#நறுமுகைநிலாக்காலம்_02
#NNK52
#காதல்கனிரசமே!
நறுமுகை தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்..
வெற்றி வேந்தன்... பிரவாகினி...
இவர்கள் திருமணத்தில் ஆரம்பமாகிறது கதை.. இருவருக்குமே பிடிக்காது திருமணம் பெற்றோர்களின் அதிரடியால் திருமணத்திற்கு சம்மதிப்பவர்கள் அதற்கு பின்னான நாட்களில் எலியும் பூனையுமாக சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் வெளி பார்வைக்கு.. ஆனால் உள்ளுக்குள் ஒருவரை ஒருவர் அதிகமாக விரும்புகிறார்கள்.. தங்களின் விருப்பத்தை மற்றவர்களிடம் சொல்வதற்கு என்ன தயக்கம் இவர்களுக்கு வெற்றி கூறுவதுபோல் அவனுக்கு அருவி என்ற முதல் மனைவி இருக்கிறாளா.. சிறுவயதில் இருந்து இவனை மட்டுமே விரும்பும் பிரவாவிற்கு இந்த விஷயம் மனதை அரித்துக் கொண்டே இருக்கிறது இதனாலே தன்னுள் இருக்கும் காதலை கூற மறுக்கிறாள் இதற்கிடையில் அத்தையின் மகள் மந்தாகினி மற்றும் அத்தை நாகினியால் பெரும் பிரச்சனை ஏற்படுகிறது இதை அனைத்தையும் முறியடித்து ஒருவருக்கு மற்றவர்கள் மேல் இருக்கும் காதலை உரைத்து வாழ்வில் இணைந்தார்களா என்பது கதையில்.. அருள் வெற்றியின் உற்ற நண்பன்

இவனின் ஜோடிடி கவிதா இவர்களின் சொல்லப்படாத காதல் எப்படி திருமணத்தில் முடிந்தது என்பதும் கதையில் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துக்கள்

Good luck

