மார்க்கண்டேயனின் மனோரஞ்சிதம்

ப்ரியா பாண்டீஸ்.
Barani sister review
அமெரிக்க மோகத்தில் அயல்நாட்டில்
மென் பொருள் துறையில் வேலை
பார்க்கும் நாயகன் மார்க்கண்டேயன்.

திருமணம் முடிந்து எட்டு
வருடங்களாக கணவனின் உடன்
இருக்க முடியாமல் இரு பிள்ளைகளுடன் அம்மா வீட்டில்
இருக்கும் நாயகி மனோரஞ்சிதம்.

தான் தன் சந்தோஷம் என ஊரில்
தன் உறவுகளின் நிலைப்பாடு ஏதும்
அறியாமல் பணம் அனுப்பினால்
மட்டும் போதும் என இருக்கும்
மார்க் தாய் மாமனின் பொறுப்பில்
குடும்பத்தை விட கஷ்டப்பட்டு
சம்பாதித்தது எதுவும் அவனுக்கு
இல்லை என்ற நிலை வரும் போதுதான் மனைவி பிள்ளைகளின்
அருமையும் புரிகிறது.

இதில் திருமணம் ஆகி குணமான கணவனுடன் வாழ்க்கை நடத்தும்
அக்கா லதா தம்பி மார்க்
சம்பாத்தியத்தில் பாதி தனக்கு
உடமைப் பட்டது எனும் எண்ணம்
வேறு ப்ரச்னைகளை பெரிதாக்க
தான் சம்பாதித்ததை மீட்டெடுக்கவும்
நீண்ட காலமாக தன்னிடம் பாராமுகத்துடன் இருக்கும் மனைவி
மனோவுடன் சேர்ந்து வாழவும்
அமெரிக்க வேலையை விட்டு
ஊர் திரும்பும் நாயகனின்
அதிரடி அவன் இழந்ததை மீட்டுக்
கொடுத்ததா மற்றும் மனைவி
பிள்ளைகளின் உறவை தக்க
வைத்தானா என்பதை எழுத்தாளர்
கதையில் அவருக்கே உரிய
எழுத்து நடையில் வழங்கியிருக்கிறார்.


கணவனைப் பிரிந்து பெற்றவர்களின் வீட்டில் இருக்கும்
மனோரஞ்சிதம் இரண்டு ஆண்பிள்ளைகளுடன் ஊராரின்
பேச்சுகள் மட்டுமன்றி மனதளவிலும்
பாதுகாப்பில்லாத நிலையை
உணர்ந்து அனுபவிக்கும்
துன்பங்கள் கதையில் நிதர்சனமாக பதியப்பட்டுள்ளது.

மனைவின் இரு பிள்ளைகள்
கிருஷ்ணா கார்த்தி சேட்டைகளை
பார்க்கும் போது நெஞ்சமே
திடும் திடுமென அதிருது.

மார்க்கின் அக்கா லதாவின் அட்ராசிட்டீஸ்
எல்லாம் நிஜத்திலும் நடப்பதுதான்.
ஆனாலும் திருமணமாகிப்
போனாலும் தம்பி தன் கைக்குள்ளேயே இருக்க வேண்டும்
என நினைப்பது கோபத்தை
கிளப்புவதாகத்தான் இருக்கிறது.

சம்பாதித்தது எதுவும் தனக்கில்லை
என்ற மனநிலையில் அயர்ந்து ஓய்ந்து
வரும் கணவனை தன் தனிப்பட்ட
விருப்பு வெறுப்புகளை தள்ளி வைத்து நேசத்துடன் அரவணைத்துக்
கொள்ளும் மனோரஞ்சிதம் செமதான்.

மீனம்மாவின் பேச்சுகள் கதையை
சுவாரசியத்துடன் நகர்த்துகிறது
என்றுதான் சொல்ல வேண்டும்.

மார்க்கண்டேயனின்
மனோரஞ்சிதம்

ப்ரியா பாண்டீஸின் எழுத்துக்களில்
ஃபீல் குட் ஸ்டோரிதான்.