எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

ஏழ் வண்ண வானவில் நீயே - கதை திரி

Status
Not open for further replies.

Asha Evander

Moderator
அத்தியாயம் 1

அந்த திரையரங்கம் முழுவதும் ஒரே கூச்சலும் இருக்கைகளை தூக்கி எறிவதுமாக, மிகவும் அமர்க்களமாக இருந்தது. காரணம் இன்று ஆரண்யன் சக்கரவர்த்தியின் ஏழாவது படம் முதல் காட்சி. அவனின் மற்ற படங்களில் நான்கு மட்டுமே ஹிட் கொடுத்தாலும் அவனுக்காகவே அவனை ரசிக்கும் ரசிகர்கள் பலர். இன்றும் அப்படி தான். படம் அத்தனை சுவாரசியமாக இல்லை என்றாலும் ஆரண்யணின் முகத்தை திரையில் பார்த்ததற்கே இத்தனை அமர்க்களம்.

அவன் சினிமா துறைக்கு வந்தே நான்கு வருடங்கள் தான் ஆகி இருந்தன. அதற்குள் ஏழு படங்களை முடித்து அதில் நான்கு படங்கள் மாபெரும் வெற்றியை கண்டிருந்தது. ஒரு படம் தேசிய விருதும் வாங்கி இருந்தது.

அந்த தியேட்டரில் கடைசி வரிசையில் மக்களோடு இணைந்து தானும் ரசித்துக் கொண்டிருந்தான் ஆரண்யன். அவன் எப்போதும் இப்படித் தான். அவனின் படம் ஓடுகிறதோ இல்லையோ, இந்த தியேட்டருக்கு தவறாமல் வந்து விடுவான். அவனின் ரசனையே வேறு.

இன்றும் படத்திற்கு கிடைத்த வரவேற்பை ரசித்தவாறே அவனுக்கு இடதுபக்க முன் வரிசையில் அமர்ந்திருந்தவளை கண்கொட்டாமல் பார்த்தான். அவன் இருந்தது கடைசி இருக்கை ஆதலால் அந்த இருட்டில் அவன் பார்வையை யாரும் கண்டுக் கொள்ளவும் இல்லை.

"ஹேய் வர்ஷ் இன்னைக்கு நைட் டுயூட்டி இருக்கு தானே. இந்த மொக்கை படத்துக்கு வரணும்னு இப்போ உனக்கு வேண்டுதலா? கிளம்பு. சீக்கிரம் வீட்டுக்கு போகணும்"

என்று வர்ஷ் என்றழைக்க பட்டவளின் தோழி பூர்விகா சிடுசிடுக்க,

"இன்னும் கொஞ்சம் நேரம் பூர்வி. என் ஹீரோவை சைட் அடிச்சிக்குறேன்" என்று அவனை அங்குலம் அங்குலமாக ரசித்தாள் வர்ஷிதா மேத்தா. மகப்பேறு மருத்துவர் அவள். சக்கரவர்த்தி மருத்துவமனையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறாள்.

“ஆமா பெரிய ஹீரோ இவரு, நாலு படம் ஹிட் அடிச்சிட்டா சூப்பர் ஸ்டார் ஆகிடுவாரா? அவங்க பண பலத்தை வச்சு இப்படி பப்ளிசிட்டி தேடிட்டு இருக்கார்” பூர்விகா சொல்ல,

“ஷட் அப் பூர்வி. அவரை பத்தி பேசாதன்னு சொன்னா புரியாதா உனக்கு?” வர்ஷிதா முகம் சிவக்க கேட்க,

அவளையே கவனித்துக் கொண்டிருந்தவன் முகமும் மாறியது. ‘எதுக்காக இந்த கோபம்? அந்த பொண்ணு தான் ஏதோ பண்ணியிருக்கா’ அவனின் மனதில் பழகியே இராத பூர்வி மேல் கோபம் வந்தது.

“என்ன சொல்லிட்டேன் நான்? அவங்க ஹாஸ்பிட்டல்ல வேலை பார்த்தா அவங்களையே நெருங்க முடியாது வர்ஷி. மனசுல தேவை இல்லாத ஆசையை வளர்த்துகிட்டு உன்னை நீயே கஷ்டபடுத்தாம வீட்டுல பார்க்குற மாப்பிள்ளையை கட்டிட்டு நிம்மதியா வாழு. கனவு வாழ்க்கை வாழாத”

பூர்வியின் பேச்சில் வர்ஷிதா தளர்ந்து அவளை பார்க்க “சரி சரி விடு படத்தை பாரு, சீக்கிரம் வீட்டுக்கு போகணும்” என்ற பூர்வி அதற்கு மேல் எதுவும் பேசாமல் படத்தை பார்க்க, வர்ஷிதா அவனையே ரசித்து பார்த்தாள்.

அவளின் மனதில் அவனை பற்றிய பிம்பமே வேறு. காதல் என்பதை தாண்டி அவன் அவளின் எல்லாமுமாக மாறி சில வருடங்கள் ஆகி விட்டது. அது அவனுக்கு தெரியுமா என்றெல்லாம் அவளுக்கு தெரியாது. ஆனால் எப்போதும் அவளுக்கு அவன் தான் ஹீரோ.

அவளின் ஒவ்வொரு முகபாவனையையும் பார்த்துக் கொண்டிருந்தவன் தனது பக்கத்தில் இருந்த மேனேஜரை பார்த்தான்.

“மிஸ்டர் மேத்தா வாங்கின அமௌண்ட் எல்லாம் செட்டில் பண்ணிட்டாரா?”

“சார்!” அவன் அதிர்ச்சியாக ஆரண்யனை பார்த்தான்.

‘படத்தை பார்க்க வந்து விட்டு என்ன நினைவில் இருக்கிறார் இவர்’ என நினைத்தவன் “இன்னும் அசல் வரல சார்” என்று கூற,

“இது முடிச்சிட்டு அங்க கிளம்பலாம்” என்றான் ஆரண்யன்.

“ஓகே சார்” என்று அவன் திரும்பி விட, மீண்டும் ஆரண்யன் பார்வை வர்ஷிதா பக்கம் தான் சென்றது.

இரண்டரை மணி நேரம் படம் முடிந்து அனைவரும் வெளியே வர, கூடவே யாருக்கும் தெரியாமல் கூட்டத்துடன் வெளியே வந்தவன் தியேட்டரின் பின்பக்கம் வழியாக கார் பார்க்கிங் ஏரியாவுக்கு வந்து விட்டான்.

படத்தை நடித்து முடித்து கொடுப்பது வரை மட்டும் தான் அவன் பண்ணுவான். அடிக்கடி புரொமோஷன் செய்ய வந்தாலும் மீடியா பக்கம் திரும்பவே மாட்டான். இதுவரை அவனின் பேட்டி என எங்கேயும் வந்தது இல்லை.

அவன் மேனேஜர் வந்து காரை கிளப்ப, “மிஸ்டர் மேத்தா வீட்டுக்கு போ” என்று கூறி விட்டு வெளியே பார்க்க, தனது காரை எடுக்க நின்றாள் வர்ஷிதா.

“இவளை இன்னைக்கு பிடிச்சே ஆகணும்” எனக் கூற,

“யாரை சார்?” எனக் கேட்டான் மேனேஜர்.

“காரை ரோட்டை பார்த்து ஓட்டுறதுல கவனம் வைக்காம காதை என்கிட்ட ஒட்டு கேட்க விட்டுருக்கியா நீ?” ஆரண்யன் அழுத்தத்தில் “சாரி சார்” என திரும்பிக் கொண்டான் அவன்.

“இனி வீட்டுல தான் போய் தூங்கி ரெஸ்ட் எடுத்துட்டு நைட் டியூட்டி கிளம்பி வா” என்ற பூர்வி அவளின் காரை எடுத்துக் கொண்டு கிளம்பி விட,

“நான் வரதுக்குள்ள கிளம்பிட்டாரா இந்த ஹீரோ சார்? நாளைக்காவது மாட்டாமலா போயிடுவார்” என்று அவளின் காரை கிளப்பினாள். பாவம் அவளின் வீட்டையே அவன் திருப்பி போட்டுக் கொண்டிருப்பதை அவள் அறியவில்லை.

—------
"சார் கொஞ்சம் நாள் டைம் குடுங்க பிளீஸ். எப்படியாவது இந்த முறை மொத்தமா கடனை அடைச்சிடுறேன். வீட்டுக்கு எல்லாம் வந்து அசிங்க படுத்தாதீங்க"

எனக் கெஞ்சி கொண்டிருந்தார் மேத்தா. அவரையே முறைத்து பார்த்துக் கொண்டிருந்தான் ஆரண்யன் சக்கரவர்த்தி.

நேராக மேத்தாவின் வீட்டிற்கு தான் வந்தான் என்றாலும் அவனை ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் அவர் பார்ப்பதை அவன் விரும்பவில்லை. அவனின் தொழில் நடிப்பு என்றாலும் வட்டிக்கு பணம் கொடுத்து சம்பாதிப்பதை மற்றொரு தொழிலாக செய்துக் கொண்டிருக்கிறான். மேத்தா அவரின் மகளின் படிப்பிற்காக இவனிடம் வட்டிக்கு கடன் வாங்கி விட்டு இப்போது இரண்டு மாத வட்டி கட்ட முடியாமல் போகவும், நேரடியாக கேட்க வந்திருந்தான் அவன்.

“அவர் இரண்டு மாசம் வட்டி கூட கட்டலன்னு என்கிட்ட சொல்லவே இல்ல நீ” அவனின் மேனேஜரை முறைக்க,

“சார் நான் தெளிவா சொல்லும் முன்னாடி நீங்க கிளம்ப சொல்லிட்டீங்க” என்றான் அவன்.

“இங்க பாருங்க மிஸ்டர் மேத்தா”

அவரை தாண்டி மகன், மனைவி என அவனின் பார்வை போக சட்டென எழுந்து நின்றார் மேத்தா.

"கண்டிப்பா இந்த முறை பணத்தை தந்திடுவேன் சார்"

அவர் சொல்லி முடிக்கும் நேரம் “அப்பா” என்ற குரல் கேட்டு திரும்பினான் ஆரண்யன். அவளை அவன் எதிர்பார்த்தே நின்றிருந்தாலும் அவளுக்கு அவனை நேரில் பார்த்ததும் அதிர்ச்சி.

வெளியில் அவன் காரை பார்த்தாலும் அவனாக இருக்காது என்ற சந்தேகத்தில் உள்ளே வந்தவளுக்கு அவனை பார்த்ததில் மகிழ்ச்சி என்றாலும் தந்தை அவன் முன்னால் தவித்து நிற்பதை பார்த்து புருவம் சுருக்கினாள்.

“என்னாச்சு அப்பா? எதுக்காக இவர் இங்க வந்திருக்கார்?” அவள் கேட்க, ஆரண்யன் தோரணையாக அமர்ந்து கொண்டான்.

அவனின் தோரணையை ரசித்ததாக அவள் கண்கள் காட்டிக் கொடுத்து விட இன்னும் ஆழமாக அவளை பார்த்தான் அவன்.

தந்தையிடம் இருந்து பதில் வராமல் போகவே ஆரண்யனை பார்க்க, அவனோ மேத்தாவை பார்த்து,

"எனக்கு பணமா தான் வேணும்னு இல்ல. உங்க பொண்ணு கூட தரலாம்" என்று கூறி அவர்களின் அதிர்ந்த பார்வையை பொருட்படுத்தாமல் வெளியேறி விட்டான்.

வர்ஷிதா அவனின் பேச்சில் உச்சகட்ட கோபத்தில் இருந்தாள்.

“பணத்துக்காக நானா?”

“அப்பா என்ன நடக்குது இங்க?”

“அவர்கிட்ட அப்பா ஐம்பது லட்சம் கடன் வாங்கி இருக்கார் வர்ஷிக்கா. இந்த இரண்டு மாசமா வட்டியும் கட்டல. அதை கேட்க தான் அவர் வந்தார். ஆனா உன்னை பார்த்ததும் கல்யாணம் பண்ண கேட்கிறார் போல” என அவளின் தம்பி விஷ்ணு கூறவும் தந்தையை பார்த்தாள்.

“என்ன அப்பா இது?”

“இந்த டைம் பிசினஸ் நல்ல லாபம் தான்டா, கண்டிப்பா மொத்தமாவே கொடுத்துடலாம்” என்றார் மேத்தா.

ஆனால் அவளுக்கு தான் அதில் நம்பிக்கை இல்லை. இதுவரை நேரில் வராதவன் இப்போது வந்ததற்கு என்னவோ காரணம் இருப்பதாகவே அவளுக்கு தோன்றியது. கூடவே அவளை திருமணம் செய்யும் நோக்கில் தான் கேட்டானா எனும் குறுகுறுப்பும் கூடியது.

அப்போதைக்கு ஒன்றும் சொல்லாமல் தனது அறைக்கு சென்றவள் அப்படியே தூங்கி விட அவள் எழும்பும் போது மாலை ஐந்து ஆகி இருந்தது. எட்டு மணிக்கு மருத்துவமனை செல்ல வேண்டும்.

குளித்து முடித்து மருத்துவமனைக்கு கிளம்பி வந்தவள் ஆறு மணிக்கே கிளம்ப, “என்ன வர்ஷி இவ்ளோ சீக்கிரமா கிளம்பிட்ட?” என்று வந்தார் ராதா, அவளின் தாய்.

“ஒரு கான்பரன்ஸ் இருக்கும்மா. அப்பாகிட்ட ரொம்ப பணத்துக்காக கஷ்டபட வேண்டாம்னு சொல்லுங்க. நான் வெளியில் ரெடி பண்ண பார்க்கிறேன்” என்றவள் ஒரு முறை தாயை கட்டி அணைத்து விட்டு கிளம்பினாள்.

“இது என்ன புதுசா?”

“அவ அடிக்கடி பண்ணுறது தானே. ஏதாவது முக்கியமான விஷயமா இருந்தா ராதாவை கட்டி பிடிச்சு கொஞ்சிட்டு தானே போவா” என்ற விஷ்ணு கூட அவரை பின்னால் இருந்து அணைக்க,

“விடுடா கழுதை வயசாச்சு இன்னும் என் பின்னாடி சுத்துற” என்று சமையலறைக்குள் சென்றார்.
----------

வர்ஷிதா மருத்துவமனை வழி செல்லாமல் அந்த பணக்காரர்கள் இருக்கும் சாலைக்குள் காரை திருப்பினாள். அனைத்தும் மேல்தட்டுவர்க்க மக்கள் வசிக்கும் இடம் அது. பல நடிகர்கள், தொழிலதிபர்கள், நடிகைககள் வீடு அங்கே இருக்க, ஆரண்யன் சக்கரவர்த்தியின் வீட்டின் முன் காரை நிறுத்தினாள் வர்ஷிதா.

அவளை பார்த்ததும் செக்யூரிட்டி கேட்டை திறந்து விட, அவரை ஆச்சர்யமாக பார்த்தவாறே காரை உள்ளே கொண்டு போய் நிறுத்தினாள் வர்ஷிதா.

“உள்ளே போங்கமா. சார் உள்ளே தான் இருக்காங்க” என்று அவர் கேட்டை பூட்டி விட, தயங்கியவாறே வாசலில் வலது காலை எடுத்து வைத்தாள் வர்ஷிதா.

முதல்முறையாக அவனின் வீட்டிற்கு வருகிறாள். மனம் கவர்ந்தவன் வீட்டிற்கு வரும் போதே மனம் முழுவதும் பரவசம். அதிலும் இது ஆரண்யன் தனியாக இருக்கவே வாங்கிய வீடு. அவனின் குடும்பத்தார் எல்லாம் வேறு இடத்தில் இருந்தனர்.

ஹால் பகுதிக்கு வந்து விட்டவள் அவனை தேட, “என்ன மேடம் வீடு வரைக்கும் விசிட்?” என்று கேட்டுக் கொண்டே வந்தவனை பார்த்து மூச்சடைத்து நின்றாள் வர்ஷிதா.

அப்போது தான் குளித்திருப்பான் போல. தலையில் போட்ட ஷாம்பூ மணமும் சோப்பு மணமும் கலந்து அவளின் நாசியை தீண்ட, சட்டை இல்லாமல் வெறும் ட்ராக் பேண்ட் உடன் வந்து நின்றவன் மீது தான் அவள் பார்வையே.

“என்ன வச்ச கண்ணு எடுக்காம சைட் அடிக்குற. ஆனா தியேட்டர்ல மட்டும் பக்கத்துல இருந்தும் உனக்கு கண் தெரியலையே” என சிரிக்க,

“ஐயோ! அங்க வந்தீங்களா?” என ஒரு நொடி தடுமாறி பின் நேராக அவனை பார்த்தாள். ஆனால் அந்த ஒருநொடி தடுமாற்றம் தான் அவனுக்கும் அவள் மீது கொஞ்சம் பித்தாக்கியது.

“என்ன விஷயம்?” அவன் கேட்க,

“சொல்லுறேன், அந்த சட்டையை போட்டுட்டு வரீங்களா?” என இப்போது அவன் முகம் பார்க்காமல் சொல்ல,

“இவ்ளோ நேரமா ரசிச்சியே, அப்போவே வெட்கம் எல்லாம் இல்லன்னு தெரிஞ்சு போச்சு. இப்போவும் இப்படியே பேசு” அவன் சோபாவில் அமர,

“உங்களுக்கே ஒரு பொண்ணு முன்னாடி இப்படி நிக்கிறோம்னு கூச்சம் இல்ல அப்புறம் எனக்கு என்ன வந்துச்சாம்?” என்றவள்,

“காலையில வீட்ல வச்சு எதுக்காக அப்படி சொன்னீங்க பணம் இல்லைன்னா பொண்ணு அப்படின்னு. நான் என்ன பொருளா பணத்துக்கு பதிலா என்ன நீங்க விலைக்கு வாங்க?” எனக் கேட்க அதில் கொஞ்சம் சூடு ஏறியிருந்தது.

“அப்படியா சொன்னேன்! அச்சோ சாரி, உனக்கு ஆசை இல்லையா என்னை கல்யாணம் பண்ணிக்க?”

“அதெல்லாம் இல்ல”

“ஓ! அதனால்தான் நான் நடிக்கிற எல்லா படத்துக்கும் தியேட்டர்ல வந்து அப்படியே வச்ச கண்ணு பாக்காம ரசிச்சிட்டு இருப்பியா?”

“அது.. அது ஹீரோவா உங்களை பிடிக்கும். அதுக்காக அப்படி பார்க்கிறேன், அதுக்குன்னு கல்யாணம் பண்ணிக்க முடியுமா?” அவள் தடுமாற, அவளை பிடித்து இழுத்தான் அவன்.

அவனின் மீது விழுந்தவளை இறுக பிடித்தவன், “அப்போ கல்யாணம் வேண்டாம் அப்படி தானே?” என்று கேட்க,

முயன்று “ஆமா” என்றாள், அவன் கண் பார்க்காமல்.

“ஓகே நீ கிளம்பலாம்” அவன் அவளை தள்ளி விட்டு எழும்ப, “என்ன!” அவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள்.

“என்ன என்ன? நீ கிளம்பு. நான் வீட்டுக்கு போகணும். உனக்காக யாரும் இங்க தவம் இருக்கல” என்று கூற அவளுக்குள் சட்டென கோபம் மூண்டது.

‘கிடைச்ச வாய்ப்பை மிஸ் பண்ண நான் என்ன பைத்தியமா?’ என எண்ணிக் கொண்டவள்,

"எனக்கு உங்களை கல்யாணம் பண்ண பூரண சம்மதம். பணத்துக்காக இல்ல, எனக்கு உங்க மேல இருக்குற காதலுக்காக. ஆனால் அதுக்கு பிறகும் நான் வேலைக்கு போவேன். சம்பாதிக்கிறது எல்லாம் என் அம்மா, அப்பாக்கு தான் கொடுப்பேன்" என்றவளை சுவாரசியமாக பார்த்தான் ஆரண்யன்.

சிறிது நேரத்துக்கு முன்பு தயங்கி நின்றவளா இவள் எனும் ரீதியில் அவன் பார்த்தான்.

"வர்ஷிதா மேத்தா! ரைட்?"

"ஆமா, அதுவே இப்போ தான் தெரியுமா?" என்று கொஞ்சம் மனம் கனக்க கேட்டாள்.

"சட்டு சட்டுன்னு வானிலை மாதிரி மாத்தி பேசுறியே. நீ சொன்ன கண்டிஷனுக்கு நான் ஓகே சொல்லலன்னா என்ன பண்ணுவ?"

"சிம்பிள், அதிக வட்டிக்கு கடன் கொடுத்துட்டு திருப்பி கேட்டு மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் டார்ச்சர் பண்ணுறதாக புகார் கொடுப்பேன். நாங்க அதை திருப்பி தர டைம் தானே கேட்டோம். மொத்தமா தரவே மாட்டேன்னு சொல்லலயே"

அவளின் பேச்சில் சிரித்தவன்,

"என் மேல புகார் கொடுக்க போற. அதுவும் உடல்ரீதியா துன்புறுத்தியதாக. ஆனா சாட்சி வேணுமே" என அவளை நெருங்க, பின்னால் நகர்ந்தாள் வர்ஷிதா.

“என்ன மேடம் தைரியசாலி ஆச்சே. நில்லு பார்ப்போம்” என்றவன்,

"லுக் மிஸ். வர்ஷிதா, இது என்னோட கோட்டை. அவ்ளோ ஈசியா நீ வெளில போக முடியாது" என்று கூற,

"ஆஹான்!"

என்றவள் அவன் எதிர்பாராத நொடி அவனின் தாடியை பிடித்து இழுத்து உதட்டை கடித்தவள் அவனின் அதிர்ந்த நிலையை பயன்படுத்தி வாசலுக்கு சென்று விட்டாள்.

அவன் தான் ஒரு நொடி அவளின் செயலில் சுயம் இழந்து நின்றான்.

"ஆரண்யா" குரல் கேட்டு அவன் நிமிர,

"ஐ லவ் யூ டா. என்னை கல்யாணம் பண்ண நீ ரொம்ப கஷ்டப்பட வேண்டாம். நீ கெட்டவனா இரு. நான் உனக்கும் மேல கெட்டவளா இருப்பேன். உனக்கும் எனக்கும் கண்டிப்பா கல்யாணம் நடக்கும். உன் பணத்தை நான் திரும்ப தருவேன். ஆனா வேற எதுவும் என்கிட்ட இருந்து உனக்கு கிடைக்காது" என்று கூற,

“பாரேன்! உன்னை கல்யாணம் பண்ணி சும்மா உட்கார வைக்கவா முடியும்?அதையும் பார்க்கலாம்டி. இந்த உதட்டு கடியை நான் உனக்கு நாளைக்கே திருப்பி தரலன்னா நான் சக்கரவர்த்தி குடும்ப வாரிசு இல்லடி" என கத்தினான்.

"சரி தான் போடா" என்றவள் புன்சிரிப்புடன் வீட்டிற்கு கிளம்பினாள். ஆரண்யன் உதட்டிலும் அதே புன்னகை.
 

Asha Evander

Moderator
அத்தியாயம் 2

எட்டு மணிக்கு சரியாக மருத்துவமனை வந்தவளுக்கு அடுத்து வேலையே இழுத்துக் கொண்டது. அன்று இரண்டு சிக்கலான பிரசவம் வேறு இருக்க, ஆரண்யன் பற்றிய நினைவே வரவில்லை. அவள் வேலை என்று வந்துவிட்டால் அதில் மட்டும் தான் கவனத்தை வைப்பாள். ஆனால் வேலை நேரம் முடிந்ததும் மீண்டும் ஆரண்யன் நினைவு அவளை அள்ளிக் கொள்ளும்.

பூர்வி ரவுண்ட்ஸ் வரும் நேரம் வர்ஷிதாவை அவள் அறையில் தேட காணவில்லை. “எங்க போயிட்டா இவ?” என்று பார்வையை சுழற்ற, ஒரு அறையில் இருந்த பெண்ணை பரிசோதித்துக் கொண்டிருந்தாள்.

“என்ன ஆளு வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரி” என சிரித்துக் கொண்டவள் மற்றவர்களை பரிசோதித்து விட்டு வரும் போது எதிரில் வந்தாள் நிகிதா. அதே மருத்துவமனையில் இன்னொரு மகப்பேறு மருத்துவர்.

“என்ன பூர்வி உன் ஆள காணல” என கிண்டலாக கேட்க,

“அவ இன்னும் முடிக்கல நிகி. இன்னைக்கு நீ தான் லேட். மேடம் வந்து ரெண்டு டெலிவரி முடிச்சிட்டு அடுத்து ரவுண்ட்ஸ் போயிருக்கா. வா ஒரு டீ குடிச்சுட்டு வருவோம்” என கேண்டீன் அழைத்து சென்றாள். நிகிதா டீ வாங்க, பூர்வி பாதாம் பால் வாங்கிக் கொண்டாள்.

“பேசிட்டியா பூர்வி?”

“ஹ்ம், இன்னைக்கு காலையில் தியேட்டர்ல வச்சு பேசினேன் நிகி. ஆனாலும் அவ கேட்கிறது போல இல்ல. அவரை அப்படியே மனசுக்குள்ள ஒளிச்சு வச்சிருக்கா. ஒரு வார்த்தை சொல்லிட்டாலும் பத்ரகாளி மாதிரி அடிக்க வரா”

“இது சரியே வராதே. அவளோட குடும்ப சூழ்நிலை என்ன? ஆக்டர் ஆரண்யன் குடும்பம் பரம்பரை பணக்காரங்க. இவளோட காதல் மட்டும் போதாதே. அதுவும் இல்லாமல் நம்மளோட டீன் டாக்டர். அசோகன் கூட இதுக்கு சப்போர்ட் பண்ணுவார்னு தோணல. அவகிட்ட தான் பேசணும் வரட்டும்”

அவர்கள் வர்ஷிதாவின் நெருங்கிய தோழிகள். மூவரும் மருத்துவ படிப்பை ஒன்றாக முடித்து ஒரே மருத்துவமனையில் பணிபுரிகின்றனர்.

அவர்கள் டீ குடித்து முடியும் நேரம் வர்ஷிதா அங்கே வந்தாள். அவள் முகத்தில் புதிதாக ஒரு பொலிவு தெரிய தோழிகள் கவலைக் கொண்டனர்.

“ஹேய் நிகி, இன்னைக்கு என்ன லேட்? உன்னால இன்னைக்கு ரெண்டு கேஸ் நானே ஹேண்டில் பண்ண வேண்டியதா போச்சு. அதுவும் கொஞ்சம் கிரிட்டிகல் வேற” என்றவள்,

“பூர்வி எனக்கும் ஒரு பாதாம் மில்க்” என்று கூறி விட்டு சோர்வாக அமர்ந்தாள்.

“என் மாமியார் வீட்ல கொஞ்சம் பிரச்சனை. அந்த டென்ஷன்ல தான் லேட். உனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சா?” என கொஞ்சம் கவலையாக கேட்டாள் நிகிதா.

“கஷ்டம் எல்லாம் இல்ல. இந்த ஃபீல்டு வந்த பிறகு நம்மளோட அர்ப்பணிப்பு தான் அவங்க நலன். அதனால் பெருசா எனக்கு சோர்வு இல்ல”

“அது சரி தான். அப்புறம் உன் முகம் கொஞ்சம் டாலடிக்குதே, என்ன விஷயம்?” நிகிதா கேட்க, வர்ஷிதா முகம் அவனை நினைத்து வெட்கத்தில் சிவந்தது.

“அது காலையில் ஒரு நல்ல விஷயம் நடந்துச்சு” என்று காலையில் நடந்ததை கூற, பாதாம் பால் வாங்கி வந்த பூர்வி “என்னடி சொல்லுற? ஆரண்யன் உன்னை கல்யாணம் பண்ண கேட்டாரா?” என்று அதிர்ச்சியாக கேட்டாள்.

“ஷ்ஷ் அமைதியா பேசு பூர்வி. அவர் கேட்டார், நான் சம்மதம்னு சொல்லிட்டேன். இன்னும் அவர் வீட்டில் பேசினது போல தெரியல. நான் சம்மதம் சொன்னது என் வீட்டுக்கும் தெரியாது. அவர் வீட்டுக்கு போயிட்டு நேரடியா ஹாஸ்பிட்டல் தான் வரேன்” என்றாள் வர்ஷிதா.

“இதெல்லாம் சரியா வருமா வர்ஷி? அவருக்கும் உனக்கும் மட்டும் இல்ல இதுல உங்க பெற்றோர் கூட சம்மந்தப்பட்டு இருக்காங்க. அவங்களையும் யோசிக்கணும்ல” நிகிதா கூற,

“தெரியும் நிகி. ஆனா அவரா கேட்டு எனக்கு அதை மறுக்க விருப்பம் இல்ல. உனக்கே தெரியும் நான்கு வருஷமா அவரை நான் எந்தளவுக்கு காதலிச்சிட்டு இருக்கேன்னு. அவரை பார்க்க ஒரு சான்ஸ் கிடைக்காதான்னு தான் இந்த ஹாஸ்பிட்டல் வந்தேன். ஆனா இப்போ அவரே தேடி வரும்போது யாருக்காகவும் அவரை இழக்க எனக்கு தெம்பு இல்ல” என்ற வர்ஷிதா அவர்களுக்கு புதிது.

எப்போதும் குடும்பத்துக்காக யோசிக்கும் வர்ஷிதா காதலுக்காக குடும்பத்தையே இழக்க தயாராக இருக்கிறாள்.

“லூசு மாதிரி பேசாத வர்ஷி. உன்னை ஃபீல் பண்ண வைக்க நான் இதை சொல்லல. ஆனாலும் சொல்லுறேன், ஆரண்யன் வீட்டில் உன்னை ஏத்துக்க மாட்டாங்க. அங்க நீ கஷ்டப்படுற நிலமை வரலாம். அதனால் எதுக்கும் நல்லா யோசிச்சு முடிவு எடு” என்று பூர்வி கூற,

அந்த நேரம் வர்ஷிதாவின் அலைபேசி ஒலித்தது. முகப்பில் ஆரண்யன் படம் தெரிய பூர்வி அதிர்ச்சியில் கண்களை விரித்தாள்.

நிகிதா அவளை பார்த்து சிரிக்க, வர்ஷிதா அலைபேசியை எடுத்து “ஹலோ” என்றாள்.

“போனை ஸ்பீக்கர்ல போட்டு உன் ஃப்ரெண்ட்ஸ் முன்னாடி வை” என்று அந்த பக்கம் ஆரண்யன் குரல் வர, பட்டென திரும்பி பார்த்தாள்.

“நான் அங்க ஒன்னும் இல்ல, என் வீட்டுல இருக்கேன். என் ஆளு தான் அங்க இருந்துட்டு எனக்கு தகவல் தரான்” என்று சிரிக்க,

“வேவு பாக்குறீங்களா?” கடுப்பாக கேட்டாள் இவள்.

“நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணுக்கு பாதுகாப்பு வேண்டாமா? அதான் உனக்கு பாடிகார்ட் போட்டு இருக்கேன்” என்றான் அசால்டாக.

“ஆரண்யன்!” இவள் பல்லை கடிக்க,

“பார்த்துடி பொக்கை வாய் கூட எல்லாம் என்னால குடும்பம் நடத்த முடியாது” அவனின் பேச்சில்,

“நேர்ல வந்து உங்களை கவனிச்சிக்குறேன்” என்றாள்.

“நீ நேர்ல வாடி, சாயங்காலம் நீ கொடுத்ததை திரும்ப தர வேண்டாமா?”

அவன் எதை சொல்கிறான் எனப் புரிந்ததும் அவள் முகம் சிவந்து விட்டது.

“பேசுற பேச்சை பாரு” அவள் முணுமுணுக்க,

“அதெல்லாம் அப்புறம் தெளிவா பேசலாம். இப்போ போனை ஸ்பீக்கர்ல போடு”

“வேண்டாமே” அவள் தயங்க,

“இப்போ போன்ல பேச கூடாதுன்னா நேர்ல வந்து திட்டுவேன். நடிகன்னா அப்படியே வானத்தில் இருந்து விழுந்தவனா நான்? நானும் சாதாரண மனுஷன் தான். பணம் இருந்தா நான் பெரிய ஆள் போலவும், அது இல்லாம நீ என் வீட்டுக்கு வந்து கஷ்டப்படுறது போலவும் பேசுறாங்க. இன்னைக்கு இருக்கு அந்த தியேட்டர் காரிக்கு” என அவன் எகிற,

“தியேட்டர்காரியா? பூர்வியா?” என அவள் சிரிக்க, அவனின் முகத்திலும் புன்னகை.

“சரி நீ கொடு, நான் திட்ட மாட்டேன்” என்று அவன் கூற ஸ்பீக்கரில் போட்டு வைக்க,

“ஹலோ மிஸ் பூர்வி அண்ட் நிகிதா, என் பொண்டாட்டியை எப்படி கவனிக்கணும்னு எனக்கு தெரியும். எல்லாம் தெரிஞ்சது போல அவகிட்ட தப்பு தப்பா அட்வைஸ் பண்ணினா ரெண்டு பேரையும் எங்கேயும் வேலை பார்க்க முடியாதபடி பண்ணிடுவேன்” என்று மிரட்டினான்.

அவனின் பேச்சில் நிகிதாவும் பூர்வியும் திணற,

“ஆரண்யா!” வர்ஷிதா கோபமாக எச்சரித்தாள்.

“நாளைக்கே நமக்கு கல்யாணம். உங்க வீட்டு, எங்க வீட்டு சம்மதம் எல்லாம் பொறுமையா வாங்கிக்கலாம். நாளைக்கு நான் சொல்லுற இடத்துக்கு நீ வரணும்” என்றான் ஆரண்யன்.

“வாட்!” என அதிர்ந்தவள்,

போனை ஸ்பீக்கரில் இருந்து எடுத்து விட்டு காதில் வைத்து, “அப்பாகிட்ட பேசணும் நான்” என்றாள்.

“சரி அப்போ என்னை மறந்துடு” என்று அழைப்பை துண்டித்து விட்டான். வர்ஷிதா ஸ்தம்பித்து போய் நின்றாள்.

“மறந்து விடவா?” கண்கள் கலங்க மீண்டும் வாய்விட்டு சொல்ல, நிகிதா அவளை பாவமாக பார்த்தாள்.

“ஃபீல் பண்ணாத வர்ஷி. அவர் ஏதோ கோபத்தில் சொல்லியிருப்பார். நீ அப்பா, அம்மாகிட்ட பேசு. அவங்களுக்கு சம்மதம்னா கல்யாணம் பண்ணுவதில் தப்பு இல்லையே”

பக்கத்தில் இருந்த பூர்வி “இவ மட்டும் சொல்லாம கல்யாணம் பண்ணினா நானே அப்பா அம்மாகிட்ட சொல்லிடுவேன். அவர் சொல்லுவாராம், இவ உடனே கட்டுங்க தாலின்னு போய் நிற்பாளாம்” என்று கூறினாள்.

வர்ஷிதா கலக்கத்துடன் அவளை பார்த்தாள். தெளிவான முடிவு எடுக்க முடியாமல் தவித்தது மனம்.

“டாக்டர். பூர்வி உங்க பேஷியன்ட் ஒருத்தங்க உங்களை தேடிட்டு இருக்காங்க” என்று செவிலியர் கூற,

“நல்லா சொல்லி வை நிகிதா. இது ஒன்னும் விளையாட்டு இல்ல இந்த முறை தோற்று போனால் அடுத்த முறை ஜெயிக்க முயற்சி செய்ய, இது வாழ்க்கை. தெளிவான முடிவு தான் அவளையும் நிம்மதியா வாழ வைக்கும்” என்று கூறி விட்டு கிளம்பினாள்.

நிகிதா வர்ஷியை பார்க்க “எனக்கும் புரியுது நிகி. ஆனா என்னால் ஆரண்யன் இல்லாத ஒரு வாழ்க்கையை நினைத்து கூட பார்க்க முடியாது. உனக்கே நல்லா தெரியும்ல அவர் மேல நான் உயிரா இருக்கேன். ஒரு நிமிஷம் அவர் கோபமா பேசினதையே என்னால தாங்க முடியல. ஆனா வாழ்க்கை முழுதும் அவரை மிஸ் பண்ணிட்டு அழ சொல்லுறியா?” என்று கேட்டாள் வர்ஷிதா.

“உன்னை அவரை மறக்க சொல்லல நான். உன்னை இத்தனை வருஷம் வளர்த்து உனக்காக கடன் வாங்கி இப்போ அதையும் கட்ட முடியாம தவிக்குற உன் குடும்பத்தை பற்றியும் யோசி. ஆரண்யன் மேல இருக்கும் காதல் உடனே அவர் வீட்டுக்கே போய் சரி சொல்ல வச்சிடுச்சு. இப்போ அவர் கொஞ்சம் கோபமா பேசினதும் அவர் பேச்சையே கேட்க சொல்லுது. ஆனா உன் அப்பா பத்தியும் யோசி. அவங்க சம்மதத்தோடு கல்யாணம் பண்ணு.

அவர் வீட்டில் சமாளிக்கும் திறமை அவருக்கு இருக்கு. ஆனா உன் அப்பா பாவம் வர்ஷி. மனசு உடைஞ்சு போயிடுவாங்க. நீ பேசு, உன் காதலை பற்றி சொல்லி புரிய வை. ஆரண்யன் கூட அவங்ககிட்ட பேசட்டும். எல்லார் சம்மதத்தோடு கல்யாணம் பண்ணு. அது தான் நிம்மதியான வாழ்க்கையை கொடுக்கும். யோசி” என்றவளும் எழுந்து சென்று விட வர்ஷிதா தலையை பிடித்துக் கொண்டு அப்படியே இருந்தாள்.

‘நான் தப்பு பண்ணுறேனா?’ அவள் மனது கேள்வி எழுப்ப,

“என்னை கல்யாணம் பண்ணுறது உனக்கு அவ்ளோ கஷ்டமா இருக்கா?” என அவளின் முன் வந்தமர்ந்தான் ஆரண்யன் சக்கரவர்த்தி.

தலையில் தொப்பி மற்றும் முகத்தில் மாஸ்க் அணிந்திருக்க, அவனை யாருக்கும் சட்டென அடையாளம் தெரியவில்லை.

“ஆரண்யா!” வர்ஷிதா கண்களில் கண்ணீர் வர, அதை துடைத்து விட்டவன்,

“உனக்கு இப்போ உன் அப்பா அம்மா சம்மதம் வேணும் அவ்ளோ தானே?” என்று கேட்க ஆமென தலையசைத்தாள்.

“அது உனக்கு நாளைக்கு காலையில் கிடைக்கும். இப்போ அழுதுட்டு இருக்காம வேலையை கவனி” என்றான்.

“என்னை ஃபாலோ பண்ணுறதே உனக்கு வேலையா?”

“நீ அழுதுட்டு இருக்கன்னு போன் பண்ணினான். வெளில தான் இருந்தேன், இப்போ உள்ளே வந்துட்டேன். அவ்ளோ தான். உனக்கு என்னை எத்தனை வருஷமா தெரியும்னு எனக்கு தெரியல. ஆனா கடந்த இரண்டு வருஷமா நான் உன்னை மட்டும் தான் பார்க்கிறேன். காதல் அதையும் தான் உன் மேல ஒரு உணர்வு. ஆனா எதையும் சீக்கிரம் வெளிக்காட்டல.

உனக்காக தான் காலைல உங்க வீட்டுக்கு வந்தேன். உனக்காக தான் கல்யாண பேச்சை எடுத்தேன். இப்போ ஒரு நொடி உன் கண் கலங்கினாலும் என்னவோ போல இருக்கு. உன்னை அணைச்சு ஆறுதல் சொல்ல மனசு துடிக்குது. ஆனா அது கல்யாணம் ஆன அப்புறம் தான் நடக்கும்னு எனக்கு புரியுது. அதனால் தான் நாளைக்கே கல்யாணம் பண்ணிக்க கேட்டேன்”

“ஒரு கேள்வி கேட்டா ஒன்பது வரில பதில் சொல்லுற” என்று கிண்டலாக சொன்னாலும் அவனின் பேச்சில், காதலில் அவள் மனம் துள்ளிக் குதித்தது.

“இப்போ தான் மறுபடியும் பழைய வர்ஷி ஆகி இருக்க. இப்படியே இரு நீ. உன் காதலை என்கிட்ட சொன்ன நிமிஷத்தில் இருந்து நீ எனக்கு மட்டும் தான் சொந்தம். உன் பெற்றோர் சம்மத்தத்தோட தான் நம்ம கல்யாணம் நடக்கும்” என்றவன் கூற,

“உங்க வீட்டில் சம்மதிப்பாங்களா?” அவள் மனம் மீண்டும் சுருண்டது.

“அவங்க சம்மதம் எல்லாம் அப்புறம் கேட்டுக்கலாம். நான் பார்த்துக்கிறேன்”

“அவங்க சம்மதம் கூட கேட்டுக்கோ. இல்லன்னா அதுவே நம்ம வாழ்க்கையை பாதிக்க கூடாதுல” அவள் கலக்கமாக கூற,

எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தவன் அவளின் அருகில் அமர்ந்து தோளோடு அணைத்துக் கொண்டான்.

“எதுக்கும் பயப்படக் கூடாது வர்ஷி. நான் உன் கூட இருக்கும் வரைக்கும் உன் கண்ணுல இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வரக் கூடாது. என்னை எப்போவும் மிரட்டிட்டு இருக்குற வர்ஷி தான் எனக்கு வேணும்”

“ஹ்ம்” அவள் கண்களை துடைக்க,

“ராட்சசி உன்னை கல்யாணம் பண்ணிட்டு தான் அடுத்து ஷூட்டிங் எல்லாம் நான் போகணும். இப்போ நல்ல பொண்ணா உள்ளே போ. நாளைக்கு உன் அப்பா அம்மா சம்மதம் உனக்கு கிடைக்கும்” என்று அவளின் நெற்றியில் மென்மையாக முத்தமிட, அவள் உடல் சிலிர்த்தது.

அதை உணர்ந்தவன் உடலும் உள்ளமும் அவளுக்காக ஏங்கியது. ‘இன்னும் கொஞ்ச நாள் தான்டா, கண்ட்ரோல் பண்ணு’ என தனக்குள் கூறிக் கொண்டவன் அவளை அனுப்பி விட்டு காருக்கு வந்தான்.

 

Asha Evander

Moderator
அத்தியாயம் 3

காருக்கு வந்தவன் அலைபேசி அழைப்பில் வந்த பெயரை பார்த்து புருவம் சுருக்கினான். “இவர் எதுக்கு இப்போ கால் பண்ணுறார்?”

அவன் அழைப்பை எடுக்க, “எங்க இருக்க ஆரண்யா?” என்ற கம்பீரகுரலில் ஒரு நொடி அதிர்ந்து பின், “உங்க வீட்டுல இல்ல. போதும்ல” என்று கேட்டான்.

“கேட்டதுக்கு பதில் சொல்லி பழகுடா” அந்த பக்கம் எச்சரிக்க,

“உங்க ஹாஸ்பிட்டலுக்கு வெளியே தான் கார்ல இருக்கேன். சும்மா இந்த பக்கமா ஒரு ட்ரைவ். இனி வீட்டுக்கு கிளம்பணும். பதில் கிடைச்சிருச்சுல, வைங்க போனை” என்று அழைப்பை துண்டித்து விட்டான்.

அந்த பக்கம் பேசியவர் தளர்ந்து கட்டிலில் அமர்ந்தார். அவரின் பக்கத்தில் மனைவி பதறி நிற்க,

“நான் ஒரு நாள் பேசிய வார்த்தைக்காக இப்போ வரை என் பக்கத்தில் கூட வர மாட்டேங்குறான் கஸ்தூரி” என்று வருத்தமாக கூறினார்.

வீரபாண்டிய சக்கரவர்த்தி, கஸ்தூரி தம்பதியினருக்கு மூன்று மகன்கள். அசோகன் சக்கரவர்த்தி, ஆரண்யன் சக்கரவர்த்தி, அருண்மொழி சக்கரவர்த்தி.

அசோகன் மருத்துவப்படிப்பை வெளிநாட்டில் முடித்துவிட்டு சொந்த நாட்டில் மருத்துவமனை கட்டி மருத்துவம் செய்கிறான். ஆரண்யன் வெளிநாட்டில் தொழில்துறை சம்மந்தமாக படிக்கும் போதே நடிப்பிற்கான வாய்ப்பு வர, மாடலிங் நடித்து பின் முதுகலை பட்டமும் பெற்று சினிமாவில் நடிக்க வந்து விட்டான்.

வீரபாண்டிய சக்கரவர்த்தியின் குடும்ப தொழில் தேயிலை ஏற்றுமதி செய்வது தான். ஊட்டியில் பல எஸ்டேட்கள் இவரின் பெயரில் உண்டு. அருண்மொழி படிப்பை முடித்ததும் அந்த தொழிலை கையில் எடுத்துக் கொண்டான். அவனுக்கான தனி ராஜ்ஜியம் அது. தந்தையை கூட அதில் தலையிட அனுமதிக்க மாட்டான்.

அவனால் தான் சில மாதங்களுக்கு முன்பு ஆரண்யன் மற்றும் வீரபாண்டியனுக்கு இடையே வாக்குவாதம் வந்து அதுவே பெரிய பிரச்சனை ஆகி ஆரண்யன் அந்த வீட்டை விட்டு வெளியே வந்து விட்டான்.

யோசிக்காமல் பேசிய ஒரு வார்த்தை அவர்களின் உறவையே முறித்து விட்டது. வீரபாண்டியன் கவலைக் கொள்ள, கஸ்தூரி தான் அவரை தேற்றினார்.

“அவன் கோபம் பத்தி நமக்கு தெரியும் தானே. அவன் வாழ்க்கையிலும் ஒரு பொண்ணு வந்துட்டா எல்லாம் சரி ஆகிடும். உங்க பார்ட்னர் பொண்ணு ஸ்வேதா நம்ம ஆரண்யன் கூடத்தானே படிச்சா. அவளையே அவனுக்கு கேட்டா என்ன?” கஸ்தூரி ஆலோசனை சொல்ல,

“அவன்கிட்ட இதைப்பற்றி நான் பேசினதே இல்ல கஸ்தூரி. அதுவும் இல்லாம ஆரண்யனுக்கு இதில் விருப்பம் இருக்கணும். அடுத்து அவன் சம்மதம் இல்லாமல் பண்ணினால் அதுவே இன்னும் விரிசலை கொண்டு வந்துடும்” என்றார் வீரபாண்டியன்.

இப்போது அவனுக்காக இத்தனை யோசிப்பவர் அன்று ஏன் யோசிக்காமல் விட்டார் என வருந்தாத நாளே இல்லை. ஆனால் அவனோ அவர்கள் உறவே வேண்டாம் என்று கிளம்பி விட்டான்.

அடுத்தநாள் காலையில் வர்ஷிதா வீட்டுக்கு வரும் நேரம் மேத்தா அவளுக்காக தான் காத்திருந்தார். மனதின் படபடப்பு வெளியே தெரியாவிட்டாலும் பயம் இருந்தது. தந்தையும் மகளும் நண்பர்கள் போலத்தான் பேசுவார்கள். ஆனாலும் அவளின் காதலைபற்றி ஒருபோதும் அவள் சொன்னது இல்லை.

“வர்ஷி என்னடா சோர்வாக இருக்க, ரொம்ப வேலையா?” என்று கேட்டவர்,

“ராதா ஒரு கப் பூஸ்ட் வர்ஷிக்கு எடுத்துட்டு வா” என்று குரல் கொடுத்தார்.

“ப்ரஷ் ஆகிட்டு வரேன்ப்பா, உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்” என்று அவள் உள்ளே செல்ல, ராதா வெளியே வந்தார்.

“என்னங்க அந்த பையன் சொன்னது போல தானா?” அவர் சிறிது படபடப்புடன் கேட்க,

“அவர் சொன்னது போலவே இருந்தாலும் என்ன பயம் உனக்கு? விரும்பினவங்களை சேர்த்து வைக்கிறது தான் நமக்கு நல்லது. நம்ம சம்மதம் கேட்கிறதே பெருசு” என்றார் மேத்தா.

விடியற்காலையிலேயே மேத்தாவின் வீட்டிற்கு வந்து விட்டான் ஆரண்யன். அப்போது தான் ராதா கோலம் போட்டுக் கொண்டிருக்க, தன் முன் நிழலாடுவதை பார்த்து அதிர்ந்து எழும்பினார்.

அதுவும் ஆரண்யனை கண்டதும் நேற்று அவன் பணத்துக்காக மகளை கேட்ட நினைவு தான் வந்தது.

“எதுக்காக காலைல வந்திருக்கீங்க?” ராதா சிறிது படபடப்புடன் கேட்க,

“எதுக்கு இவ்வளவு பதட்டம்? உள்ளே வாங்க, மிஸ்டர் மேத்தா இருக்காங்க தானே” என்று கேட்டான்.

“இருக்காங்க” என்ற ராதா, “என்னங்க!” என உள்ளே செல்ல, ஆரண்யன் புன்னகைத்துக் கொண்டான்.

“ராட்சசி உன்னை விட உன் அம்மா பாவம்” என உள்ளே சென்றான். அதற்குள் தூக்கத்தில் இருந்த மேத்தாவையும் அழைத்துக் கொண்டு வந்து விட்டார் ராதா.

மேத்தாவும் அவனை பார்த்து அதிர்ந்து நிற்க, “என்னை பார்த்தால் பூதம் போலவா இருக்கு?” என சிரித்துக் கொண்டே “உட்காருங்க, கொஞ்சம் பேசணும்” என அவனும் சோபாவில் அமர்ந்தான்.

“என்ன பேசணும் சார்? நான் தான் சீக்கிரம் கடனை அடைக்குறேன் சொல்லிட்டேனே” மேத்தா கூற,

“கடன் விஷயம் எல்லாம் அப்புறம் பேசலாம் மாமா, இது வேற” என்று ஆரண்யன் சொன்ன விதத்திலேயே நெஞ்சைப் பிடித்துக் கொண்டார் ராதா.

“மாமாவா!”

“வர்ஷியை நான் கல்யாணம் பண்ணினா எனக்கு நீங்க அத்தை, மாமா முறை தானே” அவன் சிரிக்க,

“இது சரிவராது சார்” என்று விட்டார் மேத்தா.

“எல்லாம் சரி வரும், நான் நினைச்சது நடந்தே ஆகணும்” என அழுத்தமாக கூற, ராதா தான் அதிகம் பயந்தார்.

“தம்பி இது ஒன்னும் விளையாட்டு இல்ல, என் பொண்ணோட வாழ்க்கை. பணத்துக்காக அவளை கேட்கிறது தப்பு” என்று ராதா கூற,

“பணத்துக்காகவா?” என ஒரு சீறலுடன் எழும்பியவன்,

“அந்த பணம் கணக்கு அப்படியே தான் இருக்கு. எனக்கு வர்ஷியை பிடிச்சிருக்கு, அவளுக்கும் என்னை பிடிச்சிருக்கு. அதுக்காக தான் கல்யாணம் பண்ணிக்க கேட்கிறேன். அதுவும் இன்னைக்கே நடக்கணும்” என்று கூற அவர்களுக்கு அடுத்த அதிர்ச்சி.

“வர்ஷியா!”

“அவளே தான். இப்போ கூட உங்க யாருக்கும் சொல்லாம கல்யாணம் பண்ண என்னால் முடியும். ஆனா வர்ஷிக்கு அதில் விருப்பமில்லை. உங்க எல்லார் சம்மதத்தோடு தான் எங்க கல்யாணம் நடக்கணும்னு ஆசைப்படுறா. அதனால் தான் நான் பேச வந்தேன் அண்ட் எப்போவும் நான் மட்டும் தான் வருவேன். என் குடும்பத்தில் இருந்து யாரையும் எதிர்பார்க்காதீங்க” என்று கூற,

“அது எப்படி? என் பொண்ணு அங்க தானே வந்து வாழணும்?” என்று ராதா இடையிட்டார்.

“அப்போ உங்களுக்கு சம்மதமா?” ஆரண்யன் புன்னகையுடன் கேட்க, ராதா பதறி மேத்தாவை பார்க்க அவர் யோசனையில் இருந்தார்.

“நீங்க என்ன சொல்றீங்க மாமா?”

“நான் கொஞ்சம் யோசிக்கணும் சார். இதெல்லாம் சரிவராதுன்னு தான் இப்போவரை என் மனசு சொல்லுது. ஆனா நான் என் பொண்ணு மனசையும் யோசிக்கணும். அதே நேரம் ஒரே பொண்ணு கல்யாணத்தை யாரும் இல்லாதது போல சட்டுனு முடிக்கவும் முடியாது. உங்க வீட்டுலயும் பேசுங்க” என்றார் மேத்தா.

“எங்க வீட்டுல என் விருப்பத்தை மீறி எதுவும் நடக்காது. எங்க கல்யாணத்தில் அவங்க இருப்பாங்க ஆனா அதை தவிர்த்து எந்த இடத்திலேயும் அவங்களை எதிர்பார்க்காதீங்க. வர்ஷி வாழ பெரிய வீடே இருக்கு. அவ சந்தோஷமா இருப்பா” என்று உறுதி கொடுக்க, மேத்தா தலையசைத்தார்.

“டீ போட்டு எடுத்துட்டு வா ராதா”

ராதா சமையலறைக்கு செல்லவும், “என் பொண்ணுக்கு சம்மதம் இல்லாம நீங்க இங்க வரைக்கும் வந்திருக்க மாட்டீங்கன்னு எனக்கு தெரியும். ஆனாலும் அவளோட நேரடி சம்மதம் எனக்கு தேவை. அடுத்து உங்களோட வசதி எங்களுக்கு இல்ல. அதையும் நீங்க யோசிங்க. பிற்காலத்தில் என் பொண்ணுக்கு அதுவே ஒரு கஷ்டத்தை கொடுக்க கூடாது” என்று கூறினார் மேத்தா.

“என் மேல நம்பிக்கை இல்லையா உங்களுக்கு?”

“இருக்கே, நேத்துவரை மிஸ்டர் மேத்தாவா இருந்த நான் இப்போ மாமான்னு கூப்பிடுற அளவுக்கு வந்திருக்கேனே” என்றார்.

அதில் வாய்விட்டு சிரித்தான் ஆரண்யன். “என் தொழிலில் எல்லாரையும் நான் அப்படி தான் மிஸ்டர் போட்டு கூப்பிடுவேன். அதுக்காக இனி உங்களையும் அப்படியே கூப்பிட முடியுமா? கூப்பிட்டா நீங்க பெத்து வச்சிருக்க ராட்சசி என் தோலை உரிச்சு உப்புகண்டம் போட்டுட மாட்டாளா?”

“அவ மேல பயமா உங்களுக்கு?” அவர் கிண்டலாக கேட்க,

“பயம் இருந்து தானே ஆகணும். சும்மாவே அந்த மிரட்டு மிரட்டுவா” என்றவன் கண்முன் நேற்று அவள் புகார் கொடுத்து விடுவதாக கூறியது தான் தோன்றியது.

“வர்ஷி போல ஒருத்தியை கல்யாணம் பண்ணினா என் வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா இருக்கும்னு தோணுச்சு. எல்லாத்தையும் விட அவ கலங்கி நின்னா என்னால் தாங்க முடியாது. அதுக்காகவே அவ எனக்கு வேணும்” என்றான் உறுதியாக.

அதற்குமேல் மேத்தா எதுவும் பேசவில்லை. ஆனாலும் டீ கொடுத்து விட்டு ராதா தான் சொன்னார் “கல்யாணம் உடனே வேண்டாமே” என.

ஆனால் அதை உடனே மறுத்து விட்டான் ஆரண்யன் சக்கரவர்த்தி. அவனுக்கு அவள் இன்றே அவன் வீட்டிற்கு வர வேண்டும்.

“இன்னைக்கே கோயிலில் தாலி கட்டிட்டு அடுத்து ரெஜிஸ்டர் பண்ணிக்கலாம். காதலிக்கும் போதும் அவளை தூரத்தில் இருந்து பார்க்கும் போதும் இருந்த பொறுமை பக்கத்தில் நெருங்கிய பிறகு இல்லை. நீங்க சம்மதம் சொல்லலைன்னாலும் கல்யாணம் இன்னைக்கு நடக்கும். ரெடியா இருங்க” என்று கூறி விட்டு சென்று விட்டான்.

அடுத்து வர்ஷிதாவின் பதிலுக்காக காத்திருக்கின்றனர் அவளின் பெற்றோர்.

வர்ஷிதா குளித்து உடைமாற்றி வரும் நேரம் ராதாவும் பூஸ்ட் மற்றும் அவளுக்கான காலை உணவுடன் மேசைக்கு வந்தார்.

அவளுக்கு பிடித்த நெய் தோசையும் கார சட்னியும் இருக்க, அதை ருசித்து உண்டாள். மேத்தா மற்றும் ராதா அவள் உணவு உண்ணும் வரை காத்திருக்க, விஷ்ணுவும் வந்து சேர்ந்தான்.

“கொஞ்சம் சீக்கிரம் எழும்ப கூடாதாடா?” என ராதா அவனுக்கும் உணவை எடுத்து வைக்க,

“இன்னைக்கு ஒரு நாள் தான் லீவ் கிடைக்கும். அன்னைக்கு கூட டார்ச்சர் பண்ணாதீங்கமா” என்று கூறி விட்டு தோசையை சாப்பிட்டான்.

அனைவரும் உண்டு முடித்ததும் வர்ஷிதா “அப்பா உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்” என்று ஆரம்பித்தாள்.

“ஹ்ம் உன் லவ் மேட்டர் தானே” விஷ்ணு எடுத்து கொடுக்க, மற்றவர்கள் அவனை அதிர்ந்து பார்த்தனர்.

அதிலும் வர்ஷிதா முட்டைக் கண்ணை விரிக்க, “ஷாக்கை குறை, ஷாக்கை குறை. உன்னோட கபோர்ட்ல ஆக்டர் ஆரண்யன் போட்டோ பின்னாடி நீ கவிதை எழுதி வச்சு இருந்ததை நான் எப்போவோ பார்த்துட்டேன்” என்று சிரித்தான்.

ராதா “அதை முன்னாடியே சொல்ல என்னடா?” என அவன் முதுகில் ஒர் அடி வைக்க,

“ம்மா வலிக்குது, லவ் அவளோட பெர்சனல் அதை எப்படி நான் உங்ககிட்ட வந்து சொல்லுவேன்?” என்று கத்தினான்.

மேத்தா மகளை பார்க்க “இல்லப்பா அதுவந்து” என அவள் அவர் முகம் பார்க்கவே தடுமாறினாள்.

“எத்தனை நாளா இந்த காதல் கதை நடக்குது வர்ஷி?” என ராதா அவளிடம் வர,

“ம்மா!” என தடுமாறியவள் பின் “நான்கு வருஷமா நான் அவரை காதலிக்கிறேன். அவருக்கே சமீபமாக தான் தெரியும். அவருக்கும் என்னை பிடிக்கும். அதுவும் இப்போ அவர் சொல்லி தான் எனக்கு தெரியும். அவர் காதலிக்கிறாரான்னு தெரியாம நான் எப்படி உங்ககிட்ட வந்து சொல்ல முடியும்? இப்போவும் அவர் தான் இன்னைக்கு கண்டிப்பா கல்யாணம் பண்ணனும் சொல்றார். எனக்கு உங்க சம்மதம் வேணும். அவர் இல்லாத வாழ்க்கையும் என்னால் வாழ முடியாது. அதேநேரம் உங்க விருப்பத்தை மீறியும் என்னால் வாழ முடியாது” என்று உறுதியாக கூறி விட,

மேத்தா அவளிடம் எதுவும் பேசவில்லை. “ராதா கோவில்ல இன்னைக்கு நல்ல நேரம் பார்த்து இவங்க கல்யாணத்தை முடிச்சிடலாம், அப்புறம் வரவேற்பு மாதிரி பண்ணிடலாம். நீ என் போனை எடுத்துட்டு வா. ஆரண்யன் சார்கிட்டயும் ஒரு வார்த்தை சொல்லிட்டு கோவிலுக்கு போகலாம்” என்று கூற வர்ஷிதா கண்ணீருடன் நின்றாள்.

அவர்களின் திடீர் முடிவில் விருப்பமில்லாமல் நடத்துகிறார்களோ என்ற சந்தேகம் வந்துவிட “அப்பா” என அவரை நெருங்கினாள்.

அதற்குள் அவர் ஆரண்யனுக்கு அழைப்பு விடுக்க சென்று விட்டார். அந்த பக்கம் விஷயத்தை கேட்டவனுக்கு பெரும் மகிழ்ச்சி. என்னவோ அவனின் சொர்க்கம் அவன் கையில் மிதக்க போகும் உணர்வு.

“உங்க குடும்பத்திலேயும் பேசிட்டு எனக்கு கால் பண்ணுங்க சார்” என்று மேத்தா சொல்ல,

“சார் எல்லாம் வேண்டாமே மாமா. அது பிசினஸ் பேசுறவங்களுக்கு மட்டும் தான். என்னை பெயர் சொல்லியே கூப்பிடுங்க” என்று ஆரண்யன் கேட்க அதிலேயே விழுந்து விட்டார் மேத்தா.

அவருக்கு ஆரண்யனை பற்றி நன்கு தெரியும். வெளியில் சிரித்தே பார்த்ததில்லை அவர். அத்தனை இறுக்கமாக இருப்பான். அவன் தொழிலுக்கும் அது தான் சரி. ஆனால் இப்போது அவரிடம் பேசிய முறையில் அவன் மீது நன்மதிப்பு தானாக வந்தது.

அடுத்து கோவிலில் அன்று பனிரெண்டு மணிக்கு மேல் நல்ல நேரம் இருப்பதாக சொல்லி விட, உடனேயே அவளுக்கான உடை முதல் நகை வரை வீட்டுக்கே அனுப்பி வைத்து விட்டான் ஆரண்யன். அதன்பிறகு தான் தனது வீட்டுக்கே அழைப்பு விடுத்தான்.

காலைநேரத்துப்பனியில் அவர்களின் சொந்த தயாரிப்பான தேயிலை டீயை குடித்தவாறே வெளியில் இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தான் அருண்மொழி சக்கரவர்த்தி. தினமும் காலையில் அவனுக்கு பிடித்தமான செயல் தான் இது. அந்த இயற்கையை, அவனின் சொந்த முயற்சியால் உருவான உழைப்பை அவன் ரசிக்காத நாளே இல்லை எனலாம்.

தேநீரை குடித்து முடித்தவன் குளிக்க செல்லும் நேரம் அவனின் அலைபேசி ஒலித்தது. எடுத்து பார்த்தவன் “இவனுக்கு வேற வேலையே இல்லையா?” எனும் முணுமுணுப்புடன் எடுத்தான்.

“சொல்லுடா”

“எனக்கு இன்னைக்கு கல்யாணம், உன்கிட்ட சொல்ல தான் போன் பண்ணினேன்” அந்த பக்கம் இருந்தவன் சொல்ல,

“அதுக்கு என்ன பண்ணலாம்? ஊருக்கே நோட்டீஸ் அடிச்சு ஒட்டிடுவோமா?” என்று நக்கலாக கேட்டான் அருண்மொழி.

“ஒட்டினாலும் சந்தோஷம் தான் படுவேன். ஆனாலும் இப்போ வேண்டாம், நான் சொல்லும் போது அடிச்சு ஒட்டு” என்ற ஆரண்யன்,

“கல்யாணம் முடிஞ்சு அங்க தான் வருவோம். ஒழுங்கா என் ரூம்ல இருக்குற உன் திங்க்ஸ் எல்லாம் காலி பண்ணிட்டு வேற எஸ்டேட் போயிடு. இல்லைன்னா உனக்கு கல்யாணமே ஆகாத மாதிரி பண்ணிடுவேன்” என்றான்.

“போடா டேய், உன்னை கல்யாணம் பண்ணி கஷ்டபடுறதுக்கு அவங்க தனியா இருக்கலாம். உன்னை பற்றி சரியாகத் தெரியாம மாட்டிக்கிட்டாங்க. வீட்டுல சொல்லிட்டியா?” அருண்மொழி கேட்க, ஆரண்யன் அமைதிக்காத்தான்.

“சொல்ல வேண்டாம்னு தான் நினைக்கிறேன். ஆனா வர்ஷி அப்பா கண்டிப்பா என் குடும்பம் வரணும்னு எதிர்பார்க்கிறார்”

“நீ அங்க தான்டா முதலில் சொல்லி இருக்கணும். என்கிட்ட திமிரா வந்து சொல்ல தெரியுதுல. அங்கேயும் சொல்லிட்டு வந்து பேசு. அசோகன் அண்ணா ஒரு மெடிக்கல் கான்பரன்ஸ்காக பிரான்ஸ் போயிருக்காங்க. அவங்களுக்கும் சொல்லிடு” என்றான் அருண்மொழி.

சிலசமயம் நக்கலாக பேசினாலும் ஆரண்யன் குடும்பத்தை விட்டு பிரிய காரணம் அவன் தான் என்பது அருண்மொழிக்கு நன்றாகவே தெரியும்.

அவன் சொன்னதை காதில் ஏற்றினாலும் அவனின் அமைதியே இதைப்பற்றி அவன் வீட்டினரிடம் சொல்ல போவதில்லை என்பதை உணர்த்தியது.

“நானும் சொல்ல கூடாதா?” மெதுவாக அருண்மொழி கேட்க,

“இப்போ வேண்டாம், அவர் சொன்ன வார்த்தை இன்னும் என் காதுக்குள்ள கேட்டுட்டே இருக்கு. அது சீக்கிரம் மறக்க கூடியதும் இல்ல. பொறுமையா சொல்லிக்கலாம். பேசின பேச்சுக்கு இது ஒரு தண்டனையா இருக்கட்டும்” என்றான் ஆரண்யன்.

“ஆரண்யா!” அருண்மொழி கண்டிக்க,

“சரிடா தம்பி, என் குடும்பத்து ஆளுங்கன்னு உன் ஆளு குடும்பத்தை வந்து நிற்க சொல்லு. அதையாவது பண்ணுவாங்க தானே” என்று கேட்ட ஆரண்யன்,

“வந்து நின்னு தானே ஆகணும். இல்லன்னா மொத்த தொழிலுக்கும் ஆப்பு வச்சிடுவேன் பார்த்துக்கோ” என்று சிரிப்புடன் மிரட்டினான்.

“வருவாங்க நான் சொல்லுறேன். ஆனாலும் அம்மாகிட்டயாவது சொல்லுடா” என்ற அருண்மொழி பேச்சை அவன் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் அழைப்பை துண்டித்து விட்டான்.

அருண்மொழிக்கு அவனின் நிலையை எண்ணி கொஞ்சம் வருத்தமாகவும் இருந்தது.

தொடங்கி வைத்தவன் அவன் தான். ஆனால் முடிவு தான் அவன் எதிர்பாராதவிதமாக ஆனது.
 

Asha Evander

Moderator
அத்தியாயம் 4

புகழ்பெற்ற கபாலீஸ்வரர் கோவிலில் ஆரண்யன், வர்ஷிதா திருமண ஏற்பாடுகள் தனியாக நடந்துக் கொண்டிருந்தது. அன்று கோவிலில் கூட்டம் குறைவு என்பதாலும் மதியத்திற்கு மேல் ஆகி விட்டதாலும் ஆரண்யன் முகக்கவசத்துடன் நிற்க, அவனுக்கு பக்கத்தில் பட்டுடுத்தி, அளவான நகைகளுடன் நின்றிருந்தாள் வர்ஷிதா.

ஆரண்யன் பக்கத்தில் அவனின் தம்பி அருண்மொழியின் காதலி பூமிகாவின் அண்ணன் நிற்க, அவனுக்கு பின்னால் பூமிகாவின் குடும்பத்தினர் நின்றனர். அவர்களின் முகத்தில் எரிச்சல் தெரிந்தாலும் அதை காட்டாமல் நின்றனர். அவனின் திருமணத்திற்கு வரவில்லை என்றால் அதுவே அவர்களுக்கு அழிவையும் கொடுத்து விடும். எனவே கோபத்தை மறைத்து நிற்க, மேத்தா ஆரண்யன் அருகில் வந்தார்.

“உங்க வீட்டில் இருந்து யாரும் வரலையா மாப்பிள்ளை?” என்று அவர் கேட்க,

“இது என் தம்பி கல்யாணம் பண்ணிக்க போகும் பெண்ணும் அவளோட குடும்பம் தான். என்னோட அம்மா அப்பா கூட எல்லாம் பெரிதாக உறவு இல்லை. கொஞ்ச நாளுக்கு அதைப்பற்றிய பேச்சும் வேண்டாம் மாமா. இவர்களையும் கூப்பிட்டிருக்க மாட்டேன். ஆனா என் சார்பாக ஒருத்தர் வேணும்னு தான் வர சொன்னேன். உங்க பொண்ணை பற்றிய பயம் வேண்டாம். கண்டிப்பா அவ ராணி மாதிரி வாழுவா” என்று கூற, அவருக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் அடுத்து எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.

வர்ஷிதா அவனை பார்க்க, “அமைதியா இருக்கணும்னு நினைக்கிறேன் வர்ஷி. நேத்து நீ கொடுத்ததை இப்போவே தரணும்னு ஆசைன்னா சொல்லு. தரேன்” என்று புன்னகையுடன் கூற,

“என்ன!” என்று அதிர்ந்து அவனை பார்த்தாள்.

“கண்ணை உருட்டி டெம்ப்ட் பண்ணாதடி. அப்புறம் சேதாரத்துக்கு நான் பொறுப்பு இல்ல”

“கோவில்ல வச்சு என்ன பேச்சு” என அவன் கையை கிள்ள,

“ஸ்ஸ் வலிக்குதுடி” என அவள் கையை பிடித்து வைத்துக் கொண்டான்.

விஷ்ணு அதை பார்த்து சிரிக்க, ராதா மகளை முறைத்தார். பூமிகாவின் தாய் கடுப்புடன் பார்க்க,

“அம்மா கண்ணுல கோபத்தை குறைங்க, மொழி சொன்னார்னு தான் இவன் கல்யாணத்துல எல்லாம் வந்து நிற்க வேண்டி இருக்கு. ஏற்கனவே மொழி நம்ம மேல கோபத்தில் இருக்கார். இங்கேயும் எதுவும் பிரச்சனை ஆனா சேதாரம் நமக்கு தான்” என்று அடக்கினாள் பூமிகா.

“இது ஒரு காரணத்துக்காக தான் இவன் பண்ணுற எல்லாத்தையும் சகிச்சிட்டு வாழ வேண்டி இருக்கு. அன்னைக்கு மட்டும் இவன் இடையில் வரலைன்னா இந்நேரம் அந்த எஸ்டேட்க்கு நீ இப்போ ராணியா இருந்திருப்ப” என்றார்.

“சரி விடுங்க இப்போ இதை முடிச்சிட்டு போகலாம். அடுத்து மொழிகிட்ட பேசுவோம்” என்று கூறி விட்டு நிகழ்வை கவனித்தாள் பூமிகா.

கோவில் அர்ச்சகர் தாலியை பூஜை செய்து எடுத்துக் கொண்டு வந்து மந்திரங்களை உச்சரித்தபடி அவன் கையில் கொடுக்க, வாங்கியவன் கை ஒரு நொடி நடுங்கியது. வர்ஷிதாவை பார்க்க, அவள் கண்கள் கலங்கி இருந்தது.

இது அவளுக்கு எத்தனை முக்கியமான நிகழ்வு என்பதை அவன் அறிவானே!

“அழுதா கட்ட மாட்டேன்” அவன் சிரிப்புடன் தாலியை அவள் கழுத்துக்கு அருகில் கொண்டு போக,

“கட்டலன்னா அடுத்து நடக்குறதுக்கு நான் பொறுப்பு இல்ல. ஆக்டர் ஆரண்யன் பொண்டாட்டி கையால் அடி வாங்கினார்னு ஊரே பேசும்” என்று கண்ணீரை துடைக்க,

“செஞ்சாலும் செய்வடி” என கூறி, மனதார அவனின் விருப்ப கடவுளான சிவனை வேண்டியவன் அவள் கழுத்தில் தாலியைக் கட்டினான்.

மூன்று முடிச்சும் அவன் போட, “இந்த குங்குமத்தை அவா நெற்றியில் வச்சு விடுங்கோ” என குங்குமத்தை காட்டினார் அர்ச்சகர்.

“வெல்கம் டூ மை லைஃப் பொண்டாட்டி” என்று அதை எடுத்து அவள் நெற்றியிலும் தாலியிலும் வைத்து விட, “தேங்க்ஸ்” என முணுமுணுத்தவளை அப்படியே கடித்தால் என்ன என்றே அவனுக்கு தோன்றியது.

இருக்கும் இடம் கருதி அவன் அமைதி காக்க, அடுத்த சில நிமிடங்களில் புகைப்படங்கள் எடுத்து விட்டு கிளம்பி விட்டனர்.

ஆரண்யன், வர்ஷிதா ஒரு காரில் வர மேத்தா குடும்பம் இன்னொரு காரில் வந்தனர். பூமிகாவை அப்படியே கிளம்ப சொல்லி விட்டான் ஆரண்யன்.

“மாப்பிள்ளை சாட்சி கையெழுத்து போட ஆள் வேணுமே” மேத்தா தயங்க,

“அதுக்கெல்லாம் வேற ஆள் இருக்காங்க மாமா, இவங்க வேண்டாம். என் பக்கம் ஆட்கள் வேணும்னு சொன்னதால் மட்டுமே இவங்க வந்தாங்க. இனி தேவையில்லை” என்று கூறி விட, பூமிகா குடும்பத்தினர் அவமானத்தில் முகம் சுருங்க நின்றனர்.

“இதுக்கு நீங்க மாமா, அத்தையை கூட்டிட்டு வந்திருக்கலாம்” வர்ஷிதா மெதுவாக கூற,

“இப்போ தேவையில்லை வர்ஷி, ரெஜிஸ்டர் ஆபீஸ்க்கு உன் ஃப்ரெண்ட்ஸ் வந்துடுவாங்க. அங்க பார்த்துக்கலாம்” என்று கூறி விட்டான்.

வர்ஷிதா அதன்பின் அவனை எதுவும் கேட்கவில்லை. அவன் குடும்ப வீட்டை விட்டு வெளியில் வந்தபோதே என்னவோ பிரச்சனை என ஊகித்திருந்தாள். இப்போது கொஞ்சம் பெரிய பிரச்சனை போல என நினைத்துக் கொண்டாள்.

“என்னடி டல் ஆகிட்ட? யாரும் இல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டது கஷ்டமா இருக்கா?” அவள் கரம் பிடித்து கேட்க,

“ச்ச ச்ச எனக்கு நீங்க கூட இருக்கிறதே போதும். உங்களை மட்டும் தான் எதிர்பார்த்தேன். நீங்களே எனக்கு வாழ்க்கை முழுவதுமான வரமா கிடைச்சிருக்கும் போது வேற என்ன வேணும்?” என அவனின் தோள் சாய அவனின் உதட்டில் புன்னகை.

“அவசரம் அவசரமாக கல்யாணம் பண்ணிக்கிட்டது வீண் ஆகாது போலயே”

“ஹ்ம் அதுக்கு தானே கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க. ஒரு முத்தத்தை திருப்பி கொடுக்க ஒரே நாளில் கல்யாணம்” என சிரித்தாள்.

“கிஸ் மட்டும் தானா?”

“இப்போதைக்கு அது மட்டும் தான். அப்பாவோட கடனை எல்லாம் முடிச்ச பிறகு மத்ததை பாத்துக்கலாம்”

“அதுவரைக்கும் நான் விட்டா தானே” அவன் அவளை தன்னை நோக்கி இழுக்க,

“இனி உங்க மடியில் தான் வந்து உட்காரணும். வீட்டுக்கு போயிட்டு பேசலாம்” என்று தள்ளி அமர்ந்து சீட்பெல்டை போட்டாள்.

“எனக்கு போட்டு விட மாட்டியா?”

“வீட்டுக்கு போய் பெல்ட்டால நாலு போடுறேன். இப்போ கிளம்புவோம்” என்று அவனை தள்ளி விட, அடுத்து அவர்கள் வந்த இடம் சார்பதிவாளர் அலுவலகம்.

அலுவலக நேரம் முடிந்தும் அவனுக்காக காத்திருந்த அலுவலர் அவர்களின் திருமணபதிவை முடித்து விட, இருவர் மனதிலும் நிம்மதி.

பூர்வி மருத்துவமனைக்கு சென்றிருந்ததால் நிகிதா அவளின் கணவனுடன் வந்திருந்தாள். ஆரண்யன் சார்பாக நிகிதாவின் கணவன் சாட்சி கையெழுத்திட அவனை அணைத்து விடுவித்தான் ஆரண்யன்.

“தேங்க்ஸ் ப்ரோ”

“இவ்ளோ சிம்பிளா நடத்துறதுக்கு கொஞ்சம் வெயிட் பண்ணி இருக்கலாமே” என்று நிகிதாவின் கணவன் கேட்க,

“ஹ்க்கும் என் காதலை பிரிக்குற முதல் ஆளு உங்க மனைவி தான். அவர் எவ்ளோ பெரிய ஆளு, நீ எவ்ளோ சின்ன ஆளுன்னு சொல்லி சொல்லியே அவளை திசை திருப்பி விட்டுருவாங்க” என்று நிகிதாவை பார்த்தான் ஆரண்யன்.

“அது.. உண்மையை தானே சொல்றேன். இப்போ அதுக்காக கல்யாணம் பண்ணாம இருந்துட்டீங்களா?” என கணவன் பின்னால் மறைந்து கொண்டாள் நிகிதா. பின் வர்ஷிதா அங்கே வர அவளை இழுத்துக் கொண்டாள்.

“தேங்க்ஸ் நிகி, பூர்வி வரலையா?”

“வரத்தான் கிளம்பினா, ஆனா ஒரு அர்ஜன்ட் கேஸ்” என்று கூறிய நிகிதா,

“உன் காதல் உன் பக்கத்திலேயே இருக்கு வர்ஷி. எப்போவும் சந்தோஷமா இருக்கணும்” என்று அவளை கட்டி அணைத்து வாழ்த்தினாள்.

ஆரண்யன் வர்ஷிதாவை பார்த்து கண் சிமிட்ட, அதில் சிவந்தவள்,

“சாப்பிட போகலாம் நிகி, வாங்கண்ணா, நீங்களும் வாங்க அப்பா கூப்பிடுறாங்க” என்று ஆரண்யன் பக்கத்தில் நிற்க,

“வாங்க ப்ரோ, போகும் போது பூர்வி மேடமுக்கும் வாங்கிட்டு போயிடலாம்” என்று அழைத்து சென்றான் ஆரண்யன்.

ஒரு பெரிய ஐந்து நட்சத்திர ஹோட்டலில் யாருக்கும் தெரியாமல் தனியாக பத்து பேர் இருக்கும் அளவிற்கு பதிவு செய்திருந்தான். அன்றைய நாள் முழுவதும் முகக்கவசத்துடன் இருந்தது ஒரு அசௌகரியத்தை தர, அதை எடுத்து வர்ஷிதாவிடம் கொடுத்தவன் கைக்கழுவ செல்ல, சிலர் அவனைக் கண்டுக் கொண்டனர்.

“ஹேய் ஆக்டர் ஆரண்யன் தானே!” என சிலர் புகைப்படம் எடுக்க வர, புன்னகை முகத்துடன் அவர்களுக்கு எடுத்துக் கொடுத்தான் அவன்.

‘நல்லவேளை கல்யாணம் முடியுற வரை யார் கண்ணிலேயும் படல’ என்று நினைத்துக் கொண்டான்.

கோவில் அர்ச்சகர், சார்பதிவாளர் எல்லாருக்கும் அவனின் ரகசிய திருமணம் தெரியும் என்பதால் பெரிதாக ஆள் இல்லாமல் பார்த்துக் கொண்டனர். இப்போது அவனை சூழ்ந்துக் கொள்ள, வெளியில் சென்றவன் இன்னும் வரவில்லையே என பார்க்க வந்த வர்ஷிதா அங்கிருந்தவர்களை கண்டு பயந்து பின்னால் சென்று விட்டாள்.

“ஒருவேளை நாம போனா கண்டு பிடிச்சிருவாங்களோ” அவள் அவனை நோக்கி செல்லாமல் பார்த்து நிற்க,

ஒரு பெண் அவனை நெருங்கி புகைப்படம் எடுக்க, அவளுக்கு புன்னகையுடன் போஸ் கொடுத்தான் ஆரண்யன். வர்ஷிதா அதைகண்டு காதில் புகை வராத குறையாக பொங்கி நின்றாள்.

“அவ பக்கத்துல இளிச்சிட்டு நிற்கிறதை பாரேன்”

“நீயும் கூடப் போய் நிற்க வேண்டியது தானே” மனசாட்சி எடுத்து கொடுக்க, ஓர் அடி முன்னாள் எடுத்து வைத்தவள் பின்னால் வந்து விட்டாள்.

“இப்போ போனா பிரச்சனை ஆகிடும். அவர் ரகசியமா கல்யாணம் பண்ணினது ஊருக்கே தெரிஞ்சு போயிடும். தனியா மாட்டுவார்ல அப்போ இருக்கு” என்று பல்லைக்கடிக்க, அதற்குள் அவர்களை அனுப்பி விட்டு வந்துவிட்டான் ஆரண்யன்.

“ரொம்ப லேட் பண்ணிட்டேனா?” என அவளை அணைத்து கொண்டு உள்ளே செல்ல, மற்றவர்கள் புன்னகையுடன் பார்த்தனர். ஆனால் பக்கத்தில் நின்றவள் முகம் மட்டும் சிரிப்பை தொலைத்து இருந்தது.

அதை ஆரண்யன் கவனித்தாலும் எதுவும் பேசவில்லை. அவள் வெளியில் நிற்கும் போதே தெரிந்துக் கொண்டான் அவள் மன ஓட்டத்தை.

அவளுக்கு அவனை பிடித்த அளவுக்கு அவனால் காதலிக்க முடியுமா என்றால் இல்லை தான். அவனின் மீது பைத்தியமாக இருக்கிறாள் அவள். வேறு எவரும் அவனை நெருங்கினாலே பஸ்பமாக்கி விடுவாள். இனி சினிமா துறையில் அவனுடன் நடிக்கும் நடிகைகளின் பாடு அவ்வளவு தான்.

உணவை முடித்ததும் நிகிதா கணவனுடன் கிளம்பி விட, ராதா அவர்களின் வீட்டுக்கு அழைத்தார்.

“இல்ல அத்தை, நாங்க எங்க வீட்டுக்கு போறோம். தப்பா எடுத்துக்காதீங்க, நாளைக்கு எனக்கு ஷூட் இருக்கு. ஊட்டி போகணும், அப்போ வர்ஷியையும் கூட்டிட்டு போயிடுவேன். இப்போவே கிளம்பினா தான் அங்க போயிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு ஷூட்டிங் போக முடியும்” என்றான் ஆரண்யன்.

ராதா மேத்தாவை பார்க்க, “அவர் தான் காரணத்தை சொல்லுறார்ல, ஷூட்டிங் முடிஞ்சு வந்த அப்புறம் நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்” என்று கூறிவிட வர்ஷிதா தாயை அணைத்துக் கொண்டாள்.

“என்மேல கோபமா அம்மா?”

“எனக்கு என்ன கோபம்? உன் வாழ்க்கை உனக்கு பிடிச்சது போல ரொம்ப சந்தோசமா நல்லவரோட அமைஞ்சிருக்கு. இதுக்கு நான் சந்தோஷம் தானே படணும். அங்கேயும் உன் வாலை சுருட்டிட்டு இருந்தா இன்னும் நல்லா இருக்கும்” என்று கூறி விட ஆரண்யன் பக்கென சிரித்து விட்டான்.

மேத்தா புன்னகையுடன் பார்க்க “உங்களுக்கும் கோபம் இல்லை தானேப்பா? நீங்க என்கிட்ட பேசவே இல்ல” அவளின் கண்கள் கலங்கி விட்டன.

“ச்சீ என்னடா இது அழுதுட்டு இருக்க? ஒரே நாளில் கல்யாணம்னு சொல்லவும் எல்லாம் சரியா நடக்கணுமேன்னு ஒரு படபடப்பு அவ்ளோ தான். இனி தான் நம்ம சொந்தக்காரங்க எல்லாரையும் சமாளிக்கணும். அந்த டென்ஷன் தான். உன் மேல கோபம் எதுவுமே இல்ல. உனக்கு முன்னாடியே மாப்பிள்ளை வந்து பேசிட்டார் எல்லாமே. அதனால் எனக்கு பரிபூரண சம்மதம் தான்” என்று அவளின் தலையை கோத அவர்களின் பாசப்பிணைப்பை புன்னகையுடன் பார்த்து நின்றான் ஆரண்யன்.

“விஷ்ணு” அடுத்து அவள் தம்பியிடம் வர,

“மாமா இவ எதுவும் அடிச்சா என்கிட்ட சொல்லுங்க அவ வீக்பாயின்ட் என்னன்னு நான் சொல்லுறேன். லாக் பண்ணிடலாம்” என்று மாமனை துணைக்கு அழைக்க,

“டேய்!” என அவனின் தலையில் கொட்டினாள்.

“அவன் சொன்னா என் பொண்டாட்டி பத்தி எனக்கு தெரியும், அவ அடிக்க மாட்டான்னு சொல்ல மாட்டீங்களா?” கணவனிடமும் எகிற,

“எனக்கு பொய் சொல்ல தெரியாதுமா” என்று ஜகா வாங்கிக் கொண்டான் ஆரண்யன்.

“உங்களை!” என அவள் அவனை நெருங்க,

“வர்ஷி என்ன புருஷனை அடிக்க போற, என்ன பழக்கம் இது?” என அதட்டினார் ராதா. திருமண நேரத்தில் அவள் கிள்ளி இருந்தே அவருக்குள் ஒரு பதட்டம், இது எந்த பிரச்சனையும் கொண்டு வந்துவிட கூடாதே என.

வர்ஷிதாவின் முகம் அவரின் பேச்சில் சுருங்கி விட, “அத்தை அவ அவளாகவே இருக்கட்டுமே. எனக்கும் அவளோட இந்த துடுக்குதனம் தான் ரொம்ப பிடிக்கும். என்னை தானே அடிக்குறா, பொண்டாட்டி கையால் அடி வாங்குறதுக்கு தனியா தவம் இருக்கணும் இல்லை மாமா?” என மேத்தாவை கூட்டு சேர்க்க,

“நான் தவம் இருக்கல மாப்பிள்ளை” என அவர் சிரித்து விட்டார். ஆனாலும் வர்ஷியின் முகம் தெளிவில்லாமல் இருக்க,

அவளை தன்னோடு சேர்த்து நிறுத்தியவன் “என் பொண்டாட்டி கையால் அடி வாங்க நான் தவம் இருக்கேன். அதனால் அவளை திட்டி என் தவத்தை வீணாக்கிடாதீங்க அத்தை” என்று அவன் கூற, வர்ஷிதா முகத்தில் மெல்லிய புன்னகை.

“தட்ஸ் மை பொண்டாட்டி, எவ்ளோ தைரியமா பேசுவ நீ? இப்போ அம்மா ஒரு வார்த்தை சொன்னதும் அடங்கி போயிட்ட, என் புருஷனை நான் அடிக்குறேன். வேணும்னா உங்க வீட்டுக்காரரை நீங்க அடிங்கன்னு உன் அப்பாவை கோர்த்து விட வேண்டாமா?” என்று கேட்க,

“பாவம் அம்மா” என சிரித்தாள் அவள்.

ராதா அவளை பார்த்து முறைக்க, விஷ்ணு “ம்மா அவ இப்போ மாமாவோட சரிபாதி, அவர்கிட்ட இருக்க நக்கல் கொஞ்சம் அவளுக்கும் ஒட்டி இருக்கும், வீணா வாயை கொடுத்து வம்பை விலைக்கு வாங்காதீங்க. நாம கிளம்புவோம். அவங்க வேலை எல்லாம் முடிச்சிட்டு விருந்துக்கு வருவாங்க” என்று கிளம்பி விட்டான்.

“இதுக்கு தான் மச்சான் துணை வேணும்ங்குறது” ஆரண்யன் சிரித்தே விட்டான்.

அனைவரின் ஆசீர்வாதத்துடன் ஆரண்யன், வர்ஷிதா தங்கள் வீடு வந்து சேர, வந்தவுடன் அவளை தூக்கிக் கொண்டு படுக்கையறைக்கு சென்றான் ஆரண்யன்.

“பொறுமை, பொறுமை ஊட்டிக்கு கிளம்ப வேண்டாமா?” அவள் மெதுவாக கேட்க,

“நைட் கிளம்பலாம், இப்போ உன்னை முழுசா சாப்பிடுறேன்” என்று அவளை கட்டிலில் தொப்பென போட்டான்.

“வீட்டை சுத்தி பார்க்க கூட இல்ல”

“முதல்ல உன்னை சுத்தி பார்க்கிறேன் நான், அப்புறம் வீட்டை சுத்தலாம்” அவன் அவளின் ஆடைகளை களைய,

போர்வையை எடுத்து போர்த்திக் கொண்டவள், “நமக்குள்ள டீல் ஞாபகம் இல்லையா? கடனை அடைச்ச பிறகு தான் எல்லாமே” என்று அவனை தள்ளி விட,

“அதுக்கு நான் சம்மதம் சொன்னதா எனக்கு நினைவில்லையே” என்று மீண்டும் அவளின் மேல் சரிந்தான்.

“பொய், பொய்” என அவனின் வாயில் அடிக்க,

“இந்த அடிக்கே முதல்ல தண்டனை தரணும்” என்று அவளின் வாயை அடைத்து விட, சட்டென மௌனி ஆனாள் வர்ஷிதா.

ஆனால் அவனோ அவளை ரசிக்கும் வேலையில் இறங்கி விட்டான். அவளின் இதழ் தேனை குடித்தவனுக்கு அவளின் மீதான பித்தம் கூடியதே தவிர குறையவில்லை.

“சோ சாப்ட் வர்ஷி நீ” அவள் விரல்களை மடக்கி சொல்ல,

“ஹ்ம்” என்றவளோ எப்போதோ அவனுக்குள் அடங்கியிருந்தாள்.

“வர்ஷி!”

“ஹ்ம்”

“உனக்கு சம்மதமா?”

“ஹ்ம்”

“நிஜமா? கடனை அடச்சிட்டு தான் எல்லாம்னு சொன்ன” அவன் அவள் மீது படர்ந்து கொண்டே கேட்க,

“நான் வேண்டாம்னு சொன்னா விட்டுடுவீங்களா?” என்று கேட்டாள் அவள்.

“நோ சான்ஸ்”

“அப்புறம் அந்த வீணாப்போன கேள்வி எதுக்கு?” என அவன் முகம் பற்றி நிமிர்த்தியவள்,

“இந்த காதலனுக்கு என்னைக் காயப்படுத்த தெரியாது. அதே போல உங்க விருப்பத்தை கட்டுபடுத்த எனக்கும் வராது. உங்க விருப்பம் தான், இப்போ இல்லன்னா ஊட்டியில் வைத்தாவது நம்ம வாழ்க்கையை தொடங்க தானே போறோம். அதுக்கு நான் தடையா இருக்கவே மாட்டேன். இந்த உடலும் மனசும் உங்களுக்கு மட்டும் தான்” என்று அவன் இதழில் ஆழ்ந்து முத்தமிட அவளை ஆழிப்பேரலையாய் சுருட்டிக் கொண்டான் ஆரண்யன் சக்கரவர்த்தி.

அவனுக்கு சற்றும் சளைக்காமல் தன்னை வாரி வழங்கினாள் திருமதி வர்ஷிதா ஆரண்யன் சக்கரவர்த்தி.

அவன் வாழ்வில் அழகான கவிதையாய் வந்து ஒரே நாளில் அவனின் எல்லாமுமாக மாறிப்போனவளை கொண்டாடாமல் இருந்தால் தானே தவறு. அவளின் வலியில் அவன் மென்மையாய் காதலைக்காட்டி அவளுக்குள் அவன் புகுந்துக் கொண்டான்.

சோர்வாக அவன் நெஞ்சில் தலைவைத்து உறங்கியவளை காதலுடன் பார்த்து மென்மையாய் அவள் நெற்றியில் முத்தம் வைத்தான் ஆரண்யன்.

மணி இரவு பத்து எனக் காட்ட, மெதுவாக எழுந்தவன் இருவருக்குமான உடையை எடுத்து வைக்க, படுக்கையில் அவன் இருந்த இடத்தை கைகளால் துழாவினாள் வர்ஷிதா.

“ஆரண்யா” கண்கள் திறவாமல் அவள் உதடுகள் அழைக்க, மீண்டும் அவள் அருகில் போய் படுத்துக் கொண்டான் அவன்.

அவனின் நெஞ்சில் மீண்டும் தலை வைக்க, “வர்ஷி!” என மெதுவாக அழைத்தான்.

“ஹ்ம்”

“சோர்வா இருக்கா?” அவன் அவளின் தலைகோதி கேட்க,

“தூக்கம் வருது, பக்கத்திலேயே இருங்க” என்று அவனின் டீ-சர்ட் காலரை பிடித்து இழுத்தாள்.

“ஊட்டிக்கு கிளம்ப வேண்டாமா? இப்போ கிளம்பினா காலையில் போய் ரீச் ஆகிடுவோம். அடுத்து அங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு மதியம் எனக்கு ஷூட்டிங் போகணும்” என்றான்.

“மெதுவா போகலாம்” அவள் மீண்டும் படுத்துக் கொள்ள, அவளின் கழுத்தில் இருந்த தடமே அவளை கொஞ்சம் அதிகமாக படுத்தி விட்டது புரிந்தது.

மெதுவாக அவளை நகர்த்தி படுக்க வைத்தவன் உடை வைத்திருந்த பையை காரில் வைத்து விட்டு வந்து அவளை கைகளில் ஏந்தி கொண்டான்.

அவன் மார்பில் அவள் ஒட்டிக் கொள்ள, அவளை பின் சீட்டில் படுக்க வைத்தவன் வீட்டையும் பூட்டிக்கொண்டு காரை கிளப்பினான்.
 

Asha Evander

Moderator
அத்தியாயம் 5

மலைகளின் ராணி என்றழைக்கப்படும் ஊட்டியில் அவர்களின் சொந்த எஸ்டேட்டில் காலை பதினோரு மணி அளவில் காரை கொண்டு வந்து நிறுத்தினான் ஆரண்யன் சக்கரவர்த்தி.

இரவு நல்ல தூக்கத்தில் இருந்ததால் விடியற்காலையில் விழிப்பு வந்து விட, சிறிது தூரம் காரை ஓட்டிய வர்ஷிதா மீண்டும் அவனிடம் ஓட்ட சொல்லி விட்டு தூக்கத்தை தொடர, “இவளை!” என அவனால் பல்லைக் கடிக்க மட்டுமே முடிந்தது.

காலை உணவை ஒரு ஹோட்டலில் முடித்தவர்கள் வீடு வந்து சேரும் நேரம் அருண்மொழி வேறு எஸ்டேட் சென்று விட்டிருந்தான். காரை போர்டிகோவில் நிறுத்தியவன் அவளுக்கு கார் கதவை திறக்க, அவனை பார்த்து ரசித்தவாறே இறங்கினாள் வர்ஷிதா.

“இங்க வச்சு சைட் அடிக்கிற வேலை எல்லாம் வேண்டாம். உள்ளே வந்து மொத்தமா எடுத்துக்கோ” என்று அவன் அவளுடன் உள்ளே வர, வீடு காலியாக இருந்தது.

“இங்க யாரும் இல்லையா?” வர்ஷி கேட்க,

“மொழி இருப்பான், அவனுக்கு வேலைக்காரர்கள் இருக்கிறது பிடிக்காது. அதனால் நாங்களும் வந்தால் சமையல் முதல் வீடு துடைக்கிறது வரை நாங்க தான். அவன் நாம இங்க வருவதால் வேற எஸ்டேட் போயிட்டான்” என்றான் ஆரண்யன்.

“அவர்கிட்ட பேசுவீங்களா நீங்க?” அவள் ஆச்சர்யமாக கேட்க,

“அவன்கிட்ட மட்டும் தான் பேசுவேன். அப்பா கால் பண்ணுவாங்க ஆனா பெருசா பேச்சுவார்த்தை இல்லை. அசோகன் அண்ணா கூட ரொம்ப பாண்டிங் இல்ல. எதுன்னாலும் இவன்கிட்ட மட்டும் தகவலா சொல்லிப்பேன்” என்றவன் உடைகள் வைத்திருந்த பையை எடுத்துக் கொண்டு அறைக்கு சென்றான்.

பின்னாடியே அவளும் வர, உடைகளை எடுத்து அலமாரியில் வைத்து விட்டு அவளை நெருங்கினான்.

“நான் ரொம்ப டயர்ட்” அவள் சிணுங்க,

“எப்போ பாரு அதே நினைப்பு தான், வீட்டுக்கு போன் பண்ணி நாம ஊட்டி வந்ததை சொல்லிட்டு சாப்பாடு ஆர்டர் பண்ணு. நான் குளிச்சிட்டு வரேன். ரெண்டு மணி நேரத்தில் ஷூட்டிங் போகணும்” என்று குளியலறைக்குள் நுழைய,

“என் நினைப்பு!” என தலையில் அடித்துக் கொண்டு தந்தைக்கு அழைப்பு விடுத்தாள். அவளின் செய்கையை பார்த்து சிரித்தவன்,

“வர வர ரொம்ப படுத்துறோமோ” என தனக்குள் சொல்லிக் கொண்டான்.

அவன் குளித்து முடித்து வெளியில் வரும் நேரம் அவள் குளிக்க துணி எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். அவளை அப்படியே பின்னால் இருந்து ஆரண்யன் அணைக்க, அவனின் தலையில் இருந்து வழிந்த நீர்த்துளிகள் அவள் தோளில் பட்டு உடல் சிலிர்த்தது.

“விடுங்க குளிச்சிட்டு வரேன், சாப்பாடு ஆர்டர் போட்டுட்டேன். வந்ததும் வாங்கி வைங்க” என்று நகரப் பார்க்க, அவள் கையை பிடித்து இழுத்தவன்,

“நேத்து தான் நமக்கு கல்யாணம் ஆகி இருக்கு. கொஞ்சமாச்சும் புதுபொண்டாட்டி நினைப்பு இருக்கா உனக்கு?” என்று கேட்டான்.

“அதான் நேற்றே ஒரு முத்தம் கொடுத்ததுகான தண்டனையை வாரி வழங்கிட்டீங்களே. அதுல வெட்கம் எல்லாம் பறந்து போயாச்சு” என்று கூறினாலும் அவனின் தீண்டலில் முகம் செவ்வானமாய் சிவந்திருந்தது.

“ஹ்ம் ஆனா இந்த முகம் வேற ஏதோ சொல்லுதே” என அவளின் கன்னத்தை விரலால் தீண்ட, அவனின் தீண்டலில் அவள் கூசி சிலிர்த்த நேரம், அவளின் அலைபேசி ஒலித்தது.

சட்டென அந்த மோனநிலை அறுபட, “சாப்பாடு வந்துடுச்சு போல, நீங்க வாங்கி வைங்க” என குளிக்க ஓடி விட்டாள்.

“வெளில வந்து தானே ஆகணும்” என கூறியவன் உணவை வாங்கி வைத்து காத்திருக்க, உள்ளே சென்ற வர்ஷிதா மாற்று உடை எடுக்காமல் வந்ததை நினைத்து தவித்து நின்றாள்.

“வர்ஷி இன்னைக்கு உனக்கு என்னாச்சு? வெளில போய் அவர்கிட்ட மாட்டினா இன்னைக்கு நீ தப்பிச்சது போல தான்” வாய்விட்டு புலம்பியவள், ஒரு பெரிய டவலை எடுத்து போர்த்தி விட்டு வெளியே வர, திரும்பி பார்த்த ஆரண்யன் விசில் அடித்தான்.

“ஆரண்யா!” அவள் சிணுங்க,

“போட்டிருந்த ட்ரெஸ் எங்க?” என்று சிரிப்புடன் கேட்டான் அவன்.

“அதை துவைக்க தண்ணியில் போட்டுட்டேன். பிறகு தான் ட்ரெஸ் எடுத்துட்டு போகாத நியாபகமே வந்துச்சு” அவள் அவனின் பார்வையில் சிவந்து உடையை எடுக்க நகர, சட்டென அவளின் டவலை பிடித்தான் ஆரண்யன்.

“ஆரண்யா பிளீஸ் நோ” அவள் அதை வழுவாமல் பிடிக்க,

“ஐ லவ் இட் வர்ஷி” என்று அவளை தன்னோடு இழுத்து அணைத்துக் கொண்டான்.

“பசிக்குது” அவள் மெதுவாக கூற,

“எனக்கும் ரொம்ப பசிக்குதே” என மெதுவாக அவளின் இடையை வருட,

“சாப்பிட்டுட்டு பேசலாம் பிளீஸ்” அவனுக்குள் உருகிக் கொண்டிருந்தாள் அவள்.

அவளின் உணர்வுகளை படித்தவனுக்கு அவள் இப்போதே வேண்டும் என்று மனம் அடித்து எழுப்பினாலும் அவளின் பசிக்காக விட்டு விட்டான்.

அவள் உடை மாற்ற மீண்டும் குளியலறைக்குள் நகர, “ட்ரெஸ் எல்லாம் அப்புறம் மாத்தலாம். முதல்ல சாப்பிடு, எப்படியும் திரும்ப ட்ரெஸ் மாத்தணும் தானே” எனக் கூற,

“யூ கேடி!” என அவனின் தலையில் கொட்டியவள் அவன் மடியில் அமர்ந்தே உணவை உண்டாள்.

“எத்தனை மணிக்கு ஷூட்டிங் போகணும்?”

“மூணு மணிக்கு” என்று அவன் உணவை ஊட்டி விட, வாங்கியவள் நேரத்தை பார்த்தாள். இன்னும் இரண்டுமணி நேரம் இருந்தது.

“சாப்பிட்டுட்டு கொஞ்சம் தூங்குங்க, நானும் பூர்விகிட்ட ஒரு கேஸ் பத்தி பேசிட்டு வரேன். நீங்க ஷூட்டிங் போனா எனக்கும் போர் அடிக்கும்” என்றாள்.

“எனக்கு தூக்கம் வரல, நான் ஷூட்டிங் போன அப்புறம் நல்லா தூங்கு. உன் தில்லாலங்கடி வேலை எல்லாம் என்கிட்டே ஆகாதுடி” என அவளின் இடுப்பை கிள்ளி விட,

“கண்டுபிடித்து விட்டானே” என அவள் கண்கள் விரிந்தன.

“நீ கேடினா நான் உலகமகா கேடி”

“இதுக்கு மட்டும் குறைச்சல் இல்ல”

“வேற எதுக்கு குறைச்சலாம்?” என இருந்துக் கொண்டே கையைக் கழுவியவன் அவளையும் சரித்துக்கொண்டு கட்டிலில் விழுந்தான்.

“யோவ் என்னயா நீ?” அவள் பதறி எழ,

“ரொம்ப பண்ணாதடி, எனக்கு நீ இல்லாம தூக்கம் வரல. அப்படியே கட்டிப்பிடிச்சு ஒரு மணிநேரம் தூங்குறேன்” என்று கூற,

“ட்ரெஸ் மாத்திட்டு வரேன்” அவள் எழும்ப முயற்சித்தாள். அவனை விட்டு ஒரு இன்ச் கூட நகர முடியவில்லை.

“எனக்கு இது தான் வசதி” என அவளின் இடையினூடே கையிட்டு அணைத்துக் கொண்டு தூங்க அவஸ்தையில் நெளிந்தாள் அவள்.

“வர்ஷி ஓவரா நெளிஞ்சா சேதாரம் உனக்கு தான்” அவன் இறுக்கி பிடிக்க,

“விடுங்க நான் எழும்பல” என்று அவனோடு படுத்தவளும் சில நிமிடங்களில் தூங்கி விட்டாள்.

அடுத்து அவள் எழும் நேரம் அவன் அங்கிருக்கவில்லை. ஷூட்டிங் கிளம்புவதாக ஒரு குறிப்பு முகவரியுடன் எழுதி வைத்திருந்தான்.

புன்னகையுடன் கிளம்பி அந்த இடத்திற்கு சென்று பார்த்தவளுக்கு ஆரண்யன் மற்றும் அவனோடு நடித்த நாயகி இருந்த நிலையை பார்த்து கோபம் கொப்பளித்தது. அதை பார்த்தவன் மனதில் அபாயமணி அடித்தது.

“ராட்சசி சும்மா ஒரு தகவலுக்கு அட்ரஸ் எழுதி வச்சிட்டு வந்தா நேர்லயே வந்து நிக்குறாளே” என புலம்பியவன், திரும்ப அவள் அவனைக் கண்டுக் கொள்ளவே இல்லை. பார்வை முழுவதும் வேறு எங்கேயோ இருந்தது.

அன்று பரபரப்பாக கடைசி கட்ட படப்பிடிப்பு நடந்துக் கொண்டிருந்தது. விபத்தில் சிக்கிய தன் காதலியை பல போராட்டங்களுக்கு பிறகு கண்டுபிடித்த காதலன் தன் அன்பை வெளிப்படுத்தும் விதமாக இதழோடு இதழ் முத்தமிடும் காட்சி படமாக்க பட்டுக் கொண்டிருந்தது.

எப்போதும் ஒழுங்காக காட்சிகளை முடித்துக் கொடுக்கும் ஆரண்யன் அன்று முத்தக் காட்சிக்கு தடுமாறிக் கொண்டிருந்தான். அவன் மனதில் ஒருத்தி உதட்டை கடித்த காட்சியே தோன்ற படப்பிடிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை.

"கட்!" இயக்குனர் நான்கு முறை முயற்சி செய்து விட்டு கத்த, ஆரண்யன் தலையை அழுத்தமாக கோதி கொண்டான்.

அந்நேரம் தான் வர்ஷிதா தூரத்தில் அவனை பார்த்துக் கொண்டிருக்க, மனைவி முன் அந்த காட்சியில் நடிக்கவே அவனுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. ஆனாலும் அது அவனின் வேலை சார்ந்தது. அதில் அவன் எதுவும் செய்ய முடியாது.

"சாகடிக்குறடி நீ" அவளைப் பார்த்து முணுமுணுத்தவன்,

"சார் ரெடி, டேக் போகலாம்" என்று மனதை திடப்படுத்தி அந்த காட்சியை முடித்துக் கொடுக்க, கூட நடித்த நடிகை அவனை ஆர்வமாக பார்த்தாள்.

"சார் அந்த மிதிலா பொண்ணு உங்களையே வச்சக் கண்ணு எடுக்காம சைட் அடிக்குறா" அவனின் அசிஸ்டன்ட் சொல்ல,

"அவளுக்கு பின்னாடி ஒருத்தி கண்ணுல நெருப்பை பத்த வச்சிட்டு நிக்குறால, அவ ஹேண்டில் பண்ணிப்பா" என்று புன்னகையுடன் கூறினான்.

மனைவியின் பொசசிவ் பற்றி அவன் அறிந்தது தானே. அவளைத் தவிர வேறு யாராவது பார்வையால் தீண்டினால் கூட பஸ்பமாக்கி விடுவாள்.

திரும்பி பார்த்த ஆதவன் அங்கு நின்றவளை புரியாமல் பார்த்தான்.

"யார் சார் அவங்க?"

"என் பொண்டாட்டி"

என்றவன் அவளையும் கண்டுக் கொள்ளாமல் நகர, அவனின் அலைபேசி ஒலித்தது.

"ராட்சசி" என்றவன் அழைப்பை எடுத்துக் கொண்டே திரும்பி பார்த்தான். தூரத்தில் இருந்தே கண்களால் மிரட்டினாள்.

"இவளுக்கு வேற வேலை இருக்குன்னு சொன்னாளே" என்றவனை ஆதவன் ஆச்சர்யமாக பார்த்தான்.

"என்னடி, உனக்கு பூர்விகிட்ட பேச எதுவும் இல்லையா? சும்மா அட்ரஸ் எழுதி வச்சிட்டு வந்தா என் பின்னாடி தொத்திகிட்டு வர?"

அலைபேசியை காதில் இருந்து எடுத்து அவனை முறைத்தாள்.

"என் வேலையை பார்க்க ஆள் இருக்கு அண்ட் பூர்விகிட்ட அப்போவே பேசி முடிச்சிட்டேன். நீ இப்போ என்ன வேலை பார்த்துட்டு வர? அவளுக்கு எப்படி கிஸ் கொடுக்கலாம் நீ?"

"அட அரை மென்டலே! அந்த கிஸ் சீன்ல தான் உன் நியாபகம் வந்து அத்தனை தடவை சொதப்பி டைரக்டரை டென்ஷன் பண்ணிருக்கேன். கழுதை அவரை டென்ஷன் பண்ண வேண்டாம்னு தான் மனசை திடப்படுத்தி அந்த சீன் பண்ணினேன். இதுல இவ சண்டைக்கு வேற வரா. வீட்டுல மரியாதையா பேசுற வாய் இப்போ மரியாதை இல்லாம பேசுது"

அலைபேசியில் இவர்கள் உரையாடல்கள் இருக்க, ஆதவன் அவனை ஆச்சர்யமாக பார்த்தான்.

அவனுக்கு தெரிந்த ஆரண்யன் சக்கரவர்த்திக்கு கோபம் மட்டுமே தெரியும். முகத்தை எப்போதும் இறுக்கமாக வைத்துக் கொள்வான். ஆனால் இந்த ஆரண்யனுக்கு சிரிக்க கூட தெரிகிறது. அவனையும் தலையை பிய்த்து கொள்ள வைக்க ஒருத்தி இருக்கிறாள்.

அவனின் யோசனையை தடுப்பது போல "பளார்" என்ற சத்தம்.

“இப்போ என்னடா?” திடுக்கிட்டு திரும்பியவன் ஆரண்யனை தேட, அவனோ அடி வாங்கியவன் முன் ருத்ரமூர்த்தியாய் நின்றிருந்தான்.

"ஹவ் டேர் யூ?"

"எவ்ளோ தைரியம் இருந்தா ஒரு பெண்ணை பார்த்து இத்தனை கேவலமா கமென்ட் பண்ண முடியுது உன்னால்? உன் வீட்டுலயும் பெண்கள் உண்டு தானே"

என்று சீறியவன் வர்ஷிதாவை நோக்கி செல்ல, அவளோ அவனின் கோபத்தில் அதிர்ந்து நின்றாள்.

“என்ன லுக்கு? வாடி நீ” எனக் கைப்பிடித்து அழைத்து வெளியே சென்றான்.

அவளுக்கே இதுவரை பேசிய ஆரண்யனா இவன் என்ற சந்தேகம் வந்து விட்டது.

இயக்குநர் ஆதவனை அழைக்க, ஆதவன் மற்றவர்களை விசாரிக்க, அடி வாங்கியவன் வர்ஷிதாவை தவறாக பேசியது தெரியவர இவனுக்கும் கோபம் வந்தது.

'மனுசன் ரெண்டு நிமிஷம் சிரிச்சா இவனுங்களுக்கு பொறுக்காது' என எண்ணியவன்,

“சார் இனி இன்னைக்கு வர மாட்டார். வேற சீன் இருந்தால் எடுங்க சார்” என்று மற்ற வேலைகளை பார்க்க சென்றான்.

 
Status
Not open for further replies.
Top