எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நெஞ்சோரம் தள்ளாடும் முத்தாரம் - டீசர்

நிலா 06

Moderator
நான் தான் உங்க நிலா ஆறு... உங்களுக்கா குட்டி "டீ"யோடு வந்துட்டேன்... வாங்க வாங்க வந்து படிச்சு பாருங்க.

bf7edde21c158bf3acb0e1ca306f8e0c.jpg

டீசர் - 1

இருள் கவ்விய வேளையில் மின் விளக்கு வெளிச்சத்தையும் இரவின் நிசப்தத்தையும் கிழித்துக் கொண்டு, பாடல் சத்தமாக ஒலித்துக் கொண்டிருந்தது…

சென்னையில் உள்ள அந்த பிரபல ரெஸ்டாரண்ட் பார்ட்டி ஹாலில், அதிரடியான பாடலுக்கு இளம் வயதினர்கள் ஆடிக் கொண்டிருந்தனர். இல்லை இல்லை! குதித்துக் கொண்டிருந்தனர்.

முகம் முழுவதும் புன்னகையுடன் இதையெல்லாம் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்த குழலியின் அருகில், கையில் டக்கீலாவுடன் வந்த ஒருத்தி,

“காமான் ப்ரோ… வா! வந்து பார்ட்டியை எஞ்சாய் பண்ணு… செலவு பண்ண நீயே உட்கார்ந்திருந்தா எப்படி?” என ஆடியபடியே அழைத்தாள்.

“நீ எஞ்சாய் பண்ணு ப்ரோ, நான் வரேன்.” என்றவளிடம்.

அந்தப் பெண், “இது நமக்கான இடம் ப்ரோ. இங்க உன்னோட அப்பாவும் வரமாட்டார், அவருடைய அதிகாரமும் வராது… இப்போதாவது நீ நீயா இரு” என்றளை யாரோ அழைக்கவும்,

“ஒன் மினிட், ப்ரோ” என்று நாகரீகமாக அனுமதி கேட்டு கிளம்பிவிட்டாள்.

அவள் சென்றதும் அருகிலிருந்த டக்கீலாவை ஒரே மூச்சாய் உள்ளே தள்ளியவளுக்கு, தந்தை மணியரசனின் ஆணை ஞாபகத்திற்கு வந்து இம்சித்தது.

பிறந்தநாளுக்காக ஆசி வாங்க இரண்டு நாட்களுக்கு முன், ஆசையாக தந்தைக்கு போன் செய்தாள்.

அவளின் ஆசையை உணராமல் அழைப்பை ஏற்றதும், “இவ்வளவு நாளா நீ அங்க வேலை செய்ததெல்லாம் போதும். கிளம்பி வந்து சேர்” என்ற மணியரசன், பதிலைக் கூட எதிர்பார்க்காமல் போனை கட் செய்து விட்டார்.

ஏற்கனவே வீட்டினரின் மேல் மிதமிஞ்சிய கோபத்தில் இருந்தவளுக்கு, மணியரசனின் ஆணை எரிச்சலை மீறி கொலைவெறியை வரவைத்தது. அதன் விளைவு தான் இந்த பார்ட்டி.

டக்கீலாவை உள்ளே தள்ளியும் கோபம் குறையாமல் போக, மீண்டும் ஒன்றைக் குடித்தவளுக்கு பெயர் சொல்லத் தெரியாத உணர்வு மூளையில் சுறுசுறுவென ஏறியது… அந்த உணர்வு கொடுத்த தாக்கமும், வீட்டினர் மேல் வெறியும் ஒன்று சேர, மீண்டும் ஒரு டக்கீலாவை அருந்தியவள், கால்கள் பாடலுக்கு ஏற்ப தாளமிட ஆரம்பித்தது.

அதற்கு மேல் அங்கே இருப்பதை விரும்பாமல் அத்தனையும் செட்டில் செய்து விட்டு, நண்பர்களிடம் கூறிவிட்டு தனது வீட்டிற்குச் சென்று விட்டாள்.

அந்த வீட்டிலிருந்த தனிமை, மேலும் பெண்ணவளை நிலையிழக்கச் செய்தது.

தட்டு தடுமாறி எழுந்து கண்ணாடியின் முன்பு நின்றவள், “ஏய் பைத்தியக்காரி! உன்னோட மூஞ்சை நல்லா பார்த்துக்கோ, இது தான் நீ…! இந்தத் தனிமை தான் உன்னோட எல்லாம்… உனக்குனு உலகத்தில் யாருமே இல்லங்கிறதை நினைவில் வச்சுக்கோ…! இவங்க எல்லோரும் உன்னை வேண்டாம்னு குப்பை மாதிரி தூக்கி தூரமாப் போட்டுட்டாங்க…! ஏன்னா, நீ அதிர்ஷ்டமே இல்லாத துரதிர்ஷ்டம்…! அதனால் தான் செய்யாத தப்புக்கு மூனுவருஷமா நரக வேதனையை அனுபவிக்கிற.” என தன்னைத் தானே திட்டிக் கொண்டவள்,

வேதனையில் வழிந்த கண்ணீரை துடைத்தபடி, “நீ ஏண்டி அழற? அழாத…! அழுவது பலவீனம் அது உன்னோட வேதனையைக் குறைத்து விடும். அப்படி ஒன்று நடந்தா, உன்னுடைய கோபம் தணிந்திடும்… கோபத்தை சேர்த்து வச்சுக்கோ குழலி. ஒருநாள் உனக்கு உதவும்… எல்லாத்தையும் மென்னு முழுங்கிட்டு வைராக்கியமா இரு.” என இரு கன்னத்திலும் மாறி மாறி அடித்தபடி கூறினாள்.

மனவலியோடு உடல்வலியும் சேர திடமாக நின்றவள் போதையின் வீரியத்தில் அரைகுறையாக நித்திரைக்குச் சென்றாள்.

அத்தனை போதையிலும் மனம் வலி தாங்காமல், ‘நான் என்ன தப்பு பண்ணேன்? ஏன் எல்லாருமா சேர்ந்து எனக்கு தண்டனை கொடுத்திங்க? வலிக்குதே…! மனசு வலிக்குதே!' என்று புலம்பியபடியே ஆற்றுவார் தேற்றுவார் இன்றி அநாதை போல் கிடந்தாள்.
 
நிலா 06

Moderator
டீசர் - 2

(கரெக்‌ஷன் இருக்கும் பொறுத்திக்கோங்க செல்லம்??)

zW6EZjxj-9707270033.jpg

அருகில் வந்த வாட்ச்மேன் குழலியின் நிலைகண்டு வருத்தத்துடன், “நகுதா மா விருப்பத்தினால் இரவோடு இரவா ஐயா ஏற்பாடு பண்ணிட்டாருங்க மா… அதனால் தான் உங்களுக்குச் சொல்லமுடியலைப் போல்” என வாய்க்கு வந்ததைக் கூறி சமாளித்தார்.

அவரின் பேச்சைக் கேட்டுப் புன்னகைத்த வண்டார்குழலி, “நல்லா சமாளிக்கிறிங்க தாத்தா… இரவோடு இரவா பக்கத்து ஐம்பது பேரை கூப்பிட்டவர்களால் என்னைக் கூப்பிடமுடியலையா?” என ஒருமாதிரியான குரலில் கேட்டவள் தன்னைப் பற்றிய சிந்தனையின்றி மணமகள் கோலத்தில் தங்கையும் முகமெல்லாம் பூரிப்புடன் தாய், தந்தையும் நின்றிருப்பதைப் பார்த்தவள் வந்த சுவடு தெரியாமல் பின்பக்கமாகச் சென்றாள்.

அவளின் நடவடிக்கை நன்கு அறிந்த வாட்ச்மேன், “குடுங்க ம்மா நான் எடுத்துக்கிட்டு வரேன்” எனக்கூறி பெட்டியை வாங்கப் போனார்.

“வேண்டாம் தாத்தா… என்னுடைய சுமையை நானே சுமக்கிறேன் யாருக்கு பாரமா இருக்க விரும்பலை” என்றவள் விடுவிடுவெனப் படிகளில் ஏறித் தன்னிடமிருந்த சாவியைக் கொண்டு மாடியிலிருக்கும் தனது அறையின் பின் கதவைத் திறந்து உள்ளே சென்றுவிட்டாள்.

வருடங்கள் கடந்து வீட்டிற்கு வந்தவள் கண்டது சரியான பராமரிப்பு இன்றித் தூசியும் திரும்புமா இருந்த அறையைத் தான்.

**********†***********

தாய், தந்தை, தங்கை என மூவரும் காலையில் நடந்த நிச்சயதார்த்தத்தைப் பற்றிப் பேசி சிரித்துக்கொண்டிருந்தனர்.

இவர்களின் சிரிப்பைப் பார்த்தவளுக்குத் தான் வராத வருத்தம் என்பது துளியில்லை என்பதை ஆணி அடித்தது போல் புரிந்தது.

அதில் மனம் விம்மித் துடிக்கப் பல்லைக்கடித்துக்கொண்டு அழுகையை அடக்கியவள், ஆழ்ந்து மூச்சை இழுத்துவிட்டுக்கொண்டு கதவைத் திறந்து வெளியே வந்தாள்.

அப்பொழுதும் அவர்களின் கவனம் கலையாமல் போக ஆத்திரம் மூளையை மழுங்கடிக்கப் பட்டாரெனக் கதவை அடித்துச் சாற்றியவள் மிகமிக நிதானமாகப் படிகளில் இறங்கினாள்.

திடீரெனக் கேட்ட சத்தத்தில் அதிர்ந்து போய்த் திரும்பிப் பார்த்தவர்கள் சத்தியமாக அந்த இடத்தில் குழலியை எதிர்பார்க்கவே இல்லை.

இவர்களின் அதிர்வில் லேசாக மனம் சமாதானமாகத் தன் உணர்வுகளை முகத்தில் காட்டாமல் அடக்கிக்கொண்டு சாப்பிட அமர்ந்தாள்.

டைனிங் டேபிளில் இருந்த உணவைத் தானே போட்டுச் சாப்பிட்டவள் மறந்தும் யாரின் முகத்தையும் திரும்பி பார்க்கவில்லை… அந்த அளவுக்கு மனம் வெறுத்து போயிருந்தாள்.

மூத்தமகளைக் கண்டதும் தான் தாங்கள் செய்த தவறு காமாட்சிக்கு உரைத்தது.

அப்பொழுது கூட மணியரசனுக்கு இளையமகளின் சந்தோஷம் தான் கண்களுக்குத் தெரிந்ததே தவிர மூத்தமகளின் இயலாமையும் இல்லாமையும் விலங்கவில்லை.

நகுதாவின் கீழ் தனமான புத்திக்கு அக்காவின் வேதனை தெளிவாகப் புரிய மனதிற்குள் சந்தோஷப் பட்டுக்கொண்டாள்.
 
நிலா 06

Moderator
Interesting teaser... siblings rivalry karanama kuzhali thappu pannanu othuki vechutangala ?

இப்படியும் இருக்கலாம் அப்படியும் இருக்கலாம்... நீங்க யோசிச்சுக்கிட்டே இருங்க நான் ஜூன் 10 கதையோடு வந்து உங்க சந்தேகத்தை நிவர்த்தி செய்யறேன் பேபி ???
 
Shamugasree

Well-known member
இப்படியும் இருக்கலாம் அப்படியும் இருக்கலாம்... நீங்க யோசிச்சுக்கிட்டே இருங்க நான் ஜூன் 10 கதையோடு வந்து உங்க சந்தேகத்தை நிவர்த்தி செய்யறேன் பேபி ???
Waiting waiting
 
நிலா 06

Moderator
டீசர் - 3

5c850556e62af134c6d77b6043b3dda9.jpg

காவல்துறை அதிகாரிகள் ஹோட்டல் உரிமையளர் உட்பட அவருக்கு துணையாக இருந்த அத்தனை பேரின் கைகளிலும் விலங்கிட்டு அழைத்துச்சென்றதை தான்.

இவர்களை கண்டதும் கைகுளுக்கிய அதிகாரி, “நீங்க மட்டும் இங்க நடப்பதை பற்றி எங்களுக்கு தகவல் சொல்லாமல் இருந்திருந்தால் பலருடைய வாழ்க்கையில் விளையாடியிருப்பானுங்க… வருங்காலத்தில் இளைஞர்களின் நிலை சொல்லமுடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கும்… ஆரம்பத்திலேயே தெரிந்ததால் பிரச்சனை பெருசாகாமல் முடிந்தவரை கட்டுப்படுத்தியாச்சு… இதற்கு உங்களுக்கு தான் நன்றி சொல்லணும்” என்றார்.

“இது எங்களுடைய கடமை சார்… கண்முன்னே நடக்கிற தவறை எப்படி பார்த்தும் பார்க்காமல் கடந்துபோகமுடியும்? மனசாட்சி உள்ள மனுஷனா என்னால் முடிந்ததை நான் பண்ணிட்டேன் சார்” என்றவன்,

“இங்க இப்படி ஒரு இல்லீகல் பிஸினஸ் நடப்பதை கண்டுபிடித்ததே இவர் தாங்க சார்… நீங்க நன்றி சொல்லணும்னா இவனுக்கு தான் சொல்லணும்” என்று நண்பனை கைகாட்டினான்.

திடீரென நண்பன் தன்னை கைகாட்டவும் கோபிநாத் வாய் பேச முடியாமல் அதிர்ந்து நின்றுவிட்டான்.

அதிர்ந்து நின்ற கோபிநாத்தின் தோளில. தட்டிக்கொடுத்த காவல்துறை அதிகாரி, “குட் ஜாப் மேன்” என்று பாராட்டினார்.

அப்பொழுது வருண் காளிதாஸ் தன்னையே முறைத்து பார்த்துக்கொண்டிருந்த ஹோட்டல் ஓனரிடம் சென்றவன், “எதிரியைக்கூட மன்னித்துவிடுவேன்டா ஆனால் முகத்துக்கு நேரா சிரிச்சு பேசிட்டு முதுக்கு பின்னாடி கத்தியால் குத்தற உன்னை மாதிரி துரோகியை மன்னிக்கவேமாட்டேன்… நீ எங்களுக்கு செய்ய நினைத்த துரோகத்திற்கான தண்டனை தான் இது, அதுவே ஏதாவது செய்திருந்த உன்னோட பரம்பரையையே இருந்த அடையாளம் தெரியாமல் அழித்திருப்பேன்” என்று அடக்கப்பட்ட கோபத்துடன் கூறினான்.

“ஆள் தெரியாமல் கைவச்சுட்டடா இனி உனக்கு எதிரினா அது நான் மட்டும் தான்” என்றவர்,

“இப்பவேனா நீ என்னை உள்ளே அனுப்பிடலாம்டா… ஒரு நாள் வருவேன் உன்னோட சந்தோஷத்தையும் நிம்மதியையும் அழிப்பதற்காகவே திரும்ப வருவேன்” என பலிவெறி தாண்டவமாட கூறினார்.

“அப்படியா! அதையும் பார்க்கலாம்… இப்ப கிளம்புங்க சார்” என்று கோலியாக கூறினான்.

“சந்தோஷப்பட்டுக்கோ… முடிந்தவரை இப்பவே சந்தோஷமா இருந்துக்கோ நான் வரும் போது உன்னோட நிம்மதி உன்னிடம் இருக்காது” என்று வார்த்தைகளை கடித்துதுப்பியவரை காவல் அதிகாரிகள் இழுத்துச்சென்றனர்.

இவர்கள் சென்றதும் நண்பனிடம் வந்த கோபிநாத், “உன்னை மாதிரி ஒருத்தன் நண்பனா கிடைக்க நான் என்ன புன்னியம் பண்ணண்ணு தெரியலடா” என நெகிழ்ச்சியானகுரலில் சென்னான்.

“நான் தான்டா ஏதோ புன்னியம் பண்ணியிருக்கேன் அதனால் தான் நீ எனக்கு நண்பனா கிடைத்திருக்க” என்றான் வருண் காளிதாஸ்.

“அப்பப்பா! முடியல… இவங்க பேச்சை கேட்டுக்கேட்டு என்னோட காது செவிடாகிடும் போல்… ரம்பமில்லாமல் இந்த அறு அறுக்கிறாங்களே கடவுளே” என தலையில் கைவைத்து கேலியாக கூறினாள்.

வருண் காளிதாஸ், “யார் நாங்க அறுக்கிறோமா? அநியாயமா பொய் சொல்லாத ஐஸ்” என்றவன்,

“நீ வாய் பேசினது போதும்… ஓடு ஓடுப்போய் பேக்கிங் ஆரம்பி” என நண்பனின் மனைவியை விரட்டினான்.

துளியும் அசராத ஐஸ்வர்யா, “என்ன பேக்கிங்? எங்க போறோம்?” என புரியாமல் கேட்டாள்.

“நான் வீட்டுக்கு கிளம்பறேன்… நீங்க ரெண்டு பேரும் ஒருவாரம் ஹேப்பியா ஊட்டிக்கு போறிங்க” என்றவன் அவளின் கைகளில் ப்ளைட் டிக்கெட்டை திணித்தான்.

“எதுக்கு ண்ணா இதெல்லாம்? இப்ப இருக்கிற நிலையில் தேவையா?” என தயக்கமாககேட்டாள்.

“என்ன நிலைமை சரியில்லை? அப்படி ஒன்னும் பெருசா இங்க நடக்கலையே” என புரிந்தும் புரியாமல் கேட்டான்.

“நீங்க கொஞ்ச அம்மா, அப்பா சொல்றதை யோசிங்களே ண்ணா… எவ்வளவு நாள் தான் தப்பு பண்ணாத ஜீவனுக்கு தண்டனை தருவிங்க?” என மனம்தாளாது கேட்டவள்,

“இதற்கு மேல் நான் எதுவும் சொல்லமாட்டேன், ஆனால் ஒன்னு ண்ணா நாங்க திரும்பி வரும்போது எல்லாம் சரியாகியிருந்தா ரொம்ப சந்தோஷப்படுவோம்” என்றாள்.
 
நிலா 06

Moderator
Nice... hero entry vanthachu... varun kalidas police ah... apdiye hero heroine sernthu varapola oru tea aathita kathaiku ready agiduvom ?
இன்னும் மூன்றே நாளில் செல்லிடறேன் சகோ... டீ இல்ல இனி யூடி தான்
 
Anuraj

New member
நான் தான் உங்க நிலா ஆறு... உங்களுக்கா குட்டி "டீ"யோடு வந்துட்டேன்... வாங்க வாங்க வந்து படிச்சு பாருங்க.டீசர் - 1

nice
 
Top