எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மார்கண்டேயனின் மனோரஞ்சிதம் கருத்து திரி

#மார்கண்டேயனின்_மனோரஞ்சிதம்

Sree Ravi sister review thanku so much sis

மார்கண்டேயனின் மனோரஞ்சிதம் மிகவும் அருமை இந்த கதைக்கு நிறைய reviews kuduthen இப்போ முடிந்தது ஒரு சில வரிகள் மார்க் மனோ பற்றி சொல்றேன் மார்க் பொண்டாட்டி யா விட்டு பிள்ளைகள் விட்டு எந்த வித தொல்லையின்றி அமெரிக்கா வில் இரூக்கான் மனோ பிள்ளைகள் உடன் தாய் வீட்டில் இருக்கா.எல்லா வீட்டில் இருக்கும் நாத்தனார் போல் லதா இருக்கா தாய் மாமன் மார்க் வாங்கிய சொத்தை ஆட்டையா போட நினைக்கும் போது சொநதங்களின் சுயரூபம் தெரிய வருகிறது மனைவியின் அருமை புரிகிறது அமெரிக்கா மோகத்தை தூக்கி எறிந்து விட்டு பிள்ளைகள் மனைவி தான் நிரந்தரம் என்று புரிந்து கொண்டு மனைவி க்கு பக்கிபலமாக இருந்து பள்ளி கூடம் வாங்கி கொடுத்து மனைவி முன்னேற்றத்துக்கு உறுதுணை யா இருந்து வாசகர் மனதை கொள்ளை கொண்டான் கடைசியில் அவன் ஆசைபட்ட பெண் குழந்தை யா மனோ கொடுத்து விட்டாள் நம்ம அன்றாட வாழ்க்கையில நடக்கும் நிகழ்வுகளை அழகாக மார்க் மனோ குடும்பம் மூலம் கொடுத்த Priya Pandees க்கு நன்றி கள் பல.மனோ பொங்கல் வாங்குனான் கடைசியில் சிறந்த ஹிரோ ன்னு நிருபித்து விட்டான் லதா மாதிரி எல்லா வீட்டிலும் இருப்பாங்க மீனாம்மா கதாபாத்திரம் மிகவும் அருமை.கணவன் மனைவி புரிந்து கொண்டு விட்டு கொடுத்து வாழ்ந்தால் அந்த குடும்பம் மிகவும் அருமையா இருக்கும் priya pandees sis u deserve it Waiting for next story.மார்க்மனோ வாசகர்களின் மனம் கவர்ந்த ஜோடி.
 
#மார்கண்டேயனின் மனோரஞ்சிதம் - பிரியா பாண்டீஸ்

By jayavarthini chockalingam sister

வாழ்த்துக்கள் பிரியா சிஸ்டர்.

நானும் மனோவும் வேறு வேறு இல்லை. என் கணவருடன் இப்பொழுது usa'வில் இருக்கிறேன் after lots of struggles . உங்கள் கதை என்னுடைய
வாழ்வில் பல பல இடங்களில் relate
ஆகியது... kannan ஸ்கூல் போறப்ப ஆய் count
பண்ணுவதை போலவே எனது
சின்னவனும்
செய்வான். இப்படி பல scenes
எல்லாருடைய வாழ்வில் நடக்கும் இயல்பை உங்கள்
கதையில் கண்டேன் .மனோ ரொம்ப
தெளிவா, அமைதியா, தைரியமா
அவளுக்காக போராடினாள். அவளுடைய
பெற்றோரும்,
அண்ணனும் அவளுக்கு சப்போர்ட்
செய்தார்கள். காலம் அவளது முயற்சிக்கும், பொறுமைக்கும் நல்ல பலனை தந்தது.
மார்க்கண்டேயன் கதாபாத்திரத்தை பல வெளிநாட்டில் வாழும் ஆண்களை
representate செய்திருக்கிறீர்கள். மீனாம்மா கதாபாத்திரம் wow sema.

wise writing sister..Enjoyed a lot..wishing u to write more and more..
 
#மார்கண்டேயனின்_மனோரஞ்சிதம்

Selvalakshmi suyambulingam sister review thanku sis thanku so much🥰🥰🥰

மார்கண்டேயனின் மனோரஞ்சிதம் - கதை விமர்சனம்
மார்கண்டேயனின் மனோரஞ்சிதம் - எழுத்தாளர் - Priya Pandees.

நல்ல ஒரு குடும்பக் கதை.

உடையவன் பார்க்க விட்டால் ஒரு முழம் கட்டை - இந்தப் பழமொழி தொழில் மற்றும் நிலத்திற்கு மட்டுமல்ல, குடும்பத்திற்கும் பொருந்தும் என்பதே இக் கதை. உங்கள் குடும்பத்தை நீங்கள் கவனிக்காவிட்டால் சொந்த பந்தம் என்று பலரும் வந்து உங்கள் குடும்பத்தில் கும்மி அடித்து செல்வர்.

அயல்நாட்டில் வேலை செய்பவர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தை பிரிந்து, தனியாக சம்பாதிக்கிறார்கள். இதை தியாக மனப்பான்மை என்ற கோணத்திலேயே பார்த்திருக்கிறோம். ஆனால் இதற்கு ஒரு மற்றொரு கோணமும் உண்டு. தனது பொறுப்புக்களை தட்டிக் கழித்து சம்பாதிப்பது மட்டுமே தனது ஒரே கடமை, இதர பொறுப்புக்களை தனது குடும்பத்தினர் பார்த்துக் கொள்ளுவர் என்று இருக்கும் சில ஆண்களும் இருக்கிறார்கள். கணவனைப் பிரிந்து தனியாக தனது குடும்பத்தை நடத்தும் பெண்கள் சந்திக்கும் சமூக இன்னல்களை அழகாக எடுத்துக்காட்டுகிறது இக்கதை.

மூன்று வருடமாக கணவனுடன் பேசாமல் இருந்து எப்படியாவது அவனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற உறுதியோடு இருக்கும் நாயகியின் பிடிவாதம் மிகவுமே வியக்க வைத்தது.

என்னதான் கணவனும் மனைவியும் மூன்று வருடமாக பேசாமல் இருந்தாலும் அவர்களுக்குள் இருக்கும் ஆத்மார்த்தமான அன்பு அவர்களை எப்படியும் இணைத்து விடும்.

என்னைப் பொறுத்தவரை கதையில் நாயகி என்று நான் எண்ணுவது மீனம்மா பாத்திரமே. அவர்களின் வெகுளித்தனமான மற்றும் வெளிப்படையான பேச்சு மிகவும் நன்றாக இருந்தது. மீனம்மா பேசும் ஒவ்வொரு டயலாகும் ரசிக்கும்படி இருந்தது.

மிகவும் நல்ல கதை. வாழ்த்துக்கள் எழுத்தாளர் Priya Pandees.

#ReviewPost #ReviewBySelvi
 
#மார்கண்டேயனின்_மனோரஞ்சிதம்

Thanks kka kalai karthi akka review ❤️ ❤️ ❤️ ❤️ ❤️

மார்கண்டயனின் மனோரஞ்சிதம் கதை அருமை.மனோ கல்யாணம் செய்து அம்மா வீட்டில் இருக்க கணவன் அமெரிக்காவில் மனசுக்கு பிடித்த வேலையை தனிமை சுதந்திரம் என்று இருக்க இங்கோ மனைவி அம்மா வீட்டில் இருகுழந்தைகளுடன் வேலைக்கு போய் தோள் சாய ஆள் இல்லாமல் தவித்து வாழ்ந்து கொண்டு இருக்கிறாள். அம்மா அப்பா அண்ணா சூப்பர். அண்ணி யாதர்த்தவாதி. மீனம்மா சூப்பர். மார்க் குடும்பம் டூ மச் மாமா மட்டும் செம. அக்கா சரியான சுயநலவாதி தன்தம்பி பணம் என்று இருக்கிறது டூ மச். மனோ சண்டை போட்டு முடித்து ஒருவழியாக மூன்று வருடம் பேசாமல் இருக்க மார்க் குடும்ப உறுப்பினர்கள் பற்றி அறியாமல் இருக்கிறது டூ மச் இதில் மனோ கருத்து சொன்னாலும் தெரியாமல் அவனாக சொந்தங்கள் பற்றி அறியும் போது மனைவி எவ்வளவு தெளிவாக இருக்கிறாள் என்பதை அறிகிறான் மனைவி சமாதானம் படுத்த வழிக்கு கொண்டு வரும் போது மனோ அவனை பிடித்து கொள்வது அழகு. குழந்தைகள் மற்றும் அம்மா வீட்டில் உள்ள மரியாதை எல்லாம் தெரியவருகிறது சூப்பர். லதா என்ன மனுஷி இவள் நினைக்கத் தோன்றுகிறது லூசு குழந்தை கணவன் முக்கியம் இல்லை தம்பி பணம் மற்றும் முக்கியம் இப்படியும் சிலபேர். சாம்பவி லூசு. வள்ளுவன் மீனம்மா சூப்பர். மாமா சீ அடுத்தவன் பணத்தை அபகரிப்பு டூ மச். லதா மாமா தண்டனை சூப்பர். மார்க் தன் குடும்பம் உணர்ந்து அவளுக்கான அங்கிகாரம் கொடுத்து அன்பை தோள் சாய தோள் கொடுப்பது சூப்பர். மொத்தத்தில் கதை அருமை. மார்க் மனோ அன்பு ஜெயித்து வாழ்க்கை வாழ்வது அழகுடா.வாழ்த்துகள்டா.வாழ்கவளமுடன்.இதைப்போல் நிறைய கதை எழுதவேண்டும்டா.
 
மார்க்கண்டேயனின் மனோரஞ்சிதம்❤️
ப்ரியா பாண்டீஸ்.
Barani sister review

அமெரிக்க மோகத்தில் அயல்நாட்டில்
மென் பொருள் துறையில் வேலை
பார்க்கும் நாயகன் மார்க்கண்டேயன்.🙂 திருமணம் முடிந்து எட்டு
வருடங்களாக கணவனின் உடன்
இருக்க முடியாமல் இரு பிள்ளைகளுடன் அம்மா வீட்டில்
இருக்கும் நாயகி மனோரஞ்சிதம். 🙂
தான் தன் சந்தோஷம் என ஊரில்
தன் உறவுகளின் நிலைப்பாடு ஏதும்
அறியாமல் பணம் அனுப்பினால்
மட்டும் போதும் என இருக்கும்
மார்க் தாய் மாமனின் பொறுப்பில்
குடும்பத்தை விட கஷ்டப்பட்டு
சம்பாதித்தது எதுவும் அவனுக்கு
இல்லை என்ற நிலை வரும் போதுதான் மனைவி பிள்ளைகளின்
அருமையும் புரிகிறது.🙂
இதில் திருமணம் ஆகி குணமான கணவனுடன் வாழ்க்கை நடத்தும்
அக்கா லதா தம்பி மார்க்
சம்பாத்தியத்தில் பாதி தனக்கு
உடமைப் பட்டது எனும் எண்ணம்
வேறு ப்ரச்னைகளை பெரிதாக்க
தான் சம்பாதித்ததை மீட்டெடுக்கவும்
நீண்ட காலமாக தன்னிடம் பாராமுகத்துடன் இருக்கும் மனைவி
மனோவுடன் சேர்ந்து வாழவும்
அமெரிக்க வேலையை விட்டு
ஊர் திரும்பும் நாயகனின்
அதிரடி அவன் இழந்ததை மீட்டுக்
கொடுத்ததா மற்றும் மனைவி
பிள்ளைகளின் உறவை தக்க
வைத்தானா என்பதை எழுத்தாளர்
கதையில் அவருக்கே உரிய
எழுத்து நடையில் வழங்கியிருக்கிறார்.👍❤️
கணவனைப் பிரிந்து பெற்றவர்களின் வீட்டில் இருக்கும்
மனோரஞ்சிதம் இரண்டு ஆண்பிள்ளைகளுடன் ஊராரின்
பேச்சுகள் மட்டுமன்றி மனதளவிலும்
பாதுகாப்பில்லாத நிலையை
உணர்ந்து அனுபவிக்கும்
துன்பங்கள் கதையில் நிதர்சனமாக பதியப்பட்டுள்ளது.😥
மனைவின் இரு பிள்ளைகள்
கிருஷ்ணா கார்த்தி சேட்டைகளை
பார்க்கும் போது நெஞ்சமே
திடும் திடுமென அதிருது. 😫
மார்க்கின் அக்கா லதாவின் அட்ராசிட்டீஸ்
எல்லாம் நிஜத்திலும் நடப்பதுதான்.
ஆனாலும் திருமணமாகிப்
போனாலும் தம்பி தன் கைக்குள்ளேயே இருக்க வேண்டும்
என நினைப்பது கோபத்தை
கிளப்புவதாகத்தான் இருக்கிறது.😡
சம்பாதித்தது எதுவும் தனக்கில்லை
என்ற மனநிலையில் அயர்ந்து ஓய்ந்து
வரும் கணவனை தன் தனிப்பட்ட
விருப்பு வெறுப்புகளை தள்ளி வைத்து நேசத்துடன் அரவணைத்துக்
கொள்ளும் மனோரஞ்சிதம் செமதான். 🤗
மீனம்மாவின் பேச்சுகள் கதையை
சுவாரசியத்துடன் நகர்த்துகிறது
என்றுதான் சொல்ல வேண்டும்.🤗
❤️மார்க்கண்டேயனின்
மனோரஞ்சிதம்❤️
ப்ரியா பாண்டீஸின் எழுத்துக்களில்
ஃபீல் குட் ஸ்டோரிதான்.❤️

 
#மார்க்கண்டேயனின்_மனோரஞ்சிதம்_விமர்சனம்

Shafna Rangarajan sister review thanku so much sis 😍😍🥰🥰🥰🙏🏻🙏🏻🙏🏻

இயல்பான கதை களம் ❤❤

திருமணம் முடிந்த பிறகும் கணவனாக தகபனாக அவனின் பொறுப்பு பணம் கொடுப்பதோட முடிந்தது என்று சுதந்திரமாக வெளிநாட்டில் சுற்றித்திரியும் நாயகன் மார்க்கண்டேயன் 😡

மார்க்கை கட்டம்கட்டி தன் வழிக்கு கொண்டுவர போராடும் நாயகி மனோரஞ்சிதம் 🥺🥺

ஆரம்பத்தில் இருந்தே மார்க்கின் செயலும் பேச்சும் கொந்தளிப்பை தர தவறவில்லை 😡😡
மார்க்கின் அக்கா லதா அடடே!!!தம்பி இறிதி வரை அவரின் தம்பியாக மட்டுமே இருக்க வேண்டும் என்னும் நல் உள்ளம் கொண்டவர் 🤬🤬🥵
எவ்வளவு பட்டாலும் திருந்தாமல் நம் உடனே உலா வரும் சில உறவுகளின் பிம்பம் இவர் 😒😒

மனோவின் கதாபாத்திரப் படைப்பு அருமை 👏👏 கணவன் உடன் இல்லாமல் ஒரு பெண் சந்திக்கும் வசை பேச்சுகளும் அவமரியாதையும் எவ்வளவு என்று மிகவும் தெளிவாக சொல்லீருக்கீங்க 👌

தாய் வீட்டோடு பெண்கள் இருந்தால் உறவினர்கள் தனியாக அவளுக்கு அழைப்பிதழ் கூட வைக்க மாட்டார்கள் என்னும் காட்சி மனோவின் நிலையை அருமையாக எடுத்துரைத்தது 😞😞

இரு பிள்ளைகளை வைத்து கொண்டு அவள் படும் பாடு அப்பப்பா😰😰 என்னதான் பெற்றோர்கள் நன்கு பார்த்துக் கொண்டாலும் உறியவன் துணையை அல்லவா அவளின் மனம் தேடுகின்றது 🥺🥺

பிரிந்து இருந்தால் கணவன் மனைவி இடையே இருக்கும் அன்யோன்யம் எப்படி இருக்கும் என்பதற்க்கு மனோ மார்க்கிற்க்கு கேக் ஊட்ட தயங்கும் காட்சி சிறந்த எடுத்துக்காட்டு 🙂

அனைவரையும் ஓடவிடும் மார்க்கையே ஓடவிட்ட மீனாம்மா சூப்பர் 🤣 மீனாம்மா வள்ளுவன் கோம்போ நல்லா இருந்தது 🤣🤣

மார்க்கு தன் தவறை உணர்ந்து மனோ தவறவிட்ட அனைத்தையும் அவளுக்கு திருப்பிக் கொடுக்க நினைத்து அவன் செய்த செயல்களினால் நன் மதிப்பெண் பெற்றுவிட்டான் 🏅🏅

பிள்ளைகளின் சண்டைகள், சேட்டைகள் ,மனோவின் மனதை பரதிபலிக்கும் இயல்பான காட்சி அமைப்புகள் எல்லாம் மிகவும் சிறப்பு 👏

சூழியமாக இருந்த மார்க்கை உங்களின் இயல்பான கதை நடையின் வழியே மனோவின் மார்க்கண்டேயனாக நூறு 💯மதிப்பெண் பெற வைத்துவிட்டீர்கள் வாழ்த்துக்கள் 👍
 
மார்க்கண்டேயனின் மனோரஞ்சிதம்..♥️♥️♥️

Rameeza sait sister review

பிரியா சிஸ்ஸோட ஆன்கோயிங்ல நான் படிச்ச முதல் கதை...அவுங்களோட மற்ற கதைகள் எந்த அளவுக்கு என்னை இம்ப்ரஸ் பண்ணுச்சோ அதே மாதிரியே இந்த கதையும் என்ன அதிகமா ஈர்த்து என்ன அவுங்களுக்கான ஃபேனா மாத்திடுச்சு...🤷🏻‍♀️🤷🏻‍♀️🤷🏻‍♀️

லதா அக்கா : எவ்ளோ பட்டாலும் திருந்தாம, நான் சொல்றது மட்டும தான் சரி, தான் செய்றது எல்லாமே கரெக்ட்டான விசயம்னும் சுத்திட்டு திரியுற கேரக்டர்...ஆரம்பத்துல இருந்து கடைசி வர ஒரு ஆள் இரிடேட் பண்ணுச்சுனா அது இந்த லதா அக்கா மட்டும் தான்...😡😡😡

சுரேந்தர் மாம்ஸ்: பொண்டாட்டி அப்படி இருந்தா நானும் அப்படித்தான் இருக்கனும்னு அவசியம் இல்ல..பொண்டாட்டி குடும்பமும் தான் குடும்பமா நினச்சு அக்கறையா இருந்த மஹான்...அதனால அவருக்கு கிடச்ச சந்தோஷ பரிசு அந்த லதாக்காவ பிரிஞ்சி இருந்தது தான்...யாரு கண்ணு பட்டுச்சோ அந்தக்கா திரும்பி மாம்ஸ் கூட போய் சேர்ந்திடுச்சு...🤧🤧🤧

திருட்டு மாமா : எவ்ளோ கேடி வேல பாத்திருக்காரு..நம்மள நம்பி ஒரு குடும்பம் இருக்குனா அத கடைசி வர அந்த நம்பிக்கைய இழக்க விடாம பாத்துக்கனும்..அத விட்டுட்டு நம்மள விட எங்க அந்த குடும்பம் முன்னேறி போய்டுமோனு பொறாமை புடிச்சு அந்த குடும்பத்தையே நான் தான் எல்லாமேனு தனக்கு கீழ வச்சுக்க பாத்தாறு...ஆனா பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் மாதிரி மாட்டிக்கினாரு... இருந்தாலும் இவருக்கு ரொம்ப தைரியமப்பா...சின்ன பிள்ளைல இருந்து தூக்கி வளர்த்த மருமகன் தன்ன சீண்டுறவுங்கள எப்படி பழிவாங்குவானு தெரிஞ்சும் தப்பு செஞ்சாரு...கடைசில மார்க் ஆப்பு வச்சிட்டான்...😁😁😁

மீனம்மா : ஸ்ட்ரைட் ஃபார்வர்டான ஒரு கேரக்டர்...யாரு என்ன நினச்சா எனக்கென்ன..தப்புனா தப்புனு கண்டிப்பா சுட்டி காட்டுவேனு இருந்தாங்க...அவுங்க மனோக்காக பேசிய பல விசயங்கள் இன்னைக்கு நம்ம பெண்களுக்கு தேவையான ஒண்ணு...மனசுல நிலச்சுட்டாங்க🙏🏻🙏🏻🙏🏻

மனோ : நமக்கெல்லாம் நம்மையே நியாபக படுத்துற கேரக்டர்...ஏதோ மனோ விசயத்துல நடக்குற சின்ன விசயம் கூட நம்மளோட கனெக்ட் ஆகிருக்கும்...அதனால தான் ஈசியா மனோவோட மனசும் அதுல அவ படுற துக்கங்களும் நம்மள தாக்குச்சு..அவளுக்காக நாமளும் சேர்ந்து போராடுனோம்...அவள் மனோவோட சேர்ந்து சந்தோஷமா இருக்குறது நமக்கும் சந்தோஷத்த கொடுத்துச்சு...ஆரம்பத்துல அழுதுட்டு இருந்தாலும் கடைசில தைரியமா இருந்து எல்லாத்தையும் சமாளிச்சு துணிவா நின்னுட்டா..♥️♥️♥️

மார்க்கே :என்னையடா வில்லன் ரேஞ்சுல பேசுறீங்க...நான் ஹீரோடானு சொல்ற அளவுக்கு மாஸ் காட்டிட்டான் மார்க்...எவ்ளோ அடி...எல்லாத்தையும் தூசு மாதிரி தட்டி விட்டு மனோவ மட்டுமில்ல நம்மையும் அவன் பக்கட்டு சாய வச்சுட்டான்...ஆரம்பத்துல முட்ட மார்க் வாங்குன மக்கு மார்க் கடைசில நூத்துக்கு நூத்திபத்து வாங்கி ஜெயிச்சு காட்டிட்டான்...என்ன தான் மனோக்கு சப்போர்ட்டா பேசுனாலும் மார்க்கு தான்டா கெத்துனு காட்டிட்டான்...பொண்டாட்டிக்கு ஸ்கூல வாங்கி கொடுத்தப்பவே நான்லாம் ஃபிளாட் ஆகிட்டேன் அவன்ட்ட...😍😍😍

இன்னும் நிறைய மற்ற கதாபாத்தினங்களாம் இருக்காங்க..அவுங்களாம் தேவையான இடத்துல வந்து அவுங்களுக்கான பங்க கொடுத்துட்டு போய்ட்டாங்க..

கதைல மனைவி பேச்ச மதிக்கனும், அவ சொல்றத கொஞ்சமாச்சும் நம்பனும்னு சொல்லப்பட்ருக்கு...அதவிட ஒருத்தவுங்க மேல தண்மூடித்தனமா நம்பிக்கை வைக்கிறது தப்பில்ல...ஆனா அதுக்கு அளவிருக்குனு புரிய வச்சிருக்கு...இது எல்லாத்தையும் விட ஒரு பெண்ணுக்கு சுய சம்பாத்தியம் எவ்ளோ முக்கியம், அது அவளுக்கு எவ்ளோ நம்பிக்கைய தருதுனு எடுத்து காட்டிருக்கு...அருமையான இன்றைய சூழல்ல தேவையான விசயம் இவையனைத்தும்...👏🏻👏🏻👏🏻

கதை எப்பவும் போல சூப்பரோ சூப்பர்...பிரியா சிஸ் கலக்கிட்டாங்க...மார்க்கும் மனோவும் வெற்றிக் கதையா ஜொலிக்கட்டும்... வாழ்த்துக்கள்..🥳🥳🥳
 
#மார்கண்டேயனின்_மனோரஞ்சிதம்

ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்டர் 😍🥰🥰🙏🏻

மார்க்கண்டேயனின் மனோரஞ்சிதம்
#திருமதி_அப்சரஸ்_பீனா_லோகநாதன்

#கவிக்குயிலின்_கவி_வரிகள்

மார்க் ❤️‍🩹 மனோ

மறந்துவிட நினைத்தாலும்
மனதில் நீ மட்டும் மறையாமல் நிற்க....

மாறாத காயம் போல
மனோவின் உள்ளம் மௌனமாக வலிக்க..

மறுபடியும் சேர வேண்டும் என்ற
மனக்குமுறல் கொண்டு
மார்க் வர....

மழை போல மார்க்கின் மன்னிப்புகள் எல்லாம்
மடை போல் தடுக்கும் மனைவி ...

மூச்சு திணறும் நினைவுகள் நடுவே
மனது இன்னும் தயங்க,
மறைத்த வேதனைகள் எல்லாம்
மெல்ல மெல்ல மேலெழும்ப....

மறுப்பு சொல்ல வந்த உதடுகள் கூட
மனதின் துடிப்பை கேட்டு தளர,
மருந்தாய் மாறிய மார்க்கின் பாசம்
மனைவியின்
மனதை நனைத்தது மெதுவாக...

முரண்பாடுகள் மறைந்து
மௌனங்கள் உருகி போக,
மீண்டும் ஒரு முறை
மனங்கள் இணைந்தது காதலால்...

மருத்துவம் இல்லாத ரணம் கூட
மனமார்ந்த அணைப்பில் ஆற,
மீண்டும் பிறந்தது அவர்களின் வாழ்க்கை—
மாறாத காதலின் சாட்சியாக...
 
அமுதா சக்திவேல் சிஸ்டர் ரிவ்யூ

நிறைவான முடிவு...லதாவால எப்படி அவ்வளவு நாள் பிள்ளைங்கள விட்டு இருக்க முடிஞ்சதுனு ஆச்சரியமா இருக்கு...இப்ப கூட வேற வழியில்லாம தான் போய்ருக்கா இல்ல???
என்ன தான் இப்ப பொண்ண பிறந்ததில அவள பார்த்து இப்ப பசங்க கூட மொட்டை போட்டுனு அவ எதிர்பார்ப்ப அப்படியே நிறைவேற்றினாலும் உன் பழைய கேஸ் அப்படியே தான் இருக்கு...மனோ அதை என்னைக்கு வேணா தூசி தட்டலாம்..சோ இனி வரும் நாட்கள்ல மார்க் அடக்கி வாசிப்பது நலம்😄
 
Chitrasaraswathi sister review

மார்கண்டேயனின் மனோரஞ்சிதம் கணவன் மனைவி சேர்ந்து வாழும் வாழ்க்கையில் இன்பம் துன்பம் இரண்டும் இருவரும் இணைந்து எதிர்கொண்டு அதை அனுபவித்து வாழ்வதே நல்வாழ்க்கை என்பதை அழகாக தந்திருக்கும் கதை. மார்க் மாதிரி மனைவியை புரிந்துக் கொண்டு தன்னுடைய தவறுகளை திருத்திக் கொள்ளும் ஆண்கள் சதவீதம் குறைவாக உள்ளது என்பது நிதர்சனம். மனோ மாதிரி வாழ்க்கையை எதிர்கொள்ளும் பெண்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும். லதா மாதிரி உள்ளவர்கள் திருந்தி வாழ்வார்கள் என்பதும் எதிர்பார்க்க முடியாது. அருமையாக தந்திருக்கும் எழுத்தாளருக்கு பாராட்டுகள்.
 
Priya Srikanth sis review

அழகான கதை... எல்லோருக்கும் வாழ்க்கை இரண்டாவது வாய்ப்பு தருவது இல்ல.. மார்க்கிற்கு அது கிடைத்தது.. நல்லவேளை அதை அவன் பயன்படுத்திகிட்டான்... மனோ உண்மையிலேயே சூப்பரா பெண்... அவளோட வாழ்க்கையை அழகா அமைச்சிக்கிட்டா.. லதா ஒண்ணுமே சொல்றதற்கு இல்ல... ஏதோ மாமாவுக்கு உடலில் பிரச்சனை வந்தது.. ஈவரால் போராட முடியல.. மார்க்கோட இடம் அவனுக்கு கிடைச்சது.. இல்லைனா... சொந்தம் முக்கியம் தான் ஆனா நம்பளும் எப்போதும் விழிப்பா இருக்கனும்... மீனம்மா ரொம்ப அருமையான கதாபாத்திரம்.... ஒரு சில விஷயத்தை மிஸ் பண்ண உணர்😛வருது.. வள்ளுவை கடைசியா காட்டவே இல்லை..முக்கியமா கண்ணன், கிருஷ்ணனோட பழக்க வழக்கம் இப்போ எப்படி இருகானு காட்டி இருந்திருக்கலாம்...ஆரம்பத்தில் இருந்து கதைக்கு முக்கியமா இருந்தவங்களை காட்டாதது திருப்தி குறைவா தோணுச்சு.. மனோ வோட ஐடியாவான பள்ளி அறையயில் கேமரா அது பெற்றோருக்கும் லைவ் ஆகுற படி செய்யத ஐடியா நல்லா இருந்தது
 
Sha saajith sister review

A good family entertainment story என்றாலும் ஒரு பெண் தனியாக குழந்தை வளர்ப்பது என்பது எவ்வளவு கஷ்டம்...என்று அழகாக சொல்லிட்டீங்க
குழந்தை உருவாக்க கணவன் மனைவி உறவு எப்படியோ வளர்ப்பதற்கும் இருவரின் பங்கு அவசியம்...
so sweet Priya..
Waiting for next novel😍😍❣️❣️
 
Vidhya venkatesan sister review

அருமையான வாழ்வியல் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டு மிகவும் ரசிக்கும் வகையில் இக்கதையை கொடுத்ததற்கு முதற் கண் என் மனம் நிறைந்த நன்றிகள் பிரியா மேம் மனோ மார்க் மிகவும் ரசிக்கும் படியான கதாபாத்திரம் லதா மாதிரி சுயநலம் கொண்ட மனிதர்களை நாம் கடந்து வந்ததாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது கதையும் அருமை அதனை எழுதிய விதமும் மிகவும் அருமை மிகவும் ரசித்து மகிழ்ந்து அனுபவித்து படிக்கிறேன்
 
Rasathi E sister review

Really very nice and real life story sis.I am always impressed your way of writing style it's mesmerizing and we missed mano & mark and also meenammma. We expect your next story as soon as possible dear sisy .when ever we asked ud you reply as that such a kind of bond between writer an and reader you carried writer &reader bond very nice .We always support your writting style and story .WE ARE WAITING for your next story ❤️❤️❤️❤️💐💐💐👍👍🎊🎉🎊🎊🎉💫💥
 
Bala lenin amma review

யதார்த்தமான கதை நிறைய குடும்பங்களில் நடக்கும் குடும்ப அரசியல் நிறைவான முடிவு வாழ்த்துகள் டா 😍❤️
 
Dharanibai sainathan amma review

உண்மையில் நேற்று தான் இந்த கதை பார்த்தேன், உடனே பரிட்சைக்கு படிப்பது போல படித்து முடித்தேன்,ஆனால் இந்த கதையின் ஹைலைட் மார்க் தான், மார்க் என்று படிக்கும் போதெல்லாம் முகநூலில் உலாவும் மார்க்கை நினைத்து கொள்வேன், மனதுக்குள் சிரித்து கொள்வேன், இந்த மார்க் பண்ணும் அட்டகாசங்கள், நீக்குவதும் சேர்ப்பதும் அட்டகாசம் தாங்க முடியவில்லை. ஆனால் உன் மார்க் நல்லவன் தான், பெண்ணை புரிந்து கொள்ள அவகாசம் தேவைப்பட்டது, அமெரிக்க வாழ்க்கையில் தடம் புரள ஆயிரம் வழிகள் ஆனாலும் நம் மார்க் யோக்யவான் என்ன பணத்தில் குறி, ஆனாலும் ஏமாந்து விட்டான், அவள் புரிய வைத்து நன்றாக வாழ்ந்து விட்டாள். அருமையான கதை .
 
Top