம் வாழ்த்துக்கள் கூறும் நபர்களிடம், மரியாதை கருதி தலையை மட்டும் ஆட்டிக்கொண்டிருந்தாள்.

பின் அனைவரும் மறுபடியும் தங்களது இருக்கையில் சென்று அமர, நிலவனை வழி மறித்த சிவா, “புதுசா என்ன திட்டத்தை தீட்டுற நிலவன். வேண்டாம் இதை இதோட விட்டுரு” என்றான் தன் கோபத்தை அடக்கியபடி.

அதற்குத் தன் உதட்டைச் சுழித்தவன், “நானும் வேண்டாம்னு தான் பார்த்தேன். ஆனா நீயும் உன் தங்கச்சியும் சும்மா இல்லையே!” என்றான் பத்திரிகையில் வந்த செய்தியைக் குறிப்பிட்டு.

அதுவரை நிலவனிடம் சுமுகமாக இந்த விஷயத்தைப் பேசி முடித்துவிடலாம் என்று நினைத்திருந்த சிவா, இப்போது நிலவன் செய்த செயலால் கோபம் கொண்டு, “உனக்கு எதுக்கு இவ்வளவு கோபம் வருது? உண்மை ஒரு நாள் வெளிய வரத்தானே செய்யும். நீ கேன்னு உன் சொந்தக்காரங்களுக்கு தெரிஞ்சிடுச்சின்னு உனக்கு இவ்வளவு கோபம் வருதா?” என்றான் நக்கல் தொணித்தக் குரலில்.

ஆனால் இதனைக் கேட்ட நிலவனுக்குக் கோபம் வரவில்லை, தன் கையைக் கட்டிக்கொண்டு, சிவாவை மேலும் கீழுமாக பார்த்தவன், “அறிவில்லாதவன் கிட்ட எனக்கு பேச்சு வளர்க்கப் பிடிக்காது” என்றான் தன் தோள்களைக் குலுக்கியபடி.

அதில் சிவாவின் தன்மானம் அடிபட்டுப் போக, “இவ்வளவு நடந்த பிறகும் உன்னோட திமிருக்குக் கொஞ்சமும் குறைவே இல்ல” என்று பல்லைக்கடித்தான் சிவா.

அதற்கு நக்கலாக பார்த்த நிலவன், “நான் கேவா இல்லையான்னு உன் தொங்கச்சிக்கிட்டக் கேட்டுப்பாரு... அவள் பதில் சொல்லுவாள்” என்று அவன் நெஞ்சில் நெருப்பைக் கொட்டிவிட்டு, சிவாவைக் கடந்து சென்றான் நிலவன்.






 

NNO7

Moderator
அத்தியாயம் – 16

சிவா நிலவனிடம் பேசும் போதே, அவர்களை நோக்கி வந்த வனரோஜா, நிலவன் இறுதியாக சொல்லிவிட்டுச் சென்ற வாக்கியங்களைக் கேட்டு அதிர்ச்சியின் எல்லைக்கே சென்றாள்.

‘என்ன மனிதர் இவர்’ என்று நிலவனை நினைத்தவள், சிவாவின் பார்வையில் அசிங்கமாக உணர்ந்தாள்.

ஆனால் உடனே தன்னை சமாளித்தவள், “வா அண்ணா, நாம இங்க இருந்து போகலாம்” என்று அவனது கையைப் பிடித்து இழுத்தாள்.

ஆனால் அதிர்ச்சியில் இருந்து மீளாத சிவாவோ, “அவன் என்ன சொல்லிட்டுப் போறான்” என்றான் தன் தங்கையை நோக்கி.

“அவருக்கு... அவருக்குக் காதலி இருக்கு. அதை அவரே என்கிட்ட சொன்னாரு. அதனால் தான், அவர் உன்னை என்கிட்ட கேட்க சொல்லி இருப்பாருன்னு நினைக்குறேன். காதலி வச்சிருக்குறவர் எப்படி கேவா இருப்பார்” என்று சொல்லி, சிவாவை சாந்தம் அடையச் செய்தாள்.

ஆனால், ‘காதலி இருப்பதாக சொல்வது எல்லாம் நாடகம் தான்’ என்று கூறி தன் தங்கையிடம் வாதிடாமல், “அவனுக்கு எல்லாம், எதுக்காக மரியாதை கொடுக்குற நீ” என்ற சிவாவிற்கு கோபம் தீரவே இல்லை.

சிவாவின் கோபத்தைக் கண்டு, “அப்ப என்னோட அடுத்த திட்டத்தை நான் சொல்லவா?” என்று மெதுவாக கேட்டுப்பார்த்தாள் ரோஜா.

முதன்முதலாக தன் தங்கையைக் கோபமாக பார்த்தவன், “ரெண்டு வருஷத்துக்கு, அவன் ஹாஸ்பிடலுக்குத் தான் நீ போய் ஆகணும்” என்றான்.

“ம்ச்... எப்பப் பார்த்தாலும் இதையே சொல்லாத, என்னோட திட்டத்துல, பெர்சனல் வராது” என்றவள், சிவாவின் காதில் தன் திட்டத்தினைக் கூற, “என்ன சொல்ற? இதெல்லாம் நடக்குமா?” என்றான் விழிவிரித்துப் பார்த்தபடி.

“நான் தான் இருக்கேனே! நான் பார்த்துப்பேன்” என்றாள் தைரியமான குரலில்.

“எனக்கு இன்னும் பயமாத் தான் இருக்கு ரோஜா. எனக்கு ஏதாவது உதவி பண்றேன்னு நீ மாட்டிக்காத” என்றான் அக்கறையாக.

“நான் எதுக்கு மாட்டப்போறேன்? நான் இப்ப நிலவனோட மனைவி தானே!” என்றவள் தன் தோள்களைக் குலுக்கி நிலவன் இருக்கும் திசையைப் பார்த்தாள், அப்போது அவனும் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

‘நான் உங்கக்கிட்ட மாட்டல மிஸ்டர் நிலவன்... நீங்க தான் என்கிட்ட மாட்டிக்கிட்டீங்க’ என்று அவள் அவனைப் பார்த்து தன் மனதினுள் நினைக்கும் போதே, இவள் மனதின் குரலை படித்துவிட்டவன் போல, “அப்படியா!” என்பது போல், தன் ஒரு புருவத்தை மட்டும் ஏற்றி இறக்கினான் நிலவன்.

அவன் முகத்தைப் பார்க்கும் போதே, வனரோஜாவின் மனது அன்று தீவில் நிலவனுடன் நடந்த விஷயங்களை எல்லாம் யோசித்துப் பார்க்க ஆரம்பித்தது.

அந்தத்தீவில் சரியாக டவர் கிடைக்காததால், தன் அலைபேசியில் அதிக நேரமாக, தன் தோழி சந்தியாவிற்கு செய்தி அனுப்ப முயற்சி செய்து கொண்டிருந்தாள் வனரோஜா.

ஆனால் சமூக வலைத்தளத்தில் அவள் கண்ணில் வேறு ஒன்று பட்டுத் தெரிந்தது.

அது, அவளது முன்னால் காதலன் அஜய்யும், அவளின் முன்னால் தங்கை அபியும் உதட்டோடு உதடு வைத்து முத்தத்தைப் பகிரும் புகைப்படம் தான்.

பார்ப்பவர் முகம் சுழிக்கும் வகையில் இருந்த அந்த படத்தைப் பார்த்து, வனரோஜாவின் மனதில், மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கமே வந்தது.

கோபத்தில் அவள் இதயம் துடிக்க, “தப்பு செஞ்சது நீங்க... ஆனா இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க... எந்த தப்பும் பண்ணாத நான் ஆளில்லாத தீவுல உட்காந்து கஷ்டப்படுறேன்” என்று கத்தினாள்.

என்ன தான் இதில் இருந்து வெளிவர வேண்டும் என்ற நினைப்பில் அவள் பெரிதும் முயற்சி செய்தாலும், அந்த பாதிப்பு உள்ளுக்குள் இருக்கத்தானே செய்யும்.

தன் மனதில் பூட்டி வைத்திருந்த கோபத்தை யார் மேல் கட்ட வேண்டும் என்று அவளுக்குத் தெரியவில்லை.

அப்போது, முழங்கை அளவின் உயரத்தில் இருந்த ஷாம்பைன் பாட்டிலுடன் அங்கு வந்த நிலவன், “ஏன் இப்படி இருக்க? சரி வா சரக்கடிக்கலாம்” என்று சர்வசாதாரணமாக அவளை அழைத்தான்.

தனக்கிருந்த கோபத்தில், தன்னை அழைத்த, நிலவனிடம், “ஒரு பொண்ணுக்கிட்ட எப்படி பேசணும்னு உங்களுக்குத் தெரியாதா?” என்றாள் எரிச்சல் குரலில்.

“இப்ப நான் கேட்டேன்னு இப்படி பேசுற? உனக்கே இப்பத் தான் பிரேக் அப் ஆகியிருக்கு. அதில் நீ டென்ஷன்ல இருப்ப... அதனால தான் கூப்பிட்டேன். வரலைன்னா போ” என்று சொல்லிவிட்டு, அவன் வீட்டின் பின் பக்கம் அமைந்திருக்கும் கடற்கரையை நோக்கிச் சென்றான்.

வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த நிலவனுக்கு ஒரு பெண்ணை சரக்கடிக்கக் கூப்பிடுவது ஒன்றும் அபத்தமாகத் தெரியவில்லை. அதனை சிறிது நேரம் கடந்து யோசித்தவள், ‘அவரை நான் அப்படி பேசி இருக்கக் கூடாதோ!’ என்று நினைத்து அந்த நினைப்பையும் கைவிட்டவளுக்கு, திரும்பவும், அஜய்யும், அபியும் மிகவும் நெருக்கமாக இருக்கும் அந்தப் படமே முன்னால் வந்து நின்றது.

தான் இருக்கும் அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டே, தன் கோபத்தைத் தணிக்க முயற்சி செய்தாள். ஆனால் அது ஏனோ முடியவில்லை. பின் அறையில் இருந்து வெளியே வந்தவள், வீட்டின் பின் பக்கம் இருக்கும் கடற்கரை நோக்கிச் சென்றாள்.

அந்த இரவு நேரத்தில், யாரும் இல்லாத தனித்தீவில், உள்ள கடற்கரை அழகின் இன்னொரு சாயலாக தெரிந்தது.

நுரை பொங்கி ஓடி வரும் கடல் அலைகளை ரசித்தபடி, இருக்கையில் சாய்ந்து அமர்ந்து, கையில் மதுக்கோப்பையுடன் அதனை ரசித்துக் குடித்துக் கொண்டிருந்தான் நிலவன்.

பக்கத்தில் நெருப்பு மூட்டப்பட்டு இருக்க, அதனின் வெளிச்சத்தில் அவனது முகம் பளபளத்தது.

‘அழகன் தான்’ என்று தன் மனதில் சொல்லியபடி, நிலவனுக்குப் பக்கத்தில் இருக்கும் இருக்கையில் வந்து அமர்ந்தாள் வனரோஜா.

தன் அருகில் நிழல் ஆடுவதைக் கண்டவன், “அப்ப அந்த பேச்சு பேசுன, இப்ப எதுக்காக இங்க வந்த?” என்றான்

கடல் அலைகளைப் பார்த்துக் கொண்டே, “இந்தத் தீவுல இருக்குறது நாம ரெண்டு பேர் மட்டும் தான். எவ்வளவு நேரம் தான் வெறும் சுவற்றையே பார்க்குறது? அதனால தான் இங்கே வந்தேன்” என்றாள்.

அதற்குத் தன் தோள்களைக் குலுக்கியவன், வேறு எதுவும் பேசவில்லை.

பின் நிலவனின் கையில் இருந்த மதுக்கோப்பையைப் பார்ப்பதும், பின் நிலவனின் முகத்தைப் பார்பதுமாக இருந்தாள் வனரோஜா.

அவள் முகத்தைப் பாராமலையே, “என்னாச்சி? உனக்கும் இது வேணுமா?” என்றான் நிலவன்.

“அச்சோ! அதெல்லாம் வேண்டாம். எனக்கு இதெல்லாம் பழக்கம் இல்ல” என்றாலும், தன் கவலைகளை எல்லாம் மறக்க இதனை அருந்த வேண்டும் என்றே சொல்லியது அவளது மனது.

“ஆனா உன்னோட கண்கள் அந்த மாதிரி எதுவும் சொல்லலையே! நீ இந்த மாதிரி பார்த்துக்கிட்டே இருந்தா எனக்கு ஒரு மாதிரியா இருக்கு” என்றவன் இன்னொரு கோப்பையை எடுத்து அதில் மதுவைக் கலந்து அவளிடம் நீட்டினான்.

அவளோ, “வேண்டாம்” என்று தன் தலையை ஆட்ட, “ஓவரா பிகு பண்ணாத” என்றவன், அவள் மீண்டும் மறுப்பதைப் பார்த்து, “வேண்டாம்னா விடு. இங்க யாரும் உன்னைக் கட்டாயப்படுத்தல” என்று சொல்லிவிட்டான்.

கோப்பையை அருகில் இருந்த மேஜையில் வைக்கப்போனவனின் கைகளைப் பற்றியவள், “இல்ல.. எனக்கு வேணும்” என்றாள் உள்ளே சென்ற குரலில்.

அதனை அவளிடம் தந்தபடி, தன் ஒரு புருவத்தை மட்டும் ஏற்றி இறக்கியவன், நக்கலாக அவளைப் பார்த்தான்.

உடனே பதறியவளாக, “நான் ரொம்ப ஆச்சாரமான பொண்ணு” என்றாள் சின்னக் குரலில்.

மதுக்கோப்பையும் கையுமாக இருந்தவளைப் பார்த்து, “ஆச்சாரமான பொண்ணா? பார்த்தாலே தெரியுது. சரி முன்ன பின்ன குடிச்சி இருக்கியா?” என்றான் தன் கோப்பையில் இருந்த மதுவை ஒரு மிடறு அருந்தியபடி.

“இல்ல... இப்ப தான் முதல் தடவை...” என்று அவள் சொல்லி முடிப்பதற்குள் சிரிக்க ஆரம்பித்தவன், “காதல் தோல்வி அடைஞ்சா, கண்டிப்பா ஆல்கஹால் சாப்பிடணும்னு உங்க ஊர் படத்துல சொன்னாங்களா? என்ன ஒரு முட்டாள் தனம்” என்று அவன் இகழ,

அதில் கோபம் கொண்ட வனரோஜா, “அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல. இவ்வளவு நாள் மத்தவங்க சந்தோஷத்துக்காகவே வாழ்ந்துட்டேன். எனக்கு மகிழ்ச்சின்னா என்னனே தெரியாது. அதனால தான் இந்த நிமிஷத்துல இருந்து எனக்காக வாழலாம்னு முடிவு பண்ணிட்டேன்” என்று மூக்கு விடைக்கப் பேசியவள், தன் கையில் இருந்த கோப்பையில் உள்ள மதுவை மொத்தமாக தன் வாயில் சரித்தாள்.

அதற்கும் நக்கலாக பார்த்தவன், “குடிச்சாத் தான் மகிழ்ச்சி வரும்னு யார் சொன்னா?” என்றான்

ஏற்கனவே இரண்டு கோப்பையை வேகமாக தன் வாயில் சரித்திருந்தவள், கொஞ்சமும் பயம் இல்லாமல், “யோவ்... போயா பூமரு” என்று உளற ஆரம்பித்தாள்.

“என்ன சொன்ன?” என்றான் இப்போது கண்டிப்பான குரலில்.

“ஹி... ஹி...” என்று இளித்து வைத்தவள், “ஒன்னும் இல்லை நிலவன். ஏதோ வாய் தவறி வந்திடுச்சி” என்று சிறுகுழந்தையைப் போல், தன் வாயை நன்றாக மூடி, அதில் தன் ஆள்காட்டி விரலை வைத்துக் கொண்டாள்.

தன் தலையை இடப்பக்கமும், வலப்பக்கமும் ஆட்டியவன், “மனசுல இருந்தது தானே வாயில் வரும்” என்று சொல்லிக் கொண்டான்.

சிறிது நேரம் அமைதியாக இருந்தவள், திரும்பவும் அவன் அருகே இருந்த முழு பாட்டிலில் தன் கையை வைத்தாள்.

தன் நெற்றியை நீவிவிட்டு, ‘கங்கா பேமிலில, பரணி அம்மையாரைத் தவிர எல்லாமே பைத்தியம் தான் போல’ என்று இகழ்ச்சியாக நினைத்துக்கொண்டவன், “எனக்குக் கொஞ்சம் விட்டுவை வனரோஜா. எல்லாத்தையும் நீயே குடிச்சிடாத” என்றான்.

ஆனால் அது எங்கே அவள் காதில் விழப்போகிறது?. அந்த பாட்டிலில் உள்ள சரக்கை ராவாக தன் தொண்டையில் சரித்தாள்.

அவசரமாக அதனை அவள் குடிக்க, அதில் இருந்த மது, அவள் நாடியில் இருந்து வழிந்து அவளது தொண்டையில் நீண்டு ஓடியது.

நிலவனின் கண்களும் அந்த ஓட்டத்தைத் தான் பார்த்துக் கொண்டிருந்தது. என்ன தான் வெளியே அவனைப் பற்றி ஏகப்பட்ட வதந்திகள் வந்திருந்தாலும், லண்டன் வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டவனாக இருந்தாலும், தன் இத்தனை ஆண்டு கால வாழ்க்கையில் எந்தப் பெண்ணையும் கண்டுகொண்டது இல்லை அவன்.

அவனுக்கு மனைவி துணைவி காதலி என்று அனைத்தும் அவன் தொழில் மட்டும் தான். தன் பெற்றோர்களைப் பறிகொடுத்து, பரணியின் மீது ஏற்பட்ட கோபத்தால், தனி ஆளாக நின்று தொழில் சாம்ராஜ்யத்தையே உருவாக்கியவன். சில நேரம் அவனது பிஏவே, ‘இவர் நிஜமாவே மனிதர் தானா இல்லை ரோபோவா’ என்று எண்ணும் வகையில் தான் இரவு பகல் பாராமல் உழைப்பவன்.

எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும் அப்படிப்பட்ட, இயந்திர மனிதன், முதன்முதலாக எந்த வேலையையும் செய்யாமல் ஒரே இடத்தில் இருப்பது இதுவே முதல் முறை.

இதற்கு முன்பும் இந்த தீவிற்கு வருபவன் தான், ஆனால் இதுபோல் எல்லாம் நிம்மதியாக அமர்ந்து கடல் அலைகளை ரசித்தது இல்லை.

இப்போது அந்த அழகுடன், தன் பக்கத்தில் அமர்ந்திருந்த அழகும் அவனது கண்களை மயக்கியது என்னவோ உண்மை.








 

NNO7

Moderator
அத்தியாயம் – 17

தன் திட்டத்திற்காக மட்டுமே, வனரோஜாவைத் திருமணம் செய்த நிலவன், தன் மனதில் வந்த மாற்றத்தை நினைத்து அதிர்ச்சி கொண்டான். இத்தனைக்கும் கங்கா குழுமத்தின் ஆட்களைக் கண்டாலே அவனுக்கு ஆகாது. அந்த குழுமத்தின் ஒருத்தி தான் வனரோஜா என்ற நிலையில் தான் அவளை அணுகி இருந்தான்.

இருந்தும் சொத்து அனைத்தும், தன் கைக்கு வந்து சேரும் வரை ரோஜாவை பகைத்துக் கொள்ளக்கூடாது என்ற முடிவில் உறுதியாக இருந்தான்.

இப்போது வனரோஜாவின் தொண்டையில் இறங்கிய மது, மேலும் கீழிறங்கி அவளின் வெள்ளை நிற சட்டைக்குள் இறங்கியது. தன் கண்கள் போகும் திசையை அறிந்து அதிர்ந்தவனாக, தன் தலையை வேறு பக்கமாக திருப்பிக்கொண்டான் நிலவன்.

“நீங்க மட்டும் தான் ஹாப்பியா இருப்பீங்களா? இப்ப நானும் ஹாப்பி தான்” என்று போதையில் கத்த ஆரம்பித்தாள் வனரோஜா.

அவளைத் திரும்பி பார்த்து, அளவெடுத்த நிலவன், ‘அப்படி ஒன்னும் அழகி கிடையாது. நான் பார்க்காத அழகிகளா?’ என்று நினைத்தவன், அவள் தாடையைப் பற்றி, “என்னை அட்ராக்ட் பண்றதுக்கு ஏதாவது ட்ரை பண்றியா நீ? அப்படி மட்டும் நீ ஏதாவது பண்ணுனன்னு தெரிஞ்சது உன்னை தொலைச்சிக் கட்டிடுவேன்“ என்று அவளிடம் கேள்வி கேட்டு, அதற்குப் பதிலும் தானே சொல்லிக் கொண்டான்.

“தோடா இவர் பெரிய மன்மதரு, இவரை அட்ராக்ட் பண்றேனாம்” என்று போதையில் முகத்தை சுழித்துக் கொண்டாள்.

அவள் உளறலைக் கேட்டவன், “எதுக்காக இப்படி குடிச்சி என் உயிரை வாங்குற? இப்படி நடக்கும்னு தெரிஞ்சிருந்தா நான் உன்னை கூப்பிட்டு இருக்கவே மாட்டேன், பாவம் பார்த்துக் கூப்பிட்டேன் பாரு... என்னை சொல்லணும்” என்று பேசிக்கொண்டே இருந்தவனின் கண்கள் திரும்பவும் அவனை மீறி, முன் பக்கம் மதுவால் நனைந்து இருந்த வனரோஜாவின் உடையில் வந்து நின்றது.

வெள்ளை டாப்சின் உள்ளே அவள் கருப்பு நிற உள்ளாடை அணிந்து இருக்க, அது நிலவனின் கண்களுக்கு அப்பட்டமாகக் காட்டியது.

அதில் தன் பல்லைக் கடித்தவன், “என்னை அட்ராக்ட் பண்ண முயற்சி பண்ணாத ரோஜா” என்று கத்தினான்.

ஆனால் அவன் பேச்சிற்கு பதில் சொல்லாமல், “ஹேய், நீங்க என்னை வனரோஜான்னு தானே கூப்பிடுவீங்க! இப்ப என்ன வெறும் ரோஜான்னு சொல்றீங்க?” என்று போதையில் இருந்தாலும் இதனை சரியாக கேட்டுவைத்தாள்.

தன் இருக்கையில் இருந்து எழுந்தவன், “நான் உள்ள போறேன்” என்று சொல்லிவிட்டு அவன் உள்ளே செல்லப் போக, அவன் கையைப் பிடித்து இழுத்தவள், “அதுக்குள்ள எங்க போறீங்க நிலவன். எனக்குப் பொழுதே போக மாட்டேங்குது. வாங்க நாம இன்னும் கொஞ்சம் தண்ணி அடிக்கலாம்” என்று தன் கண்களை சிறியதாக சுருக்கியபடி பேசினாள்.

அதில் அவனுக்கு அங்கிருந்து செல்லவும் மனது வரவில்லை, தன் மீது இருந்த அவளின் கையை எடுத்துவிட்டவன், மீண்டும் அதே இடத்திலையே வந்து அமர்ந்து கொண்டான்.

“நீ எதுக்காக இப்படி எல்லாம் செய்யுற” என்றான் நிலவன்.

“இது ஜாலியா இருக்கே. சரி உங்களுக்குக் காதலி இருக்கான்னு சொன்னீங்களே, அவங்களைப் பத்தி சொல்லுங்க” என்றாள் வனரோஜா.

காதலி என்ற ஒருத்தி இருந்தால் தானே, அவன் அவளைப் பற்றி சொல்வான், நிலவனுக்குத் தான் அப்படி யாருமே இல்லையே!

அவன் எதுவும் கூறாமல் அமைதியாக கடலை வெறிக்க, அவனது கையைப் பிடித்துக் குலுக்கியவள், “சொல்லுங்க நிலவன், அவங்க லண்டனா இல்லை இந்தியாவா?” என்று கேட்டு அடம்பிடித்தாள்.

அது நிலவனுக்கு எரிச்சலைத் தர, “ம்ச்.. நீ உன்னோட வாழ்க்கையை முதல்ல பாரு. உனக்குன்னு யாருமே இல்ல” என்றவன் தன் விஷயத்தை முடிக்க வேண்டி பேச்சை வளர்க்கப்பார்த்தான்.

ஆனால் அதற்குள் அழ ஆரம்பித்த வனரோஜா, “நீங்க சொல்றது சரிதான். எனக்கு யாருமே இல்ல” என்று மூக்கைச் சிந்தினாள்.

“அதான் சொல்றேன்..” என்று அவன் சொல்லும் போதே, “உங்களுக்கும் யாருமே இல்லைன்னு சொன்னீங்க. ஆனா உங்களுக்குக் காதலி இருக்காளே!. ஆனா பார்த்து இருந்துக்கோங்க நிலவன், இந்த உலகில் யாருக்கும் எந்த உறவும் நிரந்திரம் இல்ல” என்றாள்.

“சரி தான். அதைத்...” என்று அவன் அடுத்து பேச வருவதற்குள் திரும்பவும் அவனைப் பேச விடாமல் குறுக்கிட்டவள், “உங்க காதலியைப் பத்தி சொல்லுங்க” என்று அதில் வந்தே நின்றாள்.

ஏற்கனவே பல பொய்யைச் சொல்லி வனரோஜாவிடம் நன்றாக நடித்தவன், அவள், தனக்கு இல்லாதக் காதலியைப் பற்றிக்கேட்க, கொஞ்சம் தடுமாறத்தான் செய்தான்.

தொழில் சம்பந்தமான பார்ட்டிகள், விருது நிகழ்ச்சிகள் என்றெல்லாம் செல்லும் போது, இவனது தொழில் திறமையையும், சிக்கென்று ஆணழகனாக இருப்பதையும் பார்த்துப் பல பெண்கள் இவனிடம், பேச வருவர், அவர்களை எல்லாம் தன் பார்வையாலையே ஒதுக்கி வைத்துப் பெண்களை அண்டவிடாமல் செய்தவனுக்கு, போலி கதாப்பாத்திரமான பெண்ணை வடிவமைக்கத் தெரியவில்லை.

வனரோஜாவின் இம்சை தாங்கமாட்டாமல், அவள் சொன்ன பிரேக்அப் கதையை தனக்கு ஏற்றார் போல் மனதில் எழுதியவன், அதனை அவளிடம் சொல்ல ஆரம்பித்தான்.

“அவள் என்னை ஏமாத்திட்டு, வேற ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா” என்று ஒரே வாக்கியத்தில் சொல்லி முடித்தான்.

அதிர்ச்சியில் தன் வாயைத் திறந்தவள், “அப்ப நாம ரெண்டு பேரும் ஒரே படகுல தான் இருக்கோமா?” என்றாள்.

சுற்றிமுற்றிப் பார்த்தவன், “இல்ல ஒரே தீவுல இருக்கோம்” என்றான்.

“ஐய... காமெடி. சரி அதை விடுங்க. உங்களுக்கு வருத்தமாவே இல்லையா?” என்றாள் தன் கண்களை நன்றாக திறந்து பார்த்தபடி.

“அதை எல்லாம் நினைக்க எனக்கு நேரம் இல்ல” என்றதும், “உங்கக் காதலி...” என்று ஆரம்பிக்கப் போனவளின் உதட்டில் தன் விரலை வைத்தவன், “அவளைப் பத்திப் பேசாத” என்று அவனது வாய் மட்டும் மெதுவாக அசைய, அவனது கண்களோ, பெண்ணவளின் இதழிலையே நிலைபெற்று நிற்க, மதுவின் மயக்கத்தில் அவள் இருக்க, தன்னையும் அறியாமல் முன்னேறிய நிலவன், தன் இதழைக் கொண்டு, வனரோஜாவின் இதழில் ஒற்றி எடுத்துவிட்டு, விலகிப்போக, அவனை விலகவிடாமல், அவன் சட்டையைப் பிடித்து இழுத்துத் தன் மேல் விழவைத்தாள் வனரோஜா.

பின் அவள், வன்மையாக தன் இதழோடு, அவனது இதழைச் சேர்த்து சுவைக்க ஆரம்பித்தாள்.

நிலைமையை தன் கையில் எடுத்துக் கொண்ட நிலவனும், அவளைத் தழுவி ஆழமாக முத்தமிட்டான்.

அவன் நிலைக்கு வர, ஐந்து நிமிடங்கள் ஆனது. உடனே தான் செய்த காரியத்தின் வீரியத்தை உணர்ந்தவன், அவளின் மேல் இருந்து எழுந்து, “என்னை அட்ராக்ட் பண்ணாதன்னு சொன்னேனே! கேட்க மாட்டியா” என்று வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான்.

மது தந்த போதையில் சிரித்துக் கொண்டே, தன் கையால் உதட்டைத் துடைத்துக் கொண்டவள், “ஓவரா பண்ணாதீங்க நிலவன். பாரின்ல பிறந்து வளர்ந்த நீங்க, இதுக்கு முன்னாடி எந்த பொண்ணுக்கும் முத்தம் கொடுத்ததே இல்லையாக்கும்” என்று கேட்டு சிரித்தாள்.

“போதையில ஏதாவது உளறாத ரோஜா. முத்தம்ங்குற பெயரில் என் உதட்டை கடிச்சு வைக்குற நீ” என்றவன் வலியோடு தன் உதட்டின் ஓரம் தடவினான்.

“நெக்ஸ்ட் சாப்டர் போவோமா நிலவன்” என்று அவனை ஒரக்கண்ணால் பார்த்தபடி கேட்டாள். அவள் எதனைப் பற்றிக் கூறுகின்றாள் என்று அவனுக்குத் தெளிவாகப் புரிந்தது.

அதில் நிலவனின் கண்களோ அதிர்ச்சியில் விரிய, கணநேரத்தில் அதில் இருந்து வெளிவந்தவன், “போதையில் ஏதாவது பேசாம சீக்கிரம் இங்க இருந்து போ” என்றான்.

“உலகத்துல இருக்குற எல்லாத்தையும் இன்னைக்கே செய்து பார்க்கணும்னு ஆசையா இருக்கு. எனக்குன்னு யாரும் இல்ல. இனி எதிர்காலத்திலும் யாருமே இருக்கப்போறது இல்ல. எனக்குக் காதல், கல்யாணம் இதெல்லாம் வேண்டாம்” என்றவள் இப்போது போதையில் உளறாமல் தெளிவாகப் பேசினாள்.

சிறிது நேரத்திற்கு முன்பு. இருவரும் பரிமாறிய முத்தத்தால், நிலவனுக்கும் இளமையின் தாகம் அதிகரிக்க, “எனக்கும் ஓகே தான். ஆனா இது வெறும் ஒன் நைட் மட்டும் தான்” என்றான் அழுத்தமான குரலில்.

அதற்கு வேகமாக, “சம்மதம்” என்று தன் தலையை ஆட்டிக்கொண்டாள் வனரோஜா.

விதி வனரோஜாவை பல திசைகளில் சுழற்றி அடிக்க ஆரம்பித்தது. என்ன தான் தன்னை வளர்த்த பெற்றோர்கள் அன்பு செலுத்தவில்லை என்றாலும், தமிழர் மரபில் கட்டுண்டு, சுயஒழுக்கத்தில் வாழ்ந்தவள் தான் வனரோஜா. ஆனால் விதி விளையாடிய விளையாட்டில், அவளது எண்ணமும் மாற, அது அவளை போதையில் தவறான முடிவை எடுக்க வைத்திருந்தது.

இருக்கையில் அமர்ந்திருந்தவளின் இடையை அழுத்தமாகப் பற்றியபடி, அவளைத் தூக்கித் தன் மேல் போட்டுக் கொண்ட நிலவன், அவன் இதழால் அவளின் இதழை சுவைக்க ஆரம்பித்தான்.

இதழில் தொடங்கிய யுத்தம் மெதுவாக கீழிறங்கி அவளின் கழுத்தில் வந்து நின்றது.

இருவருக்குமே இது புதிய அனுபவம் தான். இருவருமே அடுத்த அத்தியாயம் நோக்கி நகர அவசரம் கொண்டனர்.

அவளைத் தூக்கிக் கொண்டு, அப்படியே தன் அறைக்குள் சென்றவன், தன் படுக்கையில் அவளைப் படுக்க வைத்து, அவள் மேல் படர்ந்தான்.

“நல்லா நியாபகம் இருக்கட்டும் வனரோஜா இது ஒன் நைட் ஸ்டாண்ட். இதுக்கும் நம்ம அக்ரிமெண்ட்க்கும் எந்த வித சம்பந்தமும் இல்ல” என்று இதோடு பத்தாவது தடவையாக சொல்லிவிட்டான்.

அதற்கெல்லாம் தன் மண்டையை ஆட்டிக்கொண்டவள், தன் உடையைக் கழற்றி அவன் வீசும் போது, அவனது கையைப் பிடித்து, “பாதுக்காப்புக்கு என்கிட்ட எதுவும் இல்ல” என்றாள் அவன் கண்களை ஊடுருவியபடி.

உடனே அவளது கையைப் பிடித்து அவள் தலைக்கு மேல், தன் கைப்பிடியில் வைத்தவன், “அது பிரச்சனை இல்ல. நான் ஒரு இம்போடேன்ட் தான்” என்று அவன் கூற, அவளது கண்கள் சரியாக விரிந்து போக, அவள் அடுத்தக் கேள்வியைக் கேட்பதற்குள், அதனைக் கேட்க விடாமல், அவளின் இதழில் வன்மையாக தன் இதழைப் பொருத்தினான் நிலவன்.

வனரோஜாவை ஏமாற்றித் திருமணம் செய்த நிலவனின் மனதில் ஏற்பட்ட மாற்றம் அதிர்ச்சி தான் என்றாலும், வனரோஜாவுடன் தன்னை இணைத்து அவன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. முதலில் ஒரு பெண்ணைப் பார்த்து மயங்கிய தன் நிலையைக் கண்டு தன் மேல் கோபம் கொண்டது என்னவோ சில கணங்கள் மட்டும் தான். பின் முத்தத்திற்குப் பிறகு அவனும் அவளுடன் முழுவதுமாக கலக்க ஆரம்பித்தான்.

இதை ஒரு ராத்திரியில் முடித்துவிட்டு, அடுத்த நாள் இருவருமே இதனை மறந்துவிடலாம் என்று நினைத்திருக்க, அது எப்படி ஒரு நாள் ராத்திரியில் முடியலாம்? நான் எப்படி முடித்து வைக்கிறேன் பார் என்று காலம் வேறு ஒரு கணக்குப் போட்டு விட்டதை இருவரும் எப்படி அறிவர்?
 

NNO7

Moderator
அத்தியாயம் – 18

நடந்ததை எல்லாம் நினைத்து மனம் வெதும்பிய வனரோஜா, அந்த மீட்டிங் முடியும் போது தான் தன் சுயத்திற்கு வந்தாள்.

அவளின் அருகே அமர்ந்திருந்த சிவாவும், நிலவனைப் பற்றிய யோசனையில் தான் அமர்ந்திருந்தான்.

மீட்டிங் முடிந்ததும், சிவாவையும் ரோஜாவையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றார் பரணி.

வேகமாக இவர்களை நோக்கி வந்த பரணியின் பிஏ, “உங்க ரெண்டு பேரையும் மேடம் கூப்பிடுறாங்க” என்று அறிவித்துவிட்டு சென்றார்.

இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டபடி பரணியின் அறைக்குச் செல்ல, இவர்கள் இருவரையும் வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த நிலவனோ, அவர்கள் அருகில் வந்து, “நான் சொன்னதை கேட்டியா, உன் தங்கச்சிக்கிட்ட?” என்றான் உதட்டை ஒரு பக்கமாக வளைத்தபடி.

‘ஐயோ! இதை இவர் விடவே மாட்டாரா’ என்று இருந்தது ரோஜாவுக்கு.

“எனக்கு ஆயிரம் வேலை இருக்கு நிலவன். உன்கிட்டப் பேசி அதை விணாக்க நான் விரும்பல” என்று முகத்தைக் காட்டினான் சிவா.

“உன்னோட பரணி மாதாவே, உன்னைப் பதவியில் இருந்து தூக்கிட்டாங்கன்னு கேள்விப்பட்டேன். அப்ப நீ வெறும் செத்த பாம்பு தானா?” என்று தன் எல்லையை மீறி பேசினான் நிலவன்.

தான் இருக்கும் இடம் கருதி கோபத்தைக் கட்டிக் காத்தான் சிவா. ரோஜாவும் அவன் நிலையிலையே தான் இருந்தாள்.

நிலவனைப் பார்த்தவள், ‘நாகரிகக் கோமாளி. அடிக்க வேண்டிய இடத்துல அடிக்குறேன் உங்களை’ என்று தன் மனதினுள் நினைத்துக் கொண்டாள்.

ரோஜாவின் திட்டத்திற்குப் பல மடங்காக அங்கு திட்டத்தைத் தீட்டி வைத்துக்கொண்டு இருக்கின்றாள் நிலவனின் தங்கை நிலா. அவள் வைக்கும் சரவெடி யார் பக்கம் எல்லாம் சென்று வெடிக்கப்போகின்றதோ!

சிவாவின் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்ட வனரோஜா, “வா அண்ணா, நாம போகலாம். சில்லறைகள் தான் சத்தம் கொடுத்துக்கிட்டே இருக்கும்” என்று சொல்லிவிட்டு, நிலவனைக் கடந்து சென்றாள்.

செல்லும் வனரோஜாவின் முதுகைப் பார்த்த நிலவன், ‘எப்படியும் என்னைத் தேடித் தான் நீ வரணும் வனரோஜா’ என்று நினைத்துக் கொண்டான்.

இங்கு தன் அறையில் இருந்த மடிக்கணினியில் அவசரமாக ஏதோ டைப் செய்து கொண்டிருந்த பரணி, தன் முன்னால் வந்து நின்ற தன் மகளையும், மகனையும் பார்த்து, “நிலவன் கிட்ட எதுக்காக பிரச்சனை பண்றீங்க. எப்போதும் இங்க வராதவன், பிரச்சனை பண்றதுக்கே இன்னைக்கு வந்துருக்கான்” என்றார் எடுத்த எடுப்பில்.

அதில் சிவாவின் கோபம் அதிகரிக்க, “யாரு நாங்க பிரச்சனை பண்றோமா? பிரச்சனையை ஆரம்பிச்சதே அவன் தான்” என்று பல்லைக்கடித்தான்.

பரணி, “ஷு.... இங்க வந்து சத்தம் எல்லாம் போடக்கூடாது சிவா. எனக்குத் தேவை, நான் கேட்டக் கேள்விக்குப் பதில்” என்றார் அழுத்தம் மிகுந்தக் குரலில்.

தன் தாயின் கணீர் பேச்சில் வழக்கம் போல வாயடைத்து தான் நின்றான் சிவா, ஆனால் வனரோஜா அவ்வாறு இல்லை.

“என்னை ஏமாத்தி இங்கக் கொண்டு வந்து நிறுத்துனது நிலவன் தான். இதில் நாங்க என்ன பிரச்சனையைப் பண்ணிட்டோம்” என்று துடுக்காகப் பேசினாள் வனரோஜா.

இப்போது அவளிடம் தன் பார்வையைத் திருப்பியவர், “நிலவனைப் பத்தித் தவறா வதந்தி பரப்பினது நீங்க தானே!” என்றார் தன் கைகளைக் கட்டிக்கொண்டபடி.

இப்போது தன் அன்னையை எதிர்கொண்ட சிவா, “அது வதந்தி எல்லாம் ஒன்னும் இல்ல. அது தான் உண்மை” என்று சொல்லி வேறுபக்கமாக சிவா பார்க்க, அதனைக் கேட்ட வனரோஜாவுக்கு சிரிப்பு வர, பரணியின் முறைப்பில் அமைதி கொண்டாள்.

“ஒருத்தரைப் பத்தி இந்த மாதிரி பேசுறது அநாகரிகம்ன்னு ரெண்டு பேருக்கும் தெரியாதா?” என்று இருவரையும் சேர்த்தே விளாசியவர், ரோஜாவைப் பார்த்து, “சிவாவை விடு, இவன் ஒரு தருதலைன்னு அவன் கம்பெனி நடுத்தும் லட்சணத்தில் தெரிஞ்சிடுச்சி. ஆனா நீ ஒரு மருத்துவர். உன்கிட்ட இது மாதிரி ஒரு அநாகரிகமான செயலை நான் எதிர்பார்க்கல” என்று சொல்லித் தன் தலையை ஆட்டினார்.

சிவாவின் தன்மானத்தை அதி பயங்கரமாக தீண்டிய போதும், அவன் அமைதியாகவே இருந்தான். பரணி தன்னைத் திட்டுவது இதுவே முதல் முறை என்று இருந்தால் கூட அவன் மனதால் பாதிக்கப்பட்டு இருப்பானோ என்னவோ! ஆனால் இது போல் திட்டு வாங்குவது எல்லாம், சிறுவயதில் இருந்தே, அவனுக்குப் பழகிப்போன ஒன்று.

பரணி சிவாவைத் திட்டுவது, வனரோஜாவிற்கு தன்னை வளர்த்தப் பெற்றோர்கள், எப்போதும் தன்னைத் தேவை இல்லாமல் திட்டுவதை நியாபகப்படுத்தியது. அது தந்த வெக்கையில், “நிஜமாவே அண்ணனைப் பெத்த தாய் நீங்க தானா? ஏன் கேட்குறேன்னா, நான் அடைஞ்ச காயம் என் அண்ணனுக்கு ஏற்படக்கூடாது” என்றாள் தைரியம் கொண்ட குரலில்.

சிவாவோ, அவள் கையைப் பிடித்து, “ம்ச்... சும்மா இரு ரோஜா” என்று உள்ளே போனக்குரலில் அவளைத் தடுத்து நிறுத்தப்பார்த்தான்.

ஆனால் அவள் கேள்வியில் எல்லாம் பரணி சோர்ந்துவிடவில்லை, “டிஎன்ஏ வேணும்னா எடுத்துப் பார்த்துக்கோ ரோஜா, நீயும் இவனும் என்னோட பசங்க தான்” என்றார் அசால்ட்டாக.

“அப்படி இருந்தும் ஏன் இப்படி பேசுறீங்க?” என்றாள் தாளமாட்டாதக் குரலில்.

“வேற என்ன பண்ண சொல்ற? எனக்குத் தேவை கம்பெனியின் போசிசன் மட்டும் தான். இந்த உலகத்துல யாரும் யாருடைய வாழ்க்கையையும் வாழ முடியாது. பாசத்தை வச்சி ஊறுகாய் கூட போட முடியாது. பாசம் வேணும், உறவு வேணும்னு உட்கார்ந்துக்கிட்டு இருந்தா, கீழ உள்ளவன் உன்னை மிதிச்சிட்டு மேல போய்க்கிட்டே இருப்பான். என்னோட பசங்க என்னை மாதிரி தான் இருக்கணும்னு நான் நினைக்குறேன்” என்று பேசும் பரணியைப் பார்த்தவளுக்கு, அப்படியே நிலவனைப் பார்ப்பதைப் போலவே இருந்தது.

“உங்களோட பசங்களா? அப்ப என்னை உங்க பொண்ணா ஏத்துக்கிட்டீங்களா?” என்று அவள் கேட்க, இப்போது உணர்வின் பிடியில் தத்தளிக்க ஆரம்பித்தார் பரணி.

அவர் மெதுவாக தன் தலையை ஆட்ட, “ஆனா நான் உங்களை என்னோட அம்மாவா ஏத்துக்கிடலையே! மீட்டிங் அப்ப, நீங்க என்னை அறிமுகம் செய்து வைக்கும் போது, எந்தவித பிரச்சனையும் வேண்டாம்னு நினைச்சு தான் நான் அமைதியா இருந்தேன்” என்று உதடு துடிக்கப்பேசிவிட்டாள்.

அவள் பேசிய பேச்சின் வீரியத்தில், முதன்முதலாக, பரணியின் கண்கள் கலங்க ஆரம்பித்தது.

அதனைப் பார்த்த சிவாவிற்கு பெரிய அதிர்ச்சி என்று தான் சொல்ல வேண்டும். தன் கண்ணீரை இவர்கள் பார்த்துவிடாமல் இருக்க, தான் அமர்ந்திருந்த ரோலிங் சேரைத் திருப்பியவர், மேஜையில் எதுவோ தேடுவது போல் பாவனை செய்து கொண்டு, “நீங்க ரெண்டு பேரும், இனி வெளிய தங்க வேண்டாம். வீட்டுக்கு வாங்க. எனக்கு இப்ப வேலை இருக்கு. நீங்க போகலாம்” என்று சொல்லி இருவரையும் வெளியே அனுப்பப் பார்த்தார்.

“அதெல்லாம் வரமுடியாது” என்று சிவாவும் ரோஜாவும் ஒரே நேரத்தில் கூற, “அப்ப உன் தங்கச்சியை நிலவன் வீட்டுக்கு அனுப்பு” என்றதுடன் முடித்துக் கொண்டார் பரணி.

ரோஜா அதற்கு மறுப்புத் தெரிவித்து எதுவோ கூறப் போக, “வேண்டாம்” என்று தன் தலையை ஆட்டிய சிவா, அவளின் கையைப் பிடித்துக் கொண்டு வெளியே சென்றான்.

“என்ன அண்ணா, அவங்க பேசுறதுக்கு நீயும் தலையை ஆட்டிட்டே நிற்குற?” என்று குறைபட்டாள் வனரோஜா.

“நான் உனக்கு ரெண்டு விஷயம் சொல்றேன். நல்லா கேட்டுக்கோ, நம்ம அம்மா கிட்டத்தட்ட ஆண்ட்டி ஹீரோயின் மாதிரி. அவங்க மனசுல பாசம் இருந்தாலும் அதைக் காட்டிக்க மாட்டாங்க. பாசம் இல்லாதது போல தான் பேசுவாங்க. அவங்க ஏதாவது பேசுனா அதை நீ சீரியஸா எடுத்துக்காத. உனக்கு ஒரு பிரச்சனைன்னு சொன்னதும் இங்க எல்லாத்தையும் போட்டுட்டு, உன்னைக் காப்பாத்த வந்தாங்க. நீயும் பார்த்தியே, இன்னைக்கு மீட்டிங்ல எல்லாரும், அம்மாவை எப்படி எல்லாம் கேள்வி கேட்டாங்கன்னு” என்று ரோஜாவிற்குப் பரணியைப் புரியவைக்கும் நோக்கில் பேசினான்.

ரோஜாவிற்கும் புரியத் தான் செய்தது. ‘சிவாவை ஏசுகிறார் சரி. ஆனால் நான் இப்போது தானே இங்கு வரவே செய்திருக்கிறேன். என்னையும் இப்படி எல்லாம் பேசவேண்டுமா!’ என்ற எண்ணம் அவளுக்கு.

அதனை அப்படியே சிவாவிடம் கேட்கவும் செய்தாள். தன் தலையை அழுந்தக் கொதியவன், “உனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியல ரோஜா. அம்மா இன்னைக்கு என்னை திட்டுனது எல்லாம் ரொம்பவே கம்மி தான். படிக்கும் போது, எப்போதும் நிலவனை என்னோட ஒப்பிட்டு பேசுவாங்க. இப்ப அதெல்லாம் இல்ல. அதுவரை எனக்கு சந்தோசம் தான்” என்றவன், அவளைக் கூட்டிக்கொண்டு நிலா மருத்துவமனை நோக்கித் தன் மகிழுந்தைச் செலுத்தினான்.

“நாம கங்கா பேலஸ் போயிடலாம் ரோஜா. இதுவரை நம்மை அழைக்காத அம்மா, இன்னைக்கு நிலவன் ஊருக்கு வந்ததும் கூப்பிடுறாங்கன்னா அதில் ஆயிரம் அர்த்தம் இருக்கும். என்ன தான் நிறுவனம் தான் முக்கியம்னு அவங்க பேசினாலும், அவங்க எண்ணம் எல்லாம் நம்ம பாதுகாப்பை மட்டும் தான் சுத்தி வரும்” என்று நீட்டமாக பேசினான் சிவா.

“நிலவன் அம்மாக்கிட்ட என்ன சொன்னாருன்னு தெரியல. அதனால தான் அம்மா வீட்டுக்கு வா இல்லைன்னா நிலவன் வீட்டுக்குப் போன்னு சொல்றாங்க” என்று சாலையில் தன் கண்களைப் பதித்தவாறு கூறினாள் வனரோஜா.

“இதோ இதைத் தான் நானும் சொல்ல வரேன். நாம அம்மாக்கூடவே இருக்கலாம் ரோஜா” என்று சிவா கூறியதற்குப் பதிலாக, மிகப்பெரிய குண்டை எடுத்து, சத்தம் இல்லாமல் அவன் தலையில் இறக்கினாள் ரோஜா.

“நான் முதலில் சொன்ன திட்டம் மாதிரியே நிலவனை தொழிலில் தான் அடிக்கணும் அண்ணா. அதுக்கு நான் ஹாஸ்பிடல் போறதை விட, அவர் வீட்டுக்குப் போறது தான் சரியா இருக்கும். நம்ம நிறுவனத்தையும் பழையபடி, நாம மேல கொண்டு வரலாம். நிலவனின் திமிரும் அடங்கும்” என்று அவள் சொல்ல,

அதில் பிரேக் அடித்துக் காரை நிறுத்தியவன், மீண்டும் வண்டியை இயக்கியபடி, “உனக்கு என்ன பைத்தியமா? உன்னை அங்க அனுப்பிட்டு, உன்னை அவன் எந்த நேரம் என்ன செய்வான்னு பயத்துல நாங்க வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்கணுமா?” என்று சத்தம் போட்டான்.

“நிலவன் வீட்டுக்குப் போனா, அப்படி அவர் என்னை என்ன பண்ணிடுவார்? அதான் பண்ண வேண்டியதை எல்லாம் பண்ணிட்டாரே” என்று அவள் சர்வ சாதரணமாகக் கூற, அவள் பேச்சு புரியாதவன், “என்ன பண்ணிட்டான் அவன்” என்றான்.

தன் வயிற்றைத் தடவியபடி சிவாவைப் பார்த்தவள், “நான் ப்ரெக்னன்ட் அண்ணா, வித் நிலவன் பேபி” என்று சிவாவிற்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி தந்தாள் ரோஜா.






 

NNO7

Moderator
அத்தியாயம் – 19

லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மனையைப் போலவே தோற்றம் கொண்ட அந்த கங்கா பேலசின் தோட்டத்தில் அமர்ந்து, பரணி தேநீர் அருந்திக் கொண்டு இருக்க, அவருக்கு முன்னே இருந்த இருக்கையில் தான் அமர்ந்து அவரைப் பார்த்துக் கொண்டிருந்தாள் வனரோஜா.

“என்னை நிலவன் வீட்டுக்குப் போக விடுங்க” என்றாள் தீர்மானமாக.

அவளை ஏறிட்ட பரணி, “நீ தானே அவன் வீட்டுக்கு எல்லாம் போக விருப்பம் இல்லைன்னு சிவாக்கிட்ட சொன்ன? இப்ப என்ன திடீர்னு?” என்றார் அவளை நேர்பார்வை பார்த்தபடி.

கொஞ்சம் தயங்கிய படி, “முதல்ல சொன்னேன் தான். ஆனா இப்ப என் விருப்பத்தை மாத்திக்கிட்டேன்” என்றாள் வனரோஜா.

தன் தேநீர் கோப்பையை, அருகில் இருந்த மேஜையில் வைத்த பரணி, “ஆனா நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன்” என்றார் கண்டிப்பான குரலில்.

“நானும் நிலவனும் சட்டப்படி கணவன் மனைவி. அது உங்களுக்கும் தெரியும் தானே!” என்றாள் அவருக்குப் பதில் பார்வை பார்த்தபடி.

“கணவன் மனைவியா? அது எத்தனை வருஷத்துக்குன்னு கொஞ்சம் சொல்றியா ரோஜா?” என்றார் குரலில் அழுத்தத்தைக் கூட்டி.

அதற்கு ரோஜா பேசாமல் இருக்க, தன் பேச்சைத் தொடர்ந்த பரணி, “நீ பட்ட கஷ்டங்கள் அதிகம். நிலவன் வீட்டுக்குப் போனா, ஏற்கனவே நீ அனுபவித்தக் கஷ்டங்களை விட, அங்க கஷ்டங்கள் கூடும்” என்று எப்படியாவது அவளுக்குப் புரியவைத்துவிட வேண்டும் என்ற நோக்கில் பேசினார்.

“நான் அங்க போகலைனாலும், நிலவன் என்னை அங்க வரவச்சிடுவார். ஏன்னா நான் ரெண்டு வருஷத்துக்கு, அவர் கூட தான் இருக்கணும். அப்படி தான் அக்ரீமென்ட்ல இருக்கு” என்றாள் உள்ளே போனக் குரலில்.

“நாம கோர்ட்ல கேஸ் பைல் பண்ணலாம். யாரும் உன்னைக் கட்டாயப்படுத்தி அவங்களோட தங்க வைக்க முடியாது” என்று சொன்ன பரணிக்கு, ரோஜாவை நிலவனிடம் அனுப்ப சிறிதும் இஷ்டம் இல்லை.

அப்போது அங்கே வந்த சிவா, “ரோஜா சொல்றது தான் சரி அம்மா. ரோஜா அவன் வீட்டுக்குப் போகலைனாலும், அந்த நிலவன் எப்படியாவது ரோஜாவை அவன் வீட்டுக்கு வரவச்சிடுவான். ரெண்டு வருஷ அக்ரீமென்ட்க்கு ஒத்துக்கிட்டு தான் ரோஜா அதில் கையெழுத்தும் போட்டு இருக்காள். இந்திய சட்டப்படி தான் கல்யாணம் நடந்துருக்கு. நாம கோர்ட் போனாலும், கேஸ் இழுக்கத் தான் செய்யும்” என்று தன் தாயிடம் சொல்லியவன் கிஞ்சித்துக்கும், ரோஜாவின் பக்கம் திரும்பிப் பார்க்கவே இல்லை.

அதில் சோர்ந்து போனது ரோஜாவின் முகம். அதனை உடனடியாக கண்டுகொண்ட பரணி, அண்ணன் தங்கைக்குள் ஏதோ பிரச்சனை என்று நினைத்துக் கொண்டார்.

சிவாவைப் பார்த்தவர், “அதுக்காக தெரிஞ்சே உன் தங்கச்சியை ஆபத்தான இடத்துல போய் விட சொல்றியா?” என்று கேட்டார்.

சிவா தன் வாயைத் திறப்பதற்குள், முந்திக்கொண்ட வனரோஜா, “நான் அங்க போறது நிலவனுக்குத் தான் ஆபத்து அம்மா. எனக்கு இல்ல” என்று முதன் முதலாக பரணியை அம்மாவென்று அழைத்து, அவரின் மனதினை குளிரச்செய்தாள்.

ஆனால் தன் உணர்வுகளை எல்லாம் அப்பட்டமாக காட்டிவிடுபவர் இல்லையே பரணி! அதனால், அவள் அழைத்ததைப் பெரியதாக எடுத்துக் கொள்ளாதவர் போல் பேச ஆரம்பித்தார் பரணி.

“பழிவாங்குறதுக்கு இது நேரம் கிடையாது ரோஜா. நிலவன் உனக்கு செஞ்சது மிகப்பெரிய தப்பு தான். கங்கா வீட்டு வாரிசையே அவன் திட்டம் போட்டு ஏமாத்துனது, எனக்கும் நெஞ்சி கொதிக்கத் தான் செய்யுது. அதுக்குன்னு பதிலுக்குப் பதில் பழிவாங்கினா, எல்லாம் முடிஞ்சிருமா? நீ அவன் மேல ஒரு தாக்குதல் தடத்துனா, அவன் உன் மேல பத்து தடவை தாக்குதல் நடத்துவான்” என்று ஒரு தாயாக, அவளின் முடிவு தவறு என்பதை, அவளுக்குப் புரிய வைத்துவிட வேண்டும் என்ற நோக்கில் பேசினார் பரணி.

“நான் பழிவாங்க அங்க போகலைம்மா. நம்ம நிறுவனத்துக்குக் கெட்டப் பெயர் வந்துவிடக்கூடாது, என்ற எண்ணத்தில் தான் அங்க போறேன். நிலவன், இன்னைக்குக் காலையில் மீட்டிங் வந்து, என்னை அவரோட மனைவின்னு எல்லாருக்கும் சொன்ன மாதிரி, அதிரடியா ஏதாவது செஞ்சிடுவாரு. நான் அங்க போறது தான் நல்லது. இல்லைன்னா அவரே என்னை வரவும் வைப்பாரு” என்று அவளும் தான் நினைத்ததை பரணிக்குப் புரியவைத்தாள்.

தன் நெற்றியை நீவிவிட்ட பரணிக்கும் ரோஜா சொல்வதும் சரிதானே என்று பட்டது.

யோசனையுடன் தன் முன்னே நின்று கொண்டிருந்த சிவாவைப் பார்த்துவிட்டு, ரோஜாவைப் பார்த்தவர், “இந்த உலகத்துல யார் உன் மேல பாசத்தைக் காட்டினாலும் அதை நீ நம்பவே கூடாது. இதுக்கும் மேல என் பொண்ணு யார்கிட்டையும் ஏமாறக்கூடாது” என்றார்.

தன் கணவன் எடுத்துச் சென்ற குழந்தையின் மேல் அக்கறை இல்லாதது போல் முதலில் நடித்த பரணி தான், பின் தன் பிஏவின் மூலம் தனக்குக் கிடைத்த ரோஜாவின் பயோடேட்டாவைப் பார்த்து நெஞ்சம் வெதும்பினார். அந்த நேரத்தில் அவரது கோபம் எல்லாம் தன் கணவன் பாரத்திடம் சென்றது.

‘பெண் குழந்தை தான் வேணும்னு பச்சப்பிள்ளையை என்கிட்ட இருந்து பிரிச்சி கூட்டிட்டுப் போனீங்களே பாரத்... அதெல்லாம் அவளை இப்படி அநாதை ஆக்கி கெட்டவங்களின் கையில் கொடுக்கத்தானா?’ என்று ஊமையாக அழுதது பரணியின் உள்ளம்.

பரணியின் பேச்சில், ரோஜாவின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக ஆரம்பித்தது.

ஆனால் அதனைக் கண்டுகொள்ளாமல் இருந்த பரணி, “உன் முடிவு எதுவோ அது படியே பண்ணு. ஆனா இந்த பரணியோட பொண்ணு ரோஜா யார்கிட்டயும் தோற்றுப்போனதா இருக்கக்கூடாது” என்று அவளுக்குத் தைரியத்தையும் சேர்த்தே அளித்தார்.

அவள் கண்ணில் இருந்து இன்னும் கண்ணீர் அருவி போல் கொட்டுவதைப் பார்த்தவர், “நீ வீட்டுக்குள்ள போய் பிரெஷ் அப் ஆகிக்கோ” என்றவர், தூரத்தில் வேலை செய்து கொண்டிருந்த வீட்டு வேலை செய்பவரைக் கூப்பிட்டு, “பொன்னம்மா, பாப்பாவை உள்ள கூட்டிட்டுப் போங்க” என்று சொல்லி அவரிடம் அனுப்பி வைத்தவர், சிவாவை தன் முன் இருந்த இருக்கையில் அமரச் சொன்னார்.

அவனைப் பார்த்தவர், “புதுசா நீங்க எந்த திட்டத்தைத் தீட்டி இருக்கீங்க சார்?” என்றார் நக்கலான குரலில்.

“அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை அம்மா. ரோஜா தான் தொழிலில் நிலவனை வீழ்த்துவதில் ஆர்வமா இருக்காள்” என்றான், அவர் பேச்சை உணர்ந்து கொள்ளாதவனாக.

“ம்ச்... நான் அதைக் கேட்கல, ரோஜாவுக்கு எதிரா நீ என்ன திட்டத்தை வச்சி இருக்கன்னு கேட்குறேன்” என்றார் கோபப்பார்வையுடன்.

அதில் அதிர்ந்தவன், “அம்மா, நீங்க என்ன பேசுறீங்க? என்னோட ரோஜாவுக்கு எதிரா நானே எப்படி மாறுவேன்” என்றவன் குரல் சிறிது கலக்கத்துடன் வந்தது. தான் தாயே தன்னை எப்படி அப்படி நினைக்கலாம் என்ற கலக்கமே அது.

ஆனால் அதனை எல்லாம் கண்டுகொள்ளாமல், “அவளோட பெயரில் இருக்கும் கங்கா நிறுவனத்தின் ஷேர்ஸ் உன் பெயரில் வர்றதுக்குத் தான், நீ பாச நாடகம் எல்லாம் நடத்துறியா?” என்று மிகவும் அபாண்டமாக சிவாவின் மேல் சந்தேகம் கொண்டார் பரணி.

தன் தலையில் கைவைத்துக் கொண்டவன், “உங்க நினைப்பு ஏன்மா அப்படி எல்லாம் போகுது. இருந்தாலும் நான் சொல்றேன், என் தங்கச்சி தான் எனக்கு எல்லாமே! என்னோட ஷேர்ஸ்சையும், ரோஜாவுக்குக் கொடுக்க நான் தயாரா இருக்கேன்” என்று வீர ஆவேசமாக பேசினான்.

“இதுக்கு நீ சம்மதிக்குற, ஆனா உன்னோட காதலி சம்மதிக்கமாட்டாளே!” என்றார் தன் உதட்டை ஒரு பக்கமாக வளைத்தபடி.

“அம்மா” என்று அவன் அதிர, மிகவும் சாவாகசமான குரலில், “அம்மாவுக்கு எதுவும் தெரியாதுன்னு நினைச்சியா சிவா?” என்றார் தன் கால் மீது கால் போட்டபடி.

“அப்ப உங்களுக்கு இதுவும் தெரிஞ்சிருக்குமே! அவளுக்கும் எனக்கும் பிரேக்அப் ஆகி ஒரு மாசத்துக்கும் மேல ஆகிடுச்சி” என்றான் உள்ளே போன குரலில்.

அதற்கு ஒரு உதட்டை மட்டும் வளைத்து புன்னகை செய்தவர், “அது காலை சுத்துன பாம்பு சிவா. அது உன்னை விட்டுப்போகாது. அதை விட்டு என்னைக்கு முழுமையா வெளிய வரியோ, அன்னைக்குத் தான் நீ எதிலும் சாதிக்கமுடியும்” என்றார்.

என்ன தான் தன் காதலி நிலாவுடன் ப்ரேக்அப் செய்திருந்தாலும், சிவாவின் மனதில் அவளுக்கானக் காதல் இருந்து கொண்டே தான் இருந்தது. அது தன் தாயின் பேச்சால் கோபத்தை வரவைக்க, “அடுத்த வீட்டுப் பெண்ணைப் பற்றி இது போல் எல்லாம் பேசாதீங்க அம்மா” என்றான் மெதுவான குரலில்.

“சபாஷ் சிவா, நிலவன் எதிரி அவன் தங்கை நிலா மட்டும் காதலியா? ஆனா நான் ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோ, நிலவனைக் கூட ஒரு வகையில் ஏத்துக்கலாம் ஆனா நிலா...” என்று தன் தலையை ஆட்டி, தன் பேச்சை முடித்துக் கொண்டார் பரணி.

**********

“என்ன?” என்று அதிர்ச்சியில் கத்தியே விட்டாள் நிலா.

அவள் முன்னால் அமர்ந்திருந்த மருத்துவரோ, “எஸ் மேம் நீங்க கர்ப்பமா இருக்கீங்க. மூன்று வாரக் கரு உங்க வயிற்றில் வளருது” என்று அந்த வெள்ளைக்கார மருத்துவர் ஆங்கிலத்தில் கூறி, அவளது நெஞ்சில் இடியை இறக்கினார்.

தன் மகிழுந்தை எடுத்துக் கொண்டு தன் வீட்டிற்கு வேகமாக வந்த நிலா, வரவேற்பு அறையில் இருந்த பொருட்களை எல்லாம் போட்டு உடைக்க ஆரம்பித்தாள்.

வீட்டில் வேலை செய்யும் ஆட்கள் அனைவரும், அவளின் ருத்ர தாண்டவத்தால் அவள் அருகில் செல்லவே பயந்து ஒதுங்கினர்.

“இல்ல இல்ல... எனக்கு இந்தக்குழந்தை வேண்டாம்” என்று கத்தியபடி தன் வயிற்றைத் தன் கைக்கொண்டு குத்த ஆரம்பித்தாள்.

அப்போது தான் வீட்டிற்குள் அடி எடுத்து வைத்த நிலவன், தன்னைத் தானே தாக்கிக்கொள்ளும் நிலாவைக் கண்டு அதிர்ச்சி அடைந்தவனாக, ஓடி சென்று அவளைத் தடுத்து நிறுத்தினான்.

பின் சுற்றி இருந்த வேலைக்கார்களை அவன் ஒரு பார்வை பார்க்க, அதில் பதறியவர்கள், பதறி அடித்துக் கொண்டு, அந்த இடத்தைக் காலி செய்தனர்.

தன் தங்கையின் தலையைத் தடவி, அவளுக்குத் தண்ணீரைப் பருகக் கொடுத்தவன், “என்னாச்சி” என்றான் ஒற்றை வார்த்தையில்.

தன் வயிற்றைத் தடவியவள், “நான் பிரேக்னன்ட் அண்ணா” என்றாள் அவன் தோளில் குலுங்கி அழுதபடி.

தன் தங்கைக்காக எதுவும் செய்யும் நிலவன், நிலா சிவாவை விரும்பும் விஷயத்தை அறிந்தே இருந்தான். ஆனால் அவர்களுக்குள் நடந்த பிரேக்அப் விஷயம் அவனுக்குத் தெரியாது.

“அதுக்கு எதுக்கு இப்படி அழற? உனக்குக் குழந்தை வேண்டாம்னா அதைக் கலைச்சிடு” என்று சர்வசாதாரணமாக, தன் தோளைக் குலுக்கியபடி கூறினான் நிலவன்.

ரத்தம் ஏறிய சிவப்புக் கண்களுடன் நிலவனை ஏறிட்டவள், “அண்ணா! இது சிவா குழந்தையே கிடையாது. இந்தியா போனதுமே நான் வேண்டாம்னு சொல்லிட்டாரு அவரு. பப்புக்குப் போன இடத்துல இப்படி ஆகிடுச்சி. இனிமேல் சிவா முகத்துல நான் எப்படி முழிப்பேன்” என்று சொல்லி திரும்பவும் அழ ஆரம்பித்தாள்.

தன் தலை முடியைக் கொதியவன், “குழந்தையை கலைச்சிட்டு வேற வேலையைப் பாரு நிலா” என்றான்.

ஏதோ யோசனை செய்தவளாக, “இல்ல அண்ணா, இந்தக் குழந்தை வேணும். எப்படியும் உனக்குக் குழந்தை பிறக்கப்போறது இல்ல...” என்றவள் தன் திட்டத்தை முழுமையாக, தன் அண்ணனிடம் கூறினாள்.

அதனைக் கேட்டவன், “சரி நிலா, அப்ப இப்போது இருந்து, உன் வயிற்றில் வளர்வது சிவாவின் குழந்தை” என்றான் சிரிப்புடன், அவனது சிரிப்பில் நிலாவும் சேர்ந்துகொண்டாள்.

நிலவனும், நிலாவும் சேர்ந்து பின்னிய சதி வலையில் சிவா மாட்டுவானா? அப்படி மாட்டியவனைக் காப்பாற்ற ரோஜா என்ன முயற்சி செய்வாள்? என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.


 

NNO7

Moderator
அத்தியாயம் – 20

“இப்ப எதுக்காக என்கிட்ட முகத்தைக் காட்டுற?” என்று முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு, மாடியில் இருந்து கீழே வந்த சிவாவிடம் கேட்டாள் ரோஜா.

“பிறகு என்ன? நீ செஞ்ச வேலைக்கு உன்னைக் கொஞ்ச சொல்றியா? கர்ப்பமா இருக்கேன்னு சொல்ற, ஒன் நைட் ஸ்டான்ட்ன்னு சொல்ற? இதெல்லாம் கேட்டு எந்த அண்ணன் தான் கோபப்படமா இருப்பான்?” என்று சீறியபடி பேச்சைத் தொடங்கியவன், அவளின் அருகே இருந்த இருக்கையில் வந்து அமர்ந்துகொண்டான்.

“உன் மேல் வச்ச நம்பிக்கையில் சொன்னேன்” என்றாள் ரோஜா.

“சரி, அதெல்லாம் விடு. நடந்தது நடந்து போச்சு, இந்தக்குழந்தைய கலைச்சிடலாம். இது அம்மாவுக்குத் தெரியாம நான் பார்த்துக்குறேன்” என்றான் கோபத்தைக் கைவிட்டவனாக.

ஆனால் அவனது கோபம் இப்போது வனரோஜாவிடம் வந்தது. “அது ஒரு உயிர் அண்ணா. அதைக் கலைச்சிடுன்னு சர்வ சாதாரணமா சொல்ற? உனக்கு எப்படி அப்படி பேசுறதுக்கு மனசு வந்தது. நீ பேசுறதை எல்லாம் இந்தக்குழந்தைக் கேட்டுக்கிட்டு தான் அண்ணா இருக்கு. இந்தக் குழந்தை வேறு யாரும் இல்ல, உன்னோட மருமகளோ, இல்லை மருமகனோ தான்” என்று உணர்ச்சிப் பொங்கப் பேசினாள் வனரோஜா.

தன் தலையில் கைவைத்துக் கொண்டவன், “நீ புரிஞ்சிக்கவே மாட்டியா? இந்தக் குழந்தையை நீ பெத்தேடுக்குறதுனால உனக்கு என்ன கிடைக்கும்?. உன்னோட கேரியர் தான் ஸ்பாயில் ஆகும். இன்னைக்கு அம்மா, என்னவெல்லாம் பேசுனாங்கன்னு நீயும் கேட்கத்தானே செஞ்ச, அவங்க உன்னைத் தன்னோட பிம்பமா பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க” என்று அவளுக்குப் புரிய வைக்கும் நோக்கில் பேசினான்.

“அதையே தான் நானும் சொல்றேன் அண்ணா, அம்மா எப்படி என்னைக் காக்க நினைக்குறாங்களோ, அதே மாதிரி தான் நான் என் குழந்தையை நினைக்குறேன். என் முடிவுல நான் உறுதியா இருக்கேன். அந்த நிலவனுக்குப் பாடம் புகட்டப்போறதும் இந்தக் குழந்தை தான்” என்றாள் தன் வயிற்றைத் தடவிப் பார்த்து.

“நீ ஒரு முடிவு எடுத்துட்ட, நான் சொன்னா கேட்கவும் மாட்டா, இருந்தாலும் எந்த சூழ்நிலையிலும், நான் உனக்குத் துணையா இருப்பேன் ரோஜா” என்று உறுதி அளித்தான் சிவா.

“சரி, நிலவன் பிரச்சனை முடிஞ்சதும் இந்தக் குழந்தையை என்ன செய்யுறதா இருக்க?” என்றான் சிவா.

“நான் முதல்ல உன்கிட்ட சொன்ன மாதிரி, எனக்குக் காதல், கல்யாணம் இதில் எல்லாம் விருப்பம் இல்ல. ரெண்டு வருஷம் கழிச்சு, என்னோட குழந்தையோட நான் வாழ்ந்திருவேன்” என்று அந்தக் குழந்தை தனக்கு மட்டுமே சொந்தம் என்ற நினைப்பில் நிலவனை மறந்து பேசினாள் வனரோஜா.

சிவாவிற்கு இதில் உடன்பாடு இல்லை என்றாலும், ‘நடப்பது நடக்கட்டும்’ என்ற முடிவுக்கு வந்திருந்தான்.

“நிலவனைப் பொறுத்த வரைக்கும் அவரால ஒரு குழந்தைக்கு அப்பாவாக முடியாது. கொஞ்ச நாளைக்கு அவர் அந்த நினைப்பிலையே இருக்கட்டும்” என்று சிவாவிடம் கூற, அங்கு இவர்களை வைத்து வேறு ஒரு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்தனர் நிலவனும் நிலாவும்.

“நீ சொன்னதைப் பார்த்தா, அந்தக் குழந்தை உருவானது கடவுளின் செயல் தான்னு சொல்லணும். ஏன்னா, தனக்குக் குழந்தையே பிறக்காதுன்னு நினைச்சவனுக்குக் குழந்தை வரப்போதே...” என்று அவன் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, ரோஜாவின் அலைப்பேசி சத்தமிட்டது.

அதனைப் பார்த்தவள், “நிலவன் தான்” என்று சொல்லிவிட்டு, அதனை எடுத்துத் தன் காதில் வைத்தவள், “ஹலோ” என்றதும், “நாளைக்குக் காலையில ஒன்பது மணிக்கு, நீ என் வீட்டில் இருக்கணும். வரலைன்னா...” என்று நிலவன் சொல்லும் போதே, குறுக்கிட்டவள், “நான் நிச்சயம் அங்க இருப்பேன் நிலவன்” என்று சொல்லி வைத்தவள், தன் கட்டைவிரலைத் தூக்கி சிவாவிடம் காட்டினாள்.

இங்கே நிலவனின் வீட்டில்...

“நீங்க அப்பாவாகப் போறீங்கன்னு, நான் இப்பவே சிவாக்கிட்ட சொல்லிடவா அண்ணா?” என்று குட்டி நாய்க்குட்டியைப் போல நிலவனைப் பார்த்தாள் நிலா.

“வேண்டாம் நிலா, நீ அவன்கிட்ட எதுவும் பேசவேண்டாம். இதை அவன் தங்கச்சி அவன்கிட்ட சொன்னாத் தான் சரியா இருக்கும்” என்றான் யோசனை மிகுந்தக் குரலில்.

“சரி அண்ணா. இருந்தாலும் அந்த பரணி அம்மாவைப் பார்த்தா எனக்குப் பயமாத் தன் இருக்கு அண்ணா” என்றாள் சின்ன குரலில்.

“உன் அண்ணன், இந்த நிலவன் இருக்கும் போது, நீ யாரைப் பார்த்தும் பயப்படணும்னு எந்த வித அவசியமும் இல்ல நிலா” என்று சொல்லி அவளுக்குத் தைரியம் அளித்தான்.

“உன்னோட வயிற்றில் வளர்வது யாரோட குழந்தை?” என்று இப்போது நிலாவை முறைத்தபடி கேட்டான் நிலவன்.

தான் எதனைக் கேட்டாலும் தனக்காக அதனை வாங்கித் தரும் தன் அண்ணன் முதல் முதலாக தன்னைத் தண்டிக்கும் குரலில் பேசியது அவளுள் பயத்தைத் தர, “எனக்குத் தெரியலை அண்ணா” என்றாள் நிஜமான குரலில்.

நிலவன் போல் தனக்கு என்று ஒரு வட்டத்தை உருவாக்கி அதில் வாழ்பவள் இல்லை நிலா. சிவாவிற்கு முன்பே அவளுக்கு வேறு ஒரு காதலன் இருந்தான். அதற்குப் பின் தான் சிவாவின் அழகில் கவரப்பட்டு அவனிடம் பேசி பேசியே, அவனையும், அவளைக் காதலிக்க வைத்திருந்தாள் நிலா.

அவனுடன் சேர்ந்து பல ஆண்டுகள் ஆகி இருந்த பின்னும், அவனுக்கு உண்மையாக இருந்தாளா? என்பது சொல்வதற்கு இல்லை.

லண்டன் வாழ்க்கைக்கு முற்றிலும் பழக்கப்பட்ட நிலாவுக்கு, இது, தான் சிவாவிற்கு செய்யும் துரோகமாகத் தெரியவில்லை. ஆனால் அவள் சிவாவையும் விடுவதாகவும் இல்லை. இது எந்த மாதிரியான காதல் என்பது அவளுக்கே வெளிச்சம்.

அவளது பதிலில் எரிச்சல் அடைந்த நிலவன், “ம்ச்... சிவாவைப் பத்தி பிரச்சனை இல்லை தான். அவன் ஒரு ஏமாளி, சுலபமா அவனை ஏமாத்திடலாம். அவன் தங்கச்சியும் அவனை மாதிரியே தான் இருக்காள். இப்ப பிரச்சனை பரணி மட்டும் தான். அவங்களுக்கு இந்த விஷயம் தெரியாம பார்த்துக்கணும்” என்றான் தன் தங்கையிடம்.

“ஆனா சிவாவின் தங்கச்சி வனரோஜா, இதை அவளோட அம்மாக்கிட்ட சொல்லிட்டா என்ன செய்யுறது அண்ணா?” என்றான் நிலா.

“சொல்லமாட்டாள் நிலா. அதுக்கு நான் உத்திரவாதம் தரேன்” என்று அனைத்தையும் தானே பார்த்துக் கொள்வதாக, நிலாவிடம், வாக்குக்கொடுத்தான் நிலவன்.

கங்கா பேலஸ் அளவுக்கு இல்லையென்றாலும், பார்க்க கல்லால் பழைய லண்டன் கட்டிட அமைப்பு முறையில் இருந்த அந்த பங்களாவின் முகப்பில், நிலா மான்சன் என்ற பொன் எழுத்துக்கள் மின்னிக்கொண்டு இருந்தன.

அதன் உள்ளே தான் தன் காலடிகளை எடுத்து வைத்திருந்தாள் வனரோஜா. அவள் கழுத்தில், அன்று அந்தத் தீவில் வைத்து நிலவன் கட்டிய பொன் தாலி தொங்கிக் கொண்டு இருந்தது.

அவள் உள்ளே நுழையும் போதே, அங்கு வரவேற்பு அறையில் இருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்த நிலா, ஒரு வித ஏளனப்பார்வையுடன், “யார் நீ? நீ பாட்டுக்கு உள்ள நுழையுற?” என்று திமிரான குரலில் கேட்டாள்.

அவளுக்கு ரோஜாவை நன்றாக தெரிந்து இருந்தும், அவளை சீண்டிப் பார்க்க நினைத்து, அவ்வாறு கேட்டாள். ‘இவளால் தானே, சிவா என்னுடனான காதலை முறித்துக்கொண்டார்’ என்ற கோபம் அவளுக்கு.

நிலாவின் சூழ்ச்சியை அறிந்து கொள்ளாத ரோஜாவும், “நான்... நான் வனரோஜா” என்றாள் கொஞ்சம் திணறியபடி.

என்ன தான் வீட்டில் வீர ஆவேசமாக சிவாவிடம் பேசிவிட்டு வந்திருந்தாலும், இங்கு புதியதாக ஒரு பெண்ணைக் கண்டதும், அவளின் சத்தம் நிறைந்த பேச்சில், ஆரம்பத்தில் தடுமாறித்தான் போனாள் ரோஜா.

“ஓ... நீ தான் வனரோஜாவா? நான் கூட, புதுசா வீட்டு வேலைக்கு வந்த வேலைக்காரின்னு நினைச்சேன்” என்றாள் திமிரின் மறுவுருவமாக.

அவளது பேச்சில் ரோஜாவின் திணறலும் சென்றுவிட, நிலாவை எடை போடும் பார்வை பார்த்தவள் வேறு எதுவும் பேசாமல், “நிலவன் தான் என்னை இங்க வரசொன்னாரு” என்றாள் நிமிர்வான குரலில்.

“காசுக்காக ரெண்டு வருஷம் என் அண்ணனுக்கு பொண்டாட்டியா நடிக்க வந்தவள் தானே நீ! பின்னாடி கங்கா வீட்டு வாரிசுன்னு தெரிஞ்சதும் இங்க வரமாட்டேன்னு சோக்குக் காட்டுனியாமே!” என்ற நிலாவின் பேச்சில், அவள் ரோஜாவின் கண்களுக்குப் பஜாரி போலத் தான் தெரிந்தாள்.

‘நீ எல்லாம் எனக்கு ஒன்னுமே இல்லை’ என்பதை போல் ரோஜா நிலாவை பார்த்துவைக்க, அதற்குள் அந்த இடத்திற்கு வந்திருந்தான் நிலவன்.

வனரோஜாவைப் பார்த்தவன், “பரவாயில்லையே சொன்ன மாதிரியே வந்துட்ட...” என்றவன் பார்வை, அவளின் கழுத்தைத் தொட்டு விட்டு, அதில் தான் தேடியது கிடைக்க, பின் ஒரு வித புன்னகையோடு அவளின் கண்களைப் பார்த்தது.

அதுவரை நேர்பார்வையும், கண்களில் எந்த வித பயமும் இல்லாமல் துடுக்காக நிமிர்ந்து நின்ற வனரோஜா, இப்போது நிலவனைக் கண்டதும், ஒன்றும் தெரியாத அப்பாவி போல் நடிக்க ஆரம்பித்தாள்.

அதாவது, அவள் நிலவனின் வீட்டிற்கு எதற்காக வந்தாளோ, அந்த வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள்.

“நான்.... நான் ஹாஸ்பிடல் போகணும்” என்றாள் பயந்த குரலில்.

ரோஜா, வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்ததில் இருந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்த நிலாவுக்கு, நொடிப்பொழுதில் வனரோஜாவின் முகமாற்றங்களைக் கண்டதும் திக்கென்று இருந்தது.

ஆனால் வேறு எதுவும் பேசாமல் தன் அண்ணன் பேசுவதைத் தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.

வனரோஜாவின் கண்ணோடு, ஆழமாக தன் கண்ணை கலக்கவிட்டவன்,”போகலாம். உன்னோட ரூம்க்குப் போய் பிரஸ்அப் ஆகிக்கோ” என்றவன், தன் கண் அசைவில் வேலையாட்களை ஏவ, உடனே ஓடி வந்த இருவர், ரோஜாவிடம் அவளது உடமைகளை வாங்கிக்கொண்டு மாடி ஏறினர்.

அவர்கள் பின்னால், குனிந்தத் தலை நிமிராமல், தன் இருகைகளையும் பிசைந்தபடி மாடி ஏறினாள் வனரோஜா.

செல்லும் வனரோஜாவைத் தான் அண்ணன் தங்கை இருவரும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவள் சென்றதும், தன் அண்ணனின் முகத்தைப் பார்த்த நிலா, “இவள் ஏதோ திட்டத்தோட தான் இங்க வந்திருக்காள் அண்ணா. இவள் முகத்தைப் பார்த்தாலே தெரியுது” என்றாள் நிலா.

தன் தங்கையை ஏறிட்டவன், “இல்லைன்னு யார் சொன்னா? வனரோஜா திட்டத்தோட தான் இங்கக் காலடி எடுத்து வச்சிருக்காள்” என்றான் குரலில் எந்த வித அதிர்வையும் கூட்டாமல்.

அதில் அதிர்ச்சி அடைந்த நிலா, “தெரிந்தும் நீ எதுக்காக சாதாரணமா இருக்க அண்ணா.” என்றாள்.

“பெரிசா ஒன்னும் ஆகிடப் போவது இல்ல நிலா. அந்த சிவா எப்படியோ அப்படித் தான் அவனோட தங்கையும். பைத்தியம் மாதிரி, பத்திரிகையில் என்னைப் பற்றி செய்தி போடுதுங்க ரெண்டும். இதுங்க பெருசா, அப்படி என்ன பழிய வாங்கப்போகுதுங்க! இதை நினைச்சு நீ ஏன் பயப்படுற?” என்றான் தன் நெற்றியை நீவிவிட்டபடி.

“இவளோட அம்மா பரணி, இதுக்குப் பின்னாடி இருந்தா நாம என்ன பண்றது? என்றாள் அச்சம் கொண்டவளாக.

“அதெல்லாம் பிரச்சனை இல்ல. என்னோட தலையீடு காரணமாகத் தான் அந்த பரணி, தன்னோடு பொண்ணை ஷேர் ஹோல்டர் மீட்டிங்ல அறிமுகம் செஞ்சி வச்சாங்க. இல்லாட்டி செஞ்சிருக்க மாட்டங்க. அவங்களுக்கு அவங்க நிறுவனம் மட்டும் தான் எல்லாம்.

பரணி, ரோஜாவை நெருங்கனும்னு நினைச்சாலும், ரோஜா நெருங்க மாட்டாள். பரணியும் ரோஜாவுக்கு அன்பை வாரி வழங்க மாட்டாங்க. அதையும் மீறி அவங்க சேர்ந்து திட்டம் போட்டா, இந்த நிலவனுக்கு முன்னால் அது நமத்து தான் போகும்” என்று அங்கே என்ன நடக்கிறது என்பதனை அறியாமல் அவன் பாட்டுக்குக் கூறிக்கொண்டிருந்தான் நிலவன்.

“அப்ப இந்த வனரோஜாக்கிட்ட பேச வேண்டியதை எல்லாம் பேசிடு அண்ணா” என்றாள் நிலா.

“சரி” என்று தன் தலையை ஆட்டியவன், “செக்அப்க்கு எங்க போகலாம்னு முடிவு பண்ணி இருக்க நிலா” என்றான் நிலவன்.

“என் பிரண்ட் வீட்டுப் பக்கத்துல உள்ள ஒரு கிளினிக்ல தான் காமிச்சேன் அண்ணா. இனி நம்ம ஹாஸ்பிடல் டாக்டர்க்கிட்ட தான் பார்க்கணும்” என்றதும், “அது சரிவராது நிலா. வனரோஜாவும் அங்க தான் வேலை பார்க்குறாள். அவளுக்கு உன் ப்ரேக்னன்ஸில சந்தேகம் வரலாம். அதுக்கு நாம இடம் கொடுக்கக்கூடாது. வேற டாக்டரை நானே பார்க்குறேன்” என்றதும் தன் தலையை ஆட்டிக்கொண்டாள் நிலா.

****

நிலவனும், வனரோஜாவும், ஒன்றாக அந்த நிலா மருத்துவமனையில் காலடி எடுத்து வைத்தனர்.

தன் இடப்பக்கம் நடந்து வரும் நிலவனைக் கண்டவள், “இங்கேயும் நான் தான் உங்க மனைவின்னு எல்லாருக்கும் என்னை அறிமுகம் செஞ்சி வைப்பீங்களா?” என்றாள்.

அது எரிச்சலில் கேட்டாளா? அல்லது நக்கலாக கேட்டாளா என்பது அவளுக்கே வெளிச்சம்.

ஆனால் இதை எல்லாம் நிலவன் ஆராயவில்லை, “நீ இங்க வந்த முதல் நாளே, நீ தான் என்னோட மனைவின்னு எல்லாருக்கும் தகவல் போயிடுச்சி” என்று சொல்லிவிட்டு வேகமாக தனக்கென்று இருக்கும் அறைக்குள் நுழைந்தவன், அங்கே இருந்த இருக்கையில் சாய்வாக அமர்ந்து கொண்டு, வனரோஜாவையும் அமரச் சொன்னான்.

‘இப்ப எந்த அம்பை விடுறதுக்காக என்னை இங்க கூட்டிட்டு வந்தாருன்னே தெரியலையே’ என்று நினைத்தவள், எது வருகிறதோ, பார்த்துவிடலாம் என்று எதுவும் பேசாமல் நிலவனின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

தன் தொண்டையை சரி செய்துவிட்டு , ஒரு கோப்பை எடுத்து அவள் முன்னால் நீட்டியவன், “இதுல கையெழுத்துப் போடு” என்றான் கட்டளையாக.

அதனை தன் கையில் வாங்கியவள், “என்னது இது?” என்றாள் தன் கோபக் குரலைக் கட்டுப்படுத்தியபடி.

“பேபி அடாப்சன் பார்ம். அந்த குழந்தைக்கு நீ தான் அம்மா, நான் தான் அப்பா. அதுவும் நம்ம காண்ட்ராக்ட் முடியும் வரைமட்டும் தான். இதுல எந்த வித குழப்பத்தையும் நான் பண்ணல. உன்னக்கு நம்பிக்கை வரலைன்னா, கங்கா குரூப் லாயரை வச்சி நீயே பார்த்துக்கோ” என்று மடமடவென்று அவளுக்கு யோசிக்கக் கூட சந்தர்ப்பத்தை வழங்காமல் பேசிக்கொண்டே சென்றான்.

‘அதுக்குள்ள ஒரு அநாதை குழந்தையை ரெடி பண்ணியாச்சா!’ என்று நினைத்தவள், “அப்ப நம்ம காண்ட்ராக்ட் முடிஞ்சதும் அந்தக் குழந்தையோட கதி? அந்தக்குழந்தையை நீங்க பாத்துப்பீங்களா?” என்று கேட்டாள் தன் உதடு துடிக்க.

“அதைப்பத்தி நீ கவலைப் பட வேண்டாம். காண்ட்ராக்ட் முடிஞ்சதும் உனக்கும் குழந்தைக்கும் எந்த வித சம்பந்தமும் இல்ல. அந்த பேபிக்கு நான் மட்டும் தான் பொறுப்புன்னு இதுல தெள்ளத்தெளிவா எழுதி இருக்கு” என்றான் அவளுக்கு விளக்கியபடி.

“பேபி உங்க பொறுப்பா? உங்களுக்கு பேபிஸ்ன்னா முதல்ல பிடிக்குமா? குழந்தையை வளர்க்குறது சாதாரண விஷயம் கிடையாது” என்று அவனிடம் கேட்டாள் வனரோஜா.

“பேபிஸ் பிடிக்குமாவா!” என்று தன் நெற்றிப் பொட்டைத் தட்டி யோசித்தவனாக, “பேபிஸ் நோ ஐடியா. ஆனா பேபி மேக்கிங் ப்ராசஸ் ரொம்பவே புடிக்கும்” என்று தன் உதட்டை ஒரு பக்கமாக வளைத்துச் சிரித்தான்.

அதற்கு நக்கலாக அவனைப் பார்த்தவள், “அதுக்குத் தான் உங்களுக்கு வழி இல்லையே! இம்போட்டன்ட் தானே நீங்க” என்றாள்.

அதில் ஐஸ் போல் குளுமை பூசி இருந்த நிலவனின் முகம் சூடாக, மேஜையைத் தாண்டி, தன் முன்னால் அமர்ந்திருந்த, ரோஜாவின் கழுத்தைப் பிடித்து, அவள் உதட்டில் வன்மையாக தன் இதழை பொருத்தி, அவளது இதழைச் சுவைத்து எடுத்தவன், “நெக்ஸ்ட் சாப்டர் போகலாமா ரோஜா?” என்றான் மென்மையாக புன்னகைத்தபடி.
 

NNO7

Moderator
அத்தியாயம் – 21

தான் என்னவென்று உணர்வதற்குள் தன் இதழை சுவைத்துவிட்டு, “நெக்ஸ்ட் சாப்டர் போகலாமா?” என்று கேட்ட நிலவனைப் பார்த்த வனரோஜா, புதியதாக தைரியம் வந்தவள் போல், நிலவனின் நெஞ்சில் கைவைத்து அவனை ஒரே தள்ளாக தள்ளியவள், தனது உதட்டைத் துடைத்துக் கொண்டு, “உங்களுக்குத் தான் என்னைப் பார்த்தாலே அருவருப்பா இருக்குமே! நீங்க என்கிட்ட இப்படி பேசுறது எல்லாம் உங்களுக்கே அநாகரிகமா தெரியலையா?” என்று சிவகாசி பட்டாசாக வெடித்தாள்.

“அந்த நாகரிகம் முதல்ல உன்கிட்ட இருக்கா? நீயா தானே அன்னைக்கு என்கிட்ட வந்த” என்று அவளது நெஞ்சில் தீக்கங்குகளை அள்ளிக்கொட்டினான் நிலவன்.

‘தான் செய்ததிலையே மிகப்பெரியத் தவறு, அன்று நிலவனுடன், ஒரு ராத்திரியைக் கழித்தது தான்’ என்று காலம் கடந்து வருந்தியவள், கொஞ்சமும் தனது தைரியத்தை இழக்காமல், நிலவனைப் பார்த்து, “அதான் அன்னைக்கே முடிஞ்சி போச்சில்ல. அதைப் பத்தி எப்போதும் நினைக்கவே கூடாதுன்னு எனக்கு ஆயிரம் தடவை சொல்லிட்டு. எதுக்காக இப்ப நீங்க அதைப் பத்திப் பேசுறீங்க?” என்றவள்,

இப்போது நக்கல் புன்னகையுடன், “நெக்ஸ்ட் சாப்டர் போனாலும், உங்களுக்குத் தான் அப்பாவாகுற தகுதி இல்லையே!” என்றாள் இளக்காரமான குரலில்.

“நீ பேசுறதுக்கு எல்லாம் பின் விளைவு வரும் வனரோஜா. எது பேசுறதா இருந்தாலும் பார்த்துப் பேசு” என்று தன் கண்களை உருட்டி மிரட்டினான் நிலவன்.

அதற்கு சிறிதும் அசராதவள், “நான் ஒன்னும் பொய் சொல்லலையே! உண்மையத்தானே சொன்னேன்” என்றாள் ஏளனக் குரலில்.

தன் காரியம் ஆகவேண்டி கடினப்பட்டு தன் கோபத்தைக் கட்டுப்படுத்தியவன், “உண்மை தான். அதுக்காகத் தான் குழந்தையை அடாப்ட் பண்றதுக்காக உன்கிட்ட கேட்குறேன்” என்றான்.

“ஆனா எனக்கு அதில் சிறிதும் இஷ்டம் இல்ல மிஸ்டர் நிலவன். சொத்து உங்க கைக்கு வரணும்னு நீங்க இப்படி செய்யுறீங்க. ஆனா உங்க சொத்து எனக்கு வேணும்னு நான் நினைச்சா உங்க நிலைமை என்னவாகும்?” என்றாள் தன் கன்னத்தில் கைவைத்தபடி.

அதில் அவளை முறைத்தவன், “சொத்து வேண்டாம்னு நீ தானே சொன்ன?” என்றான் அடக்கப்பட்ட கோபத்துடன்.

“சொன்னேன் தான். ஆனா இப்ப நான் என் முடிவை மாத்திக்கிட்டேன்” என்றாள் தன் தோள்களைக் குலுக்கியபடி.

அவ்வளவு சீக்கிரமாக தன் தோல்வியை ஒத்துக் கொண்டால், அது நிலவன் இல்லையே!

“உன் பெயருக்கு வரும் சொத்து எல்லாமே எனக்கு வரப்போறது இல்ல. நீ அடாப்ட் பண்ற பேபிக்கு தான் வரப்போகுது...” என்று அவன் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, இடையில் பேசிய ரோஜா, “அது எனக்குத் தேவை இல்லாதது” என்றாள் பட்டென்று.

“ஆனா அந்தக் குழந்தை உன்னோட உறவு தானே!” என திடீரென்று அவன் அப்படி சொன்னதும், தன்னிச்சையாக, தன் வயிற்றைப் பற்றியது வனரோஜாவின் கைகள்.

ஆனால் அவளது முகத்தில் வந்து போன முகமாற்றங்களை எல்லாம் கவனிக்கும் நிலையில் நிலவன் இல்லை. அவனது மனதிலோ பல திட்டங்கள் ஓடிக்கொண்டிருந்தது.

அதனுடன் தான், அவன் வனரோஜாவுடன் உரையாடிக் கொண்டு இருந்தான். தொடர்ந்து பேசியவன், “நாம தத்து எடுக்கப்போறக் குழந்தை, உன் அண்ணன் சிவாவோட குழந்தை” என்றான்.

அதுவரை தன்னுள் உழன்று கொண்டிருந்தவள், நிலவனால் சொல்லப்பட்ட செய்தியைக் கேட்டு அதிர்ச்சியுடன் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

“என்ன சொன்னீங்க?” என்றாள் கோபத்துடன்.

“என்கிட்ட எதுக்காக கோபப்படுற? நாம தத்து எடுக்கப்போறது என் தங்கச்சி வயித்துல வளர்ற உன் அண்ணன் குழந்தையைத் தான்” என்றான் அழுத்தம் திருத்தமானக் குரலில்.

அவளோ பேயறைந்ததைப் போல நிலவனைப் பார்க்க, “என்ன பார்க்குற? உன் அண்ணன் செஞ்ச வேலைக்கு அவனை நான் கொன்னு போட்டிருக்கணும். ஆனா அவனை எதுவுமே பண்ணாமல், உன்கிட்ட பேசிக்கிட்டு இருக்கேன் பார்த்தியா?” என்று அபாண்டமாகப் பழியைத் தூக்கி சிவாவின் தலையில் போட்டுவிட்டுப் பேசினான்.

அவசரமாக தன் கைப்பையில் இருந்து அலைப்பேசியை எடுத்தவளின் கையைப் பிடித்துத் தடுத்த நிலவன், “என்ன பண்ற?” என்றான்.

தன் மேல் இருந்த அவனது கையை உதறிக்கொண்டே, “என்ன பண்றீங்க? என்னை விடுங்க. நான் என் அண்ணணுக்குப் போன் பண்ணனும்” என்றாள் அழும் குரலில்.

“பண்ணி என்ன பண்ணப் போற?” என்று கேட்டபடி அந்த அறைக்குள் நுழைந்தாள் நிலா.

“அவர்கிட்ட கேட்கப்போறேன். நீங்க சொல்றதை எல்லாம் தலையை ஆட்டிக்கேட்குறதுக்கு, நான் ஆளு இல்ல” என்று நிலாவைப் பார்த்துக் கத்தினாள்.

“என்னை ஏமாத்திக் குழந்தையும் கொடுத்துட்டு, சுலபமா பிரேக்அப்ன்னு சொல்லிட்டுப் போயிட்டான் அந்த முட்டாள். அவனை நல்லவன்னு நீ நினைக்குறியா. இப்ப ஒரு மாசக்கரு என் வயிற்றில் வளருது” என்று தன்வயிற்றைத் தடவி விட்டு, ரோஜாவின் சுருதிக்குக் கொஞ்சமும் பிசங்காமல் கத்தினாள் நிலா.

“நான் உன்கிட்ட பேசல. நான் என் அண்ணன் கிட்டப் பேசி தெரிஞ்சிக்குறேன். இனி தேவை இல்லாம, என் அண்ணனை மரியாதை இல்லாம பேசாத” என்று அடிக்குரலில் சீறினாள் வனரோஜா.

“அவன் கேட்டதும் அப்படியே உன்கிட்ட சொல்லிருவானாக்கும்?” என்று நிலா சொல்ல, “சும்மா இரு நிலா, அதான் என் அண்ணா கிட்ட கேட்டுத் தான் முடிவு செய்வேன்னு சொல்லிட்டாளே! அவள் கேட்கட்டும்” என்பதோடு முடித்துக் கொண்டு, திரும்பவும் தன் இருக்கைக்கு வந்து சாய்ந்து அமர்ந்து கொண்டவன் ரோஜாவைப் பார்த்து, “நீ சிவாக்கிட்ட கேளு வனரோஜா. ஆனா ஒன்னு நியாபகம் வச்சிக்கோ. என் தங்கச்சிக்காக நான் என்னவேணாலும் செய்வேன்” என்றான். அதில் நிலாவின் முகத்தில் கர்வப்புன்னகை.

நிலவனுக்கு எந்தவித பதிலையும் அளிக்காமல், தன் அண்ணனிடம் பேசுவதற்கு வேகமாக அங்கிருந்து வெளியேறினாள் வனரோஜா.

அவள் சென்றதும் நிலவனைப் பார்த்த நிலா, “எனக்கு நூறு சதவிதம் சிவாவின் மேல் நம்பிக்கை இருக்குது அண்ணா. அவர் இந்தக் குழந்தைக்குப் பொறுப்பு ஏத்துக்குவார்” என்றாள் நிம்மதியான குரலில்.

தன் தலையை ஆட்டிக்கொண்ட நிலவன், “சிவா முழுவதுமா இனி என் கட்டுப்பாட்டில் தான் இருக்கப்போறான் நிலா. அவனை நினைச்சு எந்த பயமும் இல்ல” என்றான்.

“ஆமாம் அண்ணா, நம்மத் திட்டப்படி எல்லாம் சரியா நடக்குதுன்னு தான் நினைக்குறேன். அடுத்ததா சிவா என்னைத் தேடி ஓடி வருவாருன்னு நினைக்குறேன்” என்றவள் சிரிக்க ஆரம்பித்தாள்.

ஆனால் நிலவனுக்கு சிரிப்பு வரவில்லை. என்ன தான் சிவாவைப் பிடிக்காது என்றாலும், இவ்வளவு தூரம் கீழே இறங்கிப் போய், ஒருவன் மீது பழியைப் போடுவதும், அவனுக்கு ஏதோ செய்தது.

அனால் அதனைப் பற்றி அவன் நிலாவிடம் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை. அவனுக்குத் தன் தங்கையின் முகத்தில் வந்த புன்னகை எதுவும் சொல்லவும் விடவில்லை. அவளுக்காக எதுவும் செய்யத் தயராக இருந்தான் நிலவன்.

****

அந்த காபி ஷாப்பில் தான், படபடப்புடன் அமர்ந்திருந்தாள் வனரோஜா. தன் தங்கை அழைத்ததும் அடித்துப்பிடித்து அங்கே வந்த சிவா, வனரோஜாவின் சிவந்த முகத்தைப் பார்த்து, “என்னாச்சி ரோஜா. உன் முகம் எதுக்கு இப்படி சிவந்து போய் இருக்கு? வா நம்ம கிளினிக் போகலாம்” என்றான் அவளது கையைப் பற்றியபடி.

“அதெல்லாம் வேண்டாம். உன்கிட்டப் பேசணும்” என்றவள் குரல் சோர்ந்து போய் வந்தது.

“அதெல்லாம் பிறகு பார்த்துக்கலாம். என்னோட தோழி ஒருத்தி பிரசவ மருத்துவர் தான். அவள் கிட்ட நான் ஏற்கனவே பேசிட்டேன். அவளோட மருத்துவமனைக்குத் தான் இனி நீ செக்அப் போகணும்” என்று அவன் ஏதேதோ பேசிக்கொண்டே செல்ல, அதெல்லாம் ரோஜாவின் காதில் சிறிதும் விழவில்லை.

“உட்காரு அண்ணா, நான் பேசணும்” என்றவள் பார்வையில், வேறு எதுவும் பேசாமல், அவளுக்கு முன்னே இருந்த இருக்கையில் அமர்ந்தவன், “என்ன பேசணும் ரோஜா? எதுவும் பிரச்சனையா?” என்றான் நிலவனை நினைத்துத் தன் பல்லைக்கடித்தபடி.

“ஆம்” என்று தன் தலையை ஆட்டியவள், “பிரச்சனை தான். ஆனா எனக்கு இல்ல உனக்குத் தான்” என்றவள் மடை திறந்த வெள்ளம் போல் நிலவன் மற்றும் நிலா சொன்னதை எல்லாம் கூற ஆரம்பித்தாள்.

அதனைக் கேட்கக் கேட்க, சிவாவிற்கு நெஞ்சி வலியே வந்தது போல் இருந்தது.

அவனால் பேசக்கூட முடியவில்லை. ரோஜா அவனுக்குத் தண்ணீரைப் பருகக் கொடுக்க, அதனை அருந்திவிட்டு, “நான் இந்தியா போறதுக்கு முன்னாடி கேட்டதுக்குக் கூட, அப்படி எல்லாம் எதுவும் இல்லைன்னு நிலா சொன்னாளே பின்ன எப்படி!” என்று குழப்பத்தில் புலம்ப ஆரம்பித்தான்.

அப்போது தான் இவர்கள் இருவருக்குள்ளும் உறவு இருந்ததே ரோஜாவிற்குத் தெரியவந்தது.

‘என் அண்ணன் இருக்கும் போது, அவன் குழந்தையை இவர் எப்படி உரிமை கொண்டாடுவார்?’ என்று தன் மனதினுள் நிலவனைத் திட்டித் தீர்த்தவள், பைத்தியம் பிடித்ததைப் போல் அமர்ந்திருந்த சிவாவைப் பார்த்து, “அண்ணா, இப்ப என்ன பண்ணலாம்னு இருக்க?” என்றாள்.

தனக்கும் நிலாவுக்கும் எதனால் பிரேக்அப் ஆனது என்ற காரணத்தைத் தன் தங்கையிடம் சிவா கூற, அதனைக் கேட்டவள், அப்போது தான் பெருமூச்சி விட்டவளாக, “இதெல்லாம் ஒரு காரணமா? அதான் இப்ப நான் வந்துட்டேனே! நல்லாத் தானே இருக்கேன். நீ அந்த நிலாவிடம் பேசி புரியவச்சி, அவளை சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ அண்ணா. இல்லாட்டி, தனக்குக் குழந்தை பிறக்காதுன்னு, யார் குழந்தையடா தத்து எடுக்கலாம்னு அந்த நிலவன் சுத்திக்கிட்டு இருப்பாரு” என்று சிரித்துக் கொண்டே அவள் கூற, தன் மனதில் இருந்த பாரம் எல்லாம் நீங்க, சிவாவும் சிரித்துக்கொண்டான்.

“நிச்சயம் நான் நிலாகிட்டப் பேசுறேன் ரோஜா. அவள் என்னை எவ்வளவு தண்டிச்சாலும் பரவாயில்ல” என்று சிரிப்புடன் சொன்னவனுக்கு, தான் ஒரு குழந்தைக்குத் தகப்பனாகப் போகின்றோம், என்ற நினைப்பே தித்திப்பாக இருந்தது.

“சரி அப்பாவாகப் போறியே, எனக்கு ட்ரீட் இல்லையா?” என்று அவனிடம் வம்பு வளர்த்தாள் ரோஜா.

“என் பேபிக்கு அத்தை ஆகப்போற, உனக்கு ட்ரீட் இல்லாமலையா?” என்று அவனும் அவளது பேச்சில் கலகலத்தான்.

தன் அண்ணனுடன் கதைத்துவிட்டு, இரவு நேரம் கழித்தே வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தாள் ரோஜா.

அவள் வரும் போதும் வரவேற்பு அறையில் தான் நிலவனும், நிலாவும் அமர்ந்திருந்தனர்.

ரோஜாவைப் பார்த்த நிலா, “உன் அண்ணன் கிட்ட, நான் சொன்னதைப் பத்திக் கேட்டியா?” என்றாள் திமிரான குரலில்.

“கேட்டேன்” என்று சொல்லிவிட்டு செல்லப்போனவளின் கையைப் பிடித்தான் நிலவன்.

“பேசிக்கிட்டு இருக்கும் போது எங்கப்போற?” என்றான் தன் பல்லை நரநரத்தபடி.

தன் கையை அவனிடம் இருந்து விடுவித்தவள், “ம்ச்... இப்ப என்ன வேணும்? ஆமாம் என் அண்ணன்கிட்டக் கேட்டேன். குழந்தைக்கு என் அண்ணன் பொறுப்பை ஏத்துக்குவார்” என்றாள் சுவற்றை வெறித்தபடி.

நிலாவோ, கலக்கத்தோடு தன் அண்ணனைப் பார்க்க, “நான் இருக்கின்றேன்” என்று தன் கண்ணை மூடித் திறந்து ஆறுதல் அளித்தவன், ரோஜாவைப் பார்த்து, “ஆனா சிவாக்கூட உறவை புதுப்பிக்குறதுக்கு நிலாவுக்கு இஷ்டம் இல்ல. இந்தக் குழந்தையை அவள் பெத்துக்குறதே நமக்காகத் தான்” என்றான் பொறுமையாக.

“அந்தக் குழந்தை எனக்குத் தேவை இல்ல நிலவன்” என்றாள் ரோஜா.

“ஆனா எனக்குத் தேவை. உன் அண்ணன் முகத்துல கூட முழிக்க என் தங்கைக்கு விருப்பம் இல்ல...” என்று நிலவன் சொல்லும் போதே, “ஆமாம் எனக்கு சிவா இனி வேண்டாம். அவருக்கும் எனக்கும் இனி எந்த வித சம்பந்தமும் இல்ல” என்றாள் நிலா.

இப்போது நிலாவை ஏறிட்ட ரோஜா, “ஆனா உன் வயித்துல வளர்வது என்னோட அண்ணன் குழந்தை” என்றாள் அவளுக்குப் பதில் பார்வை பார்த்தபடி.

நிலா, “ஆனா எங்களுக்குக் கல்யாணம் ஆகலை ரோஜா. சிவாவால் இந்தக் குழந்தைக்கு உரிமை கொண்டாட முடியாது” என்று வீம்பாகப் பேசினாள்.

‘இவர்களுடன் பேசுவது வீண். எதுவென்றாலும் தன் அண்ணன் பேசிக்கொள்ளட்டும்’ என்று நினைத்த ரோஜா, “எனக்குத் தூக்கம் வருது. நீங்க ரெண்டு பேரும், எது பேசுறதா இருந்தாலும் என் அண்ணன்கிட்ட பேசுங்க. அவர் வாழ்க்கையில் நான் தலையிட முடியாது” என்று சொல்லி நழுவப் பார்த்தாள்.

ஆனால் நிலவன் அவளை விடுவதாக இல்லை. “நிலாவின் குழந்தையைத் தான் நாம அடாப்ட் பண்ணப்போறோம் வனரோஜா” என்று அவன் சொல்லியது தான் தாமதம், தன் அஞ்சனமிட்டக் கண்களால் அவனைத் தீப்பார்வைப் பார்த்த ரோஜா, “மாமாவெல்லாம் அப்பாவாகிட முடியாது மிஸ்டர் நிலவன்” என்றாள் துடுக்காக.




 

NNO7

Moderator
அத்தியாயம் – 22

வனரோஜாவின் பேச்சுக்கு நிலவன் பதில் அளிப்பதற்கு முன், வேகமாக முந்திக்கொண்ட நிலா, “என் குழந்தை என் இஷ்டம். என் அண்ணனுக்குக் குழந்தை பாக்கியம் இல்ல. அதனால ஒரு நல்ல எண்ணத்தின் அடிப்படையில் தான், நான் இப்படி ஒரு முடிவு எடுத்துருக்கேன். உன்னை ஒன்னும் முழுநேரமாக குழந்தைக்கு அம்மாவா இருக்கச் சொல்லல” என்றாள் முகத்தைச் சுழித்துக்கொண்டு.

“ஓ... அப்படியா! உனக்கு அப்ப நிஜமாவே ரொம்ப நல்ல மனசு தான் நிலா. ஆனா இந்தக் குழந்தை உன் வயிற்றில் உருவாகக் காரணமாக இருந்தவர் இதுக்கு சம்மதித்துவிட்டாரா?” என்றாள் தன் கையை குறுக்காக கட்டிக்கொண்டபடி.

அதற்கு நிலாவும் ஏதோ பேசப்போக, “நிறுத்து” என்று தன் கையைக் காட்டியவள், “எனக்கு இதெல்லாம் பேசுறதுக்கு நேரம் இல்ல, விருப்பமும் இல்ல. நாளைக்கு நான் டியூட்டி வேற போகணும்” என்று சொல்லிவிட்டு, அவர்கள் அடுத்த பேச்சை எடுப்பதற்குள் மாடி ஏற ஆரம்பித்தாள் வனரோஜா.

“ஏதாவது செய்” என்று நிலாவோ, நிலவனைப் பார்க்க, நிலவனோ எதுவும் பேசாமல் அமைதி காத்தவன், ரோஜா தன் கண் பார்வையில் இருந்து மறைந்ததும், நிலாவைப் பார்த்து, “எதுக்காக இவ்வளவு டென்சன் ஆகுற நிலா. நாளைக்கு அந்த சிவாவே அடிச்சுப் பிடிச்சு உன்னைப் பார்க்க வருவான்” என்று சொல்லிவிட்டு, மாடி ஏறினான்.

‘எல்லாம் சரியாக நடக்குமா!’ என்று பயந்தபடி தன் கைகளைப் பிசைந்த நிலா, அப்படியே சோபாவில் அமர்ந்துவிட்டாள்.

மேலே ரோஜா இருக்கும் அறைக்குள் சென்ற நிலவனோ, “என் தங்கச்சிக்கிட்ட உன் குரலை உயர்த்திப் பேசுற வேலை எல்லாம் வேண்டாம்” என்றான் கண்டிப்பான குரலில்.

அப்போது தான் அறைக்குள் நுழைந்திருந்த ரோஜா, ஆசுவாசமாக அமர்ந்து, தன் அலைப்பேசியை எடுக்க, திடீரென்று, உள்ளே வந்து கத்திய நிலவனைப் பார்த்துக் கோபம் கொண்டவள், “அடுத்தவங்க அறைக்குள் நுழையும் போது, அனுமதி வாங்கிட்டுத் தான் உள்ளே வரணும்னு உங்களுக்குத் தெரியாதா? அந்த அளவு மூளை இல்லாமல் தான் இங்கப் பிறந்து வளர்ந்தீங்களா?” என்றாள்.

அதற்கு தன் ஒரு புருவத்தை மட்டும் உயர்த்தி அவளைப் பார்த்தவன், “நீ ஒன்னும் அடுத்தவள் இல்லையே!” என்றதற்கு, “காண்ட்ராக்ட்ல என்ன எழுதி இருந்ததுன்னு மறந்துடீங்களா நிலவன். என்ன தான் கல்யாணம் ஆனாலும், இருவருக்கும் ப்ரைவசி இருக்கு. இப்ப என்னமோ புதுசா என்னோட மனைவி தானேன்னு உரிமை எல்லாம் கொண்டாடுறீங்க?” என்று எச்சரிக்கும் வார்த்தையில் கூற, அதற்கு தன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்தான் நிலவன்.

அதைப் பார்த்து ரோஜா எரிச்சல் அடைய, தன் சிரிப்பைக் கட்டுப் படுத்தியவன், “நீ என் மனைவி அதனால் நீ எனக்கு உரிமைன்னு, நான் சொல்லவே இல்லையே! நீ அடுத்தவள் இல்லைன்னு நான் சொன்னதற்குக் காரணம், ரெண்டு வருஷத்துக்கு நீ என்கிட்ட வேலை பார்க்குற ஒரு சாதாரண தொழிலாளி. நான் உன்னோட ஓனர்” என்றவன், நீ எனக்கு மிகவும் கீழே தான் என்ற உள் அர்த்தத்தை வைத்துப் பேசினான்.

அதனைக் கேட்டு, ரோஜா கலக்கம் கொள்ளவில்லை, “உங்கக்கிட்ட ரெண்டு வருஷம் மனைவியா வேலை பார்க்கத் தான் வந்துருக்கேன் நிலவன். அதை நான் சரியா செய்வேன். அதுக்காக நான் உங்க அடிமை ஒன்னும் கிடையாது. இன்னொரு தடவை இப்படி நீங்க உள்ளே வந்தா, என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது” என்றாள் கோபமான குரலில்.

அதனை எல்லாம் கண்டுகொள்ளாமல், தான் முதலில் ஆரம்பித்த விஷயத்திற்கே மீண்டும் வந்தவன், “என் தங்கச்சி தான் இங்க எல்லாமே, அவளை சீண்டுற வேலை எல்லாம் வேண்டாம் ரோஜா” என்றான்.

வேறு ஒரு யோசனையில், “சரி. இனி நான் பார்த்து நடந்துக்குறேன்” என்றாள் பிரச்சனை வேண்டாம் என்ற கருத்தில்.

“நிலா, எனக்காக, அவளோட குழந்தையையே நமக்குக் கொடுக்கணும்னு நினைக்கிறாள், அதுக்கு இடையூரா நீ இருக்க மாட்டன்னு நம்புறேன்” என்று சொல்லிவிட்டு சென்றான்.

அவன் அங்கே இருந்து சென்றதும், நிம்மதி பெருமூச்சுடன், கதவை அடைத்தவள், தன் அலைப்பேசியை எடுத்து, தன் அண்ணனிற்குத் தொடர்புகொண்டவள், அவன் இணைப்பை எடுத்ததும், “இங்கக் கொஞ்சம் நிலைமை சரியில்ல அண்ணா, நீ நிலாவை சமாதனப்படுத்த ரொம்ப முயற்சி செய்யணும்னு நினைக்குறேன்” என்று சொல்லிவிட்டு, ‘தன் அண்ணன் வாழ்க்கையில் இனி நல்லது மட்டும் தான் நடக்கவேண்டும்’ என்று கடவுளுக்கு வேகமாக வேண்டுதல் வைத்தாள், நிலாவின் சூழ்ச்சிகள் எதையும் அறிந்து கொள்ளாதவளாக.

மறுநாள் காலை கிளம்பி மருத்துவமனைக்கு வந்த வனரோஜவிற்கு, காலையில் நிலவன் முகத்தில் விழிக்காமல் வந்தது, மனதிற்கு புத்துணர்ச்சியாக இருந்தது.

எல்லாம் மிகப்பெரிய பிரளயம், தன் அண்ணனின் வாழ்வில் அவனுக்கு நிகழப்போவதாக அவளுக்குத் தெரியும் வரை தான்.

அங்கு மருத்துவமனையில், அன்று ரோஜாவிற்கு, திடீரென்று நைட் டியூட்டி என்று சொல்லப்பட, அங்கிருந்து நேராக சிவாவைப் பார்ப்பதற்கு கங்கா பேலஸ் சென்றாள் ரோஜா.

அப்போது தான் சிவா, நிலாவைக் காண வெளியே கிளம்பிக் கொண்டு இருந்தான்.

அவன் அறைக்குள் சென்றவள், சிவா தன் தலையை வாரிக்கொண்டு இருப்பதைப் பார்த்து, ‘எல்லாம் ஓகே தானே அண்ணா?” என்றாள்.

“என்ன பண்றதுன்னே தெரியல ரோஜா. நேத்து நைட் பேசும் போது, நிலா ரொம்ப கோபமா பேசினாள். அவளை சந்திக்கக் கூப்பிடவே ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்” என்றான் கண்ணாடியில் இருந்த தன் பார்வையை ரோஜாவின் மீது பதித்தபடி.

“நான் பார்த்தவரை நிலாவை சாமாளிக்குறது மிகவும் கஷ்டம் தன். இருந்தும் பேசும் போது கோபப்பட்டுறாத அண்ணா” என்று சிவாவிற்கு அறிவுரை அளித்துக் கொண்டிருந்தாள், நிலாவின் திட்டங்களை அறியாதவளாக.

அதற்கு தன் தலையை ஆட்டிக்கொண்டவன், “என் குழந்தையை நினைக்கும் போதே, எனக்கு எந்த வித கஷ்டமும் பெருசா தெரியலை ரோஜா” என்றான் நெகிழ்ச்சியாக.

அவனது மகிழ்வில் தானும் பங்கெடுத்தவள், “எனக்கும் தான் அண்ணா. எனக்குக் குழந்தை பிறக்குறதுக்குள்ள உனக்கு பிறந்திடும் தானே” என்றாள்.

“ஆமாம் ரோஜா. நீ நிலா ஹாஸ்பிடல்ல தானே இருக்க... நிலா அங்க தானே செக்அப்க்கு வந்திருப்பாள். நீ அவளோட ஸ்கேன் ரிப்போர்ட் எல்லாத்தையும் பார்த்தியா ரோஜா? குழந்தை நல்லா ஆரோக்கியமாத் தானே இருக்கு?” என்று அவளைப் பேசவிடாமல், அடுத்தடுத்தக் கேள்விகளால் திணறடித்தான்.

சிரித்துக் கொண்டே, “அண்ணா, கொஞ்சம் உன் எமோசன கட்டுப்படுத்து. நீ கேட்குறதுக்கு முன்னாடியே, நான் காலையில் மருத்துவமனை போனதும், நிலா ரிப்போர்ட்ல எல்லாம் சரியா இருக்குதான்னு பார்க்க நினைச்சேன். ஆனா அங்க போனதும் தான் தெரிஞ்சது, நிலா அங்க ட்ரீட்மெண்ட் எடுக்கலன்னு” என்றாள் ரோஜா.

அதில் புரியாத பார்வை பார்த்தவன், “அங்க எடுக்கலையா? அப்படி இருக்காதே ரோஜா” என்றான்.

“இல்லை” என்று தன் தலையை ஆட்டியவள், “ஒருவேளை அவள் இன்னும் ப்ராப்பரா செக்அப் போகலையோ என்னவோ!” என்றாள்.

“நேத்து ராத்திரி பேசும் போது, பேச்சு வாக்கில், எட்டு வாரக்கரு என் வயிற்றில் வளருதுன்னு டாக்டர் சொன்னாங்கன்னு சொன்னாளே! அவளோட சொந்த ஹாஸ்பிடலை விட்டுட்டு வேறு எங்க காட்டப்போறாள்!” என்றான் அவன் யோசனையாக. (சிவாவிற்கு எங்கே தெரியப்போகிறது, நிலாவின் வயிற்றில் நிஜமாகவே வளர்வது வெறும் மூன்று வாரக்கரு என்று)

ஏனென்றால் அந்தப் பகுதியில் நல்ல மருத்துவமனை என்றால் அது கங்கா மல்டி ஸ்பெஷாலிஸ்ட் மருத்துவமனை தான். அங்கு நிலா வர வாய்ப்பே இல்லை. அதனை விட்டுவிட்டால், இருப்பது என்னவோ நிலா மருத்துவமனை தான். தலைசிறந்த மருத்துவர்களை விட்டுவிட்டு இவள் எங்கே செக்அப் செய்கின்றாள் என்ற பயம் அவனுக்கு.

தான் தந்தையாகப் போகின்றோம் என்று நினைக்கும் போதே, சராசரி தந்தையாக, இந்த உலகில் இருக்கும் பெஸ்ட் தான் தன் குழந்தைக்குக் கிடைக்க வேண்டும் என்று அவன் எண்ணினான்.

ரோஜாவும், ‘நிலவனுக்குத் தெரிந்து தானே எல்லாம் நடக்கிறது. பின் எதற்கு வேறு எங்கோ சென்று சிகிச்சை எடுக்கவேண்டும்’ என்று யோசித்தாள், பின் அந்த யோசனையைத் தடை செய்தவள், “நான் இதைப்பத்தி நேரடியாவே அவள் கிட்ட கேட்குறேன் அண்ணா. நானும் ஒரு மருத்துவர் தானே!” என்றாள் ரோஜா.

அதற்கு அவளது தலையைத் தடவிவிட்டவன், “சரி ரோஜா. அப்படியே நீ உன் உடம்பையும் பார்த்துக்கோ, நாளைக்கு நீ கண்டிப்பா செக்அப் வரணும். டாக்டர் நம்ம ஹாஸ்பிட்டல்ல வேலை பார்த்தவங்க தான். என்னோட நெருங்கிய தோழி. சிலபல காரணங்களால் அவள் இப்ப அங்க வேலை பார்க்கல” என்றான், பழைய நிகழ்வுகளை எல்லாம் நினைத்தபடி.

“எதுக்கு? அவ்வளவு நல்ல டாக்டரை என் விட்டீங்க?” என்று கேள்வி எழுப்பினாள்.

“அது ஒன்னும் இல்ல ரோஜா, டாக்டர் மேகியுடன் நான் தோழமையுடன் பழகுறது நிலாவுக்குப் பிடிக்கல. மேகிக்கிட்ட நான் பேசலைன்னாலும் ஏதாவது சொல்லி சண்டை போடுவாள் நிலா. பிறகு என்ன என்னமோ பிரச்சனை வந்து மேகி வெளியப்போகும்படி ஆகிடுச்சி” என்றவன் விஷயத்தை மேலோட்டமாக சொல்லி முடித்தான்.

‘இந்த நிலா நிஜமாவே பெரிய கேடி தான் போல’ என்று நினைத்தவள், “சரி அண்ணா நீ போயிட்டு வா. நானும் அப்படியே நிலவன் வீட்டுக்குப் போறேன்” என்றாள்.

“சரி என்னை விடு. நீ என்ன செய்யப்போற? நிச்சயமா ஒரு நாள் நீ ப்ரெக்னன்ட்ன்னு அம்மாவுக்குத் தெரியத் தானே போகுது” என்றான் சிவா.

“அதெல்லாம் நான் பார்த்துக்குறேன். நீ உன்னை மட்டும் பாரு” என்றாள் அவன் தோள்களைப் பிடித்துத் தள்ளியபடி.

“சரி. இன்னைக்கு நைட் டியூட்டி இருந்ததுன்னா, நீ இங்கவே இருக்க வேண்டியது தானே, எதுக்காக உடனே அங்கப்போகணும்?” என்றான் தன் இடையில் கையைக் குற்றியபடி.

அதற்கு சிரித்துக் கொண்டவள், “நான் அன்பாக் செய்யணும் அண்ணா. நிலவன் நிச்சயம் இந்த நேரம் வீட்டுக்கு வரமாட்டார். சரி நான் போயிட்டு வரேன்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாள் ரோஜா.

அவள் நிலவனின் வீட்டிற்குள் நுழையும் போதே, ஒரு தபாலை அவளிடம் வந்து நீட்டினான், அந்த வீட்டின் வாட்ச்மேன்.

அதனைக் கண்டவள், “இதை ஏன் என்கிட்ட வந்து கொடுக்குறீங்க?” என்றாள் ஆங்கிலத்தில்.

“இது ஏதோ முக்கியமான மருத்துவ அறிக்கையாம். ஒரு டாக்டர் அம்மா தான் அவசரமா வெளிய போறேன், வீட்டுக்காரங்கக் கிட்டக் கொடுத்துருங்கன்னு சொல்லிட்டுப் போனாங்க” என்றார் அவர்.

ஏற்கனவே பட்டித் தொட்டி எங்கும், “இவள் தான் என்னுடைய மனைவி” என்று ரோஜாவை நிலவன் கைக்காட்டி இருக்க, அவனின் மனைவி என்ற முறையில் அந்த மருத்துவ அறிக்கையை அவளிடம் கொடுத்தார் வாட்ச்மேன்.

அதனை வாங்கிக்கொண்டவள், அந்த அறிக்கையில் இருந்த மருத்துவமனைப் பெயரைப் பார்த்துவிட்டு, ‘இதை ஏன் இந்த நிலா இவ்வளவு ரகசியமா செய்கின்றாள்’ என்று நினைத்துவிட்டு வீட்டிற்குள் சென்றவள், அங்கு வரவேற்பு அறையில் இருந்த சோபாவில் அமர்ந்து, ‘ஸ்கேன் ரிப்போர்ட் தான் வந்துருக்குப் போல’ என்று நினைத்து, அதனைப் பிரித்துப் படித்துப் பார்த்தவள் அதிர்ந்தாள்.

இங்கே சிவாவோ, நிலாவிடம் வெகு நேரமாக கெஞ்சிக்கொண்டு இருக்க, அவளோ, “என்னால முடியவே முடியாது சிவா. நான் உங்களை மன்னிச்சு ஏத்துக்கிட்டாளும், இந்தக் குழந்தையை கண்டிப்பா என் அண்ணனுக்குத் தான் கொடுப்பேன்” என்று அவள் பிடிவாதம் பிடிக்க, ஒரு நிலைக்கு மேல் பொறுக்க முடியாதவன், வனரோஜா கர்ப்பமாக இருக்கும் விஷயத்தைப் போட்டு உடைத்தான் அவளிடம்.




 

NNO7

Moderator
அத்தியாயம் – 23

பலவித கெஞ்சலுக்கு மத்தியில், பிடிவாதமாக இருந்த நிலாவைக் கண்ட சிவா, “இப்ப என்ன? உன் அண்ணனுக்காக நீ பார்க்குற, நானும் உங்க உறவுக்கு இடையூறு தெரிவிக்கல. ஆனா உன் அண்ணனுக்கு குழந்தையே பிறக்காதுன்னு நீ எப்படி இவ்வளவு உறுதியா சொல்ற?” என்றான்.

நடிகர் சிவாஜி நடிப்பே, நிலாவின் முன் தோற்றுப்போகும் படி, அப்படி ஒரு நடிப்பை நடித்த நிலா, தன் கண்கள் இரண்டையும் ரத்த சிவப்பாக வைத்துக் கொண்டு, “என் அண்ணனுக்கு, நடந்த கார் விபத்தால், அவருக்குக் குழந்தை பாக்கியம் இல்லாம போச்சு. இதை டாக்டரும் சொல்லிட்டாங்க. இதுக்காக எந்த வித சிகிச்சை எடுத்தாலும் அது சரியாகாது. என் குழந்தையைத் தான் அவரோட குழந்தையா வளர்க்கணும்னு விதி இருந்தால், அதை யாராலும் மாற்ற முடியாது” என்றாள்.

விதி நினைத்ததா இல்லை இவள் நினைத்தாளா! எது ஒன்றோ, ஆனால் நிலவனுக்கும் ரோஜாவுக்கும் நடுவே நடக்கும் விளையாட்டில் சூத்திரதாரி என்னவோ இந்த நிலா தான்.

“ம்ச்... அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை நிலா. ஆக்ஸ்போர்ட்ல படிச்ச பொண்ணு நீ. உனக்குத் தெரியாதா, இந்த நவீன காலத்தில் எது வேண்டுமானாலும் சாத்தியம் தான். விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ந்துடுச்சு” என்று அவன் சொல்லிக் கொண்டே போக, தன் பேச்சுக்கு, சிவா தலையாட்டாததை நினைத்து உள்ளுக்குள் அவ்வளவு கோபம் வந்தது நிலாவுக்கு.

இழுத்துப்பிடித்தக் கோபத்துடன், “நீங்க பண்ண வேலைக்கு நான் உங்கக்கிட்ட பேசுறதே பெரிய விஷயம் சிவா. முன்னப்பின்ன பார்த்திராத தங்கச்சிக்காக என்னைத் தூக்கிப்போட்டு போயிட்டீங்க. இப்ப குழந்தைக்காகத் தானே என்கிட்ட வந்துருக்கீங்க?” என்றாள் அவனை முறைத்தபடி.

தனது நெற்றியை நீவிவிட்டவன், “நிச்சயம் அந்த மாதிரி ஒரு எண்ணம் எனக்குக் கிடையாது நிலா” என்றான்.

“பொய் சொல்லாதீங்க... ஒரு மாசத்துக்கும் மேல, நீங்க எனக்கு ஒரு கால் கூட பண்ணல” என்று வெடித்து சிதறினாள்.

“நீ கோபமா இருப்பன்னு தான், நான் உன்னைக் கூப்பிடல நிலா. கொஞ்ச நாள் போனா உன் கோபமும் தணியும்னு நினைச்சேன்” என்று சிவா மிகவும் இறங்கிப் போய் பேசினான்.

நிலா தன் பிடியில் நிற்க ஒரு அளவுக்கு மேல் பொறுக்க முடியாதவன், “உன் அண்ணனுக்குக் குழந்தை பிறக்காதுன்னு நீ நினைக்குற... ஆனா உன் அண்ணன் குழந்தை தான் இப்ப என் தங்கச்சி வயித்துல வளருது” என்ற உண்மையை போட்டு உடைத்தான்.

அதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தவள், தன் திட்டங்கள் அனைத்தும் வீணாவதைக் கண்டு எரிச்சல் அடைய, கோணல் புத்தியுடன் கோணலாக நடக்கும் நிலாவுக்கு, தன்னைப் போலவே வனரோஜாவும் ஏமாற்றுகிறாளோ என்ற ஐயம் வந்தது.

“என்ன சொல்றீங்க? அந்த வனரோஜா ப்ரெக்னன்ட்டா இருக்காளா? அப்படி இருந்தாலும், எதை வச்சி அது என் அண்ணன் குழந்தைன்னு சொல்றீங்க?” என்று உதடு துடிக்கப் பேசினாள்.

அவள் கேட்ட தொணியைப் புரிந்துகொள்ளாத சிவா, “ரோஜாவுக்குமே இப்ப தான் இந்த விஷயம் தெரிஞ்சது. ஏதோ ஒன் நைட் ஸ்டாண்ட் அது இதுன்னு சொல்றா. ஆனா ஒன்னு நிலா, தப்பு என் தங்கச்சி மேலையும் தான் இருக்கு. அதனால் தான் நிலவனை ஒன்னும் சொல்லாமல் நானும் அமைதியா இருக்கேன்” என்றான்.

நிலாவின் மூச்சுக் காற்றில் அவ்வளவு வெக்கை அடித்தது. அவளது அகத்திலோ அவ்வளவு சினம்.

இப்போது வெளிப்படையாகவே, “என்ன தான் ஒன் நைட் ஸ்டான்ட்டா இருந்தாலும், என் அண்ணனுக்குக் குழந்தை பாக்கியமே கிடையாதுன்னு, உலகில் உள்ள தலைசிறந்த டாக்டர்ஸ் எல்லாரும் சொல்லிட்டாங்க. அப்படி இருந்தும், உங்க தங்கச்சிக்கு எவ்வளவு திமிர் இருந்தா, வேறு ஒருத்தன்கிட்ட வயித்தை நிரப்பிக்கிட்டு வந்து அதுக்குக் காரணம் என் அண்ணன் தான்னு சொல்லுவா?” என்று நரம்பில்லாத கந்தக நாக்கால் வார்த்தைகளைக் கூர்மையாக்கி, அபாண்டமாகப் பேசினாள்.

அவளது பேச்சில் வெகுண்டெழுந்த சிவாவோ, விருட்டென்று தன் இருக்கையில் இருந்து எழுந்தவன், “என் தங்கச்சியைப் பத்தித் தெரியாம எதுவும் பேசாத நிலா” என்றவன் அவளை அடிக்கவே கையோங்கி விட்டான்.

பின் தான் இருக்கும் இடம் கருதி பல்லைக் கடித்துக்கொண்டு, கையை மடக்கியவன், “வாயில் வர்றது எல்லாம் வார்த்தைன்னு பேசாத. இந்த பேச்சை எல்லாம் உன் அண்ணன் பேசுவான்னு நான் நினைச்சேன். ஆனா நீ.. நீ பேசுவன்னு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கல” என்றான் பேச்சில் தடுமாற்றத்துடன்.

‘தங்கை தான் முக்கியம் நீ வேண்டாம் என்று முதலில் பேசியவர் தானே! இப்போது தன் கையை மீறிப்போய்விடுவாரோ’ என்று நேரம் கடந்து யோசித்த நிலா, “நீங்க என்னைத் தப்பா புரிஞ்சிக்காதீங்க சிவா...” என்று அவள் சொல்லும் போதே, இடையிட்டவன், “நான் ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோ நிலா, இந்தக் குழந்தை உங்க குடும்பத்து வாரிசு தான். நீங்க டிஎன்ஏ டெஸ்ட் கூட எடுக்கோங்க. உன் அண்ணன் பண்ண தவறுக்கு எல்லாம், நிச்சயம் இந்தக்குழந்தை வந்து கேள்வி கேட்கும்” என்றான் சிவந்த முகத்துடன்.

தனது வலது கையால், அவனது கையைப் பற்றிய நிலா, தன்னுடைய இன்னொரு கையால் தன் தலையைப் பிடித்து, “எனக்கு முடியல சிவா, ப்ரெக்னன்ட்டா இருக்குறதுனால, நான் ரொம்ப டென்சன் ஆகி, ஏதேதோ பேசிடுறேன். இப்ப எனக்குத் தலை வேற சுத்துது” என்றாள் மயங்கியக் குரலில்.

அதுவரை ஆவேசமாகப் பேசிக்கொண்டிருந்த சிவாவோ, தன் கோபத்தை எல்லாம் நொடியில் மறந்து, அவள் பக்கம் வந்து அவளைத் தன் தோளில் சாய்த்துக் கொண்டவன், “நிலாம்மா என்னடா ஆச்சி?” என்றான் கொஞ்சலாக.

“ப்ரெக்னன்ட் ஆகி ஒரு மாசத்துக்கும் மேல ஆகிடுச்சி சிவா, ஆனா இந்த தலைசுத்தல், வாந்தி, மயக்கம் மட்டும் விடவே மாட்டேங்குது” என்று எப்போதும் போல், ‘தான் ஒரு மாதத்திற்கும் மேல் கர்ப்பம்’ என்ற வார்த்தையை சிவாவின் மனதில் ஆழமாகப் பதியவைக்க வேண்டி, வார்த்தையில் அழுத்தத்தைக் கூட்டிப் பேசினாள்.

அவளது தலையைத் தடவியவன், “முதல் மூணு மாசத்துக்கு அப்படித்தான் இருக்கும்னு நான் கேள்விப்பட்டு இருக்கேன் நிலா. சரி வா நாம டாக்டரைப் பார்க்கலாம்” என்று கூறி அவளை அழைத்தான்.

“இல்ல அதெல்லாம் வேண்டாம் சிவா. நான் ஏற்கனவே பார்த்துட்டேன்” என்றாள் மறுப்பாக.

“ஆமாம் நான் கேட்கணும்னு நினைச்சேன். நீ எங்க செக்அப் போற?” என்றான் கேள்வியாக.

கொஞ்சம் தடுமாறியவள், “அது... அண்ணன் எனக்காக ஸ்பெஷலா டாக்டரை ஏற்பாடு பண்ணி இருக்கார். குழந்தை பிறக்குறது வரைக்கும், அவங்க என்னை மட்டும் தான் கவனிச்சிக்கப் போறாங்க” என்றாள்.

“சரி அவங்க கிளினிக் எங்க இருக்கு...” என்று அவன் கேட்கும் போதே, அவன் மீது நன்றாக சாய்ந்தவள், “எனக்கு உங்கக்கூட பேசுறதுல கொஞ்சமும் விருப்பம் இல்லை தான் சிவா. இருந்தாலும் உங்க மேல காதலை வச்சிட்டேன். அது உங்களை விட்டுப் போக மாட்டேங்குது” என்று பேச்சை மாற்ற, அவள் நினைத்தது போல, சிவாவிடம் அது வேலை செய்யவும் ஆரம்பித்தது.

“எனக்கும் உன் மேல் அளவு கடந்த காதல் இருக்குது நிலா, நம் காதல் என்றுமே சிதைந்து போகாது” என்றான் உருக்கமான குரலில்.

இப்போது நன்றாக நிமிர்ந்து அமர்ந்தவள், “உங்க தங்கச்சி இதை ஏன் என் அண்ணன் கிட்ட இன்னும் சொல்லாம இருக்காள்?” என்றாள் வனரோஜா கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சுட்டிக்காட்டி.

“அவளுக்கும் உன் அண்ணனுக்கும் தீர்க்கப்படாத கணக்கு ஏதாவது இருக்கலாம். சரி அதைவிடு. ரோஜா ப்ரெக்னன்ட்டா இருக்கும் விஷயம் உன் அண்ணனுக்குத் தெரியக்கூடாது. உன்னை நம்பலாம் தானே” என்றான் அவள் தோளில் கைப்போட்ட படி.

“நிச்சயம் நம்பலாம் சிவா. இது என் அண்ணனுக்குத் தெரியவராது” என்றவள் வன்மமாக, ‘குழந்தை வந்த இடமும் தெரியாது, போன இடமும் தெரியாது. அடியே வனரோஜா, குழந்தையைக் காரணம் காமிச்சு மொத்த சொத்தையும் உன் கைக்குள்ள போட்டுக்கலாம்னு பார்க்காத. என்கிட்ட இருந்து உன் குழந்தையை எப்படி காப்பாத்துறன்னு நானும் பார்க்குறேன்’ என்று நினைத்துக் கொண்டாள்.

சூனியம் என்ற வார்த்தை மூடத் தனமாகத் தெரிந்தாலும், பாழடைந்த பிற்போக்கு எண்ணம் கொண்ட மனதுள்ளவர்கள் உண்மையிலே சூனியக்காரர்கள் தான். அதில் இந்த நிலாவும் ஒன்று.

தொடர்ந்து பேசியவள், “ரோஜாவின் மனநிலைக்கு நீங்களும் மதிப்புக் கொடுங்க சிவா. அவள் உங்கமேல மிகவும் நம்பிக்கை வச்சி தான் இந்த விஷயத்தை உங்கக்கிட்ட சொல்லி இருக்காள். அதனால, இந்த விஷயம் எனக்கு தெரிஞ்சிருச்சுன்னு அவளுக்குத் தெரியக்கூடாது” என்றாள் தன் மனதில் திட்டத்தை தீட்டியபடி.

“என்ன சொல்ற நிலா. ரோஜா என் மேல் கோபம் கொள்வாளா?” என்றான் சோகமாக.

“அதெல்லாம் இல்ல சிவா, என்கிட்ட இந்த விஷயம் பத்திரமா இருக்கும். நீங்களும் எனக்குத் தெரிஞ்சதா, அவள் கிட்ட சொல்லாதீங்க. வேணும்னா, இந்த விஷயம் என் அண்ணனுக்குத் தெரியவராதுன்னு நான் சத்தியம் செய்யுறேன்” என்றவள் சிவாவின் உள்ளங்கையில் தனது கையை வைத்தாள்.

‘எனக்கும் என் அண்ணனுக்கு எதிரா திட்டம் போடுறியாடி... இரு உன் அண்ணனை வச்சே உன் கதையை முடிக்குறேன்’ என்று நினைத்தவள், வன்மம் மொத்தத்தையும் மனதினுள் பத்திரமாக ரோஜாவின் மேல் தேக்கி வைத்தாள்.

*****

‘இது மெடிக்கல் ரிப்போர்ட் தானே, இதைப் பார்க்குறதுனால ஒரு பிரச்சனையும் இல்ல’ என்று நினைத்த வனரோஜா, தன் அண்ணனின் குழந்தை என்ற ஆசையில், அந்த ஒட்டப்படாத கவரில் இருந்த ஸ்கேன் ரிப்போர்ட்டை வெளியே எடுத்தாள்.

முதலில் ஸ்கேனைப் பார்த்தவள், அதில் சிறியதாக தெரிந்த புள்ளியைப் பார்த்து, தன்னுடையக் குழந்தையும் இப்படித் தானே இருக்கும் என்ற பூரிப்பில், தன் வயிற்றைத் தடவியவளுக்கு திடீரென்று ஒரு யோசனை.

‘நேத்து தான் ஸ்கேன் எடுத்ததா தேதி போட்டு இருக்கு. ஆனா இதைப் பார்த்தா எட்டு மாதக்கரு மாதிரி தெரியலையே! இதுப்படி பார்த்தால், பேபி இப்போதைக்குத் தான் பார்ம் ஆகியிருக்கு’ என்று நினைத்தவள், ரிப்போர்ட்டைப் படிக்க ஆரம்பித்தாள்.

அதனைப் படித்தவளுக்குத் தன் புருவம் உயர்ந்தது. அவளது மனது படபடவென்று அடிக்க, அவளது காதில் அன்று தன் அண்ணன் சிவா சொன்ன, “நிலாவைப் பார்த்து ஒரு மாசத்துக்கும் மேல ஆகிடுச்சு ரோஜா” என்ற வார்த்தைகள் தான் அருவமாகக் கேட்டுக்கொண்டே இருந்தது.

அவள் அடுத்து யோசிக்கும் முன்னே, நிலவன் தன் பிஏவுடன் பேசிக்கொண்டே அங்கு வர, அவன் சத்தம் கேட்டு, கையில் இருந்த நிலாவின் ரிப்போர்ட்டைக் கீழே போட்டாள் ரோஜா.

சிதறிய காகிதங்களுக்கு நடுவே, தன் கைகளைப் பிசைந்தபடி சிலையாகி நின்றாள் வனரோஜா.






 

NNO7

Moderator
அத்தியாயம் – 24

நிலவனின் காலடித் தடம் ரோஜாவிற்குக் கேட்க, அதில் பதற்றம் கொண்டவள், கீழே கிடந்த காகிதங்களை வேகமாக எடுத்துத் திரும்பவும் அந்தக் கவரில் வைத்து, அதனை மேஜையில் வைத்துவிட்டு, அங்கிருந்து ஐந்தடிக்கு அப்பால் சென்று தள்ளி நின்று கொண்டாள்.

முகத்தை சாதாரணமாக வைத்துக்கொள்ள அவள் பெரும்பாடு பட்டுத் தான் போனாள். சரியாக அங்கே வந்த நிலவனோ, அவளின் முகத்தைப் பார்த்து, “நான் பேபி அடாப்ட் விஷயம் சொன்னதை யோசிச்சுப் பார்த்தியா?” என்றான் தன் ஒரு புருவத்தை மட்டும் உயர்த்தியபடி.

ஆம், இல்லை என்று மாறிமாறித் தன் தலையை ஆட்டிவைத்தவளைப் பார்த்து முறைத்தவன், தன் இடையில் கையைக் குற்றி, “இப்ப நீ என்ன தான் சொல்லவர்ற?” என்று எரிச்சலுடன், கேட்டுக்கொண்டே, தன் அருகில் நிற்கும் பிஏவைத் திரும்பிப் பார்த்தவன், “நீ இன்னும் போகலையா?” என்று கத்தினான்.

“இதோ... இதோ போயிடுறேன் சார். இனி இந்தத் தப்பு வராம நான் பார்த்துக்குறேன்” என்று படபடப்புடன் சொல்லிவிட்டு, அங்கிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று அடித்துப்பிடித்து ஓடினான்.

அதற்குள் கொஞ்சம் தன்னை சமாளித்துக் கொண்ட வனரோஜாவோ, “என்னாச்சி நிலவன்? எதுக்காக இவ்வளவு டென்ஷனா இருக்கீங்க?” என்று கேட்டவளின் பார்வை என்னவோ மேஜையில் இருந்த நிலாவின் ஸ்கேன் ரிப்போர்ட்டில் தான் இருந்ததது.

பின் நிலவன் இவளைப் பார்க்க, தன் பார்வையை மாற்றிக்கொண்டாள்.

“ஒன்னும் இல்ல கம்பெனில சின்ன பிரச்சனை. ஆமாம் நீ காலையிலையே ஹாஸ்பிடல் கிளம்பிப் போனியே! இப்ப இங்க இருக்க” என்று வினாவினான்.

“எனக்கு இன்னைக்கு நைட் டியூட்டி அதான். ஏதோ மெடிக்கல் ரிப்போர்ட் உங்களுக்கு வந்திருக்கும் போல, வாட்ச்மேன் அதை என்கிட்டக் கொடுத்தார். நான் இப்ப தான் அதை வாங்கிட்டு உள்ள வரேன். அதுக்குள்ள நீங்க வந்துட்டீங்க” என்றவள், முகத்தில் எந்த ஒரு பாவனையையும் காட்டாமல், சாதாரணமாகப் பேசுவது போல் பேசிவைத்துவிட்டு, நிலவனின் முகத்தில் தோன்றிய பாவனைகளைத் தான் உற்று நோக்கியபடி இருந்தாள்.

அவள் வாக்கியங்களைக் கேட்ட நிலவன் முகத்தில் அதிர்ச்சியும் இல்லை கோபமும் இல்லை. மாறாக, “ரிப்போர்ட் எங்க இருக்கு?” என்று சாதாரணக் குரலில் கேட்டு வைத்தான்.

அதில் ரோஜா தான் சிறிது அதிர்ச்சி அடைந்தாள்.

“அதோ அந்த மேஜையில் தான் இருக்கு” என்று அது இருந்த இடத்தைக் கைக்காட்டினாள்.

அவனோ அதனை எடுத்தக் கொண்டு தன் அறையை நோக்கிச் செல்லப்போக, அவனை தடுத்து நிறுத்தியது ரோஜாவின் குரல், “நிலவன், இது யாரோட ரிப்போர்ட். உங்களோடதா?” என்று அந்தக் கவரின் மேலே எழுதி இருக்கும் நிலாவின் பெயரைக் கூட தான் படிக்கவில்லை என்பது போல் அவனிடம் கேட்டாள்.

இப்போது திரும்பிப்பார்த்து, அவளை முறைத்தவன், “யாரோடதா இருந்தா உனக்கு என்ன?” என வள்ளேன்று விழுந்தான்.

“அச்சோ எதுக்காக இவ்வளவு கோபப்படுறீங்க?” என்று அவளே கேள்விக்கேட்டு, “கம்பெனில பிரச்சனைன்னு சொன்னீங்களே அதனாலா தானோ!” என்று அவளே பதிலும் சொல்லிக் கொண்டாள்.

அவன் எதுவும் பேசாமல் நிற்க, “சரி ப்ரீயா இருந்தீங்கன்னா, சரக்கு அடிக்கலாமா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டாள்.

அவள் வாக்கியத்தை உணர்ந்து கொள்ளாமல், தன் விழிவிரித்து, “இப்ப என்ன சொன்ன? கம் அகைன்?” என்றான் பாதி தமிழும், பாதி ஆங்கிலமுமாக.

“சரக்கு அடிக்கலாமான்னு கேட்டேன்?” என்றாள் சத்தத்தைக் கூட்டி, அவனுக்குக் கேட்கும் வண்ணம்.

தன் நாடியைத் தேய்த்தபடி, அவளை நக்கலாகப் பார்த்தவன், “நல்ல குடும்பத்துப் பெண், இப்படி எல்லாம் கேட்கலாமா?” என்றான்.

தன் கையைப் பிசைந்தபடி, “வேண்டாம்னா, வேண்டாம்னு சொல்லுங்க. அதுக்காக இப்படி நக்கலா பேசுற வேலை எல்லாம் வேண்டாம்” என்றாள் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டபடி.

உதட்டை வளைத்துச் சிரித்தவன், “எனக்கு ஓகே தான், நீ நெக்ஸ்ட் சாப்டர் போகலாமான்னு கேட்காத வரை” என்றான்.

தன்னையும் அறியாமல் சிவக்கும் தன் முகத்தை வேறு பக்கமாக திருப்பிக்கொண்டவள், “அன்னைக்கு எது நடந்து இருந்தாலும், அது அதோடையே முடிஞ்சி போச்சு. நீங்க திரும்பவும் அதைப் பத்திப் பேச வேண்டாம் மிஸ்டர் நிலவன்” என்றாள்.

வனரோஜாவின் அருகே நெருங்கி வந்தவன், அவள் முகத்திற்கு நேராகக் குனிந்து, “ஏன்? அதைப் பத்திப் பேசுனா, உனக்கு டெம்ப்ட் ஆகுதா?” என்றான் அவளை வம்பிழுக்கும் நோக்கோடு.

கொஞ்சம் பின்னே தள்ளி நின்றவள், “உங்களுக்கு டெம்ப்ட் ஆகுறதுனால தானே அதைப் பத்தி பேசுறீங்க” என்று அவனுக்குத் திருப்பிக் கொடுத்தவள், “இப்ப வரீங்களா வரலையா?” என்று கேட்டாள், தன் கையைக் கட்டிக்கொண்டு.

தன் தலையை ஆட்டியவன், “ஸ்விம்மிங் பூல் பக்கம் ரெடி பண்ண சொல்றேன். அஞ்சு நிமிஷம் கழிச்சு வா” என்று சொல்லிவிட்டு சென்றான்.

அவன் சொன்னது போலவே ஐந்து நிமிடம் கடந்து சென்றவள், அங்கே எல்லாம் ஏற்பாடாகி இருப்பதைப் பார்த்துவிட்டு, நிலவனுக்கு அருகே இருந்த இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டாள்.

ஆனால் ரோஜா குடிப்பதற்காக அங்கு செல்லவில்லை. நிலவனிடம் சில விஷயங்களை வாங்க மட்டுமே அங்கு சென்றாள்.

ஒரு கோப்பையில் சிறிது மதுவை ஊற்றி அவளது கையில் நிலவன் கொடுக்க, அதனைத் தன் கையில் வாங்கிக்கொண்டவள், ஒரு மிடறு கூட அருந்தவே இல்லை.

ஆனால் நிலவன், இதனை எல்லாம் கண்டுகொள்ளவே இல்லை. அரசாங்கத்தில் இருந்து வந்த இருமல் டானிக்குக்கு உண்டான டெண்டர், கங்கா நிறுவனதிற்கு சென்றதில் அதிகக் கடுப்பில் இருந்தவன், இதனைப் பார்க்கும் நிலையில் இல்லாமல், வரிசையாக, மூன்று கோப்பைகள் மதுவை தன் வாயில் சரித்திருந்தான்.

மெல்ல தன் பேச்சை ஆரம்பித்த வனரோஜா, “உங்களுக்கு ஹாபின்னு எதுவும் கிடையாதா? பொழுதுபோக்குக்கு என்ன செய்வீங்க?” என்றாள் தன் கன்னத்தில் கைவைத்தபடி.

“ஸ்டாக்கிங்(கண்காணிப்பது)” என்றான் ஒற்றை வார்த்தையில்.

‘ம்க்கும்... இதெல்லாம் ஒரு பொழுதுபோக்கா!’ என்று நினைத்தவள், “என்னுடைய பொழுதுபோக்கு, புக்ஸ் படிப்பது” என்று சொல்ல, “தெரியும். அதான் உன்னைக் கண்காணிக்குறேனே” என்றான் யோசிக்காமல்.

அதில் அனல் தகிக்கும் அஞ்சன விழியால் உறுத்து விழித்தவள், “அப்ப இப்போதைக்கு உங்க பொழுதுபோக்கு நான் தானா?” என்று கேட்டாள்.

“ஆமாம்” என்று சொல்லிவிட்டு, இன்னொரு கோப்பை மதுவை எடுத்துத் தன் வாயில் சரித்தான் நிலவன்.

இதில் ரோஜா புரிந்துகொள்ளாதது, எப்போதும் வேலை வேலை என்று அலைந்து கொண்டிருந்த மனிதன், இப்போது புதியாக தன் வாழ்வில் நுழைந்த ரோஜாவை பார்க்கிறான் என்பது.

வேலை நேரங்களைத் தவிர்த்து, தன் மனதிற்கு இதமான, மற்றும் நெருக்கமான ஒன்றை மனம் தேடி செல்லும். அப்படி ரோஜாவின் மனது புத்தகத்தைத் தேடி செல்ல, நிலவனின் மனதோ, ரோஜாவைத் தேடி செல்கிறதோ?

தனது மூச்சை இழுத்து வெளியேவிட்ட ரோஜாவோ, “சரி உங்கக் கம்பெனில என்ன பிரச்சனை? எதுக்காக கங்கா நிறுவனத்தைத் தோற்கடிக்க இப்படி துடிக்குறீங்க?” என்று கேட்டாள்.

நிலவன் நன்றாக மதுவை அருந்திவிட்டான், இனி கேள்விக் கேட்க பயம் இல்லை என்ற நினைப்பில் அவள் கேட்டாள்.

“பிரச்சனையா? எல்லாமே பிரச்சனை தான். அந்தப்பொம்பள பரணியால எங்க வாழ்க்கையே போயிடுச்சி” என்று தன் நாவுழற சொன்னான்.

தன் தாயைப் பேசியதும் கடுப்பானவள், “அவங்க அப்படி உங்களை என்ன செஞ்சிட்டாங்க?” என்றாள்.

“அது செஞ்சது எல்லாமே தப்பு தான். போயும் போயும் வேலை வெட்டி இல்லாத பரதேசிப்பயல காதலிச்சது முதல் தப்பு. மொத்த கங்கா நிறுவனத்தையும், அவங்கக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது இரண்டாவது தப்பு. நான் இதுக்கெல்லாம் பழிவாங்காம விடவேமாட்டேன்” என்றான் தன் கையில் இருந்த மதுக்கோப்பையை விசிறி அடித்தபடி.

அவன் பேசுவதைக் கேட்கக் கேட்க, ரோஜாவின் உள்ளம் கொதித்தது. தன் தாய் மற்றும் தந்தையை நிலவன் சகட்டுமேனிக்கு அர்ச்சனை செய்துகொண்டிருக்க, அவனிடம் விஷயத்தை வாங்க, தன் வாயை மூடிக்கொண்டிருக்கும் கட்டாயத்தை அவள் மிகவும் வெறுத்தாள்.

பல்லைக் கடித்த படி, தன் கோபத்தை அடக்கிக்கொண்டு இருந்தவள், “கூடிய சீக்கிரம், கங்கா நிறுவனத்தின் பொறுப்பை நான் ஏத்துக்கிடலாம்னு நினைக்குறேன்” என்றாள்.

அதற்கு சிரித்தவன், “உன்னை நம்பி எப்படி அந்தம்மா பொறுப்பைக் கொடுப்பாங்க?” என்றான்.

“அது பிரச்சனை இல்ல. அவங்க பொறுப்பைக் கொடுத்தா, நீங்க என்கிட்ட பிரச்சனை செய்வீங்களா?” என்றாள்.

“அவங்க பொண்ணு தானே நீ. பரணியா இருந்தா என்ன ரோஜாவா இருந்தா என்ன? எனக்கு ஆக மொத்ததுல, அந்த கங்கா நிறுவனம் அழியணும்” என்று தன் தாடை இறுக ராட்சசன் போல் பேசினான்.

கோபத்தைக் கட்டுப்படுத்தி, தனது கண்கள் இரண்டையும், இறுக்கமாக திறந்து மூடியவள், ‘எனக்கு எதிராகவும் இருப்பீங்க சரி, என் வயிற்றில் வளரும் உங்கக் குழந்தைக்கும் எதிரா இருப்பீங்களா நிலவன்!’ என்று தன் மனதிற்குள் நினைத்தவள், வேறு எதுவும் பேசவில்லை.

“நிலாவுக்குக் குழந்தை பிறந்ததும் சொத்தில் உன் பேரில் பாதி என்பெயரில் பாதி வந்திடும். உன்னோட பாதியை நீயே வச்சிக்கோ. என் பாதியை என் தங்கச்சிக்கு நான் கொடுத்துப்பேன். அதனால இதை வச்சி, கங்கா நிறுவனத்துக்கு எதிரா நான் வரக்கூடாதுன்னு, உன்னால் என்னை ப்ளாக் மெயில் முடியாது” என்று நிலவன் பேசிக்கொண்டே செல்ல, தன் வயிற்றைத் தடவியவள், ‘ஆனா இந்தக் குழந்தையை வச்சி உங்களை லாக் பண்ணமுடியும் தானே நிலவன்’ என்று நினைத்துக் கொண்டாள் வனரோஜா.

“இங்க வெளிநாட்டில் எல்லாம் சாதாரணம் தான். இருந்தும் நிலா ப்ரெக்னன்ட்டா இருக்குறதைக் கேட்டு, உங்களுக்குக் கோபம் வரலையா நிலவன்? பாதுக்காப்பு இல்லாம இந்த நிலையில் வந்து நிற்குறது நல்லது கிடையாதே!” என்று அவனிடம் நிலாவைப் பற்றி ஏதேனும், விஷயம் கிடைக்குமா என்ற நோக்கில் போட்டு வாங்கப்பார்த்தாள் வனரோஜா.

ஆனால் அவ்வளவு போதையிலும் தன் தங்கையின் ரகசியத்தைக் காத்த நிலவனோ, “என் தங்கச்சி மேல், குற்றம் சுமத்துற மாதிரி எதுவும் பேசாத ரோஜா. எனக்கு அது சுத்தமா பிடிக்கல” என்றான் அடிக்குரலில்.

“ஐயோ நான் அப்படி எதுவும் சொல்ல வரல நிலவன். உங்க தங்கச்சிக்கு...” என்று ஏதோ சொல்லப் போனவளைத் தடுத்தவன், “நிலாவைப் பத்தி, இனி நீ எதுவும் பேசக்கூடாது” என்றான்.

‘ம்ச்.. தேவை இல்லாம இங்க வந்து உட்கார்ந்து என்னுடைய நேரம் போனது மட்டும் தான் மிச்சம். நிலாவைப் பத்தின விஷயத்தை சிவா அண்ணன்கிட்ட சொல்லி, அவளோட முகத்திரையை நானே கிழிக்குறேன்’ என்று நினைத்துவிட்டு, ஒரு மிடறு கூட அருந்தாமல் இருந்த மதுக்கோப்பையை மேஜையில் அப்படியே வைத்துவிட்டு, இருக்கையில் இருந்து எழுந்தாள்.

பின் ஒரு எட்டு நடந்து, நிலவனைத் தாண்டி செல்லப்போனவளின் கையைப் பிடித்து இழுத்த நிலவன், “ரொம்ப லோன்லியா இருக்கு. உன்கூட பேசுனதுல கொஞ்சம் ரிலாக்ஸ் கிடைக்குது. இன்னும் மனசு நல்லா ரிலாக்ஸ் ஆக, நாம நெக்ஸ்ட் சாப்டர் போகலாமா ரோஜா?” என்று போதையில் கிறக்கப் பார்வையுடன் அவளிடம் கேட்டான்.

(சாரி டியர்ஸ், இன்னைக்கு புத்தாண்டு இருக்குறதுனால, வேலை இருக்கு. அதனால் ஒரே ஒரு யூடி தான் ப்ளீஸ் என்னை மன்னிச்சு... நாளைக்கு உங்களை இரண்டு யூடிக்களுடன் சந்திக்குறேன். நன்றி. அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்)
 
Last edited:

NNO7

Moderator
அத்தியாயம் – 25

நிலவன் ரோஜாவின் கையைப் பிடித்து இழுக்கும் போதே, அவன் மீது விழுந்திருந்தாள் ரோஜா.

இதில் அவன் சொன்ன செய்தியைக் கேட்டு, விழி விரித்து அவனைப் பார்த்தவள், அவன் கண்கள் போகும் திசையைப் பார்த்து தீச்சுட்டது போல், அவன் மீது இருந்து எழுந்து, “இது போல் எல்லாம் என்கிட்ட பேசவேண்டாம்னு நான் அப்போதே சொன்னேன் தானே. பக்கத்துல வரக்கூடாதுன்னு ரூல்ஸ் போட்டதும் நீங்க தானே!. இப்ப என்னடானா இவ்வளவு கேவலமா என்கிட்ட பேசுறீங்க” என்று கத்திவிட்டு, அங்கிருந்து ஓடி சென்றவளைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்தான் நிலவன்.

பின் அவள் அருந்தாமல் வைத்துச் சென்ற மதுக்கோப்பையை எடுத்து, “உன் அண்ணன் ஒரு முட்டாள். அவனை விட நீ அடிமுட்டாளா இருக்க ரோஜா” என்று வாய்விட்டு சொல்லி, நக்கலாக சிரித்தான்.

தன் அறைக்குள் வேகமாக ஓடி வந்தவள், தன் நெஞ்சில் கைவைத்து, “அப்பாவாகப்போறோம்னு ஆயிரம் கனவுகளோட இருக்கும் என் அண்ணன் நிலை?” என்று வாய்விட்டுப் பேசியவள், தன் தலையில் கைவைத்துக் கொண்டாள்.

‘இல்ல... நிலா போடும் திட்டத்துல, என் அண்ணன் நிச்சயம் மாட்டமாட்டான்’ என்ற நினைப்போடு, வேகமாக சிவாவிற்கு அலைபேசி மூலம் அழைப்பு விடுத்தாள் ரோஜா.

அப்போது தான் நிலாவை சந்தித்து விட்டு, காரில் தன் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த சிவா, ரோஜா அழைத்ததும், காதில் ப்ளூடூத்தை மாட்டியவன், “ஹேய் ரோஜா, நான் இன்னைக்கு ரொம்ப நல்ல மனநிலையில் இருக்கேன்” என்று சொன்னவன் குரல் துள்ளலாக வந்தது.

அதனைக் கேட்ட ரோஜாவிற்கு கண்களில் நீர் பொங்க, “உன்கிட்ட பேசணும் அண்ணா. இன்னைக்கு இவினிங் நான் வீட்டுக்கு வரேன்” என்றாள்.

அவள் குரலில் இருந்தக் கவலையை உணர்ந்து கொள்ளும் நிலையில் சிவா இல்லை.

மகிழுந்தை இயக்கிக்கொண்டு இருந்தவன், நிலா தன்னிடம் பேசியதை நினைத்துக் கனவுலகில் மிதந்து கொண்டிருந்தான்.

ரோஜா சொன்னதும், “ஆங்... சரி ரோஜா. அம்மாக்கிட்ட இந்த விஷயத்தை நீ தான் பேசணும். அம்மாவுக்கு நிலாவைப் பிடிக்காது. நீ தான் நிலாவை பார்த்துக்கணும். சரி நான் வைக்குறேன்” என்று பேசிவிட்டு வைத்தவன் மீது, ரோஜாவுக்கு அவ்வளவு கோபம் வந்தது.

‘இந்த நிலாவுக்கு ஒன்னுன்னா, இந்த நிலவனும் சரி, சிவாவும் சரி ரொம்பத் தான் இறங்கிப் போறாங்க’ என்று நினைத்து எரிச்சல் அடைந்தவள், அதிக தலைவலியைத் தாங்கிக் கொள்ள முடியாமல், அப்படியே கட்டிலில் படுத்துத் தூங்க ஆரம்பித்தாள்.

இரவு, நிலவன் அழைத்ததும் தான் அடித்துப் பிடித்து எழுந்தாள்.

“அச்சோ இவ்வளவு நேரம் ஆகிடுச்சா!” என்று பரபரப்புடன் அவள் கட்டிலில் இருந்து எழுந்திருக்கப் பார்க்க, ஆனால் அவளால் எழுந்திருக்க முடியவில்லை.

அதிக தலைவலியால் அவளுக்கு மயக்கம் வருவது போல் இருக்க, அப்படியே படுக்கையிலையே மயங்கிச் சரிந்தாள்.

அதில் பதற்றம் அடைந்த நிலவன், “ரோஜா... ரோஜா..” என்று அழைத்தபடி அவளது கன்னத்தைத் தட்டினான்.

அப்போது ரோஜாவின் அறைப்பக்கம் அவளை நோட்டமிட வந்த நிலாவோ, மயங்கிக் கிடக்கும் ரோஜாவையும், அவளை மடிதாங்கி அமர்ந்திருந்த நிலவனையும் பார்க்க, அவளுக்குப் பற்றிக்கொண்டு வந்தது.

வேகமாக நிலவன் பக்கம் வந்தவள், “தன்னோட புது டிராமாவை ஆரம்பிச்சுட்டா அண்ணா” என்று மயங்கிய நிலையில் கிடந்த ரோஜாவைப் பார்த்து வெறுப்பாகப் பேசினாள்.

நிலாவைப் பார்த்துப் பல்லைக்கடித்த நிலவனோ, “ஏதாவது உழறாமல், முதல்ல நம்ம டாக்டருக்குக் கால் பண்ணு” என்றவன், மேஜையில் இருந்த தண்ணீர் க்ளாசை எடுத்து, ரோஜாவின் மீது தெளித்தான்.

அதனைக் கண்ட நிலா ஆத்திரத்தின் உச்சியில், “ச்சீ... எவ்வளவு கேவலமா நடிக்கிறாள் பாரு அண்ணா. உன்கிட்ட ஒட்டி உறவாடுறதுக்குத் தான் இத்தனையும் பண்றாள். உடம்பு சரியில்லாதது மாதிரி நடிச்சு, உன்னை இவள் பக்கமா கவர்வதற்கு முயற்சி செய்யுறா” என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை, ரோஜாவின் மீது அடுக்கிக்கொண்டே சென்றாள் நிலா.

“ம்ச்... கொஞ்சம் உன் வாயை மூடு நிலா. ரோஜாவுக்கு நிஜமாவே உடம்பு சரியில்ல” என்று சொல்லிக்கொண்டே, அவன் ரோஜாவின் இடையில் கைவைத்துத் தூக்கப்போக, உடனே பதறிய நிலா, “எங்கப்போற? இரு நானே டாக்டரைக் கூப்பிடுறேன்” என்று சொல்லிவிட்டு, வேகமாக மருத்துவருக்கு அழைத்தாள்.

மயங்கிக்கிடந்த ரோஜாவின் கன்னத்தை, நிலவன் மெதுவாக வருடிவிட, இதனைப் பார்த்த நிலாவுக்குத் தான், தன் நெஞ்சில் இடி வந்து இறங்குவதைப் போல் இருந்தது.

‘இல்ல... இல்ல... இவன் என்னோட நிலவன் அண்ணன் இல்ல’ என்று பைத்தியம் பிடித்தவள் போல் நிலவனை முறைத்துக் கொண்டிருந்தவள், “அண்ணா இப்ப என்ன ஆகிப்போச்சுன்னு உன் முகத்தை இப்படி வச்சிருக்க? அவள் நிஜமாவே மயங்கிக் கிடந்தாலும், உனக்கு எதுக்கு இவள் மேல இவ்வளவு இரக்கம் வருது” என்றாள் எரிச்சல் நிரம்பியக் குரலில்.

“இங்கப்பாரு நிலா, உனக்கும் ரோஜாவுக்கும் பெருசா எந்த விதப் பிரச்சனையும் கிடையாது. அப்படி இருக்கும் போது, எதுக்காக ரோஜா மீது வெறுப்பை வளர்க்குற?” என்றான்.

“நீ என்ன திடீர்னு இவளுக்கு ஆதரவா பேசிக்கிட்டு இருக்க? அப்படி என்ன வசியம் பண்ணி உன்னை மயக்கி வைத்தாள்?” என்று அளவு கடந்து பேசினாள் நிலா.

“இதென்ன முட்டாள் தனமான பேச்சு நிலா”என்றவன் தன் தாடை இறுக அவளைப் பார்க்க, அவ்வளவு தான் அந்தப் பார்வையில் கப்சிப்பென்று தன் வாயை மூடிக்கொண்டாள் நிலா.

பின் மருத்துவரை அழைக்க அவள் வெளியே செல்ல,தன் மடியில் தலைவைத்திருந்த, ரோஜாவின் நெற்றியில் தன் இதழைப் பதித்தவன், ‘காலம் முழுவதும் இப்படியே இருக்கணும்னு தோணுது ரோஜா. ஆனா, நான் உனக்கு வேண்டாம்’ என்று நினைத்தவன் கண்களின் ஓரம் சிறு கண்ணீர் கசிவு. ஒரு வினாடிக்குள் அதனை உள்ளிழுத்துக் கொண்டவன், வழக்கம் போல், இரும்பில் அடித்த இதயமாய் தன் முகத்தை வைத்துக் கொண்டான்.

ரோஜாவுக்கும் நிலவனுக்கும் இடையே அப்படி என்ன சொல்லப்படாத ரகசியம் உள்ளது என்பதனைக் காலம் தான் உணர்த்தும்.

ஒரு ஆண் மருத்துவர், ரோஜாவை செக்அப் செய்துவிட்டு, நிலவனிடம், “பெருசா எதுவும் இல்லை சார். எதுவும் சாப்பிடாமல் தான் மயங்கி விழுந்துருக்காங்க. சத்து ஊசி போட்டு இருக்கேன். சரியாகிடும்” என்றவன் தான் போட்ட ஊசியின் விவரத்தையும் நிலவனிடம் கூறிவிட்டு, “இன்னும் கொஞ்ச நேரத்துல மேடம் கண் விழிச்சிடுவாங்க சார்” என்று சொல்லிவிட்டு, நிலாவின் பக்கம் திரும்பி, அவளுக்குத் தன் கண்ணை காண்பித்து விட்டு சென்றார்.

தன் அறைக்குச் செல்லப்போன நிலாவை ஆழைத்த நிலவன், “நம்ம பேமிலி டாக்டரைத் தான், நான் உன்னைக் கூப்பிட சொன்னேன். நீ வேற யாரையோ கூட்டிட்டு வந்துருக்க?” என்றான் தன் கையைக்கட்டிக் கொண்டபடி.

“வனரோஜா ஒன்னும் நம்ம பேமிலி கிடையாதே! அதுவும் இல்லாம இந்த டாக்டர் யாரோ கிடையாது. நம்ம கிளினிக்ல வேலை பார்ப்பவர் தான்” என்றாள் தன் தோள்களைக் குலுக்கியபடி.

“இங்கப்பாரு நிலா, வனரோஜா என்னோட மனைவி. அதை உன் நியாபகத்தில் நல்லா வச்சிக்கோ..” என்று அவன் சொல்லச் சொல்ல, இவள் மனதோ நெருப்பாய் கொதித்துக் கொண்டு இருந்தது.

“மனைவியா! அது வெறும் ரெண்டு வருஷத்துக்கு மட்டும் தானே!” என்றாள் தன் உதட்டைச் சுழித்துக்கொண்டு.

“அது எத்தனை வருஷத்துக்கா இருந்தாலும், இப்ப ரோஜா என்னுடைய மனைவி தான். அண்ணிக்கு உண்டான மரியாதையை, அவளுக்கு நீ கண்டிப்பா தந்தே ஆகணும்” என்று சொல்லிவிட்டு ரோஜா இருக்கும் அறைக்குள் நுழைந்தான்.

அப்போது தான் தன் கண்களைத் திறக்க சிரமப்பட்டுக் கொண்டிருந்தாள் ரோஜா.

அவளருகே வந்தவன், “ஒழுங்கா சாப்பிடக்கூட மாட்டியா? சரியா சாப்பிடாம எதையாவது இழுத்து வச்சிக்கிட்டு, என் மேல பழியைப் போடுறதுக்கு ஏதாவது திட்டம் தீட்டலாம்னு நினைச்சியா” என்று கண்டிப்பான குரலில் அவளைத் திட்டினான்.

அப்போது வேலையாட்களும், அவளுக்கு உணவை வந்து கொடுக்க, எதுவும் பேசாமல் அதனை வாங்கி அவசரமாக உண்டு முடித்தாள்.

பின் அவள் தன் படுக்கையில் இருந்து எழப்போக, அவளின் கையைப் பிடித்துத் தடுத்தவன், “எங்கப்போற?” என்றான்.

“ஹாஸ்பிடல் தான். எனக்கு நேரமாகிடுச்சி” என்றவள் அவன் கையை எடுத்துவிடப் போராடினாள்.

“டாப்லேட் சாப்பிட்டுப் படுத்துத் தூங்கு. இன்னைக்கு நீ எங்கும் போகவேண்டாம். டாக்டர் உன்னை நல்லா ரெஸ்ட் எடுக்கச்சொல்லி இருக்கார்” என்றவன் மாத்திரையை எடுத்து அவள் வாயில் திணித்தான்.

அவளது உதட்டை இவன் விரல் தீண்டியதும், அன்னிச்சையாக அன்று, தீவில் அவளின் இதழோடு, தன் இதழைக் கலக்கவிட்டது தான் நியாபகத்திற்கு வந்தது நிலவனுக்கு.

உடனே அதனைப் புறம் ஒதுக்கியவன், ரோஜாவிற்குப் பருக நீரைகொடுத்தான்.

ஒரு வித மந்திரத்திற்குக் கட்டுப்பட்டவள் போல், அதுவரை அவன் இழுத்த இழுப்பிற்க்கு தலையசைத்துக் கொண்டிருந்த ரோஜாவின், மூலையில் அப்போது தான் மின்னல் வந்து தாக்கியது.

“என்னது? டாக்டர் வந்து என்னை செக்அப் செஞ்சாங்களா? என்ன சொன்னாங்க?” என்றாள் அதிர்ச்சியாக.

“ஆமாம். இன்ஜெக்ஷன் போட்டிருக்கார். சரியா சாப்பிடாம மயங்கி விழுந்துட்டதா சொன்னார். இப்ப மாத்திரையை வேற போட்டு இருக்க, நல்லா தூங்கு” என்று சொல்லிவிட்டு, விளக்கை அணைத்துவிட்டு வெளியே சென்றான்.

மருத்துவர் வேறு எதுவும் சொல்லிவிடவில்லை என்ற நிம்மதியில், மாத்திரை எடுத்துக்கொண்ட மயக்கத்தில் ரோஜாவும் அப்படியே கண்ணசந்தாள்.

வரவேற்பு அறையில் அமர்ந்து தன் அலைபேசியை நொண்டிக்கொண்டு இருந்த நிலாவோ, அங்கே வந்த நிலவனைப் பார்த்து, “அண்ணா, நான் ப்ரெக்னன்ட்டா இருக்கேன். அதுக்காக நீ என்னைத் தலையில் தூக்கி வச்சிக் கொண்டாட வேண்டாம். ஆனா, என்னைத் திட்டாமல் இரு” என்றாள் சோகமானக் குரலில்.

“நீ பண்ணிட்டு வந்த வேலைக்கு நான் நிச்சயம் உன்னைத் தலையில் தூக்கி வச்சிக் கொஞ்ச மாட்டேன் நிலா. அதே சமயம் உன் வார்த்தைகள் எல்லை மீறிப் போகும் போது, நான் நிச்சயம் கேள்விக் கேட்கத் தான் செய்வேன்” என்றான் கண்டிப்புடன்.

‘அந்த கேடுகெட்ட சிறுக்கி, இவனை நல்லா மயக்கி தான் வச்சிருக்கா’ என்று வன்மமாக நினைத்தவள், “எனக்காக எதுவேணாலும் செய்வேன்னு சொன்னியே அண்ணா. இப்ப இப்படி பேசுற” என்று கேட்டுக்கொண்டே, வராத கண்ணீரை, தன் மூக்கைச் சிந்தியபடி வரவழைத்தாள்.

ஆனால் அதற்கு உடனே விழுந்து விடும் சிவா இல்லையே நிலவன்.

“இந்தக் கண்ணீர் சிந்தும் வேலை எல்லாம் வச்சிக்காத நிலா. இப்போதும் சொல்றேன் உனக்காக நான் என்ன வேணாலும் செய்யத் தயாரா இருக்கேன். ரோஜாவிடம், என்ன சொன்னேனோ அதே தான் உன்கிட்டயும் சொல்றேன், அவளோட விஷயத்தில் நீ தலையிடாத, உன்னோட விஷயத்தில் அவள் தலையிட மாட்டாள்” என்று சொல்லி, அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.

இங்கே நன்றாக தூங்கிக்கொண்டு இருந்த ரோஜா, திடீரென்று அடித்துப் பிடித்து எழுந்து, வேகமாக தன் செல்போனை எடுத்து, சிவாவிற்கு அழைத்தாள்.

அவன் எடுத்ததும், “அந்த நிலா உனக்கு வேண்டாம். பிரேக்அப் பண்ணிடு அண்ணா” என்றவள், அவன் சொன்ன செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தாள்.






 

NNO7

Moderator
அத்தியாயம் – 26

தன் நண்பர்களுக்குப் பார்ட்டி வைத்துவிட்டு, அப்போது தான் வீட்டிற்குள் வந்த சிவாவோ, ரோஜா அழைத்ததும், ‘இவளுக்கு என்ன ஆச்சு? இவினிங் போன் பண்ணா எடுக்கவும் செய்யல’ என்று நினைத்தபடி, ரோஜாவின் அழைப்பை எடுத்துத் தன் காதில் வைத்ததும், அவனைப் பேச விடாமல் பேச ஆரம்பித்தாள் ரோஜா.

“அந்த நிலா உனக்கு வேண்டாம் பிரேக்அப் பண்ணிடு அண்ணா” என்று ரோஜா படபடப்புடன் பேசினாள்.

தன் தலையை அழுந்தக் கோதிய சிவா, “இந்த மாதிரி அபசகுணமா பேசுறதா இருந்தா, என்கிட்ட பேசாத ரோஜா” என்றான் கண்டிப்பான குரலில்.

அதில் அதிர்ச்சியானவள், “நான் தங்கச்சின்னு இப்ப வந்தவள் தானே, அதனால நான் பேசுறது உனக்கு அபசகுணமாத் தான் தெரியும். ஆனா நீ நினைக்குற எதுவுமே உண்மை கிடையாது. அந்த நிலா வெறும் மூன்று வாரம் தான் கர்ப்பமா இருக்காள்” என்று தனியாக சந்தித்து, தான் பேச வேண்டிய விஷயத்தை, இப்போதே அவனிடம் போட்டு உடைத்தாள்.

அதில் தன் கண்கள் வெறிக்க, “என்ன சொல்ற? அப்படி எல்லாம் எதுவும் இருக்காது. ஏதோ தவறான புரிதல் உனக்கு ஏற்பட்டு இருக்கு” என்றான்.

ஆனால் நிலாவின் மீது சிறு சந்தேகம் கூட அவனுக்குப் பிறக்கவில்லை.

“இல்ல அண்ணா, நான் அவளோட ஸ்கேன் ரிப்போர்ட் எல்லாத்தையும் நல்லா பார்த்துட்டேன்...” என்று அவள் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, “நானும் பார்த்தேன். இவினிங், அந்த ரிப்போர்ட்டை நிலாவே என்கிட்ட காண்பித்தாள். நீ சொல்ற மாதிரி அப்படி எதுவும் இல்ல” என்றவன் குரல் எரிச்சலாக வந்தது.

சிவாவின் குரலில் உள்ள மாறுபாட்டை உணர்ந்தவள், “நீ என் மேல சந்தேகப்படுறியா அண்ணா?” என்றாள் வெற்றுக் குரலில்.

“சந்தேகப்படுறது நான் இல்ல ரோஜா, நீ தான். நீ இப்படி எல்லாம் பேசுறது நிலாவை மட்டும் இல்ல, என்னையும் சேர்த்து அவமானப்படுத்துற. நிலாவும் நானும் வேற வேற இல்ல” என்றவன் முதன் முதலாக, தன் தங்கையின் மீது துவேசம் கொண்டவன் போல் பேசினான்.

‘உனக்காக எது வேண்டுமானாலும் செய்கின்றேன் என்று சொன்ன அண்ணனா இது’ என்று நினைத்தவள், “அண்ணா, நான் உண்மையைத் தான் சொல்றேன்” என்று அவள் கண்கலங்கியபடி கூற.

“நானும் நீ பொய் சொல்றன்னு சொல்லவே இல்ல ரோஜா. உன்னோட புரிதல் தப்பா இருக்கு” என்று அவன் பிடியில் நின்றே பேசினான்.

“ஐயோ, இல்லன்னு சொல்றேனே... நம்ப மாட்டியா?” என்றவள் தான் படித்த நிலாவின் மருத்துவ அறிக்கையை, அவனுக்குத் தெளிவாக விளக்கிக்கூறினாள்.

“இங்கப்பாரு ரோஜா. இதுக்கு என்ன ஆதாரம் உன்கிட்ட இருக்கு?” என்றான் ஒரே வாக்கியத்தில்.

“நான் பார்த்தது தான் அந்த ஆதாரம் அண்ணா. அந்த ரிப்போர்ட்டைக் கூட நிலவன் தான், எடுத்துட்டு அவர் ரூம்குள்ளப் போனாரு. அதை எப்படியாவது நான் போட்டோ எடுத்து உனக்கு அனுப்புறேன்” என்று சீற்றத்துடன் சொல்லிவிட்டு வைத்தாள் ரோஜா.

இங்கே, ‘இவளுக்கு என்ன ஆச்சி’ என்று யோசித்தபடி தன் பால்கனியில் நின்று கொண்டு இருந்த சிவாவிற்கு, நிலாவிடம் இருந்து அழைப்பு வந்தது.

அதை ஆசையுடன் எடுத்துத் தன் காதில் வைத்தவன், “ஹலோ நிலா, நல்லா இருக்க தானே, பேபி என்ன சொல்லுது” என்று ஆசையுடன் கேட்டான்.

இங்கே தான் ஒருத்தனை முட்டாள் ஆக்கிக்கொண்டு இருப்பதைப் பற்றிக் கொஞ்சமும், கவலை கொள்ளாத நிலா, “பேபி, அப்பாவைத் தான் தேடுது” என்றாள்.

எவனோ ஒருவன் பிள்ளைக்கு சிவாவின் இன்சியலைக் கொடுத்து, கொஞ்சமும் கூச்ச நாச்சம் இல்லாமல் பேசினாள்.

“சீக்கிரமே, நான் அம்மாக்கிட்டப் பேசி, நம்ம கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யுறேன் நிலா” என்றான் சிவா.

“இதெல்லாம் நடக்கும்னு நீங்க நினைக்குறீங்களா சிவா... உங்க அம்மாவுக்கு எங்கள் குடும்பத்தைக் கண்டாலே ஆகாது” என்றாள் சோகம் ததும்பிய குரலில்.

“அதெல்லாம் சம்மதிப்பாங்க நிலா. நீ இப்ப என் குழந்தையை வேற சுமந்துக்கிட்டு இருக்க... உன்னை எப்படி வேண்டாம்னு சொல்லுவாங்க” என்றான் அவன்.

“அதெல்லாம் சரி வராது சிவா. நாம ஏதாவது சர்ச்ல போய் கல்யாணம் பண்ணிக்கலாம். அதுக்குப் பிறகு உங்க அம்மா முன்னாடி போய் நிற்கலாம்” என்றவள், அதற்கு மறுப்பு தெரிவித்த சிவாவிடம், ஏதேதோ பேசி இறுதியில் அவனை ஒத்துக்கொள்ளவும் வைத்தாள்.

இப்போது ரோஜாவின் விசயத்திற்கு வந்தவள், “என் அண்ணனுக்குக் குழந்தை வரப்போகுதுன்னு, நினைச்சாலே எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கு சிவா” என்றவள் கண்களை குரோதமாக வைத்துக் கொண்டு, மகிழ்ச்சி ததும்பியக் குரலில் பேசினாள்.

அவள் பேசியது அவனுக்கு இதமாக இருக்க, “நீயும் ப்ரெக்னன்ட்டா இருக்க நிலா. உன்கிட்ட இதை சொல்றது கொஞ்சம் சுயநலமாத்தான் இருக்கு. இருந்தாலும் ரோஜாவை அப்ப அப்ப பார்த்துக்கோ நிலா. உன் அண்ணன் வேற அவளை என்னென்ன டார்ச்சல் பண்றான்னு தெரியல. ப்ரெக்னன்ட்டா இருக்குறதுனால, அவளுக்கு மூட் ஸ்விங் வேற அதிகம் இருக்கு போல... இப்ப தான் அவளிடம் நான் பேசினேன்” என்றான்.

“மூட் ஸ்விங்கா? ரோஜா நான் பார்க்கும் போது நல்லா தானே இருந்தாள். உங்கக்கிட்ட ஏதாவது சொன்னாளா?” என்றாள் , அவள் மயங்கி விழுந்ததை நினைத்து.

“அவள் நல்லா தான் இருக்காள் நிலா. ஆனா ஏதோ ஸ்ட்ரஸ்ல இருந்த மாதிரி இருந்தது அவளோட பேச்சு” என்றான் தன் நெற்றியைத் தடவியபடி.

“இங்கப்பாருங்க சிவா. என்ன தான் நான் ப்ரெக்னன்ட்டா இருந்தாலும், ரோஜாவை கவனிக்க வேண்டியது என்னோட பொறுப்பு. அவளோட ஒவ்வொரு அசைவும் எனக்குத் தெரிந்தால் தான், நான் அவளை ஜாக்கிரதையா பார்த்துக்க முடியும். இதை நான் என் அண்ணனுக்காகப் பண்ணல. உங்க குடும்பத்துக்கு மருமகளா வரப்போறேன், அந்த அக்கரையில் தான் சொல்றேன்” என்று நைச்சியமாகப் பேசினாள்.

நிலாவின் பேச்சில் மயங்கிப் போன சிவாவோ, கொஞ்ச நேரத்திற்கு முன்பு ரோஜா தன்னிடம் சொன்ன அனைத்தையும் நிலாவிடம் உளறிக்கொட்டினான்.

அதில் நிலாவின் கோபம் உச்சம் பெற்றது. ஆனால் அதனை அப்படியே வெளிக்காட்டிவிடாமல் இருக்க, ஜன்னல் கம்பியை இறுக்கமாகப் பிடித்தவள், கண்ணீரே வராமல் அழ ஆரம்பித்தாள்.

“சிவா... நீங்க என்னை நம்புறீங்க தானே! என்னோட ஸ்கேன் ரிப்போர்ட்டைக் கூட நீங்க பார்த்தீங்க தானே! வேணும்னா நாளைக்கு டாக்டரைப் பார்க்கும் போது, உங்களையும் கூட்டிட்டுப் போறேன். அப்போதாவது என்னை நம்புவீங்க தானே!” என்றாள்.

“ஹேய் பேபி... இப்ப எதுக்குடா அழற. இதுக்குத் தான் நான் சொல்லமாட்டேன்னு சொன்னேன். ரோஜாவுக்கு ஏதோ மூட்ஸ்விங். இதை பெருசா எடுத்துக்காத நிலா” என்று அவன் அந்தப்பக்கம் இருந்து பதறினான்.

“ஐயோ அப்படி எல்லாம் நான் ரோஜாவை தப்பா நினைக்கல சிவா. அவள் என்னோட பொண்ணு மாதிரி. என்ன தான் நமக்குக் குழந்தை வந்தாலும், என்னோட மூத்த பொண்ணு ரோஜா தான்” என்று பல்லைக் கடித்தபடி பேச, அதனைக் கேட்ட, சிவாவிற்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.

சிவா அணைப்பைத் துண்டித்ததும், தன் அலைபேசியைத் தூக்கி எறிந்தவள், தன் தலையைப் பிடித்துக் கொண்டு பைத்தியம் போல் கத்த ஆரம்பித்தாள்.

“இந்த விஷயம் எப்படி அவளுக்குத் தெரிஞ்சது. என் ஸ்கேன் ரிப்போர்ட்டை என் அண்ணன் தானே வச்சிருந்தான்” என்று வாய்விட்டுக் கத்தினாள்.

முகத்தை அழுத்தமாகத் துடைத்துக் கொண்டு கண்ணாடி முன்னே சென்று நின்ற நிலா, “பொய்யான ஸ்கேன் ரிப்போர்ட்டை சிவாக்கிட்ட காட்டினது நல்லதா போச்சு. அடுத்த வேலை, ரோஜாவுக்கும் சிவாவுக்கும் இடையில் சண்டை மூட்டிவிடுறது தான்” என்று வாய்விட்டுப் பேசினாள் நிலா.

கண்ணாடி மேஜையில் பழக்கூடையில் இருந்த கத்தியை எடுத்தவள், “நீ போடுற திட்டம் எல்லாம், எனக்குத் தெரியாமல் இனி இருக்கப்போறது இல்லை வனரோஜா... உன்னோட குழந்தைக்கு நாளை தான் கடைசி நாளா இருக்கும்” என்று சொல்லி சிரிக்க ஆரம்பித்தாள்.

****

இங்கு நிலவனின் அறைக்குள் கதவைத் தட்டிக் கொண்டு நுழைந்தாள் ரோஜா. அவனோ, அங்கே இருந்த இருக்கையில் அமர்ந்து மடிக்கணினியில் எதையோ தட்டச்சு செய்து கொண்டிருந்தான்.

‘நிலாவோட ஸ்கேன் ரிப்போர்ட் எங்க இருக்கும்’ என்று நிலவனுக்குப் பின்னே இருந்த அலமாரியில் அவளது கண்கள் சென்றது.

நிமிர்ந்து ரோஜாவைப் பார்த்த நிலவன், “என்ன இந்தப்பக்கம்” என்று கேட்க, தன் பார்வையை சட்டென்று அவன் மீது கொண்டு வந்தவள், “இல்ல டாக்டர் எனக்கு ஊசி போட்டாருன்னு சொன்னீங்கல, அதான் எந்த ஊசின்னு கேட்கலாம்னு வந்தேன்” என்று அப்போதைக்கு வாயில் வந்ததை அடித்துவிட்டாள்.

அந்த மருந்தின் பெயரை சொன்ன நிலவன், “அது சாதாரண சத்து ஊசி தான்” என்றான். அதற்கு, “சரி” என்று தன் தலையை ஆட்டிக்கொண்டாள் ரோஜா.

நிலா தனக்குத் தெரிந்த மருத்துவரைக் கூட்டிக்கொண்டு வந்ததே, ரோஜா கர்ப்பமாக இருக்கும் விஷயம், நிலவனுக்குத் தெரிந்துவிடக்கூடாது என்பதனால் தான். அவள் நினைத்து இருந்தாள் அப்போதே குழந்தையைக் கலைக்கும் ஊசியை ரோஜாவின் உடலில் செலுத்தி இருக்கலாம் தான். ஆனால் நிலவனின் முன்னால் அது இயலாத காரியம். அவனது கழுகுப்பார்வையில் எதுவும் செய்ய முடியாது. இதனைப் பொறுத்திருந்து தான் செய்யவேண்டும் என்று நினைத்திருந்தாள் நிலா.

‘நல்ல வேளை அந்த டாக்டர் எதையும் கண்டுபிச்சு இவர்க்கிட்ட சொல்லல’ என்று நினைத்தவள் கண்கள் திரும்பவும் அலமாரியை நோக்கித் தான் சென்றது.

அவள் கண்கள் சென்ற திசையைக் கண்டவன், “எதைத் தேடி இங்க வந்துருக்க?” என்றான் நேர்பார்வையோடு.

“ம்... ஒன்னும் இல்ல... தூக்கம் வரல... உங்க ரூம்ல லைட் எரிஞ்சது அதான் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்” என்றாள் திக்கித்திணறியக் குரலில்.

“இப்ப உனக்கு உடம்பு நல்லா இருக்கா?” என்றான் நிலவன்.

“ஆங்... நல்லாத் தான் இருக்கு” என்றாள் புன்னகை முகத்துடன்.

தன் நாடியைத் தடவியவன், அவளைக் கீழிருந்து மேலாக பார்த்தபடி, “போரடிக்குதா?” என்றதற்கு அவள் தலையை ஆட்ட, “அப்ப ஹாஸ்பிடல் கிளம்பு” என்று சொல்லிவிட்டு மீண்டும் மடிக்கணினியில் தன் கண்களைப் பதித்தான்.

“உங்களுக்குக் கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லையா நிலவன். எனக்கே இப்ப தான் உடம்பு நல்லா ஆகியிருக்கு” என்றாள் தன் இடையில் கையைவைத்தபடி.

“அப்படினா போய் தூங்கு. என்னை வந்து இம்சை பண்ணாத” என்றான் அவளைப் பார்க்காமலையே

“அது இல்ல, நிலவன் நாம சரக்கு அடிக்கலாமான்னு கேட்கத் தான் இங்க வந்தேன்” என்றாள் மடமடவென்று.

அதுவரை தன் மடிக்கணினியில் தட்டச்சு செய்து கொண்டிருந்தவன், கைகள் அப்படியே நின்றது.

இப்போது அவளின் கண்களை ஏறிட்டவன், “நீ ப்ரெக்னன்ட்டா இருக்கியா?” என்று கேட்டு அவளை அதிரச்செய்தான்.
 

NNO7

Moderator
அத்தியாயம் – 27

நிலவன் கேட்ட கேள்வியில் அதிர்ந்து போன ரோஜா, “என்ன? எதுக்காக அப்படி கேட்குறீங்க?” என்று பதற ஆரம்பித்தாள்.

அவளின் முகத்தில் வந்து போன பாவனைகள் அனைத்தையும் தன் மனதினுள் குறித்து வைத்துக்கொண்ட நிலவன், “எதுக்காக இவ்வளவு பதற்றப்படுற?” என்றான் அவளை உற்று நோக்கியபடி.

“பிறகு, சம்பந்தமே இல்லாம என்கிட்ட தேவை இல்லாத கேள்வி எல்லாம் கேக்குறீங்களே!” என்றாள் தன் கையைப் பிசைந்தபடி.

“காரணத்தோட தான் கேக்குறேன். காலையில் சரக்குப் போடலாமான்னு கூப்பிட்டுட்டு, நீ கொஞ்சம் கூட குடிக்கவே இல்ல. சாயந்திரம் என்னடான்னா மயங்கி விழுற. இப்ப மறுபடியும் சரக்கு அடைக்கக் கூப்பிடுற. எதுக்கு இதெல்லாம் பண்ற?” என்றான் தன் ஒரு புருவத்தை மட்டும் உயர்த்தியபடி.

“ஆமாம் நான் குடிக்கல. அதுக்காக என்கிட்ட இப்படி எல்லாம் கேட்ப்பீங்களா?” என்றவள் தன் முகத்தை சாதாரணமாக வைத்துக்கொள்ள பெரும்பாடு தான் பட்டுப்போனாள்.

“சும்மா விளையாட்டுக்குத் தான் கேட்டேன். அதுக்கு எதுக்கு நீ ஓவரா துள்ளுற” என்றான் அவளை எடைபோடும் பார்வை பார்த்தபடி.

‘இவர் எதுக்காக இப்படி எல்லாம் கேட்க்குறாரு. ஒரு வேளை அந்த டாக்டர் ஏதாவது இவர்கிட்ட சொல்லிட்டாரோ!’ என்று நினைத்துப் பயந்தவள், அவன் அடுத்துப் பேசுவதற்குள் வேகமாக தானே பேச ஆரம்பித்தாள், “முதன் முதலா என்னை நான் இழந்தது உங்கக்கிட்ட மட்டும் தான். அது தான் என்னோட இறுதியும் கூட. என்னோட வாழ்க்கையை இனி யார்கூடவும், நான் பகிர்ந்துக்குறதா இல்ல” என்று உண்மையாக அவன் கண்களை நேருக்கு நேர் பார்த்தபடி கூறினாள்.

தன் மடிக்கணினியை மூடி வைத்துவிட்டு, தன் இருக்கையில் இருந்து எழுந்து, ரோஜாவின் முன்னே வந்து நின்றவன், “நான் இதெல்லாம் கேட்கவே இல்லையே!” என்றான்.

“நீங்க தேவை இல்லாம என்னைக் கேள்வி கேட்கப்போய் தான், நான் இதை எல்லாம் சொல்ல வேண்டியதா இருக்கு” என்றாள் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டபடி.

அவளின் நாடியைப் பிடித்து, அவள் முகத்தை தனக்கு நேராக திருப்பியவன், “என்னோட பொழுதுபோக்கு என்னன்னு நான் சொன்னேனே... உனக்கு நியாபகம் இருக்கா?” என்று கேட்டான், தன் உதட்டை ஒரு பக்கமாக சுழித்தபடி.

‘கண்காணிக்குறது தான் என்னோட பொழுதுபோக்கு’ என்று காலையில் தான் நிலவன் கூறி இருக்க, இப்போது அவன் போடும் பீடிகையைப் புரிந்து கொள்ள முடியாமல் திணறித்தான் போனாள் ரோஜா.

உடனே அவனுக்கு முதுகுக்காட்டி திரும்பிக் கொண்டவள், “உங்கக்கிட்ட சரக்கு அடிக்கலாமான்னு கேட்டது என்னோட தப்பு தான். எதை எதையோ பேசிக்கிட்டு இருக்கீங்க” என்று அவள் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, அவளைப் பின்னால் இருந்து அணைத்திருந்தான் நிலவன்.

அவனது செயலில் துணுக்குற்றவள், “என்ன பண்றீங்க நிலவன். நம்ம காண்ட்ராக்ட்ல இதெல்லாம் கிடையாது. முதல்ல உங்கக் கையை எடுங்க” என்றவள் தன் வயிற்றின் மீது இருந்த அவனது கையை எடுத்துவிட சொல்லிப் போராடினாள்.

ஆனால் அவனது கையோ அச்சடித்த இரும்புக் கம்பி போல், அவளது இடையை வளைத்துப் பிடித்து இருந்தது.

அவள் விடுபட நினைத்த போராட்டத்தைக் கிஞ்சித்துக்கும் மதிக்காமல் “என்னோட ரூம்க்கு எதுக்காக வந்தன்னு, உண்மையை மட்டும் சொல்லு” என்றான், அவள் காதின் அருகே குனிந்து.

அவனது இதயத்தின் ஓசை அவளுக்குத் தெளிவாகக் கேட்க, அவனது மூச்சுக் காற்று பெண்ணவளின் தொண்டையில் வந்து மொத, காதுக்குள் கேட்ட அவனது மெல்லிய சத்தம், அவளை என்னவோ செய்ய, அதுவரை அவன் வளைவில் இருந்து போராடிக்கொண்டு இருந்தவள், இப்போது பேசவும் மறந்து தான் போனாள்.

அப்போது திடீரென்று இவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நிலவனின் அலைபேசி சத்தம் செய்ய, ரோஜாவை விடுவித்தவன், கொஞ்சம் தள்ளிப்போய் அதனை எடுத்துத் தன் காதில் வைத்தான்.

அந்தப்பக்கம் பேசிய நிலவனின் பிஏ, “சார் உங்க வீட்டுக்கு வந்த மருத்துவரைப் பிடிச்சு விசாரித்தோம் சார். வனரோஜா மேடம் ப்ரெக்னன்ட்டா இருக்குறது தெரியக்கூடாதுன்னு நிலா மேடம் தான் சொல்லி அழைச்சிட்டு வந்துருக்காங்க” என்று சொன்னதும், தான் நினைத்த விஷயம் சரி தான் என்ற புன்னகையோடு இணைப்பை அணைத்துவிட்டு, ரோஜாவைக் கண்டான் நிலவன்.

அவன் அலைபேசியில் பேசும் நேரத்தில், அவன் செய்த மாயத்தால் பிரம்மையில் இருந்து வெளியே வந்த ரோஜா, அவன் அறையை தன் கண்களால் ஸ்கேன் செய்ய ஆரம்பித்து இருந்தாள்.

அவள் எதிர்பார்ப்பதற்குள், அவள் முன்னே வந்த நிலவன், அவள் இடையோடு இழுத்து அணைத்துவிட்டு, அவள் நெற்றியில் தன் இதழை ஒற்றி எடுத்தான்.

திடீரென்று தன்னை அணைத்து, நெற்றி முத்தம் கொடுத்த நிலவனைத் தள்ளிவிடாமல், அப்படியே சிலையாகி நின்று இருந்தாள் ரோஜா.

****

மறுநாள் காலை விடிந்ததும், முதல் வேலையாக, சிவாவை சந்திக்க தன் வீட்டின் அருகே இருக்கும் காபி ஷாப் வந்திருந்தாள் நிலா.

நிலாவின் பின்னே வந்து அணைத்து விடுவித்த சிவா, “ரொம்ப நேரமா வெயிட் பண்றியா நிலா” என்று கேட்டபடி அவளுக்கு முன்னே இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தான்.

“இல்லை சிவா. இப்போ தான் வந்தேன். உங்க பக்கத்திலையே இருக்கணும்னு போல தோணுது. சீக்கிரம் என்னைக் கல்யாணம் பண்ணுங்க” என்றாள் சிறு குழந்தை போல் முகத்தை வைத்துக் கொண்டு.

அவளது பேச்சில் வழக்கம் போல் தன் மனதை தொலைத்தவன், அவளுக்குப் பறக்கும் முத்தம் ஒற்றைக் கொடுத்துவிட்டு, “நான் இதைப் பத்தி ரோஜாக்கிட்ட பேசுறேன் நிலா” என்றான்.

ரோஜாவின் பெயர் அவனது வாயில் இருந்து வந்ததும், ‘எப்பப் பார்த்தாலும் ரோஜா... ரோஜா...’ என்று நினைத்து எரிச்சல் கொண்ட நிலா, வெளியே சகஜமான குரலில், “ரோஜாவுக்கு என்ன தெரியும்? அவளே சின்ன பொண்ணு. இதைப்போய் அவள்கிட்ட கேட்கலாமா சிவா!” என்றாள்.

“ஹேய் நிலா, இதுல என்ன இருக்கு? நமக்கு கல்யாணத்துக்கு சாட்சி கையெழுத்துப் போடாப் போறதே ரோஜா தானே. அவளுக்குக் காலையில் டியூட்டி டைம் இல்லாத நாளா பார்க்கணும். அதைப்பத்தித் தான் அவள் கிட்ட பேசணும்னு சொன்னேன்” என்றான் புன்னகை முகமாக.

“இல்ல ரோஜாவை நாம கூப்பிட வேண்டாம் சிவா. உங்க பிரண்ட்ஸ் என்னோட பிரண்ட்ஸ் மட்டும் போதும்” என்று சொல்லி அந்த விஷயத்தை முடிக்கப் பார்த்தாள்.

நிலா சொல்வதற்கு எல்லாம் தன் தலையைத் தலையை ஆட்டிய சிவாவோ, இந்த விஷயத்தில் அவளுக்கு உடன்படவில்லை.

“அம்மா இல்லாம கல்யாணம் செய்யுறதுக்கு எனக்கு ஒரு மாதிரியா இருக்கு. அம்மாவைப் பார்த்து நீ பயப்படுறதுனால தான், நான் நீ சொன்னதுக்கு ஒத்துக்கிட்டேன். இப்ப ரோஜாவும் வரவேண்டாம்னு சொன்னா என்ன அர்த்தம்?” என்றான் தன் சத்தத்தைக் கூட்டியபடி.

“ஐயோ சிவா, நான் அதுக்காக சொல்லல. என் அண்ணன் இல்லாம, நான் எந்த ஒரு விஷயத்தையும் செஞ்சது இல்ல. அப்படி இருக்குறப்ப, நான் அவர்கிட்டயே சொல்லாமல் தான் உங்களைக் கல்யாணம் பண்ணப்போறேன். அதே மாதிரி நீங்களும் உங்க தங்கச்சிக்கிட்ட இதைப்பத்தி சொல்ல வேண்டாம்” என்றாள்.

“எதுக்கு நீ, நிலவன் கிட்ட சொல்லல. அவனுக்குத் தான் நம்மைப் பற்றி நல்லாவே தெரியுமே!” என்றான் தன் கையை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டபடி.

“உங்க அம்மாவைக் கூப்பிடாமல், என் அண்ணனைக் கூப்பிடுறது முறை கிடையாது. அது மட்டும் இல்லாமல், ரோஜா நம்ம கல்யாணத்துக்கு வந்தா, அவளை பரணி அம்மா வெறுப்பதற்கு அதிகம் சான்ஸ் இருக்கு. பரணி அம்மா என்னை வெறுத்தாலும் பரவாயில்ல. ரோஜாவை வெறுத்தால் என்னால தாங்கிக்க முடியாது” என்று ஆஸ்கார் விருது கிடைத்த நடிகை போல், நடிப்பில் பிச்சி உதறினாள் நிலா.

இதனை எல்லாம் பேசிவிட்டுக் கண்கலங்கிய நிலாவை, உருக்கத்தோடுப் பார்த்த சிவா, அவள் கை மீது தன் கையை வைத்து, “உனக்கு நிஜமாவே பெரிய மனசு நிலா. நீ சொன்ன மாதிரியே கல்யாணம் பண்ணி ரிஜிஸ்டர் பண்ணிட்டு நாம அம்மா முன்னாடி போய் நிற்கலாம் நிலா” என்றான்.

“சரி. அப்படின்னா, இன்னைக்கே ரிஜிஸ்டர் பண்ணலாம் வாங்க” என்று அடம்பிடிக்க ஆரம்பித்தாள்.

“அப்படி எல்லாம் உடனே பண்ண முடியாது நிலா. இன்னைக்கு டாக்குமென்ட்ஸ் எல்லாத்தையும் ப்ரோசீட் பண்ணா, இருபத்தி எட்டு நாள் கழிச்சு தான், நம்ம கல்யாணத்தை ரிஜிஸ்டர் செய்ய முடியும்” என்று விவரமாக அவளுக்குச் சொல்லி புரியவைத்தான்.

“ஆனா அண்ணன், அந்த வனரோஜாவைக் கல்யாணம் பண்ணி, ஒரே நாள்ல ரிஜிஸ்டர் பண்ணிட்டாரு. நீங்க மட்டும் ஏன் ஏதேதோ கதை சொல்லிக்கிட்டு இருக்கீங்க?” என்று உணர்ச்சி வேகத்தில் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பேசிவிட்டு தான் யோசித்தாள் நிலா.

ஆனால் அவள் பயப்படுவது போல் எதுவும் சிவா பேசிவிடவில்லை.

“அது இந்தியா நிலா. இது லண்டன். இரண்டு நாட்டு சட்டங்களும் வேற வேற” என்று மெதுவாகவே கூறினான்.

“சரி. அப்படின்னா இன்னைக்கே அதுக்கு ஏற்பாடு பண்ணுங்க. என்னோட டாகுமெண்ட்ஸ் எல்லாத்தையும் நான் உங்களுக்கு மெயில் பண்ணிடுறேன்” என்றவள் எதுவோ நியாபகம் வந்தவளாக, “ஆமாம் எதுக்காக ரோஜா, தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை, அண்ணன் கிட்ட சொல்லாமல் இருக்காள்?” என்றாள் அதிமுக்கியமான கேள்வியாக.

அதற்கு தன் தோள்களைக் குலுக்கிக்கொண்டவன், “அது எனக்கும் தெரியாது நிலா. அவங்களுக்குள்ள ஏதாவது இருக்கும்” என்றவனைப் பார்த்து, ‘சரியான முட்டாள். இவர்கிட்ட எந்த விஷயத்தையும் வாங்க முடியல’ மனதிற்குள் சிவாவை திட்டினாள்.

சிவாவுக்கும் அது தெரிந்தால் தானே, நிலாவிடம் கூறுவான். ஆனால் ரோஜா இதனை சிவாவிடம் சொல்வதற்கு பெரியதாக காரணம் எல்லாம் எதுவும் இல்லை. கொஞ்சம் பொறுத்திருந்து, நிலவனை ஆழம் பார்த்துவிட்டு தான் இதனை அவனுடன் பகிர வேண்டும் என்ற நினைப்பில் இருந்தாள். அதனால் இதனை சிவாவிடம் சொல்லாதது பெரிய விஷயமாக அவளுக்குப்படவில்லை.

நிலாவோ சிவாவைப் பார்த்து சிரித்தபடி, “எதுக்காக அவள் சொல்லலைன்னு கேட்டு சொல்லுங்க சிவா. ரோஜா எந்த முடிவு எடுத்தாலும், அவளுக்குத் துணையா நான் இருக்கணும்னு முடிவு பண்ணிட்டேன்” என்று மிகவும் நம்பிக்கை மிகுந்தவள் போல் பேசினாள்.

அதற்கு முகம் முழுவதும் புன்னகை வழிய அவளைப் பார்த்தவன், “கேட்குறேன் நிலா. ரோஜாவைப் பற்றி நீ பாசமா கேட்குறது எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு. அவள் உனக்கு நல்ல தோழியாக இருப்பாள் நிலா” என்றான் சிவா.

அதற்கு சிரித்துக்கொண்ட நிலா, மனதில் வன்மமாக, ‘இன்னைக்கு, நீ கட்டி வச்சிருக்கும் மணல் கோட்டை எல்லாம் உடையப்போவுது வனரோஜா. அழறதுக்கு ரெடியா இரு’ என்று தன் மனதினுள் நினைத்துக் கொண்டாள்.

சிவாவைப் பார்த்துவிட்டு, தன் வீட்டிற்கு செல்லும் போதே, ரோஜாவின் குழந்தையை அழிப்பதற்கு உண்டான திட்டத்துடன் தான் சென்றாள் நிலா.

இதுவரை அசுரன் போல் ரோஜாவை நோகடித்த நிலவன், இப்போதாவது விழித்துக்கொண்டு, அதிகனாகி அவளைக் காப்பானா? அல்லது தன்னைத் தானே காத்துக் கொள்ள காளி அவதாரம் எடுக்கப்போறாளா வனரோஜா? என்பது எல்லாம் காலத்தின் கையில் மட்டுமே!














 
Last edited:

NNO7

Moderator
அத்தியாயம் – 28

இரவு அதிக நேரம் கண்விழித்துவிட்டு, நேரம் கடந்து தான் தன் படுக்கையில் இருந்தே எழுந்திருந்தாள் வனரோஜா.

நேற்று இரவு தன்னை நிலவன் அணைத்து நெற்றியில் முத்தமிட்ட நிகழ்வு அவளது மனக்கண்ணின் முன்பு வந்து போக, ‘எதுக்காக இப்படி பண்ணார்? பண்றதெல்லாம் பண்ணிட்டு, இப்ப உன்னோட ரூம்க்கு போன்னு வேற சொல்லி, என்னைக் கழுத்தபிடிச்சு வெளியத் தள்ளாத குறையா தள்ளிவிட்டுட்டார்’ என்று நினைத்தவள், ‘ஒரு வேளை நிலாவின் ரிப்போர்ட்டைப் பார்க்குறதுக்குத் தான் அவர் ரூம்க்குள்ள போனேன்னு அவருக்குத் தெரிஞ்சிருச்சோ!’ என்று ஏதேதோ நினைத்தபடி குளித்துக் கிளம்பிக் கீழே வந்தாள்.

அங்கே உணவு மேஜையில் தான், இவளுக்காகக் காத்துக்கொண்டு இருந்தான் நிலவன்.

தூரத்தில் வரும் போதே, நிலவன் உணவு உண்ண அமர்ந்திருப்பதைப் பார்த்தவள், ‘அச்சோ, இன்னைக்குக் காலையிலையே இவர் முகத்துல தானா முழிக்கணும்’ என்று நினைத்துக் கொண்டவளின், வயிறு வேறு சத்தம் எழுப்ப, வேறு வழி இல்லாமல் நிலவனுக்கு முன்னே இருந்த இருக்கையில், உணவு உண்ண அமர்ந்தாள்.

இருவருக்கும் தேவையான உணவு அனைத்தையும், உணவு மேஜையில் எடுத்து வைத்த வேலையாட்கள். நிலவனின் கண் அசைவில் அங்கிருந்து சென்றனர்.

அவள் சாப்பிடும் வரை அமைதியாக இருந்த நிலவன், அவள் சாப்பிட்டு முடித்ததும், “ஹாஸ்பிடல் கிளம்பிட்டியா?” என்று கேட்க, “ஆம்” என்று மெதுவாக தன் தலையை ஆட்டிக்கொண்டாள் ரோஜா.

“உன்னை நானே ஹாஸ்பிடல்ல டிராப் பண்றேன். என்கூட வா” என்றான் கட்டளையாக.

“இல்ல... நானே போயிக்குறேன்” என்று அவள் வேறு பக்கம் திரும்பியபடி சொல்ல, “நான் சொல்றதை நீ கேட்டா போதும். தேவையில்லாம எதிர்த்து பேசாத” என்றான் அவளை நேர்பார்வை பார்த்தபடி.

“காண்ட்ராக்ட்ல அப்படி எல்லாம் எதுவும் இல்லை மிஸ்டர் நிலவன். நான் ஹாஸ்பிடல் போறதுக்கு முன்னாடி, என் அண்ணனைப் பார்க்கணும்” என்றாள் பிடிவாதக் குரலில்.

தன் நெற்றியை நீவிவிட்டவன், “சரி போகலாம். ஆனா உன் கூட நானும் வருவேன்” என்றான் நிலவன்.

‘அப்ப நிஜமாவே நான் நிலாவின் ஸ்கேன் ரிப்போர்ட்டைப் பார்த்தது, இவருக்கு தெரிஞ்சி தன் இருக்கு. அதனால் தான் என்னை ஆழம் பார்க்குறாரு’ என்ற நினைப்பில் வெகுண்டவள், “என்கூட நீங்க வரத்தேவை இல்ல” என்றாள் எரிச்சலுடன்.

“ஏன் வரக்கூடாது? அப்படி என்ன ரகசியம் பேசப்போற, அந்த சிவாக்கிட்ட?” என்றான் தன் சட்டையை மடக்கிவிட்டபடி.

எப்போதும் பார்மல்சில் கோர்ட் சூட் அணிந்திருப்பவன், இப்போது முழுக்கை வெள்ளை நிற சட்டையை அணிந்திருந்தான்.

வழக்கம் போல் ரோஜாவின் கண்கள் அவன் அழகுக்கு, பத்துக்குப் பத்து என்று அகத்திலையே மார்க் போட்டது.

ஒரு வழியாக தன் மனதைக் கட்டுப்படுத்தி, கோபத்துடன் நிலவனை நோக்கியவள், “ஆமாம் நான் ரகசியம் தான் பேசப்போறேன். அதை எல்லாம் உங்ககிட்ட சொல்லணும்னு காண்ட்ராக்ட்ல இல்லையே!” என்று அடிக்கொருமுறை அந்த காண்ட்ராக்ட்டை நிலவனுக்கு நியாபகப் படுத்திக்கொண்டே இருந்தாள்.

அதில் அழுத்தமாக தன் தலையைக் கொதியவன், “சரி உன் பேச்சின் படியே நானும் வரேன். என்ன தான் இருந்தாலும், இப்ப நீ என்னோட மனைவி. நீ எங்க போனாலும், நானும் உன்கூடவே வருவேன்” என்றான் அவள் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தவனாக.

‘தப்பு செய்பவளே தைரியமாக இருக்கும் போது. நான் எதுக்குப் பயப்படணும்’ என்ற நினைப்பில், நிலவனை அவன் முகத்திற்கு நேராக ஏறிட்டவள், “உங்க தங்கச்சி ரிப்போர்ட்டை நான் படிச்சிட்டேன்” என்றாள் நிமிர்வான குரலில்.

ஆனால் அவள் நினைத்தது போல் நிலவனின் முகத்தில் எந்த ஒரு அதிர்ச்சி பாவனையும் தோன்றவில்லை.

எப்படி தோன்றும்? அதனை ரோஜாவின் கண்களுக்குப் புலப்பட வைத்ததே, நிலவன் தானே!

சாதாரணமாக தன் கையைக் கட்டிக்கொண்டு ரோஜாவைப் பார்த்தவன், “ஓ... படிச்சிட்டியா! சரி இப்ப அதுக்கு நான் என்ன செய்ய?” என்றான் தன் கீழுதட்டைக் கடித்தபடி.

அவனது முகத்தில் அதிர்ச்சியைத் தேடித் பார்த்த ரோஜாவுக்குத் தான் அதிர்ச்சி கிடைத்தது.

“என்ன பேசுறீங்க? உங்க தங்கச்சி வயிற்றில் வளர்வது, என் அண்ணன் சிவாவின் குழந்தை கிடையாது” என்றாள் அழுத்தம் நிறைந்த குரலில்.

“அதெப்படி உனக்குத் தெரியும்? அவங்க வாழ்க்கைக்குள், நீ ரொம்ப உள்ள போகாத ரோஜா. நீ பேசுறதை எல்லாம் கேட்குறவங்களுக்கு, ரொம்பவே அசிங்கமாத் தெரியும்” என்றான் நிலவன்.

அதில் நிலவனை எரித்துவிடுவது போல் பார்த்தவள், “உங்க தங்கச்சி செஞ்சது அசிங்கம் இல்ல... ஆனா அதைப் பேசுற நான் தான் அசிங்கம் இல்ல...” என்றவள், இருக்கையில் இருந்து எழுந்து, “உங்கக்கிட்ட பேசி நியாயம் கேட்குறது எல்லாம் தேவை இல்லாதது. நான் போறேன்” என்று சொன்னவள் கையைப் பிடித்தவன், “இந்த விஷயத்தை இனி தான், நீ சிவாவிடம் சொல்லப்போறியா?” என்று கேட்டான்.

அவனிடம் இருந்து தன் கையை எடுத்துவிட்டவள், தன் தலையை நிமிர்த்தி நிலவனைப் பார்த்தவாறு, “அதுவும் உங்களுக்குத் தேவை இல்லாதது தான் மிஸ்டர் நிலவன்” என்றதும் நக்கலாக சிரித்தவன், “அப்ப இதை, நீ அவன்கிட்ட சொல்லிட்ட, அவன் அதை நம்ப மறுக்குறான் அப்படித்தானே!” என்று மிகவும் சரியாக கணித்துக் கூறினான்.

இப்படி எல்லா விஷயத்தையும், நிலவன் புட்டுப்புட்டு வைத்தால் ரோஜாவும் என்ன தான் செய்வாள்?

நிலவனின் முன்பு தலைகுனிந்தபடி நின்றவள், சிவாவை நினைத்துக் கவலை கொண்டாள்.

அவளின் நாடியைப் பிடித்து நிமிர்த்திய நிலவன், “அதுக்காகத் தான் சொல்றேன். அந்த சிவாவுக்கு நல்லது பண்றதா நினைச்சு உன்னை நீயே அசிங்கப்படுத்திக்கிடாத” என்றான் அக்கறையாக.

இப்போது தைரியம் வரப்பெற்றவளாக, தன் நாடியில் இருந்த அவனது கையை விலக்கியவள், “அண்ணன் நான் சொன்னதை நம்பாம இல்ல. என்னோட புரிதல் தான் தவறுன்னு நினைக்குறான். ஆமாம் நேத்து நான் உங்க அறைக்குள் வந்ததே, அந்த ரிப்போர்ட்டை எடுக்கத்தான்” என்று விஷயத்தை உடைத்தாள்.

“டூ லேட் ரோஜா. உன் கைக்கு, முதல் முதலா ரிப்போர்ட் வரும் போதே, அதை நீ உன் மொபைல்ல போட்டோ எடுத்துருக்கணும். ஆனா என்ன செய்ய! நீ தான் உன் அண்ணனைப் போலவே மிகப்பெரிய முட்டாள் ஆச்சே!” என்றான் நக்கல் தொணிக்கும் குரலில்.

“ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க நிலவன். நீங்க செய்யுறது தப்புன்னு உங்களுக்குப் புரியலையா?” என்றாள் கண் கலங்கியபடி.

அதற்கு அசால்ட்டாக தன் தோள்களைக் குலுக்கிக் கொண்டவன், “கடவுள் ஒரு தரம் மட்டும் தான் வரம் தரும். அதை சரியா உபயோகப் படுத்திக் கொள்ளாதது உன்னோட தப்பு” என்றான்.

அவன் சொல்ல வந்தது இப்போது தான் ரோஜாவிற்குப் புரியவே செய்தது.

தன் தலையைப் பிடித்தபடி, நிலவனைப் பார்த்தவள், “அப்ப தெரிஞ்சே தான், அதை என் கண்ணில் பட வச்சீங்களா?” என்றாள் நம்பமாட்டாத குரலில்.

“உடனே என்னை நல்லவன் ரேஞ்சுல வச்சி எல்லாம் பார்க்காதம்மா... உனக்கும் உன் அண்ணனுக்கும் சண்டை வரணும்னு, நல்ல எண்ணத்துல தான் அப்படி செஞ்சேன்” என்று சொல்லி மீண்டும், ரோஜாவின் கண் பார்வையில் அசுரனாக உருவெடுத்தான் நிலவன்.

“இப்ப நான் அதைப் பார்க்கணும் நிலவன் ப்ளீஸ்” என்று அவனிடம் கெஞ்ச ஆரம்பித்தாள்.

“ம்ச்... பார்த்து என்ன செய்யப்போற? அது நிஜமாவே சிவா குழந்தை இல்லைன்னு உன்னால் எப்படி சொல்ல முடியும்?” என்றான் தன் சத்தத்தைக் கூட்டியபடி.

“ஆமாம் நிச்சயமா தெரியும். நிலா வயிற்றில் வளர்வது என் அண்ணன் குழந்தை கிடையவே கிடையாது” என்றாள் உறுதியாக.

மூச்சை இழுத்து வெளியே விட்டவன், “நிலா வயிற்றில் வளர்வது மூன்று வாரக் கரு. அதனால் தானே நீ இப்படி பேசுற... ஒரு வேளை அது நிஜமாவே சிவாவின் குழந்தையா இருந்தா, என்ன செய்வ?” என்று சொல்லி அவளைக் குழப்பப் பார்த்தான்.

ஆனால் தெளிவாக பேசினாள் ரோஜா.

“அண்ணன் ஒரு மாசத்துக்கும் மேல நிலாவை பார்க்கவே இல்ல. இதுல எப்படி ரெண்டு பேருக்கும் குழந்தை வரும்” என்றாள் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டபடி.

“ச்சீ... உனக்கு கொஞ்சமும் மேனர்ஸ் இல்லையா ரோஜா. அது அவங்களோட அந்தரங்கம். உன் அண்ணன் நிலாவைப் பார்க்கலைன்னு சொன்னா அதை உடனே நீ நம்பிடுவியா?” என்றான் முகத்தை சுழித்தபடி.

“நீங்க என்னை எவ்வளவு கேவலமானாலும் பேசுங்க... ஆனா உங்க தங்கச்சியின் அசிங்கத்தை நான் வெளிக்கொண்டு வராமல் விட மாட்டேன். நீங்க சொல்ற மாதிரியே இருந்தாலும், குழந்தை உருவான தேதியை எதுக்காக மாத்தணும்? இதுலையே தெரியலையா உங்க தங்கச்சி எவ்வளவு பெரிய மோசக்காரின்னு” என்று நிலாவை வரம்பு மீறி ரோஜா திட்டும் போது, பேசாமல் தான் இருந்தான் நிலவன்.

இதுவே நிலாவின் மீது தவறு இல்லாமல் இருந்திருந்தால், இப்போது நடந்திருக்கும் கதையே வேறு.

ஆனாலும் அவன் இப்போது தன் தங்கைக்கு ஆதரவாகப் பேசுகிறானா அல்லது ரோஜாவிற்கு ஆதரவாகப் பேசுகிறானா, என்பது எல்லாம் அவனுக்கு மட்டுமே வெளிச்சம்.

“ரிப்போர்ட் இப்ப என்கிட்ட இல்ல. நீ சொல்றதை நானும் நம்பல. உன் அண்ணன் கிட்ட இதை மறுபடியும் பேசி, நீ அசிங்கப்பட்டுப் போகாத” என்றான் நிலவன்.

“அதை எல்லாம் நான் பார்த்துப்பேன். இப்ப நான் எங்க வீட்டுக்குப் போயிட்டு தான் ஹாஸ்பிடல் வருவேன்” என்றாள் முடிவாக.

“சரி வா, நானே உன்னைக் கொண்டு விடுறேன்” என்றவன் அவளை அழைத்துச் சென்று கங்கா பேலஸ்ஸில் விட்டுவிட்டு, தன் நிறுவனம் நோக்கிச் சென்றான்.

தன் தங்கையைக் கண்டதும் ஓடி வந்து அவளை அணைத்து விடுவித்த சிவா, “எப்படி இருக்க ரோஜா. அங்க எல்லாம் ஓகே தானே!” என்று அன்போடு அவளிடம் வினாவினான்.

‘நீ சொல்றதை உன் அண்ணன் நம்ப மாட்டான்’ என்று சொன்ன நிலவனின் குரல் ரோஜாவின் காதில் அருவமாகக் கேட்டது.

சிவாவிடம் எதையும் நேரடியாக பேச முடியாது என்பதனை நன்றாக உணர்ந்திருந்த ரோஜா, “எங்கையாவது வெளிய போறியா அண்ணா?” என்று கேட்டாள், அவன் கிளம்பி இருப்பதைப் பார்த்து.

“ஆமாம் ரோஜா. நிலாவை நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டு வரும் ஏற்பாட்டைத் தான் பண்ணிக்கிட்டு இருக்கேன். சரி நீ இரு” என்று சொல்லிவிட்டு, விசில் அடித்தபடி வெளியே சென்ற சிவாவைப் பார்த்துத் தன் தலையில் கையை வைத்து விட்டாள் ரோஜா.

‘இவ்வளவு அப்பாவியா, அன்பை வாரி வழங்கும் என் அண்ணனுக்கு, நிலா போல் ஒரு மனைவியா! இல்ல இதை நான் நடக்க விடவே மாட்டேன்’ என்று தன் மனதில் சூளுரைத்துக் கொண்ட ரோஜா, தன் அன்னை பரணியைக் காண, அவரது அறைக்குச் சென்றாள்.
 

NNO7

Moderator
அத்தியாயம் – 29

‘தன் அன்னை, நிறுவனத்திற்கு சென்று இருப்பாரோ!’ என்ற சந்தேகத்தில் தான் பரணியைக் காண சென்றாள் ரோஜா.

ஆனால் அவளது நல்ல நேரத்திற்கு அப்போது பரணி தன் அறையில் தான் இருந்தார், கோப்புக்களைப் பார்வையிட்ட படி.

அவரின் அறைக்கதவைத் தட்டிவிட்டு உள்ளே சென்றவள், “அம்மா உங்கக்கிட்ட பேசணும்” என்றாள் தன் பார்வையை தரையை நோக்கிப் பதித்தபடி.

தான் படித்துக் கொண்டிருந்த கோப்பை எடுத்து ஓரமாக வைத்தவர், “இங்க வா ரோஜா” என்றவர், அவளைத் தன் அருகே இருந்த இருக்கையில் அமர வைத்தார்.

அவள் பேசுவதற்கு முன்பே, ஏதோ ஒரு மனக்குழப்பத்தில் தான் ரோஜா இங்கு வந்திருக்கின்றாள் என்பதனை அவளது முகத்தைப் பார்த்தே அறிந்து கொண்டவர், “ஆயிரம் கஷ்டங்கள் வந்தாலும், எல்லாத்தையும் எதிர்த்து நான் நிற்பேன்னு, தைரியமா சொல்லித் தான், இன்னைக்கு நீ நிலவனின் வீட்டுல இருக்க. ஆனா நிலவன் வீட்டுக்குப் போகும் போது இருந்த முகம் இப்ப உனக்கு இல்ல” என்றார் அவளது முக மாற்றத்தை நன்றாக உணர்ந்தபடி.

அதில் கண்கள் கலங்கிப் போக தன் அன்னையை ஏறிட்டவள், “எனக்கு அந்த தைரியம், இப்போது இல்லைன்னு நீங்க நினைக்குறீங்களா அம்மா” என்றாள்.

“ச்சே... ச்சே... நான் அப்படி சொல்லலை ரோஜா. என்ன வந்தாலும் கவலைப் படக்கூடாதுன்னு தான் நான் சொல்லுறேன்” என்றார் அவளது கையைப் பற்றியபடி.

“இது என்னைச் சார்ந்த கவலை இல்லம்மா” என்று அவள் வாயில் இருந்து வந்த உடனே, புத்திசாலியான பரணி கண்டுகொண்டார், ரோஜா தன்னிடம் வந்திருப்பது சிவாவிற்காக என்று.

“நிலா ஏதாவது பிரச்சினை பண்றாளா?” என்று கேட்டார்.

‘தன் அம்மாவுக்கும் நிலாவைப் பற்றி தெரிந்து தான் உள்ளது’ என்று நினைத்த ரோஜா, “ஆமாம் அம்மா” என்றவள், நிலாவையும் சிவாவையும் பற்றி ஒன்று விடாமல் அனைத்தையும் மடமடவென்று சொல்லி முடித்தாள்.

அதனை எல்லாம் கேட்ட பரணியின் கண்களில் கோபக் கங்குகள் பறந்தது. இருந்தும் அவர் எப்போதும் போல், அமைதியாகவும் அதே சமயம் அழுத்தமாகவும், அவரது ஆளுமை நிறைந்த குரலில், “இதைப் பத்தி நீ சிவாக்கிட்ட பேசுனீயா?” என்று கேட்டார்.

அவளோ, “ஆம்” என்று தன் தலையை ஆட்டி, “ஆனா அண்ணன் அதைப் புரிந்துகொள்ளவில்லை அம்மா” என்ற விரக்தியானக் குரலில் சொல்லிவிட்டு, “ஆனா, இதை நான் கண்டிப்பா ஆதாரத்துடன் அண்ணனுக்கு நிரூபிப்பேன் அம்மா” என்றவளைப் பார்த்தவர் மெல்லியதாக சிரித்தார்.

பரணியின் சிரிப்பின் அர்த்தம் புரியாத ரோஜா, “நான் இப்ப என்னம்மா செய்யுறது?” என்று கேட்டாள்.

“விட்டுவிடு ரோஜா. நீ ஆதாரத்தைக் காமிச்சாலும் சிவா நம்பப்போறது இல்ல. இன்னைக்கோ நேத்தோ இல்ல, சிவா நிலாவின் கைக்குள் போய் பல வருஷம் ஆகிடுச்சு” என்றவர் பேச்சில் அதிர்ந்தாள் ரோஜா.

“அம்மா, நீங்க என்ன பேசுறீங்க? சிவா உங்க பையன் அம்மா. தெரிஞ்சே அவனை ஆபத்தானக் குழியில் போய் தள்ளலாமா?” என்றாள் அழும் குரலில்.

“ஆபத்தைத் தேடிப் போனது அவன் தானே! அவரவர் வாழ்க்கை அவரவர் கையில் தான் இருக்கு ரோஜா. அதை நீயோ நானோ மாற்ற முடியாது” என்று சொல்லிவிட்டு அமைதியானார்.

“ஆனா அம்மா...” என்று எதுவோ, சொல்லப்போன, ரோஜாவின் பேச்சைத் தடுத்தவர், “இதை நீ மாத்த நினைச்சா, உன் அண்ணன் இனி உனக்கு இல்ல. அந்த நிலா சிவாவை உனக்கு எதிரா தூண்டி விடுவாள்” என்றவர் அவளது தலையைத் தடவியபடி, “அந்த நிலா எதற்கும் துணிந்தவள் ரோஜா. இதில் நீ தலையிட்டால் உன்னை எந்த எல்லைக்கும் போய் அசிங்கப்படுத்துவாள். உன்னால் அதை எல்லாம் தாங்க முடியாது” என்றவர் உணர்ச்சிகரமாகப் பேசினார்.

“நிலவனும் நீங்க சொன்ன மாதிரியே தான் சொன்னாரு அம்மா” என்று ரோஜா சொன்னதும், பரணியின் புருவம் யோசனையில் சுருங்கியது.

“என்னது நிலவனா?” என்றார்.

“ஆமாம் அம்மா. அந்த ரிப்போர்ட்டை, என் கைக்கு வரவச்சது கூட அவர் தான்” என்று ரோஜா சொன்ன வார்த்தைகளைக் கேட்டவர் இதழ் மெல்லியதாக விரிந்தது.

“உன்கிட்ட அவன் பாசமா பேசுறானா ரோஜா?” என்று மனதில் தோன்றிய மகிழ்ச்சியுடன் தன்னையும் மீறி கேட்டுவிட்டார்.

நேற்று இரவு அவன் கொடுத்த நெற்றி முத்தத்தை யோசித்துப் பார்த்தவளின் கன்னங்கள் சிவந்து போக, “ம்... பேசுறார் அம்மா” என்றாள் தன் தலையைக் குனிந்தபடி.

அவள் பேச்சில் மனம் குளிர்ந்த பரணி, ‘அப்பா, நிஜமாவே நீங்க நினைச்சது நடக்குமா?’ என்று தன் தந்தையை நினைத்துக் கொண்டார்.

ரோஜாவின் கையைத் தடவிய பரணி, “அப்படின்னா நிலவன் நல்ல எண்ணத்தில் தான் இதைப் பண்ணி இருக்கணும் ரோஜா” என்றார்.

அதற்கு தன் முகத்தைச் சுழித்த ரோஜா, “அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை அம்மா. இதை நான் சிவாகிட்ட சொன்னா, எனக்கும் அவனுக்கும் சண்டை வரும்னு தெரிஞ்சி தான், அவர் அப்படி பண்ணி இருக்கார்” என்றாள்.

அதற்கு சிரித்துக் கொண்ட பரணி, “நிலவன் உன்கிட்ட விளையாடி இருப்பான் ரோஜா. எனக்குத் தெரிஞ்சி நிலவன் இப்படி எல்லாம் விளையாட்டுத் தனமா பேசுறவன் கிடையாது. கங்கா நிறுவனத்தை எப்படி எல்லாம் தோற்கடிக்கலாம்னு ஒரு அசுரன் போலவே சுத்திக்கிட்டு இருப்பான். உண்மையை சொல்லப்போனா, நிறுவனத்தைக் கட்டிக் காக்குறதுல அவன் ஒரு இயந்திரம். என்னைப் பார்த்து தான் அவன் இப்படி ஆகிட்டானோன்னு, நான் கவலைப் படாத நாளே கிடையாது” என்றவர் கண்களின் ஓரம் சிறியதாக கண்ணீர் வழிந்தது.

உடனே சிரித்துக் கொண்டு, அதனை துடைத்து சமாளித்தவர், “இருந்தாலும் பாசத்துக்கு நீ அடிபணியக் கூடாது ரோஜா. நடக்கும் சதுரங்க ஆட்டத்தில் யார் நல்லவங்க யார் கெட்டவங்கன்னு உனக்குத் தெரியாது. நிலவன் பாசமா பேசுன உடனே அதில் நீ மயங்கியும் விடக்கூடாது” என்று பேச, ரோஜாவுக்குத் தான் அவரது பேச்சைக் கேட்டு தலை சுற்றியது.

‘இவங்க இப்ப என்கிட்ட என்ன தான் சொல்ல வராங்க? நிலவன் நல்லவன்னு சொல்றாங்களா! இல்லைக் கெட்டவன்னு சொல்றாங்களா!’ என்று நினைத்துக் குழம்பினாள்.

தன் தலையைப் பிடித்துக் கொண்டவளுக்கு மயக்கம் வருவது போல் இருக்க, பரணியின் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.

ரோஜாவைப் பார்த்துப் பதறிய பரணி, அவளது தோள்களைத் தாங்கி, “என்னாச்சி ரோஜா. இரு அம்மா டாக்டரைக் கூப்பிடுறேன்” என்று சொல்லியபடி, எட்டி தன் அலைபேசியை எடுத்தார்.

மயக்கத்துடனே அவரது கையைப் பிடித்தவள், “வேண்டாம் அம்மா. நான் ப்ரெக்னன்ட்டா இருக்கேன். அதனால தான் என்னோட தலை சுத்துது” என்று சொல்லி அவரை அதிரச்செய்தாள்.

****

“அந்த வனரோஜா கைக்கு என்னோட ஸ்கேன் ரிப்போர்ட் எப்படி அண்ணா போச்சு” என்று நிலவனின் அலுவலக அறையில் அவனிடம் கத்திக்கொண்டு இருந்தாள் நிலா.

அவளைக் கிஞ்சித்துக்கும் மதிக்காமல் தன் டேப்பில் மும்முரமாக வேலை பார்த்துக் கொண்டிருப்பது போல், ஜிடியே சிக்ஸ் விளையாடிக் கொண்டு இருந்தான் நிலவன்.

அவனுக்கு முன்னே இருந்த மேஜையைத் தட்டிய நிலா, “அண்ணா, நான் உன்கிட்ட தான் கேட்குறேன். என்ன பண்ணிக்கிட்டு இருக்க?” என்று எரிச்சலாகக் கத்தினாள்.

“வேலை இருக்குது நிலா” என்றான் கேமில் வரும் நபர்களை எல்லாம் சுட்டு விழ்த்தியபடி.

“என்னை விட முக்கியமான வேலை உனக்கு வேற என்ன இருக்கு” என்றதும், தன் டேப்பை எடுத்து ஓரமாக வைத்தவன், “சொல்லு” என்றான் அவளைப் பார்த்தபடி.

“சிவா நான் சொன்ன எல்லாத்துக்கும் சரின்னு சொல்லிட்டாரு. எங்க கல்யாணத்தைப் பதிவு செய்யுறதுக்குக் கூட ஏற்பாடு செஞ்சிட்டார். ஆனா இந்த வனரோஜா என் சந்தோஷத்தைக் குழி தோண்டி புதைக்கவே சுத்திக்கிட்டு இருக்காள். உன்கிட்ட இருந்த என்னோட ஸ்கேன் ரிப்போர்ட்டை அவள் எப்படி பார்த்தாள்?” என்றாள் மேஜையின் மீது கைவைத்தபடி.

தன் கழுத்தைத் தடவியவன், “உனக்கு இந்த திட்டத்தைப் போட்டுக் கொடுத்ததே நான் தான் நிலா. ஆனா நீ என் மேல் சந்தேகப்பட்டு பேசுற மாதிரி இருக்கு” என்றான் நிலவன்.

“ஐயோ அண்ணா நான் அந்த அர்த்தத்துல கேட்கல. அந்த ரோஜாவை நீ அவாய்ட் பண்ணு. நான் பார்க்கும் போதெல்லாம், அவள் உன்னோட ரூம்ல இருந்து தான் வர்றா.. போறா.. அதனால் சொன்னேன்” என்றாள் வேகமாக.

“சிவா நிஜமாவே குழந்தையை என்கிட்ட கொடுக்குறதுக்கு சம்மதிச்சிட்டானா நிலா” என்று கேட்டான் நிலவன்.

நிலாவோ, “அது எல்லாம் இப்ப எதற்கு? பிறகு பார்த்துக்கலாம் அண்ணா” என்றாள்.

“பிறகுன்னா எப்ப? உனக்குக் குழந்தை பிறந்ததுக்குப் பிறகா? ஆனா குழந்தை உன் சாயலில் பிறக்காமல், தன்னோட வெள்ளைக்கார அப்பன் நிறத்தில் பிறந்தால் என்ன செய்வ?” என்று அவன் கேட்டது தான் தாமதம், “அண்ணா” என்ற அதிர்ச்சியில், தன் இருக்கையில் இருந்து எழுந்தாள் நிலா.

“எதுக்கு இவ்வளவு ஷாக் ஆகுற? நீ போன பப்புக்குப் போய் நான் எல்லாத்தையும் விசாரிச்சுட்டேன். இப்ப இல்லைனாலும் குழந்தை பிறந்ததும் நீ மாட்டிப்ப நிலா” என்றான் நிலவன்.

“என்னைப் பயப்படுத்துறியா அண்ணா” என்றாள் தன் நெஞ்சில் கையை வைத்தபடி.

“இல்லை” என்று மறுப்பாகத் தன் தலையை ஆட்டியவன், “நான் நிதர்சனத்தைத் தான் சொல்றேன் நிலா. ஆனா என்கிட்ட வேற ஒரு திட்டம் இருக்கு” என்றதும் தன் அண்ணன் தனக்காக இருக்கின்றான் என்ற நினைப்பில், “சொல்லு அண்ணா” என்றாள், அவனிடம் தன் கவலைக்கான பார்முலா இருக்கும் என்ற நினைப்பில்.

“உனக்குக் குழந்தை வேணுமா? இல்லை சிவா வேணுமா? இந்த இரண்டில் ஒன்னைத் தான் நீ தேர்ந்து எடுக்கணும் நிலா?” என்று கண்டுப்புடன் கூறினான் நிலவன்.

“அண்ணா, சிவா எனக்கு வேணும். ஆனா குழந்தை உனக்கு வேணுமே!” என்றாள் நிலா.

“இல்ல நிலா. எனக்குக் குழந்தை வேண்டாம். உன் நலன் தான் எனக்கு முக்கியம். நீ உன்னை மட்டும் பாரு. குழந்தை உனக்கு வேணும்னு நீ நினைச்சா, சிவா உனக்குக் கிடைக்க மாட்டான்” என்று அவளுக்குப் புரிய வைக்க முயற்சி செய்தான் நிலவன்.

“இல்லை அண்ணா. இந்தக் குழந்தையை நான் பெத்து உன் கையில் கொடுத்தாத் தான் எனக்கு சொத்தும் கிடைக்கும். அதனால், எனக்கு டெலிவரி ஆகுற அன்னைக்கு நம்ம மருத்துவமனையில் வேற குழந்தை பிறந்தா, நான் அதை வச்சி மாத்திப்பேன். நம்ம ஹாஸ்பிடலுக்கு அதிகமா இந்தியர்கள் தானே வராங்க. அதனால பிரச்சனை இல்ல. எல்லாத்துக்கும் திட்டம் என்கிட்ட இருக்கு. அதை செயல்படுத்துறதுக்கு நீ இருக்க. இதில் சிவாவா இல்லைக் குழந்தையா என்ற பேச்சுக்கே இடம் இல்ல அண்ணா” என்றவளைப் பார்த்து மலைத்து தான் போனான் நிலவன்.

நிலாவின் சூழ்ச்சிகள் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே தான் இருக்கின்றது. நிலாவைத் தடுத்து சிவாவைக் காக்க ரோஜா வருவாளா? அல்லது பரணியும் நிலவனும் பின்வாங்க சொன்னதைக் கேட்டு பின் வாங்கிவிடுவாளா? அனைத்தும் ரோஜாவின் கையில் மட்டுமே!














 

NNO7

Moderator
அத்தியாயம் – 30

நிலவனின் பேச்சை நிலாவால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

“நீ எப்படி அப்படி ஒரு கேள்வியைக் கேட்ட அண்ணா? சிவா வேணுமா இல்லைக் குழந்தை வேணுமான்னு கேட்குற?” என்றவள் தன் வயிற்றைத் தடவி, “இந்தக் குழந்தையை நான் அழிக்காமல் வளர்ப்பதே உனக்காக மட்டும் தான்” என்றாள் கண்களில் நீர் பொங்க.

“ஆரம்பத்தில் நீ சொன்னதுக்கு, நான் சரின்னு சொன்னது, உனக்காகத் தான் நிலா. எனக்காக இல்ல” என்றான் நிலவன்.

“குழந்தை வேண்டாம்னு நீ நினைச்சா, எதிர்காலத்துல என்ன செய்வ? உனக்கும் குழந்தை பிறக்காது. நானும், என் சிவா மற்றும் என் குழந்தை குட்டின்னு இருப்பேன். உன்னைப் பார்க்குறதுக்கு யாரும் இருக்க மாட்டாங்க” என்று நிலா பேசிக்கொண்டே போக, தன் வாயைத் திறந்து கொட்டாவி விட்டவன், “சரி நீ போறியா... எனக்கு வேலை இருக்கு” என்று சொல்லி அவளை அனுப்பப் பார்த்தான் நிலவன்.

“என்ன அண்ணா கொஞ்சம் கூட சீரியஸ்னஸ் இல்லாமல் பேசுற. குழந்தை எப்படினாலும் பிறக்கட்டும், எல்லாத்துக்கும் என்கிட்ட ஐடியா இருக்கு” என்றாள் முகத்தை வில்லி போல் வைத்துக்கொண்டு.

மூச்சை இழுத்து வெளியேவிட்ட நிலவன், “சரி நிலா. நீ என்ன செய்யுறதா இருந்தாலும் அதுக்கு நான் உனக்குத் துணையா இருப்பேன்” என்று சொன்னதோடு முடித்துக் கொண்டான் நிலவன்.

நிலா செய்வது எல்லாம் தவறு என்று நன்றாகவே அறிந்திருந்த நிலவனுக்கு, அவளைத் தடுக்கும் எண்ணமெல்லாம் சிறிதும் இல்லை. அவனுக்குத் தெரிந்தது எல்லாம், நிலாவைத் தடுத்து நிறுத்தப்பார்த்தால், அவள் இன்னும் உக்கிரமாக வெடித்துச் சிதறுவாள் என்று.

*********

தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ரோஜா, பரணியிடம் சொன்னதும், விழிவிரித்துப் பார்த்தார் பரணி.

அவரது கண்களில் கோபம் இல்லாததைக் கண்டு, ரோஜாவின் மனது ஆசுவாசமடைய, “எப்படி இப்படி ஆச்சுன்னே தெரியல அம்மா. நிலவனின் குழந்தை தான் இப்ப என் வயிற்றில் வளருது” என்றாள் தலையைக் குனிந்தபடி.

எப்போதும் துக்கத்தையும் சரி, பாசத்தையும் சரி வெளியே காட்டிக்கொள்ளாத பரணியின் முகத்தில் மகிழ்ச்சியின் சாயல்.

அதை அவர் மறைப்பதற்கு முன்னால் பார்த்துவிட்ட ரோஜாவுக்குத் தான், ‘தன் அன்னைக்கு மனதில் மகிழ்ச்சியோடு சிரிக்கவும் தெரியுமா!’ என்று ஆச்சரியமாக இருந்தது.

“அம்மா, உங்களுக்கு என் மேல் கோபம் இல்லை தானே!” என்றாள் ரோஜா.

“இல்லைன்னு எல்லாம் சொல்லமாட்டேன் ரோஜா. நல்ல யோசிச்சுப் பாரு. நீ நிலவனை வெறும் ரெண்டு வருஷத்துக்கு மட்டும் தான் கல்யாணம் பண்ணி இருக்க. இதில் குழந்தை வேற. எப்படி சமாளிப்ப?” என்று தன் சந்தேகத்தை அவளிடம் கேட்டார்.

“தனியா வளர்க்குறதுன்னு முடிவு பண்ணிட்டேன் அம்மா. எனக்கு வேற எதுவும் வேண்டாம்” என்றாள் கண்ணீருடன்.

“நான் ரொம்பவே முற்போக்குவாதி தான் ரோஜா. நிலவன் உனக்கு செஞ்சது மிகப்பெரிய துரோகம். உன்னை அவன் ஏமாத்திக் கல்யாணம் பண்ணது ரொம்பப் பெரிய தப்பு. அவனை ஏத்துக்கோன்னு நான் ஒருநாளும் உன்கிட்ட சொல்லமாட்டேன். ஆனா, வாழ்க்கை முழுவதும், அவனுடன் நீ வாழ நினைத்தால், அதுக்கு இந்தக் குழந்தை காரணமா இருக்கக்கூடாது” என்றவரை மெய்மறந்து தான் பார்த்தாள்.

காதல் கொண்டு மட்டுமே உன் வாழ்க்கை இருக்க வேண்டும் என்று பரணி ரோஜாவுக்கு எடுத்துரைத்தார்.

ரோஜாவுக்குத் தண்ணீர் பருக கொடுத்தவர், அவளது நாடியைப் பிடித்துப் பார்த்தார்.

“நீ ரொம்ப வீக்கா இருக்க ரோஜா. உன்னை செக் பண்ணனும்” என்றவரைப் பார்த்தவள், “அம்மா... நீங்க...” என்று அவள் தடுமாற, “நானும் உன்னை மாதிரியே ஒரு டாக்டர் தான் ரோஜா” என்று கூறி அவளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் பரணி.

“என்னம்மா சொல்றீங்க? சிவா அண்ணனும் சொல்லவே இல்ல. நீங்க ரிடையர்ட் ஆகிட்டீங்களா” என்றாள் மகிழ்ச்சி ததும்பியக் குரலில்.

அதற்கு வெற்று சிரிப்பை சிந்தியவர், “இல்லடா, டாக்டரா இருக்கும் தகுதியை இழந்துட்டேன்” என்றதும் ஆறுதலாக தன் அன்னையின் கையைப் பிடித்தாள் ரோஜா.

“எனக்கு ஒன்றும் இல்லை” என்று தன் தலையை ஆட்டிக்கொண்டவர், “பழைய விஷயங்கள் எல்லாம் இப்ப எதுக்கு?. நீ இந்தக் குழந்தையை வளர்ப்பதில் உறுதியாகத் தானே இருக்க” என்றார் மறுபடியும்.

“ஆமாம் அம்மா. இதில் எந்த வித மாற்றமும் இல்ல. அதே போல நம்ம நிறுவனத்தையும் நான் பழைய படி கொண்டு வருவேன்” என்றாள் நம்பிக்கையுடன்.

அதற்கு அவளது தலையை நீவிவிட்டவர், “எல்லா பொறுப்பையும் எடுத்து உன் தலைமேல் போட்டு வைக்காத ரோஜா. நிலாவின் விஷயத்தில் நீ மிகவும் ஜாக்கிரதையா இருக்கணும்” என்று சொல்ல தன் தலையை ஆட்டிக்கொண்டாள் ரோஜா.

“சரி நம்ம ஹாஸ்பிடலுக்கு நீ இப்பவே என்கூட செக்அப் பண்ண வா” என்றார் பரணி.

“இல்லம்மா, மேகின்னு ஒரு டாக்டர் இருக்காங்கலாமே நான் அவங்கக்கிட்ட செக்கப் வரேன்னு அண்ணன் சொல்லிட்டான்” என்ற ரோஜா, மேகி தங்களது மருத்துவமனையில் வேலை பார்க்காத காரணத்தையும் சேர்த்து சொல்லி முடித்தாள்.

“சிவா சிஇஓவா பொறுப்பெடுத்து இருக்கும் போது இவ்வளவு விஷயம் நடந்துருச்சா” என்றவர், ரோஜாவைப் பார்த்து, “மேகிக்கிட்ட நான் பேசிக்குறேன். நீ நம்ம ஹாஸ்பிடலுக்கு வா” என்று சொல்லி அவளைக் கையுடன் அழைத்துச் சென்றார் பரணி.

****

ஹாஸ்பிடலில் செக்அப் செய்துவிட்டு, ரோஜாவிடம் ஆயிரம் பத்திரம் சொல்லி, நிலவனின் வீட்டில் விட்டு சென்றார் பரணி.

ரோஜா உள்ளே நுழையும் போதே, அங்கே இருந்த வேலையாட்களிடம் எதுவோ கத்திக்கொண்டு இருந்தாள் நிலா.

அங்கே நடப்பது எதையும் துளியும் கண்டுக்கொள்ளாமல், தன் அறைக்குச் செல்ல மாடி ஏறினாள் ரோஜா.

“ஏய் கொஞ்சம் நில்லு” என்று அதிகாரமாய் ரோஜாவை கூப்பிட்டாள் நிலா.

திரும்பி நிலாவைப் பார்த்த ரோஜா, “நீ என்னையவா கூப்பிட்ட?” என்று கேட்டாள், “ஆமாம்” என்றவள், தன் முன்னே கையைக் கட்டிக்கொண்டு நின்று இருந்த வேலைக்காரர்களைப் பார்த்தவள், “நீங்க எல்லாம் வெளிய போங்க” என்று உத்தரவிட்டாள்.

அவர்கள் சென்றதும் ரோஜாவின் அருகே வந்தவள், “வேலைக்காரங்க அவங்க வேலைய ஒழுங்கா பார்க்குறதே இல்ல. ரூம் முழுக்க ஒரே டஸ்ட். உன் ரூமும் அப்படித் தான் இருக்கா?” என்று கேட்டாள்.

‘இவள் எதற்காக தன்னிடம் பேசிக்கொண்டு இருக்கின்றாள்’ என்று நினைத்த ரோஜாவோ, நிலாவின் ஏமாற்றுத் தனத்தால் கோபத்தில் இருந்தவள், “என்னோட ரூமை நல்லாத் தான் கிளீன் பண்ணி இருக்காங்க. ஒருவேளை மனசு சுத்தம் இல்லாதவங்களுக்கு, அவங்க ரூமும் சுத்தம் இல்லாதது போல் தோணுதோ என்னவோ” என்றாள் அவளைக் குத்திக்காட்டியபடி.

அதற்குப் பல்லைக் கடித்தவள், “உன்னோட அண்ணன் குழந்தையைத் தான் நான் சுமக்குறேன். அந்த மரியாதையை உன் மனசுல வச்சிப் பேசு வனரோஜா” என்றாள் நிலா.

ரோஜா, “ஐய... உன் ரீல் எல்லாம் அந்து போச்சு” என்றாள் தன் காதில் சுண்டுவிரலை விட்டபடி.

அதற்கு தன் உதட்டை சுழித்தவள், “சிவா எல்லாத்தையும் என்கிட்ட சொன்னாரு” என்றாள் எல்லாத்தையும் என்ற வார்த்தையில் ஒரு வித அழுத்தத்தைக் கூட்டி.

“ஒருத்தனை ஏமாத்துறோம்னு உனக்குக் கொஞ்சமும் மனசு உறுத்தலையா?” என்று கோபத்தில் கத்தினாள் ரோஜா.

“எனக்கு ஏன் உறுத்தப்போகுது. நான் சத்தியம் பண்ணி சொல்றேன் என் வயிற்றில் வளர்வது சிவாவின் குழந்தை தான்” என்றாள் ரோஜாவை உறுத்து விழித்தபடி.

ரோஜா, “ஆனா நீ வெறும் மூன்று வாரம் மட்டும் தானே கர்ப்பமா இருக்க? என்னோட அண்ணன் உன்னை ஒரு மாசத்துக்கும் மேல பார்க்கவே இல்லையே!” என்றாள் பல்லைக் கடித்துக்கொண்டு.

தன் கன்னத்தில் கைவைத்துக் கொண்டு “ஏய் வனரோஜா, நீ கர்ப்பமா இருக்கன்னு சிவா சொன்னாரே! எப்படி ப்ரெக்னன்ட் ஆனன்னு நான் கேட்டா, எவ்வளவு அசிங்கமா இருக்கும்? ஆனா நீ கொஞ்சமும் கூச்ச நாச்சம் இல்லாமல் கேட்குற” என்றாள் முகத்தை அசுகையாக வைத்துக் கொண்டபடி.

நிலா சொன்னதை உள்வாங்கிக் கொண்ட ரோஜாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அவளின் அதிர்ச்சியைக் கண்ட நிலா, முகத்தில் எகத்தாளத்தோடு, “என்னாச்சி வனரோஜா? எனக்கு எப்படி இந்த விஷயம் தெரியும்னு பார்க்குறியா? உன்னோட அண்ணன் தான் சொன்னாரு” என்றாள்.

தொடர்ந்து பேசிய நிலா, ”உன்னோட ஒவ்வொரு அசைவையும் தவறாமல் சிவா என்கிட்ட சொல்லிடுவார். என்ன தான் உன்னைக் காப்பாத்த வேண்டி என்கிட்ட அவர் பிரேக்அப் பண்ணி இருந்தாலும், அவர் மனசுல இருந்து என்னை எப்போதும் தூக்கி எறியமாட்டார். சங்கிலியை அத்துக்கொண்டு ஓடும் நாய், திரும்ப அதோட ஓனர்கிட்ட வந்து தானே ஆகணும்” என்று மிகவும் தரம் தாழ்ந்து சிவாவை, நாயுடன் ஒப்பிட்டுப் பேசினாள்.

ஆனால் அதற்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் நிலையில், ரோஜா இல்லை. பரணி, நிலாவைப் பற்றி சொல்லியது எல்லாம் இப்போது தான் அவளுக்கு விளங்கவே ஆரம்பித்தது.

தன் வயிற்றைத் தடவிய நிலா, “நீ என்னமோ பண்ணிக்கோ. நீ ப்ரெக்னன்ட்டா இருக்குறது எல்லாம் எனக்குக் கவலைக் கிடையாது. என் அண்ணனுக்குக் குழந்தை பிறக்க வாய்ப்பே இல்லை. உனக்குக் குழந்தை பிறந்தாலும், அது அவனோடது தான்னு நம்ப மாட்டன் என் அண்ணன்” என்று சொல்லி பேய் சிரிப்பு சிரித்தாள்.

தன் அண்ணன் சிவாவைப் பற்றிய யோசனையில் இருந்து வெளியே வந்த ரோஜா, நிலா பேசிய பேச்சுக்களைக் கேட்டு, ‘பேட்டர்னிட்டி டெஸ்ட் பத்தி எல்லாம் இந்த முட்டாளுக்குத் தெரியாதா! என்னென்னவோ பேசுறா.. இவள் கிட்டப் பேசுனா எனக்குத் தான் தலை வலிக்கும்’ என்று நினைத்த ரோஜா, மாடி ஏறி செல்லபோக, அவளின் கையைப் பிடித்துத் தடுத்து நிறுத்தினாள் நிலா.

“ம்ச்... என் கையை விடு நிலா” என்றாள் ரோஜா.

“என் ரூம் குப்பையா இருக்கு. நீ வந்து கிளீன் பண்ணிக்கொடு” என்றாள் அவளை முறைத்துப்பார்த்து.

“அதெல்லாம் முடியாது நிலா. நான் ஒன்னும் நீ வச்ச ஆள் இல்ல” என்றாள் தன் தாடை இறுக.

“இந்த வீட்டுல நீ இருக்கணும்னா, நான் சொல்றதைத் தான் நீ கேட்டு ஆகணும்னு, நீ வந்த அன்னைக்கே என் அண்ணன் சொல்லி இருப்பாரே! பிறகு ஏன் அடம்பிடிக்குற?” என்றாள் ரோஜாவின் கையில் அழுத்தத்தைக் கூட்டியபடி.

“ம்ச்... எனக்கு வலிக்குது நிலா. எனக்கு உடம்பு வேற சரியில்ல. தயவு செஞ்சி என் கையை விடு” என்றாள் வலியில்.

நிலாவின் சத்து மிகுந்த கைகளில், அடைபட்டு தான் போனது ரோஜாவின் கோழிக்குஞ்சி போன்ற கைகள்.

“விடணுமா? சரி விட்டுடுறேன்” என்றபடி ரோஜாவை, தன் சக்தியை எல்லாம் ஒன்று திரட்டி, ஒரே தள்ளாக கீழே தள்ளினாள் நிலா.








 

NNO7

Moderator
அத்தியாயம் – 31

மாடிப்படியில் உள்ள நான்காம் படியில் நின்று நிலாவுடன் பேசிக் கொண்டிருந்த ரோஜா, நிலா தள்ளிய தள்ளில் தலைகுப்புற விழப்போக, அந்த நேரம் சரியாக எங்கிருந்தோ வந்த நிலவன், ரோஜாவின் தோள்களைப் பிடித்து, அவளை அணைத்துத் தன் நெஞ்சில் சாய்த்துக்கொண்டான்.

அரக்கி போல் முகத்தை கோரமாக வைத்துக் கொண்டு ரோஜாவை கீழே தள்ளப்பார்த்த நிலாவோ, தன் அண்ணனை, அந்த நேரத்தில் அங்கு எதிர்பார்க்கவே இல்லை.

ரோஜாவோ பயத்தில், நிலவனின் நெஞ்சத்தில், இன்னும் நன்றாக சாய்ந்து கொண்டாள். அவளது உடம்பு அதீத பயத்தில் நடுங்கிக்கொண்டே இருந்தது.

ரோஜாவின் முதுகை நீவிவிட்ட நிலவன், தனது சுட்டு எரிக்கும் அனல்விழிப் பார்வையால் நிலாவைப் பார்த்தான். அவன் கண்களில் நிஜமாகவே எரிக்கும் சக்தி இருந்திருந்தால், அப்போதே நிலா சாம்பலாகி இருப்பாள். அப்படித் தான் இருந்தது அவனது பார்வை.

‘தான் கண் அசைவில் இட்ட வேலையை எல்லாம் தலையில் ஏற்று செய்து முடிக்கும் தன் அண்ணனா, தன்னை இப்படி ஒரு பார்வையால் பார்ப்பது’ என்று அதிர்ச்சியாகி அவனைப் பார்த்தாள் நிலா.

‘நிலவனின் கண் முன்னால், தான் ஒரு குற்றவாளி ஆகிவிடக்கூடாது’ என்று நினைத்த நிலா, வேகமா, “நானே ப்ரெக்னன்ட்டா இருக்கேன் அண்ணா, இந்த வனரோஜா கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாமல், என்னைக் கீழே தள்ளிவிட பார்த்தாள். நல்ல வேளை, நான் பேலன்ஸ் தவறாமல் நின்றதால், இவள் கீழ விழப்பார்த்தாள். அந்த நேரம் தான், நீ சரியா வந்து இவளைப் பிடிச்சிட்ட” என்று கொஞ்சமும் பயம் கொள்ளாமல் பொய்யை அள்ளி வீசினாள்.

நிலவன் எதுவும் பேசவில்லை, ரோஜாவோ அதிர்ச்சியில் இருந்து மீளாமல் இன்னும் நடுங்கிக்கொண்டே தான் இருந்தாள்.

அதில் பதறிப்போன நிலா, “அண்ணா, போயும் போயும் இவளையா காப்பாத்தணும்னு நினைச்ச? கொஞ்சம் அசந்துருந்தா, இந்நேரம் இவள் என் குழந்தையைக் கொன்றிருப்பா” என்று சொல்லும் போதே, தன் கையை நிலாவின் முன் கட்டி, “நிறுத்து” என்று சைகையால் சொன்னவன், தன் அணைப்பில் இருந்த ரோஜாவை விடுவித்து, “நீ ஓகே தானே ரோஜா?” என்று அவளை ஆராய்ந்தபடி கேட்டான்.

“ம்...” என்று தன் தலையை மட்டும் ஆட்டிக்கொண்டவள் வேறு எதுவும் பேசவில்லை.

நிலாவைப் பார்த்து முறைத்தவன், “என்னோட ஆபிஸ் ரூம்க்கு வா நிலா, உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றவன் அதிர்வில் இருந்து மீளாத, ரோஜாவை தூக்கிக் கொண்டு, அவள் அறையில் விட்டுவந்தான்.

இப்போது தன் அலுவலக அறைக்குள் வந்தவன், அங்கே தனக்காகக் காத்துக் கொண்டிருந்த நிலாவைப் பார்த்து, “எதுக்காக ரோஜாவை புல்லி பண்ற நிலா” என்றான் தன் கோபத்தை எல்லாம், தன் மனதின் ஓரத்தில் மூட்டைக் கட்டி வைத்தபடி.

“அண்ணா, நான் தான் சொன்னேனே! நான் இப்ப ப்ரெக்னன்ட்டா இருக்கேன், என் ரூம் கிளீனா இல்ல, கூட வந்து உதவி பண்ணுன்னு சொன்னதுக்கு என்னைக் கீழ தள்ளிவிடப்பார்த்தாள் அந்த வனரோஜா. கொஞ்சம் அசந்து போய் இருந்தாலும், என்னோட குழந்தையின் நிலை... கடவுளே நினைச்சுப் பார்க்கவே பயமா இருக்கு” என்றாள் தன் வயிற்றைத் தடவியபடி.

“நீ திடீர்னு எழுதுற வசனம் எல்லாம் எனக்கு நல்லாவே தெரியும் நிலா. என்கிட்ட நடிக்காத” என்றான் அவளை நேர்பார்வை பார்த்தபடி.

“மச்... நீ என் அண்ணன் நிலவன் தானே! திடீர்னு உனக்குள்ள பூதம் ஏதாவது புகுந்துருச்சா? எப்பப் பார்த்தாலும், அந்த வனரோஜாவுக்கு ஆதரவா பேசிக்கிட்டு இருக்க?” என்று நிதானம் இல்லாமல் கத்தினாள் நிலா.

இப்போது இழுத்துப் பிடித்த பொறுமையுடன், “எனக்கு நீ தான் முக்கியம் நிலா. ஆனா ரோஜாவுக்கு ஏதாவது ஆகிடுச்சுன்னா, அந்த பரணி அம்மாவுக்கு நாம தானே பதில் சொல்லணும் அதுக்காகச் சொன்னேன்” என்று இறங்கி வந்தான்.

“சும்மா ஏதாவது சப்பக்கட்டுக்கட்டாத அண்ணா. கீழ, அந்த வனரோஜாவைக் கட்டிப்பிடிச்சிக்கிட்டு, என்னைப் பார்த்தியே ஒரு பார்வை அதை நான் எப்போதும் மறக்க மாட்டேன்” என்றாள் தன் கண்கள் இரண்டையும் பெரியதாக வைத்துக் கொண்டு.

“இங்கப் பாரு நிலா, ரோஜாவுக்கு ஏதாவது ஆகி இருந்தால், சிவாவும் உன்னை மன்னிக்க மாட்டான். நான் செய்வது எல்லாம் உன் வாழ்க்கையின் நல்லதுக்குத் தான்” என்றான் நிலவன்.

ஆனால் அதை எல்லாம் கேட்கும் மனநிலையில் நிலா இல்லை. ஆத்திரம் அவளது கண்ணை மறைக்க, வரம்பு மீறிய சொற்களை எல்லாம் பேச ஆரம்பித்தாள்.

“சபாஷ்... என்னுடைய நல்லதாமே!” என்று தன் கையைத் தட்டியவள், “என்னுடைய நல்லதுக்குத் தான், தீவுல கேவலம் அந்த வனரோஜாவோட கூத்து அடிச்சியா அண்ணா?” என்றாள் நக்கல் செய்வது போல்.

நிலவனோ தன் கோபத்தைக் கட்டுப்படுத்தப் பெரும்பாடுபட்டுத் தான் போனான்.

நிலவனின் அமைதியில் தொடர்ந்து பேசிய நிலா, “பெண்களைக் கண்டாலே ஒதுங்கிப் போறவன் தானே நீ! அவள் உடம்புல அப்படி என்னதைப் பார்த்து மயங்கிப் போன...” என்று அவள் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, கோபம் தலைக்கு ஏற, தன் அருகில் இருந்த இன்னொரு இருக்கையை, சுவற்றில் விசிறி அடித்தான் நிலவன்.

முதன்முதலாக தன் அண்ணனின் கோப அவதாரத்தைக் கண்ட நிலா, பயந்துதான் போனாள்.

தன் தாடை இறுக ஒரு முறை சுவாசத்தை ஆழ்ந்து வெளியிட்டவன், “பேச்சு வரம்பு மீறி போகுது நிலா” என்று எச்சரிக்கை செய்தான்.

“நான் சொன்னது ஒன்னும் பொய் இல்லையே, உண்மை தானே! உனக்கு அப்படியும் பொண்ணுங்க வேணும்னா, எத்தனையோ பேரழகிகள் உன்காலில் வந்து விழுவாங்க. ஆனா போயும் போயும் ஒரு அண்டங்கஞ்சியோட பொண்ணு தான் உனக்குக் கிடைச்சாளா?” என்றாள் எரிச்சலாக.

“அதையே தான் நானும் கேட்குறேன். அண்டங்கஞ்சியோட பையன் தான் உனக்கு வேணுமா?” என்று அவள் வாக்கியத்தை அவளுக்கே திருப்பிப் போட்டான் நிலவன்.

“சிவா ஆக்ஸ்போர்டுல படித்தவர், அவரோட லைப் ஸ்டைல் வேற. ஆனா அந்த வனரோஜா, இப்பவரைக்கும் அனாதையாத் தான் இருந்துருக்கா” என்றாள் நிலா.

“ம்ச்... நிலா, உன் வார்த்தைகள் எல்லாம் ரொம்பவே தப்பா இருக்கு? ஆமாம் நான் ரோஜாவுடன் இருந்தது உண்மை தான். ஆனா இதை எதுக்காக சிவா உன்கிட்ட சொன்னான். இது அநாகரிகம்னு அவனுக்குத் தான் தெரியல... உனக்குமா தெரியல? உன்னோட அண்ணன்னு கொஞ்சமும் மரியாதை இல்லாம, என்னை எப்படி எல்லாம் தரக்குறைவா பேசிட்ட...” என்றவன் முகம் அதீத கோபத்தால், ரத்த சிவப்பாக மாறியது.

“அந்த வனரோஜா தான் கொஞ்சமும் நாகரிகம் இல்லாம, என் வயிற்றில் மூன்று மாதக்கரு தான் வளருதுன்னு, சிவாக்கிட்ட சொல்லி இருக்காள். நீ அவளைப் போய் திட்டு. என்னையும் சிவாவையும் எதுக்காகத் திட்டுற?” என்று அவள் சொல்லும் போதே, அங்கே இருந்த அலமாரியைத் திறந்து கோப்பு ஒன்றை எடுத்தவன், அதைத் தூக்கி நிலாவின் முன்னால் இருந்த மேஜையில் எறிந்தான்.

அவள் என்னவென்பது போல் நிலவனைப் பார்க்க, “நீயே அதை உன் கையில் எடுத்துப்பாரு” என்றான் நிலவன். நடுங்கும் கையோடு நிலா அந்த கோப்பைத் திறந்து பார்த்தாள்.

“என்ன நிலா, அமைதியா இருக்க? இந்த கோப்பில் என்ன இருக்குன்னு உனக்குத் தெரியலையா? எனக்கு எந்த விதக்குறையும் இல்லைன்னு இருக்கு” என்றதும், நிலாவுக்கு, இந்த விஷயத்தைக் கண்டு பிடித்த நிலவனைப் பார்த்து பயப்படுவதா அழுவதா இல்லைக் கோபம் கொள்வதா என்றே தெரியவில்லை.

ஆனாலும் நிலா தான் நடிப்பதில் கைதேர்ந்த நடிகையாகிற்றே!

“நிஜமாவா அண்ணா, அப்ப உனக்கு எந்த விதக் குறையும் இல்லையா! இதைக் கேட்கும் எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்குன்னு தெரியுமா?” என்று நன்றாக நடித்தாள்.

“நடிக்காத நிலா. நான் உன்னோட அண்ணன். உன்னோட ஓவ்வொரு அசைவும் எனக்கு அத்துப்படி” என்றான் தன் ஒரு புருவத்தை மட்டும் உயர்த்தியபடி.

நிலா எந்த தவறு செய்தாலும், செய்தத் தவறைக் கண்டு அஞ்சாமல், அந்தத் தவறை யார் மேல் குற்றம் சொல்லித் தப்பிக்கலாம் என்று தான் பார்ப்பாள்.

அதே போல், நிலவன் அடுத்ததாக தன் மேல் கேள்வி அம்புகளை வீசுவதற்கு முன்னால், அதற்கு என்ன விடையளிக்கலாம் என்று தான் இவ்வளவு நேரம் யோசித்துக் கொண்டிருந்தாள் நிலா.

“ஆனா நாம பார்த்த டாக்டர் எல்லாம் அப்படி எதுவும் சொல்லலையே! அவங்க எல்லாரும் சாதாரண மருத்துவர்களும் கிடையாது. அதை நம்பித் தான், நீ அப்பாவாகுற தகுதி இல்லைன்னு, நான் இவ்வளவு நாள் நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஒருவேள அந்த பொம்பளை பரணி தான், உன் ரிப்போர்ட்டை மாத்தி ஏதாவது கோல்மால் பண்ணி இருக்கணும்” என்று பழி மொத்தத்தையும் பரணி மேல் போட்டாள்.

ஆனால் அவளது பிணற்றலை எல்லாம் கேட்கும் நிலையில் நிலவன் இல்லை. அவனுக்கு தேவை நேருக்கு நேரான பதில் தான்.

“தாத்தா பேருல இருக்குற சொத்து, அம்மா அப்பா பேருல இருக்குற சொத்து, எல்லாமே எனக்கு மட்டும் தான் வேணும்னு, நீ கேட்டு தொலைய வேண்டியது தானே! நானும் உன் மேல் வச்ச பாசத்துல கொடுக்கத் தானே செய்வேன். அதை எல்லாம் விட்டுட்டு, எதுக்காக இப்படி கேவலமா நாடகம் ஆடின?” என்றான் தன் பல்லைக் கடித்தபடி.

“நான்... நான்... ஒன்னும் பண்ணலை அண்ணா” என்றாள் திக்கித்திணறிய குரலில்.

“எனக்கே இந்த விஷயம், இன்னைக்குக் காலையில் தான் தெரிய வந்தது நிலா. நேத்து மட்டும் நீ ரோஜாவை செக் பண்ண, நம்ம பேமிலி டாக்டரைக் கூட்டிட்டு வந்திருந்தால், எனக்கு எதுவுமே தெரியாமல் போயிருக்கும்” என்றவன் குரலில் தன் பாசம் பொய்த்துப் போனதால், அவ்வளவு விரக்தி இருந்தது.

“அப்ப... அப்ப... வனரோஜா...” என்று திக்கியவளுக்கு வார்த்தைகள் வெளிவரவில்லை

“ஷி இஸ் ப்ரெக்னன்ட் வித் மை ட்வின் பேபிஸ்(என்னுடைய இரட்டைக் குழந்தைகளை அவள் வயிற்றில் சுமந்து கொண்டு இருக்கின்றாள்)” என்றான் மெல்லியதாக புன்னகை செய்தபடி.

***

தான் கீழே விழப்போன அதிர்ச்சியில் இருந்து சிறிது நேரத்திற்கு முன்பு தான் மீண்டாள் வனரோஜா. வயிறு முட்ட தண்ணீரைப் பருகியவள், தன் அண்ணன் சிவாவிற்கு அலைபேசி மூலம் அழைப்பு விடுத்தாள்.

அழைப்பை அவன் எடுத்ததும், அவனைப் பேச விடாமல் ரோஜாவே பேச ஆரம்பித்தாள்.

“உனக்கு உன் தங்கச்சி முக்கியமா இல்லை அந்த நிலாவா?” என்று தன் கண்களைப் பெரியதாக வைத்துக் கொண்டு கேட்டாள் ரோஜா.

“என்ன பேச்சு இது ரோஜா? எனக்கு நீங்க ரெண்டு பேருமே முக்கியம் தான். ஏன் எப்படி எல்லாம் கேள்வி கேட்குற? மறுபடியும் உனக்கு மூட் ஸ்விங் ஆகுதா?” என்றான் அவன் தன் நெற்றியை நீவிவிட்டபடி.

“எனக்கு ஒன்னும் இல்ல அண்ணா... உனக்குத் தான் பைத்தியம் பிடிச்சி இருக்கு. அதனால் தான், நான் உன்கிட்ட சொன்ன ரகசியத்தை எல்லாம் அந்த நிலாவிடம் சொல்லி இருக்க” என்று கோபத்தில் கத்தினாள்.

ஆனால் சிவாவின் முகத்தில் கொஞ்சமும் தவறு செய்ததற்கான பாவனை இல்லை.

“நானும் நிலாவும் வேற வேற இல்ல ரோஜா. அவளிடம் சொன்னதில் எனக்கு எந்த தப்பும் இருக்குறதா தெரியல” என்றான் சாதாரணமாக.

இங்கு ரோஜாவுக்கு ஆத்திரம் கூட, “நானா இல்லை அந்த நிலாவான்னு மட்டும் சொல்லு” என்று அவள் பிடிவாதம் பிடிக்க, “நிலா தான் முக்கியம்” என்றவன் வெறும் மூன்று வார்த்தையில், ரோஜாவின் மனதில் தீயை வைத்தான்.
 

NNO7

Moderator
அத்தியாயம் – 32

சிவா சொன்ன பதிலைக் கேட்டு விரக்தியாக சிரித்த ரோஜா, “உன் வாயில் இருந்து இப்படி ஒரு வார்த்தை தான் வரும்னு, எனக்கு நல்லாவே தெரியும் அண்ணா” என்றாள்.

அதில் பதறிய சிவா, “ஐயோ ரோஜா, நீ தப்பா நினைக்காத. நிலா என்னுடையக் குழந்தையை சுமந்துக்கிட்டு இருக்காள். அவளுக்கு ஆதி முதல் அந்தம் வரை நான் மட்டும் தான் இருப்பேன்னு சத்தியம் பண்ணி இருக்கேன். அதனால் நீ கேட்டதும் அப்படி சொல்லிட்டேன். எனக்கு நிலா ஒரு கண்ணுன்னா, நீ எனக்கு இன்னொரு கண்ணு ரோஜா. உன்னை கஷ்டப்பட்டு தேடி கண்டுபிடிச்சது, உன்னை நோகடிக்குறதுக்காக இல்ல” என்றான்.

“மனசுல இருக்குறது தான் வெளிய வாய்வார்த்தையா வரும் அண்ணா” என்று சிறிது இடைவெளி விட்டவள்,

“நான் உனக்குத் தேவை இல்லாதவளாவே இருந்துட்டுப் போறேன். சரி அதைவிடு, உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். நிலாவின் குழந்தைக்கு பேட்டர்னிட்டி டெஸ்ட் எடுக்கணும். அவள் வயிற்றில் வளரும் குழந்தைக்கு நிஜமாவே நீ தான் அப்பாவான்னு தெரிஞ்சாகணும். அதுக்குப் பிறகு நீ அவளைக் கல்யாணம் பண்ணிக்கோ என்னவேணாலும் பண்ணிக்கோ” என்று மடமடவென்று தான் பேச வேண்டியதை பேசி முடித்தாள் ரோஜா.

சிவா எதுவோ சொல்ல வருவதற்குள், “உடனே அது என் குழந்தை, எனக்குத் தெரியும்னு ஆரம்பிக்காத அண்ணா. இதைச் சொன்னது நான் இல்ல. நம்ம அம்மா தான். குழந்தை வயிற்றில் இருக்கும் போதே டிஎன்ஏ மூலம் கண்டுபிடிக்கலாம். நீ நாளைக்கே நிலாவைக் கூட்டிக்கிட்டு நம்ம ஹாஸ்பிடல் வந்துரு. அம்மா அதுக்கான எல்லா ஏற்பாட்டையும் செஞ்சிட்டாங்க” என்றாள் நிமிர்வான குரலில்.

அதில் கோபம் கொண்ட சிவா, “இதை இப்போ எதுக்காக அம்மாக்கிட்ட சொன்ன?” என்றான் எரிச்சலாக.

“நானும் அம்மாவும் வேற வேற இல்ல” என்று முன்பு அவன், ‘நிலாவும் நானும் வேறவேறு அல்ல’ என்று பேசியதைப் போலவே நக்கலாகப் பேசினாள் ரோஜா.

“நிலா எங்கையும் வரமாட்டாள். அவள் வயிற்றில் வளரும் என்னுடைய குழந்தையை, யாருக்கும் நிருபிக்கணும்னு எந்த வித அவசியமும் இல்ல. இதை உன் அம்மாகிட்டப் போய் சொல்லிடு” என்றான் கோபமாக.

“இதுக்கு நீ மறுத்துப் பேசுனா, உனக்குக் கிடைக்க வேண்டிய எந்த சொத்தும் உன் கைக்கு வராதுன்னு, அம்மா இதையும் சேர்த்தே சொல்லச் சொன்னாங்க” என்றவள், தன் புலனம் வழியாக சில புகைப்படங்களை சிவாவுக்கு அனுப்பி வைத்துவிட்டு, “உனக்கு சில போட்டோஸ், வாட்ஸ்அப்ல அனுப்பி இருக்கேன். அதைப் பார்த்துட்டு தான் அம்மா இந்த முடிவை எடுத்து இருக்காங்க” என்று சொல்லிவிட்டு இணைப்பை அணைத்தாள் ரோஜா.

இங்கு அவள் அனுப்பிய புகைப்படத்தை தரவிறக்கம் செய்தவன் அதை எல்லாம் பார்த்து அதிர்ந்துவிட்டான். அந்த புகைப்படத்தில், நிலா, வேறு ஒரு வெள்ளைக்கார நபருடன் நெருக்காமாக இருப்பது போல் இருந்தது.

அதனைப் பார்த்த சிவாவிற்கு, ரோஜாவின் இந்த செயல் அதிருப்தியைத் தந்தது. கோபத்தோடு அவளுக்கு அழைத்தவன், அவள் அழைப்பை எடுத்ததும், “எதுக்காக இப்படி மார்பிங் பண்ணி நிலாவைக் கேவலப்படுத்துற ரோஜா. இதெல்லாம், நீ அம்மா சொல்லி தான் செய்யுறன்னு எனக்கு நல்லாவே தெரியும்” என்று கோபத்தில் கத்தினான்.

“அது உண்மையா இல்லையான்னு, நீயே அந்த போட்டோவை டெஸ்ட் பண்ணி கண்டுபிடிச்சிக்கோ. அந்த நிலா எல்லாம் ஒரு மனுஷின்னு அவளுக்காக என்கிட்ட பேசாத நீ. இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நிலவன் மட்டும் சரியா என்னை வந்து பிடிக்கலைன்னா, அந்த நிலா என்னைத் தலைகுப்புற கீழே தள்ளிவிட்டு இருப்பாள்” என்றாள் தன் மூக்கு விடைக்க.

“ஐயோ ரோஜா, உன்னோட புரிதல் தப்பா இருக்கு. நிலா நீ சொல்ற மாதிரி எல்லாம் கிடையாது” என்று சொன்ன சிவாவிற்கு காதல் கண்ணை மறைத்தது.

கண்களை மூடி, மூச்சை இழுத்துவிட்ட ரோஜா, “நீ சொல்றதே நிஜமா இருக்கட்டும். உனக்கு சொத்து வேணும்னா நாளைக்கே நிலாவைக் கூட்டிட்டு நம்ம ஹாஸ்பிடல் வந்துரு” என்பதுடன் முடித்துக் கொண்டாள் ரோஜா.

ரோஜாவால் சொல்லப்பட்ட செய்தியைக் கேட்டு தன் அன்னை பரணியின் மீது சிவாவிற்கு கோபம் வந்தது.

அதே கோபத்துடன் தோட்டத்தில் அமர்ந்திருந்த தன் தாய் பரணியின் முன்பு சென்று நின்றவன், “ரோஜா என்னென்னவோ சொல்றாள் அதெல்லாம் உண்மை தானா?” என்றான் சிவா.

இருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்துகொண்டு, கால் மேல் கால் போட்டபடி சிவாவைப் பார்த்தவர், “நான் சொல்ல வேண்டியதை தான் ரோஜா சொல்லி இருக்காள் சிவா” என்றார்.

“சொத்தை வச்சி மிரட்டும் அளவுக்கு நான் கேவலமானவனா போயிட்டேனா அம்மா” என்றான் கலங்கிய குரலில்.

“என்னோட பசங்களைப் பத்தி எனக்கு நல்லாவே தெரியும். ஆனா மத்தவங்க நல்லவங்களா இருப்பாங்கன்னு எனக்குத் தெரியாதே!” என்றார் தேநீரை ஒரு மிடறு அருந்தியவாறு.

“அம்மா நிலா...” என்று எதுவோ சொல்லப்போனவனை, தன் கையை நீட்டி தடை செய்தவர், “முடிவா கேட்குறேன் உனக்கு நிலா வேணுமா இல்லை சொத்து வேணுமா?” என்றார் பரணி.

அவன் சிறிதும் யோசிக்காமல், “எனக்கு நிலா தான் வேணும். என் குழந்தைக்கு நான் வேணும். எனக்கு உங்க சொத்தில் இருந்து பத்து பைசா கூட வேண்டாம்” என்று வீர ஆவேசமாக பேசினான் சிவா.

அதற்கு அசட்டாக சிரித்த பரணி, “இதுக்கெல்லாம் ஓகேவான்னு நிலாக்கிட்ட கேட்டுக்கோ” என்றார்.

“நிலா ஒன்னும் பணத்தாசை பிடித்தவள் கிடையாது. அவள்கிட்டயும் அதிகமாவே பணம் இருக்கு” என்று கத்திவிட்டு சென்றான் சிவா.

தன் அறைக்குள் வந்த சிவா, நிலாவுக்கு அழைத்தான்.

தன் அண்ணன் நிலவனுடன் பேசிக்கொண்டு இருந்த நிலா, ‘தன் அண்ணனுக்கு ரோஜா கர்ப்பமாக இருக்கும் விஷயம் எப்படி தெரிந்தது’ என்ற அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றாள்.

அவள் யோசித்துக் கொண்டு இருக்கும் போதே, அவள் கையில் இருக்கும் அலைபேசிக்கு சிவாவிடம் இருந்து அழைப்பு வந்தது.

“அவரு கூப்பிடுறாரு அண்ணா” என்று சொல்லிவிட்டு, திரும்பிப்பார்க்காமல், அச்சத்தில் அங்கிருந்து வேகமாக ஓடி தன் அறைக்குள் சென்று கதவை அடைத்தாள் நிலா.

அவள் சென்றதும் சிறிதும் தாமதிக்காமல் ரோஜாவின் அறைக்குள் சென்றான் நிலவன். அவள் அறைக்கதவை அடைக்காமல் தான் இருந்தாள்.

அப்போது தான் தன் அண்ணன் சிவாவிடம் பேசிவிட்டு, அலைபேசியை நோண்டிக் கொண்டு இருந்த ரோஜா, நிலவனின் திடீர் வருகையால் திடுக்கிட்டுப்போனாள்.

‘உள்ள வரும் போது கதவைத் தட்டிட்டு வரணும்னு எத்தனை தடவை சொன்னாலும், இந்த நிலவனுக்கு புரியவே புரியாது’ என்று நினைத்து ரோஜா அவனைப் பார்த்துக் கொண்டு இருக்க, எதுவும் பேசாமல் வேகமாக ரோஜாவின் அருகே வந்து அவளது இடது கையில் இருந்த மணிக்கட்டைப் பார்த்தான்.

நிலா அழுத்தமாகப் பிடித்திருந்ததால், ரோஜாவின் மணிக்கட்டு கன்றிப் போய் சிவந்து இருந்தது.

அதனை மெதுவாக அவளுக்கு வலித்து விடுமோ என்ற அச்சத்துடன் இறகைப் போல் நீவிவிட்டவன், “ரொம்ப வலிக்குதா ரோஜா” என்று அக்கறையுடன் வினாவினான்.

ஆனால் அந்த அக்கறை எல்லாம் ரோஜாவிற்கு தெரியவில்லை. நிலாவின் மேல் இருந்த கோபத்தை, அவளின் அண்ணனான நிலவன் மீது அப்படியே இறக்கி வைத்தாள் ரோஜா.

“இல்ல ரொம்பவே குளுகுளுன்னு இருக்கு” என்று சொல்லி வெடுக்கென்று தன் கையை அவனிடம் இருந்து உருவிக்கொண்டாள்.

முதல் முதலாக தன் மனதில் குளுமை பரவ மெல்லியதாக தன் இதழை வளைத்தவன், “நீ இப்படி பேசும் போது ரொம்பவே கியூட்டா இருக்க ரோஜா” என்றவன் வார்த்தைகள், தன்னையும் அறியாமல் வந்தது.

அதில் திடுக்கிட்டு அவனைப் பார்த்த ரோஜா, “ஓ... உங்க தங்கச்சி என்னைக் காயப்படுத்துனதுனால இப்படி எல்லாம் பேசுறீங்களா?” என்றாள் அவனை முறைத்தபடி.

அதற்கு பதில் சொல்லாமல், தன் காற்சட்டைப் பையில் இருந்து, ஆயின்மெண்ட்டை எடுத்தவன், “இதைப் போட்டுக்கோ ரோஜா. உனக்கு வலி இல்லாமல் இருக்கும்” என்றான்.

அதற்கு நக்கலாக சிரித்துக்கொண்டே அவனை நோக்கியவள், “இதைத் தடவினா, எல்லாம் சரியாகிவிடுமா நிலவன்?” என்று கேட்டுக்கொண்டே அதனை அவன் கையில் இருந்துப் பிடுங்கி, சுவற்றில் தூக்கி எறிந்தவள், “உங்க தங்கச்சி மாதிரி ஒரு ராட்சசிய நானும் பார்த்ததே இல்ல” என்று கத்தினாள்.

“தப்பு தான் ரோஜா. இனி இந்தத் தவறு நடக்கவே நடக்காது” என்று மெல்லிய குரலில் உறுதியாகக் கூறினான் நிலவன்.

மிதப்பான பார்வை ஒன்றை அவனை நோக்கி வீசியவள், “எதுவேணாலும் இருந்துக்கட்டும். ஆனா இதுக்கு மேல நான் இந்த வீட்டில் இருக்குறதா இல்ல. ஹாஸ்பிடல் பக்கத்துலையே வீடு எடுத்துத் தங்கப்போறேன்” என்றாள் தன் கையைக் கட்டிக்கொண்டபடி.

ரோஜாவின் வாயில் இருந்து வந்த வார்த்தைகளைக் கேட்டு, நிலவன் அதிர வில்லை, நிலா இப்படி ஒரு செயலைச் செய்ததும், ரோஜாவின் வாயில் இருந்து இந்த வார்த்தைகள் எல்லாம் வரும் என்று எதிர்பார்த்து தான் இருந்தான்.

வெளியே போகிறேன் என்று சொல்பவளைத் தடுக்க, அவன் காண்ட்ராக்ட் விஷயத்தை எல்லாம் எடுக்கவே இல்லை. மாறாக, “இனி இப்படி ஒரு தவறு நடக்கவே நடக்காது ரோஜா. இந்த ஒரு தடவை என்னை மன்னிச்சிடு” என்று சொல்லித் தலைகுனிந்தான்.

தொழில் சாம்ராஜ்யத்தில் முடி சூடா மன்னனாக வளைய வரும் நிலவன், இதுவரை யாரிடமும் இவ்வளவு தாழ்ந்து போய் மன்னிப்பை வேண்டியதாக சரித்திரமே இல்லை. ஆனால் அவன் அடிப்பணிவது என்னவோ, முதன்முதலாக ரோஜாவின் மேல் கொண்ட அன்பால் மட்டுமே!

இதெல்லாம் இவன் குழந்தைக்காக செய்கின்றானா இல்லை, நிஜமாகவே ரோஜாவுக்காக செய்கின்றானா? என்பதெல்லாம் நிலவனுக்கு மட்டுமே வெளிச்சம்.

நிலவனின் மன்னிப்பைக் கேட்டவள், “முடியாது மிஸ்டர் நிலவன். அந்த அரக்கி இருக்குற இடத்துல நான் இருக்கமாட்டேன்” என்றவள், ‘நிலாவை திட்டுவதற்கு இவர் என்னை அடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை’ என்ற நினைப்பில் இருந்த ரோஜா, இதையே சாக்காக வைத்து வெளியே செல்ல நினைத்தாள்.

ஆனால் அவள் நினைத்ததற்கு மாறாக அவளை ஆச்சரியம் கொள்ள வைத்திருந்தான் நிலவன்.

“சரி ரோஜா, நிலா இனி இந்த வீட்டில் இருக்கமாட்டாள். இப்ப உனக்கு ஓகே தானே!” என்று சொல்லி அவளுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி அளித்தான்,

****

ரோஜா சொன்ன விஷயங்களை எல்லாம் அலைபேசி வாயிலாக நிலாவிடம் சொன்ன சிவா, “பேடர்னிட்டி டெஸ்ட் எடுத்தாத் தான் சொத்து கிடைக்கும்னு எங்க அம்மா சொல்றாங்க. அப்படிப்பட்ட சொத்தே வேண்டாம்ன்னு நான் சொல்லிட்டேன் நிலா. நீ என்ன சொல்ற? நான் சொன்னது சரி தானே?” என்று அவளிடம் கேட்டான்.

அதனைக் கேட்ட நிலாவுக்கு பொறுமை எல்லாம் எங்கோ பறந்து போனது. இருந்தும் அதனை வெளிக்காட்டாமல், “உங்க அம்மா, என்னைப் பத்தி இவ்வளவு மோசமா நினைப்பாங்கன்னு நான் நினைச்சு கூட பார்க்கலை சிவா” என்றாள் கண்ணீர் வராமலையே அழுதபடி.

தொடர்ந்து பேசியவள், “நான் ஒத்துக்குறேன் சிவா சொத்துக்காக மட்டும் தான், நான் ரோஜா சீக்கிரம் கிடைக்கணும்னு நினைச்சேன். ஆனா என் குழந்தையை நிருபிச்சி தான் சொத்து வாங்கணும்னு எனக்கு அவசியம் இல்ல சிவா. எனக்கு என் குழந்தை தான் முக்கியம். அதோட நீங்களும் தான். உங்க ரெண்டு பேரையும் அவமானப்படுத்துற மாதிரியான சொத்து நமக்கு வேண்டாம்” என்று சொல்லி முடித்தாள்.

அதற்கு சிவா மகிழ்ச்சி பொங்க, “நீ இப்படி தான் சொல்லுவன்னு எனக்கு நல்லாவே தெரியும் நிலா. இருந்தாலும் உன்கிட்ட இதைப் பத்தி சொல்லணும்னு தான் சொன்னேன். இதுக்காகவெல்லாம் நீ அழாத நிலா. எதுவும் என்கிட்ட இல்லைனாலும், உன்னையும், குழந்தையையும் காப்பாத்த வேண்டிய சக்தி என்கிட்ட இருக்கு” என்று சொல்லி முடித்தான் சிவா.

அலைபேசியில் சிவா சொன்னதை எல்லாம் கேட்டு கோபத்தின் உச்சியில், பைத்தியம் பிடித்தவள் போல் புலம்பிக்கொண்டு இருந்தாள் நிலா. இதில் நிலவன் சொன்ன செய்தியும் சேர்ந்து கொள்ள, அவளது கோபத்திற்கு அளவே இல்லை. தன் கண்ணாடி மேஜையில் இருந்த பொருட்களை எல்லாம் தூக்கிப் போட்டு உடைத்தாள்.

இரவு முழுவதும் தூங்காமல், திட்டத்தை வகுத்துக் கொண்டே இருந்த நிலா, மறுநாள் விடிந்ததும், ரோஜாவின் அறைக்கதவைப் பார்த்துக் கொண்டே இருந்தாள் நிலா.

சில நிமிடங்கள் கடந்து, ரோஜா கதவைத் திறந்து வெளிவரும் சமயம், ரோஜாவுக்குத் தெரியாமல், அவள் பின்னே பூனை போல் பதுங்கியபடி வந்தாள் நிலா.

சரியாக ரோஜா படிக்கட்டில் இருந்து கீழே இறங்கக் காலடி எடுத்து வைக்கும் சமயம்....

தொடரும்....




























 

NNO7

Moderator
அத்தியாயம் – 33

“நிலா இனி இந்த வீட்டில் இருக்க மாட்டாள்” என்று சொன்ன நிலவனை, தன் கண்கள் இரண்டும் கீழே விழுந்து விடும்படி, நன்றாக விழித்துப் பார்த்த ரோஜா, “நீங்க உண்மையைத் தான் சொல்றீங்களா?” என்று கேட்டாள், தான் செவி வழியாகக் கேட்ட செய்தியை நம்பாமல்.

“உண்மை தான் ரோஜா. நிலாவை ஆஸ்திரேலியா அனுப்பலாம்னு, நான் எப்பவோ முடிவு பண்ணிட்டேன்” என்று சொன்னான் நிலவன்.

“ஓ... இது ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவு தானா! நான் கூட எனக்காக இந்த முடிவை நீங்க எடுத்து இருக்கீங்களோன்னு தப்பா நினைச்சுட்டேன்” என்றாள் வேறு பக்கம் திரும்பியபடி.

அவள் தூக்கி எறிந்த ஆயின்மெண்ட்டை கீழே குனிந்து எடுத்த நிலவன், அதனைத் திறந்து, சிவந்திருந்த ரோஜாவின் கையில் தடவ ஆரம்பித்தான்.

அவனது செயல் எல்லாம் ரோஜாவுக்கு, வித்தியாசமாகத் தெரிய, அவனது அன்பிற்குக் கட்டுப்பட்டவள் போல், அவனது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் எதுவும் பேசாமல்.

மருந்தைப் போட்டு முடித்தவன், “சில விஷயங்களை எல்லாம் என்னால் இப்ப பேச முடியாது ரோஜா. ஆனா உனக்கு என்ன தேவைப்பட்டாலும், நீ என்னை தாராளமா கேட்கலாம்” என்றான் நிலவன்.

அவனது பேச்சில் கனவுலகில் இருந்து வெளியே வந்தவள், கோபத்துடன் அவனை முறைத்துக் கொண்டே, “இதெல்லாம் எதுக்காக பண்றீங்க மிஸ்டர் நிலவன்” என்றாள் அவன் கையில் இருக்கும் தனது கையைக் சுட்டிக்காட்டி.

“என் தங்கச்சி தானே, உனக்கு இப்படி ஆனதுக்குக் காரணம். அதனால் தான். நீ நினைக்குற மாதிரி வேற ஒன்னும் இல்ல. நான் உன் மேல் கேர் எடுத்துக்குறதுனால, என்னை லவ்வு கிவ்வு பண்ணிராத. நான் ஒன்னும் நல்லவன் எல்லாம் கிடையாது” என்றான் அவள் அருகில் மிகவும் நெருங்கி நின்றபடி.

அவன் நெஞ்சில் கைவைத்துத் தள்ளியவள், “உங்களுக்கு ரொம்பத் தான் ஆசை நிலவன். என்னோட ரேஞ்சே வேற... போயும் போயும் உங்களை எல்லாம் லவ் பண்ணுவேன்னு நினைக்காதீங்க” என்றதும், நிலவனின் முகம் இறுக ஆரம்பித்தது.

“யாரையும் இனி லவ் பண்ண மாட்டேன். முதல் முதலா உங்கக்கூடத்தான் இருந்துருக்கேன். அது தான் என் கடைசியும் கூடன்னு, சொன்னது நீ தானே! இப்ப வேற மாதிரி பேசுற! நான் உன்னோட ரேஞ்ச் கிடையாதுன்னு சொல்ற? அப்ப உன் ரேஞ்சுக்கு ஆள் கிடைச்சா லவ் பண்ணுவியா?” என்றவன் குரலில், அவனை அறியாமைலையே ரோஜா தனக்கு மட்டும் தான் வேண்டும் என்ற பொறாமை பொங்கி வழிந்தது.

அவனை அறிந்து கொள்ள ரோஜா சிறிதேனும் முயற்சி எடுத்து இருக்கலாம். ஆனால் அவளோ, சிவாவைப் பற்றியக் கவலை தன் மேல் எடுத்துப்போட்டு இருந்தாள். இதில் நிலாவின் செயலால், அவளது ரத்த அழுத்தம் வேறு ஏகத்திற்கும் எகிறி இருந்தது.

தன் கையை குறுக்காகக் கட்டிக் கொண்டு நிலவனை மிதப்பாகப் பார்த்தவள், “நிஜமாத் தான் சொல்றேன் நீங்க என்னுடைய டைப் கிடையாது” என்றாள் ரோஜா.

“அப்ப யாரு உன்னோட டைப்? இந்தியாவில் ஒருத்தன், உன்னைக் கல்யாணம் பண்றேன்னு சொல்லிட்டு ஏமாத்துனானே அவனா?” என்றான் நக்கல் வழிந்தோடும் குரலில்.

“ம்ச்... தேவை இல்லாமல் ஏதாவது பேசாதீங்க. நான் ஹாஸ்பிடல் வேற போகணும்” என்றாள்.

“நீ நைட் டியூட்டி எல்லாம் பார்க்க வேண்டாம். நான் சீனியர் டாக்டர் கிட்ட ஏற்கனவே இதைப் பத்திப் பேசிட்டேன்” என்றான் நிலவன்.

“சரி” என்று தன் தலையை ஆட்டிக்கொண்டவள், வெளியே செல்லாமல், அப்படியே மரம் போல் நின்று இருந்த நிலவனை மேலும் கீழுமாகப் பார்த்து, “நீங்க வெளிய போறீங்களா நிலவன் எனக்கு வேலை இருக்கு” என்றாள்.

“ஹாங்... நீ பாரு” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றான்.

“இந்த ஆளுக்கு நிஜமாவே ஏதோ ஆகிடுச்சி” என்று வாய்விட்டு சொன்னவள், தன் பூந்துவலையை எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றாள்.

அவள் குளித்து முடித்து வெளியே வரும் போது, நிலவன் அங்கே இருப்பதைப் பார்த்து, திரும்பவும் பதறியவள், கதவைப் பூட்டாத தன் மடைமை நினைத்து வருந்தினாள்.

அவள் முடியில் இருந்து வழிந்து கழுத்தில் வழுக்கிக் கொண்டு செல்லும் நீரை தான் நிலவனின் கண்கள் நோக்கிக் கொண்டு இருந்தது.

தண்ணீர் செல்லும் பாதையில், அவனது கண்கள் இன்னும் கொஞ்சம் இறங்கிப் போக, அதனைத் தடை செய்து கலைத்தது ரோஜாவின் குரல்.

“இப்ப எதுக்காக இங்க மறுபடியும் வந்து இருக்கீங்க? உங்களுக்கு வேற வேலையே இல்லையா?” என்றாள் எரிச்சலாக.

“போகும் போது மறந்து போய், ஆயின்மென்ட்டை எடுத்துட்டுப் போயிட்டேன். இப்ப நீ குளிச்சதுனால, திரும்பவும் போடணும்” என்று சொல்லி, அதனை அவள் கையில் கொடுத்தான், அவளது முகத்தை நிமிர்ந்து பார்க்காமல்.

‘இதற்கு ஒரு டிராமா வேண்டாம்’ என்று நினைத்த ரோஜா, எதுவும் பேசாமல் அதனை அவனிடம் இருந்து வாங்கிக்கொண்டாள்.

“நீ கீழ வரவேண்டாம் ரோஜா. டின்னர் இங்கையே கொண்டு வந்துடுவாங்க” என்றவன் சில கணங்கள் நிறுத்திவிட்டு, “என்கிட்ட வேற ஏதாவது சொல்லணுமா?” என்று கேட்டு அவளது முகத்தைப் பார்த்தான்.

தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ரோஜா எப்போது தன்னிடம் சொல்வாள் என்ற நினைப்போடு தான், நிலவன் அவள் முன்னால் வந்து எப்போதும் நிற்கிறான்.

ஆனால் அதனைப் பற்றிக் கவலை கொள்ளாத ரோஜா, “சரி நீங்க போங்க” என்றாள் வாயிலை சுட்டிக் காட்டியபடி. மனம் இல்லாமல், அவளை மீண்டும் ஒரு முறை திரும்பிப் பார்த்தபடி வெளியே சென்றான் நிலவன்.

கதவை இழுத்து மூடியவள், அதில் சாய்ந்து பெருமூச்சு ஒன்றைவிட்டபடி, “இருக்குற பிரச்சனையில, இந்த நிலவன் பிரச்சனை வேற” என்று வாய்விட்டுக் கூறியவள், தன் முடியை ஹேர் ட்ரையரில் காயவைத்துவிட்டு, நாளைக் காலை, தான் எந்த நிலைக்கு ஆளாகப் போகின்றோம் என்பதனை அறியாமல், தன் படுக்கையில் அமர்ந்து கண்ணை மூடினாள் ரோஜா.

இங்கே, தன் முன்னே இருந்த ஆளுயரக் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தாள் நிலா.

கண்ணுக்கு இடும் மை, அவளது முகத்தில் எல்லாம் இழுவி, கண்கள் இரண்டும் ரத்த சிவப்பாகிப் போய், பார்க்கவே கோரமாக இருந்தது, அவளது முகம்.

கண்ணாடியில் தெரிந்த தன் முகத்தைத் தடவியவள், “நீ எதுக்காக நிலா, இப்படி ஒரு நிலையில் இருக்கணும்? நீ ராணியாக வாழப் பிறந்தவள். அந்த அனாதைக் கழுதை வனரோஜா தான் என் நிலைக்கு எல்லாம் காரணம். இவள் மட்டும் வராமல் இருந்திருந்தா என்னுடைய வாழ்க்கை நல்லா இருந்துருக்கும். அப்படி என்னத்தக் காட்டி மயக்குனான்னு தெரியல, பிஸ்கட்டுக்கு மயங்குன நாய் மாதிரி, அவளுக்கே பரிஞ்சி பேசிக்கிட்டு இருக்கான் என் அண்ணன்” என்று அந்தக் கண்ணாடி முன்னாடி நின்று தனக்குத் தானே வெகுநேரமாக பேசிக்கொண்டு இருந்தாள் நிலா.

காலையில் கதிரவன் உதித்ததும், தன் அறையில் இருந்து வெளியே வந்தவள், ரோஜாவின் அறைக்கு அருகே இருந்த தூணில் மறைந்து கொண்டு,ரோஜாவின் அறைக்கதவைத் தான் பார்த்துக் கொண்டே இருந்தாள்.

சில நிமிடங்கள் கடந்து, ரோஜா கதவைத் திறந்து வெளிவரும் சமயம், ரோஜாவுக்குத் தெரியாமல், அவள் பின்னே பூனை போல் பதுங்கியபடி வந்தாள் நிலா.

சரியாக ரோஜா படிக்கட்டில் இருந்து கீழே இறங்கக் காலடி எடுத்து வைக்கும் சமயம், ரோஜாவுக்குப் பின்னால் இருந்து வேகமாக முன்னால் வந்து, வேண்டும் என்றே கால் இடறி, “அம்மா” என்ற சத்தத்துடன் படியில் இருந்து உருண்டு விழுந்தாள் நிலா.

“நிலா...” என்ற கத்தலுடன், முதல் படியில் நின்று தன் கையை நீட்டி அதிர்ச்சியுடன் நின்ற ரோஜா, நிலாவைக் காக்க வேண்டி, வேகமாகப் படியில் இருந்து இறங்கினாள்.

வலியால் துடித்துக் கொண்டிருந்த நிலாவைச் சுற்றிலும் குருதி வெள்ளம். மூன்று வார சிசு தன் உருவத்தை எடுப்பதற்கு முன்பே தன் வாழ்க்கையை இழந்து இருந்தது. ஒரு பயனும் இல்லாத குழந்தை தனக்கு எதுக்கு? என்று இரவு முழுவதும், அதனைக் கொல்ல திட்டம் தீட்டி, அதனை முடித்தும் கட்டி இருந்தாள் நிலா.

நிலாவின் கையைப் பிடித்த ரோஜா, “கொஞ்சம் பொறுத்துக்கொள் நிலா. நான் நிலவனைக் கூப்பிடுறேன்...” என்று சொல்லும் போதே, அவ்வளவு வலியிலும், ரோஜாவைப் பார்த்து முறைத்தவள், “ச்சீ...கையை விடுடி... என் குழந்தையைக் கொன்ன பாவி நீ” என்று கத்தினாள்.

ஆனால் அவள் பேச்சு எல்லாம் ரோஜாவின் காதில் விழவே இல்லை. ஒரு மருத்துவராக, நிலாவைக் கையாண்டாள் ரோஜா.

அலறல் சத்தம் கேட்டு, தன் அறையில் இருந்து பதற்றத்தோடு ஓடி வந்த நிலவன், அங்கே ரத்த வெள்ளத்தில் தன் தங்கை கதறிக் கொண்டு இருப்பதைப் பார்த்து அதிர்ந்தான்.

அவனைப் பார்த்த ரோஜா, “வேகமா வாங்க நிலவன், உடனே நிலாவை ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போணும்” என்று அவள் அவசரப்படுத்த, வேகமாக ஓடி வந்து நிலாவைத் தூக்கிகொண்டான்.

அதற்குள் பாதி மயக்கத்தில் இருந்த நிலாவோ, நிலவனைப் பார்த்து, “அநியாயமா என் குழந்தையைக் கொன்னுட்டா அண்ணா இந்த வனரோஜா” என்று சொல்லிக்கொண்டே மொத்தமாக மயக்கத்திற்கு சென்றிருந்தாள்.

அவளது பேச்சு இருவரது காதிலும் விழவில்லை, குழந்தையை எப்படியாவது காக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ரோஜா இருக்க, நிலவனோ, தன் தங்கையை அந்த நிலையில் பார்த்ததும், திக்பிரம்மை பிடித்தது போல் இருந்தான்.

நிலவனின் பிஏ மகிழுந்தை ஓட்ட, நிலாவை வைத்துக் கொண்டு, நிலவன் பின் இருக்கையில் அமர, அவனுக்கு அருகிலையே அமர்ந்து கொண்டாள் ரோஜா.

நிலாவின் கையைத் தேய்த்து, அவளை விழிக்க வைக்க முதலுதவி செய்ய ஆரம்பித்தாள்.

நிலா இப்போது மெதுவாக தன் கண்களைத் திறக்க, “ஒன்னும் இல்ல நிலா. நீ நல்லா மூச்சை இழுத்துவிடு. இன்னும் கொஞ்ச நேரத்துல நாம ஹாஸ்பிடல் போயிடலாம்” என்றாள் ரோஜா.

“அண்ணா... என்... என் குழந்தை...” என்று பேசவே மிகவும் சிரமம் கொண்டு நிலா தன் வாயைத் திறக்க, “குழந்தைக்கு ஒன்னும் ஆகாது நிலா” என்று அவள் கையை அழுத்தமாகப் பற்றி, நிலாவுக்கு தைரியம் கொடுத்துக் கொண்டிருந்தாள் ரோஜா.

நிலவனின் மனதோ, நிலாவுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்ற நினைப்பிலையே இருந்தது.

ஏற்கனவே தகவல் மருத்துவமனைக்கு சொல்லப்பட்டு இருக்க, அங்கே சென்றதும், ஸ்ட்ரேச்சருடன் காத்திருந்தனர், மருத்துவர்களும் செவிலியர்களும்.

உடை முழுவதும் குருதியுடன் நின்று இருந்த நிலவனைப் பார்த்த ரோஜா, “நீங்க வேகமா போய் கிளீன் பண்ணிக்கோங்க நிலவன். இன்பெக்ஷன் ஆகிடக்போவுது” என்றாள்.

ரோஜாவைப் பார்த்தவன், “நிலாவுக்கு...” என்றான்.

“இது வெறும் மூன்று வாரக்கரு தான் நிலவன். அதனால குழந்தை கண்டிப்பா மிஸ்காரேஜ் ஆகிருக்கும்” என்றாள் உள்ளே போனக்குரலில்.

“நிலா உடம்புக்கு?” என்று கண்களில் கலக்கத்துடன் கேட்டான் நிலவன்.

“அப்படி எல்லாம் ஒன்னும் ஆகாது நிலவன். மூன்று வாரத்தில் குழந்தை கலையுறது எல்லாம் சாதாரணம் தான். அப்படி ஆனா இது பெரிய பிரச்சனை இல்ல. வயிற்றை கிளீன் பண்ணா போதும். ஆனா நிலா கீழே விழுந்ததுனால, எதையும் ஸ்கேன் பண்ணாத் தான் சொல்ல முடியும்” என்றாள் ரோஜா.

நிலவன் பிஏ மூலம் சிவாவிற்கு, நிலா கீழே விழுந்த விஷயம் சொல்லப்பட, பதறி அடித்துக் கொண்டு அங்கே வந்தான் சிவா.

அவன் வரும் போது, எல்லாம் முடிந்து தன் கண்களைத் திறந்து இருந்தாள் நிலா. வெளியே நின்றிருந்த நிலவனையும் ரோஜாவையும் கண்டுக்கொள்ளாமல் வேகமாக நிலாவைப் பார்க்க உள்ளே சென்றவன், சிறிது நேரத்திற்குப் பிறகு, கண்களில் கங்கு தெறிக்க வெளியே வந்து ரோஜாவைப் பார்த்தவன், “நிலாவை எதுக்காக கீழ தள்ளிவிட்ட” என்று கேட்டு, ரோஜாவின் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்தான் சிவா.
 

NNO7

Moderator
அத்தியாயம் – 34

கையில் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டு இருக்க, தன்னைப் பார்க்க வந்த ரோஜாவிடம், முகத்தைக் காட்டக் கூட நிலா விரும்பவில்லை. அவள் உடல்நிலையை மட்டும் ஆராய்ந்துவிட்டு, வெளியே வந்து நின்றுகொண்டாள் ரோஜா.

அங்கே நிலா மருத்துவமனையில் தனக்கென்று இருக்கும், அலுவலக அறைக்கு சென்று தன்னைச் சுத்தம் செய்துவிட்டு வந்த நிலவன், வெளியே நின்றிருந்த ரோஜாவிடம், “ஒன்னும் பிரச்சனை இல்லை தானே! எல்லாம் ஓகே தானே!” என்றான்.

“ம்... நிலாவின் வயிற்றை நல்லா கிளீன் பண்ணியாச்சி. இப்ப பிரச்சனை இல்ல. அவள் கண் விழித்துவிட்டாள்” என்று நிலவனுக்கு சொன்னாள் ரோஜா.

“சரி” என்று தன் தலையை ஆட்டிக் கொண்டு, அவன் நிலாவைக் காண உள்ளே செல்ல நினைக்கும் போது தான் அந்த இடத்திற்கு சரியாக சிவா வந்தான். சிவா உள்ளே சென்றதால் ரோஜாவின் அருகிலையே நின்று கொண்டான் நிலவன்.

இவர்களைக் கண்டு கொள்ளாமல், வேகமாக நிலா சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் அறைக்குள் தான் நுழைந்தான்.

கொக்கு நோய் வந்த கோழி போல், உடம்பில் சிறிதும் தெம்பு இன்றி கட்டிலில் படுத்து இருந்தாள் நிலா. அவளின் கையில் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டு இருக்க, அவளது கண்களோ விட்டத்தைப் பார்த்தபடி இருந்தது.

“நிலா...” என்ற அலறலுடன் தன்னை நோக்கி வந்த சிவாவைக் கண்டு, “சிவா... என்... என் குழந்தை...” என்று சொல்லிக்கொண்டே அழ ஆரம்பித்தாள்.

அவளது கன்னத்தைப் பற்றியவன், “என்ன ஆச்சி நிலாம்மா... நம்ம குழந்தை...” என்று கேட்டவனுக்கு, வார்த்தைகள் வராமல் சதி செய்தது.

“நம்ம குழந்தை நம்மள விட்டுப் போயிடுச்சி சிவா” என்று கத்தி ஒப்பாரி வைக்க ஆரம்பித்தாள்.

அவளைத் தோளோடு அணைத்தவன், தானும் கண்ணீர் சிந்தினான்.

சிவாவை தேற்றவே ஒரு ஆள் தேவைப்பட்டது. ஆனால் அவனோ தன்னை சமாளித்துக் கொண்டு, பொய்யாக நடித்துக் கொண்டிருக்கும், நிலாவுக்கு ஆறுதல் சொல்ல ஆரம்பித்தான்.

அவளது தலையை நீவி விட்டவன், “அழாத நிலா, நம்ம பாப்பாவை கூடிய சீக்கிரம் நம்மக்கிட்டயே திரும்ப ஒப்படைப்பார் கடவுள்” என்றவன் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டு, தன் கண்ணீரைக் கட்டுப்படுத்தப் பார்த்தான்.

“இதுக்கு எல்லாம் காரணம் நான் தான் சிவா. நான் என் ரூமை விட்டு வெளியே வந்துருக்கவே கூடாது” என்று சொல்லி அவனை மேலும் இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.

“அப்படி எல்லாம் பேசாத நிலா. நான் தான் சொல்றேனே! நம்மக் குழந்தை திரும்பவும் நம்மக்கிட்டயே வரும்” என்றான் துக்கத்தைத் தன்னுள் அடக்கியபடி.

“இல்ல சிவா, என்னைப் பழி வாங்க ஏதாவது செஞ்சா கூட பரவாயில்ல... ஆனா, என்னோட குழந்தையைப் போய்...” என்றவள் தான் சொல்ல வந்த வாக்கியத்தை முடிக்காமல்,தனது வாயைக் கைவைத்து மூடி அழுது நாடகத்தை கச்சிதமாக நடத்திக் கொண்டிருந்தாள்.

“என்ன? பழிவாங்கவா? நீ என்ன பேசுற நிலா? புரியுற மாதிரி சொல்லு” என்று அவள் இரு தோள்களையும் பிடித்து ஆட்டினான்.

“அதெல்லாம் வேண்டாம் சிவா. நம்ம குடும்பம் உடைந்துவிடக்கூடாது. அதனால் இது உங்களுக்குத் தெரியாமல் இருப்பதே நல்லது” என்றவள், தன் வயிற்றைத் தடவியபடி, தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள்.

பதற்றமாக தன் தலை முடியைக் கோதியவன், “என்ன நடந்தது நிலா? உனக்கு எப்படி இப்படி ஆச்சுன்னு சொல்லு” என்றான் அவளது முகத்தை நோக்கிக் குனிந்தபடி.

“படியில... படியில... ம்ச்... அதெல்லாம் வேண்டாம் சிவா. என்னுடைய துக்கம் என்னுடையவே போகட்டும்” என்றவள் தன் கால்களுக்குள் முகத்தைப் புதைத்து அழ ஆரம்பித்தாள்.

அவள் காரணத்தை சொல்லாமல் இருக்க, சிவாவின் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது.

நிலாவின் முகத்தைத் தன் கைகளில் ஏந்தியவன், “நீ மட்டும் இப்ப காரணத்தை சொல்லலைனா, நான் உன்கூட பேசவே மாட்டேன் நிலா” என்றான்.

“அச்சோ, அப்படி மட்டும் செய்திடாதீங்க சிவா. ஏற்கனவே நம்ம பாப்பாவை இழந்து, நான் நொடிந்து போயிட்டேன். இப்ப நீங்களும் இப்படி பேசுனா என்ன அர்த்தம்? குழந்தையை வச்சி மட்டும் தான் நம்ம உறவு இருக்குதா?” என்றாள் தேம்பியபடி.

“ஹேய் பைத்தியம். உன் மனசுல என்ன இருந்தாலும் என்கிட்ட சொல்லு. அப்ப தான் உன்னோட மனுசும் ரிலாக்ஸ் ஆகும்” என்றதும், தன் தலையை ஆட்டியவள், தன் கண்ணில் இருந்து வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு, “குழந்தை தானா கலையலை சிவா, கலைக்கப்பட்டு இருக்கு” என்றதும், சிவாவின் முகம் முழுவதும் கோப ரேகைகள் பரவ ஆரம்பித்தது.

“புரியும்படி சொல்லு நிலா” என்றான் அவளது படுக்கையில் இருந்த கம்பியை அழுத்தமாகப் பிடித்தபடி.

“நான் மாடிப்படியில் இருந்து கீழ இறங்கும் போது, எனக்குப் பின்னாடி வந்து கொண்டிருந்த ரோஜா தான், என்னைக் கீழ தள்ளிவிட்டாள்” என்று நேக்காக ரோஜாவை இதில் மாட்டிவிட்டாள் நிலா.

தான் செவியால் கேட்ட கேள்விகளைக் கேட்டு அதிர்ச்சியுடன் நிலாவின் முகத்தைப் பார்த்தவன், “என்ன சொல்ற நிலா, ரோஜாவா?” என்றான் நம்ப மாட்டாத குரலில்.

“ஆமாம்” என்று சொல்லி அவள் தலையாட்ட, “அப்படி எல்லாம் இருக்காது நிலா. ஒரு கர்ப்பிணி பெண்ணை கீழே தள்ளிவிடும் அளவுக்கு என் தங்கச்சி கொடியவள் கிடையாது. நேத்து அவள் பேசுனது கூட அம்மாவின் பேச்சைக் கேட்டுத்தானே தவிர மனசால் எதைவும் பேசல” என்று ரோஜாவின் மேல் உள்ள நம்பிக்கையில் கூறினான் சிவா.

மறுபடியும் கண்ணீரைத் திறந்துவிட்டவள், “பார்த்தீங்களா... நீங்க நம்ப மாட்டேங்குறீங்க. இதுக்குத் தான், நான் உங்கக்கிட்ட சொல்லமாட்டேன்னு சொன்னேன்” என்றாள் மூக்கை உறிந்தபடி.

அதில் பதறியவன், “இல்ல இல்ல நான் உன்னை நம்புறேன் நிலா” என்று சொல்லி அவளை சாமாதானம் செய்தவன், சில கணங்கள் கடந்ததும், “நீ ஏதாவது தவறா பார்த்து இருக்கலாம் நிலா. நீ கால் இடறி கீழே விழும் போது, பின்னாடி வந்த ரோஜா உன்னைத் தள்ளின மாதிரி உனக்கு தோன்றி இருக்கலாம்” என்றான் சிவா.

அதுவரை அவனது தோளில் சாய்ந்து அழுது கொண்டிருந்தவள், அவன் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு, “நான் உண்மையைத் தான் சொல்றேன் சிவா. உங்களுக்கு நம்பிக்கை இல்லைனா, எங்க வீட்டு சிசிடிவி பூட்டேஜைப் பாருங்க. அவள் தான் இதுக்கு எல்லாம் காரணம்” என்று அவள் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, சிவாவின் தாடை இறுக ஆரம்பித்தது.

நிலா இவ்வளவு தெளிவாகக் கூறும் போது, அவனாலும் அவள் சொல்லுவதை நம்பாமல் இருக்க முடியவில்லை.

“என்ன...என்ன சொல்ற நிலா? இதெல்லாம் ஆதாரத்துடன் இருக்குதா?” என்று கண்களை பெரியதாக வைத்துக்கொண்டு கேட்டான்.

“ஆமாம் சிவா. நீங்க அந்த பூட்டேஜை வேணும்னா செக் பண்ணிப்பாருங்க” என்று பொய்யை உண்மை போலவே பேசி நடித்தாள்.

அதற்கு மேலும் அந்த இடத்தில் நிற்காமல், கண்களில் கங்கு தெறிக்க வெளியே வந்து ரோஜாவைப் பார்த்தவன், “நிலாவை எதுக்காக கீழ தள்ளிவிட்ட” என்று கேட்டு, ரோஜாவின் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்தான் சிவா.

அவன் கேள்வியில் விழித்த ரோஜா, “என்ன பேசுற நீ. நான் தான் நிலா விழுந்ததை முதலில் பார்த்தேன். என் முன்னாடி தான் அவள் விழுந்தாள். இப்ப என்னமோ நான் தள்ளிவிட்ட மாதிரி நீ பேசுற?” என்றாள் எரிச்சலாக.

நிலவனும் அங்கே தான் நின்று கொண்டிருக்க, ‘அடுத்த டிராமாவை ஆரம்பிச்சுட்டாள்’ என்று தன் தங்கையை நினைத்துக் கொண்டவன், அவளைக் காண உள்ளே சென்றான்.

இங்கே அவள் பற்ற வைத்த நெருப்பு கங்குகளுடன் கனன்று எரிந்து கொண்டிருக்க, உள்ளே மிகவும் மகிழ்ச்சியாக, தன் கால்களை ஆட்டியபடி, தன் அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்தாள் நிலா.

எதுவும் பேசாமல் தன் கையைக் குறுக்காகக் கட்டிக் கொண்டு அவளைப் பார்த்த நிலவன், “குழந்தை வேண்டாம்னா, ஈசியா நம்ம ஹாஸ்பிடல்லையே அபார்ட் பண்ணி இருக்கலாமே நிலா. இவ்வளவு வலியும் வேதனையும் இருந்துருக்காது தானே!” என்றான் அவளைப் பற்றி நன்கு அறிந்தவனாக.

மீண்டும் தன் நடிப்பை தொடர்ந்தவள், சிவாவிடம் சொன்னதை, அப்படியே நிலவனிடம் கூறினாள்.

அதனைக் கேட்ட நிலவன், “அப்ப, கேமரா ஆங்கிள் எல்லாம் பார்த்து தான் விழுந்துருக்க அப்படித்தானே?” என்றான் தன் ஒரு புருவத்தை மட்டும் உயர்த்திபடி.

“அண்ணா, நீ என்ன பேசுற?” என்று அவள் நடிக்க, “வீட்ல உனக்குத் தெரியாத ரகசிய கேமரா இன்னொன்னு இருக்குது நிலா. இதுக்கும் மேல என்கிட்ட நடிக்கத” என்றான் தன் கழுத்தைத் தடவிக் கொண்டே.

உடனே தன் நடிப்பைக் கைவிட்டவள், மேஜையில் இருந்த ஆப்பிளைக் கடித்துக் கொண்டே, “இப்ப எதுக்கு இங்க வந்துருக்க? இன்னும் என்னை என்னவெல்லாம் குத்தி பேசலாம்னு இருக்க?” என்றாள் நிலா.

சிவாவைப் பற்றி எவ்வளவு நன்றாக தெரியுமோ, அதே அளவுக்கு நிலவனைப் பற்றியும் நிலாவுக்கு நன்றாகவே தெரியும். நிலவன் முதலிலையே ஒன்றைக் கணித்துவிட்டால், அவ்வளவு தான். அவனிடம் மேலும் அழுது நாடகம் போடுவது எல்லாம் வீண். அதுவும் அவன் சொன்னதைக் கேட்டு, ‘எனக்குத் தெரியாமல் இன்னொரு ரகசிய கேமரா இருக்குதா!’ என்று நினைத்தும் கொண்டாள்.

“உனக்கு என்ன தான் வேணும் நிலா? நீ என்ன கேட்டாலும் செய்ய நான் தயாரா இருக்கேன். அந்த சிவா தான் உனக்கு வேணும்னா, நான் ஏதாவது பண்ணி உன்னை அவனுக்குக் கல்யாணம் பண்ணி வைக்குறேன்” என்று நிலவன், சொல்ல, அதைக் கேட்ட நிலாவின் முகத்தில் பிரகாசம் நிரம்பி வழிந்தது.

“நிஜமாத் தான் சொல்றியா? நான் என்ன கேட்டாலும் செய்வியா? செய்வியா? செய்வியா?” என்று பைத்தியம் பிடித்தவள் போல், மாறிமாறிக் கேட்டாள்.

நிலவனோ தன் சத்தத்தைக் கூட்டி, “செய்வேன்னு சொல்லிட்டேன் தானே” என்று கத்தினான்.

“எனக்காக நீ ரெண்டு விஷயம் செய்யணும். ஒன்னு நீ எனக்கு சிவாவை கல்யாணம் பண்ணி வைக்கணும். ரெண்டாவது அந்த வனரோஜாவை உன் வாழ்க்கையில் இருந்தே விரட்டி விடணும்” என்றாள் சூனியக்காரி போல் முகத்தை வைத்துக் கொண்டு.

பைத்தியம் பிடித்தவள் போல் ஏதேதோ உளறிக்கொண்டு இருக்கும் நிலாவிடம், நிலவனுக்குப் பேச விருப்பம் இல்லை. இருந்தும் பதில் சொல்லியாக வேண்டும் என்பதற்குப் பேசினான்.

“ரோஜாவை எதுக்காக இதுக்குள்ள இழுக்குற நிலா. நான் உனக்கு என்ன வேணும் என்று மட்டும் தான் கேட்டேன். எனக்கு என்ன தேவை தேவையில்லைன்னு நான் உன்கிட்ட கேட்கல. உன் வாழ்க்கைக்கு என்ன தேவையோ அதை மட்டும் தான் நீ கேட்கணும்” என்றான் கண்டிப்பான குரலில்.

“என்ன அண்ணா இப்படி எல்லாம் பேசுற? இப்ப தான் உனக்கு எந்த வித குறையும் இல்லைன்னு தெரிஞ்சி போச்சி தானே! நீ தாராளமா வேற ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு, சந்தோஷமா வாழலாம். இந்த ரோஜா, கர்ப்பமா இருக்கான்னு நினைச்சிட்டு, நீ எதையாவது செஞ்சி வைக்காத. சொத்துக்காக தானே இவ்வளவும் நீ பண்ண. நமக்கு அந்த சொத்தே வேண்டாம்” என்று நீட்டமாகப் பேசி முடித்தாள் நிலா.

இவளிடம் பேசுவது வீண் என்று நினைத்த நிலவன், “சரி நிலா. ரோஜா இனி என் வாழ்க்கைக்குள் இல்ல. போதுமா?” என்றான்.

“சும்மா சொன்னா மட்டும் போதாது. அந்த காண்ட்ராக்ட்டை கிழிச்சிப் போடு. அவள் நிழல் கூட இனி உன் மேல் படக்கூடாது. என்னோட தோழி ஒருத்தி இருக்காள். அவளைத் தான் நீ கல்யாணம் பண்ணனும்னு நான் முடிவு பண்ணிட்டேன். எனக்காக இதெல்லாம் செய்வ தானே!” என்றாள் நிலவனைப் பார்த்து.

தன் தலையை ஆட்டிக்கொண்டவன், “செய்யுறேன் நிலா” என்று சொல்லும் போதே, தன் கைகளைத் தட்டி, தன் இருப்பை அவர்களுக்கு உணர்த்திய ரோஜா, “சபாஷ் நிலவன். இப்ப தான் ரொம்ப நல்ல முடிவை எடுத்து இருக்கீங்க. இப்பவே அந்த காண்ட்ராக்ட்டை கிழிச்சி போடுங்க” என்று சொன்னதும், ‘அடக்கடவுளே! இவள் எப்ப இங்கு வந்தாள்’ என்று நினைத்து, தன் தலையில் கைவைத்துக் கொண்டான் நிலவன்.


















 

NNO7

Moderator
அத்தியாயம் – 35

நிலவன் வீட்டில் உள்ள தனது அறையில், வேகமாக தன் உடைமைகளை எல்லாம் அலமாரியில் இருந்து எடுத்து தன் பெட்டிக்குள் மாற்றிக் கொண்டு இருந்தாள் ரோஜா.

அப்போது வேகமாக அங்கே வந்த நிலவன், “இப்ப எதுக்காக உன் ட்ரெஸ்சை எல்லாம் எடுத்து வச்சிக்கிட்டு இருக்க?” என்றான் அவளது முழங்கையைப் பிடித்துத் தடுத்தபடி.

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீங்க தானே நிலாவிடம் சொன்னீங்க. இப்ப வந்து எதுக்காக என்னைத் தடுக்குறீங்க?” என்றவள் ஒருவழியாக நிலவனிடம் இருந்து செல்லப்போகின்றோம் என்று மகிழ்ச்சி இல்லாமல், எரிச்சலாக பேசினாள்.

“ம்ச்... அது சும்மா. நிலா ரொம்ப துடிப்பா இருந்ததுனால அப்படி சொன்னேன்” என்றான் நிலவன்.

தன் இமையை சுருக்கி வைத்துக் கொண்டு நிலவனைப் பார்த்தவள், “நான் கர்ப்பமா இருக்குற விஷயம் தெரிந்ததால் தானே என்னைத் தடுக்குறீங்க? இந்த விஷயம் எப்படி உங்களுக்குத் தெரிஞ்சது? என்னை வேவு பார்க்குறீங்களா?” என்றாள்.

தீப்பந்தத்தின் கங்குகள், ரோஜாவின் கண்களில் வெடித்துக்கொண்டிருந்தது.

மூச்சை இழுத்து வெளியேவிட்டவன், “அதான் நான் நிலாவிடம் பேசியது எல்லாத்தையும் கேட்டுட்டியே! இதையும் தானே கேட்ட... உன்கூட மட்டும் இல்ல, வேறு யார்கூட நான் சேர்ந்தாலும், எனக்குக் குழந்தை கிடைக்கும். அதனால் குழந்தையை இதுக்குள்ள கொண்டு வராத” என்றான் அதிகாரமாக.

“ம்ச்... அப்ப வேவு பார்த்ததுக்கு என்ன பதில் சொல்லப்போறீங்க?” என்றாள் கோபமாக.

“இதுக்கு எல்லாம் தனியா வேவு பார்க்கணும்னு அவசியம் இல்ல. உன் நடவடிக்கையே காட்டிக்கொடுத்துருச்சி” என்றான் அசால்ட்டாக.

“சரி அதை விடுங்க. ராட்சசி மாதிரி ஆட்டம் போட்ட, உங்க தங்கச்சியே சொத்து வேண்டாம்னு சொல்லிட்டாள். ஆனா உங்களுக்கு சொத்து ஒன்னு தான் குறிக்கோள் இல்லையா? அதனால் தானே என்னைத் தடுக்குறீங்க?” என்றாள் ஆவேசமாக.

“ம்ச்... அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல” என்றவனுக்கு ரோஜாவைத் தடுத்து நிறுத்த என்ன பேசுவது என்றே தெரியவில்லை.

காண்ட்ராக்ட் திருமணம் என்பது மிகவும் தவறான ஒன்றாக இருந்தாலும், இப்போதைக்கு இருவரையும் இந்த உறவுக்குள் பிடித்து வைத்திருப்பதும் அது தானே!

“பிறகு என்ன?” என்று தன் முழங்கையை அவனிடம் இருந்து பிரித்து எடுத்தபடி, அவனைப் பார்த்தாள் ரோஜா.

“காண்ட்ராக்ட் இருந்தாலும், இல்லைனாலும் நீயும் நானும் கணவன் மனைவி தான். நாம டிவர்ஸ்க்குக் கூட அப்ளை பண்ணல” என்றான் நிலவன்.

“ரெண்டு வருஷம் முடிஞ்சதும் நாம பிரியுறது தானே முறை. அப்படி சொல்லித் தானே என்கிட்ட கையெழுத்து வாங்குனீங்க?” என்றாள் தன் இடையில் கையைக் வைத்துக்கொண்டு.

எதையோ சிந்தித்துக் கொண்டு இருந்தவன், “அது என்னவோ உண்மை தான். ஆனா திருமணத்தை பதிவு செஞ்சது உண்மை தானே! அப்ப நீ சொன்ன மாதிரி காண்ட்ராக்ட்டை கிழிச்சிப் போடுறது தானே முறை” என்று இப்போது தான் தெளிவாக யோசித்துக் கூறினான் நிலவன்.

ரோஜா வெளியே செல்கின்றேன் என்று சொன்னதும், பதற்றத்தில் இருந்தவன், இந்த விஷயத்தை இப்போது தான் யோசனையே செய்கின்றான்.

அவன் பேச்சைக் கேட்டு அதிர்ந்த ரோஜா, “காண்ட்ராக்ட்டை கிழிச்சுப் போட்டுட்டா, நமக்குள்ள எதுவும் கிடையாது தானே! அப்படித்தானே ஹாஸ்பிடல்ல வச்சி நிலாவும் சொன்னாள்” என்று வினாவினாள்.

அதற்கு சிரித்துக் கொண்ட நிலவனோ, “காண்ட்ராக்ட்டை உருவாக்குனதே நான் தானே! ஆனா நம்ம கல்யாணம் அப்படி இல்லையே! இந்திய அரசாங்கத்தின் படி முறையா பதிவு பண்ணப்பட்டு இருக்கு ரோஜா” என்றான் தன் கழுத்தைத் தடவியபடி.

“சரி. அப்ப நான் உங்களுக்கு டிவர்ஸ் கொடுக்குறேன். இங்க இருக்கும் சட்டப்படி, நான் உங்க ஹாஸ்பிடலில் இரண்டு வருஷம் வேலை பார்க்கணும் அவ்வளவு தானே! பார்க்குறேன். ஆனா ஒன்னு மட்டும் உங்க நியாபகத்தில் வச்சிக்கோங்க நிலவன், இந்த நிமிஷத்தில் இருந்து, உங்களுக்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்ல” என்றாள் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டபடி.

நிலவனோ மெதுவாக அவளை நோக்கி நடந்தபடி பேசினான். அவளோ அவன் பேச பேச பின்னோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

“அப்படி எல்லாம் நீ சுலபமா இதில் இருந்து வெளியபோக முடியாது ரோஜா. காண்ட்ராக்ட்டை வேணும்னா கிழிச்சு போட்டுடுறேன்” என்று சொல்லும் பொழுது, பின்னோக்கி நடந்து கொண்டிருந்த ரோஜா, சுவற்றில் முட்டி நின்றாள்.

ரோஜாவுக்கு இருப்பக்கமும், சுவற்றில் தன் இருகையை வைத்தபடி, அணைக்கட்டிய நிலவன், “அவ்வளவு சீக்கிரம் உன்னை விட்டுடுவேன்னு நினைக்குறியா ரோஜா?” என்று கேட்டவன் கண்களில் என்ன இருந்தது, என்பது அவளுக்கு விளங்கவில்லை.

கொஞ்சம் முகத்தை அசைத்தால் கூட, அவனது நெஞ்சில் ரோஜாவின் இதழ் பதிந்துவிடும்.

அதுவும் இல்லாமல், எப்போதும் கோர்ட் சூட்டுடன் இருக்கும் நிலவனோ, இன்று வெள்ளை நிற சட்டையில், முதல் மூன்று பட்டன்கள் இல்லாமல், தன் வெற்று மார்பை காட்டிக்கொண்டு நின்று இருந்தான்.

அவன் நெஞ்சம் தந்த வெப்பம் வேறு, ரோஜாவை எதுவோ செய்ய, “இந்த பட்டன்ஸ் எல்லாம் ஏன் இப்படி இருக்கு? உடம்பை மறைப்பதற்கு தானே பட்டன்ஸ் கொடுத்து இருக்காங்க. அதை யூஸ் பண்ணுங்க ” என்றாள் அவனது அவிழ்ந்து இருந்த பட்டன்களை சுட்டிக்கட்டி.

அதனைக் கேட்டு இன்பமாக விசில் அடித்தவன், “பார்க்குறதுக்கு எவ்வளவோ இடம் இருக்கு. ஆனா உன்னோட கண்கள் ஏன் இங்க நோக்கி வருது” என்றான் தன் வெற்று நெஞ்சைக் காட்டி.

“இப்படி முன்னாடி வந்து நின்னா நானும் எங்க பார்க்குறதாம்” என்று மெதுவாக முணுமுணுத்தக் கொண்டாள்.

அது தெளிவாக நிலவனின் காதை சென்று அடைய, “அப்ப நான் உன்னை டிஸ்டர்ப் பண்றேனா?” என்றான் மெல்லியதாக, அவளது காதின் அருகே குனிந்தபடி. அப்போது அவனது உதடோ அவளது காதை உரசிவிட்டு வந்தது.

அது தந்த நெருக்கம், ரோஜாவுக்கு ஒரு வித கூச்சத்தைத் தர, ஒரு நிலைக்கு மேல் முடியாமல் நெளிந்தவள், நிலவனின் வெற்று நெஞ்சில் கைவைத்து, அவனைத் தள்ளிவிடப்பார்த்தாள்.

அவனோ அச்சடித்து வைத்த இரும்பு சிலை போல் நின்று இருக்க, அவனை அசைப்பது என்னவோ முடியாத காரியம் ஆகிற்று அவளுக்கு.

இப்போது தன் ஒரு கையால், பெண்ணவளின் மெல்லிய இடையைப் பற்றியவன், தன்னை நோக்கி அவளை இழுக்க, ஆடவனின் மார்பில் மோதி நின்றாள் ரோஜா.

அவள் உடம்பில் சிலிர்ப்பு உண்டாக, கடினப்பட்டு தன் வாயைத் திறந்தவள், “உங்களுக்கு என்ன வேணும் நிலவன். எதுக்காக இப்படி எல்லாம் பண்றீங்க?” என்றாள் மெதுவான குரலில்.

அவள் குரலுக்குக் கட்டுப் பட்டவன் போல், “எனக்கு நீ தான் வேணும் ரோஜா” என்று சொல்லி தன் கண்ணோடு, அவளது கண்ணைக் கலக்கவிட்டான்.

இருவரின் இதய சத்தமும் ஒன்றாய் இணைந்து, காதல் கீதம் பாடிக்கொண்டு இருக்க, நிலவனின் இதழ், பாடலுக்கு முன்னுரை வழங்கும் விதமாய், ரோஜாவின் இதழோடு ஒற்றி எடுத்தது.

ரோஜாவுக்கோ கோபம் வரவில்லை, எரிச்சல் வரவில்லை மாறாக முத்தத்தை வரவேற்கும் விதமாய், தன் கண்களை தன்னை அறியாமைலையே மூடிக் கொண்டாள்.

அதனை சம்மதமாக எடுத்துக்கொண்ட, நிலவனும், இப்போது வன்மையாக தன் இதழை அவள் இதழோடு இணைத்து, சுவைக்க ஆரம்பித்தான். முத்தத்தின் வேகம் அதிகமாக, ரோஜாவும் அவனுக்கு சளைக்காமல் ஈடுகொடுத்துக் கொண்டிருந்தாள்.

பின் ரோஜாவின் அலைபேசி ஒலிக்கும் சத்தத்தில் தான், ரோஜா சுயநிலைக்கு வந்தவள், தான் செய்து கொண்டிருக்கும் காரியம் அறிந்து, தன்னைத் தானே திட்டிக்கொண்டு, அவன் இதழில் இருந்து தனது இதழை பிரித்து எடுத்தவள், “ச்சீ... என்ன பண்றீங்க?” என்று கேட்டுக்கொண்டே, தன் புறங்கையால் தனது உதட்டைத் துடைத்தாள்.

தனது உதட்டை மெதுவாக வருடிய நிலவன், “என் உதட்டை நல்லா கடிச்சு வச்சிட்டு, என்னைப் பார்த்து ச்சீன்னு சொல்றியா?” என்றான் தனது உதட்டை ஒரு பக்கமாக வளைத்து சிரித்தபடி.

“ஐயோ...” என்றபடி தன் தலையில் கைவைத்தவள், “எல்லாம் என்னோட தப்பு தான். உங்களுக்கு எதுக்கு நான் வேணும்?” என்றாள் ரோஜா.

“தெரியல” என்று தன் தோள்களைக் குலுக்கினான் நிலவன்.

“என்னாச்சி நிலவன்? காண்ட்ராக்ட்டை மீறி என்னைக் காதலிக்க ஆரம்பிச்சிட்டீங்களா? இல்லை குழந்தைக்காகவா?” என்றாள் ரோஜா.

“ம்ச்... மறுபடியும் குழந்தையை இதில் கொண்டு வராத” என்றவன் குரலில் இப்போது கோபம் வழிந்து ஓடியது.

“பின்ன? லவ்வா? உங்களுக்குத் தான் எங்க குடும்பத்தைக் கண்டாலே ஆகாதே! முதல் தடவை என்னைப் பார்க்கும் போது, என்னை அருவருப்பான கண்ணோட்டத்துடன் தானே பார்த்தீங்க?” என்றவள் குரலில் இப்போது கிஞ்சித்துக்கும் வெட்கம் இல்லை, நடுக்கம் இல்லை, ஆளுமையான பெண் சிங்கம் போலவே இருந்தது அவளது பேச்சு.

“லவ்வா? அப்படி எல்லாம் ஒன்னும் கிடையாது” என்று சாதாரணமாக அவன் கூறியதும், ரோஜாவோ குழம்பித் தான் போனாள்.

“அப்பறம் என்ன தான் உங்களுக்கு என்கிட்ட இருந்து வேணும்? எதுக்காக என்னைப் போக விடமாட்டேங்குறீங்க” என்று எரிச்சலாகிக் கேட்டாள்.

“என்னமோ தெரியல, வாழ்க்கை முழுவதும், உன்கூடவே இருக்கணும்னு தோணுது” என்று நிலவனின் வாயில் இருந்து வந்த வார்த்தைகளைக் கேட்டு, பேசவும் மறந்தாள் ரோஜா.

இந்தப்பக்கம் மேஜையில் இருந்த ரோஜாவின் அலைபேசியோ, அழைப்பை எடுக்கப்படாமல் அடித்து அடித்து ஓய்ந்து போய் இருந்தது.

அதிர்ச்சியில் இருந்து வெளிவந்தவளாக, “இன்னும் என்னை வச்சி என்ன கேம் விளையாடலாம்னு முடிவு பண்ணி இருக்கீங்க நிலவன்?” என்றாள் அவன் கண்களை நேருக்கு நேராக பார்த்தபடி.

தொடர்ந்து பேசியவள், “பலபேர் விளையாடிப் போட்ட பொம்மை தானே இவள். யாரு கேட்கப்போறான்னு நினைச்சீங்களா?” என்றாள் கண்களில் வலியுடன்.

அவளது வலி, நிலவனின் நெஞ்சத்தையும் தாக்க, அவள் கன்னத்தில் தனது வலது கையை வைத்தவன், “உனக்காக இருப்பேன்னு நான் சொல்றேன். நீ என்னை பயன்படுத்திக்கோ. உனக்கு எப்போதும் அரணா நான் இருப்பேன்” என்றான் உருக்கமான குரலில்.

தன் காதுகள் இரண்டையும் மூடிக்கொண்டவள், “இந்த மாதிரி எல்லாம் பேசியே மயக்குறத முதலில் நிறுத்துங்க. இந்த மாதிரி பேசிப்பேசித் தான், என்னை இந்த இடத்தில் கூட்டிட்டு வந்து நிறுத்தி வச்சி இருக்கீங்க” என்றாள்.

தன் தலையை மேலும் கீழும் ஆட்டியவன், “உனக்குப் பிடிக்கலைனா நான் தொந்தரவு பண்ண மாட்டேன். ஆனா இங்க இருந்து மட்டும் போகாத” என்றான்.

“நீங்க சொல்றத, நான் எதுக்காக கேட்கணும்? நான் போகத்தான் போறேன். அதான் உங்க தங்கச்சி உங்களுக்கு ஒரு பொண்ணை பார்த்து வச்சிருக்காளே! அவளுடன் சேர்ந்து எவ்வளவு குழந்தை வேணாலும் பெத்துக்கோங்க” என்றவள் குரலில் இப்போது பொறாமை பொங்கி வழிந்தது.

நிலவனுக்குள்ளே காதல் பொங்கி வழிந்தாலும், அதற்கு காதல் என்ற பெயர் கொடுக்க அவன் நினைக்கவில்லை. அதற்குக் காரணம் அவன் வாழ்க்கையில் ரோஜாவை காண்பதற்கு முன்னே முழு நேர மனித இயந்திரமாக இருந்ததே காரணம். பெயர் சூட்டத் தெரியவில்லை என்பதை விட, இது தான் காதல் என்று அவன் அறியவில்லை.

ஆனால் அவனுள் ரோஜாவின் மேல் சொல்லப்படாத அன்பு அதிகம் உள்ளது. இதில் ரோஜா கொஞ்சம் வித்தியாசம் தான். அவளை அறியாமலையே நிலவனின் நெருக்கத்தை ரசிக்கின்றாள். ஆனால் அவன் தனக்கு செய்த துரோகத்தை அவளால் மன்னிக்க முடியவில்லை.

மூச்சை நன்றாக இழுத்து வெளியே விட்டவள், “இங்கப் பாருங்க நிலவன், நான் உண்மையை சொல்லிடுறேன், நான் இங்க வந்ததே, நீங்க எனக்குப் பண்ண துரோகத்திற்குப் பதிலடி கொடுக்கத்தான். ஆனா அது என்னோட சுபாவம் கிடையாது. இப்ப நீங்க பண்ண எல்லாத்தையும், நான் மறந்துடுறேன். என் வழியைப் பார்த்து என்னைப் போக விடுங்க” என்றவள் கண்கள் கலங்கித் தான் போனது.

“குழந்தையோட எங்கப்போகப்போற ரோஜா? குழந்தைக்கு அப்பா வேண்டாம்னு முடிவு பண்ணிட்டியா?” என்ற நிலவனின் கண்களும் முதன்முதலாக கலங்கித் தான் போனது.

“உங்களுக்கு எதுக்காக இது மேல அவ்வளவு அக்கரை?” என்று தன் வயிற்றைக் காட்டியவள், திக்கித் திணறியக் குரலில், “சொத்து கிடைக்கணும்னு, என்னை செயற்கை கருத்தரிப்பு மூலம், குழந்தை பெத்துக்க சொன்னவரு தான நீங்க...” என்று அவள் பேசிக்கொண்டு இருக்கும் போதே, நிலவனின் அலைபேசி சத்தமிட ஆரம்பித்தது.

தன் காற்சட்டைப் பையில் இருந்ததால் அதனை உடனே எடுத்துத் தன் காதில் வைத்த நிலவன் கண்கள் அதிர்ச்சியில் விரிந்து, “என்ன சொல்ற? சிவாவா?” என்று கேட்டான்.

சிவாவின் பெயர் நிலவனின் வாயில் இருந்து வந்ததும், “என்ன... என்னாச்சி என் அண்ணனுக்கு?” என்று பதற்றத்துடன், தன் கவலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டுக் கேட்டாள் ரோஜா.

“உன் அருமை அண்ணன் உன் மேல் கம்ப்ளைண்ட் கொடுத்து இருக்கான். இப்ப உன்னை அரஸ்ட் பண்ண போலீஸ் வருது” என்றான் நிலவன்.


















 

NNO7

Moderator
அத்தியாயம் – 36

நிலவன் சொன்ன செய்தியைக் கேட்டு அதிர்ந்த ரோஜா, “என்ன பேசுறீங்க? என் அண்ணன் எனக்கு எதிரா கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கானா? அப்படி எல்லாம் இருக்கவே இருக்காது” என்று படபடப்பாக பேசியவள், மேஜையில் இருந்த தனது அலைபேசியை தன் கையில் எடுத்தாள், அதில் பரணியிடம் இருந்து ஏகப்பட்ட, எடுக்கபடாத அழைப்புகள் வந்து இருந்தது.

“இதை எப்படி நான் பார்க்காமல் விட்டேன்” என்று தன் தலையில் அடித்துக்கொண்டவள், வேகமாக தன் அன்னை பரணிக்கு அழைப்புவிடுத்தாள்.

அவர் இவளது அழைப்பை எடுத்ததும், “பிஸியா இருந்தியா? இப்ப எங்க இருக்க?” என்றார் படபடப்பாக.

“இங்க நிலவன் வீட்ல தான் இருக்கேன் அம்மா” என்றாள் நிலவனைப் பார்த்துக்கொண்டே.

பேசுவது பரணி தான் என்று தெரிந்ததும், நிலவனின் முகம் அஷ்டகோணலாக மாறியது.

“சிவா...” என்று அவர் ஆரம்பிக்கும் போதே, “தெரியும் அம்மா. இப்ப தான் நிலவனுக்குப் போன் வந்தது” என்றாள்.

“சிவாவுக்கு சரியான பைத்தியம் தான் பிடிச்சி இருக்கு. நீ உடனே நம்ம வீட்டுக்கு வா” என்றார் அவர்.

“சரிம்மா” என்று சொல்லி வைத்தவளுக்குக் கைகள் ஆட்டம் கொடுக்க ஆரம்பித்தது.

அங்கே நின்று கொண்டிருந்த நிலவனைத் தாண்டி சென்று, மறுபடியும் தன் உடைமைகளை நடுங்கும் கைகளோடு மொத்தமாக அப்படியே தன் பெட்டியில் அள்ளிப்போட்டாள் ரோஜா.

“ம்ச்... இப்ப என்ன பண்ற?” என்று அவளின் கையைப் பிடித்துத் தடுத்தான் நிலவன்.

“அம்மா, என்னை வேகமா வீட்டுக்கு வர சொன்னங்க” என்று சொன்னவளின் கை நடுக்கத்தைக் கண்டவன், “சரி உன்னோட கை ஏன் இப்படி ஆடுது? நீ இப்படி டென்சன் ஆகுறது பேபிக்கு நல்லது இல்லை ரோஜா” என்றான் அக்கறையான குரலில்.

அவனிடம் இருந்த தன் கையை வெடுக்கென்று பிடுங்கியவள், “பின்ன என்னை வேறு என்ன தான் செய்ய சொல்றீங்க நிலவன். இதுக்கு எல்லாம் காரணம் நீங்க மட்டும் தான். உங்களால் மட்டும் தான் நான் இங்க லண்டன்ல வந்து கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கேன்” என்று கத்தினாள்.

“நீ தான் எந்த தப்பும் செய்யலையே பிறகு எதுக்கு எங்கையோ ஓடி ஒழியப் பார்க்குற?” என்றான் அவள் முதுகைத் தடவியபடி.

“நான் எங்கயும் ஓடி ஒழியல. என் அம்மா வீட்டுக்குத் தான் போகப்போறேன். என்னுடைய அண்ணன், அந்த நிலா சொன்னதை அப்படியே நம்புவான்னு நான் நினைச்சு கூட பார்க்கல” என்றாள் விரக்தியான குரலில்.

“சிசிடிவி பூட்டேஜ்ல நீ தான் கீழ தள்ளிவிட்ட மாதிரி இருக்கு” என்றான் மெதுவாக.

அதில் தன் தாடை இறுக நிலவனை கோபமாகப் பார்த்தவள், “ஏஐ மூலம், நான் தள்ளிவிட்ட மாதிரி பண்ணிட்டு, என் மேல் பழியை போடுறாள் நிலா. வீடியோவை சோதனை செஞ்சா தெரியத் தானே செய்யும், அது உண்மையா பொய்யான்னு” என்றாள்.

தன் நெற்றியை நீவிவிட்ட நிலவன், “அது கொஞ்சம் சிக்கலான விஷயம் ரோஜா. நான் இப்ப தான் அதைப் பார்த்துட்டு வரேன், கேமரா இருந்த ஆங்கிள் படி பார்த்தா, நீ தான் நிலாவின் பின்னாடி இருக்க. அவள் கீழே விழும்போது, அதிர்ச்சியில், கையையும் நீட்டி இருக்க. இந்த ஆதாரம் போதாதா உன்னை கைது பண்ண” என்றான் நிலவன்.

அப்போது தான், காலையில் நிலாவைப் பார்த்துவிட்டு, கோபத்தோடு தன் முன்னே வந்து நின்ற சிவா பேசியது, அவளின் நியாபகத்திற்கு வந்தது.

“நீ என்ன பேசிக்கிட்டு இருக்க அண்ணா, நான் எதுக்காக நிலாவை கீழ தள்ளிவிடணும்?” என்றாள் தன் அஞ்சன விழியால் விழித்தபடி.

“நீ தானே நிலா வயிற்றில் வளர்வது என்னோட குழந்தை இல்லைன்னு சொல்லிக்கிட்டு இருந்த” என்றான் பல்லைக் கடித்தபடி.

“உண்மையும் அது தான் அண்ணா. உனக்கு நம்பிக்கை இல்லைனா, இப்பவே நிலாவுக்கு ட்ரீட் பண்ண டாக்டரை வந்து கேளு. அவங்க உனக்கு உண்மையை சொல்லுவாங்க” என்றாள்.

“நீ வேலை பார்க்குற இடத்தில், உனக்கு ஆதரவா தானே எல்லாரும் இருப்பாங்க” என்று சொல்லி, ரோஜாவை நம்ப மறுத்தான் சிவா.

நிலாவின் சொந்த மருத்துவமனையும் அது தானே என்பது இந்த முட்டாளுக்கு யோசிக்க முடியவில்லை. காதல் கண்ணை மறைத்தது என்பதை விட, அவனைப் பைத்தியம் ஆக்கியது என்றே சொல்லலாம்.

“சரி அதை விடு. குழந்தை கலைந்ததுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? நிலாவை கீழ தள்ளி எனக்கு என்ன கிடைக்கப்போகுது?” என்று தன் மேல் விழுந்த வீண் பழியைப் போக்க வேண்டி பேசினாள் ரோஜா.

“உனக்கு ஒண்ணுமே தெரியாது அப்படித் தானே! எல்லாம் என்னோட தப்பு தான், உன்னை இங்க கூட்டிட்டு வந்து, நான் பெரிய தப்பு பண்ணிட்டேன். ஆனா என் குழந்தையவே கொல்ல வந்த பேய் நீன்னு எனக்குத் தெரியாம போச்சு” என்று நரம்பு இல்லாத நாக்கால், ரோஜாவை சொற்கள் கொண்டு தாக்கினான் சிவா.

அவன் வார்த்தைகளைக் கேட்ட ரோஜாவின் கண்களில் தன்னைப் போலவே கண்ணீர் சுரக்க ஆரம்பித்தது.

“நீ என்னைப் புரிஞ்சி வச்சது அவ்வளவு தான் அண்ணா” என்றாள் வெற்றுக் குரலில்.

ஆனால் சிவா இன்னும் விடுவதாக இல்லை.

“என்ன தான் நமக்கு ஒரே பெற்றோர்களா இருந்தாலும், நீ என்னுடன் வளரலை. உன் பழக்க வழக்கம் எல்லாமே மோசமா இருக்கப்போய் தான், உன்னை வளர்த்தவங்க உன்னை அப்படி ட்ரீட் பண்ணி இருக்காங்க. அவங்க உன்னைக் கஷ்டப்படுத்துனதுல தப்பே இல்ல” என்று தன் கந்தக நாக்கால், எவ்வளவு தாக்கிப் பேச முடியுமோ அவ்வளவு தாக்கினான் ரோஜாவை.

ஆனால் அனைத்திற்கும் அமைதியாகவே இருந்த ரோஜா, “என்னை நீ அடிச்சி இருந்தால் கூட எனக்கு இவ்வளவு வலித்து இருக்காது அண்ணா. ஆனா நீயோ பேச வேண்டியதை எல்லாம் பேசிட்ட, குப்பையைக் கூட அள்ளி சுத்தம் செய்திடலாம். ஆனா நீ கொட்டின வார்த்தைகளை எல்லாம் சுத்தம் செய்ய முடியாது. நீ பேசின ஒவ்வொரு வார்த்தையும், என் நெஞ்சில் ஆறாத வடுவா ஆகிடுச்சி” என்றாள் தன் கண்ணீரைத் துடைத்தபடி.

ரோஜாவை கொன்று விடுவதைப் போல பார்த்தவன், “எனக்கு இனி உன்கிட்ட பேச்சு இல்ல. ஆதாரத்தோட உன்னை என்ன செய்யணுமோ, அதை செஞ்சுக்குறேன்” என்று சொல்லிவிட்டு சென்றான்.

அப்போது கூட, சிவா மேல் அவ்வளவு கோபம் வரவில்லை ரோஜாவுக்கு. சிவாவின் இளகிய மனதை உபயோகப்படுத்தி, இவ்வாறு பேச வைத்த நிலாவின் மேல் தான் அவளது கோபம் மொத்தமும் சென்றது.

அதே கோபத்துடன், அவள் நிலாவின் அறைக்குள் செல்லப்போகும் போது தான், அவள் நிலவனுடன் பேசிக்கொண்டு இருந்தது அவளது காதில் விழுந்தது.

அந்த நேரத்தில் தான், நிலா, சிசிடிவி பூட்டேஜ் இருப்பதாகக் கூற, நிலவனோ, உனக்குத் தெரியாத ரகசிய கேமரா ஒன்று இருக்கு என்று நிலாவிடம் கூறிக்கொண்டு இருந்தான்.

காலையில் நடந்த இவ்வளவு சம்பவங்களையும் ஒரு முறை யோசித்துப் பார்த்து, தன் கண்களை மூடித் திறந்த ரோஜா, நிலவனைப் பார்த்து, “காலையில் நிலாக்கிட்ட பேசும் போது, இன்னொரு ரகசிய கேமரா இருக்குன்னு சொன்னீங்க தானே நிலவன்? நீங்க சொன்னதும் கூட அந்த நிலா பயந்து போனா தானே! அதைப் பார்த்தா உண்மை தெரியும்னு நினைக்குறேன். ப்ளீஸ் எனக்கு இந்த உதவி மட்டும் பண்ணுங்க” என்று கெஞ்சினாள்.

தன் அருகே இருந்த இருக்கையில், நன்றாக சாய்ந்து அமர்ந்துகொண்டு, கால் மேல் கால் போட்டபடி, ரோஜாவை கீழிருந்து மேலாக பார்த்தவன், “உனக்கு உதவி பண்ண எனக்கும் ஆசை தான். ஆனா, நான் எதுக்காக உனக்கு உதவி செய்யணும்?” என்றான் தன் உதட்டை ஒரு பக்கமாக வளைத்தபடி.

“எல்லாம் ஒரு மனிதாபிமானம் தான் நிலவன். உங்களுக்குத் தெரியத்தானே செய்யுது நான் எந்த ஒரு தப்பும் செய்யாத நிரபராதின்னு” என்று சொன்னபடி, நிலவனுக்கு முன்னால் வந்து நின்றாள்.

தன் தாடையைச் சொறிந்தபடி, “சரி, பண்றேன். ஆனா உனக்கு உதவி பண்றதுனால எனக்கு என்ன கிடைக்கும் ரோஜா” என்றான் தன் கீழ் உதட்டைக் கடித்துக் கொண்டு.

தன் எச்சிலை ஒரு இடறு விழுங்கியவாறு, “இதுக்கும் ஏதாவது காண்ட்ராக்ட் போடுவீங்களா?” என்றாள் பயந்தபடி.

“ச்சே... ச்சே... நான் அந்த அளவுக்கு மோசமானவன் இல்ல ரோஜா. ஆனா இந்த வீட்டை விட்டு நீ போகக்கூடாது. இந்த வாழ்க்கை முழுவதும் நீ என்னுடன் தான் இருக்கணும்” என்று சொன்னதும் ரோஜாவுக்கு மூச்சே நின்றுவிட்டது.

“காதல் இல்லைன்னு சொல்றீங்க, பின் எதுக்காக இப்படி பேசுறீங்க? குழந்தைக்காகவும் இல்லைன்னு சொல்லிட்டீங்க. வேற என்ன தான் உங்க பிரச்சனை மிஸ்டர் நிலவன்” என்றாள் சோர்வுடன்.

“அதான் சொன்னேனே உன்கூட இருக்கணும்னு மனசு சொல்லுது. இது ஏதோ ஒரு பீலிங்க்ஸ். ஆனா காதல் எல்லாம் கிடையாது. இரண்டாவது என்னுடைய குழந்தைகள் அப்பா இல்லாம வளரக்கூடாது. அன்னைக்கு நடந்த சம்பவத்துல என்னுடைய பங்கும் அதிகமா இருக்கு” என்றதும், ‘என்ன பேச்சு பேசுறார் இவர்’ என்று தன் மனதினுள் நினைத்த ரோஜாவின் முகம் சிவந்து தான் போனது.

பின், அவன் சொன்ன வார்த்தைகாலை முழுவதுமாக உள்வாங்கிக் கொண்டவள், திடீரென்று கத்தினாள்.

“இப்ப என்ன சொன்னீங்க? குழந்தைகளா? அப்ப இதைப் பத்தியும் தெரிஞ்சி தான் வச்சி இருக்கீங்க! எங்க ஹாஸ்பிடலுக்குள் உங்க ஆள் இருக்குது அப்படித் தானே!” என்றவள், ‘முதல்ல இதை அம்மாக்கிட்ட சொல்லி நடவடிக்கை எடுக்கச் சொல்லணும்’ என்று தன் மனதில் குறித்துக் கொண்டாள்.

“இதெல்லாம் சாதாரணம். ஏன் நிலா ஹாஸ்பிடலில், கங்கா நிறுவனத்தை சேர்ந்தவங்க யாருமே இல்லையாக்கும்” என்று சொல்லிக்கொண்டே, ரோஜாவின் கையைப் பிடித்து இழுத்தவன், அவளைத் தூக்கி தன் மடி மேல் அமரவைத்துக் கொண்டான்.

அதில் அதிர்ச்சியின் எல்லைக்கே சென்றவள், “என்ன பண்றீங்க நிலவன்” என்று சொல்லியபடி, அவள் எழுந்திருக்கப் பார்க்க, அதனை செய்ய முடியாமல், நிலவனின் கைகள் அவளது இடையைப்பற்றி இருந்தது.

இப்போது அவனது சட்டையை இறுக்கமாகப் பிடித்தவள், “அப்ப காண்ட்ராக்ட்டை, நீங்க மீறிட்டீங்க மிஸ்டர் நிலவன். காண்ட்ராக்ட் படி, வெளிய மட்டும் தான் நாம கணவன் மனைவி. ஆனா நீங்க என்ன செஞ்சி வச்சிருக்கீங்க” என்றவளுக்கு, அவன் மேல் அமர்ந்து இருப்பது அவஸ்தையாக இருந்தது.

“என்னை விட்டு எங்கயும் போகமாட்டேன்னு சொல்லு” என்றான் அவன்.

“இங்கப்பாருங்க நிலவன், விருப்பம் இல்லாத ஒரு பொண்ணைக் கட்டாயப்படுத்துறீங்க நீங்க” என்றாள் அவனுக்குப் புரியவைக்கும் நோக்கில்.

“விருப்பம் இல்லாமல் தான், இப்படி இருக்கியா?” என்று கேட்டபடி, அவளின் டிசர்ட்டை, இடையில் இருந்து விலக்கி, அவளது வெற்று வயிற்றை மெதுவாக வருடினான்.

அந்த சிலிர்ப்பில் ரோஜாவின் கண்கள் தானாக மூடிக்கொண்டது.

அவன் செய்து கொண்டு இருப்பதை எல்லாம் அவளால் தடுக்கவும் முடியவில்லை.

அந்த நேரம் இருவருமே, தங்களது அந்தரங்க நேரத்தில்,நடப்பை எல்லாம் மறந்து போய் பேச ஆரம்பித்தனர்.

அப்போது திடீரென்று, அறைக்கதவைத் திறந்து உள்ளே வந்த சிவா, நிலவனின் மடியில் ரோஜா அமர்ந்திருப்பதைப் பார்த்து அதிர்ந்தான்.


(இன்னைக்கு சின்ன யூடி தான் டியர்ஸ்! நாளைக்கு சாயந்திரம் 5 மணிக்கு. இன்னும் இரண்டு யூடிக்களுடன் வரேன். நன்றி)





 
Status
Not open for further replies.
Top