Thanks sis ??Nice tea ?
Interesting teaser... siblings rivalry karanama kuzhali thappu pannanu othuki vechutangala ?
????Nice sis![]()
Waiting waitingஇப்படியும் இருக்கலாம் அப்படியும் இருக்கலாம்... நீங்க யோசிச்சுக்கிட்டே இருங்க நான் ஜூன் 10 கதையோடு வந்து உங்க சந்தேகத்தை நிவர்த்தி செய்யறேன் பேபி ???
கதையில் சொல்றேன் சிஸ்Interesting teaser... siblings rivalry karanama kuzhali thappu pannanu othuki vechutangala ?
???Waiting waiting
???Nice sis![]()
இன்னும் மூன்றே நாளில் செல்லிடறேன் சகோ... டீ இல்ல இனி யூடி தான்Nice... hero entry vanthachu... varun kalidas police ah... apdiye hero heroine sernthu varapola oru tea aathita kathaiku ready agiduvom ?
niceநான் தான் உங்க நிலா ஆறு... உங்களுக்கா குட்டி "டீ"யோடு வந்துட்டேன்... வாங்க வாங்க வந்து படிச்சு பாருங்க.
டீசர் - 1
இருள் கவ்விய வேளையில் மின் விளக்கு வெளிச்சத்தையும் இரவின் நிசப்தத்தையும் கிழித்துக் கொண்டு, பாடல் சத்தமாக ஒலித்துக் கொண்டிருந்தது…
சென்னையில் உள்ள அந்த பிரபல ரெஸ்டாரண்ட் பார்ட்டி ஹாலில், அதிரடியான பாடலுக்கு இளம் வயதினர்கள் ஆடிக் கொண்டிருந்தனர். இல்லை இல்லை! குதித்துக் கொண்டிருந்தனர்.
முகம் முழுவதும் புன்னகையுடன் இதையெல்லாம் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்த குழலியின் அருகில், கையில் டக்கீலாவுடன் வந்த ஒருத்தி,
“காமான் ப்ரோ… வா! வந்து பார்ட்டியை எஞ்சாய் பண்ணு… செலவு பண்ண நீயே உட்கார்ந்திருந்தா எப்படி?” என ஆடியபடியே அழைத்தாள்.
“நீ எஞ்சாய் பண்ணு ப்ரோ, நான் வரேன்.” என்றவளிடம்.
அந்தப் பெண், “இது நமக்கான இடம் ப்ரோ. இங்க உன்னோட அப்பாவும் வரமாட்டார், அவருடைய அதிகாரமும் வராது… இப்போதாவது நீ நீயா இரு” என்றளை யாரோ அழைக்கவும்,
“ஒன் மினிட், ப்ரோ” என்று நாகரீகமாக அனுமதி கேட்டு கிளம்பிவிட்டாள்.
அவள் சென்றதும் அருகிலிருந்த டக்கீலாவை ஒரே மூச்சாய் உள்ளே தள்ளியவளுக்கு, தந்தை மணியரசனின் ஆணை ஞாபகத்திற்கு வந்து இம்சித்தது.
பிறந்தநாளுக்காக ஆசி வாங்க இரண்டு நாட்களுக்கு முன், ஆசையாக தந்தைக்கு போன் செய்தாள்.
அவளின் ஆசையை உணராமல் அழைப்பை ஏற்றதும், “இவ்வளவு நாளா நீ அங்க வேலை செய்ததெல்லாம் போதும். கிளம்பி வந்து சேர்” என்ற மணியரசன், பதிலைக் கூட எதிர்பார்க்காமல் போனை கட் செய்து விட்டார்.
ஏற்கனவே வீட்டினரின் மேல் மிதமிஞ்சிய கோபத்தில் இருந்தவளுக்கு, மணியரசனின் ஆணை எரிச்சலை மீறி கொலைவெறியை வரவைத்தது. அதன் விளைவு தான் இந்த பார்ட்டி.
டக்கீலாவை உள்ளே தள்ளியும் கோபம் குறையாமல் போக, மீண்டும் ஒன்றைக் குடித்தவளுக்கு பெயர் சொல்லத் தெரியாத உணர்வு மூளையில் சுறுசுறுவென ஏறியது… அந்த உணர்வு கொடுத்த தாக்கமும், வீட்டினர் மேல் வெறியும் ஒன்று சேர, மீண்டும் ஒரு டக்கீலாவை அருந்தியவள், கால்கள் பாடலுக்கு ஏற்ப தாளமிட ஆரம்பித்தது.
அதற்கு மேல் அங்கே இருப்பதை விரும்பாமல் அத்தனையும் செட்டில் செய்து விட்டு, நண்பர்களிடம் கூறிவிட்டு தனது வீட்டிற்குச் சென்று விட்டாள்.
அந்த வீட்டிலிருந்த தனிமை, மேலும் பெண்ணவளை நிலையிழக்கச் செய்தது.
தட்டு தடுமாறி எழுந்து கண்ணாடியின் முன்பு நின்றவள், “ஏய் பைத்தியக்காரி! உன்னோட மூஞ்சை நல்லா பார்த்துக்கோ, இது தான் நீ…! இந்தத் தனிமை தான் உன்னோட எல்லாம்… உனக்குனு உலகத்தில் யாருமே இல்லங்கிறதை நினைவில் வச்சுக்கோ…! இவங்க எல்லோரும் உன்னை வேண்டாம்னு குப்பை மாதிரி தூக்கி தூரமாப் போட்டுட்டாங்க…! ஏன்னா, நீ அதிர்ஷ்டமே இல்லாத துரதிர்ஷ்டம்…! அதனால் தான் செய்யாத தப்புக்கு மூனுவருஷமா நரக வேதனையை அனுபவிக்கிற.” என தன்னைத் தானே திட்டிக் கொண்டவள்,
வேதனையில் வழிந்த கண்ணீரை துடைத்தபடி, “நீ ஏண்டி அழற? அழாத…! அழுவது பலவீனம் அது உன்னோட வேதனையைக் குறைத்து விடும். அப்படி ஒன்று நடந்தா, உன்னுடைய கோபம் தணிந்திடும்… கோபத்தை சேர்த்து வச்சுக்கோ குழலி. ஒருநாள் உனக்கு உதவும்… எல்லாத்தையும் மென்னு முழுங்கிட்டு வைராக்கியமா இரு.” என இரு கன்னத்திலும் மாறி மாறி அடித்தபடி கூறினாள்.
மனவலியோடு உடல்வலியும் சேர திடமாக நின்றவள் போதையின் வீரியத்தில் அரைகுறையாக நித்திரைக்குச் சென்றாள்.
அத்தனை போதையிலும் மனம் வலி தாங்காமல், ‘நான் என்ன தப்பு பண்ணேன்? ஏன் எல்லாருமா சேர்ந்து எனக்கு தண்டனை கொடுத்திங்க? வலிக்குதே…! மனசு வலிக்குதே!' என்று புலம்பியபடியே ஆற்றுவார் தேற்றுவார் இன்றி அநாதை போல் கிடந்தாள்.