#இதயத்தில் உன் (கா)ல் தடம்....
#நறுமுகை_நிலா_காலம்
#NNK 15
இதய நிலா
இதயத்தை கவர்ந்த நிலாவே....
இருந்தாலும் கஷ்டமாக இருந்தது..
இதயத்தை இருக்கி பிடித்தது....
ஹரிஹரசுதன்....
ஹான்ட்சம் பாய் ஆக இருக்கும்
ஹரியை தொப்பை பாய் ஆக்கி வெச்சிருக்கீங்க எழுத்தாளரரே.....
வாசு_ அன்பும் அரவணைப்பும் புரிதலும் நட்பும்.....love you sweet boy ...
ஆணுக்கும் கற்பு நிலை
ஆணுக்கும் சமூகத்தில் இருக்கும்
அவல நிலையை விளக்கிய விதம்
அருமை....
ஆனால் நினைத்து கூட பார்க்க
அவ்வளவு கஷ்டமா இருந்தது....
நிவி யின் கிண்டலும்
நட்பும் அருமை.....
ஈவிரக்கம் இல்லா
இந்த மிருகம் குரு
இறப்பில் உணர்ந்து இருக்குமோ இவன் செய்த இழிவு செயல்கள்..
இனி யாரும்
இது போல நடக்காவண்ணம்
இனி பெற்றோர் கவனமாய் இருங்கள் _ இல்லை
இங்கு சட்டம் வேண்டும் .....
இதயாவின் கதறல்
இன்னும் காதில் ஒலித்துக் கொண்டே இருக்குது.....
பெற்றவர்கள் இல்லையா ......
பெரும் வலி இதயத்தில்.....
இதயத்தில் ரணமாய் கனமாய் தடம் அல்ல வடுவாய் பதிந்து விட்டது.....
ஏனடி நிலாவே....
என்னை கொள்கிறாய். அமைதியாக இருந்த
என் மனதை
பறித்தது மட்டும்
அல்லாமல்
என் நினைவுகளை
உன் உணர்வுகளாக்கி
விட்டாயே.
இனம் புரியா ஏக்கம்
என் மனதில்
உன்னால் பெண்ணே !!!
இது உனக்கு புரியவில்லையா !!!
இறக்கை விரித்து
இன்பமாய் பறந்த பறவை
இளமையின் இன்பம் போல..
இருட்டு பக்கங்கள்
இடியாக இறங்க
இதிலிருந்து மீண்டு வர
இடைவெளி என்னடி
இதயம் நுழைந்த பின்
இன்னல் தாண்டி
இணையும் காலம்
இயற்கையின் வரம் ....
இது நடந்தே தீரும்...
இனி பிரிவல்ல.....
வாழ்த்துக்கள் சகி